07.06.2026

“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?”
பிரச்சாரத்தைத் தடுத்த த.வெ.க-வினர்!

துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!

பத்திரிகைச் செய்தி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” என்ற தலைப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பரப்புரை இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இன்று காலை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் “விஜய் பற்றி பிரச்சாரம் செய்யக் கூடாது. திருப்பரங்குன்றம் பற்றிப் பேசக் கூடாது” என்று கூறினர்.

மேலும் தோழர்கள் அவர்களிடம் பரப்புரை நோக்கத்தை விளக்கியும், எதையும் ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதம் செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்து இங்கு இந்த நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறினர். அங்கு வந்த போலீஸ் இரு தரப்பினரையும் போலீசு நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இன்று இந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று போலீசார் கேட்டதற்கிணங்க தற்போது செய்யவில்லை என்று தோழர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு வந்தனர்.

இச்சம்பவம் அறிந்தவுடன் பகுதியில் உள்ள DYFI, எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பகுதியில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என நம்மிடம் கூறினர். பகுதியில் பிரச்சாரத்தைத் தடுக்க முயன்ற இளைஞரிடம் மக்கள் அதிகாரக் கழகம் செயல்பாடு பற்றியும் எடுத்துரைத்தனர். “நீங்கள் தொடர்ந்து வந்து இங்கு பிரச்சாரம் செய்யுங்கள் நாங்கள் உடன் இருக்கிறோம்” என்று கூறினர். உடனடியாக போலீசு நிலையத்திற்கும் வந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே வந்த ஜனநாயக சக்திகள் மற்றும் பகுதி மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க