தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கெல்சு | லெனின்
சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார்.







