ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !
மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.









