Saturday, November 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 58

மக்கள் அதிகாரம், வினவு, புதிய ஜனநாயகம் முகநூல் பக்கங்களை முடக்கிய பாசிச கும்பல்

மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடக்கம்!

09.06.2024

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே! வணக்கம்.

06.06.2024 அன்று இரவு 9 மணிக்கு திடீரென மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம், வினவு மற்றும் புதிய ஜனநாயகம் ஆகிய முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் வீச்சாக நாங்கள் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ ஒட்டி தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி என்ற வெளியிட்டை தமிழ் நாடு முழுவதும் கொண்டு சென்றோம். மக்களிடத்தில் களத்தில் வேலை செய்த அதே அளவிற்கு இணையத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிரான தளமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக நாங்கள் பங்களிப்பு செய்தோம்.

தமிழ்நாடு முழுவதும் நாங்கள் மேற்கொண்ட போராட்டச் செய்திகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிராக மற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டச் செய்திகளையும் மேற்கண்ட எமது முகநூல் பக்கங்கள் வாயிலாக பரப்புரை செய்தோம். தற்பொழுது முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

2024 தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தேர்தல் முடிவுகளை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு நாள் முழுவதும் வினவு youtube இணையதளம், மக்கள் அதிகாரம் முகநூல் பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாங்கள் நிகழ்ச்சியை நடத்திய அடுத்த நாளிலேயே எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலால் முடக்கப்பட்டு இருக்கின்றது. எமது முகநூல் பக்கங்களை மீட்டெடுக்கும் அதே வேளையில் அவற்றின் பெயர்களை தற்போதைக்கு மாற்ற இயலாது என்றும் அதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்று முகநூல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக செயல்படுவோரின் முகநூல் பக்கங்களையும் இணையதளங்களையும் முடக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் இலக்காக இருக்கிறது. அதன்படியே எமது முகநூல் பக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதற்காகவெல்லாம் இந்த நாட்டையே பேரழிவில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எமது போராட்டக் களங்கள் ஒருபோதும் நிற்க போவதில்லை.

பாசிச பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்படுவோரை முடக்கும் இந்த செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முன்னைக் காட்டிலும் இன்னும் வேகமாக அனைத்து வகைகளிலும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி- அதானி பாசிசத்துக்கு எதிராக களமாடுவோம் !


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்!

நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டத்தாலும் எதிர்ப்பினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த பா.ஜ.க. கும்பல், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனது வெற்றிக்காக பயன்படுத்தியும் கூட, ஆட்சியமைப்பதற்கு தேவையான 272 தொகுதிகளை பெற முடியவில்லை. இந்நிலையில், கூட்டணி கட்சிகள், சுயேட்சை உறுப்பினர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு மக்களின் உணர்வுக்கு எதிராக இன்று மாலை மோடி ஆட்சி பொறுப்பேற்க உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி, “பா.ஜ.க. ஜனநாயக விரோதமாகவும் சட்டவிரோதமாகவும் ஆட்சி அமைக்கிறது” என்றும் “இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாட்டிற்கு மாற்றம் தேவை; நாடு மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆணை (முடிவு) மாற்றத்திற்காக இருந்தது. நாங்கள் காத்திருக்கிறோம், நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். இந்த ஆணை நரேந்திர மோடிக்கு எதிரானது. எனவே அவர் இம்முறை பிரதமர் ஆகக்கூடாது. வேறு யாராவது பொறுப்பேற்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ள மமதா, மோடியின் பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


படிக்க: சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் | கவிதை


ஆனால், அதேசமயத்தில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்தே “இந்த தேர்தல், யார் ஆளக் கூடாது என்பதற்கான தேர்தல்”, “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” என்று பேசிவந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதுவரை, மோடி பதவியேற்பது பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுக்கு எதிரானது என்று வாய்த் திறக்கவில்லை.

மாறாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “400, 370 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று சொன்ன பா.ஜ.க. தனிபெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு பலவீனப்பட்டுள்ளது; பலவீனமான பா.ஜ.க. அரசை நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

அதாவது, எந்த பா.ஜ.க. கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கிறதோ அதே பா.ஜ.க-வை நெட்டித்தள்ளி மக்களின் வாக்குறுதிகளை செயல்பட வைக்கப் போகிறாராம். ஸ்டாலினின் இப்பேச்சு, பாசிச மோடி கும்பலை எதிர்ப்பதில் தி.மு.க-வின் சந்தர்ப்பவாதத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

பாசிச மோடி கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதுதான் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணர்வுநிலை. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதைதான் உணர்த்தியது. தமிழ்நாடு மக்களின் உணர்வும், தொடக்கத்திலிருந்தே, பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டை ஆளக் கூடாது என்பதாகவே இருந்து வருகிறது. ஆனால், அதனை இந்திய அளவில் பேசுபொருளாக்குவதற்கு பதிலாக மோடி நாட்டை ஆள்வதை ஏற்கவைக்கும் வேலையை தி.மு.க. செய்கிறது. திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று சொல்லிக்கொண்டே தமிழ்நாடு மக்களை பார்ப்பனியத்திற்கு மண்டியிட வைக்கும் வேலையை தி.மு.க. மேற்கொள்கிறது.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூன் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
  • தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!
  • பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
  • பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!
  • ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத – மிதவாத இந்துத்துவ அரசியல்!
  • நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் உணர்த்துவது என்ன?
  • பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்‌ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!
  • ஏழை மக்களின் உறுப்புகளைத் திருடும் மருத்துவ மாஃபியா
  • கார்ப்பரேட் நலனுக்காக சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கங்கனாவுக்கு விழுந்த அறை: பாசிஸ்டுகளின் கன்னங்கள் பழுக்கட்டும் | தோழர் ரவி

கங்கனாவுக்கு விழுந்த அறை:
பாசிஸ்டுகளின் கன்னங்கள் பழுக்கட்டும் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நீட் மோசடி: தேர்வை‌‌ ரத்து செய்வது தான் தீர்வு | தோழர் யுவராஜ்

நீட் மோசடி: தேர்வை‌‌ ரத்து செய்வது தான் தீர்வு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் | கவிதை

சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்

ங்கிகளே,
மெய்தி மக்களாகிய எங்களை
பழங்குடி அந்தஸ்தை காட்டி
இனவெறியை தூண்டிவிட்டு
குக்கி மக்களை
இரத்த வெள்ளத்தில்
மிதக்க வைத்தீர்களே!

கனிம வளங்களை களவாட
அம்பானி அதானிகளுக்கு படையல் போட
அமைதியாய் வாழ்ந்த
எங்களின் வாழ்க்கையில்
தீ வைத்தீர்களே!

நாங்களோ,
மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே
குக்கிப் பெண்களை
கூட்டுப் பலாத்காரம் செய்தோமே
அம்மணமாக்கி
வீதிகளில் இழுத்துச் சென்றோமே
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
அடித்துக் கொன்றோமே
வீடுகள், ஆலயங்களை
தீக்கிரையாக்கினோமே..

எத்தனை உயிர்கள்
பலியானது இக்கலவரத்தில்!
ஏராளமான இடங்கள்
சூறையானது இம்மாபாதகத்தில்!

மொத்த மணிப்பூரும்
பற்றி எரிந்ததே!
நீங்களோ,
கலவரத் தீயை மூட்டிவிட்டு
கள்ளமௌனம் காத்தீர்களே!
கயமத்தனிகளே!

ஒப்பாரி ஓலங்கள் இங்கு – இன்னும்
ஓயாத அவல நிலையிலும்
ஓர் ஆண்டுக் காலமாய் – உங்கள்
கலியுக கடவுளான மோடியோ
எங்களை இன்னும் காணவரவில்லையே!

சங்கிகளே,
போதும்!
மெய்தி இனவெறியால்
நாங்கள் பட்டப்பாடு போதும்!

எங்களின்
அமைதியான வாழ்வு நாசமாகி
நாங்கள் பட்டப்பாடு போதும்!

சங்கிகளே,
நாங்கள் உங்களை
புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டோம்!

அதனால்தான்
கேடுகெட்ட சங்கிகளே,
நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்!


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தனித்தியங்கும் தமிழ்நாடு | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க

காவிகளே, இது தமிழ்நாடு | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காவிகளே, இது தமிழ்நாடு | வீழாது தமிழ்நாடு | PALA Red Wave Song | ம.க.இ.க சிவப்பு அலை பாடல்

காவிகளே, இது தமிழ்நாடு | வீழாது தமிழ்நாடு | PALA Red Wave Song | ம.க.இ.க சிவப்பு அலை பாடல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இனி, பாசிஸ்டுகளின் கன்னம் பழுக்கும்!

இனி, பாசிஸ்டுகளின் கன்னம் பழுக்கும்!

ங்கள் வீரம் செறிந்த
விவசாயிகளின் போராட்டத்தை
இழிவு செய்ய நினைத்தால்
இனி உங்களின்
கன்னம் பழுக்கும்!!

நிலத்தைக் கீறி உழுத
விவசாயிகளின் டிராக்டர்கள்,
உங்களின் வஜ்ராக்களை
எதிர்த்து நிற்க
ஒருபோதும் தயங்கியதில்லை!!

எங்கள் வீரம் செறிந்த
விவசாயிகள் போராட்டத்தையும்,
போராட்டத்தில் விவசாயிகள்
செய்த உயிர் தியாகத்தையும்
உலகம் அறியும்!!

ஓராண்டுக்கும் மேலாய்
உங்கள் டெல்லியை
விவசாயிகளின் டிராக்டர்கள் உலுக்கியதை
மறந்து விட்டீர்களா?

மீண்டும் 100 நாட்களுக்கும் மேலாய்
விவசாயிகளின் டிராக்டர்கள்
பாசிசத்திற்கு எதிராக
களத்தில் இறங்கி நிற்கிறதே
மறந்து விட்டீர்களா?

இலட்சக்கணக்கான விவசாயிகள்
வாழ வழியற்று தம்மை
மாய்த்துக் கொள்ளும்` போதெல்லாம்
பேசாத உங்களின்
நாற வாய்கள்.

விவசாயிகளின் உரிமை குரலை
நசுக்க மட்டும் ஊளையிடுகிறது.

இனியும் உங்களின் பாசிச
அடக்குமுறைகளுக்கு
நாங்கள் ஒருபோதும் அடிபணியோம்!

இதுவே உங்களுக்கான இறுதி எச்சரிக்கை!!

இனியும் உங்களின்
நாற வாய்கள் எங்கள்
விவசாயிகள் போராட்டத்தை
இழிவு செய்ய எண்ணினால்
பாசிஸ்டுகளே,
உங்களின் கன்னம் பழுக்கும்!!!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோல்வி முகத்தில் மோடி அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்! | THE FINAL COUNTDOWN

தோல்வி முகத்தில் மோடி அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்! | THE FINAL COUNTDOWN

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்கள் கேள்வி – தோழர்கள் பதில் | Lok Sabha Election Results 2024 | The Final Countdown

மக்கள் கேள்வி – தோழர்கள் பதில் | Lok Sabha Election Results 2024
The Final Countdown

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பி.ஜே.பி – யின் வீழ்ச்சியும் மக்கள் போராட்டமும்..! | | Lok Sabha Election Results 2024

பி.ஜே.பி – யின் வீழ்ச்சியும் மக்கள் போராட்டமும்..! | | Lok Sabha Election Results 2024

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசக் கும்பலின் தோல்வி முகம் | Lok Sabha Election Results 2024| The Final Countdown

பாசிசக் கும்பலின் தோல்வி முகம் | Lok Sabha Election Results 2024| The Final Countdown

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மேட்ச் பிக்சிங் தேர்தல் | Lok Sabha Election Results 2024| The Final Countdown | வீடியோ

மேட்ச் பிக்சிங் தேர்தல் | Lok Sabha Election Results 2024| The Final Countdown | வீடியோ

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெல்லை சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் மருது

நெல்லை சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube