சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம் | கவிதை

சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்

ங்கிகளே,
மெய்தி மக்களாகிய எங்களை
பழங்குடி அந்தஸ்தை காட்டி
இனவெறியை தூண்டிவிட்டு
குக்கி மக்களை
இரத்த வெள்ளத்தில்
மிதக்க வைத்தீர்களே!

கனிம வளங்களை களவாட
அம்பானி அதானிகளுக்கு படையல் போட
அமைதியாய் வாழ்ந்த
எங்களின் வாழ்க்கையில்
தீ வைத்தீர்களே!

நாங்களோ,
மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே
குக்கிப் பெண்களை
கூட்டுப் பலாத்காரம் செய்தோமே
அம்மணமாக்கி
வீதிகளில் இழுத்துச் சென்றோமே
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
அடித்துக் கொன்றோமே
வீடுகள், ஆலயங்களை
தீக்கிரையாக்கினோமே..

எத்தனை உயிர்கள்
பலியானது இக்கலவரத்தில்!
ஏராளமான இடங்கள்
சூறையானது இம்மாபாதகத்தில்!

மொத்த மணிப்பூரும்
பற்றி எரிந்ததே!
நீங்களோ,
கலவரத் தீயை மூட்டிவிட்டு
கள்ளமௌனம் காத்தீர்களே!
கயமத்தனிகளே!

ஒப்பாரி ஓலங்கள் இங்கு – இன்னும்
ஓயாத அவல நிலையிலும்
ஓர் ஆண்டுக் காலமாய் – உங்கள்
கலியுக கடவுளான மோடியோ
எங்களை இன்னும் காணவரவில்லையே!

சங்கிகளே,
போதும்!
மெய்தி இனவெறியால்
நாங்கள் பட்டப்பாடு போதும்!

எங்களின்
அமைதியான வாழ்வு நாசமாகி
நாங்கள் பட்டப்பாடு போதும்!

சங்கிகளே,
நாங்கள் உங்களை
புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டோம்!

அதனால்தான்
கேடுகெட்ட சங்கிகளே,
நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்!


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க