இனி, பாசிஸ்டுகளின் கன்னம் பழுக்கும்!

இனி, பாசிஸ்டுகளின் கன்னம் பழுக்கும்!

ங்கள் வீரம் செறிந்த
விவசாயிகளின் போராட்டத்தை
இழிவு செய்ய நினைத்தால்
இனி உங்களின்
கன்னம் பழுக்கும்!!

நிலத்தைக் கீறி உழுத
விவசாயிகளின் டிராக்டர்கள்,
உங்களின் வஜ்ராக்களை
எதிர்த்து நிற்க
ஒருபோதும் தயங்கியதில்லை!!

எங்கள் வீரம் செறிந்த
விவசாயிகள் போராட்டத்தையும்,
போராட்டத்தில் விவசாயிகள்
செய்த உயிர் தியாகத்தையும்
உலகம் அறியும்!!

ஓராண்டுக்கும் மேலாய்
உங்கள் டெல்லியை
விவசாயிகளின் டிராக்டர்கள் உலுக்கியதை
மறந்து விட்டீர்களா?

மீண்டும் 100 நாட்களுக்கும் மேலாய்
விவசாயிகளின் டிராக்டர்கள்
பாசிசத்திற்கு எதிராக
களத்தில் இறங்கி நிற்கிறதே
மறந்து விட்டீர்களா?

இலட்சக்கணக்கான விவசாயிகள்
வாழ வழியற்று தம்மை
மாய்த்துக் கொள்ளும்` போதெல்லாம்
பேசாத உங்களின்
நாற வாய்கள்.

விவசாயிகளின் உரிமை குரலை
நசுக்க மட்டும் ஊளையிடுகிறது.

இனியும் உங்களின் பாசிச
அடக்குமுறைகளுக்கு
நாங்கள் ஒருபோதும் அடிபணியோம்!

இதுவே உங்களுக்கான இறுதி எச்சரிக்கை!!

இனியும் உங்களின்
நாற வாய்கள் எங்கள்
விவசாயிகள் போராட்டத்தை
இழிவு செய்ய எண்ணினால்
பாசிஸ்டுகளே,
உங்களின் கன்னம் பழுக்கும்!!!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க