privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்அறிவிப்பு: "ஈழத்தின் நினைவுகள்" இனி தொடராது! தொடரும்..... வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

அறிவிப்பு: “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

-

அறிவிப்பு: "ஈழத்தின் நினைவுகள்" இனி தொடராது! தொடரும்..... வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” தொடர் பற்றி தோழர் இரயாகரன் அவரது தளத்தில் வினவையும், ரதியையும் கடுமையாக விமரிசித்து ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். அதற்கான பதிலை வினவு ஒரு இடுகையாக வெளியிட்டது. இதற்கு வந்த பின்னூட்டங்களிலும் இருதரப்பையும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ரதி எமக்கு அனுப்பிய மின் மடலை கீழே தருகிறோம்.

வினவு குழு,

என்னைப்பற்றி காரசாரமாக உங்கள் தளத்திலும், தமிழ் அரங்கத்திலும் பதிவுகளும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எனக்குத்தான் ஏதோ தேவையில்லாத ஓர் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது போல் ஓர் உணர்வு. நான் எழுத தொடங்கும் போது எனக்கு நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடோ, விதிகளோ விதிக்கவில்லை. நன்றி. ஆனால், இப்பொது வாசகர்களின் பதில்களைப் பார்த்தால் நான் பக்கச் சார்பாக எழுதுவதாகவும், புலிகளின் பிரச்சாரம் செய்வதாகவும் என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது அவர்களின் கருத்து சுதந்திரம். நான் என்னைப் பற்றி ஓர் விடயத்தை என்வரையில் தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கு உங்கள் தளத்தை களமாக பயன்படுத்தவில்லை. அது தவிர, புலிகளைப்பற்றி பேசும் ஜனநாயக உரிமை எனக்கும் உண்டு. அதை நான் உங்கள் தளத்தில் என் கட்டுரைகள் மூலம் ஏதோ புலிப்பிரச்சாரம் செய்வது போல் சிலர் தவறான அபிபிராயம் செய்கிறார்கள். நான் ஓர் பொதுப்பிரஜை, எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை. இதுவரை நான் என் கட்டுரைகளில் புலிகளைப்பற்றி எந்தவொரு விடயமும் எழுதியதாக நினைக்கவில்லை. இனிமேலும், நான் மக்கள் அவலம் பற்றி தான் எழுதினாலும், அது என்னை தேவையில்லாத விமர்சனங்களுக்குள்தான் தள்ளிவிடும். அதனால், நான் இத்தோடு உங்கள் தளத்தில் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். தொந்தரவுகளுக்கு மன்னிக்கவும். எப்படியென்றாலும், உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. தொடர்ந்தும் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன். நன்றி.

நட்புடன்,
ரதி.

ரதியின் தொடர் இனி வெளிவராது. எங்கள் கோரிக்கையை ஏற்று இதுவரை எழுத முன்வந்ததற்கு அவருக்கு எம் நன்றி. இனி  நாங்கள் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் அவர் எழுத விரும்பவில்லை. அவர் எழுத்தை விமரிசிக்கும் விவாதச்சூழல் மாறி, வினவு தளம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

‘புலிப்பாசிசத்தை பிரச்சாரம் செய்ய தளம் அமைத்துக் கொடுத்தோம்’ என்ற ‘வரலாற்றுப் பழி’யில் வீழ்வதிலிருந்து ரதி எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் சொல்லலாம். இந்த அனுபவத்தை இரண்டு விதமாக தொகுத்துக் கூறலாம். “பாசிஸ்ட்டால் காப்பாற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள்” அல்லது “வறட்டுவாதத்தால் பாதுகாக்கப்பட்ட மார்க்சியம்!”

ரதியின் தொடர் குறித்த அறிவிப்பு வந்த உடனேயே “ஒரு பக்க சார்பு இல்லாமல் எழுதுமாறு” அறிவுறுத்தி வாழ்த்தும் தெரிவித்தார் தோழர் இரயாகரன். பின்னர் இது தொடர்பான விவாதத்தில் பின்னூட்டமிட்ட தோழர் மா.சேயை “ஒரு புலி பாசிஸ்ட்” என்று சாடினார். எமது தலையீட்டிற்குப் பின் தவறாக அவ்வாறு கருதிக்கொண்டதாக விளக்கமளித்தார். பிறகு ரதி எழுதிய தொடரில் மூன்று பகுதிகள் வெளிவந்த பின் ரதி ஒரு பாசிஸ்ட் என்றும் தனது தளத்தில் கடுமையாக விமரிசிக்கப் போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். ( இதை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் )

புலித்தலைமை – புலி அணிகள், புலிகள் – புலி அனுதாபிகள் என்று பகுத்துப் பார்க்கும் புரிதலை கொண்டிருப்பதாக கூறும் தோழர் இராயகரனுக்கு ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன? ஒரு வேளை அதன் பிறகுதான் இந்த உண்மையை அவர் கண்டுபிடித்தார் போலும். கட்டுரையாளர் ரதி ஒன்று புலி அனுதாபியாக இருக்கவேண்டும். (தற்போதைய கடிதத்தில் தன்னைப்பற்றி அவரே அவ்வாறுதான் கூறிக்கொள்கிறார்.) அல்லது அவர் தந்திரமாக மறைத்துக் கொண்டு வினவு தளத்தில் ஊடுருவிய ஒரு நரித்தனமான பாசிஸ்ட்டாக இருக்க வேண்டும். இதுதான் இரயாவின் கருத்து.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் இதை எங்களுக்கு அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை. மாறாக வினவு தளத்தின் மீதான விமரிசனமாக அவர் எழுதி வரும் தொடரில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு”.(பாகம்1)

“ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது”. (பாகம்1)

“தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது”.(பாகம்-1)

“புலி பாசிச பிரச்சாரம் எது?, பொது மக்கள் கருத்து எது?, என்று பிரிக்கின்ற அந்த அரசியல் இடைவெளியை இன காணமுடியாதுள்ளனர்.” (பாகம்-2)

“கடந்த காலத்தில் புலிப் பாசிசம் ஆடிய பாசிச ஆட்டத்தை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் தெளிவாக அம்பலப்படுத்திப் போராடியது. நாம் நாட்டை விட்டு வெளியேறி செயலற்றுப் போன ஒரு இடைக்காலத்தில், எமக்கே அது துல்லியமாக வழிகாட்டியது. இப்படி தோழர்கள் வரலாறு இருக்க, இதையும் மீறி புலிப்பாசிசம் தோழர்களுக்கு தனது வரலாற்றை மட்டும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.” (பாகம்-3)

இவை அனைத்தும் மிகக் கடுமையான விமரிசனங்கள். “இது வினவு தளம் தெரிந்தே செய்யும் தவறு” என்று கூறுவது மட்டுமின்றி புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தின் இதழ்கள் புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு எதிராக வினவு தளம் செயல்படுவதாகவும் இரயா குற்றம் சாட்டுகின்றார். ஆனால் ஒரு பாசிஸ்ட் பிரச்சாரம் செய்வதற்கு தெரிந்தே மேடை அமைத்துக் கொடுப்பதாக கூறும் இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எங்கே? அதை நான்காவது பகுதியில் அவர் வழங்குவாராம்.( “அவரை (ரதியை) நாம் பாசிட் என்று ஏன் அழைக்கின்றோம், என்பதை பகுதி 4 ல் வெளிக்கொண்டு வரவுள்ளோம்.”எம் முந்தைய இடுகைக்கு இரயா அனுப்பிய பின்னூட்டம்)

முதலில் குற்றச்சாட்டு, தீர்ப்பு, அபிப்ராயத்தை உருவாக்குதல்- பிறகு ஆதாரங்களை சமர்ப்பித்தல்.! இதனை ஜனநாயக வழிமுறை என்று யாரேனும் அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது தோழமை உறவு பற்றியது. இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். இதனை விளக்கத் தேவையில்லை. தோழர் இரயா தனது தளத்தில் ரதியின் தொடரை கடுமையாக விமரிசித்து எழுதப்போவதாக ஒரு அறிவிப்பைத்தான் கடிதம் மூலம் எங்களுக்கு வெளியிட்டார். அவர் விரும்பும் வகையில் ரதியின் தொடரை உடனுக்குடன் அம்பலப்படுத்தி வினவு எழுதியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு எழுதத் தவறியதால்தான் தான் எழுத நேர்ந்ததாகவும் இதற்கு விளக்கமும் கூறுகிறார். அவரது கடிதத்திற்கு வினவு அளித்த பதிலில் காணப்பட்ட தோழமை உணர்வை பலவீனம் என்றோ கொள்கைப் பிறழ்வை மறைப்பதற்கான மழுப்பல் என்றோ அவர் புரிந்திருக்கும் பட்சத்தில் – கொஞ்சம் கஷ்டம்தான்.

இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு ‘இயலாமை’; தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லாததால் ஏற்படும் இயலாமை; கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் இயலாமை; தனது தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்படும் இயலாமை. ஆனால் இரயாவுக்கும் எமக்குமான உரையாடல் தனிப்பட்ட விவகாரமாக இனிமேலும் இல்லை. பொதுவெளிக்குள் வந்துவிட்டது. வினவு வாசகர்களில் சிலரும் வினவின் நிலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் நாங்கள் அஞ்சவில்லை – ரதி வினவு தளத்தில் பாசிசப் பிரச்சாரத்தை செய்து விடக்கூடுமோ என்று அஞ்சாததைப் போலத்தான்.

ரதி எழுதக்கூடிய எழுத்துகளுக்கு வெளியே அவர் ஒரு பாசிஸ்ட் என்பதுதான் இரயாவின் நிலை. ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல. இருந்தும் அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு.

அந்த வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது. விவாதத்திற்கு உரியவர் ரதி அல்ல. அவருக்கு  வினவு மேடை அமைத்துக் கொடுத்தது சரியா தவறா என்பதே இப்போது விவாதப் பொருள். வறட்டுவாதமா, மார்க்சியமா என்பதே விவாதப்பொருள். இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான். எனினும் இந்நிலையை நாங்கள் தோற்றுவிக்கவில்லை.

இப்பிரச்சினையில் எமது விமரிசனத்தை  சில நாட்கள் இடைவெளியில்  எழுதுகிறோம். பிற பணிகள் இருப்பதனால் சில நாட்கள் பொறுத்திருக்க கோருகிறோம். மார்க்சியவாதிகளை புலிகள் கொன்றொழித்தார்கள் என்பதை நாம் அறிவோம். வறட்டுவாதம் மார்க்சியத்தைக் கொல்லும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

*********************************

தொடர்புடைய பதிவுகள்

புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 1

பாகம் – 2 : ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

பாகம் -3 : ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

  1. இந்த பதிவிலிருந்து தெரியும் விசியம் என்னவென்றால் : எதிர்காலத்தில் செம்புரட்சி ராயகரன் தலைமையில் உருவானால், அவ்ர் தோழர் ரதி மற்றும் வினவு இதர தோழர்களை முதலில் போட்டு தள்ளுவார். தோழர் வினவு தலைமையில் உருவானால் முதலில் ராயகரன் மற்றும் இந்திய போலி கம்யூனிஸ்டுகளை போட்டு தள்ளுவார். !! :)))

    புரட்சிக்கு முன்பாகவே இப்படி சண்டை என்றால், புரட்சி வந்தால் என்ன ஆகும் ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !

    பி.கு : இப்படி எழுதவதினால், எம்மை பற்றி : “ஊர் இரண்டுபட்டால் கூத்த்டாடிக்கு கொண்டாட்டம்” என்று சொல்ல வேண்டாம். நான் கொண்டாடவில்லை. மேலும், தோழர் ராயகரன் பல நேரங்களில் கேனத்தனமாக எழுதாவர் என்று முன்பே ஒரு பேச்சு உண்டு !!

    தோழர் ராயகரனுக்கு யான் எழுதிய ஒரு மடல் :

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008

    தோழர் ராயகரன்,

    சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு இரும்புத்திரையில் பின் மறைந்திருந்து. நேர்மையான, சரியான தகவல்கள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன். பிற நாட்டு ஊடகவியலாளர்கள்
    அங்கு சுதந்திரமாக சுற்றி, தகவல் தேட அனுமதிக்க மறுக்கப்பட்டன். லோக்கல் ஊடகங்கள் முழுவதும் அரசின் கைப்பாவைகள். (ராஜ பக்ஷெ அரசு, வன்னி பகுதியில் நடந்த விதம் இதை போலத்தான். மேலும் இறுதி போரில் சுமார் 15000 முதல் 30000 தமிழர்கள் கொல்லப்படிருக்கலாம் என்று தமிழர்களாகிய நாமும் பல இதர பார்வையாளார்களும் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள் அரசு சில நூறு மக்கள் தாம் கொல்பாட்டதாக‌ “ஆதாரங்களை” உருவாக்கி, உண்மையான ஆதரங்களை அழித்துவிட்டது. உண்மைதான் என்ன ? பதில் இல்லை. இதே பாணிதான் சோவியத் ரஸ்ஸிய மற்றும் இதர சர்வாதிகார நாடுகளில் நடந்தது / நடக்கும்)
    மிகைப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எண்ணிக்கை என்ப‌தாலே, சோவிய‌த் ர‌ஸ்ஸியாவில் ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை முற்றாக‌ ம‌றுக்குகிறீர்க‌ளா ? அந்த‌ அமைப்பே அப்ப‌டிப்ப‌ட்ட‌ விளைவுக‌ளை தான் விளைவிக்கும் என்ப‌தே வ‌ர‌லாறு காட்டும் உண்மை.
    சோல்சென்ஸினை துரோகி என்று விளிக்கிறீர்க‌ள். என்ன துரோகம் செய்தார் அவர் ? அவ‌ர் ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் பொய்யா என்ன‌ ? உல‌கில் யாரும் இப்போது ம‌றுக்க‌ வில்லை. and Solezenshen was jailed not for advocating compromise with NAzis, but for critising Stalin in letter to a freind. HE was a honest patriot who faught in the WW 2 with honour. his jailing happened much later. ok. not as you try to portary. many many innocents like him too were jailed. (i wish you too were with him in the gulag. you are cozy in France and talk like pseudo-moralist). and try to read Gutav HErlings “A World apart”
    மார்கிஸ‌ம் பேசும் நீங்க‌, ஃபிரான்ஸ் நாட்டில் த‌ஞ்ச‌ம் அடைதுள்ளீர்க‌ள். கூபா அல்ல‌து வ‌ட‌ கொரியாவில்
    அக‌தியாக‌ த‌ஞ்ச‌ம் புகுந்து, அங்கு ஒரு கூட்டு ப‌ண்ணையில் ஒரு 10 ஆண்டுக‌ள் வேலை செய்திருக்க‌ வேண்டும் நீங்க‌. உல‌க‌ம் வேற‌ மாதுரி தெரியும். வ‌ந்தாரை வாழ‌ வைக்கும் பிரான்ஸ் தேச‌ம், போதிய‌ மான்ய‌ம் ம‌ற்றும் உத‌விக‌ளை அளித்து, அதைவிட‌ முக்கிய‌மாக‌ க‌ட்ட‌ற்ற‌ க‌ருத்து சுத‌ந்திர‌த்தை அளித்துள்ளது.
    அத‌ன் அருமை புரியாத‌வ‌ர் நீங்க‌. வ‌ட‌ கொரியா செல்ல‌ வேண்டும் நீங்க‌. அப்ப‌ தெரிய்ம், சோல்சென்சின் துரோகியா இல்லை யார் துரோகி என்று.

    I know you are too narrow minded and insular and undmeocratic to publish my comment. but this for your kind information. that is all.
    My only wish is France should expel you to N.Korea now. It is a great shame on France and it shows the magnanimity of France which is a capitalitic democracy.

    • ஹிஹி அதியமான் ஒங்கள் யாரு போட்டு தள்ளுவார் 🙂 இந்த உலகத்தில் அதிக அளவு போரிட்டது மதவாதிகளும், முதலாளிகளும்தான்.. கண்ணாடியை மாத்துங்க.

    • போடாங்.. நல்லா வாயில வருது.
      ஹலோ மரியாதையா பேசுங்க‌
      ஒருமையில பேசுங்கன்னு எல்லாம்
      ஏங்கிட்ட சொல்லாத நீ இப்படி பின்ணூட்டம்
      போடுகிற‌ வரை உனக்கு மரியாதையும் கெடைக்காது
      ஒரு மண்ணும் கெடைக்காது.

      • தமிழன்,

        அப்படி எல்லாம் அடக்கி வைத்தால் அசிடிட்டி வந்துவிடும் !!
        என்னை போல “தார‌ள‌மாக” பேச‌லாமே !! :))

        புரட்சிக்காக கூட்டக செயல்பட்ட நெருங்கிய தோழர்கள்,
        பின்னாட்ட்களில் தங்களுக்கு சண்டையிட்டுக்கொண்டு,
        கொலை வரை போவது மிக சகஜமான வரலாறுதான்.

        லெனினுக்கு அடுத்தபடியாக இருந்த முக்கிய தலைவர்களான‌
        டிராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களை ஸ்டாலின் பின்னாட்களில்
        கொன்றழித்து பற்றி படித்துப் பாருங்கள் :

        http://www.columbia.edu/~lnp3/mydocs/modernism/Zizek.htm

      • அதியமான், கம்யூனிச அவதூறுகளை விவாதிக்க இது இடமில்லை.. அதான் புதிய ஜனநாயக கட்டுரைகள் இருக்கிறதே அங்கே பார்ப்போம். மேலும், உலகில் பல அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இறந்தவர்களும், கொன்றவர்களும் கம்யூனிஸ்டுகள் அல்ல. இதுக்கு லிங்கெல்லாம் தரமுடியாது

    • //சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு //
      சம்பந்தம் இல்லாமல் உளரும் அதிமேதாவித்தனத்தை நீங்க எப்ப விடபோறீகளோ

  2. கடைசியில் இராயகரனின் ஒற்றைத்தனம் வென்றுவிட்டது! ரதியின் தன்மான உணர்ச்சிக்குப் பாராட்டுகள்! இனியாவது இராயகரன் போன்ற ஒற்றைத் தனங் கொண்ட உயர் மீநிலை, மேதாவி பார்ப்பனியர்களிடம் இருந்து, வறட்டு, போலி ஈழ மார்க்சியர்களிடமிருந்து ம.க.இ.க விலகி, ஈழ மக்கள் மத்தியில் தன் வழியில் மார்க்சிய விழிப்புணர்வைப் பரப்பும் என நம்புகிறேன். நனைந்த பின்னும் அடிக்கடி அடித்த இராயகரனின் சாயம் அடுத்த மழையிலும் வெளுக்கும்! நன்றிகள்!

  3. சரியான அனுகுமுறை. வினவு கருத்துடன் நான் 100% ஒத்துப்போகிறேன். தோழர்கள் உணர்ச்சிவசப்படாமல் இதை பரிசீலித்து விவாதிக்குமாறு வேண்டுகிறேன்

  4. enna thozhar ithu mailil pesi theerkka vendiyathai pathivil pottu rendu perum kuzhambi engalaiyum kuzhappuringale.

  5. நான் மணி

    இணையம் என்பது ஒரு ஜனநாயகத்திற்கான அதாவது விவாதத்திற்கான மேடை என்று கருதுகிறேன். மற்றபடி வசிட்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் வழங்குவதற்கான அரங்கு இது அல்ல என நினைக்கிறேன்.

    //தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.
    மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

    இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.

    நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.(பாகம் 1 லிருந்து)//

    வன்மம் இல்லாத மனதுடன் தனது மகளை இந்துமத வெறியர்களின் காமப்பசிக்கு பலிகொடுத்த தாய் ரத்தசாட்சியம் அளித்தால்தான் தூய மார்க்சிய லெனிய இயக்கத்தின் ‘கற்பு’ காப்பாற்றப்படும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. இப்படி ரிஜக்ட பண்ணுவது என்றால் ஒரு அமைப்பை கட்ட முடியுமா? அல்லது அவர்களுக்கு புரியவைக்கும் செயலை நடைமுறையில் செய்து காட்டி புரிய வைக்க முடியுமா?

    அந்த மேடையில் வன்மம் கொண்ட மனதுடன் ஒரு தாயோ, தந்தையோ சாட்சியம் சொல்லியிருந்தால், அதற்காக பொதுவுடமை இயக்கம் பின்னடையுமா…
    முதலில் கம்யூனிஸ்டுகள் தங்களது எதிரிகளுடன் கூட விவாதிக்க தயாராக இருக்க வேண்டும். அது உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் இன்றுவரை உங்கள் பக்கம் எத்தனை பேரை வென்றெடுத்தீர்கள் பிரான்சில்… வென்றெடுப்பதற்கு கூட விவாதிப்பதற்கான பொறுமையோ, மக்களிடம் தொடர்போ கொள்ளாமல் இருந்துவிட்டு, வாக்கியத்துக்கு இடையில் வர்க்கம் என் மூன்று தடவை, புலிப்பாசிசம் என்று மூன்றுதடவை, தமிழ்பாசிசம் என மூன்று தடவை உச்சரித்துவிட்டால் அது மார்க்சியம் என் ஆவதற்கு மார்க்சியம் ஒன்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயம் இல்லையே…

    உங்களது மனதில் உண்மையில் நீங்கள் தோழராக மாறியிருந்தால் புலிகள் மீதான தனிப்பட்ட வன்மம் மறைந்திருக்க வேண்டும். போலியாக மறைத்தால் தகுந்த சந்தர்ப்பத்தில் அது இயல்பாக வெளிப்படும்.
    பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களில் உங்களால் பங்குபெற முடியாமல் இருந்ததற்கு காரணம் என்ன? ஒருவேளை பங்கு பெற்று இருந்தால் ஏன் எழுதவில்லை. வர்க்கமா.. அப்படியானால் நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்..

    // ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.//

    ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அவலத்தை ஒரு கம்யூனிஸ்டு ஆதரிப்பதுதானே சரி அந்தப்பார்வை வர்க்கப்பார்வைக்கு எதிரானாதா.. ஆம் எனில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது மார்க்சியமா.. தமிழ்மக்களைச் சார்ந்துதான் தனது அனுபவங்களை ரதி சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.. நீங்கள் அப்படி சார்ந்து இருப்பதாக கருதிக் கொள்கின்றீர்களா.. தனிமனித வக்கிரமா.. கொஞ்சம் லாஜிக் ஆக பேசிப் பழகுங்கள்.. தமிழ்தேசிய வாதிகள் மாதிரி பேசிப் பழகாதீங்க.. உலகத்துல இருந்தே தனிமைப்பட்டுப் போயிடப் போறீங்க..

    ஒரு அகதியின் கண்ணீரைப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர இது ஒரு மாற்று மகாவம்சம் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு வினவின் வாசகர்கள் ஒருவகை அடி முட்டாள்கள் இல்லை எனவும் கருதுகிறேன்.

    //தமிழ்மக்களின் பொது அவலத்தை புலியிசம் தனக்கு ஏற்ப, தன் வர்க்கத்துக்கு ஏற்ப பயன்படுத்தும் என்ற அரசியல் உண்மையை, இந்த நடத்தை மூலம் வினவு நிராகரிக்கின்றது. இந்த அடிப்படையில் எதிர் விமர்சனமின்றி, அதை நுணுகிப் பார்க்கத்தவறி, தமிழ் பாசிசத்தை தமிழ்மக்கள் அவலத்தினூடு, பொதுவுடமை ஊடாக பிரச்சாரம் செய்ய வினவுதளம் உதவுகின்றது. வர்க்கங்கள் உள்ள சமூகத்தில், தமிழ்மக்களின் பொதுவான துயரங்களை எந்த வர்க்கம், எப்படி தனக்கு இசைவாக பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை கூட இங்கு கைக்கொள்ளாது, தமிழ் பாசிசத்தை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் குரலாக பொதுவுடமை பிரச்சாரத்தில் வினவு அனுமதித்துள்ளது. ஒரு புலிப் பாசிட்டை “தோழர்” என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு “தோழர்” அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. “தோழர்” என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக “தோழராக” ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது. //

    தோழர் எனப்படுபவர்கள் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதகுல எதிரியான பாசிஸ்டுகள் மாத்திரம்தான் அப்படி அழைக்கப்பட முடியாதவர்கள். அதற்கும்கூட மொத்த வேலைக்கு
    உதவும் என்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது எனப் பார்ப்பது மார்க்சியவகைப்பட்ட பார்வை அல்ல, மாறாக மார்க்சிய’வார்த்தை’யில் பிழைக்கும் பார்வை..மேலும், முதலில் சொன்ன இயக்கவியல் கண்ணோடமின்மையே ரதி என்ற புலி ஆதரவாளர் தமது விவாதங்களினூடாக மாறுவார் என்ற பார்வை இல்லாத்தாலே, அல்லது சரியாகச் சொல்வது என்றால், தான் பேசுகின்ற வறட்டு மார்க்சியத்தால் அவரை மாற்ற முடியாது என நம்புபவர்கள்தான் இன்னும் சரியாகச் சொல்வது என்றால், மாற்றவே முடியாதவர்களால் பூமி நிறைந்திருப்பதாக நம்பும் மார்க்சிய இயக்கவியலின் எதிரிகள்தான் பற்றுவதற்கு ஒரு கைப்பிடி கிடைக்காமல் தோழர் என விளித்த்தை ஒரு விசயம் எனக் கருதி மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்ய முடியும்.
    பிரபாகரனுக்கு ஒரு காலத்தில் நான் கூட ரசிகர்தான். என்னிடம் அரசியலை விவாதித்த மா.லெனிய அமைப்பினைச் சேர்ந்த தோழர் என்னைப் போன்ற ஒரு ‘பாசிஸ்டி’டம் நாள்கணக்கில் விவாதித்து எனது கருத்தை மாற்றினார். இது தவறு என ரயாகரன் அவருக்கு விளக்கினால் அந்த அமைப்பை ‘நன்றாக’ இந்தியாவில் வளர்க்கலாம்.சுத்த சுயம்புவாக தோழராக பிறப்பவர்கள் மாத்திரம்தான் நம்முடன் பேசத் தகுதியானவரகள் என நினைத்தால்.. அந்த தனிமையை நினைத்துப் பார்க்கவே மனசு பதறுகிறது..

    // ஈழத்து பொதுவுடமை தன் வர்க்க எதிரியில் ஒன்றை, இந்திய பொதுவுடமைக்கு சார்பான வினவுத் தளத்தின் ஊடாக எதிர்கொள்ளும் துயரம் எம்முன். நாம் சந்திக்கும் கடும் உழைப்பு, கடும் பளுவுக்குள், சர்வதேசியத்தின் அரசியல் அடிப்படையை தகர்த்துவிடும் எல்லைக்குள் இவர்கள் நகர்த்துகின்றனர். மனிதன் தான் சந்தித்த பாதிப்புகளை எந்த வர்க்கமுமற்றதாக காட்டி, ஈழத்துப் பாசிட்டுகளின் பிரச்சாரத்தை எமது பொதுவுடமை பிரச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்தியுள்ளனர்.//

    ஈழத்துப் பொதுவுடமைக்கு நீங்களோ, இந்தியாவுக்கு வினவோ பிரதிநிதி என நீங்கள் உங்களுக்குள்ளேயே முடிவுசெய்ய முடியாது. அது மக்கள் அரங்கத்தில் உங்களது செல்வாக்கால், சித்தாந்த தெளிவால், புரட்சியை நடத்திக்காட்டுவதால் தீர்மானிக்கப்படும். வினவு சார்ந்த அமைப்பும், நீங்கள் மாத்திரமே கொண்ட ‘ஈழத்துப் பொதுவுடமைக் கட்சியும்’ ஒன்றா? இந்த ஆணவம் எனக்கு புலிப்பாசிச தலைமையை ஞாபகப்படுத்தக் கூடாதா? நீங்கள் பாசிசத்தை எதிர்க்கிறேன் என்பதாகக் காட்டிக் கொள்வதால் மாத்திரமே கம்யூனிஸ்டாக மாற முடியாது.
    நீங்கள் கடும் உழைப்பு உழைத்து கட்டிய ஈழத்து கம்யூனிஸ்டு கட்சியில் இன்னமும் திட்டம் கூட எழுத நேரமில்லையா…

    பெரியாரை பெரியாரியவாதிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பூசையறைப்படமாக மாற்றிக் கொண்டுவருகிறார்கள். அதற்காக பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்போம் என்றார்கள் தோழர்கள். இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
    ரயாகரனுக்கு மற்றும் அவரை ஆதரிக்கும் அன்பர்களுக்கு ஒரு சவால்… இதோ கீழே சொல்லப்பட்டது கூட பாகம் 1 ல் எடுக்கப்பட்டதுதான்.. இது ஒரு மார்க்சிய அடிப்படையிலான பார்வை என யாராவது நிரூபிக்க முடியுமா.. முடிந்தால் நான் இனி இணையம் பக்கத்தில் வருவது இல்லை என உறுதி கூறுகிறேன்.

    // நாங்கள் இதற்கு முரணாக, முரண்பட்ட விதத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். வரலாறும், அனுபவமும், துயரங்களும் வர்க்கம் சார்ந்தது. வெறும் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, அனைத்தையும் வர்க்கமற்றதாக, முற்போக்கானதாக காட்டுவது அரசியல் அபத்தம். தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது.//

    • தோழர்களே,
      நான் மணி மேலே எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் மேற்கோள் காண்பித்திருக்கும் பகுதிகள் தோழர் இரயாகரனது கட்டுரையான “தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. மேலே அதை குறிப்பிடத் தவறிவிட்டேன். மன்னிக்கவும்

  6. // இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான்//
    வினவுத் தோழர்களே,
    இராயகரனின் வறட்டுவாதத்தை நீங்கள் இதுவரை எதிர்கொள்ளவில்லை – ஒரு வேளை அவர் உங்களை ஒத்த சிந்தனை கொண்டவரென நீங்கள் எண்ணியதாலோ, என்னவோ- ஏனையோர் எதிர் கொண்டார்கள் அதை. இப்போது நீங்களும் எதிர் கொள்கிறீர்கள். அவ்வளவே, வருந்துவதற்கு ஒன்றுமில்லை இதில்.

  7. // இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
    // அதே.. அதே!
    வழிமொழிகிறேன்!
    உங்களையும் யோவ் நீ யாரு.. அவனே இவனே புலி அடிவருடி எனத் திட்டி வரப்போகும் பின்னூட்டங்களுக்கு வாழ்த்துகள்! 😀

  8. இரயாகரனின் இந்த நிலைப்பாடு துயருக்குரியது. ரதியின் கட்டுரைக்கு பின்னூட்டமிடவும், வரிக்கு வரி மறுத்து பின்னூட்டமிடவும் கூடாது என்று யார் தடுத்தது ?. ரதி தன் பதிவினை இடைநிறுத்தியது துரதிஷ்ட வசமானதுதான்.

  9. ரதி,

    அடுத்தவர்கள் குற்றம் கண்டுபிடித்ததற்காக எழுதுவதை நிறுத்துவது தவறு. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தடிமனான தோல் வேண்டும். ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?

    உங்கள் பதிவுகள் முக்கியமான ஆவணங்கள். ஏற்கனவே பல முறை சொன்னதுதான், இருந்தாலும் திருப்பி சொல்கிறேன். எதிர் கருத்துகள் உங்களுக்கு முட்டாள்தனமாக, கடுப்படிப்பவையாக இருக்கலாம், அதற்காக எழுதுவதை நிறுத்தாதீர்கள். உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்!

    வினவு,
    // இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். //
    எனக்கு தெரியாது. என்ன உறவு?

    • நானும் ஆர்வி சொன்னதையே வழிமொழிகிறேன்.
      //ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?//
      ஒரு அகதியின் வாழ்க்கை சோகங்களை அறிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பு பாழாயிற்று. அவர் புலிகளை உயர்த்தி எழுதினாலும்கூட புலிகள் ஏன் பலரால் நேசிக்கப்ப்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவாவது ஒரு வாய்ப்பிருந்திருக்குமே?
      கருத்துகளை சொல்லவே விடாமல் (மறைமுகமாகத்தானென்றாலும்) வென்றது Prejudious ரயாகரனின் சாமர்த்தியமே. அவருடைய இந்த நடவடிக்கை ஃபாஸிஸமில்லையா? இதனை புலியெதிர்ப்பு ஃபாஸிஸமெனலாமா?

    • ரதி,

      எனக்கு தைரியமும், அறிவுறையும் சொல்லிவிட்டு இப்படி நீங்கள் வருத்தப்படுகிறீர்களே! நம் உடல் நலமும், உள்ள நலமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால் உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பகுதிகளில் செல்லாமல் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. எழுத்தாளர்கள் ஒரு பிரச்சனையை என்ன தான் நடுவு நிலைமையுடன் எழுதினாலும், உலகம் அதை சப்ஜெக்டீவான பார்வை என்று தான் விமரிசிக்கும். வாசகர்களில் உள் நோக்கு உள்ளவர்கள் என்றும், எந்த வித உள் நோக்கும் இல்லாதவர்கள் என்றும் நாம் பிரித்துக்கொள்ளவேண்டும். நம் மன ஆரோக்கியத்திற்க்காக நம் கருத்திற்கு எதிர் கருத்து கூறுபவர்களை, அதை நாம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், உள்நோக்கு கொண்டவர்களாக கற்பனை செய்து கொண்டு, மேலும் வாதிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிவிடவேண்டும். இதனால் பலர் நாம் தோற்றுவிட்டோம் என்று பரிகசிக்க நேரலாம். அதனால் என்ன? அவார்டா கொடுக்கிறாங்க? 🙂

      Bags

  10. ரதி தோற்று விட்டது மட்டுமல்ல எம்மையும் அவமானப்படுத்திவிட்டார்

    விமர்சனங்களுக்கு , குறிப்பாக விசமிகளுக்கு பயப்படுபவர் எழுதவே தொடங்கியிருக்கக் கூடாது

    ஆனாலும் இவர்கள் புலிகளுக்கு எதிராக எழுதும் போது புலிகள் ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வார்கள்

    ஆனால் அதையே புலிகளுக்கு ஆதரவாக எழுதினால் அருவருடி , புலிப்பாசிசம் என்று ஊலை யிடுவார்கள்

    புலிகளுக்கு எதிராக எழுதுவது தான் கருத்துச் சுதந்திரமா ??

    புலிகளுக்கு ஆதரவாக எழுதுவர்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா ???

    புலிகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களின் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு என்ன பெயர் ??

    அனால் புலி ஆதரவாளர்களுடன் ஒப்பிடும் போது எதிர்ப்பாளர்களும் துரோகிகளும் கடுகளவே

    புலி ஆதரவு ஊடகங்களிலும் பார்க்க புலி எதிர்ப்பு ஊடகங்கள் தான் அதிகம்

    அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் புலி எதிர்ப்பிற்கு இந்திய இலங்கை அரசுகளின் ஆதரவுகள், கூலிகள் கிடைப்பதும் ஒரு காரணம்

    ஆண்மீகத்தையும் ஆபாசத்தையும் ஒன்றாக காட்டினால் எம்மவர் உடனே ஆபாசத்தை தான் பார்ப்பார்கள்

    அது போலத் தான் புலி ஆதரவும் எதிர்ப்பும்

    இதில் வெட்கக கேடு என்னவென்றால் இந்த ஊட்கங்களுக்கு அதிகமாக உலாவுவதும் புலி ஆதரவாளர்கள் தான்

    புலிகள் துரோகிகளை வசைபாடுவது கிடையாது மாத்தையா முதல் கருணா வரை இது வரை அவர்கள் வசை பாடியது கிடையாது

    இந்தியாவின் தமிழின அழிப்பில் கூட எந்த ஆதரத்தையோ அல்லது இந்தியாவையோ வசை பாடியது கிடையாது

    இவர்கள் என்ன எழுதினாலும் புலிகளை குற்றம் சொல்லுவதற்கு இவர்களுக்கு தகுதியோ ,தாற்பரியமோ, அல்லது மாற்றுக் கொள்கையோ கிடையாது

    புலி எதிர்ப்பு மட்டுமே இவர்களது கொள்கை அதற்கு ஊதியம் கிடைக்கும் வரை இவர்கள் தொடர்வார்கள்

    கருத்துச் சுதந்திரம் , மறுப்பு , மாற்றுகருத்து என்று கத்திக் கொண்டு ஈழத்தில் எல்லா பத்திரிக்கையாளர்களையும் கொல்லுவதும் மிரட்டுவது இந்த கூட்டம் தான்

    ரதி போல் ஒதுங்காவிட்டால் போட்டுத் தள்ளுவது இது தான் ஈழத்தில் நடைபெறுகின்றது

    இது தமிழ் ஊடகவியளார்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் தான் அண்மையில் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியளாளர் கருணாவால் கொல்லப்பட்டதாக தகவல்

  11. ரயாகரன் என்னும் கொள்கை சிங்கத்தின் கூற்றுக்கு பயந்து நீங்கள் எழுதுவதை நிறுத்தியிருக்க வேண்டாம். அவரது கட்டுரைகளை படித்துவிட்டு நியாயமான சந்தேகங்களோ, கேள்விகளோ கேட்டால் உடனே நம்முடைய பின்னூட்டம் தூக்கப்பட்டுவிடும். அவ்வளவுக்கு நேர்மையுள்ளவர் அவர்.

    சில உதாரணங்கள்:

    ௧.”புலிகள் ஒரு சாதி மறுப்பு இயக்கமாம்” என்று நக்கல் தொனியில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு பின்னூட்டமாக, “அய்யா ரயாகரன் அவர்களே, புலிகள் சாதி மறுப்பு இயக்கம் இல்லை என்றால், அவர்கள் சாதியை பேணினார்கள் என்றால் அதற்கு ஏன்ன ஆதாரம்?” என்று வினவி இருந்தேன். இரண்டாவது நாளே அந்த பின்னூட்டம் தூக்கப்பட்டு விட்டது. எனக்கு வந்த சந்தேகம் அந்த கட்டுரையை படித்த ஓரிரெண்டு சுரணை உள்ள மனிதர்களுக்கு வந்திருக்க கூடும். ஏன், திடீரென்று ரயாகரனுக்கே கூட உறைத்திருக்கலாம்.

    ௨. நீங்கள் உங்கள் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தின் அடிப்பாகத்தில் இணைத்துள்ள மாவோ ஒரு வடிகட்டிய முட்டாள். குருவிகள்தான் நெல்மணிகளை பெருமளவில் தின்று உணவு பஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற ஆழ்ந்த “ஞ்ஞான உண்மையை” ண்டு பிடித்து, “குருவிப் போர்” என்ற ஒன்றை தொடங்கி, குருவிகளை பெருமளவில் கொன்று, அதனால் குருவிகள் உண்டு வந்த பூச்சியினம் பல்கி பெருகி, அந்த வருடம் பெரும் உணவுப் பஞ்சம் சீனாவில் வந்தது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா என்று வினவி இருந்தேன். அதற்கும் பதில் இல்லை. ஏன் என்றால் அவர் நேர்மை மிக்கவர்.

    ௩. “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று கூவுகிரீர்களே, நீங்கள் நக்கி பிழைக்கும் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் சீனாவும் ரசியாவும்தானே தமிழின அழித்தலின் முக்கிய கூட்டாளிகள்? நீங்கள் புலம்புவது போன்று அவர்கள் உண்மையிலேயே பாட்டாளி வர்க்கமாய் இருந்தால், உழைக்கும் மக்களாய் இருந்தால், ஒரு இன விடுதலைக்கு எதிராக சிந்திக்கவும் தோன்றுமா? மாறாக பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்களை கடனுக்கும், அன்பளிப்பாகவும் வழங்கி தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகள் அவர்கள். அவர்களை நீங்கள் ஆதரிப்பதால் நீங்களும் தமிழ் மக்களுக்கான எதிரிகள். உங்களுக்கு தமிழ் மக்களை பற்றி பேச, எழுது என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டிருந்தேன். அதையும் வெளியிட வில்லை. ஏன் என்றால் அவர் கொள்கை பிடிப்புள்ள நேர்மையான மனிதர்.

    ௪.” சீன இந்தியாவின் மீது காரணமின்றி படை எடுத்தது. இன்னமும் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திபெத்தை ஆக்கிரமித்தது என்ன நியாயம்? திபெத் இறையாண்மை மிக்க தனிப்பிரதேசம் அல்லவா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு கட்டுரையை எழுதிய ரயாகரன் நேரடியாக பதில் அளிக்காமல் தன்னுடைய அடிபொடிகள் மூலம் ஒரு முத்தை உதிர்த்திருந்தார்: “நாங்கள் நினைத்திருந்தால் டில்லியையே கைப்பற்றி இருப்போம். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல என்று சீனர்கள் சொன்னார்கள்” என்று திமிரோடு ஒரு பதில். அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? மேலும் திபெத்தை ஆக்கிரமிக்க என்ன உரிமை சீனர்களுக்கு இருக்கிறது என்று கேட்டதிற்கு, “அவர்கள் தியானம் செய்ய போராடுகிறார்கள்” என்று ஒரு “புதிய” கண்டு பிடிப்பை உதிர்த்திருந்தார் அந்த அடிபொடி. மேலும் அவர்களை சிங்கள பிக்குகளுடன் ஒப்பிட்டு தன்னுடைய “பரந்த உலக அறிவையும்” வெளிப்படுத்தி இருந்தார். திபெத்திய பிக்குகள் தங்கள் சொந்த நாட்டில், மண்ணில் செவ்விந்தியர்களை போலவும், ஈழ தமிழர்களையும் போல அமைதியாக வாழ விரும்பிய ஒரு இனம். சிங்கள பவுத்தர்களை போல வேறு மொழி பேசும் இன மக்களை கொன்று அதில்
    சுகம் கண்ட பேய்கள் அல்ல.
    மேலும், ஸ்டாலினால் கொல்லப்பட்ட ஏழை ரசிய குடியானவர்களை பற்றி கேட்டால்,
    ஸ்டாலின் ஒரு தன்னிகரில்லாத தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதாக உளறியிருந்தார். பதிலுக்கு நானும், “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழினத்துக்காக
    போராடிய சிறந்த தலைவர் யார்?” என்று ஒரு கருத்துகணிப்பை தைரியமிருந்தால் எடுத்துப்பாருங்கள். பிரபாகரனை தவிர வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வர முடியாது என்று எழுதினேன். அந்த பதிலையும் பிரசுரிக்கவில்லை. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த கொள்கை பிடிப்புள்ள நேர்மையான manithar.

    பாட்டாளி makkal, உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் திபெத்தை வேட்டையாடிய ஓநாய்தான் சீனா. அந்த ஓநாய்களை உயர்த்திப் பேசும் ஒரு ஓநாய்தான் இந்த ரயாகரன். அவர் எழுதிய கட்டுரைகளை படித்துப் பாருங்கள். எங்காவது ஓரிடத்தில் பாட்டாளி மக்கள், உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் தமிழர்களை கொல்ல துணை போன அந்த கயவர்களை பற்றி எங்காவது ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பாரா? மாட்டார். ஏன் என்றால் அந்த கேவலமான கயவர்களை, நய வஞ்சகர்களை,ஓநாய்களை நக்கித்தான் இவர் பிழைக்க வேண்டியிருக்கிறது.

    ரசியாவில் கோபசெவ் ஆட்சிக்கு வந்தபிறகு, “தோழர்கள்” நடத்திய திருவியாளையாடல்கள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. ஏழை மக்களை சுரண்டி கம்யுனிசம் பேசிய “தோழர்கள்” எவ்வாறு கொழுத்து வளர்ந்தார்கள் என்று வெளி வந்த செய்திகளால் “தோழர்களால்” ரசியாவையும் தூக்கி பிடிக்க முடியவில்லை. உடனே எவன் இளிச்ச வாயன் என்று பார்த்து தங்களுடைய நக்கி தின்னும் பிழைப்பிற்கு ஆதாரம் தேடி கொண்டார்கள். மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான கல்லூரி பெண்களை விபச்சாரிகள் ஆக்கியதும், உழைக்கும் மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கியதும்தான் ரசியாவில் “தோழர்களின்” மிகப்பெரும் சாதனை. விடுதலைக்கு போராடிய ஒரு இயக்கத்தை, இனத்தை வேரோடு அழிக்க சகல உதவிகளையும் செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போன்று, “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று இப்போது கூவி திரிகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசம் எல்லாம் வேஸ்ட். “தோழர்” ரயாகறந்தான் பெஸ்ட்.

    இதுதான், அந்த “உயர்ந்த லட்சியவாதியின் ” லட்சணம். அந்த கேவலமான பொய்யனுக்கு பயந்தா இந்த கட்டுரையை நிறுத்தினீர்கள்?

    உண்மையில் ரயாகரன் போன்ற காகிதப் புலிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் வாதாடி, உண்மையை எடுத்து கூறி அவர்களின் பைத்தியகார தங்களை தோலுரிப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஆனால், அவர்களை போன்று “போராளிகள் ,பாட்டாளிகள்” என்று நக்கி திரியாமல், நாம் உழைத்து பிழைக்க வேண்டியிருப்பதால் இதற்கெல்லாம் நேரமில்லை.

    • சீனிவாசன், இரயாகரனை விமர்சிப்பது என்ற பெயரில், கம்யூனிச அவதூறு உளரல்களை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும், இந்த பதிவின் விவாத போக்குக்கு வெளியே அது இருப்பதால் உங்களுக்கு இப்போது மறுப்பு எழுத முடியாது… யாரும் எழுதவும் எழுதக்கூடாது… இங்கே புதிய ஜனநாயக கட்டுரைகள் வெளியிடப்படும் போது வாருங்கள் விவாதிக்கலாம்.

      • உண்மைதான் ஜான், உண்மைதான்.
        எந்த கம்யுனிச கொள்கையை “தோழர்கள்” தூக்கி பிடித்து கூத்தாடுகின்றார்களோ அந்த கம்யுனிச கொள்கையை சீனாவும், ரசியாவும் தூக்கி குப்பையில் போட்டுவிட்ட பிறகும் நீங்கள் கத்தி கொண்டிருப்பது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான்.

        சரி. நீங்கள் சொல்வது போலே கம்யுனிசம் உழைக்கும் மக்களின், பாட்டாளி மக்களின் வரம் என்று வைத்துக்கொண்டாலும், அந்த பாட்டாளி மக்களின் பேரால், உழைக்கும் மக்களின் பேரால் தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகளை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவது ஏன் என்று கேட்டால், அது உளறல்தான்.
        கம்யுனிச போர்வையில் திபெத்தை ஆக்கிரமித்து, அவர்கள் வாழ்வை சிதைத்து , கலாச்சாரத்தை குலைத்தது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான். கம்யுனிச
        சீன “தோழர்” பாணியில்தான் “தோழர்” ராஜபக்சேவும் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்தார் என்று கூட நாளை நீங்கள் சித்தாந்த வக்காலத்து வாங்கக்கூடும். வாழ்க கம்யுனிசம். வாழ்க தோழர்கள்.

      • ****************,
        யாரு தோழர் என்று சொல்லச்சொல்கிறாய் ராஜ பக்சேவையா? பார்ப்பன சங்கராச்சாரி, அசோக் சிங்கால், பீஜேபிக்கு கால் கழுவ அனுப்புனவன போய் கேளு சுயமருவாதன்னா என்னான்னு? இந்தியாவு புடிச்சு இவ்வளவு நாள் தொங்குனீங்க. இந்திய மேலாதிக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஆவலா இருந்தீங்க. அவன் கவுத்து உட்டுட்டான் அதான் கோவம். புரட்சிகர கம்யூனிச வரலாற்றை எடுத்துப்பார் நாங்கள் இந்திய மேலாதிக்கத்தை அபோதிலிருந்தே எதிர்த்தோம் . எப்போன்னு தெரியுனுமா? உங்க அமைப்ப வளர்க்க எம்ஜிஆர், ரா பணம் கொடுத்தாங்களே அப்பவே இருந்தே.இதய்ம் பொய்யுங்காத உங்க ஆசான் பாலசிங்கம் சொன்னதுலா இது.

        அந்த மொட்ட லாமாவுக்கு சப்போர்ட் செய்து அதன் மூலமா ஈழத்தை புடிக்கப்போறாங்களாம். சீனிக்குட்டி , வரலாறை ஒழுங்கா படி, காங்கிரஸ் காரன் சொன்னத அப்புடியே சொல்லுதியே நீ ஈழகாங்கிரஸா.

    • //அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? //

      Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  12. எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.
    தமிழீழத்தின் தற்போதைய இழிநிலைக்குப் பிறகும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..

    • அஸ்கர், உங்கள் நிலைப்பாடு விந்தையாக இருக்கிறது. புலிகள் மீதான அபிமானம் என்ன சினிமா நடிகர்கள் அபிமானம் போன்றதா? சட்டென்று மாற. அது இரத்தமும் சதையுமான அனுபவபூர்வமான ஒரு அபிமானம். புலிகளின் அரசியல் தவறுகளை சொல்லி, விவாதித்து ஒருவரை மாற்றலாம். அப்படியில்லாமல் வெறுமனே மாறு மாறு என்றால் போதுமா?

      தவிர தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு புலிகள் மட்டும்தான் காரணமா? மற்ற புறக்காரணங்களே இல்லையா? அப்போ புலிகள் இராணுவ ரீதியாக மேல்கையில் இருந்தால் புலிகளின் மீது அபிமானம் கொள்ளலாமா? இது என்ன அரசியலற்ற பார்வை?

      புலிகளின் தலைமை அரசியல் தவறு புரிந்தாலும் அந்த அணிகளின் மீது நாம் அபிமானம் கொள்வது தவறா? மாவோயிஸ்டு அணிகளை நாம் அப்படித்தான் பார்க்கிறோமா?

      ஒரு தோல்வியின் உணர்ச்சிமயமான தருணத்தில் மக்கள் இருக்கும் போது, முன்னெப்பாதும் காட்டிலும் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டாமா. பாதிக்கப்பட்ட மக்களை அரவனைத்து, உற்சாகமூட்டி, போராட்டத்தை தொடர வேண்டாமா. ஒரு மார்க்சிஸ்டு சிந்தனை இந்த தருணத்தில் ஒரு தாயைப்போலல்லவா இருக்க வேண்டும்,

      மாறாக ஒரு பாசிஸ்டின் தோல்வியை கொண்டாடி, நான் அன்றே சொன்னேன் பார்த்தாயா என்று எழுதினால், யாரை நாம் நம் பக்கம் கொண்டு வர முடியும். மேலும் விலகிப் போகவே வழிவகுக்கும் ரதியின் இந்த கூற்று இதை நிரூப்பிக்கின்றது.

      சிந்திப்பீர் தோழர்களே, வென்றிருப்பது இன்னொரு பாசிஸ்டு. இந்தப் போர் இன்னமும் முடியவில்லை.

      • ரதி அவர்கள் தனது பதிவில், தனது ஈழ சகோதர சகோதரிகள் சிங்களர்களால் எவ்வாறெல்லம் துன்புறுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர் என்பதை விவரிக்கிறார். இதையேதான் தனது சொந்த மக்கள்மீது புலிகள் செய்தனர். புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர். புலிகளின் இச்செயல்கள் ரதி அவர்களை பாதிக்கவில்லையா? இரத்தமும் சதையுமான அனுபவப்பூர்வமான அபிமானம் என்கிறீர்கள். நானும் இதையேதான் கேட்கிறேன். புலிகளின் பாசிசச் செயல் பல வருடங்களுக்கு முன்பே செயல்படத் துவங்கியிருந்தும் எந்த அனுபவத்திலிருந்து இவர் புலிகள் மீது அபிமானம் கொள்கிறார்?. புலிகளின் செயல் தெரிந்திருந்தும் இவர் அபிமானம் கொள்கிறார் என்றால் அந்த அபிமானம் எப்படிபட்டதாக இருக்கும்? ஏன் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தான் மாறமாட்டேன் என்கிறார்? புலிகள் தன் மக்களையே கொலை செய்ததை தெரியாது என ரதி அவர்கள் மறுக்கமுடியாது.
        கட்டுரை வேறு விவாதம் வேறு. ஒரு கட்டுரையில் தனது கருத்தைப் பதியவிடுவது என்பது வேறு விவாதத்தில் கருத்தைச் சொல்வது என்பது வேறு. ஒரு தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் (அதிகபட்சம்) கட்டுரையை மட்டும் படித்துவிட்டு செல்வாற்கள் . படிப்பவர்கள் அனைவரும் விவாதத்தில் பங்குகொள்வதில்லை. ரதி அவர்களின் கட்டுரை விவாத அரங்கை விட முக்கியத்துவமுடையது. ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.
        மற்றபடி அவர்களின் வார்த்தைகளால் எழுத முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் குறைத்து மதிப்பிடவில்லை.

      • //ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.//

        இதிலுள்ள அரசியல் தவறு தான் வறட்டுவாத்ததிற்கு அடிப்படையாகிறது விரிவாக எழுதுலாம் ஆனால் இப்போது ஒரு கேள்வி.

        ஓட்டுகட்சி, போலி கம்யூனிஸ்டு, ஆத்தீகவாதி, தமிழ் தேசியர், ஆணாதிக்கவாதி போன்றவர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாமா கூடாதா? அவர்க்ளது பழைய கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் மனதிலிருந்ந்து அழிந்துவிட்டது என்பதை நார்கோ அனாலிஸிஸ் அல்லது லை டிடெக்டர் வைத்து சோதித்து விட்டுதான் உள்ளே விடுவீர்களா, அது வரை அவர்கள் திண்ணையில் உக்கார வேண்டுமா?

        புரியவில்லை தயவு செய்து விளக்கவும்

    • //உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..//

      என்னைப்பற்றித்தான் எவ்வளவோ சொல்லிவிட்டீர்களே! இனியென்ன தயக்கம். மீதியையும் சொல்லவேண்டியது தானே. தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், என்னை விமர்சிப்பதா?

      • பாசிசப்புலிகளை பற்றி சொல்லாத உங்களுக்கு துப்பு இருக்கிறதா?

        \\தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். \\

        மக்களின் இழி நிலைக்கு காரணம் பேரினவாதம் மட்டும்தான் காரணமா? புலிகள் காரணமில்லையா? பாருங்கள் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தாத நீங்கள் எல்லாம் வீரர்கள், இந்திய மேலாதிக்கம் புலிப்பாசிசத்தை, சிங்கள இனவெறியை அம்பலப்படுத்தி வாழும் நாங்கள் கோழைகள்.

        துரோகிப்பட்டியல் காத்திருக்கின்றது காலம் மலரும் போது துரோகிகள் தானாய் அம்பலப்படுவார்கள் ரதி, துரோகிப்ப்பட்டியல் நீளும்.

      • இங்கே மியாவ் குட்டி என்ற பெயரில் எழுதும் தோழரே, இதைத்தானே தோழர் இரயாகரனும், நீங்களும் செய்திருக்க வேண்டும். அதாவது ரதி எழுதும் போது அதிலுள்ள அரசி்யல் பிழைகளை சுட்டிக்காட்டி விவாதித்திருக்க வேண்டும். அதை விட்டு விவாதத்திலிருந்து விலகி அவர் ஒரு பாசிட்டு, பாசிட்டுக்கு வினவு இடமளிக்கிறது என்று புலம்பி அவர் கருத்தை வராமல் தடுப்பதில் என்ன வெற்றி கண்டீர்கள்

    • தோழர் அஸ்கர் அவர்களுக்கு,

      //புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர்.//

      டக்லஸ் தேவானந்தமும் அவரது ஆட்களும் (EPDP) செய்த படுகொலைகளை எப்படி அய்யா புலிகள்தான் செய்தார்கள் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள்?

      தோழமையுடன்,

      செந்தில்.

      • செந்தில் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க, புலிகள் ஒன்னும் புனிதர்கள் இல்ல, அவங்களும் பாசிஸ்டுதான். ஆதாரம் இல்லாமல் இல்லை, மேல ஏகலைவன் மதிபாலா விவாதத்தை கவனியுங்க.

  13. நான் இதற்கு மேலும் பேசாமலிருந்தால் அது எனக்கும் என் எழுத்து முயற்சிக்கும் moral support தந்த நண்பர் RV, மா.சே., குருத்து, சுக்தேவ், அர டிக்கெட், மற்றும் பல நண்பர்களை அவமதிப்பது போலாகும். எல்லோருக்கும் என் நன்றிகள். ஈழம் பற்றி நான் என் அனுபவங்களின் மூலம் எழுத முனைந்ததற்கு காரணம் எங்களின், ஈழத்தமிழர்களின், உரிமைகள் பறிக்கப்பட்டு, ஏதிலிகள் ஆக்கப்பட்டு, எதுமற்றவர்களாய் நாடின்றி, தேசமின்றி “அகதிகள்” (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்) “பயங்கரவாதிகள்” என்ற பெயர்களைத்தவிர வேறெதையும் சம்பாதிக்காத எங்களின் அவலவாழ்வின் அடுத்த பக்கத்தை தழ்நாட்டு உறவுகளுக்கு சொல்ல நினைத்ததேயாகும். உயிர்ப்பயமின்றி, கவுரவவாழ்வு வாழுபவர்களுக்கு ஏதிலி வாழ்வின் வலிகள் புரிந்திருக்க நியாமில்லை. அந்த வலிகளை சொல்ல நினைத்தேன் எதிர்பாராத தடைகள் எழுந்துவிட்டது. இதற்கு யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இதற்கு மேல் என்னால் என்னைப்பற்றிய விமர்சனங்களின் பாதிப்புகளின்றி என் அனுபவங்களைப்பற்றி சொல்லமுடியுமா என்றால், அது முடியாது என்றுதான் தோன்றுகிறது.

    நான் எந்தவொரு கொள்கை மூலமும் என்னை அறிமுகப்படுத்துமளவிற்கு அல்லது என்னை அடையாளப்படுத்துமளவிற்கு எனக்கு எந்தவொரு கொள்கை பற்றியும் ஞானம் கிடையாது. நான் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் ஓர் அகதி. கொள்கைகளின் கோட்பாடு என்ற சிறைக்குள் என் சிந்தனையை சிறை வைக்கத்தெரியாத , நானும் என் இனமும் போரினால், இன அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற எளிய உண்மையைத்தவிர வேறெதுவும் தெரியாதவள். அதனாலோ என்னவோ என் எழுத்துகளும் நானும் சில கொள்கைகளின் கோட்பாட்டுச் சிறைக்குள் சிக்காமல் எப்படி எழுதுவது என்ற அரசியல் தெரியாமல் சிக்கவேண்டியதாகிவிட்டது. என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.

    நான் எழுத தொடங்கிய நாட்களிலிருந்தே, வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனகளிலிருந்து காத்திருக்கிறார்கள். ஆனால், இன்று என்னை எழுத சொல்லிய குற்றத்திற்காக அவர்களே அவர்களின் “தோழர்களின்” விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டுவிட்டது. இனிமேலும் அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கவும் நான் விரும்பவில்லை. ஈழத்தமிழர்களின் தலைவிதியை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் எப்போதும் உறுதியாய் இருப்பவள் நான். ஆனாலும், தமிழ்நாடு உறவுகள் எங்களுக்கு ஓர் பக்கபலமே. அவர்கள் நினைத்தால் நிச்சயமாக எங்கள் விடுதலைக்கு உதவலாம். ஆனால், அதை சில ஈழத்தமிழர்களே கொள்கை என்ற பெயரில் வறட்டுவாதம் பேசி, எங்களுக்குள் நாங்களே சண்டையிட்டு அதையே சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, எங்களுக்கு மற்றவர்களிடமிருண்டு கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவை நாங்களே குழிதோண்டிப்புதைத்து…… அரசியல்வாதிகள் செய்யும் அநாகரீகத்தை நாங்களும் செய்ய வேண்டுமா என்று நினைக்கிறேன்.

    நான் வினவு தளத்தில் கட்டுரை எழுதுவதைத்தான் நிறுத்தினேனே தவிர ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான என் எழுத்துகளை நிறுத்தப்போவதில்லை.

    வினவு தளத்தில் தொடர்ந்து என் அனுபவம் பற்றி எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தம் தான். ஈழம் குறித்த என் வலிகளின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்கிறேன்.

    • ரதி, உங்கள் எழுத்தின் நியாங்களை நான் பெரிதும் மதிக்கிறேன், விமர்சனங்கள் நம்மை பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பு, அதைத்தான்டி அதை உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டாம், இது சிரமம்தான் ஆனால் உங்களால் முடியாத ஒன்றல்ல, என்றுமே பெண் ஆணைவிட வலிமையானவள் என்ற கருத்துடையவன் நான். தொடர்ந்து நீங்கள் எழுதுவதுதான் உங்களை நீங்கள் இந்த பெண், குடும்பம், அகதி, என இந்த சமூகம் விதித்துள்ள சிறையிலிருந்தும், விமர்சகர்களின் கருத்துக்களிலிருந்தும் விடுவித்துக்கொள்ள ஒரே வழி, எங்கள் தோழர்களுக்கிடையான முரண்பாடு ஜனநாயக பூர்வமான முறைகளில் நாங்களே தீர்த்துக்கொள்வோம். இது இந்த கட்டுரை உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தேவை , எழுதுங்கள்..

    • ரதி அவர்களுக்கு,

      ஒரு நீண்ட நெடிய பல துயரங்களை கொண்ட, பல உயிர்ப்பலிகள் கொண்ட போராட்டத்தை பற்றி எழுதும் பொழுது, விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

      இப்பொழுது, தோழர் ரயாகரன் தொடந்து விமர்சித்து எழுதுவதால் நிலைமை கொஞ்சம் சிக்கலாக மாறியிருக்கிறது. வினவே சொல்கிற படி, வினவு தளம் தான் இப்பொழுது விவாத பொருளாயிருக்கிறது. வினவின் மீதான் விமர்சனத்தை வினவு தோழமையுடன் எதிர்கொள்ளும்.

      அதனால், நீங்கள் எழுத வேண்டாம் என முடிவெடுத்திருக்க வேண்டாம். உங்கள் முடிவை பரிசிலீயுங்கள்.

      தோழர் ரயாகரனை விமர்சிக்கிறேன் பேர்வழி என சில கம்யூனிச அவதூறுகளை அள்ளி வீசி, இங்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்.

    • தோழர் குருத்தின், கருத்துக்களில் நான் உடன் படுகிறேன். உங்களை எழுத சொன்னது வினவு எனவே உங்களை நிறுத்த சொல்வதும் வினவாகவே இருக்க வேண்டும்.

      1. உங்களின் கட்டுரையின் கருத்துக்கள் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.
      2. உங்களை எழுத அனுமதித்த வினவின் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.

      எனவே, உங்களின் கருத்துக்களின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். உங்களை எழுத சொன்னதிற்காக தற்பொழுதைய விமர்சனகள் வினவை நோக்கியே உள்ளன. அவ்வாறே இருக்க வேண்டும். வினவு தளம் பல படைப்பாளிகளை உருவாக்கும் தளமாக உயர இந்த விமர்சனங்கள் உதவும். இந்தக் குழப்பங்களில் இருந்து நல்ல தீர்வு அமையும் என நம்புகிறேன்.

    • ரதி அவர்களுக்கு,
      ம.க.இ.க மற்றும் வினவு தளத்திற்கு அறிமுகமாகும் பலரும் பல்வேறு அரசியல் நிலைகளில் இருந்து அவர்களின் பழைய அரசியலை விவாததிற்கு உட்படுத்தி தான் புரட்சிகர அரசியலை அறிவை பெறுகிறார்கள். அத்தகையோர் எவரும் தன்னுடைய பழைய பிம்பங்கள் , கருத்துக்கள் உடை படுவதையும் மிகுந்த வலியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
      ஏனெனில் புதிய அரசியல் அதை வேண்டுகிறது. அவ்வாறு தாங்கள் ஒரு மாற்றுக்காக ஈழ மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி நிற்பீர்களேயானால் ஏன் பின்வாங்குகிறீர்கள். வாதிடுங்கள்.
      தோழர் ரயாகரனிடம் இல்லாத (?) சரியான அரசியலை நீங்கள் வைத்திருப்பீர்களேயனால் முன்வையுங்கள்.
      மாமேதை கார்ல் மார்க்சின் கூற்றுக்கிணங்க உங்களின் கருத்து அவரை வெல்லட்டும்.

    • இது அறிஞர்களின் விவாதம்…நான் சிறியவன் ….இருப்பினும் வினவின் மூலம் உலகைப் படித்துக் கொண்டிருப்பவன்..வினவுக்கு நன்றிகள்…ஆனாலும் ரதி அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்…ஆமோதிக்கிறேன்..தயவு செய்து ரதி அவர்களை யாரும் காயபடுத்தாதீர்கள்…..அவர் காயத்தால் எழுதுபவர்…தாய்க்கு மட்டுமே தெரியும் பிரசவ வலி….தவறு இருந்தால் மன்னிக்கவும்….

  14. ////அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு//////

    சரியான நிலைப்பாடு. இப்போதாவது இப்படியான இருசாரார் அனுபவங்களையும் உள்வாங்கி உண்மையான பிரச்சினைகளையும், குறைகளையும் நேர்மையான விவாதங்களாக்கி ஈழம்பற்றிய சரியான புரிதலை பொதுவில் இருக்கும் சாதாரணர்களுக்கு ஏற்படுத்துவது இன்றியமையாததும்கூட. ஆனால் வழமையான வழியிலும் பாசிஸ்டுச் சண்டையிலும் நாம்:(( ரதி எழுதுவதை நிறுத்தியது வருத்தமளிக்கிறது.

  15. திரு .இராயாகரன் சம்பவங்களின் அடிப்படையில்தான் தன்னுடைய அனுமானங்களை புரிதல்களை முன் வைக்கிறார். மாக்ச்சிய அரசியல் கோட்பாடு சார்ந்து அவர் இதுவரை எந்தக் கருத்துக்களையும் முன் வைத்தது கிடையாது. இவரிடம் ஓயாத உழைப்பு இருக்கிறது.ஆனால் அதற்கேற்ற மாக்ச்சிய புரிதல் அறவே கிடையாது. இதில் ஆபத்து என்னவெனின் அவர் ம.க.இ.க வினரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இராயாகரன் அவர்களின் வரட்டு அரசியல் ம.க.இ.க தையும் பலவீனப்படுத்தி பல சிக்கல்களுக்கும் உள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இராயாகரன் இதுவரை யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் ஆராய்ந்து விஞ்ஞான பூர்வ சமூக அறிவியலோடு எழுதியது கிடையாது. இடைக்கிடை மாக்ச்சிய வார்த்தைகளை பொறுக்கிப்போட்டால் அது மாக்ச்சிய ஆய்வு கட்டுரை என எண்ணும் அப்பாவித்தனமான எண்ணம் இவரிடம் உள்ளது.

    கடுமையான முயற்ச்சியை மேற்கொண்டால் இவரை அரசியல் ரீதியில் சிந்திக்க பயிற்றுவிக்க முடியும். தோழர்கள் இவரின் குறைபாடுகளை புரிந்துகொண்டு இதற்கு தீர்வு காண்பது நல்லது.

  16. சிற்டிசன் ஜேர்னலிசம் அல்லது மக்கள் ஊடகவியல் என்ற கருத்தாக்கம் இரண்டாயிரத்தின் ஆரம்பங்களிலேயே உருவாகிவிட்டது. ருவிட்டர், மைஸ்பேஸ்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் உருவாக்கத்தின் போதும் பின்னர் வெப் லொக் என்பதிலிருந்து உருவான ப்லொக் என்கிற வினவு போன்ற கருத்துக் களங்களின் பின்னரான காலப்பகுதியிலும் மக்கள் ஊடகவியல் தொடர்பாக வெகுவாகப் பேசப்பட்டது. இந்த மக்கள் ஊடகவியலின் பண்பு என்பதே ஊடகவியலுக்கு வெகுஜனத் தன்மையை வழங்கியதிலிருந்து தான் உருவானது. எம் போன்ற சாதாரண மனிதர்களும் பலரின் பார்வைக்கு உள்படக் கூடிய கருத்துக்களை எழுத முடியும் என்பதும், அதை மற்றவர்களின் விவாதங்களூடாக மக்களின் பங்களிபிற்கு உட்படுத்த வாய்ப்பளிக்க இயலும் என்பது தான் இதன் பண்புகளில் ஒன்று. இந்த மக்கள் ஊடகவியல் என்பது தொலை தூர தேசியவாதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக பெனடிக்ட் அன்டர்சன் என்பவர், அமெரிக்காவில் வாழும் அல்பேனியர்களின் ப்ளொக்குகளை முன்வைத்து வாதாடுகிறார்.
    உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினூடாக உருவான இவ்வாறான கருத்துப் பரிமாறலுக்கான சூழலை மேற்கு நாடுகள் தமக்கு ஏற்றவாறு சரியாகவே பயன்படுத்திக்கொண்டன. இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை மேற்கில் உருவாக்குவதற்கு இந்த ப்ளொக்குகள் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன. அதேவேளை மேற்கின் அதிகாரவர்க்கம் விரும்பியவாறே இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உருவாக்குவதற்கும் இவை பங்காற்றியுள்ளன,
    பொதுமக்களின் கருத்தை உள்வாங்குதல் என்ற இதன் பண்பியலில் எந்த மாற்றமும் இவர்கள் மேற்கொள்ளவில்லையாயினும் அதை ஒரு திசை நோக்கி நெறிப்படுத்துதலில் இவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதற்கான நிகழ்ச்சி நிரலும் கொள்கைத் திட்டமும் அவர்களிடம் இருந்தது.
    வினவில் ஏற்பட்ட ரதி என்பவரின் கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட சலசலப்புகள் இதனடிப்படையிலேயே நோக்கப்படலாம்.
    மூன்று வகையான போக்குகள் காணப்பட்டன.
    1. ரதியின் கட்டுரைக்கு ஆதரவு.
    2. ரதிக்கு எதிர்
    3. வினவின் உள்ளார்ந்த நிலைப்பாடு.

    இங்கு மக்கள் ஊடகவியலில் ரதி உள்வாங்கப்பட்டது தவறல்ல. ஆனால் அவரின் கருத்துக்களை நெறிபடுத்துவது தொடர்பாகவும், வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவது குறித்தும் வினவிடம் எந்த வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டமும் இருந்ததில்லை. கட்டுப்பாடற்ற, பிரபலமாதலை நோக்கிய ஊடகவியல் போலவே காணப்பட்டது. இந்த நெறிப்படுத்தலை மேற்கொள்ள பல வழிமுறைகள் ஏலவே கையாளப்பட்டுள்ளன.
    இவாறு நிறைவுற்ற சலசலப்பைக் கூட வினவு சுயவிமர்சனமாக முன்வைத்து, கட்டுரையை எதிர்த்தவர்களை விமர்சித்து, புதிய நெறிமுறைகளை விவாதத்திற்கு உட்படுத்தக்கூட முன்வரவில்லை.

    இது மக்கள் ஊடகவிலால் எதிர்பார்த்ததைக் கூடச் சாதிக்க முடியாத வரட்டு வாதம் மட்டுமல்ல. எஸ்கேப்பிசம் – தமிழில் நாகரீகம் இல்லாமல் “ஓடுகாலித்தனம்” -மென்று கூடச் சொல்லலாம்,
    ஆக, வினவு தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொண்டு, புதிய நெறிமுறைகளூடாக,மக்கள் ஊடகவியலின் மொத்தப் பலனையும், மக்கள் மத்தியில் கருத்தைக் கொண்டு செல்வதற்கும், கருத்தை உருவாக்குவதற்கும் பிரயோகிக்கும் என எதிர்பார்ப்போம்.

    • தோழர் நாவலனின் வினவின் உள்ளார்ந்த நிலைப்பாடு பற்றிய கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.

      1) வினவு மறுமொழிகளை மட்டறுப்பதில்லை என்ற கொள்ளகையை கடைப்பிடித்து வருகிறது. அதை பல முறை எழுதியும் விட்டது.

      2) ரதி விடயத்தில் வினவு மூடி மறைத்து எதுவும் செய்யவில்லை, தோழர் இரயாகரனுக்கு எழுதிய கடிதம் உட்பட பொது அரங்கில் விவாதத்துக்கு உட்படுத்தியது.

      3) ரதியின் கருத்தை நெறிப்படுத்துவதுவதில் வினவுக்கு மட்டும் பொறுப்பு என்ற அவரின் பார்வை தவறு, இது அச்சு ஊடகமல்ல, வாசகர் கருத்து பரிமாரவும், ஆசிரியர் பதில் சொல்லவும் வாய்ப்பு உள்ள ஊடகம். அதனால் தவறான கருத்துக்களை ) நெறிப்படுத்துவதில் அனைவருக்கும் பங்கு உண்டு, ரதியின் கட்டுரையிலும் மாற்றுக்கருத்துக்கள் வருவதும் அதை விவாதிப்பதும், அதில் வினவும் பங்கேற்பதும் நடந்தது. இந்த சூழலுக்கு முக்கிய காரணமாக தோழர் இரயாகரன் இங்கே விவாதத்தில் பங்கெடுக்காமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

      4) வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவதில் எந்த கொள்கையும் இல்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள். மாற்றுக் கருத்துக்களுடன் விவாதிக்கும் தளம் அமைப்பது என்பது தான் வினவின் கொள்கை என்பதை அவர்கள் முன்னமே அறிவித்திருக்கிறார்களே.

      5) எஸ்கேப்பிசம் என்பதை பற்றிய தோழர் நாவலனின் முன்முடிவு/விமர்சனம் கொஞ்சம் சிரமப்பட்டு தோழர் இரயாவுக்கு கூட பொறுத்தலாம் ஆனால் வினவுக்கு பொறுத்துவது சாத்தியமே இல்லை.

      6) வினவு மீது தவறுள்ளதைப் போல எழுதும் தோழர்.நாவலன், இங்கே இன்னொறு விவாதப் பொருளான தோழர் இராயாகரனைப் பற்றி ஏன் கருத்து பதியவில்லை. இதில் அவர் நிலை என்ன.

      மொத்தத்தில் வினவு மீதான தோழர் நாவலன் கூறியிருப்தற்கான காரணங்கள் தர்க்க ரீதியிலானவை அல்ல, வினவு தளம் எப்படி இயங்க வேண்டும் என்ற அவரது மன விருப்பத்தை எழுதியிருக்கிறார். இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையில்லை,
      வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
      வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
      என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்

      • //வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
        வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
        என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்//

        எனது பின்னூட்டத்தில் கூற வந்தது இவைதான்:

        1. மக்கள் ஊடகவியலின் முன்னைய அனுபங்களைத் திரட்டிக்கொள்ளுதல்.

        2. அவற்றிலிருந்து கருத்தை உருவாக்கும் செயற்பாட்டிற்குரிய வேலைத்திட்டம் ஒன்றை வினவு வரைந்து கொள்ளுதல்.

        3. இவ்வாறான வேலைத்திட்டம் இன்மையே ரதியின் கட்டுரையைத் தொடர்ந்த குழ்ப்பங்களுக்குக் காரணம்.

        4. வினவு இதைப்புரிந்து கொள்ளாமையால் கருத்தை உருவாக்குவதற்கான நெறிப்படுத்தல் இல்லை, இதே வேளை ரயாகரன் இதைப் புரிந்துகொள்ளாமையால் ரதியின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்கிறார். இரண்டுமே தவறானது.
        தவிர, விடயங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கும்பலில் கோவிந்தா போடுகின்ற மனோபாவத்திலிருந்து நாம் அனைவருமே விடுபடவேண்டும். இந்த விடயங்களைப் புரிந்துகொண்டு ரதியின் குறிப்புக்களைத் தொடர்ந்தும் வெளியிடுவதோடு அவ்வாறான கருத்துக்களை நெறிப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை வினவு முன்வைக்கவேண்டும்.

      • //வினவு தளம் எப்படி இயங்க வேண்டும் என்ற அவரது மன விருப்பத்தை எழுதியிருக்கிறார். இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையில்லை,
        வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
        வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
        என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்// நாவலன் எப்படி எழுதவேண்டும் என்ற மனஆசையை மாசே இங்கு வெளியிட்டுள்ளார்

      • //ரயாகரன் இதைப் புரிந்துகொள்ளாமையால் ரதியின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்கிறார்.//
        தவறு. ரதி எழுதுவதை யாரும் நிறுத்தும்படி கோரிக்கை வைக்கவில்லை. அவர் மேல் விவாதம் மட்டும் வைக்கப்பட்டது. அவர் தானாக விலத்திக் கொண்டுள்ளார்.

        சிறி

      • சிறி, நல்லா இருக்கு உங்க நாயம், எப்படி அது விவாதம் வைக்கப்பட்டதா, எப்போ? இங்கே விவாதிக்க முடியாம எஸ்கேப்பு ஆகி, ஆதாரமே இல்லாம ரதி ஒரு பாசிட்டுன்னும், தேவையில்லாம வினவு தளத்தை விமர்சனம் செஞ்சி , வேற ஒரு எடத்துல போயி கட்டுரை எழுதுவது விவாதமா. நல்ல கூத்து. ஐயா மணி அவர்களே மார்க்சியத்தை இரயா மட்டுமல்ல சிறியிடமிருந்து கூட காப்பாற்ற வேண்டும். கடவுளே இன்னும் எத்தன பேரு இருங்காய்ங்களோ?

  17. //இங்கு மக்கள் ஊடகவியலில் ரதி உள்வாங்கப்பட்டது தவறல்ல. ஆனால் அவரின் கருத்துக்களை நெறிபடுத்துவது தொடர்பாகவும், வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவது குறித்தும் வினவிடம் எந்த வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டமும் இருந்ததில்லை.//

    இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன். மாற்றுக் கருத்து உள்ளோரும் வினவில் தன் பங்களிப்பை செய்ய அனுமதிக்கப்படும் பொழுது வினவின் கருத்தை முன்னிறுத்துவதற்கு நிச்சயம் ஒரு திட்டம் தேவை.

  18. ரதி அவர்களுக்கு வணக்கம்,

    ஒரு புலி அபிமானியால்தான் தமிழீழ மக்களின் வலியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். தயவு செய்து உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

    தோழமையுடன்,

    செந்தில்.

  19. இந்த சர்ச்சை நிச்சயம் தேவையற்றது……..ரதி அவர்கள் போலவே இன்று கம்யூனிஸ்டுகளிடமிருந்த மக்களும் விலகி நிற்கிறார்கள்….இதற்குப் பின்னூட்டமிட ஆரம்பித்து கடைசியில் நீண்டு விட்டதால் தனி இடுகையாகப் போட்டிருக்கிறேன்…..!!!

    http://www.mathibala.com/2009/08/blog-post_27.html

    • நண்பர் மதிபாலா,

      http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6165:2009-08-25-21-35-40&catid=277:2009

      மேற்கண்ட இணைப்பில் தோழர் இரயாகரனின் பதிவு ஒன்றில் கீழ் காணும் தலைப்புகளில் வெளிவந்த புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரத்தின் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். நேரமிருந்தால் அவற்றைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

      ஏகலைவன்.

      1. அதிர்ச்சி : போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!

      2. புலிகளின் பாசிசம்

      3. விடுதலைப் புலிகளின் இழிசெயல்!

      4. ஈழம் : விடுதலைக்கு எதிராக புலிகளின் பாசிசப் போக்குகள்

      5. ஈழம் : விமர்சனமும் விளக்கமும்

      6. ஈழம் : துரோகத்தை நோக்கி…?!

      7. ஈழம் : கொலைகளுக்கு யார் பொறுப்பு

      8. டாக்டர் இராஜனி திரணகம கொலை

      9. விட்டெறிந்த காசுக்கு விலைபோன புலிகள்

      10. பிரபாகரனும் – தமிழ் இனவாதக் குழுக்களும்

      • அதையெல்லாம் படிப்பதற்கும் , நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்களேன் தோழர் ஏகலைவன்..!

        புலிப்பாசிசத்தை நிரூபணம் செய்வதற்கா இல்லை புலிப்பாசிசத்தை மெய்பிக்கவா?

        அதுதான் இன்றைக்கு புலிகளே இல்லையென்று ஆகிவிட்டதே …இனி மெய்ப்பித்து என்னவாகிறது…..?????யாருக்கு மெய்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது?

        அந்த மெய்ப்பித்தலைத் தாண்டி நிதர்சனத்துக்கு வர வேண்டாமா?

    • /////////////அதையெல்லாம் படிப்பதற்கும் , நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்களேன் தோழர் ஏகலைவன்..!

      புலிப்பாசிசத்தை நிரூபணம் செய்வதற்கா இல்லை புலிப்பாசிசத்தை மெய்பிக்கவா?

      அதுதான் இன்றைக்கு புலிகளே இல்லையென்று ஆகிவிட்டதே …இனி மெய்ப்பித்து என்னவாகிறது…..?????யாருக்கு மெய்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது?
      அந்த மெய்ப்பித்தலைத் தாண்டி நிதர்சனத்துக்கு வர வேண்டாமா?////////////

      நண்பர் மதிபாலா,

      அந்த நிதர்சனத்திற்கு வருவதற்கு வரலாற்றில் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியத்தை உங்களுக்கு உணர்த்தத்தான் நான் முயன்றேன். நான் குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் உள்ள கட்டுரைகளின் மீதான உமது கருத்தாக்கத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

      இன்றைக்குப் புலிகளே இல்லையென்றாகிவிட்டதே? என்ற உங்களது வரிகளில் உள்ள உணர்ச்சி உண்மையானது என்றால், அந்த புலிகளின் பின்னடைவுக்கான காரணத்தையும் பகுத்தாய்வது மிக மிக அவசியமானதாக இருக்க வேண்டும். புலிகளின் இந்தப் பாரிய பின்னடைவுக்கும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் காரணம், சிங்கள பேரினவாதமும், இந்திய மேலாதிகவெறியும் மட்டும் காரணமில்லை. புலிகளின் வரலாற்றுப் பிழைகளும் அவர்களின் பாசிச அனுகுமுறையும் அவர்களது பாரதூரமான விளைவுகளுக்கு வெகுவாக பங்காற்றியிருக்கின்றன.

      நாம் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால்தான், ஈழ மக்களின் மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதில் அர்த்தமிருக்க முடியும். இப்போது புலியரசியலிடம் நாம் வேண்டுவது அவர்களின் சுயவிமர்சனத்தை அல்ல அவர்களின் சுய பரிசீலனையைத்தான். இந்த அனுகுமுறை தவறு என்று நீங்கள் குறிப்பிட விரும்பினால் எனது மேற்கண்ட பின்னூட்டங்களை தாராளமாக நிராகரித்துத் தள்ளுங்கள்.

      • நண்பர் ஏகலைவன்.

        ///
        அந்த நிதர்சனத்திற்கு வருவதற்கு வரலாற்றில் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியத்தை உங்களுக்கு உணர்த்தத்தான் நான் முயன்றேன். நான் குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் உள்ள கட்டுரைகளின் மீதான உமது கருத்தாக்கத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
        //

        சில சமயம் வரலாறுகளை புரட்டுவதை விட இன்றைய சூழலில் எது தேவை என்று உணர்வதும் முக்கியம். புலிப்பாசிசம் என்ற கருத்தாக்கம் இன்று பொதுவுடமைவாதிகளால் எழுப்பப்பட்டதில்லை என்பது எனக்குத் தெரிந்த ஒன்றே.

        புலிகளின் சர்வாதிகாரத் தலைமை , ஏனைய போராட்டக்குழுக்களை அழித்தது என்ற ஒரீரு கருத்துக்கள் உண்மையெனினும் , ஒரு விடயத்தை உணர்ந்து கொள்ளுங்கள்….

        அன்று , போட்டி மனப்பாங்குடன் அரசாங்கத்துக்கு துணை போனவர்களை அழித்தனர் புலிகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களை அழித்ததாலேயே புலிகளின் போராட்டம் இவ்வளவு காலம் உயிர்ப்புடன் இருந்தது..என்று அவர்கள் அதை மாற்றி கருணா போன்றவர்களை அழிக்காமல் விட்டார்களோ அன்றே புலிகளின் அழிவு நிச்சயிக்கப்பட்டது..

        இன்று புலிகளின் அழிவில் கருணாவின் பங்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்டீர்களானால் சமயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் சில தலைமைகளை அழிப்பதன் அவசியத்தை நீங்கள் உணரலாம்……அதற்கு நீங்கள் பாசிசம் என்று பெயரிட்டாலும் கூட போராளிகளுக்கு இலக்கை அடைவதில் சில தவறுகளையும் செய்யவேண்டிய கட்டாயமேற்படுகிறது.

        அது தவறேயெனினும் தவிர்க்கவியலாதது ஆகிறது.

      • புலிகளின் இந்தப் பாரிய பின்னடைவுக்கும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் காரணம், சிங்கள பேரினவாதமும், இந்திய மேலாதிகவெறியும் மட்டும் காரணமில்லை. புலிகளின் வரலாற்றுப் பிழைகளும் அவர்களின் பாசிச அனுகுமுறையும் அவர்களது பாரதூரமான விளைவுகளுக்கு வெகுவாக பங்காற்றியிருக்கின்றன.//

        கூடவே துரோகிகளும் என்று சேர்த்திக்கொள்ளூங்கள்……………புலிகளுக்கெதிரான இந்தத்துரோகக் கூட்டம் தான் புலிகளைப் பற்றிப் போட்டுக்கொடுத்தன.

        ****
        நாம் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால்தான், ஈழ மக்களின் மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதில் அர்த்தமிருக்க முடியும்.///

        நீங்களே அது மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்…..ஆதலால் அதை ஆதரிப்பதற்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எதற்கு என்கிறேன் நான்?

        இப்போது புலியரசியலிடம் நாம் வேண்டுவது அவர்களின் சுயவிமர்சனத்தை அல்ல அவர்களின் சுய பரிசீலனையைத்தான். இந்த அனுகுமுறை தவறு என்று நீங்கள் குறிப்பிட விரும்பினால் எனது மேற்கண்ட பின்னூட்டங்களை தாராளமாக நிராகரித்துத் தள்ளுங்கள்.///

        உங்கள் பின்னூட்டங்களை நிராகரிக்க வில்லை நான்..அத்தவறை என்றுமே செய்யமாட்டேன்….அது பற்றிய உள்ளாய்வுகளும் , சிந்தனைகளும் எவ்வித பயனையும் இச்சூழலில் தரா என்பதால் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றுபட்டு முள்வேலிகளிலிருந்து தமிழர்களை விடுவிப்போம் என்றுதான் சொல்கிறேன்.!

  20. இது மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு. தோழர் ரதி தன் அனுபவம் சார்ந்து புலிகளின் மேல் கொண்ட அபிமானங்களை தர்க்கரீதியாக விவாதித்து மறுத்திருக்க வேண்டுமேயொழிய, இவ்வாறு அராஜகமான முறையில் அவரை நடத்தியிருக்கக் கூடாது. தோழர் ரயாகரனின் குற்றச்சாட்டுக்கள் வினவு குறிப்பிட்டதைப் போல வெளிப்படையாகவும் தீர்க்கமாகவும் இல்லாமல் போனது வருந்தத்தக்கதே. இதனை தோழர் இரயாகரன் பரிசீலிக்க வேண்டும். பிற தோழர்களும் இவ்விவாதத்தில் தலையிட்டு நெறிப்படுத்த வேண்டும்.

    இரயாகரனின் முறையீடுகள் தவறு என்று நான் சொல்லவில்லை. இருப்பினும் அவை தகுந்த ஆதாரத்துடன் இங்கு வைக்கப்பட்டிருந்தால் ரதி உள்ளிட்ட பலரும் தெளிவடைய உதவியாக இருந்திருக்கும். தோழர் இரயா அவர்கள் உடனடியாக (4-ஆம் பாகத்தில் வெளியிடுவதற்கு நேரமில்லை) ரதி குறித்த தனது எதிர்ப்புக்கு நியாயமான காரணங்களை இங்கே பட்டியலிட வேண்டும். இன்றேல் இத்தனை நாட்கள் உழைத்து இரவு பகலாக எழுதிக் குவித்த தோழர் இரயாவின் எழுத்துக்களும் அவர் கற்றுத்தந்த அனுபவங்களும் செயலற்றதாகிவிடும்.

    எப்படியோ ரதி போன்ற மாற்று எண்ணம் கொண்டவர்கள் இங்கு எந்த இடையூறுமின்றி எழுதி விவாதிக்க வேண்டும். தோழர் ரதி தமது கருத்துக்களை, இந்த தொடரிலேயே மீண்டும் தொடர வேண்டும். இந்த நிகழ்வு, மேலே ரதி குறிப்பிட்டுள்ளதைப் போல அவரது துயரங்களுள் ஒன்றாக ஆகிவிடக்கூடாது.

    புலி எதிர்ப்பு கருத்துக்களை நாம் வெளியிடுவதற்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் புலியாதரவுக்கருத்துக்களுக்கும் கொடுத்தாக வேண்டும். அபப்டிப்பட்ட எதிர்க் கருத்தியல்களுடன் மோதுகையில்தான் சரியான கருத்தாக்கம் வெற்றி பெற்று வளர முடியும். இத்தகைய முரண்பாடுகள் நமது கருத்தின் வீச்சை வெகு வேகமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். தோழர் ரதியும் இங்குள்ள தமிழினவாதிகளைப் போல விவாதிக்கும் நேர்மையற்றவராக இல்லை. அவரது பதிவுகளின் மீதான விமர்சனங்களுக்கு வலிய வந்து அவரது கருத்தைத் தெரிவித்து விவாதிக்கிறார், என்பது ஒரு நல்ல அம்சமாகக் கருதுகிறேன்.

    தோழர் இரயாகரனின் இதுபோன்ற அனுகுமுறை ’எல்லாளன்’ போன்ற அனாமதேயங்கள் இங்கு வந்து உபதேசிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. தமிழ் தேசிய கபட வேடதாரிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் கட்டுரைகளின் பக்கம் இந்த எல்லாளன்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  21. வினவுக்கு,
    புலிகளின் மீது மதிப்பு வைத்திருப்பதாக கூறும் ஒருவரை எவ்வாறு வினவில் எழுத அனுமதிதீர்கள். அதன் நோக்கம் என்ன. ஒரு மாற்றுக்கருத்தாளருடன் சமரசம் பேச வேண்டிய தேவை என்ன. அவரை கட்டுரைகள் எழுத விட்டு மேலும் ம.க.இ.கவின் அரசியலை மெல்ல மெல்ல பிறகு புரிய வைக்க போகிறீர்களா ?. வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.
    புலிகளை எந்த விமர்சனமும் இன்றி ஏற்கும் தமிழினவாதிகளை அல்லது சி.பி.ஐ அல்லது சி.பி.எம் இல் உள்ள ஒருவர் எழுதி தரும் கட்டுரையை புதிய ஜன நாயகத்திலோ அல்லது புதிய கலாச்சாரத்திலோ பிரசிப்பீர்களா?

    நீங்கள் எந்த புள்ளியில் ரதியுடன் இணைகிறீர்கள்?

    • பூதம், இதே கேள்வியைத்தான் ஆர்பாட்டமான மொழிகளில் இராயாகரன் கேட்டுள்ளார், இதைத்தான் வறட்டுத்தனம் என வினவு விமர்சனம் செய்துள்ளது, அதே இடுகையில்தான் நீங்கள் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்.

      உலகமயமாக்கலின் விளைவாக ஏற்பட்டுட்டள நகரமயமாக்கமும், புதிய பொருளாதார கொள்கைகள் உருவாக்கியுள்ள வேலைகள், வேலை நேரங்கள், வசதி வாய்ப்புகள் போன்றவை படித்து வேலைக்கு செல்லும் அனைவரையுமே ஒரு குட்டி முதலாளிய சிந்தனையுடையவர்களாக்கி விடுகிறது.

      அவர்களின் சிந்தனை நேர்மையை கேள்விக்குள்ளாக்க முடியாதெனினும் அவர்களின் புறநிலை வெளியுலக தொடர்பிலிருந்து அவர்களை துண்டித்து, மக்களிடமிருந்து பணியாற்றும் வாய்ப்ப்பை பறித்து, கொஞ்சம் கொஞ்சமாக அண்ணியப்பட வைக்கிறது. வறட்டுவாதியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் எழுதும் இளம் தோழர்கள் பலரிடம் இந்த வறட்டு்ததனம் இருப்பதை நாம் காண முடியும்.

      அகநிலையின் பலத்தில் மார்க்சியம் நீண்ட நாள் நிற்காது.

      இது போன்ற வாழ்நிலையுள்ள தோழர்கள் இனி அதிகமாவார்களேயன்றி குறைவதற்கு வாய்ப்பில்லை. இது முன்னெப்போதுமில்லாத ஒரு புதிய நிலை, புரட்சிகர அமைப்புகளின் தலைமைக்கு ஒரு சவால். சவாலை எதிர்கொள்ள, புதிய வியூகங்களும் திட்டங்களும் அவசியம். என்ன செய்யப் போகிறோம், ?

      • வறட்டுத்தனம்.
        வறட்டுத்தனத்தை எப்படி வரையறுப்பது. வினவு தோழர்.இரயா வை வறட்டுத்தனம் என்கிறது. தமிழகத்தில் பலர் மகஇக வை வறட்டுத்தனமானவர்கள் என்கின்றனரே.

      • தோழர் மாசே வணக்கம்,

        சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை உங்களிடமிருந்து பெற வேண்டும். தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

        kalagam.nation@gmail.com

  22. நான் மணி

    ஐயா கம்யூனிச பூதம்.. எனக்கு ஒரு சந்தேகம்

    எனக்கும் கூட புலிகள் மீது மதிப்பு இருக்கிறது. அப்படி இருந்தால் நான் கம்யூனிஸ்டாக இருக்க முடியாதா..

  23. ரதி,

    உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறேன். கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள்.

  24. disappointed to see that Rathi has deceided to stop writing in Vinavu, because of irayakarns comments and questions; ok lets put it in this way , Rathi, why dont you start your own bolg ? to write your life experiences ….then give the link to all..let people deceide to read or not…i cant accept this just because if someone is saing some nonsense things and they didnt like you to write its absolutely stupid…..i hope i see you soon writing your experiences in anyway…

    All the best
    Murugan

  25. //தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது. அத்துடன் பேசப்படும் மனித துயரங்கள், தமிழ் பாசிசத்தினால் உசுப்பேற்றப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. உதாரணமாக மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது.//

    தோழர்களே,
    தோழர் இராயகரனின் மையமான விமர்சனம் மேற்காணும் பத்தி எனக் கருதுகிறேன். இதனை தோழர் கலகமும் கீழ்க்காணும் முறையில் கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    //ஒரு புலி ஆதரவாளரால் சரியான வரலாறை எழுத முடியுமா? முடியுமெனில் அது எப்படி சாத்தியம்? துயரத்திற்கு,கண்ணீருக்கு வர்க்கமில்லையா? இதே வரலாற்றை தோழர் சிறீயோ அல்லது இரயாவோ எழுதினால் சிங்கள இனவெறிப்பாசிசம், புலியின் குறுந்தேசிய பாசிசத்தை அம்பலப்படுத்துவார்களா இல்லையா ? அது தானே சரியா இருக்கும்.//

    இக்கருத்தில் நான் உடன்படுகிறேன்.

    அதே வேளையில், ரதி எழுதுவது பக்கச் சார்பு என்பது பொதுவான வாதம், சொல்லப் போனால் ஒரு நடுத்தர வர்க்க வாதம். பக்கச் சார்பின்றி யாரும் எழுத முடியாது. எது சரியான பக்கம் என்பதை பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்தான் தீர்மானிக்கிறது.

    ஒரு புலி ஆதரவாளரின் அனுபவப் பகிர்வு, ஈழத்தில் சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கொடூரங்களை மனக்கண்ணில் எழுப்பத்தான் செய்யும். ரதியின் எழுத்துக்களில், அவரது அரசியல் கண்ணோட்ட வரம்புகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பட்ட துன்பம் வெளிப்படவில்லையா? ஆம். வெளிப்படத்தான் செய்கிறது. ரதியே சொல்வது போல, “என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.” இந்தத் துயரம் நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல.
    ஆனால், இது ஈழ மக்களின் துன்ப வரலாறு குறித்த முழுமையை கொண்டிருக்குமா என்றால், நிச்சயமாக இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். இது ஊகம் மாத்திரமல்ல. இதுவரை ரதி எழுதிய கட்டுரைகளிலும் அவ்வாறே வெளிப்படுகிறது.
    இதனை வினவும் உணர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

    இந்நிலையில், இன்றைய ஈழச் சூழலில், சிங்களப் பேரினவாதமும், புலிகளின் பாசிச நடைமுறையும் விளைவித்த ரத்தம் தோய்ந்த வரலாற்றின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள், படிப்பினைகளை, அதன் முழுமையில் தொகுப்பதே ஈழ மக்களுக்கும், இனவாதிகளால் குழப்பப்படும் தமிழ் இளைஞர்களுக்கும் பயன்படும். பொதுவான தமிழர் துயரம் என்பதும், ஒரு அகதியின் தனிப்பட்ட அனுபவப் பகிர்வு என்பதும் உணர்ச்சிப்பூர்வமான எல்லையைத் தாண்டாது. எனவே, தோழர் ரதியின் கட்டுரை கருத்துக்களை மறுபரிசீலனைக்குட்படுத்துவதற்கு பயன்படாது. தனது பதிலில் வினவு இம்மையமான கேள்விக்கும், கருத்துக்கும் பதிலளிப்பது அவசியம் எனக் கருதுகிறேன்.

    ஆனால், ரதி ஒரு புலிப் பாசிஸ்ட்தான், வினவு குழுமம் புலிப்பாசிசத்திற்கு ஆதரவு வழங்குகிறது எனத் தோழர் இராயகரன் முன்வைப்பது மிகையான, அதிகப்படியான விமர்சனம். மேற்குறிப்பிட்ட மையமான விமர்சனத்தில் பொறுமையோடு நின்று விவாதிப்பதற்கு பதிலாக, அவர் விமர்சனத்தை மிகைப்படுத்தியதன் மூலம் விவாதத்தின் திசையே மாறியிருக்கிறது எனக் கருதுகிறேன். மேலும், வினவு தளத்தில் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படாத நிலையில், தோழர் இராயகரனின் கருத்துக்களை வினவு அனுமதிக்கின்ற நிலையில், ஏதோ கருத்து சொல்ல மறுக்கப்பட்டதைப் போல தனிப்பதிவாக தமது தளத்தில் பாகம் பாகமாக வெளியிட்டு, எதிர்நிலையெடுப்பது ஒரு ஆரோக்கியமான, பொறுப்புணர்வுடன் கூடிய விவாத முறையல்ல. மிகத் தவறான முன்னுதாரணம் எனக் கருதுகிறேன்.

    இதனைத் தாண்டி, தோழர் கம்யூனிச பூதம் கூறுவது போல, “வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.” என்ற கருத்து வேறு சில தோழர்களிடமும் வெளிப்படுகிறது. ஒன்று, வினவு ம.க.இ.க வின் அதிகாரபூர்வ தளமல்ல என்பதை வினவே சொல்லியிருக்கிற போதிலும், அவ்வாறு கருதிக் கொள்வதன் அடிப்படை என்ன? அதே வேளையில் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையில், ம.க.இ.கவின் நிலைப்பாடுகளில் ஊன்றி நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறு இருக்க முடியாது.

    இவ்விவாதத்தை பயன்படுத்திக் கொண்டு தோழர் இராயகரனையும், ஒட்டுமொத்தமாக மார்க்சியத்தையும் அவதூறு செய்ய சிலர் முயன்றுள்ளனர். இது தவிர்க்கவியலாதது. எதிரிகளிடம் நாம் அதை எதிர்பாராமலிருக்க முடியாது. இதனை கணக்கில் கொள்வது அவசியம்.

    • ரதியே சொல்வது போல, “என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.” இந்தத் துயரம் நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல.
      ஆனால், இது ஈழ மக்களின் துன்ப வரலாறு குறித்த முழுமையை கொண்டிருக்குமா என்றால், நிச்சயமாக இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். இது ஊகம் மாத்திரமல்ல. இதுவரை ரதி எழுதிய கட்டுரைகளிலும் அவ்வாறே வெளிப்படுகிறது.//
      தோழர் போராட்டத்தின் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்
      “வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.”
      சிக்கலே இதுதான் வினவு தோழர்கள் வினவு மகஇக தளமில்லை என்றாலும்
      நாம் அப்படி பார்க்கவில்லை (இது எமது தவறுதான்) புஜ புகவுக்கு இணையாக பார்த்து அதே கருத்தை எதிர்பார்க்கிறோம் இதுதான் தேவையற்ற சிக்கலை கிளப்பிவிட்டது,

    • நான் மணி

      ர‌யாவின் மைய‌மான‌ க‌ருத்து ஈழ‌த்தை வெறும் சிங்க‌ள‌ பாசிச‌ம் என‌க் குறுக்க‌ முடியாது. புலிக‌ளின் பாசிச‌த்தையும் சேர்த்துதான் எப்போதுமே பேச‌ வேண்டும்.. அப்ப‌டி எந்திர‌த்த‌ன‌மாக‌ பேச‌ ஆர‌ம்பித்தால் புலிக‌ளின் அபிமானிக‌ளோடு கூட‌ உரையாட‌க் கூடாது என்ற‌ ம‌க்க‌ளிட‌மிருந்து த‌னிமைப்ப‌டுத்துகின்ற‌ அர‌சிய‌லை நோக்கிதான் ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்தும்.. அப்ப‌டி உரையாட‌ல்க‌ளை ம‌க்க‌ளுட‌ன் ந‌ட‌த்தாத‌ அர‌சிய‌ல்தான் உங்க‌ள‌து விருப்ப‌மா… ர‌யாவின் விருப்ப‌ம் அதுதானே..

      ர‌யாவுட‌ன் நீங்க‌ள் உட‌ன்ப‌ட்ட‌ க‌ருத்து அபாய‌க‌ர‌மான‌து.. ர‌தி முழுவ‌ர‌லாற்றையும் எழுத‌வில்லை. அப்ப‌டி யாராவ‌து சொன்ன‌தாக‌ நிரூபிக்க‌ முடியுமா.. வ‌ர‌லாற்றின் ஒரு சிறிய‌ ப‌குதியை அல்ல‌து உண‌ர்ச்சி அம்ச‌த்தை எழுதுகிறார்… உண‌ர்ச்சி அம்ச‌ம் த‌வ‌றான‌ க‌ருத்துக்க‌ளை மாற்ற‌ உத‌வாது என்று பேசுகின்றீர்க‌ள்.. உங்க‌ளுக்கே இது ச‌ரியாக‌ப் ப‌டுகிற‌தா..

      துய‌ர‌மும், க‌ண்ணீரும் வ‌ர்க்க‌ம் சார்ந்த‌துதான்.. ஆனால் சில‌ இன‌ங்களுக்கு துய‌ர‌மும், க‌ண்ணீரும் விதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே.. அது பொய்யா.. த‌ங்க‌ள‌து துய‌ர‌ங்க‌ளை அந்த‌ ம‌க்க‌ள் சொல்கின்றார்க‌ளே அது பொய்யா.. புலி அவ‌ர்க‌ள‌து போராட்ட‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றிய‌தால் ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளை நேசிக்கிறார்க‌ள்.. அம்மக்க‌ளை இன்று பாசிஸ்டுக‌ள் என்றுதானே ர‌யா வ‌ரைய‌றை செய்ய‌ முடியும். அது ச‌ரியா..

      ஒரு அக‌தியின் த‌னிப்ப‌ட்ட‌ உண‌ர்வை வெறும் உண‌ர்ச்சி என்று சொல்லி இருக்கிறீர்க‌ள்.. ர‌யா சொன்ன‌து கூட‌ ப‌ர‌வாயில்லை.. நீங்க‌ அவ‌ர‌ தாண்டி விட்டீர்க‌ள். உரிமைக்கும் அக‌திக்கும் உள்ள‌ தூர‌ம் உங்க‌ளுக்கும் மார்க்சிய‌த்துக்கும் உள்ள‌து.

      • நான் சொல்லியது.

        //இந்நிலையில், இன்றைய ஈழச் சூழலில், சிங்களப் பேரினவாதமும், புலிகளின் பாசிச நடைமுறையும் விளைவித்த ரத்தம் தோய்ந்த வரலாற்றின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள், படிப்பினைகளை, அதன் முழுமையில் தொகுப்பதே ஈழ மக்களுக்கும், இனவாதிகளால் குழப்பப்படும் தமிழ் இளைஞர்களுக்கும் பயன்படும். பொதுவான தமிழர் துயரம் என்பதும், ஒரு அகதியின் தனிப்பட்ட அனுபவப் பகிர்வு என்பதும் உணர்ச்சிப்பூர்வமான எல்லையைத் தாண்டாது. எனவே, தோழர் ரதியின் கட்டுரை கருத்துக்களை மறுபரிசீலனைக்குட்படுத்துவதற்கு பயன்படாது.//

        நீங்கள் சொல்வது.

        //ஒரு அக‌தியின் த‌னிப்ப‌ட்ட‌ உண‌ர்வை வெறும் உண‌ர்ச்சி என்று சொல்லி இருக்கிறீர்க‌ள்.. //

        நான் சொல்லியதற்கு நீங்களாக ஒரு விளக்கம் அளிக்கிறீர்கள். வெறும் உணர்ச்சி என்று நான் சொல்லவில்லை. உணர்ச்சிப்பூர்வமான எல்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதனுடைய முழுமையின் தற்போதைய பயன்பாடு குறித்து சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்கு ஒரு கொச்சையான விளக்கம் அளித்து எனது கருத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள்.

        //உரிமைக்கும் அக‌திக்கும் உள்ள‌ தூர‌ம் உங்க‌ளுக்கும் மார்க்சிய‌த்துக்கும் உள்ள‌து.//

        துவக்கத்திலிருந்தே நீங்கள் அதிகப்படியாகப் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். இதற்கு முன்பாக நீங்கள் மிகையாக பேசிக் கொண்டே வந்ததற்கு தீர்க்கமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தவுடன், அதற்கு மெளனம் காத்து விட்டு, இப்பொழுது இந்தக் கருத்துக்கு பதில் சொல்ல வருகிறீர்கள். மார்க்சியத்துக்கும், விவாத நேர்மைக்குமான தூரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து நீங்கள் யோசிப்பது நல்லது.

  26. நான் மணி,

    வ‌றட்டுவாதி என்று மாத்திரமே அறியப்பட்ட திருவாளர் ரயாகரன் அவர்களுக்குள் ஒளிந்திருந்த பாசிஸ்டும் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனது பாகம் 4 இல் ரதி ஏன் பாசிஸ்டு என்பதற்கு ஆதாரம் தருவதாக எழுதிய ரயாகரன், அப்பகுதி நான்கை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் ஏதாவது ஆதாரம் உள்ளதா என அறிவுள்ள எவரும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

    இத்தகைய இழிவான செயலை வரலாற்றில் இதற்கு முன் செய்தவர்கள் ஹிட்லரும், ஜார்ஜ் ஜூனியர் புஷ்ஷும் .. இராக் மீது படையெடுப்பதற்காக ஒரு காரணத்தை தேடிய புஷ் கூறியது அங்கு ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று.. கடைசிவரை அதனை அவர் கண்டுபிடித்தாரா என்பதையும் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.. நாடாளுமன்றத்தை தீக்கிரையாக்கிய ஹிட்லர் அதனை கம்யூனிஸ்டுகள் செய்தார்கள் எனக்கூறி அதனைக் கலைத்தான். இன்று வரை அதற்கு ஆதாரம் வெளிவரவில்லை..

    கம்யூனிஸ்டுகள் யாரையாவது பாசிஸ்டுகள் என அறிய நேர்ந்தால் மக்களுக்கு உடனடியாக அறிவிக்கவும் அம்பலப்படுத்தவும் செய்வார்கள். இது இந்திய மா.லெனிய இயக்க வரலாறு தெரிந்த, பு.ஜ,பு.க படித்துவரும் அனைவரும் அறிந்த ஒன்றே.. அதனை தள்ளிப்போடுபவர்கள் தங்களது மன விருப்பத்ற்கேற்ப சிலரை பாசிஸ்டுகளாக சித்தரிக்க முயல்பவர்கள்தான்.. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்…..

    புலிகள் ரயாகரனுக்கு எதனைச் செய்தார்களோ அதனைத்தான் கருத்து தளத்தில் ரதிக்கு திருப்பித் தருகிறார் ரயாகரன். ரதியின் வாயில் நாம் விரும்புவதை பேச நிர்ப்பந்திக்க முடியாது.. இணையம் லூயி போனபார்ட்டின் பிரான்சு அல்ல•.

  27. Rathi avarkalukku: Ethiriyodu mattum sandaipoduvathu alla porattam. Vimarsanam, Suyavimarsanam seivathum, ethir karuthukkalodu poraduvathum porattamthan.Indha irandu porattamum idaividamal seiya vendum. Kurainthathu, ungal jananayakathai neengal kappatra vendum. Atharku koodava urimai illai ? so, Neengal meendum katturai yelutha vendum. sari yentral yetrukkolvom; thavaru yentral vimarsippom Avvalavuthan. Please write…

  28. நான் மணி

    நண்பர் போராட்டம், ஏகலைவன் உள்ளிட்ட சிலர் ரயாகரன் பற்றிய பிரச்சினையில் நடுநிலை ஒன்றைத் தேடுகிறார்கள். நடப்பது வறட்டுவாத்த்திற்கும் மார்க்சியத்திற்குமான் போராட்டம். இதில் நடுநிலைமை வகிப்பது யாருக்கு உதவும் என நினைக்கின்றீர்கள்.. அந்த நடுநிலைமை என ஒன்று உண்மையில் சாத்தியமா..

    நண்பர் போராட்டம்.. ரயாகரனின் வெண்பாவிற்கு விளக்கம் எழுதிய கலகத்தின் மேற்கோளை எடுத்தியம்பி உள்ளீர்கள். நல்லது.. ரதி எழுதுவது முற்றும் முடிந்த வரலாறு என யாரும் சொன்னார்களா.. அப்படி சொன்னாலும் அதனைப் பின்னூட்டங்களில் அம்பலப்படுத்த முடியாதா.. இந்திய மா.லெனிய இயக்கங்களை தங்களது சகநாட்டுக்கு அருகில் சில காலம் வாழ நேர்ந்த தனிநபர் ஒருவர் (ரதி) வரலாற்று வழியில் ஏமாற்ற முடியும் என நீங்கள் கருதினால், அந்த அமைப்பை சவலைப்பிள்ளையை விடக் கேவலமாக கருதுகின்றீர்களா..

    ரயாகரனை வரலாறு எழுதச் சொன்னால் அது யாழ் மாவட்டத்தில் அதுவும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த்தைத் தாண்டி போகும் என்று கருதுகின்றீர்களா… மார்க்சியம் அவரிட்ம பட்டபாடு போதாது என்று வரலாற்றையும் இணையப்பார்வையாளர்களை வெறுக்க வைக்க தாங்கள் நடத்தும் சூழ்ச்சி போலத் தெரிகின்றதே…

    ப‌ல‌ க‌ட்டுரைக‌ளில் த‌ன‌து சொந்த‌ ம‌ன‌க்குமுற‌லை வ‌ர‌லாறாக‌ப் ப‌திவு செய்த‌வ‌ர் ர‌யாக‌ர‌ன் என்ப‌தை தொட‌ர்ந்து ப‌டித்தால் புரிந்து கொள்ள‌ முடியுமே..

    உங்க‌ள‌து ப‌க்க‌ச்சார்பின்மையை எப்ப‌டி புரிந்துகொள்வ‌து..

    2003 ல் பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு மாநாடு த‌ஞ்சையில் ந‌ட‌ந்த‌து. குஜ‌ராத் ப‌டுகொலையின் ர‌த்த‌சாட்சிய‌ங்க‌ள் மேடையேறி த‌ங்க‌ள‌து ம‌ன‌க்குமுற‌ல்க‌ளை, சில‌ நிக‌ழ்வுக‌ளைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டினார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் த‌லிபான்க‌ள்தான் த‌ங்க‌ளுக்கு மேசையாக்க‌ள். ம•க•இ.க‌ போன்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்ற‌ க‌ருத்து ஒருவ‌ரிட‌ம் கூட‌வா இல்லாம‌ல் இருந்திருக்கும். அத‌னை உறுதிசெய்து விட்டுதான் மேடையேற்றினார்க‌ளா..

    இன‌ உண‌ர்ச்சியை தாண்டி அவ‌ர்க‌ள் எழுத‌ மாட்டார்க‌ள் என்ப‌து ஏற‌க்குறைய‌ ர‌யாக‌ர‌னின் க‌ருத்துதான். ஒருவேளை இது உங்க‌ளுக்கு இருப்ப‌த‌ன் வெளிப்பாடுதான் திரும்ப‌த் திரும்ப‌ வின‌வின் விள‌க்க‌த்தைக் கோருவ‌து.. ஸோ நீங்க‌ள் இருப்ப‌து வ‌ற‌ட்டுவாத‌த்தின் ப‌க்க‌ம்தான்..

    • 2003 ல் பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌…….சரியா கேட்டீங்க தல… இதத்தான் நான் அன்னிக்கே கேட்டேன்! ஆனா தோழர்கள் என்னைய குழப்பவாதின்னு முத்திர குத்தி மூலேல உக்கார வச்சிட்டாங்க . என்னத்த சொல்ல, வறட்டுவாதம் போரடிக்கும்னுதான் நெனச்சிகிட்டிருந்தேன் அந்த அக்கப்போருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்குதே?

    • முதலாவதாக, நான் நடுநிலைமை வகிக்கிறேன் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்பதை மட்டும் சற்று விளக்குங்கள். மற்ற விசயங்களை பிறகு பேசலாம்.

      //இன‌ உண‌ர்ச்சியை தாண்டி அவ‌ர்க‌ள் எழுத‌ மாட்டார்க‌ள் என்ப‌து ஏற‌க்குறைய‌ ர‌யாக‌ர‌னின் க‌ருத்துதான். ஒருவேளை இது உங்க‌ளுக்கு இருப்ப‌த‌ன் வெளிப்பாடுதான் திரும்ப‌த் திரும்ப‌ வின‌வின் விள‌க்க‌த்தைக் கோருவ‌து.. ஸோ நீங்க‌ள் இருப்ப‌து வ‌ற‌ட்டுவாத‌த்தின் ப‌க்க‌ம்தான்..//

      வேடிக்கையாக இருக்கிறது. நான் எந்தப் பக்கம் என்று ஆய்வு செய்து கண்டுபிடிக்கிற அளவுக்கு சிக்கலாக இருக்கிறதா என்ன?

      • வினவு இன்னும் சில நாட்களில் இது குறித்த விமர்சனத்தை சில நாட்களில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்திருப்பதன் அடிப்படையில், பதிலளிக்க வேண்டிய மாற்றுக் கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே நான் எனது கருத்தை முன்வைத்தேன். குறிப்பாக தோழர்கள் வினவு, இராயகரன் இருவருடைய கருத்துக்களிலும், உடன்படும், முரண்படும் புள்ளிகளை தெரிவித்திருந்தேன். இது நடுநிலைமை என்பது ரதியை புலி பாசிஸ்ட் என்று சொல்வதற்கு இணையானது எனக் கருதுகிறேன்.

  29. சிலர் இந்த பிரச்சினையின் மூலம் கம்யூனிஸ்டுகளையே அவதூறு செய்ய நினைக்கின்றனர். எள்ளி நகைக்கின்றனர். நாம் ரதியை விமர்சிப்பது எதனால்? அவர் ஒரு பக்க சார்பாக எழுதுவார் என்பதினால் தான். அவர் தன் மக்களை துன்பத்திற்க்குள்ளாக்கிய இரு பாசிசத்தைப் பற்றியும் எழுதட்டுமே. யார் வேண்டாம் என சொன்னது. அவர் லெனினையும் ஸ்டாலினையும் மாவோவையுமே தாக்கி எழுதட்டும். வேண்டாம் என சொல்லவில்லை. உண்மை வரலாறு அதன் எல்லா பக்கங்களையும் கொண்டதாக இருக்கவேண்டும்.

    • தோழர் அஸ்கர், உங்களுக்கு ஒரு விசயம் புரியவே மாட்டேங்குதே. எப்படி ஒரு மனுசன் ஒரு பக்கச்சார்பில்லாம இருக்க முடியும். நடுநிலைன்னு ஒன்னு இல்லவே இல்ல. அப்படி நீங்க நம்புனா மார்க்சியத்த உட்டுடுங்க ஏன்னா மார்க்சியம் நடுநெலமையா பீச்சாங்கையால ஒதுக்கி தள்ளும்.

      அப்புறம் ரதி எழுதுனது அவங்க கதைய, அவங்கள சுத்தி நடக்குற விசயத்த பத்தின அவங்க புரிஞ்சுகிட்டத, அவங்க நினச்சத, அவங்க நம்புனத. அது வினவுல கலையரசன் எழுதியமாதிரி ஆப்ரிக்க வரலாற்ற பத்துன மார்க்சிய ஆய்வு இல்ல, அகதியான ஒரு பெண்ணோட அனுபவம். அவங்களுக்கு புலி பாசிசத்த பத்தி தெரியலேன்னு வச்சுக்கங்க அத அவங்க எப்படி எழுத முடியும்.

      நீங்க எதுக்கு இருக்கீங்க, வாசகரா உங்களுக்கு ஒரு கடமை இருக்கா இல்லயா? இந்தாம்மா சகோதரி, நீ நெனைக்குற மாதிரியில்ல, அந்த காலகட்டத்துல அடக்குமுறை வந்ததுக்கு புலிகள் செஞ்ச இன்னன்ன தப்புதான் காரணமின்னு சொல்லாமில்ல, அத உட்டுட்டு ரதி வரலாற்ற திரிக்கிறாரு, ரதி பாசிட்டு, புலி, சிங்கம் கரடின்னு எங்கேயோ போய் எழுதுனா என்னஙஃக நாயம்

      இரயாகரன்தான் இத புரிஞ்சுக்கல உங்களுக்கு என்னா ஆச்சு?

    • அய்யா, நீங்கள் காமெடி கீமடி பண்ணலியே?! விஷயம் வேற ஒண்ணுமில்லிங்க சாமி. கொஞ்சம் சந்தேகம் வந்துருசுங்கோ. அய்யா கொஞ்சம் மனசு வைச்சா என் சந்தேகத்தை தீர்த்துப்புடலாமுங்க. இதை ஏன் உங்க கிட்டே கேட்கிறேன்னா, நான் யார் கிட்டே இந்த சந்தேகத்த பின்னூட்டமா கேட்டாலும் ஒன்னு, உனக்கொன்னும் தெரியாது போடான்னு சொல்லிப்புடுறாங்க. இல்லையின்னா அந்த பின்னூட்டத்தை தூக்கிப்புடுறாங்க. சரிங்க விஷயத்துக்கு வர்றேங்க.

      ௧.சிலபேர் கம்யுநிசத்தையே கேவலப்படுத்திடுறாங்க அப்படின்னு கோபப்படுறீங்க. நியாம்தானுங்க. கம்யுனிசம் பேசும் சீனா, திபெத்தை ஆக்கிரமிச்சு, அவங்க வாழ்க்கை முறையை குலைச்சது, அவங்களை அடிமையாக்கினது எந்த ஊரு நியாயமுங்க? ஏன் கேட்கிறேன்னா, ராஜபக்சே செஞ்சதுக்கும், சீனா செஞ்சதுக்கும் வித்தியாசம் இல்லிங்களே? அதோடே, திபெத் ஒரு தனிப்பட்ட பிரதேசமா, தனி நாடா இருந்து, உலக வரைபடத்துல எல்லாம் பார்த்திருக்கேங்க. சீன செஞ்சது சரின்னா, கம்யுனிசம் என்கிறே பேரால நீங்க செய்யுற அம்புட்டும் சரிதானுங்களா? அப்படி பார்த்தாக்க, ராஜபக்சே உங்க பாணியிலே “தோழர்” ஆயிடுறாரு. என்னங்க நான் சொன்னது சரிதானுங்களா?

      ௨.சரி சீனாவை விடுங்க. நம்ம தோழர்கள் அடிக்கடி சொல்லுற, “ரசியாவை பார்” என்கிற வாசகத்தை கேட்டு நானும் ரசியாவை பாத்தேனுங்க. அங்க கல்லூரி பொண்ணுங்க எல்லாம், ஹோட்டல் கதவை தட்டி “வரியா?” ன்னு கேக்குறாங்கன்னு யாரோ சொன்னாங்க. அவ்வளவு வறுமையாம். உண்மைதானுங்களா? சாதாரண ஏழை குடியானவனுங்க எல்லாம், பிச்சை எடுக்கிறாங்க ன்னு கேள்விப்பட்டேனுங்க. உண்மைதானுங்களா? மறுபடியும் கேட்டுகிறேன், கோவிச்சுக்காதிங்க, இதுதான் கம்யுனிஸ்டுகளின் சாதனைங்களா? அதைத்தான் உலகம் பூரா பரப்பனும்னு பாடுபடுறிங்களா? நல்ல நோக்கமுங்க. செய்யுங்க.

      ௩ இன்னுமொரு சந்தேகமுங்க. புலிகள் தமிழர்களை கொன்னாங்க, புலிகள் பாசிட்டுகள் ன்னு நிறைய பேரு எழுதுறிங்க,விவாதிக்குறிங்க. சரிங்க. ஆனா, புலிகளை கொல்லுறோமுன்னு சொல்லிக்கிட்டே , ஆயிரக்கணக்கான மக்களை சிங்களவன் கொன்னபோது, முன்னணி வரிசையிலே, சுமார் நானூறு போர் டாங்குகள் சரமாரியா எறிகணை வீசுச்சுன்னும், அம்புட்டு டாங்குகளும், நம்ம சீன பாட்டாளி மக்கள், அதாங்க, உழைக்கும் மக்கள் சிங்களனுக்கு அன்பளிப்பா வழங்கினதுன்னும் சொல்லுறாங்க. அதோடே, பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்கள, இலவசமாகவும், அஞ்சு வருஷ கடன் தவணையிலும் கொடுத்தாங்கன்னு கேள்விப்பட்டேனுங்க. “சீன தோழர்கள்” அப்படின்னு நீங்க, நீங்கன்னா நீங்க மட்டுமில்லேங்க, நம்ம சித்தாந்த சிங்கங்கள் எல்லாரும், பாசமா அழைக்கிறவங்க பாட்டாளி வர்க்கமுன்னா, உழைக்கும் மக்களின் கூட்டமுன்ன, அவங்க இன்னொரு உழைக்கும் மக்கள் கூட்டத்தை அழிக்க ஆயுதம் கொடுப்பாங்களா? எங்கேயோ இடிக்குதுங்களே? இதே குற்றச்சாட்ட ரசிய தோழர்கள பார்த்தும் சில பேரு, அட சத்தியமா நான் இல்லைங்க, சொல்லுறாங்க.

      அந்த பாசிட்டு புலிகள், தமிழ் மக்களை கைய புடிச்சு கூட்டிட்டு போயி சிங்களவன் கிட்டே ஒப்படைக்கலிங்க. நம்ம முதலாளிகள், அதாங்க, இந்தியா, சப்பானு, மற்றும் நம்ம தோழர்கள், அதாங்க, சீனா, ரசியா, இவங்கலோடே கூட்டு முயற்சியால , புலிகள் கொல்லப்பட்டு, அந்த அப்பாவி மக்கள் சிறைப்படுத்தப்பட்டாங்கன்னு சில பேர் பேசிக்கிறாங்க. உழைக்கும் மக்கள் கூட்டணியான நம்ம ரசிய, சீன தோழர்கள் எப்படிங்க முதலாளிகளோடே கூட்டு சேர்ந்தாங்க? சத்தியமா புரியலிங்க.

      அய்யா, நாங்கல்லாம், படிக்காதவங்க. சித்தாந்தத்தை பத்தி அவ்வளவா தெரியாதுங்க. நீங்கள் விளக்கி சொன்னா விளங்கிக்குறோமுங்க. குறிப்பா, இந்த முதலாளி + பாட்டாளி கூட்டணி, விடுதலைக்கு போராடும் ஒரு இனத்த அழிக்க எப்படி சேர்ந்தாங்கன்னு சுத்தமா புரியலிங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விளக்குங்க சாமி!

      • சீனிவாசன், உங்க கேள்விக்கான பதிலை நாம இங்க விவாதிக்க முடியாது… ஆனாலும் உங்க கேள்வி ரொம்ப நியாயமானது. உங்களுக்கு உண்மையிலேயே பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால், மேலே உள்ள வினவு தொலைபேசி எண்ணிலோ அல்லது புதிய கலாச்சாரம் அலுவலகத்துக்கு 044-23718706 என்ற எண்ணுக்கோ கூப்பிடுங்க, தோழர்களை நேரில் சந்திச்சு பேசுனா உங்க சந்தேகம் தீரும்.

      • வெளக்கந்தான கேட்டீங்க அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு
        1.திபெத்தின் நிலபிரபுத்துவ, மத கொடுங்கோன்மைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போதைய சீன மக்கள் அரசு யாரையும் அடிமையாக்கவில்லை
        யாருடைய வாழ்க்கையும் குலைக்கவுமில்லை.
        2.ரசியாவில் இப்போது இருப்பது கம்யூனசம் கிடையாது அது முதலாளித்துவ
        அதுதான் அங்குள்ள பெண்களின் இழிநிலைக்கு காரணம் முதலாளித்துவ அரசுதான் அவர்களின் சாதனைதான் ருசிய கம்யூனிசம் தோழர் ஸ்டாலினுக்கு பிறகு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து விட்டது(போலி கம்யூனிட் போல)
        ரசியா சமூக ஏகாதிபத்திய நாடாக இருந்தபோது கூட அங்கு “வர்றியா” என்று
        கேட்கும் நிலை இல்லை, ஆனால் முதலாளித்துவத்தின் நல்லாட்சியில்தான்
        இச்சீரழிவு, அதே தோழர் மவோவிற்கு பிறகு சீனாவில் நடப்பது கம்யூனிச ஆட்சி அல்ல அவர்கள் போலிகள் மேலும் உலகில் இப்போது எந்த நாட்டிலும்
        கம்யூனிசமில்லை இங்கு உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் பாட்டாளிவர்க்கமும் முதலாளித்துவமும் கூட்டு சேர முடியாது, கூட்டு சேர்ந்தது முதலாளித்துவ சமுக ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க நாடுகள்தான்
        அவை ஈழத்தில் இரத்த வெறிபிடித்த வெறியாட்டம் போடுகின்றன.

  30. நான் மணி

    நண்பர் போராட்டம்.. பின்பகுதியில் வினவுதான் ம•க•இ.க என சில தோழர்கள் கருதுவதாகச் சொல்லி உள்ளீர்கள். அவர்கள் இந்திய ரயாகரன்கள்..

    மார்க்சியத்தை சொந்த முறையில் கஷ்டப்பட்டு படித்து சமூகத்தில் வேலைசெய்து அதில் தோற்று மீண்டும் ஏன் தோற்றோம் என்பதை அறிய மார்க்சியத்தைப் படித்து பிறகு மீண்டும் பிரயோகித்து, தவறு நம் மீதா, அணுகுமுறையிலா என்பதை கண்டறிந்து, தோழர்களுடனும், மக்களுடனும் விவாதித்து, மக்களுக்கு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வேலை செய்யும், பூச்சியங்களுக்கு பின்னால் நின்று எண்களின் மதிப்பை உயர்த்துபவர்கள் அல்ல இவர்கள்.

    இணையத்தில் எழுத தெரிந்த்தால் மற்றும் சில பல தோழர்களின் நட்பால் தாங்களும் கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக் கொள்பவர்கள். இவர்கள் எப்போதெல்லாம் கம்யூனிசத்துக்கு எதிராக இன்னும் சரியாகச் சொல்வது என்றால் தாங்கள் மனதில் யாருக்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று இடம் கொடுத்திருக்கிறார்களோ அவர்களை நீங்கள் சண்டைக்கோ, விமர்சிப்பதற்கோ வந்தால் கூட இவர்கள் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரத்திலிருந்து அரசியலை விலக்கி விட்டு எள்ளலை மட்டும் எடுத்தியம்புவார்கள்.

    இணையம் வருவதற்கு இடமில்லாத முற்காலத்தில் இவர்கள் இன்றைய பிரச்சினையைப் பற்றி பொதுவான ஒரு நபர் கருத்து கேட்டால் ஒன்னாம் தேதி வரைக்கும் பதில் சொல்ல மாட்டார். அந்த மாதம் பு.ஜவில் பார்த்த பிறகு பதில் சொல்வார். அது குறித்த கட்டுரை வராவிடில் வந்த கட்டுரைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி நீங்கள் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பார்.. இது செங்கொடியை ஏந்திக் கொண்டே அதற்கு எதிராக பார்க்கும் வேலை இல்லையா..

    தங்களையும் இவர்கள் நேசிப்பதால், தங்களையும் கம்யூனிஸ்டுகள் என்றே கருதிக் கொள்கிறார்கள். தங்களது ஐயங்களை இதற்கிடையில் மாத்திரம்தான் ஏதாவது மேசையாக்கள் வந்து தீர்க்க வேண்டும் என்று கருதுபவர்கள் இவர்கள்.. இந்த விவாத்த்தில் கூட ஒரு இத்தகைய நபர் கேட்டிருந்தார். வறட்டுவாதம் வரையறு என்று.. இப்படி கேள்வி கேட்பதுதான் வறட்டுவாதம் என்று எளிமையாக சொல்லியிருக்கலாம். அத்தகைய மேசையா வேலை பார்த்தால் அது இந்தியப் புரட்சிக்கு செய்யும் மாமா வேலை என்று எனக்கு தெரிந்த்தால் அமைதியாக இருக்கிறேன்.

    • இந்த ‘மேலான’ கருத்தை பார்ப்பதற்கு முன்னால் அவசரப்பட்டு தங்கள் முந்தைய பின்னூட்டத்திற்கு பதிலளித்து விட்டேன். மன்னியுங்கள். இந்தப் பின்னூட்டம் உங்கள் ‘தூய நோக்கத்தை’ தெளிவாக எடுத்தியம்புகிறது. கொஞ்சம் அவசரப்பட்டு உங்கள் ‘நடுநிலைமை’ வேடத்தை கலைத்து விட்டீர்களோ? இதுவரை இரயாகரன் மீது வசைமாரி பொழிந்து சிண்டு முடிந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது வினவு இந்திய இரயாகரன்கள் என திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுதுதான் உங்கள் திருமுகம் துலக்கமாகத் தெரிகிறது.

      இரயாகரன் மீதான உங்கள் ‘ஆழமான’ கருத்துக்களும், வினவின் மீதான உங்கள் ‘ஆழமான’ கருத்துக்களையும் படிக்கையில் உங்கள் ‘விசால அறிவு’ புலப்படுகிறது. உங்களை போன்ற எல்லாம் அறி(ரி)ந்த மேதைகளுக்கு பதில் சொல்ல முடியாத சாமானியன் நான்.எனவே, உங்கள் விளக்கெண்ணெய் விளக்கங்களுக்கு ரொம்ப நன்றி. அப்புறம் பார்க்கலாம்.

      பி.கு:
      நண்பர் போராட்டம்னுல்லாம் சொல்லாதீங்க… உங்களையெல்லாம் நண்பராக ஏற்றுக் கொள்ளுமளவுக்கு நான் இன்னும் ‘பக்குவமடையவில்லை.’

      • கிழிந்சுது, ஐயா போராட்டம், உங்க மொதோ பின்னூட்டத்த பாத்து பெரிசா விவாதிக்க போரீங்கன்னு நெனனச்சா இப்படி எஸ்கேப்பு ஆவுரீங்களே, மணி வினவ இந்திய இராயாகரன்னு சொல்லல, வினவு தான் ம.க.இ.கன்னு (இரயாகரன் மாதிரி) நெனச்சுகிட்டிருக்குற தோழர்களதான் அவரு இந்திய இரயாகரன்னு சொல்லுராறு. இன்னோரு தபா படிச்சு பாருங்களேன்

      • உண்மைதான். அதை நான் தவறாக புரிந்து கொண்டேன். நல்ல வேளை, நீங்கள் விளக்கினீர்கள். அவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் மடையர்களோ? என்ன ஒரு மேன்மையான கருத்து? தான் மட்டுமே எல்லாம் அறிந்த மேதாவி, அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்களெல்லாம் மடையர்கள் என்ற தோரணையில் அவர் எழுதிய கருத்துக்கு எனது பதில் சரியானதே.

      • மற்றவர்களை அறிவிலிகளாகவும் தம்மை
        மேதைகளாகவும் கருதிக்கொள்ளும்
        இதுபோன்ற ‘மணி’யானவர்களுக்கு உங்கள்
        பதில் மிக மிக சரியானது தான்.

  31. ஓட்டுகட்சி, போலி கம்யூனிஸ்டு, ஆத்தீகவாதி, தமிழ் தேசியர், ஆணாதிக்கவாதி போன்றவர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாமா கூடாதா?
    திரு ஜான் அவர்களே,
    நீங்கள் மேற்குறிப்பிட்ட நபர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாம். புரட்சிகர அமைப்புகளின் சில கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் அவர்களும் வருவார்கள். பிறகு நாம் அவருடன் விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் அவர் கொண்ட கொள்கைகளின் தவறுகளை சுட்டிகாட்டி அவரை வென்றெடுக்க முயல்வோம். அவரை வென்றெடுக்க முடியாத பட்சத்தில் அவர் ஆதரவளராக மட்டுமே நீடிக்கமுடியும். கட்சிப் பொறுப்புகளை அவரிடம் கொடுக்க இயலாது. ஒரு போலி கம்யூனிஸ்டு நான் அப்படித்தான் இருப்பேன் என்றால் அவரை போலி என்றுதானே அழைக்கமுடியும்.
    இவர்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் தானாகவே புரட்சிகர அமைப்பிலிருந்து வெளியேறிவிடுவர்.

    • அஸ்கர், சரியாக சொன்னீர்கள்… வினவுடன் சில மாற்றுக்கருத்து இருந்தாலும், (கவனியுங்கள்) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, ஜனநாயக பூர்வமாக தனது அனுபவங்களை பகிர்ந்து, விவாதித்து வந்த ரதியை, அதே ஜனநாயக உணர்வுடன் அனுகாமல் பாசிஸ்டு என தூற்றி எதிர்நிலைக்கு தள்ளியது யார்? இதுதான் உங்கள் வென்றெடுக்கும் முறையா? இல்லை குறைந்த பட்ச ஆதரவாளராகவாவது பாதுகாக்கும் வழியா? தயவு செய்து பரிசீலனை செய்யவும்.

      • வினவுடன் சில மாற்றுக்கருத்து இருந்தாலும், (கவனியுங்கள்) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, ஜனநாயக பூர்வமாக தனது அனுபவங்களை பகிர்ந்து, விவாதித்து வந்த ரதியை, அதே ஜனநாயக உணர்வுடன் அனுகாமல் பாசிஸ்டு என தூற்றி எதிர்நிலைக்கு தள்ளியது யார்? இதுதான் உங்கள் வென்றெடுக்கும் முறையா? இல்லை குறைந்த பட்ச ஆதரவாளராகவாவது பாதுகாக்கும் வழியா? தயவு செய்து பரிசீலனை செய்யவும்.
        திரு ஜான்,
        இதிலிருந்து ரதி அவர்கள் இன்னும் வென்றெடுக்கப்படவில்லை என்பதை உணரமுடிகிறது. அவர் குறைந்தபட்ச ஆதரவாளராக விவாத அரங்கிலேயே நீடித்திருக்க விட்டிருக்கவேண்டும். எனவே அவரை கட்டுரை எழுதச் சொன்னதன் மூலம் வினவே விமர்சனத்திற்குள்ளாகிறது. வினவும் பதில் எழுதுவதாக சொல்லியிருக்கிறார்கள். காத்திருக்கிறோம் வினவின் பதிலுக்காக.
        நன்றி ஜான்.

      • அஸ்கர், இங்கு வந்து விவாதிப்பவர்கள் அனைவரும் ஆதரவாளர்கள் அல்லவே, வி்னவு தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளது போல வாசகரை எழுத்தாளராக்கும் முயற்சியில் இது ஒன்று. தவிர வினவு தளத்தில் எழுதுபவர்கள் எல்லாரும் கம்யூனிஸ்டா என்ன? டாக்டர் ருத்ரன், வித்தகன் , அருள் எழிலன் போன்றவர்களின் படைப்புகள் வினவில் வெளியாகியுள்ளன, இவர்கள் எல்லாம் தோழர்களா?

        இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்பியது

        1) தோழர் இரயாகரன் சற்றும் ஜனநாயக வழிமுறையில் இந்த பிரச்சனையை அனுகவில்லை மாறாக தவறான வழிமுறையை கடைப்பிடித்துள்ளார்.

        2) ரதியின் எழுத்துக்களிலுள்ள சரி தவறை விவாதிக்காமல் அவரை பாசிஸ்டு என தாக்கி வேறொரு தளத்தில் எழுதியுள்ளார்

        3) முக்கியமாக வினவு தோழர்கள் மீது அவர் வைத்த விமர்சனம் இந்த விவகாரத்தை திசை திருப்பி விட்டது

        இதன் விளைவாகத்தான் இப்படி ஒரு விவாதம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

        இதற்கு மாறாக ரதியின் பதிவுகளிலேயே அவருடன் விவாதித்திருந்தால் அனைவரும் பயன்பெற்றிருக்கலாம்.

        சற்று சம்மந்தமில்லாத கேள்வி,

        ரதி பதிவின் முதல் பாகத்தில் இரயாவின் கருத்தை எதிர்த்து பின்னூட்டம் எழுதினீர்கள், உங்கள் மனமாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாமா?

  32. நான் மணி

    உணர்ச்சிவசப்படும் நபர்கள் ரதியின் எழுத்தை வெறும் உணர்ச்சிவசப்படத்தான் உதவும் என்று சொல்வது வியப்பாக உள்ளது.. எனது விளக்கெண்ணெய் விளக்கத்திலிருந்து இதில் இன்னதும் கலந்திருக்கிறதே என துல்லியமாக குற்றம் காணத் தெரிந்தவர்களுக்கு இராயகரனின் கத்தி போன்ற விளக்கங்களின் சாரம் புரிந்து இருப்பதும் அதன் நியாய தர்மங்களை வியந்தோதுவதும்… அப்ப்ப்பா இந்த வசிஷ்டர்களின் வாயால் எத்தனை முறைதான் குட்டுப்படப் போகின்றோமோ…

  33. இங்கே போராட்டம் என்ற பெயரில் எழுதும் தோழர், மணியின் வாதத்திலுள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படுவது வேதனையளிக்கிறது. இரயாகரன் பற்றி மணி சின்டு முடிந்து விட்டார் என கூறுவது மிக தவறான வாதம். மணி திருத்தமான வாதங்களை முன்வைத்திருக்கிறார், அதை மறுத்தாவது விவாதம் செய்யலாம். இப்படி அவதூறு செய்வதுதான் மார்க்சிய முறையா. தோழர்களே சிந்திப்பீர்

  34. Senthil, ////டக்லஸ் தேவானந்தமும் அவரது ஆட்களும் (EPDP) செய்த படுகொலைகளை எப்படி அய்யா புலிகள்தான் செய்தார்கள் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள்?///////

    //// also see this long report in wiki about the past
    LTTE murders and genocide :

    http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

    and LTTE’s methods to raise funds included arms, drugs
    smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc
    also they forced recruited boys.

    See these too :

    USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war
    http://www.janes.com/press/press/pc070719_1.shtml

    from Jane’s Defence Weekly :
    http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml

    and i wrote the following in orkut :

    ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி
    விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்
    பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
    ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்
    (ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
    பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக
    முக்கியமானவர்கள்.

    உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை
    கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
    பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.

    பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை
    நோக்கு பார்வையும் கொண்டவர்.

    யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
    தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
    வெளிப்படையாக‌ பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,
    புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.

    அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்க‌வில்லை.

    http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham

    http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece
    Anton Balasingham
    Journalist who became the chief strategist and negotiator of the Tamil
    Tigers in their struggle for autonomy

    • Dear Mr. K.R. Athiyamaan,

      Thank you for your reply.

      But for your kind information, it will not take too much time to modify the wiki pages easily by anyone. So do not produce the wikipedia pages as proofs.

      Senthil.

  35. முதலில் ஒரு தெளிவு:

    நான் வினவு கருத்துடன் முழுமையாக உடன் படுகிறேன். மேலும் தோழர்கள், மா.சே, மணி, நாவலன், ஜான், மாம்போ, அறிவுக்க்கொழுந்து, ஏகலைவன் உள்ளிட்டோரும் சரியான திசையில் இந்த விவாதத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறேன்.

    வினவு கருத்துடன் ஒன்றுபடாத மற்ற தோழர்கள் எப்படி இராயகரனுடைய கருத்து வறட்டுத்தனமானதல்ல என்பதை விளக்காமல், தேய்ந்த ரெக்கார்டு போல ஒரே இடத்தில் (புலி எதிர்ப்பு) நின்று போய் விட்டனர். அவர்களால் விவாதத்துக்கு எந்த பயனும் இல்லை இது அவர்களுக்கும் சலிப்பூட்டி, மற்றவற்களையும் வெறுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

    எனவே மார்க்சிய ஆய்வு முறையை பயன்படுத்துங்கள். வறட்டுவாதத்தை அடையாளம் காணுங்கள். அதற்கு எதிராக போராடுங்கள்,

    • வினவுக்கு மாற்றாக கருத்து கூறிய தோழர்கள்
      எல்லோரும் புலி எதிர்ப்பை மட்டும்தான் பேசினார்களா, ஒரே அடியாக “தேய்ந்த ரெக்கார்டு” என்பது மற்ற தோழர்களை கேவலப்படுத்துகிறது.
      மற்ற தோழர்கள் கேட்ட முக்கியமான கேள்விகளை வசதியாக மறந்துவிட்டு(அதை மறுபடியும் கேட்டு உங்களை வெறுப்பேத்த விரும்பவில்லை)
      வறட்டுவாதத்தை விளக்குங்கள் என்றால் எப்படி ?

      //அவர்களால் விவாதத்துக்கு எந்த பயனும் இல்லை//

      நல்லா பேசறீங்க!!! அருமையான வரிகள் ?????

      • அய்யா ? இங்கே யாரையும் கேவலபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. உங்களால் முடிந்தால் அந்த கேள்விகளை தொகுத்து சொல்லுங்களேன். நான் பார்த்த வரையில் இங்கே மற்றும் இதற்கு முன்தைய இடுகையில் இரயாகரன் தரப்பு பேசும் சாரமான விசயம் ‘புலி எதிர்ப்பு’ மட்டும்தான். இரயாகரனின் கருத்து வறட்டுவாதமல்ல என்று இந்த இடுகையின் கருப்பொருளை ஒட்டி யாராவது விளக்கி எழுதியிருந்தால் சொல்லுங்கள் என் கருத்தை மாற்றிக்கொண்டு மன்னிப்பும் கேட்டுவிடுகிறேன்.

  36. இரயாகரன் எப்போது கடவுளானார்:

    நானும் ரதி முதல் பகுதி எழுத துவங்குவதிலிருந்து பார்த்து விட்டேன், இரயாகரனை யாராவது விமர்சித்தால் சிலருக்கு கோபம் வந்துவிடுகிறது. இரயாகரன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நபரா? அவரை கடவுகளாக்கும் முயற்சி ஏன்? எந்த ஒரு மார்க்சியவாதியும் ஆசான்கள் உட்பட விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த தனிநபர் வழிபாடு புரட்சிகர அமைப்பின் பண்புகளில் ஒன்றல்ல. அதைக்கொண்டுள்ள தோழர்கள் உடனடியாக அதை விட்டொழியுங்கள்

    • //ஒரு மார்க்சியவாதியும் ஆசான்கள் உட்பட விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த தனிநபர் வழிபாடு புரட்சிகர அமைப்பின் பண்புகளில் ஒன்றல்ல. அதைக்கொண்டுள்ள தோழர்கள் உடனடியாக அதை விட்டொழியுங்கள்//

      உண்மை
      தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்
      ஆனால் இது உங்களுக்கும் பொருந்துகிறது 😆

  37. ஈழத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா:

    ஈழத்து அனுபவத்தை ரதி எழுதத்துவங்கும் போதோ ஆ! நடுநிலையா எழுது, புலிய திட்டி எழுது என கன்டீசன் போட்டார். அதவிட பெரிய காமெடி அதற்கு பல தோழர்கள் சப்போர்ட்டா வந்ததுதான், நடுநிலை நாட்டாமைகளை பற்றி வினவு, மா.சே போன்ற தோழர்கள் அப்போதே எழுதிவிட்டதால் அதற்குள் போகவில்லை… ஆனால் இது என்ன பன்பு, ஒருவர் எழுத ஆரம்பிக்கும் போதே அவர் இப்படித்தான் எழுதுவார், அவரால் நேர்மையாக எழுத முடியாது என்று கருதுவதன் மறுபக்கம், நான் சொல்லும் வழியில்/என்னுடைய கருத்தில் ஒன்று படுவதுதான் நடுநிலை, நியாயம் என்பது… அதனால்தான் கேட்கிறேன் ஈழத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா, மற்ற மனிதர்களுக்கு அங்கே பலவிதமான அனுபங்கள் ஏற்பட்டிருக்க கூடாதா? அனைத்தையும் இரயா என்னும் ஸ்கேலு வைத்துதான் அளந்து பார்க்க வேண்டுமா?

    இன்னொரு கேள்வியும் இருக்கிறது அதாவது, மார்க்சியத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா என்பது ஆனால் அதை மணி ஏற்கனவே கேட்டு விட்டதால் அங்கே போய் யாராவது பதில் சொல்லுங்கள்.

    • மறுபடியும் கிண்டல் நையாண்டி இதெல்லாம் சக தோழர்களிடம் தேவையா?
      ஈழத்துக்கோ,மார்க்சியத்துக்கோ ரயாகரன் அத்தாரிட்டி அல்ல அப்படி அவர் சொல்லவும் இல்லை அதே நீங்களும் நானும் அத்தாரிட்டி ஆக முடியாது

      //புலிய திட்டி எழுது என கன்டீசன் போட்டார்//
      இதை தாங்கள் நேர்மையுடன் நிரூபிக்க தயாரா,

      பக்கசார்பின்றி எழுது என்பது குற்றமா?

      வறட்டுவாதம் பேசும் ரயாகரனின் நூல்களை புரட்சிகர அமைப்புகள் ஏன் வெளியிட்டது ?

      • இதை நீருபிக்க வேறு வேண்டுமா இந்த தொடரில் இரயாகரன் எழுதிய பின்னூட்டங்களுக்கும், இப்பொது அவர் எழுதி வரும் தொடரையும் படியுங்கள், அதுவே நிரூபனம்.

        பக்கச்சார்புக்கான விளக்கம் ரதிகட்டுரையின் முதல் பாகத்தில் மா.சே, வினவு பின்னூட்டங்களிலும், இந்த இடுகையில் போராட்டத்தின் பின்னூட்டத்திலும் தெளிவாக இருக்கிறது.

        வறட்டுவாதம் பேசுபவரின் நூலை புரட்சிகர அமைப்புகள் ஏன் வெளியிட்டது, பிளஹனவ்வை ஏன் லெனின் பெரிதும் மதித்தார்?

      • முடிவதற்குள் என்டர் அழுத்திவிட்டேன் 🙂

        அதாவது, ஒரு நபரிடம் ஐய்க்கியமும் போராட்டமும் உள்ள உறவுதானே இயங்கியல், மார்க்சியம், தோழமை எல்லாம். ஒன்று இப்படி இல்லை அப்படி என்றால் எப்படி

      • //இதை நீருபிக்க வேறு வேண்டுமா இந்த தொடரில் இரயாகரன் எழுதிய பின்னூட்டங்களுக்கும், இப்பொது அவர் எழுதி வரும் தொடரையும் படியுங்கள், அதுவே நிரூபனம். //

        நல்லா சமாளிக்கிறீங்க 😆

    • பகக சார்பின்றி எழுதுங்கள் என்றுதான் கூறியுள்ளார்.
      தோழர் இரயா தனது கட்டுரை பகுதி 4 ல் கூறுவது.
      அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். அதற்கு பிந்தைய காலத்தைப் பற்றி அவரின் கருத்துகள், சொந்த தனிப்பட்ட அனுபவமல்ல. பொதுவான ஒன்றின் மேலான, புலி பற்றிய அவரின் “மதிப்பும் மரியாதையும்” சார்ந்து செய்யப்படும் அரசியல் புனைவு. பொது மக்களைச் சார்ந்து நின்று சொல்லும் ஒன்றல்ல. இப்படி இயல்பாகவே 1986-1987 க்கு பிந்தைய வரலாற்றை, புலியின் ஊடாக எமக்கு கூற முனைகின்றார்.
      தான் மண்ணில் இல்லாத போது நடந்தநிகழ்வை எப்படி தன் சொந்த அனுபவமாக கூறமுடியும் என்றுதானே கேட்கிறார். அத்துடன் தகவல்கள் அன்னிய சூழலில் நின்று மிகையாக்கி புனையப்படுகின்றது.
      என்கிறார். இதில் தவ‌றிருப்பதாக நாம் எண்ணவில்லை.

      • இராயாகரனும் கூடத்தான் 83-84 பிறகு ஈழத்தில் இல்லை அவரும் அன்னிய சூழலில்தான் இருக்கிறார். அவருக்கும் இதே விமர்சனத்தை பொருந்தும் தானே? ஆனால் அதில்லை என் கேள்வி, இதை ஏன் ரதியுடன் விவாதிக்க அவர் முன்வரவில்லை என்பதே?

        நமக்கு வேண்டுமென்றால் புலி ஆதரவாளர்களை வென்றெடுப்்பது பிரதான வேலையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஈழத்து பொதுவுடமைக்கு அது தானே பிரதான வேலை? யாருடனும் விவாதிக்காமல் புலியின் தாக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் பாசிட்டுகள் என்றால் அது வறட்டுவாதம் இல்லாமல் வேறென்ன?

      • //அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். //

        This is not true.

      • வினவில் வரும் தமிழர்கள் எதையும் நம்பும் கேனையர்கள் என்று ரதி நினைத்து விட்டார். //அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். //

        This is not true.

        ரதியின் கட்டுரையில் இருந்து:

        //வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில்// அதாவது 1984-1987 //பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன்.// ரதி தொடர்ந்து எழுத மாட்டேன் என்று முடிவெடுக்க காரணம் அவரது பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தான். இது தெரியாமல் இன்னமும் ஒரு கும்பல் ரதிக்கு ஜால்ரா அடிக்கின்றது.

  38. வினவில் ரதியால் எழுதப்பட்டது ஈழத்து வரலாறா

    இங்கே இரயாகரனால் துவங்கப்பட்டு பின்பு மற்றவர்களால் மீண்டும் மீண்டும் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு ‘ ஒரு புலி ஆதரவாளர் எப்படி ஈழத்து வரலாறை வினவு தளத்தில் எழுதலாம்’ என்பது. இந்த கேள்வியிலுள்ள அபத்தத்தை காட்டிலும் அபத்தமானது ரதி ஈழ வரலாற்றை எழுதுகிறார் என்பது.

    ரதியை அறிமுகப்படுத்தும் போது வினவு எழுதுகிறார்

    ”ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம்.”

    ”இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள்.”

    இதற்கு என்ன பொருள் என்பதை புரிந்து கொள்ள மார்க்சியத்தை கரைத்து குடித்து தண்டி தண்டியாய் புத்தகம் எழுதியிருக்க தேவையில்லை, தமிழ் கற்றிறுந்தாலே போதும்.

    பின்னர் ரதி இப்படி துவங்குகிறார்…

    ”நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்க‌ள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபவத்தைதான் சொல்ல வருகிறேன்”

    இப்படி முடிக்கிறார்…

    ”நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்தலை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்ட‌ப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?

    ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை”

    ஈழத்தில் தன் அத்தை பாட்டி செத்த அனுபவத்தை யாராவது சொன்னால் கூட பிண்ணனியில் ஷெல் ஒன்று விழும் சத்தம் கேட்டிருக்கும். அதானல் ரதி தனது கதையில் ஏன் போரை பற்றியும் தமிழர் உரிமை பற்றியும் பேசினார் என யாரும் கேட்க முடியாது ஏனெனில் அவர் அகதியானதற்கு காரணம் அவர் தமிழர் என்பதனால். இதை யாரும் மறுக்க முடியாது என நினைக்கிறேன். மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 🙂

  39. ரதி பாசிஸ்டு – இரயாகரன், ஜனநாயகவாதி

    ரதி தனது முதல் பகுதியை எழுதியவுடன் அவரை நடுவு நிலைமையாக? எழுதும்படி அன்போடு அச்சுறுத்தியதோடில்லாமல் ரதி எழுதிய அறிமுகத்தை வைத்தே அவர் ஒரு புலி என ‘கண்டு’ படித்து விமர்சனங்களை எழுதிய இரயா மற்றும் தோழர்களுக்கு ரதி இவ்வாறு பதிலளித்துள்ளார்

    என் அனுபவத்தொடரில் அரசியல் அல்லது புலிகள் பற்றியோ எழுதுவது என் நோக்கம் கிடையாது. அரசியல் பேசும் அளவுக்கு எனக்கு அதில் ஞானம் கிடையாது. புலிகள் பற்றிய கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அதை யார் மீதும் திணிக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. எழுதலாம் என்ற முடிவெடுத்தபின் நான் தீர்மானமாக நினைத்துக்கொண்டேன், அரசியல் மற்றும் புலிகளை பற்றி பேசுவதில்லை என்று. இங்கே ஆரம்பத்தில் நான் சொன்னது என் மனக்குமுறலகள் மட்டுமே.
    நான் என் அனுபவத்தொடரை எழுதுவதன் மூலம் எங்கள் போரியல் வாழ்வின் சிரமங்களையும், அகதிவாழ்வின் அவலங்களையும், சாவோடு போராடி நாம் செத்து செத்து பிழைத்ததையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.
    இங்கே மா‍_சே சொன்னது போல் என் அனுபவங்களை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அதன் பிரதிபலிப்பாகத்தான் என்னால் சொல்லமுடியும். ஒருவேளை நான் விவாவதத்திற்குரிய விடயங்களை சொன்னால் தாராளமாக விவாதிக்கலாமே.

    எப்பேர்பட்ட புலிப் பாசிசம்…எப்படிப்பட்ட நடுவு நிலைமை பிழற்சி

    அந்த இடுகைக்கான விவாதத்திலிருந்து விலகிய போது இரயா இப்படி எழுதுகிறார்

    இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது புலிகளின் பால் பற்று கொண்டிருக்கும் இதயங்களை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வோம். அப்போதுதான் புலிகளின் பெயரால் ஈழம் கண்ட பின்னடைவை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். மாறாக இதுதான் எமது நிலைப்பாடு இதை ஏற்காதவர்கள் தவறானவர்கள் என்று நமக்கு நாமே பேசிக் கொள்வதில் பயனுண்டா? இந்த விமர்சனங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு அணுகுமுறையை புரிந்து கொள்வதற்காக சொல்கிறோம்.”
    இந்த வகையில் தொடர்ந்து இந்த விவாதத்தில் இருந்து நாம் விலகிக்கொள்வது நல்லதாகப் பாடுகின்றது.

    நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள். நாங்கள் அதை எதிர்த்து அம்பலப்படுத்திதான் இதைச் செய்ய முடியும் என்று கருதுகின்றோம்.

    அதாவது அவர் எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாறோ அதை செய்யாமல். விவாதத்திலிருந்து விலகுகிறார்.

    அவர் செய்ய விரும்பியதை செய்பவரை ( புலிகளின் பெயரால்….) ‘புலியுடன் போய் புலியை திருத்த’ என ரதிக்கும் புலி முத்திரை குத்தி, வினவுக்கும் புலி ஆதரவு முத்திரை குத்தி, அதற்கு எதிர்வினையாற்றினால் பதில் சொல்ல வேண்டுமே என்ற பொறுப்பு கூட இல்லாமல் விவாதத்திலிருந்து விலகுகிறார்.

    என்ன ஒரு ஜனநாயக ஜொலி ஜொலிப்பு…

    இதற்கு பின்னர் நடந்த விவரங்களைத்தான் வினவு கடந்த இரண்டு இடுகைகளில் தொகுத்து எழுதியிருக்கிறார்…..

    இதில் தோற்றது என்னவோ நான்தான்….. எவ்வளவுதான் பில்டப் கொடுத்து பார்த்தாலும் ரதியை பாசிஸ்டு எனவும் இரயாவை ஜனநாயகவாதி எனவும் நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை. ஆகவே தோழர்களே தலைப்புக்கு மன்னியுங்கள் 🙁

    • ரயா வறட்டுவாதி தோழர் ரதி கம்யூனிஸ்டு

      ரதி புலி ஆதரவாளர் இல்லை என அரைடிக்கட் கூறுகிறார்
      //‘ ‘ ஒரு புலி ஆதரவாளர் எப்படி ஈழத்து வரலாறை வினவு தளத்தில் எழுதலாம்’ என்பது. இந்த கேள்வியிலுள்ள அபத்தத்தை காட்டிலும் அபத்தமானது ரதி ஈழ வரலாற்றை எழுதுகிறார் என்பது. ’//

      அபத்தம் என்றால் முட்டாள்தனம் என்று அர்த்தம்,
      இந்த கேள்வியே முட்டாள்தனமானதென்றால் மகஇக போன்ற புரட்சிகர அமைப்புகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவாளராக இருந்து பிளாகில் எழுதுபவரெல்லாம் உங்கள்
      பார்வையில் முட்டாள்கள். இப்படி கேள்வி கேட்டவர்களெல்லாம் சக தோழர்கள்தான் அவர்களை எதிர்நிலையில் தள்ளுவது போல ஆணவமான பதில்கள் இதில் நீங்கள் மற்றவர்களை வென்றெடுக்க போகிறீர்களா?
      நீங்கள் எங்கே பொதுவுடைம பாடம் கற்று கொண்டிருக்கிறீர்களோ அங்குதான்
      நாங்களும் கற்றுகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதிர்கள், வினவின் பாதையில் இது ஒரு விமர்சனத்துக்குறியதாகவே எதிர்காலத்திலும் இருக்கும்
      இங்கு வினவு ரயாவை தாக்குவதற்கு மேடை போட்டு கொடுத்துள்ளது
      அதனால்தான் “எல்லாளன்” போன்றவர்கள் உள்ளே வந்து ரயாகரனையும்
      கூடவே ஆசான்களையும் போட்டுதாக்கியுள்ளனர் ஆனால் ரயாகரனின் தளத்தில்
      வினவை தாக்குவது போன்ற மறுமொழிகளை அனுமதிப்பதில்லை,
      இங்கோ எல்லாளனின் அவதூறுகளுக்கு பதில் சொல்ல வினவுகூட முன்வரவில்லை ஏனென்றால் எல்லா(ள) ஜனநாயகவாதிகளும் ஒன்றாக சேர்ந்து ரயாவை ரவுண்டு கட்டி கொண்டி இருப்பதால் இந்த சமயத்தில் சப்போர்ட்டுக்கு வரும் எல்லா(ள) தோழர்களையும்(?) புண் படுத்தக்கூடாது என முடிவு செய்திருப்பீர்கள் போலும், ரயாவிடமிருந்து மார்க்ஸியத்தை காப்பாற்ற வேண்டும், சிறீயிடமிருந்து மார்க்ஸியத்தை காப்பாற்ற வேண்டுமென சிலர் சபதம் எடுக்கிறார்கள் இதையெல்லாம் காமிடி என ஒதுக்கிவிட முடியாது இந்த விவாதத்திலிருந்து எமது பக்கமும் சுயவிமர்சனம் அவசியம்தான் ஆனால் வினவு ஒன்றும் விமர்சினத்திற்கு அப்பாற்பட்டவரல்ல, உங்களின் பாணி சலிப்பூட்டக்கூடியதல்ல “தோழர்களுக்கு”(?) ரயா வறட்டுவாதி தோழர் ரதி கம்யூனிஸ்டு
      என்று முழுமையாக எம்மாலும் “கண்டு”பிடிக்க இயலவில்லை ஆனால் வினவு தோழர்கள் அதை பிரகடனமே செய்துவிட்டார்கள் எதிர்காலத்திலும் அவர்கள் இதை முன்னெடுத்து சென்று “வறட்டுவாதத்துக்கு” எதிராக போராடுவார்கள் என நம்புகிறோம், போதும் இதோடு எமது விவாதம், (முடியல)

  40. நண்பர்களே, என் உணர்வையும் எழுத்துக்களையும் மதித்து இந்த ஆரோக்கியமான ஓர் விவாதத்தை நடத்துவதற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் இவ்வளவு தூரம் சொல்வதாலும், எங்கள் அவல வாழ்வின் வலிகளை சொல்லாமல் இடையில் நிறுத்தக்கூடாது என்பதாலும் என் முடிவை மீள் பரிசீலனை செய்கிறேன்.

    எனக்குள் ஓர் குற்ற உணர்வு வருத்திக்கொண்டே இருக்கிறது. நண்பர் கலகம் போன்றோர்கள் வினவு மீது மிகவும் மதிப்பு கொண்டவர்கள். அவர் போன்றவர்கள் கூட வினவை விமர்சிக்க முனைந்ததாலும்; இரயாகரனுக்கும் வினவுக்கும் இடையில் இருந்த நட்பு எனக்கு தெரிய வந்த போதும்; என்னால் வினவு தன் தோழர்களின் விமர்சனங்களுக்கு தேவையில்லாமல் ஆளாக நெரிடுகிறது என்ற ஓர் உறுத்தல் உண்டானது. அது மட்டுமல்ல, இரயாகரன் என்னை “Facist” என்று சொன்னது எனக்கு ஏறக்குறைய ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து தான் நான் எழுதவில்லை என்று சொன்னேன். ஏன் தேவையில்லாத விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற ஒருவிதமான கோழைத்தனமும் தான் காரணம்.

    உங்கள் விவாதங்களைப் பார்த்த பிறகு எனக்கு, நான் எழுத்தத் துணிந்தால் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் துணிவு வேண்டும் என்று உணர முடிந்தது. நானும் இராயகரனின் விமர்சனங்களை personal ஆக எடுத்துக்கொள்ளாமல் வெறும் விமர்சனங்களாக மட்டுமே பார்த்திருக்கலாம். எனக்கு தமிழரங்கம், இரயாகரன் அறிமுகமானது மிக அண்மைக்காலங்களில் தான். அவரின் பதில்களை வினவு தளத்தில் படித்ததோடு சரி. மிகவும் கரடு, முரடான வார்த்தைகளாக இருக்கிறதே என்று அவரின் தளத்தில் நான் எந்தவொரு கட்டுரையையும் படித்ததில்லை. இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.

    உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி.

    • நல்ல முடிவு சகோதரி! தொடர்ந்து எழுதுங்கள்! அரசியல் புரிந்தவர்களும், மற்றவரும் விமர்சிக்கட்டும், விவாதிக்கட்டும், போற்றட்டும், தூற்றட்டும்.
      என்னைப்பொருத்தவரை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கப்ப்டும் புலிகளுக்கு அதனைவிட பன்மடங்கு ஆதரவு இருப்பது எப்படி என்னும் கேள்விக்கு உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் விடையிறுக்கக்கூடும் என தோன்றுகிறது. Compromise செய்து கொள்ளாமல் எழுதுங்கள். எதிர்ப்பார்த்துக்காத்திருக்கிறேன்.

  41. Irayakaran is simply ploughing. What did he do than blaming LTTE. He blames LTTE because of his personal bitterness against LTTE. What Irayakaran did do for the welfare of Eelam Tamils. Can he talk about taht. Irayakaran is a best example for Etttappan. As a Tamizhian Irayakaran should keep quiet if he does not want LTTE. He is talking like a mental. Rathi should continue writing. Irayakaran is coolie.

  42. நான் மணி

    இதோ ஒருவர் அப்புறம் பார்க்கலாம் என எனது விவாத்த்திற்கு தனது ஜனநாயகத்தை தந்துள்ளார். அவரது அணியைச் சேர்ந்த உத்தமர் திருவாளர் ரயாகரன் விவாதிக்கவும் தரப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும் முன்வரவில்லை.

    எனக்கு தெரிய இந்தியாவில் உண்மையான கேள்விகளைத் தவிர்க்கும் சாதி ஒன்று உண்டு.. அவங்க கூட இப்போ கோப்ப்பட ஆரம்பிச்சிட்டாங்க•. என்னத்த சொல்றது

  43. //நண்பர்களே, என் உணர்வையும் எழுத்துக்களையும் மதித்து இந்த ஆரோக்கியமான ஓர் விவாதத்தை நடத்துவதற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் இவ்வளவு தூரம் சொல்வதாலும், எங்கள் அவல வாழ்வின் வலிகளை சொல்லாமல் இடையில் நிறுத்தக்கூடாது என்பதாலும் என் முடிவை மீள் பரிசீலனை செய்கிறேன்// என்று ரதியின் கூற்றை வரவேற்கிறேன். விரைவில் வினவில் எதிர்பார்போம்…..

  44. முதலில் இந்திய ரயாகரன்கள் என்றும், பார்ப்பனர்கள் எனப் பொருள்படும்படியும் விளிக்க நேர்ந்த என்னுடைய உணர்ச்சிவசப்பட்ட தன்மைக்காக மன்னிப்பு கோருகிறேன்.

    • உங்களுக்கு ஆத்திரமூட்டுவதோ, விவாதத்தின் மையப் பொருளை விட்டு விலகிச் செல்லும் தேவையற்ற விவாதத்தை எழுப்புவதோ எனது நோக்கமில்லை. எனினும், தானாக முன்வந்து தவறு செய்து விட்டதாக ஏற்றுக் கொண்டிருப்பதால், இக்கருத்தை முன்வைக்கிறேன். தங்கள் சுயவிமர்சனத்தை சுருக்கமாக முடித்து கொண்டு விட்டீர்கள். நான் காட்டமாக பதிலளிக்க நேர்ந்த தங்கள் ,பின்னூட்டம், ஒட்டுமொத்தமாக அமைப்பின் மீதான அவதூறாகவும், அமைப்பு கருத்தை பற்றி நின்றாலே, ஒரு விவாதத்தில் அமைப்பின் கருத்துக்கு காத்திருந்தாலே, வறட்டுவாதிகள் என்ற முத்திரை குத்துவதாக இருந்தது. அமைப்பு விரோதக் கண்ணோட்டமும், தான் முன்வைக்கும் ‘சிக்கலான’ கேள்விகளை புரிந்து கொள்ள முடியாத ‘மந்தைகள்’ என சக தோழர்களைக் கருதும் குட்டிமுதலாளிய மனோபாவத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என நான் கருதியதால்தான் அவ்வாறு பதிலளிக்க நேர்ந்தது. இதனைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். மற்றபடி தங்கள் முதல் பின்னூட்டத்தில் கூறியபடி அரசியல்ரீதியிலான மாற்றுக் கருத்துக்களை விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

  45. ஐயா கேள்விக்குறி..

    ஈழ‌ வ‌ர‌லாறு ர‌தியால் எழுத‌ப்ப‌டும் என‌ வின‌வு அறிவிக்க‌வில்லை. அறிவித்தால் முத‌ல் விம‌ர்ச‌ன‌ம் நான்தான் செய்வேன். ஆனால் அறிவிக்க‌ப்ப‌டாத‌ ஒன்றை அறிவித்தார்க‌ள் என‌ப் பேசிக் கொண்டே இருந்தால் என்ன‌வாக‌ அவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என‌ நீங்க‌ள்தான் சொல்ல‌ வேண்டும்.

    அப‌த்த‌ம் என்றால் முட்டாள்த‌ன‌ம் என்று ஒரு பொருள்தான் உள்ள‌தா? அல்ல‌து அறிவாளிக‌ள் எப்போதாவ‌து முட்டாள்த‌ன‌மாக‌ப் பேச‌ மாட்டார்க‌ளா..? அதனை சுட்டிக்காட்டினால் ‘என்னை முட்டாள்னு சொல்லிட்டான்’னு கத்துவீங்களா..?

    ச‌க‌ தோழ‌ர்க‌ளை வென்றெடுக்கின்றீர்க‌ளா நீங்க‌ள்.. இது (ஏற்கனவே தோழர்களாக இருக்கும் இரு தோழர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் வென்றெடுத்துக் கொள்வது) அப‌த்த‌ம் என‌க் கூறினால் உங்க‌ளுக்கு கோப‌ம் வ‌ர‌க் கூடும்… கொஞ்ச‌ம் உங்க‌ள‌து வாக்கிய‌த்தை சிறிது ப‌ரிசீல‌னை செய்கின்றீர்க‌ளா..?

    நீங்க‌ளும், நானும், முன்னாள் ந‌க்ச‌ல்பாரிகள் என‌ அறிய‌ப்ப‌டும் ப‌ல‌ என்ஜிஓ க்க‌ளும், ஓடுகாலிக் கும்ப‌லும் கூட‌ ஒரு கால‌த்தில் ஒரே இட‌த்தில்தான் அர‌சிய‌ல் க‌ற்றுக் கொண்டார்க‌ள்.. அத‌ற்காக‌ மாற்றுக்க‌ருத்தை விவாதித்தால் ம‌ன‌சு புண்ப‌டுமே என்று சும்மா இருக்க‌ சொல்கின்றீர்க‌ளா..

    ர‌யாக‌ர‌னைத் தாக்குவ‌த‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வ‌ந்து மேடை போட்டுத்த‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அவ‌ர் ந‌ல்ல‌ ஸ்டிராங்காக‌ நான்கு மேடைக‌ளை ப‌க்காவாக‌ போட்டு வைத்திருக்கிறார். அந்த‌ மேடையை ஒரு முறை கூட‌த் திரும்பிப் பார்க்காம‌ல் வின‌வை விம‌ர்சிக்க‌ வ‌ருவ‌து வேடிக்கைதான். முத‌லில் அந்த‌ நான்கு க‌ட்டுரையைப் ப‌டியுங்க‌ள். எந்த‌த் தோழ‌ருக்கும் கோப‌ம் தானாக‌ வ‌ரும்..

    எல்லாள‌னோ அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கோ ஆசான்க‌ளையும், க‌ம்யூனிச‌த்தையும் ம‌ட‌த்த‌ன‌மாக‌ போட்டுத்த‌ள்ள‌ முய‌ற்சிப்ப‌து ஏதோ இந்த‌ க‌ட்டுரைல‌ தொட‌ங்கிய‌து போல‌ பேசுற‌து உங்க‌ளுக்கே கிச்சுகிச்சு மூட்ட‌ல‌யா..

    எல்லாள‌னின் சைடு டிராக்குக்கு ப‌தில் சொல்ல‌ வின‌வு முனைந்தால் ஒரு வேளை ர‌யாக‌ர‌னுட‌னான‌ சித்தாந்த‌ போராட்ட‌ம் ஏற்ப‌டுத்தும் அய‌ற்சியிலிருந்து நீங்க‌ள் தற்காலிகமாக ‘விடுத‌லை. அடைவீர்க‌ளோ..

  46. எது காமடி.. மார்க்சியத்தை ரயாகரனிடமிருந்து காப்போம் என்று கூறுவது காமடியா.. ரயாகரன் ஒரு காமடியன் ஆக மாறிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது நான்கு கட்டுரையில் வெளிப்படுத்திய பாயிண்டுகளே புட்டுபுட்டு வைப்பதால், அவரிடம் சிக்கித்தான் மார்க்சியமோ கம்யூனிசமோ வளர வேண்டும் என நிர்ப்பந்தித்தால், நிச்சயம் அது ரயாகரனுக்கு மாத்திரமே புரியக்கூடிய ஒரு வகை ரயாகரனிசமாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்..

    வினவு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். விமர்சனம் என்ற பெயரில் வினவிற்கு எடிட்டோரியல் பாலிசி ஒன்றை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மாபெரும் ஜனநாயக உணர்வோடு பலரும் முன்வந்து உள்ளார்கள். சக தோழர்கள் இன்னார் இன்னாருடன்தான் பேச வேண்டும் என முடிவு செய்ய தங்களுக்கு உரிமை இருப்பதாக இவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இவர்களிடம் வினவே இந்தப் பாடுபட்டால் ரதியை நினைத்துப் பார்த்தால் பாவமாகத்தான் உள்ளது..

    வினவு மீதான விமர்சனம் என்று எப்படி ரயாகரனால் உருப்படியாக ஆதாரத்துடன் விமர்சிக்க முடியவில்லையோ அதே போல அவரைப் பற்றி நிற்பவர்களும் இருக்கிறார்கள். சுயவிமர்சனம் செய்யுமாறு இவர்கள் தங்களது பின்னூட்டங்களில் ரயாகரனை ஏன் கோரவில்லை.

    ரதியை ஒரு கம்யூனிஸ்டு என்று வினவு அறிமுகப்படுத்தி உள்ளதா.. அல்லது நிறுவி உள்ளதா… இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா… தயவுசெய்து ஆதாரம் இல்லாமல் ரயாகரனைப் போலவே அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்.. இதுதான் நீங்க‌ள் ர‌யாக‌ர‌னுட‌ன் இணையும் புள்ளியா..

    ர‌யா வ‌ற‌ட்டுவாதி என்ப‌தை வின‌வு சொல்லித்தான் தெரிய‌ வேண்டுமென்ப‌தில்லை.. நான்கு பாக‌ம் எழுதியும் அதில் அர‌சிய‌ல் அப‌த்த‌ங்க‌ளை மாத்திர‌மே எழுதி பொதுவான‌ ந‌ப‌ர்க‌ளுக்கும், மார்க்சிய‌ம்தான் வ‌ழியா என‌த் தேட‌ முனைப‌வ‌ர்க‌ளுக்கும் நுழைவாயிலிலே விர‌ட்டுவ‌த‌ற்கு உக‌ந்த‌ முறையில் விள‌க்குவ‌தும், வ‌ற‌ட்டு சூத்திர‌ம் போல‌ புலிப்பாசிச‌ம், வ‌ர்க்க‌த்த‌ன்மைய‌ற்ற‌ த‌மிழ்பாசிச‌ம்.. என்று வாய்க்கு வ‌ந்த‌ பார்முலாவுக்கெல்லாம் மார்க்சிய‌ம்னு பெய‌ர் வைத்து ஊருக்கு விள‌ம்புவ‌து, வ‌ற‌ட்டுவாத‌ம் ம‌ட்டும‌ல்ல• மார்க்சிய‌த்தை பூசைய‌றைப் ப‌ட‌மாக்கும் உத்தி.. க‌ணித‌ சூத்திர‌ம் போல‌ எல்லோரையும் க‌ண்டு ப‌ய‌ந்து ஓட‌ வைக்கும் உத்தி.. இத‌ற்கு உங்க‌ள‌து அக‌ராதியில் வேறு எதாவ‌து பெய‌ர் உள்ள‌தா… ஆயிர‌ம் க‌ருத்துக்க‌ள் த‌ங்க‌ளுக்குள் மோதிக் கொள்ள‌ட்டும் என்று பேசிய‌ மாவோ போன்ற‌ தோழ‌ர்க‌ளை நீங்க‌ள் எல்லாம் வின‌வு போல‌த்தான் க‌ருதுவீர்க‌ளா..

  47. “ஜான் அவர்களுக்கு,
    இரயாகரன் அவர்கள் ஈழம் சென்று புரட்சியை ஆரம்பிப்பாரா?”
    இதற்கு எனக்கு நானே சுயவிமர்சனம் செய்துகொண்டு தோழர்.இரயாகரனிடம் வருத்தம் தெரிவித்துவிட்டேன். வினவு தளத்தில் அல்ல. மின்னஞ்சல் மூலமாக.அவரும் பதிலளிப்பு கொடுத்துவிட்டார். பிறகு நான் யோசித்தேன் இதை வினவு தளத்திலே கோரியிருக்கலாமே என்று. நான் யாருக்காகவும் மாறமாட்டேன் என்ற கொள்கையுடையவனல்ல. ஏன் யாருக்காகவும் நாம் மாற வேண்டும். நமக்காக நாம் மாறுவோம். மாற்றம் என்ற ஒன்றுதான் மாறாதது. அப்படித்தானே ந்ண்பரே. சரியான கருத்தின் பக்கம் நாம் சென்று ஒரு சரியான(மக்களுக்கான) அமைப்பினூடாக‌ அணி திரள்வதுதானே சரி.
    எனக்குத் தெரிந்த வரையில் தோழர்.இரயாவின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாதவர்களும், அவரின் கடினமான எழுத்துக்களும், மக்களுக்கானதல்லாத எவற்றுடனும் சமரசம் கொள்ளாத மனப்பாங்குமே மற்றவர்களை இவரிடமிருந்து தள்ளி நிற்க வைக்கிறது என நினைக்கின்றேன். இது இவரின் தவ‌றல்லவே.
    பெரும்பாலும் தமிழகத்திலும்,புலம் பெயர் தமிழர்களிலும் புலி அபிமானிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு தோழரின் கடுமையான புலியெதிர்ப்பு கட்டுரைகள் எரிச்சலைத் தருகிறது. இதுவும் அவரது தவறல்லவே. தோழரின்,”எம்மைச் சுற்றிய அரசியலில்,நாம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் தோழருடன் ஒரு உரையாடல்,20வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா?. ஆகிய கட்டுரைகளைப் ப்டித்து பாருங்கள்.

  48. விவாதங்களை ஆழ்ந்து (!) கவனித்தும் சில விசயங்கள், விவாதங்கள் என் அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
    இருப்பினும் இந்த விவாதத்தில் என் அறிவுக்குட்பட்டு என் கருத்தையும் பதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    ரயாகரன் தனது விமர்சனத்தை ஜனநாயக பூர்வமாக நடக்காதது தவறு. முதலில் பாசிஸ்ட். பிறகு ஆதாரங்கள் தருவது
    என்பது எப்படி சரியாகும்?

    ரயாகரன் அமைப்பில் இல்லாத தனிநபராக இருப்பதால்… பலரை வென்றெடுக்க வேண்டிய தேவையில்லாமல் இருக்கிறது.
    அதனால் தான் புலி பாசிஸ்ட் என டுமீல்! டுமீல்! என போட்டுத் தாக்குகிறார்! வறட்டுத்தனத்தின் அடிப்படை வேர் இங்கு
    இருப்பதாக படுகிறது எனக்கு1

    ரதி எழுதட்டும்! அவர் சொன்ன விசயங்களிடமிருந்து நாம் விவாதிக்கலாம் என வினவு சொன்னது சரி என நினைக்கிறேன்.

    சில சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. வினவு ரயாகரன் அவர்களுக்கு பதில் எழுதும் பொழுது புரிபடும் என நினைக்கிறென்.
    வினவின் பதில்களுக்காக காத்திருக்கிறேன்.

    ரதி மீண்டும் எழுத முன்வந்துள்ளார். நல்லது.

    ரதிக்கு,

    //இன்று என்னை எழுத சொல்லிய குற்றத்திற்காக அவர்களே அவர்களின் “தோழர்களின்” விமர்சனங்களுக்கு
    ஆளாக நேரிட்டுவிட்டது. //

    பொதுவுடைமை அமைப்பில் விவாதங்கள் சகஜமானது! அது தான் அடிப்படையும் கூட! அதிமுக வில் விவாதம் நடத்த
    முடியாமா என்ன?

    உங்களுக்கு இது புதிது. அதனால் தான், தோழர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதற்காகவே தோழர்களை அடைப்புக்
    குறிக்குள் போட்டு எழுதுகிறீர்கள்.

    இந்த தொடரை நீங்கள் எழுதி முடிக்கும் பொழுது, தொடர்ச்சியாக வினவு தளத்துடான தொடர்பில் உங்களிடத்தில் பல
    மாறுதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.

  49. பி.இரயாகரன் ஈழத்து கம்யூனிஸ்டாம். சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. பி.இராயாகரனை எந்த முட்டாள் ஈழத்து கம்யூனிஸ்டாக ஏற்றுக் கொண்டது. அங்கே ஈழத்தில் உள்ள கம்யூனிஸ் வாதிகளிடம் பி. இராயாகரனை கேட்டுப்பாருங்கள். அப்போது பி.இராயாகரனின் கம்யூனிஸ்ச வேடம் தெரியும். நரித்தனமாக ஈழத்து கம்யூனிஸ்டுக்களோடு வினவுவை பகைக்க வைக்க பி.இராயாகரன் கபட நாடகம் ஆடுகின்றார். வினவு கவனமாக தெளிவாக இருக்கவேண்டும். பி.இராயாகரன் என்ற வரட்டுவாதியோடு முரண்பாடே ஒழிய ஈழத்து கம்யூனிஸ்டுக்கள் நட்பு சக்திகள் என்பதை நாம் புரியவைக்கவேண்டும். ஒருபக்கத்தில் வரட்டுவாதி பி.இராயாகரனோடு வினவு வைத்திருக்கும் உறவு ஆபத்தானது. புலிகளோடு எப்படி சனநாயக வாதி உறவு வைத்திரக்க முடியாதோ அதைவிட ஆபத்தானது பி;இராயாகரனுடனான உறவு.

    • போகிற போக்கில் உளறாதீர்கள். உங்கள் வாதப்படி ஈழத்து கம்யூனிஸ்ட் ராயாவை கம்யூனிஸ்ட் இல்லையென்று சொல்லிவிட்டால், அவர் கம்யூனிஸ்ட் இல்லாது போய்விடுவாரா!

  50. ஜான்,
    வியப்பாக இருக்கிறது. கட்டுரையாளரையும் தோழரையும் சமமாக பார்ப்பது.
    எனக்கு தமிழரங்கம், இரயாகரன் அறிமுகமானது மிக அண்மைக்காலங்களில் தான். அவரின் பதில்களை வினவு தளத்தில் படித்ததோடு சரி. மிகவும் கரடு, முரடான வார்த்தைகளாக இருக்கிறதே என்று அவரின் தளத்தில் நான் எந்தவொரு கட்டுரையையும் படித்ததில்லை. இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.
    இது கட்டுரையாளரின் கூற்று. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
    சரி நண்பரே வினவின் பதில் வரட்டும். காத்திருப்போம்.
    நன்றி!
    தோழமையுடன்,
    அஸ்கர்

  51. நொந்தகுமாரன் புலிகள் அமைப்பில் கேள்வி கேட்பது, விவாதம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் தான் ரதிக்கும் இது “புதிது.” தலைவன் சொன்னால் செய் அல்லது செத்துமடி என்று தலைமையின் மேலே அடிமையின் விசுவாசத்தைக் கோருவது பாசிசமில்லையா? புலிகள் அமைப்பில் ஜனநாயகம் இருந்ததா? தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை விவாதம் செய்தவர்களை சுட்டுக் கொன்றது வரலாறு.

    வினவுக்கும், ரயாகரனுக்கும் இடையில் பிரிவை உருவாக்கியதன் மூலம் ரதி தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார். கடந்த காலத்தில் புலிகளும் இப்படிச் செய்து தான் ஈழத்தமிழரின் ஏகபிரதிநிதிகள் ஆனார்கள். இது

    பாசிசமில்லை

    என்றால் வேறு

    எப்படி அழைப்பீர்கள்?

    //இந்தப் பாசிசத்தின் மூடுமந்திரத்தை அப்பாவித்தனமானதாக காட்டிவிட

    “ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல”

    என்று கூறி வினவு பாசிசத்துக்கு சுயவிளக்கம் அளிக்கின்து. அந்தப் பாசிசப் புலியோ, புலி மீது “மதிப்பும் மரியாதையும்” உண்டு என்று கூறி புலிப் பாசிசத்துக்கு ஆரத்தி எடுக்கின்றார். அவரின் புலித்தனம் அம்பலமாகாமல் இருக்க, வினவு உதவியது. அதைத்தான் அவர் “வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்” என்று நன்றியுடன் கூறுகின்றார். அவர் தன் பாசிச மொழியில் உறுமும் போது “தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், …” என்கின்றது. இப்படித்தான் புலி, “இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” ” என்று கூறி, ஆயிரம் ஆயிரம் பேரை போட்டுத்தள்ளியது. இப்படி வினவு மட்டும் எம்மை வரட்டுவாதி என்று கூறவில்லை, புலி ரதியும் தான் கூறுகின்றார். அரசியல் ரீதியாக ஒரு புள்ளியில் சந்திக்க முனைகின்றனர்.

    “வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்” என்று ரதி கூறுவது உண்மை. எமது விமர்சனங்கள் மேல் உடனுக்குடன் பதிலளித்து அதை தடுத்து நிறுத்தியவர், ரதியின் பாசிச வரலாற்று திரிபுகள் மேல் அவ்வாறு எதிர்வினையாற்றவில்லை. எப்படி ஆற்றுவார். அதுதான் கூறுகின்றார் “புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை.” என்று. //

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6181:-q-q-5&catid=277:2009

  52. ரதி ஒரு பாசிஸ்ட் என்பதற்கு அவரே தரும் ஆதாரங்கள். //இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.//

    //இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.//
    இவற்றை விட இன்னும் நிறைய உண்டு. புலிகள் மாற்று இயக்கங்களை சேர்ந்த சொந்த சகோதரர்களையே படுகொலை செய்தார்கள். சிங்கள கிராமங்களில் புகுந்து காடைத்தனமாக பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது இனப்படுகொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தார்கள். இதற்குப் பெயர் பாசிசம் இல்லையா? ரதி இதயெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார். அவர் ஒரு பாசிஸ்ட் இல்லையா? இன்று ரதிக்காக பரிந்து பேசுபவர்கள் நாளை ஹிட்லர் ஒரு பாசிஸ்ட் இல்லை என்றும் சொல்வார்கள்.

  53. ரயாகரன் தவறான அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்றால் கூட அவரை ஆதரிக்க வேண்டும் என த‌ன‌து அணிக‌ளுக்கு ஒரு மா.லெனிய‌ அமைப்பு சொல்ல‌ முடியுமா.. சொல்லி இருக்கின்றார்க‌ளா.. உட‌ன் இருக்கும் தோழ‌ருட‌னும் கூட‌ உற‌வைத் தீர்மானிப்ப‌து எது.. அமைப்பின் க‌ருத்தை அனைவ‌ரும் ப‌ற்றி நின்றார்க‌ள் என்று சொல்வ‌த‌ன் மூல‌ம் அமைப்பு சொல்லாத‌ ஒன்றை சொன்ன‌தாக‌ நீங்க‌ள் பிர‌ச்சார‌ம் செய்கின்றீர்க‌ள்.. இது ச‌ரியா.. ர‌யாக‌ர‌ன் சொல்வ‌தை விம‌ர்ச‌ன‌ம் இல்லாம‌ல் ஆத‌ரிக்க‌ வேண்டும் என‌ அமைப்பு எப்போதுமே சொன்ன‌தாக‌த் தெரிய‌வில்லை. ஆதார‌ம் த‌ந்தால் என்னை வேறு அமைப்பிற்கு இட‌ம்பெய‌ர்த்துக் கொள்கிறேன்.

    குட்டிமுத‌லாளிய‌ ம‌னோபாவ‌ம் ப‌ற்றி சொல்லி இருந்தீர்க‌ள்.. என்னுடைய‌ குட்டிமுத‌லாளிய‌ ப‌ண்பு நீங்க‌ள் சொல்வ‌தில் இல்லை. மாறாக‌ என‌து முடிவை முத‌லில் சொல்லிவிட்டு அத‌ற்கு வ‌ந்த‌டைந்த‌ முறையை த‌ர்க்க‌ரீதியாக‌ நிறுவ‌ வேண்டிய‌தை செய்யாம‌ல் அந்த‌ர‌த்தில் தொங்க‌ விட்ட‌ க‌ருத்தில் இருக்கிற‌து.

    நான் ம‌க்க‌ளையோ தோழ‌ர்க‌ளையோ ம‌ந்தைக‌ள் என‌க் க‌ருதுப‌வ‌ன் அல்ல• அந்த‌ ம‌னோபாவ‌ம் நான் த‌மிழின‌வாத‌த்தில் சிக்கி இருந்த‌போது இருந்த‌து. நான் மார்க்சிய‌த்தை சாகும்வ‌ரை க‌ற்க‌வும் அத‌னை ச‌மூக‌ம் எனும் சோத‌னைச்சாலையில் (என்னையும் உள்ள‌ட‌க்கிய‌) ப‌ய‌ன்ப‌டுத்த‌வும் முடிவுசெய்த‌ பிற‌கு, அந்த‌ப் ப‌ண்பு என்னிட‌மிருந்து விடைபெற‌ துவ‌ங்கிய‌து. அதுவும் நான் சாகும்வ‌ரையிலும் எனக்குள் நான் ந‌ட‌த்த‌ வேண்டிய‌ போராட்ட‌த்தில்தான் இருக்கிற‌து. அத‌ற்கு புற‌ச்சூழ‌லும் உத‌வும்.

    அமைப்பின் க‌ருத்துக்காக‌ காத்திருக்கும் தோழ‌ர்க‌ள் இருவ‌கையின‌ர். ஒருவ‌ர் மாண‌வ‌ரின் வேலையை செய்கிறார். ம‌ற்ற‌வ‌ர் த‌ம்மை அறிவாளி என‌க் க‌ருதிக் கொள்ளும் மாண‌வ‌ர். கொஞ்ச‌ம் வாத்தியார் அச‌ந்து போனால் அவருக்கே பாட‌ம் எடுக்க‌வும் த‌குதியான‌வ‌ராக‌ த‌ன்னைக் க‌ருதிக் கொள்ப‌வ‌ர். வாழ்விய‌லுக்கு உத‌வும் ப‌ல‌வ‌ற்றையும் க‌ற்றுக் கொள்ள‌த் தெரிந்த‌ ஆற்ற‌லுள்ள‌ இவ‌ர்க‌ள், மார்க்சிய‌ம் க‌ற்ப‌து என்றால் மாத்திர‌ம் அமைப்பு சொல்ல‌ட்டும் என்பார்க‌ள். இவ‌ர்க‌ளும், க‌ல்விம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு ஆலைத்தொழிலாளியும் ஒருவ‌கையின‌ர் அல்ல•

    தங்களுக்குள் குறுங்குழுக்களை அமைத்துக் கொண்டு தங்க‌ளுக்குள் ஒரு அறிவாளியை தேர்வு செய்கிறார்க‌ள். அவ‌ர்தான் ர‌யாக‌ர‌ன் என்றும், அவ‌ரை தேர்வுசெய்த‌வ‌ர்க‌ள்தான் அவ‌ரை க‌ண்ணைமூடி ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை தெரிந்துகொள்ள‌, அனைவ‌ரின் விவாத‌த்திலும் காண‌ப்ப‌டும் உள்ள‌ட‌க்க‌மின்மை உத‌வ‌க்கூடும். யாராவ‌து விவாத‌த்தை துவ‌க்கிவைத்தால் உட‌ன‌டியாக‌ த‌ம‌து க‌ருத்துக்க‌ளை வெளிப்ப‌டையாக‌ வைக்க‌ மாட்டார்க‌ள். யாராவ‌து ப‌தில் சொல்ல‌ வ‌ந்தால் கூடச் சேர்ந்துகொண்டு கும்மி அடிப்பார்க‌ள்.

    நீங்க‌ள் அவ‌ர்க‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்தால் அவ‌ர்க‌ள‌து க‌ல்வித்த‌குதியை உங்க‌ளுக்கு முன்னால் உய‌ர்த்திக் காட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ ந‌டுத்த‌ர‌வ‌ர்க்க‌ ந‌ப‌ர்கள் இழ‌க்க‌ விரும்பாத‌தை இழ‌ந்த‌த‌ற்கு என‌க்கு இதுவும் தேவைதான் இன்னுமும் தேவைதான் என்பார்க‌ள். அலுவ‌ல‌க‌த்தில் யாராவ‌து அவ‌ர்க‌ள‌து அறிவை கேள்வி கேட்டால் தாங்க‌ள் மார்க்சிய‌ ஐடி கார்டு வைத்திருப்ப‌வ‌ர் மாத்திர‌ம்தான் என்ப‌தை சொல்லாம‌ல் த‌ன்னை மார்க்சிய‌ அறிஞ‌ர் போல‌க் காட்டிக் கொள்வார்.

    இந்த மனோபாவம் எந்த வர்க்கத்திற்கானது என போராட்டம் முடிவு செய்து கொள்ளலாம்..

    அப்படி ஒரு ஆலைத் தொழிலாளி நடந்துகொள்ள மாட்டார். அவர் தன்னை மார்க்சியத்தின் எளிய மாணவர் என்று ஒத்துக் கொள்வார். அது இதயத்தில் இருந்து வருவதால் ஒருவேளை இணையமும், வலைப்பூவில் விவாதிக்கின்ற வாய்ப்பும் கிடைத்தால், தனது கருத்துக்களை அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும் முன்வைப்பார். தவறு என காரணகாரியங்களுடன் விளக்கினால் புரிந்து கொள்ள முயற்சிப்பார். புரியவில்லை என்றால் கூட அதனை வெளிப்படையாகச் சொல்வார். புரிந்து கொண்டால் தான் எவ்வாறு மடையானாக இருந்தேன் என்று கூட தன்னைப்பற்றிச் சுயவிமர்சனமாக முனவந்து சொல்வார். மார்க்சியத்தின் உயிர்த்துடிப்பான மாணவர்கள் இவர்கள்தான். தங்களது கருத்தின் பாமரத்தனத்தால்
    த‌மது பாமரத்தனம் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இந்த விவாத்த்திற்கு மாத்திரம் தமது பெயர்களை பலவாறு மாற்றத் தெரியாதவர்கள். ஒரு அறிவாளியின் அறிவை விடவும் எனக்கு இந்த மாணவர்களின் நேர்மையிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

    இதற்கு மேலும் தமது கருத்துக்களை முன்வைத்து நேர்மையாக விவாதிக்க வராத ரயாகரனையும், அவரை உள்ளடக்கமில்லாமல் ஆதரிப்பதுதான் அமைப்பின் கருத்து என்றும் நீங்கள் கருதினால், அல்லது அதுதான் அமைப்பின் முடிவு என்றால் எந்த அமைப்பு பாட்டாளிவர்க்கம் தலைமையேற்று நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சியை செய்யுமோ அந்த அமைப்புக்கு போவதுதான் சாலச்சிறந்த்து என்று கருதுகிறேன்.

    இத்தகைய நடுத்தரவர்க்க வறட்டுவாதிகளின் பிச்சையில்தான் விதர்பா விவசாயிகளின் தற்கொலை முடிவுக்கு வருமென்றால், ஒரு விவசாயியின் மகன் என்பதால் உங்களுடைய பிச்சையிடலைத் தடுப்பதுதான் எனது முதல் பணி..

    • //இதற்கு மேலும் தமது கருத்துக்களை முன்வைத்து நேர்மையாக விவாதிக்க வராத ரயாகரனையும், அவரை உள்ளடக்கமில்லாமல் ஆதரிப்பதுதான் அமைப்பின் கருத்து என்றும் நீங்கள் கருதினால், அல்லது அதுதான் அமைப்பின் முடிவு என்றால்//

      //இப்படி கருதுவதற்கு போராட்டம் தான் அமைப்பை பற்றி நிற்பதாகச் சொன்னதும் உதவுகிறது.//

      //ரயாகரன் தவறான அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்றால் கூட அவரை ஆதரிக்க வேண்டும் என த‌ன‌து அணிக‌ளுக்கு ஒரு மா.லெனிய‌ அமைப்பு சொல்ல‌ முடியுமா.. சொல்லி இருக்கின்றார்க‌ளா.. உட‌ன் இருக்கும் தோழ‌ருட‌னும் கூட‌ உற‌வைத் தீர்மானிப்ப‌து எது.. அமைப்பின் க‌ருத்தை அனைவ‌ரும் ப‌ற்றி நின்றார்க‌ள் என்று சொல்வ‌த‌ன் மூல‌ம் அமைப்பு சொல்லாத‌ ஒன்றை சொன்ன‌தாக‌ நீங்க‌ள் பிர‌ச்சார‌ம் செய்கின்றீர்க‌ள்..//

      மறுபடியும் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அதன் விளைவாக எனது கருத்துக்களை தொகுத்துப் பார்க்காமலும், நான் சொல்வதற்கு நீங்களாக ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இரயாகரன் கருத்தை ஆதரிப்பவர்களெல்லாம், அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்கள் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? இதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

      தங்களது முந்தைய பின்னூட்டத்தில் கீழ்க்காணும் நீண்ட ‘ஆராய்ச்சி’ முடிவை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள்.

      //இணையம் வருவதற்கு இடமில்லாத முற்காலத்தில் இவர்கள் இன்றைய பிரச்சினையைப் பற்றி பொதுவான ஒரு நபர் கருத்து கேட்டால் ஒன்னாம் தேதி வரைக்கும் பதில் சொல்ல மாட்டார். அந்த மாதம் பு.ஜவில் பார்த்த பிறகு பதில் சொல்வார். அது குறித்த கட்டுரை வராவிடில் வந்த கட்டுரைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி நீங்கள் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பார்.. இது செங்கொடியை ஏந்திக் கொண்டே அதற்கு எதிராக பார்க்கும் வேலை இல்லையா..

      தங்களையும் இவர்கள் நேசிப்பதால், தங்களையும் கம்யூனிஸ்டுகள் என்றே கருதிக் கொள்கிறார்கள். தங்களது ஐயங்களை இதற்கிடையில் மாத்திரம்தான் ஏதாவது மேசையாக்கள் வந்து தீர்க்க வேண்டும் என்று கருதுபவர்கள் இவர்கள்.. இந்த விவாத்த்தில் கூட ஒரு இத்தகைய நபர் கேட்டிருந்தார். வறட்டுவாதம் வரையறு என்று.. இப்படி கேள்வி கேட்பதுதான் வறட்டுவாதம் என்று எளிமையாக சொல்லியிருக்கலாம். அத்தகைய மேசையா வேலை பார்த்தால் அது இந்தியப் புரட்சிக்கு செய்யும் மாமா வேலை என்று எனக்கு தெரிந்த்தால் அமைதியாக இருக்கிறேன்.//

      இந்த ‘ஆராய்ச்சி’ முடிவிற்குத் தான், “தான் மட்டுமே எல்லாம் அறிந்த மேதாவி, அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்களெல்லாம் மடையர்கள் என்ற தோரணையில் அவர் எழுதிய கருத்துக்கு” என நான் பதிலளித்தேன். “அமைப்பின் க‌ருத்துக்காக‌ காத்திருக்கும் தோழ‌ர்க‌ள் இருவ‌கையின‌ர். ஒருவ‌ர் மாண‌வ‌ரின் வேலையை செய்கிறார். ம‌ற்ற‌வ‌ர் த‌ம்மை அறிவாளி என‌க் க‌ருதிக் கொள்ளும் மாண‌வ‌ர்.” எனத் தொடங்கி இந்தப் பின்னூட்டத்திலும், இந்த விவாதத்தின் மையப் பொருளுக்கு தொடர்பே இல்லாமல், மீண்டும் மீண்டும் அதீத விளக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

      இதிலிருந்து இரு விசயங்கள்தான் எனக்குப் படுகிறது. ஒன்று, யாரோ சில நபர்களை மனதில் கொண்டு, அந்த வன்மத்தோடு உங்கள் கருத்தில் மாறுபடும் அனைவரும் அவர்களே என முடிவு செய்து தாக்குகிறீர்கள். இரண்டு, நான் எனது கருத்தில் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் இரயாகரனின் எந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு, எந்தக் கருத்தில், அவரது தொடர்ச்சியான அணுகுமுறைகளில் எனக்கு உடன்பாடு இல்லை எனத் தெளிவாகச் சொன்ன பின்னரும், அதனைப் பரிசீலிக்கவே மறுக்கிறீர்கள். அதற்கு மாறாக, இரயாகரனை முழுமுற்றாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் வறட்டுவாதி, கம்யூனிஸ்டாக தன்னைத் தானே கருதிக் கொள்பவர் எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். இது புலி எதிர்ப்பு அரசியலை ரதி பேச வேண்டும், இல்லையேல் அவர் பாசிஸ்டு என இரயாகரன் சொன்னதற்கு இணையானது என்பதை நான் முன்னரும் சொல்லியிருக்கிறேன்.

      நீங்கள் நான் இரயாகரன் கருத்தோடு உடன்படும் புள்ளி என்று சொன்ன கருத்துக்கு பதிலளிக்கலாம், அதை நீங்கள் ஆதரிக்க வேண்டியதில்லை. ஆனால், இரயாகரனின் கருத்தில் ஒரு சரியான அம்சம் மட்டும் உள்ளது என நான் கருதுவது ஏதோ விமர்சனமற்ற முழுமுற்றான ஆதரவு என நீங்களாக முடிவு செய்து கொண்டு இரயாகரனின் அடிப்பொடிகள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். தயவு செய்து நிதானமாக தங்கள் கருத்துக்களையும், எனது கருத்துக்களையும் அதன் முழுமையில் மறுபரிசீலனை செய்யுங்கள்.

      குறிப்பிட்ட விசயத்தில், தோழர் இரயாகரனின் தவறான கருத்துக்கள், தவறான நடைமுறை குறித்து விமர்சனம் செய்கிற அதே நிலையில், அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவும், கொச்சைப்படுத்தவுமான போக்கில் நீங்கள் அவர் செய்யும் அதே தவறை செய்கிறீர்கள். நோக்கம், தேவை என்ற எல்லைகளைத் தாண்டி விமர்சனத்தை இழுத்துச் செல்கிறீர்கள். இது நீங்கள் மட்டுமல்ல, வேறு சில தோழர்களும் இதனைச் செய்வதாக நான் கருதுகிறேன். இன்னும் தெளிவாக சொன்னால், இந்த விவாதத்தை தோழர் இரயாகரன் மீதான் வெறுப்பை கொட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துகிற போக்குதான் வெளிப்படுகிறது. அதனால்தான், குறிப்பிட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு, இரயாகரன் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை அள்ளித் தெளிக்கிற நிகழ்வாக இதனைக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நானும், தோழர் ஏகலைவன், கலகம் போன்றோர்(குறிப்பிட்ட அளவில்) உடன்பட மறுப்பதால் எங்களுக்கும் வறட்டுவாதிகள் என முத்திரை குத்துகிறீர்கள். இது ஒரு தவறான, சீர்குலைவுப் போக்கு என்பதாகவே நான் கருதுகிறேன்.

      • தோழர் போராட்டத்தினுடைய கருத்தை நான் ஏற்கிறேன்.
        மணி என்பவரின் விமர்சனங்கள் பெரும்பாலும் சரியானதாக‌
        இருப்பினும் தனி நபர் தாக்குதலை போன்று உள்ளது.

        அவர் எள்ளல் என்று எண்ணி இடும் பின்ணூட்டங்கள் அனைத்தும்
        அபத்தம்.விமர்சனம் தோழர் ரயாவை நேர்வழிக்கு கொண்டு வருவதற்கு உதவ வேண்டும்.விமர்சனம் கடுமையுடன் இருக்கக்கூடாது என்பதல்ல‌ என் கருத்து,வெறுப்புடன் இருக்கக்கூடாது என்பது தான்.

  54. ரயாகரனை வறட்டுவாதி என்று சொல்கிற‌ மணி
    ரயாகரனை விட பெரிய‌ வறட்டு வாதியாய் இருப்பார்
    போல் இருக்கிறது.
    அவருடைய விளக்கங்கள் ஒவ்வொன்றையும் தாங்க
    முடியலடா சாமி

    உங்களுக்கும் ரயாகரனுக்கும் என்ன வாய்க்கால் பிரச்சனையா
    அவரை இவ்வளவு வெறுப்புடன் தாக்குகிறீர்கள் ?

    • அரசியல் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாத போது எதுவும் முடியாமல் தான் போகும்… ம் என்ன செய்வது இரயாவும் இப்படித்தான் புலம்புகிறார்…. மொத்தத்தில் கணுக்கால் உயரத்துக்கு இரயாபிமானிகளின் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது… அதில் அரசியல் முங்கி, மூச்சடைத்து மரணிக்கும் நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறது…

  55. இந்த விவாதத்தில் ”புலி” பிரச்சனையை தான்டி புதியதாக எதிர்கருத்து வரும் வரை எனக்கும் புதியதாக சொல்ல எதுவும் இல்லை. தோழர் கேள்விக்குறியின் (?) கருத்துக்களுக்கு மாற்றுகருத்தை விரிவாக எழுதி பதில் எழுதும் வேலையிலிருந்து என்னை விடுதலை செய்த தோழர்கள் பிரபாவதி மற்றும் மணி அவர்களுக்கு எனது நன்றிகள்

  56. என்னை நான் அறிவாளி என்று கருதுவதாக நண்பர் சனி கூறியுள்ளார். தன்னை மார்க்சிய லெனிய அமைப்பினை விட அறிவாளி எனக் கருதிக் கொள்ளும் அதி மேதாவி ரயாகரனுக்காக வக்கலாத்து வாங்குகின்றீர்கள் நீங்கள்.. இதனை அவரது ஐந்து கட்டுரைகளையும் படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

    நான்கு பாகம் வரையிலும் தான் ஒரு கம்யூனிஸ்டு என்று நம்பிய ரயாகரனே தற்போதையை 5 வது கட்டுரையில் அதுபற்றிய இந்திய தோழர்களின் கருத்தை அறிய விரும்பி உள்ளார். ஆனால் அமைப்பிற்கு பதிலாக அவரைத் தூக்கிப் பிடிப்பவர்களோ அவரைத்தான் தோழர் என்றும் உண்மையான அமைப்பு அவர்தான் என்றும் கருதுகின்றீர்கள்.

    இப்படி கருதுவதற்கு போராட்டம் தான் அமைப்பை பற்றி நிற்பதாகச் சொன்னதும் உதவுகிறது. தனது மேதமைத்தனத்தைப் பயன்படுத்தி ரயாகரனுக்கு ஆள் சேர்க்கிறார் இவர். இவரிடம் போய் உங்களது பஞ்சாயத்தை வைத்திருக்கின்றீர்கள்.. தெளிவுபடுத்த வேண்டியது போராட்டம் மற்றும் அவரது அனுதாபத்திற்குரிய மார்க்சிய ஆசான் ரயாகரன்தான்..

    • ஏன் ஏன் இப்படி? மேதமைத்தனம், அது இதுன்னு நிறைய எழுதுறீங்க! போராட்டம்! போராட்டம் ன்னு சொல்றீங்க! அவர் வந்து பதில் சொல்லட்டும். அதுவரை பொறுங்க!

    • உங்களுடைய பின்னூட்டங்களை படிக்கும்போது, உங்களை நீங்களே அறிவாளியாக சித்தரித்து எழுதுவதுபோல் தான் தெரிகிறது.
      முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் மகஇக வின் முழக்கங்களே பிராதானமாக அனைவராலும் முழங்கப்பட்டது.

  57. வலைப்பூவில் எழுதுவது பற்றியெல்லாம் தெரிந்திருப்பவர்கள் நிச்சயமாக கொஞ்சமாவது பெரிய படிப்பு படித்தவர்கள்தான். படிக்கத் தெரியாத அப்பாவிகள் அல்ல•. எனவே உங்களை பாமர்ர்கள் என்று தாழ்த்திக்கொள்வது உங்களது துரோகத்தை மறைப்பதுதான்.. அதுனாலதான் சொல்றன்.. இதை ஒரு படிக்காத நபர் பேசலாம்.. நீங்க பேச முடியாது..

    ஒரு சாப்ட்ட்வேர் படிச்சாதான் வேலை இருக்கும்னு முதலாளி சொன்னா படிக்கிறீங்கள்லா.. புரியாட்டி கூட எங்க போனா வேலைக்கு ஆகும்னு தேடிப் போய் படிக்கிறீங்கள்ல்லா.. பொதுமக்களுக்கான விடுதலைக்கான மாஃர்க்சியத்த மட்டும் படிக்க மாட்டீங்க•. எப்போ பாத்தாலும் அமைப்பில இருந்து வந்து ஊட்டி விடணுமாக்கும்..

    இது சொம்பேறித்தனம்.. இப்படி பொது விசய்ம்கிறதுக்காக உழைக்காமல் இருப்பது ஒருவகையில் நடுத்தரவர்க்க நடைமுறைதான்.. உங்களுடைய சோம்பேறித்தனம் தன்னை லெனினை விடப் பெரியவர் எனக் கருதிக் கொள்ளும் ரயாகரனின் பக்கம் உங்களை சேர்த்துள்ளது. இல்ல நாங்கள் பாமர்ர்கள் என்று நீங்கள் சொன்னால் அது உங்களது சோம்பலை மறைக்க முயற்சிப்பதுதான்.

    ஒரு சந்தேகம்.. இத்தகைய நடுத்தரவர்க்க சோம்பேறித்தனத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள் சகிக்கவில்லை. மக்களது வரிப்பணத்தில் படித்து கணிணி சம்பந்தப்பட வேலைக்கு வந்து நன்றாக சம்பாதிப்பவர்களான நீங்களே சோம்பேறியாக இருந்தால் உங்களுக்கு உறுத்தலாக இல்லையா..

    த‌யவுசெய்து உங்களது சோம்பேறித்தனத்தால் சித்தாந்தப்பூர்வமான விவாத்த்தில் பங்கேற்க முடியாமல் இருந்து விட்டு கல்வி மறுக்கப்பட்ட இந்த நாட்டின் கோடானு கோடி மக்களது இயலாமையோடு உங்களது சோம்பேறித்தனத்தை ஒன்றுபடுத்தி கேவலப்படுத்தாதீர்கள்..

  58. 1. நண்பர் ரதியை யாரும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதவதை நிறுத்த சொல்லவில்லை என்பது தெளிவு. அவர் மீண்டும் எழுத பரிசீலனை செய்து இருப்பது வரவேற்க தக்கது.
    2. நண்பர் ரதி எழுதும் அவரின் நினைவுகளை நாம் ஒரு தனிப்பட்ட நபரின் நினைவுகளாக மட்டும் கருதுகிறோமா..? நான் அவரின் நினைவுகளின் மூலம் ஈழ மக்களின் துயரைத்தான் காண முற்படுகிறேன். ஒரு சமூகத்தின் வலிகளை அவரின் எழுத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் எதிபார்க்கிறேன். நண்பர் ரதியின் கடைசி கட்டுரையின் போது ஒரு பெண் புலி போராளியின் உடலின் மீது ஏவப்பட்ட வன்முறையானது ஒரு சமூகத்தின் மீது ஏவப்படும் வன்முறையை குறிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நோக்கில் தான் நான் நண்பர் ரதியின் நினைவுகளை ஒரு சமூகத்தின் நினைவுகளாகவே கருதுகிறேன்.
    3. தோழர் ராயகரன் இரண்டு விடயங்களை வேறு மாதிரி செய்து இருக்கலாம் என்பது என் கருத்து…
    அவர் நண்பர் ரதியின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களையும், வினவின் மீதான விமர்சனங்களையும் தனியாக செய்து இருக்கலாம். இந்த தளத்தில் நண்பர் ரதியின் கட்டுரையின் மீதான விவாதம் நடந்து இருந்தால் , தோழர் ராயகரன் கேள்விகளுக்கு , நண்பர் ரதியை பதில் சொல்ல கடமைப்பட்டவராக ஆக்கி இருக்கலாம்.
    இரண்டாவது, நண்பர் ரதியை , பாசிஸ்ட் என தோழரின் முடிவை அறிவித்து விட்டு பின்பு அந்த முடிவுக்கு வந்ததன் காரணங்களை விளக்கியதை சற்று மாற்றி செய்து இருக்கலாம்.
    4. நண்பர் ரதி இந்த தளத்தில் அவரின் கட்டுரைகளின் மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமை பட்டவராக உள்ளார். அவர் வேறு தளத்தில் அவரின் மீதான வைக்கப் படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் விடுவது அவரின் சுதந்திரம் என கருதுகிறேன்.
    5. வினவு, நண்பர் ரதியின் கட்டுரையில் அறிமுகத்தில் எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈழத்தின் கடமைகளை ஆற்ற நமக்கு இந்த கட்டுரைகள் உதவும் என சொல்லி இருந்தது. ஈழத்திற்காக நாம் இன்று ஆற்ற வேண்டிய கடமைகள்தான் என்ன…

    • ப‌கத்…

      எப்படி ஒரு தனிநபரின் மன உணர்வுகளை சமூக உணர்வாகவே கருதுகின்றீர்கள்..

      ரதியின் எழுத்துக்கு அவ‌ரை எப்படி விள‌க்க‌ம‌ளிக்க‌ வைப்ப‌து என்று ர‌யாக‌ர‌னுக்கு ஐடியா கொடுக்கும் தாங்க‌ள் அவ‌ர் ப‌ற்றிய‌ என‌து விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு இதுவ‌ரை ப‌தில் சொல்ல‌வில்லையே… ஒருவேளை அவ‌ர‌து த‌ர‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் மாத்திர‌ம்தான் விவாதிப்பாரா.. அந்த‌ அள‌வுக்கு ஜ‌ன‌நாய‌க‌வாதியா… இத‌னை அவ‌ருக்கு எடுத்துரைக்காத‌ உங்க‌ள‌து ஜ‌ன‌நாய‌க‌ உண‌ர்வு எப்ப‌டிப்ப‌ட்ட‌து…

      முத‌ல்ல‌ பாசிஸ்டு சொன்ன‌த‌ கொஞ்ச‌ம் மாத்தி சொல்லிருக்க‌லாம் அப்ப‌டின்னு நீங்க‌ நினைத்தால், இராக்ல‌ ர‌சாய‌ன‌ ஆயுத‌ம் னு சொல்லி முடிவ‌ முத‌ல்ல‌யே சொல்லி போர் தொடுத்த‌ புஷ் கூட‌ கொஞ்ச‌ம் மாத்தி செஞ்சிருந்தா அவ‌ரும் ஒரு க‌ம்யூனிஸ்டு அப்ப‌டின்னு ஏத்துக்குவீங்க‌ளா..

      ர‌தியின் க‌ட‌மை பற்றிப் பேசும் தாங்க‌ள், அவ‌ர்ப‌ற்றி க‌ட்டுரை வ‌ந்து 120 பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ந்த‌பிற‌கும் வ‌ராம‌ல் இருக்கும் க‌ட‌மையை ஒரு வார்த்தை கூட‌ சுட்டிக் காட்ட‌ மாட்டீர்க‌ளா.. ர‌திக்கு ஒரு நியாய‌ம் ர‌யாக‌னுக்கு ஒரு நியாய‌மா…

      ஈழ‌த்துக்கு வின‌வின் க‌ட‌மை என்ன‌ என்று கேட்டீர்க‌ளே.. த‌ன்னை ஈழ‌த்து க‌ம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்ளும் ர‌யாக‌ர‌னிட‌ம் அவ‌ர‌து க‌ட்சியின் த‌ற்போதைய‌ திட்ட‌ம் என்ன‌ என்று விள‌க்க‌ சொல்லுங்க‌ள் அத‌ற்கு பிற‌கு பேச‌லாம்…

    • மணி, தனி நபரின் மன உணர்வுகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள அல்லது அறிந்து கொள்ள நினைப்பது என்ன? அவரின் சொந்த வாழ்வின் வழிகளை அறிந்து கொள்வதன் மூலம், நீங்களும் நானும் அவரின் வாழ்வின் நிலை கண்டு பரிதாப உணர்வு கொள்ளப்போகிறோமா? அல்லது, ஈழ போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்களை, கடந்த கால தவறுகளை, மக்களுக்கு எடுத்து உரைப்பத்தின் மூலம் சரியான அரசியல் பாதையில் அவர்களை ஒன்றிணைக்க போகிறோமா?
      அவரின் தனிப்பட்ட வாழ்வின் துயரை, நினைவுகளை முற்போக்கு தளத்தில் அவர் எழுதுவதின் மூலம் வாசகர்களுக்கு வினவும், கட்டுரையாளரும் கொடுக்க விரும்பும் செய்தி என்ன..? இந்தக் கட்டுரை ஈழத்தின் கடமைகளை ஆற்ற உதவும் என்றால் அந்த கடமைகள்தான் என்ன ?

      நண்பர் ரதி அவரை பற்றிய வேறு தளங்களில் வரும் விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிப்பதும், அதனை நிராகரிப்பதும் அவரின் சுதந்திரம். அதே விதி தோழர் ராயகரனுக்கும் பொருந்தும். இங்கு அவரின் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிப்பதும் , நிராகரிப்பதும் அவரின் சுதந்திரம்.

      தோழர் ராயகரன், பாசிஸ்ட் என நண்பர் ரதியை முதலில் அறிவித்து பிறகு விளக்கம் கூறுவது, தவறு என்றே நினைக்கிறேன்.

      • மக்கள் கலை இலக்கியக் கழகம் சில மாதங்களுக்கு முன் ஈழம் பற்றி மூன்று வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள வரலாறு குறைபாடு உள்ளதா.. அதன் அரசியல் விளக்கம் குறைபாடு உள்ளதா…புலிகளின் கடந்தகால்த் தவறுகளும், பின்னடைவிற்கான காரணங்களும் அதில் எடுத்து சொல்லப்பட்டது உங்களுக்கு புரியாமல் இருந்த்தா.. அப்புறம் எதற்காக இவற்றை ரதியின் எழுத்தில் தேடுகின்றீர்கள்.. ம•க•இ.க வெளியீடு குறைபாடு உள்ளது என்றால் அதனை நேர்மறையில் விமர்சனம் செய்யுங்கள்.. அதனை விட்டு ஒரு புலி ஆதரவாளரிடம் போய் அரசியல் சுயவிமர்சனம் இதனை எல்லாம் தேடுவது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா..

        தனிமனித அனுபவங்கள் ஒரு மாதிரிதான்.. அதில் மறைப்பது என்பதை மறைக்கும்போதுதான் பேச வேண்டும். மாறாக நான் விரும்புவதை நீ பேசு எனப் பேசினால் உங்களுக்கும் புலிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.. வாச‌கர்க‌ளுக்கு இருவ‌ரும் கொடுக்கும் ஒரே செய்தி .. விவாதிக்க‌ வாருங்க‌ள் என்ப‌துதான்.. மாறாக‌ அத‌ற்கான‌ ஜ‌ன‌நாய‌க‌வெளியை தொடங்கும் முன்னரே அடைத்து விடாதீர்க‌ள் என்ப‌துதான்..

        வெளியீடுக‌ளில் க‌ட‌மைக‌ள் பேச‌ப்ப‌ட்டுள்ள‌து.. இணைய‌த்திலேயே மூழ்கி இருப்ப‌தால் அவ‌ற்றைப் ப‌டிக்க‌ இய‌லாத‌ உங்க‌ள‌து அவ‌ல‌ம் என‌க்குப் புரிகிற‌து.. என்ன‌ செய்ய
        ஒரு பாசிச‌ ஆத‌ர‌வாள‌ரிட‌ம் காண‌ப்ப‌டும் ஜ‌ன‌நாய‌க‌ப் ப‌ண்பு கூட‌ உங்க‌ளிட‌மோ அல்ல‌து த‌ம்மை ஈழ‌த்துக் க‌ம்யூனிஸ்டு என்று ந‌ம்புகிற‌வ‌ரிட‌மோ இல்லாம‌ல் போன‌த‌ற்கு நான் என்ன‌ செய்ய•. ப‌ராப‌ர‌னே…

        ர‌தி த‌ன்னை க‌ம்யூனிஸ்டு என‌ அறிவித்துக் கொள்ள‌வில்லை.. அத‌னால் அவ‌ர் க‌ட்டாய‌ம் விள‌க்க‌ வேண்டும் என‌க் கோர‌ முடியாது. ர‌யாக‌ர‌னும் அப்ப‌டி சொல்ல‌ட்டும்.. ந‌ம‌க்கென்ன‌ வாய்க்கால் பிர‌ச்சினையா அவ‌ரு பின்னாடியே ச‌ண்டை போட்டுட்டு போற‌துக்கு…

        ர‌யாக‌ர‌னின் த‌வ‌றை ஒத்துக் கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி… நான் சுட்டிக்காட்டிய‌து த‌வ‌றின் ஒரு ப‌குதியைத்தான். பெரிய‌ ப‌குதி இன்ன‌மும் பேச‌ப்ப‌ட‌வில்லை… த‌ன‌து ப‌குதி 4 க‌ட்டுரையில் ர‌தி ஏன் பாசிஸ்டு என்ப‌த‌ற்கு ஆதார‌ம் த‌ருவ‌தாக‌ச் சொன்ன‌ ர‌யாக‌ர‌ன் ப‌குதி 5 ம் எழுதி விட்டார் … இன்ன‌மும் ஆதார‌ம் எதுவும் த‌ர‌வில்லை.. ஒருவேளை என‌க்கு அவ‌ர் எழுதுவ‌து அவ்வ‌ள‌வாக‌ எளிதில் புரியாம‌ல் இருப்ப‌தால், அவ‌ரை ஆத‌ரிக்கும் தாங்க‌ள் அவ‌ற்றில் காண‌ப்ப‌டும் ஆதார‌ங்க‌ளை எடுத்துக் காட்டினால் ந‌ன்றாக‌ இருக்குமே…

        ந‌ம‌து க‌ட‌மைக‌ள் என்ன‌ என்று கேட்கும் நீங்க‌ள் முத‌லில் அத‌ற்கு க‌ட‌மைப்ப‌ட்ட‌ ர‌யாக‌ர‌னிடம் ஈழ‌த்துக்கு இனிமேல் என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌க் கேட்டீர்க‌ளா… அல்ல‌து அத‌னைப்ப‌ற்றி அவ‌ராக‌வே என்ன‌ எழுதி உள்ளார்.. ந‌க்கீர‌ர் வேலை ம‌ட்டுமே செய்யும் ந‌ப‌ர்க‌ள் அல்ல‌ க‌ம்யூனிஸ்டுக‌ள்..

  59. //..ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள்..//

    //ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய நாம்,…//

    //அதை அவர் திரித்துப் புரட்ட, கம்யூனிஸ்டுகள் கைகட்டி இருக்கக் கோலும் சர்வதேசியம்//

    //இதை ஈழக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், எங்கள் தோழர்களின் மேலான பாசிசப் படுகொலைகளை ஊடாகவே, இதைக் கற்று உணர்ந்தவர்கள்.//

    //ஈழத்து கம்யூனிஸ்களாகிய எமக்கு “வரடடுவாதிகளாகிய” எமக்கு பதிலாளிக்கிறார்.//

    //நாங்கள் கம்யூனிஸ்டுகள்.//
    //

    //தனி ஒரு மார்க்சிஸ்டைக் கூட விட்டுவைக்காத பாசிச சூழலில் இருந்து போராடிய எம்மைப் பார்த்து//

    வினவு பற்றி தனது 5 வது பகுதி கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது இது.. தன்னை கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொள்கிறார்க ரயாகரன். அது சரியா என அவரோ அல்லது அவரை ஆதரிப்பவர்களோ முன்வந்து விளக்க வேண்டும். தன்னைப் பற்றி விமர்சனம் வரும்போது அரங்கத்திற்கு வந்து விளக்கமளிக்க கடமைப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். உண்மையில் ரயாகரன் தன்னை கம்யூனிஸ்டு எனக் கருதிக் கொண்டு இருந்தால் சாமானியர்களான எமது இந்த ஐயத்திற்கு விளக்கமளித்தால் தொடர்ந்து விவாதம் முன்னேறும் எனக் கருதுகிறேன்…

  60. ஒரு வெள்ளிக்கிஇழைமை இரவு. அடுத்த நாள் விடுமுறையை எண்ணி சிறிது நேரம் அதிகமாக டி.வி முன் சேனல் மாற்றி சேனல் பார்த்த கண்களில் சோர்வு. விளக்குகளை அணைத்து துயில் கொள்ளும் நிசப்தத்தில் ஒலிக்கும் அந்த பாடல்: ‘தாயே… என்ன பிழை செய்தோமடி தாயே…’ மக்கள் டி.வியில் ஒளிபரப்பான பாடல். களைப்புற்ற கண்களில் துஉக்கத்தை கொண்டு வர மறுக்கும் பாடல். இப்பாடலின் வலியை வினவில் வெளியான ரதியின் ‘ஈழ நினைவுகள்’ கட்டுரைகள் ஏற்படுத்தியதை வினவின் வாசகர்கள் அனைவரும் உணர்ந்திருப்போம்.
    ஜஸ்வந்த் சிங் புத்தகத்துக்கு மோடி தடைவிதித்த வேளையில், ரயாகரன் குறுக்கீட்டில், வினவில் ரதியின் கட்டுரை நின்று போனது என்ன ஒற்றுமையோ தெரியவில்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு அலையும் ஒரு சராசரி மனுசியை பாசிஸ்ட் என்று ரயாகரன் தூற்றியிருப்பது அவரின் உள்ளத்தின் ஆழத்தில் கருக்கொண்டிருக்கும் வன்மத்தின் வெளிப்பாடு. ஈழ விஷயத்தில் ரயாகரனுக்கு ஒரு பார்வையும், கருத்தும் இருப்பதை போலவே புலி ஆதரவாளர்களுக்கும் இருக்கும் என்பதை மறுப்பது ஜனநாயக விரோத செயலன்றி ேறென்ன. ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற மாவோ கூற்றுக்கு வென்நீரை ஊற்றும் திருப்பணியை ரயாகரனே மேற்கொள்ளலாமா? மருதையனும் தோழர், ரதியும் தோழரா? என்ற அதிமேதாவித்தனமான கேள்வி தான் ரயாகரன் கற்றுத்தருகின்ற கம்யூனிசப் பண்பாடா? ஆட்டோ சங்கரை மகாத்மா என்று அழைப்பதற்கு தே.பா.சட்டத்தை பரிந்துரை செய்யும் தங்கபாலுவின் உதார் தான் ரயாகரனிடம் தெரிகிறது. தமிழ் நாட்டில் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்கள் பெயர்களில் பெரும்பாலானவை இந்து சாமிப் பெயர்கள். இந்து சாமிப் பெயர்களை கம்யூநிச்ட்களும், தி.கவினரும் வைக்கக் கூடாது என்று ராம கோபாலன் கூட சொல்லிக் கேட்டதில்லையே.
    ரயாகரனிடம் ஒரு natural flair இல்லாததை அவர் எழுத்துக்களை படிக்க மெனக்கெடும் யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். சலிப்பூட்டும் வறண்ட சித்தரிப்புக்கள் அவை. R.K நாராயணனின் ‘Astrologer’s Day’ இல வரும் ஜோதிடன், முறையாக ஜோதிடத்தைக் கற்றவநல்ல. ஆனால் பத்து நிமிடத்தில் தன் முன் வந்து அமரும் வாடிக்கையாளனின் பிரச்சினையை அறிந்து திஇர்வு சொல்லும் தேர்ச்சியை பெற்றிருப்பான். நீண்ட பயிற்சியிநூடாக இந்த கலையை கைவசப்படுத்தியிருப்பான். ரயாகரனின் வர்க்கப் பார்வையும் இது போன்ற ஒன்று தான். நீண்ட பயிற்சியில் கைக்கூடிய எழுத்து முறை. அவ்வளவே. புலிகள் மீதும், புலி ஆதரவாளர்கள் மீதும் வைக்கப்படும் அரசியல் ரீதியான விமர்சனங்கள் என்பது ஒரு வகை. புலிகள், புலி ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி அதில் அடையும் கிளுகிளுப்பு [voyeuristic pleasure] இரண்டாம் வகை. ரயாகரன் இதில் இரண்டாம் வகையைஸ் சேர்ந்தவர்.
    ரயாகரநின் கடிதம் பிரசுரமானவுடன் ஒரு நண்பர் தன் கருத்துரையில், மிகப்பெரிய பாவத்தை ரதி செய்து விட்டதை போன்று, ஊரில் பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து செய்யும் தோரணையில் போராட்டம்’, ‘அசுரன்’, ‘ஏகலைவன்’, ஆகியோர் உடனே வர வேண்டும் என்று கூவினார். வந்தவரில் ஒருவர் ரதி விளக்கமளிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனார். உயிர்மை இதழில் சாரு நிவேதிதாவை எதிர்த்து ஒரு கருத்தை உங்களால் பதிக்க முடியாது. தீராநதியில் வாசந்திக்கு எதிரான சிறு முனகலும் உடனே நசுக்கப்படும். வினவில் எழுத வந்த விருந்தாளி அவமானப்படுத்தப்பட்டுள்ளது சோகமே. ரயாகரனின் வரட்டுவாதம் பற்றி வினவில் கட்டுரை வரவிருக்கிறது. இது குறித்து ஒரு ஈழத் தமிழர் என்ன நினைத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். ‘ஈழத் தமிழரக்கு ராஜபக்சே செய்த திஇங்கை விடவா ரயாகரன் செய்து விட முடியும்’, என்று மெலிதாக புன்னகைக்கலாம். வலிகளையும், காயங்களையும் இயல்பாக்கி நகர்வதில் அல்லாமல் வேறு வழி இருப்பதென்ன?

    • நன்றி சுகதேவ்.. புலி ஆதரவாளர்கள் மற்றும் புலி எதிர்ப்பாளர்கள் இடையில்தான் இந்த விவாதம் நடப்பது போல சித்தரிக்க முயன்றவர்களிடமிருந்து விவாத்த்தைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி

  61. //ரயாகரனைப் பொறுத்த வரை அவர் சிறிய கட்டுரைகளாக எழுதுவது எல்லாம் ஒரு வகையான புலம்பல்களே. கோபம் கொண்ட வயோதிபர் ஒருவரிம் புலம்பல் போல. இது தவிர அவர் எந்தத் தத்துவார்த்தக் கட்டுரையும் எழுதியது கிடையாது. ஒரு விடயத்தைத் தத்துவார்த்த ரீதியாக ஆராயும் திறமையும் அறிவும் அவரிடம் இல்லை. மார்க்சியத்தில் பற்று உண்டு. ஒரு பிரச்ச்னை தொடர்பாக ஆராயவோ அது குறித்து முடிபு செய்யவோ அவரால் உடனடியாக முடியாது எனினும், பகிரதப் பிரயத்தன்ப் பட்டு நீங்கள் புரிய வைத்தால் ஏற்றுக்கொள்வார். இரண்டு விடயங்கள் முக்கியம்.
    1. ரயாகரன் அரசியல் ரீதியாக வளர்ந்து கொள்வதும், சுய விமர்சன அடிப்படையைல் தன்னை நோக்குவதும்.
    2. அவரோடு ஒத்து வரக்கூடிய தோழர்கள்
    இதை அவருக்குப் புரிய வைப்பதும்.//santo

    அவசியம் என்றே கருதுகிறேன்!!!

  62. ரதியை பேச விடாமல் தடுக்கும் மார்க்சிய லெனிய ஆய்வாளர்களே … அறிவு நாணயத்தோடு பதில் சொல்லுங்கள்…

    1. முத்துக்குமாரின் ஊர்வலத்தில் ம•க•இ.க கலந்துகொண்டு தமது முழக்கங்களை மக்கள் மன்றத்தில் வைத்த்து. அந்த ஊர்வலத்தில் வந்த பல அமைப்புகளும் ம•க•இ.கவின் புலிகள் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல•. மாறாக ரதியை விடவும் தீவிரமான புலி ஆதரவாளர்கள்.. அதில் கலந்து கொண்டது அமைப்பின் தவறு என இதுவரை குறைந்தபட்சம் இணையத்தில் கூட ரயாகரனோடு இப்போது குதிக்கும் பலரும் எழுதவில்லையே ஏன்…

    2. பாசிசம் என்றால் என்ன என்று உலக சர்வதேச கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்திற்கும் பாடம் எடுத்திருக்கிறார் திருவாளர் ரயாகரன். அதில் காணப்படும் உள்முரண்பாடுகளே அவரது ஆளுமையை படம் பிடித்துக் காட்டுகிறதே.. ஆசான்களிடமெல்லாம் போய் அவர்களை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்… கொஞ்சம் படித்து விட்டு பாசிசம் என உங்களுக்கு மா.லெனிய வகுப்புகளில் இதுதான் சொல்லித் தந்தார்களா என ஞாபகப்படுத்திப் பாருங்கள்…

  63. புலிகள் மீதான தனிப்பட்ட வன்மத்தைத்தான் வரலாறு என்றும், அரசியல் என்றும் வெளிப்படுத்துகிறார் ரயாகரன். இதனை அவரது எழுத்துக்களில் போய் ஆய்ந்து அறிய முடியுமா என்று பார்த்தேன்.. அது ரயாகரனுடன் ஒப்பிடும்போது சாமானியனான எனக்கு சாத்தியமாகத் தெரியவில்லை.

    என்ன செய்ய விலாங்கு மீன் தானா வந்து மாட்டுது.. தன்னை வறட்டுவாதின்னு சொல்லி விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக, அது அவரது மனதை புண்படுத்தியதால் வினவு தளத்தின் இந்தக் கட்டுரையிலிருந்து பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்திருக்கிறார். மாறாக இதற்கு பதிலாக ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றை தனது தளத்தில் எழுதி இருக்கிறார். தனது சொந்த மனம் புண்பட்டதற்காக பொது ஈழமக்கள் குறித்த விவாத்த்தில் பங்கேற்க மாட்டேன் என்கிறார். இவரைத்தான் ஈழ வரலாறு எழுதச் சொல்ல வேண்டும் என்று சிலர் பரிந்துரை செய்தார்கள்..

    இந்த வெட்டி அரட்டையிலிருந்து தாமும் விலகி தமது அடிப்பொடிகளையும் விலகச் சொல்லி ஈழத்து விடுதலைக்கு தனது ரயா லேபரட்டரியில், ரயாகரனால் கண்டறியப்பட உள்ள பின் ஆண்டி புலியிசம் என்ற த்த்துவத்திற்காக ரயாவின் மாணவர்கள் தீவிரமாக படித்து விவாதித்துக் கொண்டிருக்க கூடும். புரட்சித்தலைவிக்கு எதிராக நடைபயணம் போனார் அவரது அன்பு அண்ணன். ஒருநாள் மிலிட்டரி டிரஸ்ல நடந்தார். சில நிருபர்கள் கேட்டார்கள்.. உங்களது நடைபயணத்தை மா சேதுங் கின் நீண்டபயணத்தோடு ஒப்பிடலாமா…

    அதிர்ந்த வைகோவின் கண்களை மறைத்திருந்த்து எம்ஜிஆர் கூலிங்கிளாஸ். சமாளித்துக் கொண்டே.. அதுக்காக என்ன அந்த மாமனிதர் மாசேதுங் உடன் ஒப்பிட்டு விடாதீர்கள் என்றார். அதுவரை மிக நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த மிலிட்டரி வட்டத்தொப்பியை கொஞ்சம் சரித்துக் கொண்டார். லிப்ஸ்டிக்கை கொஞ்சம் துடைத்துவிட்டு, சிரித்துப் பேசியதைக் குறைத்துவிட்டு, விரைப்பாக நடக்க ஆரம்பித்தார்..(இந்த இடத்தில் மாவோவின் நீண்டபயணத்தின் கடைசித் தருணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்). மறுநாள்தான் அந்தக் கடைசிப்பாய்ச்சல் நடந்த்து. அதாங்க ரோட்ல போனாத்தான கைது பிளாட்பார்ம்ல போனா என்ன பண்ணுவ அப்படினு விடியக்காலம்பற நாலுமணிக்கு போலீச திணறவைத்து அண்ணா சமாதிக்கு வந்து சேந்தாரு..

    என் மூள இருக்கு அது வீணாப் போனதுங்க்.. சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வருது.

  64. ரதியை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அனுதாபி ஒருவரின் கட்டுரையை வினவில் எதிர்பார்க்கலாமா?

    //வினவு கூறுவது போல், புலி அனுதாபிக்கு பதில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி ஒருவரை எடுங்கள். அவர் இந்துவின் அவல நினைவுபற்றி, வினவு தளத்துக்கு பதில் தமிழரங்கத்தில் எழுதுகின்றார் என்று வையுங்கள். அவர் சொல்லுகின்றார் ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு “மதிப்பும் மரியாதையும்” உண்டு என்கின்றார். இந்த ஆர்.எஸ்.எஸ் நிலையை “யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.” என்கின்றார்.

    அவர் கூறுகின்றார் முஸ்லீம் “பயங்கரவாதிகளால்”, “வந்தேறுகுடிகளால்” இந்துகள் பாதிக்கப்பட்டனர் என்கின்றார். பம்பாய் குண்டுவெடிப்பு முதல் பொது மக்கள் மேலான தாக்குதலைக் காட்டி, இந்துகளுக்கு நடந்த துயரத்தைச் சொல்லுகின்றார். “வந்தேறு” குடிகளான முஸ்லீம்களால் தான், இந்துக்களுக்கு இந்த அவல நிலை என்கின்றார்.

    ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதினால், இது ஆர்.எஸ்.எஸ் பற்றி விவாதிக்குமிடமில்லை என்கின்றார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் “மீது எப்பொழுதுமே எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்ற மதிப்பும் மரியாதையும் உண்டு.” என்கின்றார். இதை மீறி விவாதித்தால், தமிழரங்கமாகிய நாங்கள் “மார்க்சிய” விளக்கம் கொடுத்து தடுக்கின்றோம். அவர் தன் பக்க சார்பில் நின்றுதான் எழுதுவார். எப்படி சார்பில்லாமல் எழுத முடியும். ஆர்.எஸ்.எஸ் ஜ உணராத மக்கள்தான், இந்துக்களாக பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே ஆர்.எஸ்.எஸ் அனுதாபியை முழுமையாக சொல்லவிடுங்கள். யாரும் இதைக் குழப்பக் கூடாது. அதை நாங்கள் விடமாட்டோம். ஏனென்றால், நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் தவறுகளை “பொறுமையாக விவாதம்” மூலம் கற்றுத் தர முனைகின்றோம். இதை இந்து பாசிசம் தனது பாசிச பிரச்சாரம் செய்வதாக கருத வேண்டாம். அவர் இந்து பாசிசத்துக்கு பிரச்சாரம் செய்வதாக கூற, உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு. அவர் பாசிட்டல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி தான். நாங்கள் சொல்வதை கேட்கவேண்டும்.

    முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்து பாசிசத்தை மூடிமறைப்பதையோ, இந்தியாவில் மூஸ்லீம்கள் மட்டும் தான் “வந்தேறு குடிகள்” என்று திரிப்பதையோ, பாசிசமாக பார்க்க முடியாது. இது “விவரப்பிழை”, “ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு”, இதை வைத்துக்கொண்டு, நாம் எப்படி ஆர்.எஸ்.எஸ்சின் இந்து பாசிசம் என்று சொல்லமுடியும்.

    அப்படி நீங்கள் பார்த்தால், நாங்கள் அதை வரட்டுவாதம் என்போம். அவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி, இந்து பாசிட் அல்ல. இதை உங்களால் நிறுவ முடியுமா? என்போம்.//

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6184:rathyvinavu&catid=277:2009

    • கரெக்ட் தான் நைனா. ஆனாலும் ஒங்க ஆளு புலிபுலின்னு அலற்றதுல வேலை இல்ல

    • //ரதியை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அனுதாபி ஒருவரின் கட்டுரையை வினவில் எதிர்பார்க்கலாமா? //

      இந்துத்துவ வெறியர்கள் கூறும் causeவும் ஈழத் தமிழர்களின் causeவும் ஒன்று என்று தெக்கான் கருதுகிறார். வாழ்த்துக்கள்.

      • பெல்லுக்கு பெல்லு கட்டுறவன், இந்துவெறியர்கள் இருந்தால் தமிழ் இனவெறியர்கள் இருக்கமாட்டார்களா? அந்த தமிழ் இனவெறியர்கள் தான் ரதி போன்ற பாசிச புலி அபிமானிகள். உங்கள் வாதமே தப்பு. இந்த்துக்களும் ஈழத்தமிழரும் என்று கூறுங்கள். அல்லது இந்து வெறியர்களும் தமிழ் வெறியர்களும் என்று கூறுங்கள். ஒழுங்காக தமிழ் கற்ற பின்பு விவாதிக்க வாருங்கள்.

  65. பாசிச ரதியின் பொய்கள். //இதுவரை நான் என் கட்டுரைகளில் புலிகளைப்பற்றி எந்தவொரு விடயமும் எழுதியதாக நினைக்கவில்லை.// அப்படீங்களா? இது யாரு எழுதினா? ////ராணுவம் முகாமிலிருந்து வெளியேற முயற்சிக்கும். ஆனால், விடுதலைப்புலிகள் அதை முறியடிக்க முனைவார்கள். // இதற்கு நான் அளித்த விளக்கம் //ரதி குறிப்பிடும் காலத்தில் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) விடுதலைப் புலிகள் மட்டும் களத்தில் நிற்கவில்லை. TELO, PLOT, EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் சேர்ந்து நின்று இராணுவ வெளியேற்றத்தை முறியடித்தார்கள். விடுதலைப் புலிகள் பதவி அதிகார வெறியில் மற்றைய விடுதலை இயக்கங்களை இயங்க விடாமல் தடை செய்தனர். மற்றைய இயக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சண்டையிடாமல் சரணடைந்த போராளிகளை காட்டுமிராண்டித்தனமாக யாழ்ப்பாண தெருக்களில் உயிரோடு கொளுத்தினார்கள். புலிகளின் இனப்படுகொலைக்கு தப்பிப் பிழைத்த போராளிகள் எதிரியான இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். யாழ்ப்பாணத்தில் போராளிகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் இராணுவம் யாழ் குடாநாட்டை கைப்பற்றியது. ரதிக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று மறைக்கிறார்.// இதனை ரதி இன்று வரை மறுக்கவில்லை.

  66. ஐயா Tecan,

    எதையாவது வெட்டி, ஒட்டி நீங்கள் நினைத்தது போல் மாற்றாதீர்கள். நான் உயர்தர பரீட்சை எழுதிய சில காலங்களில் இந்தியா சென்றேன் என்று சொன்னேன். எந்த வருஷம் பரீட்சை எழுதினேன் என்று என் பெறுபேற்று தாளை வினவு தளத்தில் இணைக்கவா முடியும். அதே பதிவில், நான் மற்றவர்களுக்கு எழுதிய பதில்களையும் படியுங்களேன்.

    ஒன்று செய்யுமென், நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன். என்னுடைய “Autobiography” யை நீரே எழுதிவிடுமென்.

    • பாசிச ரதியின் பொய்கள். 1986-1987 பின் “சில நாட்களிலே” ஈழத்தில் இருந்ததாக கூறியதை அடிப்படையாக கொண்டு நாம் எழுதியதை மறுத்து பினனோட்டம் போட்டவர், அதைத் திரித்து தற்போது “சில காலம்” அங்கிருந்ததாக தன் கட்டுரைக்கு ஏற்ப திரித்துக் கூறும் அவர், புலிகளால் மக்களுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள மறுப்பது எதனால்? அவர் ஒரு புலிப் பாசிட் என்பதால்தான்.

      ரதி பாசிட் என்று நாம் சொன்னது அதிர்ச்சியாக இருந்தாக குறிப்பிடுகின்றார். ரதி தான் ஒரு பாசிட் இல்லை என்றால், என்ன செய்திருக்க வேண்டும். புலிப் பாசிசத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்திருக்கவேண்டும். அதை அம்பலப்படுத்தி, எழுத முனைந்திருப்பார்.

      பாசிசத் திமிருடன் பதிலளிக்கும் அவர், தான் பாசிட் அல்ல என்றால் பாசிசத்தைப் பற்றி எழுதியிருக்க முடியும். பாசிட் எப்படி பாசிசத்தைப் பற்றி எழுத முடியும்.

      ஈழத்து பாசிட்டுகள் எதை எப்படி தங்கள் சொந்த அரசியலாக முன்னெடுக்கின்றனரோ, அதையே ரதி முன்வைத்தார். இதை பாசிசமல்ல என்று சொல்லும் எவரும், ஈழத்தில் பாசிச வரலாற்றையும் அதன் அரசியல் பிரச்சாரத்தையும் அறியாதவர்கள். அதைப் பற்றிய அரசியல் தெளிவற்றவர்கள் என்பது இங்கு மிகத் தெளிவானது.

      மறுபக்கத்தில் இது பாசிசமல்ல என்றால், இந்த விடையத்தில் எது பாசிசம்; என்பதை நீங்கள்தான் நிறுவ வேண்டும். இதை மறுத்து இதுதான் பாசிசம், ரதி சொன்னதல்ல என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6186:rathyvinavu2&catid=277:2009

  67. பாசிச ரதியின் பொய்கள். //நான் உயர்தர பரீட்சை எழுதிய சில காலங்களில் இந்தியா சென்றேன் என்று சொன்னேன்.// ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். // பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன். ஈழத்தில் நான் எவ்வளவையோ இழந்தாலும், இது என்னை அதிகம் பாதிக்கும் விடயங்களில் ஒன்று.// நண்பர்களே பாசிச ரதியின் பொய் பித்தலாட்டங்களை அறிந்து கொள்ள இவ்வளவு காலமா?

  68. யாராவது ரதியை விமர்சித்தால் ஓடோடி வந்து காப்பாற்றும் வினவு ரதி கூறும் அவதூறுகளை கண்டிப்பதில்லை. பாசிச ரதியின் அவதூறுகள். //நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கு உங்கள் தளத்தை களமாக பயன்படுத்தவில்லை.// அப்படீங்களா? இது யாரு சொன்னா? //தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம்.//
    Rathi
    Posted on August 27, 2009 at 10:45 pm //

  69. தோழர் ஏகலைவன் வினவின் முந்தைய கட்டுரையில் பின்வரும் பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதில் எனக்கு முழு ஒப்புதல். ஒரேயொரு விசயம் தவிர்த்து.

    இன்றைக்கு ஈழ மக்களின் அரசியல் தலைமையற்ற அவலநிலையும், எதிர்காலம் சூன்யமாய் விரிந்துகிடக்கும் நிலையும் குறித்து விரிவாக பேச வேண்டிய சூழலில் ரதி என்ற புலி ஆதாரவாளர் வினவு தளத்தில் எழுதுவது குறித்து நடக்கும் இந்த விவாதம் தனது எல்லையை கடந்து தேவையற்ற விமர்சனங்கள், அவதூறுகள் என்று சென்று கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தேவையற்றது.

    மயிர் பிளக்கும் அளவு இதில் விசயம் எதுவும் இல்லை என்பதே எனது கருத்து(ஏகலைவன் கூட அவ்வாறே சுட்டுகிறார்). அப்படி ஏதேனும் உருப்படியாக இருக்குமெனில், அது ஒருவேளை தோழர் ராயகரன், வினவு உள்ளிட்ட தோழர்கள் தமது பல்வேறு அனுகுமுறை சார்ந்த விசயங்களில் சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கலாம் என்ற அம்சமாக இருக்கலாம்.

    ரதியை பேச் வைத்து அதனூடாக அவரது புலி அரசியலை அம்பலப்படுத்துவது சரியாக இருக்கும். புலி அபிமானிகள் எல்லாரும் புலி பாசிஸ்டுகள் அல்ல என்ற வினவின் கருத்தின் அடிப்படையில் தனது ஒரு வாதத்தை வைக்கிறார் தோழர் இராயகரன். ஆனால், எவ்வாறு பாசிஸ்டு அல்லாத பெரும்பான்மை புலி ஆதரவளர்களின் மயக்கத்தை களைத்து வெளிக் கொண்டு வருவது என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

    வினவு மையமாக பேசும் விசயமும் இந்த பிரச்சினைதான். தோழர் ஏகலைவன் சுட்டிக்காட்டுவதும் அதைத்தான்.

    தனது 4வது பகுதியில் ரதியின் கட்டுரையில் இழையோடும் வரலாற்று திரிபு குறித்து சுட்டிக் காட்டும் தோழர் இராயாகரன் அதனையே புலிப் பாசிசமாக கருதுவது தவறு என்று கருதுகிறேன். இந்த அளவுகோலின் படி பார்த்தால் புலி ஆதரவாளர்கள் அனைவருமே புலி பாசிஸ்டுகள் என்றே எளிதில் முடிவு செய்யலாம். மாறாக, ரதியின் கட்டுரையை அம்பலப்படுத்தி அவரது கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தி அவரை நிர்பந்திப்பதன் மூலமாகவே நாம் சரியான அரசியல் கருத்துக்களை பரந்துபட்ட வாசகர்கள் மத்தியில் எடுத்துச் செல்லலாம்.

    தோழர் சிறி, தோழர் ரயாகரன் இருவரும் இந்த அம்சத்தில் பெரிதாக முயற்சி செய்யவில்லை. தோழர் சிறி மட்டும் அந்த அம்சத்தில் எழுதினார். தோழர் வினவும் இந்த அம்சத்தில் தனது மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவோ அல்லது ரதியின் கருத்துக்களை எச்சரிக்கையுடன் பரிசீலித்து அதனை விமர்சிக்கவோ முயலவில்லை. குறைந்த பட்சம் புலி பாசிசம் குறித்து பேசும் தோழர்களை விவாதம் செய்ய ஊக்குவித்து அழைத்திருந்திருக்கலாம். ஆயினும் வினவு இந்த அம்சத்தில் எதிர்மறையாகவே செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதனை தோழர் ரயாகரன் சரியாகவே சுட்டிக்காட்டி வினவை விமர்சித்துள்ளார்.

    ஈழத்தின் அவலம் குறித்து பிற பகுதியில் உள்ளோர்க்கு ரத்தமும் சதையுமாக அறிமுகப்படுத்தும் முகமாகவும், அதே நேரத்தில் புலி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு கருத்து போராட்டத்தை நடத்துவதற்கான ஒரு முகாந்திரமாகவும், இதனூடாக புலி அரசியலின் அவலத்தை கேள்விக்குள்ளாக்கி புலி ஆதரவாளர்கள் மத்தியிலேயே கொண்டு செல்லும் வாய்ப்பாகவும் பல்முனை நோக்கில் இந்த கட்டுரை தொடரை நாம் பய்னபடுத்தியிருந்திருக்க முடியும்.. தோழர்கள் சிறிது நிதானமாக இந்த முரன்பாட்டை அனுகியிருந்தால். ஆயினும் அவ்வாறு நடக்கவில்லை….

    ஏகலைவனின் பின்னூட்டம்:
    //தோழர் விடுதலை,

    என்னைப் பொருத்தவரை இது மிக மிக மேலோட்ட மான முரண்பாடுகளை மையப்படுத்தி நடத்தப்படுகிற விவாதமாகவே கருதுகிறேன். இருப்பினும், இந்த முரண்பாடும், அதன் மீதான விவாதமும் மிகமிக அவசியம் என்றே கருதுகிறேன். புலிப்பாசிசத்தைக் கண்டிப்பதிலும் சிங்கள பேரினவாத அயோக்கியத்தனங்களைக் கண்டிப்பதிலும், ஈழ மக்களின் நியாயமான சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பதிலும் தோழர் இரயாகரனின் தளத்திற்கும் வினவிற்கும் எந்த முரண்பாடுமில்லை. இது எல்லோருக்கும் தெரியும்.

    தோழர் ரதியின் எழுத்துக்களில் பக்கச் சார்பு இருக்கிறது. இதோ என்று ஆனித்தரமாக நிறுவி விவாதிக்க முடியாத குறைபாடு தோழர் இரயாவிடமும் இருக்கிறது. ’புலி அபிமானிகள்’, ’புலி ஆதரவாளர்கள்’ என்பதை நாம் கற்பனையில் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காட்டிலும் வினவு கோரியிருப்பதைப் போல ரதி, தனது புலியாதரவுக் கருத்தை வெளிபப்டுத்திய பிறகு முடிவு செய்து கண்டிப்பதுதான் சரி என்பது என் கருத்து.

    எனினும் இம்முரண்பாடுகள் விவாத களத்தில் நின்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் ரதி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து வேடிக்கை பார்ப்பது சரியல்ல. இது முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தி நடைபெறுகின்ற விவாதம். இது குறித்து தனது கருத்துக்களை விரிவாகவும், உடைத்து வெளிபப்டையாகவும் தோழர் ரதி எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இதைத் தவிர என்னிடம் இப்போதைக்கு பதில் ஒன்றும் இல்லை.

    தோழமையுடன்,
    ஏகலைவன்//

    • தோழர் அசுரன் அவர்களின் வினவு மீதான விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதாவது வினவு ரதியின் கட்டுரையை பரீசீலித்து எச்சரிக்கை செய்யவில்லை என்பது. காரணம் ரதி எச்சரிக்கை செய்யுமளவுக்கு தவறாக எழுவும் எழுதவில்லை. எந்த ஒரு ஈழத்தமிழரிடத்திலும் நீங்கள் கேட்டால் சொல்லப்படும் பொதுவான விடயங்களைத்தான் எழுதியிருந்தார். வினவும் ஒரு வாசகர் தகுதியிலிருந்து அவரை விமர்சனம் செய்து வந்தது. தவிர இதற்கு முன்னரும் ஈழம் தொடர்பான கட்டுரையில் ரதி அவர்களுடன் பல விவாதங்களை வினவு, ஆர்.வி, தெக்கான், கலகம், விடுதலை, சூப்பர் லிங்க்ஸ் உள்ளிட்ட தோழர்கள் இங்கே நடத்தியிருக்கிறார்கள். இதிலெதிலும் இரயா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      மேலும் புலிப்பாசிசம் விமர்சனம் செய்யும் இரயாகரன் தானானாகவே முடிவுசெய்து விவாதத்திலிருந்து (ரதி எழுதிய முதல் பகுதி, பார்க்க அரடிகட் பின்னூட்டம் மேலே) விலகிக்கொண்டார். அப்போதே அவரது விமர்சனம் ரதி ஒரு புலி என்பதும் வினவு புலிக்கு ஆதரவு என்பதும். மேலும் அவர் வினவுக்கு எழதிய கடிதத்தை பார்த்தால் அதிலிருந்து தெளிவாக அவர் எந்த ஒரு விவாதத்துக்கும் தயாரில்லை என்பது புலப்படுகிறது.

      புலிப்பாசிசப் பிரச்சனையிலிருந்து வினவு தளத்தின் மீதான விமர்சனமாக அவர் இந்த பிரச்சனையை மாற்றி அதில் அவர் வெற்றியும் கண்டுவிட்டார். அவர் எழுதிவரும் போக்கை கவனித்தால் இது ரதியை பற்றிய விமர்சனம் எனும் போர்வையில் நமது அமைப்பை விமர்சிக்கிறாரோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நமது அமைப்பு பங்கேற்றதை அவர் விமர்சித்த்து இந்த பிர்ச்சனையின் துவக்கம், நமது தோழர்கள் சூப்பர்லிங்க்ஸ் நீங்கலாக யாரும் அவருக்கு சரியான எதிர்வினையாற்றவில்லை. அதை அவர் பலவீனம் என்று புரிந்து கொண்டாரோ? தெரியவில்லை.!

      அவருடைய இந்த போக்குக்கு காரணமாக நான் கருதுவது அரசியலைக்காட்டிலும் அவரிடத்தில் தனிமை தோற்றுவித்திருக்கும் ஒரு சுய பச்சாதாபம் அதிமாகிவருகிறது, அதனால்தான் நடுநிலை என்னு ஒன்று இல்லை என்று நான் மற்றும் வினவு செய்த விமர்சனத்தை அவர் மிகவும் தனிப்பட்ட (personal) முறையில் எடுத்து கொண்டு எதிர்வினையாற்றினார் . இப்போதும் அவர் பதில்களில் தெரிவது அதுதான். அவரை பாதுகாக்க நினைக்கும தோழர்கள் அவருக்கு பெரிய தீங்கிழைக்கிறார்கள் என்பது தான் என் கருத்து .

      தோழர் கலகம், உங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். இணையத் தொடர்பு எப்போதாவதுதான் கிடைக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும்

  70. //தோழர் சிறி, தோழர் ரயாகரன் இருவரும் இந்த அம்சத்தில் பெரிதாக முயற்சி செய்யவில்லை. தோழர் சிறி மட்டும் அந்த அம்சத்தில் எழுதினார். தோழர் வினவும் இந்த அம்சத்தில் தனது மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவோ அல்லது ரதியின் கருத்துக்களை எச்சரிக்கையுடன் பரிசீலித்து அதனை விமர்சிக்கவோ முயலவில்லை. குறைந்த பட்சம் புலி பாசிசம் குறித்து பேசும் தோழர்களை விவாதம் செய்ய ஊக்குவித்து அழைத்திருந்திருக்கலாம். ஆயினும் வினவு இந்த அம்சத்தில் எதிர்மறையாகவே செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதனை தோழர் ரயாகரன் சரியாகவே சுட்டிக்காட்டி வினவை விமர்சித்துள்ளார்.//

    வினவின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    அசுரன்

  71. //மயிர் பிளக்கும் அளவு இதில் விசயம் எதுவும் இல்லை என்பதே எனது கருத்து(ஏகலைவன் கூட அவ்வாறே சுட்டுகிறார்). அப்படி ஏதேனும் உருப்படியாக இருக்குமெனில், அது ஒருவேளை தோழர் ராயகரன், வினவு உள்ளிட்ட தோழர்கள் தமது பல்வேறு அனுகுமுறை சார்ந்த விசயங்களில் சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கலாம் என்ற அம்சமாக இருக்கலாம்.

    ரதியை பேச் வைத்து அதனூடாக அவரது புலி அரசியலை அம்பலப்படுத்துவது சரியாக இருக்கும். புலி அபிமானிகள் எல்லாரும் புலி பாசிஸ்டுகள் அல்ல என்ற வினவின் கருத்தின் அடிப்படையில் தனது ஒரு வாதத்தை வைக்கிறார் தோழர் இராயகரன்.// இதை விடவும் சுந்தர ராமசாமியின் பேச்சில், எழுத்தில் அதிக தெளிவு இருக்கும்.

  72. //பெரியாரை பெரியாரியவாதிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பூசையறைப்படமாக மாற்றிக் கொண்டுவருகிறார்கள். அதற்காக பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்போம் என்றார்கள் தோழர்கள். இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.//

    unmai! unmai!! unmai!!!

  73. இராயகரனின் இந்த் விமர்சனத்தில் எமக்கு ஒப்புதலே. வினவு மிக அலட்சியமாக, போதிய முன்யோசனையின்றி இந்த விசயத்தை கையாண்டுள்ளது என்பதாகவே எனக்கு தோன்றுகிறது. இது உண்மையெனில் இதுவே எனது விமர்சனம்.

    //இப்படி எம்முடன் முரணிலையில் நின்று அணுகும் வினவு கூறுகின்றார் “தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில்” தாங்கள் இல்லை என்ற இந்த நக்கல், நையாண்டித்தனம் தான் வரட்டுவாதத்தை தவிடுபொடியாக்கும் விவாதமாம். புலிப் பாசிசம் கம்யூனிஸ்டுகளை கொன்று போட்ட, பாசிச நிழலில் நின்று மட்டும் தான், “தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இல்லை” என்று சொல்லமுடியும்.

    (தனி ஒரு மார்க்சிஸ்டைக் கூட விட்டுவைக்காத பாசிச சூழலில் இருந்து போராடிய எம்மைப் பார்த்து)

    இதேபோல் “இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது.” என்று கேலிசெய்வது, உழைப்பை, போராட்ட வாழ்வையும் எல்லாம் கேவலமாக்கி கொச்சைப்படுத்துவதாகும். எமக்கு எதிரான பரபரப்பு தலையங்கங்கள் மூலம், அரசியல் விவாதம் செய்யமுடியாது. இப்படியான அணுகுமுறை மூலம், ஆரோக்கியமான விவாதம் செய்யமுடியாது.//

    • அசுரன்,

      நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பத்தி

      @@@ இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு ‘இயலாமை’; தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லாததால் ஏற்படும் இயலாமை; கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் இயலாமை; தனது தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்படும் இயலாமை. ஆனால் இரயாவுக்கும் எமக்குமான உரையாடல் தனிப்பட்ட விவகாரமாக இனிமேலும் இல்லை. பொதுவெளிக்குள் வந்துவிட்டது. @@@

      இரயாகரன் தான் பதில் சொல்ல வேண்டிய பத்தியின் இறுதிப்பகுதியை விட்டுவிட்டு சாதுர்யமாக பத்தியின் முதல் வரிகளை எடுத்து கையான்டு விவாதத்திலிருந்து விலகிக்கொண்டார். இதை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

      இவரை கிண்டல் செய்வதாகவே வைத்துக்கொள்வோம், அவருக்கு இந்த கவரிமான்தனம் ஏன்? அதியமானை நீங்கள் செய்யாத கிண்டலா, அவர் விவாதிக்கவில்லை? ஒரு முதலாளித்துவவாதிக்குள்ள ஜனநாயக பண்பு மார்க்ஸியவாதிக்கு வேண்டாமா?

      அல்லது இரயாகரனின் தான் கிண்டல் செய்யப்பட்டாக வருத்தப்படும் இந்த உணர்ச்சி உண்மையென்றால் அவர் 6 பகுதிகளாக வைத்த தலைப்புகளும் உள்ளே எழுதியிருப்பதும் கேலி, கிண்டல் எல்லையை தான்டி அவதூறாக போய்விட்டதை நீங்கள் வாசிக்கவில்லையா.

      அவர் (தனி ஒரு மார்க்சிஸ்டைக் கூட விட்டுவைக்காத பாசிச சூழலில் இருந்து
      போராடிய எம்மைப் பார்த்து) என்கிறாரே, இந்த பெருங்காயப் வாசனை எப்போது தீரும்? என்னவோ இவர் மட்டும் தான் அடுமுறையும் பாசிசத்தையும் சந்திப்பதைப்போல. நல்ல தமாஷ். இந்தியாவில் மா.லெ புரட்சியாளர்கள் சந்திக்காத அடக்குமுறையா? பாசிசமா? அவர்களுக்கெல்லாம் எங்கோ வெளிநாட்டில் போய் உட்கார்ந்து புரட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன?

      இல்லை அடக்குமுறையும் பாசிசமும் நேர்ந்தால் கூட்டுத்துவத்தையும், அமைப்பையும் கைவிட்டு ‘தனி’யொரு மார்க்சிஸ்டாக மாறும் வழியை இரயா முன்மொழிகிறாரா?

    • கிட்டத்தட்ட நான் கேட்டகேள்விகளுக்கு கூட முறையான பதிலை அளிக்காமல்
      தூற்றும் வேலையில் சில தோழர்கள் இறங்கிவிட்டனர் இந்ந ரதி பிரச்சனை நிறைய படிப்பினையை கொடுத்துள்ளது, பொதுவாக ரதிக்கு மாற்று கருத்து கூறும் தோழர்களை தேய்ந்த ரெக்கார்டு போன்ற வார்த்தைகளில் தூற்றுவது
      எம்மை போன்ற புரட்சியின் நண்பர்களுக்கு சலிப்பை கொடுத்து விட்டது
      தோழர் ரயாகரனையும் விவாதத்தை தாண்டி தனிநபர் தாக்குதல் கொடுத்தது விமர்சனத்துக்குரியது வினவில் நடக்கும் விவாதங்களை பற்றி புரட்சிக்காக முழுமையாக அர்பணித்து வாழும் தோழர்களிடம் கருத்து கேட்டபோது அவர்களுக்கும் வினவின் மீது விமர்சனம் இருக்கவே செய்கிறது
      ரயாகரன கடவுள? என்ற கேள்விகள் தேவையற்றது இப்போது பிரச்சனை Subjectஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது இதற்கெல்லாம் வினவும் தவிர்க்கமுடியாத காரணம்,

      நான் கேட்ட மையமான கேள்வி இதுதான் ஒரு புலி அபிமானியால் அகதி வாழ்கையின் சுவடுகளை சரியாக எழுதமுடியுமா சிங்கள பேரினவாதத்தால்
      பாதிக்கபட்ட நம் மக்கள் புலிகளாலும் பாதிக்கபடாமல் இருந்தார்களா? என்பதுதான் சகோதரி ரதியுடன் விவாதம் வேண்டாம் என்று சொல்லவில்லை
      ஆனால் அவர் கட்டுரையாளராக எழுதும்போதுதான் பிரச்சனை உதிக்கிறது
      அவர் தன்னை புலி அபிமானி என்று வெளிப்படையாகவே கூறுகிறார், அவரால் அகதியின் துயரத்தை புலி சார்பின்று எழுதமுடியுமா என்று கேட்டால்
      பிளாக்கனோவ் வரையில் சென்று விடுகிறார்கள் சில தோழர்கள். தோழர் ரயாகரனை தனிமைபடுத்தும் முயற்சியை சில தோழர்களே மேற்கொள்வது “அபத்தமானது” அதற்காக இந்த விவதத்தில் முழுமையாக வினவை விமர்சனம் செய்வதையும் ஏற்று கொள்ளமுடியாது. தோழர் ஏகலைவன் சொன்னது போல மேலோட்டமான விவாதமாக இல்லாமல் அதை தாண்டி சென்று விட்டதே! தோழர் அசுரன் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது

  74. //தனது 4வது பகுதியில் ரதியின் கட்டுரையில் இழையோடும் வரலாற்று திரிபு குறித்து சுட்டிக் காட்டும் தோழர் இராயாகரன் அதனையே புலிப் பாசிசமாக கருதுவது தவறு என்று கருதுகிறேன். இந்த அளவுகோலின் படி பார்த்தால் புலி ஆதரவாளர்கள் அனைவருமே புலி பாசிஸ்டுகள் என்றே எளிதில் முடிவு செய்யலாம்.// ரதி இதுவரை தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டுள்ளாரா? இப்போதும் மாற மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒருவர் எப்படி அப்பாவியாக இருக்க முடியும்? ரதி ஒரு 100% பாசிஸ்ட்.

    //தோழர் வினவும் இந்த அம்சத்தில் தனது மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவோ அல்லது ரதியின் கருத்துக்களை எச்சரிக்கையுடன் பரிசீலித்து அதனை விமர்சிக்கவோ முயலவில்லை. குறைந்த பட்சம் புலி பாசிசம் குறித்து பேசும் தோழர்களை விவாதம் செய்ய ஊக்குவித்து அழைத்திருந்திருக்கலாம். ஆயினும் வினவு இந்த அம்சத்தில் எதிர்மறையாகவே செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதனை தோழர் ரயாகரன் சரியாகவே சுட்டிக்காட்டி வினவை விமர்சித்துள்ளார்.// 100% Correct. I agree with you

  75. எழுதி முடிப்பதற்கு முன்னரே விவாதங்கள் வைத்து சுட்டிக்காட்டுவது குழப்புவது என்றவாறான கருத்துக்கள் எங்களை நோக்கிச் சுட்டப்பட்டதால் அதனை தவிர்க்கும் வண்ணமே நாம் ஆரம்பத்தில் விலகி இருந்தோம். ரதியின் கருத்துக்கள் தொடர்பாக வினவு தளம் தனது பார்வையை வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எம்மிடம் இருந்தது. அதனை அவர்கள் செய்திருந்தால் தனியான பதிவுகளுக்கு அது அவசியத்தை ஏற்படுத்தியிருக்காது. அது தவறியதால் ரதியின் கட்டுரையின் உள்ளடக்கம் சம்பந்தமான விவாதங்கள் தனிப்பதிவாகின. மேலும் மையமான விவாதப் பொருளை விட்டு விவாதம் விலகி சென்றதால் அந்த வரிகளின் போக்கிலேயே இவைகள் அடித்துச்செல்லப்பட்டன.
    விவாதம் மீண்டும் ”பாசிசத்தையும் தன்னகத்தே கொண்ட வரலாறு” என்ற அதன் மையமான சட்டகத்துக்குள் மட்டுபடுத்தப்படவில்லை. அதன் மூலம் ரதியின் கருத்துக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

    மீண்டும் இந்த வரலாற்றினுள் பாய்ச்சப்பட்ட வெளிச்சங்கள் மூலமாகவாவது இவவாறான பாசிசக் கூறுகளை நான் அறிந்திருந்தேன் அல்லது அறிந்திருக்கவில்லை இப்போது தான் அறிகிறேன் அல்லது முற்றிலும் மறுக்கின்றேன் என்றவாறாக அவற்றின் மேல் ரதி எந்த கருத்தையும் முன் வைக்காமல்
    ”இழிபிறவிகள்” என்கின்ற போது அதனை எப்படி எதிர் கொள்வது ?.

    விவாதத்தை நாங்கள் மாற்றலாம் முன்வாருங்கள்

    • வினவு எதை எழுதவேண்டும் என்பதை உங்களிடத்திலிருந்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை போல இருக்கிறது நீங்கள் செல்வது.

      ரதி ஒன்றை எழுதுகிறார், tecan அதை மறுத்து எழுதுகிறார், விவாதம் நடைபெறுகின்றது, இதில் வினவு ரதியின் கட்டுரைக்கு மறுப்பையா வெளியிடமுடியும். விவாதம் நடைபெருவதுதான் நோக்கம் என்று அவர்கள் தெளிவாக அறிவித்தபின் உங்களைப்போன்றவர்கள் தானே விவிதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்? இரயா முதல் பகுதியிலேயே முரித்துக்கொண்டார், நீங்களும் பங்குபெற வில்லை tecan மட்டும்தானே பொறுப்போடு விவாதித்தார். அவர் குறிப்பிட்டு சொன்ன சில விமர்சனங்களை கூட ரதி இல்லை என மறுக்கவில்லையே? ஆக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியவர்களின் ( உங்களின்) அலட்சியத்தால் தான் இந்த நிலை தோன்றி்யுள்ளது

      ரதியின் இழிபிறவிகள் வாதம் கூட அவரை பாசிஸ்டு என்று இரயாவும் பின்னர் இங்கே பல தோழர்கள் அழைத்த பின்னால் அல்லவா வந்தது? இதை நீங்கள் கணக்கில் கொள்ளாமல் இதை எப்படி எதிர்கொள்வது என்றல்லவா கேட்கிறீர்கள்? ஆனாலும் விவாதத்தை சம்பந்தமில்லாத திசையிலிருந்து கருத்துக்கு திரும்பும்படி மாற்ற நீங்கள் மு்னைந்திருப்பது வரவேற்கத்தக்கதே.

    • சிறி,

      /”இழிபிறவிகள்” //

      நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது. நான் இழிபிறப்புகள் என்று குறிப்பட்டது ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்துகொண்டு எங்களுக்கு துரோகம் செய்தவர்களையும், செய்துகொண்டிருப்பவர்களையும் தான்.

      • பிறப்பால் யாரும் இழிவாவதில்லை. எந்தப் பிறப்பும் இழிபிறப்பல்ல. ஒரு மனிதன் காலத்தினூடு தன் செய்கைகள் நடத்தைகளினூடு சமுதாயத்தின் மதிப்பில் இழிந்து போகலாம். ஆனால் பிறப்பில் இழிவாக இருக்க முடியாது. இந்துமத சாதிப்பிரிவுகளில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தால் அவர் அந்த சாதியிலே வாழ்ந்து அந்த சாதியாகவே இறந்தும் போகும் வரையும் அது மாற்ற முடியாதது. பிறப்பில் பகுப்பு வைப்பது என்பது இந்துமதமே. இழிபிறப்பு என்பது பிறப்பின் காரணத்தை அதன் நடத்தையை அதன் மூலத்தை இழிவுபடுத்தும் சொல். ஒரு சாதியை ஒரு இனத்தை சாடி இழிவுபடுத்தும் சொல. அது அதைச் சுட்டும் அந்த மனிதனின் தாயை தந்தையை சாடுவதற்கு சமமானது. ஏன் நீங்கள் சாதியில் மேல் தட்டில் உள்ளவரா?

  76. தோழர்கள் நேர்மையானவர்கள் நம‌க்காக வாழ்கிறார்கள்.விலைவாசி உயர்வினால்மனைவியையும் தனியார்மயதின் அவலதால் பிள்ளையையும் வேலைக்கு அனுப்பி மூவருமாக உழைத்தாலும் மூனுவேலை சரியாக சாப்பிடமுடியாத நிலையிலும், தோழரே நாளைக்கு ஓர் ஆர்ப்பாட்டம்,மாநாடு,போராட்டம் உள்ளது, ஆள்பற்றாக்குறை நீங்கள் அவசியம் ஒரு நாள் முன்னதாக வரவேன்டும் எனக் குரல் கேட்ட உடனே மனம் சிலாய்து போகும். அதற்கென்ன தோழரே நாமில்லாமலா. நோவுக்காக கால்கடுக்க தர்மாஸ்பத்ரியில் நிற்பதைவிட தோழர்களுடன் வேலை செய்வதே தனிசுகம்.தோழர்கள் நெர்மையானவர்கள்.நமக்காக வாழ்கிறாகள்.
    தோழருவர் பேசிக்கொண்டிருந்தார்,புரட்சியின் மூலம் முத்லாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளிவர்க்கம் தனது ஆட்சியை நிறுவும் போதுதான் மக்கள் யாவரும் சமமாக….என கேட்கும்போதே மனம் கிரங்கிப்போகும்.
    கண்ணயர்ந்த என்னை,எழுந்திருங்கள் நண்பரே கணிணியில் உங்கள் தோழர்கள்.ஆச்சர்யமாக நோக்கினேன். படியுங்கள் என்றார். நம் தோழர்களா இவர்கள். நானா நீயா என்ற போட்டி, மற்றவரைவிட தான் அதிமேதவித்தனம் உடைய எழுத்துகள். ந்ண்பரிடம் திரும்பினேன் நக்கலாக சிரித்தார். குழப்பமானேன். நாம் சந்திதவர்கள் போலில்லையே இவர்கள்.
    எழுதலாம், கூடாது,வறட்டுவாதம்,பாசிட் இதெல்லம் என் அறிவுக்கு எட்டாவிட்டாலும் தன் இனத்தாலேயே வதைபட்டு அகதியான ஒரு தோழரின் வலியை புலம்பல் என்றும் சிரிப்பாய்வருகிறது என்றும் கூறுகிறார்களே. நாளை நம் வலியையும் புலம்பல் என்பார்களோ. தோழர்கள் இப்படி தங்களுக்குள் மோதுவதுதான் புரட்சி என்றார்களோ. இல்லை. இவர்கள் அவர்களில்லை. நம் தோழர்கள் நேர்மையானவர்கள்.நமக்காக வாழ்பவ‌ர்கள்.
    (குறிப்பு. இது முத்து (கூலித்தொழிலாளி) என்ற எனது ந்ண்பர் கூற முகிலனான நான் (அவருக்கு இமெய்ல் இல்லாததினால்) பின்னூட்டமிட்டது. அவர்,அவரது தந்தையும் மகஇக வின் தீவிர ஆத்ரவாளர்கள்.

    • தோழரே என்ன இது? இப்படி ஒரு தோழர் வருத்தப்படும்படி விட்டுவிட்டீர்களே, உட்கட்சி விவாதமும், தோழர்களின் விமர்சன சுயவிமர்சனங்களும் இல்லாத மா.லெ அமைப்பு உன்டா? விவாதத்துக்கு வருத்தப்பட்டால் பின்னர் தெளிவை காண்பது எப்படி. நமது சக தோழர்களின் தவறான பண்புகளை களைய நாம் போராடித்தான் ஆக வேண்டும். இல்லை நாளை நாம் அவரை இழக்க நேரிடும்.

      இரயாகரன் நிலை பரிதாபம்தான் அனால் அந்த பரிதாபம் அவரை ஒரு வறட்டுவாதியாக மாற்றிவிட்டது. அதிலிருந்து அவரை காப்பாற்த்தானே இத்தனை தோழர்கள் தனது வேலை நேரத்தை விட்டு பின்னூட்டமிட்டு விவாதித்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நம் தோழரை உற்சாகப்படுத்துங்கள், இந்த வறட்டுவாத பிரச்சனையும் ஒரு வர்க்கம் சார்ந்த்தே அது அவருக்கு வர வாய்ப்பே இல்லை என்பதையும் இந்த விவாதத்தின் அவசியத்தையும் அவருக்கு புரிய வைத்து இதில் வினையாற்ற சொல்லுங்கள்.

  77. ரதி தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ அதற்கு பதில் கூறும் நாகரீகமோ இல்லாதவர். அவர் ஒரு அப்பாவியா? அல்லது பாசிஸ்டா? ரதி உண்மையிலேயே ஈழத்தை சேர்ந்தவரா? அவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் புலிகள் செய்த இனப்படுகொலை பற்றி எதுவுமே தெரியாது என்கிறார். அதற்கான ஆதாரங்களை கொடுத்த பின்னரும் மௌனம் சாதிக்கிறார். புலிகளின் பாசிச ஆட்சிக்கு எதிராக யாழ்ப்பாண மாணவர்கள் நடத்திய போராட்டம் பற்றி எதுவுமே தெரியாதாம். தெரியாது என்றால் ரதி ஈழத்தில் இருந்ததாக சொன்னதும் பொய் தான். ரதி ஒரு ஈழத்தமிழரா என்பதும் சந்தேகத்திற்குரியது. ஈழத்தமிலரல்லாத, ஈழத்திலே வாழாத ஒருவர் எப்படி இந்தக் கட்டுரையை எழுத முடியும்?

  78. //மார்க்சியவாதிகளை புலிகள் கொன்றொழித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.// வினவு அவர்களே, முதலில் ரதி இதை ஏற்றுக் கொள்கிறாரா என்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

  79. இரயாகரன் முன்னுக்குப்பின் முரணாக விவரங்களை குறிப்பிட்டு இரயாபிமானிகளுக்கு நல்ல முன்னுதாரனத்தை காட்டியிருக்கிறார். அதை பின்பற்றுவது சுலபம்… வெகுவிரைவில் இரயாயிசம் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 🙂

    • தோழர் அர டிக்கட், ரயகாரன் மற்றும் ரயாபிமானிகளின் கருத்துக்களை ஒன்று விடாமல் படிக்கிறீர்கள் போலும். அதனால் தான் ஹியுமராக உங்களால் எழுத முடிகிறது. ராயாபிமானிகள் இப்போது பற்றிக் கொள்ள கிளை தேடுகிறார்கள். தங்கள் பழைய பதில்களை, ஒருவர் இன்னொருவருடையதை மேற்கோள் காட்டி நோகடிக்கிறார்கள். நிங்கள் அச்சப்படுவது போல ரயாயிசம் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

  80. சூடான தகவல்… இதிலிருந்து சகலமானபேருக்கும் தோழர் இரயாகரன் தெரிவிப்பது என்னவென்றால்

    //ரதி தான் ஒரு பாசிட் இல்லை என்றால், என்ன செய்திருக்க வேண்டும். புலிப் பாசிசத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்திருக்கவேண்டும். அதை அம்பலப்படுத்தி, எழுத முனைந்திருப்பார்.பாசிசத் திமிருடன் பதிலளிக்கும் அவர், தான் பாசிட் அல்ல என்றால் பாசிசத்தைப் பற்றி எழுதியிருக்க முடியும். பாசிட் எப்படி பாசிசத்தைப் பற்றி எழுத முடியும். //

    இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்றா கோபால் பல்பொடி விற்கும் விற்காத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் எல்லாரும் பாசிட்டுகளே. அதாவது கருத்து ரீதியாக புலி ஒரு பாசிட் என்று நம்பாத அனைவரும் பாசிட்டுகளே. அதாவது விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர ஏனையோர்.

    ஒன்று செய்யுங்கள் தோழர் இரயாகரன் இனிமேல் கருவில் குழந்தை இருக்கும் போதே புலி ஒரு பாசிட் என்று உணரும் வகையில் ஜீன் மேப்பிங்கோ எதோ ஒரு டெக்னாலஜீ வைத்து செய்யுங்கள். விவாதித்து உணரச்செய்யும் வேலை மிச்சமாகும். என்னது அப்ப கம்யூனிஸ்டாவே மாத்தலாமேங்கறீங்களா…? அதுவும் சரிதான்!

    • அர டிக்கெட்டு ! 99 % தமிழர்கள் புலிகளை ஆதரிப்பதாக நினைப்பது உமது அறியாமை. முட்டாள்தனம். ஈழத் தமிழர் மத்தியில் புலிகளுக்கு ஆதரவு இருப்பது உண்மையானால் புலிகள் ஏன் இதுவரை எந்தவொரு தேர்தல்களிலும் பங்குபற்றவில்லை? எத்தனை தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று ஐ.நா. சபை அல்லது நீங்களாவது கணக்கெடுத்திருக்கலாம் தானே? இலங்கையில் ராஜபக்ஷவிற்கு அதிக மெஜாரிட்டி இருக்கிறது என்றால் நீங்கள் ராஜபக்ஷவை ஆதிரிப்பீர்களா?

  81. தோழர் அரடிக்கட் நக்கல் நையாண்டியெல்லாம் விட்டுவிட்டு ஆரோக்கியமான விவாதம் செய்யுங்கள். ரயாபிமானி, ரயாயிசம் என்பதெல்லாம் தேவையில்லாத
    வார்த்தைகள். தவறான கருத்து உடையவர்கள் (நானாக இருந்தாலும்) என்று நீங்கள் கருதினால் அவர்களை தெளிவடைய செய்யுங்கள்,

  82. சிறி,

    //இழிபிறப்பு என்பது பிறப்பின் காரணத்தை அதன் நடத்தையை அதன் மூலத்தை இழிவுபடுத்தும் சொல்.//

    மன்னிக்கவும், இதற்கு இவ்வளவு விளக்கம் இருக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.

    நிற்க, உங்கள் தளத்தில் என்னை நீங்கள் புலி பாசிஸ்ட் என்று முத்திரை குத்தி விமர்சிப்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. மற்றது, வினவு தளத்தில் யாரும் ஒரு புலி பாசிஸ்டை ஆதரித்துப் பேசுவதாக எனக்குப் படவில்லை. காரணம், ஒன்று நான் புலியோ, பாசிஸ்டோ இல்லை. மற்றது, வினவு நண்பர்கள் ரதி என்ற ஓர் தனிமனிதரின் ஜனநாயக உரிமைக்காகத்தான் பேசுகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு விடயத்தை நான் சொல்லாம் என்று நினைக்கிறேன். அதாவது,

    எனக்கு வினவு மீது மதிப்பு உண்டு. ஆனால், நான் கம்யூனிஸ்ட் கிடையாது.
    புலிகள் மீது மதிப்பு உண்டு. ஆனால், நான் புலி கிடையாது.
    (ஹலோ, ஹலோ ,கொஞ்சம் பொறுங்கள் உடனே யாராவது புலிகளும் வினவும் ஒன்றா என்று என் மீது அதற்கு வேறு விமர்சனம் வைக்காதீர்கள். தாங்க முடியாது சாமி!)
    இதோ, எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், நீங்கள் மனம் திறந்து விவாதிக்க வினவு தளத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதனால் உங்கள் மீதும் ஓர் மதிப்பு ஏற்படுகிறது. எனக்கு இப்படித்தான் மனிதர்களை மதிக்கத் தெரிகிறது. எந்தவொரு கொள்கை என்ற நிற கண்ணாடியை போட்டுக்கொண்டு, அதன் மூலம் மனிதர்களை பார்க்கத்தெரியாது. உங்கள் மனம் நோகும்படி நான் ஏதாவது பேசியிருந்தால், மன்னிக்கவும். மற்றப்படி, ரதியை சொல்லி வினவையோ அல்லது வினவை சொல்லி ரதியையோ உங்கள் தளத்தில் விமர்சிப்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.

    • //மீண்டும் இந்த வரலாற்றினுள் பாய்ச்சப்பட்ட வெளிச்சங்கள் மூலமாகவாவது இவவாறான பாசிசக் கூறுகளை நான் அறிந்திருந்தேன் அல்லது அறிந்திருக்கவில்லை இப்போது தான் அறிகிறேன் அல்லது முற்றிலும் மறுக்கின்றேன் என்றவாறாக அவற்றின் மேல் ரதி எந்த கருத்தையும் முன் வைக்காமல்… //

      மேலுள்ள எனது பின்னூட்டத்திலிருந்து நான் ஆரம்பிக்கின்றேன். இதுவே மையமான விவாதத்தை நோக்கி நாம் மீண்டும் பயணிப்பதற்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கும் என நான் கருதுகிறேன். இவை நோக்கிய உங்கள் கற்றலை அறிதலை ஆய்வுகளை செய்த பின் மறுத்தோ அல்லது ஆதரித்தோ நீங்கள் கருத்துச் சொல்வதற்கும் உங்களுக்கு அவகாசமும் உரிமையும் உண்டு.

      கீழ் வருவது நான் வினவு குழுமத்தை நோக்கி வைத்த பின்னூட்டமாகும்.

      //ரதி உங்களது பாசறையில் புலி அநுதாபி நிலையிலிருந்து தெளிவூட்டப்பட்டு வென்றெடுக்கப்பட வேண்டியவர் என்று ஒரு நிலை இருந்திருக்கலாம். அதனை விமர்சனங்களினூடு வினவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு தப்பியதால்இ தமிழ்ப்பாசிச கூறுகள் வரலாற்றை மறுபடியும் தாம் சார்ந்து அதுவும் வினவு தளத்தில் பதிவு செய்த போது நாங்கள் விழித்துக் கொண்டோம்.//

      அதற்கான எதிர்வினைப் பதிலாக

      //எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும்இ எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.//

      என்ற தங்களது பின்னூட்டத்தை எடுத்துக் கொள்வது சரிதானா ?

      அப்படி சரியெனில் :

      நீங்கள் இந்த நிகழ்வுகளுக்கோ அல்லது அந்த அரசியல் போக்குக்கோ தலைமை வகித்து பாதை வகுத்தவரல்ல என்பது புரிந்த ஒன்றே தான். ஆனால் சாதாரண புலிப் போராளிகளின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கரிசனை பற்று மதிப்பு என்பது வேறு. நாங்களும் கூட இறுதிவரை போராடி மரணித்த போராளிகளுக்கு மரியாதை செய்திருக்கின்றோம். (பார்க்க தமிழரங்கம்)

      ஆனால் அந்த அரசியல் கருத்துருவாக்கத்திற்கு தலைமை தந்த அதன் பிரதான கட்டமைப்புக்கும் கருத்துக்கும் மதிப்பும் மரியாதையும் தருகின்றீர்களா? அதன் பாசிசப் போக்குகளுக்கும் மதிப்பும் மரியாதையும் தருகின்றீர்களா?

      “மாற்றம்” வேண்டும் என்று தானே நீங்கள் விவாதத்துக்கு வருகின்றீர்கள் எப்படி மாற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஒரே வரியில் என்னோடு விவாதம் நடத்துவதில் எதுவித பயனுமில்லை என்று எதிரிடையாகவே பதில் தரமுடியும். இது கூட பாசிசத்தின் பண்பு என்று கூறமுடியும்.

      பாசிசம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அந்தக் கருத்துக்கள் ஒருவரிடமிருந்து வெளிப்படும்போது அல்லது அந்த போக்குகளைக் கொண்ட ஒரு ஸ்தாபனத்துக்கு வெறுமனே நீங்கள் மதிப்பு தரும்போது உங்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிய முடியும் ? நீங்கள் பாசிட் அல்லாவிடின் அல்லது நீங்கள் மதிப்பு தரும் புலிகள் பாசிட்டுக்கள் அல்லவெனில் அதை மறுத்துரைப்பதற்கு நீங்கள் பாசிசத்துக்கு கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? உங்கள் வரைவிலக்கணப்படி புலிகள் பாசிட்டுக்கள் இல்லையா? பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ? ராஜபக்சவின் பாசிசத்தை எவ்வாறு வரையறுக்கின்றீர்கள்?

      உங்களது பதிலை எதிர்பார்க்கின்றேன். வெறும் சொற்களில் தொங்காமல் மையமான கேள்விக்கு பதில் தாருங்கள் :

      பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?
      தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் காரணமாக இருக்கவில்லையா?

      • சிறி,

        “வெறும் சொற்களில்” தொங்கி வரட்டு வாதம் செய்பவள் நானல்ல. நிற்க,

        ///எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும்இ எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.//

        இது நான் இந்த பதிவுக்கு எழுதிய பதில் ஆயிற்றே (அறிவிப்பு: ஈழத்தின் நினைவுகள் இனி தொடராது…). இதை நீங்கள் வேறு எங்கோ இட்ட பின்னூட்டத்திற்கு பதிலாக கொண்டால், அது என் தவறல்லவே. புலிகள் மீது எத்தனையோ ஆயிரம், லட்சக்கணக்கான மக்களுக்கு நல்ல அபிமானமும் மதிப்பும் உள்ளது. அவர்களில் நானும் ஒருத்தி. என்னிடமுள்ள அந்த மதிப்பு மாறாது. அதை மற்றவர்கள் ஏன் மாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் உங்கள் அடுத்த quote இற்கான பதில்.

        /////ரதி உங்களது பாசறையில் புலி அநுதாபி நிலையிலிருந்து தெளிவூட்டப்பட்டு வென்றெடுக்கப்பட வேண்டியவர் என்று ஒரு நிலை இருந்திருக்கலாம். அதனை விமர்சனங்களினூடு வினவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு தப்பியதால்இ தமிழ்ப்பாசிச கூறுகள் வரலாற்றை மறுபடியும் தாம் சார்ந்து அதுவும் வினவு தளத்தில் பதிவு செய்த போது நாங்கள் விழித்துக் கொண்டோம்.////

        இது நீங்கள், “புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்ட்களா….” என்ற வினவின் கட்டுரைக்கு நீங்கள் எழுதிய பின்னூடம். இப்போதுதான் தேடி கண்டுபிடித்தேன். நான் பொதுவாக சொல்பவற்றையும், எங்கேயோ வெட்டி ஓட்டியதையும், இரண்டையும் சேர்த்து நீங்கள் ஏன் குழப்புகிறீர்கள்? இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால், உங்கள் பார்வையில் நான் ஒரு பாசிஸ்ட் என்னை வினவு எப்படி தன் தளத்தில் எழுத அனுமதிக்கலாம். இதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் பிரச்சனை. //அதுவும் வினவு தளத்தில் பதிவு செய்த போது நாங்கள் விழித்துக் கொண்டோம்.// நீங்கள் விழித்துக்கொண்டு என் எழுத்துகளை வினவில் தடுத்து நிறுத்தும் அளவிற்கு நான் என்ன புலிகளின் வரலாற்றையா எழுதினேன்?

        //நீங்கள் பாசிட் அல்லாவிடின் அல்லது நீங்கள் மதிப்பு தரும் புலிகள் பாசிட்டுக்கள் அல்லவெனில் அதை மறுத்துரைப்பதற்கு நீங்கள் பாசிசத்துக்கு கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? //

        நீங்கள் தான் நான் பாசிஸ்ட் என்றே முடிவெடுத்துவிட்டு என்னை விமர்சித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதென்ன “பாசிஸ்ட் அல்லாவிடின் …” இதுவரை என்னைப்பற்றி நான்கு பகுதிகள் பாசிஸ்ட் என்று கட்டுரை எழுதிவிட்டு, இப்போது என்னிடம் வந்து விளக்கம் கேட்டால் என்ன நியாயம்? என்னையே பாசிஸ்ட் என்று சொல்லும் நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்று சொல்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை தான். ஆனாலும், சர்வதேசமே அவர்களை தங்கள் வசதிக்கேற்றவாறு பயங்கரவாதிகள் ஆக்கினார்கள். நீங்கள், உங்கள் சொந்த அனுபவத்தை வைத்து பாசிஸ்ட் என்று விமர்சித்தீர்கள். உங்களுக்கெல்லாம் ஓர் காரணம் வைத்துக்கொண்டு தான் புலிகளை விமர்சிக்கிறீர்கள். அதே போல் எனக்கிருக்கும் காரணம், நான் விரும்பும் என்தேச, எனது இன விடுதலைக்காய் சுயநலமில்லாமல் இறுதிவரை தாங்கள் கொண்ட கொள்கைக்காய் இறுதிவரை போராடினார்களே, அதுதான். என்வரையில் புலிகள் விடுதலை போராளிகள். மற்றப்படி பாசிசம் என்பதற்கான விளக்கம் என்னை விட உங்களுக்குத்தான் நன்றாக தெரிகிறது. நீங்கள் தான் வரையறுத்து சொல்லவேண்டும். சொல்லிக்கொண்டிருகிறீர்கள், உங்கள் தளத்தில்.

        இனி பாசிசம், புலிகள், ரதி பற்றி விவாதித்து என்ன பயன்?

      • //என்னையே பாசிஸ்ட் என்று சொல்லும் நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்று சொல்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை தான்.// ரதி அவர்களே புலிகளை பாசிஸ்டுகளாக காட்டும் கட்டுரைகள் பல வினவு தளத்தில் வந்துள்ளன. அவற்றை நீங்கள் வாசிக்கவில்லையா? புலிகளை பாசிஸ்டுகள் என்று கூறும் தளத்தில் எப்படி எழுத ஒப்புக்கொண்டீர்கள்? புலிகளை பாசிடுகள் என்று கூறும் வினவுக்கு ஏன் மதிப்புக் கொடுக்கிறீர்கள்?

        //புலிகள் மீது எத்தனையோ ஆயிரம், லட்சக்கணக்கான மக்களுக்கு நல்ல அபிமானமும் மதிப்பும் உள்ளது. அவர்களில் நானும் ஒருத்தி. என்னிடமுள்ள அந்த மதிப்பு மாறாது. அதை மற்றவர்கள் ஏன் மாற்றவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். // ராஜபக்ஷ மீது லட்சக்கணக்கான மக்களுக்கு நல்ல அபிமானமும் மதிப்பும் உள்ளது. மற்றவர்கள் அதை மாற்றக்கூடாது என்று சொல்லவருகிறீர்களா? ராஜபக்ஷ அபிமானி ஒருவர் வினவில் கட்டுரை எழுதினாலும் நீங்கள் வரவேற்பீர்களா? தமிழ் மக்களுக்கு புலி அபிமானிகளும் தேவையில்லை, ராஜபக்ஷ அபிமானிகளும் தேவையில்லை. இந்த இரண்டு மக்கள் விரோதக் கும்பல்களை சேர்ந்த யார் வந்தாலும் எதிர்ப்பது தமிழ் மக்களின் கடமை.

  83. //மன்னிக்கவும், இதற்கு இவ்வளவு விளக்கம் இருக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.// இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை?

    //நிற்க, உங்கள் தளத்தில் என்னை நீங்கள் புலி பாசிஸ்ட் என்று முத்திரை குத்தி விமர்சிப்பது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.// வினவு தளத்தில் ராஜபக்ஷவை இனவெறியன் என்று முத்திரை குத்தி விமர்சிப்பது ராஜபக்ஷவுக்கு மனவருத்தத்தை அளிக்கிறதாம். ஹிட்லர் கூட தன்னை பாசிஸ்ட் என்று ஒத்துக்கொண்டதில்லை. ரதி
    ஒத்துக்கொள்வார்

    என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

    //எனக்கு வினவு மீது மதிப்பு உண்டு. ஆனால், நான் கம்யூனிஸ்ட் கிடையாது.
    புலிகள் மீது மதிப்பு உண்டு. ஆனால், நான் புலி கிடையாது.// முதலில் ஒழுங்காக தமிழ் கற்று விட்டு எழுதுங்கள். வினவின் கொள்கை கம்யூனிசம் என்றால் புலிகளின் கொள்கை என்ன பாசிசமா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல புலிகள் பாசிஸ்ட்கள் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

    நீங்கள் தான் புலி இல்லை என்று கூறி விட்டீர்கள். புலிகள் இயக்கத்தின் உள்ளே நடந்த எதுவும் உங்களுக்கு எதுவும் தெரியாது என்று தான் அர்த்தம். புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியாமலே எப்படி மதிப்பு வைக்க முடியும்? புலிகள் என்ன புதிய மதமா? பிரபாகரன் உங்களுக்கு முழுமுதற் கடவுளா? புலிகள் மீது ரதிக்கு கண்மூடித்தனமான பக்தி மட்டுமே உண்டு. இதனை அவரே ஒப்புக்கொள்கிறார்.

  84. இங்கே tecan என்னும் முழுசாக வெந்த ஜந்து விவாதம் என்ற பெயரில் என்னன்னவோ அலம்பல் செய்து ரதியை எதிர்நிலைக்கு தள்ள பாக்குறார், இன்னுமொரு அக்கமார்க் மார்க்சிஸ்டு ரதியை மடக்க தனக்கு ஆதரவாக சில வாதங்களை தேடி எடுத்து வந்து கோத்து தோரணம் கட்டுறார்….. ஆனால் ரதியோ இவங்க திட்டத்துக்கு பலியாகமாக இவங்க மூஞ்சீல கிலோ கணக்குல கரியை பூசறார்… வாழ்த்துக்கள் ரதி, இந்த ”ஜனநாயக” வாதிகளை மாதிரி நீங்க நிதானம் இழக்காம இப்படியே பேசுங்க….

    • MamboNo8,

      //இங்கே tecan என்னும் முழுசாக வெந்த ஜந்து விவாதம் என்ற பெயரில் என்னன்னவோ அலம்பல் செய்து ரதியை எதிர்நிலைக்கு தள்ள பாக்குறார், //

      மிகவும் நன்றி சகோதரரே. நீங்கள் இதை புரிந்து கொண்டீர்கள் என்று ஆறுதலாக இருக்கிறது. இந்த Tecan என்னை செய்யும் torture உண்மையிலேயே தாங்கமுடியவில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இவர் சகட்டுமேனிக்கு என்னை விமர்சிக்கிறார். புலி என்கிறார், பாசிஸ்ட் என்கிறார். இப்போது இறுதியாக நான் மனநோயாளியாம். கருத்து சுதந்திரத்தை எப்படி abuse பண்ணுகிறார் பாருங்கள்.

      மற்றது, நான் பெருமைக்காக சொல்லவில்லை. உண்மையில் logic ஆக எப்படி விவாதிப்பது என்று என்னை நானே பட்டை தீட்டிக்கொண்டது வினவு கட்டுரைகள் மற்றும் வினவு நண்பர்களின் பதிகளின் மூலம் தான்.

    • என்ன MamboNo8 சார், ரதியுடன் சேர்ந்து பாசிஸ்ட்கள் முன்னேற்ற சங்கம் அமைக்கும் நோக்கம் இருக்கிறதா? என்ன இருந்தாலும் ஒரு பாசிஸ்ட் வாயால் பாராட்டப் பட நீங்கள் கொடுத்து வைச்சிருக்கணும்.

      //கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இவர் சகட்டுமேனிக்கு என்னை விமர்சிக்கிறார்.// கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களை “இனத்துரோகிகள்” “இழிபிறப்பாளர்கள்” என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கலாமா? நீங்கள் என்ன சொன்னாலும் வினவு கண்டிக்க மாட்டார் என்ற தைரியம்.

  85. ஆனா இவனுங்க கத இருக்கே ரொம்ப ஓவர்பா! தீடீருனு ஒரு ஆள புடிச்சு பாசிஸ்டுனுவாங்களாம், உடனே அந்தாளு நான பாசிஸ்டில்லேன்னு நிரூபிக்கனுமாம்.. நாளைக்கு என்னப்பாத்து வேசிமகன்னு சொல்லுவ உடனே நான் எங்காத்தா வேசியில்லன்னு நான் உனக்கு புரூப் குடுக்கனுமா?

  86. வினவில், தோழர் இரயாவை தூற்றிய நண்பர் மணி,தமிழரங்கத்திற்குள் சென்று “தங்களை காப்பாற்றவே உங்களுடன் விவாதிக்க வந்துள்ள” மேசையா என உருமாறி பின் .”நான் புலிகளை மதிப்பவன் என்னை என்னவாக வரையறுப்பீர்கள்…”என தன்னை புலி(அபிமானியாக)யாக மீண்டும் உருமாற்றி நிற்கிறார்.” என்னைப் புரிந்து கொள்ள வினவுதளத்தில் ரதி பிரச்சினை தொடர்பான விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.. படித்துவிட்டு வரையறை செய்யுங்கள்..”என நக்கல் வேறு.
    தோழர் இரயாவை ஆதரிப்பவர்கள் அவரின் பாசிட்டு என்ற தாக்குதலில் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டாலும் வினவின் நேர்மை கருதி வினவின் பதிலை எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர். இவரோ” தமது கருத்துக்களை முன்வைத்து நேர்மையாக விவாதிக்க வராத ரயாகரனையும், அவரை உள்ளடக்கமில்லாமல் ஆதரிப்பதுதான் அமைப்பின் கருத்து என்றும் நீங்கள் கருதினால், அல்லது அதுதான் அமைப்பின் முடிவு என்றால் எந்த அமைப்பு பாட்டாளிவர்க்கம் தலைமையேற்று நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சியை செய்யுமோ அந்த அமைப்புக்கு போவதுதான் சாலச்சிறந்த்து என்று கருதுகிறேன்”என மிரட்டும் தொனியில் கூறுகிறார்.பிறகு “நண்பர் போராட்டம்.. பின்பகுதியில் வினவுதான் ம•க•இ.க என சில தோழர்கள் கருதுவதாகச் சொல்லி உள்ளீர்கள். அவர்கள் இந்திய ரயாகரன்கள்”என நக்கல் செய்கிறார். வினவு மகஇக இல்லையென்றால் இவர் எந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கூறுகிறார். வினவு ஏதேனும் அமைப்பு சார்ந்துள்ளதா?
    புரிகிறது. கட்டுரையாளரை ஆதரிக்கும் இவர்கள் புலி அபிமானியாக இருப்பதாலேயே ரதி அவர்களின், ” இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை”.” என்னையே பாசிஸ்ட் என்று சொல்லும் நீங்கள் புலிகளை பாசிஸ்ட் என்று சொல்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை” என்ற கூற்றின் மேல் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் தோழர்.இரயாவை மட்டும் விமர்சிக்கிறார்கள்.

    • தோழர் பிரபாவதி, மணி, மாம்போ, அஸ்கர், ஜான், மாசே மற்றும் தோழர்கள் தயவு செய்து உடனே தங்களின் மின்னஞ்சல் தேவைப்படுகிறது.

      kalagam.nation@gmail.com

  87. சில நாட்களாக சொந்தப் பணி, விடுப்பு என இணையத்திலிருந்து ஒதுங்கி இருந்து விட்டு வந்து பார்த்தால் வினவு தளத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தேறியிருக்கிறது..

    இந்த பதிவைப் பொருத்தளவில் நான் தோழர் இரயாகரன் பற்றி கொண்டிருந்து பல புரிதல்களில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது சரியாக சொன்னால் மிகவும் குழப்பமாக இருக்கிறது. அவரைப் பற்றி பலரும் பலவாறு முன்பே விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தோழர்களிடமிருந்து அறிந்து கொண்டிருந்த தகவல்களைக் கொண்டே (அவரின் இணைய செயல்பாடுகளை மட்டும் வைத்தல்ல) அவரைப் பற்றிய எனது கருத்து இருந்தது. அதில் இப்போது சில குழப்பங்கள். குறிப்பாக “ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்…” என்று அவர் சொன்னதை வாசித்ததில் இருந்து எனக்கு நிறைய கேள்விகள் தோன்றி இருக்கிறது. அது ஒரு கட்சியா, குழுவா அல்லது வெளிநாடுகளில் தனித்தியங்கும் சில மார்க்சிய அறிஞர்களா… அவர்களின் போ.த என்ன செ.த என்ன… இப்படி நிறைய.. அதற்கான பதிலை இங்கே அவரிடம் இருந்து கோருவது எனது நோக்கமல்ல.. இந்த பதிவுகளை அமைப்புத் தோழர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே இங்கே விவாதம் ‘விவாதம்’ என்ற எல்லையைக் கடந்து மிகவும் பர்சனலாக மாறி நிற்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி ஒரு விவாதம் இது போன்ற ஒரு திறந்த வெளியில் நிகழ்வது சரியல்ல என்பதே எனது கருத்து. மேலும் யாரை முன்னிட்டு இங்கே விவாதம் நடக்கிறதோ அவரே இங்கே நடக்கும் விவாதங்களை ‘புலம்பல்கள்’ ‘கொசிப்புகள்’ என்று ஒதுக்கித் தள்ளிய பின் இங்கே அவரை நோக்கி கேள்விகள் எழுப்புவது, விமர்சனத்தை வைப்பது (அவரே முன்வந்து பதிலளிக்க விரும்பாத சூழலில்) இடையில் புகுந்து குளிர்காய நினைக்கும் எதிரிகளுக்கே கொண்டாட்டமாக முடியும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

    ஆனால் அவரைப் பற்றி எனக்கு எப்போதும் மாறாமல் இருந்து வரும் ஒரே ஒரு கருத்தை மட்டும் இங்கே சொல்கிறேன் – அது அவரின் கருத்துக்களில் / எழுத்துக்களில் ஒரு விதமான அதீதமான கடுமை தொணிக்கிறது என்பதே. எளிதில் அணுகி விவாதிக்க இயலாதவராகவும் அவர் மேல் விமர்சனம் வைக்க
    தயக்கம் கொள்ளச் செய்யுமாறும் இருக்கிறது அவரது அணுகுமுறை.

    உதாரணமாக நான் சிறு வயதிலிருந்து புலிகள் பற்றி நிறைய ஹீரோயிஸ கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். நான் வளர்ந்த ஊரிலும் ‘நான் பிரபாகரன் இந்தியாவிலிருந்த போது அவருக்கு காரோட்டினேன் தேரோட்டினேன்’ என்றெல்லாம் புல்லரிக்கும் புளுகுகளை சின்னப் பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லி புலி குறித்து எங்களிடமெல்லாம் ஒருவிதமான பிரமிப்பையே உண்டாக்கி வைத்திருந்தனர்… இப்படி புலிகள் குறித்து நான் கொண்டிருந்த தவறான கருத்துக்களை தவறான பிம்பங்களை நமது தோழர்கள் நிதானமாக விவாதித்து பொறுமையாக விளக்கியே உணர வைத்தனர். இத்தனைக்கும் ஆரம்பத்தில் நான் செய்திருந்த குதர்க்க வாதத்திற்கு ஒரு அளவே கிடையாது. எந்த கட்டத்திலும் அந்தத் தோழர்கள் சலித்துக் கொண்டது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய வைத்தார்கள்.. நான் கொண்டிருந்த ஒவ்வொரு பொய்ப் பிம்பங்களையும் உடைத்தனர் – அவர்களை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

    ஆனால் இதே தோழர் இரயாகரனாக இருந்திருந்தால் முதல் சந்திப்பிலேயே என்னை ஒரு புலி பாசிட் என்று முத்திரை குத்தியிருப்பார் – எனக்கும் ஈகோ
    இருக்கும் தானே… பதிலுக்கு நானும் இன்றைக்கு ஏதாவது ஒரு தமிழின ப்ரோக்கர் கும்பலில் நின்று மூஞ்சியை மூடிக்கொண்டு லூசுத்தனமாக உளரிக்கொண்டிருந்திருப்பேன்.

  88. வினவு தோழர்களுக்கும், தோழர் இரயா அவர்களுக்கும்,

    என்ன நடந்து கொண்டிருக்கிறது கடந்த சில நாட்களாக உங்களுக்குள்? வரைமுறையின்றி, எந்த விதமான இலக்குமின்றி மிகவும் அராஜகமாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது உங்களிருவருக்குமிடையிலான இவ்விவாதம். பார்ப்பவர்களை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கவும், புதிய நபர்களை திரும்பிப்பார்க்காமல் ஓடச் செய்யவும் மட்டுமே, விவாதம் எனும் பெயரில் நீங்கள் நடத்திவரும் கூத்து பயன்படும். மாறாக, ரதி எனும் புலிஆதரவாளரை சுய பரிசீலினைக்கு உட்படுத்த உங்களிருவராலும் முடியவில்லை. இருவரும் வெளிப்படையாகத் தோற்றுள்ளீர்கள். ரதி என்ற தனியொரு தோழருக்காக இல்லையென்றாலும் இன்னபிற புலியாதரவு கருத்துக்கள் வைத்திருக்கும் இதர வாசகர்களையும் சேர்த்து மீட்டெடுக்க வேண்டிய, மீண்டும் போராடக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் மொத்தமாகக் கைவிட்டதைப் போன்றுள்ளது நீங்கள் நடத்திவரும் இந்தக் கூத்து.

    தோழர் ரதியின் கூற்றுக்கள் வெளிப்படையான பாசிச தன்மை கொண்டவை என்று தர்க்கப் பூர்வமாக நிரூபித்து அவரது நேர்மையான பதில்களைப் பெற்று பரிசீலிக்கச் செய்வதற்கு மாற்றாக, தோழர் இரயாகரன் மிகவும் அவசரத்துடனும் அராஜகமாகவும் ஜனநாயகமற்றும் தமது கருத்துக்களைப் பதிந்துள்ளார் என்பது எனது தாழ்மையான கருத்து. இதற்கு சுற்றி வளைக்காமல் தோழர் இரயா (எப்போதும் போல்) நேரடியான பதில்களை நம் அனைவருக்கும் தருவார் என்று கருதுகிறேன்.

    அதேபோல தோழர் இரயாவின் இந்த அனுகுமுறையை சக தோழன் என்கிற பொறுப்போடு, போதிய இடைவெளியோடு விவாதத்தைக் கொண்டு சென்று ‘வறட்டுவாதம்’ என்றால் எப்படிப்பட்டது என்பதை தோழர் இரயாவிற்கும் நமக்கும் தெரிவித்திருக்க வேண்டிய வினவு, அவசரப்பட்டு ‘வறட்டுவாத’ முத்திரையை அவரின் மீது குத்தி தன் பங்கிற்கு அராஜகத்தை நிறைவேற்றியுள்ளது.

    இப்படி இவ்விரு தோழர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள, ஒன்றுக்கும் உதவாத அராஜகவாத மோதல் நம்மைப் போன்ற பார்வையாளர்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து இவ்விருவருக்கும் எந்தக் கவலையுமில்லை. ரதியையும் புலித்தலைமையையும் ஒன்றாகக் கருதி மூர்க்கமாக மோதத் தயாராகும் தோழர் இரயா ஒருபுறம்; இரயாவை, ஈழ அரசியல் குறித்துப் பேசத் தகுக்தியற்ற ஒரு மனிதனாக்கி தனிமைப்படுத்த வேண்டும் என்கிற போக்கு மறுபுறமும் வெகு வேகமாகக் கட்டமைக்கப்பட்டு, எதற்கும் உதவாத மணற்கோபுரம் போன்று உயர்ந்து நிற்கிறது.

    இதில் தோழர் இரயாவிற்கு ஜனநாயகத்தையும், வினவுக்கு புலிப்பாசிசத்தையும் கற்றுக்கொடுகிறோம் என்று கிளம்பி இங்கு பதிவிடக் கூடிய சில தோழர்கள் ஆவேசமாக ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்வது, தேவையா என்பதை வினவு தோழர்களும், தோழர் இரயாவும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த விவாதத்தினூடாக எந்த அரசியலை எங்களுக்குக் கற்றுக் கொடுக்க முனைந்துள்ளீர்கள், நீங்களிருவரும்?

    என்னைப் பொருத்த வரை, ரதியின் கருத்தை அவர் இங்கு சொல்வதற்கு உரிமை உள்ளது. அதனை மறுத்து போதிய தரவுகளுடன் (அவரை சுய புரிதலுக்குள்ளாக்கக் கூடிய வகையில்) கருத்துக்களைப் பதிய நம் அனைவருக்கும் கடமையும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான விவாதம் நடத்துவதற்கு முக்கியமான தேவை என்ன வென்றால், எதிர்கருத்துக்களை மதித்து விவாதிக்கக் கூடிய பண்பு இரு முகாமுக்கும் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில், ரதியின் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் எதிர்கருத்துக்களுக்கு தனது பதில் என்று எதையோ சொல்லி விவாதத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். எதிர் கருத்து கொண்டிருப்பவர் நமக்கு இதைவிட வேறு எந்த வாய்ப்பை அதிகபட்சமாக வழங்க முடியும் என்பதை, தோழர் இரயா அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

    புலிப்பாசிச அரசியலின் பால் ஆதரவு நிலையில் இருப்பதாகச் சொல்லும் ஒருவரை போதிய விவாதத்தின் மூலமாக, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா என்பதினூடாகத்தான் விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும், மாறாக அவரை நாமே முத்திரை குத்தி புலிப்பாசிச அரசியலுக்குள் தள்ளி மூழ்கடிப்பது முற்றிலும் அரசியலற்ற அராஜகமான நடைமுறையன்றி வேறில்லை.

    அதேபோல, தோழர் இரயாவை மையமான விவாத்திலிருந்து விலக்கி ‘வறட்டுவாத’த்திற்குள் தள்ளி தேவையற்ற விளக்கங்களை, வார்த்தைகளை, எள்ளல்களைப் பதிந்து வினவு வரம்பு மீறியிருப்பதுவும் ஏற்புடையதாக இல்லை. இதனை வினவு பரிசீலித்து இங்கு பதியப்படும் தேவையற்ற கருத்துக்களை நல்வழிப்படுத்த உடனடியாக முயலவேண்டும்.

    இதனை எனது வேண்டுகோளாக மிகவும் வருத்தத்துடன் இங்கு பதிகிறேன். தோழர்கள் அசுரன், முகிலன் ஆகியோரின் வருகை ஆறுதலளிக்கிறது. இருந்தபோதிலும், தோழர்கள் மா.சே., அரடிக்கெட்டு, டிகேன், மணி போன்றவர்கள் தங்களது கருத்தைப் பதிவதற்கு முன்னால் அதன் இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு பதியவேண்டும் என்றும் கோருகிறேன். இங்கு நேர்மையாக பரிசீலித்து பதிலளிக்க வேண்டியவர்கள் வினவு தோழர்களும், தோழர் இரயாவும்தான். அவர்கள் சார்பாக நாம் எந்த கருத்தையும் பதிந்துகொண்டிருப்பது முற்றிலும் பலனற்றதே.

    எனது இக்கருத்துக்கு மாற்றுக்கருத்திருக்கும் தோழர்கள். தொடர்ந்து பதியலாம். விவாத்தை நெறிப்படுத்த அவை உதவும் என்று நம்பிக் காத்திருக்கிறேன்.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

    • தோழர் ஏகலைவன் உங்கள் விமர்சனத்தை பரிசீலிக்கும் அதே வேளையில், எனது இலக்கு இங்கு இரயாகரனை ஒரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக சிலர் பார்க்கும் போக்கை அம்பலப்படுத்துவதும், வினவு செய்துள்ள வறட்டுத்தனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என்பதுமாகும்.

      இரயாகரன் தெளிவான மா.லெ அரசியலற்ற வறட்டுவாதங்களையும் , மார்க்சிய விரோத விமர்சனத்துக்கு அஞ்சும் போக்கையும் பின்பற்றுவதுமட்டுமல்லாமல் அதனுள் நமது அமைப்பு தோழர்களில் பலரையும் இழுத்துக் கொண்டிருக்கிறார்.

      வினவு தளத்தின் மீதான விமர்சனம் என்ற பெயரில் நமது அமைப்பின் மீதான விமர்சனங்களை செய்கிறார். குறிப்பாக முத்துக்குமாரின் மரணத்தை நாம் பார்த்த விதத்தில் அவருக்கு துளியும் ஒப்புதல் இல்லை. அப்போதே அவர் அதை விமர்சித்து எழுதி வந்தார், நம் அமைப்பின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சீபீஎம் சந்திப்பு தளத்தில் போய் பதிந்து வந்தார். இங்கு துவங்கியது அவர் செய்த தவறு. அடுத்த வாய்ப்பில் நடுநிலை என்று ஒன்று இல்லை என்று நான் எழுதிய நமது சரியான அரசியல் பார்வைக்கு பதிலாக எனக்கு ‘புலி’ ட்டத்தை கொடுத்தார். எனக்கு ஆதரவாக வினவு எழுதியதற்கு ‘ 20 ஆண்டுகளாக… ”என துவங்கும் ஒரு கட்டுரை எழுதினார், அடுத்து ரதியை எடுத்த எடுப்பிலேயே புலி என்று அழைத்தவர், வினவு தோழர்களை புலி ஆதரவாளர்கள் என்றார். இப்போது புலி அரசியலும் வினவும் சந்திப்பதாக எழுதுகிறார்.

      ஒருவர் மார்க்சிஸ்டு என்பதற்கு என்ன ஆதாரம்? நம் தோழர்கள் பலரை விட பிரகாஷ் காரத் மார்க்சியத்தை கற்று தேர்ந்தவர்தான், அவர் மார்க்சிஸ்டு என நாம் ஏற்றுக்கொள்கிறோமா? மார்க்சியம் எப்போது நடைமுறையில் இல்லையோ அப்போதே வறட்டுவாதம் வந்துவிடுகிறது.

      இதைத்தான் வினவு சுட்டிக்காட்டியுள்ளது, ஆனால் இரயா மார்க்சிய நடைமுறை இல்லாது இருப்பதை நமது தோழர்களில் சிலர் விமர்சனம் செய்வதை விட்டு ஆதரிக்கிறார்கள். அவர் மீது வினவு மற்றும் நான், மணி, பிரபாவதி, அரடிகட் போன்றவர்கள் ஆதாரத்தோடு வைக்கும் விமர்சனங்களை தனிநபர் தாக்குதல் என்றும், கேவலப்படுத்துவாதாகவும் குறிப்பிடுகிறார்கள். அந்த தோழர்களின் நோக்கங்களை திரித்து எழுதுவதன் மூலம் இரயாவை பாதுகாக்கிறார்கள். இரயாவின் அராஜகமான போக்கை மருந்தளவுக்கு கூட இவர்கள் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      இரயாவை ஆதரிக்கும் தோழர்கள் முன்வைக்கும் ஒரே வாதம் புலிஎதிர்ப்பு மட்டுமே, இது இராயகரனுடைய வாதம், இது எப்படி நமது தோழர்கள் வாதமாயிற்று, ஈழத்தை பொறுத்த வரை புலி எதிர்ப்பு நமது பிரதான முழக்கம் இல்லையே. அதை நம்வாயில் திணிக்க இரயா முயற்சிப்பது ஏன்?

      இங்கே நம் தோழர் ஒருவர் கேட்கிறார், ஒரு புலி அபிமானி எப்படி அகதி வாழ்க்கையை பற்றி எழுத முடியும் என்று, இது எப்படிப்பட்ட புரிதல்? தனது சொந்த முயற்சியில் ஈழத்து வரலாறை புரிந்து கொள்ளாமல், இரயாகரனின் எழுத்து மூலமாக கற்றால் இங்கே தான் செல்ல முடியும். இதைத்தான் இரயா விரும்புகிறார், இதை நாம் அனுமதிப்பதா?

      இந்த விவாதம் நிச்சயமாக கடும் துன்பத்தைதான் அளிக்கிறது, ஆனால் இது நம்மிடையே நிலவும் வறட்டுவாதத்தை ஒழிக்கும் எனில் அந்த மகிழ்ச்ச பெரியதல்லவா?

      எனது பின்னூட்டங்களை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள் நீங்கள் முரண்படும் விசயம் எதுஎன தெரிவித்தால் உங்களோடு விவாதித்து, தவறென்றால் மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கறேன். உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே, அது எப்போதும் எம்மை செம்மை படுத்தவே உதவும்

      • //எனது இலக்கு இங்கு இரயாகரனை ஒரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக சிலர் பார்க்கும் போக்கை அம்பலப்படுத்துவதும், வினவு செய்துள்ள வறட்டுத்தனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என்பதுமாகும்.

        இரயாகரன் தெளிவான மா.லெ அரசியலற்ற வறட்டுவாதங்களையும் , மார்க்சிய விரோத விமர்சனத்துக்கு அஞ்சும் போக்கையும் பின்பற்றுவதுமட்டுமல்லாமல் அதனுள் நமது அமைப்பு தோழர்களில் பலரையும் இழுத்துக் கொண்டிருக்கிறார். //

        இதுதான் நோக்கமெனில் இதனை வெளிப்படையாக அறிவித்து தனியொரு விவாதமாக செய்திருந்திருக்க வேண்டும். புலிப் பாசிசம், புலி ஆதரவளாரை கையாள்வதில் உள்ள அனுகுமுறை சார்ந்த முரன்பாடு குறித்த விவாதத்தில் ‘ரயாகரன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சிலர் பார்க்கும் போக்கு’ முன் வந்து முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வது சரியான விமர்சன-சுயவிமர்சன முறையல்ல.

        அசுரன்

      • அசுரன், இங்கே , இந்த பிரச்சனையை ஒட்டி வெளிப்பட்டிருக்கும் தவறுகள் என்று நான் கருதுவதை இங்கேதானே விவாதிக்க வேண்டும். புலிப்பாசிசத்தை அனுகுவதில்-வறட்டுவாதம், அதை சில தோழர்கள் விமர்சிக்காமல் இருப்பது, அவர் தவறே செய்திருந்தாலும் அவரை இப்படி ‘பப்ளிக்காக’ விமர்சிக்கலாமா என்று கேட்பது, இது எல்லாம் இந்த பிரச்சனையை ஓட்டி எழுந்ததுதானே.

        நீங்கள் ரதியின் முதல் பதிவில் இராயகரன் எனக்கு பதிலாக எழுதிய பின்னூட்டத்தையும் பிறகு அதே பதிவில் வினவுடன் இரயாவின் வாதத்தையும், வாசியுங்கள். கூடவே முத்துக்குமார் மரணத்தை ஒட்டி வினவு மற்றும் நமது அமைப்பின் மீது இரயா வைத்த விமர்சனத்தையும், அந்த பதிவில் சூப்பர் லிங்ஸ் இரயாவுக்கு எழுதிய பதிலையும் வாசியுங்கள். இந்த விவாத்த்தின் மூலம் அங்குதான் உள்ளது.

      • //அதை சில தோழர்கள் விமர்சிக்காமல் இருப்பது, அவர் தவறே செய்திருந்தாலும் அவரை இப்படி ‘பப்ளிக்காக’ விமர்சிக்கலாமா என்று கேட்பது, இது எல்லாம் இந்த பிரச்சனையை ஓட்டி எழுந்ததுதானே.//

        கீழே உள்ளது வினவு தளத்தின் அறிமுக உரை:
        //தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.

        இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம்.

        எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை.

        அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை.//

        இந்தத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வரம்புக்குட்பட்டுதான் தனிநபர்களின் ஆளுமை(அவர்களின் அரசியல் அல்ல) மீது நாம் வினையாற்ற முடியும். இப்படிப்பட்ட மெய்நிகர் உலகில் இருந்து கொண்டு பகை முகாமைச் சேர்ந்தவரை வேண்டுமானால் நாம் விவாதித்து விரிவாக அம்பலப்படுத்தலாம். நட்பு சக்திகளின் அரசியலை வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால், தனிநபர்களின் பலஹீனங்களை? மேலும், தோழமை சக்திகளை இந்த தளத்தில் வைத்து கையால்வது மிக மிக அதிகமாகவே வரம்பிற்குட்பட்டது. ஒருவேளை மா.சே. ரயாகரன் குறித்த தனது கருத்துக்களை சமீப காலமாகவே அவதனித்து வந்திருந்தால் எனில் அவையனைத்தையும் ரதி, புலி, புலிப் பாசிசம் குறித்த விவாத களத்தில் வைப்பது முறையல்ல. மாறாக, அவற்றை தனிப்பட்ட முறையில் ரயாகரனுடன் விவாதித்து தீர்ப்பதே சரியானதாகும்.

        ஏனேனில், ரதியும், புலியும், புலிப் பாசிசமும் அரசியல். ரயாகரனின் வறட்டுத்தனமென்பது ரயாகரன் என்ற தனிநபர் மீதான விமர்சனம். குறிப்பாக அவர் நமது தோழர்.

        மேலும், வினவு தொடுத்துள்ள வறட்டுத்தனத்துக்கு எதிரான போராட்டம் என்பது இங்கு முதன்மையானதா அல்லது ஈழ அரசியலில் பிற சக்திகளை சரியான அரசியலுக்கு கொண்டு வருவது முதன்மையானதா?

        ரயாகரனுடனான முரன்பாட்டை பின்னுக்குத் தள்ளி, ஈழ அரசியலில் புரட்சிகர சக்திகளின் நடைமுறை செயல்பாடுதானே முன்னுக்கு வந்திருக்க வேண்டும்?

        இந்த அம்சத்தில் ரயாகரனுடனான முரன்பாடு என்பது இணையாக குறை முக்கியத்துவத்துடன் பொது வெளியல்லாத ஒரு தளத்தில் விவாதம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லையே?

        மாறாக, வினவு வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று ஆரம்பித்ததற்காக காத்திருந்தது போல சகட்டு மேனிக்கு விமர்சன கனைகளை தொடுப்பது சரியான விமர்சன முறையல்ல.

        நட்பு முரன்பாடு, பகை முரன்பாடு அடிப்படையில் கையாளுவது இங்கு எங்குமே வெளிப்படவில்லை.

        ரதியும், ரயாகரனும் எமக்கு ஒன்றே.. அரசியலும், தனிநபரும் எமக்கு ஒன்றே… நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று மிக மிக மிக நேர்மையாக இருப்பதும் ஒரு வித கற்பனாவாதமே, பரவச போக்கே…

        தோழமையுடன் ஐக்கியமாவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் பயன்படுத்திக் கொள்வதே நல்ல புரட்சிக்காரனுக்கு அழகு. ஐக்கியத்தை வலுப்படுத்துவது என்பது தோழமையான விமர்சனமே.. ரயாகரன் மீதான விமர்சனங்கள் எதிலும் தோழமையைவிட நக்கலும், கிண்டலுமே ெளிப்பட்டுள்ளது என்பது எனது அவதனிப்பு.

        அசுரன்

  89. ரதி
    பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?
    தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் காரணமாக இருக்கவில்லையா?

    மீண்டும் இந்த மையமான கேள்விக்கு பதில் தருமாறு உங்களை அழைக்கின்றேன்.

    • இணையத்தில் வினவு என்ற ஊடகம் மூலம் வினை செய்யத் தூண்டும் சிந்தனை ரீதியான செயல்பாட்டுக்கு முடிவு செய்த தோழர்கள், அவ்வாறான செயல்பாட்டுக்கான இலக்கு, விதி, திட்டங்கள் எதையும் வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை.

      வினவு என்ற ஊடகத்திற்கு என்று ஒரு வரம்பு உண்டு, அதற்குரிய வீச்சு என்று ஒன்று உண்டு, அதற்குட்பட்டு நமது இலக்குகிற்கான செயல்திட்டம் வைத்து செயல்பட்டிருந்தால் ரயாகரன் வினவு முரன்பாட்டின் ஆரம்பக் கண்ணியிலேயே சரியான நடைமுறையை கண்டறிந்திருக்கலாம்.

      மெய் உலகின் விதிகள், மெய் நிகர் உலகில் அதே போலான கோணத்தில் செயல்படுவதில்லை.

  90. திருத்தம் :
    :தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் தடையாக காரணமாக இருக்கவில்லையா?

    • சிறி,

      //:தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் தடையாக காரணமாக இருக்கவில்லையா?//

      நான் ஏற்கனவே இந்த கேள்விக்கு பதிலளித்திருந்தாலும், என் வாய்க்குள்ளிருந்து எதையாவது புடுங்கவேண்டுமேன்று கங்கணம் கட்டிக்கொண்டு மையமான கேள்வி, மையமான கேள்வி ….என்று மறுபடியும், மறுபடியும் ஒரே புள்ளியில் நின்று சுழன்று கொண்டிருக்கிறீர்கள். சரி, நீங்கள், நான் கோரும் ஐக்கியத்திற்கு பாசிசம் தடையாக இல்லையா என்று கேட்கிறீர்கள். உங்களுடைய விமர்சனங்களின் படி பார்த்தால் நீங்கள் குறிப்பிடும் பாசிசம் அல்லது பாசிஸ்ட் என்பது புலிகளை தான் குறிப்பிடுகிறது. அதாவது புலிகள் தடையாக இருந்தார்களா என்பதை மறைமுகமாக கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், நான் எனது வாயால் புலிகளை பாசிஸ்ட்கள் என்று சொல்லவேண்டும் என்பது உங்களின் எதிர்பார்ப்பு, இல்லையா? நான் ஏற்கனவே சொன்னது போல், என் வரையில் புலிகள் விடுதலைப் போராளிகள்.

      நான் விரும்பும் ஐக்கியம் மக்களிடமிருந்து தான் வரவேண்டும். அவர்கள் தான் ஐக்கியமாக, ஆம், எங்களுக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லவேண்டும். அதை இந்நாட்களில் அவர்களே சொல்லத்தொடங்கி விட்டார்கள். இந்த ஐக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர்கள் யார்? இன்று, ஈழத்தை தவித்துப் பார்த்தால் மக்கள் தங்கள் வேற்றுமைகளை களைந்து, ஓரணியில் திரண்டார்கள் ( இன்னும் திரள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது ) என்றால், அது யாரால்? 1956 இன் சிங்களம் மட்டும் அரச கரும மொழி சட்டம் முதல் ஈழத்தமிழனின் இனப்படுகொலை வரை சர்வதேசமும் பேசுகிறதே, யாரால்? நண்பரே, ஈழத்தமிழர் விடயத்தில் இன்று ஐக்கியம் என்பது எங்களின் Goal என்னவென்று தீர்மானித்து விட்டு, அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு ஒற்றுமையாக செயற்படுவதுதான். உங்கள் பதில்களைப் பார்த்தால் உங்களின் Goal புலிகளை குறை சொல்வதை தவிர வேறெதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆக, அந்த ஐக்கியத்திற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?

      //தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் தடையாக காரணமாக இருக்கவில்லையா?//

      இப்போது, இந்த கேள்வியை நீங்கள் உங்கள் நண்பரைப்பார்த்தும், உங்கள் நண்பர் உங்களைப் பார்த்தும் கேளுங்கள், கேட்கச் சொல்லுங்கள். பதில் வருகிறதா?

      • ரதி, தமிழர்களின் ஐக்கியத்தை குலைத்தவர்கள் புலிகள் என்பதற்கான ஆதாரங்கள். இந்த உண்மையை மறைத்து ஐக்கியம் பற்றி பேசுவது வரட்டுத்தனம்.

        ரதி குறிப்பிடும் காலத்தில் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) விடுதலைப் புலிகள் மட்டும் களத்தில் நிற்கவில்லை. TELO, PLOT, EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் சேர்ந்து நின்று இராணுவ வெளியேற்றத்தை முறியடித்தார்கள். விடுதலைப் புலிகள் பதவி அதிகார வெறியில் மற்றைய விடுதலை இயக்கங்களை இயங்க விடாமல் தடை செய்தனர். மற்றைய இயக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சண்டையிடாமல் சரணடைந்த போராளிகளை காட்டுமிராண்டித்தனமாக யாழ்ப்பாண தெருக்களில் உயிரோடு கொளுத்தினார்கள். புலிகளின் இனப்படுகொலைக்கு தப்பிப் பிழைத்த போராளிகள் எதிரியான இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். யாழ்ப்பாணத்தில் போராளிகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் இராணுவம் யாழ் குடாநாட்டை கைப்பற்றியது. ரதிக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று மறைக்கிறார்.

      • In May 1986, the LTTE in a bid for totalitarian control attacked and massacred hundreds of members of the fellow militant group Tamil Eelam Liberation Org anisation (TELO). Dead and dying members of the latter were burnt at street junctions. The people said among themselves, “We have produced our own Hitlers.” The LTTE quickly went around making loudspeaker announcements: “No one must talk about or analyse what has happened.” The liberation struggle died.
        The younger generation made a last effort in November 1986, when students of the University of Jaffna organised a mass protest led by the dynamic student leader Vimaleswaran, and the LTTE negotiated a settlement. But as soon as the protest dispersed, LTTE hunted down the leaders and Vimaleswaran was assassinated subsequently.
        Rajan Hoole
        http://www.littlemag.com/growingup/rajanhoole.html

        http://www.tamilarangam.net/document/puja/1991/08_1991_02.pdf

      • சிறி,

        இப்போது விவாதம் புலிகள் வரலாறு நோக்கி திரும்புகிறதா? புலிகள் பற்றி இவ்வளவு நாளும் நீங்களும், Tecan, மற்றும் சர்வதேச ஊடகங்களும் சொல்லாததா?

      • //இப்போது விவாதம் புலிகள் வரலாறு நோக்கி திரும்புகிறதா? புலிகள் பற்றி இவ்வளவு நாளும் நீங்களும், Tecan, மற்றும் சர்வதேச ஊடகங்களும் சொல்லாததா?// அப்போ இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியுமா? எல்லாம் தெரிந்து கொண்டு தானே மறைத்தீர்கள்? உங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள என்ன தயக்கம்? தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் தடையாக இருந்ததை இறுதியில் ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. இறுதியில் உங்களை ஆதரித்து பேசிய மக்குகள் தான் பாவம்.

      • சூடான செய்தி! புலிகள் பாசிஸ்ட்கள் என்பதை ரதி ஏற்றுக்கொள்கிறார்.

        //புலிகள் பற்றி இவ்வளவு நாளும் நீங்களும், Tecan, மற்றும் சர்வதேச ஊடகங்களும் சொல்லாததா?//
        Rathi
        Posted on September 1, 2009 at 11:10 pm

  91. தோழர்களுக்கும் குறிப்பாக ஏகலைவனுக்கும் வணக்கம்.

    நடத்த முடிந்ததைப் பற்றிய எனது கருத்தை, நான் வினவு தளத்தில் பதிவு செய்யவுள்ளேன். தோழமையுடன் அனுகுவோம். தற்போது வேலையில் இருப்பதால் உடன் கருத்தை தெரிவிக்க முடியவில்லை.

    பி.இரயா

    • தோழர் இரயா அவர்களுக்கு நன்றி,

      விவாதம் எப்படி செய்யவேண்டும் என சொல்லிக் கொடுத்த வினவில். தேவையற்ற தனி மனித தாக்குதல் தேவையில்லை, இனியும் நையாண்டி நக்கல் என்று தோழர் இரயாவையோ அல்லது மற்ற தோழர்களையோ கிண்டலடித்து கொண்டிருக்காமல் ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம்.அப்படி தொடராதபோது அது வினவின் மதிப்பினை பெருமளவில் குறைக்கிறது. நாங்கள் இங்கு அரசியல் கற்கத்தான் வந்தோம் . குழயாடி சண்டையை காண்பதற்கல்ல.

      தோழமையுடன்
      கலகம்

    • தங்களது வருகைக்கும் பதிலுக்கும் நன்றி தோழர். தங்களது புரிதலுக்காகவும் காத்துக்கிடக்கிறேன்.

      நன்றி.

      ஏகலைவன்.

  92. தோழர் மா.சே , ஆர்.கே கருத்துடன் வரிக்கு வரி உடன்படுகிறேன்,

    தோழர் விடுதலை உங்கள் கேள்விக்கு மா.சே சொல்லியிருக்கும் பதிலுடன் நான் உடன்படுகிறேன். தவிர தோழர் இரயாகரனை விமர்சிக்காத நீங்கள் அரடிக்கெட்டை விமர்சனம் செய்ய விழைவது ஏனென்று பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    தோழர் ஏகலைவன் என்னுடைய விமர்சனம் சரியாக இலக்கில்தான் வைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி, அதை விரிவாக எழுதவும், தவறிருந்தால் மாற்றிக்கொள்ள உதவும்.

    தோழர் கலகம், குழாயடி சன்டையாக இந்த பிரச்சனையை மாற்றிய ‘உங்கள்’ இரயாகரனை பற்றிய விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். தனிமனித தாக்குதல் என்ற உங்கள் வாதம் ஆதாரமற்றது என்று மறுக்கிறேன். உங்களின் இரயாகரனை விமர்சனம் செய்யாத போக்கை தாராளவாதம் என்று விமர்சனம் செய்கிறேன்.

    • தோழர் அரடிக்கெட்டு,

      தங்களது புரிதலுக்கு நன்றி. விரிவாக எழுத உங்களின் நடவடிக்கைகளின் மேல் விரிவான விமர்சனம் எதுவும் எனக்கு இல்லை. உங்களது கருத்துக்களில் நான் பெருமளவு மாறுபடவில்லை. எல்லாம் அனுக்குமுறை சார்ந்ததுதான். தோழர் இரயாவிற்கும் உங்களுக்கும் இடையிலான முரன்பாடு அவரது அனுகுமுறை சம்பந்தப்பட்டதே ஒழிய அவரது அரசியலே எதிர் முகாமின் அரசியல் என்பதைப் போன்றது அல்ல, என்று நம்புகிறேன்.

      அவரது அனுகுமுறையில் தவறிருக்கிறது என்பதுதான் எனது வாதமும். இதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். அதேவேளையில், அவரை தனிப்பட்ட முறையில் முத்திரை குத்தி ஒதுக்கும் போக்கு அவரது தவறான அனுகுமுறையினை ஒத்ததொரு வடிவம்தான், என்பதில்தான் தங்களை நிதானமாக விவாதிக்கக் கோரினேன்.

      தவறிருந்தால் மன்னிக்கவும்.

      தோழமையுடன்,
      ஏகலைவன்.

      • தோழர் ஏகலைவன், இரயாகரன் ஒரு தனிநபர், அவர் ஏதாவது ஒரு அமைப்பை சார்ந்தவராக இருந்தால் அந்த அமைப்பை விமர்சனம் செய்யலாம், அப்படியில்லையென்பதால் இது தனிநபர் விமர்சனமாக தெரிகிறது. தவிர வறட்டுவாதம் என்பது விமர்சனம் முத்திரை குத்துவது அல்ல. அவர் ரதியை பாசிஸ்டு என்று விமர்சனம் செய்ததும் அதற்கான அவரது விளக்கங்களும்தான் அவரை வறட்டுவாதி என்று விமர்சிக்க தூண்டியது. மற்றபடி இந்த விவாதம் அவரை சரிசெய்யும் நோக்கில் அவருக்கு பயனளிக்கும் நோக்கில் மாற வேண்டும் என்பதில் எனக்கு உங்களுடன் முழு உடன்பாடு உண்டு. எச்சரிக்கையாக இருக்கிறேன்.

    • ////////தோழர் கலகம், குழாயடி சன்டையாக இந்த பிரச்சனையை மாற்றிய ‘உங்கள்’ இரயாகரனை பற்றிய விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். தனிமனித தாக்குதல் என்ற உங்கள் வாதம் ஆதாரமற்றது என்று மறுக்கிறேன். உங்களின் இரயாகரனை விமர்சனம் செய்யாத போக்கை தாராளவாதம் என்று விமர்சனம் செய்கிறேன்.//////

      தோழர் அரைடிக்கெட் அது என்ன உங்கள் ரயாகரன் ?
      இதற்கு என்ன பொருள் ?

      • உங்கள் என்ற வார்த்தையை அடைப்புகுறியில் போட்டிருக்கிறேனே தோழர். கலகம் இரயாகரனை விமர்சனம் செய்யாதிருப்பது தாராளவாதம் என்பது என் விமர்சனம் அதனால் ‘உங்கள்’ விமர்சனம் தேவை என்பதை அழுத்தி சொல்லியிருந்தேன், தவிர இரயாகரனுக்கு முன்னால் உங்கள் என்ற வார்த்தை வருவதால் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதும் அடைப்பு குறியிட்ட காரணம்.

        இருந்தாலும் தவறான புரிதலை அது ஏற்படுத்துவதால் அதை ‘உங்களின்’ என்று மாற்றி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்களே ஒரு முடிவுக்கு வராமல் கேட்டதற்கு நன்றி.

    • தோழர் அரை டிக்கெட்,

      ரதியை தோழர் இரயா பாசிஸ்ட் என சொல்வது போல, தோழர் வினவு மற்றும் நீங்கள் தோழர் இரயாவை வறட்டுவாதி என்பது போல இப்போது தோழர் இரயாவை “உங்கள் இரயாவாக்கியிருக்கிறீர்கள்”. இது வறட்டுத்தனம் இல்லையா இரயாவின் மீது எனக்கு விமர்சனம் இல்லை என்று தெரியுமா?
      உங்கள் இரயா எங்கள் இரயா என்று நீங்கள் எதிர் நிலைக்கு தள்ளுகின்றீர்களா இல்லையா? இது தேவையா? தோழர் ஏகலைவனின் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை?

      ஒரு அரசியல் விவாதத்தை இப்படி மாற்றியதற்கு யார் சுயவிமர்சனம் ஏற்கப்போகிறார்கள்.
      கருத்தை கருத்தால் வெல்லாமல் கிண்டலும் நக்கலும் எதை தெளிவு படுத்தபபோகின்றது. தோழர் ஏகலைவனின் கருத்தில் 100 சதவிகிதம் ஒத்துழைக்கிறேன்.
      னீங்கள் கேட்கலாம் விமர்சனமிருந்தால் இங்கு பதிய வேண்டியது தானே என்று நான் வினவின் விமர்சனத்தை கூட இங்கு பதியவில்லையே.

      • மேலே சூப்பர் லிங்கு தோழருக்கு ‘உங்கள்’ பற்றி விளக்கம் அளித்துவிட்டேன் பார்க்கவும்.

        உங்கள் மனதிற்குள் நீங்கள் இரயாகரன் மீது விமர்சனம் கொண்டிருந்தால் அது எனக்கெப்படி தெரியும். நீங்கள் எனக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் கூட இரயாகரனை விமர்சனம் செய்யவில்லையே மாறாக அவர் ஏதோ கோபப்படுவதாகவும் அவரை புரிந்துகொள்ளாமல் நான் அவரை கிண்டல் செய்கிறேன் என்ற பொருள் வருதாகும் தானே அது இருந்தது.

        மனதுக்குள் விமர்சனம் வைத்துக்கொண்டு அதை சொல்லாமல் இருப்பது விமர்சனம் செய்யாதிருப்பதை விட தவறான செயல். உடனடியாக பரிசீலியுங்கள்.

        மேலும் இங்கே நான் நக்கல் நையாண்டி செய்யவில்லை, அவர் மீது என்க்கிருந்து அரசியல் விமர்சனங்களை வைத்திருக்கிறேன். அதற்கு அவரோ அவருடைய கருத்தில் உடன்பாடு உள்ளவர்களோ மறுத்து எழுதினால் விவாதிக்கவும் கருத்தை மாற்றிக்கொள்ளவும் தயார்.

  93. தோழர் மா.சே. அவர்களுக்கு,

    உடனடியான பதிலுக்கும், புரிதலுக்கும் நன்றி, தோழர்.

    ////////தோழர் ஏகலைவன் உங்கள் விமர்சனத்தை பரிசீலிக்கும் அதே வேளையில், எனது இலக்கு இங்கு இரயாகரனை ஒரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக சிலர் பார்க்கும் போக்கை அம்பலப்படுத்துவதும், வினவு செய்துள்ள வறட்டுத்தனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என்பதுமாகும்.////////

    தோழர் இரயா அவர்களின் அனுகுமுறை வறட்டுத்தனம்தான் என்று முத்திரை குத்தி ஒதுக்குவது, அவர் ரதியை ‘இவர் ஒரு பாசிஸ்ட்’ என்று கூறி புறந்தள்ள முயலுவதைப் போன்றதொரு அரைகுறை புரிதல்தான், தோழர். தோழர் இரயாவிற்கும் வினவு தோழர்களுக்குமான முரண்பாடு நட்பு முரண்பாடு என்றே நான் நம்புகிறேன். அந்த நட்பு முரண்பாடு இப்போது இரு பெரும் முகாம்களுக்கிடையிலான பகை முரண்பாட்டைப் போல காட்சியளிப்பதை, காணச் சகிக்க வில்லை. நம் எல்லோருக்கும் பல்வேறு அரசியலை, குறிப்பாக உலகமயம், புலிப்பாசிசம், சிங்கள பேரினவாதம் போன்றவற்றின் தன்மைகளை, அவற்றை வர்க்கப் பார்வையுடன் அனுகுதலையெல்லாம் நிரம்பக் கற்றுக்கொடுத்திருக்கிறது, தோழர் இரயாவின் எழுத்துக்கள். அதை நான் உறுதியாக நம்புகிறேன். அதே வேளையில், அவரின் கடுமையான அனுகுமுறை, போதிய புரிதலற்ற கோபாவேசம் ஆகிய போக்குகளை நானும் கண்டிக்கிறேன். ஆனால், அதை ‘வறட்டுவாதம்’ என்று முத்திரை குத்தி அதற்குள் அடைத்து வைக்க முயற்சிப்பது, அல்லது அவரை தனிமைப்படுத்துவது, தோழர் இரயா அவர்களின் போக்கை மாற்றியமைக்க உதவாது. அவரது சரியான புரிதலையும் பரிசீலனையையும் இப்படி முத்திரை குத்தி குற்றம் சுமத்துவதன் மூலம் நாம் ஒரு போதும் பெறமுடியாது. இது அவரிடத்திலிருந்து மட்டும் அல்ல வேறு எவரிடத்திலிருந்தாலும் இதுதான் நிலைமை.

    இதுபோன்ற அனுகுமுறையில்தான் தோழர் இரயா, தோழர் ரதியை விமர்சித்ததன் மூலம் நம்மிடமிருந்து வேறுபட்டிருக்கிறார், என்பதை நாம் மறக்க முடியாது. உங்களைப் பற்றி ஒரு கற்பனையான பிம்பத்தை நான் எனக்குள் கட்டிவைத்துக் கொண்டு தோழர் மா.சே அவ்வாறு நடக்கவில்லை என்றால், உங்கள் மீது கோபத்தைக் கொட்டுவதால் என்ன விளைவை நான் பெற்றிட முடியும்? எதிர்கருத்தாளரின் இயல்பு நிலையை நாம் அங்கீகரித்தால்தான் அவருடன் தொடர்ந்து விவாதிக்கவோ, கருத்தளவில் வென்றெடுக்கவோ முடியும்.

    எனவே, நீங்கள் இங்கு பதிந்துள்ள கருத்துக்களில் நான் பெருமளவு வேறுபடவில்லை. வினவு வறட்டுவாதத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகவும், அதனை ஆதரிக்கும் போக்கில்தான் நான் எழுதினேன் என்றும் நீங்கள் சொன்ன விடயத்தில் மற்றும் எனக்குக் கொஞ்சம் மாற்றுக்கருத்து இருக்கிறது. வினவின் போராட்டம் இத்தனை வெளிப்படையாக, நேர் எதிர் முகாமில் இருக்கும் ஒருத்தருக்கு நிகராக தோழர் இரயாவைக் கற்பனை செய்து கொண்டு மூர்க்கமாக நடைபெறுவதாகக் கருதுகிறேன்.

    மேற்கண்ட விவாதங்களையும், தோழர் இரயாவின் தொடர் பதிவுகளையும் பார்க்கும் போது இவற்றிலிருந்து ‘தனிமனித தாக்குதல்களைத் தவிர’ வேறெதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட விவாதம் கூட ஒருவிதமான வறட்டுவாதமாகவே தோன்றுகிறது. தோழர் இரயா, தோழர் ரதியை ‘பாசிஸ்ட்’ என்று அடையாளப்படுத்துவதைப் போன்று, வினவு தோழர்கள், இரயாவை ‘வறட்டுவாதி’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். இரண்டும் தவறானதுதான் என்பது என்னுடைய புரிதல். வறட்டுவாததிற்கு எதிரான போராட்டம் என்கிற தலைப்போடு தொடங்கி முழுக்க முழுக்க வறட்டுத்தனமான தனிமனித தாக்குதல்களிலேயே பயனிக்கிறது.

    இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தோழர் ரதி அவர்களை புலிப்பாசிச விழுமியங்களுக்குள்ளிருந்து விடுவிக்க இந்த இரண்டு (வினவு, இரயா) தோழர்களும் போராட வேண்டும். அதை விடுத்து மற்றவர்களுக்கு கற்பிக்கக் கூடிய ஆளுமை படைத்த இவ்விரு தோழர்களும், வறட்டுவாதத்தில் தத்தமது ஆளூமைகளை விரயமாக்கிக் கொண்டிருப்பதை, வாசகன் என்கிற முறையிலும் மா.லெ. அரசியலை நேசிப்பவர்கள் என்கிற முறையிலும் நாம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். தடுத்து நிறுத்துவோம்.

    உங்களுடைய கருத்தைப் பதியுங்கள் தோழர் மா.சே.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  94. //இல்லை அடக்குமுறையும் பாசிசமும் நேர்ந்தால் கூட்டுத்துவத்தையும், அமைப்பையும் கைவிட்டு ‘தனி’யொரு மார்க்சிஸ்டாக மாறும் வழியை இரயா முன்மொழிகிறாரா//

    ha ha ha

  95. //அவரது அனுகுமுறையில் தவறிருக்கிறது என்பதுதான் எனது வாதமும். இதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். அதேவேளையில், அவரை தனிப்பட்ட முறையில் முத்திரை குத்தி ஒதுக்கும் போக்கு அவரது தவறான அனுகுமுறையினை ஒத்ததொரு வடிவம்தான், என்பதில்தான் தங்களை நிதானமாக விவாதிக்கக் கோரினேன்.
    /

    எப்படி ஒருவரின் சிந்தனை வேறு அனுகுமுறை வேறு என பிரிப்பீர்கள்
    சிந்தனையில் ஒரு முக்கிய தவறு இருந்தால்தான் அனுகுமுறையில் தவறு இருக்கும் சிந்தனைக்கு பிறகுதான் செயல்
    உடனே கருத்து முதல்வாதம் என சொல்லாதீர்கள்

    • //////////எப்படி ஒருவரின் சிந்தனை வேறு அனுகுமுறை வேறு என பிரிப்பீர்கள்
      சிந்தனையில் ஒரு முக்கிய தவறு இருந்தால்தான் அனுகுமுறையில் தவறு இருக்கும் சிந்தனைக்கு பிறகுதான் செயல்
      உடனே கருத்து முதல்வாதம் என சொல்லாதீர்கள்/////////////

      நண்பர் தியாகு,

      இங்கு யாருக்கும் அக்மார்க் புனிதர் என்று முத்திரை குத்த நாங்கள் முயற்சிக்கவில்லை. குற்றம் சாட்டி புறக்கனித்து ஒதுக்கித்தள்ளுவதற்கும், பொறுப்புடன் தோழர்களை அனுகி அவர்களது தவறை உணர்த்தி மீட்டெடுப்பதற்கும் இடையிலான முரன்பாடுகளே இவ்விவாதத்தில் மேலோங்கி நிற்கின்றன. அதைச் சரி செய்வதற்கான முயற்சியிலான அனுகுமுறைதான் இது.

  96. தோழர் ரயாவினுடைய எந்த நூலையும் நான் முழுமையாக
    வாசித்ததில்லை துவக்கத்தில் அவை கடினமான ஆனால்
    விசயமுள்ள நூல்கள் என்று தான் கருதினேன் ஆனால்
    பின்னர் தான் அது அரசியல் வறட்டுத்தனத்தின் விளைவு
    என்பதை அறிந்தேன்.எனவே நூல்களில் ஒன்றுமில்லை
    என்று நான் கூறவில்லை.விசயமும் உண்டு எனினும்
    அது நடைமுறையற்ற தத்துவத்தின் விளக்கமாகவே இருக்கிறது.

    வினவு தளத்தில் நடக்கும் விவாதத்தில் கடந்த சில
    நாட்களாக கவனித்துக்கொண்டு தான் இருந்தே
    பின்ணூட்டங்கள் எதுவும் போடவில்லை.
    இன்று தான் நான் எனது பின்ணூட்டத்தை இடுகிறேன்.

    ஒரு அகதி பெண்ணாக ரதி தனது அனுபவங்களை
    வினவு தளத்தில் எழுத முன் வந்ததும்,வினவு
    அவரை எழுத வைத்ததும் வரவேற்கத்தக்கது.
    சில தோழர்கள் கூறுவதைப் போன்று ரதி ஒன்றும்
    ஈழ வரலாறை எழுதவில்லை,தனது அகதி
    அனுபவங்களை தான் எழுதினார்.

    அதே போன்று முதல் பகுதியை எழுதிய‌ போதே
    அனைத்தையும் எழுது,மறைக்காமல் எழுது,
    புலியை பற்றி எழுது என்று அவரை தொடர்ந்து
    வலியுறுத்தியது என்பதே மறைமுகமான மிரட்டல்
    என்று தான் நான் கருதுகிறேன்.

    ரதியை புலி என்று சந்தேகிக்கும் தோழர் ரயா
    அதை அழகாக பின்ணூட்டங்களிலேயே
    அம்பலமாக்கியிருக்கலாமே.அவரை புலி என்றும்
    பாசிஸ்ட் என்றும் சொல்வதால் ஒன்றுமாகிவிடப்போவதில்லை.
    ரதியை பற்றி என்ன பெரிதாக அம்பலமாக்கிவிட்டார்
    என்றால் ஒன்றுமில்லை புலி,பாசிஸ்ட் என்று இதுவரை
    ஏழு பதிவுகளை இட்டுள்ளார்.ஆனால் ரதி புலி பாசிஸ்ட் தான்
    என்பதற்கு தகுந்த சான்றுகள் எதையும் அவர் முன்
    வைக்கவில்லை.தோழர் ரயாகரன் கருதும்படியான
    நோக்கத்துடன் தான் ரதி (நம்மிடம்)அதாவது வினவு தளத்தை
    அனுகியுள்ளார் என்றால் அதை சரியான ஆதாரங்களுடன்
    அம்பலமாக்குவது தான்,அதுவும் ரதியின் வாயாலேயே
    அம்பலமாக்குவது தான் சரியான முறை.
    அதை எப்படி செய்வது ?
    ரதி எழுதும் பதிவிலிருந்து பின்ணூட்டமிட்டு தான்
    ‘புலி’யை பிடிக்க வேண்டும்.மாறாக தோழர் ரயாகரன்
    ஏழு பதிவுகள் எழுதுவதால் அவர் பாசிஸ்ட்
    ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும்.

    எனவே ரதியினுடைய‌ பதிவின் துவக்கத்திலிருந்து
    பார்த்தோமேயானால் இந்த விவாதத்தை பொது
    வெளிக்கு கொண்டு வந்து நிறுத்தியது தோழர் ரயா தான்.
    இனி அவர் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.இந்த
    வகையான போக்கிற்கு காரணம் அவருடைய
    வறட்டு பிடிவாதம் தான்.தோழர்களுடைய
    பின்ணூட்டங்களை அவர் நேர்மறையில்
    அனுகிக் தன்னிடமுள்ள வறட்டுவாதத்தை
    இற‌க்கமற்ற முறையில் வெட்டி எறிய முன் வர வேண்டும்
    என்று தோழரை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பிறகு,
    சில தோழர்கள் ரயா மீது வைக்கும் விமர்சனத்தின் வடிவம் பற்றி.

    இது குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
    சொல்லப்படுவதல்ல.தோழர் ரயாகரனுடைய
    வறட்டுவாதத்தை பாய்ந்து,பாய்ந்து அடிக்கும்
    சில தோழர்கள் இதற்கு முன் அவரிடம் இது
    பற்றிய‌ விமர்சனத்தை சொல்லியிருக்கிறார்களா
    என்று தெரியவில்லை.

    ரயா மீது மட்டுமல்ல யார் மீதும் நீங்கள் வைக்கிற
    விமர்சனம் அவரை நேர்மறையில் சிந்திக்க,
    தவறுகளை களைந்துகொள்ள உதவுவதாக
    இருக்க வேண்டும்.உங்களுடைய விமர்சனம்
    விமர்சிக்கப்படுபவராலேயே மறுக்க முடியாமல்
    ஏற்கப்படுவதாக‌ இருக்க வேண்டும்.அவர் ஏற்கும்
    வடிவத்தில் நாம் வழங்க வேண்டும்
    .தோழர் மாசே துங் கூறியது போல ‘தாய்’ பறவை
    தனது குஞ்சுகளை பாதுகாப்பது போல இருக்க வேண்டும்
    மாறாக அறிவாளி, ரயாகரனிசம்,இந்திய ரயாகரன்கள்,
    மண்டைக்கனம் போன்ற மிக‌ கடுமையான
    வார்த்தைகளை போட்டு எழுதும் தோழர்கள் அவற்றை
    தவிர்க்கும் படியும் மையமான விமர்சனத்திலிருந்து
    விலக இது பயன் படும் என்பதையும் கருத்தில்
    கொள்ள வேண்டும்.
    சூழலால் உந்தப்பட்டு ‘தடித்த’ வார்த்தைகளை
    பயன்படுத்துவதால் ஏற்பட போகும் நன்மைகள்
    எதுவும் இல்லை என்பதை தோழர்கள் உணர வேண்டும்.

    தோழர் ரயா நமக்கு வேண்டும் என்று கருதுகிறேன்.‌

    • தோழர் உங்கள் கருத்துக்களில் நான் உடன் படுகிறேன், ஆனால் நேர்மறையில் செய்யும் விமர்சனங்களை அவர் ‘ புலம்பல்கள், gossip’ என்று இழிவு படுத்துகிறார், அவருக்காக இங்கே வேலை வெட்டியை விட்டு விவாதித்துகொண்டிருக்கும் தோழர்களை அவர் மதிக்கவேயில்லை. விவாதத்தை புறக்கணிக்கிறார், எனவேதான் எனது சொற்கள் கடுமையாயின. அதை தவறு என்று கருதவில்லை ஆனால் தவிர்க்ககூடியை என்பதில் உங்களோடு உடன்படுகிறேன்

      • நீங்கள் சொல்வது உண்மை தான் தோழர்.
        ரயா அனைத்திலும் தன்னை மட்டுமே முன்
        நிறுத்தி பார்க்கிறார்.சிலவற்றை ஈகோவாகவும்
        அனுகுகிறார்.தோழருடைய அனுகுமுறையில்
        மாற்றைத்தை கொண்டு வர விடாப்பிடியாக‌
        விமர்சனத்தை முன் வைப்போம்.

        மேலும் வற‌ட்டுவாதம் என்பதை சிலர் ஏதோ
        கெட்ட வார்த்தையை போல கருதுகிறார்கள்.
        அது ஒரு வகையான அரசியல் போக்கிற்கான‌
        பெயர் மட்டுமே என்பதாக அதை அனுகினால்
        வறட்டுவாதத்தை தம்முள்ளிருந்து
        வெளியேற்றிவிடலாம்.

    • தோழர் ரயாவினுடைய எந்த நூலையும் நான் முழுமையாக
      வாசித்ததில்லை துவக்கத்தில் அவை கடினமான ஆனால்
      விசயமுள்ள நூல்கள் என்று தான் கருதினேன் ஆனால்
      பின்னர் தான் அது அரசியல் வறட்டுத்தனத்தின் விளைவு
      என்பதை அறிந்தேன்.எனவே நூல்களில் ஒன்றுமில்லை
      என்று நான் கூறவில்லை.விசயமும் உண்டு

      அபத்தமான வரிகள் ! தோழர் சூப்பர் லிங்க்
      தோழர் இரயாகரனின் நுல்கள் சரியானவை என்று புஜ வே சொல்லியுள்ளது
      நானும் தோழர் இரயாகரனின் நுல்களை படித்திருக்கிறேன் ஆனால் அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. அதை வறட்டுத்தனமென்பது ஒட்டுமொத்த அமைப்புக்கெதிரானது. வினவின் அராஜகவாத வறட்டுதன குற்றசாட்டில் நீங்கள் ‘பலி’ஆக கூடாது,

      • தோழர் விடுதலை அவருடைய நூல்கள் அனைத்தும் விளக்கும் விசயத்தை நெளிவு சுளிவுடன் விளக்குவதில்லை,மாறாக நெட்டுக்குத்தாக‌ நேர்கோட்டில் விளக்கிச்செல்கின்றன என்பது எனது கருத்து.இரயாகரனின் நுல்கள் சரியானவை என்று புஜ வே சொல்லியுள்ளது என்கிறீர்கள்.இது பற்றி நீங்கள் புஜ விடமோ அமைப்பில் தோழர்களிடமோ கேட்பது தான் நல்லது.
        புஜ வின் கருத்தை ஏற்காவிட்டால் அது ஒட்டுமொத்த அமைப்புக்கெதிரானது என்கிற உங்கள் கருத்தை சற்று பரிசீலியுங்கள் தோழர்.

      • தோழர் சூப்பர்லிங்க் உங்கள் பதிலுக்கு நன்றி !

        தாங்கள் கூறியது போல் தோழர்களிடம் கேடகிறேன் தோழர்

  97. ஒரு சிறு நட்பு முரண்பாட்டுக்காக( இவை எழுந்தது நன்றே என்ற பார்வையில்) நீங்கள் கடித்துக் குதறுவது ஒரு கால் நூற்றாண்டுகால போராட்டமும் உழைப்பும் என்பதை மறக்காதிருக்கும்படி மிகுந்த வலியுடன் நான் உங்களை தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  98. ரதி அறியாத பெண்ணின் வலி. பாதிக்கப்பட்ட பெண் ஒரு தமிழர் என்றால் மட்டுமே ரதிக்கு ஆவேசம் வரும். சிங்களப் பெண்ணோ, முஸ்லிம் பெண்ணோ பாதிக்கப்பட்டால் ரதிக்கு அந்த வலி புரியாது. புலிகளால் நாசமாக்கப்பட்ட தமிழ் சகோதரிகளைப் பற்றியும் ரதிக்கு அக்கறை இல்லை. அவர்கள் எல்லாம் ரதியின் சகோதரிகள் அல்லவாம். சிங்கள ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த சம்பவங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால் ரதிக்கு அது மட்டுமே நினைவில் உள்ளது. திருகோணமலையில் புலேந்திரன் தலைமையிலான புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? ஆனையிறவு முகாம் தாக்குதலில் அங்கே கடமையில் இருந்த சிங்களப் பெண்களை புலிகள் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை மீது படையெடுத்த புலிகள் சொந்த தமிழ் சகோதரிகளையே அதுவும் புலி உறுப்பினர்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கதை தெரியாதா? புலிகள் சிங்களக் கிராமங்களில் புகுந்து சிங்களப் பெண்களை கண்டபடி வெட்டிக் கொன்ற சம்பவங்கள் ரதிக்கு தெரியாதா? புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய முஸ்லிம் பெண்களின் நகைகளை காதில் இருந்த தோடுகளை கூட பலாத்காரமாக கழற்றிய படுபாதகச் செயல் ரதிக்கு தெரியாதா? கொடுமை செய்வதில் சிங்கள ராணுவத்திற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த புலிக் கும்பல் மீது தான் ரதி மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறாராம். ரதி ஒன்றில் மனநோயாளியாக இருக்க வேண்டும் அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். எல்லாம் தெரிந்த பின்னும் நாக்கூசாமல் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று பொய் சொல்கிறார். ரதிக்கு பெண்ணின் வலி புரியுமானால், பாதிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் பெண்களைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை பேசவில்லை? இதிலிருந்தே தெரியவில்லையா ரதி ஒரு இனவெறியர் என்று? நண்பர்களே ஒரு பாசிச இனவெறியரான ரதிக்கு ஆதரவாக பேச உங்களுக்கு வெட்கமில்லையா?

  99. ரதி இதுவரை பதில் கூற மறுக்கும் மையமான கேள்வி. // ரதி
    பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?
    தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் காரணமாக இருக்கவில்லையா?

    மீண்டும் இந்த மையமான கேள்விக்கு பதில் தருமாறு உங்களை அழைக்கின்றேன்.//

  100. ரதி, எங்க தலிவர சும்மான்னு நெனச்சீங்களா உங்களை கோவப்படுத்தி, வாயப்புடுங்கி அப்புறம் பாத்தியா பாத்தியா நான்அப்பவே சொன்னேன்லன்னு பழிப்பு காட்டுறதுல கில்லி அவரு. நீங்க இப்ப பதிலுக்கு பதில் எழுதினாதான் தமாசே.

    தலிவா Teacn நீ இன்னமும் பாரின்ல இன்னா பண்ற. உட்னே வா, கசுமாலம் ராஜபட்சாவ கடாசிட்டு பாசிசமோ பாயாசமோ இல்லாத ஒரு ஆச்சிய தமிலனுக்கு கொடு தலிவா.. தொனைக்கு நாங்க இருக்கோம்

  101. விடுதலைப்புலிகள் இப்போ இல்லை, செத்துப்போயிட்டாங்க, DEAD, காயப், சோலிகாச்சே , போயிந்தே, அப்ப்படி உயிரோடு இல்லாத புலியின் பாசிசத்துக்கு எதிராக இப்படி வரிந்துகட்டும் tecan, உயிரோடு இருக்கும் பாசிசமான ராஜபட்சேவுக்கு எதிரா என்ன புடுங்குனாருன்னு ரதிதான் கேக்கல நாங்க கேக்க மாட்டோமா?

    • கேள்விக்குறி முதலில் ரதி ஒரு பாசிஸ்ட் என்ற உண்மையை ஏற்றுக்கொள். அதற்குப் பிறகு ராஜபட்செவுக்கு எதிரா என்ன புடுங்கிரதுன்னு பார்ப்போம். புலிகள் உயிரோடு இல்லைய்னு விதண்டாவாதம் பண்ணாதே. ரதி யாரு? புலி இல்லையா? இப்பவும் தான் புலிய மதிக்கிறேன் என்னு சொல்றாரே. செத்துப்போன இல்லாத புலியை எதுக்கு மதிக்கிராங்கலாம்? ரதி ஒரு மனநோயாளி என்றத ஒப்புக் கொள்கிறாயா? நாடுகடந்த தமிழீழம் அமைப்பவங்க யாரு அவங்க புலி இல்லையா? புலியோட பெயரிலே இப்பவும் அறிக்கைகள் வருதே. அதெல்லாம் யாருங்க? கேள்விகுறி மற்றவங்க காதுல பூச் சுத்தாதீங்க. உன்னை மாதிரி பாசிஸ்டுகளை ரதி போன்ற இன்னொரு பாசிஸ்ட் மட்டுமே பாராட்டுவார். இனம் இனத்தோடு தானே சேரும்.

  102. ரதி என்னும் பெண்ணிடம் தனது வாதத் திறமையை அலோஜன் லைட்டு போட்டு காமிக்கும் tecan ராஜபட்சேவ உடுங்க அவரு எதிர்க்கும் பாசிச புலிக்கு எதிராய் என்ன புடுங்கியிருக்கிறார் என்பதை உலகுக்கு சொல்லுவாறா? எச்சூச்மீ… tecan

    • கேள்விக்குறி பாசிச ரதியைப் பற்றி இப்போது பேச வேண்டாம். பாசிச ராஜபக்ஷ பற்றி பேசுவோம் என்கின்றனர். ரதியையும், ராக்ஜபக்ஷவையும் பாசிஸ்ட்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நேர்மையை பாராட்டுவோம்

  103. புலிப்பாசிசத்தினால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் தமிழர்களுக்காக லிட்டர் கணக்காக கண்ணீர் சிந்தும் tecan வன்னியில் பேரினவாத பாசிசம் பேயாட்டம் போட்ட போது, புலிப்பாசிசம் மக்களை கேடயமாக பயன்படுத்திய போது, இங்கே கம்பீட்டர் மின்னால உக்காந்து புண்ணூட்டம் போடுறதுக்கு பதிலா அங்கே போய் தனது மக்களுக்காக புடுங்கவேண்டீதுதானேன்னு யாரும் கேக்கலபா

  104. செத்துப்போன புலிய ரவுண்டு கட்டி போஸ்டு மார்டம் பண்ணும் tecan கம்பி வேலிக்கு பின்னால அல்லல்பட்டு அவமானப்பட்டு நிக்குற மக்களோட விடுதலைக்கு, ஒரு மாத்து வழிய சொல்லாம என்ன புடுங்குறாருன்னு பக்கத்துல பேசிகிறாங்க

  105. தனது அன்டாடாயரில் ஓட்டை விழுந்தால் கூட புலிப்பாசிசம் என்னும் tecan, தனது செயலின்மையின் குற்ற உணர்ச்சியிலிருந்து மீளுவதற்காக ரதியை – புலியாக்கி, பாசிஸ்டாக்கி – திட்டமுடியுமே தவிர அவரால வேற ஒன்னும் புடுங்க முடியாதுன்னு வேற யாரும் இல்ல நான்தான் சொல்லுறேன்

    • அனைத்துலக Tecan ரசிகர்கள் சங்கம், கேள்விக்குறி,

      //நீங்க இப்ப பதிலுக்கு பதில் எழுதினாதான் தமாசே//- அனைத்துலக Tecan ரசிகர்கள் சங்கம்

      எனக்கு புரிஞ்சிடிச்சுங்க.

      கேள்விக்குறி, Tecan என்பவரை நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு புரியவைத்துள்ளீர்கள்.

      • அடக்கடவுளே! சகோதரி ரதி. இப்போத்தான் உங்களுக்கு புரிஞ்சிதா. …இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே….நாங்கல்லாம் இவ்வளோ நாளா ஏன் அமைதியாயிருந்தோம்னு நினைக்கிறீங்க?

      • ஆஹா, பாசிச ஐக்கிய முன்னணி தோன்றி விட்டது. இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது. ரதி, கேள்விக்குறி, இரங்குவோன் என்ற பாசிஸ்ட்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். பாசிச ஐக்கிய முன்னணி வாழ்க. வாருங்கள் பாசிச ரதியின் தலைமையில் பாசிச தமிழீழம் அமைப்போம்.

  106. தோழர்கள் குறிப்பாக ஏகலைவன், சூப்பர்லிங்க்ஸ் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன்.

    தோழர் இரயாகரன்,நண்பர் ரதியை ஒரு பாசிஸ்டாக அடையாளம் காணும் பட்சத்தில் அதை வினவு தளத்திலேயே விவாதிப்பதன் மூலம் அவரது வாயிலிருந்தே பின்னூட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி இருக்கவேண்டும். ரதியின் முதல் பதிவிலேயே அவரை பாசிஸ்டு என முத்திரை குத்திய அணுகுமுறை தவறானது.தோழர் ரயா அனைத்தையும் புலி பாசிசம் என்றே காண்கிறார்.

    அதே சமயம் ரதியின் அகதி வாழ்வின் அவலங்களுக்காக பச்சாதபப்படும் தோழர்கள், இரயாகரனுக்கு புலி பாசிசத்தினால் உண்டான ஒற்றை தன்மையையையும் அதனால் வரும் வறட்டு தனத்தையும் இவ்வளவு நையாண்டியுடனும் நக்கலுடனும் விமர்சிப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

    இவ்வளவு வன்மத்துடன் விமர்சிக்கும் சில தோழர்கள் இதற்க்கு முன் என்றாவது, இதைப் பற்றி தோழர் இரயாகரனுடன் விவாதித்திருக்கிறார்களா? விமர்சித்திருக்கிறார்களா? அவருடைய வறட்டுவாதத்திற்கு எதிராக போராடியிருக்கிறார்களா ?

    தோழர் இரயாகரனை வறட்டுவாதி என்றும் ஒற்றை தன்மையால் வந்த விளைவென்றும் கூறும் நீங்கள் அவரை மேலும் தனிமைபடுத்தி அதே ஒற்றைத் தன்மையில் தள்ளி மூழ்கடிக்கவில்லையா?

    விவாதமும் விமர்சனமும் ஒருவரை தனது கருத்துக்கு வென்றெடுப்பதாக இருக்கவேண்டும்.ஆனால் இங்கு தோழர் இரயாகரனை நோகடிக்கும் விதமாகவே சில தோழர்கள் நடந்து கொண்டார்கள்.இவ்வாறான அனுகுமுறையை என்றும் ஆதரிக்க இயலாது.விமர்சனத்தினுடைய வடிவம் குறித்து தோழர்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

    தோழர் இரயாகரனுக்கு,
    இங்கு உங்கள் மீதான தோழர்களின் விமர்சன அணுகுமுறையை நான் ஏற்கவில்லை.ஆனால் அதன் உள்ளடக்கத்தை முழுமையாக‌ ஏற்கிறேன்.
    உங்களின் அணுகுமுறையையும், ரதியின் கட்டுரை மீதான விவாதம் விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லாமல்,வினவின் மீதான விவாதமாக மாற்றியதையும், அதை பொது வெளிக்கு கொண்டுவந்ததையும், அனைத்தையும் புலி பாசிசம் என்பதன் வழியாக மட்டுமே நோக்குகிற‌ வறட்டுவாத கண்ணோட்டத்தையுமே தோழர்கள் இங்கு உங்கள் மீதான விமர்சனமாக முன் வைக்கிறார்கள்.இவற்றை கம்யூனிஸ்டுகளுக்குறிய துணிவுடனும்,திறந்த மனதுடனும் நீங்கள் அனுகி பரிசீலிக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    புரட்சிகர வாழ்த்துக்கள்
    சர்வதேசியவாதிகள்.

  107. கேள்விக்குறி என்ற லூசு! புலிகள் இன்னும் சாகலை. பாசிச ரதி போன்றவர்கள் பெயரில் இன்னும் உயிரோடு இருக்கிறது. புலிகளின் பாசிசத்தை வினவு தளத்தில் பரப்பி வருகிறார். ரதியின் பாசிச பரப்புரைகளுக்கு வினவும் வேறு சில நண்பர்களும் இடம்கொடுக்கிறார்கள். ரதி புலிகள் பாசிஸ்ட்கள் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார். அதனூடாக தனையும் ஒரு பாஸிஸ்ட் என்று நிரூபித்து விட்டார். இப்போது கேள்விக்குறி என்ற தற்குறி எதற்காக துள்ளுகிறது? இரங்குவான் என்ற கோமாளி வழிமொழிகிறது. தனது பாசிச நண்பர்களை இனங்கண்ட ரதியும் குதூகலிக்கிறார்.

    • இழக்கக்கூடாத எல்லாவற்றையுமே இழந்து நிற்கும் ஈழமக்களில் குறைந்தபட்சம் ஒருவரின் முகத்திலாவது புன்னகை தோன்றுமானால் நான் கோமாளியே.

      • ஆனால் என்ன …இங்கே நான் அப்படி வேடிக்கையாக எதுவும் சொன்னதாக நினைவில்லை.

      • இரங்குவான் ஈழமக்களைப் பற்றி உங்களைப் போன்ற பாசிஸ்டுகள் பேசுவது அந்த மக்களின் தலைவிதி. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது. பாசிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் ஈழமக்கள் பற்றி கவலைப்படுகிறார்களாம். 50000 ஈழமக்களை பலிகொடுத்த பாசிஸ்ட்கள் ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிக்கிரார்களாம். ஐயா, பாசிச கொடுமைகாரர்களே ஈழமக்களை விட்டு விடுங்கள். எங்காவது ஒரு மூலையில் கூடி இருந்து உங்கள் பாசிச அரிப்பை தீர்த்துக் கொள்ளுங்கள்.

      • முதலில் கோமாளி! இப்போது பாசிஸ்டு! அடுத்த பட்டப்பெயர் என்னவோ?

      • ரதி என்ற பாஸிஸ்டுக்கு ஆதரவாக கதைப்பவர்களை வேறு எந்தப் பெயரில் அழைப்பது? இனம் இனத்தோடு தானே சேரும்? ஒரு பாஸிஸ்டுக்கு வக்காலத்து வாங்குவது இன்னொரு பாஸிஸ்ட் தானே? இதை புரிந்து கொள்வது கஷ்டமா?

      • அதாவது முதலில் புலிகள் பாசிஸ்டுகள்! அவர்கள் மீது அபிமானம் வைத்ததால் ரதி பாசிஸ்டு. ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் என்று சகோதரத்துவம் பாராட்டினால் அல்லது பரிந்து பேசுபவர்கள் என்பதால் என்னைப்போன்றவர்களும் பாசிஸ்டுகள்!

        அப்படியானால் பாசிஸம் என்றால் உங்கள் விளக்கம்தான் என்ன?

      • ஈழத்தமிழர்கள் ரதியை ஒடுக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணாக தான் பார்க்கின்றனர். ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கிய அடிமைகளாக நடத்திய புலிகளை ரதி ஆதரிக்கிறார். இதனை அவர் மறுக்கவில்லையே? புலிகள் அடக்குமுறையாளர்கள் என்று தனக்கு தெரியும் என்கிறார். இலங்கை இராணுவம் செய்த அநீதிகளை மூடி மறைத்து அவர்களை புனிதர்களாக காட்டுவதைப் போல தான், ரதி இதுவரை எழுதி வந்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் அப்பாவிப் பெண்ணா? இரங்குவான் கண்களுக்கு ரதி பரிதாபத்துக்கு உரியவராக தெரிந்தாராம். ஹா…ஹா.. நல்ல ஜோக்.

      • சரி. குறைந்தபட்சம் ரதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அவருக்கு புலிகளின் மீதான அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

      • //ரதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்???// பாசிச ரதி ஈழத்தை சேர்ந்தவரா? குறைந்தபட்சம் போர் நடந்த காலத்தில் ஈழத்தில் வாழ்ந்திருக்கிராரா? இவர் வாழ்ந்ததாக குறிப்பிடும் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தில் புலிகள் செய்த மிருகத்தனமான சகோதரப்படுகொலைகள் பற்றி எதுவும் தெரியாது என்கிறார். அந்தக் காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ஒருவர் நிச்சயம் புலி அபிமானியாக இருந்திருக்க முடியாது.

      • அதாவது ரதி பொய் சொல்லுகிறார் என்கிறீர்கள். மேலும் நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் ஈழத்தில் வாழ்ந்த எந்த தமிழரும் புலி அபிமானியாய் இருக்கமுடியாது என்கிறீர்கள்…அப்படித்தானே?

      • //அதாவது ரதி பொய் சொல்லுகிறார் என்கிறீர்கள். மேலும் நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் ஈழத்தில் வாழ்ந்த எந்த தமிழரும் புலி அபிமானியாய் இருக்கமுடியாது என்கிறீர்கள்…அப்படித்தானே//

        எல்லா

        பாசிச இயக்கங்களுக்கும் ஆதரவாளர்கள் இருந்திருக்கிறார்கள். புலிகளுக்கும் தான். அதை மறுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் புலிகளின் அபிமானிகளாக இருந்தார்கள் என்று சொல்வது சுத்தப் பொய். ரதி கூறும் காலகட்டத்தில் 5 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் புலிகள் இயக்கத்தில் மட்டுமே உறுப்பினர் தொகை குறைவு. எப்படிப் பார்த்தாலும் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே புலிகளை ஆதரித்திருப்பார்கள். அவர்களும் புலிகளின் ஹீரோயிசத்தால் கவரப்பட்டவர்கள். புலிகள் மற்ற இயக்கங்களை சகோதர இனப்படுகொலை மூலம் அழித்த பின்பு சாதாரண மக்கள் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்து சாதாரண மக்களுக்கு புலிகளும் அடக்குமுறையாளரானார்கள். தமிழ்மக்களிலும் இனவாதிகள், பாசிசத்தை விரும்பும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே தொடர்ந்து புலிகளை ஆதரித்தார்கள். ரதியும் அந்தச் சிலரில் ஒருவர்.

      • //ஆனால் பெரும்பான்மை ஈழத் தமிழர்கள் புலிகளின் அபிமானிகளாக இருந்தார்கள் என்று சொல்வது சுத்தப் பொய்.//
        ஆதாரமென்ன?
        //புலிகள் மற்ற இயக்கங்களை சகோதர இனப்படுகொலை மூலம் அழித்த பின்பு சாதாரண மக்கள் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. //
        அப்படியானால் கடைசிகட்ட போரில் அத்தனை மக்கள் எப்படி புலிகளோடு போனார்கள்? நீங்கள் சொல்லப்போவது புலிகள் வலிய இழுத்துச்சென்றார்கள் என்பதுதானே. அப்படியானால் புலிகள் எண்ணிக்கை மிக அதிகமாயிருந்திருக்கவேண்டும். ஆனால் உங்கள் கூற்றுப்படி புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆதாரம் //புலிகள் இயக்கத்தில் மட்டுமே உறுப்பினர் தொகை குறைவு.//
        இடிக்கிறதே!!

      • இரங்குவோன் //ஆதாரமென்ன?// ரதி கூறும் காலகட்டத்தில் 5 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் புலிகள் இயக்கத்தில் மட்டுமே உறுப்பினர் தொகை குறைவு. எப்படிப் பார்த்தாலும் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே புலிகளை ஆதரித்திருப்பார்கள். அவர்களும் புலிகளின் ஹீரோயிசத்தால் கவரப்பட்டவர்கள்.

        //அப்படியானால் கடைசிகட்ட போரில் அத்தனை மக்கள் எப்படி புலிகளோடு போனார்கள்? நீங்கள் சொல்லப்போவது புலிகள் வலிய இழுத்துச்சென்றார்கள் என்பதுதானே. அப்படியானால் புலிகள் எண்ணிக்கை மிக அதிகமாயிருந்திருக்கவேண்டும். ஆனால் உங்கள் கூற்றுப்படி புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆதாரம் //புலிகள் இயக்கத்தில் மட்டுமே உறுப்பினர் தொகை குறைவு.//
        இடிக்கிறதே!!//

        பாசிச ரதி ஈழத்தை சேர்ந்தவரா? குறைந்தபட்சம் போர் நடந்த காலத்தில் ஈழத்தில் வாழ்ந்திருக்கிராரா? இவர் வாழ்ந்ததாக குறிப்பிடும் காலத்தில் (1984-1987)குறிப்பிட்ட பிரதேசத்தில் புலிகள் செய்த மிருகத்தனமான சகோதரப்படுகொலைகள் பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

        In May 1986, the LTTE in a bid for totalitarian control attacked and massacred hundreds of members of the fellow militant group Tamil Eelam Liberation Org anisation (TELO). Dead and dying members of the latter were burnt at street junctions. The people said among themselves, “We have produced our own Hitlers.” The LTTE quickly went around making loudspeaker announcements: “No one must talk about or analyse what has happened.” The liberation struggle died.
        The younger generation made a last effort in November 1986, when students of the University of Jaffna organised a mass protest led by the dynamic student leader Vimaleswaran, and the LTTE negotiated a settlement. But as soon as the protest dispersed, LTTE hunted down the leaders and Vimaleswaran was assassinated subsequently.
        Rajan Hoole
        http://www.littlemag.com/growingup/rajanhoole.html

  108. பாசிச ரதி இன்று வரை பதில் கூற மறுக்கும் கேள்விகள்: //பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?
    தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் காரணமாக இருக்கவில்லையா?

    மீண்டும் இந்த மையமான கேள்விக்கு பதில் தருமாறு உங்களை அழைக்கின்றேன்.//

    ரதி உண்மையென ஏற்றுக் கொள்ளும் பாசிசப் புலிகளின் படுபாதகச் செயல்கள்: // புலிகளால் நாசமாக்கப்பட்ட தமிழ் சகோதரிகளைப் பற்றியும் ரதிக்கு அக்கறை இல்லை. அவர்கள் எல்லாம் ரதியின் சகோதரிகள் அல்லவாம். சிங்கள ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த சம்பவங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால் ரதிக்கு அது மட்டுமே நினைவில் உள்ளது. திருகோணமலையில் புலேந்திரன் தலைமையிலான புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? ஆனையிறவு முகாம் தாக்குதலில் அங்கே கடமையில் இருந்த சிங்களப் பெண்களை புலிகள் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை மீது படையெடுத்த புலிகள் சொந்த தமிழ் சகோதரிகளையே அதுவும் புலி உறுப்பினர்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கதை தெரியாதா? புலிகள் சிங்களக் கிராமங்களில் புகுந்து சிங்களப் பெண்களை கண்டபடி வெட்டிக் கொன்ற சம்பவங்கள் ரதிக்கு தெரியாதா? புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய முஸ்லிம் பெண்களின் நகைகளை காதில் இருந்த தோடுகளை கூட பலாத்காரமாக கழற்றிய படுபாதகச் செயல் ரதிக்கு தெரியாதா? கொடுமை செய்வதில் சிங்கள ராணுவத்திற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த புலிக் கும்பல் மீது தான் ரதி மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறாராம்.//

    //ரதி, தமிழர்களின் ஐக்கியத்தை குலைத்தவர்கள் புலிகள் என்பதற்கான ஆதாரங்கள். இந்த உண்மையை மறைத்து ஐக்கியம் பற்றி பேசுவது வரட்டுத்தனம்.

    ரதி குறிப்பிடும் காலத்தில் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) விடுதலைப் புலிகள் மட்டும் களத்தில் நிற்கவில்லை. TELO, PLOT, EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் சேர்ந்து நின்று இராணுவ வெளியேற்றத்தை முறியடித்தார்கள். விடுதலைப் புலிகள் பதவி அதிகார வெறியில் மற்றைய விடுதலை இயக்கங்களை இயங்க விடாமல் தடை செய்தனர். மற்றைய இயக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சண்டையிடாமல் சரணடைந்த போராளிகளை காட்டுமிராண்டித்தனமாக யாழ்ப்பாண தெருக்களில் உயிரோடு கொளுத்தினார்கள். புலிகளின் இனப்படுகொலைக்கு தப்பிப் பிழைத்த போராளிகள் எதிரியான இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். யாழ்ப்பாணத்தில் போராளிகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் இராணுவம் யாழ் குடாநாட்டை கைப்பற்றியது. ரதிக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று மறைக்கிறார்.//

    .

  109. //பாசிச ரதி// எல்லோரும் பாசிசம் பற்றியே பேசுகிறீர்கள்…

    பாசிசம் என்றால் என்ன?
    ஒருவரை பாசிஸ்ட் என்று அவரின் எந்த நடவடிக்கையை வைத்து வரையறுக்கிறீர்கள்?

    அப்புறம்… புலிகள் பாசிஸ்ட். சரி ஓக்கே – எங்களுக்கும் ஜூது தெரியும்..
    ஆனா அவர்கள் பாசிஸ்ட் என்பதை புரிந்து கொள்ளாத ஒருத்தர் புலிகள் பற்றி உயர்ந்த அபிமானம் கொண்டிருந்தால் அவரும் பாசிஸ்ட்டா??

    தனது சொந்த / சமூக வாழ்வில் ஜனநாயகவாதியாக வாழும் ஒருவர் புலி பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தால் அவர் பாசிஸ்ட்டா?

    புலியினால் சிங்களவன் குண்டுகளில் இருந்து உயிர் தப்பி புலம் பெயர்ந்த ஒரு தமிழர் தனது சொந்த / சமூக வாழ்வில் ஜனநாயகவாதியாக இருந்தாலும் அவரைப் பாசிஸ்ட் என்பீர்களா?

    புலித் தலைமை மட்டும் பாசிஸ்ட்டா – இல்லை அதன் அணிகள், சாவோம் என்று தெரிந்தே களத்தில் நின்று உயிர் நீத்த அந்த போராளிகள் கூட பாசிஸ்ட்டுகள் தானா?

    திரும்பத் திரும்ப இந்த வார்த்தையை சிலர் மனம் போன போக்கில் போகிற வருகிறவர்கள் மேலெல்லாம் வீசுவதைப் படிக்க.. அப்படியே கேரா இருக்குங்க. யாராவது விசயம் தெரிஞ்சவங்க வெளக்குங்க\

  110. ஆர.கே. //அப்புறம்… புலிகள் பாசிஸ்ட். சரி ஓக்கே – எங்களுக்கும் ஜூது தெரியும்..
    ஆனா அவர்கள் பாசிஸ்ட் என்பதை புரிந்து கொள்ளாத ஒருத்தர் புலிகள் பற்றி உயர்ந்த அபிமானம் கொண்டிருந்தால் அவரும் பாசிஸ்ட்டா??//

    ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட் சரி ஒக்கே. அவர்கள் பாசிஸ்ட் என்பதை புரிந்து கொள்ளாத இந்து ஒருவர் ஆர்.எஸ்.எஸ். பற்றி உயர்ந்த அபிமானம் கொண்டிருந்தால் அவரும் பாசிஸ்ட்டா??
    ஹிட்லர்/
    நாஜிகள் பாசிஸ்ட் சரி ஒக்கே. அவர்கள் பாசிஸ்ட் என்பதை புரிந்து கொள்ளாத ஜெர்மன்காரர் ஒருவர் நாஜிகள் பற்றி உயர்ந்த அபிமானம் கொண்டிருந்தால் அவரும் பாசிஸ்ட்டா??

    //தனது சொந்த / சமூக வாழ்வில் ஜனநாயகவாதியாக வாழும் ஒருவர் புலி பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தால் அவர் பாசிஸ்ட்டா?//

    இந்த ஜனநாயகவாதி பாசிச கொலையாளிகளை ஆதரிக்கிறார். அதுவும் எல்லாம் தெரிந்த பிறகும் ஆதரிக்கிறார். பாசிசக் கொலைகளை சரி என்று நியாயப்படுத்துகிறார். அவர் அப்பாவியா? அவர் ஜனநாயகவாதியா? இவர்கள் சொந்த வாழ்வில் ஜனநாயகவாதியாக வாழவில்லை. ஒரு பாசிஸ்டாகவே வாழ்கின்றனர். பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர். பாசிஸ்ட்களுக்கு ஆதரவாக நிதி சேர்க்கின்றனர். இதற்கு ரதி சிறந்த உதாரணம். அவர் தான் பாசிஸ்டாக வாழ்வதை இன்று வரை மறுக்கவில்லை.

    • தெக்கான், நீங்கள் இரண்டு கேள்விகளை மட்டும் ( உங்கள் சௌகரியத்திற்கு) தேர்ந்தெடுத்து பதிலளித்ததன் மூலம் மற்றவற்றிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

      சரி உங்கள் கேள்வி என்ன –

      ஆர்.எஸ்.எஸ் பற்றி வெகு ஜன ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து வைத்துள்ள ஒருவர் அதன் மேல் உயர்ந்த அபிமானம் கொண்டிருந்தால் நான் அவரை ஒரேயடியாக “நீ ஒரு பாசிட்” ”ச்சீச் ச்சீய் தூத்தூ போப்போ” – ”கிட்டே வராதே ஒட்டிக்கும்” – என்று சொல்லி தள்ளி நிற்க மாட்டேன். அவரிடம் தொடர்ந்து விவாதித்து அந்த இயக்கத்தின் பாசிச தன்மையை விளக்கி வென்றெடுக்க முயல்வேன்

      அவர் தனது பாமரத்தனமான அறியாமையால் எழும் கருத்தை வெளியிட்டவுடன் எந்த விவாதமும் இல்லாமல் “நீ பாசிட்” என்று தீர்ப்பெழுத நான் ஒன்றும் அரசியல் ஓட்டாண்டியில்லை.

      ஆமாம் நீங்கள் எப்படி?

      ஒரு இயக்கம் (அ) ஸ்தாபனம் (அ) போராட்டம் குறித்து எங்கேயிருந்து தகவல்கள் கிடைக்கிறது.. நாங்கள் வாழும் பூமி எனும் இந்த கிரகத்தில் இந்தியா எனும் நாட்டில் தமிழ்நாடு எனும் மாநிலத்தில் ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் உறுப்பினன் தினப்படி காலையில் காபி குடித்துக் கொண்டே தினத்தந்தியோ, தினகரனோ படித்தும் – கொஞ்சம் அதிகம் படிக்கும் ஆர்வலராயிருந்தால் வாராந்திர இதழ்களான குமுதமோ விகடனோ படித்தும் – அரசியல் ஆர்வமுடையோராய் இருந்தால் அரசியல் ஏடான நக்கீரன், விகரன், ரிப்போர்ட்டர் படித்தும் தான் – விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர்.
      மற்றபடி சன் ந்யூஸ்

      இது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தினர் விஷயங்களை அறிந்து கொள்ளும் முறை – எல்லோருக்கும் http://www.tamilcircle.net படிக்கும் அளவுக்கு வசதியில்லை. அப்படியான ஒரு சராசரி நடுத்தர வர்க்க மனிதன் தனது சொந்த வாழ்வில் ஓரளவு ஜனநாயகவாதியாய் இருப்பின் ( அப்படியே இல்லாவிட்டாலும் கூட) – அவருக்கு புலிகள் பற்றி உயர்ந்த அபிமானம் இருந்தால். அவரின் தவறைச் சுட்டிக் காட்ட வேண்டும். புரிய வைக்க முயல வேண்டும் – தீர்ப்பெழுதி விட்டு புழுதி வாறித்தூற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

      • ஆர்.கே. ரதி தமிழ் வாசிக்க தெரியாத சிங்களவரா? அவருக்கு இங்கே கொடுக்கப்பட்ட புலிப் பாசிசம் தொடர்பான விளக்கங்கள் எதுவுமே தெரியாதா? நீங்கள் புலிகளின் பாசிச குற்றங்களைப் பற்றி சாதாரண மக்களிடம் எடுத்துக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் பாசிஸ்டுகள் புரிந்து கொள்ளாதது போல நடிப்பார்கள். ரதியும் அப்படிப்பட்ட ஒருவர் தான். அவரது மண்டைக்குள் எதுவுமே ஏறாது. இதுவரை எத்தனையோ தடவை வினவு தளத்தில் புலிகள் செய்த இனப்படுகொலைகள், குற்றங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் ரதி வாசிக்கவில்லையா? அதை எல்லாம் வாசித்தவர் அதில் எதை ஏற்றுக்கொள்கிறேன், அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாரா? அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல பாசாங்கு செய்கிறார். ஒரு கடமைக்காகவேனும் இந்த உண்மைகளை இப்போது தான் தெரிந்துகொண்டேன் என்று கூறவில்லை. அப்படிப்பட்டவர் ஒரு அப்பாவியா? ஆர்.கே. அவர்களே, தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது. ரதி ஒரு அப்பாவி போல நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பை நீங்களும் நம்பி ஏமாந்து விட்டீர்கள்.

    • யெப்பா தெக்கான்… மவராசா.. உங்ககிட்ட பேசி எனக்கு வாயில நொர தள்ளாதது மட்டுதேங்கொறை..

      போன மாசம் எங்கூருக்கு எங்க அப்பத்தாவ பாக்கப் பாக்கப் போயிருந்தனா..

      எங்க சின்னய்யன் நக்கீரனப் படிச்சிட்டு எங்கப்பத்தாகிட்டெயும் படிச்சுக் காமிச்சிருக்காரு..

      நானும் எங்கப்பத்தா குடுத்த சீடையத் தின்னுட்டிருக்கும் போது எங்கப்பத்தா ரண்டு மாசமின்ன வந்த நக்கீரனத் தூக்கீட்டு எங்கிட்ட வந்தாளா…

      வந்து –

      “டே குட்டி.. உனக்கு விசியந்தெரியுமா.. சிலோனுல பிரபாகரஞ்சாகுலியாமா.. இங்க பாத்தியா டுப்பாக்கிய புடுச்சுட்டு பிரபாகரன் நிக்கற போட்டோ வெல்லாம் வந்துக்குது” அப்புடின்னு சொல்லுச்சு.. பல்லுப்போன வாயெல்லாம் ஒரே சிரிப்பு..

      நானிருந்துட்டு

      “யாராத்தா சொன்னா உனக்கு”ன்னு கேட்டேன்

      “உங்க சின்னய்யந்தாண்டா டவுன்லேந்து இந்த புக்க வாங்கீட்டு வந்தான்.. பார்ரா படமெல்லாம் போட்டுக்கரான்” அப்புடீன்னு அந்த படத்த தடவிட்டே சொல்லுச்சா..

      நானதுக்கு

      “போ ஆத்தா.. சின்னய்யனுக்கு வேற வேலையில்ல.. அது இவிங்க சும்மா எளுதரானுக அந்தாளு எப்பவோ மண்ட சிரிச்சு செத்துப் போயிட்டான். இவுனுக புக்கு விக்கறதுக்கு இல்லாததும் பொல்லாததுமா எளுதரானுக” அப்புடீன்னு சொன்னேன்

      எங்காத்தாளுக்கு வந்துதே பாருங்க ஆங்காரம்..

      “போடா பொச கெட்டவனே.. பிரபாகரனுக்கெல்லாம் சாவே இல்லீடா… அவமந்து தாண்டா சிலோனுக்காரனுக கிட்ட இருந்து நம்மாளுகள காப்பாத்தப் போறான்” அப்புடீன்னு சொல்லீட்டே எங்கிட்டேர்ந்து சீடைய புடுங்கீட்டுப் போயிருச்சு..

      அப்புறமா எங்காத்தாளுக்கு விசியமென்னான்னு புரிய வக்கறதுக்கு ரண்டு நாளாச்சு.. இப்பூம் பாருங்க எங்காத்தா அந்த புக்கத் தூக்கிப் போடாம அப்புடியே வச்சிக்குது – பிரபாகரன் டுப்பாக்கியோட நிக்கற படம்
      போட்டுருக்கில்லே..?

      அடுத்த மாசம் போகைல எங்காத்தாளுக்கும் எங்க சின்னையனுக்கும் அங்க நடக்கர சண்டையப் பத்தி பேசிப் புரிய வைக்கோனும்னு வச்சிருக்கேன்..

      அப்ப உங்க கணக்குப் படி…. எங்க அப்பத்தாளும் பாசிட். எங்க சின்னையனும் பாசிட். அப்படித்தானே?

      ம்ம்ம்ம்.. என்னவோ போங்க.. பாத்தா படிச்சவரு மாதிரி வேற இருக்கீங்க

      • R.K. You must read this from Rathi: //எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.//

      • OK sir. But when did this came up? after all those bashings right? Thats what I said in my previous comment. If you start bash some one without justifications, obviously his ego will come forward and will utter such egoistic statements.

  111. நான் நேற்றையதினம் இங்கு பதிந்த வேண்டுகோள்கள் இங்கு வந்து விவாதிக்கும் அனைவருக்குமானதுதான், தோழர்களே.

    தோழர் ரதியை மையப்படுத்தித் தொடங்கிய இவ்விவாதம், வினவு தோழர்களுக்கும் தோழர் இரயாவிற்கும் இடையிலான மோதலாக மாற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் தோழர் ரதியினுடனான விவாதம், அதனை மையப்படுத்தி விவாதிக்கும் தோழர்கள் டிகேன், சிறி ஆகியோரின் முயற்சியும் பலனற்றதாகவே ஆகிவிடும். இப்போது தோழர்கள் இரயா, வினவு ஆகியோரின் பரிசீலினையும் கருத்துக்களும்தான் இவ்விவாதத்தின் மையமான தேவையாக இருக்கிறது.

    ரதியை ஏற்கெனவே பாசிஸ்ட் என்று அடையாளப்படுத்திவிட்டு அவரிடத்திலிருந்து நியாயமான பதில்களைக் கோருவது, எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தனை விசயங்கள் தெளிவாக விவாதிக்கப்பட்டிருந்தும் கூட ஈழ அரசியல் குறித்த தமது புலியாதரவு கருத்துக்களை ரதி பரிசீலித்ததற்கான சுவடுகள் எதையும் அவரது எழுத்துக்களில் காண முடியவில்லை. அது அவரது புரிதல். அந்த புரிதலோடும் கூட தொடர்ந்து நம்முடன் விவாதித்துக் கொண்டிருக்கிறாரே, அந்த நல்ல அம்சத்தைக் கொண்டு அவரிடம் வினையாற்ற வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை தோழர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    அதுகூட தேவையில்லை. ரதியுடனான விவாதம் வேறொரு தலைப்பில் முறையாகத் திட்டமிட்டு, ஒரு ஒழுங்கோடு நடத்தப்பட வேண்டும். அதற்கு வினவு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். தோழர் இரயாவும் அந்த விவாதத்தில் (தமது வழக்கமான குற்றம் சாட்டி ஒதுக்கும் பாணியைத் துறந்து) பங்கேற்கவேண்டும். இந்த தலைப்பின் மீதான விவாதத்திற்கு வினவும் இரயாவும் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து முடித்திட வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    என்னைத் தொடர்ந்து, தோழர்கள் கலகம், சர்வதேசியவாதிகள், அசுரன், முகிலன், சூப்பர்லிங்க்ஸ் ஆகியோரது வேண்டுகோள்களெல்லாம் மொத்தமாக கிடப்பில் கிடக்கின்றன. விவாதமென்ற பெயரில் இங்கு நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், அர்த்தமற்ற வார்த்தை வீச்சுக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமாகவே இருப்பது, முறையற்றது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்புக்க்கு தோழர்கள் வினவும், இரயாவும்தான் பொறுப்பு. இந்த விவாதம் இப்படி மாறிப் போனதற்கு இவ்விருவரும்தான் காரணம். உடனடியாக இதில் தலையிட்டு இதனை முடித்து அடுத்த விவாதத்தைத் தொடங்க ஆவன செய்திட, மேற்கண்ட எமது தோழர்களின் சார்பாக வேண்டுகிறேன்.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  112. அந்த பாசிஸ்டுகள் தாம் இறுதிவரை போரிட்டார்கள்
    மற்றவர்கள் பிரான்ஸ்சில் போய் தமிழ் சர்க்கிள் எனும் இணைய தளம் மூலம் மட்டும் ஒப்பாரி வைத்தார்கள்
    சிலர் இப்படி பின்னூட்டம் இட்டு புலிகளை பாசிஸ்டுகள் என திட்ட மட்டும் லாயக்கு

    • maavo அந்த நாஜிகள் என்ற ஜெர்மன் பாசிஸ்டுகள் தாம் இறுதிவரை போரிட்டார்கள். மற்றவர்கள் ஒப்பாரி வைத்தார்கள். நீங்கள் ஜெர்மன் நாஜிகளை மதிக்கிறீர்களா? வெளிப்படையாக பேச என்ன தயக்கம்?

  113. //மற்றவர்கள் ஒப்பாரி வைத்தார்கள். நீங்கள் ஜெர்மன் நாஜிகளை மதிக்கிறீர்களா? வெளிப்படையாக பேச என்ன தயக்கம்//வேறு வார்த்தை சொல்வதானால்

    இறுதிவரை போரிட்டவர்கள் உங்களின் பட்டங்கள் தேவை இல்லை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் அல்லது உங்கள் சகா இரயா என்ன செய்ய போகிறார்

    இனிமேல் அதை சொல்லுங்கல் வறட்டு வாதம் தவிர்த்து

    • பாசிஸ்ட்கள் இன்னும் மறையவில்லை. ரதி என்ற பாசிஸ்ட் இன்று வரை வினவு என்ற இணையத்தளம் மூலம் ஒப்பாரி வைக்கிறார். பாசிஸ்ட்கள் துப்பாக்கிகளை கைவிட்டு விட்டு இணையத்தளத்தில் போராடுகிறார்கள். குறிப்பாக சொன்னால் புலிகள் தோற்றுக் கொண்டிருந்த காலத்தில் தான் ரதி வினவு தளத்தில் அறிமுகமானார். அப்போதிருந்தே ரதி என்ற பசுத்தோல் போர்த்திய புலியின் இணையத்தள போராட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஐ.நா.வுக்குள் ஊடுருவத் தெரிந்த புலிகளுக்கு வினவுக்குள் ஊடுவருவத் தெரியாதா? தமிழ்நாட்டில் வினவு சார்ந்தவர்களை தமிழ் இனவெறி பாசிஸ்டுகளாக மாற்றுவது தான் அவர்களது நோக்கம். அதில் ரதி வெற்றி பெற்று விட்டார் என்பதைத்தான் இங்கு சிலரின் பின்னூட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. முன்பு வினவில் வந்த கட்டுரைகள் புலிகளின் பரப்புரைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தன. அவற்றை வாசித்த பாசிச ரதி வினவு இன்னொரு புலி சார்பு ஊதுகுழல் ஊடகம் என்று புரிந்து கொண்டார். அதனால் தான் பாசிச ரதி வினவில் எழுத ஒப்புக் கொண்டார். இப்போது எதிர்பாராதவிதமாக அவரது பாதையில் தடைகள் வந்துவிட்டன. பாசிச ரதியின் நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது.

  114. நான் மணி

    சர்வதேசவாதிகள், ஏகலைவன் போன்ற புதிய சாலமோன் பாப்பையாக்களுக்கு,

    ரதி ஒரு பாசிஸ்டாகவே இருக்கட்டுமே.. ஆனால் பேச முன்வருகிறார்கள். ஆனால் அவர்களைப் பேசக் கூடாது என்பதற்காக வரிந்து கட்டி எழுதுகிறார் ரயா. அதனை நேராக பேச வருவதற்கு ஒரு 200 பின்னூட்டம் தேவைப்படுகிறது அவருக்கு.. அந்த அளவு ஜனநாயக மதிப்பு ஆளர் அவர்.

    பேச முன்வராத ரயாவின் துயரத்தை முன்னிறுத்தி அவரது அரசியலற்ற வாத்த்தை முன்னிறுத்தும் தாங்கள் பேச முன்வரும் ரதிக்கு மாத்திரம் அரசியலை முன்னிறுத்தி விவாதிக்கின்றீர்களே.. ஒரு வேளை ரயா உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு மாத்திரம் ஒரு தனி நியாயம் வைத்திருக்கின்றீர்களா..

    • // பேச முன்வரும் ரதிக்கு மாத்திரம் அரசியலை முன்னிறுத்தி விவாதிக்கின்றீர்களே// ஹா…ஹா… நல்ல ஜோக். ரதி பேச முன்வருகிராரா? ஹா…ஹா… மையமான கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிக்கும் ரதி பேச முன்வருகிராரா? ரதியிடம் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் இதுவரை பதில் கூறவில்லை. மணியின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தக் கேள்விகளை மீண்டும் முன் வைக்கிறேன்.

      பாசிச ரதி இன்று வரை பதில் கூற மறுக்கும் கேள்விகள்: //பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?
      தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் கோரும் ஜக்கியத்துக்கு பாசிசம் காரணமாக இருக்கவில்லையா?

      மீண்டும் இந்த மையமான கேள்விக்கு பதில் தருமாறு உங்களை அழைக்கின்றேன்.//

      ரதி உண்மையென ஏற்றுக் கொள்ளும் பாசிசப் புலிகளின் படுபாதகச் செயல்கள்: // புலிகளால் நாசமாக்கப்பட்ட தமிழ் சகோதரிகளைப் பற்றியும் ரதிக்கு அக்கறை இல்லை. அவர்கள் எல்லாம் ரதியின் சகோதரிகள் அல்லவாம். சிங்கள ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த சம்பவங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால் ரதிக்கு அது மட்டுமே நினைவில் உள்ளது. திருகோணமலையில் புலேந்திரன் தலைமையிலான புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? ஆனையிறவு முகாம் தாக்குதலில் அங்கே கடமையில் இருந்த சிங்களப் பெண்களை புலிகள் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது ரதிக்கு தெரியாதா? கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை மீது படையெடுத்த புலிகள் சொந்த தமிழ் சகோதரிகளையே அதுவும் புலி உறுப்பினர்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கதை தெரியாதா? புலிகள் சிங்களக் கிராமங்களில் புகுந்து சிங்களப் பெண்களை கண்டபடி வெட்டிக் கொன்ற சம்பவங்கள் ரதிக்கு தெரியாதா? புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றிய முஸ்லிம் பெண்களின் நகைகளை காதில் இருந்த தோடுகளை கூட பலாத்காரமாக கழற்றிய படுபாதகச் செயல் ரதிக்கு தெரியாதா? கொடுமை செய்வதில் சிங்கள ராணுவத்திற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்த புலிக் கும்பல் மீது தான் ரதி மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறாராம்.//

      //ரதி, தமிழர்களின் ஐக்கியத்தை குலைத்தவர்கள் புலிகள் என்பதற்கான ஆதாரங்கள். இந்த உண்மையை மறைத்து ஐக்கியம் பற்றி பேசுவது வரட்டுத்தனம்.

      ரதி குறிப்பிடும் காலத்தில் (1980 களின் நடுப்பகுதிப் பிறகு) விடுதலைப் புலிகள் மட்டும் களத்தில் நிற்கவில்லை. TELO, PLOT, EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் சேர்ந்து நின்று இராணுவ வெளியேற்றத்தை முறியடித்தார்கள். விடுதலைப் புலிகள் பதவி அதிகார வெறியில் மற்றைய விடுதலை இயக்கங்களை இயங்க விடாமல் தடை செய்தனர். மற்றைய இயக்கங்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சண்டையிடாமல் சரணடைந்த போராளிகளை காட்டுமிராண்டித்தனமாக யாழ்ப்பாண தெருக்களில் உயிரோடு கொளுத்தினார்கள். புலிகளின் இனப்படுகொலைக்கு தப்பிப் பிழைத்த போராளிகள் எதிரியான இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். யாழ்ப்பாணத்தில் போராளிகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் இராணுவம் யாழ் குடாநாட்டை கைப்பற்றியது. ரதிக்கு இந்த உண்மை நன்றாக தெரியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று மறைக்கிறார்.//

  115. //பேச முன்வராத ரயாவின் துயரத்தை முன்னிறுத்தி அவரது அரசியலற்ற வாத்த்தை முன்னிறுத்தும் தாங்கள் பேச முன்வரும் ரதிக்கு மாத்திரம் அரசியலை முன்னிறுத்தி விவாதிக்கின்றீர்களே.. ஒரு வேளை ரயா உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு மாத்திரம் ஒரு தனி நியாயம் வைத்திருக்கின்றீர்களா..// well said mani இதே கேள்விதான் பதிலளிக்காமல் ரதியை எழுதுவதை தடுக்கும் பாசிச சிந்தனை இவர்களிடம் இருக்கிறது . யாரோடு விவாதிக்க துணியாத ஜனநாயக மறுப்பு இருக்கிறது ; பார்க்கலாம் வினவு இன்று பெரிய பதிலை கட்டுரையாக இடுவார் என எதிர்பார்ப்போம்

  116. இங்கே சில தோழர்கள் கேட்கிறார்கள் ‘ இப்போ விமர்சனம் செய்யும் இவர்கள், இத்தனை நாளாய் எங்கு போனார்கள் என்று. இந்த கேள்வியின் அரசியலற்ற தன்மையை அவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடுவோம், ஆனாலும் ஒரு விமர்சனத்தை பெற்றெடுப்பது ஒரு சுயவிமர்சனமே, அந்த தோழர்களுக்கு இரயாகரன் மீது விமர்சனம் உள்ள பட்சத்தில் அவர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை? தடுத்தது எது?

    இந்த பிரச்சனையும் ஒன்றும் இப்போது தோன்றியது அல்ல, ரதி தனது முதல் பதிவை எழுதியதிலிருந்து தொடர்ந்து நடக்கிறது ஆனால் இது துவங்கி பல மாதங்கள் ஆயிற்று. வினவு ஈழம் தொடர்பாக எழுதியவையையும் அதே நேரத்தில் இரயாகரன் எழுதியவையையும் போய் படியுங்கள் தோழர்களே.

    இங்கே எல்லோரும் தோழர். இரயாகரனை பற்றிய கருத்து செவிவழி செய்திகளில் உருவானது என்பது தெளிவாக இருக்கின்றது. பலரும் சொந்த முயற்சியில் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அவரை புரிந்து கொள்ள அவர் தளத்தில் எழுதும் கட்டுரைகளை தினமும் வாசித்தலே போதுமானது. ஆனால் அதை செய்யாமல் அவர்மீது பரிதாபம் முதல் பக்தி வரை சிலர் கொண்டிருப்பது தவறு. குறைந்தபட்சமாக நமது அமைப்பின் ஈழத்து நிலைப்பாடும் இரயாகரனின் ஈழத்து நிலைப்பாடும் வேறு என்பதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பது கடுமையாக விமர்சிக்க வேண்டிய தவறு.

    • //இங்கே சில தோழர்கள் கேட்கிறார்கள் ‘ இப்போ விமர்சனம் செய்யும் இவர்கள், இத்தனை நாளாய் எங்கு போனார்கள் என்று. இந்த கேள்வியின் அரசியலற்ற தன்மையை அவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடுவோம், ஆனாலும் ஒரு விமர்சனத்தை பெற்றெடுப்பது ஒரு சுயவிமர்சனமே, அந்த தோழர்களுக்கு இரயாகரன் மீது விமர்சனம் உள்ள பட்சத்தில் அவர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை? தடுத்தது எது//

      ரயாகன மீதான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த இணையவெளியை அவ்வாறான விமர்சன முறைக்கு பயன்படுத்த முடியும் என்று உளப் பூர்வமாக நம்பும் தோழர்கள்(எனக்கு அப்படியொரு நம்பிக்கை கிஞ்சித்தும் கிடையாது, அப்படியொரு அனுபவமும் இதுவரை இல்லை), குறைந்த பட்சம் ஈழத்துத் தோழர்களின் உணர்வுகள் குறித்து பரிசீலித்தார்களா?

      ரதி என்பவரை வைத்து கட்டுரை எழுதுகிறீர்கள். புலி அரசியல், புலி, புலிப் பாசிசம் குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஈழத்துத் தோழர்களுக்கு தமது தோழமைத் தளத்திலேயே புலியின் குரல் ஒலிக்கிறதே(அது புலிக் குரலாக இல்லாவிடினும்) என்ற உணர்வும், கோபமும், சந்தேகமும் வராதா? அவ்வாறான கோபம் சரி, தவறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,

      பொறுப்புள்ள தோழர்களாக ஈழத்துத் தோழர்களின் அத்தகைய உணர்வுகளைக் களைய என்ன செய்தோம்? இதே விதமான கேள்விகள் ராயாகரன் உள்ளிட்ட ஈழத்து தோழர்களுக்கும் பொருந்தும்.

      இணையத்தை தோழமை சக்திகளுக்குள்ளான கோட்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் பொதுவெளி விவாதக் களமாக பயன்படுத்த இயலும் என்று நம்புபவர்கள் மேற்சொன்ன அணுகுமுறையைத்தான் கைகொண்டிருக்க வேண்டும்.

      அசுரன்

  117. விசயத்தை திசைதிருப்பு கொண்டு செல்கிறார் டெக்கான்

    : விவாதம் புலிகள் பாசிஸ்டுகளா இல்லையா என்பதை பற்றி அல்ல
    ரதி தனது அனுபவங்களை எழுதலாமா கூடாதா

    எழுத கூடாதென்றால் ஏன் கூடாது

  118. சில விடையங்களை தெளிவுபடுத்துவதற்கு அப்பால், விவாதத்தை தொடருவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அது ஆரோக்கியமாக நடக்காது என்ற கருதுகின்றோம்.

    1.இங்கு குழுவாதமும், சார்புத்தன்மையும் மற்றும் புரிதல் இன்மையும் (வாசிக்காமை கூட) இதல் முதன்மையான கூறாக உள்ளது. அரசியல் விவாதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எமக்கு எதிரான குழுவாதமும், சார்புத்தன்மையும் தோழர்களுக்கு இடையில் முரண்பாடாக மாறுவதையும் நாம் அவதானிக்கின்றோம்.

    2.ஈழத்து தோழர்களை, தங்கள் சொந்த தோழராக கருதும் சர்வதேசியப் போக்கு இங்கு இருக்கவில்லை. (சில தோiர்களின் முயற்சியை நாம் மறுக்கவில்லை) இரண்டாவது ஈழத்து சூழலை புரிந்து கொண்டு, இதை புரியவும், புரிய வைக்கவும் யாரும் முனையவில்லை. பாசிசம் தொடர்பான எமது அரசியல் நிலையை, அரசியல் ரீதியாக மறுப்பதாக இது மாறிவிட்டது.

    3.வரட்டுத்தனம் என்று குற்றச்சாட்டு. தனிபட்ட ரீதியில் நாம் அதை இட்டு கவலைப்படவில்லை. வரலாறு சிலவற்றை கற்றுத்தரும். பாசிசத்துக்கு எதிரான ஒரு தொடரான போராட்ட வரலாறு எமக்கு உண்டு. இதையம் மீறி இந்த இடத்தில் நாம் வரட்டுவாதிகளாக இருப்பதாக நீங்கள் கருதினால், அதை களையவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

    அது

    3.1.ரதி சொன்ன கருத்து புலிக்கருத்தல்ல (நாங்கள் அதையே புலிகருத்து என்கின்றோம்.) என்று நீங்கள் நிறுவவேண்டும். அதாவது புலி இதை இப்படித்தான் சொல்லும். புலி அனுதாபி ரதி சொன்னமாதிதித் தான் சொல்வார். இந்த இரண்டையும் வேறுபடுத்தி எமக்கு எடுத்து காட்டவேண்டும். (புலிகளுக்கு 1000 மேற்பட்ட இணையங்கள் உண்டு. அதை வேறுபட்டு இருபதாக கருதும் நீங்கள், அதைக் கண்டுபிடிக்க உங்களால் முடியும். அதை நன்கு புரிந்து விவாதிப்பதால் அது உங்களுக்கு இலகுவானது.)

    3.2.ரதி எதையும் புலி சார்ந்து சொல்லவில்லை என்ற வினவின் அரசியல் நிலையும், ரதி புலி அனுதாபி என்ற வினவுவின் நிலையும் ஒன்றுக் ஒன்று முரணாது. ரதியின் கருத்து குறைந்தபட்சம், வினவு கருதும் புலி அனுதாபியின் கருத்;தல்லவா!? அது குறைந்த பட்சம் புலிக் கருத்தல்லவா. எதையும் புலிசார்ந்து சொல்லவில்லை என்பது எப்படி? இதில் இருந்து தான், எமது விவாதம் மற்றும் வரட்டுவாதம் பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதை தெளிவுபடுத்த வேண்டும்.

    4.நாங்கள் ரதியின் கருத்துதான் புலியின் கருத்து என்கின்றோம். இது பற்றி வேறு கருத்து புலிபாசித்துக்கு கிடையாது என்கின்றோம். இதனால் புலியின் கருத்தை பாசிசம் என்கின்றோம். இதுவே எங்கள் அரசியல் நிலை. இங்கு ரதியின் கருத்தைத் தான் சொல்லுகின்றோம். தனிப்பட்ட ரதியை நாம் கூறவில்லை. அப்படி தனிப்பட்ட ரீதியாக கூறியதாக அவர் கருதினால், கருத்துப் போராட்டத்துக்கு வெளியில் எம் மனவருதத்தை தெரிவித் கொள்கின்றோம். ரதியின் கருத்துக்கு வெளியில் ரதி மேலானதாக காட்டி, ஒரு வீங்கிவெம்பிய வடிவில் சில பின்னோட்டங்கள் மூலம் அப்படி சோடிக்கப்பட்டதை இங்கு நாம் குறித்துகொள்கின்றோம். முன்கூட்டியே இதை அவதானித்து இதைக் குறித்து எழுதியுள்ளோம்.

    5.”எமது” அமைப்புக்குள் இதை நாம் ஒரு அரசியல் விவாதமாக திணித்தாக கூறுவது அபத்தம். அப்படி இதையொட்டி நாம் தனிப்பட்ட ரீதியில் பிரச்சாரம் செய்யவோ, அணிசேர்க்கவோ எந்த வழியிலும் நாம் முனையவில்லை. இது ஒரு அரசியல் விவாதம் என்பதை தெளிவாக நாம் மீண்டும் குறித்து கொள்கின்றோம். குறித்த இலங்கை சூழலை ஓட்டி, புலிக்கும் தேசித்துக்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை (கொள்கை ரீதியாக இருத்தல் வேறு) மையக் கிளர்ச்சி மற்றும் கோசத்திலும் முன்வைத்து பிரச்சாரம் செய்யவிட்டால் இயல்பாக வலது அரசியல் போக்கு ஒன்று எழும். இது உலக வரலாறு எங்கும் எழுந்தது. குறிப்பாக இந்த வருட ஆரம்பத்தில் புத்திஜிவிகள் என்று கூறிக்கொண்ட சிலா புலத்தில் களத்திரும் புலிக்கு பின்னால் சென்றனர்.

    6.ரதி விவாகரம் என்பது, எம்மைப் பொறுத்த வரையில் சில தோழர்கள் கூறியது போல் சின்னவிடையம். அரசியல் ரீதியாக அப்படியல்ல. ரதிக்கு பதில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றால் அந்த சூழல் வேறு. இலங்கையார் என்றால் சூழல் வேறு. இலங்கையர் என்பதால், இந்தப் போக்கை எதிர்வினையற்றுவது அவசியமானது. நாங்கள் எப்படி பாசிசத்தை எதிர் கொண்டு போராடினோமோ, அதன் வழியில் இதை எதிர் கொள்வோம். இதற்கு வெளியல் எமக்கு முன் புலியில்லை.

    7.எம்மை சுற்றிய பாசிச சூழலை கொண்டு தோழாகள் எம்மை தாக்குவது, அரசியல் அல்ல. பாசிசத்தில் இருந்து தப்பி, இன்று அதற்கு பலியாகும் நிலையில் நின்று போராடுபவர்கள்; நாங்கள். பாசிசம் எதிர் கொண்டு நிற்பதுதான் எமது நடைமுறை. இதை கொச்சைப்படுத்தினால் பாசிசம் என்றால் என்வென்று தெரியாது என்பதுதான் அர்த்தம். தனிமை, தனித்தன்மை, பூர்சுவத்தனம்,… என்று, எம் சூழலை வைத்து அரசியலுக்கு வெளியில் கொசிப்பது, எமது போராட்டத்தின் முன் கால்துசுக்கு சமம்;.

    தனிமை, தனித்தன்மை, பூர்சுவத்தனம்… இதுவே வரட்டுவாதம், இந்த மாதிரியான முத்திரை குத்தும் அனுகுமுறை, பாசித்துக்கு எதிரான அரசியலை மலினப்படுத்தும் போக்கு, அனைத்து தோழமை உறவுக்கு வெளியில் எம்மை தனித்து இயங்க நிர்ப்பந்திக்கின்றது. 30 வருட பாசித்துக்கு எதிரான எமது போராட்டத்தையும், போராடி மரணித் தியாகத்தையும், எம்மை போராட்டத்தில் உன்றி நிற்கும் வைத்த அரவியல் மற்றும் அனுபவத்தையும், நாங்கள் துக்கியெறிய மாட்டோம்.

    தோழர்கள்:

    1. எம்மை உங்களில் ஒரு தோழராக கருத்திக் கொண்டு (சிலர் விதிவிலக்கு) விவாதிக்கவில்லை.

    2. விவாதத்தின் போக்கில் கருத்துக்களை வைத்து, அவர் இவரின் ஆள் என்று அணி பிரிப்பது நிகழ்ந்துள்ளது.

    3. வினவுக்கு எதிரானவராக்கி, எமக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. குழுவாதத்துடன்

    4. நாங்கள் வைத்த கருத்தை எடுத்து, யாரும் விவாதிக்க தவறியிருந்தனர்.

    ரதி தொடர்பாக:

    1. அவரை நாம் பாசிட் என்று சொன்னது ரதி என்ற நபரையல்ல, அவரின் கருத்தைத்தான். இது தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்டது.

    2. புலிப்பாசிசம் தொடர்பான கருத்தை, மக்களைச் சார்ந்து ரதி விவாதிக்கவே தயாராக இருக்கவில்லை.

    3.அவரின் கருத்தை வரிக்கு வரி எடுத்து எழுதிய பகுதியை நாம் வெளியிடவில்லை. அது அவசியமில்லை. விவாதம் அவரின் கருத்து புலிக் கருத்தா இல்லயா என் விவாதமாக அது மாறிவிட்டது. புலிக் கருத்தா இல்லயா நாம் விவாதிக்க, ரதிக்குள் விவாதத்தை வைதிருக்கவே மற்றவர்கள் விரும்பினர். ரதி மட்டும்தான் இதற்காக கவலைப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அதை அவர் விரும்பவில்லை.

    நாம் வெளியிடவில்லை என்பது

    1.அவரின் கருத்து புலிக் கருத்தல்ல என்ற வினவுவினதும் மற்றவர்களினதும் நிலைப்பாடு

    2.புலிப்பாசிசத்தின் கருத்து எது என்பதை, தோழர்கள் யாரும் எமக்கு எதிர்நிலையில் நின்று தெரிவிக்காமை.

    3.நாங்கள் ரதியின் கருத்து மீது ஒரு வரலாறாக உள்ள பாசிசத்தை தோழர்களுக்கு எடுத்துக் காட்ட முற்பட்டோம். இதன் மூலம் தோழர்கள் ரதியின் கருத்து எப்படி புலிக் கருத்தாக இருக்கின்றது என்பதை இனம் காண்பிபதற்கு நாங்கள் முயற்சித்தோம்.

    வினவு தொடர்பாக

    1.ஈழத்து புலிப் பாசிச கருத்து எது என்பதை நிறுவவும், விவாதிக்கும் எல்லைக்குள் எம் விவாதத்தை நடத்த, வினவு நிலைப்பாடு எம்மை இட்டுச்சென்றது.

    2.ரதியின் கருத்து புலிக் கருத்தல்ல என்ற நிலையின் பின், ரதியின் பாசிசம் பற்றிய பேச்சுக்கு அவர் சார்ந்து இடமில்லை. இதனால் வினவு எமது விமர்சனத்துக்குரியவரானார். (இதை எம்தளத்தில் செய்ய வைத்தது, வினவின் அனுகுமுறைதான். இருந்தும் இல்லை என்ற நீங்கள் கருதினால், இதனால் தான் (கருத்துக் வெளியில்) இந்த நிலை அடைந்தது என்று நீங்கள் கருதினால், அதற்கு நாங்கள் பொறுப்பை எற்றுகொள்கின்றோம்.)

    3.ரதி வைத்த 1. தன் வரலாறாக, மக்களின் வரலாற்றை பற்றிய அவரின் பார்வை 2. அக் காலத்தில் மக்களுக்கு எதிராக புலிகள் நடந்தியவைகளை திட்டமிட்டு மறைத்தல் 3.பொது மக்களாக இருந்து பொதுவானதை சொல்லாமை.

    இவை எதுவும் புலியின் கருத்தல்ல என்ற அடிப்படையில் வினவு மற்றும் தோழர்கள் அணுகினர். இதனால் ரதி விமர்சனத்துக்கு பதில், வினவிற்கு நாம்; பாசிச வரலாற்றை சொல்ல முனைந்தோம். இதையிட்டு விவாதம் செய்தவர்களுக்கு அக்கறையிருக்கவில்லை. தொடர்ந்து விவாதிப்பதில் அத்தமற்றது.

    4.எம் முன் பாசிசம் என்பது, ரதியின் கருத்து வடிவில்தான் உள்ளது. இதற்கு வெளியில் நாம் புலிப் பாசிசக் கருத்தை புலத்தில் தரிசிக்கவில்லை. புலத்து புலி இப்படித்தான் விவாதிக்கின்றது. மே 17 முன் களத்தில் இதைத்தான் புலி சொன்னது. நாங்கள் அந்த அடிப்படையில் எதிர்கொண்டோம். தொடர்ந்து எதிர் கொள்வோம். அப்படி உங்களை எதிர் கொள்ள தோழமையுடன் அழைக்கின்றோம்.

    5.ரதியின் முதலாவது கட்டுரையை ஒட்டிய எமது கருத்துக்கு, அளிக்கப்பட்ட பதில் தான் என்னை அந்த தளத்;தில் இருந்த விலக வைத்தது. பக்கச்சார்புடன் விவாதிப்பது என்பது, எம் விமர்சனம். நாங்கள் பக்கசார்பு என்று கூறியது, நடுநிலைமையையல்ல. தன்னை சுற்றி நடந்ததை மறைக்காமல் சொல்வது. இதை விதவிதமாக மொழி பெயர்க்க கூடாது. நாம் தரிசித்த உண்மைகள் ஒன்றை, நாம் வாழ்ந்த சூழலை, திரிக்கப்பட்டு இருந்ததை பக்கசார்பு என்று நாம் கூறினோம். இதை திரித்து பக்கசார்புடன் எருதியதை, அப்படிதான் தான் கூற முடியும் என்று சொல்லி, தர்க்கம் செய்தனர். அன்று இந்த முரண்பாட்டை தவிர்க்கவே நாம் வெளியேறினோம். வெளியில் இருந்து, இதை எப்படி அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்று பார்த்தோம். எதிர்வினையற்ற நிலையில் எல்லோரும் இருந்ததால், நாம் வெளியில் விவாதித்தோம். எமக்கு இதில் வேறு வழியில்லை.

    6.மா.செ தற்கொலை பற்றிய அன்றைய விவாதத்தை இங்கு குறிப்பிடுவது ஆச்சரியமானது. அன்று நாம் எம் கருத்தை வைத்தோம். அதை எதிர் கொண்டு, இன்று மா.சே எதிர் வினையாற்றுவது அதிர்ச்சியளித்தது. தற்கொலை பற்றிய எமது நிலைப்பாடு சரியானது என்பதை, தோழர்களின் பேட்டி மற்றும் கட்டுரைகள் மூலம் இன்று நாமும் உறுதிசெய்து கொண்டோம். நாங்கள் மறந்த விடையத்தை, எதிர் மனப்பாங்கில் வைத்து இயங்கியிருப்பது இங்கு ஆச்சரியமானது, அதிர்ச்சியளிக்கக் கூடியது. பழிவாங்கும் உணர்வு.

    7.சிலர் முதல் பதிவில் ரதியை பாசிட் என்று கூறியதாக கூறுவது தவறு. முன்றாவது பதிவில் பின் வினவுக்கு எழுதி கடிதத்தில்தான் இதை மு§லில் எழுதினேன். பல தோழர்கள் இதை எல்லாம் வசிக்காமல், இது பொன்ற கருத்து சொல்வது எரிச்சலலுக்குரியது. (தொடர்ந்து இப்படி எழுதினால் எப்படித்தான் உங்களுடன் விவாதிக்க முடியும்?)

    என்னைப்பற்றி

    1.என் பற்றிய உங்கள் அபிராயங்கள் மீது, பதிலளிக்க வேண்டியதில்லை. அரசியல் ரீதியாக பார்த்தால் அசிங்கமானவை. என்னுடைய பல வாதங்களை அரசியல் ரீதியாக எடுத்து நீங்கள் விவாதித்திருக்கலாம்.

    2.மா.சே “வினவு தளத்தின் மீதான விமர்சனம் என்ற பெயரில் நமது அமைப்பின் மீதான விமர்சனங்களை செய்கிறார். குறிப்பாக முத்துக்குமாரின் மரணத்தை நாம் பார்த்த விதத்தில் அவருக்கு துளியும் ஒப்புதல் இல்லை. அப்போதே அவர் அதை விமர்சித்து எழுதி வந்தார், நம் அமைப்பின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சீபீஎம் சந்திப்பு தளத்தில் போய் பதிந்து வந்தார். இங்கு துவங்கியது அவர் செய்த தவறு.” என்ற கூற்று மிகத் தவறானது. “நம் அமைப்பின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சீபீஎம் சந்திப்பு தளத்தில் போய் பதிந்து வந்தார்.” என்பது தவறானது. அப்படி நாங்கள் செய்யவில்லை. சீபீஎம் எதிராக தனிக்கட்டுரை எம் தளத்தில் செய்துள்ளோம்.

    இறுதியாக

    இந்த விவாதத்தில் அரசியலுக்கு வெளியில் தனிபட்;ட ரீதியில் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக எம்மனவருத்தைத் தெரித்துக் கொள்கின்றோம்.

    வெளியில் இருந்த பார்த்த பலருக்கு எற்பட்ட சங்கடங்களுக்கு, மன உளைச்சலுக்கு, மற்றவர்கள் சார்பிலும் நாம் பொறுப்பு எடுத்துக் கொள்கின்றோம்.

    அரசியல் ரீதியாக எம்கருத்து மீது தோழர்கள் விவாதித்திருந்தால், பல நல்ல அரசியல் விளைவு எற்பட்டிருக்கும். அதை எம்மால் இதில் உருவாக்க முடியாமல் போனமைக்கு, எமது தோல்வியை ஒத்துக்கொள்கின்றோம்.

    அரசியல் ரீதியாக விவாதிக்க முன்வராத நிலையில், இந்த விவாதத்தில் இருந்து விலகிக் கொள்வது பொருத்தமானது என்று நாம் கருகின்றோம். வெளியில் இருந்த அவதனிப்பது நல்லதாகப் படுகின்றது. எமக்கு வேறுவழி இல்லை.

    வினவின் தனிபட்ட ஆளுமை மீது, (அரசியலுக்கு வெளியில்) எங்கள் வெயல்கள் பாதிப்பை எற்படுத்தியிருத்தால் தோழமையுடன் அதை புரிந்து கொள்ளமுனைகின்றோம்.

    பி.இரயா
    02.09.2009

    • //சில விடையங்களை தெளிவுபடுத்துவதற்கு அப்பால், விவாதத்தை தொடருவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அது ஆரோக்கியமாக நடக்காது என்ற கருதுகின்றோம்.//

      இதனை நான் வழிமொழிகிறேன்..

      • இந்த முடிவில் எனக்கு ஒப்புதல் இல்லை 6 பாகத்திற்கு பிறகு அதில் எழுதியுள்ளதை விவாதிக்காமல் அப்படியே விட்டுவிடுவது பிரச்சனையை தீர்க்காது… இப்போது நடந்துள்ளதைப்போல வேறொரு சமயத்தில் வேறொரு பிரச்சனையில் நிச்சயம் வெளிப்படும்

    • தோழர் ரயாகரன் தனது தரப்பு விளக்கத்தை இங்கு முன் வைத்துள்ளார்.
      எனவே அதன் மீது தோழர்கள் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை
      முன் வைப்பது அவசியம் என கருதுகி்றேன். எனவே எனது
      கருத்துக்களையும் அவருடைய வரிசைப்படியான கருத்திற்கு பதிலாக
      அதே வரிசை படி இட்டுள்ளேன்.

      தோழர் ரயா நீங்கள் இந்த‌ விவாதத்தில் பங்கேற்கவே இல்லை பின்னர்
      அதிலிருந்து விளகுவது என்பது எப்படி சரி ?

      இங்கு குழுவாத போக்குடன் சில தோழர்கள் இயங்குகிறார்கள் என்கிற
      உங்கள் கூற்றை நான் முழுமையாக ஏற்கவில்லை எனினும் விவாதத்தின்
      போக்கில் நீங்கள் இடைமறித்து பங்கேற்காததன் விளைவாக‌ அது
      உருவாகியுள்ளது என்பதையும் நான் மறுக்கவில்லை.மேலும் அரசியல்
      விவாதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்கிற உங்கள் கருத்தையும் நான்
      ஏற்கவில்லை இங்கு ஒரு அரசியல் விவாதம் தான் மேற்கொள்ளப்பட்டு
      வருகிற‌து என்று கருதுகிறேன்.

      ஈழத்து தோழர்களை,தங்கள் சொந்த தோழராக கருதும் சர்வதேசியப் போக்கு
      எங்களிடம் இல்லை என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் ? எந்த அடிப்படையை கொண்டு அந்த‌ முடிவுக்கு வருகிறீர்கள் ? இரண்டாவது பாசிசம் தொடர்பான உங்களுடைய‌ அரசியல் நிலையை நிச்சயமாக‌ அரசியல் ரீதியாக மறுப்பது
      அவசியம் என்று தான் கருதுகிறேன்.ஏனெனில் ரதி போன்ற சாதாரண
      பெண்ணையும் கூட‌ பாசிஸ்டாக வரையருப்பது எனில் அந்த வரையறை
      புலிகளை நம்பி பின்னால் சென்ற‌ ஆயிரக்கணக்கான‌ மக்களையும் பாசிஸ்ட்
      என்று வரையறுப்பதில் தான் போய் நிற்கும்.

      புலி பாசிசத்திற்கெதிரான உங்கள் போராட்ட வாழ்க்கையை,பணிகளை நாமும் மதிக்கிறோம்.ஆனால் அதே நேரத்தில் அது ஏன் மக்களை,மிகப்பெருமளவு
      மக்களை அல்ல மிகச்சிறிய ஆதரவாளர் கூட்டத்தை கூட உங்கள் பக்கம் வெண்றெடுக்கவில்லை என்று கேட்பதுடன் அத‌ற்கு காரணம் வறட்டுவாதம் தான் என்பதையும் முன் வைக்கிறோம்.எமது விமர்சனத்தை ஏற்று ‘ நாம்
      வரட்டுவாதிகளாக இருப்பதாக நீங்கள் கருதினால்,அதை களையவேண்டிய
      பொறுப்பு எங்களுக்கு உண்டு’ என்று திறந்தமனதுடன் நீங்கள்
      சுயவிமர்சனத்திற்கு முன் வருவதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

      ரதி புலி தான் என்றால் நீங்கள் அதை தாராளமாக வினவிலேயே
      அம்பலப்படுத்தலாம்.

      ரதியினுடைய கருத்து புலி அனுதாபியின் கருத்தாக இருக்கட்டும்,
      புலியினுடைய கருத்தாகவும் கூட இருக்கட்டும்,அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தக்க சமயத்தில் அதை வினவிலேயே
      அம்பலமாக்குவது சரியா அல்லது புலி தன்னை மறைத்துக்கொள்ளும்
      விதமாக ‘மறைக்காமல்’ எழுது,புலியை விமர்சித்து எழுது என்று முன்னரே
      அதை எச்சரிக்கையடையச் செய்வது சரியா ? அத்துடன் நில்லாமல்
      வினவு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பில்லாத
      போது புலி தப்பித்து ஓடும் விதமாக ஏழு பதிவுகள் போட்டு ரதி என்கிற
      புலியை தப்பவிட்டது நீங்கள் தானே தோழர் ? புலியை அதன் இடத்திலேயே (வினவிலேயே) அம்பலமாக்குவது முக்கியமா அல்லது புலிக்கெதிராக
      உங்கள் தளத்தில் எதிர்வினை செய்வது முக்கியமா ?

      ////////////// புலி பாசிசத்திடமிருந்து தப்பி,இன்று அதற்கு பலியாகும் நிலையில்
      நின்று போராடுபவர்கள்;நாங்கள்.பாசிசத்தை எதிர் கொண்டு நிற்பதுதான்
      எமது நடைமுறை. இதை கொச்சைப்படுத்தினால் பாசிசம் என்றால்
      என்வென்று தெரியாது என்பதுதான் அர்த்தம்.///////////////

      என்று கூறியுள்ளீர்கள் நீங்கள் புலியை எதிர்த்து போராடியதையும்,
      அதற்கெதிராக நின்றதையும் நாங்கள் மறுக்கவில்லை தோழர்,
      ஆனால் இன்று குட்டிப்புலியும் இல்லை,தலைமைப் புலியும்
      இல்லை என்கிற சூழலில் பாசிச அபாயமாக‌ எழுந்து நிற்பது
      மகிந்த சிந்தனையா புலியா, எது பாசிசம் ?

      ////////////// அரசியல் ரீதியாக எம் கருத்து மீது தோழர்கள் விவாதித்திருந்தால்,
      பல நல்ல அரசியல் விளைவு எற்பட்டிருக்கும்.அதை எம்மால் இதில்
      உருவாக்க முடியாமல் போனமைக்கு,எமது தோல்வியை
      ஒத்துக்கொள்கின்றோம்.//////////

      இது தவறான கருத்து தோழர்.வறட்டுவாதம் பற்றி விமர்சிப்பது என்பதும்
      அரசியல் ரீதியான விவாதம் தான்.உங்கள் கருத்தின்படியே நல்ல‌ அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக விவாதத்தை முன்னெடுத்துச்செல்ல முடியாததற்கு தாங்களே தான் காரணம் என்று கூறியுள்ளீர்கள்.இது
      வரவேற்கத்தக்கது ஆனால் ‘எமது தோல்வியை ஒத்துக்கொள்கின்றோம்’
      என்று முடித்திருப்பது சரியல்ல,விவாதம் முன்னெடுத்துச்
      செல்லப்படாததற்கு தாங்கள் தான் காரணம் என்றால் சுய விமர்சனமாக
      பரிசீலனைக்கு முன் வருவது தான் சரியானது என்று கருதுகிறேன்.

      ////////////அரசியல் ரீதியாக விவாதிக்க முன்வராத நிலையில், இந்த
      விவாதத்தில் இருந்து விலகிக் கொள்வது பொருத்தமானது என்று
      நாம் கருகின்றோம். வெளியில் இருந்த அவதானிப்பது நல்லதாகப்
      படுகின்றது. எமக்கு வேறுவழி இல்லை.//////////////

      எது அரசியல் இல்லை என்பதை
      விளக்காமல் நீங்கள் இப்படி விலகுவதை
      யாரும் ஏற்க மாட்டார்கள் என்று
      கருதுகிறேன்..

  119. அசுரன் உங்களுடைய பின்னூட்டங்களை பார்க்கும் பொழுது நீங்களும் இரயாகரன் எழுதி வருவதை தொடர்ந்து படிப்பதில்லை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. அவர் வினவு தள்த்தின் மீதும் நமது அமைப்பின் மீதும் தொடர்ந்து வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த மாதங்களில் தமிழரங்கத்தில் வெளியான கட்டுரைகளை வாசித்து பாருங்கள்.

    இரயாகரனிடம் தோழமையுடன் அனுகி நான் புலிப்பட்டம் வாங்கிய கதையை, எனக்கு ஆதரவாக பேசி வினவு புலி ஆதரவு பட்டம் வாங்கிய கதையை நீங்கள் பார்க்க ரதியின் முதல் பகுதி பின்னூட்டங்களை வாசியுங்கள்

    இந்த இடுகையில் கூட நீங்கள் எனது பின்னூட்டங்களை வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் இராயா மீதான விமர்சனத்தை விட நமது தோழர்கள் அவரை விமர்சிக்காத போக்கைதான் நான் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறேன்,

    நீங்கள் சொல்வதை போல ஈழத்து தோழர்கள் மனம் வருந்தினால் என்ன செய்வது, மார்க்சியம் தான மனவருத்ததை போக்கும் மருந்து, அதை பின்தள்ளி உணர்ச்சிகை முன்தள்ளினால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அந்த வருத்ததை களைய நாம் முயற்சி எடுக்க அவர்களும் அனுமதிக்க வேண்டும், புலி முத்திரை இரும்புத்திரை !

    இந்த பிர்ச்சனையை கூட திசைத்திருப்பியது இரயாகரனின் பதிவுகள் தானே மற்றவர்கள் இல்லை. இங்கே நடக்கும் விவாதத்தை புலம்பல்கள், கொசிப்புகள் என்று மட்டம் தட்டியது யார்?

    மற்றபடி நீங்கள் கருதும்

    ###ரதியும், ரயாகரனும் எமக்கு ஒன்றே.. அரசியலும், தனிநபரும் எமக்கு ஒன்றே… நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று மிக மிக மிக நேர்மையாக இருப்பதும் ஒரு வித கற்பனாவாதமே, பரவச போக்கே…###

    என்ற பிரச்சனை என்னிடம் வெளிப்பட்டதாக நான் கருதவில்லை.

  120. //அவர் வினவு தள்த்தின் மீதும் நமது அமைப்பின் மீதும் தொடர்ந்து வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார்.//

    முழுமையாக எல்லா கட்டுரைகளையும் படிப்பத்ற்கு வாய்ப்பில்லை ஆயினும் பரவலாக பெரும்பாலான அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தே வருகிறேன்.

    நீங்கள் குறிப்பிடுகின்ற ரயாகரன் கட்டுரைகளின் கருத்துக்களைத் தொகுத்து ரயாகரனிடம் தனிப்பட்ட முறையில் கருத்துக் கோருவதும், அல்லது அந்தந்த கட்டுரைகளிலேயேகூட விவாதத்தை முன்னெடுப்பதுமே சரியானதாகும் என்று கருதுகிறேன். (குறிப்பாக ரயகரன் சிபிஎம் தளத்தில் கூறியதாக நீங்கள் குறிப்பிடுவது குறித்து அவரிடமே தகுந்த ஆதரங்களுடன் உரிமையுடன் முறையிட்டு தெளிவு பெறுவதும் தெளிவு படுத்துவதுமே சரியான அனுகுமுறை)

    அசுரன்

    • http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html இந்தக்கட்டுரையில் இட்ட பின்னூட்டத்தை தான் சொல்கிறேன், இதை அவர் இடவில்லையெனில் எனது கருத்தை திரும்பப்பெற்று ஆலோசிக்காமல் முடிவு செய்தமைக்காக விமர்சனம் ஏற்கிறேன்.

      இதை அவர்தான் வெளியிட்டார் என்று நான் முடிவு செய் காரணமாய் இருந்தது, தமிழ்மணத்தில், வினவு பின்னூட்டத்தில், சந்திப்பு தளத்தில் என ஒரே நேரத்தில் அனைத்தையும் கண்டதினால்தான்

  121. இத்தனை ஆண்டு காலம் ரயாகரனுடமும், ஈழத்துத் தோழர்களுடனும் கொண்டிருந்த தோழமை உணர்வு இன்று பகை முரன்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது என்ற நிதர்சனத்தை அனைத்து தோழர்களும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு போனதற்கு எல்லாத் தரப்பினரும் தம் தமது பங்கிற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அனுபவத்தை தொகுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைவிடுத்து நாம் செய்து சரிதான் என்று நம்புகிறோம் எனில் எப்படி நம்து கையை மீறி இத்தனை ஆண்டுகால தோழமை சிதைவுறும் நிலைக்கு செல்ல எத்தணித்தது என்பதற்கு பதில் வேண்டும்.

    • உங்களுடைய கருத்து சரி, அனுபவம் அவசியம் தொகுக்கப்படவேண்டும், அதற்கு முன்னால் வினவு வெளியிடுவதாக சொல்லியுள்ள விமர்சனத்தை உடனே வெளியிடவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சனை முடியும்.

  122. //http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html இந்தக்கட்டுரையில் இட்ட பின்னூட்டத்தை தான் சொல்கிறேன், இதை அவர் இடவில்லையெனில் எனது கருத்தை திரும்பப்பெற்று ஆலோசிக்காமல் முடிவு செய்தமைக்காக விமர்சனம் ஏற்கிறேன்.//

    இதை உடனடியாகவே அவரிடம் வைத்து விவாதித்திருக்க வேண்டும். ஒரேயொரு பின்னூட்டத்தை வைத்தோ அல்லது ஒரு சில கட்டுரைகளில் உள்ள மாற்றுக் கருத்துக்கள், விமர்சனங்களை வைத்தோ மொத்தமாக இத்தனை வருட தோழமையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் நாம் செயல்பட நமக்கு உரிமையில்லை.

    அவர் மிக நேரடியாகவே நம்மை விமர்சித்திருந்தாலும் கூட அவரிடம் ஆகப் பொறுமையாக உரையாடி விளக்கம் கோர போராடுவதும் அது பலனளிக்காத அளவு அவர் எதிர்நிலையில் இருக்கிறார் என்ற போது மட்டும்தான் பொது தளத்தில் அந்த உரையாடலை நாம் நீட்டிப்பு செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

    அசுரன்

    • நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் ஒவ்வொரு முறை விமர்சனம் செய்தபோதும் விமர்சனத்திலிருந்து விலகிப்போய் தனது தளத்தில் கட்டுரை எழுதுவது யார்? நாம் விவாதிக்கும் வெளியை அடைப்பது யார்?

      • //விமர்சனத்திலிருந்து விலகிப்போய் தனது தளத்தில் கட்டுரை எழுதுவது யார்? நாம் விவாதிக்கும் வெளியை அடைப்பது யார்?//

        அந்த விசாரணைகளை பிறகு வைத்துக் கொள்ளலாம். உங்களளவில் சரியானதொரு அனுகுமுறையைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள் எனில் தொடர்ந்து போராடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்துள்ள போரட்டங்களை தொகுத்து பொதுவெளியில் வைத்து உரையாடும் முன்பு ரயாகரனிடமே கருத்து கோருங்கள். அவற்றை பிற தோழர்களிடமும் வைத்து விவாதியுங்கள். இவையெல்லாம் பயனளிக்காத ப்டசத்தில் பொதுவெளியில் வைத்து இறுதியான் உங்களது முடிவுகளை அறிவித்து பொது விவாதத்தை தொடங்குங்கள்.

        இப்படியான முறையே சரி என்று நான் நம்புகிறேன். தோழமையுடனான முரன்பாடு, ஐக்கியம் என்பது இத்தகைய அதி எச்சரிக்கை உணர்வுடன் செய்யப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

      • //நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் ஒவ்வொரு முறை விமர்சனம் செய்தபோதும் விமர்சனத்திலிருந்து விலகிப்போய் தனது தளத்தில் கட்டுரை எழுதுவது யார்? நாம் விவாதிக்கும் வெளியை அடைப்பது யார்?//

        (முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி)மேலும் இணையச் செயல்பாட்டுக்கு என்று சில வரம்புகள் உண்டு. இதர பொதுவெளிச் செயல்பாடுகள் போலான முற்று முதலான நடவடிக்கைகளுக்கு இணையம் பொருத்தமானது அல்ல. எனவே மா.சே. சொல்வது போன்ற சூழலிலும் கூட நமது எதிர்வினை என்பது வரம்புக்குட்ப்பட்டதாகவே இருக்க இயலும். இந்த வரம்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வு இணையத்தில் செயல்படும் போது இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

      • (முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி2 )

        இணையம் என்பது மெய் உலகின் ஏதோ ஒரு வகையிலான பிரதிபலிப்பு, நீட்சி என்ற நிலையில் இந்த மெய் நிகர் உலகில் நமது செயல்பாடுகள் மெய் உலகின் செயல்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதாக இருக்க வேண்டும். மாறாக, சர்வதேசிய தோழமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது எனில் அத்தகைய செயல்பாடுகளை குறைந்த பட்சம் இணையத்தில் நாம் மிக மிக எச்சரிக்கையுடன் ஆழமாக பரிசீலித்து, முழுமையாக விவாதித்தே செய்திருக்க வேண்டும். அவ்வாறான வாய்ப்புகள்(பரிசீலித்து விவாதித்து முடிவு எடுப்பது) இணையத்தில் இல்லை என்பதையே நாம் வரம்புகள் என்று குறிப்பிடுகிறேன்.

  123. //அவர் மிக நேரடியாகவே நம்மை விமர்சித்திருந்தாலும் கூட அவரிடம் ஆகப் பொறுமையாக உரையாடி விளக்கம் கோர போராடுவதும் அது பலனளிக்காத அளவு அவர் எதிர்நிலையில் இருக்கிறார் என்ற போது மட்டும்தான் பொது தளத்தில் அந்த உரையாடலை நாம் நீட்டிப்பு செய்ய முடியும் என்று நம்புகிறேன்.//

    யார் யாரோ மூன்றாம் தர முகமறியா இணைய அனானிகளிடம் வினவு தளத்தின் ஊடக நாம் காட்டிய விவாத பொறுமையில் ஒரு 10 சதவீததத்தைக் கூட ராயாகரன் உள்ளிட்ட ஈழத்துத் தோழர்களிடம் நாம் காட்டவில்லை என்பதாக அவதனிக்கிறேன். ஒருவேளை அவர் நமது தோழர்தானே என்ற உரிமையில் கூட இருக்கலாம். ஆனால் இவை பாரிய மீளப் பெற இயலாத தவறுகளுக்கு இட்டுச் சென்றுவிட்டது.

  124. ராயகரனும்,வினவும் கவுண்டமணி,செந்தில் போல் காமெடியன்களாக நடிக்க கோடம்பாக்கத்தில் முயற்சி செய்யலாம்.

    ‘இத்தனை ஆண்டு காலம்

    ரயாகரனுடமும், ஈழத்துத் தோழர்களுடனும் கொண்டிருந்த தோழமை உணர்வு இன்று பகை முரன்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது என்ற நிதர்சனத்தை அனைத்து தோழர்களும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு போனதற்கு எல்லாத் தரப்பினரும் தம் தமது பங்கிற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அனுபவத்தை தொகுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைவிடுத்து நாம் செய்து சரிதான் என்று நம்புகிறோம் எனில் எப்படி நம்து கையை மீறி இத்தனை ஆண்டுகால தோழமை சிதைவுறும் நிலைக்கு செல்ல எத்தணித்தது என்பதற்கு பதில் வேண்டும்.

    கார்ல் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோசின் – இவர்களின் ஆவிகளுடன் பேசினால் தோழர் அசுரனுக்கு தெளிவு பிறக்கும் :).

  125. மாசே தங்களுடைய குற்றசாட்டு ஏற்றுக் கொள்ளமுடியாது முதலில்
    நீங்கள் சந்திப்பு தளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை முழுமையாக படித்தீர்களா ? அந்த பின்னூட்டம் தமிழரங்கத்தில் தனி கட்டுரையாகவே வெளிவந்துள்ளது அதை ஒரு அனானி சந்திப்பு தளத்தில் வெளியிட்டிருக்கிறது இதை ரயாதான் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு உங்களை புலி என தோழர் இரயா சொன்னதற்கு(பிறகு தோழர் இரயா அதை சுயவிமர்சனம் செய்து கொண்டார் ) சமமானது,
    நமது அமைப்பை இரயா விமர்சனம் செய்கிறார் என்ற குற்றசாட்டு
    சரியானதல்ல. உங்களின் தனிபட்ட புரிதலை அமைப்போடு தொடர்புபடுத்துவது சரியா?

    • இந்த விவாத்தில் தெளிவான சரியான கருத்துக்களை வைத்த தோழர் அசுரனுக்கு நன்றி இங்கே சில தேவையற்ற கும்பல்கள் கூட இந்த விவாதத்தை
      பயன்படுத்தி தோழர்கள் என்ற முகமூடியை அணிந்து கொண்டு விரிசலை அதிகபடுத்தும் வேலையை செய்கின்றன (அனேகமாக சீபீஎம், RSS நாய்களாக இருக்க கூடும்) இதில் வினவு தனது கருத்தை பதிவு செய்து விவாத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இல்லையேல் தேவையற்ற சிக்கலை உருவாக்கி முக்கிய பிரச்சனையாக மாற வாய்பிருக்கிறது, அரைகுறை புரிதலோடு மார்க்சிய சொல்லாடல்களோடு தொடரும் “அக்கப்போரை” நிறுத்திவிடுங்கள்,

      மூத்த தோழர் அசுரனின் இந்த வரிகள் பாதுகாத்து தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை

      சர்வதேசிய தோழமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது எனில் அத்தகைய செயல்பாடுகளை குறைந்த பட்சம் இணையத்தில் நாம் மிக மிக எச்சரிக்கையுடன் ஆழமாக பரிசீலித்து, முழுமையாக விவாதித்தே செய்திருக்க வேண்டும்.

  126. //மாசே தங்களுடைய குற்றசாட்டு ஏற்றுக் கொள்ளமுடியாது முதலில்
    நீங்கள் சந்திப்பு தளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை முழுமையாக படித்தீர்களா ? அந்த பின்னூட்டம் தமிழரங்கத்தில் தனி கட்டுரையாகவே வெளிவந்துள்ளது அதை ஒரு அனானி சந்திப்பு தளத்தில் வெளியிட்டிருக்கிறது இதை ரயாதான் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு உங்களை புலி என தோழர் இரயா சொன்னதற்கு(பிறகு தோழர் இரயா அதை சுயவிமர்சனம் செய்து கொண்டார் ) சமமானது,
    நமது அமைப்பை இரயா விமர்சனம் செய்கிறார் என்ற குற்றசாட்டு
    சரியானதல்ல. உங்களின் தனிபட்ட புரிதலை அமைப்போடு தொடர்புபடுத்துவது சரியா?//

    தோழர் விடுதலை,

    இந்த விவாதத்திற்க்குள் இப்பொழுது போக வேண்டாம் என்று கருதுகிறேன்(let us maintain the status quo). அல்லது குறைந்த பட்சம் விவாத பாணியில் அல்லாமல் புரட்சிகர பணிவுடன் கருத்துக்களை முன்வைக்கும் தோணியில் இவற்றை வைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட தோழரின் சிந்தனைக்கு அவற்றை அர்ப்பணிப்போம். ஏனேனில், தோழமையை பலப்படுத்துவதே இப்பொழுது தேவையாய் உள்ளது. இல்லையெனில் மீண்டும் தோழர்களின் தன்னிலை(ego) முன்னுக்கு வந்து பொது இலக்கு விரயமாக்கப்பட்டுவிடும்.

    அசுரன்

  127. ஈழத்திற்கு கடமை செய்ய‌ தூன்டுகோளாக இருக்கும் என்பது மிகைப்படுத்த ஒன்று. அதுபோலவே ரதி ஒரு பாசிட்டு என்பதும் மிகைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆவேசப்பட்ட சிறீ பின்பு நிலைமையை உணர்ந்து விவாதம் மூலம் ரதியை தன் வலைக்குள் சிக்க வைத்துவிட்டார். இதை இரயா முன்பே செதிருக்கலாம் அவரின் ஆவேசம் தோழர்களை இரண்டாகப் பிரித்தது. ரதியின் பதில்களில் அப்பாவித்த்ன்மே வெளிப்படுகிறது. பின்பு ஏன் இரயா…..
    காரணம், தமிழீழ மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டபோது சங்கிலித்தொடர், கடிதம்,உண்னாவிரதம் என நாடகமாடிய கருணாந்தியை துரோகி என திமுக காரணும் ஒத்துக்கொள்கிரானே. இவர் ஏன் புலியை பாசிட்டு இல்லை என மறுக்கிறார்.
    மோடியின் குஜராத் படுகொலையை எந்த ஒரு அப்பாவி இந்துவும் ஏற்றுக்க்கொள்ளவில்லை, ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவேற்றப்பட்ட இந்துவைத் தவிர. அப்படியென்றால் ரதி புலிப் பட்டறையிலிருந்து வந்தவரா? இல்லை. தன்னை எதிர்த்தவர்களை கொடூரமாக கொலை செய்த புலிகள் அவர்களை, பேரினவாதத்தின் கைக்கூலிகள்,நம் துரோகிகள் என பிரச்சாரம் செய்தனர். இதையே ரதி நமக்கு கூறுகிறார். இவர் நமக்கு சொல்ல வருவது புலி சொன்ன கதைகளையே. புலி தோற்றதும் துரோகிகளால் மட்டும் என்கிறார். வேறு எதுவும் இவர் அறிந்திருக்கவில்லை. விவாதிப்போம் வாருங்கள் என கோரிய தோழர்கள் விவாதத்தில் நேர்மையாக பங்குகொள்லவில்லை. சிறீ,ரதி,டெக்கான் மூவரும் மட்டுமே விவாதித்துக்கொண்டுள்ள‌னர். ஏனென்றால் நம்மிடமும் சரக்கில்லை.
    இறுதிவரை போராடி மடிந்த புலித் தலைவர்களின் மரணம் என்ற கட்டுரையில் ஈழத்தமிழர்களின் நிலயை அழகாக விளக்கும் இரயா. ஏன் ரதியை பாசிட்டு என்கிறார் தெரியவில்லை. தனது தோழமை தளத்திலேயே புலி கதை சொல்கிறதே என்ற ஆதங்கமாக இருக்கலாம். தன் சகோதர சகோதரிகளுக்கு குப்பி வழங்கிய தன் தலைவர், அவர் மட்டும் ஏன் அதை சாப்பிடவில்லை என ரதியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
    ஈழத்திற்கு கடமை செய்ய நினப்பவர்கள் இரய்யாவை தூற்ராதீர்கள். தற்போதுள்ளவர்களில் அவர் முக்கியமானவர். அவரை காகிதப்புலி என்பவர்கள் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகளின் நிலையை திரும்பிப்பாருங்கள்.
    உங்களுக்கு ஈழத்தின் உண்மை கதை வேண்டுமா முள்வேலிக்குள் எங்காவது ஒரு முதியவரை தேடிபாருங்கள் அவர் கூறுவார் இரு பாசிச வெறியாட்டங்களை.
    ரதி பாசிட்ட்ல பாசிட்டை நேசிக்கும் அகதியான் ஒரு அப்பாவி. இது என் கருத்து. இதில் தவறிருந்தால் விமர்சியுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
    தோழமையுடன்.
    முகிலன்.

  128. ரதியை காப்பாற்ற நினக்கும் ரதியின் ஆதரவாளர்கள், ரதியை அப்பாவித்தனத்திலிருந்து மீட்டு புலித்தலைமை பாசிட்டு தான் என உணரச்செய்ய வேண்டும்

  129. நன்றி தோழர் அசுரன் ! தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்

    தொடர்ந்து கடைபிடிக்கிறேன்

    • தோழர் விடுதலை அதை கடைப்பிடிப்துன்னா இரயாகரன் பத்தின உங்க விமர்சனத்தையும் சொல்லனுமே? அத நீங்க சொன்னது போல எனக்கு நினைவில்லை.

      து என்ன மூத்த தோழர்? ஒருவர் அமைப்பில் இருக்குற காலம், வயசு , தகுதி இதை வச்சுத்தான் கருத்தை மதிப்பீடு செய்வீங்களா? இதத்தான் இரயாகரனும் சொல்லுறார் ‘எம்மைப் பார்த்து கேட்டாங்க’ ன்னு.

      அசுரன் சொன்னது சரி, ஆனால் இந்த நெலமைக்கு இரயாகரனை விமர்சனம் செய்தவர்கள் காரணமில்ல, எடுத்த உடனேயே பகை முரண்பாட்டு அளவுக்கு இத கொண்டு போன இரயாகரன்தான். சர்வதேசியத்தை மதிக்கனும்னா அது நம்ம கையில மட்டுமா இருக்கு?

      என்ன பொருத்தவரைக்கும் இந்த விவாதம், அவருக்கு ,அவரப்பத்தி புரட்சிகர அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்ன நெனைக்கிறாங்க அப்படின்னு புரிஞ்சுக்க உதவி செஞ்சிருக்கனும். ஆனா அவ்ரோட பின்னூட்டத்த பாக்கும் போது புரிஞ்சுகிட்டாராங்கரது சந்தேகமாத்தான் இருக்கு.

  130. தோழர் இரயாகரன் சில விளக்கங்கள் அளித்திருப்பதையொட்டி, சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

    //இங்கு குழுவாதமும், சார்புத்தன்மையும் மற்றும் புரிதல் இன்மையும் (வாசிக்காமை கூட) இதல் முதன்மையான கூறாக உள்ளது. அரசியல் விவாதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எமக்கு எதிரான குழுவாதமும், சார்புத்தன்மையும் தோழர்களுக்கு இடையில் முரண்பாடாக மாறுவதையும் நாம் அவதானிக்கின்றோம்.//

    இக்கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். இவ்விவாதத்தில், வினவின் நிலையை பயன்படுத்திக் கொண்டு, குறிப்பிட்ட விசயத்தின் அரசியல் மாறுபாடுகளை விவாதிக்காமல், தோழர் இரயாகரன் மீது அவதூறுகளையும், அவரைக் கொச்சைப்படுத்தலையும் பலர் செய்தனர், செய்து வருகின்றனர் என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன். இவ்விவாதத்தில் வெளிப்பட்ட மிக மோசமான ஒரு அம்சம், வினவின் கருத்துக்கு, வினவே சற்று நாள் கழித்து பதில் சொல்கிறோம் என அறிவித்த நிலையில் அக்கருத்துக்கு பொழிப்புரை தரவும், இராயகரனை இழிவுபடுத்தவும் பலர் முனைந்ததுதான். ஒரு குறிப்பிட்ட அளவில், நிதானத்தோடு தமது கருத்தை முன்வைப்பதும், வினவின் முழுமையான பதிலுக்கு காத்திருப்பது என்பதற்கு மாறாக விவாதத்தின் திசையை தாமே தீர்மானிப்பதற்காக, வரையறையில்லாமல் விவாதித்துக் கொண்டே செல்லும் போக்கை வெளிப்படுத்தினர். இது ஒரு குட்டி முதலாளியப் பரவசப் போக்கு. இதன் இன்னொரு முனை, இரு நாட்களில் விவாதம் அயர்ச்சியூட்டுகிறது, இதுதான் தோழர்கள் நடந்து கொள்ளும் முறையா என சிலர் சலிப்பும், அலுப்பும் அடைந்தது. இந்த நிலைக்கு தாம் எந்த அளவிற்கு பங்காற்றியிருக்கிறோம் எனப் பலரும் குறைந்தபட்ச சுயவிமர்சனக் கண்ணோட்டத்தோடு கூட அணுகவில்லை.(தோழர்கள் ஏகலைவன், அசுரன் தவிர).

    அலுப்பும், சலிப்பும் அடையும் தோழர்களுக்கு, நான் கூறிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். எதிர்மறை அம்சங்கள் நிறைந்த இந்த அனுபவத்திலும், ஒரு நேர்மறை அம்சம் உள்ளது. இத்தகைய ஒரு விவாதத்தை போலி கம்யூனிஸ்டு கட்சிகளிலோ, வேறு எந்த அமைப்புகளிலுமோ காண முடியாது. அந்த வகையில், இதில் ஒரு அரசியல் துடிப்பும், கருத்துகளுக்காக வாதிடும் உணர்வும் கூட வெளிப்படத்தான் செய்கிறது.

    வினவிடம் நான் முரண்படுகிற கருத்துக்களை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். வினவின் அணுகுமுறை குறித்த தோழர் அசுரனின் கருத்தைப் பகுதியளவில் ஏற்கிறேன். ஏனெனில், குறிப்பிடத்தக்க அளவில், தோழர் இரயாகரனின் அணுகுமுறை வினவின் எதிர் அணுகுமுறைக்கு காரணம் எனக் கருதுகிறேன்.

    //‘இத்தனை ஆண்டு காலம் ரயாகரனுடமும், ஈழத்துத் தோழர்களுடனும் கொண்டிருந்த தோழமை உணர்வு இன்று பகை முரன்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது என்ற நிதர்சனத்தை அனைத்து தோழர்களும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு போனதற்கு எல்லாத் தரப்பினரும் தம் தமது பங்கிற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அனுபவத்தை தொகுத்துக் கொள்ள வேண்டும். //

    தங்கள் கருத்தினடிப்படையிலும், ஒட்டுமொத்தமாக இவ்விவாதத்தின் தன்மை குறித்து தெரிவிக்க எண்ணியிருந்த அடிப்படையிலும், மேற்கூறிய கருத்தை தெரிவித்திருக்கிறேன். அதே வேளையில், பகை முரண்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது என்பதை நான் ஏற்கவில்லை. இவ்விவாதத்தை முழுமையாக தோழர் இரயாகரன் கவனித்திருக்கும் பட்சத்தில் அவரது கருத்துக்களின் சரியான அம்சங்களை சில தோழர்கள் ஏற்றுக் கொண்டதையும்(தாங்கள் உட்பட), அதற்காக வாதிட்டதையும் அவர் புரிந்து கொண்டிருப்பார். இரண்டு, வினவு, வினவுத் தளத்தில் சில தோழர்களின் கருத்துக்களையே, ம.க.இ.க-வின் ஒட்டுமொத்த கருத்தாக கருதுமளவிற்கு அவர் அரசியல் தவறை புரிய மாட்டார் எனக் கருதுகிறேன்.

    • இந்த கருத்துல எனக்கு ஓரளவு உடன்பாடு இருக்கு, யாரும் இரயாகரனை கொச்சைபடுத்தியதா நான் நெனைகல, அப்படியே செஞ்சிருந்தாலும் அது அவருக்கு ஆதரவா பேசி எல்லோருக்கும புலி முத்திர குத்தும் ஒருத்தர்தான்.

  131. சிறு விளக்கம்

    1.மா.சே குறிப்பிட்ட பதிவுக்குரிய லிங்கை தந்தமைக்கு நன்றி. இன்று தான் எம் கட்டுரையை அங்கு பார்க்கின்றோம். நாங்கள் அங்கு விவாதித்தாக குறிபிட்டீர்கள். நாம் அக் கட்டுரையை அங்கு போடவில்லை, விவாதிக்கவில்லை. அனாமி பெயரில் எதையும் நான் விவாதிப்பதில்லை என்பது எனது கொள்கையும் கூட.

    2.மா.சே எமக்கு எதிரான எதிர் மனப்பாங்கை கைவிட தோமையுடன் கோருகின்றோம்;

    3.முதிலில் சொல்லாமல் விடுபட்ட பகுதி :

    1.தோழர் சிறி ஊடாக, ரதி உடன் ஒரு விவாதத்தை அரசியல் ரீதியாகவே மற்றொரு தளத்தில் நாம் நடத்தினோம். அதன் பின்னால் தோழர்கள் பங்குபற்றுவர்கள் என்ற எதிர்மறையான வழிமுறையையும் கையாண்டோம். அதுவும் தோல்வி என்பதை எற்றுக் கொள்கின்றோம்.

    2.எம்தளத்தில் இந்த முரண்பாட்டை விரிவுபடுத்தும் வண்ணம் வினவுக்கு எதிராகவும், ம.க.இ.கவுக்கு எதிராகவும் வந்த எந்த பின்னோட்டத்தையும் நாம் அனுமதிக்கவில்லை. அப்படி இருந்தால் அதை நாம் நீக்குவோம்.

    3.எம் ஈழத்து தோழர்கள் இதை விவாதிக்க முன்வந்த போதும், தோழமை கருதியும், ஈழத்துக்கு எதிரான குழுவாதமாக மாறுவதை தவிர்க்கவும், ஒரு விவாதத்தை அனுமதிக்கவில்லை. இந்த வாதப்பொரும் எங்கள் தோழர்களின் மைய அரசியலாக இருந்த போதும், இதை தடுத்தோம். என்பதை தோழமையுடன் சுட்டிக் காட்டுகின்றோம்.

    பி.இரயா

    • தோழர் இரயா, உங்களை என்றுமே எதிராக நான் கண்டதில்லை, உங்களை விமர்சனம் செய்து எழுதும் தோழர்கள் கூட உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பது என் கருத்து.

      இங்கே உங்கள் மீது பல தோழர்கள் எழுதிய்யுள்ள விமர்சனங்களை வெறும் கொசிப்புகளாக கருதாமல் அதை பொறுமையாக வாசிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      tecan இருக்கும் வரையிலும் இங்கே புலியிசத்துக்கு எதிராக விவாதம் நடப்பது சாத்தியமற்றது, இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

      இந்த நிலையில் இந்த விவாதத்திலிருந்து நான் விலகுகிறேன். வினவு தோழர்கள் தனது கருத்தை பதிவு செய்யும் போது வாய்ப்பிருக்கும் பட்சத்தில் கருத்து எழுதுகிறேன்

      தோழமையடன்

      • //tecan இருக்கும் வரையிலும் இங்கே புலியிசத்துக்கு எதிராக விவாதம் நடப்பது சாத்தியமற்றது.// மா.சே. எனது பின்னூட்டங்களை மட்டும் தணிக்கை செய்ய விரும்புகிறார். ரதி போன்றவர்களின் இனவெறிப் பிரச்சாரங்களையும், தனிநபர் தாக்குதல்களையும், அவதூறுகளையும், தூஷணங்களையும் விமர்சிக்க மாட்டாராம். மா.சே. தனது புலிசார்பு பாசிச வக்கிர குணத்தை இனங்காட்டியதற்கு நன்றி.

  132. R.K., Following comments are made by Rathi before, what you call “bashings”.

    //எனக்கு எங்கள் தேசியத்தலைவர் என் தாய் போன்றவர்.// Rathi
    Posted on June 13, 2009 at 7:52 pm

    //மற்றப்படி, புலிகள் பற்றி எங்களுக்குள் எப்போதுமே கருத்து உடன்பாடு ஏற்படப்போவதில்லை.// Rathi
    Posted on June 14, 2009 at 8:11 pm //நான் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். இங்கேயுள்ள அமைப்புகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் நான் சில இணையத்தள முகவரிகளை சிபாரிசு செய்வேன். எல்லாமே இந்த நாட்டு (கனடா) சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான்.// Rathi
    Posted on June 14, 2009 at 9:10 pm

    //ஆனால், “தமிழ்தேசியம்” என்பது இனமான உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனின் உயிர்மூச்சு அதற்காக நாங்கள் நாடு கடந்த தமிழீழம் என்ன இன்னும் எங்களால் என்னென்ன நியாயமான வழிகளில் முடியுமோ அதையெல்லாம் முயற்சி செய்வோம்.// Rathi
    Posted on June 18, 2009 at 7:27 pm //தற்போது, புலம்பெயர்ந்த தமிழர்களால் தான் தமிழிழீழ விடிவுக்கான போராட்டம் நியாயமான வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது….நீங்கள் ஆயிரம் தான் சொன்னாலும் புலிகள் தான் எங்கள் காவல் தெய்வங்கள். புலிகள் தான் தமிழீழம் கேட்டார்கள், புலிகள் பிரிவினைவாதிகள் என்று கூப்பாடு போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று, இனமான உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனும் “தமிழீழம்” தான் எங்கள் இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று ஒருமித்த குரலில் உலகுக்கு ஓங்கி சொல்லிக்கொண்டிருக்கிறான்.// Rathi
    Posted on June 19, 2009 at 7:55 pm // We want Tamileelam. Our leader Pirabakaran…Yes, I am proud to be a follower. அவர்கள் சொல்வதை திருப்பி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமோ அல்லது தாழ்வுமனப்பான்மையோ கிடையாது.// Rathi
    Posted on May 16, 2009 at 7:50 am //ஆம், நாங்கள் செம்மறி ஆட்டு மந்தை கூட்டம் தான். எங்கள் இலக்கை அடையும் வரை “ஒற்றுமை”யாகவே நடப்போம். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டோம்.// Rathi
    Posted on May 16, 2009 at 7:49 pm

    • தோழர் இரயாவின் வருகைக்கும் க்ருத்திற்கும் நன்றி.
      டெக்கானின் மேற்காணும் பின்னூட்டம் உண்மையெனில் ரதி ஒரு அப்பாவியல்ல.
      டெக்கான்,இதை எங்கே கூறினார் என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்

  133. என்னப்பா இப்படி அடிச்சிக்கிறீங்க யாரும் ஒருத்தர் சொல்றத அடுத்தவர் கேக்கிற மாதிரி தெரியல உங்கள வைத்து எப்படி புதிய ஜனநாயக புரட்சி செய்றது 🙂

  134. //இது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தினர் விஷயங்களை அறிந்து கொள்ளும் முறை// ஆர்.கே., ரதியும் புலி ஊடகங்களை பார்த்து தான் விஷயங்களை அறிந்து கொள்கிறார் என்ற உண்மையை போட்டு உடைத்தமைக்கு நன்றி. ரதி எழுதிய ஈழ அனுபவங்கள் பற்றிய கட்டுரைகளில் புலிகளுக்கு பாதகமான உண்மைகளை மறைக்கிறார் அல்லது திரிக்கிறார் என்பது தான் இங்கே வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதனை ரதி மறுக்கவில்லை. ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் புலிகள் செய்த சகோதரப்படுகொலைகள் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. புலிகளின் பாசிச ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்டவர் எழுதுவதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? ரதி உண்மையிலேயே ஈழத்தமிரா? அவர் ஈழத்திலே வாழ்ந்தவரா? ஈழத்தில் நடத்தவற்றை புலிகளின் பிரச்சார ஊடகங்கள் மூலமாக மட்டுமே அறிந்து வைத்து விட்டு எழுதுகின்றார்.

    • இதையே நாமும் யூகித்தோம். அதற்காக அவரை பாசிட்டு எனக் கூறமுடியுமா?

    • //புலிகளின் பாசிச ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்டவர் எழுதுவதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?//

      சரி தான்..

      பொருளாதார பாதிப்புகள் குறித்து ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் பொருளாதாரத்தை கரைத்துக் குடித்த ஒருவராகத் தான் இருக்க வேண்டுமா?

      ரதி ஈழத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் – பின்னர் போரின் பாதிப்பினால் அங்கிருந்து வெளியேறியவர் என்பதும் – நான் இங்கே அவரது கட்டுரைகளின் மூலம் புரிந்து கொண்டது.

      அவர் நேரடியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியிருக்க வாய்ப்பில்லை என்பது நான் ”இங்கே” அவர் எழுதியதில் இருந்து விளங்கிக் கொண்டது.

      அவரிடம் புலிகள் மேல் இருப்பது ரசிக மனோபாவம் – இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். இதை எப்படி அவருக்கு உணர்த்துவீர்கள்?

      அவரை முழுக்கப் பேசவிட்டு அவரின் கருத்துக்களில் ஒன்றோடு ஒன்று முரண்படும் அம்சங்களை அவருக்கு சுட்டிக் காட்டி அதன் மேல் அவர் கருத்தைக் கேட்டு அதில் வெளிப்படும் மக்கள்விரோத / ஜனநாயகவிரோத / பாசிச அம்சங்களை எடுத்துக் காட்டி…
      இப்படித்தானே?

      நீங்களோ அவருக்கு எந்த வாய்ப்பையுமே வழங்க மறுக்கிறீர்களே?

  135. சரி இனிமேல் ரதியின் அகதி வாழ்க்கை அனுபவத்தை அவருக்கு பதிலாக tecan எழுதுவார்.

    தயவு செய்து இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் அகதிகளை சோதனை செய்து அவர்கள் புலி அபிமானி/ஆதரவாளர்/ பாசிட்டு ஆக இருப்பினும் அவர்கள் அகதி இல்லை என்று தீர்மானித்து, அந்த தகுதியை பரித்து, இலங்கைக்கு திருப்பி அனுப்பும் படி ஐ.நா சபைக்கு தீர்மானம் அனுப்புங்கள் என இங்கே புலி ஆதரவு அகதியின் அவலங்களை சந்தேகிக்கும் நபர்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    அகதிகளுக்குள் வர்க்கம் இருக்கமுடியும் என தெரியும் ஆனால் அரசியல் கருத்தை வைத்துதான் அகதியின் துயரம் உண்மையா பொய்யா என்பதை உணரமுடியும் என்று தெளிவுபடுத்திய அனைத்து புரட்சிகர மற்றும் எதிர்புரட்ச்சிகர உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  136. ரதி ஒரு அப்பாவியா? அவர் ஒரு 100% புலிப் பாசிஸ்ட் என்பதற்கான மேலதிக ஆதாரங்கள்.

    ரதி Says:

    ஜூன் 28, 2009 at 3:27 பிற்பகல் //ஐயா, உங்களுக்கு பிர‌பாகரன் என்ற ஈழவிடுதலைப்போராளியை பிடிக்காது. அது உங்கள் தனிப்பட்ட கருத்து. ஆனால், பெரும்பானமையான ஈழத்தமிழர்களுக்கு எங்கள் தேசியதலைவர் பிரபாகரன் எங்களின் சொந்தம், எங்களின் உயிர், எங்களின் சொத்து. அவர்தான் விடுதலையை விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு எல்லாமாக இருந்தார். அவரை எப்படி போற்ற வேண்டும் என்பது எங்களின் இஸ்டம். அதற்கு நாங்கள் யாருடைய அனுமதியையும் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கு “உங்களுடைய” அமிர்தலிங்கத்திடம் உள்ள அன்பைவிட பலநூறு மடங்கு அன்பை ஈழத்தமிழர்கள் பிரபாகரன் மீது வைத்திருக்கிறார்கள். ஆம், பிரபாகரன் ஓர் உன்னதமான, இணையில்லா, ஈடுசெய்யமுடியாத ஒரு விடுதலைப்போராளி.//

    ரதி Says:

    ஜூலை 6, 2009 at 5:40 மு.பகல் //உங்களுக்கு தலைவர்களாக தெரிபவர்கள் எங்களுக்கு தேசத்துரோகிகள். அவ்வளவே. இதில் AUTO GENOCIDE கிடையாது. எங்களுக்கு யார் ஹீரோ என்பது பற்றி மற்றவர்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு பிரபாகரனைத்தான் பிடிக்கிறது. அதனால் நாங்கள் அவரைத்தான் எல்லாமாக கொண்டாடுகிறோம். இதில் உங்களுக்கு என்ன வலி என்றுதான் எனக்கு புரியவில்லை.

    உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அதேபோல், நாங்கள் யாரை கொண்டாட வேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க நீஙகள் யார்?//

    ரதி Says:

    ஜூலை 7, 2009 at 2:27 மு.பகல் //உண்மையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பிரபாகரனை பிடிக்கிறது. நான் அவரை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுவேன். இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தம். அவர் என‌க்கு பிடித்த தலைவர். இதைத்தானே சொன்னேன்.//

    http://koottanchoru.wordpress.com/2009/06/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/

    • தெக்கான், ரதி அவர்கள், ஒரு வகையில் தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர் போன்றவர்.. ரஜினி தன்னுடைய படங்களில் ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என முதல் பாதியில் இலக்கணம் கூறுவதை ரசிக்கும் ரசிகன், பின்பு பின் பாதியில் அரைகுறை ஆடை அணிந்த அதே பெண்ணுடன் ரஜினி நடனமாடுவதையும் ரசித்து ஏற்றுக் கொள்கிறான்…
      ரதி அவர்களும் மற்றும் பல புலி அபிமானிகளும், எந்த மக்களை காப்பாற்றுகிறார்கள் என புலிகளின் மீது மதிப்பு வைக்கும் அவர்கள், அதே மக்களில் ஒரு பகுதியினர் புலிகளால் பாதிக்கப்படும் நிலையில் அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் அல்லது உணர மறுக்கிறார்கள்..
      ரதி அவர்கள் புலி அனுதாபி என்பது அவரே ஒப்புக்கொண்ட விடயம்… அவரை நீங்கள்/நாம் எவ்வாறு அந்த மாயையில் இருந்து விடுவிக்க போகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நலம் என்று கருதுகிறேன்…
      அவர் நான் யாருக்காகவும், எதற்காகவும் என்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்தால்… அவரை கருத்துக்களை படிக்கும் பல வாசகர்களின் எண்ணங்களும் இவ்வாறே மாற்றம் அடையாத பாறைகளாக இருந்தால்…???

  137. தோழர் மணி,

    //////சர்வதேசவாதிகள், ஏகலைவன் போன்ற புதிய சாலமோன் பாப்பையாக்களுக்கு,////////

    நீங்கள் முதலில் மேசையா, பாப்பையா, ஆப்பையா போன்ற சொல்லாடல்களை நிறுத்துங்கள். இது ஆரோக்கியமான விவாதத்திற்க்கு இட்டுசெல்லாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

    /////பேச முன்வராத ரயாவின் துயரத்தை முன்னிறுத்தி அவரது அரசியலற்ற வாதத்தை முன்னிறுத்தும் தாங்கள் /////

    தோழர் ரயாவின் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லை என்று நீங்களாக எப்படி முடிவெடுக்கிறீர்கள்? எங்களுக்கும் அவர் மீது விமர்சனம் இருக்கிறது, அதை வைக்கும் முறையில் தான் வேறுபடுகிறோம். உங்களுடைய வார்த்தைகளால் எங்களால் அவரை விமர்சிக்க முடியாது.

    உடனே நீங்கள் ஏன் அவரை விமர்சிக்கவில்லை என்று கிளம்பாதீர்கள். அதே கேள்வியை தான் நான் உங்களிடம் வைதேன், இது வரை பதிலில்லை.
    /////// வன்மத்துடன் விமர்சிக்கும் சில தோழர்கள் இதற்க்கு முன் என்றாவது, இதைப் பற்றி தோழர் இரயாகரனுடன் விவாதித்திருக்கிறார்களா? விமர்சித்திருக்கிறார்களா?///////

    000

    தோழர் மாசே,

    ///////சில தோழர்கள் கேட்கிறார்கள் ‘ இப்போ விமர்சனம் செய்யும் இவர்கள், இத்தனை நாளாய் எங்கு போனார்கள் என்று. இந்த கேள்வியின் அரசியலற்ற தன்மையை அவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடுவோம், ஆனாலும் ஒரு விமர்சனத்தை பெற்றெடுப்பது ஒரு சுயவிமர்சனமே, அந்த தோழர்களுக்கு இரயாகரன் மீது விமர்சனம் உள்ள பட்சத்தில் அவர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை? தடுத்தது எது?//////

    தவறை நானும் செய்திருப்பதால், அதை சுயவிமர்சனமாக ஏற்கிறேன்.
    ஆனாலும் இங்கு இரயாகரன் மீது விமர்சனம் என்ற பெயரில் சிலர் பாய்திருப்பதை அரசியல் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்ள இயலாது.

    000

    தோழர் சூப்பர்லிங்க்ஸ்,

    //////தோழர் விடுதலை அவருடைய நூல்கள் அனைத்தும் விளக்கும் விசயத்தை நெளிவு சுளிவுடன் விளக்குவதில்லை,மாறாக நெட்டுக்குத்தாக‌ நேர்கோட்டில் விளக்கிச்செல்கின்றன என்பது எனது கருத்து./////

    உங்களின் இந்த கருத்தில் உடன்பட்டாலும், அதை சொல்வதற்க்கு இது நேரமல்ல, சொல்லவேண்டிய தளமும் இதுவல்ல என்பதே என்கருத்து.

    தோழர்களே ஏற்கனவே விவாதம் விமர்சனதளத்தை தாண்டி சென்றுவிட்டது.
    தோழர் அசுரன் கூறியதை (ரயாகரனுடமும், ஈழத்துத் தோழர்களுடனும் கொண்டிருந்த தோழமை உணர்வு இன்று பகை முரன்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது என்ற நிதர்சனத்தை அனைத்து தோழர்களும் பரிசீலிக்க வேண்டும்) நான் ஏற்க்கிறேன்.

    வினவின் பதில் வரட்டும். காத்திருப்போம்.
    நன்றி!

    தோழமையுடன்,

    சர்வதேசியவாதிகள்

    • ரயாவின் நூல்கள் தொடர்பான விசயத்தில்
      உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் தோழர்,
      அதே சமயம் அவருடனான நமது விவாதம்
      நட்பு முரன் என்பதிலிருந்து இன்று பகை
      முரன்பாடு என்ற நிலைக்கு போய்விட்டது
      என்கிற தோழர் அசுரனுடைய மற்றும் அதை
      வழி மொழிந்துள்ள உங்களுடைய கருத்தை
      நான் ஏற்கவில்லை.
      அப்படியான ஒரு நிலைக்கு விவாதம்
      சென்றுவிடவில்லை என்று கருதுகிறேன்.

  138. BREAKING NEWS! ரதி அறியாத ஈழத் தமிழ்ப் பெண்களின் வலி. புலிகள் தமிழ்ப்பெண்களை கற்பழித்து கொலை செய்த ஈனச்செயல் ரதிக்கு முன்கூட்டியே தெரியும். ரதி இதையெல்லாம் தெரியாததைப் போல மறைத்துக் கொண்டு தான் வினவில் அப்பாவி போன்று நடித்தார். அதற்கான ஆதாரம். “தேசம் நெட்” இணையத்தளத்தில் ரதி இட்ட பின்னூட்டமும் அதற்கான பதிலும்.

    // rathy on January 9, 2009 10:45 pm

    புலிகள் கிழக்கு மாகணத்தை பானுவின் தலைமையிலலேயே மீட்டனர்.முதலில் கிழக்கு மாகண தலைவர்களை கைது செய்து பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிருபீக்கப்பட்டு பழைய பதவி அவர்கலுக்கு வழங்கப்பட்டது.இதில் முக்கிய விடயம் அவர்கள் தங்கள் சக உறூப்பினரை கற்பழித்தனாரா? இல்லையா? என்பதாகும். அதற்கு முதலில் பதில் கூறூம்.//

    //ashroffali on January 10, 2009 6:03 am

    ரதி நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் புலிகளின் உறுப்பினர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மையைச் சொல்வார்கள்………….

    http://thesamnet.co.uk/?p=6046

    //rathy on January 10, 2009 1:35 pm

    அஸ்ரப் அலி நான் கேட்பதற்கு பதில் சொல்லவும்.
    இந்த விடயம் கருனா, பிள்ளாயான் கூட்டனிக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தால் இதை இவ்வளவு காலமும் ஏன் உலகத்திற்கு தெரியப்படுத்தவில்லை? இவ்வளவு காலமும் நீரோ, அல்லது அர‌சோ ஏன் இது ப‌ற்றீ க‌தைக்க‌வில்லை? சம்ம‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பாதிப்பு என்றால் இப்ப‌ ஏன் இதை ப‌ற்றீ க‌தைக்கீரிர் தற்போது அவர்கலுக்கு பாதிப்பு இல்லையா? ஆமி விவகார‌ம் வெளீயாளே தெரிந்த‌படியால் தானே. என்னை கூட்டி சென்ரு தான் சாட்சியங்களை வெளீப்படுத்த வேண்டும் என்ரு இல்லை சாட்சிக்கு நிற்பவர்கள் என்னொடு கதைக்க பயம் இல்லை என்றால் உலகத்திற்கு சொல்ல என்ன பயம்? ஜ நா, போன்ற சர்வதேச தொண்டு நிறூவனங்களூக்கு கூட இது பற்றீ தெரியாதா? தொண்டு நிறூவனங்களூக்கு இது பற்றீ நீங்கள் அறீவிக்கவில்லையா? இல்லையாயின் ஏன்?//

    //ashroffali on January 11, 2009 6:59 am

    வாகரை வெருகல் சம்பவங்கள் மறக்கப்பட மறைக்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது காரணம் அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்பு. அதாவது வெருகல் ஆற்றுக் கரையோரம் பாரிய மோதலுக்கான களம் உருவாகி வருவது தெரிந்தும் கருணா அம்மான் தரப்பிலான போராளிகளைப் பாதுகாக்க அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பிரதேசத்தின் அண்மையாக அமைந்திருந்த அனைத்து இராணுவ முகாம்களையும் செயலற்ற தன்மைக்கு அவர் மாற்றியிருந்தார்.மற்றது திருமலை மாவட்ட புலிகளின் வழிப்பாதையை தடை செய்வதற்கான அனைத்து வழிகளும் இருந்தும் அன்றைய அரசாங்கம் அவற்றை தட்டிக் கழித்து பாராமுகமாக இருந்து விட்டது. இப்படியாக அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விட்ட தவறின் காரணமாக குறித்த விடயத்தை அம்பலப்படுத்த முடியாமற் போவதற்கான கட்டாயங்கள் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது இலங்கை அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறான ஒரு கேவலத்துக்கு துணை போயிருந்தமை வெளியில் தெரிய வந்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் தான் அவமானப்படும். அதற்காகத்தான் அந்தச் சம்பவம் வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டது………..

    http://thesamnet.co.uk/?p=6046

    • This is absolutely ridiculous. Tecan, how could you claim I wrote these comments in “தேசம் நெட்”. I don’t even know who she or he is (rathy???). I don’t even know about this website. These are all false accusations about me. Vinavu, your team should really do something about this nonsense. It is really upsetting me. IT IS A FORM OF HARRESSMENT. Tecan is crossing the limit. How can he cut and paste someone else comment from another site and claim I wrote them???

      • RATHI IN TROUBLE! வினவு கிருஷ்ண பரமாத்வாக வந்து வழமை போல ரதியை காப்பாற்றுவாரா? ஹரே கிருஷ்ணா ஹரே வினவு ஓடோடி வந்து ரதியின் மானத்தை காப்பாற்றுங்கள்.

  139. தோழர் இரயா இன்னும் எதுக்கு ஒளிவு, சொந்த பெயரிலேயே எழுதுங்கள் tecan அவ்வளவு நல்லா இல்லை, தவிர சின்னப்பையன் பேரு மாதிரி இருக்கு

    • மாம்போSir tecan சுட்டிகாட்டியுள்ள விடயத்தில் உங்கள் கருத்து என்ன?
      அவர் சுட்டிகாட்டியுள்ளவை(thesamenet) பற்றி மட்டும் பேசினால் நன்றாக இருக்கும் தேவையில்லாமல் தோழர் இரயாவை ஏன் இழுக்கிறீர்கள்
      உங்கள் நோக்கம்தான் என்ன?

  140. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வால் வைக்கப்பட்ட பிரதான முழக்கம் ‘மன்மோகன் சிங் பலகிஇனமானவர்’. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் அனைவரும் இது மன்மோகன் சிங்கிற்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல் என்றே ஊடகங்களில் முறையிட்டனர். மன்மோகன் சிங் பலகினமானவர் என்பது பா.ஜ.க.வின் பாசிச மொழி. அதாவது மன்மோகன் சிங் பலகினமானவர்; அத்வானி வலிமையானவர். பலகீனம் Vs. வலிமை. வலிமையான பாரதம். வலிமையான தலைவர். பிரிவினை சக்திகளையும் நக்சலைட்களையும் ஒழிக்க தேவையான இரும்பு மனிதர், என்ற இந்துத்துவ கொள்கை அதன் விரிந்த பொருள்.
    ரதியை பாஸிட் என்றதன் மூலமாக ரயாகரன் வரைய விரும்பும் சித்திரம் மிகவும் தந்திரமானது. அதாவது ரதி பாஸிட்; ரயாகரன் போராளி. “ஈழப் பிரச்சினைக்கு நானே அத்தாரிட்டி, நான் சொல்வது மட்டுமே உண்மை. உண்மை அதற்கு வெளியே இல்லை. எனவே அதனையே நீ நம்ப வேண்டும்”. ரதி குறித்த நிலைப்பாட்டின் மூலமாக வினவுககும், வினவின் வாசகர்களுக்கும் ரயாகரன் உணர்த்த விரும்பியது இது தான். ரயாகரனின் இந்த தந்திரத்திற்கு பலியானவர்கள் பலவிதமான உணர்ச்சி பாவங்களை காட்டுகிறார்கள். வினவின் மீது களங்கம் கற்பிக்கிறார்கள். அடுத்த சுற்று சண்டைக்கு தயாராவதைப் போல வினவு பதில் எழுதட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள். வினவின் கண்ணில் என்ன தூசியோ? என்று உற்று நோக்குகிறார்கள். ரதியின் பெயருக்கு முன் புலி ஆதரவாளர் என்று ஒரு adjectiveஐ பயன்படுத்தி அவரை தனிமைப் படுத்துகின்றனர். இன்றைய புலி ஆதரவாளர் நாளைய புலி பாஸிட் என்று சந்தேகப் பார்வை வீசுகின்றனர். புதிதாக வினவைத் திறக்கும் வாசகர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஆதங்கப்படுகிறார்கள். வினவு தளத்தில் வந்து சிலருடன் வந்து தனிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்தி விட்டு செல்கிறார்கள். தமக்கு ஆதரவானவர்களை பார்க்க நேரும் போது வருகைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினையில்லை, கூல் என்கிறார்கள். இங்கு என்ன தான் நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை என்று விசனப்படுகிறார்கள்.
    தோழர்களே ஏனிந்த பதற்றம்?
    ஒரு சாராசரிப் பெண் ரதி. இன்னும் குருஉரமான மொழியில், அகதி.[தோழர் ரதி மன்னிக்கவும், பச்சாதாபத்திற்காக சொல்லவில்லை.] 50 காசு சில்லறைக்கு கண்டக்டரிடம் சண்டையிட்டு நிம்மதியிழக்கும் பயணிகளிலிருந்து வாழ்க்கை இன்ப, துன்பங்களை பகிரும் மக்கள் என நாம் கண்ணுறும் மக்கள் பலர். அந்த மனிதர்களை மையப் படுத்தி எழுத நம்மில் எத்தனை பேருக்கு முடிகிறது.? யோசிக்கும் போது…அந்த வாழ்க்கை நம் முன் நாம் தேர்ந்தெடுக்க நினைக்கும் சாய்ஸாக மட்டுமே உள்ளது. அது ஒரு நிர்ப்பந்தத்தை தோற்றுவிக்கவில்லை. ரதிக்கு ஈழம் அப்படியில்லை. அகதி வாழ்வின் நிர்ப்பந்தம், துன்பம் அவரை எழுத சொல்கிறது. துப்பாக்கியின் சத்தம் வெடித்து ஓய்வதைப் போல, அது ஏற்படுத்தும் வலியும், ஓலமும் எளிதில் அடங்கி விடுவதில்லை. இந்த வலியையும், துயரத்தையும் சிங்களப் பிரேதசத்துக்குள் சென்று பேச முடியாது. இந்துப் பத்திரிகையில் எழுத முடியாது. டெக்கான் போன்ற கோமாளிகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. வினவில் மட்டுமே எழுத முடியும். அது வினவின் பலமும் கூட. ரதி கேட்பது, மிக எளிய வார்த்தைகளில், நமது செவிகளை. இப்போது சொல்லுங்கள் ரதி பாசிஸ்டா அல்லது அவரை எழுத விடாமல் செய்வது பாசிஸமா?

  141. ///////ரயாகரனின் இந்த தந்திரத்திற்கு பலியானவர்கள் பலவிதமான உணர்ச்சி பாவங்களை காட்டுகிறார்கள். வினவின் மீது களங்கம் கற்பிக்கிறார்கள். அடுத்த சுற்று சண்டைக்கு தயாராவதைப் போல வினவு பதில் எழுதட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள்.////////

    ஒரு குருப்பாதாய்யா கிளம்பி இருக்கீங்க!!! பாக்கலாம் இப்படியே எழுதிகிட்டு இருப்பீங்கன்னு…
    ம்ம்ம் இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

  142. //ஒரு சாராசரிப் பெண் ரதி. இன்னும் குருஉரமான மொழியில், அகதி// மன்னிக்கவும் உங்களுடைய “தோழர்” ரதி ஒரு அகதி அல்ல. கனடா பிரஜையாக லட்சக்கணக்கில் சம்பாதித்து தின்று கொழுத்து சுகபோக வாழ்க்கை நடத்தும் சொகுசுப் பேர்வழி. இவரையும் தமிழ்நாட்டில் அகதிமுகாமில் அவல வாழ்க்கை வாழும் ஈழ அகதியையும் ஒன்றாக பார்க்காதீர்கள். அது பாவம். உண்மையான அகதிக்கும் ரதிக்கும் வெகு தூரம்.

    • இதத்தான் நான் உன்னபத்தியும் சொல்றேன், நீயும் லட்சக்கணக்கில் சம்பாதித்து தின்று கொழுத்து சுகபோக வாழ்க்கை நடத்தும் சொகுசுப் பேர்வழி. புலிய எதுத்து எழுதினா நீ பெரிய தமிழ் போராளியா? போக்கத்தவனே? தமிழனுக்காக நீ என்ன புடுங்கன்னு உன்னால சொல்ல முடியல ஏன்ன நீ ஒரு —— புடுங்கல.

      • கேள்விக்குறி என்ற லூசு! ரதி மட்டும் தான் “நான் ஒரு சராசரி அப்பாவிப் பெண். பரிதாபத்துக்குரிய அகதி.” என்றெல்லாம் சீன் போட்டார். மற்றவங்க யாரும் அப்படி நடக்கல.

  143. ரதி No Doubt, this IS HARASSMENT, just ignore that idiot, இந்தாளு இப்படி எழுதி எழுதியே தன்னத்தானே கேவலப்படுத்தி தனிமைப்படுத்திக்குவான், கொஞ்ச நாள்ள யாரும் பதில் போடமாட்டாங்க, அப்புறம் கொஞ்சநாள் லூசு மாதிறி தனியா பினாத்திட்டு ஓடியிப்போயிரும். இத வினவு தூக்காம இருக்கறதும் நல்லது. ஏன்னா ஒரு விவாதக்களத்துல அரலூசு பூந்தா என்னா ஆகும்ங்கற்துதக்கு இந்தாளோட எழுத்து நல்ல உதாரணம், இதப்பத்தி யாரவது PHD பண்ணினா பயன்படும்.

  144. ரதி சீன் போட்டாங்க போடல அது என் பிர்ச்சனை இல்ல, நீ இவ்வளவு சீன் போடுறியே நீ ஈழத் தமிழனுக்காக என்ன புடுங்குன இல்ல என்ன புடுங்க போற அதப்பத்தி பேசு நைநா… இல்ல நீ வெத்து வேட்டா? அப்ப அப்படியே திரும்பி பாக்காம ஓடிய்போயிறு….

    • கேள்விக்குறி ஒண்ணுமே தெரியாம உளறாதே. நான் செய்றதெல்லாம் உனக்கு சொல்லனும்னு அவசியமில்லே. அத ஈழத்தமிழர்கள் தானாக தெரிஞ்சு கொள்வாங்க. நீ பாஸிஸ்ட்கலுக்கு வக்காலத்து வாங்காம இருந்தா அதுவே போதும்.

      • என்னாது நீ எனக்கு சொல்லனும்னு அவசியமில்யா – இந்த போக்கு பாசிச போக்காச்சே…. பாசிஸ்ட் பாசிஸ்ட் Tecan ஒரு பாசிஸ்ட்….

      • என்னங்க இது? நீங்க என்ன செய்றீங்கன்னு சொன்னாதானே விவாததர்மம். அப்புறம் பாசிஸ்டுகள் என்ன செய்வாங்க உங்களை மாதிரி உண்மையான போராளி(அல்லது சேவகன் அல்லது தொண்டன்??!!) எப்படி செயல்படுவாங்கன்னு எங்களுக்கும் புரியுமில்ல. அதுவுமில்லாம பாசிஸ்டுகள திருத்த ஒரு வாய்ப்பாக்கூட இருக்ககூடுமே.

  145. பாத்தீங்களா இந்தாள நெருக்குனா ரதிக்கு பிரச்சனையின்னு உளர்ரான், ஆனா ஓன்னு இந்தாள மாதிரி காமிடி பீசுங்க இல்லேன்னா போருதான்

  146. சித்திரவதைக்கூடத்திலிருந்து தப்பிய பிற‌கும் தன் கொள்கைக்காக நிற்கும் தோழர் இரயாவின் உணர்வு மதிக்கத்தக்கது,அகதி வாழ்வின் பிடியிலும் உளச்சோர்வடையாமல் புலி பாசிச அரசியலுக்கெதிரான போராட்டம் மதிக்கத்தக்கது.எனினும் கம்யூனிஸ்டான‌ அவர் அனைத்தையும் மார்சிய கணோட்டத்தின் ப‌டி தான் பார்க்க வேண்டும் ஆனால் தோழர் ரயா அனைத்தையும் புலியினூடாகவே காண்கிறார்,அதாவது அவருடைய ஜன்னலுக்கு வெளியே அனைத்தையும் அவ‌ர் அவ்வாறு தான் காண்கிறார்.தமிழரங்கத்தில் அவர் நூறு கட்டுரைகள் எழுதியிருர்ந்தால்
    தொண்ணூற்றி ஐந்து புலி பற்றியதாக இருக்கும். இதிலிருந்து, நடைமுறையிலிருந்து விலகி நிற்பதிலிருந்தும் தான் வறட்டுவாத கண்ணோட்டம் உருவாகிற‌து என்று கருதுகிறேன்.
    எனவே அவர் குறித்தான தோழர்களுடைய விமர்சனத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் மணி போன்ற சில தோழர்கள் அனுகும் முறையில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது.அவர் இராயாவை பற்றி மட்டும் அல்ல மற்ற தோழர்கள் பற்றியும் எல்லை மீறும் வார்த்தைகளை பிரயோகிக்கிறார். இந்த வகை அணுகுமுறை தோழர் இரயாவுக்கு விமர்சனத்தை கொண்டு சேர்க்காது என்பதை தோழர்கள் உணர வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    மற்றபடி அணுகுமுறை பற்றியும் பல்வேறு அம்சங்கள் பற்றியும் தோழர்கள்
    ஏகலைவன்,அசுரன்,சூப்பர்லிங்ஸ்,போராட்டம்,சர்வதேசியவாதிகள் மற்றும் மேற்கண்ட‌ தோழர்கள் கூறும் அம்சங்களை வலியுறுத்தும் மற்ற அனைத்து தோழர்களின் கருத்துக்களுடன் நான் உடன் படுகிறேன்.

  147. தெக்கான் யார்?

    நண்பர்களே,

    ஏற்கனவே நாங்கள் செய்திருந்த முடிவின்படி இந்த இடுகைக்கு வரும் பின்னூட்ட விவாதங்களிலிருந்து விலகி இருக்கவே செய்தோம். காரணம் ரதி கட்டுரையை வெளியிட்டதற்காக நாங்கள் கூண்டிலேற்றப்பட்டிருந்தோம். அதனால் நாங்கள் எங்கள் பதிலை வெளியிடுவதற்கு முன்னர் விவாத்ததில் கலந்து கொள்வது சரியல்ல என்பதாலும் பதிலை உடனுக்குடன் எழுதுமளவு நேரமில்லை என்பதாலும் அந்த முடிவு. இங்கு சிலர் வரம்பு கடந்தும் பொருளை விட்டு விலகியும் விவாதிப்பது திசை திருப்புவதாக உள்ளது. சில தோழர்களும் இதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டெக்கான் என்பவர் ரதி தேசம் நெட்டில் பின்னூட்டமிட்டதாக இங்கே ஒட்டியதை ரதி மறுத்த பிறகும் வினவு கிருஷ்ண பரமாத்மா போல வந்த ரதியின் மானத்தை காப்பாற்றுமா என்று எழுதுகிறார். எள்ளல், விமரிசனம், என்ற வரம்புகளைக் கடந்து அவதூறு, ஆபாசம் என்ற எல்லைக்குள் இதனை டெக்கான் Tecan எடுத்துச் செல்கிறார்.

    டெக்கான் யார் என்று யாருக்கேனும் தெரிந்தால் உடன் தெரிவிக்கவும். அவருடைய நடத்தை அவர் உளவாளியா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

    எங்கள் கட்டுரை நாளை வலையேற்றம் செய்ய முயற்சிக்கிறோம்.

    • இப்பவாவது இந்த சந்தேகம் உங்களுக்கு வந்திச்சே, நானும் நேத்துலேருந்து இந்தாள நெருக்க பாக்குறேன் நளுவிக்ட்டே இருக்கான். Iவலையுலக போலி கதை இந்தாளுக்கு தெரியாது போல I have contacts, IP வச்சு ஜாதகத்தையே பிரின்டு போட்டு குடுத்திடுவாங்க, அதுக்கு வினவு சப்போர்டு வேணும் குடுப்பாங்கன்னு நம்புறேன்

  148. எழுந்திருக்கும் விவாதம் பெரிதாக இருக்கிறது. மேலோட்டமாகத்தான் படிக்க முடிந்தது. தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.

    ரயாகரன் யார், அவரது நிலை என்ன என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதையும் தெளிவாக சொல்லி விடுகிறேன். அவரது சில பதிவுகளை பார்த்தேன், படிக்க சுலபமாக இல்லை, அதனால் எஸ் ஆகிவிட்டேன்.

    என் கருத்தில்:

    நான் புலிகளை எதிர்ப்பவன். புலிகள் – குறிப்பாக பிரபாகரன் – ஒரு ஃபாசிஸ்ட் என்று கருதுகிறேன். அதே நேரத்தில் இலங்கை அரசு புலிகளை விட பல மடங்கு பெரிய தவறுகளை செய்தது/செய்கிறது என்பதும் என் உறுதியான கருத்து. எங்களுக்குள் இப்படி அடிப்படை கருத்து வேற்றுமை இருந்தும் நானும் ரதியும் ஒருவரை ஒருவர் நண்பர்களாகத்தான் நினைக்கிறோம். ரதிக்கு நேர்ந்த அனுபவங்கள் எனக்கு நேர்ந்திருந்தால் நானும் புலி ஆதரவு நிலையை எடுத்திருக்கலாம். எனது சூழ்நிலையில் அவர் வளர்ந்திருந்தால் அவரும் புலி எதிர்ப்பாளராக இருக்கலாம். அவரை எழுது எழுது என்று நானும் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன். அவர் வினவு தளத்தில் எழுதுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வினவு குழுவினர் அவரோடு முழுதும் இசைந்த கருத்து இல்லாதவர்களாக இருந்த போதும் அவரை இங்கே எழுத அழைத்தது மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு விஷயம். (இசைவான கருத்து இல்லாதவர்களில் நானும் அதியமானும்தான் இன்னும் வினவு தளத்தில் பதிவு எழுதவில்லை என்று நினைக்கிறேன். :-))

    புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஃபா ிச்ட்கள் என்றால் பிறகு புலிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் என்னதான் வேறுபாடு? புலி ஆதரவாளர்கள் புலிகளில் நிறைகள் அவர்களது குறைகளை விட அதிகம் என்று நினைப்பவர்கள் மட்டுமே. நீங்களும் நானும் குறைகள் என்று நினைப்பதை இந்த ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கலாம்; சில விஷயங்களை பற்றி கண்ணை மூடிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் முட்டாள்கள் இல்லை – குறை இல்லாத மனிதரும் குழுவும் உலகில் இல்லை என்பதை உணர்ந்தவர்களே. புலிகள் குறை இல்லாதவர்கள் என்று யாரும் நினைக்கப் போவதில்லை. அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மறுக்கலாம். எனக்கு பத்து குறை தெரிந்தால் அவர்களுக்கு ஒன்று மட்டுமே தெரியலாம். குறை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டால் அவர்களுக்கு ஆதரவு குறைந்துவிடும் என்று பயப்படலாம். அவ்வளவே. ஜார்ஜ் புச்ஷுக்கு ஓட்டு போட்டவர்கள் எல்லாரும் அடி முட்டாள்கள் என்று சொவது போலத்தான் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் ஃபாசிச்ட்கள் என்று சொல்வது இருக்கிறது.

    முழு இசைவில்லாத போதும் வினவு எப்படி ரதியை இங்கே எழுத அனுமதிக்கலாம் என்று கேட்கிறார்கள். வினவு குழுவினர் எப்படி நடந்து கொள்ளலாம் என்ற நீங்களும் நானும் கருத்து தெரிவிக்கலாம், நெருங்கிய நண்பர்களாக இருந்தால் உரிமையோடு சண்டை போடலாம் – ஆனால் முடிவெடுக்கும் உரிமை அவர்களுடையது மட்டுமே. கருத்து வேறுபாட்டை சமாளிக்க பல வழிகள் இருக்கிறன. வினவு குழுவினர் ரதியின் பதிவுகளை எடிட் செய்யலாம்; நமக்குள் வேறுப்பாடு இருக்கும் விஷயங்களை பற்றி நீங்கள் எழுதக் கூடாது என்று நிபந்தனை விதிக்கலாம். Common minimum program வகுத்துக் கொள்ளலாம். நாளை அதியமான் காபிடளிசமே ஒரு வழி என்று வினவு தளத்தில் ஒரு பதிவு எழுதினால், முதல் பாராவில் கொட்டை எழுத்தில் இந்த பதிவு எங்களுக்கு இசைவானதல்ல, ஆனால் இன்னின்ன விஷயங்களுக்காக இதை ஒரு முக்கியமான பதிவாக கருதுகிறோம், அதனால் இங்கே போட்டிருக்கிறோம் என்று disclaimer கூட விடலாம். ரதியும் நான் புலிகளை பற்றி எழுதப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். எனக்கு அது போதும். உங்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தால் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேளுங்கள், அதற்கு பதில் சொல்லும் தார்மீக கடமை – மட்டுமே – அவர்களுக்கு இருக்கிறது.

    ரதியின் கட்டுரைகள் பதிக்கப்பட வேண்டியவையா? ஏன் வினவு இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என் கருத்தில் அவை முக்கியமான ஆவணங்கள். அவர் தன சொந்த அனுபவங்களை எழுதுகிறார். பாதிக்கப்பட்டவர் தன பாதிப்பை ரெகார்ட் செய்யவில்லை என்றால் அவை காலப்போக்கில் அழிந்தே போய்விடும். இவை அனைத்தும் முக்கியமானவையே. ஆனால் ரதி தான் எழுதுவது மட்டுமே ஈழப் போராட்டத்தின் முழு வரலாறு என்று சொல்வாரானால் அதை நான் முன்னே நின்று மறுப்பேன். அவர் எழுதுவது போராட்டத்தின் பல facet-களில் ஒன்று. புலிகளின் ஃபாசிசம் இன்னொரு facet. மற்ற போராட்ட குழுக்கள், IPKF, ராஜீவ் காந்தி, எம்ஜிஆர், கலைஞரின் போலி ஆதரவு என்று பல facet-கள் இருக்கின்றன. இதில் ஒரு facet-ஐ பற்றி எழுத எல்லாவற்றையும் தொட வேண்டிய அவசியம் இல்லை.

    அப்புறம் இவ்வளவு சர்ச்சைகள் எழுத பிறகு ரதி வினவு தளத்தில் எழுத அனுமதிக்கப்படத்தான் வேண்டுமா? நிச்சயமாக. ரயாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லி இருக்கும் காரணங்கள் எனக்கு சரியாக படவில்லை. தனக்கு இன்னும் கொஞ்சம் தடிமனான தோல் வேண்டும் என்பதை ரதியும் உணர்ந்துவிட்டார். ம

    கருத்து சொல்ல ரயாகரனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. எனக்கும்தான். rathi ேலே செல்ல ஆசைப்படுகிறார். முடிவு எடுக்க வேண்டியது வினவு குழுவினர்தான்.

    • அட்டகாசம் RV, ஒரு முதலாளித்துவ ஜனநாயகவாதியின் சிந்தனையும் ஒரு மார்க்சிய வறட்டுவாதியின் சிந்தனையும் எப்படி வேறுபடுகின்றது, குறிப்பிட்ட தருணங்களில் முன்தையது எப்படி பிந்தையைதை விட முற்போக்கான பங்கினை வரலாற்றில் வகிக்கும் என்பதை உங்களுக்கே தெரியாமல் இங்குள்ள அனைவருக்கும் பாடம் எடுத்துவிட்டீர்கள். நன்றியோ நன்றி

    • தோழர் RV அவர்களுக்கு வணக்கம்,

      அருமையான, நிதானமான விளக்கம். நன்றி.

      தோழமையுடன்,

      செந்தில்.

      • Superlinks, நேற்று புலியிசத்தை ஆதரிப்பவர் தோழர். இன்று பார்ப்பனீயத்தை ஆதரிப்பவர் தோழர். நாளை ஹிட்லரையும் தோழர் என்று அழைப்பார்கள். வினவு தளம் எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது?

      • ஆர்.வி பார்ப்பனியத்தை ஆதரிப்பவர் அல்ல, பார்ப்பனியம் என்னும் சொல்லை எதிர்ப்பவர், அவரை தோழர் என்றழைப்பது தவறில்லை. அவர் பார்ப்பனியத்தை ஆதரிப்பவராக இருந்தாலும் அவரை தோழர் என்று அழைக்கலாம், சொல்லில் இல்லை அரசியல். இதில் இரயாகரனுக்கும் புரிதல் இல்லை.

      • நேற்று போலி விடுதலை என்னு போலி கம்மூனிஸ்டு மென்டலின் பின்னூட்டம், இன்று Tecan என்னும் வறட்டுவாத பாசிஸ மென்டலின் பின்னூட்டம், நாளை யாருடைய பின்னூட்டமோ? வினவு தளம் எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது?

      • சூப்பர்லின்க்ஸ்,

        பார்ப்பனீயம் என்றால் எனக்கு கொஞ்சம் குன்ஸாகத்தான் புரிகிறது. பிறப்பு வழியாக ஏற்றத்தாழ்வு பார்ப்பதை நான் எதிர்க்கிறேன் – ஜாதி, மதம், நிறம், தாய்மொழி, மற்ற நமது கண்ட்ரோலில் இல்லாத எந்த விஷயத்தின் மூலமாகவும் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனப்பான்மையை வெறுக்கிறேன் – டாக்டர் ருத்ரன் என் எண்ணங்களுக்கு என் genotype-தான் காரணம் என்று சொன்னது உட்பட.

        பார்ப்பனீயம் என்பது தவறான, வருந்தத்தக்க சொல்லாட்சி. என்னுடைய ஒரு பதிவு இங்கே – http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ/

        கேள்விக்குறி, சூப்பர்லின்க்சுக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி!

      • ////Superlinks, நேற்று புலியிசத்தை ஆதரிப்பவர் தோழர். இன்று பார்ப்பனீயத்தை ஆதரிப்பவர் தோழர். நாளை ஹிட்லரையும் தோழர் என்று அழைப்பார்கள். வினவு தளம் எந்த திசையை நோக்கி
        போய்க்கொண்டிருக்கிறது?/////

        அதைப் பற்றி உளவாளி என சந்தேகிக்கப்படுபவர் பேசக்கூடாது.

      • ///////////ஆர்.வி பார்ப்பனியத்தை ஆதரிப்பவர் அல்ல, பார்ப்பனியம் என்னும் சொல்லை எதிர்ப்பவர், அவரை தோழர் என்றழைப்பது தவறில்லை. அவர் பார்ப்பனியத்தை ஆதரிப்பவராக இருந்தாலும் அவரை தோழர் என்று அழைக்கலாம், சொல்லில் இல்லை அரசியல். இதில் இரயாகரனுக்கும் புரிதல் இல்லை.///////////////////////

        உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை தோழர் கேள்விக்குறி
        இங்கு நிலவும் சூழல் காரண‌மாக இதற்கு நான் இப்பொழுது பதிலளிக்கவும் விரும்பவில்லை.ஆனால் உங்களுடைய பதிலை நினைவில் வைத்துக்கொள்கிறேன்

      • //அதைப் பற்றி உளவாளி என சந்தேகிக்கப்படுபவர் பேசக்கூடாது.// Superlinks நீங்கள் வினவிடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். அல்லது வினவின் அவதூறை கண்டித்திருக்க வேண்டும். இரண்டையுமே செய்ய தைரியமற்ற ஒருவர் பேசக்கூடாது.

  149. //இளைஞராகிய நாங்கள் சிந்திப்பதால் தான்,\\\

    அப்படியா நன்று

    \\\சந்தி சிரிக்கும் உங்கள் அமைப்பில் இல்லாமல் \\\
    எந்த சந்தியில் சிரிக்கின்றார்கள் என்று சொல்லவில்லையே நாமும் சென்று சிரிக்கலாம் ஓ சிந்திக்கலாம்

    \\\உண்மையான மார்க்சிய அமைப்பில் இருக்கிறோம்.\\\
    அப்படி ஒன்று இருக்கின்றதா ?? //

    iஇந்த கமெண்டு தமிழரன்கம் பெயரில் சர்வதேசிய வாதி எழுதிய கட்டுரைக்கு மறுமொழியாக கூறப்பட்டுள்ளது இதற்கு என்ன அர்த்தம் என்று இரயா அல்லது அவரது கும்பல் சொல்ல வேண்டும்

  150. ////இந்த கமெண்டு தமிழரன்கம் பெயரில் சர்வதேசிய வாதி எழுதிய கட்டுரைக்கு மறுமொழியாக கூறப்பட்டுள்ளது////////

    இதை கீற்றுவில் பதிந்தது தமிழ் அரங்கம் அல்ல, எழுந்துள்ள முரன்பாட்டை பெரிதுபடுத்தி குளிர்காய நினைக்கும் சதிகாரர்களின் வேலை என நாங்கள் அறிவோம்.

    உண்மையான தமிழ் அரங்கம் எமது தளத்தில் இட்ட பின்னூட்டம்
    /////tamilcircle
    5:37 பிற்பகல் இல் ஆகஸ்ட்26, 2009

    சரியான பதிலடி. வாழ்த்துகள்///////

    அது சரி, maavo சிண்டுமுடியும் வேலையை செய்யும் நீங்கள் யாரென்று தெரிந்து
    கொள்ளலாமா?

  151. ஆர்.கே. வினவு எமக்கு எந்த வாய்ப்பையும் வழங்க மறுக்கிறார். ரதியை விமர்சிப்பவர்களை விவாதிக்க விடாமல் தடுப்பதற்காக உளவாளிகள் என்று அவதூறு செய்கிறார். இது பாசிசத்தின் உச்சகட்டம். பாசிசத்தின் கூடாரமாகி விட்ட வினவில் இனி எமக்கென்ன வேலை?

    • தோழர் இரயா, பாசிசத்துக்கு எதிரான உங்கள் போரை உங்கள் சொந்த பெயரிலேயே செய்யலாமே? எதற்கு tecan என்ற பெயரும். உளவாளி என்ற பட்டமும்.

      • தோழர் மாம்போ No8, இது என்ன வகை விமர்சனம் ? இரயாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும் ஆதாரமற்ற குற்ற‌ச்சாட்டு இது.இரயாகரன் பின்ணூட்டங்களில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்பது எனது அனுபவம்.இது போன்ற பொறுப்பற்ற பின்ணூட்டங்கள் தொடர்புடைய தோழரை சோர்வுக்குள்ளாக்கி அவநம்பிக்கையை விதைப்பதுடன் மையமான விமர்சனங்களிலிருந்து விலகிச்செல்வதற்கு தான் உதவும்,எனவே உடனடியாக நீங்கள் இதை திரும்பப் பெற வேண்டும் என்று கருதுகிறேன்.

      • யோவ் நீ வேற ஏன்யா படுத்தற, இரயாதான் இந்த லூசுன்னு என்னால ஒத்துக்கமுடியாது. ஆதாரம் இல்லாம வெட்டியா பேசாத

  152. தமிழனுக்காக ஒன்னுமே புடுங்காத பாசிச Tecan, உங்க சாயம் வெளுத்த உடனே பொலம்ப ஆரம்மிச்சுடீங்களா? ச்சோ ச்சோ

    • Kelvi Kuri, you are right in driving away the fascist ghost Tecan from Vinavu. In a democratic forum fascists should not be given space. It will endanger any debate from reaching its logical conclusion. I took pains in exposing Tecan in an article which was published by Vinavu few months back. But by making a relentless fight you have succeeded in smiting this satan on his head. Congrats.

  153. வினவின் பக்கச்சார்பு. ஆதாரங்கள். //
    மா.சே
    Posted on September 2, 2009 at 1:24 pm
    http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html இந்தக்கட்டுரையில் இட்ட பின்னூட்டத்தை தான் சொல்கிறேன், இதை அவர் இடவில்லையெனில் எனது கருத்தை திரும்பப்பெற்று ஆலோசிக்காமல் முடிவு செய்தமைக்காக விமர்சனம் ஏற்கிறேன்.

    இதை அவர்தான் வெளியிட்டார் என்று நான் முடிவு செய் காரணமாய் இருந்தது, தமிழ்மணத்தில், வினவு பின்னூட்டத்தில், சந்திப்பு தளத்தில் என ஒரே நேரத்தில் அனைத்தையும் கண்டதினால்தான்.//
    மா.சே.வின் நடத்தை
    வினவின்

    கண்களுக்கு

    உளவாளியாக
    தெரியவில்லை. ரதி
    நான் அவளில்லை என்றால் நம்ப சொல்கிறார்.
    //குறிப்பாக டெக்கான் என்பவர் ரதி தேசம் நெட்டில் பின்னூட்டமிட்டதாக இங்கே ஒட்டியதை ரதி மறுத்த பிறகும் வினவு கிருஷ்ண பரமாத்மா போல வந்த ரதியின் மானத்தை காப்பாற்றுமா என்று எழுதுகிறார். எள்ளல், விமரிசனம், என்ற வரம்புகளைக் கடந்து அவதூறு, ஆபாசம் என்ற எல்லைக்குள் இதனை டெக்கான் Tecan எடுத்துச் செல்கிறார்.

    டெக்கான் யார் என்று யாருக்கேனும் தெரிந்தால் உடன் தெரிவிக்கவும். அவருடைய நடத்தை அவர் உளவாளியா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.// கூகிளில்
    ரதி என்று போட்டு தேடிப்பாருங்கள். அங்கே அவர் எழுதிய பின்னூட்டம் எல்லாம் கிடைக்கும். இதை கண்டுபிடிக்க யாரும் உளவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முன்பொரு தடவை ரதி ரா உளவாளி என்று சொன்னதை அவதூறு என்று மன்னிப்பு கேட்க சொன்ன வினவு இப்போது தானே அந்த அவதூறை செய்கிறார்.

    • Tecan, புலிகளை ஏற்று கொள்ளாத இலங்கை தமிழர்களை தமிழ் துரோகிகள், உளவாளிகள் இழிபிறவிகள் என்றும் புலிகள் அவதூறு செய்வார்கள். புலி பாசிஸ்டு ரதியை நீங்கள் விமர்சித்ததால் வினவு உங்களை உளவாளி என்கிறார்.

      • வந்துட்டாருய்யா நாட்டாம சொம்ப எட்துகினு தீர்ப்பு சொல்ல…யோவ் TSri, புலி பிரச்சனைய கொஞ்சம் உடு, நாம் மொதல்ல பேச வேண்டியது நீயும் Tecanனும் தமழினுக்காக என்னாத்த புடுங்குனீங்கங்கறத பத்திதான். நீங்க ஒன்னுமே கழட்டலங்கற உண்மை இங்க எல்லாருக்கும் தெரியும், அத மறைச்சுக்கதான் புலி புலின்னு கோசம் போடுறீங்க.. ஹேங்கு ஆன வின்ஆம்பு மாதிரி ஒரே வரியவே பாடிகிட்டு..சுத்த Nuisance and Nonsense

    • மிஸ்டர் Tecan நீங்க மிஸ்டர் மூளையில்லாதவருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும் சொந்த செலவுல் சூனியம் வச்சுகிட்டத்துக்கு தேங்க்ஸ். மாசே விமர்சனத்துல உள்ள முக்கியமான ஐட்டம், இரயா அங்க போயி பின்னூட்டம் போட்டது இல்ல, அந்த பின்னூட்டத்துல இருக்குற மேட்டர். அத இரயாதான் எழுதுனதுன்னு அல்லாருக்கும் தெரியும், அத யாரே உன்ன மாதிரியே ஒரு கசுமாலம் இருக்கான், அவன் போய் அங்க போட்டுகிறான்.. உன்னோட பிரச்சன ரதி எழுதுனதுல இருக்கற மேட்டர் அத்தான் நீ ஆதாரமா காமிச்ச, அது தேசத்தில இருந்தது இல்ல, ஆனா அந்த மேட்டர ரதி எழுதல. இப்போ இந்த மாதிர காம்ப்ளெக்ஸ் மேட்டரெல்லாம் உன்னோட மிஸ்டர் மூளைக்கு ஏறாதுங்கறதுனால மிஸ்டர் ஆட்டோல ஏறிகினு மிஸ்டர் வினவு தளத்துலேருந்து எஸ்கேப்பு ஆயிடு

  154. தவிர்க்கவியலாத காரணங்களினால் தோழர் இரயாகரன் மீதான விமரிசனக் கட்டுரை நாளை வலையேற்றம் செய்யப்படும்.

    • //தோழர் இரயாகரன் மீதான விமரிசனக் கட்டுரை// ரதி மீதான விமரிசனக் கட்டுரை, வினவு மீதான சுயவிமரிசனக் கட்டுரை எப்போது வலையேற்றம் செய்யப்படும்?

      • பாசிச Tecan எப்போது வினவு தளத்திலிருந்து விரட்டப்படுவார்?

  155. Hypocrisy of Vinavu. ரதி பாசிஸ்ட் என்பதற்கு ஆதாரம் கேட்ட வினவு எந்த ஆதாரத்தை வைத்து டெக்கான் உளவாளி என்கிறார்?

    • தானொரு பாசிஸ்ட் என்பதற்கு தனது விவாதங்களின் மூலம் ஆதாரங்களை அள்ளி வழங்கிய பாசிச Tecan, தானொரு பாசிச உளவாளி என்பதற்கான ஆதாரத்தையும் தானாகவே வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன்.

  156. கேள்விக்குறி யார்?
    நண்பர்களே, கேள்விக்குறி யார் என்று யாருக்கேனும் தெரிந்தால் உடன் தெரிவிக்கவும். அவருடைய நடத்தை அவர் உளவாளியா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

    • இதிலென்ன சந்தேகம், நான் உளவாளிதான், உன்னை போல தமிழனுக்காக ஒரு …. புடுங்காத ஆள்மாறாட்ட வறட்டுவாத பாசிச உளவாளிகளை, உளவி உலகுக்கு அடையாளம் காட்டும் உளவாளி நான்.

  157. தோழர் இரயாவின் அரசியல் பார்வை வறட்டுவாதம் என்கிற விமர்சனத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். சில தோழர்கள் அநகரீகமான முறையில் அதை சுட்டிக்காட்டுவதை ஏற்கவில்லை.அவை அனைத்தையும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.ஆனால் தோழர் இரயாகரன் இவற்ரையெல்லாம் புறம் தள்ளி தன்னிடமுள்ள குறைகளை களைய‌ சுய விமர்சனத்திற்கு முன் வருவார் என எதிர்பார்க்கிறேன்.வினவின் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  158. இன்றுதான் டெகான் எழுதிய மறுமொழிகளை ஓரளவு படிக்க முடிந்தது.

    டெகானின் பதில்களில் தனி மனித தாக்குதல் மிக அதிகமாக உள்ளது. ரதி என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிராரே, பாருங்கள் எப்படிப்பட்ட ஃபாசிஸ்ட் என்ற ரேஞ்சில் எழுதுகிறார். ரதி புலிகள் ஆதரவாளர் என்று சொல்லி இருக்கிறார், புலிகள் ஃபாசிச்ட்கள், ரதியும் ஃபாசிஸ்ட் என்று நிரூபணம் ஆகிவிட்டது என்று வாதிடுபவருக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி இருக்கிறது. எனக்கு ஓரளவு தடித்த தோல் உண்டு – வினவு தளத்தில் மாற்று கருத்துகளை பதிவு செய்பவர்களுக்கு தடித்த தோல் அவசியம். 🙂 ஆனால் என்னையே ஒருவர் இந்த மாதிரி தாக்கி எழுதினால் எவ்வளவு நேரம் பொறுமையாக இருப்பேன் என்று சொல்வதற்கில்லை.

    ஆனால்:
    டெகான் உளவாளி என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சி தருகிறது. வினவு குழுவினர் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். கேனத்தனமாக பேசுபவர்கள் எல்லாம் உளவாளிகள் என்ற முடிவுக்கு வரக்கூடாது. என் மறுமொழிகள் பல வினவு குழுவினருக்கும் இசைந்து போகவர்களுக்கும் கேனத்தனமாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இங்கே எழுதப்பட்ட பல மறுமொழிகள் எனக்கு கேனத்தனமாக பட்டிருக்கின்றன என்பதையும் நான் இங்கேயே பதிவு செய்திருக்கிறேன். ஒரு பழமொழி உண்டு – What can be attributed to stupidity shouldn’t be attributed to malice என்று. அதை நினைவுபடுத்துகிறேன். இத்தனை பெரிய குற்றச்சாட்டி சொல்லிவிட்ட பிறகு அதை நிரூபிக்க வேண்டிய, இல்லை தவறு என்று சொல்ல வேண்டிய கடமை வினவு குழுவினருக்கு இருக்கிறது. (BTW, என்னை உளவாளி என்று அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை, கொஞ்சம் பணமும் என் உளவு வேலைகளுக்காக பெற்றுத்தரும் பட்சத்தில்!)

    கேனத்தனமான வாதங்கள் டேகானின் முக்கிய கேள்விகளை மறக்க செய்யக் கூடாது. புலிகள் ஃபாஸிஸம் பற்றி அவர் எழுப்பும் கேள்விகளும் முக்கியமானவையே. குறிப்பாக // பாசிசம் என்பது தமிழ்மக்கள் வாழ்வில் பேரினவாதம் மட்டும்தானா ?// என்பது முக்கியமான கேள்வி. அந்த கேள்விகளுக்கு இது சரியான இடம் இல்லை, கொஞ்சம் பொறுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ரதி எழுதுவது அரசியலும் இசங்களும் கலக்காத first hand experiences. டெகானின் கேள்வி புலிகள், ஈழ போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கேள்வி. அவர் அதை வேறு forum-இல் எழுப்பி இருக்க வேண்டும். அவர் ரதி ஒரு ஃபாசிஸ்ட் என்று sidetrack ஆவது துரதிர்ஷ்டம். அவரது தனி மனித தாக்குதல்கள் அளிக்கும் சலிப்பை மீறி இது போன்ற முக்கியமான கேள்விகளை தேடி எடுப்பது கஷ்டமாக இருக்கிறது. (அவர் ஆர.எஸ்.எச்சை உதாரணம் காட்டி இருக்கும் மறுமொழியும் ஒரு அபூர்வமான லாஜிகல் ஆன மறுமொழி)

    கடைசியாக ஒன்று. சு. சாமி பற்றி எழுந்த பெரும் விவாதத்தில் தவறான கருத்துகளை சொல்ல சாமிக்கு முழு உரிமை இருக்கிறது என்று நான் சொன்னேன். வினவு உட்பட பலரும் அதை மறுத்தார்கள். இன்று ரதிக்கும் அதேதான் நடக்கிறது. டெகான், ரயாகரன் கண்களில் ரதி சொல்வது பெரும் தவறாக இருக்கிறது. அவர்கள் ரதி எழுதக்கூடாது என்கிறார்கள். கருத்துரிமையை தனி மனிதர்களின் சரி/தவறு என்ற மதிப்பீட்டை வைத்து வரையறுப்பது என்பதில் உள்ள லாஜிகல் பிரச்சினைகள் அன்று மறுத்த பலரில் ஓரிருவருக்காவது இப்போது அது புரிந்தால் சந்தோஷப்படுவேன்.

    • //கடைசியாக ஒன்று. சு. சாமி பற்றி எழுந்த பெரும் விவாதத்தில் தவறான கருத்துகளை சொல்ல சாமிக்கு முழு உரிமை இருக்கிறது என்று நான் சொன்னேன். வினவு உட்பட பலரும் அதை மறுத்தார்கள். இன்று ரதிக்கும் அதேதான் நடக்கிறது. டெகான், ரயாகரன் கண்களில் ரதி சொல்வது பெரும் தவறாக இருக்கிறது. அவர்கள் ரதி எழுதக்கூடாது என்கிறார்கள். கருத்துரிமையை தனி மனிதர்களின் சரி/தவறு என்ற மதிப்பீட்டை வைத்து வரையறுப்பது என்பதில் உள்ள லாஜிகல் பிரச்சினைகள் அன்று மறுத்த பலரில் ஓரிருவருக்காவது இப்போது அது புரிந்தால் சந்தோஷப்படுவேன்.///

      ரதி யார் என்றே தெரியாதவர் அகதி வாழ்வின் அவலத்தை எழுதுபவர். சு சுவாமி உலகறிந்த ஒரு பாசிச ஏஜெண்டு. ஒருவேளை அப்கானிஸ்தான் போல இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலனியாதிக்கத்தின் தேவையெழுந்தால் சு.சுவாமிதான் ஆட்சி செய்வார். ஒரு பாசிச ஏஜெண்டுக்கு முட்டையடிதான் என்றைக்குமே சிறந்த ஸ்டார்டர்.

    • RV, நேத்துதான் உங்கள பாராட்டி எழுதுனேன், அதுக்குள்ள கவுத்துட்டீங்களே! இரயாகரன் ரதியும் புலியும் ஓன்னுன்னு சொல்லறது எப்படி வறட்டுத்தனமா இருக்கோ, அப்படித்தான் இருக்கு நீங்க சொல்லுற ரதியும் சு.சாமியும் ஒன்னுங்கறது. தயவு செய்து உங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்ளவும்

      • பெல்லுக்கு பெல்லு கட்டறவன், கேள்விக்குறி,

        கருத்தை சொல்ல உரிமை இருக்கிறதா என்பது வேறு, சொல்லும் கருத்து சரியா தவறா என்பது வேறு. ரதியும் சு. சாமியும் வேறுதான். ரதியை எழுதுங்கள் எழுதுங்கள் என்று வற்புறுத்தின சிலரில் நானும் ஒருவன். கோமாளி சாமி சொல்வதை எல்லாம் நான் படித்து பல வருஷங்கள் இருக்கும். எதற்கு என் நேரத்தை வீனடிக்க வேண்டும்? ஆனால் சாமி ஒரு முட்டாள், ஒரு பாசிஸ்ட், அதனால் அவர் எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று வினவும் மற்றவர்களுக்கும் சொன்னதற்கும், ரதி ஒரு ஃபாசிஸ்ட், அவர் எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று ரயாகரன் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? X-இன் நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது, X கண்ணில் Y ஒரு ஃபாசிஸ்ட், அதை X உறுதியாக நம்புகிறார், இந்த நம்பிக்கை மிகவும் genuine ஆனது, அதனால் ஃபாசிஸ்ட் Y வாயை திறக்கக் கூடாது என்று சொல்கிறார். இதில் X வினவாக இருந்தால் என்ன, ரயாகரனாக இருந்தால் என்ன? Y சாமியாக இருந்தால் என்ன, ரதியாக இருந்தால் என்ன? விஷயம் ஒன்றுதானே? உங்கள் கண்ணில் ஃபாசிஸ்டாக தெரிபவருக்கு வாயை திறக்க உரிமை உண்டா இல்லையா? என்னை பொறுத்த வரையில் உண்டு.

        ஒருவர் ஃபாசிச வாதங்களை முன் வைத்தால் அவர் வாதங்களை கிழி கிழி என்று கிழிப்போம். ஒருவர முட்டாள்தனமாக உளறினால் அவரை ஒதுக்குவோம். ஆனால் அதே நேரத்தில் உளற ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கத்தான் வேண்டும். ஒருவர் ஃபாசிஸ்டா இல்லையா என்று தீர்மானிக்க எந்த லிட்மஸ் டெஸ்டும் இல்லை. இதோ பேப்பர் நீலமாக மாறிவிட்டது பச்சையாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. அது ஒரு subjective judgement மட்டுமே. என் subjective judgement-ஐ அடுத்தவர்கள் மேல் சுமத்தவோ இல்லை உங்கள் judgement என் மேல் சுமத்தப்படுவதை ஏற்கவோ நான் தயாரில்லை. ரதியை பற்றிய ரயாகரனின் தீர்ப்பை ஏற்க இங்கே வரும் பலர் தயாரில்லை. சாமி மீதான் வினவின் தீர்ப்பை ஏற்காதவருகும் இருக்காத்தான் செய்கிறார்கள். ஏன், நானே கூட ஏற்பதில்லை. சாமியை ஒரு ஃபாசிஸ்ட் என்று சொல்வது ஃபாசிச்ட்களை கேவலப்படுத்துவது. 🙂 அவர் என் கண்ணில் ஒரு despicable கோமாளி மட்டுமே.

        சரி சீக்கிரம் வந்துட்டான்யா வந்துட்டான், கருத்துரிமை காவலன் போன்ற கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். 🙂

        பின்குறிப்பு: ரயாகரனின் நேர்மையை பற்றி பர்சனலாக எனக்கு எதுவும் தெரியாது – வினவு குழுவினர் மதிக்கும் ஒருவர் என்பதால் மட்டுமே அப்படி சொல்கிறேன்.

    • RV, இன்று வினவு வெளியிட்டுள்ள ஜூவி ஆசிரியரை பற்றிய கட்டுரைய பாத்திங்களா?
      புலிய எதிர்த்து எழுதனுமின்னு ஒரு பிரபல பத்திரிக்கையிலேயே இப்படி infiltrate செய்ய முடியும்னா, முகம் தெரியாத நெட்டுல எப்படியெல்லாம் பண்ணலாம். Tecan என்ற பாசிஸ்ட வினவுல புலி திட்ட மட்டும் தான் வறாரு, மருந்துக்கு கூட அவர் வேற கட்டுரையில் வேறு ஏதாவது பின்னூட்டம் போடுறாறான்னு தெரியல, புலின்னு ஒரு எழுத்த பாத்தாலே கீ கொடுத்து பொம்ம மாதிரி கத்த ஆரம்பிக்குறாரு, தவிர ரதியை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது, வெறுப்பேற்றுவது, போலீசு கம்பிளைன்டு கொடுப்பேங்கற மாதிரியான மிரட்டல் உள்ளிட்ட harassment and torture கொடுக்கும் மகா மட்டறகமான வழிமுறைகள்….. அவர ஏன் உளவாளின்னு சந்தேகப்படக்கூடாது.

      • நீங்கள் சொல்வது சிந்திக்கை வைக்கிறது. சந்தேகம் வர முகாந்திரம் இருக்கிறது, ஆனால் நிரூபிப்பது கஷ்டம் என்றால் என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை.

      • கேள்விக்குறி, வினவு இருவரும் ஒருவர் தானா என்ற சந்தேகம் எழுகின்றது. வினவின் கட்டுரையில் இருக்கும் அதே வார்த்தைகளை கேள்விக்குறி பிரயோகிக்கிறார். துப்பறிவாளார் மாம்போ இதையும் கண்டுபிடித்து சொல்வார் என நம்புகிறோம்.

  159. தோழர் சூப்பர்லிங்க் Tecan மற்றும் இரயாகரன் இருவரும் ஒருவர்தானா? எனக்கு தெரியாது ஆனால் தோழர் இரயாகரன் பேசும் வாதங்களை, வார்த்தைகளை, தனது சொந்த கருத்து போல அப்படியே பேசுகிறார் Tecan. இரயாவின் கொள்கைக்கு அப்படி உயிரைக்கொடுத்து போராடும் கொ.ப.செய வை அதே கொள்கை கொண்டு அளந்தால்?

    புலி கருத்து = புலி = ரதி என்ற இரயாவின் கொள்கையை அப்படியே பிரயோகித்தால் இரயா கருத்து = இரயா = Tecan என்ற முடிவுக்குத்தான் வரமுடியும், வந்தேன். அதை பல விசயங்களுக்கு பொருத்தி பல ஆச்சரியமான முடிவுக்கு வரமுடிந்தது, அந்த அனுபவத்தை இங்கே எழுதவில்லை, நீங்களே சொந்தமாய் அனுபவியுங்கள், சூத்திரம் மேலே.

    இதில் தோழரை அவமானப்படுத்தும் நோக்கோ இல்லை Tecan ஐ கௌரவப்படுத்தும் நோக்கோ காழ்ப்பு, கசப்பு உள்ளிட்ட இன்னபிற உணர்ச்சியோ எனக்கில்லை.

    நான் சொன்னதை இரயாவும், Tecan இதுவரை மறுக்கவில்லை என்பதுதான் இடிக்கிறது.

    • தோழர் மாம்போ,
      உங்கள் கருத்து யூகம் தான்.யூகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம். நீங்கள் ஒருவர் மீது குற்றப்பழி சுமத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். இதை யூகத்தின் அடிப்படையில் வெளிப்படுத்துவது தவறு. இரயா மீது நீங்கள் முன் வைக்கும் குற்றத்திற்கு சான்றுகள் உண்டா ? இல்லையெனில் அது பற்றி மேலும் பேசாமல் இருப்பது உத்தமமானது.

  160. என்னுடைய விவாத முறை தவறு, சம்பந்தமில்லாத அதிகப்படியான விளக்கங்கள், நக்கல், நையாண்டி, மிரட்டல் போன்றவை அதிகமிருப்பதால் மையமான விசயங்களை கண்டறிந்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களது விவாதங்களை திசை திருப்பிய எம்முடைய செயலுக்கு நியாயம் கற்பித்து உரையாட எமக்கு விருப்பமில்லை. ஆகவே இனி இத்தளத்தில் இதுபோல காரசாரமாக நடைபெறும் விவாதங்களில் அடியேனும் பலரைப் போலவே அமைதி காக்கின்றேன். இதனை நான் மீறும்போது சக பின்னூட்ட பயனாளிகள் சுட்டிக் காட்டுவார்கள் என நம்புகிறேன்.

    பி.கு.
    எனக்கு புரிந்த மார்க்சியத்தை பயன்பாட்டுக்குறியதாக்க முயன்றது ஓவரான விளக்கம் என சிலருக்கு பட்டது… சிலரது நடுநிலைமை என்ற போலித்தனத்தை தடித்த வார்த்தைகளால் எடுத்த எடுப்பிலேயே நான் திட்டவில்லை என நினைக்கிறேன்… மையமான விசயங்களை விவாதிக்க முயன்ற எமக்கு அதனை விவாத்த்திற்கு உகந்த்து எனக் கருதாத அனைவரது போக்கில் எமக்கும் உடன்பாடுதான்… ஒரு நபரை எப்போதும் திட்டிக் கொண்டிருந்தால்தான் அவர் தவறு செய்யும் போதும் திட்ட வேண்டும் என்ற புரிதல் எமக்கு இல்லாத்து தவறுதான்… எம்முடைய விவாதமுறையில் ஊடாட முடியாத படிக்கு எழுதப்பட்டிருக்கின்றது எனத் தெரிவதால் பின்னூட்டத்தை விவாத்த்திற்கான களமாக யாம் பயன்படுத்த மாட்டோம் இனி … மேதமைத்தனம் எம்மிடம் வெளிப்பட வாய்ப்பில்லை எனக் கருதுகிறோம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.. ஒரு வேளை குறை குடமாகத் த்தும்பி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.. மற்றபடி ரயாவை முத்திரை குத்திய போக்கிற்கு மன்னிப்பு கோருகிறேன்.. எனது திருகுதாளத்தை கண்கொட்டாமல் ரயாவின் தளம் வரை சென்று படித்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. கடைசி நேரத்தில் வந்து தமது கருத்துக்களை பதிவுசெய்ய காத்திருந்த மற்றும் காத்திருக்கும் தோழர்களுக்கும் நன்றி..

  161. 25-9-1987 அன்று பிரபாகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் பிற இயக்கங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார். அதன் முக்கியப் பகுதி வருமாறு:

    “”அன்றும் சரி, இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்தச் சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன்.

    தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசுச் சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளைத் தூக்கியெறிந்துவிட்டு புலிகளோடு வந்து சேருங்கள்;

    புலிகளாக மாறுங்கள்;

    புலிகளின் லட்சியப் போராட்டத்தில் அணி திரளுங்கள்.

    நீங்கள் எந்த லட்சியத்துக்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ அந்த லட்சியப்பாதையில் எமது விடுதலை இயக்கமே வீறுநடை போடுகிறது.

    ஆகவே, தமிழீழ லட்சியப்பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ளத்தயார். உங்களை எமது அணியில் சேர்த்துப் போராளிகளாக கெüரவிக்கத் தயார். எமது தோழர்களாகப் பராமரிக்கத் தயார்”

    என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    http://eelavarkural.blogspot.com/2009/09/blog-post_4016.html

Leave a Reply to srinivasan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க