பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர். அப்சல் குருவைத் தூக்கில் போட்டால்தான் பா.ஜ.க மற்றும் அன்றைய அரசாங்க சதிகள் மறைக்கப்படும் என்பதால் அவர்களும் ஊடகங்களும் இதை வலியுறுத்துகின்றனர். அப்சல்குருவைத் தண்டிக்க போதிய முகாந்திரங்கள் இல்லையென்றாலும் தேசத்தின் பொதுப்புத்தியை கணக்கில் கொண்டு இந்த தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. கசாப்பும் மற்றைய பயங்கரவாதிகளுடன் சுமார் 150 பேரை கொலை செய்திருக்கின்றனர். இதையும் தேசத்தின் மனசாட்சி வரவேற்கவே செய்கிறது.
ஆனால் போபால்?
1984 டிசம்பர் 2 நள்ளிரவு மற்றும் டிசம்பர் 3 அதிகாலையில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு எனும் அமெரிக்க ஆலையில் மீதைல் ஐசோயனைடு எனும் நச்சுவாயு வெளியேறி 15,000 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து வந்த வருடங்களில் இன்னும் சில ஆயிரம் பேர் இறக்க, பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
டிசம்பர் 4இல் யூனியன் கார்பைடு தலைவரான வாரென் ஆண்டர்சன் கைது செய்யப்படுகிறான். 2000 டாலர் ஜாமீன் கட்டிவிட்டு மீண்டும் இந்தியா வருவதாக பொய்யுரைத்த ஆண்டர்சன் உடன் அமெரிக்கா சென்று இன்றுவரை வழக்கிற்காக வரவில்லை. ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அமெரிக்கா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. செப்டம்டர் 11இல் நடந்த உலக வர்த்தக மையத் தாக்குதலில் இறந்தவர்களை விட போபாலில் கொல்லப்பட்டவர்கள் பல மடங்கு அதிகம். பின்லேடனுக்காக முழு ஆப்கானையும், பாக்கையும் குண்டுகளால் சல்லடை போட்டு தேடும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
1989இல் இந்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொண்டது. அதில் கார்பைடு நிறுவனம் அளித்த பிச்சை நிவாரணத் தொகை வெறும் 43 கோடி டாலர் மட்டுமே. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை தோராயமாக வகுத்துப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த பிச்சை நிவாரணத் தொகை கூட முழுமையாக வழங்கப்படவில்லை என்பது வேறு விசயம். அந்த அளவு அரசு எந்திரம் இதை பாராமுகமாக கருதுகிறது.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 1994இல் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது பங்குகளை மெக்லாய்ட் ரஸ்ஸல் நிறுவனத்திடம் விற்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது. எப்படியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விழக்கூடாது என்று இந்த பச்சைத் துரோகம் அரசால் செய்யப்பட்டது.
1999இல் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிலிருந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. டோ நிறுவனமோ போபால் விசவாயு கொலைக்காக தமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லிவிட்டது. பொறுப்பு ஏற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனமே இனி இல்லை என்று காட்டுவதற்கு இந்த அழுகுணி ஆட்டம் நடத்தப்பட்டது.
இன்றும் போபால் நகரில் இந்த படுகொலையின் பாதிப்புகள் அழுத்தமான தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது. போபாலின் மண்ணிலும், நீரிலும் பாதரசத்தின் அளவு வழக்கத்தை விட 60 இலட்சம் மடங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நச்சு சூழலோடுதான் போபால் மக்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.
1999ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்நிறுவனம் இந்தியாவில் நடந்த விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அடித்துக் கூறிவிட்டது. 2002 இல் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும், அந்த அயோக்கியனை அமெரிக்காவில் காணவில்லை என்று அமெரிக்க அரசு பச்சையாக புளுகியது. ஆனால் அவன் நியூயார்க் நகரில் இருப்பதை ஒரு பிரிட்டீஷ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஒரு முதலாளியையும், ஒரு முதலாளித்துவ நிறுவனத்தையும் காப்பாற்றுவது எப்படியெல்லாம் நடந்திருக்கிறது பாருங்கள்.
கொல்லப்பட்ட உயிர்களுக்கு உரிய நிவாரணம் தராத நிலையில் போபாலில் உள்ள ஆலையை சுத்தப்படுத்தலாம் என அமெரிக்க நீதிமன்றம் டோ கெமிக்கல்சுக்கு அனுமதியளித்தது. அந்த ஆலையை சுத்தப்படுத்தி ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டால் பணமாவது கிடைக்குமே என்று அந்த கொலைகாரர்கள் யோசித்திருக்கலாம். எழவு வீட்டிலும் வந்தவரை ஆதாயம்தானே?
பிறகு அந்த 43 கோடி நிவாரணத்தொகையை வைத்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி அதற்கு வட்டியாக 15 கோடி டாலரைச் சேர்த்து வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மொத்த குடும்பத்தினரையும் இழந்து ஒரு சிலர் மட்டும் நடைப்பிணமாக வாழும் நிலையில் இந்த பிச்சைக்காசு எம்மாத்திரம்? மட்டுமல்ல இதுவும் கூட இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இன்னமும் முழுமையாக தயாரிக்கப்படவில்லையாம்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை.
இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். சட்டம், நீதி, நிவாரணம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு முதலாளிகள் தாம் நடத்தியிருக்கும் பச்சையான படுகொலையை 26 ஆண்டுகளாக நாசுக்காக நீர்த்துப் போக செய்திருக்கிறார்கள். இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள், இருநாட்டு அரசாங்கங்கள் இணைந்து நடத்தியிருக்கும் இந்த ஏமாற்று வேலையை வைத்தாவது முதலாளித்துவம் என்றால் அது பயங்கரவாதம்தான் என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.
ஆண்டர்சனைத் தூக்கில் போடுவதோடு அமெரிக்க அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும். அமெரிக்க அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். இவையெல்லாம் இன்று நடக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும். தாமதமான நீதி அப்போது மட்டுமே கணக்கு தீர்க்கப்படும். தீர்ப்போம்!!
அருமையான கட்டுரை !
வேலையில் தவறு செய்து, விபத்து ஏற்பட்டால் தூக்கிலிட வேண்டும் என்று எனக்குத் தெரிந்த சட்டம் சொல்லவில்லை. ஆகையால் அது நடக்காது !
நஷ்ட ஈடு என்கின்ற பெயரில் சில்லரையை வீசி இரைத்திருக்கின்றனர். அது தான் வேதனையான விஷயம்.
முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க வினவு. NUCLEAR LIABILITY BILL பாராளமன்றத்தில் ஒப்புதல் பெறப் போறாங்களாம். கதிர் வீச்சுக்களினால் ஏற்படும் சேதங்களுக்கு, சொற்ப சில்லரை மட்டுமே அமெரிக்க கம்பெனிகள் வழங்கும் என்கிற பில் தான் அது. தீர்ப்பு வந்திருக்கும் கால கட்டம் அமெரிக்க கம்பெனிகளை திருப்திபடுத்தும், நம்பிக்கையூட்டம். தடை கற்களை சுலபமாக உடைத்துவிட்டோம் பாருங்கள், இப்பொழுது வந்து கம்பெனி ஆரம்பியுங்கள் என்று அரசாஅங்கம் சொல்வது போல அமைந்து இருக்கிறது.
//வேலையில் தவறு செய்து, விபத்து ஏற்பட்டால் தூக்கிலிட வேண்டும் என்று எனக்குத் தெரிந்த சட்டம் சொல்லவில்லை. ஆகையால் அது நடக்காது !//
கபிலன்,
அந்த விபத்து ஒரு திட்டமிட்ட படுகொலை என்று நிரூபிக்க இயலும். ஏனேனில், யூனியன் கார்பைடு ஆலை மீது தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்குப் பிறகும், வெளிப்படையான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அந்த விபத்து நடந்தேற அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் கொய்யோ முறையோ என்று கூவி மரணதண்டனை தருவதும், என்கௌண்டர் என்ற பெயரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் அப்பாவிகள பலர் கொல்லப்படுவதை தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் நாம் ஏற்றுக் கொண்டுமுள்ள சூழலில், போபால் படுகொலைக்கு மரண தண்டனை கோருவது சரியென்பதே என் கருத்தும்.
சட்டம் கிடக்கிறது, ஆளும் வர்க்கத்தின் பீ வாளி. அது என்றைக்கு நியாயத்தை பேசியுள்ளது?
//அப்போதுதான் இன்னமும் பரிதாபமாய் போபால் படுகொலைக்காக உயிரற்ற குரலில் போராடி வரும் அந்த பாமர மக்களது நீதியின் பக்கம் நாமும் இணைய முடியும்.//
போபால் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பு சில காலம் முன்பு பிரதமரை(வேற யாரு நம்ம மண்ணுமோகன் தான்) சந்திக்கச் சென்றனர், அப்பொழுது மன்மோகன் தனது கைகளை ஆட்டிக் கொண்டு சொன்னது, ‘யூனியன் கார்பைடைப் பற்றிய் பேசுவதாக இருந்தால் இங்கு வராதீர்கள்’. (அந்த அமைப்பின் சார்பில் பிரதமரை சந்தித்த நபர் தெஹல்காவில் சொல்லியுள்ளார்).
யூனியன் கார்பைடு மன்மோகனின் பெர்சனல் மேட்டரா என்று தெரியவில்லை.
http://jackiesekar.blogspot.com/2010/06/blog-post.ஹ்த்ம்ல்
//ச்சீ, தூ, பேமானிங்களா….//
//இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்…..அதுதான் கெத்து…//
//இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது….//
//
சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது… சரி அப்படியே… இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை…//
//பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது…ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது… எனக்கு தெரிந்து உள்ளே போய் நாளு பேரை போட்டு தள்ளி இருக்கனும்… அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு…….//
வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர். வெகு அருமையாக மக்களின் உள்ளக் கொதிப்பை தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
அசுரன்
/என்ன மாதிரியான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நேற்று யூனியன் கார்பைட் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சம்பவம் நடந்த காலத்தில் இந்திய நிறுவனத்தின் மேலாளராக இருந்த கேஷுப் மஹிந்த்ராவுக்கும், இன்னுமோடு ஏழு பேருக்கும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. போபால் சம்பவத்தை, எந்த ஒரு இந்தியனும் மறந்திருக்க முடியாது. விபத்து நடந்த 1984, இவ்வளவு கொடிய, இத்தனை பேரைப் பாதித்த ஒரு பேரழிவை, மக்களால் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாத ஒரு காலம். திடும் என நமது வீடும் பெற்றோர்களும், நமது உறவினர்களும், நண்பர்களும், நம்மைச் சுற்றியுள்ள மக்களும் செத்தழிந்து போனால் நமக்கு எப்படி இருக்கும்? இத்தகைய ஒரு மனநிலையில் நாம் யோசித்தால் தான் இந்தச் சம்பவத்தின் அழுத்தத்தை உணர முடியும். அத்தகைய ஒரு கொடும் துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, இதைவிடக் கேவலமான முறையில் அவமதித்திருக்கவே முடியாது.
இத்தகைய ஒரு கொடும் சம்பவம் அரங்கேறிய போது, அந்தச் சம்பவத்துக்கு, அந்த நிறுவனம் – யூனியன் கார்பைட் – மட்டுமே பொறுப்பேற்க முடியும்.. பொறுப்பேற்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? தாய் நிறுவனமான யூனியன் கார்பைட், அதன் இந்தியக் கிளையான யூனியன் கார்பைட் இந்தியா லிமிடட் என்ற நிறுவனத்தைக் கை காட்டிவிட்டுத் தப்பித்தது. நேற்றுக்கூட, தீர்ப்பு வழங்கப்பட்டபின் யூனியன் கார்பைட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் இதையே சொல்லியுள்ளனர். இந்தத் தீர்ப்பு வெளிவர எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் – 26 ஆண்டுகள் !! இதற்குப் பெயர், அயோக்கியத்தனமா இல்லையா ?
//
கருந்தேள் கண்ணாயிரம் தனது பதிவில்.
http://www.karundhel.com/2010/06/blog-post.html
நேற்றைய யூனியன் கார்பைடு இன்று டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்தக் கொலைகார நிறுவனத்தை காப்பாற்ற வழக்கை வாபஸ் வாங்கவும் முடிவு செய்தார் மன்னுமோகன். கடுமையான எதிர்ப்பின் காரணமாக தற்போது வழக்கை நீர்த்துப் போக மட்டும் செய்துள்ளனர்.
மேலும், இந்த டௌ கெமிக்கல்ஸ்காகத்தான் சிபிஎம் அரசு
நந்திகிராமில் மக்களை கொன்றொழித்தனர்.
உபரி தகவல், டௌ கெமிக்கல்ஸின் புரோடக்ட் ஒன்றை நாமெல்லாரும் வெட்கமின்றி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது எவ்ரெடி பேட்டரிகள். அதைப் புறக்கணிப்பது பற்றி யோசிக்கலாம்.
நல்ல பதிவு தோழர்.
//டெல்லி: மறைந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது அப்போதைய வெளியுறவு அமைச்சகம்தான், யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக அப்போது இருந்த வாரன் ஆன்டர்சன் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டாம் என தடை உத்தரவு போட்டது என்று முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.
இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் அரசுதான் ஆன்டர்சனை தப்ப விட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போபால் விஷ வாயு சம்பவம் நடந்தவுடன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் கழித்து வெறும் ரூ. 25,000 ரொக்க ஜாமீனை செலுத்தி விடுதலையானார். பின்னர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை.
ஆன்டர்சனுக்கு சாதகமாக அப்போதைய நரசிம்ம ராவ் அரசு நடந்து கொண்டதாக தற்போது கூறியுள்ளார், அந்த சமயத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த லால். லால், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1995 ஜூலை வரை விசாரணை அதிகாரியாக இருந்தவர்.
இதுகுறித்து லால் கூறுகையில், ஆன்டர்சன் குறித்து மெதுவாக போகுமாறு சிபிஐக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆன்டர்சன் நாடு கடத்தல் தொடர்பாக அழுத்தம் தரத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
அரசின் இந்த உத்தரவு எனக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஆன்டர்சன்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. அவரை நாடு கடத்தக் கோருவதை வலியுறுத்த வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தலை எதிர்த்து நான் வெளியுறவு அமைச்சகம் எனக்கு அனுப்பிய எழுத்துப் பூர்வமான கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதையடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டேன்.
இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்டர்சன் நாடு கடத்தப்பட்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சிபிஐயால் அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலை அப்போது. சிபிஐயால் ஆன்டர்சனை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அரசின் உத்தரவை மீறி சிபிஐயால் செயல்பட முடியாத நிலை இருந்தது.
பிற நாடுகளில் எல்லாம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ போன்றவை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சிபிஐ செயல்பட வேண்டியுள்ளது என்றார் லால்.
முதலில் ஆன்டர்சன் உள்ளிட்ட 12 பேர் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் ஆன்டர்சன் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்துள்ளனர். மேலும், அவருக்கு சாதாராண சாலை விபத்துக்களின்போது போடப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மற்றவர்கள் மீதும் அதேபோன்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் வெறும் 2 வருட சிறைத் தண்டனை மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போபால் தீர்ப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள பாதிக்கப்பட்டோரும், இவர்களுக்காக போராடி வருவோரும், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளனர். ஆன்டர்சன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
பாஜக கண்டனம்
லால் பேட்டி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சாதாரண கொலைகளுக்குக் கூட ஆயுள் தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படுகிறது. பல்லாயிரக்ணக்கானோரைக் கொன்று குவித்தவர்களுக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு போபால் விஷவாயு வழக்கில் தலையிட்டு ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என சிபிஐக்கு கூறியது கடுமையான கண்டனத்துக்கு உரியது என்றார்.
வீரப்ப மொய்லி டென்ஷன்
இந்த நிலையில் லால் பேட்டி குறித்து சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி எரிச்சலாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓய்வு பெற்ற பின் பலர் பலவித அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். லால் அறிக்கை பொறுப்பற்றதாகும். அவர் கூறுவது போன்று நடக்கவேயில்லை. இதுபோன்று அறிக்கை விடுவதன் மூலம் தியாகிகளாக சிலர் முயற்சிக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வாரன் ஆன்டர்சனின் பெயரையும் அதில் சேர்த்திருந்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை நீதிமன்றம்தான் தயாரித்தது.
வழக்கு நடந்தபோது நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. மேலும் அதற்கு அவர் பதிலும் அளிக்கவில்லை. அவர்தான் வாரன் ஆன்டர்சன். இதையடுத்து அவர் தலைமறைவானவர் மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
Read: In English
இதன்மூலம் அவர் மீதான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார் அவர்.
போபால் வழக்கு தீர்ப்பு வெளியானவுடன் கருத்து தெரிவித்த மொய்லி, இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அதேசமயம், இதை அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். மீண்டும் இதை திரும்ப விசாரிக்க கோரக்கூடாது என்று கருத்து தெரிவித்தவர்தான் இந்த மொய்லி என்பது குறிப்பிடத்தக்கது.//
http://thatstamil.oneindia.in/news/2010/06/09/bhopal-gas-leak-case-anderson-cong-govt.html
பிஜேபிக் காரன் ஏதோ பெரிய உத்தமன் கணக்கா குதிக்கிறான். அவன் ஆட்சில கூட மக்கள் போராடிக்கிட்டுதான் இருந்தாங்க, அப்பல்லாம் அவன் என்ன செஞ்சானாம்? நரசிம்மாராவ் என்ன தஞ்சை பெரிய கோபுரமா கட்டிருக்காரு?
இந்த செய்தியை கேட்ட உடன் கண்ணீர் விட்டு அழ்ளுதேன்.முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
இப்படிக்கு கையாலகாத இந்தியர்களில் ஒருவன்
நானும் இன்று இதை பற்றி தான் எழுதி உள்ளேன் உங்கள் அளவு இல்லை என்றாலும்
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_07.html நல்ல பதிவு தோழர்
முதலாளித்துவத்தின் முகத்திரையை வினவு தொடர்ந்து கிழித்து கொண்டிருக்கிறது ………
ஆனால் தோழர் பல பேருனுடைய மனநிலை ………….அது எப்படி முதாலாளி பொறுப்பாவார் என்ற கோணத்திலேயே உள்ளது வேதனை ……….நான் பேசிப்பார்த்த வரை அவர்கள் சொல்வது மும்பையில் நடந்தது தீவிரவாதம் இங்கு ஊழியர் செய்த பிரச்சனைக்கு முதலாளி எப்படி பொறுப்பேற்பார் என்று சொல்கின்றனர் கொடுமை தோழர் ……………..நான் இன்று பலபேருடன் இதே போல பதிவு எழுதி உள்ளதால் பேசிவிட்டேன் ……அவர்கள் மனநிலை முதலாளித்துவத்தையே பிரதிபலிக்கிறது ………..கொஞ்சம் வேதனையாய் உள்ளது தோழர் பதிவு அருமை
கடந்து வந்த பிறகு மிகுந்த கண்ணியமாய் இருக்கிறது இந்த கட்டுரை.
முத்லாளிகள் வீசும் பிச்சை லஞ்ச பணத்திற்கு ஆசைபட்டு அதிகாரிகளும் அர்சியல்வாதிகளும் செய்யும் த்வறும் கண்டிக்கத்தக்கது. மோசமான் அசம்பவம் நடந்துவிட்ட பின் வருத்தும் தெரிவிக்கும் மோசமான அரசை பெற்ற பாக்கியாவான்கள் நம் மக்கள்.
ஆன்டர்ஸன் தூகிலடப்ப்ட வேண்டும் என்பது அமெரிக்கவீன் காதுகளுக்கு கேட்காது அல்லது உங்கள் குரலை ஹெட்லி, இட்லி, என்று புத்திசாலித்னமாக் திசை திருப்படும் அதில் நம் அர்சியல்வாதிகளும், மாமா மீடியாக்களும் கை தேர்ந்த்வர்கள்.
உண்மை அக்னி
ஆயிரக்கனக்கான மக்களை படுகொலை செய்தது முதலாளித்துவம் . இன்னும் விட்டால் முதலாளித்துவம் நர வேட்டை ஆடும் .இதை ஒழிபதற்கு நமக்கு தேவை அதனுடைய பச்சை ரத்தம் தான் !.
இந்திய உழைக்கும் மக்களின் மனக்குமுறலை வினவு இந்த கட்டுரையில் பிரதி பலித்து இருக்கின்றது.
இந்த கட்டுரையில் உள்ள கொஞ்ச நஞ்ச அறமுறை போராட்ட வழிமுறைகளையும் (அவை ஒன்றும் வேலைக்காகாது என்பதற்கு இந்த வழக்கின் தீர்ப்பே சாட்சி), Nuclear Liability Bill மூலமாக இந்திய அரசு கை கழுவி விட்டது.
ஆனால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக வீணாக கத்துகிறார்கள் காங்கிரஸ் காக்கைகள். ஆண்டர்சனை பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தது, இவர்களின் கடவுளான ராஜீவீன் அரசு. ஆனால், இந்த நீதி துரதிருஷ்டமானது என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள், காங்கிரஸ் அமைச்சர்கள்.
உழைக்கும் வர்க்கம் என்று இந்த அநீதியான பாசிச அடிவருடி அரசியல் அமைப்பை தூக்கி வீசுகிறதோ, அன்றுதான் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
அருமையான கட்டுரை.
ஆனாலும் முதலாளித்துவ அடிவருடிகள் இது பெரிய பிரச்சினையே அல்ல என்றுதான் சொல்லுவார்கள்.
தக்க சமயத்தில், உடனடியாக சரியான எதிர்வினை வினவு.
வேடிக்கை என்னவென்றால், வீரப்ப மொய்லி வீரவசனம் பேசுவதுதான். பதிலாக ராஜினாமா செய்யலாம். ஆனால், அவர் செய்ய மாட்டார். சிபிஐ தலையை உருட்டுவது என முடிவெடுத்து, காங்கிரசே மொய்லி மூலமாக அதனைச் செய்வது, மக்களை எந்த அளவிற்கு வடிகட்டிய முட்டாள்கள் எனக் கருதுகிறார்கள் என்பதற்கு சான்று.
தமிழகத்தின் நித்தியானந்தன் ஜெயராமன் முதல் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வரை போபாலை முன்வைத்து, இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ ‘போராட்டங்களை’ தன்னார்வக் குழுக்கள் நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் நடத்திய காசு, ஆண்டர்சன் போர்டு பவுண்டேசனுக்கு கொடுத்த காசாகக் கூட இருக்கலாம். இறுதியில் கழுத்தறுக்கப்பட்ட மக்கள், இந்தப் பாழாய்ப் போன நீதிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தீர்ப்பைக் கேட்ட ஆண்டர்சன் ஆபத்பாந்தவனாக உதவிய ராஜீவ் காந்திக்கு மனதிற்குள் நன்றி தெரிவித்திருப்பார். ராஜீவ் காந்தியோ விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட அமரராகி விட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கோ வாழ்விலும் விடிவில்லை, மரணத்திலும் தீர்வில்லை.
சமீபத்தில் சென்னையில் நடந்த அரங்கக் கூட்டமொன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டார். “இந்திய அரசு இலங்கை அரசு போல வெளிப்படையாக படுகொலைகளை நிகழ்த்தாது. மக்களை பட்டினி போட்டு சத்தமின்றி சிறுகக் சிறுக படுகொலை செய்யும். என்ன இருந்தாலும், நம்மை ஆள்பவர்கள் ‘வன்முறையை விரும்பாத’ பார்ப்பன சைவப் பட்சிணிகள் இல்லையா?” என நக்கலாக குறிப்பிட்டார். இந்த சைவப் பட்சிணிகளின் ஈவிரக்கமற்ற இலாப வெறிக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள், எத்தனை ஆயிரமாயிரம் மக்களை பலிகொடுக்கப் போகிறோம்?
//பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர்//.
ஆனால் இன்று இப்படிப்பட்ட தேசபக்தர்களின் கட்சி அப்சல் குருவிற்காக வாதாடிய ராம் ஜெத்மாலினியை இன்று மாநிலங்களவை உறுப்பினராக்கி இருக்கிறார்கள். இது இவர்களின் உண்மை முகம்.
போபால் நச்சுக்காற்று கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக போராடி வரும் அப்துல் ஜப்பார் இந்த தீர்ப்பு குறித்து கூறிய கருத்துக்கள் நீதித்துறையின் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கின்றன.இந்த தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்,ஆனால் இந்த தீர்ப்பை பெறவே கால் நூற்றாண்டு காலம் போராட வேண்டியிருந்தது.மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன் குற்றம் இழைத்தோர் பாதிக்கப்பட்டோர் என இரு தரப்பாரும் இயற்கையாகவே இறந்து விடுவர் என கசப்புடன் கூறியிருக்கிறார்.நீதிபதி கனவான்களும் நீதித்துறையை தூக்கிப்பிடிப்போரும் வெட்கி தலைகுனிய வேண்டாமா.நாம் கவனிக்க வேண்டிய பொருள் வேறு ஒன்று உள்ளது.இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் சாட்டப்பட்ட குற்றங்களுக்கான உச்சபட்ச தண்டனையை தந்துள்ளது.இந்த பம்மாத்து தீர்ப்புக்கு காரணமே உச்சநீதிமன்றம்தான்.1996-ல் படுகொலை குற்றமாக கருதவேண்டிய [culpable homicide ]குற்றத்தை கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் [death by negligence ]என மாற்றி ஆணையிட்டதே உச்சநீதிமன்றம்தான் இத்தகைய உயர்நிலை நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வது போபால் படுகொலைக்கு நீதி கிடைக்க வழி வகுக்குமா.
கண்ணீர் வருகிறது இந்த கட்டுரை படிக்கும்போது . மன வேதனை அடைகிறேன் .
சரியான நேரத்தில் காத்திரமாக பதிவு செய்யப்பட்டுள்ள கருத்து. நன்றி.
அன்புள்ள ஹைதர் எங்க போனிங்க? ஆளையே காணுமே?
அய்யா அதியமான் அவர்களே உங்கள் மேலான கருத்து என்ன என்று தெரிவிக்கவும் !
மிக அழுத்தமான பதிவு. இதே விஷயத்தில் தங்களின் கருத்துக்கு மாறுபட்ட என்னுடைய பதிவையும் இங்கு பாருங்களேன்
http://www.wisewamitran.blogspot.com
அபத்தமான ஒப்பீடு. க்ளிப்பினால் உருவான லாரி ‘விபத்து’ – விபத்து மட்டுமே. ஒரு கொடிய மக்களுக்கு பாதுகாப்பற்ற வாயுவை கையாளும் பொழுது மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. மேலும் இவை போன்ற ஆலைகள் பரவலான பொதுமக்கள் வாழிடங்களில் இருந்து மிக தொலைவில் அமைத்திருக்க வேண்டும். அடிப்படையான எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு எடுக்க படவில்லை அல்லது தெரிந்தே செயல் படுத்தபடவில்லை. இப்பொழுது தண்டனைக்குள்ளனவர்களும் மிக சாதாரண ஊழியர்கள்தான், அவர்கள் இங்கு பலிகட ஆக்கபட்டுளார்கள் என்பதே என் கருத்து. முதலாளித்துவ லாப வெறியோடு மக்களை பற்றிய கவலை இல்லாமல, அந்த ஆலையை நடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்த ஆண்டர்சனை பொது மக்கள் மத்தியில் தூக்கில் இடுவதே சரியான தீர்ப்பாக இருக்கும்.
நண்பர் புலிகேசி
நாம் பிராக்டிகலாக பார்க்க வேண்டும்.
உதாரணமாக வட சென்னையில் அமைந்துள்ள பெட்ரோல் பக்டரிகளும் டாங்குகளும் தீ பிடித்துக்கொண்டால் வட சென்னை முழுவதும் எரிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லுகிறார்கள். அதற்காக தொழிற்சாலைகளை பாலை வானத்திலா அமைக்க முடியும்.
வாழ்க்கை வசதிகள் என்றாலே ரிஸ்க்கும் உள்ளது. அதற்காக நான் ஊரையே விஷ வாயுவால் சாவடித்தது சரி என்று சொல்ல வில்லை. அப்சல் குருவையும் ஆண்டர்சன்னையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியில்லை என்று தான் சொல்கிறேன்.
http://news.rediff.com/interview/2010/jun/11/interview-man-who-warned-of-the-bhopal-gas-leak.htm
Mr. Viswamithra read the above article in above link.
கசாப், அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு சொன்னால் அது இந்துமதவெறியா…லூசோ நீ
போபால் நீதியின் பெயரால் கொல்லப்பட்டவர்கள் http://inioru.com/?p=13675
தேவையான கோபத்துடன் எழுதப்பட்ட பதிவு. நன்றி.
அன்பு உமா !
எனது தளத்தின் பதிவொன்றை உங்களுக்கு சமர்பித்திருக்கிறேன் !
நன்றி தோழர் !
………
போபால் விபத்தில் எந்தவொரு பெண்ணும் உயிரிழக்க வில்லை
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_14.html
20000 மக்களை கொன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை, 2000 முஸ்லீம் மக்களை கொன்ற மோடிக்கு முதல்வர் பதவி. ஆம் மிகச் சரியான இந்திய ஜனநாயகம்,
கடந்த காலங்களில் இச்செய்திகளை, புஜ வில் படித்த பொழுது எழுந்த வேதனை இன்னும் மறையவில்லை
என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ முதலாளிகள் கம்பெனியை திவாலாக்கி விட்டு, கடனுக்கு ஈடாக எதையையும் விட்டு வைக்காமல் ஆம் கம்பெனியின் கூரையை கூட யாருக்கும் தெரியாமல் விற்று கொழுத்திருக்கிறார்கள். ஆம் முன்பக்க கதவு மட்டும் இருக்கும் பின்புற வாசல் வழியே இயந்திரங்கள் மற்ற தளவாடங்கள் இன்னும் சொல்ல போனால் கட்டிடமே காணாமல் போயிருக்கும். உதாரணங்கள் என் அனுபவத்தில் நிறைய கண்டுள்ளேன்.
தோழர்கள் இங்கே சுட்டி காட்டியுள்ளதை பார்க்கும் போது, அதாவது டோவ், நிலத்தையும் கட்டிடத்தையும் விற்க முயற்சி என்றெண்ணும் போது உரிமை என்ற பேரில் அவனை ஏன் அதை செய்ய விட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களே அதன் நிலைகளை, அதன் நெடிய இரும்பு கதவுகளை உடைத்து இழப்பிட்டின் ஒருபகுதியாக பெற வழிவகை செய்ய வேண்டும்
அருமையான, அழுத்தமான பதிவு வினவு! கண்டிப்பாக ஆண்டெர்சன் தூக்கில் போட வேண்டிய ஒரு மிருகம் தான்… நானும் இன்று காலை இதை பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறேன் http://adangatamizhan.blogspot.com/2010/06/blog-post_09.html தோழர்களை வாசித்து கருத்து குற வரவேற்கிறேன்….
குஜராத் பார்ப்பன மத வெறியின் அடையாளமாக தெரிவது போல் , போபால் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் அடையாளமாக உள்ளது. தாமதமாக கிடைக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வேறு பேசுகிறார்கள். தாமதமாக கிடைக்கப்பட்ட நீதி குறைந்த பட்சம் சரியாய் கிடைத்துள்ளதா ! இதில் ஜனநாயகத்தை நம்பு !நீதி மன்றத்தை நம்பு !! என்று வேறு உபதேசம் . சத்தீஸ்கரில் ஆதி திராவிட பழங்குடி மக்கள் அரசை நம்பவில்லை. ‘தீவிரவாதிகளோ’ மக்களை காக்கிறார்கள் . எனவே நான் ‘தீவிரவாதிகளை ‘ ஆதரிக்கின்றேன்; அரசை எதிர்க்கின்றேன் என்றார் ஒரு காந்தியவாதி. எனவே ‘காந்தியின்’ தேசத்தை ‘தீவிரவாதிகளை ‘ ஆதரிக்க வைத்து விட்டன (அ)நீதி மன்றங்கள். (அ)நீதி மன்றங்களின் துரோக பட்டியல் நெடியது. இருப்பினும் இது மிகவும் கொடியது. பணத்தின் மூலம் நீதியை பெறுவது அந்த காலம் ! நீதி மன்றமே முதலாளித்துவத்திற்கு சேவை செய்வது இந்த காலம் . இது தான் முதலாளித்துவ நீதி. இதுவே முதலாளித்துவ பயங்கரவாதம் .
ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கூட கிடைக்காது. சமீபத்தில் சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட துணை இராணுவ வீரர்களுக்கு மொத்தமாக கிடைத்த தொகை மட்டும் தலா 75 இலட்சம் ரூபாயைத் தாண்டும். காரணம் அந்த வீரர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக போர் புரிகிறார்கள். போபாலிலோ ஒரு பன்னாட்டு நிறுவனம் கொலை செய்திருக்கிறது. இப்போது நிவாரணத் தொகையின் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்
சரியான ஒப்பீடு.
தக்க தருணத்தில் சரியான பதிவு. மக்களுக்கான நலத்தில் துள்ளியும்
அக்கரை இல்லாமல் முதலாளிகளின் ஏவல் நாயக அயராது பணிபுரியும்
அரசின் நடத்தைக்கு இன்னொரு சான்று.
மக்களின் உயிர் மேல் இவர்களுக்கு என்ன அக்கறை, இழந்த ஒவ்வொரு உயிருக்கு தான் உதவி தொகை கிடைக்குமே என்ற திமிர் பிடித்த சிந்தனை. கிடைக்கும் பிச்சை காசில் எவ்வளவு பொறுக்கி திங்கலாம் என்ற ஐயோக்கியதனம்.
அமெரிக்காவின் பயங்கரவதத்துக்கு துணை போகும் அரசாக இந்தியாவை அறிவிப்பது சரிதான்….
பதிவுக்கு நன்றி தோழர்களே!
இத்தீர்ப்பு, முதலாளித்துவ அரசுகள் யாருக்கானதாக இருக்கமுடியும் என்ற தடயத்தை விட்டுச்சென்றுள்ளது.
மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒரு பதிவு.போபால் விஷ வாயு விபத்து நடந்த பொது மிக அதிகமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதே போல் 80’களில் நிகழ்ந்த ஏர்பஸ் 320 விபத்தும் கூட பரவலாக, இந்திய மக்களை அமெரிக்க சோதனை எலிகளோடு ஒப்பிட்டு, மிக காட்டமாக விவாதங்கள் நிகழ்ந்தன. மறதி நமது உரிமை, எனவே இந்நிகழ்வுகளின் அடிப்படையான விவரங்கள் மனதுள் எங்கோ புதைந்து விட்டது! யாரேனும் போபால் விபத்து குறித்த விவரங்களை பதிந்து உதவலாமே!
நல்ல கட்டுரை, இன்ஷா அல்லாஹ் இந்திய, அமெரிக்க அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படுவார்கள்…
[…] […]
குடித்த மூத்திரம் வழிகிறது
(அ)நீதி மன்ற படிகளில்
மனதில் பதிய வை
இதுதான் சனநாயகமாம்
காந்தி கெ(V)டுத்த விடுதலையாம்
ராமனுக்கு மலச்சிக்லென்றால்
சோனியாவுக்கு சளுக்கென்றால்
கருணாவுக்கு வலிப்பென்றால்
செயாவுக்கு கொழுப்பென்றால்
எரியும் நாடு
அமைதியாயிருக்கிறது
”if my driver is driving and meets with a fatal accident ,i dont become liable” this is what has been uttered by by our former chief justice .thats right
lets forget what mr.ahmadi says.lets think that 35000 death due to corporate neglegence and and a road trafific accident are same.but still …he is right if the car is in good condition.but the the car is not .it has a failed breaking system…all ready caused some accidents,,,the mecanic has warned that the car is no longer safe drive.but the owner doent repair it to avoid expences.now the owner tells the driver to drive through a kumbamela crowd which reselts in massive death toll.
anybody will tell who is liable to the so called accident.for this no one need to study the course of law for years together.but still we get persons who does not have the commen logic,as our chief justice..jai hind
இது மாதிரி ஒரு மடத்தனமான தீர்ப்பு அறிவு சுத்தமா இல்லாதவன் கூட எழுத முடியாது. இந்தியாவில் மட்டும் தான் இது மாதிரி தீர்ப்பு கிடைக்கும். இதில் இவனுங்க எல்லாம் மெத்தப் படித்த மேதாவிகள். இதில் எக்கச்சக்க பணம் விளையாடி இருக்கு என்று வேற கேள்வி. நிறைய பேர்கள் அது மாதிரி எழுதிகிறார்கள்.
இதில் குறை கூறப்படவேண்டியது இந்தியா மட்டுமே. அமெரிக்கா ஒரு வியாபாரி என்பது உலகரின்தது. Also there is a saying in English: There is no such thing as bad publicity in the advertisement world. That holds good for this too. இந்த “publicity” மேலும் இந்தியாவிற்கு அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள bad and corrupted corporates -ஐ இந்தியாவிற்கு வர வழி வகுக்கும்
இந்தியாவிற்கு அமெரிக்கா வருவதற்கு காரணம் நமது அறிவு மூளை காரணம் அல்ல. எந்த தப்பு பண்ணினாலும் எந்த ஊழல பண்ணினாலும் நமக்கு சிவப்பு கம்பளம் தான் என்று எல்லோருக்கும் தெரியும். சும்மா நம்மளுக்கு மூளை அறிவு என்று நினைக்க வேண்டாம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி? இந்த ஊழல Bhpoal case-இல நமது Justice Dinakaranum கிடையாது. ஏன்னா அவரைத் தவிர வேற எந்த நீதி அரசரும் இது வரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவில்லை. அதாவது எந்த நீதி அரசரும் ஊழல செய்ய வில்லை!!!! நிறுத்தப் பட்ட மற்றொருவரும் விடுவிக்கப் பட்டார். அப்ப இந்த ஊழலை பண்ணியது யார்?
மேலும் இந்தியாவின் நீதிமண்ற ஊழலை கீழே கண்ட சுட்டியில் காண்க.
http://www.combatcorruptionindia.org/resources/judiciary.pdf
இந்த சுட்டியில் கண்ட கோடானு கோடி ஊழலை பண்ணிய நமது நீதி அரசர்கள் யார்? யார்? கடந்த 50 வருடங்களில் இவ்வளவு கொள்ளை அடித்த மெத்தப் படித்த மேதாவிகள் யார்? யார்?? Justice Dinakaranum மட்டுமே இப்ப குற்றவாளிக் கூண்டில். அப்பா மீதி நாராப் பசங்க எல்லாம்?
Escapeeeeeeeeeeeeeeee….
இது தாண்டா இந்தியா!!!
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
[…] This post was mentioned on Twitter by bseshadri, Karthik Narayan. Karthik Narayan said: RT @bseshadri: போபால்: ஆண்டர்சனைத் தூக்கில் போடு – வினவு – http://bit.ly/cLj1W3 ; ஆண்டர்சன் மீதா குற்றம்? – பத்ரி – http://bit.ly/blWoGo […]
எம் ஆர் ராதா ஒரு தடவ ஜெயில்ல இருந்தப்ப ஒரு வெள்ளைகாரன் இருந்தானம்.அவன் கிட்ட இவரு கேட்டராம் உங்க நாட்ல எப்படி நீதிபதிய நியமனம் செய்வீங்க நு?அவரு சொன்னாரம் ரொம்ப நாள் வக்கிலா இருகவங்கலத்தான் நீதிபதிய போடுவம்,இவரு கேட்டாராம் அது எப்படி பல வருசமா பொய் சொல்றத வேலைய வச்ச ஒருத்தன் நீதிபதியா ஆரன் அப்போ அவன் பொய் தான சொல்லுவான் இல்ல உடனே அவன் நல்லவனா மாறிடுவான நு ? இங்கே நம்ம ஒட்டு போடுறப்போ இருகுருதுல எவன் கொஞ்சமா கேட்டவன் நு தன பக்க வேண்டி இருக்கு கருமத்த எங்க பொய் சொல்ல
இந்திய அரசின் ராஜதந்திரமாக கூறப்படும் ஆண்டர்சன் விவகாரம் குறித்து மவுனம் சாதிக்கின்றன அனைத்து அரசியல் கட்சிகளும். அதே போல் நீதிமன்றம் மற்ற குற்ற வழக்குகளில் எகிறி குதிப்பதை வசதியாக மறந்து விட்டு யூனியன் கார்பைடு வழக்கில் மட்டும் சட்டத்தராசின் முள் கூட உடையாமல் பார்த்துக்கொண்டது. ஆனால் செத்த பாம்பை வைத்துக்கொண்டு இத்தனை நாள் மகுடி ஊதி மக்களை ஏமாற்றியது நீதிக்கே வெள்ளிச்சம். ஆனால் அந்த போபால் நீதிபதி ஒரு காரியம் செய்திருக்கலாம். சட்டப்படி , நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு மரணத்திற்கும் ஒரு எண்ணிக்கை (Count) கணக்கிடும் முறை இந்திய சட்டத்தில் உண்டு . அதன் படி , அத்தனை உயிர்களுக்கும் எண்ணிக்கை கணக்கிட்டு தண்டனை காலத்தை தனித்தனியே அனுபவிக்க உத்தரவிடலாம். அதை செய்திருந்தால் 10,000 வருடம் சிறையிலிருக்க நேரிட்டிருக்கும் .
“அரசை தூக்கியெறியும் புரட்சி”
சாத்தியம் தானா ?
சாத்தியம் இல்லாவிடில் , சாத்தியமாக்கா விடில் கண்ணீர் விடுவதற்கு கூட கண்கள் இருக்காது !
உங்கள் பதிவுகளில் புரட்சியின் குளம்போசை கேட்கிறது தோழர்ஸ் !
நானும் இணைகிறேன் தோழர்ஸ் !
………
போபால் விபத்தில் எந்தவொரு பெண்ணும் உயிரிழக்க வில்லை
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_14.html
http://news.rediff.com/interview/2010/jun/11/interview-man-who-warned-of-the-bhopal-gas-leak.htm
Why is it happened?
எனினும் அந்த எளிய மக்களால், ஒரு நாள் இந்த அரசை தூக்கியெறியும் புரட்சி ஒன்று நடக்கும் போது இந்தக் குற்றங்களுக்கு வட்டியும் முதலுமாய் தண்டனை வழங்கப்படும்.
இது ஒரு நிறைவேறாத கனவு. நமது முட்டாள் இந்திய மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அப்படியே இருந்தாலும் அவனை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஒரு காலத்தில் மக்கள் படித்தால் அறிவு வளரும் என்றுதான் எதிர் பார்த்தேன். ஆனால் அந்த நம்பிக்கையும் இப்போது போய்விட்டது. படித்தவன் வித்தியாசமாய் ஏமாத்துகிறான். எந்த புரட்சியும் இங்கே நடக்காது, இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று அமெரிகாக்காரன் சொல்லியே நம்மை ஏமாற்றி அவன் வாழ்கிறான். நாம் அதே கனவில் இலவசங்களுக்கு கையை ஏந்திக் கொண்டு நிற்கிறோம். அடிப்படையிலேயே நாம் பிச்சைக்காரர்கள்.
Statement of Union Carbide Corporation Regarding the Bhopal Tragedy
The 1984 gas leak in Bhopal was a terrible tragedy that understandably continues to evoke strong emotions even 25 years later. In the wake of the gas release, Union Carbide Corporation, and then chairman Warren Anderson, worked diligently to provide aid to the victims and set up a process to resolve their claims. All claims arising out of the release were settled 18 years ago at the explicit direction of and with the approval of the Supreme Court of India.
The Bhopal plant was owned and operated by Union Carbide India, Limited (UCIL), an Indian company in which Union Carbide Corporation held just over half the stock. The other stockholders included Indian financial institutions and thousands of private investors in India. Union Carbide India Limited designed, built and managed the plant using Indian consultants and workers. In 1994, Union Carbide sold its entire stake in UCIL to MacLeod Russell (India) Limited of Calcutta, and UCIL was renamed Eveready Industries India Limited (Eveready Industries). As a result of the sale of its shares in UCIL, Union Carbide retained no interest in – or liability for – the Bhopal site. The proceeds of the UCIL sale were placed in a trust and exclusively used to fund a hospital in Bhopal, which now provides specialist care to victims of the tragedy.
After the disaster, plant owner UCIL obtained permission from the government to conduct clean-up work at the site and did so under the direction of Indian central and state government authorities. Eveready Industries continued this remediation effort until 1998. That year, the Madhya Pradesh State Government, which owns and had been leasing the property to UCIL, took over the facility and assumed all accountability for the site, including the completion of any additional remediation. What additional clean-up work, if any, has been undertaken since that time is unclear.
Shortly after the gas release, Union Carbide launched an aggressive effort to identify the cause. Engineering consulting firm, Arthur D. Little, Inc., conducted a thorough investigation. Its conclusion: The gas leak could only have been caused by deliberate sabotage. Someone purposely put water in the gas storage tank, and this caused a massive chemical reaction. Process safety systems had been put in place that would have kept the water from entering into the tank by accident.
Union Carbide, together with the rest of the chemical industry, has worked to develop and globally implement Responsible Care to help prevent such an event in the future by improving community awareness, emergency preparedness and process safety standards.
[…] […]