புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15

புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

 1. போபால்: நீதியின் பிணம்
 2. போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
 3. மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
 4. விபத்தா, படுகொலையா?
 5. உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்
 6. அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை
 7. ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!
 8. ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து
 9. அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?
 10. யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக்   காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.
 11. இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?
 12. அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி
 13. பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்
 14. டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்
 15. ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா
 16. அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?
 17. இதற்குப் பெயர் நிவாரணமா?

புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

 

15 மறுமொழிகள்

 1. நான் படித்தேன் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது . இந்த விடயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றியது . என் போபால் பதிவுகளுக்கு
  காரணமே இப்புத்தகம் , அனைத்தும் ஆதாரத்துடன் , பதிவர்கள் இதை படித்து நிறைய பதிவுகள் போட வேண்டும் என்பது என் விருப்பம் .
  புலிகேசி திறம்பட செய்கிறான். இந்த புத்தகத்தின் தோழர்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது

 2. நானும் படித்தேன். அது பற்றி எழுதிக் கொண்டும் இருக்கிறேன். அனிவரும் படியுங்கள். உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி வினவு.

 3. அருமையான பகிர்வு. ஆழமான பகிர்வு. (படித்து பார்துவிட்டுதான் ஆழமென்று சொல்கிறேன் ஜ்யேவ்)

 4. ஏன் போராட வேண்டும்? யாருக்கு எதிராக போராட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. ஏழை நாட்டுக்கும், பணக்கார நாட்டுக்கும் நீதி சரிசமமாய் இல்லையே ஏன் என்பதை முதலாளித்துவ நண்பர்கள் விளக்கவும்.

 5. இது துரோகத்தின் விளைநிலம் – 2
  http://poar-parai.blogspot.com/2010/07/2.html

  போபால் வழக்குத் தீர்ப்பு மற்றும் இந்திய மக்களுக்கு இந்த அரசு செய்த மாபெரும் துரோகம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த துரோகத்திற்கு உள்ளேயே இன்னொரு உப துரோகம் உள்ளது.

  போபால் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகள் அந்தப் பகுதியில் கடுமையான உடல் நலக் குறைபாடுகளையும், காற்று, நிலம், நீர் மாசுபாட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து மக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். போபால் கழிவுகளை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பொறுப்பு அசுத்தப்படுத்திய யூனியன் கார்பைடு (இன்றைய டௌ கெமிக்கல்ஸ்) நிறுவனத்துக்கே சொந்தம் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கை. ரத்தன் டாடா சில வருடம் முன்பு மாமா வேலை பார்க்கும் முகமாக நான் வேண்டுமானால் சுத்தம் செய்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதனை எதிர்த்தும் மக்கள் போராடினார்கள். இனி உலகில் போபால் போல ஒன்று நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் சுத்தப்படுத்தும் பொறுப்பு யூனியன் கார்பைடிற்கே செல்ல வேண்டும் என்று உறுதியுடன் நின்று போராடி வருகிறார்கள் மக்கள்.

  இன்னிலையில் போபால் வழக்குத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு எனும் துரோகம் கிளப்பிய சந்தடி அடங்கும் முன்பே அடுத்தக்கட்ட துரோகம் ஒன்றும் வெளி வந்துவிட்டது. யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகளில் 40 டன்களை ரகசியமாக பிதாம்பூர் என்ற கிராமத்தில் கொண்டு போய் கொட்டியுள்ளது அரசு. இதை 2008லேயே செய்துள்ளனர். அதாவது ரத்தன் டாடா மாமா வேலை பார்க்கிறேன் என்று சொன்னார் அல்லவா? அதற்கு எதிர்ப்பு வந்தது அல்லவா? எனவே வெளிப்படையா செய்தால்தான் பிரச்சினை என்று ரகசியமாக செய்துள்ளனர். இப்போது அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
  http://breakingnews.gaeatimes.com/2010/07/11/ramesh-apologises-for-dumping-of-carbide-waste-38777/

  எந்தளவுக்கு மக்களை கிள்ளுக் கீரையாக எண்ணியிருந்தால் இந்த அரசு இந்தத் துரோகத்தைச் செய்திருக்கும்? போபால் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று டௌ கெமிக்கல்ஸுக்கு ஆதரவாக நின்று அந்த மக்களை இன்று வரை வதைத்து வருகிறது எனில், இன்னொரு பக்கம் அதே டௌ கெமிக்கல்ஸை தப்பிக்க வைக்க, திருப்திப்படுத்த ரகசியமாக நச்சுக் கழிவுகளை இன்னொரு கிராமத்தில் சென்று பதுக்குகிறது. அந்தக் கிராம மக்களுக்கும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமே, அங்கும் நீர், நிலம், காற்று பாதிகப்படுமே என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. இந்தியாவில் கம்பனி ஆரம்பிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தாம் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டாம் என்றும் சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்த அரசுதானே இது. கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்.

  இப்படி மக்களை காட்டிக் கொடுத்து கழுத்தறுப்பதைப் பற்றி ஒரு துளியளவு கூட கவலைப்படாத, பன்னாட்டு கம்பனிகளுக்கு பாதசேவை செய்யும் ஒரு துரோக அரசை தாங்கி நிற்கின்ற அமைப்பின் பெயர் ஜனநாயகம் என்றால் நம்மால் வாயால் சிரிக்க இயலவில்லை.

  தயவு செய்து உன்னோட ஜனநாயக உளறல்களைத் தூக்கி கக்கூஸில் போடு…..

  (போபால் பற்றிய விரிவான செய்திகள் கட்டுரைகள் ஜூலை மாத புதிய ஜனநாயகம் சிறப்பிதழில் கிடைக்கும்)

  அசுரன்

 6. ஏழர போட்டது பின்னூட்டமே இல்ல.அது ஜ்யோவ்ராம்க்கு ட்விட்டினது.தவறுதலா இங்க சப்மிட் பண்ணிட்டாரு.ரைட்டா ஏழர?

 7. மூச்சு முட்டுகிறது. 84 இல் வெளியான நச்சுவாயு இதோ எனது முகத்தில் பீச்சியடிக்கப்படுகிறது.
  மரணம் துரத்திய அந்த நள்ளிரவில் சுருண்டு விழும் மாடாக…. நாயாக….
  குழந்தையை அணைத்துக் கிடக்கும் தாயாக என்னை உணர்கிறேன்.
  ஆம், உயிரோட்டமான காட்சிப் படிமமாக புதிய ஜனநாயகம் சிறப்பிதழ்.

 8. […] This post was mentioned on Twitter by ஏழர, ஏழர. ஏழர said: புதிய ஜனநாயகம் போபால் சிறப்பிதழ் . நீதியின் பிணம் https://www.vinavu.com/2010/07/15/puja-july-2010/ #bhopal […]

 9. ஜார்ஜு புஸ்,’ஏழர பின்னூட்டம் புரியல’னு சொன்னதுக்கு,ஒருவேள ட்விட்டருக்கு பதிலா தெரியாம இங்க கமெண்ட் போட்டுட்டீங்களோனு நெனச்சிட்டேன்.பதிலுக்கு நன்றி ஏழர.

 10. இப்படி என் சமுதாயத்தை காட்டி, தலையில் மிளகாய் அறுப்பதைப் பற்றி ஒரு

  நோடியும் கூட கவலைப்படாத, கார்பர்டே கம்பனிகளுக்கு உயிர்சேவை செய்யும் ஒரு துரோக அரசை தாங்கி நிற்கின்ற பெயர் மக்கள் ஜனநாயகம் என்றால் நம்மால் எப்படி அமைதி காக்க இயலும்..

 11. கோழிக்கள்ளன் குண்டான் திருடினவனை துரத்திப்பிடிக்கிற கதை. 🙂

  சுண்டைக்காய் இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களையே காப்பாற்ற முடியாத கையறு நிலை. எப்படி உள்ளூர், உலக அரசியல் செல்வாக்கோடு லாபம் குவிக்கும் Union Carbide-Dow Chemical, Goldman Sachs, British Petroleum போன்ற ராட்சத நிறுவனங்களை தட்டிக்கேட்க முடியும்? உள்ளூர் அரசியல் திருந்தினால் உலக அரசியல் தன்னால் திருந்தாதா?

  பதில் சொல்லத் தெரிந்தவர்கள் சொல்லவும். மற்றவர்கள் என்னை தாரளமாக திட்டவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க