Wednesday, March 22, 2023
முகப்புகலைகவிதைசென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

-

கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.

நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கனமாய் விரிகிறது…
இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு: துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சி திறப்பு: ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

–   மக்கள் கலை இலக்கியக்  கழகம், சென்னை

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன? | வினவு!…

  கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,…

 2. […] This post was mentioned on Twitter by வினவு and yathirigan, சங்கமம். சங்கமம் said: சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?: கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின… http://bit.ly/bpHO36 […]

 3. போபால் துயரம் ஒரு தொடர் நிகழ்வாய் அம்மக்களைத் துரத்திக்கொண்டிருக்கும் வேளையில், அநீதியிழைத்த அரசு எந்திரம், நீதிமன்றங்களுக்கு எதிராக என்ன செய்வதென புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர், பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான போபால் மக்கள்.

  ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளோ, எலும்புத்துண்டுகளுக்காக மட்டுமே குரலெடுத்துக் குரைக்கும் நாய்களாக மாறிவிட்டிருப்பதால், போபால் மக்களுக்காக நியாயம் கோருகின்ற குரல்கள் இந்திய அரசியல் அரங்கில் இல்லை. உண்மையான ஜனநாயகத்தைப் படைத்திட போராடிக்கொண்டிருக்கும் புரட்சிகர சக்திகள்தான் அதற்காக குரலுயர்த்திப் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்… ம.க.இ.க.வின் அடுத்த களம் இந்த ஓவியக்காட்சி!

  எதிரியின் முகத்தில் காறி உமிழ்வதைக்காட்டிலும், செருப்பால் அடிப்பதைக் காட்டிலும் தோழர் முகிலனின் ஓவியங்கள் எதிரிக்கு மரண வேதனையளிக்கும். ஜெயலலிதாவின் பேயாட்சிக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் போராடிய போது முகிலனின் தூரிகையும் ஒரு பேராயுதமாக களத்தில் நின்றது நினைவுக்கு வருகிறது.

  இந்த ஓவியக் கண்காட்சியினைப் பார்வையிட இப்போதே, என்னையறியாமலே நான் தயாராகிவிட்ட உணர்வு ஏற்படுகிறது.

  தோழர் முகிலன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  • //எதிரியின் முகத்தில் காறி உமிழ்வதைக்காட்டிலும், செருப்பால் அடிப்பதைக் காட்டிலும் தோழர் முகிலனின் ஓவியங்கள் எதிரிக்கு மரண வேதனையளிக்கும்.//

   ஓவியங்களின் மூலம் நம்மிடம் போராட்ட உணர்வை பெற்றுக்கொள்ள வேண்டியது தான். எதிரிக்கு மரண வேதனை என்பதெல்லாம் அதீதமாக தெரிகிறது. அவர்கள் எல்லாவற்றையும் உதிர்த்தவர்கள்.

 4. VINAVU . BHOPAL is anyway closed although we still have scars left on us.! BUT ONE MORE BHOPAL IS AWAITING TO HAPPEN TUTUKUDI.

  Please send your team to Tutukudi and find out the devastation caused by STERLITE which has caused immense damage to the ecology . There are reports that the entire area in around STERLITE factory is polluted in all means.

  Even afte the high court issuing closure orders they have got an interim order from supreme court for reopepening ; The next hearing is on oct-18 if am right.

  LET’S ENSURE CLOSURE OF STERLITE AND AVOID ONE MORE BHOPAL IN OUR DOORSTEPS.

  PLEASE MOBILIZE ALL YOUR SOURCES FOR THIS CAUSE.

 5. இந்நிகழ்வை பற்றிய விரிவான செய்தியை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன், நேரில் பார்க்கமுடியாத வருத்தங்களுடன் கேட்கிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க