Sunday, November 3, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!

துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!

-

1876 களில் விக்டோரியா ராணி ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றியதற்காக இந்தியாவின் அன்றைய வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு டில்லியில் மிகப்பெரிய விழா மற்றும் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து குறு நில ராஜா, ராணிகளும் கலந்து கொண்ட, ஒரு வார காலம் நடைபெற்ற இந்த விருந்து உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத மிகப் பெரிய விருந்தாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒரு பக்கம் விருந்து, ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப்பட மறுபக்கம் அன்றைய மதராஸ் மாகாணத்தில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தினால் லட்சக் கணக்கான மக்கள் உண்ண உணவில்லாமல் வீதிகளில் செத்து வீழ்ந்ததும் மிகச்சரியாக இக்காலகட்டத்தில் தான் அரங்கேறியது.

உலக வரலாற்றில் அதிக மக்களைக் காவு கொண்ட இவ்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைப் போக்க அன்றைய வைசிராய் லிட்டன் பிரபு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் மீது பரிதாபப்பட்ட அன்றைய மதராஸ் கவர்னராக இருந்த பக்கிங்காம் உணவு தானியங்களை உள்ளூர் சந்தைக்குக் கொடுக்க முனைந்த பொழுது, லிட்டன் பிரபுவால் தடுக்கப்பட்டு அவையெல்லாம் லிட்டனின் திருவிழாவிற்காக அனுப்பப்பட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்த மாபலித் திருவிழாவிற்கு சற்றேதும் குறைவில்லாமல் அதற்கு சரிநிகராக, ஒரு புறம் 70.000 கோடிக்கும் மேற்பட்ட செலவில் காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழாவும் மறுபுறம் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் மத்திய இந்தியவில் நடைபற்றுவருகின்ற படுகொலைகளையும் உதாரணமாகக் கூறலாம்.

மத்திய இந்தியக் காடுகளில் காட்டு வேட்டை என்ற பெயரில் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களும் நேரடியாகப் படுகொலை செய்வது ஒருபுறமிருக்க மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டத்திங்களில் இருந்து அம்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் உண்ண உணவின்றியும், சுகாதாரக் குறைபாடுகளாலும் அம்மக்கள் மறைமுகமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே சத்திஸ்கரில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் வாந்தி, பேதி போன்ற சுகாதாரக் குறைவினால் ஏற்படும் நோய்களால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் கும்பல் கும்பலாகப் பிணங்களைத் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாந்தி பேதியால் இறந்துள்ளனர்.

ஆந்திர – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரக் குறைவால் இறந்து வருகின்றனர். இந்த சாவு எண்ணிக்கை இந்திய அரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்பட்டதை விட மிக அதிகமாகும். தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள தர்முத்லா, சிந்தகுப்ஹா, புர்கப்பால் மற்றும் சிந்தல்நார் பகுதிகளில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி மயக்கத்தினால் இறந்துள்ளனர். மேலும் பலர் நோய்பட்டு சிகிச்சையின்றி அவதியுறுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின் படி ஒரு வாரத்தில் மட்டும் 19 பேர் வாந்தி பேதியால் இறந்துள்ளனர், ஆயினும் புர்கப்பாலில் உள்ள மாதவி துலே போன்ற பல குழந்தைகள் இறந்தும் அவை மாவட்ட நிர்வாகத்தினால் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் புதைக்கப்பட்டுள்ளன.

பருவமழை பெய்கின்ற காலமாதலால் நீர் மூலம் பரவுகின்ற நோய்கள் இங்கு அதிகமாகி வருகின்றன. அடிகுழாய்ப் பம்புகள் யாவும் வேலைசெய்யாமல் இருப்பதால், குட்டைகளில் தேங்கி நிற்கும் நீரையே இம்மக்கள் அனைவரும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரணக் காய்ச்சலில் ஆரம்பித்து வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு கடைசியில் சுயநினைவை இழந்து செத்து மடிகின்றனர். மேலும் உடம்பில் உயிரைத்தக்க வைத்துக் கொள்ளவே போதுமான சத்தில்லாத இவர்கள், நோயில் கிடக்கும் பொழுது மிச்சமிருக்கும் நீர்ச் சத்தையும் பேதியின் மூலம் இழந்து விடுகிறார்கள், இறுதியாக சுகாதாரமற்ற குட்டை நீரையும் பருகுவதால் உடல் நிலை இன்னும் மோசமாகிச் செத்து மடிகின்றனர்.

தாண்டேவடாவின் கிராமப்பகுதி முழுக்க அவசரத்திற்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையே இன்னும் நீடிக்கிறது. வத்தி என்றழைக்கப்படுகின்ற உள்ளூர் நாட்டு வைத்தியர்கள்தாம் பெரும்பாலும் மக்களுக்குச் சிகிச்சையளிக்கின்றனர். வத்திகளின் சிகிச்சையினால் அதிர்ஷ்டவசமாக இம்மக்கள் பிழைத்துக் கொண்டாலும் அதே குட்டை நீரைக் குடிப்பதால் மறுபடி நோய்தொற்று ஏற்பட்டு இறக்கின்றனர். ஏழு லட்சம் மக்கள் தொகை கொண்ட தாண்டேவடாவில் மொத்தம் 12 ஆங்கில மருத்துவர்கள்தான் உள்ளனர். இவர்களில் 3 பேர் பர்சூர், கிரண்டல் மற்றும் பச்சேலி போன்ற நகர்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்கின்றனர். மீதி 9 பேர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பணியாற்றவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் போர்க்கால அடிபடையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆங்கில மருத்துவரையும், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆயுர்வேத மருத்துவரையும் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற நிலையில், தாண்டேவடா மற்றும் பீஜப்பூர் மாவட்டம் முழுக்க மொத்தம் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளன. அவற்றில் 24 நிலையங்களில் வெறும் ஆயுர்வேத மருத்துவர்களும், எஞ்சியுள்ள ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. ஆயுர்வேத மருந்துகள் போர்க்கால அடிப்படையில் உடனடி நிவாரணம் கொடுக்காது என்ற போதிலும், இம்மருத்துவர்கள் தான் பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். மேலும் அவசரத்திற்கு கூட இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரை செய்யக் கூடாது என்ற சட்டமும் உள்ளதால் ஆயுர்வேத மருந்துகளையே இவர்கள் கொடுக்கின்றனர்.

தண்டேவடா மாவட்ட கலெக்டர் அதிகச் சம்பளம் கொடுத்து மருத்துவர்களை நியமனம் செய்ய முயற்சி எடுத்தாலும், நகரங்களிலேயே சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட மருத்துவர்கள் இங்கு வந்து மக்கள் பணி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.மேலும் மக்களுக்காகப் போராடிவரும் மாவோயிஸ்டுகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் பணி செய்து கொண்டு வரும் மருத்துவரில் ஒருவர் கூட மாவோயிஸ்டுகளால் குறைந்தபட்சம் தாக்கப்பட்டது கூட இல்லை என்பதே நிதர்சனம்.சமீப காலங்களாக தாண்டேவடா மட்டுமல்லாமல் பீஜப்பூர் மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இறந்தது அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் குடிமை நிர்வாகமே செயலற்றுப் போயுள்ளதை உணர்த்துகின்றன. இது அப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் மத்திய மாநில அரசுகள் புறக்கணித்து வருவதையே காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் உள்ள பஞ்சாயத்துக்களின் நிலை பற்றிய அறிக்கையை (State of Panchayat’s Report) வெளியிட்டார். குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள கிராமப்புற நிர்வாகவியலுக்கான கல்வி நிறுவனமும் (IRMA) பஞ்சாயத்து ராஜுக்கான அமைச்சரவையும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் (MOU) IRMA இந்த அறிக்கையை சமர்ப்பித்தது. அரசுக்கு அளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் 1996 ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்த்தின்படி PESA (Panchayats – Extension to Scheduled Areas) என்கிற பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான பஞ்சாயத்தின் அறிக்கையும் இடம்பெற்றிருந்தது. IRMA அம்மலைப் பிரதேசங்களில் அரசின் நில ஆக்கிரமிப்பு உட்பட அங்குள்ள மக்களின் மிக மோசமான வாழ்நிலை வரை அனைத்தையும் பக்கம் பக்கமாக அம்பலப்படுத்தி அவ்வறிக்கையை சமர்ப்பித்தது.

ஆயினும் மேதகு மன்மோகன் சிங் அவர்களால் அறிக்கை வெளியிடப்பட்ட பொழுது அப்பக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வேண்டுமென்றே நீக்கப்பட்டிருந்த்தது. சாதாரணமாக ஒரு அறிக்கை சமர்பிப்பதிலேயே அரசின் இலட்சணம் இவ்வாறு நேர்மையற்றிருக்கும் பொழுது, சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் ப.சிதம்பரத்திற்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா எனத் தெரியவில்லை. பாதி வெளுத்துப்போன சாயம் முழுதாக வெளுத்துவிட்ட நிலையில், அரசின் உறுதிமொழிகள் நீரில் எழுதியவையாக மாயமாய் மறைந்துவிடுகின்றன.

ஒரு புறம் காட்டுவேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது மாபெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இந்திய அரசு மறுபுறம் தனது அலட்சியத்தினாலும் அம்மக்களை கொன்று வருகிறது. தண்டகாரண்யாவில் பாதுகாப்பு படைகள் செல்வதற்கு வசதியாக சாலைகளை அதிவேகத்தில் அமைக்கும் அரசு தொற்று நோய்களால் கூட்டம் கூட்டமாக இறக்கும் மக்களுக்கு குறைந்த பட்ச மருத்துவ வசதிகளைக்கூட செய்ய மறுக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளை பழங்குடி மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று பலருக்கு புரிவதில்லை. அத்தகைய அறிஞர் பெருமக்கள் மேற்கண்ட செய்திகளை வைத்தாவது புரிந்து கொள்வது நல்லது.

_____________________________

– சிங்காரம் (வாசகர் படைப்பு)
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்! | வினவு!…

    சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் காங்கிரசுக்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா?…

  2. மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் உங்களால மட்டும்தான் முடிச்சி போட முடியும். என்ன நான் சொல்லறது சரிதானே?

    • நீங்கள் சொல்வது சரியில்லை.

      இந்திய கிராமப்புற நிலைமையை கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி ஏழைகளின் துயர் போக்கும் அவசியத் தேவைகளைப் புறந்தள்ளி காமன்வெல்த் விளையாட்டுக்குச் செலவு செய்ததை ஆங்கிலேயன் காலத்தில் மதராஸ் மக்கள் பட்டினியால் வாடிய போது டில்லி விருந்து நடந்ததை கட்டுரையாளர் ஒப்பிட்டுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?

      நீங்கள் கட்டுரையைப் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுகிறீர்களா? அல்லது தளத்தில் நுழையும் போதே வினவுக்கு எதிராய் எழுதவேண்டும் என்று நுழைகிறீர்களா? உங்களைப் போன்றவர்களின் ‘அறிவுத் திறனை’ என்னவென்பது?

      ஊரான்.

    • நீங்கக் தான் மொட்டையாக சொல்லியிருகிரீர்கள், இதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி, அந்த மக்களின் நிலைபாட்டையே கட்டுரையாளர் கூறியுள்ளார், அவர் கூறியுள்ள அனைத்து செய்திகலுமே சரியானவை, இந்த அரசின் உண்மையான நிலைபாட்டையே இந்த கட்டுரை காட்டுகிறது.

      நீங்கள் வினவு தளத்திற்குல் நுழையும் போதே ஏதேனும் குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நுழைகிரீகள் என்பது நன்றாக புரிகிறது,

      அந்த மக்களை தொற்றியுள்ளது தொற்றுநோய் மட்டும் இல்லை, உங்களை போன்ற வைரஸ்களும் தான், உங்களை முதலில் ஒழித்து கட்டவேண்டும்.

  3. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: RT @vinavu: துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்! https://www.vinavu.com/2010/11/11/apathy-kills/ […]

  4. சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவ சகோதர சகோதரிகளே,தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்று அம் மக்களை காக்க உதவுங்களேன் என்று உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.

  5. ஏழை மக்களுக்கு இந்திய அரசுகள் எதுவும் பெரிதாய் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே..

    ஆனால் தண்டேவடா பிரச்சினையில் அரசை மட்டும் குற்றம் சொல்வது சரியாகப்படவில்லை. எவரும் அங்கே செல்லத் தயாரில்லை என்றால் யாரால் என்ன செய்ய முடியும். இன்றைய நிலையில், எந்த டாக்டரும் தனது தொழிலை சேவையாகப் பார்ப்பதில்லை. இந்த பிரச்சினையில் மருத்துவர்களின் மேல்தான் பெரும் தவறு இருக்கிறது.

    மேலும், கிராமங்களுக்கு போக தயாராக இருக்கும் சிலர் மாவோயிஸ்டுகள் பயத்தால் செல்லாமல் இருக்கும் நிலைக்கு, அரசும் மாவோயிஸ்ட்களும் சமமான பொறுப்பாளிகள். அரசு மாவோயிஸ்ட்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது இதற்கு மூலகாரணமாக இருந்தாலும், அதை உறுதிப்படுத்தும் விதமாக சில சமயங்களில் மாவோயிஸ்ட்கள் நடந்துகொள்வதும் காரணமாகவேப் படுகிறது.

    • அன்பு இப்படி சொல்றாரு, ஆனா அங்க போயிட்டு வந்தவங்க வேற மாதிரி சொல்றாங்க.

      இதோ காட்சிரிகோலி என்ற அரசு பீதி கிளப்பும் பகுதிக்கு அந்தப் பகுதியின் உதவி கலெக்டர் சென்று வந்துள்ளார். அவரது அனுபவத்தைப் படியுங்கள்.

      http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne301010The_Man_Who.asp

      மேலும், 3 லட்சம் மக்களை விரட்டியடித்து அகதியாக்கியுள்ளது அரசுதானேயொழிய மக்கள் அல்ல. இதனை சட்ட ரீதியாக அஹிம்சை வழியில் தட்டிக் கேட்டதற்காக ஹிமான்சு குமார் என்ற காந்தியவாதியும், பினாயக் சென் போன்றோரும் அரசால் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

      இன்னும் பலர் கேட்க்காத கதைகள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்ள மனதை கொஞ்சம் விசாலமாக திறந்து வைக்க வேண்டும்.

    • ///இப்பகுதிகளில் பணி செய்து கொண்டு வரும் மருத்துவரில் ஒருவர் கூட மாவோயிஸ்டுகளால் குறைந்தபட்சம் தாக்கப்பட்டது கூட இல்லை என்பதே நிதர்சனம்/// மாவோயிஸ்டுகள் அங்கு மருத்துவர்களை அவர்கள் அழைத்து வந்து வைத்தியம் பார்க்க சொல்கின்றனர் என்று அருந்ததி ராய் waliking with comrades என்ற கட்டுரை குறிபிட்டு உள்ளார் பார்க்க http://senkodi.wordpress.com/library/ ///தோழர்களின் போரட்ட களத்தில் நான் /// எனவே அவர்களை கண்டு பயப்பட தேவை இல்லை அவர்கள் பயப்பட காரணம் ஊடகங்களின் மற்றும் அரசாங்கத்தின் பொய் பிரச்சாரமேகாரணம்

    • நன்றி அசுரன் மற்றும் தேவன்.

      ஆனால் இந்த தகவல்கள் மிகக் குறைவானவர்களுக்கே சென்று சேர்ந்துள்ளதுதான் பிரச்சினையே. வெகுஜனங்களுக்கு சொல்லப்படும் விஷயங்கள்தான் நான் குறிப்பிட்டவை. ஊடகங்களின் த‌வறான பிரச்சாரம்தான் காரணம் என‌ தேவன் சொல்லியிருப்பதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். அந்த தவறான தகவல்களை மேலும் உறுதியாக சொல்ல சில சமயங்களில் இவர்கள் செய்யும் காரியங்களும் காரணமாக அமைகின்றன என்பதே என் வாதம்.

  6. ஏழைகள் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் என ராகுல் எனும் அயோக்கியன் சொன்னானே… அதற்கு அர்த்தம் ஏழைகளை கொன்ற பின் செத்த பின் நாட்டை பணகாரர்களை மட்டுமே கொண்டு முன்னேற்ற போகிறான அந்த பொறுக்கி ராகுல்.

    ராகுல் சொன்னதன் அர்த்தம் ஏழைகள் எல்லாம் செத்து நாட்டை முன்னேற்ற வேண்டுமா?

    • கண்டிப்பாக அதிலென்ன சந்தேகம் தமிழ்க்குரல்!!!!!

      இந்தப் ஏழைப் பாழைகளா நாட்டை முன்னேற்றுகிறார்கள்
      இவர்களா GDP ஐ உயர்த்துகிறார்கள்……
      இவர்களை அழித்துவிட்டால் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை தான் குறைந்துவிடுமே…….

      அருந்ததி ராய் சொல்வது போல

      அவர்கள் ஒன்றும் தீவிரமாக நுகர்பவர்கள் இல்லை,
      வாங்கவே வக்கத்துப் போய் இருக்கும் அவர்கள் எப்படி நுகர்வார்கள்,அவர்களை முகம் தெரியாமல் அழித்துவிட்டால் (dehumanising them) யாருக்குத் தெரியப் போகிறது.அதையே நமது அரசும் செய்கிறது.

  7. தொற்றுநோய்கள் கண்டிப்பாக களையப்பட வேண்டும்!தண்ட காருண்யத்தில் தற்போது, துப்பாக்கிக்கு தப்பிய தொற்றுநோய்கள், கிருமி தொற்றுக்கு பலியாவதை, பொறுக்காமல் வந்ததே, இந்த பழங்குடி பரிதாபக் கட்டுரை!

  8. துப்பாக்கியை விட பெரிய சக்தி இல்லை என்று, இறுமாப்புடன் திரிபவருக்கு, இயற்கை (இறைவன்?)தரும் பரிசு, தொற்றுநோய்? ஆனால், இதற்கு பழங்குடியினரை பலியாக்கும் பழி, துப்பாக்கிக்கே!

    • //துப்பாக்கிக்கு தப்பிய தொற்றுநோய்கள், கிருமி தொற்றுக்கு பலியாவதை, பொறுக்காமல் வந்ததே, இந்த பழங்குடி பரிதாபக் கட்டுரை! //

      அரசு எப்படி பேசுமோ அதே மாதிரி பேசுறாருய்யா ரம்மி… மாவோயிஸ்டுன்னு முத்திரை எதுவும் குத்திருக்குமா ரம்மி? இல்ல, செத்துப் போனா பை டிபால்டு மாவோயிஸ்டுன்னு முத்திரை குத்திட்டா நாடும், நம்ம ரம்மியும் நல்லவானயிருவாங்க இல்லையா அது மாதிரியா?

      இதெல்லாம் பரம்பரியமா வருது. இந்த நாட்டுல பொறந்து இழவள்ளிக் கொட்டிய ஆனானப்பட்ட அவதாரங்கள் எல்லாம் அசுரர்களைக் கொல்லறதுக்கு முன்னாடி ஒரு கிரைம் ஸ்டோரி சொல்லிட்டுத்தான செஞ்சாங்க(அவதாரங்கள் கிரைமே உருவாக இருக்கிறதை யாரும் கேள்வி கேட்டுறாதீங்க சாமி குத்தமாயிரும்). அது மாதிரிதான் நாடும், நம்ம ரம்மியும் தண்டகாரண்யாவில சீக்கு வந்து செத்துப் போனவன் எல்லாத்துக்கு மாவோயிஸ்டுன்னு கதை பின்னி விடுவாங்க. நாமளும் நல்ல பிள்ளையாட்டம் கேட்டுட்டு போகனும் இல்லனா அவதாரம் உபாவா பாயும்.

      • துப்பாக்கிக்கு மடங்காதது, தொற்றுநோய்க்கு மடங்கியது!

        இது காலத்தின் சமன்பாடு!

        • //துப்பாக்கிக்கு தப்பிய தொற்றுநோய்கள், கிருமி தொற்றுக்கு பலியாவதை//

          பழங்குடி மக்களை ‘தொற்று நோய்களாக’ நினைக்கிற கோயம்புத்தூர் மனிதாபிமானம்… சகிக்கல…

        • பழங்குடிகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லி, வன்முறை அரசியல் செய்யும் துப்பாக்கிகளையே, தொற்றுநோய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

  9. ஒரு ரிட்டயர்டு கிழ பிராமணர் ஒரு ஓட்டை லாப்டாப்பை வச்சிக்கிட்டு எங்க வீட்டிற்கு பக்கத்தில் ரொம்ப பிஸியாய் யோசித்துக்கொண்டே போறதை வர்றதை பார்த்திருக்கிறேன் முந்தாநாள் ஈவினிங் மொட்டை மாடியில் வைத்து மாமியிடம் வாயிலேயே அடி வாங்கினார் அப்போ நானே அவங்களுக்கு போன் பண்ணிருவேன் அவாள்லாம் மோசமானவா என்றும் வினவு என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தது எதுக்கும் அவர் பெண்ணிடம் கன்போர்ம் பண்ணிவிட்டு கொஞ்சம் பேசினால் இங்கே ஒரு பெரிய டார்ச்சர் குறையும் என்று நினைக்கிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க