Thursday, October 10, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

-

மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை!
விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
90 பேர் கைது

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலருமாகிய மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

06.01.2011 வியாழனன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய தினம் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டிருந்த மறியல் போராட்டச் சுவரொட்டிகளை  தேடித்தேடி காவல்துறை கிழித்து கிழிப்பு போராட்டம் நடத்தியது. ம.உ.பா. மைய சென்னை வழக்கறிஞர்கள் கிழிப்பு வீரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக எச்சரித்த பின்னரே அப்பணியைக் கைவிட்டனர். மறியல் அன்று காலை முதலே சென்னை உயர்நீதி மன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. பிப்ரவரி 19 உயர்நீதி மன்ற வழக்கறிஞர் போராட்டம், கருணாநிதிக்கு ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டியது போன்ற கடந்த கால அனுபவங்கள் காவல் துறையினரை அங்கே குவித்து விட்டது போலும்.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது
மரு. பினாயக் சென்னை நிபந்தனையின்றி விடுதலை செய்! ஆயுள் தண்டனையை ரத்து செய்! என்ற மைய முழக்கத்துடன் மறியல் போராட்டம் தொடங்கியது.

பழங்குடி மக்களுக்கு மருத்துவம் செய்த
பினாயக் சென் தேசத் துரோகியாம்,
அவருக்கு ஆயுள் தண்டனையாம்,
போபாலில் 25000 பேரைக் கொன்ற
கார்பைடு முதலாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,
உடனே ஜாமீனாம்.
என்னடா ஜனநாயகம், வெங்காய ஜனநாயகம்,
அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி, சட்ட விரோத சல்வாஜுடும், போலி என்கவுண்டர் சாம்ராஜ்யம்

என்று பாசிஸப் பேயாட்டமாடும் மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்திய முழக்கங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

ம.உ.பா மையத்தைச் சேர்ந்தவர்களோடு மேலும் சுமார் 50 பேர் இணையவே மறியல் போர் வலுத்தது. போலீசுக்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்துக் கொள்ளுங்கள், கைது செய்யவில்லை என்று போலீசு பவ்யமாகக் கேட்டுக்கொண்டது. மறியல் தொடரும், கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து பிராட்வே நாற்சந்தியை நோக்கி ஊர்வலம் சென்றது.

‘மருத்துவர் பினாயக்சென் ஒரு ஜனநாயகவாதி. அவர் அரசு பயங்கரவாதத்தைப் போலவே மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தையும் கண்டித்தார். எனினும், அரசு பயங்கரவாதத்தின் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தார். சிறைக் கைதிகளுக்கு அரசின் அனுமதியோடு தொடர்ந்த சிகிச்சை அளித்து வந்தார். நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவர் சர்க்கரை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கைதியாக சிறையிலிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்ததைப் பொறுக்காத சத்தீஸ்கர் அரசு, மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார் என்ற பொய்யான குற்றச் சாட்டின் கீழ் சத்தீஸ்கர் மக்கள் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக (124A) வழக்குப் போட்டு பினாயக் சென்ஐ கைது செய்தது. இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு பிணை வழங்கியது. பிணையில் வெளியே வந்த அவருக்கு உடனடியாக ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

இந்த பாராளுமன்றம், அரசியல் சட்டம் மற்றும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்ற ஒரு நல்லவருக்கே இந்தக் கதியென்றால் இது மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுகின்றவர்களுக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையே‘ என்று ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜு உரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுரேசு, மதுரை மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணி ராஜ், துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் ஆகியோர் உரையாற்றினர். ஒரு மணிநேர மறியல் போராட்டத்திற்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 29 வழக்கறிஞர்கள் (3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட) 90 பேர் கைது செய்யப்பட்டனர். பினாயக் சென் மீதான அநீதியான தண்டனையை எதிர்த்து, அவரது விடுதலையைக் கோரி மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை ம.உ.பா மையம் நடத்தி வருகிறது.

____________________________________________________________

– தகவல், புகைப்படங்கள்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பினாயக்சென்னை விடுதலை செய் ! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது !!…

    மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை! விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் (HRPC) 90 பேர் கைது…

  2. ஆமாம் ஆமாம் இவரை உடனே விடுதலை செய்யுங்கள் இவர் பூமியின் பாரம் இறங்க பகவானால் அனுப்பபட்டவர் அதனால் இவர் குண்டு வைக்க சொல்வாராம் மக்கள் இறக்கவேண்டுமாம் ஆனால் இவரை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமாம். இவர்களின் குண்டு வெடிப்பில் இறந்த ஒரு குடும்பத்தையாவது அதன் துயரத்தையாவது இது வரை வினவு பதித்ததா.

    உங்கள் நினைப்பு எல்லாம் நான் பிடித்த முயலுக்கு மூணே கால்

    உலகில் தான் மட்டுமே மனித உரிமை போராளி

    மற்றவர்கள் தண்டம் என நினைப்பு

    நினைப்பு தான் பிழைப்பை கெடுத்ததாம்

    அடுத்து எல்லா தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய சொல்லுங்கள் அவர்கள் வந்து குண்டு வைப்பார்கள் மக்கள் எல்லாம் சாகட்டும்

    கமல் படம் சொன்ன கருத்துதான் தீர்வு

    • மஞ்ச மாக்காண்ணே… மஞ்ச மாக்காண்ணே …

      நீங்க சொல்லுறது சரி தாண்ணே … உன்னைப் போல் ஒருவன் பாணி தான்ணே சரி ..

      சரிண்ணே .. அப்படின்னா நீங்க, கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்துலயும் பட்டினியிலயும் செத்துக்கிட்டு இருக்குற ஒரு நாட்டுல “வெயில்லயும் மழையுலயும் ஊறிப் போய் புழுத்து நாசமா போகுற தானியத்தைக் கூட மக்களுக்கு கொடுக்க முடியாது. அது என்னொட பொருளாதார கொள்கை”னும் “ஆயிரம் போபால்கள் நடக்கலாம் ஆனால் நாடு முன்னேறுவதைத் தடுக்க முடியாதுன்”னும் சொன்ன நம்ம மன்மோகன்சிங், ”ஏற்கனவே 200 வருடங்கள் ஆண்டீர்கள் இன்னும் 200 வருடங்கள் வந்து எங்களை ஆட்சி செய்யுங்கள்”ன்னு பிரிட்டிஷ் காரன்கிட்ட பேசிக்கிட்டு 200லட்சம் கோடி மதிப்புள்ள கனிமவளத்தை வெறும் 14 லட்சம் கோடிக்கு வெளிநாட்டு புருசனுக்கு வித்துக் கொடுக்குறதுக்காக பழங்குடி மக்களை சல்வாஜூடும் வச்சி கொலை செய்ய விட்ட ப.சிதம்பரம் மாதிரி அயோக்கியங்களை எல்லாம் உன்னைப் போல் ஒருவன் கமலஹாசன் பாணியில கூப்பிட்டு வரச் சொல்லி கொல்லப் போறீங்களா ?..

      ரெண்டு பேரும் கொஞ்சம் சைலண்டான வில்லனுங்க தான்னே ..
      பாத்து பக்குவமா பண்ணுங்க …

      அண்ணே .. உங்கள பாத்தாலே எனக்கு ரொம்ப பெருமையா இருக்குண்ணே …

      அப்புறண்ணே … உங்க பேர .. காவி மாக்கான்னு கொஞ்சம் மாத்தி வச்சிக்குங்க ..இன்னும் பொருத்தமா இருக்கும் ..

      வந்தே மாதரம் … ஜெய் ஹிந்து … பாரத ஆத்தாக்கீ … சே….

  3. மஞ்ச மாக்கான் தன்னுடைய மாற்றிக் கொள்ளட்டும்.இந்தக் கருத்தை உங்கள் குழந்தைகளிடம் சொல்லிப்பாருங்களேன்!
    ம.உ.பா.மையத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  4. போராட்டங்களே போலி ஜனநாயகத்தின் முகத்திரையை கிழிக்கும். போராடிய வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்ச பிறவு கடைசியில மஞ்ச மாக்கான்கள மட்டும் விடவா போவுது. வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் மஞ்ச மாக்கான்கள் வெளியே வந்தால்தான் தெரியும் பினாயக் சென்கள் தேவையா இல்லையா என்பது.

  5. அடஃமஞ்ச மக்கா, உன் கருத்துபடி தீ வீர வாதிகளை விடுதலை செய்யவேண்டாம். போபால்ல 25ஆயிரம்பேரை கொண்ற பயங்கரவாதியை ஏன்? விடுதலை செஞ்சாங்கன்னு உன் மாங்கா மண்டைக்கு புரியலையா?நீ மஞ்சமாக்கா இல்லப்பா!கல்லுளிமங்கன்

  6. இந்த போராட்டம் utter waste. இதை தவிர வேற என்ன சொல்ல?
    அதுவும் ஒரு வழக்கறிஞர் கூட்டம். தலையில் அடித்து கொள்ளலாம் போல உள்ளது.
    இதை ஒரு cheap publicity என்று சொல்லலாமா? அதை விட கீழ் தான்.
    ஒரு குற்றவாளிக்கு court தண்டனை அளித்த பிறகு மேல் court சென்று appeal செய்து குற்றவாளி அல்ல என்று நிருபித்த பிறகே அவர் வெளியே வர முடியும்.
    ஒரு தண்டனை குற்றவாளியை எப்படிப்பா just like that வெளியே விடுவார்கள்? பிறகு சட்டம் என்று எதற்கு?
    நடவியலில் முடியாது என்று தெரிந்தும் ஒரு மொக்கை போராட்டம்.
    சாலை மறியலால் எத்தனை மக்களுக்கு இடையூறு.
    இந்த வழக்கறிஞர் கூட்டத்தினால் மக்களுக்கு மிகுந்த துன்பம் மட்டுமே. முணுக் என்றால் ஒரு போராட்டம் / court boycott. தெரியாமல் கேட்கிறேன் – நீங்கள் boycott செய்யும் ஒவ்வொரு மணியும் உங்கள் clientக்கு சொந்தமானது. அவர்களிடம் சொத்தையே fees என்ற பெயரில் கறக்கும் உங்களுக்கு bore அடித்தால் போராட்டம் – அதுவும் மற்றவன் காசில். தூ.
    இதில் மாணவ வக்கீல்களை rowdy ஆக அவர்கள் படிக்கும் போதே training வேறு.
    தமிழகத்தை தவிர வேறெங்கும் நடப்பது இல்லை.

    • அய்யா இந்தியா….

      போராட்டத்தைக் கண்டாலே ஏன் உமக்கு உடம்பெல்லாம் எரியுது?…

      போராட்டம் எல்லாம் கொஞ்சம் மானம், ரோசம் உள்ளவர்களுடைய ரத்தத்தில் ஊறினது.உன்னை மாதிரி கார்பரேட் நிறுவனங்களின் செப்டிக் டாங்க்கின் உள்ளடக்கம் உடம்பில் ஓடும் ஆட்களுக்கு கசக்கத்தான் செய்யும். பெரியாரின் போராட்டங்கள் , அம்பேத்கரின் போராட்டங்கள் இல்லாமல் இன்று நீயெல்லாம் படிப்பது என்பதே கேள்விக்குறி ஆகியிருந்திருக்கும்(நீ பார்ப்பானாக இல்லாத பட்சத்தில்) என்பதை நினைவில் கொள் .

      போராட்டம் என்பது உயிருள்ள உண்மையில், உயிர்புள்ள ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படைப் பண்பு. உன்னைப் போன்று கூனிக்குறுகி, மேலதிகாரியிடம் நக்கிப் பிழைக்கத் தெரிந்தவ்னுக்கு அது தூ என்று சொல்லும் விசயமாகத்தான் படும்.

      சட்டத்தின் படி தான் ”பினாயக் சென்”னை விடுதலை செய்ய முடியுமாம். இதை இவர் கண்டு பிடித்து சொல்லுகிறாராம். ஆண்டர்சனை எந்த சட்டப்படி விடுவித்தார்கள் என்று சொல்ல முடியுமா ?..

      என்ன செய்ய ?.. சொரணை கெட்ட தனமும், நக்கிப்பிழைக்கும் இழிதொழிலும் நாகரீகமாகி விட்ட பின்னர், போராட்டங்கள் சீ.. தூ .. போன்று தான் தோனும்..

  7. பினாயக் சென் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிக அநியாயமானது தான். he is being framed and will certainly be released by High Court or Supreme Court soon.

    ஆனால் இதெற்கெல்லாம் தீர்வாக நீங்கள் வைக்கும் மாற்றும் அமைப்பான கம்யுனிச அமைப்பில், பல லச்சம் பினாயக் சென்களை சிறையில் அடைக்க வேண்டியிருக்குமே. அதுதானே வரலாற்று பாடம். மேலும் அக்கொடுமைகளை நியாயப்படுத்துவீர்களே.

    கசாப்பு கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவது போல் உள்ளது. பினாயக் சென் பற்றி பேச கம்யூனிஸ்டுகளுக்கு தார்மீக உரிமை இல்லை. மனித உரிமையாளர்கள் மற்றும் லிபர்டேரியன்கள் பேச வேண்டிய விசியம் இது.

    • லிபரட்டேரிட்யன் அண்ணாச்சி …

      அடடா .. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொன்னீங்க அண்ணாச்சி ..

      ஆனா நிறைய பினாயக் சென்கள் கைது செய்யப் படுவார்கள்னு என்னத்த வச்சி சொல்லிறீகன்னு தெரியல ..

      இப்பொ இன்னைக்கு உங்களோட சொந்த நிறுவனத்துல ஒருத்தன் ஒரு 10 இலட்ச ரூபாய் ஆட்டையப் போட்டான்னு வச்சிக்குங்க, என்ன ப்ண்ணுவீங்க ?.. போலீசுல கம்ப்ளைண்ட் கொடுப்பீங்க .. அவங்க அவன பிடிச்சி ஜெயில்ல அடைப்பாங்க … இது நியாயம் தான .. இப்போ அப்படியே கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு போகலாம்.
      அங்க பொதுச் சொத்தை அளவு கடந்த இலாபம்ங்க்ற பேருல ஒரு முதலாளிங்க்ற சொறிநாய் புடுங்கித் திண்ணுச்சின்னா அது குத்தந்தேன்… புடிச்சு உள்ளேவச்சி லாடம் கட்டத் தான் செய்வாங்க .. நீங்க உங்க இஸ்ட்டத்துக்கு பொது மக்கள் சொத்தை கொள்ளையடிச்சு திண்ண முடியாது அண்ணாச்சி.

      சுருக்கமா சொல்லனும்னா அளவுக்கதிகமா மக்களை ஏமாத்தி சொத்து சேர்க்க நினைக்கும் எவனாயிருந்தாலும் காயடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவர். அதை தெளிவாக சொல்லித் தான் கம்யூனிசம் ஆட்சி அமைக்கும். ஆகையால் நீங்க பாத்து சூதானமா இருந்துக்கோங்க . முடிஞ்சா அமெரிக்காவுக்கு விசா எடுத்து வச்சிக்கோங்க ..

  8. மஞ்சமாக்கான் அறியவேண்டியது,மரு.பினாயக் சென் சாட்சாத் பகவானால் அனுப்பபட்டவர் தான்.அப்படிதான் ஆதிவாசி மக்கள் கருதுகிரார்கள்.அவர் குண்டு வைபதையும் நம்பவில்லை, அரசாஙம் எதிர் குண்டு வைப்பதையு ஏற்கவில்லை.இந்த ஜனனாயகத்தை,இந்த பாராளுமன்ற்த்தை ,இந்த சட்டத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டவர்.அவரே ராஜ துரோகியாம்.போபாலில் 25ஆயிரம் பேரை கொன்ற ஆண்டர்சன்,மஹேண்ட்ரா முதலாளிகள் நல்லவர்களாம்.னீதி மன்ற்ஙகள் சொல்கின்றன.இது தான் நீஙகள் கொண்டாடுகிற ஜனனாயகமா? சற்று சிந்தியுஙகள்.

  9. மனித உரிமை போராளி பினாயக் சென்னை ஆயுள் தண்டனை கொடுப்பதின் மூலம், பலரையும் அரசு அச்சுறுத்தி பார்க்கிறது. மருதையன் தோழர் கட்டுரையில் குறிப்பிட்டது போல… நீரா ராடியா போன்ற தரகர்களிடம் பேச விரும்பாதவ‌ர்களை சல்வா ஜூடும், அரசு பயங்கரவாதமும் எதிர்கொள்கிறது.

    லிபர்டேரியன்கள் பேச வேண்டிய விசயம் இது என்கிறார். பேசுங்கள். எழுதுங்கள். தெருவில் இறங்கி போராடுங்கள். உங்களை கையை பிடித்து கொண்டு யார் இருப்பது?

  10. போராடிய தோழர் வக்கீல்களுக்கு வாழ்த்துக்கள்
    பினாய்சென் ஒரு ஐ.எஸ்.ஐ என்று பொருள்படும் ஒரு தொண்டு அமைப்பிற்கு உதவி செய்தார் என்பதனை அவருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக வைத்து, அதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை அது !

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, அரச முதலாளித்தவ பாசிசத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை கண்டு அதிகாரவர்க்கம் மிரள்கிறது என்பதையே இது காட்டுகின்றது.

  11. //இந்த போராட்டம் utter waste. இதை தவிர வேற என்ன சொல்ல?//ஒரு குற்றவாளிக்கு court தண்டனை அளித்த பிறகு மேல் court சென்று appeal செய்து குற்றவாளி அல்ல என்று நிருபித்த பிறகே அவர் வெளியே வர முடியும்.//தண்டனை குற்றவாளியை எப்படிப்பா just like that வெளியே விடுவார்கள்? பிறகு சட்டம் என்று எதற்கு?
    நடவியலில் முடியாது என்று தெரிந்தும் ஒரு மொக்கை போராட்டம்.//அம்மாடி என்ன ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு. இந்திய நீதித்துறையைப் பற்றித் தெரியாத மரமண்டைகளால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.அப்சல் குரு வழக்கு,அயோத்தி வழக்கு,ராமர் பால வழக்கு,தாராளமயத்தை ஆதரிப்பவை…………….உள்ளிட்ட வழக்குகள் இந்திய நீதித்துறையின் முகத்தை அம்பலப்படுத்துவதற்கான சில சான்றுகள்.பொதுக் கருத்து அல்லது பார்ப்பனீய சார்பு அல்லது ஆளும் அதிகார தரப்பு ஆதரவு……என்றே இன்று இந்திய நீதித்துறை செயல்படுவதை மூளை என்ற ஒன்று உள்ளவர்கள் அறிய முடியும்.பினாயக் சென் தீர்ப்பும் இந்த வகைப்பட்டதுதான்.இது ஒரு அரசியல் தீர்ப்பு.மக்கள் போராட்டம்தான் இதற்குத் தீர்வு.அப்பீல் விடுதலையைக் கூட போராட்டம்தான் தீர்மானிக்கும்.

  12. //இந்த வழக்கறிஞர் கூட்டத்தினால் மக்களுக்கு மிகுந்த துன்பம் மட்டுமே. முணுக் என்றால் ஒரு போராட்டம் / court boycott. தெரியாமல் கேட்கிறேன் – நீங்கள் boycott செய்யும் ஒவ்வொரு மணியும் உங்கள் clientக்கு சொந்தமானது. அவர்களிடம் சொத்தையே fees என்ற பெயரில் கறக்கும் உங்களுக்கு bore அடித்தால் போராட்டம் – அதுவும் மற்றவன் காசில். தூ.
    இதில் மாணவ வக்கீல்களை rowdy ஆக அவர்கள் படிக்கும் போதே training வேறு.
    \\தமிழகத்தை தவிர வேறெங்கும் நடப்பது இல்லை//.உண்மைதான் காரணம் இது பெரியார் மண்.இந்தியன் வகையறாவுக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியுமா?வெயிலில் 200 போலீசு சுற்றி நிற்க கோசம் எழுப்பி,அடித்தால் வாங்கத் தயாராய் ,கைது செய்தால் சிறை செல்லத் தயாராய் …….உள்ளவனே போராட முடியும்.இந்தியன் வகையறா வந்து நின்றால் நடுங்கி ஒன்னுக்குப் போய் விடும்.court boycott என்றால் எளீதா?அதற்கும் வழக்கறிஞர் மத்தியில் போராடி ,இந்தியன் வகையறா மாதிரி சுயநல கும்பலை முறியடித்தே உருவாக்க முடியும்.தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமே அதிகமாகப் போராடுகிறார்கள்.இது பெருமையான விசயமே.//போராட்டம் என்பது உயிருள்ள உண்மையில், உயிர்புள்ள ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படைப் பண்பு//போராட்டம் கூடாதென்றால் ஈழப் பிரச்சனையை இந்தியன் மாதிரி சுயநல கும்பல் எப்படித் தீர்க்குமாம்?வழக்கறிஞர்கள்தான் தமிழகத்தில் கடுமையாகப் போராடினோம்.வருமானம் இழந்தோம்;மண்டை உடைந்தோம்;கைதானோம்;சிறை சென்றோம்;போராட்டம் எளீதென்று எவன் சொன்னது?போராடாத ஈனப் பிறவிகளுக்கு போராட்டம் பற்றீ என்ன தெரியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க