Friday, February 3, 2023
முகப்புஉலகம்அமெரிக்காசெல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !

-

புதிய மாடல் செல்போன்களின் விலை நாளுக்கு நாள் மலிவாகிக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலையோ தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்து வருகிறது. சென்ற ஆண்டின் இறுதி மாதத்தில் குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை அதன் முந்தைய மாதத்தை விட 82% அதிகரித்துள்ளது. சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் தம் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.

இதில் குறிப்பாக வெங்காயத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்கள் வரை விற்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் மட்டும் விலை சற்று குறைந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை வெங்காயத்தால் பதம் பார்க்கப்பட்டிருக்கும் ஆளும் வர்க்கம் உடனடியாக வெங்காய ஏற்றுமதியின் மேல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினாலும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளாலும் கூட பெரிதாகப் பயன் ஏதும் இல்லாத நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வெங்காய விலையேற்றம் என்பதை மற்ற பொருட்களின் விலையேற்றங்களில் இருந்து தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், சமையல் எண்ணை விலைகளும் தொடர்ச்சியாக உயர்ந்தே வந்துள்ளது. 2008இல் 5.62 சதவீதமாக இருந்த சர்க்கரையின் விலை உயர்வு, 2010இல் 58.94 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008இல் 5.94 சதவீதமாக இருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு, 2010இல் 8.33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2008ல் 1.3 சதவீதமாக இருந்த பருப்பு வகைகளின் விலை உயர்வு, 2010இல் 45.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. (இணைப்பு / சுட்டி – 1).

இதற்கிடையே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தால் தொழிலாளிகள் அதிகக் கூலி கேட்டுப் போராடும் நிலை வரலாம் என்று கவலை தெரிவித்திருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சக்ரவர்த்தி ரங்கராஜன். இதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று களத்தில் இறங்கியுள்ள அரசு, வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் பெருமளவு காரணம் என்று அறிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள விவசாயச் சந்தைகளில் இருக்கும் வெங்காய மண்டிகளில் சோதனைகள் நடத்தியுள்ளது. பதுக்கல்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.

வெங்காயத்தின் உண்மைக் கதை!

னால், இந்தப் பருவத்தில் (kharif season ) விளையும் வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதாவது விளைந்த வெங்காயத்தை காயவைக்க முடியாது. மழையும், பனியும் இக்காலத்தில் அதிகம் என்பதால் விளைந்த வெங்காயத்தை எவ்வளவு சீக்கிரம் நுகர்வோரை அடைகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நாட்கள் நீடித்தால் காலநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வெங்காயம் அழுகிவிடும். எனவே அறுவடை முடிந்த நாளில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியாது.

இதில் விவசாயி சந்தைக்குக் கொண்டு வருவதில் ஒரு நாளும், உள்ளூர் சந்தையில் இருந்து வெளி மாநில சந்தைகளுக்கு மூன்று நாட்கள் வரையும் ஆகிவிடுகிறது. வெங்காயம் ஈரப்பதத்துடனேயே பயணிப்பதால் அது அழுகல் நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே  நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். எனவே இந்த பருவத்தில் வரும் வெங்காயத்தை ஒரு வியாபாரி எத்தனை நாட்கள் ‘பதுக்கி’ வைக்கிறாரோ அந்தளவுக்கு இழப்பு அவருக்குத் தான் ஏற்படும் (இணைப்பு 2ஐ பார்க்க). எனவே பிரணாபின் உண்மையான அக்கறை பதுக்கலின் மேல் இல்லை – எனில், இந்த பதுக்கல்காரர் பூதத்தை அவர் கிளப்பி விடுவதன் காரணத்தை பின்னர் பார்க்கலாம்.

இதற்கிடையே வெங்காய விலை உயர்வு பற்றி தேசிய அளவிலான பத்திரிகைகள் தொடர்ந்து எழுதத் துவங்கின. பொதுமக்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கிய நிலையில், இதற்கான ஆறுதலையும் விலை உயர்வு பற்றிய தத்துவ விளக்கத்தையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்தியில் ஆளும் கும்பல் தள்ளப்பட்டது.

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதென்றும், கூடிய விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய விவசாய மந்திரி சரத் பவார். ஒரு படி மேலே போன பிரதமர், ஜனவரி 13ஆம் தேதி “உணவுப் பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரே வழி உற்பத்தியைப் பெருக்குவது தான்” என்கிற மாபெரும் பொருளாதார உண்மையைத் தெரிவித்துள்ளார். மான்டேக் சிங் அலுவாலியாவோ இந்திய கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகத் தான் தற்போது அதிகளவு உணவுப் பொருட்கள் நுகரப்படுகிறது என்றும், அதனாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்.

வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற மோசடிப் பிரச்சாரம்!

மேலும், ஆளும் வர்க்க ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிகைகள் சில, மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிப்பதுதான் விலையேற்றங்களுக்கு ஒரு காரணம் என்று எழுதுகின்றன. அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் கிராமத்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், இதனால் நுகர்வு அதிகரித்து விலைவாசி உயருகிறது என்றிகிறார்கள் இந்த ‘ஆய்வாளர்கள்’. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்பது பல ஆண்டுகளாக மாறவே இல்லை. இது உண்மையாகும் பட்சத்தில் கிராம மக்களுக்கு வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? விவசாயம்தான் கிராமங்களின் முதன்மையான தொழில் என்பதிலும் மாற்றமேதுமில்லை.

மேலும் இணைப்பு – 1இல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் கூர்ந்து கவனித்தால், இந்த விலையேற்றங்கள் குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து துவங்கிய உலகப் பொருளாதார பெரு மந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. அந்தச் சமயத்தில் தான் ஆட்குறைப்பு, வேலை பறிப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை பொரும்பாலான தனியார்  நிறுவனங்கள் அமல்படுத்தின. நியாயமாகப் பார்த்தால், வாங்கும் சக்தி குறைந்து போன இந்தக் காலகட்டத்தில் நுகர்வும் குறைந்திருக்க வேண்டும் – விலைகளும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக விலைகளோ தொடர்ந்து நிலையாக உயர்ந்தே வந்துள்ளது.

கிராமப்புறங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவற்றால் கொழிப்பதாகவும், அதனால் நுகர்வு அதிகமாகியிருப்பதாகவும், சந்தையில் பொருட்களுக்கான போட்டி அதிகரித்திருப்பதால், விலைகளும் அதிகமாகிறது என்று சொல்கிறார் அலுவாலியா. இந்தப் புளுகை ஐ.நா சபையின் குழுவொன்று இந்தியாவில் நிலவும் வறுமை பற்றி நடத்திய ஆய்வொன்றே தகர்த்தெரிகிறது. உலகிலேயே வறுமையான நாடுகளாகக் குறிப்பிடப்படும் 26 ஆப்ரிக நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை விட இந்தியாவின் 8 மாநிலங்களில் மிக அதிகளவில் ஏழைகள் இருப்பதாக அந்த ஆய்வு சொன்னது. மேலும், சப் சகாரா பாலைவன நாடுகளைக் காட்டிலும், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் பிற ஆய்வுகளில் வெளியானது. (இணைப்பு 3- வினவு கட்டுரை / ஐ.நா குழுவின் ஆய்வு பற்றி)

அடுத்து உற்பத்தி குறைந்து போனதே விலையேற்றத்திற்கான முக்கிய காரணம்  என்று முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதுகின்றன. உற்பத்திக் குறைவு என்பது விலையேற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்றாலும் இப்படிச் சுணங்கிப் போவதற்கு என்ன காரணம்? முதலாளித்துவப் பத்திரிகைகளில் குறித்த காலத்திற்கு மேல் நீண்ட பருவ மழையைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். அது உண்மை தான் என்றாலும் உண்மையின் ஒரு சிறிய அங்கம் மட்டும் தான்.

வெங்காயத்தின் உற்பத்தி நிலவரமும், உலகமயமாக்கத்தின் பாதிப்பும்!

லகளவில் இந்தியாவில் தான் அதிகமான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சீனத்திற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகில் அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்கிறது.  மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தான் இதில் அதிகளவு பங்களிப்பைச் செய்கின்றன. 2008-09 நிதியாண்டில் 8,34,000 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடந்து 1,35,65,000 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதுவே 2010-11 நிதியாண்டில் 1.17 லட்சம் டன்களாக  உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு இருந்ததை விட 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் சாகுபடிப் பரப்பு 20% அளவுக்குக் குறைந்துள்ளது.

அரசாலேயே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், பருவமழைக் கோளாறு காரணமாகவும், சாகுபடிப் பரப்புக் குறைந்ததன் காரணமாகவும், சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது; இதன் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேலும், இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரையில் 11,58,000 மெட்ரிக் டன் வெங்காயம்  ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் சென்ற நிதியாண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 18,73,002 மெட்ரிக் டன்கள். (EPW Jan 08, 2010 மற்றும் தி இகனாமிக்ஸ் டைம்ஸ்)

இது இரண்டு முக்கியமான விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று – ஏற்றுமதி வெங்காயத்தை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விட்டாலும் அது சந்தையின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. இரண்டு – சென்ற நிதியாண்டின் உற்பத்தியில் ஏற்றுமதி அளவைக் கழித்து விட்டால் ஏறக்குறைய இந்த ஆண்டின் உற்பத்தி அளவை எட்டுகிறது. இந்த நிதியாண்டின் மொத்த உற்பத்தியில் செய்யப்பட்டிருக்கும் 11லட்சம் டன்கள் ஏற்றுமதி சந்தைத் தேவையில் உண்டாக்கியிருக்கும் இடை வெளியை விட தற்போது ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் கற்பனைக்கெட்டாத வகையில் அதிகமானதாகும்.

மேலும், ஏற்றுமதி ரகங்கள் உள்நாட்டு ரகங்களை விட தரத்தில் மேம்பட்டதாகும். ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ இருக்க வேண்டும். மேலும் எல்லா வெங்காயங்களும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும் கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ 70 ரூபாய்களுக்குக் குறையாமல் தான் இருக்கும். (தினமணி தலையங்கம் 21-12-2010).

ஆக, பிரதமர் சொல்வது போல விலையேற்றத்திற்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு முழுகாரணம் அல்ல. அதைப் பற்றிப் பார்க்கும் முன் உற்பத்தி பரப்பு குறைந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதும் அவசியமாகும். விவசாயத்தின் ஒரு பொதுப் போக்காக விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விலக்கப்படுவது உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது.

விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று அனைத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வைக்கும் கொள்ளை விலைக்குத் தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப், பயிர்க்கடன்களும் விவசாய இயந்திரங்களை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்தும் மறுத்தும் வருகின்றது. இதனால் கந்து வட்டி கும்பல்களிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலம் தப்பிப் பெய்த பருவ மழையால் பயிர்கள் நாசமானதால் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்று வெங்காய விவசாயிகள், மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக மழையின் பாதிப்பை அந்த விவசாயி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அளவில்தான் நமது அரசின் அக்கறை இருக்கிறது.

இதே மாராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஒரு பணக்காரக் கிறுக்கன் 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்க வெறும் ஏழு சதவீத வட்டிக்கு 40 கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒரு விவசாயி டிராக்டர் வாங்கக் கடன் கோரினால் அதற்கான வட்டி 12%. (ஆதாரம் – ஹிந்துவில் பி.சாய்நாத்தின் கட்டுரை)

விவசாயப் பொருட்களில் ஊக வணிகம்

க, மன்மோகன் கும்பல் விசனப்பட்டுச் சொல்லும் பருவ மழையோ – அதனால் குறைந்து போன காய்கறி உற்பத்தியோ, கிராமப் புறக் கொழிப்போ – அதனால் பொருட்களுக்கு சந்தையில் உண்டாகியிருக்கும் போட்டியோ, மொத்த உள் நாட்டு உற்பத்திக் குறியீட்டின் வீக்கமோ – அதனால் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் பெருக்கமோ அல்ல காரணம் என்பது தெளிவாகிறது.

சர்வதேசப் பொருளாதார மந்த நிலைக்குக் காரணமான நிதி மூலதனச் சூதாடிகள், ரியல் எஸ்டேட், தங்கம், இரும்பு, வெள்ளி போன்ற மூலப் பொருட்களில் தமது நிதிகளை இறக்கிச் சூதாடத் துவங்கிய போதே உலகளவில் உணவுச் சந்தையிலும் தமது சூதாட்டத்தைத் துவங்கி விட்டிருந்தனர். விவசாய விளை பொருட்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் முன்பேர வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உலகவங்கியே இந்தியாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. உலகவங்கியின் முன்னாள் நேரடி ஊழியரும், இந்நாள் மறைமுக ஊழியருமான மன்மோகன் சிங் சுமார் நாற்பது முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களில் முன்பேர வணிகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

சர்வதேச பொருளாதார பெரு மந்தத்தை அடுத்து பங்குச் சந்தைகளிலும், நாணயங்கள், நிதிப் பத்திரங்கள், வீட்டுக்கடன் பத்திரங்களில் நடந்து வரும் பங்குச் சந்தை சூதாட்டங்களில் லாபம் இல்லாத காரணத்தால், இப்போது மக்களின் அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களில் சூதாட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர் சர்வதேசச் சூதாடிகள். உலகளவில் உணவுப் பொருள் விலையேற்றம் என்பது இதன் காரணமாகத் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகின் பல பாகங்களில் தொடர்ந்து நடந்து வரும் உணவுக் கலகங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பின்னணியிலேயே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் உணவுப் பொருள் விலையேற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2009-10 நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் நடந்த முன்பேர சூதாட்டத்தின் மதிப்பு சுமார் 78 லட்சம் கோடிகள். நடப்பு நிதியாண்டில் இதன் மதிப்பு 110 லட்சம் கோடிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகத்தின் அளவு 25 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் விவசாய விளை பொருட்களில் நடந்த முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தில் புழங்கிய தொகையின் அளவு 6.51 லட்சம் கோடிகள்.

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் துவங்கி இந்த வருடத்தின் துவக்கம் வரையில் உணவுப் பொருட்களில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்திற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரங்களே தெளிவாக எடுத்துரைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் திணிக்க முயற்சி

டுத்து ‘பதுக்கல்காரர்கள்’ குறித்து பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை குறித்து பார்ப்போம்.

வெங்காய விலையும் பிற காய்கறிகளின் விலைகளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருந்த நிலையில் விவசாயத் துறை அமைச்சர் ஒரு பக்கம் பார்வையற்றவன் யானையைத் தடவிய கதையாய் விலையேற்றத்தைப் பற்றி உளறிக் கொட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒருநாளும் இல்லாத திருநாளாய் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் காட்டிய அக்கறை கவனத்திற்குரியது. மொத்த விவகாரத்திற்கும் காரணம் பதுக்கல்காரர்கள் தானென்றும் சந்தைக்குப்  போதுமான வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதற்கான தீர்வாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தில் நுழைவதற்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி டிசம்பர் மாத இறுதிவாக்கில் ஆனந்த் சர்மா காபினெட் மட்டத்தில் ஆலோசனைகளைத் துவங்கியிருக்கிறார். அந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 23ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆனந்த் சர்மா, மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் இறக்கி விடுவது தான் சரியான தீர்வு என்று அறிவித்துள்ளார்.

பன்னாட்டுக் கம்பெனிகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதை ஆதரித்துப் பேசும் முதலாளித்துவ ஊடகங்கள், அவ்வாறு செய்வது இடைத்தரகர்களை ஒழித்து விடுமென்றும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் என்றும் சொல்கின்றன. ஏற்கனவே பகுதியளவில் சில்லறை வணிகம் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையிலேயே இது போன்ற பகாசுர நிறுவனங்களால் விவசாயிகளுக்குப் பெரியளவில் பலன் ஏதும் கிடைத்து விடவில்லை. மேலும், அசுரத்தனமான மூலதன பலத்துடன் சந்தையில் இறங்கும் இவர்களால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சில்லரை வணிகம் ஒழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.

ஏற்கனவே ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வரும் நிலையில், இவர்களை விட அதிகமான மூலதன பலத்துடனும் அளும் வர்க்க ஆசீர்வாதத்துடனும் அமெரிக்காவின் பின்புலத்துடனும் களமிறங்கும் வால்மார்ட்டால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சுதந்திரச் சந்தையின் கோட்டையான அமெரிக்காவில் விவசாயச் சந்தையை வால்மார்ட்டும் கேரிஃபோர் நிறுவனமுமே கைப்பற்றி வைத்துள்ளது. இந்நிறுவனங்கள் வளர்ந்த அதே வேகத்தில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை படுபாதாளத்தில் விழுந்துள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் விவசாயிகளைச் சேர்க்காமல் விடும் அளவுக்கு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலோ ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விவசாயி விவசாயத்திலிருந்து விரட்டப்படுகிறார்.

முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை நவீன தொழில் நுட்ப உற்பத்தியில், பிரம்மாண்டமான அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்நாடுகளில் 5 சதவீதம் மக்களே விவசாயிகளாக இருக்கின்றனர். தற்போது இந்த உடமை உறவு கூட ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரும் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

ஆனால், ஆனந்த் சர்மா வால்மார்ட் தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருக்கும் ஒரே கதி மோட்சம் என்பது போலச் சொல்கிறார். இதுவும் கூட அவராகச் சொல்லவில்லை. சென்ற நவம்பரில் இந்தியாவில் எழுந்தருளிய ஒபாமாவதார் இட்டுச் சென்ற முக்கியமான கட்டளைகளில் ஒன்று சில்லறை வணிகத்திலும் விவசாயத்துறையிலும் பன்னாட்டு மூலதனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

நவம்பரில் ஒபாமா வருகை – டிசம்பரில் வெங்காய விலையேற்றம் – அதே டிசம்பர் இறுதியில் வால்மார்ட்டை அனுமதிப்பதற்கான் காபினெட் சந்திப்பு. நிகழ்ச்சிப் போக்கு வரிசைக்கிரமமாக அமைந்துள்ளது தற்செயல் இல்லை அல்லவா?

அரசின் திட்டமிட்ட துரோகத்தனத்தால் ஓய்ந்து போன விவசாய உற்பத்தியினால் உயர்ந்து போயிருக்கும் விலைவாசியைக் காரணமாக்கிக் கொண்டு, கிடைக்கும் இடைவெளியில் பன்னாட்டுக் கம்பெனிகளை நுழைக்கும் நரித்தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே விதைக்கும் உரத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முன் இந்திய விவசாயிகளை கையேந்த விட்டுள்ள அரசு, இப்போது விளைச்சலுக்கான விலைக்கும் அவர்களிடமே கையேந்தச் சொல்கிறது. கீழ்மட்ட அளவில் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைபற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இன்னொரு பக்கம் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியைக் கைப்பற்றுவதன் மூலம் நுகர்வுச சந்தையையும் கட்டுப்படுத்தும்  வெறியுடன் களமிறங்கியுள்ளன.

இயற்கையான காரணிகளையும் அதனோடு செயற்கையான காரணிகளையும் இணைத்து சந்தையில் விலைவாசிகளை தாறுமாறாக ஏற்றுவதும், அதனால் மக்கள் பீதியடைவதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு  பொதுக்கருத்தை உண்டாக்கி அதை தமக்குச் சாதமகாப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் புதிய செயல்தந்திரம் அல்ல. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களில் இதே போன்ற உத்தியை உலகின் வேறு பாகங்களிலும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

2008ஆம் ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் வர்த்தகத் துறை அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் இடையே வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாத வாக்கில் வரலாறு காணாத வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளது. முழு விபரம் அறிய – (<http://foodfreedom.wordpress.com/2010/12/14/leaked-cable-bubble-gmo-eu/>)

இப்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வை வழமையான  விலை ஏற்றம் என்பதாக மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. இது இந்நாட்டின் உணவுத் தன்னிறவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான தொடர் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விலைவாசி உயர்வுக்கெதிரான மனப்புழுக்கமாக மட்டும் அடங்கி விடாமல், விவசாயத்தை திட்டமிட்டு அழித்த அரசின் துரோகத்தனத்திற்கு எதிரான கோபமாகவும், அரசின் நேரடி ஆசீர்வாதத்துடன் மக்களைக் கவ்விப் பிடிக்க களமிறங்கியிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் நயவஞ்சகத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்டமாகவும் மலர வேண்டும்.

________________________________________________________

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 1. செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் ! | வினவு!…

  காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன….

 2. முன்பேர வர்த்தகம் என்றால்? எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை குறுகிய எதிர்காலத்தில் – உதாரணத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு – ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பதற்கு (வாங்குவதற்கு) உற்பத்தியாளரிடமோ அல்லது மொத்த விற்பனையாளரிடமோ இன்றே ஒப்பந்தம் செய்து கொள்ளும் வணிகத்திற்கு பெயர் முன்பேர வர்த்தகம் (Futures… – இப்படி புரிந்து கொள்ளலாமா?

  • நொந்தகுமாரன்,

   இந்த ஊக வணிக சந்தையால பெரும் பயன் அடைந்த உ.பி மென்தால், உருளை விவசாயிகள் பற்றி :

   http://www.mcxindia.com/knowledgehub/casestudy/PDF/StudyPotatoMentha.pdf

   மிக முக்கிய ஆய்வு இது. முழுசா படித்துப் பார்க்கவும். ஊக வணிகம் என்பது வெறும் சூதாட்டம் அல்லது ஏமாற்று வேலை அல்ல. அது ஒரு முக்கிய பங்களிப்பு செய்கிறது. மிக முக்கியமான information exchangeஅய் மிக அருமையாக செய்ய இயல்கிறது

 3. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால்,ஒன்றுமில்லை என்பார்கள். அந்த வெங்காயத்தை வினவு உரிச்சா, மன்மோகன்சிங், மற்றும் அமைச்சர்களின், பன்னாட்டு நிறுவனங்களின் சதித்தனம் அம்பலமாகிறது. கட்டுரை புள்ளி விவர ஆதாரங்களுடன் இருக்கிறது.

 4. சமீபத்தில் செல்பென் இணைப்புகளின் எண்ணிக்கை (பழைய இணைப்பு கணக்கு 60 கோடியிலிருந்து ) 72 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 100 கோடியை தொட்டுவிடும். சிதம்பரம் கணக்குப்படி இந்தியாவில் வறுமையை ஒழித்துவிட்டதாக அப்பொழுதும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்.

   • அவுக, இப்போதைக்கி அவுக மடத்தோட சீஃப் ஆண்டி ஜெயமோகன்ஜி உடன் பைட்டக்ல இருக்காக.

    அது முடிஞ்சதும் ஜெயமோகன்ஜி தன்னோட சீடப் புள்ளைங்களுக்காக தானே சொந்தமாய் சிந்தித்து இந்திய தத்துவ மரபையும் யதிராஜ மாமுனி எழுதிய யதிநந்தோபனிசத்தையும் மார்க்சிய முரணியக்க வரலாற்று பொருள்முதல்வாத நீட்சேயிச ஃப்ராயிடிச தத்துவங்களையும் கலந்து கட்டி துளசி தீர்த்தத்தோடு அரை நாழிகை கொதிக்க விட்டு வடிகட்டித் தயாரித்த உள்நாட்டுச் சரக்கான “ஜெயமோகனோயிச”த்தின் படி ஒரு பௌத்திக் நிகழ்த்த விருக்கிறார். (ஹப்பா…. ஒன் நிமிட். மூச்சு வாங்கிக்கிடுதேன்)

    அந்த பௌத்திக் முடிந்ததும் எடிசன், ஹெக்டேர், சோத்தாங்கைசாரி, லிபர்ட்டேரியன் போன்ற சீட கோடிகள் இங்கே படையெடுத்து இதை மறுத்து வாதாடுவார்கள். தங்கள் வாதத்திற்கு பலம் சேர்க்கும் விதமாய் விக்கிபீடியா சுட்டிகளையும் தருவார்கள்.

    ப்ளீஸ் வெயிட் பார் சம் டைம் சார்.

    பைட்டக் = ஆலோசனை
    பௌத்திக் = உரை

    • சரி, பீச்சாங்கைசாரி ஏக்கமா கூப்பிட்டதினால வந்தேன் 🙂

     செல்போன்களின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றின் கட்டணங்கள் பெருமளவு குறைந்தன. (பாத்து வருடம் முந்தைய ரேட் ஞாபகம் இருக்கா?). செல்போன் வந்ததினால் எங்கள் தெரு ஆட்டோக்காரர் எப்படியெல்லாமோ ‘கிராக்கி’ புடிக்கிறார், ஒய்வு நேரத்தில் நிலபுலன் விற்று வாங்கி பெண்டாட்டிக்கு கால் பவுன் கம்மல் வாங்கிப் போட்டாராம். தெருவோரத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர் கூட சேலத்தில் தங்கள் அம்மா அப்பாவுடன் அடிக்கடி பேச முடிகிறது. வாழ்க்கை தரம் முன்னேறுகிறது அய்யா…வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உழைப்பனைய உயர்வு.

     பெஞ்சு தேச்சு குண்டி பெருத்த சோம்பேறி உதவாக்கரை யூனியன் பசங்கள் அல்லாரையும் ஜெயில்ல போடணும்.,

    • நாங்க ஒன்னும் ஏக்கமா கூப்பிடலை…எங்கே நீங்க திருந்தீட்டிங்களோன்னு நெனைச்சோம். இந்த பதிவு உங்க மனச மாத்திடுசொன்னு நெனைச்சோம். இப்போதான் தெரியுது நீங்க மா.சா. சொன்ன மாதிரி ரூம் யோசிச்சிட்டு இருந்திருக்கீங்கன்னு.

     எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு உரைக்காது…பட்டாத்தான் தெரியும். எங்க உங்க டீம்ல இருக்குற மத்த அல்லக்கைகல்லாம்? ஓ…நித்யானந்தவுக்கும், பிரேமானந்தவுக்கும், சிறீ சிறீக்கும் சொம்பு தூக்கிட்டு இருக்கீங்களா?

    • //செல்போன் வந்ததினால் எங்கள் தெரு ஆட்டோக்காரர் எப்படியெல்லாமோ ‘கிராக்கி’ புடிக்கிறார், ஒய்வு நேரத்தில் நிலபுலன் விற்று வாங்கி பெண்டாட்டிக்கு கால் பவுன் கம்மல் வாங்கிப் போட்டாராம்//

     எங்கூட்டுக்கு பின்னாடி ஒரு ஆட்டோக்காரர் இப்படித்தான் ரிலையன்ஸ் செல்போன வைச்சி பல ‘கிராக்கி’களப் புடிச்சி நிலபுலன் வாங்கி கட்சீல அந்த அம்பானிய விட பெருசா மாளிகை கட்டிட்டு இருக்காரு. அவரு பேருகூட ஆட்டோக்கார அம்பானியாம். கா… தூ… ல… பூ…….

 5. மக்கள் விலைவாசி உயர்வினால் மனப்புழுக்கமே கொள்கின்றனர்.மேலும்,ஆட்சியாளர்களை மக்கள் அதிகம் திட்டித்தீர்க்கவும் செய்கிறார்கள்.கட்டுரையில் சொல்லப்பட்டவாறு புரிந்துகொள்ளவும்,போராடவும் இன்னும் நாளாகும்.விரிவான பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.

 6. மிக முக்கியமான கட்டுரை ஆனால் சற்று தாமதமாக வந்துள்ளது வருத்ததிற்குரியது .காஷ்மீர் பற்றி எரிந்தபோது எவனோ ஒருவனின் பிரச்னை என்று எந்த சலனமும் இன்றி வாழ்த்த நாம், ஈழத்தில் ஆயிரக்கனக்கானோர் கொல்லப்பட்டபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று இயலாமையை வெளிபடுத்தியதொடு முடித்துகொண்ட நாம், பருப்பு விலை நூறாக உயர்ந்த போது புளிதண்ணிய வச்சி பொங்கி தின்றோம், வெங்காயமும் நூறானபோது வெறும் ரசம் வச்சி பொழப்ப ஓட்டுறோம். என்னக்கிதான் ஏன்னு கேள்வி கேப்போம்?

  • ஆனா யூனியன்ல பேசி உங்க சம்பளத்தை மட்டும் கரெக்டா வருஷத்துக்கு ஒரு தபா எத்திப்பீங்க !! ஏம்ப்பா, நீங்க ரொம்ப சம்பளம் கேக்கறதை குறைச்சுக்குங்களேன், விலைவாசி தானா குறையும்.

   • நீங்க குடுக்குற நாலணாவையும், எட்டனாவையும் வச்சித்தான் நாங்க விலைவாசிய ஏத்துரோமா….? நீங்க சினிமா-ல காமெடி ரோலுக்கு நல்லா பிட் ஆவிங்கண்ணா….

    அந்த நாலணாவையும், எட்டனாவையும் நாங்க சங்கம் வச்சி, போராடித்தான் வாங்க வேண்டி இருக்கு. இல்லேன்னா அதுக்கூட வக்கில்லை.

    பெட்ரோல் விலை ஏறினா என்ன…காய்கறி விலை ஏறினா உங்களுக்கு என்ன…ஊரைக்கொள்ளை அடிச்சு நெறைய சேத்து வச்சிருக்கிங்க…என்ன விலை வித்தாலும் வாங்குறதுக்கு நீங்க தயார்.

    நாங்க வருஷா வருஷம் போராடி, தொண்ட கிழிய கத்தி ஒரு நாலனாவோ, எட்டனவோ சம்பள உயர்வு வாங்குறதலேதான்…அரை வயிறு, கால் வயிறு காஞ்சி குடிச்சுட்டு உயிரோட இருக்கோம்.

    நாங்க உயிரோட இருக்குறது உங்களுக்கு ரொம்ப முக்கியம் சார்…இல்லேன்னா யாரு வந்து ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வியர்வை சிந்தி வேலை பாக்குறது…?

   • unga annan ambaniya petrola summa kudukka sollen parppom. 4.50/- ku oru ltr petrola ingaye edutthu 65/- vikkaravan kaala nakkara unukku nokia -la maasam 3000/- sambalam vanga oadaa theyarathu theriyuma? indha sambalatthaiyum korachuttu unna mathiri.”…………” thinga solriya? naanga uzaikkaravanga! unagala ozhikkaravanga!!

 7. ஏமாளிகளாய் இருக்கும்வரை
  இந்த விந்தைகள் தொடரும் :

  நம் வீட்டு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும்
  செல்போன் இருந்தும்
  அலுமினியத் தட்டுக்கள்
  உணவின்றி காய்ந்து கிடக்கும்போது…!

  தவணைமுறை ‘பல்சரில்’
  ப்ளாஸ்டிக் குடங்களைக் கட்டி
  குழாயடியிலிருந்து தண்ணீர் கொணரும்போது…!

  பன்னாட்டுக் கம்பெனிகளின்
  எலிப்பொறிக் காசில்
  காதலிக்கு கால்முழப் பூ வாங்க
  (கிலோ ஆயிரம் ரூபாய்)
  முடியாதென்று தெரியும்போது…!

  – பல்சர் அல்ல –
  சைக்கிளைக்கூட சீதனமாகக் கொடுக்கமுடியாது
  தட்டிக் கழியும் தங்கயின் மண நாளை நினைக்கும்போது…!

  அறுவைச் சிகிச்சைக்கு
  லட்சங்களைக் கேட்கும் அப்பொல்லோக்களால்
  அற்பாயுசில் மாளப்போகும் அம்மாவைப் பார்க்கும்போது…!

  • செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் பொட்டி தட்டி கிவிதை பாட முடியுது, ஆனா சோறு மட்டும் இல்லை…கேக்கறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி தெரியும்னு சொல்லுவீங்க.

   உங்களுக்கு பரிசாக ஒரு குறள் 🙂

   யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
   அதனின் அதனின் இலன்
   .

   • //செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் பொட்டி தட்டி கிவிதை பாட முடியுது, ஆனா சோறு மட்டும் இல்லை…கேக்கறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி தெரியும்னு சொல்லுவீங்க//

    கே.ஆர்.விஜயா கொண்டயிலயும் கலைஞர் டிவி காட்டுறது நீங்க தான்…இந்தப்பதிவின் சாரம்சமே அதுதான்…செல்போன் இருக்கு, பல்சர் இருக்கு, கம்ப்யுட்டர் இருக்கு…ஆனா தின்ன சோறு இல்லேங்குறதுதான்.

    சூப்பர் சார்…அருமையான யோசனை…குறள் எங்களுக்கு, கொண்டாட்டம் உங்களுக்கு….அப்படித்தானே. அந்தக்குறளை நீங்களும், உங்க சிஷ்ய கோடிகளும் கொஞ்சமாவது, கடுகளவுக்காவது follow பண்ணினா வினவு கஷ்டப்பட்டு இப்படி பதிவு எழுத வேண்டியதே இருக்காதே…

 8. பொதுவாக விலைவாசி உயர்வுக்கள் அடிப்படை காரணி : demand is high while supply is less. அதாவது தேவைகளுக்கு ஏற்ற அளவில் பண்டங்கள் மற்றும் சேவைகள் சந்தையில் இல்லாத நிலை. ஆனால் இதை விட இன்னொரு முக்கிய காரணி : அந்த அமைப்பில் உள்ள பணத்தின் நிகர அளவு. அதாவது this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.

  கடந்த இரண்டு வருடங்களில் மைய அரசு ’பொருளாதார ஊக்கி’ எனப்படும் fiscal stimulas packagaeஅய் செய்ததன் விளைவுதான் அது. (’முதலாளித்துவ’ அமைப்பிலும், பொருளாதார மந்தகளுக்கு காரணிகளும் தீர்வுகள் பற்றி மாற்று கருத்துக்கள் நிறைய உள்ளன. இந்த சிக்கலே அரசு மிக அதிகமாக பற்றாக்குறை பட்ஜெட்டுகளை உலகெங்கும் போட்டதுதான் காரணம் என்பது எம் கோணம்.) பல லச்சம் கோடி புது பணம் இந்த அமைப்பிற்க்குள் திடீரென செலுத்தப்பட்டால், அது வெள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல, எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)

  யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும். எப்படி ? அன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுகளின் defict as a percentage of GDP மிக மிக அதிகம். கடுமையான விலைவாசி உயர்வுகள் அன்று. நம் அடிப்படை நேர்மையை குலைத்த விசியம் இது.

  90களுகு பிறகுதான் பணவீக்கமும், வட்டி விகுதங்களும் ஒற்றை இலக்கத்திற்க்கு சரிந்தன.

  உண்மையான ‘முதலாளித்துவ’ பாணியை இன்னும் பல நாடுகள் அடையவில்லை. (நீங்க
  ‘தூய’ கம்யூனிசம் பற்றி பேசுவீங்கள்ள. அதே மாதிரி !!). பற்றாக்குறை பட்ஜெட்டுகள் பல காலமாக தொடர்கின்றன. (இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது. லிபர்ட்டேரியன்கள் இதற்க்கு எதிரான கொள்கைகளை உடையவர்கள். முதலாளித்துவத்திற்க்குள்ளும் இது போன்ற இடது / வலது கொள்கைகள் உள்ளன்). அதன் நிகர விளைவுகள் தாம் இந்த பொருளாதார மந்தங்கள், திவால்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள்.

  An old definition for ‘socialism’ : ‘It is spending money which you don’t have’ ; அதாவது இல்லாத பணத்தை (அரசுகள்) செலவு செய்வது. அது இது போன்ற சுழற்சிகளை தான் உருவாக்கும்.

  • பிரமாதம், இதை விடத் தெளிவாக யாராலும் விளக்க முடியாது.

   என்ன செய்ய, இந்தப் பசங்களுக்கு இதெல்லாம் அதிகம். தூங்குறாப்புல நடிக்கிறானுங்க, தலையில ஐஸ் தண்ணியைதான் கொட்டணும், இல்லாட்டி சூடா மூச்சா போகணும். அப்பதான் எந்திரிச்சு ஒடுவானுங்க.

  • சார்…நீங்க இத எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரல்ல….???
   நீங்க சொல்ற எல்லா காரணிகளும் தவறுன்னு அழகா ஆதரத்தோட இருக்குது இந்த பதிவு.
   60களில், 70களில் விலை உயர்விற்குக் காரணம் உணவு உற்பத்தி குறைவு…அது மட்டுமல்லாமல், உங்களைப்போல முதலாளிகள், உங்களின் ஆதரவாளர்கள், அல்லக்கைகள், சுயநலவாதிகள் நிறைய பதுக்கல்களில் ஈடுபட்டார்கள்…அதுதான் காரணமே தவிர….நீங்கள் சொல்வது இல்லை…

   சும்மா எதிர்க்கணும்னு எதிர்க்கக்கூடாது…

   எதோ கொஞ்ச அரை குறை முதலாத்துவம் இருக்கும் போதே இவ்வளவு பிரச்சனை…இன்னும் நீங்கள் சொல்வது போல ‘தூய முதலாத்துவம்’ வந்தால் யாருமே உயிரோடயே இருக்க முடியாது போல இருக்கே…of course..நீங்க கழுவி விட்டிட்டு இருக்கீங்களே அந்த முதலாளிகள் தவிர….அவங்க உங்களையும் உயிரோட விட மாட்டாங்க…ஜாக்கிரதை…அவங்களுக்கு தேவை லாபம் மட்டுமே… Libertarian அல்ல…

   • //நீங்க சொல்ற எல்லா காரணிகளும் தவறுன்னு அழகா ஆதரத்தோட இருக்குது இந்த பதிவு.
    60களில், 70களில் விலை உயர்விற்குக் காரணம் உணவு உற்பத்தி குறைவு…அது மட்டுமல்லாமல், உங்களைப்போல முதலாளிகள், உங்களின் ஆதரவாளர்கள், அல்லக்கைகள், சுயநலவாதிகள் நிறைய பதுக்கல்களில் ஈடுபட்டார்கள்…அதுதான் காரணமே தவிர….நீங்கள் சொல்வது இல்லை///

    உளரல் என்று தான் சொல்லவேண்டும். அடிப்படை பொருளாதார அறிவற்றா சிறிவனின் உளரல் தான் இது. உற்பத்தி பற்றாக்குறை ஒரு காரணி மட்டும் தான். மிக விரிவான ஆதரங்களை அளிக்க முடியும். ஆனால் உங்களிடன் வேண்டாம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் ஒன்றே ஒன்று :

    http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

    ஒரு கருத்தை இங்கு சொன்னாலே அவர் ஒரு ///அல்லக்கைகள், சுயநலவாதிகள் // என்று ஏசினால், இங்கு பின்னூட்டம் இடுவதை முற்றாக தவிர்க்க தோன்றுகிறது.

    • இங்கு நமது விவாதம் எது சரி எது தவறு என்பதை ஆய்ந்து அறிவதில் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவர் தாக்கிகொள்வதில் அல்ல. மன்னிக்கவும்.

  • “பொதுவாக விலைவாசி உயர்வுக்கள் அடிப்படை காரணி : demand is high while supply is less. அதாவது தேவைகளுக்கு ஏற்ற அளவில் பண்டங்கள் மற்றும் சேவைகள் சந்தையில் இல்லாத நிலை.

   “ஆனால் இதை விட இன்னொரு முக்கிய காரணி : அந்த அமைப்பில் உள்ள பணத்தின் நிகர அளவு. அதாவது this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.

   “கடந்த இரண்டு வருடங்களில் மைய அரசு ’பொருளாதார ஊக்கி’ எனப்படும் fiscal stimulas packagaeஅய் செய்ததன் விளைவுதான் அது. (’முதலாளித்துவ’ அமைப்பிலும், பொருளாதார மந்தகளுக்கு காரணிகளும் தீர்வுகள் பற்றி மாற்று கருத்துக்கள் நிறைய உள்ளன. இந்த சிக்கலே அரசு மிக அதிகமாக பற்றாக்குறை பட்ஜெட்டுகளை உலகெங்கும் போட்டதுதான் காரணம் என்பது எம் கோணம்.)

   “பல லச்சம் கோடி புது பணம் இந்த அமைப்பிற்க்குள் திடீரென செலுத்தப்பட்டால், அது வெள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல, எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)

   “யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும். எப்படி ? அன்றைய பற்றாக்குறை பட்ஜெட்டுகளின் defict as a percentage of GDP மிக மிக அதிகம். கடுமையான விலைவாசி உயர்வுகள் அன்று. நம் அடிப்படை நேர்மையை குலைத்த விசியம் இது.
   90களுகு பிறகுதான் பணவீக்கமும், வட்டி விகுதங்களும் ஒற்றை இலக்கத்திற்க்கு சரிந்தன.

   “உண்மையான ‘முதலாளித்துவ’ பாணியை இன்னும் பல நாடுகள் அடையவில்லை. (நீங்க
   ‘தூய’ கம்யூனிசம் பற்றி பேசுவீங்கள்ள. அதே மாதிரி !!). பற்றாக்குறை பட்ஜெட்டுகள் பல காலமாக தொடர்கின்றன. (இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது. லிபர்ட்டேரியன்கள் இதற்க்கு எதிரான கொள்கைகளை உடையவர்கள். முதலாளித்துவத்திற்க்குள்ளும் இது போன்ற இடது / வலது கொள்கைகள் உள்ளன்). அதன் நிகர விளைவுகள் தாம் இந்த பொருளாதார மந்தங்கள், திவால்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள்.

   “An old definition for ‘socialism’ : ‘It is spending money which you don’t have’ ; அதாவது இல்லாத பணத்தை (அரசுகள்) செலவு செய்வது. அது இது போன்ற சுழற்சிகளை தான் உருவாக்கும்.

   ****

   இவையெல்லாம் விலைவாசி உயர்வுக்கு அய்யா லிபெர்ட்டேரியன் அவர்கள் ‘ஆய்விற்குப்’ பிறகு வந்தடையும் முடிவுகள். அடிப்படைக் காரணியில் தொடங்கி முக்கிய காரணியையும் தொட்டு பிறகு பல்வேறு காரணிகளையும் அடுக்கிவிட்டு வழக்கம் போலவே “ஒரு வகை இடதுசாரி கொள்கை” தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என இங்கேயும் முடித்துள்ளார்.

   ஹோமியோபதியில் “Superstitious” என்றோரு மனக்குறி உண்டு. இதற்கு “குருட்டு நம்பிக்கை வாய்ந்த மனநிலை” என்று பொருள். என்னதான் புள்ளி விவரங்களைக் கொண்டு நீங்கள் வாதிட்டாலும் தனது குருட்டுத்தனமான நம்பிக்கையிலிருந்து இத்தகைய நபர்கள் மாறமாட்டார்கள் என்பதனால்தான் இதை ஒரு மனதளவிலான நோய்க்குறி என ஹோமியோபதி மருத்துவம் கூறுகிறது.

   வழக்கம் போலவே பிற கட்டுரைகளில் எதைச் சொல்லி வந்தாரோ அதையேதான் இங்கேயும் சொல்லிருக்கிறார். இதுதான் libertatian அவர்களின் superstitious.

   என்னதான் வாதப் பிரதிவாதங்கள் செய்தாலும் இப்போது அவருக்குத் தேவை Conium maculatum என்றே நான் கருதுகிறேன். மேல் விவரங்களுக்கு Conium maculatum மனக்குறிகளைப் பாருங்கள்.

   இது தனிநபர் தாக்குதல் அல்ல.

   ஒரு பிரச்சனை குறித்து CFT (Cross Functional Team) ஒன்றை அமைத்து RCA (Root Cause Analysis) மூலம் அடிப்படை காரணியைக் கண்டு பிடித்தாலும் ( அவரே இங்கு ஒரு அடிப்படைக் காரணியைக் கூறியுள்ளார்) தனது கருத்தை மாற்றிக் கொள்ளாதவர் libertarian என்பது அவரது பல பின்னூடங்களிலிருந்து தெரிய வருகிறது. அதனாலேயே எனது இந்தப் பின்னூட்டம்.

   • ஊரான்,

    யாருக்கு மனோவியாதி, யார் மூட நம்பிக்கை கொண்டவர் என்பதை பற்றி வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். உருப்படியாக பதில் எழுத முடியாமல் இப்படி உளருவது தான் விஞ்ஞானபூர்வமான மார்க்ஸிய விவாத முறையா ?

    ’ஒரு தமிழ வலதுசாரி’ இதற்க்கு இட்ட பின்னூட்டம் உம்மை போன்ற அன்பர்களை ஓவரா தாக்குது என்று கருதினேன். இல்லை, அவரின் கூற்று மிக சரிதான் என்றே இப்ப தோன்றுகிறது.

    சரி அப்பனே. என்ன வேண்டுமானாலும் ’கருதிக்’ கொண்டு, திரியுங்க. சில உண்மைகளை வாசகர்களுக்காக இங்கு வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.

    • “சரி அப்பனே. என்ன வேண்டுமானாலும் ’கருதிக்’ கொண்டு, திரியுங்க. சில உண்மைகளை வாசகர்களுக்காக இங்கு வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.

     நானும் அதையேதான் செய்துள்ளேன்.

    • லிபர்ட்டேரியன்,

     //demand is high while supply is less//

     சப்ளை சர்ப்ளஸ்ஸாக இருக்கும் நிலையிலேயே விலை உயர்ந்து வந்துள்ளது. கோதுமை, அரிசி உள்ளிட்டு பல்வேறு உதாரணங்களை அடுக்க முடியும்.

     //this medium of exchange (which is legal tender currency, and which is solely issued and controlled by govt thru RBI) திடீரேன மிக அதிகாமானால், பண வீக்கம் உருவாகி விலைவாசி உயர்கிறது.//

     கடந்த இரண்டாண்டுகளாக இருந்த பொருளாதாரப் பெருமந்தம் பணப்புழக்கத்தை அதிகரித்து விட்டதால் தான் விலையேறியது என்கிறீர்களா?

     இப்புடியெல்லாம் துணிந்து ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்டுகளை விடனும்னா ஒன்னு அசட்டுத் துணிச்சல் இருக்கனும் – இல்லைன்னா ‘லிபர்ட்டேரியனா’ இருக்கனும்.

     //எந்த பணடம் பற்றாக்குறையில் உள்ளதோ அந்த சந்தையை நோக்கி பாய்ந்து, அதன் விலையை மிக அதிகம் உயர்த்தும். (ரியல் எஸ்டேட் விலை தொடர்து அதிகரிப்பதன் சூட்சமம் இதுதான்.)//

     தெய்வமேஏஏஏஏ… உங்க பொருளாதார அறிவு புல்லரிக்க வைக்குதுங்க. தயவு செஞ்சி இதை மட்டுமாவது ( உங்க பதிவுலயோ / இங்கேயோ) கொஞ்சம் விளக்கமா எழுதுங்க. வாய் விட்டு சிரிச்சி நாலஞ்சி நாள் ஆச்சி.

     //இது ஒரு வகை இடதுசாரி கொள்கை. கீயினிஸிஸம் எனப்படுவது.//

     கீனீஷிய பொருளாதாரம் இடதுசாரி கொள்கையா? தாங்க முடியலை. கீனீஷிய பொருளாதாரம் இடதுசாரி, இந்தியா 90களுக்கு முன் சோசலிச நாடு. பற்றாக்குறை பட்ஜட் இடதுசாரி கொள்கை. ஹப்பா… உண்மையிலயே இந்த அசுரன் அசுரன்னு சொல்லி ஒரு தோழர் வாறாரே அவரு தான் எனக்குத் தெரிஞ்சு உலகத்திலெயே பெரிய பொருமைசாலியா இருக்கனும். ஏன்னா உங்ககிட்டயே வருசக்கணக்கா பேசிருக்காறே??? நீங்க இப்படி “பிம்பிலிக்கி பிலாப்பி”ன்னு சொல்லும் பொருளாதார கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து விவாதிச்சிருக்காருன்னா ஹீ ஈஸ் சோ கிரேட்டு.

     அப்டியே ஒரு நாலு விக்கிபீடியா கட்டுரைக்கான லிங்க்கையும் கொடுத்திட்டீங்கன்னா.. இன்னிக்கு சோறு செமிச்சிரும்.

  • லிபெர்டரியன்

   \\யூக வணிகம் காரணமல்ல. 60களில், 70களில் இந்த யூக வணிகமே இங்கு இல்லை. ஆன்லைன் வர்த்தம் இல்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலங்கள். அன்று விலைவாசி உயர்வு ஆண்டுக்கு சுமார் 18 % வரை சர்வசாதாரணமாக இருந்தது. தேடிப்படித்து பார்க்கவும்.//

   இந்தியாவில் நீங்கள் சொல்வது போல் 18 விழுக்காடு பண வீக்கம் இருந்ததாக தகவேலேதும் தேடியும் கிடைக்கவில்லை.கிடைத்ததெல்லாம் உங்கள் கூற்றை பொய்ப்பிப்பதாக உள்ளன.
   பார்க்க; சுட்டிகள்;

   http://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india-1970.aspx

   http://www.tradechakra.com/indian-economy/inflation.html

   இந்த சுட்டிகளை படிப்போர் இந்தியாவில் தாராளமயம் கொண்டுவந்த இறக்குமதியின் மீதான கட்டுபாடுகள் தளர்வு,ஊக வணிக அனுமதி,கணினிவழி வணிகம்-online trading- போன்றவை உக்கிரமடைந்த பின் கடந்த மூன்று ஆண்டுகளில் பணவீக்கம் மேலும் மேலும் கூடுதலாகி வருவதை புரிந்து கொள்ளலாம்.

   • திப்பு,

    80கள் வரை வட்டி விகுதங்கள் (வங்கி வட்டிகளை தான் சொல்கிறேன்) சுமார் 18 சதம் மற்றும் அதற்க்கும் அதிகமாக இருந்தது. உமது பெற்றோரிடம் கேட்டு பாருங்க. பணவீக்கதை ஒட்டியே வட்டி விகுதமும் இருக்கும். 60களில், 70களில் இருந்த வருடாந்திர விலைவாசி உயர்வை ஒப்பிட்டால் இன்று ஜுஜூபி. 1960இல் வெளிவந்த மிக முக்கிய கட்டுரை இது. முழுசா படிச்சுவிட்டு அப்பறம் முழங்க.

    http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

    இந்த தாரளமயமாக்ல மட்டும் 1991இல் செய்யாமல் இருந்திருந்தால், அன்னிய செல்வாணி முற்றாக இல்லாமல், கடனும் வாங்க முடியாமல், நமது ரூபாயின் மதிப்பு பல நூறு மடங்கு குறைந்து, இறக்குமதி நின்று போய், விலைவாசி பல பல மடங்கு உயர்ந்து ,hyper inflation உருவாகி, சர்வ நாசம் அடைந்திருப்போம்.

    • லிபர்டேரியன்,
     இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? விலைவாசி உயர்வே கற்பிதம் என்கிறீர்களா? அல்லது 91 ல் தனியார்மயம் கொண்டுவரப்பட்டதிலிருந்து உணவுப் பொருளுட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியதே தனியார்மயம்தான் என்று சொல்ல வர்றீங்களா? பல் வேறு வார்த்தை ஜாலங்களால் பக்கத்தை நிரப்பினாலும் நீங்கள் சொல்ல வருவது இதுதானே? பொதுவாக அப்புறம் பேசலாம். குறிப்பாக, வெங்காய விலையேற்றத்துக்க்கு முதன்மையான காரணம் என்ன ? பற்றாக்குறையா? ஏற்றுமதியா? உணவுப் பொருள் ப்துக்கல் தடைச் சட்ட்த்தை நீக்கியது தனியார் கொள்ளைக்கா? விலையை குறைக்கவா? விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு தடை போட மறுப்பது தனியார்மயமா? இல்லையா? கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, அவற்றை சர்வ தேச சந்தையில் விற்று அமெரிக்க டாலர்களை இலாபமாக ஈட்டும் கொள்ளைக்குப் பேரு தனியார்மயமா? இல்லையா? முன் பேர வர்த்தகம், இணைய தள வர்த்தகம் என்ற பெயரில் நிதியாதிக்க கும்பல்கள் உணவுப் பொருளை வைத்து சூதாட்டம் நடத்துவது தனியார்மயமா? இல்லை சமூகத் தொண்டா? விலையேற்றத்தை குறைப்பதற்கு உற்பத்தி செலவை கட்டுப்படுத்த நடவடிக்ககளை எடுப்பதற்கு பதிலாக இடு பொருட்களின் விலையை பன்னாட்டுக் கம்பெனிகளே தீர்மானிக்க அனுமதிப்பது தனியார்மயமா? இல்லையா? அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை செயலிழக்கச் செய்வது தனியார்மயத்திற்கா? இல்லை தேசிய நலனிற்கா? கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை இரண்டு முறை அதிகரித்தது நாட்டு மக்களுக்காகவா? தனியார்மயத்திற்காகவா? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் உங்கள் தனியார்மயத்தின் யோக்கியதைகளை. காலனிய இந்தியாவில் எப்படி உணவு தற்சார்பை இழந்து உணவுப் பஞ்சம் ஏற்பட்டதோ, அதே போல் ஒரு உணவுப் பஞ்சதை ஏற்படுத்துவதில் போய் முடியும் இந்த தனியார்மயக் கொள்கையின் விளைவு. ஆக, தன்மானமும், நாட்டுப் பற்றும் உள்ள எவரும் இதை அனுமதிக்க முடியாது என்பதுதான் எனது வாதம்.

    • லிபெர்டரியன்
     இந்த பின்னூட்டத்திற்கான பதிலை தவறுதலாக கீழே பதிந்து விட்டேன்.பின்னூட்டம் எண்.17

    • //இந்த தாரளமயமாக்ல மட்டும் 1991இல் செய்யாமல் இருந்திருந்தால், அன்னிய செல்வாணி முற்றாக இல்லாமல், கடனும் வாங்க முடியாமல், நமது ரூபாயின் மதிப்பு பல நூறு மடங்கு குறைந்து, இறக்குமதி நின்று போய், விலைவாசி பல பல மடங்கு உயர்ந்து ,hyper inflation உருவாகி, சர்வ நாசம் அடைந்திருப்போம்.//

     நல்ல திகில் நாவல் எழுதும் திறமை இருக்கிறது.

    • இரா.மணிகண்டன்,

     //இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? விலைவாசி உயர்வே கற்பிதம் என்கிறீர்களா? அல்லது 91 ல் தனியார்மயம் கொண்டுவரப்பட்டதிலிருந்து உணவுப் பொருளுட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியதே தனியார்மயம்தான் என்று சொல்ல வர்றீங்களா? ///

     கற்பிதம் செய்ய இதென்ன புனைவிலக்கியமா. விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டே தான் உள்ளது. சில வருடங்கள் கடுமையான அளவில். சில வருடங்கள் மிதமான அளவில்.ஆனால் தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இன்று நிலைமை திவால் தான். உணவு பண்டங்களின் விலை கடுமையாக இன்னும் உயரப்போகிறது. பற்றாகுறை ஒரு காரணிதான். உலகெங்கும் (இந்தியாவிலும், சீனாவிலும்), மிக மிக அதிக அளவில் பணத்தை அரசுகள் அச்சடித்து, இந்த ‘பொருளாதார ஊக்கி’ செய்ததின் side effect இது. மேலும்..

     எமது முக்கிய பதிவுகள் :

     http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
     விலைவாசி ஏன் உயர்கிறது ?

     http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
     1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

     ‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?
     http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html

    • லிபர்டேரியன்,
     ///ஆனால் தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக இன்று நிலைமை திவால் தான். உணவு பண்டங்களின் விலை கடுமையாக இன்னும் உயரப்போகிறது.///
     உங்கள் கூற்றை கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். அதாவது தாராளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று விலைவாசி விண்ணைத்தொட்டு நாடு திவால் ஆகியிருக்கும் என்கிறீர்கள். அடுத்த வரியிலேயே இன்னும் விலைவாசி கடுமையாக உயரப்போகிறது என்கிறீர்கள். இப்பொழுது தாராளமயமாக்கல் அமலில்தானே இருக்கிறது? பிறகு ஏன் விலைவாசி உயர வேண்டும்? முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே! பின்நவீனத்துவத் தத்துவவாதிகளும் முதலாளித்துவத்தின் ஒன்னுவிட்ட ஒறவுக்காரங்கதான் என்பதை ஒங்க கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இன்றைய விலைவாசி உயர்வை அனுமதிப்பதும், தனியார்மயத்தை அனுமதிப்பதும் வேறு வேறு அல்ல. இந்த எதிர்ப்பின் வெளிப்பாடுதான் துனிசிய, எகிப்திய மக்களின் போராட்டம். அங்கு போய் உங்கள் வாதத்தத்தை (தனியார்மய ஆதரவு) வைக்க முடியுமா?