Saturday, February 8, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

-

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

ரிலையன்சின் அதிபர் முகேஷ் அம்பானி குடியிருக்கும் “ஆன்டிலியா” எனும் 27 மாடி குடிசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் வினவில் முன்னர் வந்த கட்டுரையை படியுங்கள்.
தற்போது ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி அம்பானியின் குடும்பம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு நீரை பயன்படுத்துகிறது என்பதை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அதன்படி கிரேட்டர் மும்பையின் முனிசிபால்டி நிர்வாகம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கு மாதம் ஐந்து இலட்சம் லிட்டர் நீரைக் கொடுக்கிறதாம்.

அதாவது தினசரி 17,000 லிட்டர் நீர். கற்பனை செய்ய முடியவில்லையா? பிளாஸ்டிக் குடம் கணக்கில் சொன்னால் தினசரி 850 குடங்கள். இவ்வளவு நீரை பயன்படுத்துவதற்கு அம்பானியின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்? அம்பானி அவரது சம்சாரம், மூன்று குழந்தைகள் மட்டுமே.

குடும்பத்தில் 5 உறுப்பினர்கள். 5 பேர் வாழும் ஆன்டிலியாவின் பரப்பளவு 5 இலட்சம் சதுர அடிகள். 5 பேர்களுக்கு தேவைப்படும் ஒரு மாத நல்ல நீர் 5 இலட்சம் லிட்டர். எல்லாம் ஐஞ்சுக்கு ஐந்து என்று மேட்சாகத்தான் பொருந்துகிறது. எனினும் அம்பானியின் நீர் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆன்டிலியா குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார்களை கழுவ, நாய்களை குளிப்பாட்ட இன்ன பிற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் அந்த நீர் பயன்படுகிறது. இது போக நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.

மேலும் நீருக்காக முனிசில்பாடி நிர்வாகம் வசூலிக்கும் தொகையை அம்பானி தவறாது கட்டிவிடுகிறார். பிசினசில்தான் அவர் அரசை ஏமாற்றுவார், அது  போக அவர் ஒழுங்காக நீர்வரி கட்டும் நல்ல குடிமகன்தான்.  நாமும் அவரது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் விதிக்கும் கப்பத்தை ஒழுங்காக கட்டுகிறோம் அல்லவா அது போலத்தான் அம்பானியும் நல்ல பிள்ளையாக நீர்வரி கட்டுகிறார்.

இந்த தண்ணி கணக்கு என்பது முனிசிபால்டி அளிக்கும் நல்ல நீர் மட்டும்தான். இது போக ஆன்டிலியாவின் அன்றாடத் தேவைக்காக எவ்வளவு நிலத்தடி நீர் பயன்படுகிறது என்பதை யாரும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கூட அறியமுடியாது. அதெல்லாம் காந்தி கணக்குதான்.

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

நண்பர்களே, மும்பையின் நெரிசலையும், தாரவி முதலான குடிசைப் பகுதிகளின் நரக வாழ்வையும் நாம் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்போம். பத்துக்கு பத்து தீப்பெட்டி போன்ற இடத்தில் எல்லா பொருட்களோடும், எல்லா குடும்ப உறுப்பினர்களும் தீக்குச்சிகளைப் போல அடைபட்டு வாழ்கிறார்கள். பல குடிசைகளுக்கு ஒரு கழிப்பறை, குளியலறை என்பதுதான் அவர்களது சதவீதக் கணக்கு. காலை கடனுக்காக அதிகாலையில் கழிப்பறை முன்பு எப்போதும் நிற்கும் வரிசை. ஏக், தோ, தீன்….தஸ் என்று எண்ணிவிட்டு கக்கூஸ் கதவு தட்டப்படும். அந்த பத்து கண நேரத்தில்தான் முந்தைய நாளின் சாணியை அதிவேகமாக காலி செய்ய வேண்டும். தாமதித்தால் கதவு உடைக்கப்படும்.

ஒரு நாளைக்கு 850 குடங்கள் என்பது கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் பயன்படுத்தும் நீர். மும்பையில் இருக்கும் ஏழைகளும், கீழ்தட்டு நடுத்தர வர்க்கமும் தமது முழு தேவைக்கு மாநகராட்சி நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு எல்லா நாளும் போதுமான நீர் கிடைப்பதில்லை. இது மும்பைக்கு மட்டுமல்ல எல்லா மாநகரங்களுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில் வைத்துப் பார்த்தால் அந்த 850 குடங்களின் ஆபாசம் நமது கண்ணை உறுத்தும்.

அம்பானி ‘உழைத்து’ முன்னேறிய கதையை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வாசிக்கும் அதன் வாசகர்கள் தினசரி பூஜையே செய்கிறார்களாம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றிக்காக ஆர்ப்பரித்த அம்பானி தம்பதியினரின் தேசபக்தியைக் கண்டு கிரிக்கெட் இரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.

அம்பானிக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை விட இந்த தேசம்தான் அம்பானி மேல் பக்தி கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால்தான் அம்பானியும் சளைக்காமல் தனது பக்த கோடி அடிமைகளுக்கு அன்றாடம் பங்கு சந்தை மூலம் திவ்ய தரிசனம் தருகிறார். பக்தர்களின் காணிக்கை மூலம் ரிலையன்சு கோவில் தினசரி குடமுழுக்கை நடத்துகிறது. அம்பானி நமஹா என்ற மந்திரம் இந்தியாவின் தேசிய மந்திரமாகிவிட்டது. அதன்படி பார்த்தால் 850 குடம், திருப்பள்ளி எழுச்சி கொள்ளும் பகவான் ஆய் போய்விட்டு கழுவுவதற்கு பயன்படுகிறது என்றால் நாம் செய்த புண்ணியம்தான் என்ன?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. உங்க குடும்பத்தின் ஒரு நாளைய நீர் பயன்பாட்டு அளவை கொஞ்சம் இங்கே வெளியிட முடியுமா? இந்த சால்ஜாப்பு அளவு எல்லாம் தேவையில்லை.. I jst need one simple reply how many liters of water do you and your family consume? உங்க மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சரியான அளவை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

    • சந்தோஷ், என் குடும்பத்துல 8 பேரு, அதுல நான் கொஞ்சம் தாராளமா தண்ணி செலவழிப்பேன், அதனால எனக்கு மட்டும் ஒரு நாளைக்கு 60 லிட்டர் தண்ணியாகும். (மூன்று 20 லிட்டர் வாட்டர் கேன்) மத்தவங்களுக்கு 2 கேன்தான், சோ டோட்டலா 200 லிட்டர். தண்ணி ரொம்ப மஞ்சளா இருப்பதனால குடிக்க-சமயலுக்கு 20 லிட்டர் காசு கொடத்து வாங்குறோம். இதுவே ஒரு மிடில்கிளாஸ் கணக்கு, குடிசைப்பகுதியில இதுக்கு பாதிதான் ஆகும். மேன்சன்ல்ல, ஹாஸ்டல்லெல்லாம் அதுக்கும் பாதிதான். உங்களுக்கு எவ்வளவு செலவாகுது? நீங்களும் கேன்ல புடிச்சு அளந்து பாருங்க, இதேதான் வரும். ஒரு வேளை அதிகமா இருந்தா குறைச்சுக்கங்க, பெங்களூரும் தண்ணிக்கு தவிக்கும் ஊருதானே?

      • //ஒரு நாளைக்கு 850 குடங்கள் என்பது கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் பயன்படுத்தும் நீர். மும்பையில் இருக்கும் ஏழைகளும்//
        கேள்விக்குறி..எட்டு பேரு இருக்குற வீட்லையே அவ்வுளவு தண்ணீர் பயன்படுத்துறீங்க அந்த வீட்ல மொத்தம் 606 பேர் 600 வேலையாட்கள் + அம்பானி குடும்பத்தினர் 6 பேர் மேலும் அவ்வுளவு பெரிய வீட்டின் நிர்வாகத்துக்கு அவர்கள் செலவழிக்கும் தண்ணீரின் அளவு பெரியதா? பரபரப்பான தலைப்புகளை வைக்கும் முன் வினவு கொஞ்சம் ஆராய்ந்தால் நல்லது இல்லாவிட்டால் உங்க நம்பகத்தன்மையே பாதிக்கும்..

        • சந்தோஷ், இப்படி கேட்கறேன் உங்க வீடு ஆயிரம் சதுரடி இருக்குமா, அதை எத்தனை நாளைக்கு ஒரு முறை கழுவி ஊத்துவீங்க.. அது எவ்வளவு தண்ணி செலவாகும்?
          அம்பானியோட கண்ணாடி குடிசையை தினமும் பப்பளான்னு வைக்க எவ்வளவு தண்ணி செலவாகும்?

          மனிதனோட அடிப்படை தேவையான குளிக்க-கழுவ – ரெண்டு பக்கெட் தண்ணி மொத்தம் 40 லிட்டர்… அதே அளவு தண்ணி ஒரு 15க்15 ரூமை சுத்தம் செய்யவும் வேணும்..இந்த லாஜிக் ஓகேவா? நான் சரியாத்தான் கேக்கறேனா?

        • 6 பேர் குடியிருக்கும் வீட்டுக்கு 600 வேலையாட்களின் மனித உழைப்பு முதல், மின்சாரம், தண்ணிர் என சமூக சொத்துக்கள் அனைத்தும் இங்கு அம்பானிகளின் ஆடம்பரத்துக்கு வீண்டிக்கப்படுகிறது. அதனால இதை வெறும் கணக்கு பிரச்சனையாக நீங்க ரொம்பவே எளிமைப் படுத்தி புரிந்து கொள்வது தவறு

  2. உங்கள் அதகளத்திற்கு அளவேயில்லை போலிருக்கு. முந்திரிபருப்பு போல நக்கல் வார்த்தைகள் சிரிப்பை தருகின்றது.

  3. அம்பானியின் குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார் கழுவ, நாய் குளிப்பாட்ட போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் நீர் பயன்படுகிறது. நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.ஆமா. குண்டி கழுவுதற்குகூட நீரை பயன்படுத்தமாட்டார்கள்.குண்டி கழுவாத பரம்பரை.

  4. அவர்கள் (அம்பானி மற்றும் அவரின் அடியொற்றிகள்) எக்கேடோ கெட்டுப் போகட்டும்… நீங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். ஏனென்றால் நாமெல்லாம் “பொதுஜனம்”.

  5. தமிழர் வலைதளங்களில் முன்னணியில் காணப்படுகிற வினவில் தரம் தாழ்ந்த சொற்கள்.தேவையற்ற கீழான சொற்களின் சேற்கையால் சொல்ல வந்த
    தகவல்களுக்கே கேடு. தவிற்கலாம்.
    பாண்டியன்ஜி verhal.blogspot.com

  6. அம்பானி, டாடா போன்ட்ரொர் இல்லை என்றால் இண்டியா இன்னும் ஆய் கலுவிக்கொன்டு தான் இருந்திருக்கும். அவர்கள் கொல்லை அடிதாலும் நாட்டில் 40% பெர் இவர்கலின் நிருவனங்கலில் தான் வெலை செய்கிரார்கள். டாடா docomo recharge card virpavar kooda maraimugamaaga tata vin paniyaalar thaan.

  7. லாபிக் கிசுகிசுப்பில்
    நான் கருக் கொண்டேன்.

    பாவக் கணக்கில்தான்
    உருக்கொண்டேன்.

    நான்
    பாவத்தின் சம்பளம்.
    என் விலை
    மிக மிக அதிகம்.

    நாட்டின்
    தலைவிதியையே
    திருத்திவிடும் பிரும்மா
    தீட்டிவைத்த காவியம்.
    கீழ்மட்டமான ஏழையாயிருந்து
    உலகமட்டமான பணக்காரன் வரை
    உருவெடுத்த உத்தமர்;
    வாழ்ந்து காட்டிய
    தியாகச் செம்மல்
    தீட்டிவைத்த காவியம்.

    என்னை நிமிர்ந்து
    நீங்கள் பார்க்கும்
    பொறாமைப் பார்வைகள்.
    உங்கள் பார்வைகளை நான்
    தவிர்த்துக்கொள்ள
    தலை குனிந்துகொள்கிறேன்.
    உங்கள் மூச்சுக் காற்றில்
    உருகி விழுவேனோ என
    பயங்கொள்கிறேன்.

    பாலிவுட் பெருமூச்சும்
    பத்திரிகைக் கிசுகிசுப்பும்
    ஃபோர்பின் ஃப்ளாஷும்
    என்னைக் கூச்சப்படவைக்கும்.

    பண முலாம் பூச்சில்
    அரிதாரமிட்டு,
    மும்பை நகரத்துச் சந்தியில்
    நிற்கவைத்து
    அழகு பார்க்கப்படுகிறேன்.
    ஒரு விபச்சாரி போல.

    என் உயரத்தில்,
    தலைக்குமேல்தான் சொர்க்கம்.
    கை நீட்டினால்
    கடவுளைத் தொடலாம்.
    பரவசப்படுங்கள்.
    என் காலடியில் நரகம்.
    அது
    என் ரிஷிமூலம்.
    அது நாறுமென்பதால்
    அதைக்காண விரும்பாதீர்கள்.

    சேரிகள் பெருகிய
    அழுத்தத்தின் விதியால்
    பிதுங்கி மேலெழுந்த
    பண வீக்கம் நான்.

    நாட்டையே அடகிட்டு
    இலாபக் கணக்கெழுதி,
    ஊரை உலையிலிட்டு,
    அவித்துத் தின்ற செரிமானகள்
    இங்கே
    கழிக்கப்படும்போது
    குடலைப் பிடுங்கிக் குமட்டும்.

    தன லட்சுமி
    என் குபேர மூலைப் பெட்டியில்
    தங்கியிருக்கிறாள்.
    இது,
    மக்கள் கொடுத்த வரம்.
    தருத்திர லட்சுமி
    இந்திய மூலை முடுக்கெங்கும்
    தவம் கிடக்கிறாள்.
    இது,
    மக்களே இட்டுக்கொண்ட சாபம்.
    இதுதான்
    இந்தியாவின் விதி.

    என் ரிஷி மூலத்தோடு
    என்னை நோக்கப்பட்டால்
    நான்
    இந்தியாவின் அவமானச் சின்னம்.
    என் ரிஷிமூலம் தவிர்த்து,
    என்னை நோக்கப்பட்டால்
    நான்
    இன்னொரு தேசியச் சின்னம்.
    சின்னத்தின் மதிப்பு
    உங்கள்
    பார்வையில்.

    உங்களை நான்
    வசீகரித்திருந்தால்
    நீங்கள்
    கனவு காணுங்கள்.
    உங்களை நான்
    அவமதித்திருந்தால்
    கடப்பாரை எடுங்கள்.

    இப்படிக்கு…
    ஆன்டிலியா.

  8. இப்ப என்ன சொல்ல முயற்சி செய்கிறீர்கள்? அம்பானி தாராவில வந்து தங்கணும்னு சொல்றீங்களா? இல்ல அவர் உழைத்த பணத்தை தெருவில் எல்லோருக்கும் கொட்ட வேண்டும் என்று சொல்றீங்களா?

    அவரவர் உழைப்பு அவரவருக்கு பலன், எவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவர் அவரை எல்லாம் இப்படி இழுக்கலாமா?

    காசு வாங்கி ஓட்டு போடும் போது இந்த தண்ணீர் பிரச்சனை எல்லாம் நினைவில் இருக்க வேண்டும் அல்லது அப்படி ஆட்சிக்கு வந்த அரசியல் வா(வியா)தி வீட்டில் போய் கேட்க வேண்டியதை விட்டு விட்டு…!

    அம்பானி பின்னால் போய் (வேடிக்கை) பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதை விட வேடிக்கை உங்கள் சொந்த தண்ணீர் கணக்கை இதில் ஒப்பிட்டு பார்ப்பது.

    • அதான் கிழக்கு பதிப்பாக புத்தகத்தை படிச்சுட்டு நீங்க எல்லாம் பூஜை போட்டு கொண்டடுரின்களே சிங்க குட்டி ? ஒரு வேலை பெட்ரோல் விலை ரகசியம் கூட தெரியல போல ? அப்பப்பா நம்ம நாட்டுல தான் எவ்ளோ கேனயனுங்க ?

  9. /அவரவர் உழைப்பு அவரவருக்கு பலன், எவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவர் அவரை எல்லாம் இப்படி இழுக்கலாமா?//
    //அம்பானி பின்னால் போய் (வேடிக்கை) பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதை விட வேடிக்கை உங்கள் சொந்த தண்ணீர் கணக்கை இதில் ஒப்பிட்டு பார்ப்பது.//

    ஐயோ பாவம் ஒன்னுந்தெரியாத பச்சை மன்னா இருக்கியேப்பா . அடப்பாவி எத்தனை கட்டுரை இது மாதிரி எழுதினாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது

  10. சேமிப்பு என்பது உருவாக்கத்திற்கு நிகரானது அது எல்லா விசயத்திலும்

  11. does any one know where to lodge complain if some one sells water from borewell.. due to one person entire street has lost ground water and luckily that guy selling for 24/7…

  12. குடிக்க தண்ணியில்ல கொப்புளிக்க பண்ணீரு அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவுளு…… அப்படின்னு ம.க.இ.க தோழர்கள் போராட்ட கலத்தில் பாடிய பாடல்தான் ஞாபகத்துக்கு வருது.

  13. அம்பானி கழுவ எவ்வளவு செலவாகிறது என்று கண்டுபிடித்து வினவு நம்ம ஜனாதிபதி மாளிகை, கவர்னர் மாளிகை, முதலமைச்சர் இல்லம், முன்னாள் முதல்வர் இல்லம் பற்றி எல்லாம் சற்று வினவலாமே.

    என்னமோ அம்பானி மட்டும் அப்படி செய்யுற மாதிரியும் மத்தவங்க எல்லாம் நல்லவங்க மாதிரியும் இல்ல இருக்கு.

  14. இல்லீங்கோ கருப்பு.அண்டா சோருக்கு ஒரு சோறு.குக்கருக்கு அய்ந்து விசில் மாதிரி.அம்பானிய சொன்னா. இந்தியாவையே சொன்ன மாதிரிங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க