Saturday, September 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

-

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!
அம்பானியின் ஆன்டிலியா

“ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு”… என்று வாய்ப்பாடு படித்து கூட்டலையும், கழித்தலையும், அதன் சுருக்கங்களான பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு. சொத்துடைமையின் நதி மூலத்தை பின் தொடர்ந்தால் கண்ணுக்கு தெரியும் அந்த மாய மாட்ரிக்ஸ் உலகத்தை எந்த கணித வல்லுனனும் கட்டவிழ்க்க முடியாது. அது கணிதத்தின் தோல்வியா, கணிதத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்காத ‘கலையா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மட்டும்தான் மக்கள் வருவார்கள். மற்ற கணக்கெடுப்புகளெல்லாம் பங்குகளின் முதல்வோரைகளைத்தான் சுற்றி வரும். கணிதத்தில் கூட வர்க்க வேறுபாடு துல்லியமாக நிலவுகிறது என்பது கணிதத்தின் குற்றமா, கணக்கு பார்க்க தெரியாத இந்த தேசத்தின் குற்றமா?

எங்கும் இறைந்து கிடக்கின்றன புள்ளிவிவரங்கள். நோய், சாவு, பசி, பஞ்சம், பட்டினி முதலான விவரங்களால் சலித்திருக்கும் உங்கள் கண்களை கனவோடு மின்ன வைக்கும் புள்ளிவிவரங்களும் இந்த உலகில் உண்டு. கனவிலும் எட்ட முடியாத அந்த கனவுகளின் கணக்குகளை வெளியிடுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கேள்விப் பட்டிருப்பீர்களே, உலகின் பணக்காரர்களது பட்டியல்களை….

ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்திருக்கும் மதிப்பீட்டின்படி 2014ஆம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா? அவர் முகேஷ் அம்பானி என்ற இந்தியன்தான் என்றால் உங்களுக்கு பெருமை இல்லையா? 70,000 கோடி ஊழல் பணமென்றாலும் காமன்வெல்த்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தபோது நீங்கள் பெருமைப்படவில்லையா என்ன? தகுதி, தராதரம் பார்த்தெல்லாம் நாம் பெருமைப்படுவதில்லை எனும் போது உலக பணக்கார வரிசையில் முதலிடம் ஒரு இந்தியனால் நிரப்பப்படப் போகிறது என்றால் சாதரணமா என்ன?

அந்த வரலாற்று சிறப்பைப் பெறப் போகும் முகேஷ் அம்பானி தன் தகுதியை முன் ஊகித்திருப்பாரோ தெரியவில்லை. இல்லையென்றால் அவரது தகுதிக்கேற்ப இத்தகைய பிரம்மாண்டமான மாளிகையை ஏழு ஆண்டுகளாக கட்டியிருக்க மாட்டார். 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அந்த மாளிகை விற்பனைக்கு இல்லை என்பதால் உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீடு என்று அதை புகழ முடியவில்லை என்று வருத்தப்படுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால் மதிப்பெல்லாம் விற்பனையின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்காது என்பது அந்த பத்திரிகைக்கு மட்டுமல்ல அம்பானிக்கும் தெரியும்.

சில ஆயிரங்களை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் மராட்டிய விவசாயிகள் வாழும் விதர்பாவின் தலைநகரான மும்பையில் ஒரு பில்லியன் டாலர் செலவில் அம்பானி கட்டிமுடித்து புதுமனைப் போகும் அந்த மாளிகையின் அருமை பெருமையெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

27 மாடிகள், 9 உயருந்துகள், மாளிகையை பராமரிக்க 600 ஊழியர்கள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கும் தளங்கள், நீச்சல் குளங்கள், கண்ணாடிகளால் செதுக்கப்பட்ட உணவகம், அதி நுட்பமான திரையரங்கம், உடற்பயிற்சியகம், 160 கார்கள் நிறுத்துமிடம், கார்களை பழுதுபார்க்குமிடம், சிறு மருத்துவமனை, விருந்தினர் அறைகள், கருத்தரங்க அறைகள் கிட்டத்தட்ட அங்கு ஒரு மேட்டுக்குடி ஹைடெக் நகரமே இருக்கிறது. இந்த மாளிகையில் மூன்று குழந்தைகளோடு அம்பானி தம்பதியினர் தங்கப்போகும் இடத்தின் பரப்பளவு 5,00,000 சதுர அடிகள்….

தாராவி
மும்பையின் சேரி - தாராவி

பத்துக்குப் பத்து இடத்தில் பத்து ஏணிக் கட்டில்களை வைத்து பொந்துகளைப் போல பதுங்கி வழியும் சேரிகளின் நகரத்தில் அரபிக் கடலைப் பார்த்தவாறு எக்காளத்துடன் எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. உலகின் முதல் பணக்காரர் தங்கப் போகும் அந்த மாளிகையை பல்லாயிரம் தொழிலாளிகள் ஏழு ஆண்டுகளாக கட்டி இல்லை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு ஆஸ்திரேலியா நிறுவனமும் பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்த பெருமை மிகு இந்தியனது மாளிகையை கட்டி முடித்திருக்கின்றன.

அக்டோபர் 28 இல் திறக்கபட உள்ள இந்த மாளிகையின் பால் காய்ச்சும் நிகழ்விற்கு பிரதமர் மன்மோகன் சிங் வருகிறாராம். மத்திய அரசின் பட்ஜெட்டே ரிலையன்சின் அலுவலகத்தில் திருத்தப்பட்டு வெளிவரும் காலத்தில் பிரதமர் ரிலையன்சின் உரிமையாளர் வீட்டு திருவிழாவிற்கு வருவது பொருத்தமானதுதான். மத்திய அரசு கிராமத்து மக்களுக்கு வீடு கட்டிக்க கொடுக்கும் திட்டத்தின்படி வீடு ஒன்றுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அறுபதாயிரம் மட்டும்தான். இதேதொகை அம்பானி வீட்டில் எச்சில் துப்பும் ஒரு கிண்ணத்தின் விலையருகே கூட வராது. விருந்தினர்களில் பிரதமரே இருப்பதால் மற்றவர்களை இங்கே நாம் பட்டியலிட வேண்டியதில்லை.

நடுத்தர வர்க்கத்தின் கனவில் முதலிடம் பிடிப்பது வீடுதான். அந்தக் கனவிற்காக படும் ‘துன்பங்களை, தியாகங்களை’ பாலுமகேந்திராவின் “வீடு” திரைப்படத்தில் கண்டு உருகாதவர் எவருண்டு? இல்லை “காணி நிலம் வேண்டும், பராசக்தி” என்று பாரதியின் படிமங்களில் மூழ்காதவர் யார்? குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஒரு வீட்டைக்கட்டி முடித்துவிடுவதிலேயே வாழ்க்கை கழிந்துவிடுமென்றாலும் அந்த இன்பமான துன்பத்தை நடுத்தர வர்க்கம் விரும்பித்தான் செய்கிறது.

அந்த நடுத்தர வர்க்கம் பிறந்த நாளுக்கு விழா வைத்து கொண்டாடும் இந்த நாட்டில்தான், இதே நாட்டில்தான் பிறந்த தேதி கூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?

ஆனாலும் அம்பானியின் மாளிகை சாதாரண நடுத்தரவர்க்க கனவின் வெளிப்பாடு அல்ல. அது பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை பறைசாற்றும் ஒரு பிரகடனம். எனினும் அந்த மாளிகைக்கு அம்பானி வைத்த பெயர் ஆன்டிலியா. பொருள் என்ன? அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு மர்மமான தீவின் பெயராம் அது. பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. அதாவது அம்பானியின் ஆன்டிலியா, ஒரு மர்ம மாளிகை.

இந்திய முதலாளிகளிலேயே ஏமாற்று, மோசடி, அதிகார பலம், அரசியல் துஷ்பிரயோகம் அனைத்திலும் சாதனை படைத்து தனது பேரரசைக் கட்டியவர் செத்துப் போன அம்பானி. அவர் சேர்த்த சொத்து அனைத்தும் மொள்ளமாரி, முடிச்சவிக்கி வழியில் வந்ததுதான். அம்பானி வளர்ந்த கதையில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க முடியாது. ஆக அந்த வரலாற்றுக்கு உகந்த விதத்தில்தான் இந்த மர்ம மாளிகைக்கு ஆன்டிலியா பெயர் பொருத்தமாகவே இருக்கிறது.

விரைவில் ஆன்டிலியா மாளிகையின் அருமை பெருமைகள் குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியடலாம். ஊடகங்கள் அதன் சிறப்புகளை வியந்தோதி வரும் நாட்களில் பொழிப்புரை செய்திகளை தரலாம்.

ஆன்டிலியா உருவான விதம் குறித்த புள்ளி விவரங்கள் தினசரிகளை நிரப்பலாம். ஆனாலும் ஆன்டிலியாவின் பின்னே தூக்கில் தொங்கிய விவசாயிகளின் புள்ளிவிவரங்களும் இருக்கத்தான் செய்கின்றது. மதிப்பு பெறும் புள்ளிவிவரம் எதுவென்று சொரணை வரும்போது ஆன்டிலியாவின் மதிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.  அதுவரை புள்ளிவிவரங்கள் ஆபாசமாக ஆட்டம் போடும். இரசிப்பீர்களா, காறி உமிழ்வீர்களா?

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!…

    ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு… என்று கூட்டலையும், கழித்தலையும், பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு….

  2. கே.ஆர். அதியமான் இந்த நேரத்துக்கெல்லாம் ஆஜராகியிருக்கனுமே? எங்கே போயிட்டார்? வந்தா ஸ்டார்ட் மூஜிக் சொல்லிட்டு ஓரமா ஒக்காந்து வேடிக்கை பாக்கலாம்.

    • பண்னாடைங்க இருக்குற இடத்துல எனக்கு என்ன வேலைன்னு வரலையோ என்னவோ?

  3. adutha nattu velli kasai uriki panam sekkaravan
    parambarai pinna ipadi than irukum… ivanunga kattittu irunganunga.. mathavan katta mudiyama irukaranga. than asaya thalamai seyalagam katti theerkaravangalum irunkangale?

    makkal innamum vedikkai pakka porangala?

    illa vedikka porangala?

  4. வீடில்லாத ஏழைகள் இருக்கும்போது இப்படி ஆடம்பர வீடுகட்டுவது அடாவடியாகத் தொன்றினாலும், வியாபாரம் செய்கிறார், சம்பாதிக்கிறார், கட்டுகிறார் என்றும் தோன்றுகிறதே. உங்களுக்கு தோன்றும் தர்க்கரீதியானக் கருத்துகள் என்னைப் போன்றோர்களுக்கு இந்தக்கட்டுரை ஏற்படுத்தவில்லையோ எனத் தோன்றுகிறது. இல்லை எனக்குப் புரியவில்லையா எனத் தெரியவில்லை. நான் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

    • “செத்தபின் திருடுவார் திருட்டுபாய் அம்பானி” படித்தேன். ஓரளவு புரிந்தது. இன்னுமொரு முறைப்படித்தால் புரியுமோ? வேறென்ன வேலை, படிக்க வேண்டியதுதான்.

  5. வினவுக்கு

    எல்லாத்தையும் கொற சொல்றதே உங்க வேலையாப்பா. கடவுள் தன் சாயலில் மனிதனை படைத்ததை போல் வயிறு ஒட்டிய ஏழையின் சாயலில் தன் கனவு இல்லத்தை படைத்த அண்ணன் மனிதருள் மாணிக்கம், தந்தை சொல் தட்டாத் தனயன் முகேஷ் அம்பானி வாழ்க.

  6. மேற்கத்திய நாடுகளில், இது போன்ற மாட மாளிகைகளை,பெரும் செல்வந்தர்கள், கட்டுவது சகஜம் தான்! நமது முன்னாள் முதல்வர் ஒருவரே, லண்டனில் பெருமாளிகை ஒன்றை வாங்கி, பின் எதிர்ப்பு வந்தபின் விற்றதாகக் கேள்வி!

    அம்பானியின் மாளிகை, ஆடம்பரமே எனினும், மற்றவர்களுக்கு ஒரு லட்சிய உந்துகோல்! அடுத்தவன் வாழ்வதைப் பார்த்து, சோம்பேறித் தனத்தை விட்டு, உழைத்து நம்மால் ஆகும்வரை முன்னேற, இது போன்ற ஆடம்பர சின்னங்கள் காரணிகளே!

  7. மேற்கத்திய நாடுகளில், இது போன்ற மாட மாளிகைகளை,பெரும் செல்வந்தர்கள், கட்டுவது சகஜம் தான்! நமது முன்னாள் முதல்வர் ஒருவரே, லண்டனில் பெருமாளிகை ஒன்றை வாங்கி, பின் எதிர்ப்பு வந்தபின் விற்றதாகக் கேள்வி!

    அம்பானியின் மாளிகை, ஆடம்பரமே எனினும், மற்றவர்களுக்கு ஒரு லட்சிய உந்துகோல்! அடுத்தவன் வாழ்வதைப் பார்த்து, சோம்பேறித் தனத்தை விட்டு, உழைத்து நம்மால் ஆகும்வரை முன்னேற, இது போன்ற ஆடம்பர சின்னங்கள் காரணிகளே!

    • \\அம்பானியின் மாளிகை, ஆடம்பரமே எனினும், மற்றவர்களுக்கு ஒரு லட்சிய உந்துகோல்! அடுத்தவன் வாழ்வதைப் பார்த்து, சோம்பேறித் தனத்தை விட்டு, உழைத்து நம்மால் ஆகும்வரை முன்னேற, இது போன்ற ஆடம்பர சின்னங்கள் காரணிகளே!//

      என் பள்ளித்தோழன் நாகராசு காலை நான்கு மணிக்கு கோயம்பேடு சந்தைக்கு போய் தனது மளிகை கடைக்கு காய்கறி கொள்முதல் செய்யும்போது அவனது நாள் துவங்குகிறது.இரவு 11 மணிக்கு மேல் கடை மூடும் வரை அவனது நாள் நீடிக்கிறது.இடையில் மதிய உணவுக்கு பின் எடுக்கும் ஒரு மணி நேர ஓய்வுதான் அவனது அதிகபட்ச உல்லாசம்.பதினைந்து ஆண்டு கால கடும் உழைப்புக்கு பின்னும் அவனால் ”ஆன்டிலியாvin aduppadi alaவை” விடுங்கள், ஆண்டி ஒண்டும் திண்ணை அளவில் கூட ஒரு வீடு வாங்க முடியவில்லை.

      அதிகாலை ஐந்து மணிக்கு தொடர்வண்டி நிலையத்தில் சவாரிக்கு காத்திருக்கும் தானி ஓட்டுனர்களிடம் பேசிப் பார்த்திருக்கிறீர்களா.அதிகாலை நான்கு மணிக்கு உழைக்க ஆரம்பிக்கும் அவர்கள் இரவு வரை உழைக்கிறார்கள்.ஆயினும் அவர்களில் பலர் இன்னும் சொந்தமாக தானி வாங்க இயலாதவர்களாக உள்ளனர்.

  8. Spice Jet தனது சேவையை இலங்கைக்கு தொடங்கியுள்ளது என்பதனை அறிந்து அதிர்ந்தேன் . கருணா சிங்களர்களுக்கு ஆதரவாக செயல் பட்டதற்காக கிடைத்த சலுகையா???
    பிணம் தின்னி என்பதனை நிருபித்து விட்டார்.

  9. ///ஒண்டுவதற்கு ஒரு ஓட்டையில்லாதா கூரை கிடைக்குமா என்று தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு சொந்த வீடு குறித்த கனவும் அதை நிறைவேற்ற அழைக்கும் வங்கிக் கடன்களும் பார்ப்பதற்கு உறுத்தலாக இல்லையா?////////

    இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றும் பிரச்சனையை வைத்துக்கொண்டு என் அம்மா ’ஒரு வீட்டை லோன்ல வாங்கேண்டா’ என்று நிர்பந்திக்க ஆரம்பித்தார். அப்போது சிறிது தடுமாற்றம் இருந்தாலும், பின்னர் தோழர்களுடன் பேசும் போது தெளிவடைந்தேன்! தடுமாறியதற்காக இப்போது வெட்க்கபடுகிறேன்..

    ///ஆன்டிலியா///// பேரே சூப்பரா இருக்கே?? போன்டிலியா ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை…

  10. வாரன் பஃபெட் என்ற அமெரிக்க பில்லியனர், 1957 ஆம் ஆண்டு 31,000 டாலருக்கு தான் வாங்கிய வீட்டில் இன்னும் வசித்து வருகிறார். ஆனால் வேறு பல பணக்காரர்கள் ஆடம்பர பங்களாக்கள் கட்டி இருக்கிறார்கள். http://www.forbes.com/2003/09/18/cx_bs_0918home400.html
    அமெரிக்கா போன்ற பணக்கார நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சுமாரான வசதிகளோடு வாழும் போது இது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் தாராவி போன்ற சேரிகளில் லட்சக்கணக்கானோர் உழலும் போது, இந்தியாவில் ஆண்டிலியா மிகவும் அருவருப்பாகத்தான் தெரிகிறது. புளுட்டோகிராபி (Plutography) என்ற ஆங்கில சொல் தான் நினைவுக்கு வருகிறது. புளூட்டோ என்றால் செல்வம் – கிராபி என்றால் படம். அம்பானிகளின் இந்த ஆடம்பரம் போர்னோகிராபி (Pornography) எனப்படும் ஆபாசப்படத்தைப் போலத்தான் இருக்கிறது.

    • வாரன் பஃபெட் நம்ம அம்பானியை விட பணக்காரர். ஆனால் இப்போதும் தனது காரை தானே ஓட்டுகிறார். தனது வருமானத்தில் 25% நன்கொடையாக வழங்குகிறார். ஏன் பில் கேட்ஸ் கூட தனது வருமானத்தில் பெருந்தொகையாக நன்கொடை வழங்குகிறார். ஆனால் அம்பானி ஒரு பைசா நன்கொடை ஏழைகளுக்கு கொடுத்துருகிரானா? இப்போதும் ஏழைகளை சுரண்டிக்கொண்டேயிருக்கிறான்

      • ஏழைகளை ‘சுரண்டுவது’ என்பது இத்து போன வாதம். சுரண்டுவதற்க்கு யாருமே இல்லை என்றால், என்னவாகும். ரிலையன்ஸில் வேலை செய்பவர்களுக்கு, சராசரி இந்திய சம்ளத்தை விட அதிகம் தான். ரிலையன்ஸின் பல பண்டங்கள் மற்றும் சேவைகளை உபயோக்கிகும் கோடிக்கணக்கான மக்கள் இதை பற்றி என்ன கருதுகிறார்கள் என்று பார்க்கலாமா ?

        அம்பானிகளின் ஊழல்கள், அரசு எந்திரதை லஞ்சம் கொடுத்து தமக்கு சாதகமாக பயன்படுதும் முறைகேடுகள் : இவை தான் தடுக்கப்பட வேண்டியவை. இது லைசென்ஸ் ராஜ் காலத்தில் இருர்ந்து துவங்கியது. அதன் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. அருண் ஷோரி, அன்று ரிலையன்ஸை கடுமையாக விமர்சித்தவர் ; அவர் சில காலம் முன்பு பேசினார் : ரிலையன்ஸ் லைசென்ஸ் கட்டுபாடுகள் நிறைந்த காலத்தில், அதை லஞ்சம் கொடுத்து பயன்படுத்தியது. ஆனால் அக்கட்டுபாடுகளே தவறானவை. அவை இல்லாமல் இருந்திருந்தால், வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும். இத்தணை ஊழல் உருவாகியிருக்காது என்றார்.

        சரி, ரிலையன்ஸ் ஒரு பைசா கூட நன்கொடையாக அளிக்கவில்லை என்பது தவறு :

        http://www.ril.com/html/aboutus/social_resp_comm_dev.html

        Social Responsibility and Community Development

        ஆனால் இவை எல்லாம் முக்கியமல்ல. ரிலையன்ஸ் தனது உற்பத்தியை நல்ல முறையில், நல்ல தரத்துடன், நேர்மையாக செய்தாலே போது. பெரும் வரி கட்டுவது, அருமையான பண்டங்களையும், சேவைகளையும் அளிப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது : இவையே போதுமானது.

        அம்பானி கட்டும் மாளிகை பற்றி கருத்துவேறுபாடுகள் உள்ளதுதான். அது தேவையில்லை, வீண் ஆடம்பரம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஜனனாயக நாட்டில், இதை தடுக்க சட்டத்தால் முடியாது / கூடாது.

  11. Dear Sir,

    Ambani’s case is much better – atleast he used ancestral property (that itself
    flicked one is a different story)…and he is running a big business empire..

    Please try to answer or find out answers for the following questions of mine.
    Some are directly relevant & some might not be..

    (1) One fine night, our CM MK started a satellite channel.
    (2) In few months, 1 became 3 or even 4 TV channels now.
    (3) Using money power (money came from where first ???), big stars (Kushboo, Namitha etc,.) were added to MM and Kalaignar TV became direct competitor for
    Sun & Co.
    (4) For writing story and dialogues, how MK got 50L for Uliyin Osai.
    (5) How every MLA / MP in TN has become a education-alist.. school, engineering
    college, dental college, physiotherapy..
    (6) How Udayanidhi Stalin is able to finance 2 super big budget movies parallely..
    7th Arivu (Suriya, Murugadass) and Manmadan Ambu (Kamal, Trisha, KSR)
    (7) How Dayanidhi Alagiri is able to make so many movies, without a official
    background
    (8) How Mr. Alagiri showed 19.5C assets in last MP elections..
    (9) How MK has got 25C property
    (10) How Kanimozhi got 7.5C property
    (11) How Amma got 26C property
    (12) How Amma was able to buy Paiyanur bangalow & estate, like buying a banana in road side shop.
    (13) How Mr. (Sasi) Natarajan and co. was able to import Lexus car?
    (Ada, that’s my dream car ofcourse.. )
    (14) How adapted son Sudhakaran aka Chinna MGR became millionaire overnight?.
    (15) Madurai Kanja Azhagi (what a title given by our tamil newspapers) Sherina
    Bhanu – how did she have around 1.5C at home ?. Who gave her that money?.
    And how come, the case is closed without fanfare ?.
    (16) Who tried to stab Stalin with a knife, in Madurai railway station some years
    back ?. For this only, he got VIP security..
    (17) How come, every family member of MK has got their own house, that too in main localities, that too a big 1?. There is no person, who is in 30×40 site 🙂
    (18) Why Poonai kan bhuvaneswari matter suddenly kept silent ?.

    When I read your blog, all the above items came to my mind..
    Really don’t know, what is the link between them….

    If you know, please blog.

    Sudharsan

    • எல்லாம் கடின உழைப்பு சாமி…நேற்று காலை கோபாலபுரம் வழியாக வந்தபோது
      கனிமொழி நாற்று நடுவதையும் கனிமொழி அம்மா களை எடுப்பதையும்
      கண் கூடாகக் கன்டேன் சாமி….
      கனிமொழியின் அப்பாவுக்கு வீட்டுக்கு வீடு பால்”ஊத்தும்” வேலை….ஏதோ கால் வயிறோ/அரை வயிறோ கஞ்சி……

  12. ஒவொரு மனிதனும் முன்னேறும் பொழுது பல தடைகளை தஹ்ண்டி வருகிறான், பெரும்பாலும் அவன் முன்னேற்றத்திற்கான வழிகள் அவனுக்கு சரியாகவே படுகிறது, ஆனால் அதில் குறைத்தபட்ச நேர்மையாவது வேண்டும், வேகமாக வளரும் எவரும் இதை மதிப்பதில்லை, சரியான வழியில், சரியான முறையில், நேர்மையாக முன்னேறும் ஒருவர் எப்போதும் சவால்களையும், பிரச்சினைகளையும் சந்தித்தாகவேண்டும், ஒவொரு நாளும் சராசரி மனிதனுக்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான், அதுதான் சந்தோசம்,

  13. நாம் வாழும் நாட்டில் சாகும் வரை சொந்த வீடு என்று ஒரு குடிசை கூட கட்டிக்கொள்ள முடியாத மக்கள் எத்தனை தலைமுறையாக இருக்கின்றனர்?உணவு உடை படிப்பு பணம் எதுவுமே சாத்தியமே இல்லாமல் அதற்கான காரணமும் அறியாமல் மடியும் மக்கள் எத்தனை?ஐந்து பேர் வசிக்க ரூபாய் 5000 கோடியில் கட்டிய வீட்டை அவன் பார்த்தால் என்ன நினைப்பான் என்று அம்பானி கொஞ்சமும் யோசிக்க தேவை இல்லை .கர்ம வினைப்படி அவர் மற்றும் அவர் மூதாதையர் செய்த புண்ணியங்களும் அவர் பிறந்த ஜாதகமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு சரக்கு அடித்துவிட்டு தூங்கி
    விடவேண்டும் அவன் என்று தானே வீட்டுக்கு பக்கத்தில் ஈசியாக கள்ளச்சாராயம் கிடைக்க செய்வது.அவன் விழித்தால் தூங்க முடியுமா அம்பானிகளால்.

  14. வினவு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உலக வங்கி பிரதமர் மண்ணுமோகன், தண்டகாரண்யாவை தவிடுபொடியாக்கும் மாவீரன் உள்துறை செட்டியார் மாதிரி சிந்திக்க கத்துக்கோணும்.
    ஆண்டிலியாவால 600 இந்தியர்களுக்கு வேலை கெடச்சுருக்கு. மக்களோட வாங்கும் சக்தி அதிகரிச்சு (??) போங்கு அடச்சீ பங்கு மார்க்கெட்டு உசந்துபோச்சு.ஏழை மக்களெல்லாம் மாளிகைய பாத்து உழைச்சு முன்னேறனுங்கிற(!!!) உத்துவேகத்தை கொடுத்துருக்கு.
    ஆகவே, ஆண்டிலியாவை சிறப்பு பெருச்சாளி மண்டலமாக(sez-நன்றி. செங்கொடி மருது) அறிவித்து 99 வருடங்களுக்கு 24மணிநேர இலவச மின்சாரம்,சொத்துவரி மத்தவரி விலக்கு ஆகியவற்றை தரக்கோரி ஒரு பதிவை வினவு வெளியிடவேண்டும்.

  15. ‎9,000 cr la வீடுனா அது எப்படி தான் இருக்கும் …. நிச்சயம் அம்பானி மாதிரி ஒரு அப்பன்
    கிடைகலஎனு ஏக்கம் தான் வரும். அம்பானி சட்டதில இருக்குற ஓட்டையெல்லாம்
    உஸ் பண்ணி இந்தியால முதல்ல வந்தார். இப்ப அதைவிட கிரிமினல் புத்தியோட
    முகேஷ் வரபோறான்… ஆண்டவன பார்த்து இவனுகளோட வளர்ச்சியை தடுத்தால் தான்
    உண்டு.. இல்லை உலகத்தையே ஏப்ப…ம் விற்றுவானுங்க..

    • இது இயலாமையின் வெளிபாடு இல்லை, உண்மையின் வெளிபாடு, அனைவரும் இப்படியே நினைத்து வந்தால் இந்த மாளிகையை போல பல முதலாளிகள் மக்கலுக்கு சேரவேண்டிய பணத்தை இப்படி மாளிகைகளாக கட்டிக்கொண்டு இருப்பார்கள், ஏழைகள் குடிசை கூட இல்லாமல் நடுத்தெருவில் இருப்பார்கள், நடுத்தர வர்க்கம் பிச்சை எடுக்க நேரிடும்,

      செந்தில் அவர்களே புரிஞ்சிகொங்க ………………..

      • உங்கள் வீடு அல்லது நீங்கள் கட்ட போகும் வீடு, உங்கள் வசதிகேற்ப இருக்குமா, அல்லது ஏழையின் குடிசை போல இருக்குமா? உண்மையை சொல்லவும்…

        • வாரன் பஃபெட் நம்ம அம்பானியை விட பணக்காரர். ஆனால் 1957 ஆம் ஆண்டு 31,000 டாலருக்கு தான் வாங்கிய வீட்டில் இன்னும் வசித்து வருகிறார். இப்போதும் தனது காரை தானே ஓட்டுகிறார். தனது வருமானத்தில் 25% நன்கொடையாக வழங்குகிறார். ஏன் பில் கேட்ஸ் கூட தனது வருமானத்தில் பெருந்தொகையாக நன்கொடை வழங்குகிறார். ஆனால் அம்பானி ஒரு பைசா நன்கொடை ஏழைகளுக்கு கொடுத்துருகிரானா? இப்போதும் ஏழைகளை சுரண்டிக்கொண்டேயிருக்கிறான்.
          வாரன் பஃபெட் பிறவி பணக்காரர் இல்லை 11 வயதில் இருந்து உழைத்து உயர்ந்து இருக்கின்றார்.

  16. We have to see the job opportunity for 600 peoples. If this palace is not there then where these people will go for job.
    BTW, that bloody may not repay the loan drawn from the nationalized banks for his company… and how the f**k going to collect the same.

  17. இது போன்ற அநியாயங்களை மக்கள் உணரவேண்டும், ஆனால் மக்களோ இதெல்லாம் முன்னோர்கள் செஞ்ச புண்ணியம், நம்ம முன்னோர்கள் யாரும் புண்ணியம் செய்யல என்று தங்கலலுக்குள் ஒரு முடிவை எடுத்து கொள்கின்றனர், உண்மையில் அம்பானி காட்டியுள்ள இந்த மாளிகை மக்களின் பணத்தை திருடி கட்டப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு
    தெரியவில்லை, தங்களுக்கு சேர வேண்டிய பணம் அம்பானி போன்ற திருட்டு முதலாளிகளின் கையில் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த வேண்டும், கம்யுனிசம் வந்தால் நல்லா இருக்கும்…………………………………..

    • ராஜசூரியன்.. அவர்களே!!

      //அம்பானி போன்ற திருட்டு முதலாளிகளின்///
      நம்ம நாட்டுல நல்ல முதலாளி யாரவது இருக்காங்களா? pls .. சொல்லுங்களேன்.

        • திருட்டுல நல்ல திருட்டு இருக்கலாம்.
          நா கேட்டது..முதலாளிகள்ள நல்ல முதலாளி இருக்காளான்னு? உங்களுக்கு தெரிஞ்சி யாரவது இருக்காளா? கொஞ்சம் சொல்லுவேளா?

        • ///திருட்டுல நல்ல திருட்டு இருக்கலாம்.////

          உங்களுக்கு நல்ல திருட்டும் இருக்கலாம், நல்ல முதலாளியும் இருக்கலாம்!!!
          அசிங்கத்தில் கூட நல்ல அசிங்கம் இருக்கலாம்!
          🙂

        • ரொம்ப உரலிடீங்க ( சாரி உளரிட்டீங்க ) . அசிங்கமாத்தான் இருக்கு உங்க பதில படிக்க பரவால்ல…மன்னிச்சிட்டேன்..

  18. வயித்தெறிச்சல் கேசுகளா! மாதம் ரூ.10000 சம்பளம் வாங்குபவன் 20 லட்சம் ரூபாயில வீடு வாங்கனும்னு கனவு கண்டு அதை சாதிக்கும்போது, மாசத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்குறவங்களே பல நூறு கோடி சொத்து வச்சுக்கிட்டு இருக்கும்போது, ஒரு நாளைக்கு கோடிக்கணக்குள சம்பாதிக்கும் அம்பாணி ஆண்டிலியா கட்றதுல என்ன தப்பு?

    அம்பாணி குடும்ப தொழில்களால எத்தனை ஆயிரம் குடும்பங்கள் ஏழைகளாகாம இருக்காங்க? அது ஏன் உங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாதா? அம்பாணி குடும்ப தொழில்களால எத்தனை கோடி ரூபாய் நாட்டுக்கு வரி கிடைக்குது? அந்த வரிப் பணத்தை சுரண்டித் திங்கிற அரசியல்வாதிகளே வெகு ஆடம்பர பங்களாக்களில் வசிக்கும்போது, அம்பாணி வசிச்சா என்ன தப்புங்கிறேன் ?

    5000 கோடி ரூபாய் வீடுன்னாலும் வெளிப்படையா சொல்றாரு அம்பாணி. எத்தனை அரசியல்வாதி அவங்க சொத்து மதிப்பை சரியா சொல்ல முடியும்?

    அப்படி ஏழைகளுக்காக வக்காளத்து வாங்குற, இந்த வினவுல எழுதுன யாராவது அவங்க வீட்டுத் திண்ணையில ஒரு ஏழை தூங்க இடம் தருவீங்களா?

    • ஆப்பிரிக்காவை விட அதிகமான ஏழைமக்கள் வாழ்கிற இந்தியாவில், பெரும்பான்மையான மக்களை ஆண்டியாக்கித்தான் ‘ஆண்டிலியா’ கட்ட முடியும் என்பது உங்கள் அறிவிற்கு எட்டாத கருத்தாக இருக்கிறதா?

      அரசியல்வாதி ஊழல் பெருச்சாளியாகிட்டானுங்க… சரி, பெருச்சாளிக்குத் தீனி போட்டது யாரு? ராசாவுக்கும் தி.மு.கவுக்கும் 4000 கோடி கொடுத்தது யாரு? இவர்கள் கட்சி நடத்த பணம் கொடுப்பது யாரு? மக்களிடம் அன்பளிப்பு பெற்றா கட்சி நடத்துகிறார்கள்?

      போஃபோர்ஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், சவப்பெட்டி ஊழல்… இப்படி எல்லா ஊழல்களிலும் காசு கொடுத்தது யார்? எதற்காக கொடுக்கிறான்? போபால் கொலையாளி ஆண்டர்சனால் எப்படி அமெரிக்காவுக்கு தப்பி ஒடமுடிந்தது? ஆண்டர்சனுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குமாறு அமெரிக்க உள்துறை செயலாளர் ஏன் இந்தியாவை மிரட்டுகிறான்? இதையெல்லாம் உங்களால் ஆராய முடியவில்லையா?

      இந்தப் போலியான அரசையும் , அரசாங்கத்தையும், ஜனநாயகம் என்கிற முகமூடியுடன் முதலாளிகள் நடத்துவதாகத்தானே இவை நிரூபிக்கின்றன?

      பூ, முடிந்தால் கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப்பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்கள்.

      உங்கள் கடைசி பத்தி கேள்வியை இடம் மாறிவந்து கேட்டிருக்கிறீர்கள். தோழர்கள் ஏழைகளோடே தூங்கிப் பழக்கப்பட்டவர்கள்.

    • \\அம்பாணி குடும்ப தொழில்களால எத்தனை ஆயிரம் குடும்பங்கள் ஏழைகளாகாம இருக்காங்க? அது ஏன் உங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாதா//
      அம்பானியின் சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நிலங்களை விட்டு துரத்தப்பட்ட ஏழைகளை உங்களுக்கு தெரியவே தெரியாதா.

      \\அம்பாணி குடும்ப தொழில்களால எத்தனை கோடி ரூபாய் நாட்டுக்கு வரி கிடைக்குது?//
      ஏமாற்றிய வரி எத்தனை கோடி

      \\அந்த வரிப் பணத்தை சுரண்டித் திங்கிற அரசியல்வாதிகளே வெகு ஆடம்பர பங்களாக்களில் வசிக்கும்போது, அம்பாணி வசிச்சா என்ன தப்புங்கிறேன்//
      நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையான இயற்கை வளங்களை அம்பானி சுரண்டி தின்பது பற்றி எதுவும் சொல்லமாட்டீர்களா.கிருசுனா-கோதாவரி படுகை அம்பானிக்கு அப்பன் வீட்டு சொத்தா அதன் எண்ணை வளங்களை பெருமளவு அம்பானி அள்ளிக்கொண்டு போக.

      \\5000 கோடி ரூபாய் வீடுன்னாலும் வெளிப்படையா சொல்றாரு அம்பாணி//
      ரிலையன்சு தொலைதொடர்பு நிறுவனம் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக காட்டி கொள்ளையிட்டது எத்தனை கோடி என்பதையும் வெளிப்படையாக சொல்வாரா அம்பானி.

      • They paid more than 600 cr twice as penalty… im not sure they really paid the full amount for now.. they also made huge money thro providing insurance for loss of cell phone when they came to market.. new law was created only for them.. thatz the time in 2002 ppl use to use Reliance phone for more than 4000 to 40000Rs and throw the mobile on the road… loss of bill amt is insured and govt paid money for that..

    • வாரன் பஃபெட் நம்ம அம்பானியை விட பணக்காரர். ஆனால் 1957 ஆம் ஆண்டு 31,000 டாலருக்கு தான் வாங்கிய வீட்டில் இன்னும் வசித்து வருகிறார். இப்போதும் தனது காரை தானே ஓட்டுகிறார். தனது வருமானத்தில் 25% நன்கொடையாக வழங்குகிறார். ஏன் பில் கேட்ஸ் கூட தனது வருமானத்தில் பெருந்தொகையாக நன்கொடை வழங்குகிறார். ஆனால் அம்பானி ஒரு பைசா நன்கொடை ஏழைகளுக்கு கொடுத்துருகிரானா? இப்போதும் ஏழைகளை சுரண்டிக்கொண்டேயிருக்கிறான்.
      வாரன் பஃபெட் பிறவி பணக்காரர் இல்லை 11 வயதில் இருந்து உழைத்து உயர்ந்து இருக்கின்றார்.

      திருடனாக இருந்தாலும் ethical திருடனாக இரு

      ரிலையன்ஸ் நன்கொடை கொடுத்ததா இல்லை என்பது அல்ல பிரைச்சினை அம்பானி கொடுத்தானா? மைக்ரோசாப்ட், Berkshire Hathway (Warren Buffett) போன்ற நிறுவங்களும் தனியாக நன்கொடைகள் வழங்குகின்றன. அது அவர்களது Social Responsibility (ஒரு வகை விளம்பரம்) ஆனால் பில் கேட்ஸ், Warren Buffett அவர்களது தனிப்பட்ட வருமானத்தில் நன்கொடையாக பெருமளவு வழங்குகிறார்கள். அவ்வாறு அம்பானி வழங்குகிறாரா? இல்லை. பில் கேட்ஸ் Bill & Melinda Gates Foundation மூலம் பெருந்தொகையான நிதியை நன்கொடையாக வழங்குகிறார். அதேபோல் Warren Buffett நன்கொடையாக வழங்கிய தொகை 30 billion dollars பெறுமதியான பங்குகள். இந்திய ரூபாவில் 135,000 கோடி.

  19. இந்த பதிவை நான் மிகவும் மதிக்கிறேன்.
    அம்பானி குடும்பம் அதிகம்சம்பாதிக்கு துறையான share marketல் இருப்பதால்……

  20. வாரன் பஃபெட் நம்ம அம்பானியை விட பணக்காரர். ஆனால் 1957 ஆம் ஆண்டு 31,000 டாலருக்கு தான் வாங்கிய வீட்டில் இன்னும் வசித்து வருகிறார். இப்போதும் தனது காரை தானே ஓட்டுகிறார். தனது வருமானத்தில் 25% நன்கொடையாக வழங்குகிறார். ஏன் பில் கேட்ஸ் கூட தனது வருமானத்தில் பெருந்தொகையாக நன்கொடை வழங்குகிறார். ஆனால் அம்பானி ஒரு பைசா நன்கொடை ஏழைகளுக்கு கொடுத்துருகிரானா? இப்போதும் ஏழைகளை சுரண்டிக்கொண்டேயிருக்கிறான்.
    வாரன் பஃபெட் பிறவி பணக்காரர் இல்லை 11 வயதில் இருந்து உழைத்து உயர்ந்து இருக்கின்றார்.

    திருடனாக இருந்தாலும் ethical திருடனாக இரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க