privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

-

ஏழைகள் படிக்கக்கூடாது! அப்போ கொன்றுவிடலாமா?

ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்த பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.

இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். )

கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.

இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்..

இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது.

அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது.

பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.

உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல.

அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.

வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?

ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து பதிவுலக நர்சிம் வரை உதாரணங்கள் உண்டு.

இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?

நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது.

இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.

ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது பிசினசை உயர்த்தப் போகின்றன.

இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக்கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.

இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

_________________________________________________________

– சந்தனமுல்லை

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. அந்த பள்ளிக்கூடத்தை தடை செய்தால் என்ன? கல்வியை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளலாம். கல்வியின் standard குறைந்தாலும் பரவாயில்லை. முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுக்கவேண்டும்.

 2. நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறிப் போய்க்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் மேல் தட்டு வர்க்கங்களைப் போல வாழ வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறது. அதற்கு சமூக அக்கறையோ, சம உரிமை எண்ணமோ கிடையாது என்பதைத் தான் இது காட்டுகிறது. நடுத்தட்டு வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் அடிமையாகிப் போய் நாளாகிறது. இது மாற நெடுநாளாகும்.

 3. மிகச் சிறப்பான கட்டுரை.

  பார்ப்பனியமும் மறுகாலனியாக்கமும் கைகோர்க்கும் புள்ளியை மிகச் சரியாக அம்பலப்படுத்தியிருக்கிறார் முல்லை.

  வாழ்த்துக்கள்…

 4. திருவோதேந்தி திமிராகப் பிச்சை கேட்கும் இந்தத் திமிர் பிடித்தப் பார்ப்பனக் கூட்டத்தை என்ன செய்வது……

 5. சேர்க்க கூடாது. இந்த குழுவ [obscured] சேர்த்தால் மற்ற நல்ல மாணவர்காளால் படிக்க முடியாது என்பது நிச்சயம்.

 6. வினவுக்கு ஒரு வேன்டுகோல் தனிப்பட்ட சமுதாயத்தை விமர்சிக்காமல் சம்மந்தபட்ட கல்வி கூடத்தை விமர்சித்தல்நாகரிகம் ஆகும்.ஏதோ இந்த ஒரு சமுதயம் மட்டும் இப்படி செய்வதாக மாயை ஏற்படுத்த வேண்டாம். ஒரு சமுதாயத்தை மட்டும் தாக்குவது ஒரு பத்திரிக்கையாளனின் தர்மம் கிடையாது.

  • Ramesh, why don’t you go to the school and ask them not to discriminate poor people instead of asking vinavu to change their approach. First try to fix the bigger problem. Then we can fix the problem with vinavu. OK?

  • அண்ணே வேறு எந்த சமுதாயமும்… நாடார் ஒன்லி.. செட்டியார் ஒன்லி கிறிஸ்டியன் ஒன்லி முஸ்லிம் ஒன்லி ன்னு போட்டு வீடு வாடகைக்கு கொடுக்குறதில்லே…

   • @vetti = sir, though nadars chettys do not mention them, do you think they will let their houses to muslims,and dalits?. theses castes u mentioned are very much like brahmins but they feel ok with BC castes that have equal status in society .they accuse brahmins for not letting them houses at the same time they wont let their houses to lower caste people.

 7. அருமையான கட்டுரை …

  பண வெறி கொண்ட கல்வி வியாபார நரிகள் தங்கள் எதிர்ப்பு ஊளையை ஆரம்பிக்கும் முன் பார்ப்பன வெறிகொண்ட பன்றிகள் தங்கள் உறுமலை ஆரம்பித்து விட்டன.

  இனி தயங்கி நிற்பதில் பயனில்லை. அறுக்கவேண்டியதை அறுத்து விட வேண்டியது தான்.

 8. என் வாரிசு
  உலகாள வேண்டும்.
  நூற்றுக் கணக்கில்
  பணியாளர்.
  அரண்மனை வீடு;
  பென்ஸ் காரில்
  அலுவலகம் சென்று
  காகிதங்களில் கையெழுத்திட்டு
  மாலை வேளையில்
  முக்கிய நபரோடு
  தேனீரருந்தி,
  சுகந்த மலர் வாசத்து
  பூந்தோட்டத்தில் உலாவி,
  வெளி நாடு
  ஒன்றுவிடாமல் சுற்றி,
  மூட்டு வலி
  முதுகுவலிக்கு
  உயர்தர வைத்தியம் பார்த்து,
  கண் மூடும் வரை
  சுக வாழ்வை வாழ்ந்து பார்க்க;
  அப்துல் கலாம் சொல் போற்றி
  அற்புதக் கனவிலிருக்கிறோம்.
  என்
  தொட்டில் குழந்தையும்
  ஒரு கலாம் ஆகிவிடுகின்ற
  கனவில் இருக்கிறோம்.
  அதற்காகத்தான்
  ஆரம்பக் கல்விக்கே
  லட்சங்களை வாரி இறைக்கிறோம்.
  இலட்சியங்களுக்காக.
  அடிப்படை முதலீடு.

  ஏதோ ஒரு காரணத்தால்
  இந்தக் கனவு தகர்ந்துபோனால்
  அடுத்த இலக்கு ஒரு எம்.பி.ஏ.
  எம்.பி.ஏ படித்து
  முதலாளியின் அடிமையானாலும்
  ஏமாற்றமில்லை.
  ஏனெனில்
  எம்.பி.ஏக்கு கீழே
  ஏகப் பட்ட அடிமைகள்.
  ஓடிக்கொண்டேயிருக்கும் குதிரைக்கு
  கொள்ளு வைக்காமல்,
  கேரட்டைக் கொம்பில் கட்டி
  கண் முன்னே தொங்கவிட்டு
  ஓடவைக்கும்
  வியாபாரச் சூட்சுமத்தை
  கற்கச் சொல்லும் படிப்பு.
  என் குழந்தை மாறனாகி
  கோடிகளில் புரள வேண்டும்.

  இதுவும் சிதறினால்
  ஒரு சி.ஏ. கனவு.
  ஒரு சிதம்பரமாகவோ
  மன்மோகனாகவோ
  மாறிவிட வாய்புண்டு.

  இதுவும்கூடத் தவறிப்போனால்,
  ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினீயர்.
  சிறு சேரி அல்லது
  சிங்கப்பூரில் வேலை.
  அரிசி ஆலைகளில் நெல் அவிக்கும்
  அடிமைகள் போல.
  செங்கல் சூளையில்
  கல் அறுக்கும்
  கொத்தடிமைகள் போல.
  ஆயினும் என்ன?
  லட்சங்களில் சம்பளம்
  இலட்சியம் ஆனதே?

  மொத்தத்தில்
  இத்தகைய கனவினால்
  இன் நாடு
  வல்லரசாகி விடவேண்டும்.
  அதுவுக்
  இரண்டாயிரத்து இருபதுக்குள்.
  இதுதான் சுய நலமற்ற
  பெற்றோர்களின் குறிக்கோள்.

  குடிசையில் துவங்கும்
  குருகுல அரக்கட்டளை,
  நிகர் நிலைப் பல்கலை
  அரண்மனையாக மாற்றும்
  தாரக மந்திரம் :
  நூற்றுக்கு நூறு தேர்ச்சி.
  மதிப்பெண் ஊடாக
  நாட்டை வல்லரசாக்க
  விதை விதைக்கும்.
  பணம் என்பது
  இரண்டாம்பட்சம்தான்.
  இது,
  பாட சாலையின் குறிக்கோள்.

  நாங்கள் கனவு காண
  பயிற்றுவிக்கப் பட்டதால்
  எங்களுக்கு
  இந்தப் பள்ளி தேவை.
  ஏழ்மையில் புரண்டு,
  தூக்கம் வராமல் தவித்து
  ஒரு வேளை உணவுக்கும்
  ஏங்கும் ஏழைக்கு
  கனவுவே வரப்போவதில்லை.
  கனவு வராதவர்களுக்கு
  இலட்சியப் படிப்பெதற்கு?
  இரும்படிக்கும் இடத்தில்
  ஈக்கென்ன வேலை?

  மொத்தத்தில்
  பள்ளியின் சுற்றரிக்கை
  கனவுகளின் கோரிக்கைப்படி
  சரிதான்!

 9. I wish, my children studies with poor, because they are genuine and can learn the value of life from them.

  I believe and want that same level of education should be given to any kid who is born in India.

  I also checked the news for which you had given the link. I feel that both these school people and vinavu are viewing this issue entirely in wrong intention in mind.

  //CHENNAI: Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School. In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student’s performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.//
  This above one is news paper statement/summary. so let us ignore this for now.

  //The circular said that under the Act, the school would have no choice but to admit students from poor families, which would pull down its standards. Ananthanarayanan urged parents to “protest and fight” against the Act. Suggesting that the state’s decision to implement it from the coming year could force the school to increase fees, she asked parents to appeal to the state and the Centre not to implement the Act in its present form.//

  What i understand is that fee for the other student will be increased as they can not charge ths 25% students.

  //The law makes it obligatory on the state governments and local bodies to ensure that every child gets education in a neighbourhood school. The district education officer can admit 25% of poor children living nearby to any private school as per the Act. According to it, if a child around nine years old has never been to school, he/she must be admitted to the fourth standard after some training. The schools cannot refuse admission, and must provide education free of cost.//

  There are two issues here, first issue is, admitting to class based on Age can not be correct, irrespective of student is poor or rich. it will put them in more trouble.

  Second issue is that education should be given free of cost. This can be done by increasing the cost for other students or by getting it from government. I would say that government should take care of this cost so that they can control fees etc. or make other student to pay and pass on the benefit indirectly as tax benefit.

  //The circular says that the act should not be implemented as it denies the school the powers to discipline or detain a child and choose the medium of education.//

  i don’t understand this completely.

  //The school states that it would be under constant legal threat and harassment from government. “All this will make all schools perform exactly like government schools in quality and discipline. Is this why we have admitted our children in this or any good school?” the circular asks.

  It tells parents that their quality of education will suffer as teachers will have a difficult time managing and educating a few children, who are not qualified for the particular class, or who are very difficult to manage.

  “Most of the teachers’ attention, time and energy will go toward educating and managing these children, as the school and teacher are held responsible, under the act.” //

  Their worry is correct, if a class X is with student passed out of class X-1 and with students just qualify based on Age on same class. But it is not a worry to educate poor and rich. not sure where is this quoted in school circular.

  School should be forced to give admission for poor student to LKG/UKG based on Age. for that matter even for first std.

  But after that from 2nd std, school should be asked to give admission if a student has completed previous class in any school.

  I have not studies the act fully, however we should implement it in such a way it will really make every student equal irrespective of their family background.

  • Why can’t give free education to citizens in india?
   Why can’t government take all schools & colleges?

   Just remove education from private, that will solve all the education problems. the above said school also running by trust, why can’t they give free education, why they need money?

   don’t say “Their worry is correct”……

   • //Why can’t give free education to citizens in india?
    Why can’t government take all schools & colleges?//
    I have same questions, but these questions we should ask Governments and not schools.

    //Just remove education from private, that will solve all the education problems. the above said school also running by trust, why can’t they give free education, why they need money?//

    99% of schools and colleges are run as business under the name of trust. each trust is governed by family members, worst part is that school/colleges are transferred/sold from one management to another management, so do you think our government is not aware of this.

    At current circumstance, we need to see what is required, instead of expecting a miracle overnight.

 10. பள்ளிகளில் Uniform என்ற ஒன்றை இப்போது ஆசிரியர்களே தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள்…. Uniform என்றால் சீருடை இல்லீங்க…Uniform என்றால் சீராக நடத்துதல்..அனைத்து மானக்கரும் ஒன்றே என்று நடத்துவதே..

  திவியாவை சோதனை போட்டவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து(இன்னோரு வார்த்தை எழுதி அழித்து விட்டேன்) கல்லால் அடித்து க் கொல்லலாம் தப்பே இல்லை…

 11. இன்றைய பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்படித்தான் இருக்கிறது. இங்கே குறிப்பிட்டிருக்கிற பள்ளியில் வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள். மற்றபள்ளிகளில் சொல்லவில்லை என்பதைத்தவிர வேறெந்த வேறுபாடுகளும் இல்லை.

  ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த மக்களின் கல்வியின் மூலம் தீர்மானிப்பதே எளிதானதும் நிரந்தரமானதுமாகும்.

  இன்றைய நிலை?
  1 . காசுள்ளவனுக்கே தரமான(?) பள்ளிக்கல்வி
  2 . காசுள்ளவனுக்கே உயர்கல்வி
  3 . காசுள்ளவனுக்கே பொறியியல், தொழிற்நுட்பம், மேலாண்வியல், மருத்துவம் போன்றவை
  4 . ஒன்றாம் வகுப்பு செல்லும் ஒவ்வொரு 100 மாணவர்களில் வெறும் 6 முதல் 10 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது

  இப்பள்ளிகள் எல்லாம் என்ன செய்கிறது?
  1 . அரசாங்கம் எவ்வளவு வசூலிக்கவேண்டுமென்று சொல்கிறதோ அதைவிட மிக மிக அதிகமாகவே வசூலிப்பது,
  2 . வசூலிப்பது ஒரு தொகையும், பில்லில் வேறு ஒரு தொகையும் இருப்பது,
  3 . பாதியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கிறவர்களை எந்த தயவுதாட்சண்யமுமின்றி பள்ளியைவிட்டே வெளியே அனுப்புவது,

  இவ்வாறு வியாபாரம் என்பதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்கள் இவர்கள்…
  ‘காசுதான் முக்கியம், அதற்காக என்ன செய்தாலும் தவறில்லை’ என்பதைத்தான் இந்த தனியார் பள்ளிகள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருகின்றன.

  பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  இவ்வருத்தங்களையும் கோபங்களையும் விவாதங்களையும் செயல்வடிவமாக்கி மிக வலிமையாக எதிர்க்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது…

 12. ///What i understand is that fee for the other student will be increased as they can not charge ths 25% students.//

  பிறகு ஏன் ஒரு மாணவனின் பொருளாதார நிலையையும் கல்வி தகுதியையும் ஒப்பிட்டு cirular வெளியிட வேண்டும்.

 13. “இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து பதிவுலக நர்சிம் வரை உதாரணங்கள் உண்டு.”
  I HAVE read some of your postings.your tone of expressions were accusing the
  individuals or the society.coming to the above post I do agree the policy is incorrect. Highly objectionable.but why u are linking the minister and and narsim unnecessarily.one more thing is you have no solution to the problems.what is the use of presention? simply getting publicity?

  • சுகுமாரன், சிதம்பரம்-நர்சிம் பெயரை எழுதுவதனால் என்ன பப்ளிசிடி கிடைக்கும்? அதை விளக்கமுடியுமா?

   • என்ன விளம்பரம் கிடைக்கிறது என்று தெரியாத்து போல கேட்பதிலிருந்தே தெரிகிறது உஙகள்நோக்கம்.

    • தெரியாததினாலதான் கேட்கிறேன்! ஏன் உங்களுக்கும் தெரியாதா?

 14. முதன் முறையக நான் வினவு – ஐ பாராட்டுகிறேன் இந்த பதிவுக்காக.
  //
  ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
  //
  இந்த வரிகளில் உள்ள உண்மையை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.

  “கல்வி கற்கும் உரிமை ” ஜன் லொக்பால் க்கு முன்பே முடிக்க வேன்டியது.

 15. Over 70% of the students are going to school unhappily !Parents are forced to make an expensive decision in joining their children to some what a “BETTER” school!
  The sad point is, we even do not have a reference to say this school is a perfect school which teaches the best (atleast we can say some hotels are best to eat …like that…) and makes the student learn , remember , and keeping a low profile on exams and other stupid formalities in the cut paste copy age. there is no meaning in exams when knowledge is in the air thru WI FI and Fiber optic cables and Short length micro waves. EXAMS are STUPID. Minimum Attendance is Must.Then everything is Done. Education must be like watching a documentry film. it should enter thru visual media and sound (music) . Some body should open a school and make a change in learning and make it a pleasent time for students.
  regards
  Varun.KR

 16. சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டதால் இன்னொரு முக்கியமான விஷயம்.

  முக்கிய காரணம் , ஏழைகளை இழிவுபடுத்துவதோடு பணக்கார பிள்ளைகளுக்குமே இவர்கள் எப்படி நல்ல வாழ்க்கை பற்றி சொல்லித்தர போகிறார்கள் என்ற ஐயப்பாடும்..

  என் பிள்ளைகள் இங்கே பணக்கார பள்ளியில் படிப்பதனால் அதன் அவஸ்தைகளை நான் மிக நன்றாகவே உணர்ந்துள்ளேன்.. எல்லாமே நுகர்வு கலாச்சாரம் நோக்கிய கல்வியே.. குழந்தைகள்தான் பாவம் இரண்டுகெட்டான் சூழலில்.. எது சரி எது தவறு என புரியாத நிலைமை..

  எளிமை என்பது கூட புரியாத பரிதாபம்.. தேவை தாண்டி ஆடம்பரமே ஆக்கிரமித்திருப்பது வருத்தத்துக்குறியது…ஊரோடு உலகோடு ஒத்து வாழணும்னா போலித்தனம் தேவை .. அப்ப சக மனிதனை பற்றி எப்போது நினைப்பார்கள்.. நினைக்க சொல்லித்தருவோம்?..அவர்களுக்கா பேசுவோம்?. குரல் கொடுப்போம்.?.

  பணக்கார மாணவன் ஒரு ஏழை மாணவனோடு படிக்கையில் மெல்ல மெல்ல சக மனிதனின் துயர்களை , சாபத்தை புரிந்துகொள்ள முடியும்.. அது பணக்கார குழந்தைக்கே வரப்பிரசாதம்.. திடீரென வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது அந்த பணக்கார மாணவனால் சமாளிக்க முடியும்.. அதைவிடுத்து காரில் ஏறி பள்ளியில் இறங்கி ஏழை வாசமே அறியாமல் வளரும்போது , திடீர் கஷ்டம் அக்குழந்தையை நிலைகுலைய செய்யும்..

  சொல்லப்போனால் ஏழை குழந்தைக்கே பணக்கார குழந்தையோடு படிப்பதில் வருத்தம், ஏக்கம் வர வாய்ப்பு அதிகம்..

  இதுபோன்ற தவறுகளை முளையிலேயே கிள்ளிவிடணும்.ஆக பிறக்கும்போது எல்லா குழந்தையும் ஒண்ணுதான்..சில நேரம் பணக்கார வீட்டில் பிறப்பதாலேயே பல உண்மைகள் அறியாமல் போலித்தனத்தில் கஷ்டப்படுவதும்..

 17. தமிழர்களுக்கு மானமிருந்தால், சொரணையிருந்தால் இந்த பின் வரும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப கூடாது… பார்ப்பன/ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன அடிவருடி பள்ளிகளான சங்கரா வித்யாலயா, பத்மா சேஷாத்திரி, ஆஷ்ரம், வனவானி, டி.ஏ.வி, ஜெயகோபால் கரோடியா, விகேகந்தந்தா வித்யாலயா, கேந்திரிய வித்யாலயா, வேலம்மாள் வித்யாலயா, எஸ்பிஓஏ, செட்டிநாடு வித்யாஷ்ரம்… இங்கெல்லாம் பணம் இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு வழியுண்டு…

  1991 தாராளமயமாக்கலுக்கு பின் கல்வி கேடிகளுக்கு கைகளுக்கு சென்ற பின்… பிள்ளைகளும் வர்க்க முறையில் பிரிக்கப்பட்டுள்ளனர்… மேல் சொன்ன பார்ப்பன கலாச்சாரத்தில் படிக்கும் பிள்ளைகள் ஒரு நாளும் சமூக அக்கறையுள்ளவர்களாக வர போவதில்லை… பண பொறுக்கிகளிகளை/மன நோயாளிகளை தயாரிக்கும் இடமாகவே இந்த பள்ளிகள் இருக்கிறது…

  சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவில் வசதியுள்ளவர்கள் மட்டுமே படிக்க கூடிய பள்ளி பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் எனும் போது… இந்த பொறுக்கி வீட்டு பிள்ளைகளுக்கு எந்த ஏழை பிள்ளை கஞ்சா அடிக்க கற்று கொடுத்திருப்பான்…

  பார்ப்பன/ஆர்.எஸ்.எஸ். பொறுக்கி கலாச்சாரத்தை புதுத்தும் பள்ளிகள் எளிய வீட்டு பிள்ளை சேர்த்தால் அந்த பிள்ளைகள்தான் கெட்டு குட்டி சுவர் பக்கம் போக வழியுண்டு…

  மானமுள்ளவர்… வித்யாலயா பக்கம் பிள்ளைகள் அனுப்பாமல் இருப்பது பிள்ளைகளுக்கு நல்லது…

 18. எனது நண்பர் ஒருவர் கரூரிலிருந்து சிறு நகரமான எனது ஊருக்கு வந்து
  சிறிய அளவில் வட்டிக்கு விட ஆரம்பித்து நாலைந்து வருடங்களில்
  பெரும் வளர்ச்சி அடைந்து வேறு ஏதாவது தொழிலில் கால்வைக்க
  விரும்பினார்.அவர் கெட்ட நேரம் இறால் பண்ணை தொழிலில் இறங்கி
  பல லட்சங்களை காவு கொடுத்தபின் என்னிடம் அவர் உதித்த முத்துக்கள்,
  அருகே உள்ள ஒரு நகரின் பெயரை கூறி “‘ அங்கே ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி
  விலைக்கு வந்தது.வாங்கி போட்டிருந்தா லைப்ல செட்டிலாயிருப்பேன்
  தெரியாதனமா இந்த வீணா போன தொழிலில் இறங்கி இப்ப அவஸ்தைப்படுறேன்”‘
  நிதர்சனம்.வாழ்க இந்திய வல்லரசு.

 19. கானடாவில் பல மாகாணங்களில் உள்ளது போல தனியார் பள்ளிகளை தடை செய்வதுதான் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு ஆரம்பமாக இருக்க முடியும்.

  கல்வி பெறும் உரிமை சட்டம் (RTE) அரசியல் நிர்ணய அமைப்பின் படி செல்லுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது, தனியார் பள்ளிகள் 25% இலவச ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது போகாத ஊருக்கு வழி தேடுவதற்க்கொப்பானது.

  http://www.dnaindia.com/india/report_don-t-crib-on-free-seats-to-poor-supreme-court-tells-private-schools_1512290

  இதே லாஜிக்கை அரசு எல்லா விஷயத்திலும் விரிவு படுத்தினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்று பார்ப்போம். மளிகைக் கடை அண்ணாச்சி தனது கடைக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் தொகையில் 25% பேருக்கு இலவசமாக மளிகை சாமான் தரவேண்டும். மருந்து கடைக்காரர் 25% பேருக்கு இலவசமாக மருந்து சப்ளை பண்ண வேண்டும். சினிமா தியேட்டரில் 25% பேரை இலவசமாக அனுமதிக்க வேண்டும், டாஸ்மாக் பாரில் 25% பேருக்கு ஃப்ரீ தண்ணி சப்ளை நடக்க வேண்டும்.

  தனியார் பள்ளிகளைவிட அதிக செலவில் தரக்குறைவாக நடத்தப் படும் அரசாங்க பள்ளிகளை தரமுயர்த்தி மக்கள் தாங்களாகவே தனியார் பள்ளிகள் பக்கம் போகாமல் செய்வதை விடுத்து இது போன்று தனியார் பள்ளிகளின் கைகளை முறுக்கி நல்லது செய்துவிட முடியும் என்பது வீண் கனவு.

  அப்படியில்லையென்றால் தனியார் பள்ளிகள் அனுமதிக்கும் அந்த 25% மாணவர்களுக்கான கட்டணம், யூனிஃபார்ம், புத்தகம் ஆகியவற்றுக்கான செலவை அரசு ஏற்றுக் கொண்டு பள்ளிகளுக்கு வழங்கும் என்று சொல்ல வேண்டும்.

  சங்கரா பள்ளியில் 25% ஏழை மாணவர்களை இலவசமாக சேர்த்துக் கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம் (அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆனாலும் ஆகலாம்) அப்போ அங்கே சேரமுடியாமல் போகும் பணக்கார பசங்க (குஷ்புவின் குழந்தைகள்) கவர்மெண்டு ஸ்கூலுக்கு போகுமே – அதுவும் ஃபிரீயா துட்டு குடுக்காம – அது முரண் இல்லையா?

  இஸ்லாமிய, கிருஸ்த்தவ, சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்கள் நடத்தும் பள்ளிகளின் அட்மிஷனில் அரசு தலையிட முடியாது என்னும் பொழுது அவர்களை எப்படி இந்த 25% கட்டுப் படுத்தும் என்று கட்டுரை ஆசிரியர் விளக்குவாரா?

  வழக்கம் போல பார்ப்பணியத்தை திட்டி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்ற ரகத்தை சேர்ந்த கட்டுரை வரிசையில் மற்றுமொன்று.

  • தனியார் பள்ளிகளைத் தடை செய்வதானால் தனியார் காலேஜுகளையுமல்லவா தடை செய்ய வேண்டும்.
   எதையும் தடை செய்தால், அது ஜனநாயக விரோதம் என்று நீங்களே ஆட்சேபிப்பீர்கள்.
   .
   இங்கே உள்ள பிரச்சனை அப்பட்டமாகவே சட்டவிரோதமான ஒரு மனித உரிமை மீறற் செயல் பற்றியது.
   .
   மனித உரிமை மீறலின் அடிப்படை பார்ப்பனியமாக உள்ள போது பார்ப்பனியத்தைக் கண்டிப்பது தவறா?

   • அண்ணாச்சி மளிகைக் கடை வேண்டாம் எல்லாத்தையும் அரசு ரேஷன் கடையாக்குங்க என்றுதான் சொல்கிறேன். முதலில் எலிமெண்டரி ஸ்கூலைப் பற்றி கவலைப் படுவோம், காலேஜைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.

   • அந்த பள்ளி முதல்வர் என்கிற கல்வி வியாபாரி, அரசு கொண்டுவந்திருக்கும் புதிய சட்டத்தால் தன்னுடைய வியாபாரம் பாதிக்கிறதே என்பதால், தனது வாடிக்கையாளர்களிடம் நடத்தியுள்ள கருத்து கணிப்பு தான் இது.

    அரசு ஏழை குழந்தைகளின் கல்விக்காக இந்த பள்ளிக்கு தரப்போகும் reimbursement தொகை கணிசமாக இருக்கும் பட்சத்தில், பணக்கார மாணவர்களின் பெற்றோர் ஆட்சேபித்தால் கூட பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு அட்மிஷன் உண்டு.

    இது சட்டவிரோதமா, மனித உரிமை மீறலா என்பதைப் பற்றியெல்லாம், A. நாராயணன் என்பவர் வழக்கு தொடுக்க இருக்கிறார், தீர்ப்பு வரும் போது பார்க்கலாம்.

    http://www.thehindu.com/news/cities/Chennai/article1771089.ece?service=mobile

   • தம்பி,
    நீங்க தானே சொன்னீங்க “மளிகைக் கடை வேண்டாம் எல்லாத்தையும் அரசு ரேஷன் கடையாக்குங்க”ன்னு.
    அப்பறம் ஏன் “முதலில் எலிமெண்டரி ஸ்கூலைப் பற்றி கவலைப் படுவோம், காலேஜைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்”ன்னு கண்டீசன் போடறீங்க.
    .
    கல்வியே யாவாரமக்கற வேலையே வாணாம்னா ஏன் ஒண்ணை விட்டு மத்ததப் பத்தி மட்டும் ஸ்பெசலாக் கவனிக்கணும்?
    .
    போக,இங்கே உள்ள பிரச்சனை அப்பட்டமாகவே சட்டவிரோதமான ஒரு மனித உரிமை மீறல் செயல் பற்றியது. மனித உரிமை மீறலின் அடிப்படை பார்ப்பனியமாக உள்ள போது பார்ப்பனியத்தைக் கண்டிப்பது தவறான்னு கேட்டேன்.
    சொன்னதே ஏத்துகறீங்களா?

    • Ram Kameswaran

     I agree to all your points. These Vinavu folks cannot answer your logica questions.

     All

     I am wondering how come without knowthing anything – many people in their comments section blames – Brahmins. Ennome entha oru communitythan Indiave rule panra mathiri…from Ward counsellor till CM are all Non-brahmins. first these folks needs to change their Anti-Brahmin mental set and understood that this caste of people never ruled anyone, just they facilitate with their thoughts/advice to RULERs.

     I have one more dimension to this ‘education to all’ – really wondering why we are expecting this ‘poor form of education’ to ALL …assume that all 100% of children got their education. what can they do with that? Can they all get Govt. Jobs !!…and or at least private jobs. !!NEVER

     This ‘Mechaley’ education system is total MESS brought by British to make us to do ‘routine’ work without any innovation …

     appuram, why these vinavu brothers are worried about ‘private’ shools and their higher fees…why you folks are moving towards them? there is some % of NRI and IT folks who does not know value of money – let them go and pour their hard earned money. Entha mathiri private schools (run by any commnity) – eppaodi pogatum.

     What we really need is ‘education that can yield effective work & Money’ – Thollil kalvi. Govt. should introduce this system at least in their schools to build an next generation where we can get ‘skillful’ workers in all levels – udane manusastram refer pannathinga -:(

     Agriculture is the backbone of the country – we can fight to do something USEFULL in this field, rather than worrying abuot this ‘white’ color education system !!

 20. தற்போது எல்லா சாதியினரும் இது போன்ற மேட்டுக்குடி பள்ளிகளை வைத்திருக்கிருறார்கள். குறைந்தபட்சம் மெட்ரிக் பள்ளிகளையாவது வைத்திருகிறார்கள்.

  கல்வி, அடிப்படை என்பது போய் ஆடம்பரம், கவுரவம் என்றாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், மக்களிடையே மாற்றம் வேண்டும். அது மட்டுமே நிரந்தர தீர்வைத் தரும்.

  சமச்சீர் கல்வி ஒன்றே அனைவருக்கும் போதுமானது. ஒரு நல்ல அரசால் மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் பெரும்பாலான மேட்டுக்குடி பள்ளிகளை வைத்திருப்பது அரசியல் சார்புடையவர்கள். அரசியலில் அவர்களது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.

  ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் எப்பொழுது ஒரே வகுப்பறையில் படிக்கிறார்களோ.. அப்பொழுது நாம் கனவு காணலாம், இந்தியா வல்லரசு ஆகும் என்று.

  நித்ய கல்யாணி.

 21. சங்கரா பள்ளியில் 25% ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அரசு தான் நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் வெறும் 2.5% (ஆம் வெறும் இரண்டு புள்ளி ஐந்து சதம்) மட்டும் ஒதுக்கியிருப்பது ஏன்?

  http://www.kvsangathan.nic.in/AdmissionGuideLine.aspx

  (c) For remaining 1 seat all applications of (iv) above as well as disabled children belonging to all categories will be taken for draw of lots. Unsuccessful disabled children belonging to SC/ST category will be included in this draw of lots.

  அதுவும் மற்ற பிரிவினரில் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால் அவர்கள் பேரோடு சேர்த்துப் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் “அதிர்ஷ்டசாலி” ஒரே ஒரு ஏழை குழந்தைக்கு அட்மிஷன் கிடைக்கும். 40 குழந்தைகள் உள்ள வகுப்பில் 31 அரசு ஊழியர்களின் குழந்தைகள், 6 ஸ்C குழந்தைகள், 3 ஸ்T குழந்தைகள், ஒரே ஒரு ஏழை குழந்தை.

  இதைப் பற்றி ஏன் ஆசிரியர் வாயே திறக்கவில்லை?

  • வாயைத் திறந்துள்ள விடயம் பற்றி உடன்படுகிறீர்களா?
   அதைச் சொன்ன பிறகு வாயைத் திறவாத விடயம் பற்றிப் பேசுவோம்.
   .
   நீங்கள் சொலுகிற அநீதிக்கு ஆசிரியர் உடன்பாடானவர் என்ற எண்ணதை வலிந்து திணிப்பதன் மூலம் கட்டுரை பேசுகிற விடயத்திலிருந்து கவனத்தைத் திருப்புவதே உங்கள் தேவை போல உள்ளது.

 22. //தற்போது எல்லா சாதியினரும் இது போன்ற மேட்டுக்குடி பள்ளிகளை வைத்திருக்கிருறார்கள். குறைந்தபட்சம் மெட்ரிக் பள்ளிகளையாவது வைத்திருகிறார்கள்.

  கல்வி, அடிப்படை என்பது போய் ஆடம்பரம், கவுரவம் என்றாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், மக்களிடையே மாற்றம் வேண்டும். அது மட்டுமே நிரந்தர தீர்வைத் தரும்.//

  கண்டிப்பாக. பெரும்பாலான தேவர்கள், நாடார்கள், கிறித்தவர்கள் பள்ளிகளில் மிக அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக இங்கு ஒன்றை சுட்டிக் காண்பிக்க வேண்டும் விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் சுந்தரம் பாஸனர்ஸ் என்ற நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றுவதற்காக அங்கிருந்த விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டதால், அதற்க பிரதிபலனாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்றும் மாதக் கட்டணம் வெறும் 30 ருபாய் என்பதுடன், வருடாந்திர ஒரு முறையான கட்டணம் என்பது நோட்டுப்புத்தகங்கள் உட்பட கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட குறைவாகத்தான் ( 1400 லிருந்து 3500ற்குள் தான்) வசூலிக்கப்படுகிறது. அது பார்ப்பன நிர்வாக பள்ளிதான். ஆனால் அனைத்து சாதியினரும் சேர்ந்துள்ளனர் என்பதுடன், அனைத்து சாதிக்கும் ஒரேவிதமான குறைந்த கட்டணம் தான் என்பது இன்றுமுள்ளது. எனவே கல்வி வியாபாரம் என்பது ஒரு சமூகத்தினரால் மட்டும் நடக்கவில்லை.

 23. கல்வி காசுள்ளவனுக்கு. காசுள்ளவன் கல்விசாலை வைத்திருப்பான். வைத்திருப்பவன் கொள்ளையிட நினைப்பானா சொல்லித் தர நினைப்பானா

  அது சரி

  எல்லா பிரர்மணனும் காசு வைத்திருக்கானா. காசு இல்லாதா பிராமணன் என்ன பண்ணுவான். மந்திரம் சொல்வானா, மாமா, அத்திம்பேர் காரியம் சாதிப்பானா

  என்னவோ போங்க கல்வி எல்லோருக்கும் ஒரு அடிப்படை உரிமைன்னு சட்டம் போட்டாச்சு

 24. I wonder why author does have any idea about rich christian & muslim schools.. who gets more than 1ooooo donation for school admission. How does it relate to caste? Jayagopla garoidya gives the education to the poor people with free of cost? do you have any idea about rama krishna asram school & vidaya manthir schools?

  Instead of blaming others, why don’t you start a schools in all the area. After all, you people are ruling in more than three states. Considering the LDF corruption in kerala, i am sure you will be able to construct a school in each and every thalukka 🙂

  The education system of the India got spoiled completely by the communist teachers wing. Communist is the main culprit for all the non-sense happened in the Indian education system.

  • வினவு சிபிஎம்முன்னு நினைச்சு தம்கட்டி பேசிக்கிட்டிருக்க.. எதுக்கு இவ்ளோ எமோஷன்? ஷோல்டரை இறக்கு. அப்படியே போலி கம்யூனிஸ்டுன்னு வினவுல தேடிப்பாரு, சிபிஐ – சிபிஎம் டவுசர் மொத்தமாகவும் சில்லரையாகவும் இங்கே கிழிக்கப்பட்டிருக்கும்.

   இந்த மாதிரி அறைகுறைகளோடெல்லாம் பேச வேண்டிகிடக்கு.. எனக்கு கிரகம் சரியில்ல

 25. \\ சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி \\ I would like to know the palce where such lines is written in the manusruthi.
  why i am asking this point is.. veda vyasa himself belongs to ST community.

  • கிழிந்தது கிருட்டிணகிரி, இதிலும் அரைகுறைதானா? கிரி டிரேடிங் ஏஜென்சிக்குப்போய் புஸ்தகம் வாங்கிப்படிக்கவும்

 26. சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளை மூடியது யார்? மாநகராட்சிப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல் இலவச டிவியால் கேபிளில் காசு பார்ப்பது யார்? சாதி மதம் பார்க்காமல் ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்கும் பல அமைப்புகளையும் ( சாய் பாபா, இராமகிருஷ்ணா மிஷன் உட்பட) கேலி பேசும் வினவு, சர்க்குலர் அனுப்பாமலேயெ தயானிதி மற்றும் திராவிட பரம்பரை படித்த பணம் உள்ளவர்கள் மட்டுமே அணுக விடும் எழும்பூர் டான்பாஸ்கோ, ரோசரி மெட்ரிக்(தமிழினத் தலைவர் வீரமணியின் பிள்ளைகள் படித்தது) ஏழைகளை அண்டவிடாத இப்பள்ளிகளைப் பற்றியும் எழுதுமா?

 27. .
  சிறுபான்மையினர்,பார்பனர் அல்லாதோர் நட்த்தும் பள்ளிகள் எல்லாம் இலவசக் கல்வி தருகின்றனவா.வன்னியர் சமூகத்தில் உள்ளோர் நடத்தும் பள்ளிகள்/கல்லூரிகளில் நன்கொடை பெறப்படுவதில்லையா என்பதை சந்தனமுல்லை விளக்க வேண்டும்.
  சந்தன முல்லை இந்த சாதியில் பிறந்தவர் என்று உலகிற்கே அறிவித்தது வினவுதான்.
  ஆகவேதான் இந்தக் கேள்வி.
  கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை தரும்.அரசு உதவி பெறும் பல கல்வி நிறுவனங்கள் இன்றும் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை.ராமகிருஷ்ணா மிஷன் உட்பட பல இந்து அமைப்புகள் கல்வியை வியாபாரம் ஆக்கவில்லை.TVS அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கும் இது பொருந்தும். அவை இந்து அமைப்புகள் என்பதால் அவற்றை பாராட்டி வினவில் ஒரு வார்த்தை கூட வராது.கோவிந்தராஜன் கமிட்டி சொன்ன கட்டணத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போனவர்களில் எல்லா சாதியும்,மதமும் உண்டு.கல்வியை வணிகமாக்கியதை எதிர்க்க வேண்டும்.அதில் ஏன் ஒரு சாதியை திட்ட வேண்டும், அப்படியே ஏன் நர்சிம்மையும் அதில் இழுக்க வேண்டும்.சந்தன் முல்லை தன் குழந்தையை மாநகராட்சிப் பள்ளிகளில்தான் படிக்க வைப்பேன், தனியார் பள்ளிகளை நாட மாட்டேன் என்று எழுதுவாரா.

  • அனைத்து சாதியினரும் தான் பள்ளிநடத்தி பணம் சுரண்டுகின்றனர். ஒரு சாதியை திட்ட வென்டுமென்றெ எழுதப்பட்ட கட்டுரை. இதர சாதியினரை திட்டி எழுதினால் ……. அதனால் இந்த சாதிய மட்டும் தான் திட்ட முடியும். துணிவு இல்லாத கட்டுரையாளர். அவருக்கு என் அனுதாபம்.

 28. சுண்டல் விநியோகம் செய்வது போல் கல்வியை அனைவருக்கும் தருவதால்தான் நம் நாடு இந்த ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறது. கல்வியைத் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும். கற்ற வித்தையை காசுக்கு விற்க மாட்டேன் என்று சொல்வதுதான் நான் சொல்லும் தகுதி. சேவை மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே கல்வி தர வேண்டும். ஒரு மக்கள் நல அரசு என்பது கல்வியை அனைவருக்கும் தருவதற்குப் பதிலாக கல்வியின் பலனை அனைவருக்கும் தர முயற்சி செய்ய வேண்டும். கிராமத்தில் இருக்கும் 100 ஏழைப் பெற்றோர் மனத்தில் தன் மகனும் டாக்டராவான் என்ற கனவை விதைத்து ஏமாற்றுவதை விட காசு வாங்காமல் மருத்துவம் பார்ப்பேன் என்று சொல்லும் நான்கே பேருக்கு கல்வி கொடுத்தாலே போதும்.

 29. 4.108. In a village where a corpse lies, in the presence of a Sudra, while the sound of weeping is heard, and in a crowd of men the recitation of the Veda must be stopped.

 30. தமிழக அரசின் சமச்சீர் கல்வியாவது எதிர்காலத்தில் பலனலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாமா?

 31. தியாகி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்…..

  ஏழுதுங்கள் ஒரு கட்டுரையை….

 32. கல்வி உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது –
  கலந்தாய்வுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

  இடம்: தேவநேயப்பாவாணர் மாளிகை, நூலக வளாகம், சிற்றரங்கம்,அண்ணா சாலை, சென்னை
  நேரம்: வரும் ஞாயிறு, மாலை மிகச் சரியாக மூன்று மணிக்கு (3pm – 5pm)

  நோக்கம்: மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா தன்னார்வு அமைப்புகள், எழுத்தாளர்கள் போன்றோர் கலந்துகொண்டு, தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதற்கும், அவற்றைக் களைந்து தீர்வு காண்பதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிப்பதே இக்கூட்டத்தின் நோக்கம்.

  1.கல்வி உரிமைச் சட்டமானது, 2009 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இயற்றப்பட்டு, 2010 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆயினும் இவ்வருடமும், தமிழக கல்வித் துறையில், அதற்கான பூர்வாங்க வேலைகளே நடந்து வருகின்றன.

  2. இவ்வருடமும், சமச்சீர் கல்வி பற்றி எல்லோரிடமும் குழப்பமே உள்ளது. சமச்சீர் கல்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுப்பப்படுகின்றன. அதோடு, பொதுப் பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வியாகி விடுமா என்றும் கேள்வி வைக்கப்படுகிறது.

  3. கடந்த வருடம் போலவே, இவ்வருடமும், தனியார் பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தி அறிவிப்பதற்காக, நீதிபதி ரவிராஜ பாண்டியன் (ஒரு நபர்)குழு , தனியார் பள்ளிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. குழு அறிவிக்கும் கட்டணங்கள் எந்த அளவிற்கு உண்மை நிலவரத்தின் படி தீர்மானிக்கப்படுகிறது, குழு அடிப்படையாக கொள்ளும் கூறுகள் சரி தானா போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், கடந்த வருடம் போலவே, இவ்வருடமும், பல தனியார் பள்ளிகள், பள்ளிக்கட்டணத்தை ரசீது கொடுத்து பள்ளியின் பெயரிலும், அதிக கட்டணத்தை, பள்ளியின் தாளாளர் அறக்கட்டளைகள் பெயரிலும் இப்பொழுதே வசூலிப்பதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் முடிந்து, புதிய அரசு வரும் வரை உள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதில் தனியார் பள்ளிகள் முயன்று வருகின்றனவோ என்று தோன்றுகிறது. இதனால், இந்த கல்விக் கட்டணம் முறைப்படுத்தும் அரசின் செயல்பாடே கேலிக்குரியதாகி உள்ளது.

  4. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) போன்றே, மாநில அளவிலும் உடனடியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. கல்வி உரிமைச்சட்டம் தொடர்பான ஆலோசனைகளோ, மனுக்கள் அளிப்பதோ, புகார் அளிப்பதோ இப்பொழுது இயலாத காரியமாக உள்ளது.

  5. தனியார் பள்ளிகளில், அரசு வழங்கும் கட்டணத்தை ஏற்று, அருகாமையிலுள்ள போருளாதாரமற்ற குழந்தைகளுக்கு, 25% இட ஒதுக்கீடு வழங்கும் இச்சட்டத்தின் குறிக்கோள் இவ்வருடமும் தள்ளிப்போடப்படுகிறது. சட்டத்தை மட்டும் போட்டு விட்டு, நடைமுறைப்படுத்தாமல், ஏழைக் குழந்தைகளின் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

  6. கடந்த பல வருடங்களாக உள்ளதைப் போன்றே, ஆதி திராவிட நலப் பள்ளிகளிலும், வனப்பள்ளிகளிலும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகளிலும் உள்ள சூழல், கல்வியின் தரம், ஊழல் போன்ற பலப் பிரச்சனைகள் அப்படியே மாறாமல் உள்ளன. அதனால், இப்பள்ளிகள் படிக்கற்களாக இல்லாமல், தடைக்கற்களாகவே செயல்படுகின்றன. ஆகவே, ஒட்டுமொத்தமாக இப்பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உரிமைச் சட்டமும், அரசியலமைப்பு வழங்கிய உதவிகளும், அர்த்தமற்றவையாகவே உள்ளன.

  7. அதே போல, மேலும் மேலும், அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இடம் பெயர்தல் நடந்து வருகிறது. ஏழை மக்கள், தலித்துகள் அதிகமாக உள்ள வடசென்னையில் கூட, மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு செல்வது அதிகரித்து உள்ளது. அரசுப் பள்ளிகளின், நகராட்சிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுகிறது.

  8. தமிழகத்தில் வெளி மாநிலங்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும் வேலைக்கு வரும் கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களின் குழந்தைகளுக்கு தொடர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதே போல, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள் அகற்றப் பட்டு, மக்கள் நகருக்கு வெளியே குடிவைக்கப்படுகிறார்கள். தரமாகவும், வேண்டிய எண்ணிக்கையிலும் புது இடங்களில் பள்ளிகள் இல்லாமையால், நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள், கடந்த வருடங்களில் கல்வியில் இருந்து இடை நிறுத்தமாகியுள்ளது கள ஆய்வுகளின் மூலம் தெரிய வந்தது.

  9. சென்னையில் உள்ள சில மேல்தட்டு மாணவர்களுக்கான பள்ளிகளின் நிர்வாகங்கள், தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு, கல்வி உரிமைச் சட்டத்தின் சில விதிமுறைகள் பற்றி, மிகைப்படுத்தியும், கண்டனத்துக்குரிய மொழிநடையிலும் சுற்றறிக்கை அனுப்பி, தூண்டிவிட முயன்று வருகிறார்கள். கீழ் சமூகங்களிலிருந்து அரசின் ஒதுக்கிடு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டால், கல்வியின் தரம் சீரழிந்து, அரசுப் பள்ளிகளைப் போன்று தங்கள் பள்ளிகளும் ஆகிவிடும், ஆசிரியர்களுக்கு இம்மாணவர்களை சமாளிப்பதிலேயே சக்தியும், நேரமும் விரயமாகிவிடும், ஒதுக்கீடு மூலம் வரும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், இம்மாணவர்களின் செலவு, மற்ற பெற்றோர்களின் தலையில் விடியும் போன்ற பல புகார்களைக் கூறிவருகிறார்கள்.

  10. மேலும், தகவல் உரிமைச் சட்டம் போன்று, கல்வி உரிமைச் சட்டத்தைப் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வும், கருத்தும் இருக்கிறதா என்பதையும் விவாதிக்க வேண்டியுள்ளது.

  11. மேற்கூறியவை உட்பட பல விஷயங்களில் நடைமுறைப் பிரச்சனைகள் மிகுந்துள்ளதால், கல்வியாளர் அனில் சடகோபால் சொல்வது போன்று, கல்வி உரிமைச் சட்டம் என்பது இலவசக் கல்வியும், கட்டாயக்கல்வியும் வழங்காமல், நம் குழந்தைகளின் மீது தொடுக்கப்படும் ஏமாற்றுவேலை ஆகிவிடக் கூடாது.

  ஆகையால் தாங்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, இவ்விஷயத்தில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும், அமைப்புகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

  தொடர்புக்கு: முனைவர்.ஷண்முக வேலாயுதம் (9444022930), அ.நாராயணன் (9840393581)

 33. இந்த கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மே 8ம் தேதி நடக்க இருக்கிறது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  Brain storming meeting on RTE on Sunday the 8th May afternoon 3-5PM

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க