Thursday, December 12, 2024
முகப்புஅரசியல்ஊடகம்பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

-

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
அது போன மாசம்.........

நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற  ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஸ்ரீஸ்ரீ

இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.

ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக  நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.

போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”

அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும்  ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு  என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?

ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது  எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.

இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள  மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • Don’t feel sir. For Vinavu what you are trying to say is Hindu terrorism.
      Innocent muslim people unfortunately passed the route where hindus were already being killed by the climate only.

  1. தலையை நன்றாக வளைத்து முகத்தை பின்புற்மாக கொண்டு வந்து நாநுனியை ஆசனவாய் அருகே கொண்டு வந்து ஒரு இருவது முறை தடவும் ஆசனத்தின் பெயர் ஜிங்ஜிங் ஆசனம். இதை ராம்தேவ் செய்திருப்பாரானால் அவருக்கு பசி பத்து மாதத்திற்கு இருந்திருக்காது. யாராவது இதை அவருக்கு ரெக்கமன்டு செய்யுங்களேன். காப்பிரைட் உரிமைக்கெல்லாம்நான் வர மாட்டேன்

    • இந்த காப்பிரைட் உரிமை உனக்குத்தான் ஏன் என்ட்ரால் இதைக்கண்டு பிடித்தவனே நீ தானா
      ..

      • கண்டிப்பாக அட்டக்கருப்பாயீ. நீங்கள் கூட டிரை பண்ணி பாக்கலாம்.

  2. கட்டுரையில் அங்கங்கே தென்படும் எள்ளலும் எகத்தாளமும் நக்கலும் நையாண்டியும் மிகவும் இயல்பாய் வந்து விழுந்திருக்கின்றன. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறோமோ இல்லையோ அது வேறு விஷயம். ஆனால் தமிழில் இப்படியெல்லாம் எழுத முடிகிறதே என்பற்குப் பாராட்டுக்கள்.

  3. //புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க்///

    லும்பன் பிரிவா ? :)))

    நீங்க யார லும்பன் என்று சொன்னாலும் அப்படியே எத்துக்க எங்களுக்கு எல்லாம் என்ன ‘பகுத்தறிவு’ இல்லையா என்ன ?

    • ஏன் கீழ்த்தட்டில் உள்ளவர்களைச் சொன்னால் மட்டும்தான் பகுத்தறிவ யூஸ் பண்ணாம ஏத்துக்குவீங்களா!

    • எந்த நோக்கமும் இன்றி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் கும்பலைத்தான் லும்பன் என்று சொல்வார்கள். எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மேல் நடுத்தர வர்க்கத்தில் இப்போது இத்தகைய லும்பன்கள் அதிகரித்துள்ளனர். இதில் தாங்கள் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

  4. //புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க்///

    லும்பன் பிரிவா ? :)))

    நீங்க யார லும்பன் என்று சொன்னாலும் அப்படியே ஏத்துக்க எங்களுக்கு எல்லாம் என்ன ‘பகுத்தறிவு’ இல்லையா என்ன ?

    //அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. ///

    ஊழலுக்கு அடிப்படை பற்றி உங்க கோணம் தவறு. எங்கெல்லாம் அரசு மிக மிக வலுவாக, பெரும் அதிகாரம் கொண்டதாக (முக்கியமாக பொருளாதார விசியங்களிலும்)
    உருவெடுக்கிறதோ அங்கு ஊழல் உருவாகும். over centralisation of economic and political powers with the state is the root cause of corruption and moral degredation.

    மாற்றாக, அரசின் அதிகாரம் மிக குறைவாக உள்ள நாடுகளில், லிபரல் ஜனனாயகமும், (உண்மையான) சுதந்திர சந்தை பொருளாதாரமும் உள்ள நாடுகளில் தான் ஊழலில் அளவு மிக மிக குறைவாக இருக்கும். இதை நீங்க ஏத்துக்காமாட்டீக தான்.

    1947க்கு பின் இந்தியாவில் ஊழல் பெருக இதுதான் காரணம். ஆங்கில காலனிய அரசு பல கொடுமைகளை புரிந்தாலும், தொழில் துறையில், காங்கிரஸ் அரசு பின்னாட்களில் செய்த கட்டுபாடுகளை செய்யவில்லை. எனவே லஞ்சம் கொடுத்து தொழில் துவங்க, வரி ஏய்க்க தேவை அன்று இல்லை.

    மே.அய்ரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில் ஊழல் குறைவாக இருக்கவும் இதே போல் காரணிகள் தான்.

    • \\எங்கெல்லாம் அரசு மிக மிக வலுவாக, பெரும் அதிகாரம் கொண்டதாக (முக்கியமாக பொருளாதார விசியங்களிலும்)
      உருவெடுக்கிறதோ அங்கு ஊழல் உருவாகும். over centralisation of economic and political powers with the state is the root cause of corruption and moral degredation.//

      அதியமான்,

      இந்த இரண்டு வினாக்களுக்கு விடையளித்து பாருங்கள்.உங்கள் வாதத்தின் அபத்தம் தெளிவாகும்.

      இந்தியாவில் தாராளமயமாக்கலுக்கு அதாவது 90 களுக்கு பிறகு பொருளாதாரத்தின் மீதான அரசின் கட்டுப்பாடு தளர்ந்துள்ளதா,இறுகியுள்ளதா.

      இந்த காலகட்டத்தில் ஊழல் பெருகியுள்ளதா.குறைந்துள்ளதா.

      • 1991க்கு பின் கட்டுபாடுகள் தளர்ந்துள்ளன. ஆனால் முழுவதுமாக இல்லை. கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட துறைகளில் ஊழல் பெருமளவு குறைந்துள்ளது. உதாரணமாக புதிய பெரும் தொழில் துவங்க அன்று Industires Ministryக்கு லஞ்சம் கொடுக்காமல் அனுமதி பெறவே முடியாது. இன்று அப்படி இல்லை. வர் ஏய்ப்பு அன்று மிக மிக மிக அதிகம். இன்றும் உள்ளது. ஆனால் வருமான வரி 90 சதம் உச்சபட்சம், உற்பத்தி வரி 50 சதத்திற்க்கு அதிகாமான காலம், சுங்க வரி 200 சதம் இருந்த காலங்களில் இருந்த காலம் அன்று. அப்ப இருந்த வரி ஏய்ப்பு மிக மிக அதிகம் (விகிதாச்சார அளவில்). கருப்பு பணம் என்று ஒரு திரைபடத்தை கண்ணதாசன் எடுத்தார் ! இன்றும் வரி ஏய்ப்பு உண்டு. பழக்க தோசம் என்று சொல்லாம். சட்டங்களை மீறி, மரத்து போன மனங்கள் திருந்த காலம் தேவை. Long term effects என்று உண்டு. அவை பல காலம் நீடிக்கும். ஆனால் பலரும் இன்று வரி கட்டி ஒழுங்கா வாழ முற்படும் காலம் இது. எனெனில் அன்று மிக அநியாயமான வரி விகிதம் என்று கருதியவர்கள், இன்று உள்ள 34 சத வருமான வரியை கட்ட முற்படுகின்றனர்.

        இன்று புதிய தொழில்கள் சுலபமாக நேர்மையாக துவக்கி நடத்த சாத்தியம் உண்டு. New sectors opening up and easy entry into old sectors which were closed until 1991. உதாரணமாக இன்ஃபோஸிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களை சொல்லாம். வரி ஏய்ப்பு செய்வதில்லை. பாரத் ஃபோர்ஜ் என்ற பெரும் நிறுவனம் உலகத்தரம் வாய்தாக ஆகி உள்ளது.

        ஊழல் இன்று பெரும் அளவில் இருப்பது அரசு அளிக்கும் சேவைகளில், மற்றும் அரசுக்கான காண்ட்ராக்ட்களில் தான்.

        சுவாமிநாதன் அங்கலேஸ்வர்யா ’அய்யர்’ எழுதிய கட்டுரை இது :

        http://swaminomics.org/?p=1949
        Big graft yes, but big growth too

        they said that the rising problem was low-level corruption at the state and municipal levels. One businessman said the hassle of dealing with these low-level inspectors and functionaries was so exasperating that he had sold his main business. All three agreed that low-level corruption was not so extortionate as to render business unprofitable. But it was a rising everyday headache.

        What about demands for money from top politicians? Here the news was surprisingly good. Thanks to economic reform and deregulation, business in many sectors and states could now flourish without top political payoffs.

        • Excellent, i said, but then how do you account for the fact that money in politics seems more humongous than ever before? Well, they replied, the big political money is being made in three areas —real estate, mining, and government contracts. We avoid all three areas, said the businessmen, and so we are able to avoid the big payments that some others make. One of them said he had considered venturing into power generation, but abandoned the idea on finding out that dubious dealing would be necessary to get a coal mining licence or linkage.

          They said crony capitalism was endemic in real estate, mining and government contracts. The greatest fortunes were being made in land through discretionary allotments and sweetheart deals. Mining leases could be pure rackets, unrelated to the track record or qualifications of entrepreneurs.

          The classic illustration of this related to former Andhra Pradesh governor ND Tiwari. He reportedly made the mistake of promising a mining licence to the madam of a brothel that supplied him with young girls. When the madam did not get the licence, she was reportedly so enraged that she released photos of the governor cavorting with three nude girls. This occasioned much merriment, and Tiwari had to resign. Yet, surely the real scandal was the revelation that our standards are now so low that even brothel owners feel qualified to become mining magnates.

          What about individual chief ministers? My business friends said that some CMs were more honest than others, but all had to provide for their party coffers. Even in states reputed to have the least corruption, the chief minister would raise money from a small, favoured coterie of businessmen, while sparing smaller fry.

          Now, too much cannot be read into a lunch conversation with three small and mid-cap businessmen. Yet, on balance it seems to me that they shed valuable light on a question that has long puzzled analysts: how can India enjoy accelerating GDP growth when corruption and political extortion seem to be reaching new heights?

          First, the virtual abolition of controls like industrial licensing, import licensing and foreign exchange quotas means that many businesses in many sectors can now expand freely without political payoffs or long delays. This has been a major gain of economic reform.

          Second, corruption and payoffs that once hit all sectors of the economy are now limited mainly to three sectors —real estate, mining and government contracts. These are large sectors and provide plenty of payoffs, which is why politicians look richer than ever before. But in these areas, politicians make money by encouraging the expansion of infrastructure, townships and mineral exploitation. Although this provides unjust windfalls to politicians and their business cronies, it is consistent with faster economic growth. The new distortions are ugly indeed in moral terms, yet are less damaging than the distortions of the old licence permit raj.

          Third, the media needs to focus not just on big money at the top, but on low-level corruption at the grassroots level. True, it is less exciting to break stories about corruption among petty officials and inspectors than stories about telecom giants or governors romping with naked girls. Yet the harassment that ordinary folk face is at this grassroots level.

        • \\கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட துறைகளில் ஊழல் பெருமளவு குறைந்துள்ளது. உதாரணமாக புதிய பெரும் தொழில் துவங்க அன்று Industires Ministryக்கு லஞ்சம் கொடுக்காமல் அனுமதி பெறவே முடியாது. ………..இன்ஃபோஸிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களை சொல்லாம். வரி ஏய்ப்பு செய்வதில்லை. //

          சரிதான்.தொலைதொடர்பு துறையில் இருக்கும் தனியார் முதலாளிகள் யாருக்கும் லஞ்சம் கொடுக்காமலேயே உரிமம் பெற்றுள்ளார்கள்.உரிமம் தந்த ஆ.ராசாவுக்கு நன்றி தெரிவிக்க அம்பானியும் டாட்டாவும் முனியாண்டி விலாசில் ராசாவுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள்.அவ்வளவுதான்.

          கிருசுனா கோதாவரி எண்ணெய் வயல்களில் அம்பானி நேர்மையாக உழைத்து ஏதோ இரண்டு காசு பார்த்துள்ளார்.அது தலைமை கணக்காயருக்கு பொறுக்கவில்லை.மதிப்பிட முடியாத அளவுக்கு இழப்பு என அபாண்டமாக பழி போடுகிறார்.வேற ஒண்ணுமில்லிங்க, அவருக்கு அம்பானி மேல ”காண்டு”.

          ராச குலோத்துங்குவை விட்டி விட்டீர்களே.”சத்யசீலர்” ராமலிங்க ராசு ”வாளை வீட்டிலேயே வைத்து விட்டார்”.அதனால் தப்பித்தீர்கள்.

          பழக்க தோசம் மாறி மனம் திருந்தி எல்லோரும் ஒழுங்காக வரிகட்டும் நாளுக்காக காத்திருக்க சொல்கிறீர்கள்.பார்த்து கவனமாக இருங்கள்.ஏதோ தொழில் முனைவோராக இருந்தோமா நாலு காசு சம்பாதித்தோமா என நிம்மதியாக இருக்கும் உங்களை அடுத்த வினோபா ஆக்கிவிட போகிறார்கள்.

          • திப்பு,

            நான் சொன்னதை முழுசா உள் வாங்காமாலேயெ பேசறீங்களே. ஊழல் இன்னும் தொடர்கிறது என்றும் பேசியிருந்தேன். சுவாமினாதன் எழுதிய கட்டுரை விரிவாக பேசுகிறது. காராணிகள் பற்றியும். 3ஜி ஏலத்தில் ஊழல் இல்லை தானே ? 2ஜியில் தான் ஊழல். எப்படி ஆனாது ?

            எண்ணை வளங்கள் உள்ள நிலங்கள் உலகெங்கும் உள்ளன. அமெரிகா டெக்சாஸ் மாகணத்தில், கனடாவில், வட அய்ரோப்பாவிலும் உள்ளன. அங்கு தனியார் நிறுவனங்களுக்கு அவை எப்படி அளிக்கப்பட்டன ? ஊழல் ஏன் இந்தியா போல் இல்லை ? 2ஜி அலைவரிசைகள் அங்கு எப்படி அளிக்கப்பட்டன ? ஊழல் ஏன் இங்கு போல் இல்லை. வேறு துறைகளில், வேறு பாணி ஊழல்கள் அங்கும் உண்டு. ஆனால் இந்தியா போல இல்லை. ஆனால் எல்லா நாடுகளையும் ‘முதலாளித்துவ’ நாடுகள் என்றே அழைக்கிறீர்கள்.

            சத்தியம் கம்யூட்டர்ஸ் ஊழ்ல் பற்றி மட்டும் தான் பேச வேண்டுமா? விதி விலக்கு அது என்று கொள்ளாம். நூற்றுகணக்கான கம்யூட்டர் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன. அதை பற்றி பேசினால், விதி விலக்குகளை மட்டும் தான் சொல்வீக.

            சரி, என்ன செய்யலாம் என்கிரீக ? உங்க குழுவின் தலைமையில் செம்புரட்சியா ?
            சாத்தியாம ? அப்ப எப்ப வரும் என்றாவது சொல்ல முடியுமா ? அதுவரை என்ன செய்வதாம் ? 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கும், இன்றைய நிலைக்கு உள்ள பெரும் மாறுதல்களை பற்றி பேசுகிறேன். ஆனால் உங்களுக்கு அது புரியவில்லை.

  5. நீங்க என்னமோ கைப்புள்ளயின் அழுகாச்சி கிளைமாக்ஸ்ன்னு சொல்லுரிங்க. ஆனா வடக்க ஒரு காவி மாமா இத மைல்ஸ்டோன்னு சொல்லுராப்புல…

    • அவரு சொல்றதுலயும் ஒரு உண்மையிருக்குதான் பாசிஸ்ட். இனிமே காவியக் காட்டி தெற்குலதான் மக்களை திரட்டமுடியாம இருந்ததுன்னா இப்ப வடக்கிலயும் திரட்ட முடியலையேன்னு அந்த மாமா புரிஞ்சிக்கிடறுதுக்கு இது ஒரு மைல்ஸ்டோனுதான்.

  6. ஒரு படைப்பு சமூக நடப்புகளை சொல்லுகிற அதே வேளையில் வாசகனை வசீகரிக்கவும் வேண்டும். அந்த வகையில் இந்தக்கட்டுரை சுவை நிறைந்த பலாச்சுளை. படையலிட்ட தோழருக்கு வாத்ழ்துகள்!

  7. தப்பிப்பதற்காக ஒரு திருடன் எல்லோருக்கும் முன்னாடி, அதோ திருடன்…திருடன்…என்று கூவிக்கொண்டே ஓடிய கதைதான் ராம்தேவ் கதை…ஆனா பாவம் மாட்டிகிட்டாரே….

  8. உங்களுக்கு இந்து மததிதை விட்டடால் வேறு ஒரு செய்தியும் இல்லையோ????
    உங்க ஊரில ரொம்ப பேர் இப்படித்தான் போல… வேற வேலை இருந்தா போய் பாரு…

  9. http://www.dnaindia.com/india/report_maoists-extend-support-to-baba-ramdev_1550850

    Ramdev Baba has found unlikely support from Maoists for his proposed indefinite fast in Delhi from tomorrow.

    “We invite the people of the country to join Baba Ramdev’s movement from tomorrow against corruption and bringing back black money stashed abroad,” Maoist state committee member Aakash told PTI over phone.

    “We extend our full support to Baba Ramdev. It is not only Ramdev or Anna Hazare but Maoists will actively participate in the fight against corruption by anybody, anywhere and in any way,” he said.

    He also warned the people not to fall into the ‘trap’ laid by the political parties and the UPA government at the Centre, which is ‘neck deep in corruption, as it would mar the purpose of the ‘noble cause’.

  10. பத்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டு நுனி மூக்கை பார்த்துக்கொண்டு சுவாசத்தை கட்டுப்படுத்தி மூலாதாரத்தில் மனதை இருத்தி குண்டலினியை கிளப்பி முதுகுதண்டு வழியே கபாலத்திற்கு கொண்டு சென்று நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து அதை அருந்தி சாவே இல்லாமல் மாபெரும் யோக சக்தியுடன் வாழ முடியும் …….இந்த மாதிரி அறிவியல் ஆதாரமற்ற டுமீல்களை நம்பி பலர் பைத்தியகாரர்கள் ஆகி இருக்கிறார்கள் இது போன்ற கதைகளையும் அதை பயில்விக்கும் வகுப்புகளையும் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும்.

  11. \\தலையை நன்றாக வளைத்து முகத்தை பின்புற்மாக கொண்டு வந்து நாநுனியை ஆசனவாய் அருகே கொண்டு வந்து ஒரு இருவது முறை தடவும் ஆசனத்தின் பெயர் ஜிங்ஜிங் ஆசனம்.\\

    என்ன ஒரு சின்ன புத்தி. யோகா கலையை அமெரிக்க மக்களிடம் போய் கேட்டு பாருங்கள். நமது நாட்டு கலையை அவர்கள் நன்றாக சொல்வார்கள். எல்லா துறையிலும் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். போலி டாக்டர்கள் இருக்கும் காரணத்தால் ம்ருத்துவ மனைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பது போல் உள்ளது.

    இதை தான் புடிக்காத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்று… இவர் கற்று கொடுக்கும் யோகா மற்றும் ஆயுர் வேத மருத்துவம் மூலம் எத்தனையோ மக்கள் குண்ம் அடைந்து உள்ளனர் என்று உங்களுக்கு தெரியாதா? இவர் நடத்தும் அனைத்து ஆயுர் வேத மருத்துவ மனைகளில் இலவசமாக மருத்து இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. இவர் தான் கற்ற கல்வி மூலமாக தொழில் செய்கிறார். இதில் உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல்.

    பாபா ராம்தேவுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட YOGA மாணவர்கள் உள்ளனர். இவர் யோகா கலையில் மிகவும் சிறந்தவர். ஒரு மாணவர் 1000 கொடுத்தல் கூட சர்வ சாதரணமாக 1000 கோடி வரும். இதில் என்ன பெரிய விஷயம்.

    அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் யோகா பிரசத்தி பெற்றது, அங்கு அவர்கள் இந்த கலையை கற்று கொள்ள ஆயிரம் டாலர்கள் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

    நாடு முழுவதும் இவர் 1000 கணக்கான இலவச யோகா பயிற்சி மையத்தை நடத்துகிறார். இதற்க்கு எல்லாம் பணம் என்ன அரசாங்கம் கொடுக்குமா?

    முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இவர் ஒன்றும் ஆன்மீக குரு கிடையாது. இவர் ஒரு யோகா குரு.. குரு என்றால் ஆசிரியர் என்று பொருள். இவர் பணம் சம்பாதிதால் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    1000 கோடி சொத்து இருந்தும் அதை வைத்து கொண்டு சுயநலமாக இல்லாமல், ஒரு குறுபிட்ட விசயத்தை எடுத்து போராடும் பொழுது இதில் எதற்கு மத சாயம். எல்லோராலும் எல்லா விசயத்திற்காகவும் போராட முடியாது. நான் எல்லா விசயத்திற்காகவும் போராடுவேன் என்று கூறினால் கடைசியில் ஒரு விசயமும் செய்ய முடியாது. ராம் தேவ் அவர்களை குறை சொல்லும் கபோதிகள் இருக்கும் வரை இந்த நாட்டின் வளம் சுரண்ட படுவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவர் மருந்தில் மனித எலும்பு துகள்கள் இருப்பதாக கிறித்துவ தீவிரவாத கட்சி தலைவி தனது ஏவல் போலி பாதரியார்கள் மூலம் ஒரு பொய் கதையை, அரேபிய ரியாலில் இயங்கும் கம்யூனிஸ்டு குடும்ப தொலை காட்சியான NDTV மற்றும் CIA மூலம் இயங்கும் எவாங்களிஸ்டு CNN_IBN கொண்டு பரப்பினாள்.

    ஒரு வேலை இந்த குற்றம் உன்மையாக இருந்தால் தான் என்ன? இறைச்சி என்று சொன்னால், வினவின் பார்வையில் எல்லாமே ஒன்று தான் என்று நான் நன்றாக அறிவேன். அது பசு மாட்டு இறைச்சி என்றால் என்ன? பன்றி இறைச்சி என்றால் என்ன? மனித இறைச்சி என்றால் என்ன? எல்லாம் இறைச்சி தான். அப்படி இருக்கையில் அப்படியே மனித எலும்பு சேர்தால் தான் என்ன? இறந்த மனிதனின் கண்ணை மற்றொரு வருக்கு வைக்கும் பொழுது எலும்பை மருந்தில் சேர்க்க கூடாதா என்ன? ஏசுவே கூட ரம் என்ற போதை பானத்தை தனது இரத்தம் என்று கருதி குடிக்க சொல்லி இருக்கிறார்.

    இவர் ஒன்றும் எந்த கட்சிக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வில்லையே? இந்த சட்டம் கொண்டு வந்தால், ஹசன் அலி என்ற ஒரு துலுக்கன் மூலம் 50000 கோடிக்கும் மேலான பணத்தை கிறித்துவ தீவிரவாதிகளின் தலைவி கொள்ளை அடித்து கொடுத்து வெளிநாட்டு வங்கியில் வைத்துள்ள பணம் அரசாங்கத்திற்கு கிடைக்க வழி வகை செய்யப்படும்.

    இந்த சட்டம் வந்தால் காங்கிரஸ் மட்டும் அல்ல, பா ஜா க மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் வெளி நாட்டு வங்கியில் பணம் வைத்து இருந்தாலும் அது அரசாங்கத்திற்கு வந்து சேரும். இவ்வளவு ஏன் ராம் தேவே எதேனும் பணத்தை பதுக்கி வைத்து இருந்தாலும் அதுவும் அரசாங்கத்திற்கு வந்துவிடும்.

    இவர் ஒன்றும் புரட்சி இயக்கம் என்று சொல்லி கொண்டு, சீனாவிடம் பணத்தை வாங்கி ஆட்களை கொல்லும் பணவெறி பிடித்த மாவோயிஸ்டுகள் இல்லையே?

    அப்பாவி கடை நிலை காவல் துறையினர் தான் இவனுங்களுக்கு கொல்லரதுக்கு கிடைச்சனுன்களா? இவனுங்களுக்கு தைரியம் இருந்தால் எந்த கட்சி அரசியல் வாதி மேலே கை வச்சு பாக்கட்டும். அத விட்டுட்டு போயும் போயும் மாசம் 5000 சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண காவல் துறை ஊழியரை கொலை செய்யும் இவனுங்க புரட்சி காரனுங்களாம். சீனா போடும் பணம் என்ற எலும்பு துண்டுக்கு கொலை செய்யும் கூலி படை. இவ்ர்கள் செய்வது புரட்சியாம். உங்களுக்கு மதவாதிகள் எவ்வளவோ தேவலை.

    வெளி நாட்டில் இருந்து ஒரு மதத்திற்கு 16000 கோடி (கணக்கில் வந்து)ஒரு சில வருடத்தில் வந்துள்ளது., அதை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது, இவர்கள் ஏதேனும் ந்ல்லது செய்தால் ஆஹா ஓஹோ என்று புகழ்வது. நம் நாட்டை சேர்ந்தோர் யாரேனும் நல்லது செய்தல் அவன் மீது எவ்வளவு சேற்றை வாறி இறைக்க முடியுமோ அவ்வளவு இறைப்பது.

    போலி சாமியார்கள், போலி பாதரியார்கள், போலி முல்லாக்கள் வரிசையில், ஒரு போலி
    கம்யூனிஸ்டுகளுன் உருவாகிவிட்டன்ர் என்பது வினவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    • அந்த ஆளு காவி உடுத்தியிருக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக இவ்ளோ நீள விளக்கமா சோழன்?

    • @சோழன்,

      அமெரிக்காவில் யோகா மட்டுமா பேமசு? அதைவிட போதைமருந்து கூடத் தான் பேமசு… இவரு கத்துக்குடுத்த யோகாவால் பலரும் பயனடைந்த கதையெல்லாம் இருக்கட்டும்வே… முதல்ல இவரே பயனடைலன்னு தானே கட்டுரை சொல்கிறது? அதுக்கு முதல்ல பதிலச் சொல்லும்வே..
      யோகா உலகிலேயே சிறந்ததாம்.. தாங்க முடியலடா சாமி. அப்படி யோகா சிறப்பானதா இருந்திருந்தா பாலும் தேனும் லோடு லோடா உள்ள தள்ளியும் கூட இந்த பய பத்து நாளுக்கு கூட தாக்குப்புடிக்க முடியலையே ஏன்?

      அசன் அலியின் ஐம்பதாயிரம் கோடி திரும்பி இந்தியாவுக்கு வருவது நல்லது தான்… வி.எச்.பி மூலம் அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான பணமும், அமிர்தானந்தமயி, சின்மயா மிசனின் பாரின் கிளைகள் மூலமும் கோடிக்கணக்கில் ஹவாலா ரூட்டில் பணத்தை வரவழைத்து இந்திய அரசுக்கு நாமம் போட்ட ஆர்.எஸ்.எஸ் பற்றியும் நீங்கள் பேசியிருக்கலாம். அப்படியே சுதேசி / பாரதமாதாவுக்கு ஜெய் என்று சொல்லிக் கொண்டே கங்கையை விதேசிக்குத் தாரை வார்த்து விட்டு, பாரதமாதாவை அன்னிய தேசங்களுக்குக் கூட்டிக் கொடுத்து மாமா வேலை பார்த்து ஊழல் செய்த வாஜ்பாய் பற்றியும் கூட பேசியிருக்கலாமே சோலா?

      ஆமா.. நீங்க பெர்ர்ரிய்ய்ய இந்துத்துவ அப்பாடக்கரு தானே… மோடில இருந்து எடியூரப்பா வரைக்கும் அன்னிய முதலீடு கேட்டு அமெரிக்க கிறிஸ்தவன் காலையும் மலேசிய /மத்தியகிழக்கு முசுலீம் காலையும் நக்கிக் கொண்டு கிடக்கிறார்களே அங்க போய் அவுத்து விட வேண்டியது தானே இந்த இந்துத்துவ கோவனத்தை? விதேசி கோகோ கோலாவுக்கு ‘புண்ணிய’ நதிகளை பாரதியஜனதா விற்ற போது உங்க சுதேசி குருமூர்த்தி என்னத்தப் புடுங்கிக்கினு இருந்தாரு மிஸ்டர் டவுசர்?

      பாபா ராம்தேவை மக்களே மதிக்கலை. பாபா ராம்தேவை வைத்து திரும்ப தலையெடுக்கலாம் என்று கணக்குப் போட்ட ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளை தில்லியில் ரோட்டோரம் காலைக் கிளப்பிக் கொண்டு அலையும் சொறிநாய் கூட மதிக்கலை. இவரு இங்க வந்து ராக்கெட்டு வுட்டுக் காட்றாரு..

      • \\தாங்க முடியலடா சாமி. அப்படி யோகா சிறப்பானதா இருந்திருந்தா பாலும் தேனும் லோடு லோடா உள்ள தள்ளியும் கூட இந்த பய பத்து நாளுக்கு கூட தாக்குப்புடிக்க முடியலையே ஏன்? \\

        இதில் இருந்தே தெரிகிறது. உங்கள் பொது அறிவு. யோகா என்பது சாப்பிடாமல் உயிர் வாழ்வது எப்படி என்பதை கற்பிக்கும் கலை இல்லை. இது கூட தெரியாமல் கேனதனமாக கேள்வி கேட்க கூடாது. அது ஆரோக்கியமான வாழ்வுக்கான நமது முன்னோர்கள் கண்டுபிடித்த வழி.

        \\அசன் அலியின் ஐம்பதாயிரம் கோடி திரும்பி இந்தியாவுக்கு வருவது நல்லது தான்… வி.எச்.பி மூலம் அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான பணமும், அமிர்தானந்தமயி, சின்மயா மிசனின் பாரின் கிளைகள் மூலமும் கோடிக்கணக்கில் ஹவாலா ரூட்டில் பணத்தை வரவழைத்து இந்திய அரசுக்கு நாமம் போட்ட ஆர்.எஸ்.எஸ் பற்றியும் நீங்கள் பேசியிருக்கலாம்\\

        ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் , அமிர்தானந்தமயி, சின்மயா மிசனினுக்கும் என்ன சம்ந்தம்? எதாவது பேச வேண்டும் என்று பேசக் கூடாது.

        அவ்வள்வு பணம் அவர்களிடம் இருந்து இருந்தால் இன்னேறம், NDTV, CNN_IBN அளவுக்கு ஒரு தொலைகாட்சியை ஆரம்பித்து இருக்கலாமே? நீங்கள் நினைப்பது போல் RSS ஒன்றும் பெரிய அமைப்பு எல்லாம் கிடையது. அது ஒரு தயிர் வடை அமைப்பு. நல்ல வேலை இந்த தயிர் வடை அமைப்பை நம்பி இருந்தால் ஹிந்துக்களை எப்பொழுதோ ஆப்ரகாமிய அமைப்புகள் அழித்து இருப்பார்கள்.

        நான் ஒன்றும் RSS வக்கீல் கிடையாது. அது சர் இங்கு BJP எங்கு இருந்து வந்தது. நடப்பது அரசியல் சட்ட மாற்றத்திற்கான போரட்டம்.

        \\மோடில இருந்து எடியூரப்பா வரைக்கும் அன்னிய முதலீடு கேட்டு அமெரிக்க கிறிஸ்தவன் காலையும் மலேசிய /மத்தியகிழக்கு முசுலீம் காலையும் நக்கிக் கொண்டு கிடக்கிறார்களே\\

        முதலில் அமேரிக்காவில் இருப்பவர்கள் அனைவரும் கிறித்துவர்களே கிடையாது. அவர்க்ள், பேகன் மக்கள். அவர்களை இந்த மதம் மாற்றிகள் , மதம் மாற்றிவிட்டனர். அவ்வளவு தான். இடைகாலத்தில் உருவானது தான் இந்த ஆப்ரகாமிய மதங்கள், அது கால போக்கில் மறையும். ஹிந்து மதம் என்பது உங்கள் பார்வையில் பார்பன மதம். ஆனால் இதுவரை அகழ் ஆராய்ச்சியின் மூலன் இது தான் ஆரியர் வாழ்ந்த இடம் என்று சொல்ல படவில்லை.

        உங்கள் பார்வையில் ஆரியர்கள் இடம், europe அல்லது central asia என்று சொல்லப்படும் அரேபியா தானே? அப்படி என்றால் உங்கள் பார்வையில் அதாவது கிறித்துவ மதவெறியாளனும் வெள்ளை இன வெறி ப்டித்தவனுமான கால்டு வெல் உருவாக்கிய ஆரிய திராவிட கோட்பாட்டின் படி, ஆரிய அல்லது பார்பன மக்களின் பூர்வ குடியான அந்த இடத்தில் உள்ள மக்களிடம் தானே முதலீடு செய்ய சொல்லி கேட்கிறார்கள். இதில் கிறித்துவ மக்களால் உருவாக்க பட்ட போலி திராவிட இனமாக மாறிய உங்களுக்கு என்ன பிரச்சனை?

        அதுவும் தவிர, பல அமெரிக்க நிறுவனங்கள் இப்பொழுது ஹிந்துக்கள் கையில் தான் உள்ளது. உங்கள் பார்வையில் அனைத்து மிகப்பெரிய நிறுவனங்களும் பார்பன மக்களின் கட்டுபாட்டில் தான் உள்ளது.

        \\அங்க போய் அவுத்து விட வேண்டியது தானே இந்த இந்துத்துவ கோவனத்தை\\

        இன்னும் எவ்வளவு நாள் தான் அடுத்தவன் கோவனத்தையே பிடித்து கொண்டு அழைவீர்கள்.

        \\பாரதமாதாவை அன்னிய தேசங்களுக்குக் கூட்டிக் கொடுத்து மாமா வேலை பார்த்து ஊழல் செய்த வாஜ்பாய் பற்றியும் கூட பேசியிருக்கலாமே சோலா?\\

        கூட்டி கொடுப்பது எல்லாம் கம்யூனிஸ்டுகளுக்கு கை வந்த கலை. லெனின் பெண்களை கூட்டி கொடுப்பதற்காகவே ஒரு பெரிய மாளிகையே வைத்து இருந்தார் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன்?

        \\விதேசி கோகோ கோலாவுக்கு ‘புண்ணிய’ நதிகளை பாரதியஜனதா விற்ற போது உங்க சுதேசி குருமூர்த்தி என்னத்தப் புடுங்கிக்கினு இருந்தாரு மிஸ்டர் டவுசர்? \\

        கொஞ்மாவது அறிவுடன் பேசவும். சுதேசி குருமூர்த்தி என்ன இந்திய பொருளாதார துறை அமைச்சரா என்ன? இவர் நினைத்தால் நடப்பதற்கு.

        \\பாபா ராம்தேவை மக்களே மதிக்கலை. பாபா ராம்தேவை வைத்து திரும்ப தலையெடுக்கலாம்\\

        உங்களை மட்டும் யார் இபொழுது மதித்தார்கள். அரேபிய ரியாலும், சீன பணமும், கிறித்துவ யூரோவும் இல்லாவிட்டால் உங்கள் அமைப்பு எப்பொழுதோ அருங்காட்சி அகத்தில் வைத்து இருப்பார்கள்.

        எனக்கு ஒரு கேள்வி. அல்பேனியாவில் இருந்து தெரசாவை விரட்டி அடித்து உங்கள் கம்யூனிஸ்டு தானே, அதே தெரசாவை உங்கள் மேற்கு வங்க கம்யூனிஸ்டு தானே அடியில் நாய் காலை நக்குவது போல் அவளை நக்கி கொண்டு இருந்தார்கள். இதை ப்ற்றி என்ன் சொல்வது. அல்பேனிய கம்யூனிஸ்டு வேறு, நாங்கள் வேறு என்று சொல்வீர்களா? இதையே நாங்கள் சொன்னால் ஏற்று கொள்வீர்களா?

        \\ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளை தில்லியில் ரோட்டோரம் காலைக் கிளப்பிக் கொண்டு அலையும் சொறிநாய் கூட மதிக்கலை\\

        அப்படியா? அப்பறம் எப்படி அங்கு ஐம்பது ஆயிரம் பேர் மேல் கூடினார்கள். நீங்கள் கூட தான் போராட்டம் என்ற பெயரில் நடத்திகிறீர்கள். உங்களை எந்த காலைக் கிளப்பிக் கொண்டு அலையும் சொறிநாய் மதித்தது.

    • நண்பர் சோழன் அவர்களே. யோகா என்பது உண்மையா அல்லதா என்பதை randomised controlled trial மூலமாகவே உறுதிப்படுத்த முடியும். யாரும் அதை செய்து பார்த்து உறுதி செய்ய வில்லை. அதுவரை அதை ஒரு postulate கொள்கையாகவே கொள்ள முடியும். இவர்கள் அதைக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். நம் ஆதங்கம் அது மட்டும் இல்லை. இவர்கள் பிராமண வாதத்திற்கு துணைபோவதால் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தள்ளி வைக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது. ஏனெனில் இவர்கள் ஏமாற்றி குவிக்கும் பணமும் அதிகாரமும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநாட்டவே துணை போகின்றன. மேலும் அமெரிக்காவிலும் அறிவிலிகள் உள்ளனர். அவர்கள் ஒத்துக்கொண்டால் மட்டும் அது உண்மையாகி விடாது. அங்கும் இந்த கொள்கை எந்த ஆய்விற்கும் உட்படுத்தப்படவில்லை. உடற்கூறியல், உடலியங்கியல்,நோயியல்,நோய்முதலியல் இவையெல்லாம் தம் மழலைநிலையில் இருந்த காலத்தில் இயற்றப்பட்ட சூத்திரங்கள் பதஞ்ஜலி முனிவருடையவை. அதை வைத்து இந்த கோமாளி காசு சம்பாதிப்பது கேலி பேசத்தகுந்ததே

      • \\இவர்கள் பிராமண வாதத்திற்கு துணைபோவதால் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தள்ளி வைக்கப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது\\

        கிறித்துவ அன்பரே, எனக்கு நீங்கள் பூணூல் போட தேவை இல்லை. தேவை பட்டால் நானே போட்டு கொள்கிறேன். யோகா முறை பற்றி இங்க யாரும் சான்றிதள் கொடுக்க தேவை இல்லை. வேண்டும் என்றால் நீங்களே பயிற்சி செய்து பாருங்கள். எது உண்மை எது போய் என்று தெரியும்.

        \\உடலியங்கியல்,நோயியல்,நோய்முதலியல் இவையெல்லாம் தம் மழலைநிலையில் இருந்த காலத்தில் இயற்றப்பட்ட சூத்திரங்கள் பதஞ்ஜலி முனிவருடையவை. அதை வைத்து இந்த கோமாளி காசு சம்பாதிப்பது கேலி பேசத்தகுந்ததே\\

        சரிங்க டாக்டர் MMBS, MD… நீங்க சொன்னா அது சரியா தான் இருக்கும். ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ராம் தேவிடம் யோக பயிச்சி பெறுபவர்களில் மிக பெரிய மருத்துவ வல்லுனர்களும் உள்ளனர். ஒரு வேலை அவர்கள் எல்லாம் பிட் அடித்து பாஸ் செய்தவர்களாக இருப்பார்களோ?

        • நண்பரே.நான் கிருத்தவன் அல்லன். மனிதம் தழைக்க சாதி மதப்பாகுபாடுகள் அறவே அழிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.நிச்சயம் இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பிற மதத்தினரிடயே கிடையாது. இந்தநாட்டில் அவ்வாறு கிருத்தவர், முசுலிம் மதத்தினரிடையே சாதீய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதன் காரணம் அம்பேத்கர் கூறியது போல இந்து மதத்தின் தொற்றுநோய் மற்றவரை பீடித்துள்ளது. அதற்கு அவரே நிவாரணம் தருகிறார். அது அந்த மதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எடுப்பதே. யோக சாஸ்திரம் என்பது, மீண்டும் கூறுகிறேன், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது. அது சிறப்பாக வேலை செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அதற்கு கூறப்பட்ட காரணங்கள்நிச்சயம் அறிவியலுக்கு பொருந்தாததே.

          \\சரிங்க டாக்டர் MMBஸ், MD… நீங்க சொன்னா அது சரியா தான் இருக்கும். ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ராம் தேவிடம் யோக பயிச்சி பெறுபவர்களில் மிக பெரிய மருத்துவ வல்லுனர்களும் உள்ளனர். ஒரு வேலை அவர்கள் எல்லாம் பிட் அடித்து பாஸ் செய்தவர்களாக இருப்பார்களோ?\\

          இதைச்சொல்ல MBBஸ் MD தான் வேண்டியதில்லை. பொய்யனை பொய்யன் என்று கூறுவதற்கு டாக்டர் எதற்கு. அப்படி அவரிடம் உடல் உபாதைகளுக்குநிவாரணம் தேடி செல்லும் மருத்துவர்கள்நிச்சயம் தங்கள் கல்வியின் மேல்நம்பிக்கை அற்றவராவார். குண்டலினி என்பது ஆசனவாயில் இருந்து கபால உச்சிக்கு எழுப்பப்படுவது என்று கூறப்படும்போது எந்தவழியாக சிரிக்க என்று தெரியவில்லை.

        • ஒரு தனி மருத்துவரோ அல்லது ஒரே எண்ணம் கொண்ட மருத்துவக்குழுவினரோ தனக்கு அல்லது தமக்கு நல்லது நேர்ந்தது என்று கூறினால் அதை இன்றைய மருத்துவ உலகம் ஒத்துக்கொள்ளாது. அதற்கு தேவை evidence . evidence இல்லாத எந்த ஒரு புதிய resultஉம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அப்படி யோகா சர்வ ரோகநிவாரணி என்றால் அது மருத்துவ உலகில் ஒரு புரட்சியை அல்லவா ஏற்படுத்தியிருக்க வேண்டும். இன்றும் மருத்துவ புத்தகங்களில் அவற்றை ஒன்றுக்கும் உதவாதவை அல்லது ஐயப்பாடுடையவை என்றே கூறப்பட்டுள்ளன.

          ஆதாரம்: Harrison’s Principles of Internal Medicine 17th ed.

          …..Despite its enormous success in prolonging life and sustaining its quality, contemporary western biomedicine has features that discourage some patients: many diseases, especially chronic ones, are neither curable nor well palliated; existing treatments can impose serious adverse reactions; and provision of care is fragmented and impersonal. CAM, despite lack of proof of efficacy, appeals to many because its practitioners are optimistic, and they invest the time to speak with and touch their patients. CAM empowers patients to make their own health choices, its natural products are believed to be inherently healthier and safer than synthetic ones, and care is provided in a “holistic” fashion, meaning that the broader medical, social, and emotional contexts of illness are considered in designing the treatment plan.

          The first large survey by Eisenberg in 1993 surprised the medical community by showing that >30% of Americans use CAM(complimentary and alternate medicine) approaches. Many studies since then have extended these conclusions by surveying specific demographic groups and patient populations. The Centers for Disease Control and Prevention (CDC) study of nearly 31,000 American adults revealed that in 2002 36% had used one or more modalities, with spiritual approaches, herbal medicine, chiropractic, and massage being the most prevalent. Over 1% underwent acupuncture treatment that year. Surveys among patients with cancer showed that 30 to 86% used CAM, with highest rates in those with more advanced disease and undergoing aggressive treatments. Similarly, among AIDS patients, 36 to 91% are reported to use CAM. In devastating chronic illnesses like these, CAM is called upon to provide hope of cures when conventional medicine cannot, to extend life, to ameliorate treatment side effects, and to provide emotional and physical comfort. While somewhat subject to vagaries of definition as to what counts as a CAM treatment, surveys have shown that Americans are willing to pay for these services out of pocket, with an estimated $7 billion each year on vitamins and mineral supplements, $4 billion on herbals and other natural products, and nearly $4 billion more on sports supplements. Eisenberg reported that total CAM expenditures in 1997 approached $30 billion, with more visits to practitioners for CAM services than to physicians in general…

        • இந்த ஆதாரம் அமேரிக்கா என்று நீங்கள் போற்றி புகழும் நாட்டில் இருந்து வெளியிடப்படும் ஒரு தலை சிறந்த மருத்துவநூல். அங்கு யோகா மருத்துவர்களிடையே நன்மதிப்பை பெற்றதல்ல. இது போன்ற பல டுபாக்கூர் மருத்துவ முறைகளை பற்றித்தான் மேற்கூறியவாறு இழித்துரைத்துள்ளனர். அமெரிக்க பொதுமக்களும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் அறிவிலிகள் பலரே. இங்குள்ள மருத்துவ மேதைகள் இந்து சமய வழிப்பட்டவர்கள். அவர்கள் யோகாவின் பின்னால் ஓடுதல் ஒன்றும் ஆச்சரியபடுதலுக்கன்று.

    • //இந்த சட்டம் வந்தால் காங்கிரஸ் மட்டும் அல்ல, பா ஜா க மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் வெளி நாட்டு வங்கியில் பணம் வைத்து இருந்தாலும் அது அரசாங்கத்திற்கு வந்து சேரும். இவ்வளவு ஏன் ராம் தேவே எதேனும் பணத்தை பதுக்கி வைத்து இருந்தாலும் அதுவும் அரசாங்கத்திற்கு வந்துவிடும்.// அதெல்லாம் வராதுன்னு தெரிஞ்சனாலதான் ராமுக்கு இவ்வளவு பில்டப்பு, டிராம, செண்டிமெண்டு எல்லாம். உண்மையிலேயே எதாவது செய்யக் கூடிய சட்டம் வர போராடினால் தெரியும் சேதி…

  12. \\இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?\\

    இவர் ஒன்றும் உத்தமர் இல்லை. இவர் பின்பு இருந்து இயக்குவது கிறித்துவ தீவிரவாத கூட்டம் தான் என்பது எல்லொருக்கும் தெரியும். அது எப்படி ஒருவர் பத்து ஆண்டுகள் உண்ணாமல் இருக்க முடியும். எல்லாம் கண் துடைப்பு. இந்த பக்கம் கிறித்துவ தொலை காட்சிக்கு போஸ் கொடுத்து விட்டு, நம்ப திராவிட கட்சிகள் போல் பின் பக்கமாக சென்று ஒரு மாட்டு leg piece முழுமையாக கபளிகறம் செய்து இருப்பார்.

    பாவம் ராம் தெவ் இது போன்ற இவாங்களிஸ்டு வித்தைகள் தெரியவில்லை. சாப்பிடாமல் இருந்து ஐந்தாவது நாளே மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்.

    பொதுவாக நல்ல விசயங்கள் கெட்டவர்கள் கண்ணில் படாது என்பார்கள். ஆதலால் இந்த பின்னுட்டம் வாயிலாக ஒரு விசயம் வினவின் பார்வைக்கு…

    கங்கை நதியில் கலக்கும் சாய கழிவிகள் மற்றும் சுரங்க ஆக்ரமிப்புக்கு எதிராக உண்ணா விரதம் இருந்து உயிர் இழந்த ஒரு ஹிந்து துறவியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    http://timesofindia.indiatimes.com/india/Sadhu-dies-after-4-month-fast-to-save-the-Ganga/articleshow/8847216.cms

    ஸ்வாமி நிகமானந்து மூன்று மாதம் மேல் உண்ணாமல் இருந்து தனது இன்னுயிரை மக்களுக்காக வழங்கினார். இவருக்கும் ஹிந்து அமைப்புகள் ஆதரவு தந்தது. கிறித்துவ அடிவருடி ஆங்கில தொலைகாட்சிகள் இதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இறந்த பின்பும் இதை ஒரு ஓரமாக வைத்து செய்தி வெளியிட்டு உள்ளது.

    சரி, காங்கிரஸ் மற்றும் பாஜாகவை விடுங்கள்.

    தலீத் என்று சொல்லி ஓட்டை வாங்கி, மற்ற கட்சிகளுக்கு தான் எந்த விதத்திலும் குறைந்த்வள் இல்லை என்று ஊழல் ராணியாக திகழும் மாயாவதி இதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. புரட்சி என்று சொல்லி ஓட்டை வாங்கி ஆட்சி பிடித்த கம்யூனிஸ்டு ஊழல் பெருச்சாளிகளும் எதுவும் கண்டு கொள்ள வில்லை.,

    எவன் ஆட்சிக்கு வந்தாலும் 90% கொள்ளை தான் அடிப்பார்கள். சீனா கம்யூனிஸ்டுகள் ஒரு சிறந்த உதாரணம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க