கனிமொழியை பிணையில் எடுப்பதற்காக ராம் ஜேத்மாலினி போன்ற காஸ்ட்லியான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த தி.மு.க சமச்சீர் கல்விக்காக அத்தகைய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து போராடவில்லை என்பது மட்டுமல்ல பாசிச ஜெயா திமிருடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும் அதைப்பற்றி காமா, சோமா என்று ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அடங்கிப்போனார்கள் இந்த சூராதி சூரர்கள். மக்களிடம் அதைப்பற்றி விளக்கி அம்பலப்படுத்த வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை.
இந்நிலையில் தேர்தலை புறக்கணிக்கின்ற ம.க.இ.கவும் அதன் சார்பு அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இரண்டும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது. விருதாசலத்தில் இலவச கல்வி உரிமைக்கான மாநாட்டை நடத்தியதோடு சென்னை முதல் மதுரை வரை பல ஊர்களில் ஆர்பாட்டங்களை நட்ந்திருக்கிறது.
தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இரத்து செய்த அ.தி.மு.க அரசின் மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா.மை அடுத்து இந்த தடை உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்வதையும் எதிர் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.
இப்படி மக்கள் களத்திலும், சட்ட முனையிலும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது புரட்சிகர அமைப்புகள். இங்கே சில ஊர்களில் நடந்த போராட்டத்தை படங்களாக பதிவு செய்கிறோம்.
படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
தூத்துக்குடி
திருச்சி
தருமபுரி
விருத்தாசலம்
கோவை
மதுரை
சேத்தியாதோப்பு
திருவண்ணாமலை
சென்னை
_________________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
- திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
திருட்டு, கொலைக்கேஸ், பிக்பாக்கெட் முதலான கேசுகளுக்கு வாதிடும் ஆள் ராம்ஜெத்மலானி. அந்த ஆள் சமச்சீர் கல்விக்காக வாதாடி, ஜெயித்து, அந்த சமச்சீர் கல்வியை நம் குழந்தைகள் படிப்பதை விட, படிக்காமல் அவர்களை மாடு மேய்க்க அனுப்புவதே மேல்!
போராட்டம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்!
வெற்றி பெற வாழ்த்துகள்!
வினவு ,
தமிழ் நாடே கவலைப்படும் பிரச்சினை சமசீர் கல்விபிரசினை ,கல்விக்கட்டந பிரச்சினை,கனிமொழி பிரச்சினை அல்ல .நாடே வுண்ணாவிரதம் இருந்து கனிமொழியே வெளியவந்தாலும் ,மாணவர்கள் கட்டணத்தை எந்த அரசியல் கட்சியும் செலுதபோவதில்லை.மக்களும் அதைப்பற்றி கவலை படவில்லை. சூடுசொரணை வுள்ள வோட்டு பொறிக்கிகள் மறுவழக்கு தொடுத்தால் வோட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி சொன்னதாக எடுத்துகொள்ளலாம்.
பாராட்டத்தக்க வுங்கள் போராட்டத்திற்கு எமது வாழ்த்துக்கள்.– மெய்தேடி
[…] https://www.vinavu.com/2011/06/13/samacheer-kalvi-protest/ button="hori"; lang="ta"; submit_url ="http://inioru.com/?p=21891" […]
சமச்சீர்கல்வி திட்டத்தினை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி போராடிய ம.க.இ.க
வினர் 12 பேர் கைது, திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.அங்கும் போராட்டம்
தொடர்கிறது, ம.க.இ.க வினர் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளனர்.அவர்களது
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!!
[…] சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக… […]
[…] […]
[…] சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக… […]
[…] சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக… […]