முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

-

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,

சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.

இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.

ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர் அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று

வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.

இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.

ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.

இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.

தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. நக்சல்பாரிகளுக்கு ஜெயலலிதாவின் ஆட்சிதான் பொற்காலம். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களத்தில் நிற்கும் மகஇக உள்ளிட்ட அனைத்து அமைப்பு தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 2. பார்ப்பன ஜெயா, சோ கும்மல் சாதியதிமிருடன் ஆட்டம்போட்டல் அடக்கும் கடஊல் நக்சல்பாரிகள் தான்.

 3. இருண்ட காலம் தொடங்கிய உடனே இருளைக் கிழிக்கும் தீர்ப்பு. ஒளி பரவட்டும். இருள் கிழியட்டும்.

  மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பிற மனுதாரர்களுக்கும் வாழ்த்துகள்!

 4. ம.க.இ.க மற்றும் ம.உ.பா. களின் நடவடிக்கைகளை கண்டு, அரசியல்வாதிகளின் போராட்டம் நடத்துகிறோம், அடையாள வேளை நிறுத்தம், உண்ணவிரதம், அறிக்கை விடுகிறோம், கடிதம் எழுதுகிறோம், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறோம்( நிறைவெற்ற மாட்டோம்) போன்ற கண்துடைப்பு குறையும் என நம்புகிறோம்.

  ம.க.இ.க மற்றும் ம.உ.பா. வுக்கு வழ்த்து தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் தேவையான உதவிகளையும் செய்வது நம் கடமையாகும்.

 5. சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு ஒரு ஆசிரியர், வழக்குறைஞர் அல்ல. அவர் ஒரு பள்ளி நடத்தி வருகிரார். மேலும் விவரங்கலுக்கு http://samacheerkalvi.in/index.php

  • தவறு திருத்தப்பட்டது, அவரும் ஒரு மனுதாரராக வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். நன்றி.

 6. போராட்டம் வெற்றி, வாழ்த்துக்கள்.மேலும், தனியாரின் கல்விக்கொள்ளையை தடுப்பதில்

  இந்த வழக்கு ஒரு முன்னோடியாகும்.போராட்டம் தொடரட்டும் அனைத்து தளங்கலிலும்.

 7. சில விவரப் பிழைகள் திருத்தப்பட வேண்டும்.
  1 .ஷ்யாம் சுந்தர் ஒரு வழக்கறிஞர்.
  2 . வில்சன் மனுதாரர் அல்ல.அவர் சமசீர் கல்வியை ஆதரித்த ஒரு மனுதாரரின் வழக்கறிஞர் .
  சில கூடுதல் விவரங்கள்.
  3 .முக்கியமான மூத்த வழக்கறிஞர்கள் சிலர் தனியார் பள்ளி நிர்வாகங்களின் சார்பாக தற்போதைய அரசின் முடிவுக்கு ஆதரவாக வாதிட்ட போது, கல்வி வியாபாரம் பாதித்து விடும் என்ற கொள்ளை நோக்கததிற்காகத்தான் சமசீர் கல்வியை எதிர்க்கிறார்கள் என்பது அம்பலப்படுத்தப்பட்டது.
  4 .ஜூன் 7 ஆம் தேதி சமசீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர் அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று.

  பதிவினை வெளியிட்ட வினவுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த மறுமொழியாளர்களுக்கும் நன்றிகள்.

  மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
  சென்னைக்கிளை .

   • நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள்.

  • திமுகவின் முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் என இருக்கவேண்டும்,

   கூடுதல் = அடிசனல்(ADDITIONAL), தவறு திருத்தப்படவேண்டும்.

 8. சம சீர் கல்வி எப்பிடி தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளைக்கு எதிர் ஆகும். ஏன் உங்கள் குழந்தைகளை ஒன்றிய துவக்க, உயர் துவக்க பள்ளிகளில் படிக்க வைக்கலாமே!! நகராட்சி பள்ளிகளில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்க வைக்கலாமே! அவலை நினைத்து உரலை இடிப்பது நன்றாக இல்லையே! தனியார் பள்ளிகளில் c b s e பாடத்திட்டம் கொண்டு வந்து வியாபாரம் நடந்தால் உங்களால் என்ன பண்ண முடியும். மன நிலையில் இன்றிய மக்கள் அரசு பள்ளிகளை ஏற்க துணிந்தால் கல்வி கொள்ளை காணமல் போகும்.

 9. சம சீர் கல்வி திட்டம் இப்போதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டு இன்றிய தேவைக்கு ஏற்ப போதிய பாட திட்டங்களுடன் சீர் மிகு பாட திட்டத்தை கொண்டு வர வேண்டும். மக்களும் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப துணிய வேண்டும். 1000 மக்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் துவக்க பள்ளி பாட திட்டத்தில் ஆங்கில மொழி பாட திட்டத்தை கொண்டு வர வேண்டும். அது இல்லாது இப்போது பழைய அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தை கடை பிடித்தால் மிகவும் குறுகிய காலத்தில் இரண்டு மாணவர் சமுகம் இருக்கும். தமிழே கற்காமல் இந்தி வாழும். உண்மை காண்மின் நீர். சாபமல்ல காலத்தின் கோலம்.

 10. நக்சல்பாரிதான் இந்த நாட்டின், இந்த நாட்டின் மக்களின் காவல் தெய்வம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது…வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!

 11. நீண்ட போராட்டத்திற்கு இது முதல் வெற்றி தான். வாழ்த்துக்கள்!!!

 12. அன்பு வினவு ஜெயலலிதா மேல் உள்ள கோபத்தில் அவசர பட்டு தப்பு செய்து விட்டீர்கள். இந்த சமச்சீர் கல்வியில் தரமான பாட திட்டங்கள் இல்லை என்பது உண்மை தான். சமச்சீர் கல்வியை நான் எதிர்க்கவில்லை. அனால் பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து விட்டு அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தி இருக்கலாம். தற்போது இருக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் வரும் பல பாடங்களை matric பள்ளியில் உள்ள மாணவர்கள் எழு அல்லது எட்டாம் வகுப்பிலேயே தங்கள் பாடத்திட்டத்தில் ஏற்கனவே படித்திருப்பதாக சொல்கிறர்கள். அந்த அளவிற்கு தற்போதைய சமச்சீர் கல்வியில் உள்ள பாடத்திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இப்போது நாம் இருப்பது போட்டிகள் நிறைந்த உலகில். இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியின் பாடத்திட்டங்களை படிப்பதால் ஒரு பயனும் இல்லை. இந்த கல்வி திட்டம் ஒரு மாணவனின் அறிவை நிச்சயம் விசால படுத்த உதவாது. மத்திய அரசின் IIT மற்றும் BITS PILANI போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளில் இப்போது இருக்கும் சமச்சீர் கல்வியில் பயிலும் மாணவர்களால் ஜொலிக்க முடியுமா என்பது சந்தேகமே. இன்றைய நிலையில் cbse எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓரளவிற்கு இது போன்ற போட்டி தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வதற்கு காரணம் அவர்களுக்கு சிறப்பான முறையில் தயாரிக்க பட்டு இருக்கும் பாடதிட்டமே. இப்போது அறிமுகபடுத்தபட்டிருக்கும் சமச்சீர் பாடதிட்டதால் அதிக பயன் அடைய போவது IIT மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி ( special class for IIT BITS entrance examinations ) அளிக்கிறோம் என்று கூறி கொள்ளும் பணகொள்ளை அடிக்கும் நிறுவனங்கள் தான். கல்வி என்பது மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்து கொண்டு எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று வருவதற்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும் மாறாக ஏண்டா இந்த பாடத்திட்டத்தில் படித்தோமோ என்று என்னும் நிலையை ஏற்படுத்தி விட கூடாது. ஆகவே சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த வேண்டும் என்கிற இந்த நேரத்தில் மத்திய அரசின் பாடத்திட்டதிற்கு இணையாக அதே நேரத்தில் மாணவர்கள் தாங்களாகவே கற்று கொள்ளும் படி (self -study) போன்ற பாணியில் கல்வித்திட்டத்தில் பெரும் மாற்றம் கொண்டு வர ம.க.இ.க அரசை வலியுறுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். (இப்போது இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் லட்சணம், அவர்கள் பாடம் எடுக்கும் அழகு, மாணவர்களுக்கு சந்தேகங்களை தெளிய வைக்கும் திறம் போன்றவைகள் அனைவரும் அறிந்ததே சந்தேகம் இருந்தால் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் யாரேனும் ஒருவரை கேட்டுபாருங்கள் அவர்களின் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் யோக்யதையை சொல்வார்கள்.) ஆக சமச்சீர் கல்வி என்பது இப்போது மிக தேவைஉடையதே ஆனால் அது இப்போது இருப்பது போல் அறிவு ஊட்டம் குறைந்ததாக அல்லாமல் மாணவர்களின் திறமையை வெளி கொணரும் கல்வியாக இருக்க வேண்டும். நன்றி

  • உண்மை உரைப்போன், விரிவாக எழுதவேண்டும் என்ற அவாதான் இருந்தாலும் இரண்டு விசயங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்..

   @@@தற்போது இருக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் வரும் பல பாடங்களை matric பள்ளியில் உள்ள மாணவர்கள் எழு அல்லது எட்டாம் வகுப்பிலேயே தங்கள் பாடத்திட்டத்தில் ஏற்கனவே படித்திருப்பதாக சொல்கிறர்கள். @@@

   இதில் குறை காணவேண்டியது மெட்ரிக் திட்டத்திடம்தானே தவிர சமச்சீர் கல்வியில் இல்லை. தேவைக்கு அதிமான பாடங்களை மாணவரிடத்தில் தினித்து சுமையை கூட்டுவதில் என்ன கிடைக்கப்போகிறது என்று எனக்கு புரியவில்லை. மேலும் சமச்சீர் கல்வியே சிபிஎஸ்இ போல செல்ப் ஸ்டடி மெதடாலஜியை ஒட்டி இருப்பதாகத்தான் அதை கண்டவர்கள் சொல்கிறார்கள்

   @@@இப்போது அறிமுகபடுத்தபட்டிருக்கும் சமச்சீர் பாடதிட்டதால் அதிக பயன் அடைய போவது IIT மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி ( special class for IIT BITS entrance examinations ) அளிக்கிறோம் என்று கூறி கொள்ளும் பணகொள்ளை அடிக்கும் நிறுவனங்கள் தான்.@@@

   இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல ஏனெனில் என்னதான் மெட்ரிக்கில் 10வது வரை படித்தாலும் 11,12 க்கு அனைத்து மாணவர்களும் ஸ்டேட் போர்ட் சிலபஸ்தான். சமச்சீர் ஏற்கனவே இதில் உள்ளது. ஸ்டேட் போர்டில் படித்தால்தான் சுலபமாக நிறைய மதிப்பெண் எடுத்து மேற்படிப்புக்கு போக முடியும் என பல சிபிஎஸ்இ மாணவர்கள் 11வதில் இடம் பெயற்கின்றனர்.

   மாணவர்களுக்கு கடினமான பாடத்திட்டங்களை வைத்தால்தான் அவர்கள் முன்னேர முடியும் என்று நீங்கள் நினைப்பது தவறு மாறாக எவ்வளவு எளிதாக ஆக்கமுடியுமோ அவ்வளவு எளிதாக அமைத்தால்தான் மாணவர்கள் வளர்ச்சியடைய முடியும். கல்வி ஒரு சுமையாக அல்லாமல் விருப்பத்துடன் ஈடுபடும் ஒரு வேலையாக மாணவர்களுக்கு மாறும் பொழுது மட்டுமே அவர்களுடைய திறமை வெளிப்படும். ஆனால் இன்றைய கல்வித்திட்டம் எதுவும் இப்படிப்பட்ட அறிவியல் நோக்கோடு அமைக்கப்படுவதில்லை, சமச்சீர் கல்வி உட்பட.

   ஆனாலும், கிராம நகர பேதமில்லாமல் அனைவருக்கும சமமான கல்வியை அளிக்கவேண்டும் என்ற கொள்கை சரியானது. அதன் வழியில் சமச்சீர் கல்வி ஒரு முக்கிய மைல்கல். அதற்காகவே அதை ஆதரிக்க வேண்டும்.

  • திடிரென சமச்சிர் கல்வியை அதுவும் மெத்தடாலிஜி முதல் அனைத்தையும் ஒரே ஆண்டில் அறிமுகப்படுத்திவிட முடியாது, நாம் கல்வி முறை என்பதே சுமார் 40 வருடங்களுக்கு மேலாக கடைபிடித்துவருவது, இதை ஒரே நாளில் மாற்றினால் பிரச்ச்னை தான். சமச்சீர் கல்வி கமிட்டி சொன்ன விடயங்களையே கூட படிப்படியாக 3 ஆண்டுகளாவது எடுத்து அறிமுக படுத்த வேண்டும். 3 ஆண்டுகள் கழித்து பாடத்திட்டத்தில் விரிவுகள் செய்தபடி செல்ல வேண்டும். ஒரு முறையான சிறந்த சமச்சீர் கல்வி அமைப்பு வர 5 ஆண்டுவது ஆகும். ஆனால் மீண்டும் மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு ஒரே ஆண்டில் சுமையை ஏற்ற முடியாது. இதை தான் அரசு செய்திருக்க வேண்டும். ஸ்ட்ரெய்ட்டாக உடனே தரத்தை உயர்த்துகிறேன் என மிக சுமையான பாடத்திட்டதை அறிமுக படுத்தினால் மாணவர்கள் கல்வியை துறந்துவிடுவார்கள்..ஆனால் அம்மவிற்க்கு அப்படி தரமான பாடம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை என்பது இன்னொரு விடயம்.

   • சமச்சீர் கல்வித்திட்டம் 2007இல் இருந்தே திட்டவரையாக இருந்ததுதான்..2009இல்தான் திருத்தப்பட்ட பாடத்திட்டம் வந்தது..2010இல்தான் 2 வகுப்புகளுக்கு அறிமுகமானது..இப்போது 2011..4 ஆண்டுகள் ஓடிவிட்டன..முத்துக்குமரன் கமிட்டி போட்டதோ 2006இல்…இன்னும் என்னத்த படிப்படியாக? இப்படியே போனால் ஒரு மாமாங்கம் ஆகிடும்?

  • நான் +2 படித்த போது, My greatest Olympic price என்ற பாடம் 10ம் வகுப்பில் படிதது. The Knight and The Lady என்ற செய்யுல் 8ம் வகுப்பில் படித்தது. இதற்க்கு என்ன செய்வது.

   பிறந்தகுழந்தை உடணே நடப்பதில்லை. அது போலதான் சமசீர் கல்வி. இது ஒரு சோதனை ஒட்டமாகவே இருக்கட்டும். ஏட்டு சுரக்காயை சுமந்த கடைசி சந்ததியாக இருக்கட்டும். அறிவு நிறைந்த, மாணாக்கர் மீது அக்கறை கொண்டவர்கள் தாங்களாக குழுக்கள் அமைத்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள், அல்லது ம.க.இ.க., ம.உ.பா., வினவு போன்ற அமைப்புகளை உதவிக்கு நாடுங்கள்.

   படிப்பின் மீது ஈடுபாடே இல்லத மாணவனை குறைந்தபட்சம் தேர்ச்சியாவது செய்துவிட முயற்ச்சி செய்யும் அரசு பள்ளிகள் 50% வெற்றி, புத்திசாலி குழந்தைகளை கொண்டு 100% வெற்றி பெற்றிதாக நற்பெயர் கட்டும் தனியார் கல்வி சாலையைவிட சிறந்தது.

   ஆகவே கல்வியை பொதுவாக வையுங்கள் அரசு பள்ளியில் பயிழும் புத்திசாலிகள் பயனடையட்டும்.

  • உண்மை உரைப்போன் கூறியிருப்பது போன்றே சிந்திக்கத் தெரிந்ததாக காட்டிக்கொள்ளும் மத்தியதர வர்க்கம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறது. தோழர் கேள்விக் குறி பதிலளித்திருப்பது போல இந்த வாதம் தவறானது. Curriculum எந்த அளவுக்கு சுமை குன்றியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒரு மாணவனின் அறிவும், சிந்திக்கும் திறனும் விசாலப்படும் என்பதே உண்மை. ஏனெனில், அப்போது தான் self study வளரும் என்பதோடு லைப்ரரி புத்தகங்கள் படிக்க நேரம் கிடைப்பதோடு ஒரு சுதந்திர மனிதனாக அவன் வளர முடியும். Curriculum என்பது தேர்வுக்கானது. தேர்வு எழுதிய அடுத்த நிமிடம் அது ஒரு மாணவனிடமிருந்து மறைந்து போகும். எனவே curriculum -ஐ குறைத்து self -.study ஐ ஊக்குவிப்பதே சிறந்த கல்விமுறை.

  • பாசிச ஜெயலலிதாவின் வெற்றி செய்தி இங்கு பலரை போல என்னையும் துவள செய்தது. இது ஒரு நம்பிக்கை பதிவு. நானும் தோழர்களை வாழ்த்துகிறேன்.

 13. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்……. புரட்சிகர வினவுக்கு கோடிநன்றீகள்….

 14. //ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது.//

  மிக்க நன்றி. வெற்றி பெற்றேயாக வேண்டும்.

 15. பாசிச ஜெயாவின் இருண்ட கால ஆட்சியின் மீது முதல் அடி கொடுத்த மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 16. சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ம.உ.பா மைய்யத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்…

 17. வரே வா !!! வினவுக்கு பெரிய ஓ !ப் போடுகின்றோம் .. செயலில் காட்டியதுக்கு மிக்க நன்றிகள் !

 18. Really ashame of your article, the Journalism, blog spots & internet site trying to prove themself against their own next generation; in turn throwing the TN students life in dark spot.

  If you are so cute & smart in the hype of victory , close all IIT , IIM & OTHER TECHNICAL institutes provide the same education in BE. Also provide jobs on samaseer with out CAST base. Dont be so stupid & foolish peoples. If you have money buy gold, else go for silver or else decide.

  • மிஸ்டர் ராம்மூர்த்தி, வாட் இஸ் யுவர் பிராப்ளம்? அண்டு யுவர் எக்சாம்பில்ஸ் ஆர் பேதடிக்!

   ஐஐம் மற்றும் ஐஐடி எல்லாம் எந்த தனியார் நடத்தறான், அரசுதானே நடத்துது, அதுக்கு மட்டும் உங்களுக்கு எதுக்கு அரசு பணம், போய் தனியார்கிட்ட கோடிக்கணக்குல கொட்டி அழவேண்டியதுதானே.. அதுக்கு மட்டும் தங்கத்தை அலுமினியத்தை ஏன் வெட்கமில்லாம வாங்கறீங்க? நாட்டை விட்டு ஓடிப்போக படிக்க மக்கள் வரிப்பணம் வேணுமாம் ஆனா இந்த நாட்டின் பரந்து பட்ட மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்ககூடாதாம்…ஐஐடி ஐஐஎம்மை இழுத்து மூடனுமாம்

  • கேள்விக்குறி, ராமமூர்த்திவால் என்னா ஸொல்றார்னா.. காசுக்கேத்த தோசை கொடுங்கன்றார்? அதாகப்பட்டது… நெம்ப ரிச் மேன் ஆன இவாளும், புவர் பீபுளான அவாளும் எப்படி ஒரே கல்வி படிக்கலாம்? அப்படிப் படிச்சா எல்லா வாலுக்கும் வேலையும் சமச்சீராகனுமே? இது எங்கேயோ கேட்ட குரலா இருக்கில்லே..? யு ஆர் ரைட். அதே தான் “சூத்திரன் வேதம் படிச்சா காதில ஈயத்தைக் காய்ச்சி ஊத்தனும்”னு சொன்னதையே சார்வாள் இங்கிலிபீச்சுல ஸொல்றார்.

   போகட்டும். ஐ.ஐ.டி ஐ.ஐ.எம் எல்லாம் இவங்களுக்குத் தேவை. ஒவ்வொரு மானவனுக்கும் கோடிக்கணக்குல கொட்டியழ கெவருமென்டு பணம் தேவை. மக்களோட பணத்தை நல்லா வாங்கி வழிச்சு நக்கிட்டு இந்தியாவுக்கு டாடா காட்டிட்டு அமெரிக்கா போகனும்னா சொந்தக் காசுல செய்ய முடியுமா? அதுக்கெல்லாம் மக்கள் காசு வேணும் – அங்கெல்லாம் அரசு கல்வி வேணும். ஆனா, அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் சமமாக்க அரசு தலையிட்டால் மட்டும் சுண்ணாம்பு வச்ச மாதிரி பொத்துக்கிட்டு வந்திரும்.

 19. சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீடு செய்வாங்களே அதை தடுக்க முயலுங்கள்

 20. பொது நலனென்றும் பாராமல், கண்மூடித்தனமாக, மு.க அரசின் திட்டம் என்கிற ஒரே காரணத்துக்காக, சமச்சீர் கல்வியை முடக்கி, தனக்குள் புன்முறுவல் பூத்துக்கொண்ட முதல்வருக்கு முதல் அடி!

  நள்ளிரவில், லிட்டருக்கு ஐந்து ரூபாய் என பெட்ரோல் விலை ஏற்றப்பட்டாலும், என்ன ஏனென்று கேட்க நாதியில்லாமல், தூங்கியெழுந்து, கண்ணைக் கசக்கிகொண்டே, பெட்ரோல் பங்குக்குப் போய், ஒன்றுமே நடவாதது போல் பெட்ரோல் போட்டுக்கொண்டு, அலுவலகம் போக்கும் மெத்தப் படித்த நகரவாசிகள், எந்த ஒரு காரணம் கொண்டும் சமச்சீர் கல்வி திட்டம் காலாவதியானதைப் பற்றி கவலைப் படாத நேரத்தில், ம.க.இ.க தோழர்கள் இதை முன்னிறுத்தி, போராடி, வெற்றி ஈட்டித் தந்தமைக்கு, பற்பல பாராட்டுக்கள்.

  வெற்றி மீது வெற்றி விருத்தாச்சலம் வழியாக வந்துகொண்டேயிருக்கிறது… வாழ்த்துக்கள்!

 21. இந்த தடை உத்தரவு மாபெரும் சாதனை , தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 22. வினவை எப்போதும் என்ன செய்தீர்கள், என்ன செய்வீர்கள் என்று எள்ளும் யாரையும் எங்கே காணோம்? 😉
  வினவு! வாழ்த்துகள்! சரியான நேரத்தில் பெற்ற வெற்றி!
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

 23. மிக அடிப்படையாக ஒன்றை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நீங்கள் எந்த அடிப்படையில் நீதிமன்றத்தை அனுகுகிறீகள், ஏனென்றால் இந்திய நீதிமன்ற அமைப்பே தவறு என கூறும் அதேவேளையில் இவ்வாறு எப்படி நடக்க முடிகிறது.

  • அதானே..
   அரசை எதிர்த்துக்கிட்டே அரசு நடத்தும் பேருந்தில் போகிறார்..
   வினவு..அந்த பஸ்ஸில் தவறி விழுந்ததும் அரசு நடத்தும் ஆஸ்பத்திரிக்கும் போகிறார் வினவு..இந்திய அரசை எதிர்த்துக்கிட்டே அரசின் அடக்குமுறையால் சிறைபோகும்போதும் அதே அரசு நடத்தும் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்..இதை எல்லாம் விட்டுட்டீங்க யுவர் ஆனர்…
   பிரிட்டிஷ் காரனோட ஆட்சியை விரட்டறதுக்கு பகத்சிங்கும் போராடினார்…அவர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வாதாடியபோது…என்ன கொடுமை சார்..சிராஜ் இல்லையே..இதனைக் கேட்க…வரலாறு எவ்வளவு ஈவிரக்கமற்றது பாருங்கள்..

   • மீண்டும் எனது கேள்வி என்னவெனில் அரசு ஆஸ்பதிரியில் மருந்துக்கு பதில் விசம் தரப்படுகிறது அதை எதிர்த்து போரிடு எனக்கூறிவிட்டு அதிலே போராளி போய் சேருகிறார் என்றால் அவர் போராளியா கண்ணா?, ஊழலை எதிர்த்து சோனியா, மன்மோகனிடம் பெடிசன் எவ்வளவு மோசமான காலம் என்பதை வினவு விளக்கியிருக்கும் போதும் நீங்கள் இந்த பதிலை தருவது ஒரு தவறான உதாரணமே.

 24. can anyone please list the types of kalvi thitam offered in our tamilndau, and centre india.

  please list the different types of thitam, for example i know only few is there are any other?
  1. CBSE
  2. STATE BORAD
  3. MATRIC
  4. ANGLO INDIAN (this is an hear say, iam not sure abt this).

  Please list…
  wasssalaam by
  Abdul Jaleel

 25. நண்பர் திரு. கேள்விகுறி அவர்களே

  //இதில் குறை காணவேண்டியது மெட்ரிக் திட்டத்திடம்தானே தவிர சமச்சீர் கல்வியில் இல்லை. தேவைக்கு அதிமான பாடங்களை மாணவரிடத்தில் தினித்து சுமையை கூட்டுவதில் என்ன கிடைக்கப்போகிறது என்று எனக்கு புரியவில்லை. மேலும் சமச்சீர் கல்வியே சிபிஎஸ்இ போல செல்ப் ஸ்டடி மெதடாலஜியை ஒட்டி இருப்பதாகத்தான் அதை கண்டவர்கள் சொல்கிறார்கள்//

  நண்பரே நிச்சயம் இது தவறான கருத்து மெட்ரிக் பாட திட்டம் என்பது காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் அறிவின் திறத்தை கவனத்தில்கொண்டு சரியான பாடத்திட்டத்தை தான் உருவாக்குகிறார்கள். நிச்சயம் இதில் குறை காண வேண்டியது அரசு பாட திட்டம் தான். அயிந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தமிழ்நாடு அரசாங்கம் பாடத்திட்டத்தில் மாற்றம் (upgrade) செய்கிறார்கள். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் அறிவு திறம் மிக பின்தங்கியதாகவே இருக்கிறது. இதை நான் நேரில் கண்ட அனுபவத்தால் தான் சொல்கிறேன். தமிழக அரசின் பாடத்திட்டம் என்பது ஊசி போன பழைய உணவுக்கு சமமானது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  //இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல ஏனெனில் என்னதான் மெட்ரிக்கில் 10வது வரை படித்தாலும் 11,12 க்கு அனைத்து மாணவர்களும் ஸ்டேட் போர்ட் சிலபஸ்தான். சமச்சீர் ஏற்கனவே இதில் உள்ளது. ஸ்டேட் போர்டில் படித்தால்தான் சுலபமாக நிறைய மதிப்பெண் எடுத்து மேற்படிப்புக்கு போக முடியும் என பல சிபிஎஸ்இ மாணவர்கள் 11வதில் இடம் பெயற்கின்றனர். //

  இதில் பெருமை பட்டு கொள்வதற்கு எதுவும் இல்லை…. CBSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு மாணவன் 11 ஆம் வகுப்பில் ஸ்டேட் போர்டு சிலபஸில் சேர்ந்து படித்தான் .. ஏனென்று அவனிடம் கேட்டதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பின் ஸ்டேட் போர்டில் வரும் பாடங்களை நாங்கள் ஏற்கனவே 8, 9 ஆம் வகுப்பிலேயே படித்து விட்டோம். அதனால் இப்போது மீண்டும் அதே பாடத்தை படிப்பது மிக எளிமையாக இருக்கிறது. இது மொக்க சிலபஸ் easy யா நான் marka தட்டிட்டு போய்டுவன் என்று கூறினான். அந்த அளவிற்கு நம் பாடத்திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் CBSE பாடத்திட்டத்தில் பயின்று பதினோராம் வகுப்பில் ஸ்டேட் போர்டு பாடத்திட்டதிற்கு மாறிய எந்த மாணவனிடம் வேண்டுமானாலும் இதை கேட்டு பாருங்கள். ஆகவே இங்கே நாம் சொல்லவருவது என்னவென்றால் சமச்சீர் கல்வி என்பது மிகவும் வரவேற்க தக்க விஷயம் தான்.சமமான கல்வியை வழங்குவோம் என்று கூறும் அதே நேரத்தில் தரமான கல்வியையும் நாம் வழங்க வேண்டும். கல்வியில் ஏற்ற தாழ்வு என்பது கூடாது. ஆனால் அதில் உள்ள பாடத்திட்டங்களை மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு இணையாக உலக தரத்திற்கு மாற்றி பிறகு நம் மாணவர்களுக்கு அதை கொடுப்போம். கொஞ்சம் தயவு செய்து பன்னிரெண்டாம் வகுப்பு CBSE மற்றும் ஸ்டேட் போர்டு அறிவியல் புத்தகங்களை ஒப்பிட்டு பாருங்கள் அதில் நீங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசத்தை காணலாம். சமச்சீர் கல்வியில் தன் படிப்பை முடித்து விட்டு வரும் ஒரு மாணவன் அணைத்து போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகள். வங்கி தேர்வுகள் போன்ற அனைத்தையும் எதிர்கொள்ளும் அறிவு திறத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது இருக்கும் சமச்சீர் கல்வியில் கிடையாது.சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இப்போது அரசு கொண்டு வந்து இருக்கும் சமச்சீர் கல்வித்திட்டம் நியாய விலை கடைகளில் போடப்படும் ரேஷன் அரிசி போன்று உள்ளது. இந்த நிலை நீடித்தால் இப்போது பெரும்பான்மையாக இருக்கும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் தங்கள் பாடத்திட்டத்தை CBSE பாடத்திட்டதிற்கு தங்களை மாற்றி கொள்வார்கள். அப்போது நீங்கள் சொன்ன கல்வியில் வேறுபாடு என்பது மீண்டும் தலை தூக்கும். ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் நம் மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கும் எந்த செயலிலும் நாம் இறங்கி விட கூடாது. என் மீது ஆத்திரம் கொள்ளாமல் தயவு செய்து என் கருத்தில் எந்த வகையில் நியாயம் இல்லை என்பதை யோசித்து பார்க்கவும்.நன்றி.

  • உண்மை உரைப்போன்,
   \\11 மற்றும் 12 ஆம் வகுப்பின் ஸ்டேட் போர்டில் வரும் பாடங்களை நாங்கள் ஏற்கனவே 8, 9 ஆம் வகுப்பிலேயே படித்து விட்டோம்.//

   பாடத்திட்டம் கடுமையாக இருப்பதே மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் எனபது தவறான வாதம்.

   உலகின் தலை சிறந்த மருத்துவர்கள் பலரை தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கியுள்ளன என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.அவர்களில் பலர் முந்தைய புகுமுக வகுப்பு [p.u.c.] முறையில் படித்து மருத்துவ கல்லூரிக்கு சென்றவர்கள்.அவர்கள் புகுமுக வகுப்பில் படித்த அறிவியல் பாடங்கள் தற்போது 11 ஆம் வகுப்பிலேயே சொல்லித்தரப்படுகிறது.12 ஆம் வகுப்பு பாடங்கள் முன்னர் கல்லூரி அளவில் இருந்தவை. இதே நிலைதான் வணிகவியல் பாடங்களின் நிலையும்.புகுமுக வகுப்பு முறையில் படித்து கணக்கு தணிக்கையாளர்கள் [Auditor] ஆனவர்கள் தற்போது படித்து வருபவர்களை விட திறன் குன்றியவர்கள் என சொல்ல முடியுமா.

   ஆகவே அந்த பாடங்களை எந்த வகுப்பில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை வைத்து அவர்கள் அறிவுத்திறனை எடை போட முடியாது.

  • அமெரிக்காதானே உலகத்திலயே ஒசந்த நாடு..அங்கேயே 6 ஆவது வயசுக்குப் பொறவுதான் பள்ளிக்கூடத்திலேயே சேக்குறாங்க..இங்க என்னன்னா..3 வயசுப் பிள்ளயோட விளையாட்டை எல்லாம் புடுங்கி எறிஞ்சிட்டு இன்டெர்வியூவுக்கு தயாரிக்கிறாங்க… எல் கே ஜி யு கே ஜி ன்னு சொல்லி லச்ச லச்சமா கொட்டி அளுதாலும் காலேஜ்ல வந்தா எல்லாரும் ஒரே சிலபஸ்தானே படிக்கோம்..மாநிலப் பள்ளில படிச்சதாலே எனக்கு இப்ப ஒன்னும் புரியலன்னு யாரும் புகார் சொல்லலயே ஏன்? நான் கூடத்தான் 12 வரை தமிழ்வழியிலே படிச்சுட்டு கல்லூர்ரிக்கு வந்தேன்..அங்க சிபிஎஸ்சி படிச்சவன்னும் நானும் ஒரே மாதிரிதான் படிச்சோம்..சும்மா சுத்திவளைச்சுப் பேசாம விசயத்துக்கு வாங்க…கல்வியில சமத்துவம் வேணுமா வேணாமா?

  • குடும்ப நண்பர் ஒருவர் தனது மகனை யுகேஜி வரை வருசத்துக்கு 65 ஆயிரம் வரை கட்டிப் படிக்கிற மெட்ரிக் பள்ளியில் சேர்த்திருந்தார். சென்ற ஆண்டு சிபிஎஸ்சி பள்ளிக்கு மாத்திவிட்டார். (சென்ற ஆண்டு 1 ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி அறிமுகமானது. ) ஏன் மாற்றுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ‘சிபிஎஸ்சி சிலபஸ் ரொம்ப நல்லாருக்கு’ என்றார்.
   சிபிஎஸ்சி சிலபஸ்-ம் சமச்சீர் கல்வி சிலபஸ்சும் பாத்தீர்களா?ன்னு கேட்டேன்..
   ‘இல்லை..எல்லோரும் சொல்றாங்க’ என்றார்.. இத்தனைக்கும் அவர் பாமரர் இல்லை..அவர் எம்.ஏ. பி.எல்.. அவர் மனைவியோ எம்.டெக்.

   விசயம் என்னன்னா ‘காசு கொடுக்கற அளவுக்கு எனக்கு தெம்பிருக்கு..என் புள்ளைக்கும் காசில்லாத குப்பத்துப் பிள்ளைக்கும் ஒரே கல்வியா?’ என்று அவர் மனதில் எழும்பிய திமிர் தான் சிலபஸ் அது இதுன்னு சொல்றது…மைலாப்பூர் டைம்ஸ்-ல ‘ஒன்லி பிராமின்ஸ்’னு வீடு வாடகைக்கு பகுதியில் போடக் கூச்சப்படுற அவாள் ‘ஒன்லி வெஜிடேரியன்’னு போடுறாளே..அதே திமிர்தான் இது…இத்தனைக்கும் நண்பர் சமூகநீதிக்காக மாய்ஞ்சு மாஞ்சு பேசுறவர்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க