Saturday, August 13, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

-

முகமது யூனுஸ் - கிராமீன் வங்கி
முகமது யூனுஸ்

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிராமின் வங்கியின் நிறுவனர் முகமது யூனுஸ் அப்போது ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் – “நான் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன். இது தான் ஏழைகளுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது என்று கருதுகிறேன். எமது வங்கியின் குறுங்கடன்களின் மூலம் ஏழ்மையை அறவே ஒழித்து விட முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். ஏழ்மை ஒழிப்பு ஒன்று தான் தீவிரவாதப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கருதுகிறேன்”

குறுங்கடன்களின் முன்னோடி என்று கருதப்படுபவர் யுனூஸ். அவரது கிராமின் வங்கி வழங்கிய குறுங்கடன்கள் மூலம் பங்களாதேஷில் பலரை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தியிருக்கிறார் என்றும், ஏழ்மை ஒழிப்புக்கு இது தான் மிகச் சிறந்த வழியென்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ ஊடகங்கள் இவரை போற்றிப் புகழ்ந்து வந்தன. கிராமின் வங்கியின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால் கவரப்பட்டு, இப்போது சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் ‘வறுமை ஒழிப்பில்’ குதித்துள்ளன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.

பன்னாட்டு வங்கிகளுக்கு  உலக ஏழைகள் மேல் ஏற்பட்ட இந்த திடீர் பாசத்தின் மதிப்பு மட்டும் சுமார் 270 லட்சம் கோடிகள் (60 billion USD) என்று டெக்கான் க்ரானிக்கலில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்கள் ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு ஏழைகளை கடைத்தேற்றுவதில் மும்முரமாக இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்கின்றன.

தனிநபர்களுக்கோ அல்லது சுய-உதவிக் குழுக்களுக்கோ சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்து, அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது தான் குறுங்கடன்களின் நோக்கம் என்றும், ஏற்கனவே இதை பங்களாதேஷில் சாதித்துக் காட்டியது தான் கிராமின் வங்கியின் சாதனை என்றும் ஊடகங்கள் சொல்கின்றன. இந்த வகையில் வறுமையை ஒழித்த சாதனைக்காகத் தான் மொஹம்மத் யுனூஸுக்கு நோபல் பரிசு வழங்கபட்டது.

ஆனால் எதார்த்தத்தில் நிலவரங்கள் முற்றிலும் வேறு கதையைச் சொல்கின்றன.

மே மாத மத்தியில் பங்களாதேஷில் இருந்து வெளியாகும் ‘ஷப்தஹிக் 2000’ என்கிற ஏடு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறுங்கடன் எனும் பெயரில் சுமார் 30 – 40 சதவீதம் வரை அநியாய வட்டி விதிக்கும் கிராமின் வங்கி, தவணையைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் அப்படியும் தவணை தரமுடியாமல் தவிப்பவர்களின் கால்நடைகளைக் கவர்ந்து வருவதையும் பல ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மேலும், ஹிலாரி கிளின்டனின் பெயரில் ஹிலாரி ஆதர்ஷா என்கிற திட்டத்தைத் துவங்கிய கிராமின் வங்கி, ரிஷி பால்லி எனும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கேயுள்ளவர்களுக்கு குறுங்கடன்கள் வழங்கி அவர்கள் வாழ்நிலைமைகளை முன்னேற்றி அந்தக் கிராமத்தையே ஒரு முன்னுதாரணமான கிராமமாகத் தாங்கள் மாற்றி விட்டதாக கிராமின் வங்கி பீற்றிக் கொண்டிருந்தது.

ஆனால் உண்மையில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் அக்கிராமத்தை விட்டே பலரும் ஓடியிருக்கிறார்கள் என்றும் எஞ்சியவர்கள் பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் விபச்சாரத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தையும் கிராமின் வங்கியின் கந்து வட்டிக்கடன்கள் உண்டாக்கியதையும் ஷப்தஹிக் அம்பலப்படுத்தியது.

இது கிராமின் வங்கியின் கதை மட்டுமல்ல. நைஜீரியாவில் கிராமின் வங்கியைப் போன்றே குறுங்கடன் வழங்கும் LAPO (Lift above poverty organization) என்கிற வங்கி 100 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. மெக்சிகோவின் கம்பார்டமோஸ் என்கிற குறுங்கடன் வங்கியோ 70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. தமது முதலீடுகளை ‘சமூக முதலீடு’ என்று கூறிக் கொள்ளும் இவ்வங்கிகள், எதார்த்தத்தில் கார்பொரேட் கந்து வட்டி கும்பலாகத் தான் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் கிராமப்புரங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு வலுவான வலைப் பின்னலை ஏற்படுத்தி ஆழ ஊடுருவியிருக்கும் என்.ஜி.ஓக்கள் மூலம் கோடிக்கணக்கானோருக்கு இது போன்ற குறுங்கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் துவங்க இந்தக் கடன்கள் பயன்படும் என்று சொல்லப்பட்டாலும், உலகமயமாக்கலின் விளைவாய்  கைவினைப் பொருட்களுக்கென்று சந்தையே இல்லாத ஒரு எதார்த்த நிலையில், இது அவசர ஆத்திரத்திற்கும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளுக்குமே பயன்படுகிறது. திருப்பிச் செலுத்த இயலாத அநியாய வட்டிக்குத் தரப்படும் இக்கடன்களை வசூலிக்க குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் அடியாட்களையே பயன்படுத்துகிறார்கள்.

இரக்கமற்ற இந்த கார்பொரேட் கந்து வட்டி கும்பலின் கொடுமைகளையும் அதனால் விளைந்த அவமானங்களையும் தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே 54 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது அரசு காட்டும் கணக்கு தான் – எனவே உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தவணை கட்டமுடியாத ஒருவரின் 16 வயதே நிரம்பிய பெண்ணை விபச்சாரம் செய்தாவது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். அவமானம் தாளாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://www.ibtimes.com/articles/77043/20101029/microfinance-deaths-sks-microfinance-spandana-asmitha-share-l-t-andhra-suicides-india-microfinance-d.htm

ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஏற்பட்ட குறுங்கடன் சந்தையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு நாவில் எச்சில் ஊறிய சர்வதேச நிதிமூலதன கும்பலும் இப்போது இத்துறையில் வலுவாகக் காலூன்றியிருக்கிறது. LAPO அமைப்பின் பங்குதாரராக டச்சு வங்கி, கால்வர்ட் பவுன்டேஷன் போன்ற நிதிமூலதன முதலைகளே இருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் உலகைக் கவ்விய சர்வதேசப் பெருமந்தத்தை அடுத்து, தாம் சூதாடிய களங்களையெல்லாம் சூரையாடி நாசப்படுத்திய நிதிமூலதனச் சூதாடிகள் இப்போது ஏழை நாடுகள் மீதும் வறியவர்கள் மீதும் கண்பதித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, விவசாயப் பொருட்களின் ஊகபேர வர்த்தகம், கனிமச் சந்தையின் ஊகபேர வர்த்தகம் என்று ஒவ்வொரு துறையையும் பெரும் வெட்டுக்கிளி கூட்டம் போல் தாக்கும் நிதிமூலதன சூதாடிகள், ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விட்டிருக்கிறார்கள். இந்தக் கும்பலின் லாபவெறியினால் நிர்மூலமாகி விட்ட ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை மற்றும் பிற ஊகபேர வர்த்தகச் சந்தைகள் அதிலிருந்து மீண்டெழும் வழி தெரியாமல் தவிக்கின்றன. இப்போது அனைத்தையும் கடந்து தமது நேரடி இலக்காக மூன்றாம் உலக நாடுகளையும் ஏழைகளையும் மாற்றியிருக்கிறார்கள். சர்வதேச நிதிமூலதனம் ஒரு சுருக்குக் கயிறு போல மொத்த உலகையும் இறுக்கி கொத்துக் கொத்தாய் அப்பாவி ஏழை மக்களைக் கொன்று குவித்து வருவதைத் தான் முதலாளித்துவ ஊடகங்கள் ஏழ்மை ஒழிப்பு என்று அலங்காரமான வார்த்தைகள் மூலம் நம்மிடம் பசப்புகின்றன.

குறுங்கடன்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்ளும்  இவர்கள் எதார்த்தத்தில் ஏழைகளையே ஒழித்துக் கட்டுகிறார்கள் என்பது இப்போது பட்டவர்த்தனமாக அம்பலமாகியிருக்கிறது. மூலதனத்திற்கு எல்லைகள் இல்லை என்பது தான் உலகமயமாக்கலின் அடிப்படை என்கிறார்கள் முதலாளித்துவதாசர்கள்;  அதனால்தான் அதற்கு இதயமும் இல்லை என்பதை இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

நண்பர்களே இந்த யூனூஸ் நோபல் பரிசு வாங்கிய போது வறுமை ஒழிப்பு புரட்சி என்று பிரம்மாண்டமான விளம்பரத்தை உலக ஊடகங்கள் கொடுத்திருந்தன. இந்தியாவிலும் அதே மாதிரி புரட்சியை கொண்டு வரவேண்டுமென்று அப்துல் கலாம் முதல் அண்ணா ஹசாரே வரை பலரும் பிதற்றியிருக்கக் கூடும். ஆனால் இறுதியில் இந்த அமைதியான ஏழ்மை ஒழிப்பு புரட்சியின் முகம் அம்பலமாகியிருக்கிறது. இனி நோபல் பரிசு என்றால் உடனே வாய் பிளக்காமல் இருக்கவாவது அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கம் முயலுமா?

மேலும் வாசிக்க

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. வழக்கம் போலவே, மேலோட்டமான, மலிவான கட்டுரை. முதல்ல கந்து வட்டி என்றால் என்னவென்று விளக்காமலே அந்த பெயரை இஸ்டத்துக்கு பிரயோகிப்பது அபத்தம்.

  கந்து வட்டி விகிதம் 100 சதத்திற்க்கும் மேலே. பத்து ரூவா வட்டி எல்லாம் தான் கந்து வட்டி. ஏழைகள் அப்படி தான் பெருவாரியாக வாங்கும் நிலை. மைக்ரோஃபைனான்ஸ்கள் கேட்க்கும் வட்டி 30 சத அளவில் இருந்தாலும் அது எவ்வளவோ தேவலை என்று தான் அவர்களிடம் ஏழைகள் செல்கிறார்கள். குறுங்கடன் கொடுத்து வாங்க ஆகும் நிர்வாக செலவு மிக அதிகம். எனவே வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. Cost of operations are very high. இது தான் அடிப்படை விசியம். அந்நிறுவனங்களில் நிகர லாபம் எத்தனை சதம் என்று பார்த்தாலே புரியும். மேலும் இதை பற்றி அருமையான சில கட்டுரைகள் :

  http://swaminomics.org/?p=1896
  Don’t cap microfinance lending rates

  MFI lending rates in India are lower than in Mexico or South Africa. Compartamos in Mexico lends at up to 100%, yet borrowers repay. How so? An annual rate of interest is meaningless for businesses with a daily churn. A vegetable vendor borrows Rs 300 to buy vegetables wholesale, selling these for Rs 450. Even if he pays 100% per year interest on his loan of Rs 300, it amounts to just 90 paise/day, a negligible portion of his profits.

  Many poor Indians use MFI loans to pay off moneylenders. An MFI loan at 30% to pay off a moneylender’s loan at 100% is a blessing.

  The poor try to save with chit funds, store cash at home, or deposit cash with ‘moneyguards’, who look after it. Yet all these bear risk: chit funds go bust, homes are robbed, moneyguards disappear. The poor will happily pay a fee for the safety, regularity and reliability of MFIs. If you exclude the loan processing fee or security deposit charged by MFIs, their effective interest is often just 24%.

  http://swaminomics.org/?p=85
  How micro-finance institutions beat nationalised banks

  http://swaminomics.org/?p=1907
  Killing microfinance will help moneylenders

  http://swaminomics.org/?p=1939
  MFIs must go beyond lending

  • அதாவது அண்ணன் அதியமான் என்ன சொல்றாருன்ன,

   நெஞ்சில் குத்தினால் தான் கொலை. வயிற்றில் குத்தினால் கொலை என்று சொல்ல கூடாது. குத்துவதால் கொலைகாரனுக்கு கிடைக்கும் பணம், லாபம், தான் முக்கியம்.அதை பற்றிய சுவரிசியமான கட்டுரைகளை அவர் கொடுத்த லின்கை சொடுக்கியே பாருங்கள்.

  • கொழுப்பெடுத்தவன் வறியவனைப் பார்த்து பச்சாதாபப் பட்டானாம். அந்தக் கதைதான் அதியமானின் கதையும்.

  • குறுங்கடன் கொடுத்து வாங்க ஆகும் நிர்வாக செலவு,மற்ற செலவினங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, 24 சதவீதம் வட்டி நியாயமானது என்றும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகும் விகிதமென்றும் மாலேகம் கமிட்டி அறிக்கை சொல்லுகிறது.

   http://rbidocs.rbi.org.in/rdocs/PublicationReport/Pdfs/YHMR190111.pdf
   SKS India கம்பெனியின் ஆண்டறிக்கையின்படி சென்ற ஆண்டு நிகர லாபம் 261 கோடி ரூபாய். Fortune at the bottom of the pyramid என்று பிரகலாத் சொன்னது போல எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என்பதைத் தவிர இவர்களுக்கு வறுமை ஒழிப்பை குறித்தெல்லாம் கவலை இருப்பதாக தெரியவில்லை.
   http://www.sksindia.com/downloads/sks_annual_report_2009_10.pdf

   ஆனால் கிராமீன் பாங்க் முகமது யூனுஸ் பற்றிய வினவின் பார்வை சரியில்லை என்பதுதான் என் நிலை. துவக்கத்தில் கிராமீன் வங்கியில் கடன் வாங்கிய செல்ஃபோன் லேடீஸ்” உண்மையிலேயே சம்பாதிக்க முடிந்தது. அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்தது. ஒரே கிராமத்தில் 50 பெண்கள் செல்பேசி வாங்கி வாடகைக்கு விட்டு வியாபாரம் செய்ய முயன்றால் என்ன நடக்கும்? போட்டியில் லாபம் குறைந்து கடனை அடைப்பதே சிரமமாகிப் போனது.

   ஷேக் ஹஸீனாவுக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டதால் பங்களாதேஷ் அரசு யூனுஸுக்கு எதிராக நடத்தும் விஷம பிரசாரத்தின் ஒரு பகுதியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

   • ஆரம்பகாலத்தில் யூனுஸ் இதை மிக சிறிய அளவில் செய்திருப்பார், சிறிய அளவில் ஒரு கிராமத்தில் அதன் சூழ்நிலைகளுக்கேற்ப பலன் தரும் விஷயம் கொஞ்சம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் போது பல் இளிக்க ஆரம்பித்துவிடும்.

    இரண்டாவது ஒரு சிறு கிராமத்தில் வெற்றி பெற்ற தொழில் இன்னொரு கிராம சூழ்நிலைக்கு வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது.

    மூன்றாவது நாடு அளவில் என்று இத்திட்டதை கொண்டு செல்லும் போதும், உற்பத்தி எவ்வளவுக்கெவ்வளவு கூட்டு நடவடிக்கையாக இருக்கிறதோ அவ்வளாவு பலன் தரும் அதே மாதிரியாக, உற்பத்தி செய்யும் பொருட்களின் விநியோகம் என்பதும் திட்டமிட்டு நாட்டு மக்களின் தேவையை கருதியும், அவர்களுக்கு முறையாக சேரும்படியாகவும் இருக்க வேண்டும்.

    ஒரு ஊரில் ஒருவர் கடன் வாங்கி கோழி வளர்த்தார் முட்டையை விற்று கடனை அடைத்தர், அதையே பெரிய அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 10 குடும்பம வீதம் நாடு முழுவதும் கடன் வாங்கி கோழி வளர்த்தால்? எங்கே விற்பார்கள்? நாட்டில் முட்டைக்கு அவ்வளவு தேவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், இருந்தால் திட்டமிட்டு கோழியை வளர்க்க வேண்டும். அத்ன் பின் அத்தனை முட்டைகளையும் முறையாக விநியோகிக்க வேண்டும், இதை தனிநபராக கோழி விற்பவர்கள் செய்ய முடியாது. முறையாக அவர்களுக்குள் கூட்டுறவை கிராமீன் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

    மேலும் குறுங்கடன் என்பது இத்தகைய விஷயங்களை பற்றி ஆராயாமல் மக்களை ஏதோ நம் வாழ்வில் நல்லது நடக்க போகிறது என்ற மாயை உருவாக்கி அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடிக்க செய்யும் வேலை செய்ததால் தான் நோபல் பரிசே கிடைத்து. பொருளாதார பார்வையில் குறுங்கடன் என்பது சிறு அளவில் வெற்றி பெறுமே ஒழிய முழு நாட்டு வளர்ச்சிக்கான திட்டமல்ல.

    அப்படி வெற்றி பெற வேண்டுமென்றால் முத்லாளித்துவ பாணியில்,
    1. வட்டியை ஏற்ற வேண்டும்,
    2. கடன் வாங்கியவர்களை நெருக்க வேண்டும்

  • கந்துவட்டிகாரர்கள் இந்தியா முழுவதும், ஏன் பல நாடுகளிலும், மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ளனர். அவர்களிடம் தான் 100 சதம் அல்லது அதை விட பல மடங்கு அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையில் பெருவாரியான ஏழைகள் உள்ளனர். மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களின் வட்டி விகுதம் இந்த கந்துவட்டிகாரர்களின் வட்டி விகித்தை விட மிக மிக குறைவாக உள்ளதான், மக்கள் இவர்களை நாடுகிறார்கள். பயன் அடைகிறார்கள்.

   வசூல் செய்வதில் குண்டர்களை உபயோகப்படுத்துவது சில இடங்களில் தான் நடக்கிறது. அதன் சதவீதம் என்ன என்று சொல்லாமலே, பொத்தாம் பொதுவாக எல்லா தருணங்களிலும் அப்படி தான் என்று பொய்யாக நிறுவ முயல்வது நேர்மையற்ற செயல்.

   மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். அவர்களுக்கு இவை தேவையில்லை என்றால் தூக்கி எறிவர். கந்துவட்டிகார்கள் பல வருடங்களாக கொடும் வட்டி வாங்குவது உம் கண்ணில் படவில்லை. அவர்கள் தான் மைக்ரோ நிதி நிறுவனங்களால் உண்மையில் ‘பாதிக்க’ படுகிறவர்கள். அவர்கள் பொழப்பில் தான் மண் விழும். அது உங்களுக்கு பொறுக்கவில்லை. நீங்க அப்ப அவுங்க பக்கம் தான் போல. ஏழை மக்களுக்காக நீலிக்கண்னீர் விடுவது நீங்க தான்.

   சரி, எம் நண்பன் முகப்புத்தகத்தில் இந்த பதிவு பற்றி எழுதியது :

   ///நம்முடைய ‘பழைய’ தோழர்களுக்குத் தான் நோபெல் பரிசே ஆகாதே, அதை கந்து வட்டிக்காரனுக்குக் கொடுத்தால் இவர்களுக்கு என்ன, கசாப்புக் கடைக்காரனுக்குக் கொடுத்தால் இவர்களுக்கு என்ன? இவர்கள் உள்மனதில் நோபெளுக்கு மரியாதை இருக்கிறது என்பதே இதிலிருந்து தெரிகிறது.

   ஐயா, முகம்மது யூனுஸ் பற்றிய ஒரு தமிழ்த் தளத்தையும் அதில் உங்கள் கருத்தையும் படித்தேன். முகம்மது யூனுஸ் கந்து வட்டிக்காரராகவே இருக்கட்டும்; அவருக்கு நோபெல் பரிசு கொடுத்ததில் என்ன தவறு?///

  • Many poor Indians use MFI loans to pay off moneylenders. An MFI loan at 30% to pay off a moneylender’s loan at 100% is a blessing.

   இது நான் எழுதிய முதல் பின்னூட்டத்தில் உள்ளது. இதை பற்றி பேசாமல், மேலோட்டமாக பேசினால் எப்படி ? இதற்க்கு பதில் சொல்ல முயல்வும்.

   முகமது யுனஸ் செயற்க்கறிய செயல் செய்யும் கர்ம வீரர். சுயநலமில்லாமல், ஏழைகளுக்குகாக முப்பது வருடங்களாக உழைப்பவர். சுயநலம் இருந்திருந்தால் அவர் படித்த படிப்பிற்க்கு, நியூ யார்க் நகர் வால் ஸ்ட்ரீட்டில் பல மில்லியன் டாலர் சம்பளம் தரும் நல்ல வேலையில் ஆரம்பத்திலேயே அமர்ந்து, இன்னேரம் பெரும் கோடிஸ்வரராகியிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யாமல், தம் நாட்டு மக்களுக்குகாக தொண்டாற்றுகிறார். அதை புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி ஏழுவது மடமை மற்றும் சிறுபிள்ளை தனம்.

   கணபதி என்பவர் சில காலம் முன்பு மிக சரியான பின்னூட்டம் இட்டிருந்தார். இது போன்ற இழி செயல்களால் தான் நீங்கள் மிக தனிமைபட்டு உள்ளீர்கள். மக்களிடம் உம் செல்வாக்கு பெருசா வளர முடியல. சென்ற தேர்தலிலை புறக்கனிக்கம்படி பிரச்சாரம் செய்தீர். நாயை வைத்து அதற்க்கு வாக்கு கேட்டீர் !! ஆனால் என்றும் இல்லாத அளவில் வாக்குபதிவு சதவீதம் இம்முறை 75 சதம். உம் பேச்சை கேட்க எல்லோரும் தயாரில்லை என்பதே தெளிவு.

   முகமது யூன்ஸுக்கு நோபல் அளித்தவர்கள் எல்லாம் மடையர்களோ அல்லது அயோக்கியர்களோ அல்ல. நீங்க வேனும்னா அப்படி சொல்லிக்கிட்டு திர்யலாம் !!

   உலகமயமாக்கலால் ஏழ்மை குறைகிறது என்று யுனஸ் சென்னது மிக சரி.

   • One unusual feature of the Grameen Bank is that it is owned by the poor borrowers of the bank, most of whom are women. Of the total equity of the bank, the borrowers own 94%, and the remaining 6% is owned by the Government of Bangladesh.

    இதை பத்தி பேசலாமே ? உரிமையாளர்கள் அல்லது பங்குதார்கள் யார் என்று…

    Village Phone Program

    Among many different applications of microcredit by the bank, one is the Village Phone program, through which women entrepreneurs can start a business providing wireless payphone service in rural areas of Bangladesh. This program earned the bank the 2004 Petersburg Prize worth of EUR 100,000/-, for its contribution of Technology to Development.[26] In the press release announcing the prize, the Development Gateway Foundation noted that through this program:

    …Grameen has created a new class of women entrepreneurs who have raised themselves from poverty. Moreover, it has improved the livelihoods of farmers and others who are provided access to critical market information and lifeline communications previously unattainable in some 28,000 villages of Bangladesh. More than 55,000 phones are currently in operation, with more than 80 million people benefiting from access to market information, news from relatives, and more

   • அதியமான்,

    Microfinance பற்றிய இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.
    WHY DOESN’T MICROFINANCE WORK? – The destructive rise of local neoliberalism
    By Milford Bateman Published by Zed Books.2010

    அதில் MF பற்றிய மாயைகள் என்று அவர் குறிப்பிடும் பட்டியல்:

    Basic Myths
    Microfinance supports income-generating activities
    Microfinance ‘empowers’ the poor
    Microfinance impact assessments ‘prove’ that microfinance works
    Microfinance is what the poor ‘want’ and ‘need’
    Microfinance availability is increased by formal property titles
    Microfinance directly helps the very poorest
    Microfinance empowers women

    Myths about “new wave” microfinance
    Accumulating great wealth through microfinance does not mean that the poor lose out: it is a ‘win-win’ situation.
    Demand for microfinance vastly outstrips the supply.
    Commercialized MFIs will always respect their social mission.
    High interest rates are not a problem for the poor since it is the availability of microcredit which matters most to them, not its price.
    High repayment rates ‘prove’ that borrowers are succeeding with their expensive microloan.
    MFIs can be self-sustaining

    இந்தியாவில் MFI விக்ரம் அகூலா போன்ற புதுப்பணக்காரர்களை உருவாக்கியதைத் தவிர வறுமை ஒழிப்புக்கு எந்த வகையில் உதவியுள்ளது என்பதை விளக்கமுடியுமா?

    ஆந்திர (தற்)கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா?

    • ///இந்தியாவில் MFI விக்ரம் அகூலா போன்ற புதுப்பணக்காரர்களை உருவாக்கியதைத் தவிர வறுமை ஒழிப்புக்கு எந்த வகையில் உதவியுள்ளது என்பதை விளக்கமுடியுமா?//

     it is impossible to explain to people who live a good life in the west, affluent and articulate people. there are millions of people who are benefiting from MFIs. Let us ask them this question. ok. first read fully about Grammen Bank and why it was awarded the Nobel Prize.

     //ஆந்திர (தற்)கொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா?//

     when did i do that ? they are all exception rather than the rule. ok.
     so what do you suggest : Ban all MFIs and let us get back to the good ole days of Kandhuvattikaararhal. Why don’t you research and find the exact quantum of suicides that occur in a year due to KAndhuvattikaarhal torture across India ? no one cares for that vital issue and info. I am sure more people commit suicides or destroyed due to Kandhuvatti. Try this first.

 2. Narayana Murthy of Infosys also invested in a company called SKS Micro Finance. On day 1 of listing it’s shares, the company is valued around 10000 crores, where Indian Overseas Bank is valued at 7000 crores. Calculate the amount they loot from poor.

  Anbarasu

 3. We were all along thinking that they are giving interest free loans or <5% interest per annum, it is really shocking to note that interest is huge on these and there are people to support these. bull shit.

 4. இந்த திட்டம் ஆரம்பிக்க பட்ட போது நன்றாக தான் இருந்தது. காளை மாட்டிலிருந்து கூட பால் கறக்கும் முதலீட்டாளர்கள் பார்வையில் விழுந்தவுடன் இது மோசமான நிலையை நோக்கி போய் கொண்டு உள்ளது. அமெரிக்காவில் இதே முதலீட்டாளர்கள் அநியாய வட்டிக்கு சப்பிரைம் கடன் கொடுத்து லட்ச கணக்கானவர்களை கடன் வலையில் வீழ்த்தி அவர்களுடைய ஒரு தலைமுறை வளர்ச்சியை பாழாக்கினார்கள்.
  இது பற்றி சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய பதிவு.
  http://tamilfuser.blogspot.com/2011/01/microcredit.html

  நியுயார்க் டைம்ஸ்ல் இது பற்றி கூறும் செய்தி
  The region’s crisis is likely to reverberate around the globe. Initially the work of nonprofit groups, the tiny loans to the poor known as microcredit once seemed a promising path out of poverty for millions. In recent years, foundations, venture capitalists and the World Bank have used India as a petri dish for similar for-profit “social enterprises” that seek to make money while filling a social need. Like-minded industries have sprung up in Africa, Latin America and other parts of Asia.

  But microfinance in pursuit of profits has led some microcredit companies around the world to extend loans to poor villagers at exorbitant interest rates and without enough regard for their ability to repay. Some companies have more than doubled their revenues annually.

  http://www.nytimes.com/2010/11/18/world/asia/18micro.html?scp=1&sq=india%20microcredit&st=cse

  யூனஸ் மைக்ரோகிரடிட்டின் இன்றைய நிலை பற்றி வருந்தி எழுதி இருக்கும் பதிவு

  http://www.nytimes.com/2011/01/15/opinion/15yunus.html?_r=1&hp

 5. முகம்மது யுனசின் 30 ஆண்டுகால வாழ்வில் அவர் சாதித்தவற்றை ஒரு நடுநிலயோடு அலசி முடிவில் உங்கள் கருத்தை(புரிதலை) வைத்திருக்கலாம்……..அனால் கட்டுரை முழுமையுமே அவரை விமர்சித்திருப்பது நீங்கள் எவ்வளவு அரைவேக்காடு என்று எல்லோரும் எளிதில் புரிந்து கொள்வார்கள்……..இத்தளத்திற்கு நிதி உதவி வேறு கேட்கிறீர்கள்….காலக்கொடுமை

 6. ஒவ்வொரு தடவையும் குறை கூரும்பொழுது சரியான வழியையும் சேர்த்தே சொல்லுவது நல்லது. குறை சொல்வது மிக சுலபம். வினவு ஆசிரியர் மற்றும் அவரது குரூப்பை சேர்ந்தவர்கள் ஒரே ஒரு கிராமத்தை சரியான வழியில் முன்னேற்றி காட்டட்டும். பிறகு நாமும் அவர்களை பின் பற்றலாம். இல்லை, குறை சொல்லது மட்டும்தான் உங்கள் வேலை என்றால் சொல்லி விடுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க