வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!
அரங்கக் கூட்டம்
19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி
நியூ G.G. மஹால், MMDA பஸ் டெப்போ பின்புறம், அரும்பாக்கம், சென்னை
தொடர்புக்கு – 94451 12675
————————————
நிகழ்ச்சி நிரல்
தலைமை
தோழர். த.கணேசன், மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
உரை நிகழ்த்துவோர்
ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?
திரு. ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர்
கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்
தோழர். மருதையன், பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை! கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை!
தோழர். சீ. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
அனைவரும் வருக !
__________________________________________________________________________
தொடர்புக்கு
வ. கார்த்திகேயன்.
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, http://rsyf.wordpress.com
வினவு – (91) 97100 82506
__________________________________________________________________________
தமிழக அரசே!
கட்டணக் கொள்கையை ஒழித்துக் கட்டு!
அனைத்துத் தனியார் கல்வி
நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு!
அரசுப் பள்ளிகளில் போதுமான
ஆசிரியர்களை நியமி!
அடிப்படைக் கட்டுமான வசதிகளைச்
செய்து கொடு!
சமச்சீர் கல்வியை அனைவருக்கும்
கட்டாயமாக – இலவசமாக வழங்கு!
அரசுப் பள்ளிகளில்
படித்த மாணவர்களுக்கு மட்டும்
உயர்கல்விப் படிப்புகளுக்கு அனுமதி கொடு!
அரசுக் கல்வி நிறுவனங்களில்
படித்தவர்களுக்கே
அரசு வேலை என்று ஆணையிடு!
உழைக்கும் மக்களே!
மனித மாண்பை மேம்படுத்தும்
கல்வியை ஒரு பண்டமாக்கி,
மக்களைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு,
அடிமைகளை உருவாக்கும்
தனியார்மய – உலகமயக் கல்விக் கொள்கைக்குக்
கல்லறை கட்டுவோம்!
ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற போர்வையில் புகுத்தப்படும்
புதிய பார்ப்பனியக் கல்விமுறையைத்
தூக்கியெறிவோம்!
பெற்றோர்களே!
10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!
ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற மோகத்திற்குப் பலியாகி,
குழந்தைகளை பிராய்லர் கோழி போல்
வளர்க்கும் கல்வி வியாபாரிகளிடம்
சிக்கிச் சீரழியாதீர்!
அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்களே!
மாணவர்களுக்கு முறையாகக்
கற்றுக் கொடுப்பதில்லை,
ஒழுக்கமாக வளர்ப்பதில்லை என்று
அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்
கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்தும்
தனியார் பள்ளி முதலாளிகளுக்கு
எதிராக அணிதிரள்வீர்!
தனியார் பள்ளி ஆசிரியர்களே!
அற்பச் சம்பளம் கொடுத்து
உங்களைக் கொத்தடிமைகளைப் போல
நடத்துவதோடு, கல்விக் கொள்ளைக்குக்
கருவியாகப் பயன்படுத்தும்
தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு
எதிராக சங்கமாகத் திரண்டு போராடுவீர்!
__________________________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் பிளஸ்’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!
- சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!
- சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
- திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
ஒன்று சேருவோம்., வென்று காட்டுவோம்.,
கல்வி பற்றிய தேவை,உரிமையை மக்கள் அறியாமல் இருப்பதே இன்றைய நிலைக்கு
காரணமாகும். கல்வியில் வர்ணாஸ்ரம திட்டத்தை புகுத்துவதே இன்றைய
ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதை முளையிலேயே கிள்ளி
எரியவேண்டும்.பொதுபாடத்திட்ட(சமச்சீர்கல்வி)அமலாக்கம் இந்த
ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த, போராட்டங்களை, மக்களின் பங்கெடுப்போடு
செயல்படுத்தவேண்டும்.வாழ்த்துக்கள்.
மதத்தை பரப்புவதற்காக முதலில் தோன்றிய தனியார் கல்வி நிறுவனங்கள் பின்னர் படிப்ப்டியாக
கொள்ளைக்கு பெயர் பெற்றதாக மாறிப் போய்விட்டது.. அந்த கொள்ளையர்களை விரட்டியடிக்க கண்டிப்பாக
சமச்சீர் கல்வி தேவை.. அதற்கு இந்தக் கூட்டம் உதவியாக இருக்கும்..
கூட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்..
மாநிலம் முழுவதும்பழைய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு
தமிழ் முரசு,
ஈரோடு :சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்த பிரச்னையில் கோர்ட் தீர்ப்பு வரும் முன்பே மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பழைய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்துவதா, பழைய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்துவதா? என்பது குறித்து எவ்வித முடிவும் இன்னும் எட்டப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதுவும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட 30 ஆயிரம் பாடபுத்தகங்கள் கொண்டு வந்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தின் படி அச்சிடப்பட்ட 30 ஆயிரம் பாட புத்தகங்கள் தற்போது வந்துள்ளது உண்மைதான். இதேபோன்று சமச்சீர் பாடத்திட்டத்தின் படி அச்சிடப்பட்ட 1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் பாடப்புத்தகங்களும் தற்போது வந்துள்ளன. கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதற்கேற்றபடி புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே புத்தகங்களை தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சமச்சீர் கல்வி அமலுக்கு வருமா, பழைய பாடத்திட்டத்தின் கீழ் பாடம் நடத்தப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ள நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை தமிழக அரசு அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி இப்படி எப்போவும் தவறான பார்வையை தொடர்ந்து எடுக்குறீக ? :)))
///பெற்றோர்களே!
10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!///
அப்படீன்னு நீங்க தான் சொல்றீக. பெற்றோர்கள் அப்படி நினைப்பதாக் தெரியவில்லை.
இல்லாவிட்டால் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் ?
///குழந்தைகளை பிராய்லர் கோழி போல்
வளர்க்கும் கல்வி வியாபாரிகளிடம்
சிக்கிச் சீரழியாதீர்!///
இதென்னோமோ சரிதான். கல்வி முறை மற்றும் பாடத்திட்டம் கொடுமையாகத்தன் உள்ளது.
///அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்களே!
மாணவர்களுக்கு முறையாகக்
கற்றுக் கொடுப்பதில்லை,
ஒழுக்கமாக வளர்ப்பதில்லை என்று
அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்
கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்தும்
தனியார் பள்ளி முதலாளிகளுக்கு
எதிராக அணிதிரள்வீர்!///
this takes the cake. ஏற்கெனவே அவர்கள் சங்கம் வைத்து பல ஆண்டுகளாக
தம் ‘உரிமைகளுக்காக’ மட்டும் போராடி வருகின்றனர்.
அவர்கள் தம் கடமைகளை ஒழுங்கா செய்திருந்தால், இந்த தனியார் பள்ளிகள் இத்தனை
பெருகியிருக்காது. இந்த ‘உண்மையை’ சொன்னால், அவர்களை கேவலப்படுத்தி,
கொச்சைபடுத்துவதா ? என்னே உம் ‘புரிதல்’ !!!
நீங்க விரும்பும் விதம் சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்டு, அனைத்து கல்வி நிலையங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன ? கலவி அமைச்சரும், அதிகாரிகளும் மேலும் கொள்ளை அடிக்க நல்ல வழி. அரசு ஆசிரியர்கள் மிக மகிழ்வர். ஆனால் பெற்றோர்களும், மாணவர்களும் அப்படி விரும்பவில்லை என்பதே உண்மை.
அரசு பள்ளி ஆசிரியர்கள் (முக்கியமாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள்) ஒழுங்கா, நேர்மையா தன் கடமைய செய்வதில்லை. ஓபி அடிப்பது, அடிக்கடி லீவ் போடுவது, பிற தொழில்கள் செய்வது போன்ற ஒழுங்கீனங்கள் மிக மிக அதிகம். அதனால் தான் 5ஆவது முடித்த ஒரு அரசு பள்ளி மாணவன், அடிப்படை கல்வி, கணிதம், எழுதும் திறன் மிக மிக குறைவாகவே பெற்றுள்ளான். தனியார் பள்ளிகளை ஒப்பிடுங்கள். நேரில் சென்று ஆராயவும். விசாரிக்கவும். இதற்க்கு காரணம் தனியார்மயமா அல்லது ‘நிரந்தர வேலை’ அளிக்கும் அரசின் அயோக்கியத்தனமான பழைய கொள்கையா ?
யாதார்த்த உலகத்தில் இருந்து எத்தனை தூரம் விலகி, கற்பனா உலகில் மிதக்கிறீர்கள் என்பதற்க்கு இது தான் சாட்சி. அதனால் தான் பல விசியங்களில் மக்களிடம் இருந்து மிக மிக தனிமை பட்டு உள்ளீர்கள். this shows how far you are from ground reality.
///பெற்றோர்களே!
10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!///
அப்படீன்னு நீங்க தான் சொல்றீக. பெற்றோர்கள் அப்படி நினைப்பதாக் தெரியவில்லை.
இல்லாவிட்டால் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் ?
.-> அதிகப்பிடிச்சமானு…தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயம் வெளியான செய்தித்தாள்களைப் படிக்கறதே இல்லன்னு நீரு முடிவு பண்ணிட்டா அதனால உலகம் இருட்டுன்னு சொல்லிடறதா?
எழுத்தாளர் ஞாநி இதை பற்றி சமீபத்தில் எழுதியது :
//5. பாடம் ஒழுங்காக நடத்தாத ஆசிரியர்கள் பற்றி ரகசியமாக புகார்கள் தர பெற்றோருக்கும் மாணவருக்கும் மாதாமாதம் வாய்ப்பு தரவேண்டும். ஒரு வாரத்துக்குள் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
6. மைதானம், கழிப்பிடம் முதலிய அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் உடனே மூடப்படவேண்டும். அந்த வசதிகள் ஓராண்டுக்குள் ஏற்படுத்தப்படவேண்டும்.
7. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு தரவேண்டும்.
8. ஒவ்வொரு வருடமும் கடைசியில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது அதே தேர்வை அந்தந்தப் பாட ஆசிரியர்களும் எழுத வேண்டும். 80 சதவிகித மதிப்பெண் எடுக்காத ஆசிரியர்களுக்கு ஓராண்டு இன்கிரிமெண்ட் வெட்டப்படவேண்டும். தொடர்ந்து மூன்று வருடங்கள் சரியான மதிப்பெண் எடுக்காத ஆசிரியர் வேலை நீக்கம் செய்யப்படவேண்டும்.///
ஒழுங்கா வேலை செய்யாத, பொறுப்பில்லாத, அடிப்படை நேர்மை இல்லாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்காவது, இந்த காரணங்குகளாகாக எங்காவது வேலை போயிருக்கிறதா ? அதை சாத்தியப்படுத்தாமல், நிலைமையை மேம்படுத்தவே முடியாது. மனித இயல்பை பற்றி அறியாமை நிறைய உங்களை போன்ற மார்க்சியர்களுக்கு உள்ளது.
கீழகண்ட ஆய்வறிக்கை சுட்டியை பல முறை எடுத்து காட்டியும் யாரும் படித்து, உள் வாங்கி விவாதிக்க முன்வரவில்லை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல், மீண்டும் ஒரு முறை முழு கட்டுரையையும் அளிக்கிறேன். படிப்பவர்கள் படிக்கட்டும் :
http://www.accountabilityindia.in/accountabilityblog/2235-case-incentive-payments-teachers-government-schools
அதியமான் இது உங்களுக்கு அழகா….. ஒரே ஒரு சுட்டியைத்தவிர இத்தனை நாளானாலும் உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க வேறெதுவும் கிடைக்காமல் இப்படி அல்லாடுவதைப்பார்த்தால் பாவாமாகத்தான் இருக்கிறது….
மஹா ஜனங்களே, இந்த அதியமான் இங்கே அல்வாவை கிண்டி கொடுக்கிறார்…
இந்த ஒத்தை சுட்டியை ஒட்டை சுட்டியாக்கிய விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது
முழுவிவாதத்தையும் இங்கே பார்க்கலாம்… https://www.vinavu.com/2011/06/11/rte-hrpc/#comments
அதில் எனது இறுதி பின்னூட்டம் இதுதான்
என்னடா இது மூணு நாள் முன்னால சுட்ட வடையை ஊசிப்போனப்பிறகும் அதியமான் மாஸ்டர் சர்வ் பண்ணுறாறேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க, இந்த வடை அவர் பலப்பல வருடங்களுக்கு மின்னால சுட்டது, இன்பாக்ட் பாட்டி வடை சுட்ட கதையில் வந்த வடைக்கு பிறகு சுடப்பட்ட அரதப்பழைய வடை இது, அதாவது கெட்டது என்ன நடந்தாலும் அது சோசலிசம், நல்லது நடந்தால் அது ‘அ’சோசலிசம்..
இங்கே அதியமான் இதுவரை சொன்னது என்ன? அரசு ஆசிரியர்கள் அரசின் சோசலிச பாணி கொள்கையினால் பொறுப்பற்று வீணாக போய்விட்டார்கள், அதனால்தான் கல்வி பாழடைந்துவிட்டது, அமெரிக்க பாணியிலும் தனியாரிலும் செய்வதுபோல அக்கவுண்டபிளிடி அப்ரைசல் என்று அவர்களுக்கு ‘ஆப்பு’ரைசல் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
இதை பல கோணங்களிலிருந்து மறுத்து, ஆசிரியர்கள் மீது தவறு உண்டு ஆனால் இது தனிநபர் அறம் சார்ந்த பிரச்சனை அல்ல, மாறாக அரசின் தனியார்மய கொள்கையினால் விளைந்த நிலை என்று விளக்கினேன், மேலும் கல்வியை பாதிக்கக்கூடிய சமூக காரணிகளும் இதில் முக்கிய அங்கம் என்றும் விளக்கி அவர் விரும்பும் முதலாளித்துவ ஆய்வு சுட்டிகளையே அளித்திருந்தேன்.
நடைமுறை உதாரணமாக ஐஐஎம் போன்ற அரசு கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்தில் இருப்பதை குறிப்பிட்டேன்.. ஆனால் அதியமான் அதை எப்படி எதிர்கொள்கிறார் பாருங்கள், அதாவது பாழடைந்த அண்ணா பல்கலைக்கழகம் தான் சோசலிச பாணியாம் ஆனால் ஐஐஎம் சோசலிச பாணி இல்லையாம் ஏனென்றால் அது பாழடையவில்லையாம். தன்னுடைய வாதங்களிலேயே இவர் முரண்படுகிறார் .
அரசு தனியாரையை விரும்புகிறது எனவே திட்டமிட்டு தனது சமூக கடமைகிலிருந்து விலகுகிறது என்று சொன்னால் அது மனப்பிராந்தி-அதீத பீதி என்கிறார், ஆனால் தான் ஆய்வு செய்யும் போது மட்டும் சோசலிசம் மீதான அவதூறுகளை தாண்டி எங்கும் போக மறுக்கிறார். இவர் அரசு ஒன்றும் அப்படி இல்லை என்று சொன்ன நேற்று காலையில் தான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹெட்லைனே கவர்மென்ட் தனியாருக்கு அதீத சலுகை அளிக்கிறது என்று மத்திய தணிக்கை துறை தெரிவித்திருக்கிறது என்பதுதான். மேலும் லிட்டருக்கு 10 காசு என ஆத்துதண்ணியை தனியாருக்கு இந்த அரசு விற்பதும் அதை அவர்கள் 15 ரூபாய்க்கு விற்றுவருவதும் நாடறிந்த செய்திதானே, இது போன்ற எத்தனையோ உதாரணங்களை பல வருடங்களாக அதியமானுக்கு பல தோழர்கள் எழுதிவிட்டனர் ஆனாலும் அந்த வடையை அவர் விடுவதாக இல்லை. ஒரு வேளை வடை நழுவிவிடுமோ என்ற அச்சத்திலேயே மேலே நான் எழுப்பிய கேள்விகளையும் பதில் சொல்லாமல் தவிரத்து வருகிறார்
சோசலிச அணுகுமுறையால் அண்ணா பல்கலைக்கழகம் ஊழல் மலிந்து போய்விட்டது என்கிறார், ஆனால் அது சீறழிந்த காலத்திற்கும் வெளியே தனியார் பல்கலைக்கழகங்கள் முளைத்து அசுர வளர்ச்சி பெற்றதற்க்கும் உள்ள தொடர்பை காண மறுக்கிறார். அரசு தான் அளித்து வந்தக் கல்வியை தனியாருக்கு ஒப்படைக்கும் போதெல்லாம் அதன் கல்வித் தரம் அழியத்துவங்குகிறது என்று பரங்கிமலை போல் கண்முன்னால் உள்ள உண்மையை காண மறுத்து அரசிடம் இல்லாத சோசலிச சார்பை குற்றவாளியாக்குகிறார் அதும் இன்று தனியார் கல்லூரிகளின் ஊழலும் கொள்ளையும் சிரிப்பாய் சிரிக்கையில் இதை சொல்வது அபத்தமாக இல்லையா?( இது தொடர்பாக படிக்க https://www.vinavu.com/2009/06/19/self-financing-robbery/ )
விட்டால் ஜேபியார் முதல் ஜெயலலிதா வரை யார் ஊழல் செய்தாலும் அவர்கள் சோசியலிஸ்டுகள் என்று சொலிவிடுவார் போல…
நடப்பு நிகழ்வுகளையெல்லாம் சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து பரிசீலிக்கும் போது இப்படித்தான் அரைவேட்காட்டுத் தனமான முடிவுக்கு வரமுடியும். ஆனால் தன்னை ஒரு லிபரல் ஜனநாயகவாதி என்று கருதிக்கொள்ளும் அதியமான் இப்படி அறிவியலற்ற முறையில் சிந்தித்து மேலோட்டமான ஒரு எளிய தீர்வை முன்வைக்க முடியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம். ஒரு லிபரல் ஜனநாயகவாதி இப்படி சிந்திக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் அதியமான் இப்படித்தான் சிந்திக்க முடியும்.
பார்க்கும் எழுத்தாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை பிறந்த தேதி நேரமெல்லாம் கேட்டு அவர் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம் நாளும் கோளும் என ஜோதிட ஆராய்ச்சி செய்யும் அதியமானிடமிருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?
””ஆன்மா, மறுபிறவி, ஆவிகள் பற்றி முதலில் நான் கிண்டல் தான் செய்து கொண்டிருந்தேன். அனுபவங்கள் அதை மாற்றின”’ https://www.vinavu.com/2011/06/09/child-raped/#comment-43665 என்று பின்னூட்டத்தில் எழுதி தான் பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று பிரகடனப்படுத்திய ஒரு நபரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இப்படி ஜாதகம், ஜோசியம், பில்லி, சூனியம், ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளை கொண்டிருப்பதை மெடல் போல குத்திக்கொண்டுள்ளவரிடத்தில் இது போன்ற மேலோட்டமான அறிவியலற்ற அணுகுமுறை தென்படுவதில் ஆச்சரியமில்லைதானே
எனவே அதியமானிடத்தில் கல்வி எப்போது சீறாகும் என்பதை வெத்தலையில் மைதடவி பாத்தால் ”அது பிளாக் அண்டு ஒயிட்டாக தெரியுமா இல்லை கலரில் தெரியுமா” என்று வேண்டுமானால் விவாதிக்கலாம், சமூக அரசியல் பொருளாராத பிரச்சனைகளை விவாதிக்கலாமா? முடியாது என்பது என் கருத்து. அதையே மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்
வணக்கம்
//ஒரே ஒரு சுட்டியைத்தவிர இத்தனை நாளானாலும் உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க வேறெதுவும் கிடைக்காமல் இப்படி அல்லாடுவதைப்பார்த்தால் பாவாமாகத்தான் இருக்கிறது….///
கேள்விக்குறி : இது மிக முக்கிய field trial and analysis. இதை எல்லாம் ஒற்றை வரியில் நிராகரிக்கும் உங்களிடம் மேற்கொண்டு பேசி என்ன ? நான் இங்கு இப்ப எழுதுவது பொது வாசகர்களுக்கு மட்டும் தான். உங்களை போன்ற brain washed ‘தோழர்களுக்கு’ அல்ல
3 நாள் ஒக்காந்து விவாதிச்சிருக்கோம்.. ஒற்றைவரியில் நிராகிரிக்கிறேன்னு மறுபடியும் அல்வா கொடுக்கறீங்களே https://www.vinavu.com/2011/06/11/rte-hrpc/#comments இங்கே போய் பொது வாசகர்கள் படிச்சிட்டு போவட்டும்..
முக்கா பேண்டை போட்டுக்கிட்டு பீச்சாங்கரையில உலாத்தும் “brain dead” மானை விட நாங்கெல்லாம் ஒன்னும் மோசமில்லை 🙂
சமச்சீர் கல்வியின் தேவை அதை எதிர்த்து தரம் என்ற பெயரில் கல்லாக் கட்டும் தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் அயோக்கியத்தனம், சதித் திட்டம் இதை முறியடிக்க போராட வேண்டியதன் அவசியம் இதைத்தான் கட்டுரை பேசுகிறது. இது பற்றி அதியமான் எதையும் சொல்லக் காணும். முட்டுக்கட்டை கொடுக்க வக்கில்லாத அளவுக்கு தனியார்மயம் அம்பலமாகும் இடங்களிலெல்லாம் அதியமான் வழக்கம் போல செய்யும் அதே தந்திரத்தை இங்கும் செய்கிறார். அவரது நேர்மைக்கு இவையெல்லாம் உதாரணங்கள்.
நியாயமானவன் எனில் எதைப் பேச வேண்டும்? நிகழ்வுக்கான முழக்கத்தில் தேடிப் பிடித்து ஒரு வரியை எடுத்துக் கொண்டு அதை பிரதான விவாதப் பொருளாக்குவதன் மூலம் தனியார் கல்விக் கொள்ளையர்களின் அயோக்கியத்தனத்தை திரை போட்டு மறைக்க எத்தணிக்கும் இவரை என்னவென்று சொல்ல?
//தரம் என்ற பெயரில் கல்லாக் கட்டும் தனியார் பள்ளிக் கொள்ளையர்களின் அயோக்கியத்தனம், சதித் திட்டம் இதை முறியடிக்க போராட வேண்டியதன் அவசியம் இதைத்தான் கட்டுரை பேசுகிறது. ///
ஏன் பெருவாரியான பெற்றோர்கள், மாணவரகள் இந்த ‘போராட்டத்திற்க்கு’ பேராதரவு அளிக்க தயாராக இல்லை என்பதை ‘நேர்மையுடன்’ விளக்கவும். தனியார் பள்ளிகளை பெற்றோர்களும், மாணவர்களும் விரும்பு Choose செய்கிறார்கள். ஏன் ? ஏன் அரசு பள்ளிகளை விரும்புவதில்லை ? இதற்க்கு யார் காரணம் ? எதாவது ‘சதியா’ என்ன ? அல்லது அரசு ஆசிரியர்களின் நேர்மை மற்றும் work ethics எனப்படும் வேலை திறன் தான் காரணமா ?
சமசீர் கல்வி அமலானாலும் எந்த பெரிய மாற்றமும் வரப்போவதில்லை. சிலபஸ் மாறும் அவ்வளவு தான். பாடத்திட்டத்தை மேலும் குறைத்து, மனபாடம் செய்யாமல், தெரிந்து படிக்கும், சொந்த வார்த்தைகளில் எழுதும் திறன் வேண்டும். அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அரசு ஊழியர்களை ‘திருத்தாமல்’ ஏழை மாணவர்களுக்கு எதிர்காலமில்லை.
இங்கு அறச்சீற்றத்துடன் முழங்குபவர்கள், தன் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா அல்லது அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களா ?
அரசு பள்ளி ஆசிரியர்கள், தம் குழந்தைகளை எங்கே படிக்க வைக்கின்றனர் ? தம் பள்ளிகளிலா அல்லது தனியார் பள்ளிகளிலா ? ஏன். 35 ஆண்டுகளுக்கும் முன்பு அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படித்தனர். இன்று இல்லை. ஏன் ?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உங்க ‘தோழமை’ சக்திகளாக பார்க்கிறீர்கள். அவர்களின் ‘ஆதரவை’ கோருகின்றீர்கள். ஆனால் அவர்களின் செயல் திறன் மற்றும் கடமையுணர்வை பற்றி glossing over செய்கிறீர்கள். அதாவது இந்த முக்கிய அம்சம் பற்றி பேசாமல் மழுப்புகிறீர்கள். இந்த பருப்பு எல்லாம் இனி வேகாது. பொது மக்கள் அப்படி எல்லாம் ஏமாற தயாராக இல்லை. அவர்கள் யதார்த்ததை உணர்ந்தே உள்ளனர். உங்க போராட்டத்திற்க்கு லச்சகணக்கில் திரள தயாராக இல்லை. உண்மையில் அவர்கள் உங்க வாதங்களை ஏற்று, தனியார்மயத்தை எதிர்க்க முணைந்தால், இன்னேரம் பெரும் அளவில் திரண்டிருப்பர்..
//அரசு பள்ளி ஆசிரியர்கள், தம் குழந்தைகளை எங்கே படிக்க வைக்கின்றனர் ? தம் பள்ளிகளிலா அல்லது தனியார் பள்ளிகளிலா ? ஏன். 35 ஆண்டுகளுக்கும் முன்பு அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படித்தனர். இன்று இல்லை. ஏன் ?
//
ANSWER is PRIVATISATION of Eduction…How many times we need to explain to Mr.Athiga maan?
ஆனால் அவர்களின் செயல் திறன் மற்றும் கடமையுணர்வை பற்றி glossing over செய்கிறீர்கள். அதாவது இந்த முக்கிய அம்சம் பற்றி பேசாமல் மழுப்புகிறீர்கள். இந்த பருப்பு எல்லாம் இனி வேகாது. பொது மக்கள் அப்படி எல்லாம் ஏமாற தயாராக இல்லை. அவர்கள் யதார்த்ததை உணர்ந்தே உள்ளனர்.
We know the tactics behind the twist..
When we are fighting against MNC / COKE, you used to talk about the child labor in saravana store..
When we demand the reservation in IIT, you people start to vomit the ‘invest first in rural schools..improve stad of teaching…’ bull shits…
We know your real ambition…we will not be cheated …
”ஜெ”க்கு ஆப்போ ஆப்பு! – உயர்நீதி மன்றம்.
தற்கொலைக்கு முன் பிளஸ் 2 மாணவன் எழுதிய ஏழு பக்க கடிதம்….எங்களுக்கு புரியும்படி பாடத்தை நடத்த சொல்லுங்க
http://velichamstudents.blogspot.com/2011/06/2.html
நாங்களும் போடுவோமில்ல லிங்கு
https://www.vinavu.com/2011/05/30/kovai-sangeetha-suicide/
தனியார் பள்ளிக்கு காசு கட்ட முடியாமல் தாய் தற்கொலை
https://www.vinavu.com/2011/04/29/brahmanical-fascism/
ஏழைக் குழந்தைகளுக்கு எதிரான தனியார் பள்ளி
https://www.vinavu.com/2011/06/07/kovai-shrushti-vidyalaya/
கோவை தனியார் பள்ளியின் கட்டணக் கொள்கைக்கு எதிராக பெற்றோர்கள் போராட்டம்
https://www.vinavu.com/2009/06/19/self-financing-robbery/
சுயநிதிக் கல்லூரி – கல்வியா? கொள்ளையா??
நாமக்கல் பகுதி, முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழிகளுக்கு நல்ல பேர் பெற்றது.அதே
போல தனியார் உறைவிடபள்ளிகளுக்கும் பேர் பெற்ற்து. அங்கும் மாணவர்களை இதே
பாணியில்தான் தேர்வுகளுக்கு தயார் செய்கிறார்கள்.அதன் தாக்கமே மற்ற பள்ளிகளுக்கும்
பரவுகிறது.மற்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் இந்தநிலை ஏதுமில்லை.தனியார்மயம்தான்
இதற்கு காரணம்.கல்வித்துறையில்தனியார்மயம் நீக்கிவிட்டால் மட்டுமே கற்பித்தலில்
முழுமை காணமுடியும்.
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என
உயர்நீதிமன்றம் உத்தரவு -தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
“சமச்சீர்” கல்வியின் “உலகத்”தரம்” பற்றி விளக்கவும் !!!
முதலில் சமம்-னா என்ன? சீர்-னா என்ன? உலகம்-னா என்ன? தரம்-னா என்னன்னு விளக்குங்க…அதுக்குப்பிறகு நீங்க கேட்டதன் விளக்கத்தைத் தரமுடியும்..இது விளையாட்டுக்காகக் கேட்கப்படும் எதிர்க்கேள்வி இல்லை..இதன் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் வர்க்கக் குணம் உண்டு..
வர்க்கம்+குணம்=வர்க்கக்குணம் என்ற தீய+குணம்= துர்க்குணம் பற்றி விளக்கவும் !!!
சமச்சீர் கல்வியை “தமிழ்தேசிய”க்கல்வி என கூறலாமா ?
வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!
அரங்கக் கூட்டம்
19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி.
இந்தக்கூட்டம் அவசியம் நடைபெறவேண்டும் தனியார்மயத்திற்கும், கல்விக்
கொள்ளைக்கும் பாடை கட்டவேண்டும்.உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே
அமல்படுத்த வேண்டும் என தீர்ப்பு சொல்லியிருந்தாலும்,ஜெ அரசாங்கம் உச்சநீதிமன்றம்
செல்வதாக தெரிவித்துள்ளது.எனவே, அவர்களின் நோக்கத்தை அம்பலபடுத்தி
முறியடிக்கவேண்டும்.
//“சமச்சீர்” கல்வியின் “உலகத்”தரம்” பற்றி விளக்கவும் !!!// loosemotin ஸ்லோ மோசனாகி கொஞ்சம் பின்னாடி போனா (பின்னாடி அந்த பின்னாடி இல்லீங்கோ கால சக்கரத்தில்) ஒரு வாரத்துக்கு முன்பு சமச்சீர் கல்வியின் உலகத்தரத்தை சீர்தூக்கிப் பார்த்து ஒரு கட்டுரை வந்துள்ளதைப் பார்க்கலாம்.
கூட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்..
அரங்கக் கூட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.உயர்நீதி மன்ற சுவர்களிலும், அரும்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் காலை 10.00 மணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே.
வினவு அவர்களுக்கு
வெளிநாடுகளில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நிகழ்ச்சியை அறிந்துக் கொள்ளும் விதமாக கூட்டம் முடிந்த பிறகு கணொளியாக வினவில் இணைத்தால் நன்றாக இருக்கும்.
முயற்சி செய்யுங்கள்
வினவு!
இன்று நடந்த அரங்க கூட்டம், அதன் முழு விபரம் தெரிவிக்கவும்.
வழிமொழிகிறேன்
சமச்சீர் கல்வி பற்றி ஞாநியின் கட்டுரைகளுக்கு உங்கள் பதில் என்ன.
[…] […]
கல்வி என்பது காலத்தீக்கெர்ப மாட்ர பட வேன்டடும்