Sunday, February 9, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

-

நாளை செவ்வாய்கிக்கிழமை பாசிச ஜெயாவின் தமிழக அரசாங்கம் தொடுத்துள்ள சமச்சீர்கல்வியை முடக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக நாடறிந்த பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழக அரசு வழக்காடுகிறது. இத்துடன் தனியார் பள்ளி முதலாளிகளும் பல்வேறு பிரபல வழக்கறிஞர்களை சேர்த்துக் கொண்டு வாதாடுகின்றனர்.

கடந்த இருமாதங்களாக நீதிமன்றத்திலும், மக்கள் அரங்கிலும் எமது அமைப்புகள் சமச்சீர்கல்வியை அமல்படுத்துமாறு போராடி வருகின்றன. அதன் அங்கமாக இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்குமாறு வேலை நிறுத்தமும், போராட்டமும் செய்து வருகின்றனர்.

இரு மாதங்களாக பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி வருவதையும், அதற்கு காரணமாக பாசிச ஜெயாவை அம்பலப்படுத்தியும், உடனே புத்தகங்களை வழங்குமாறும் மாணவர்களிடையே பு.மா.இ.மு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை 25.07.2011 காலை  10.30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் திரண்ட மாணவர்களின் முன் இந்தப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பு.மா.இ.மு தோழர்கள் விளக்கிப் பேசினர். இதையறிந்த பல்வேறு பேராசிரியர்கள் மனமுவந்து மாணவர்களை போராட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். வாழ்த்தும் தெரிவித்தனர்.

பின்னர் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கல்லூரியின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அணிதிரண்டு மறியல் செய்தனர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் சாலை முடக்கப்பட்டது. சில மாணவர்கள் நிறுத்தப்பட்ட வாகனங்கள், பேருந்துகளில் ஏறி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். அதன் பின்னர் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசு வந்து செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு மறியலை முடித்துக் கொண்டு கல்லூரி வளாகத்தின் முன்னர் வெகுநேரம் முழக்கமிட்டவாறு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இங்கே அதன் வீடியோவை இணைத்திருக்கிறோம். பள்ளி மாணவருக்கான நியாயத்தை உணர்ந்து கல்லூரி மாணவர்கள் இப்படி போராடத் துணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்தத்தீ தமிழகமெங்கும் பரவட்டும். பாசிச ஜெயாவின் ஆணவம் ஒழியட்டும். தனியார் பள்ளி முதலாளிகளின் கொட்டம் அழியட்டும்.

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்
[paypal-donation purpose=”Donation for Samacheer Kalvi Campaign”]

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ச‌பாஸ் தோழ‌ர்க‌ளே மாண‌வ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னைக்கு மாண‌வார்க‌ளே கேள்வி கேட்க‌ வைத்து விட்டீர்க‌ள். ஒரு வேளை அர‌சுக்கு சாத‌க‌மான‌ தீர்ப்பு வ‌ந்தாலும் ந‌ம‌க்காக‌ அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌தை மாண‌வ‌ர்க‌ளுக்கே விநியோகிக்க‌ செய்யுங்க‌ள். அப்ப‌ தான் அரசோட‌ குட்டு வெட்ட‌ வெளிச்ச‌த்துக்கு வ‌ர‌ட்டும். நாளைய‌ த‌லைமுறையும் தெரிந்து கொள்ள‌ட்டுமே ந‌ம் ஜ‌ன‌நாய‌க‌த்தின் ல‌ட்ச‌ண‌த்தை.

  2. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே, பொறுக்கித்தனமானவர்கள் என்று போலீசாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்த பொதுக்கருத்தை பொய்ப்பித்து; இக்கருத்தை செரித்துக்கொண்டு தங்களை இதுவரை யாரெல்லாம் இழித்துப்பேசி வந்தனரோ , அவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் சார்பாக, – பொதுப்பிரச்சினைக்காக- தெருவில் இறங்கிப் போராடியிருக்கின்றனர், மரியாதைக்குரிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.
    தக்க தருணத்திலும், உணர்வுப்பூர்வமான பங்கேற்புடனும், கட்டுக்கோப்பான முறையிலும் நடத்தப்பட்டிருக்கும் இப்போராட்டம் வரவேற்கத்தக்கது, வாழ்த்துதலுக்குரியது. வெறுமனே, வார்த்தைகளால் வாழ்த்துக்கள் பரிமாறுவதை விட, இன்னொரு நாள், அதே இடம், அதே மாணவர்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை மறித்து நின்றால் அவர்களை நெருங்கிச் செல்லுங்கள், அவர்கள் உரக்கச் சொல்வதை திருப்பிச் சொல்லுங்கள், அவர்களது கரங்களைப் பற்றி நில்லுங்கள்!
    இதை விட வேறு எப்படி, அவர்களுக்கு நன்றி சொல்லிவிடமுடியும்?

  3. அன்புள்ள சகோதர்/சகோதரி,

    மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

    பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

    தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    நன்றி.

    அன்புடன்,
    அதிரைக்காரன்
    adiraiwala@gmail.com

  4. போராட்டமே வாழ்க்கை என்று புரிந்து, சாலைக்கு வந்து போராடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  5. பள்ளீ மாணவர்கள் போராட்டம் நடத்தனும் இவனுக கல்லூரி சுட் பன்ன எனென்ன பன்ன முடியுமொ எல்லம் பன்னுவானுக

  6. நேற்று கலைஞர் செய்திகளில் பார்த்தேன்.மதுரையிலும் மாணவர்கள்,ம.உ.பா.மைய தோழர்கள் போராடி உள்ளனர்.உச்ச நீதிமன்ற இறுதி விசாரணையைக் காட்டிலும் இப்போராட்டங்களைக் கண்டு செயலலிதா அச்சமடைந்தருக்கக் கூடும்.

  7. தோழர்கள் அருமையாகவும்,புரட்சிகரமாகவும் விசில் அடித்து,விசிலிலேயே புரட்சிகரமாக முழக்கம் எழுப்பினர்.

    • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மாணவர்களுக்கு விசிலும் ஆயுதம்!

  8. நியாயமாய்ப் பார்த்தால், தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போடனும். அரசாங்கம் சமச்சீர் கல்வியை ஆதரித்து கோர்ட்டில் வாதாடனும். யாருக்காக அரசு நடத்துராங்க… ஓட்டுப் போட்டவன் எல்லாம் இளிச்சவாயனா? பெரும்பான்மை ஏழை மக்களுக்கு துரோகம் பன்றாங்க… என்னத்தை செத்தப்புறம் கொண்டு போகப் போறாங்க… எவ்ளொ பெத்த வயிரு எரியுது… எந்த கோவில்ல போயி இந்த கல்வி கொடுக்காத பாவத்தை கரைக்க முடியும்? தீண்டாமை(ஏழை & பணக்காரன்) ஒழியவில்லை.. அதுவும் கல்வியில் தீண்டாமை பெரிய பெரிய பாவம்… ஏழைங்க காசயும், இரத்ததையும் குடிக்கையில தீண்டாமை நு தெரியாது …

    சரி சமமான கல்வியா?

    நீ படிக்கறதையா என் பிள்ளைகளும் படிக்கனும்? அப்டினும் போதும், என் பிள்ளை படிக்கரத நீ படிக்கப் போரியா என்கிற போதும் வெளியே வருதில்லை இந்த தீண்டாமையும் துவேஷமும் பாகுபாடும்? சமச்சீர் கல்வி தொடர்பான எல்லா செய்திகளையும் போடுங்கள். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க