சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே……….
படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
______________________________________________________
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நூற்றுக்கணக்கிலான மாணவிகள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தினர். காலையில் இருந்தே பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் பள்ளி முன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். பின்னர் மதிய உணவு இடைவெளியின் போது மாணவிகள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தினர். விருத்தாசலத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இப்படி போராட்டம் தொடர்வது காவல் துறைக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. எல்லா பள்ளி தலைமை ஆசிரியர்களையும் கல்வித்துறை மிரட்டி வருகிறது. எனினும் இதையெல்லாம் மீறி தோழர்களின் முயற்சியால் போராட்டம் தொடர்கிறது.
______________________________________________________
விருத்தாசலம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி
25.07.2011 திங்கட்கிழமை, விருத்தாசலத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியான டேனிஷ்மிஷின் பள்ளியின் மாணவ மாணவிகள் சமச்சீர் புத்தகங்களை வழங்கக் கோரி உற்சாகத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்களது கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மற்றும் கதிர்வேல் ஆகியோர் காலை பள்ளி துவங்கும் முன் பிரசுரத்தை மாணவர்கள் முன்னிலையில் விநியோகித்தனர். 50க்கும் மெற்பட்ட மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வாயிலில் நின்றனர்.
தலைமை ஆசிரியர் மாணவர்களை மிரட்டி உளளே அழைத்து சென்று விட்டார். உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று நமது நிர்வாகிகள் மாணவர்களை தடுக்கக்கூடாது என்றும் புத்தகம் கேட்டு மாணவர்களை போராட வைப்பது பெற்றொர்களாகிய எங்களது கடமை என்றனர். ஆசிரியர்கள் மாணர்களின் நலன்களை காப்பதில் இருந்து தவறி விட்டனர் என்று வாதம் செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அமுல் படுத்தாமல் அரசே தவறு செய்யும் போது பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுவதில் தவறுஇல்லை, என்று பேசி மதிய உணவு இடைவெளியில் வருவோம், நீங்கள் தடுக்கக்கூடாது என்றனர்.
அதேபோல மதியம் உணவு இடைவேளையில் மாணவர்ளை திரட்டி சாலை மறியல் நடத்தப்பட்டது. ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் புகைப்படத்தை பிரசுரமாக அடித்து விநியோகிக்கப்பட்டது. அது மாணவர்களை மேலும் உணர்வூட்டியது. டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆய்வாளர், என அரசு இயந்திரம் அனைத்தும் சுற்றி வளைத்தது. ஆனால் உள்ளே வந்து மாணவர்களிடமும், பெற்றோர் சங்கத்தினரிடமும் கெஞ்சியது. மாணவர்கள் கலைந்து போகுமாறு நேரடியாக மிரட்டிப் பார்த்தனர். புத்தகம் கொடு, போகிறோம் என முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்தனர் மாணவர்கள். அதிகாரிகளின் கெஞ்சல் மேலும் கீழிறங்கியது. மாணவர்களின் முழக்கம் அந்த பகுதியையே அலறடித்தது. இதனால் பொதுமக்கள் பெருந்திரளாக கூட தொடங்கினர். ஆசிரியர்கள் சோகமாக காட்சியளித்தனர். பிறகு அரசு அதிகாரிகள் மாணவர்களிடம் புத்தகம் வழங்க விரைந்து ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
அது கூட தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கத்தான் மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்பினர். பெற்றோர் சங்கத்தின் சார்பில் மாணவர்களுடன் முழக்கமிட்டு கொண்டு சென்று அந்தந்த வகுப்பறையில் அமரவைக்கப்பட்டது. தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவர்கள் போராடியதற்காக பாகுபாடு காட்டவோ தண்டிக்கவோ கூடாது என தோழர்கள் வலியுறுத்தினார்கள். மாணவர்களோ அரசு புத்தகம் வழங்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் செய்வோம் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.
______________________________________________________
தருமபுரியில் மாணவர்கள் ஆர்பாட்டம்
சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்க கோரி தரும்புரி மாவட்டத்தில் இயங்கும் மனித உரிமைப் பாதுகாப்ப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 26.07.2011 காலை பெற்றோர், மாணவர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்த்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மைத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஜானகிராமன் தலைமைதாங்கினார். விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டம் மக்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
______________________________________________________
விழுப்புரம் அரசு கல்லூரி, அரசு நடுநிலைப்பள்ளி
26.07.11 செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் பாட புத்தகங்களை உடனே வழங்கக்கோரி விழுப்புரம்- சோழகனூர் கிராம நடுநிலைப்பள்ளியை மாணவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் சமச்சீர் பாட புத்தகங்களை உடனே வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு போராட்டங்களையும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விழுப்புரம் கிளை தோழர்கள் நடத்தினார்கள்.
___________________________________________________________
விருத்தாசலம் மங்களம்பேட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
இந்தப்பள்ளியிலும் 26.7.2011 செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு இடைவெளியில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து செய்வோம் என்று மாணவர்கள் உறுதி ஏற்றனர்.
____________________________________________________________________
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அலுவலகம் – பு.மா.இ.மு முற்றுகை!
திருச்சியில் இருக்கும் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமையில் மாணவர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டனர். முற்றுகையின் போது அலுவலகம் முற்றிலும் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அந்த வட்டாரத்தையே கலங்கச் செய்தன.
____________________________________________________________________________________
சென்னை பள்ளிக்கல்வித்துறை DPI அலுவலகத்தை பு.மா.இ.மு முற்றுகை
சமச்சீர்கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்விக்கு தடையேற்படுத்த முயலும் பாசிச ஜெயா அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள DPI வளாகத்தை பு.மா.இ.மு மாணவர்கள் 26.7.2011 செவ்வாய்க்கிழமை முற்றுகை இட்டனர். இதில் குரோம்பேட்டை மற்றும் மதுரவாயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அரை டவுசர் போட்ட மாணவர் சிங்கங்களும் உண்டு. நெடுநேரம் தமது முழக்கத்தால் அந்த இடத்தையே போராட்டக்களமாக்கிய மாணவர்கள் காவல்துறை கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தது.
—————
கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்
கோவையில் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் HRPC சார்பாக சமச்சீர் கல்வி தொடர்பாகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர் பாடபுத்தகங்களை வழங்க வேண்டியும் இணையத்தளத்தில் சமச்சீர் கல்வி பாடம் மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் 25/07/11 திங்கள்கிழமை காலை 11மணி செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்திற்கு வர வேண்டும் என்ற முழக்கம் இடப்பட்டது. ஆர்பாட்டத்தில் திரளான பேர் கலந்து கொண்டனர். HRPC தொடர்ந்து மாணவர்களையும் பெற்றோர்களையும் போராட்டத்திற்கு அணிதிரட்டி வருகின்றது.
______________________________________________________
மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்பாட்டம்
________________________________________________________
ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும். இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.
வழக்கு நிதி தாரீர்
இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.
________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!
- சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !
- சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!
- ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!
- சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!
- சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!
- ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? – அரங்கக் கூட்டம் !
- சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
- பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!
- சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!
- சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
- திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
http://www.dinamalar.com/more_picture_html.asp?cat=76
இப்படியா செய்வது…!பள்ளிக்கு பாடம் படிக்க வந்த மாணவ, மாணவிகளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் வேனில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர். விபரம் தெரியாத மாணவ, மாணவிகள் ஓ வென கதறி அழுதனர்.
இதே கதை கொஞ்சம் டைமிங்காவும் ரைமிங்காவும் டிரை பண்ணிருக்குது தினத்தந்தி..அம்மான்னா சும்மாவா…திரைக்கதை எழுதறதுல பல கோணங்களில் போலீஸ் சாதித்திருக்குது..1990களின் ஆரம்பத்தில் இருந்த இருண்டகாலத்தின் முதல் அத்தியாயத்திலே..மக்கள் போராட்டங்களுக்காக பேருந்துகளில் பிரச்சாரம் செய்து உண்டியலில் நன்கொடை வாங்கிய தோழர்களை ‘பொது மக்களுக்கு இடையூறாகப் பிச்சை எடுத்தனர்’ என்றுதான் அம்மாவின் காக்கிகள் கேசு போட்டார்கள்
படிக்க வந்த மாணவ,மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்காததினால் அவர்கள் அழுதிருக்கிறார்கள்.போராட்டம் புரியவில்லையென்றாலும் ஜாலிதான்.
எப்படி எல்லாம் அரசியல் பண்ணலாமுன்னு ” உட்கார்ந்து யோசிப்பாண்களோ” ?
தள்ளாடி கீழே விழும் ரேஞ்சில் இருந்த கவர்னர் என் சேலையை பிடித்திழுத்து கெடுக்க வந்தார்னு ஜெயலலிதா சொன்னாங்களே சேம் டெக்னிக்…
//http://www.dinamalar.com/more_picture_html.asp?cat=76
இப்படியா செய்வது…!பள்ளிக்கு பாடம் படிக்க வந்த மாணவ, மாணவிகளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் வேனில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர். விபரம் தெரியாத மாணவ, மாணவிகள் ஓ வென கதறி அழுதனர்.
//
இதை ஒரு தற்குறி பதிவாகவும் போட்டுள்ளது.
மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
http://www.dailythanthi.com/article.asp?NewsID=662822&disdate=7/27/2011
//ராமகிருட்டினன்// இன்னொரு தற்குறி
[…] உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் […]
சரிங்கப்பா,யோக்கிய சீகாமனிகளா? பத்திரிகையில போட்டத சொல்லீட்டிங்க, அடங்கதா சண்டி மாட்ட பத்தியும் ஒன்னும் சொல்லமாட்டுறிங்க.என்னங்கப்பு ஒங்க நேர்மை.
[…] உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் […]
இலங்கை அரசை திட்டும் தமிழ்நாட்டு ஆட்களுக்கு சொல்ல விரும்புவது: இலங்கையில் எல்லாருக்கும் கட்டாய கல்வி முறை மற்றும் பாட புத்தகங்கள் இலவசமாய் கொடுக்கும் திட்டம் 1956 களிலேயே கொண்டுவரப்பட்டது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் நாட்டில் ஆளும் திராவிட கும்பல்கள் பள்ளிப் படிப்பை கண்டு பயப்படுகின்றன. படித்துவிட்டால் நம்மையே எதிர்ப்பார்கள் என்கிற கேவல புத்தி தான் இதற்கு காரணம். பள்ளிகளை தனியார்களிடமிருந்து பிரித்து அரசு மயமாக்க போராடுங்கள். ஒரு நடிகையின் சொந்த விருப்பு வெறுப்புக்காக ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தையே பாழாக்குவதா? படிக்காவிட்டால் என்ன? கோயில்களில் போய் கும்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று பத்திரிகைகள் சொல்லி மூட நம்பிக்கையை வளர்க்கின்றன. நடிக நடிகையர் பின்னால் நாக்கை தொங்கவிட்டபடி நாய்கள் போல அலையும் தமிழகமே, சிந்திக்கும் அறிவு இல்லை. மானம் வெட்கம் ரோசம் கூடவா இல்லாமல் போய்விட்டது?
இதேபோல காரைக்குடியிலும் லிடர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என ஒரு பள்ளயிலும் அடாவடித்தனம் செய்கிறான் அந்த பள்ளியின் தாளாளர். தட்டிக் கேட்க ஆளில்லை என்ற திமிர் போலீஸ் க்கு போனால் காசைக் கொடுத்து போலீஸை விலைக்கு வாங்கிவிட்டான்.
மாணவ மாணவிகளும் சரி, பெற்றோர்களும் சரி தொண்ணூற்று ஒண்பது சதம் கருணானிதியின் தரமில்லாத சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்களே! இந்த உண்மை பின்னாளில்தான் புரிபடும்.
[…] சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெ… […]