முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

-

தி.மு.க பிரமுகர் – பினாமியான சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரி விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 19, ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது வகுப்பாசிரியராக பணியாற்றும் குணசேகரன் தொட்டதுக்கெல்லாம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது வழக்கம். அப்படித்தான் 27.7.2011 அன்று கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று பிரபாகரனை பளார் என கன்னத்திலும், தலையிலும், கழுத்திலும், வயிற்றிலும் ஆத்திரம் தீர அடித்திருக்கிறார்.

அடிபட்ட வலி தாங்காமல் கண் இருட்டி விழுந்த மாணவனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியில் சத்தம் போடத் துவங்கினர். பதறிய நிர்வாகம் உடனே மாணவர் பிரபாகரனை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக சமதானப்படுத்த முயன்றது. ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

நிர்வாகமோ மாணவன் பிரபாகரன் வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் பின்னர் அவன் சாகவில்லை என்று சொல்லியும் கதை கட்டி போராட்டத்தை முடிக்க நினைத்தது. இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பு.மா.இ.மு தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

சுமார் 2 மணிநேரம் நடந்த சாலை மறியலால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. போலீசும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது. பின்னர் ஏராளமான போலீசாரைக் கொண்டு சாலையில் இருந்த மாணவர்களை தடியடி நடத்தி பலரை காயப்படுத்தி விரட்டினார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேரை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த கைது வழக்கிற்கு அஞ்சாமல் பு.மா.இ.முவும் மாணவர்களும் நீதி கிடைக்கும் வரை போராடுவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னோட்டமாக ஆசிரியர் குணசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

_________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. ராஜ் செய்தியில் பார்த்தேன்.மாணவன் உயிரிழந்தால்கூட போராடக் கூடாதா?தோழர்களை கைது செய்து சிறையில் அடைப்பதா?

 2. பள்ளி மாணவர்களையே கை நீட்டி அடிக்ககூடாது என சொல்லப்படும் காலத்தில், எப்படி

  ஒரு தொழில்நுட்பக்கல்லூரி மாணவரை ஒரு ஆசிரியர் இத்தனை நாளாக

  அடித்துக்கொண்டுயிருப்பார்.எப்படி அந்த கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல்

  இருந்தது.மாணவர்கள் போராடவில்லையெனில், இந்த கொலை வெளியே தெரியாது.

  போராட்டத்தை வழிநடத்திய பு.மா.இ.மு தோழர்களுக்கும் ,போராடிய மாணவர்களுக்கும்

  வாழ்த்துக்கள்.

 3. ஒவ்வொரு மாணவரும் தன் பகுதியில் உள்ள போராடும் அமைபுகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

 4. குணசேகரன் செய்தது சாதாரண குற்றமல்ல. ஒரு அப்பாவி மாணவரின் உயிரைப் பறித்திருக்கும் குணசேகரன் ஒரு கொலையாளி. கொலைக் குற்றத்திற்கான தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.

 5. ஒழுக்கத்தைப் போதிக்கிறோம் என்கிற பெயரில் ஆசிரியர்கள் நடத்தும் வன்முறையை கட்டாயமாக கண்டிக்க வேண்டும்.

  பெற்றோர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அதன் மூலம் ஜீவனம் நடத்தும் ஆசிரியர்கள், அவர்களின் குழந்தைகளை ஆடு மாடு போல நடத்த எப்படித்தான் முடிகிறதோ?

  ஆசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கையை கண்டிக்க துப்பில்லாமல் தேர்ச்சி விகிதத்தில் மட்டுமே குறியாக இருக்கும் நிர்வாகமும் இதற்கு முக்கிய பொறுப்பு. அவர்களையும் சேர்த்துதான் இதில் தண்டிக்க வேண்டும்.

  மாணவர்களின் மதிப்பெண்களை பணமாக மட்டுமே பார்க்கும் இத்தகைய நிர்வாகத்தினை, கல்விக் கொள்ளையர்களை ஒழித்துக் கட்டாதவரை இதுபோன்ற வன்முறைகள் ஓயப்போவதில்லை.

  அநீதியை எதிர்கொண்டு போராடும் தோழர்களுக்கு வீர வணக்கங்கள்.

 6. இந்த பதிவில் தேச பற்றை காட்டும் வாய்ப்பு அல்லது இஸ்லாமிய வெறுப்பை கக்கும் வாய்ப்பு இல்லையா என்ன?

  மக்சிமம்களே!.. சீனுக்களே!!.. பையாக்களே!! இங்கும் வந்து உங்கள் கழுதை விட்டைகளை தூவி விட்டு செல்லுங்கள்

  • பிரபாகரன் என்ர பெயர் ராசியில்லை யாருக்கும்???நம்ம புலி பிரபாகரன் கூட அவரு
   பேர பொழசிருப்பரோ என்னவோ?

 7. elumalai polytechnic kalloori in intha arajagam ,verengum thodara koodathenral manavargal anaivarum orraniyil thirandu veedhiyil erangi porada mun varavendum, poraadia thozhargaluku veeravanakkam,police arajagam ozhiga.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க