Friday, October 7, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க 7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

-

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -
இமானுவேல் சேகரன்

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

_____________________________________________________________

குருசாமி மயில்வாகனன்

________________________________________________________

 1. துப்பாக்கி எடுத்து சுட்ட ரெண்டு போலீஸ் காரர்கள் தலித் என்று சொல்லப்படுகிறதே… 69 சதம் தலித் தானே ரைபிள் தூக்கும் காவலர்களாக இருக்கிறார்கள்… போலீசில் தலித்தே இல்லை அவர்கள் அனைவரும் மேல் சாதியினர் என்று கூறப் போகிறீர்களா?

  மேலும் பள்ளர்களை எவ்வாறு தலித் என்று கூறலாம் என்று பள்ளர்களே வினவுகிறார்களே… ?

  • முத்துராமலிங்க தேவரின் விசுவாச அடியாட்கள் சிலரும் கூட பள்ளர்கள் தான். இவர்களுக்கு போட்ட எலும்புத் துண்டை தான் “தன் சொத்து பத்து எல்லாத்தையும் ஏழைகளுக்கு எழுதிவைத்தார் தேவர்” என்று வரலாறு கூறுகிறது. தேவரின் அடியாட்களாகவே பள்ளர்கள் இருந்த போது, இந்த போலிஸ் படையில் அவர்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே?

   • adithiravidar nalathurai minister maggalakuga onnumey panna mattengraru antha velaya vittuttu vera vela parkalam

    en sagothargal mayinthu vitargal ivargalai kappatherkagavey than govt adithiravidar nalathurai entra oru amaipey engaluku vendam

  • பொன் பரம குரு காவல் துறை தலைவராக இருந்த காலம் முதல் தேவர் இனத்தவரே அதிகமாக தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் .இன்றும் அவர்களே தனி பெருன்பான்மை காவல்துறையில்

   .உயர விரும்பும் மக்களை கேலி செய்வதே உம்மை போன்றவர்களின் வேலையா ! சாதி வெறி யும் மத வெறியும் ஊழலும் இந்த நாட்டின் …………………………………சாபக்கேடுகள்.

   • nethaji

    do u know that ur name notifies ur caste

    do u like to say your caste

    vinavu may avoid some caste name such as nethaji, pon, and like this…and ofcourse my name too but its real name wat to do

    • நீங்கள் சாதி வெறியரா? மத வெறியரா? நான் யார் என்று தெரிந்து கொள்வதை விட நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை பாரும். உம்மை போன்றவர்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லைதான். இருப்பினும் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு ஆங்கில பெயரில் உலாவும் இந்திய மதத்தை விட்டு வெறு மதத்தில் இருந்து கொண்டு கேள்வி கேட்டு இந்த நாட்டை குட்டி சுவராக்கி விட்டீர்கள். வினவு விருப்பப்பட்டால் முகவரி தெரிவிக்கவும் நானே வருகிறேன். உமக்காக அல்ல………..

     • இந்த கட்டுரையில் எழுத பட்டிருப்பது சரி எனதான் நான் கூறுவேன் , கருணாநிதியை ஒப்பிடுகையில் ஜெயலலிதா தலித் விரோதிதான். இன்னும் சொல்ல போனால் அண்ணா திமுக தேவர் கட்சியே.
      ஆனால் இந்த பழங்கதைகள் பேசுவதில் பலன் இல்லை, கட்டுரையாளர் கூறியது போல், போலி தலித் தலைவர்களை புறம்தள்ளி தலித் இளைஞர்கள்
      அரசியலில் ஈடுபடுவதே இந்த பிரச்சனைக்கான தீர்வு.

    • //வரவேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவோம்ல…// பெரும்பான்மை இந்துக்கள் இப்படி அடிச்சிக்கிறதுக்குக் காரணம் முஸ்லீம்னு சொல்லீறாதீங்க மிஸ்டர் மிருகம்.

  • முத்துராமலிங்கத்தின் அம்மாவுடன் பிறந்தவர்களில் ஒரு பெண்ணுக்கும் சேதுபதிக்கும் இருந்த நட்பால்(!!) பெற்ற
   சொத்தை பின்னாளில் முதுராமளிங்கத்திர்க்கு பெற்றுக்கொடுத்தவர்கள் குடும்பர்கள்.முத்துராமலிங்கம் தன சொத்தை பதினேழு பாகமாக பிரித்து 14 ஐ கள்ளர்&மறவர்களுக்கும் 2 ஐ குடும்பர்களுக்கும்(சொத்தை பெட்டரு கொடுத்ததில் உதவியவர்கள்) 1 1/2 ஐ அவர்க்கும் வைத்துக்கொண்டார். varalaaru theriyaamal kallaththanam purivathe kallargalin tholil.

 2. தலித்களின் இரத்தத்தை குடிக்கும் ஜெயா பாசிச பார்ப்பன ஆதிக்கசாதி வெறியர்களின் அடியாட்களான போலிஸின் வன்முறை பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்

 3. மனிதன்//

  போலிஸ் என்பதே ஆளும்வர்க்கத்தின் அடிமை தான் அதில் என்ன தலித். கட்டளையிட்டால் செய்வது தான் போலீஸ்,இராணுவத்தில் உள்ள எல்லா சாதியினரின் வேலையே.நாய்களின் என்ன சாதி பிரிவு. காலம் காலமாக உயர்ந்தசாதிக்காரர்கள் தலித்துக்களை வைத்து தலீத்துக்களை தாக்குவதும்,சண்டைமூட்டிவிடுவதும்,பிரித்துவைப்பதும் தான் அவர்களை தந்திரமே.அதை தான் நீயும் சொல்கிறாய்.

   • அதிகார வர்க்கத்தின் ஏவல் வேலை செய்யும் எவனும் _______________தான் . அது மேற்கண்ட “manithan” ஆக இருந்தாலும் சரி..

 4. முன்குறிப்பு : இது அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும்.

  இமானுவேல் சேகரனின் நினைவுநாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் லாரிகளிலும், வேன்களிலும், கார்களிலும் பறக்கின்றனர். அவர்களது ஒற்றுமைக்கு என் பாராட்டுக்கள். ஆனால், கனத்த இதயத்துடன் அமைதியாகத்தானே போகவேண்டும். ஏன் விசிலடித்துக்கொண்டு.. ஊய் ஊய்..னு கத்திக்கிட்டு, அசிங்கமாகப் பேசிக்கொண்டு போகணும்?

  தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தத் தானே செல்கிறார்கள்? அவர் இறந்தநாளைத் தானே குருபூஜையாகக் கும்பிடுகிறார்கள். அவரது நினைவிடத்தை கோயிலாக மதித்துதானே கும்பிடச் செல்கிறார்கள்? அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா? அல்லது சந்தோஷக் கூச்சல் போட்டுக்கொண்டு “ஒருவழியாய் ஒழிஞ்சாண்டா..” என்பது போல கூத்தாடிக்கொண்டு போகவேண்டுமா?

  ஏன் இப்படி செய்கிறார்கள்.

  அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை விட்டுவிட்டு தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகளின் கைப்பாவைகளாக ஆகி இப்படி உயிர் விடுவதேன்??????

  இந்தக் கேள்விகளுக்கு அவரவர் மனசாட்சி பதில் சொல்லட்டும். மனிதம் வாழட்டும்!

  • அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும் என்று முன்குறித்து விட்டு, அதற்கு கீழே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டுமே சாடியிருக்கிறீர்களே. இது தான் நவீன சமதர்மமோ!!

   • நேற்று கண்டவற்றைத்தான் அதில் குறிப்பிட்டிருக்கிறேன். நேற்று நடந்தத்தைத்தான் சாடியிருக்கிறேன். இதுபோல நடந்துகொள்ளும் அனைத்துக் குழுக்களுக்கும் இது பொருந்தும் – தேவர் குருபூஜை உட்பட.

    • thiru Rishi
     திரு ரிஷி

     எனது பாட்டன் முப்பட்டான் காலத்தில் இருந்து சாவிற்கு கூட மேளத்துடன் ஆட்டதுடன் தான் எடுத்து செல்கிறார்கள், நீங்கள் தவறான குறிப்பிட்ட கண்ணோடத்தை வைத்துகொண்டு பேசுவது தவறு

     • உண்மைதான் ராஜா. அதை ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்த்தால் நலம். மனித உடலை விட்டு உயிர் நீங்கியதும், அதன்பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அந்த உயிர் தன்னுடலின் அருகிலோ உறவினர்களை சுற்றிசுற்றியோ வந்துகொண்டிருக்கும் என்பர். நாம் விடாமல் அழுதுகொண்டு இருந்தால் பாசத்திற்கு கட்டுப்பட்ட அவ்வுயிர் அவ்வளவு எளிதில் நீங்கிப் போகாது என்பர். அது அந்த உயிருக்கு மேலும் மேலும் துன்பத்தையே தரும்; எனவே மேளதாள ஆட்டத்துடன் அடக்கம் செய்யும்போது திருப்தியடைந்து உயிர் அவ்விடத்தை விட்டு அகன்றுவிடும் என்று கூறுவார்கள். இது உண்மையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. செத்தால்தான் தெரியும்!! இது அந்தத் தருணத்திற்கு சரி. ஒவ்வொரு வருடமும் சரியா???

  • இமானுவேல் என்ற வார்த்தையை தவிரித்திருக்கலாம். அல்லது பொதுவாக “குருபூஜைகள்” என்று குறிப்பிட்டிருக்கலாம்.

   • நான் அவரது பெயரை தவிர்த்துவிட்டே சொல்லியிருக்கவேண்டும். சுட்டியதற்கு நன்றி.

  • //ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா?// இம்மானுவேல் இறப்பை ‘செத்த நாளென்று’ எழுதியபோதே வெளிப்பட்டுவிட்டது, உன்னுடைய வக்கிரம் பிடித்த சாதிவெறி..அப்புறம் என்னத்துக்கு இந்த அறிவுரை?

   • //ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா?//
    “அவன்” என்றுகூட சொல்லியிருக்கிறேன். பொதுவாக மனிதர்களைக் குறித்ததான வாக்கியப்பிரயோகம் இது. என் தந்தைக்கும்கூட இது பொருந்தும். ஆனபோதிலும், அந்த வார்த்தை உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். எனக்கு எந்த வக்கிரவெறியும் இல்லை. சொல்வதை, சொல்லப்படும் “context”ல் பார்க்கப் பழகலாமே!

  • ரிஷி,
   நீங்கள் சுட்டிக்காட்டும் அனைத்து நடவடிக்கையும், தேவர் குரு பூஜைக்கு தேவர் சாதியினர் செய்வதுதான். கூடுதலாக, வழியுலுள்ள சேரிகளின் மீது தாக்குதலும் நடக்கும்.

   தேவர் சாதியினர் செய்வது தவறாக தெரியாதபோது – அவர்களை வழி நடத்துபவர்கள் //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// ஆக தெரியாத போது, இமானுவல் சேகரன், தலித் மக்கள் என்றதும், //அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை // எதிர்பார்க்கும் உங்கள் உளவியளை கேள்விக்கு உள்ளாக்குவது நல்லது. – நட்புடன் நோக்கன்.

   • நோக்கன்,
    என்னுடைய 5.1.1 படித்துக்கொள்ளுங்கள். தேவர் சாதியினர் செய்வது சரி என வாதிடவில்லை. //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// என்று சொல்லியிருக்கும் கருத்தில் முன்குறிப்பிட்டிருக்கிறேன், இது அனைத்துக் குழுக்களுக்கும் பொருந்தும் என. தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை வழிநடத்துவோருக்கும் இக்கருத்து பொருந்தும்.

    • //என்னுடைய 5.1.1 படித்துக்கொள்ளுங்கள். தேவர் சாதியினர் செய்வது சரி என வாதிடவில்லை. //தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகள்// என்று சொல்லியிருக்கும் கருத்தில் முன்குறிப்பிட்டிருக்கிறேன், இது அனைத்துக் குழுக்களுக்கும் பொருந்தும் என. தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை வழிநடத்துவோருக்கும் இக்கருத்து பொருந்தும்.//

     உங்களோட 5.1.1யை படித்தேன். நீங்கள் கட்டுரையையோ அல்லது பரமக்குடியில் என்ன நடந்துள்ளது என்பதை செய்தித்தாள்களிலோ படித்தீர்களா?

     அங்கு சாதிவிழா கொண்டாடும் எல்லா சாதியினர் மீதும் ‘பொதுப்படையாக’ துப்பாக்கிச்சுடு நடக்க வில்லை. அப்படி நடந்திருதால் உங்க ‘அட்வைஸ்’ குறித்து யோசிக்கலாம். ஆனால் நடந்துள்ளதோ தேவர் சாதி வெறியுடன் கூட்டணியமைத்துள்ள பாப்பாத்தி ஜெயாவின் திட்டமிட்ட தலித் வெறுப்பு படுகொலை. இதில் உங்களது கடமை அட்வைஸ் செய்வதுடன் அதுவும் பொதுவா விழாக் கொண்டாட்டத்தில் டிசிப்ளீன் என்பதுடன். அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும், நின்று கொள்ளும் எனில் அதை சந்தேகப்படவும், கிண்டலடித்து சுட்டிக் காட்டவும் எங்களுக்கு சகல வாய்ப்பும் உளளதை அறியத் தருகிறேன்.

 5. நான் ஒரு சப்பாத்தி என்று அட்டைகள் மன்றத்தில் ஒரு முதல்வரே சொல்லும் போது காலம் காலமாய் அடிமை படுத்தப்பட்ட கூட்டம் என்ன நாங்கள் ஒரு உப்புமா என்றா சொல்லும்

  • உங்களது பெயரை ‘சண்டாளன்’ என்று உரக்க கூறும் உம் சிந்தனை, ‘பாப்பாத்தியை’ சப்பாத்தி என்று சொல்லவைப்பதன் அர்த்தம் என்ன? அடிமைத் தனம் வெளியில் இருந்து மட்டும் அல்ல, உம்முள்ளும் இருக்கிறது.

 6. ஒரு சப்பாத்தி சில நாட்களுக்கு முன்பு அட்டைகள் மன்றத்தில் நான் ரொம்ப புத்திசாலி. நான் ஒவ்வொரு வெடியையும் பார்த்து பார்த்துதான் வெடிப்பேன் என்று சொன்னது எவ்வளவு உண்மை

 7. தலித்துக்களில் உள்ள பிழைப்புவாதிகள் பணம் வந்தவுடன் கருப்பு பார்ப்பனராக அல்லது புதிய பார்ப்பனராக மாறி விடுகின்றனர். அதனால்தான் தமிழரசன், கிருழ்ணசாமி முதலானோர் ஜெஜெக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

  தலித்துக்கள் பிழைப்புவாத ஓட்டுக் கட்சிகளில் இருந்து வெளியேறி, புரட்சிகர அமைப்புகளில் சேர வேண்டு.
  ஆதவன்

  • பணம் வந்த உடன் அத்தனை தலித்தும் பிழைப்பு வாதியாக தான் மாறுகிறான்.. எங்கே ஒரு தலித்துக்கு உதவி செய்யக்கூடிய முன்னேறிய பணக்கார தலித் ஒருத்தனாவது காட்டு… தலித்கள் பெரும்பாலும் மற்ற சாதியினரின் உதவியை தான் பெற கூடியவர்களாக இருக்கிறார்கள்…

   தலித் எனும் அடையாளத்தை வைத்து ஒட்டு வாங்கி அல்லது காலேஜ் சீட்டு வங்கி முன்னேறிய தலித், தன் முன்னேற்றத்துக்கு பின் மதம் மாறி தன் தலித் அடையாளத்தை துடைத்தெரிய முனைகிறானே ஒழிய, இன்னொரு தலித்தை முன்னேற்ற தன் வருமானத்தில் ஒரு சதவீதம் செலவு செய்வோம் என்று இருந்த்தது கிடையாது…

   • சரியான கருத்து. அப்படி தலித் செய்து இருந்தால் இன்னெரம் எல்ல தலித்தும் முன்னுக்கு வந்திருப்பர்.

   • மேலே, காவல்துறையில் வேலைப்பார்க்கும் தலித்துக்கள் நாயா?என்றுக் கேள்விக்கேட்டீர்கள்.பணம் வந்த உடன் அத்தனை தலித்தும் பிழைப்பு வாதியாக தான் மாறுகிறான்.என்று தாங்களே கூறுகீறீர்கள்.அப்படிப் பார்த்தால் காவல்துறையில் வேலைப்பார்க்கும் தலித்துக்கள் மட்டும் பிழைப்பு வாதியாக(நாயா)மாறாமல் இருப்பார்கள் என்று தாங்கள் நம்புவது எப்படி நாயம்.உங்கள் கேள்வியும், உங்கள் பதிலுமே முரண்பாடாக இல்லையா?

   • அவன் உம்மை பார்த்துதான் ஓடுகிறான் எப்படியென்றால் அவன் பணம் கல்வி அடைந்து உயர்ந்த பின்பும் அவன் மீது சாதிய துவேசத்தை வேறு வழிகளில் காண்பிக்கிறீர்கள் தாக்கு பிடிக்க முடியாத மரியாதையில்லா அந்தநிலையை விட்டு அடுத்த கட்ட்த்திற்கு போக முயற்சிக்கிறார்கள் பலர். ஆனால் சிலர் மட்டும் உம்மை போன்றோரின் துவேசத்தையும் மீறி தாழ்த்தபட்ட்வர்களுக்காக உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே சாதி இந்துக்கள் அவர்களை இந்துக்களாக முழுமையாக ஏற்று கொள்ளும் வரை சலுகையும் இருக்கும் இது போன்ற் சாதிய துவேசமும் இருக்கும். மனிதனாக மாறுஙகள். தாழ்த்தபட்டவனுக்கு தான் இந்து மதத்தை பற்றி முழுமையாக புரியவில்லை. உண்மையாகவே அவர்கள் கடவுளின் முரட்டு குழந்தைகள்.

 8. ரிஷி
  \\அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை விட்டுவிட்டு தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகளின் கைப்பாவைகளாக ஆகி இப்படி உயிர் விடுவதேன்??????//

  யார் சார் ரவுடி? சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவரா?இல்லை மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்களா? இல்லை கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்களா?இல்லை அதற்கு எதிர்வினையாக தன் உயிரையும்,உடைமையும் தற்காத்துக்கொள்ள போராடியவர்களா?

  பொதுபடையாக பேசும் ஆண்மைத்தனமானவர்கள் சாதியை கடந்து திருமணம் செய்வதோ,சாதிக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பவர்களாகவோ இருந்தால் தான் பேசவேண்டும்.

  • சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவர் யார்?
   மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்கள் யார்?
   கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்கள் யார்?
   அது யாராக இருந்தாலும் அவர்கள் ரவுடிகளே!
   சக மனிதனின் உரிமைகளைப் பறித்து அவனை ஒடுக்குபவன் எவனாயிருந்தாலும் அவன் ரவுடியே!

   //பொதுபடையாக பேசும் ஆண்மைத்தனமானவர்கள் சாதியை கடந்து திருமணம் செய்வதோ,சாதிக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பவர்களாகவோ இருந்தால் தான் பேசவேண்டும்.//

   அடுத்தமுறை பேசும்போது, கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான தகுதிகள் என்னென்ன என்று மீரா அவர்களிடம் கேட்டறிந்தபின் தெரிவிக்கவேண்டுமா? 🙂

   “சாதியே ஒழியவேண்டும்; என்னுடன் போராட்டத்தில் இணைந்து கொள்” என்று மீரா அழைப்பு விடுத்தால் இணையத் தயார். “மேல்சாதிவர்க்கம் மட்டும் ஆட்டம் போடலாமா.. தலித்துகளும் ஆட்டம் போடணும்” என்று சாதிவெறியை ஊக்குவிக்கும் விதமாக மீரா பேசினால்.. ஐ யாம் ஸாரி.. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.

   • //சாதி வெறிப்பிடித்து முதுக்குளத்தூர் கலவரத்தை தூண்டிவிட்டவர் யார்?
    மேலவலவில் தலித்தின் தலையை வெட்டியவர்கள் யார்?
    கீழ்வெண்மனியின் தீயிட்டு கொளித்தியவர்கள் யார்?
    அது யாராக இருந்தாலும் அவர்கள் ரவுடிகளே!
    சக மனிதனின் உரிமைகளைப் பறித்து அவனை ஒடுக்குபவன் எவனாயிருந்தாலும் அவன் ரவுடியே!//

    அதெல்லாம் சரிதான் ஆனா இங்கெல்லாமே போலீசு தாழ்த்தப்பட்டவர்கள் மீதுதான் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் தாக்குதல் தொடுத்தது. பரமக்குடியில் செய்தது போலவே. போலீசு, அரசு, ஆளும் வர்க்கத்தின் இந்த தலித் வெறுப்பை அம்பலப்படுத்தித்தான் கட்டுரை உள்ளது. கட்டுரை உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். சிரமப்படாமல் ஒன்னுக்கு ரெண்டு முறை வாசித்துவிடுங்கள்.

  • மனிதனுக்கு மனிதன் சமத்துவம் இல்லாத இந்த நேர்மையற்ற நாட்டில் வாழ்வதே வெட்ககேடு !!! மீரா!!

 9. மேலும் பள்ளர்களை எவ்வாறு தலித் என்று கூறலாம் என்று பள்ளர்களே வினவுகிறார்களே,this is very worst concept,all the community people thinking we are separately liberated from all the problem.the sc / st leaders are dividing the people separetaly (pallar or mallar of devendira kula vallar and paraiyar and sakkaliyar or arandathiyar & st so manies caste ) .this is very usefull to govt and prahmins.

 10. //உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன//

  நடத்துங்க தலைவா !!!!

 11. ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் அதே நேரத்தில் இவ்வாறு எஸ்சியினருக்கு ஆதரவாகவும் மேலும் தூந்டுவதாகவும் வினவில் எழுதுவது கண்டிக்கத்தக்கது…

  // ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது//

  – தேவர் சாதியினர் செய்தால் அது “ஆடாத ஆட்டம்”.. ஆனால் இவர்கள் செய்வது மட்டும் “உணர்வுப்பூர்வமா”?
  உணர்வு பூர்வமாக செல்பவன் தான் லாரிகளிலும் வேண்களிலும் கார்களிலும் தெருவெங்கும் ஊளையிட்டு கொண்டு போவானா?? இவர்களது உணர்வுப்பூர்வ ஆட்டங்களால் எத்தனை அப்பாவிகளின்/ அந்த இடத்தில் வசிப்பவர்களின் அன்றாட வாழ்வு பாதிக்கிறது?

  //போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்//
  சாதுரியமான, கமுக்கமான சாதி வெறி தூண்டல்… இது நாள் வரை வினவு நடுநிலையாக இருக்குமென நினைத்திருந்தேன்.. அது தவறு என்று புரிகிறது…

  ///
  “இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள்
  ///

  இவங்க மட்டும் தான் ஆட்டம் போடுறாங்கணு மக்கள் நினைகளையே.. இவங்களும் ஆட்டம் போடுறாங்க-னு தான் நினைக்கிறாங்க.. இதுல தேவர் சாதியினரும் ஆட்டம் போடுகிறார்கள் என்று தான் பொருள்..

  போலீஸ் குவிப்பு, கலவரம், தடியடி, துப்பாக்கி சூடு, 144 தடை உத்தரவு.. இதெல்லாம் தேவையா.. எல்லாம் இரு சாததியினராலும் தானே..

  என் கோபம் எல்லா தேவர் மற்றும் எஸ்ஸி சாதியினர் மேல் அல்ல.. இப்படி கூட்டங்களுக்கும் கலவாரங்களுக்கும் காரணமானவர்கள் நாயினும் கீழ்குணம் கொண்டவர்களே அன்றி வேறென்ன சொல்வது…

  தியாகி இம்மாணுவெல் சேகரன் மற்றும் முத்துறாமலிங்க தேவர் பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.. அவர்கள் பெயருக்கு பெருமை சேர்ப்பதாக சொல்லி வருடா வருடம் இவர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் பெயருக்கு அசிங்கம் மட்டுமே மிஞ்சுகிறது.. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  இப்படி சொல்வதை வைத்து நான் தேவர் சாதி என்றும் அல்லது anti-SC என்றும் நினைக்க வேண்டாம்.. இந்த இரு தரப்பு வியாதிகளாலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-11 அன்றும் அக்டோபர்-30 அன்றும் இவ்வாறு கடுமையாக பாதிக்கப்படும் பரமக்குடியில் வாழும் சராசரி மக்களில் ஒருவன் !!

  • //- தேவர் சாதியினர் செய்தால் அது “ஆடாத ஆட்டம்”.. ஆனால் இவர்கள் செய்வது மட்டும் “உணர்வுப்பூர்வமா”?// இத பேசுவதற்கு உனக்கு ஒரேயொரு விசயத்தை செய்தால் மட்டுமே யோக்யதை உண்டு. அது ஆடாத ஆட்டமாடும் தேவர் சாதி வெறியர்கள் மீது துப்பாக்கிச்சுடு நடத்தி அவர்களின் கோட்டத்தை அடக்கிவிட்டு அப்புறமா இதைப் பேசலாம். செய்வியா? முதலில் தேவர் சாதி வெறியர்களை ஒடுக்க குரல் கொடுப்பியா அந்த திமிர் உனக்கு இருககா? இல்லாம ஏன் சும்மா கூவுற?

   • அறிவாளி அசுரரே, உங்கள் பெயரை போலவே உங்கள் பேச்சிலும் அசுர திமிர் இருக்கிறது.. ஆனால் அந்த வீணா போன வெட்டி திமிர் எனக்கு வேண்டாம்..
    உங்களை போலவே நான் தேவர் சாதி வன்முறைகளையும் சேர்த்தே சாடினேன்..
    ஆனால், அந்த ஆதிக்க சாதியரின் ஆட்டங்களை அடக்க நீங்கள் செய்யும் / சொல்லும் எதிர் வன்முறை சரியான வழி அல்ல…
    நீங்கள் பிறப்பால் சிறுபான்மையெனமாக இருக்கலாம்.. ஆனால் சிறிய அளவு கூட மூளை இல்லாதவர் போல செய்ய வேண்டாம்..

    இந்த சாதி வெறி, திமிர் எல்லத்ம் ஓரங்காட்டி விட்டு சமூகத்துல அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறு.. அப்புறம் ஆதிக்க சாதியரை எளிதா எதிர்க்கலாம்… போய் புள்ள குட்டிய படிக்க வையிங்க…

    அதை விட்டுட்டு இப்படி அரக்கத்த்னமா அடிக்கிட்டு சாகாதீங்க… அடுத்தவங்களையும் அப்பாவிகளையும் சாகடிக்காததேங்க.. இது அசுரதனமே அன்றி அறிவாளிதனம் அல்ல..

    கடைசியாக,
    ஏண்டா.. ஆன்லயன்ல எழுதுறதால இப்படி மரியாதை குறைவா எழுத்துரத்துக்கு உனக்கு ஆண்மை தேவை இல்ல… உன் கோபத்தை காமிக்க வேண்டிய இடத்துல, காமிக்க வேண்டிய விதத்திலே காமி.. நீ இங்க வந்து இப்படி கொந்தலிச்சாப்புழ ஒரு மண்ணும் / மயிரும் ஆகாது..

    நீ சொன்ன மாதிரி, அந்த திமிர் இருந்தா எல்லாம் சரி ஆகும் பட்சத்தில், எவன் மேல உனக்கு இந்த சாதி வெறி இருக்கோ, அவனை நேர போய் அடி.. நாளைக்கே அடி.. ஏன் அக்டோபர்-30 அல்லது அடுத்த செப்டம்பர்-11 வரை வெய்ட் பண்ணனும்?? அதை விட்டு இப்படி மதத்தனமா ஊரை கெடுக்காதே…

    • //இந்த சாதி வெறி, திமிர் எல்லத்ம் ஓரங்காட்டி விட்டு சமூகத்துல அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறு.. அப்புறம் ஆதிக்க சாதியரை எளிதா எதிர்க்கலாம்… போய் புள்ள குட்டிய படிக்க வையிங்க…//

     ரொம்ப நியாயம் பேசுறிங்களே சார்.

     அறிவாதாரத்திலும் பொருளாதாரத்திலும் தாழ்ந்தவர்கள் என்றால் சுட்டுக் கொன்று விடுவீர்களா?

     புள்ள குட்டிங்க படிக்கலனா இங்க வாழ முடியாதா? வாழக் கூடாதா?

     உங்க அறிவாளித்தனம், நியாயம், கரிசனம் எல்லாம் இவ்ளோ தானா?

     உங்கள மாதிரியே நானும் படிக்கணும், சம்பாதிக்கணும்; அப்புறம் தான் உங்க கிட்ட நான் பேசணும், அப்புறம் தான் நான் என் உரிமைகளுக்காக போராடணும் என்று நீங்க நினைக்குறதும் பேசுறதும் என்ன வகையான ஜனநாயகம் சார்?

  • இரண்டையுமே (குரு பூஜைகள்) தடை செய்ய பொது மக்கள் போராடலாம் மற்றும் அரசு கவனத்திற்கு இதை எடுத்து சென்று தடை செய்ய வைக்கலாம் அல்லது நீதி மன்றத்தில் பொது வழக்கு தொடுத்து இதை போன்ற குரு பூஜைகளை தடை செய்ய முடியும். பல உயிர்களை காப்பாற்ற பிரசினைகளை தவிர்க்க முடியும். “கடுமையாக பாதிக்கப்படும் பரமக்குடியில் வாழும் சராசரி மக்களில் ஒருவன்?” செய்வீர்களா?????????????????????

  • சராசரி மக்களில் ஒருவரே, Eththanai Murai Thevar Saathiyin Saathiveriyai Itharkku Mun Kandithirukkeerkal. Itharkku Mun Eththanai Murai Aathikka Saathi Veriyarkalai nokki police thuppaakki neendullathu. konjam Sollungalen Parpom. Imanuvel Sekaranum thalaivar Avarai konra muthuramalingamum Thalaivar, Sabaash nalla manmketta Nadunilamai.

 12. 1 ) முதல்வர் கூறுகிறார் இன்று தேவரை பற்றி சுவரில் தவறாக எழுதியிருந்ததால் பழனி குமார் என்ற மாணவன் கொலை செய்யப்பட்டார். தவறாக இருந்தால் போலீஸ் அல்லவா புலன்விசாரணை நடத்த வேண்டும் . யாரென்று தெரியாமலே ஒரு மாணவனை வெட்டுவது முதல்வர் சட்டத்தில் சரியோ! கொலைக்காக இன்னும் யாரும் கைது செய்யப்பட வில்லை.

  2 ) தேவர் குரு பூஜையின் போது காவல் துறை அனைத்து தலைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடிகிறது . ஒரே ஒரு ஜான் பாண்டியனுக்கு (இவர் மட்டுமல்ல அரசியலில் அனைவரும் அயோக்கியர்கள்தான் ) பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா? விரும்பவில்லையா? இந்த நாட்டில் சாதி கொடுமை இன்னும் ஒழியவில்லை என்பதன் அடையாளம் 2011 ல் .

  3 ) உயர் நீதி மன்றத்தில் காவல் நிலையம் கொளுத்தப்பட்ட போது கூட சுட உத்தரவு கொடுக்கவில்லை.

  4 ) இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இந்த தமிழ் இனம் இவர்களுக்கு கொடுக்காதது ஏன்?

  5 ) பார்பனர்கள் போயி தேவர் நம்மை ஆள துடிக்கும் நிகழ்வாகவே இது என தெரிகிறது. இது தேவர் இனத்தவரின் திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் தேவர் அரசியல்வாதிகள் (தி.மு.க மற்றும் அ.தி.மு.க.) உள்ளனர். அக்டோபரில் நடக்கும் தேவர் குரு பூஜையை நிறுத்தினால் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணலாம்.

 13. தமிழ் என்று பொது பெயரில் வரும் சாதி கடந்த தமிழரே//

  ஜான்பாண்டியன் அவர்களைப்பற்றி பேசும் முன் உன் சாதி வெறி பிடித்த சமுகத்தின் அநீதியை ஒழித்துவிட்டு வா. சாதி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையினை கொன்றுக்கொண்டு இருக்கும் கோரமுகம்.

  • மனிதனுக்கு மனிதன் சமத்துவம் இல்லாத இந்த நாட்டில் வாழ்வதே வெட்ககேடு !!!

 14. இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

 15. ஜான் பாண்டியனும் தியாகி இல்லை…
  இம்மானுவேல் சேகரனும் தியாகி இல்லை…
  முத்துராமலிங்கமும் தியாகி இல்லை…

  இவர்களில் யாரும் தெய்வமும் இல்லை… தெய்வமாக மனிதனை என்றுமே வணங்க கூடாது…

  இந்த நாட்டில் மகாத்மா காந்திக்கே குரு பூஜை கிடையாது… பிறகு இந்த மனிதர்களுக்கு எதற்கு?

  • ஜான் பாண்டியன்.இம்மானுவேல்.முத்துராமலிங்கம் யாருமே தெயவம் இல்லை என்று கூறும் தாங்கள் மகாத்மா காந்திக்கே குரு பூஜை இல்லை என்றுக் கூறி வறுத்த படுகிறீர்கள்.மகாத்மா எந்த கடவுளின் அவதாரம்?.மேற்கண்ட முவராவது ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.ஆனால் காந்தியோ ஒட்டு மொத்த சமுகத்தையே சீரலித்தவர்.ஒரு பொம்மள பொருக்கிக்கு குருபூஜை கேக்கும் தாக்கல் எப்படியோ?அரிஜனம்னு பெயர் வைத்து தலித்துகளை சமுகத்தில் இருந்து ஒதிக்கியவர் காந்தீ…தீ…தீ…

   • காந்தியும் தியாகி இல்லை.. கடுவுள் இல்லை… என கடைசி வரியில் செதுகொல்லுகிறேன்.. போதுமா…

   • \\மேற்கண்ட முவராவது ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.\\

    ஒரு சிறிய திருத்தம்.. அந்த மூவரில் ஜான் பாண்டியன், முத்துராமலிங்கம் ஆகியோர்தான் ஒரு குறிப்பிட்ட சமுகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர்கள்.. ஆனால் இம்மானுவேல் சேகரன் அப்படி இல்லை.. அவர் பேச்சு வார்த்தைகளில் தலித் மக்களுக்குத் தலைமை தாங்கியவர், ஒரு போராளி..

 16. கோஷங்கள் வலுக்கத் தொடங்கி, கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்கடங்காத நிலைக்குப் போகத் தொடங்கவே, அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார். சாலை மறியலைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.

  http://viruvirupu.com/2011/09/12/8591/

  • Neengathan Appo Avrpakkathula irunthu RUNNING COMMENT Kuduththeengalo, Please Se Junior Vikadan. Police already plan for this. Nallathan Yokkiya Vesam Podureenga, Keep it up.

 17. செங்கொடி போன்ற தோழர்களின் இறப்பு ஏற்படுத்தாத கலகத்தை ஜான் பாண்டியனின் கைது ஏற்படுத்தியதுக்கு காரணம் என்ன?செங்கொடியும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்தவள் தானே.தங்கள் சமுகத்தை சேர்ந்த பெண் இறந்ததற்கு காரணமாக இருந்த ஆளும்வர்க்கத்தின் மீது ஏன் இந்த சமுகத்தினருக்கு கோபம் வரவில்லை.

  • கல்பனா …என்னமா பேசுர… செங்கொடி ஓரு ஏழைப்பெண்..மக்களுக்கு உதவ நினைத்தவள்….
   ஜான் பாண்டியன்..தியாகி??? ஏழைகளின் வள்ளல்????
   நமக்கு சுடசுட செய்திதான் முக்கியம்..
   Time pass ஆக வேண்டாமா…
   மரியம்பிச்சை செய்தால் ரவுடிதனம்,பாசிசம்…ஜாண் பாண்டியன் செய்தால் தலித் வன்கொடுமை…கம்யுனிசமா?

   வினவு அவர்களே பாசிசம் என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?

   https://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/

   P.S.. Plz reply to my email.. if u are going delete this comment…

  • கோபம் வருகிறது. அந்த கோபம் தான் இந்த ஏழு உயிரிழப்புக்கு காரணம். நேர்மையை தொலைத்த நாடு எப்படி போராடினாலும் நவீன அரசியவாதிகளை (விஞ்ஞான திருடர்களை ) ஜெயிப்பது மிகக் கடினமாக உள்ளது.

   • //கோபம் வருகிறது.அந்த கோபம் தான் இந்த ஏழு உயிரிழப்புக்கு காரணம்.//

    அப்படி என்றால் சமுகப்பிரச்சனைக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் பழியாக்கப்படுவதைக்கண்டு குமறிக்கொண்டிருந்த அச்சமுகத்தினருக்கு தங்கள் கோபத்தை வெளிக்காட்டக்கிடைத்த தருணம்னு சொல்லுறீங்களா?

    • தாழ்த்தப்பட்ட மக்கள் சாணக்கியர்களாக இல்லை கல்பனா! தாழ்த்தப்பட்ட தலைகளுக்கே என்ன நிலையில் நாம் நிற்பது என்பது புரியவில்லை. அரசியல் வியூகம் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் சாணக்கியர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.

 18. தலித் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு பிற்பட்ட சாதியினரை மட்டும் தூக்கி விட்ட பெரியாரால் வந்த வினையில் இதுவும் ஒன்று!திராவிட அரசியல் பிற்பட்ட மக்களை தூக்கி விட்டதோடு மட்டும் நில்லாமல தலித் மக்களின் துன்பங்களை கண்டு கொல்லாமல் விட்டது ஜெயா மட்டுமல்ல பெரியார் அண்ணா கருணாநிதி எம் ஜி ஆர எல்லாருமே தலித் மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டவர்களே அல்ல!!
  ***********************************************************************************
  தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
  வேண்டும் என்று ஈவேரா கூறுகிறார் :-
  ‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
  *****************************************************************************
  அதாவது நான் உங்களுக்கு உதவுகிரேன்னு சொல்லவே இல்ல!!அவுங்களே போராடனுமாம் முடியலன்னா ஊற விட்டு ஒடுங்கடான்னு சொல்லாம சொல்றார்!!இதுதான் பெரியாரின் உண்மை முகம்!

  • நமக்கு உண்மை கசக்கிறது. ஒரு ஹீரோவோ இல்லை தலைவன் தலைவியோ விடுதலை தேடி தரமுடியாது நாமே தான் அதை செய்ய வேண்டும் என்று சொன்னால் தலித் விரோதி. யாரையாவது நம்பியே நாசமபோற நம் சிந்தனையை மாற்ற வேண்டும். நம் விடுதலையை நம் போராட்டத்தை நாம் ஒவ்வருவரும் கையில் எடுக்க வேண்டும்.

 19. AYYO புரட்சி தீ சீமான் எங்கே ? இளைய தளபதி …. தீபந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து எங்கே ?

  • வேஷம் போடும் சீமான் எங்கே ? ஈழ தமிழர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பாரோ! மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா?

 20. துக்கம் அனுஷ்ட்டிப்பதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, அடுத்து விசாரணை கமிஷன், ஒன்றும் நடக்க போவதில்லை, குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட காவலர்களை வேலையில் இருந்து கூட தூக்க போவதில்லை, இறந்தவர்களுக்கு 1 லட்சம் இழப்பீடு அவ்வளுதான், என்னதான் சொல்ல வர்றாங்க .? அடங்கு ….!

 21. உங்களை மாதிரி ஆட்கள் கொம்பு சீவிவிடும் வேலையை நன்றாக செய்கிறீர்கள்.ஜான் பாண்டியன் போன்றவர் கைது முன்னெச்சரிக்கை நடவடிக்கை.செய்தியை போடும் போதே 7 பேர்கள் என்று சொல்லாமல்7 தலித்துகள் என்று எழுதும் போதே ஒரு முடிவோடு இருப்பது புரிகிறது. 50 வருட அரசியல் செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த போது கூட இத்தனை பேர் சாகவில்லை. இது எதைக் காட்டுகிறது என்று உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.

 22. காவல்துறையும் அரசும் இந்தப் படுகொலைகளை திசைமாற்றி சாதிப்பிரச்சினையை விசிறி விடத் துடிக்கிறது.

  1999இல் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டபோது திமுக அரசு வழிநடத்திய போலீஸ் ‘உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் எனும் பெண்காவலரை பாலியல் ரீதியாக அத்துமீற கூட்டத்தினர் முயற்சித்ததால் தாக்குதல் நடத்தினோம்’ எனச் சொன்னது.

  நேற்று மதுரையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ‘பாண்டியம்மாள் என்ற பெண்காவலர் தாக்கப்பட்டதால் தடியடியும் துப்பாக்கிச் சூடும் ‘ நடத்தபப்ட்டது என்கிறது.

  பாண்டியம்மாள் + உசிலம்பட்டி …தமிழன் பொதுப் புத்திக்கு க்ளூ கொடுக்கும் வேலையை ஆளும் வர்க்கம் செய்து..இன்ன சாதிக்கார போலீசை அதுவும் பொம்பள போலீசை கைவச்சிருக்கானுக..பிறகு போலீசு சுடாம என்ன பண்ணும்?…இதை அனைத்து டீக்கடைகளிலும் பேச வைக்க அரசு முயல்கிறது..

  தலித் மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பாண்டியம்மாள்களைப் பிரசவிக்கும் அதிகார வர்க்கத்தின் அயோக்கியத்தனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்..

 23. பூலித் தேவன் பிறந்த நாளை, சசிகலாவின் கணவன் நடராஜன் அரசு பாதுகாப்புடன் கொண்டாடுவான். தலித்களின் தலைவரான இமானுவேல் சேகரனின் பிறந்தநாளுக்கு தலைமையேற்க எங்கள் தலைவர் ஜான் பாண்டியன் வந்தால் அரசு அவரைக் கைது செய்வது ஏன்?

  • இந்த் கேள்விக்கு பதில் மேலே உள்ளக் கட்டுரையில் உள்ளது.கட்டுரையை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

 24. ////இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்./////

  ஜூவிகடன் பாணியில் வெறும் யூகங்கள் இவை. உண்மை என்று எப்படி எடுத்துக்கொள்வது. ஆதாரமில்லாத யூகங்கள். ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ? ஜூவிக்கும் உங்களுக்கும் அப்ப என்ன வித்தியாசம் ?

  மற்றபடி, துப்பாக்கி சூடு தவரிக்கபட்டீருக்க வேண்டும். தமிழகத்தில் இது போல் இனி நடக்காது என்று கருதியது தவறாகிவிட்டது.

  ஜான் பாண்டியன் பல ஆண்டுகள் சிறையில் இருக்க காரணம் பற்று எழுதுங்களேன். கோவையை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை கூலிப்படை மூலம் கொலை செய்த குற்றத்திற்க்காகத்தான் சிறை. மாஃபிய போல் பணம் வாங்கி கொண்டு செய்த கொலை. இவருக்கு ‘ஆதாரவு’ தெரிவிப்பவர்கள் மீது போலிஸார் வன்மம் கொண்டும் செயல்ப்பட்டிருக்கலாம். நடந்தது என்ன என்று முழுசா அறிய சில நாட்கள் ஆகும்.அவசரப்பட வேண்டாம்.

  • 1.Athiyamaan please read Joo.Vee, police already prpared with stones for this. Verum Yookangal Alla.

   2. John Pandian Periya thalaivara illaiya enpathu irukkattum, Imanuelukku ninavanchali sellutha avarai ean thadukka vendum./ Muthuramalingathukku anchali selluthum thevar saathi veriyarkal ellurum yokkiyavaankala? avarkal ethanai murai ippadi thadukkapaattirukkiraarka?

   • ///உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.///

    இதைதான் ஆதரமில்லாத யூகம் என்றேன். போலிஸார் திட்டமிட்டும் அப்படி செய்தார்கள் என்று என்ன அடிப்படையில் சொல்கிறார் ? போலிஸாரின் மனதிற்க்குள் புகுந்து, அவர்களின் ‘திட்டங்களை’, ’நோக்கங்களை’ படிக்கும் அளவுக்கு இக்கட்டுரையாளர் என்ன பெரிய மந்திரவாதியா ?

    • மந்திரவாதி இல்ல ஓய். அவருக்கு சொந்த ஊரே அதாம்லே. எல்லா அதிகாரிகளும் மாமன் மச்சாம்லே. இப்போ வெளங்குதா. வினவு என்ன ஒன்ன மாதிரி ஜோசியம் பாத்து எழுதுறவருன்னு நெனச்சியாலே.

   • // John Pandian Periya thalaivara illaiya enpathu irukkattum, Imanuelukku ninavanchali sellutha avarai ean thadukka vendum./ Muthuramalingathukku anchali selluthum thevar saathi veriyarkal ellurum yokkiyavaankala? avarkal ethanai murai ippadi thadukkapaattirukkiraarka?//

    இதை பற்றி எனது two cents :

    1. இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளை, சிறு கூட்டங்களாக (100 பேர்களுக்குள்)பரவலாக தமிழகம் எங்கும் தலித்துகள் மற்றும் இதர லிபரல்வாதிகள் நடத்தலாம். முக்கியமாக வெளியூர் செல்லாமல், தங்கள் வாழும் பகுதியில் மட்டும் சிறு கூட்டங்கள் நடத்தலாம். பரமகுடிக்கு வெளியூர் மக்கள் செல்ல தேவையில்லை.

    2. அக்கூட்டங்களில் இமானுவேல் சேகரன் மற்றும் அம்பேத்காரின் சிந்தனைகளை பற்றி பேசலாம். நாடகங்கள், பாடல்கள் நிகழ்த்தலாம். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அமைதியான முறையில் கூட்டு பிராத்தனை செய்யலாம்.

    3. முத்துராமலிங்க தேவர் பற்றி தலித்துகள் பேசுவதை, விமர்சிப்பதை, எழுதுவதை முற்றாக சில ஆண்டுகள் தவிர்க்கலாம். அது முடிந்து போன் விசியம். தேவர் சாதியினருக்கு அவர் கடவுள் போல் இன்று கட்டமைக்கப்பட்டுள்ளார். அவரை ‘இழிவு’ செய்தனர் என்று வெகுண்டு எழுந்து, முட்டாளதனமாக, காட்டுமிராண்டித்தனமாக ஒரு 16 வயது சிறுவனை வெட்டி கொல்லும் கொடூரர்கள் நிறைந்த கூட்டம் அது. எனவே தேவரை பற்றி வெளிப்படையாக பேசவே வேண்டாம். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பாஸிட்டாவன விசியங்களை மட்டும் பேசலாம்.

    4. தேவர் குரு பூஜை அன்று வெளியே செல்லாமல், வீடுகளில் இருப்பது நலம். தேவர் குரு பூஜை நிகழ்வுகளை தடுப்பது சாத்தியமல்ல. அன்று அவர்கள் வண்டிகளில் கோசம் இட்டு, வெறு பிடித்த முறையில் அலைவார்கள் தாம். விலகிச் செல்வதே விவேகம்.

    நான் சொல்வது கோழைத்தனமாக அல்லது சுயமரியாதைக்கு இழுக்காக தோன்றலாம். ஆனால் இதை விட்டால், அமைதியாக முன்னேற வேறு வழி இப்போதைக்கு இல்லை. இன்னும் ஒரு 60 ஆண்டுகள் கழித்து, ஒரு புதிய தலைமுறை உருவானால், நல்ல மாற்றம் சாத்தியம்.

    • அப்படியும் முடியலையா ? தூக்கு போட்டு சாகலாம் …… இதை சொல்லாமல் விட்டுடிங்க K.R.அதியமான் .
     ஒருவன் அடக்கு முறை செய்யும் போது அதை எதிர்க்காமல் ஒதுங்கி கொள்வது எந்த வகை நியாயம் .
     தலித் மக்கள் ஒரு சாதியாக இணைத்திருப்பது இப்போதைக்கு ஒரு சில நன்மை கொடுக்கலாம்
     ஆனால் அது நிரதரமாக நீடித்தால் அவர்களும் ஒரு தேவர் சாதி வெறியர்கள் போலதான் மாறுவார்கள் .
     நம் முன்னே இருப்பது இரண்டு பிரச்சினை தான் ஒன்று பொருளாதாரம் . இரண்டு அதை அடையும் வழி
     இதில் ஜாதியும் இல்லை மதமும் இல்லை . எல்லோரும்க்கும் இது பொருந்தும் .
     ( அப்புறம் அதியமான் அவர்களே வெளிய எவனாவது உங்க குடும்ப சொந்தகளை மானபங்க படுத்தவோ . அல்லது கொலை செய்வவோ வந்தால் அப்படியே விட்டுடுங்க ஒரு 60 வருஷம் கழிந்தால் எல்லாம் சரி ஆகும் . வாழ்க இந்து பாசிசம் )

     • tamil,

      நீ யார் என்று தெரிகிறது. யாருயா இந்து ஃபாசிஸ்ட் ? அறிவுகெட்டதனமான பேச்சு. உருப்படியாக ஏதாவது சொல்ல முயன்றால், இப்படி தான் பதில் பேசுவதா ?

      ////ஒருவன் அடக்கு முறை செய்யும் போது அதை எதிர்க்காமல் ஒதுங்கி கொள்வது எந்த வகை நியாயம் .///

      நான் ஒதுங்கி கொள்ள சொல்லவில்லை. தேவையில்லாத provocationகளை போலி தலைவர்களை செய்யும் போது, விவேகமாக நடந்து கொள்ளவே வேண்டினேன்.
      அந்த சிறுவனின் கொலையை எப்படி தடுப்பது ? உங்களை போன்றவர்கள் நகரங்களில் safeஆக் உக்காந்து கொண்டு இப்படி ‘வீரம்’ பேசுவீக. அங்கு நிகழ்வதை தடுக்க இவை பயன் அளிக்காது.

      ’mass காட்டுவது’ என்று ஒரு விசியம் உள்ளது. mob frenzy என்றும் உள்ளது. இது தலித், ஆதிக்க சாதியினர், மற்றும் பல மத, இன கூட்டங்களில் நிகழும். கூட்டம் சேர்ந்த உடன் அதிகார போதை உருவாகி, தாம் செய்வதெல்லாம் சரியே என்று தோன்றும். ஆனால் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும்.

      சரி, வேறு ஒரு இழையில் இந்த விசியம் பற்றி நான் எழுதியது :

      காந்திய முறை போராட்டம் தான் சரியானது. அன்பால், அகிம்சையால் ‘எதிரிகளை’ வெல்வது. யாரையும் வெறுக்க கற்றுக்கொள்ளாமல இருப்பது. வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல. வெறுப்பை வெறுப்பால வெல்ல முடியாது. அன்பால், பொறுமையால், அறிவால் தான் வெல்ல முடியும். அப்படி தான் காந்தி வென்றார்.

      • நண்பர் அதியமான்,
       ஆண்டாண்டு காலமாக ஊறிப் போய்விட்ட சாதிய எண்ணவோட்டம் உங்களை போன்ற நவீன கால அறிவாளிகளையும் பார்ப்பனிய சாதிய அடுக்கு முறையின் நியதிகளை ஏற்று நடக்குமாறு தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவுரை எழுத சொல்கிறது.என்ன ஒரு கொடுமை.

       வீரமற்ற விவேகம் கோழைத்தனம். விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம். இது பசும்பொன் தேவரின் பொன்மொழி என தேவர் சமூகம் போற்றி சொல்கிறது. நல்ல கருத்துதான்.அனைவரும் பின்பற்றத்தக்க வீரம் விளைவிக்கும் அருமையான சொல்.ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இது பொருந்தாதா.

       இமானுவேல் குருபூசைக்கு பரமக்குடிக்கு தலித்கள் போகவேண்டாம். ஆங்காங்கே கும்பிடு போட்டுக்கொள்ளுங்கள்.அதுவும் 100 பேருக்கு மேல் கூட கூடாது.ஆனால் தேவர் குருபூசை எப்போதும் போல் நடக்கட்டும்.அன்றைய நாள் தலித்கள் வெளியே வர வேண்டாம்.அதாவது,பள்ளு,பறை எல்லாம் அடங்கித்தான் கிடக்க வேண்டும்.ஆதிக்க சாதி என்றால் ஆட்டம் போடத்தான் செய்யும்.முன்பெல்லாம் அடங்காவிட்டால் அடிஉதையை காட்டி அடக்குவார்கள். நீங்களோ முன்னேற்றத்தை காட்டி அடங்கி போக சொல்கிறீர்கள்.தலித்களை அடங்க சொல்லும் நீங்கள் தேவர் இனத்தவரை தலித்களை மதித்து நடக்க கேட்டுக் கொள்ள தயங்குவது ஏன்.இதுவா நீதி.

       \\முத்துராமலிங்க தேவர் பற்றி தலித்துகள் பேசுவதை, விமர்சிப்பதை, எழுதுவதை முற்றாக சில ஆண்டுகள் தவிர்க்கலாம்.//

       இது அவதூறு.தேவரை இழித்தோ,பழித்தோ தலித்கள் ஏதும் சொல்வதில்லை.

       \\’mass காட்டுவது’ என்று ஒரு விசியம் உள்ளது. mob frenzy என்றும் உள்ளது. இது தலித், ஆதிக்க சாதியினர், மற்றும் பல மத, இன கூட்டங்களில் நிகழும். கூட்டம் சேர்ந்த உடன் அதிகார போதை உருவாகி, தாம் செய்வதெல்லாம் சரியே என்று தோன்றும்.//

       பரமக்குடியில் தலித்கள் திட்டமிட்டு அநியாய கும்பல் வன்முறையில் இறங்கினார்கள் என சொல்ல முடியாது.சான் பாண்டியனை கைது செய்ததன் மூலம் அவர்களை போராட தூண்டியதும் ,அமைதியான முறையில் போராடிய அவர்களை ஆத்திரமூட்டி வன்முறையில் இறங்க செய்ததும் காவல்துறைதான்.இந்த இடத்திலும் தலித்கள் காட்டிய சனநாயக பண்புக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.அவர்கள் நினைத்திருந்தால் அன்றைய பொழுதில் பரமக்குடி நகரத்தையே சூறையாடி இருக்க முடியும்.ஆனால் ஒற்றை கல் கூட தனியார் சொத்துக்கள் மீது வீசப் படவில்லை.மேல்சாதியினர் கடை எதுவும் தாக்கப் படவில்லை.அவர்கள் போராட்டம் முழுவதுமே காவல்துறையை நோக்கியே இருந்தது.இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

       • //ஆண்டாண்டு காலமாக ஊறிப் போய்விட்ட சாதிய எண்ணவோட்டம் உங்களை போன்ற நவீன கால அறிவாளிகளையும் பார்ப்பனிய சாதிய அடுக்கு முறையின் நியதிகளை ஏற்று நடக்குமாறு தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவுரை எழுத சொல்கிறது.///

        ஏம்பா இப்படி எல்லாம் ‘அர்ந்த்தம்’ செய்து கொள்கிறீக. அலுப்பா இருக்கு தொடர். பார்பனிய சாதிய அடுக்குமுறையில் நியாதிகளை ஏற்று நடக்க எங்க சொன்னேன். ஏன் இப்படி எல்லாம் நான் சொல்லாதை சொன்னதாக அர்த்தம் செய்துக்கிறீக ?

        சாதிய அடுக்குமுறைகளை எதிர்க்க, அழிக்க பயன்படுத்த வேண்டிய ‘போராட்ட முறைகளை’ பற்றி தான் பேசினேன். (என் சிற்றிவுக்கு தோன்றியதை சொன்னேன்). முத்தாரமலிங்க தேவருக்கு ஆண்டு தோரும் நடக்கும் குரு பூசை முறையை தடுக்க முடியுமா ? எப்படி ? பிராக்டிகலாக பேசுங்க. சட்டப்படியும் முடியாது.

        அதற்க்கு மாற்றாக இமானுவேல் சேகரன் அவர்களுக்கும் குரு பூசை செய்வதை அவரே விரும்பியிருக்க மாட்டார். இதெல்லாம் வெட்டி வேலை. இதன் மூலம் தலித்துகளின் நிலை முன்னேற சாத்தியமே இல்லை. தேவையில்லாத பகையும், குரோதமும், வன்முறையும் தொடரும். அப்பாவிகள் கொல்லப்படுவர். வேறு ஒரு பயனும் ஏற்பட போவதைல்லை. போலி தலைவர்களின் (ஜான் பாண்டியன் போன்றவர்கள்) பொழைப்பு தான் ஓடும்.

        ///\\முத்துராமலிங்க தேவர் பற்றி தலித்துகள் பேசுவதை, விமர்சிப்பதை, எழுதுவதை முற்றாக சில ஆண்டுகள் தவிர்க்கலாம்.//

        இது அவதூறு.தேவரை இழித்தோ,பழித்தோ தலித்கள் ஏதும் சொல்வதில்லை.////

        அந்த அறியா சிறுவன் (16 வயது பள்ளி மாணவன்) சுவற்றில் தேவர் பற்றி ஏதோ ‘எழுதியதா’ அவனை காட்டுமிராண்டிதனமாக வெட்டி கொன்றனர். (எப்படி தான் இவர்களுக்கு மனசு வந்ததோ ? என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை). இது தான் இத்தனை வன்முறைக்கும் இந்த முறை மூலக்காரணம். தேவரை பற்றி அங்கு எழுத வேண்டாம். பேச வேண்டாம். ஒன்னும் கெட்டு போய்விடாது. இங்கு இணையத்தில் எழுதிங்க. நகரங்களில் பத்திர்க்கைகளில், புத்தகங்களில் விமர்சிக்கலாம். ஆனால் அந்த பகுதிகளில் அதை பற்றி எங்கும் பேசாமல் இருப்பதே விவேகம். சவுதி அரேபியாவில் போய் கடவுள் மற்றுபு பிரச்சாரம் செய்வத் எத்தனை ஆபத்தானது ? அல்லா பற்றி பேசினால் என்ன ஆகும் ? எதுக்கு வீண் வம்பு என்று பலரும் பல இடங்களில் கம்முன்னு இருக்காக இல்ல ? அதே போல் தான் இந்த விசியத்தில், இந்த பகுதியில் இருக்க சொன்னேன்.

        நாடார் சாதியினரை பார்த்து தலித்துகள் கற்று கொள்ள வேண்டும். 100 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தலித்துகளுக்கு இணையான அடக்குமுறைகளை அனுபவித்தவர்கள் தாம். ஒற்றுமையாக செயல்பட்டு, கல்வி, வணிகம், உழைப்பு, ஊக்கம் மூலம் இன்று பெரிய அளவில் முன்னேறி உள்ளனர். உருப்படும் வழி அவர்களின் வழி. சாதி மோதல்களில் இப்ப ஈடுபடுவது அனேகமாக இல்லை. கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம், தொழில் கற்று முன்னேற இருக்கும் ஆர்வம், உழைப்பு, ஊக்கம் : இதில் அவர்களை யூதர்களுடன், கொங்கு கவுண்டர்களுடன் ஒப்பிட முடியும். அதுதான் சரியான வழி.

        வன்முறைக்கு பதில் வன்முறை தீர்வல்ல. சரி, இதெல்லாம் என் ஒருவனின் கருத்துக்கள். அப்பரம் உங்க இஸ்டம். என்னை ஆளவிடுங்கப்பா. இனி இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.

        • நண்பர் அதியமான்… உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியானவை… நியாயமானவை… எத்தரப்பிற்கும் சாராதவை…
         ஆனால் தத்தமது தரப்பை நியாயப்படுத்தும் (போராட்டத்தை மேற்கொண்டு தூண்டக்கொடிய) கருத்துக்கள் தான் இரு தரப்புக்கும் இப்போது தேவை…
         இரு புலிகள் அடித்துக்கொள்ளும்போது இடையில் புகுந்து மத்திசம் செய்ய நினைக்கும் வெள்ளாடு நிலைமையில் இருக்கிறது உங்கள் கருத்துக்கள்…
         ஆனால் உங்கள் கருத்துக்களை திரு.இமானுவேல் அவர்களும், திரு.முத்துராமலிங்கம் அவர்களும் நிச்சயம் ஏற்றிருப்பார்கள் இன்றிருந்திருந்தால் என்பதில் ஐயமில்லை….

 25. வினவு,

  முதலில் தலைப்பை மாற்றுங்கள். ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் பிரிவினர் தங்களை தலித் என்று அழைப்பதை விரும்புவதில்லை. மாறாக தேவேந்திர குல “வேளாளர்” என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர்.

  தேவரின மக்கள் குருபூஜைக்கு சென்றால் அது ஆதிக்கவெறியின் வெளிப்பாடு. அதையே வேறொருவன் செய்தால் அது உணர்வின் வெளிப்பாடு. புல்லரிக்க வைக்கிறது உங்களின் நடுநிலைமை!!.

  மறைந்த தலைவர்களுக்கு குருபூஜை என்பது என்ன? அது எந்த பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டது?

  தேவரினம் செய்யும் அதையே வீம்பாக இவர்களும் செய்வது வீணான பதட்டத்தை ஏற்படுத்தி தாங்களது ஆதிக்க சாதியினர் மீதான வெறியை தீர்த்துக்கொள்ளவே. மற்றபடி குறிப்பிட்ட தலைவருக்கு குருபூஜை என்பதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
  இதுபோலதான் ஆண்ட பரம்பரையினர் என்று கூறி கொள்வதும், செத்து சுடுகாடு சென்ற சாதி தெரியாத ஒரு சில தமிழ் மன்னர்களை தாங்களது இனத்தவர் என்று கூறி பெருமிதம் அடைவதும்.

  தேவர் அவர்களது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி அவர்தம் மக்கள் தொண்டினை நினைவுகூர்வது என்பது ஆண்டாண்டுகாலமாக அப்பகுதி மக்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வாகும். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அது சிறிய அளவில் அமைதியாக நடந்து வந்துள்ளது. அரசு சார்பில் அப்பகுதி அமைச்சர் பெருமக்கள் , அனைத்து கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வந்துள்ளனர். மாற்று சாதியினரும், தேவர் அபிமானிகளும் அதை ஒரு இயல்பான சடங்காகவே கருதி வந்தனர்.

  இடையில் புகுந்த ஓட்டுபொறுக்கி , சாதிவெறி கொண்ட தேவரின அரசியல்வாதிகள் சிலர் அதனை ஒரு பதட்டம் ஏற்படுத்தும் , தாங்களது சுய பலத்தை காண்பிக்கும் ஒரு நிகழ்வாக மாற்றி விட்டனர். அதனை அறியாத அப்பாவி தேவரின இளைஞர்களும் அவர்கள் பின்னால் சென்று கோஷமிடுவதும் கொடி பிடிப்பதும் தொடர்கிறது,மேலும் தேவர் குருபூஜை மீது தேவைற்ற விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.

  தேவருக்கு அரசு சார்பில் நடத்தபெறும் குருபூஜை என்பது மறைந்த தேச தலைவருக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் மரியாதையாகும். அதேபோல் சாதரனமானவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது விதண்டாவாதம்.

  வெட்டரிவாளும் வேல்கம்பும் ஏந்தி கொண்டிருந்த கூட்டத்தை தன்னால் இயன்ற அளவு சீர்படுத்திய ஒரு தலைவரின் நினைவை போற்றும் குருபூஜையை தடை செய்ய சொல்ல எவருக்கும் தகுதி இல்லை.


  மாக்ஸிமம்

  • இந்த மறுமொழியை படித்ததும் ஹ்ர்ர்ர் தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ என்று காறி துப்பி விடலாம் போல இருக்கிறது. ஆனால் சபை நாகரீகம் கருதி அப்படி செய்வதை தவிர்க்கிறேன். ஏனென்றால் வக்கிர புத்தி உடையவர்கள் முதல் ஈனப் பிறவிகள் வரை அனைவருக்கும் தங்கள் கருத்தை சொல்ல உரிமை உண்டு என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.

   • நல்ல மருத்துவராக சென்று உடலை பரிசோதிக்கவும்.. காறி துப்புவது என்பது ஒரு வியாதி எனவும், அது ஒருவனை சிறுமை படுத்தலாகாது எனவும் அறியவும்..


    மாக்ஸிமம்

  • இன்னார் இதை செய்யவேண்டும், செய்யகூடாது என்று நீங்கள் எப்படி சொல்லலாம் மாக்சிமம் அண்ணே? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தார்கள்? தாழ்த்தப் பட்ட மக்கள் தம்மை இத்தனை காலமாக அடக்கி ஆண்டுவந்த முக்குலத்தோருக்கு காட்டும் ஒரு எதிர்ப்பின் அடையாளமாகவே ‘இமானுவேல்’ குருபூஜை. அப்படியானால் ‘இமானுவேல்’ குருபூஜையின் மூலக் காரணம் தான் என்ன? ஏன் நீங்கள் அதைப் பற்றி பேசவில்லை? ‘தேவரின் குருபூஜைக்கு செல்வோர் எல்லாம் இமானுவேல் குருபூஜைக்கு வரவேண்டும் என்று கூறுவது அபத்தம்,வீண்வேலை’ என்று சொல்கிறீர்கள். இந்த கருத்தில் அடங்கியிருக்கும் ‘அடக்குமுறை’ எண்ணத்தை எப்படி அவ்வளவு சுலபமாக மறந்தீர்கள்?. ‘தேவர்’ ஒன்றும் வானத்திலிருந்து தோன்றிய அவதாரம் இல்லையே? அவரும் மனிதர் தானெ? அவர் இறப்பிற்கு பின்பு தேவர் சமூக ஆட்கள் எப்படி அவரை தெய்வமாக பார்க்கிறீர்களோ, அதுபோல நாளடைவில் ‘இமானுவேலும்’ அவர் சார்ந்த மக்களால் பார்க்கப் படுவார். அதற்கு காலம் ஆகும். எப்படி தாழ்த்தப் பட்டவர்களுக்கென்ற ஒரு பிரதிநிதியாக ‘இமானுவேல்’ இருக்ககூடாது என்று ‘தேவரால்’ கொல்லப்பட்டாரோ, அதுபோல எந்த காலத்திலும் தாழ்த்தப் பட்டவர்களுகென்ற ஒரு ஒற்றை அடையாளமாய் அந்த ‘இமானுவேல்’ இருக்கக் கூடாது, ‘இமானுவேல்’ என்ற ஒற்ற குடையில் கீழ் எதிர்காலத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இதுபோன்ற கலவரங்கள் திட்டமிட்டே அம்மக்கள் மீது நடத்தப் படுகிறது என்பதை எப்படி மறந்தீர்கள்? உண்மை நிலவரம் இப்படி இருக்க ’15 வயது தாழத்தப் பட்ட சிறுவன் கொல்லப் படுவது, ஜான் பாண்டியன் இதே காரணத்துக்காவே த்டுக்கப் படுவது,கலவரம்’ இவை எல்லாம் திட்டமிட்டே செய்யபடும் செயல்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

   • //முக்குலத்தோருக்கு காட்டும் ஒரு எதிர்ப்பின் அடையாளமாகவே ‘இமானுவேல்’ குருபூஜை. //

    எதிர்ப்பை இப்படிதான் காட்டணுமா? ஏன் வேறு விதங்களில் முயற்சிக்க கூடாது?

    தேவருக்கு குருபூஜையே கூடாது என்கிறீர்கள். பின்பு எதிர்ப்பை காட்டும் விதமாக இம்மானுவேலுக்கு குருபூஜை என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை.

    நாளை தேவன் ஒருவன் சட்டை கிழித்துக்கொண்டு திரிந்தால் நீங்களும் உங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்காக உங்களது சட்டையை கிழித்துக்கொண்டு அலைவீர்கள், அப்படிதானே?

    //‘இமானுவேல்’ என்ற ஒற்ற குடையில் கீழ் எதிர்காலத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான்//

    பாஸ்,

    வீணாக கற்பனை செய்து கொண்டு எதையும் கூற வேண்டாம்.

    ஏற்கனவே ஒரு தலைவரின் கீழ் ,ஒற்றை குடையில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி இவரின் கீழ் ஒன்று சேரட்டும்.

    குறிப்பிட்ட சமுதாய தலைவருக்காக யார் வேண்டுமானாலும் குருபூஜை எடுக்கட்டும், மொட்டை அடிக்கட்டும், முளைப்பாரி தூக்கட்டும். ஏன் நீங்கள் சொல்வது போல் தேசிய விழாவாகவே கொண்டாடட்டும். அதைப்பற்றியெல்லாம் யாரும் சட்டை செய்யபோவது இல்லை.

    ஆனால் அதில் ஏற்படும் கலவரத்திற்கு ஏன் தேவரினத்தை கைகாட்டுகிரீர்கள்?

    //’15 வயது தாழத்தப் பட்ட சிறுவன் கொல்லப் படுவது, //

    சட்டக்கல்லூரியில் ஒரு இளைஞனை காட்டுமிராண்டி தனமாக தாக்கும்போது இந்த வருத்தமும் பரிதாபமும் வெளிப்படவில்லையே பலருக்கும்.?

    அப்போது வன்முறை இனித்தது. இப்போது கசக்குகிறது..

    //ஜான் பாண்டியன் இதே காரணத்துக்காவே த்டுக்கப் படுவது//

    தலைவா படித்தவராய் இருக்கிறீர்கள். தயவு செய்து நல்லவர்களை ஆதரியுங்கள்.

    //கலவரம்’ இவை எல்லாம் திட்டமிட்டே செய்யபடும் செயல்கள் //

    கலவரம் யார் திட்டமிட்டது. அதை நிகழ்த்தியவர்களா? பொது சொத்தை திட்டமிட்டு சேத படுதியவர்களா? அல்லது அதை கட்டுபடுத்திய போலீசா?

    சட்டக்கலூரி விவகாரத்தில் இதே போலிசு தான் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது. இன்றும் அதே போலிசு தான் கலவரக்காரர்களை சுட்டு கலவரத்தை கட்டு படுத்துகிறது…

    அன்றைய சம்பவம் யாரால் திட்டமிடப்பட்டது? போலிசாலா அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் சாதிவெறியில் திரியும் குண்டர்களாலா?


    மாக்ஸிமம்

    • //தலைவா படித்தவராய் இருக்கிறீர்கள். தயவு செய்து நல்லவர்களை ஆதரியுங்கள்.//

     இந்த நல்லவன் நல்லவன்னு சொல்றீங்களே அப்படி யாராவது இருந்தா சொல்லுங்க ஆதரிக்கலாம்.

     //கலவரம் யார் திட்டமிட்டது. அதை நிகழ்த்தியவர்களா? பொது சொத்தை திட்டமிட்டு சேத படுதியவர்களா? அல்லது அதை கட்டுபடுத்திய போலீசா?//

     நீங்க சம்பவம் நடந்த இடத்துல இல்லைல பின்னே எதுக்கு பார்த்தவரு மாதிரி எழுதுறீங்க.

     //சட்டக்கலூரி விவகாரத்தில் இதே போலிசு தான் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது.//

     இப்பத்தான் புரியுது சட்டக்கல்லூரி சம்பத்திற்குத்தான் இப்போது ஆதிக்க வெறியர்கள் பழி வாங்கியிருக்கிறார்கள் என்பது.

    • //அன்றைய சம்பவம் யாரால் திட்டமிடப்பட்டது? போலிசாலா அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் சாதிவெறியில் திரியும் குண்டர்களாலா?//

     சரியாச் சொன்னீங்க இந்த மேல் சாதிக்காரனுங்களாலதான் சாதிச் சண்டையே வருது

    • //எதிர்ப்பை இப்படிதான் காட்டணுமா? ஏன் வேறு விதங்களில் முயற்சிக்க கூடாது?

     தேவருக்கு குருபூஜையே கூடாது என்கிறீர்கள். பின்பு எதிர்ப்பை காட்டும் விதமாக இம்மானுவேலுக்கு குருபூஜை என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை.//

     தேவருக்கு குருபூஜை கூடாதுன்னு யார் சொன்னா? எங்கே சொன்னேன் என்று சொன்னால் தேவலை. இதுக்கு பெயர் தான் இட்டுகட்டி பேசுவதோ? சரி போகட்டும். இப்படி தான் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று அவர்களுக்கு ஆணை போட நீங்கள் யார்?

     //வீணாக கற்பனை செய்து கொண்டு எதையும் கூற வேண்டாம்.
     ஏற்கனவே ஒரு தலைவரின் கீழ் ,ஒற்றை குடையில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி இவரின் கீழ் ஒன்று சேரட்டும்.//
     யார் அந்த ஒற்றை தலைவர்? நீங்கள் இன்னும் இமானுவேல் தேவேந்திரன் குருபூஜையின் சைக்காலஜியை புரிந்துகொள்ளவில்லை. இங்கு குறிப்பிடப் படுவது ‘அடக்குமுறைக்கு’ எதிரான ஒரு எதிர்ப்பு உணர்வே. இமானுவேல் குருபூஜை என்பது ஒரு கருவி. அவ்வளவே.

     //சட்டக்கல்லூரியில் ஒரு இளைஞனை காட்டுமிராண்டி தனமாக தாக்கும்போது இந்த வருத்தமும் பரிதாபமும் வெளிப்படவில்லையே பலருக்கும்.?//
     நீங்கள் நாணயத்தின் ஒரு பகுதியை மட்டுமே பற்றி பேசிகொண்டு இருக்கிறீர்கள்.

     //தலைவா படித்தவராய் இருக்கிறீர்கள். தயவு செய்து நல்லவர்களை ஆதரியுங்கள்.//
     உங்களுக்கும் சேர்த்து தான்.

     மாக்சிமம் அண்ணே,
     சட்டகல்லூரி சம்பவம்,பரமகுடி சம்பவம். இந்த இரண்டிலுமே வெகு சுலபமாக ‘எதிர்வினையை’ மட்டுமே குறிப்பிட்டு நைசாக கழண்டுகொண்டுவிட்டீர்கள்.’சட்டக் கல்லூடியில் ஒருத்தன் அடிபட்டான்’. சரி. ஏன் அடிபட்டான்? அதை சொல்லுங்க? பரமகுடியில் 3000 போலிஸ் இருந்தும், 500 பேரை அடக்க முடியலையாம். அதனால 7 பேரை சுட்டு கொன்னுட்டாங்களாம். ஆனால் ‘ஜைனர்கள்’ போல மிகவும் அமைதியாகவும்,எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி நடக்கும் தேவர்குருபூஜைக்கு இதே போலிஸ் சலாம் போட்டு பாதுகாப்பு கொடுக்குமாம். அதை ஏன்னு சொல்லுங்க? பிரச்சனைகளின் மூலத்தை பேசாமல், விளைவுகளை மட்டுமே பேசினால் எப்படி அண்ணே?

 26. வாசிப்பு கட்டுரை மூலம் நான் ஈம்மனுவெல் செகரன் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன். நான் இந்த கட்டுரை எழுதிய நபர் ஈம்மனுவெல் வாழ்க்கை வரலாறு பற்றிய அறிந்துருப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஈம்மனுவெல் செகரன் அவர் பற்றிய விக்கி பக்கத்தில் மேலும் விவரங்களை பதிவு செய்யலாம். பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  http://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_சேகரன்

 27. ஜான் பாண்டியனுக்காக உயிர் இழந்த அப்பாவிகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி. இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது தான். விளக்கொளியில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகள் போல், இவர்கள் இறந்து போனது வருந்ததக்கது தான். எந்த ஒரு மனிதனும் தன் உயிர் நல்ல விசயங்களுக்க இழப்பதை பெருமையாக கருதுவார்கள். ஆனால் இவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

  நம் மக்கள் இன்னும் ஜாதி மத இன மொழி அடிப்படையில் இன்னும் வேறு பட்டு கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களின் ரத்தத்தில் கல்லா கட்ட இன்னும் நிறைய தலைவர்கள் முகாம் இட்டிருக்கிறார்கள். இவர்கள் தன்னலம் ஒன்றையே பொது நலமாக கொண்டவர்கள். இவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் சுயமாக முன்னேற முயற்சி செய்யுங்கள். இத்தகைய தலைவர்களால் உங்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதை எண்ணி பாருங்கள். அவர்களிடம் இருந்து விலகி உங்களையும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தை காப்பற்றுங்கள். நீங்கள் இல்லையென்றால் இன்னும் ஆயிரம் பேர் இந்த தலைவர்களுக்காக உயிர் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்க. ஒரு டாக்டர், பொறியாளர், IAS , IPS என்று ஆக்குங்கள். உங்களின் குடும்ப வளர்ச்சிதான் உங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி. எல்லா அரசுதுறையிலும் உங்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதை முறையாக பயன்படுத்தி முன்னேற முயலுங்க.

  தீ அணைப்பு வண்டி, வஜ்ரா வண்டி, அரசு பேருந்து போன்றவற்றை எரித்தது தவறு (எந்த சமுதாயத்தினரும், எந்த காரணத்திற்காகவும்). மேலும் பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இது போன்ற பொது சொத்துக்களின் சேதம், பொது மக்களை மட்டுமே பாதிக்கும். இந்த பேருந்துகள் சீர் செய்யப்படும் வரை உங்கள் ஊருக்கு பேருந்துகள் வாராது. யாருக்கு கஷ்டம்?

  உங்களை வார்த்தைக்கு வார்த்தை ‘தலித்’ என்று சொல்லும் ஊடகங்கள், தலைவர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். இன்னொருவரிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

  நன்றி,
  நித்ய கல்யாணி

 28. வினவு!

  கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டத்தை பற்றிய கட்டுரையை தயவு செய்து வெளியிடவும்.

 29. அந்த ஏழு பேரின் அன்மா நித்திய இலைபாருதல் அடைய இரவனை வென்டுகிரேன் .,
  தூப்பக்கி சூடு நடதியவர்கலை தன்டிக வேன்டும்

 30. வினவு “குருசாமி மயில்வாகனன்” அவர்களே இந்த செய்திக்கு இந்த புகைப்படம் சற்றும் பொருந்தாது மற்றும் ஏற்றதுமில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தயவு செய்து புகைப்படத்தை மாற்றவும்.
  முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் தனியாகவோ அல்லது காவல்த…்துறையுடனோ போட்டுக்கொள்ளவும்.
  நீங்களே சாதி வெறியயைத் தூண்டுவது போல் புகைப்படம் போட்டிருக்கிறீர்கள்.. இது தமிழ் நாட்டை சுடுகாடாக்க நீங்கள் மிகவும் விரும்புவதுபோல் (தூண்டுவது போல்) உள்ளது.

  • ” நீங்களே சாதி வெறியயைத் தூண்டுவது போல் புகைப்படம் போட்டிருக்கிறீர்கள்.. இது தமிழ் நாட்டை சுடுகாடாக்க நீங்கள் மிகவும் விரும்புவதுபோல் (தூண்டுவது போல்) உள்ளது.” நல்ல மிரட்டுரிங்க …..

 31. டாக்டர் கிருஷ்ணசாமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஜெயலலிதாவும், ஜான் பாண்டியனும் சேர்ந்து செய்த சதியா இது?

  • அடைகாத்த கோழி பார்வையில் யோசிக்க வேண்டாம்.
   பருந்து பார்வையில் இந்த பிரச்சனையை நோக்கவும்.

 32. உயிரிழந்த நம் தமிழ் இன உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  எல்லாச் சம்பவத்திற்கும் (இந்த உயிரிழப்பு உட்பட) உடனே சாதி சாயம் பூசுவதனை ஏற்க இயலாது.

  சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் சாதி கட்சி/சங்கத் தலைவர்களை முதலில் கடுமையாக கண்டிக்கவேண்டும்.
  எந்த ஒரு சம்பவத்திலும் சாதி கட்சி/சங்கத் தலைவர்களோ இறந்ததாக சம்பவம் மிகமிகக்குறைவு. அப்பாவி சின்னஞ்சிறு பையன்கள் பழியாக்கப்படுகிறார்கள்.
  எல்லாச் சம்பவத்திற்கும் (இந்த உயிரிழப்பு உட்பட) உடனே சாதி சாயம் பூசுவதனை ஏற்க இயலாது.
  சாதி என்பது தானாக கொஞ்சம் கொஞ்சமாக காதல் திருமணத்தின் மூலம் மறைந்து கொண்டிருக்கிறது.அடுத்த சில ஆண்டுகளில் முற்றாக மறையும்.
  ஆனால் சாதி ஒழிப்பு! சாதி ஒழிப்பு! என வெற்றுவேசம் போட்டு மேடை மேடையாய் பேசி பலர் சாதியை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.

  முன்னால் துனை முதல்வர் ஷ்டலின் ஒரு சமத்துவபுர திறப்புவிழவில் “தமிழன் சாதியால்த்தான் கெட்டுப்போறான்” என்று..
  ஆனால் அந்த சமத்துவபுர வீடு ஒதுக்கீட்டில்கூட அந்த சாதிக்கு பத்து வீடு!! இந்த சாதிக்கு பத்து வீடுனு!!! தானே பகிர்ந்த்து கொடுக்கிறீர்கள்???
  மற்றும் அரசு அலுவலகத்தில் எல்லாம் ”சாதி” என்ற இடத்தை நீக்கிவிட்டு இதனைப்பற்றி பேசினால் நீர் உண்மையாக சாதி ஒழிப்புக்கு பாடுபடுகிறீர் எனலாம். ஆனால்!!!

  ஷ்டலின் போன்ற மற்றும் பொதுஇடங்களில் , மேடைகளில் சாதி ஒழிப்பு! வெற்றுவேசம் போட்டு சாதியை வைத்து பிழைப்பு நடத்துகின்ற பெருமக்களே!!!!
  உண்மையிலே சாதி ஒழிப்பில் அக்கரை உங்கள் நெஞ்சில் இருப்பின்…..

  1.பள்ளி , கல்லூரிகளில் முதலில் சாதி என்று கேட்பதனை நிறுத்துங்கள் அல்லது நிறுத்தச்சொல்லி போராட்டம் நடத்துங்கள்..
  2.சாதி சான்றிதல் கேட்டல்,வழங்குதலை முற்றாக நிறுத்துங்கள் அல்லது நிறுத்தச்சொல்லி போராட்டம் நடத்துங்கள்..
  3.வறுமையின் அடிப்படையில் படிப்புக்கு இட ஒதிக்கீடு கொடுக்கலாம்(கிராமப்புற மாணவர்கள், விவசாயி மகன் முன்னுரிமை மற்றும்
  கிராமப்புறத்தில் திறமையான ஆசிரியர்கள் குறைவு எனவே மதிப்பெண் குறையும்.)
  நல்ல மதிப்பெண் எடுத்த ஏழை மாணவனுக்கு கல்விக்கட்டணம் இல்லாமல் மதிப்பெண்-க்கு ஏற்றாற்போல்
  மருத்துவ,பொறியியல்,கலை கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்கலாம் என நிறவேற்றச்சொல்லுங்கள் அல்லது நிறவேற்றச்சொல்லி போராட்டம் நடத்துங்கள்…
  4.வேலைவாய்ப்பு சாதியின் அடிப்படையில் வழங்குதலை நிறுத்துங்கள் அல்லது நிறுத்தச்சொல்லி போராட்டம் நடத்துங்கள்..
  அதாவது கல்லுரியில் சேர்வதற்கு மட்டும் தான் 3-ல் சொன்னதுபோல் முன்னுரிமை/இடஒதிக்கீடு…. மற்றபடி வேலைவாய்ப்பெல்லாம் படித்து முடித்தபின் திறமைக்கேற்ப்ப மட்டுமே கொடுக்கவேண்டும்..
  என நிறவேற்றச்சொல்லுங்கள் அல்லது நிறவேற்றச்சொல்லி போராட்டம் நடத்துங்கள்….

  • இதெல்லாம் நடந்துருச்சுன்னா நாங்க எப்படி பொழைப்பு நடத்துவது…
   இங்கு “நாங்க” என்பதில் அரசியல்வாதிகள்(வியாதிகள்), அதிகாரிகள், சாதீ சங்க தலைவர்கள், மக்கள் புரட்சி இயக்கங்கள், வினவு போன்ற கமுனிச போராளி இதழ்கள், சமத்துவம் பேசும் சாணக்கியர்கள் அனைவரும் அடக்கம்…

  • தன்டா, முதலில் உங்க வீட்டில், உறவினர் வீட்டில் திருமணத்தில் பெண்/மாப்பிள்ளை பார்க்கும்போது சாதி பார்ப்பதை நிறுத்துங்க (அதாவது ஒரே சாதிக்குள் திருமணம்) நீங்கள் குறிப்பிடும் பல விசயங்களைப் பேசலாம்

 33. வினவு!! உண்மையிலே சாதி ஒழிப்பில் அக்கரை இருப்பின்!!! சாதியை வைத்து பிழைப்பு நடத்தாமல், எனது கோரிக்கைகளை படித்து பரிசீலித்து செயல்படுத்த முடியுமா???

 34. This is my friends comments

  Syed M. Dulkarunai இக்கட்டுரையை படிக்கும் பொழுது வினவும் சாதியை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறது என்பது புரிகிறது.இதன் மூலம் மிகப்பெரிய சாதிக்கலவரத்தை வினவு எதிர்பார்க்கிறது தெளிவாக புரிகிறது!

 35. அட 7 என்ற எண்ணிக்கை மிகவும் குறைவு,,,,
  இவனுக என்ன வன்முறை செய்தாலும் ஒட்டுக்காக
  இவனுக கால நக்குற அரசியல் வாதி ஜெயலலிதா இல்லை.
  இது ஒரு சூரசம்காரம்…
  இது தொடர வேண்டும் என்பது தென்பாண்டி மக்களின்
  விருப்பம்..முதல்வர் அவர்கள் வன்முறை
  —————- சட்டம் கொண்டு
  பொசுக்க வேண்டும்…

  • சூரன் தான் அசுரனை கொல்வான். செத்த 7 பேரும் அசுரன். அதாவது தமிழன். அப்போ ரகு தம்பி ‘சூரனா’? சூரன் என்ற பத்த்தின் அர்த்தம் ‘ரகு’ தம்பிக்கு தெரியுமா? நீயும் ‘அசுரன்’ தான் அது தெரியுமா உனக்கு?

  • சட்டம் என்பது இரு கூரான கத்தி போன்றது அதை கையாலும் போது ……………..
   கிட்லரே தற்கொலை செய்து கொண்டார் ……………………………………..

 36. பின்னூட்டமிட்டு தங்கள் சாதிசார்பற்ற:)​ நிலையை சாதி இந்து வன்மத்துடன் பதிவு செய்ய​ வந்திருக்கும் சாதிவெறியர்களுக்கு,
  வரலாறு நெடுகிலும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் உழைப்பை சுரண்டியும் திருடியும் பிழைப்பு நடத்திய​ சாதி இந்து மனோபாவம் தான் இன்று “அவன் தலித் என்பதாலேயே சுடப்படவேண்டியவன் தான்” என்று உங்களையெல்லாம் ஜெயாவின் தினவை எந்தவித​ பரிசீலனையுமின்றி ஆதரித்து வக்காலத்து வாங்க​ வைத்துள்ளது. உங்கள் சாதி இந்து மனோபாவத்தின் விளைச்சைலை வரும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய​ ஜெ-சசி-சோ பார்ப்பனக் கும்பல் தயாரகிவிட்டதைத் தெரியாமல் இங்கு வன்மத்தை கக்கும் வரலாற்று பிரக்ஞையற்ற சாதி இந்துக்களுக்கு நான் “முதுகுளத்தூர் பயங்கரம்”, முதுகுளத்தூர் கலவரம்” ஆகிய​ தலித்தல்லாதவர்களாலேயே எழுதப்பட்ட புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.

 37. பாதி கட்டுரை தான் படித்தேன் பிடிக்கவில்லை…. ஒரு கட்டுரையின் மூலம் உங்களின் சாதிவெறியை காட்டுகிறீர்… சாதிவெறியை பரப்புகிறீர்…
  வாழ்க வளமுடன்

 38. ஜான்பான்டியனுக்காக இவர்கள் உயிரை விட்டது கொடுமையிலும் கொடுமை.. தலித் மக்கள் இந்த ரவுடிகள் பின்னால் திரள்வதை வினவு ஆதரிக்கிரதா? இவனை போன்ற கொலைகாரர்கலிடம் இருந்து தலித் மக்கள் விலகி நிற்பதெ நலம்..

  • இவங்க, ஜான்பாண்டியனுக்காக உயிரை விட்டோம்னு உங்ககிட்ட வந்து சொன்னாங்களா! சாலை மறியல் செய்தவர்களை கொன்னது போலீசு. இங்கு குற்றாவாளியாக சுட்டிக்கட்டப்படுவது போலீசையும் அரசையும்தான். இது இக்கட்டுரை முழுக்க விரவிக்கிடக்கிறது. கட்டுரையையும் சம்பவத்தையும் முழுக்க உள்வாங்கிக் கொள்ளாமலே பலர் விவாதிக்கின்றனர். இவர்களெல்லாம் Lakes of institute ல் படித்தவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

  • அடைகாத்த கோழி பார்வையில் யோசிக்க வேண்டாம்.
   பருந்து பார்வையில் இந்த பிரச்சனையை நோக்கவும் ‘தமிழ்’ அண்ணே.

  • தேவர் மட்டும் என்ன ஒழுக்கமா ? பின்னால ஒரு கோட்டம் திரிது. அதை பற்றி ஒன்னும் கேட்கவில்லை . இமானுவேல் சேகரனை கொன்றது தேவர் தான் அது தெர்யும

 39. வினவு தலித் மக்களுக்கு அதரவாக பேசுவதை போல கட்டுரை எழுதி அவர்களை சிறுமை படுத்தவே செய்கிறது. இந்த கலவரம் ஒரு அரசியல் காரணத்திற்காகவே விளம்பரதிர்ககவும் செய்யபட்டுலதகவே நினைக்கிறன்

  • உங்களை வார்த்தைக்கு வார்த்தை ‘தலித்’ என்று சொல்லும் ஊடகங்கள், தலைவர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். இன்னொருவரிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

 40. பரமக்குடி கலவரத்தில் தேவேந்திரகுல மக்களை தாங்கள் தலித் மக்கள் என்று எழுதிஉள்ளீர்கள். இது வன்மையாக கண்டிக்க தக்கது. ‘தலித்’ யார் என்று தெரிந்தால் எழுதுங்கள், இல்லையென்றால் எழுதாதீர்கள். தேவேந்திரகுலமக்களுக்கு ‘தலித்’ என்று பெயர் வைக்க நீங்கள் யார்? பல தடவை உங்களுக்கு இமெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் சொல்லியும் “செவிடன் காதில் ஊதும் சங்கு” போல் உள்ளது உங்களது செயல். இனிவரும் செய்திகளில் தேவேந்திரகுலமக்களை தலித் என்று எழுதவேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு. தேவேந்திரகுல வேளாளர் மக்கள்.

  • இது முற்றிலும் புதிய செய்தியாக உள்ளது.தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கணிசமானவர்களின்