Wednesday, February 28, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

-

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!தொடர்ச்சியாக​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய​ பிராஜெக்ட்டை அடுத்த​ ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட​ மன​ உளைச்சலே இந்த​ தற்கொலைக்கு காரணமாக​ ஊடகங்களால் பேசப்பட்டது.  கடந்த​ ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக​ நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை  காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக​ மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான​ நிதினின் தற்கொலையை மூடிமறைக்க​ ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.

2008-ல் சிஃபி வெளியிட்ட​ செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த​ ரித்திகா தோய​ சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த​ மாணவர் தர​ மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான​ நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய​ ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.  பிப்ரவரி 2011-ல் நடந்த​ ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக​ சமீபத்திய​ உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன​ அழுத்தமுமே தற்கொலைக்கான​ காரணமாகக் கூறுகிறது.  ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான​ நிர்வாக​ முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த​ நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என​ சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற​ பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர்.  டெக்கான் குரோனிக்கிளில் வந்த​ நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த​ நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல்  கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல​ என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க​ ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக​ நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த​ ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த​ மொத்த​ மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார​ நோக்கில் ஆராய​ வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய​ அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான​ சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக​,   ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன​ மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற​ உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார​ அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த​ பத்தாண்டுகளில் மனிதவள​ மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார்  (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, ​ உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற​ நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம்.  ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான​ கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான​ நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட​ நிறுவன​ வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய​ அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய​ பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான​ தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான​ தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக​ நீக்கி, முழுக்க​ முழுக்க​ நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும்.  இக்குழுமத்தின் உறுப்பினர்களாக​ இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் ​ மூத்த​ பேராசிரியர்களே.  இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற​ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக​ (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.  அதுபோல​ ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய​ மையப்படுத்தப்பட்ட​ விதிமுறைகளில்லை.  உதாரணமாக​ பல​ துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில​ துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி  அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற​ மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த​ கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது.  இந்த​ மாதிரி துறை சார்ந்த​ மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட​ ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத​ சூழலே இங்கு நிலவுகிறது.  இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த​ காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த​ பிரச்சனைகளுக்காகவோ​ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான்.  இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற​ உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக​ உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன​ மேலாண்மை காரணமாக,​ மெரிட்டிலோ, இட​ஒதுக்கீட்டிலோ படிக்க​ வரும் பார்ப்பனரல்லாத​ மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய​ பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள​ 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக​ மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த​ ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக​ தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக​ ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது.  இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர்.  பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த​ கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய​ அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக​ இருக்கிறது.  ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள​ ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர​ நெட் (NET), கேட் (GATE) போன்ற​ தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.  இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான​ கல்விமுறையும், மையப்படுத்தப்படாத​ பாடத் திட்டங்களும் காரணமாக​ முதுநிலை பட்டம் பெற்ற​ மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த​ நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய​ சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள  அதீத​ ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ​ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புக​ளையும் பற்றியுள்ள ஏராளமான​ கற்பனைகளினாலே பொதுவாக​ மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய​ தத்துவ​ மரபில் காலங்காலமாக​ ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய​ உதாரணமாக​ நம்ம​ கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த​ புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக​ பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய​ இடத்தைக் கைப்பற்றினர்.​  காலனிய​ காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான​ கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்க​ளுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால்,  இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய​ கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக​ ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக​, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational)​ ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப​ (technological)  ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது.  ஒரு சில​ துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட​ பல​ கோடி ரூபாய் மதிப்பிலான​ சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட​ பன்னாட்டு பதிப்பகங்களையும்  மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த​  மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட​ உருவாக்க​ முடியாத​ ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய​ தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய​ ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக​ இருக்கும் போது, இந்த​ சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய​ அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய​ முட்டுக்கட்டையாக​ இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான​ தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக​ இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட​ ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக​ நல்ல​ நாட்களான​ ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான​ பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி,  சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி,  எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும்  உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ  ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த​ கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித​ நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற​ கையறு நிலையில் வெளியேற்ற​ இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற​ தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட​ உருவாக்குவதில்லை! இப்படி இந்திய​ உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும், மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதார​ரீதியாகவும், கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க​, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட​ ஐஐடி சென்னையில் நடந்த​ அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான​ டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட​ வலியுறுத்தி புரட்சிகர​ மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.  ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக​ மனிதவள​ மேம்பாட்டுத்துறை கடந்த​ மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட​ எந்த​ அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக​ இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய​ உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார்.  இதற்கு பதிலளித்த​ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார்.  உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய​ அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய​ இந்த​ நாடகத்தில் மைய​ இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த​ முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க​ வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற​ வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள​ இந்த​ நஞ்சின் உண்மையான​ தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய​ உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக​ தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக​ உணர்ந்தும் எந்த​ ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக​ வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற​ பேரில் சில​ எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை   ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற​ நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக​ மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை.  இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

_______________________________________________________

– ஆலங்கட்டி

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. ஐஐடி-களில் காணப்படும் இந்த அநியாயங்கள் அத்தனையும் மத்திய பல்கலைக்கழகமாகிய புதுவைப்பல்கலைக்கழகத்திலும்(குறிப்பாக அறிவியல் புலங்களில்)உண்டு. நான்கு சுவர்களுக்கு உள்ளே இந்த அநியாயங்கள் நடப்பதால் வெளியே தெரிவதில்லை. பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் தெரிவிக்காததற்கு காரணம் தங்களுடைய தனிப்பட்ட ஒழுக்கமும் பணித்திறமையும் சந்திக்கு இழுக்கப்பட்டு எதிர்காலம் பாழ் படுத்தப்பட்டு விடும் என்னும் பயம். அப்படியே துணிந்து புகார் செய்தாலும் இம்மாதிரியான விஷயங்களில் எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் முடியாது. பட்டம் வாங்கிய பிற்பாடும் பல ஆண்டுகளுக்கு “Gஉஇடெ” ன் அனுசரணை சிபாரிசு கடிதங்கள் வடிவில் அவ்வப்போது
  தேவைப்படுவதால் தங்களுக்கு நேர்ந்த அநியாயம் பற்றி மூச்சுவிடும் சிந்தனையே
  மாணவர்களுக்கு எழுவதில்லை. இந்த பி.எச்.டி என்னும் புதைகுழியில் சிக்கி சீரழிந்து இளமை பொங்கும் வாலிப பருவத்தை தொலைக்கும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும்
  ஏதோ ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே காலம் தள்ளுகிறார்கள். இந்த கட்டுரையாளர் கவனிக்காமல் விட்ட இன்னொரு விஷயம் இருக்கிறது. வழிகாட்டி என்று சொல்லப்படக்கூடிடய இந்த பேராசிரியர்கள் தங்களுடைய “Favouritism” மூலம் தங்களுக்கு கீழ் இருக்கும் ஆய்வு மாணவர்களிடையே கொடுமையான போட்டி பொறாமைகளையும் கடுமையான சண்டைகளையும் ஏற்படுத்துவது தான் அது.

 2. பார்பனர்கல் தான் காரனம் என்ரு கன்டுபிடித வினவுக்கு பாராட்டுக்கல்

  • Hello Ragu

   பார்பனர்கள் மட்டுமே காரணம் என்றுகூற முடியாது. மறுகாலணியாக்கத்திற்கு தகவமைத்துக் கொண்ட பார்பனீயம் மற்றும் தரகுமுதலாளித்துவம் இவை இரண்டும் சேர்ந்து தான் மாணவர்களை சுரண்டுகிண்றன.

   • பாவல் அப்பாவியா இருகேஙலெ
    பார்பனர்கள் மட்டுமே காரணம். வெரு யெதையும் யெட்ரு கொல்ல முடியாது

 3. The new Tamil Nadu assembly building (Rs 1200 crore) will be converted into a
  “Super Speciality Hospital”.

  The Chennai – Kotturpuram Central Library (Rs 170 crore, 9 floor building) will be converted into a

  “Children Speciality Hospital”

  What next…….
  The Veda House (Poes Garden) will be converted into a Super Speciality ..
  “Mental Hospital”
  with all Facilities.

  All Tamils can visit this Mental Hospital soon…………

 4. ada ada ada athu eppadi ethu nadanthaalum atha paarpniyathoda mudichu poturinga… very good keep it up vinavu…etho sollanum nu solli irukinga…naan 1std la irunthu college varaikum govt school govt college than…aana ninga solra mari entha maanavarum vilipunarvoda illa ithu nitharsanamana unmai…naan 12th std padikum pothu enaku kanitham matrum uyiriyal ku aasiriyargal kidayathu pala murai govt idam murai ittu paarthayitru palane illai…athu mattum illai angu irukum anaithu aasiriyargalume thannidam irukum practical marks 50 vaithu kondu engalai appadi mirattuvaargal…avargalil yaarum paarpanar alla ennal nirubikavum mudiyum…athe pol than college layum avargalidum irukum internal marks vaithu kondu aniyayathuku mirattuvaargal avargaluku velaikaarargalaga kuda naam iruka vendum ketka villai endraal marks kidayathu avargal kuraithum irukiraargal…athilum paarpanargalai naan kandathillai…ithu ella idangalilum nadakirathu…ketpatharku aal than illai…thavira enaku therinthu entha paarpanargalukum udhavithogai yaarum kudupathillai…matravargal vaangugiraargal…ethai vaithu udhavi thogai kodukurirgal jaathiyai vaitha allathu avargalin kudumba soolnilayai vaitha???? ennudaya thozhi oru muslim migavum panakkari oru naalaiku oru caaril varuvaal sirupanmayinar endru avaluku udhavithogai kodutha arasu…migavum kashta pattu oru naal saapatuke vazhi illatha enaku kudukave illai yen naan paarpanar endra ore kaaranathinaala…vetka kedu niraintha naadu…kodukattum ellorukum kodukk=attum yaaridam illayo avargaluku kodukattum…athu yaaraga irunthaalum entha jaathiyaga irunthaalum sari…jaathi per illamal palligalil serka mudiyum endra katturayai veliyittu vittu ningale marupadiyum jaathiyin adippadayil paarpanargalai saaduvathu muraya????thayavu koornthu ungaluku ondru solli kolgiren eppolutho etho oru thalaimuraiyinar seitha thavarukku…ippothirukum thalaimuraiyinarai thandippathu miga thavaru…ippothu intha thalaimurayil irukum entha kulanthayum aduthavarai thalli vaithu paarka vendum endru ninaipathu illai…purinthu kollungal iniyenum jaathiyin adippadayil yaarayum saadamal irungal evvalavu koorinaalum vinavirku kaathu ketkathu….thangal arippai thaaralamai thirthu kollungal…

  • பெரிய பதிவு, தமிழை ஆங்கிலத்தில் படிப்பது கடினமாக இருக்கிறது.

   இத்தளத்தில் பதிவிடும்போது “தமிழ் ஒலிபெயர்ப்பு (அம்மா = amma )” க்கு முன் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் தமிழில் type செய்யலாம். /

   http://www.google.co.in/transliterate/tamil – ல் தமிழில் type செய்து cut/copy paste செய்யலாம் /

   Free NHM writer போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம்.

  • It seems that you have taken the arguments personally. There is a survival ideological compulsion for ‘Vinavu’. Though I agree with your observations that such social stigmatization is not that much prevalent due to communication development and shrinking of personal space in the era of globalisation, I think it is mainly because of the onset of technological revolution or whatever you say, not because of change in mind set. Though it is illegal, we have to accept that still there is untouchability. I believe that you are from the so called Brahmin community. Are you ready to have dinner at one cobbler’s house or any other washerman’s house? Even if you are ready, is your brother or sister ready? I am not sure that you would answer affirmatively.

   Please do not take certain arguments by heart and do not let it disturb your intellectual equilibrium.

   Regards.
   Saravanan.k

   • hahahaha…..am i ready i think that u dont know that we had had dinner lunch breakfast everything with those communities what you say…k leave me, my brother and my sistereven my dad my grandma she is 85 years old she had lunch with me in my friends house snd she is a SC….k not all are seeing everyone badly what am saying is there are people who do bad things we cant help with them….for this you shouldn’t speak the whole community as a wrong one….do you think that all other community people are very good and they are very pure???no one in this world is perfect so just mention them in single and their mistakes not based on communities or religions….that is my point…try to understand that first…

 5. பார்ப்பனர்கள் ரொம்ப யோக்கியர்கள் என்பது சென்னை ஐஐடி-யில் மாணவராக சேர்ந்தால் தெரியும். இன்னும் சந்தேகம் என்றால் அங்கு பல ஆண்டுகளாக அவமானங்களோடு உதவிப்பேராசிரியராகவே பணி செய்யும் வசந்தா கந்தசாமியிடம் கேளுங்கள். பேராசிரியர் முத்துவீரப்பன் ஆகியோரிடம் கேளுங்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் பெரும்பாலான உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் இடைத்தட்டு மற்றும் அடித்தட்டை சேர்ந்த சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏதாவது ஒரு வகையில் இந்த உயர்வர்கத்தினரால் சீரழிக்கப்படுகிறார்கள். இது வட இந்தியாவில் ரொம்ப அதிகம்.

  • எல்லா சாதியிலும் சிலர் இப்படி இருக்கிறார்கள், பார்ப்பனர் அதிகம் உள்ள இடங்களில் இது பளிச்சென தெரிகிறது. பார்ப்பனர்களிடையேயும், அவர்கள் உட்பிரிவு உரசல்கள் காழ்ப்புணர்ச்சிகள் இருப்பதுண்டு.

 6. உங்க புரட்சிகர மாணவர் இயக்க பாட்சா எல்லாம் ஐ.ஐ.டி மாணவர்களிடம் பலிக்காது… அப்துல் கலாமிடம் போய் அணு உலை வேண்டாம்னு சொல்லுற மாதிரி இருக்கு.. உன்னோடு சேர்ந்து போராட்டம் புரட்சின்னு பண்ணவா பல ஆண்டுகாலம் தயார் செய்து தேர்வெழுதி ஐ.ஐ.டி உள்ள போறாங்கே … SFI யாலே கிட்ட போக முடியல… நீங்கல்லாம் என்ன பாசு…

 7. இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே”

  “இன்றும் இந்த நிலை தொடர்கின்ற அவலம் இந்தியா முழுவதும் உள்ளது”

 8. அபுதுல் கலாம் என்னும்கோமாளிக்கு அணு உலை விற்பனை அல்ல, சுண்டல் விற்பனை கூட தெரியாது.

  பாசு… அவரவர் வர்க்கம் அவரவருக்கு. முதலாளித்துவ சுரண்டல்கள் என்று ஐஐடி காரர்களுக்கு உரைக்குமோ அன்றுதான் அவர்களும் வர்க்கமாக இணைந்து முதலாளித்துவத்தின் நுகத்தடியை உடைத்தெறிவார்கள். முன்னால் வைக்கப்பட்ட பிடிவைக்கோலுக்காக நுகத்தடியின் வலி மரத்திருக்கும் மாடு போன்றோர் இந்த அறிவாளி அடிமைகள். காலம் வரும்போது இவர்களையும் அடிமாடுகளாக அனுப்ப தயங்காது இந்த முதலாளிவர்க்கம்.

  • இவரை அவ்வளவு எளிதாக கோமாளி என்று ஒதுக்கித்தள்ளி விட முடியாது. இவர் ஒரு brand image. இந்த brand image உருவாக்க முதலாளிவர்க்கம் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறது. இளைய தலைமுறையின் முன்மாதிரி நாயகனாக இவர் உருவாக்கப் பட்டிருக்கிறார். அதன் பொய்மையும் கயைமையும் கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். இவரைக் கொண்டு பார்ப்பன வகையறா, காவி வகையறா, முதலாளி வர்க்கம் அடைந்த ஆதாயம் ஏராளம்.

 9. அபுதுல் கலாம் என்னும்கோமாளிக்கு அணு உலை விற்பனை அல்ல, சுண்டல் விற்பனை கூட தெரியாது.

  appa ungalukku ellam theriyumo???

  • யாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிஞ்சது போல பிலிம் காட்டும் அப்பாடக்கரு இந்த அப்துல் கலாம்.

 10. எங்களவா தான் அறிவாளிகள் சைண்டிஸ்ட் எல்லாமே தெரியுமோ. ஒரு முஸ்லிமை விஞ்ஞானி அறிவாளின்ட்டு தூக்கி வெச்சுண்டு ஆடரேள் அவருக்கெல்லாம் ஒண்ணுமே தெரியாது சும்மா சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டில் மேலே வந்தவராக்கும் போங்கோ.

 11. The most important reason behind all these problems in IITs is its perceived stature in India. These institutes are heavily funded by the central government not to precisely serve our country. It means they are ‘Indianised’ institutions. It is an industry in the guise of ‘institutes of excellence’ potentially sponsored by Multi national companies. That was why persons like Narayana Moorthy are very much concerned about the falling standards of IITs.

  In order to create artificial demand of skilled work force to be deployed not necessarily in India but throughout the world, the entry into these institutes is intentionally kept extremely high. Year long preparation for entry into them makes one mentally fatigued and he becomes more vulnerable to frustration in due course of time when he finds it difficult to adjust with heavy work load and what is expected of him after getting graduated from it. The fee structure of these institutes forces poor students to depend on bank loans which again aggravates the problem.

  As long as we fail to oblige these highly pampered institutes to serve India and its people such suicides might be inevitable in given the situation of relative deprivation. If the students in IITs feel that they are going to be in India only after their study and their salaries will not be in dollars and they will lead a life like any other ordinary Indian, the gravity of relative deprivation would definitely come down and thus do suicides.

  As far as the Guides are concerned, I fully agree that there are some professors who can not be called other than fools who decide the fate of his students. IITs are not famous for its research programmes. Frustration level here is two folded. Undergraduate students suffer from inability of coping with study load where as research scholars suffer from uncertainty of future. Addressing our indigenous employment issues and augmenting the standards of our other research facilities to create a robust economic structure will only help our country to come out of yoke the foreign countries have put in whose concerns are what methodically being addressed by IITS. It is not a healthy profile of any developing economy. Why are not suicides so much prevalent in other institutes which are not expected to supply workforce to other countries? Answering this question too will give the reasons behind such suicides.

 12. சரவணன்
  நீங்கள் கூறியது போல​ இன்றைய​ நிலையில் ஐஐடிக்கள் ஆராய்ச்சி நிறுவனங்களாக​ இல்லாமல் இருக்கலாம். இதுவரை அவை வெறும் பிடெக் பட்டதாரிகளை கார்பரேட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஃபாக்டரியாக​ மட்டுமே இருந்தது. ஆனால் கட்டுரையில் கூறியது போல​, வரும் 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் போது, அரசு உயர்கல்வியில் கடைசி கட்ட​ உட்கட்டுமான​ சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போகிறது.
  (http://www.indiaeducationreview.com/article/bold-structural-changes-needed-indian-higher-education-system-during-xii-plan) வரும் ஆண்டுகளில் ஐஐடிக்களை முக்கியமாக​ ஆராய்சிக்கான​ நிறுவனங்களாக​ மாற்ற​ திட்டமிட்டே கடோட்கர் கமிற்றி பரிந்துரைகள் உள்ளன. இங்கு முக்கியமாக கவனிக்கப்பட​ வேண்டிய​ விஷயம் அவை ஆராய்சி நிறுவனங்களாக​ உள்ளதா இல்லையா என்பதல்ல​. மாறாக​ அவை யாருக்கு சேவை செய்வதற்காக​ உருவாக்கப்பட்டுள்ளது என்பதே. இந்திய​ உயர்கல்வியும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகவியல் சார்ந்த​ அனைத்து ஆய்வுகளும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் பொருட்டு, அவர்களை சார்ந்து மட்டுமே உள்ளது. ஆனால் ஐஐடி, எயிம்ஸ் உட்பட்ட​ உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதால் இவற்றில் சாதிய​ சுரண்டல் இன்னும் கூடுதலாக​ உள்ளது. இந்த​ உட்கட்டுமான​ மாற்றங்கள் ஏழைகளுக்கு கல்வியை எட்டாக் கனியாக்கும், நடுத்தரவர்க்கத்தை கல்விக்கொள்ளை என்ற​ பெயரில் மேலும் பிழிந்து ஏதுமற்றவர்களாக்கி வேலையில்லாத​ ரிசர்வ் பட்டாளத்தின் எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கும். ஏகாதிபத்தியமும் அதன் இந்திய​ கூட்டாளிகளான​ பார்ப்பனியமும் ‘சொந்த​ செலவில் வைக்கப்பொகும் சூனியமே’ இந்த​ உட்கட்டுமான சீர்திருத்தம்.

 13. “மிஸ்டர் ஐய்யனார், நான் சென்னையிலதான் படிச்சேன். ஐ.ஐ.டி. கேள்விப்பட்டிருக்கீங்களா? அதில நான் ஏ கிரேடு. ஜஸ்ட் படிப்பை முடிச்சிட்டு படியிறங்கி வர்றேன், அப்படியே நாசாக்காரன் அள்ளிட்டான். கேம்பஸ் இன்டெர்வியூல, ‘எஃப்.சி. திருச்சி பிராமணாள்னு’ என் ரெஸ்யூம்ல பார்த்து கண்டுபிடிச்சுட்டான். இண்டர்வியூ பண்ணினவரும் பிராமின். அப்புறம்… நேரா நாசாதான். பத்து வருஷமாகுது. நீங்க எங்க படிச்சீங்க?”

  “நானா, கொட்டாம்பட்டி புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ. டிப்ளமா சார்.” என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டேன். ஏனோ என் படிப்பை இவரிடத்தில் சொல்வதற்கு மிகுந்த…

  http://puthiyapaaamaran.blogspot.com/2011/11/blog-post.html

  • அண்ணே பாமரன்,
   கதைல வர ரகாவச்சரிக்கு பாவம் அவரு ஐய்யரா ஐய்யங்கரனு மறந்துபோயிடிச்சு போலருக்கு.

  • பார்ப்பனர்கள் இந்தியாவில் அரசு பணியில் இருந்தால்தான் உங்களுக்கு எரிச்சல் பொத்து கிட்டு வருகிறது… இட ஒதுக்கீடு மூலம் அரசு பணிகளுக்கு பார்ப்பனர்கள் வருவதை வெகுவாக கண்ட்ரோல் பண்ணியாச்சு… அவர்கள் அயல் நாட்டில் கூட வேலை பார்க்க கூடாது அப்படின்னா எங்கதான் போக சொல்லுறீங்க? நான் கத்தரில் கஷ்டப்படுகிறேன், நீயும் அதே மாதிரி அமெரிக்காவில் கஷ்டப்படனும்னா? அவனை பார்த்து நானும் அல்லது நமது பிள்ளைகளை அவனை மாதிரி படிக்க வைத்து நல்ல வாழ்க்கை வாழ வைக்கலாம் என்று எண்ணுவதுதானே அறிவுடைமை?

   மற்றபடி நீங்கள் சொல்லும் கத்தாரிலும் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு, கார், கம்பெனி பங்களா என்று சொகுசாக வாழும் எத்தனயோ இந்திய குடிமக்கள் இருக்கிறார்கள்… இவர்கள் அனைவரும் என்ன பார்பனர்களா? உடனே இஸ்லாமியர்கள் என்று கூறி விட வேண்டாம்.. நீங்கள் படித்த அதே கொட்டாம்பட்டியில் முதுகலை கணினி அறிவியல், மேலாண்மை, வணிகம், ஆய்வு படிப்புகள் படித்த குப்புசாமிக்களும் , மாடசாமிக்களும் கூட வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் நல்ல நிலையில் உள்ளனர்.

   IIT யில் படித்து விட்டு மாதம் 25000 சம்பளம் வாங்கும் இந்தியனும் இருக்கிறான்… ITI யில் படித்துவிட்டு மாதம் 2 ,50 ,000 சம்பளம் வாங்குபவனும் இருக்கிறான்… நீ என்ன படித்தாய் என்பதை விட எப்படி படித்தாய் என்பதே முக்கியம்… பிறகு ITI படித்துவிட்டு அமெரிக்காவில் வேலை வேண்டும் என்று நினைப்பது கொஞ்சம் ஓவர் தான்…

 14. பாவம் பார்ப்பனர்கள்,நகராட்சி வேலைகளான துப்புரவிலும், கொசு மருந்து அடிப்பதிலும், ரோடு போடும் வேலைகளில் ஈடுபடும் பார்ப்பனர்களை கண்டால் என் மனம் பொறுக்கவில்லையே, என்ன செய்வேன்.

   • நகராட்சி பணிகளில் எந்த இனத்தவராயினும் இன்றைக்கு வேலை வாங்க முடியாது… மேற்படி பணிகளில் வாரிசுகளை புறவாசல் வழி நுழைத்து விடுவதை வழக்கமாய் கொண்டிருக்கின்றனர்..

    • ரொம்ப​ வருத்தப்பட​ வேணாம் மீனாக்ஷி. நகராட்சி துப்புரவுப் பணி மட்டுமல்ல​, எங்கள் வீட்டு கக்கூசுகளை கழுவும் பணியைக் கூட​ 100% பார்ப்பனர்களுக்கென்றே ஒதுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் 100% அனுபவித்துவரும் கோயில்கருவறைக்குள் இருக்கும் கடவுளுக்கு ஆய் கழுவி குளிப்பாட்டிவிடும் தீட்டான பணியை இனிமேல் நாங்கள் முழுவதுமாக​ செய்ய​ நிர்பந்தித்தும், உங்களை இந்த​ இழி தொழிலிலிருந்து விடுவித்து உங்கள் வாரிசுகளுக்கும் நகராட்சி துப்பரவுத் தொளிலை பரம்பரைத் தொளிலாக்கி முளு இட​ஒதுக்கீடு கொடுக்க​ அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவர​ அரசை நிர்பந்தித்து சிறை நிரப்புப் போராட்டம் நடத்துவோம்… இது சத்தியம்… சத்தியம்.. சத்தியம்…

     • இது பொறுப்பான பதில் அல்ல… உன் வீட்டு கக்கூசை ஏன் மற்று சாதிக்காரன் கழுவ வேண்டும் என நினைக்கிறாய்? சிறை நிரப்பும் போராட்டம் செய்ய நீ என்ன ஸ்டாலினா? நீ சிறை நிரப்ப கூப்பிட்டால் உன் பின்னால் உன் உற்ற உறவு கூட வராது… பொறுப்பற்ற நான்காம் தர பதில்களை தராமல் ஆக்கப்போர்வமாக சிந்தித்திடு செயல்படவும்… இன்றைக்கு நகராட்சி, மாநகராட்சி துப்புரவு பணிகளில் வேலை வாங்க என்ன நடைமுறை, என்ன தேர்வு முறை, என்ன விகிதாச்சரத்தில் இந்த பணியிடம் நிரப்பப்படுகிறது, என்ன ஊதிய விவரம் போன்ற விவரங்களை தெரிந்துகொண்டு மறுமொழி எழுத முனைந்தால் கருத்து செறிவு கூடும்…

      \\அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவர​ அரசை நிர்பந்தித்து சிறை நிரப்புப் போராட்டம் நடத்துவோம்\\
      அரசியலமிப்பில் எத்தனையாவது சட்டத்தினை திருத்தம் வேண்டும் என்று உன் வழக்கரிஞ்சறை கேட்டுப்பார்.. விளைவுகள் 69 ஆக இருக்கும்… !!!!

     • the the worst answer…u know only to criticize people i told there is no entry for us in govt jobs that is the truth….wat fault u find in thatwho are you to give job to us….nthng for us….how 3rd grade thinking that others want to clean ur toilet huh first think that am a girl and speak properly dont show ur over cleverness here k…simply dont give replies as others want to think u as very intelligent….try understand and give replies….then one thing if u dont have belief in god shut up and sit nobody asked u explanation….only Brahmins are worshipping god r wat??? try to speak with some manners…..people like u r stopping the growth of our country….if people inside our country itself are like this then how our nation will improve no chance….naangal kadavulin karuvarayil irupathai mattamai pesuvathai niruthi vittu……veru yaarenum angu poojai seya vanthaal muthalil ungal vitil ullavargal othukolvaargala endru kelungal….piragu manithan ketta kelvigaluku bathil alikavum….u can give coomments but give with some decensy….dont know how to speak in public…its not ur home and u r nothing to me….mind it…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க