Wednesday, October 4, 2023
முகப்புஉலகம்அமெரிக்காசில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!

-

‘உடலில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத எவரேனும் இருந்தால் என்னோடு வாருங்கள். ஐரோப்பிய ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது எனது அடிமயிருக்குச் சமமானது’ என்று 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட தனது திருச்சிப் பிரகடனத்தில் அன்றைக்கு வாணிபம் செய்ய வந்து நாட்டையே ஆக்கிரமிக்கத் துடித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வீழ்த்த மக்களை அறைகூவி அழைத்தார் சின்ன மருது. தலை சாய மறுத்த அந்த வீரம் ஆற்காடு நவாப் போன்ற கைக்கூலிகளாலும்  கௌரி வல்லப உடையத் தேவன் போன்ற துரோகிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.

இரண்டு நூற்றாண்டுகள் கழிந்து போயின.  இன்றோ ‘ஐரோப்பியர்களே அமெரிக்கர்களே வாருங்கள். வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள். உங்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தேயிருக்கும்’ என்று காலில் விழுந்து கூப்பிடுகிறார் உலகவங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங். வல்லபத் தேவன்களோ பல வண்ணங்களில் பல வடிவங்களில் அந்நிய மூலதனத்தின் பாதங்களை நக்கிக் கிடக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களின் அறிவுஜீவிகளாக, தமிழ் வலைப்பதிவின் மொக்கைகளாக இந்த துரோகம் எடுத்திருக்கும் வடிவங்கள் எண்ணிறந்தவை.. இவர்கள் வைக்கும் வாதங்களின் சாராம்சம் ஒன்று தான் – “அண்ணாந்து பாருங்கள்; எருமை ஏரோபிளேன் ஓட்டுகிறது”

சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகைசெய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறவுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வலையுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் அந்நிய மூலதனத்தை ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.

அண்ணாச்சி ஏமாற்றுவார் அம்பானி ஏமாற்றமாட்டார்!

“அண்ணாச்சிகள் வாங்கும் பொருட்களுக்கு பில் போடுவதில்லை. சிட்டையில் தான் எழுதிக் கொடுக்கிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் அரசுக்கு வரியிழப்பு ஏற்படுகிறது. அரசை ஏமாற்றிய அண்ணாச்சி, அந்தப் பணத்தைக் கொண்டு சென்னைக்கு வெளியே நிலங்களை வளைத்துப் போட்டுக் கொள்கிறார். இதே கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தால் ஒழுங்கான கம்ப்யூட்டர் பில்லிங் இருக்கும். வரி ஏய்ப்பும் இருக்காது.” இது அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் ‘உருப்படாத’ பதிவர் ஒருவரின் கண்டுபிடிப்பு.

அண்ணாச்சி ஏமாற்றுகிறாரா என்பதை பிறகு பார்ப்போம். அம்பானி யார் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். வெறும் மண்ணையும் கல்லையும் பெட்டியில் அடைத்து ‘ஒழுங்காக’ பில் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தி ஏற்றுமதி மானியம் வாங்கிய ஒழுக்க சீலர் தான் சீனியர் திருட்டுபாய் அம்பானி. அவரின் சீமந்த புத்திரனோ வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக கள்ளக்கணக்கெழுதி ‘ஒழுங்காக’ பில் போட்டு தான் 1300 கோடிகளை தேட்டை போட்டவர்.

வரியேய்ப்பு செய்து அரசுக்கு பட்டை நாமம் போடுவதில் ரிலையன்ஸ் உள்ளூர் கேடி என்றால் வால்மார்ட் சர்வதேச மொள்ளமாறி. தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை  கடைக்கான வாடகையாக செலுத்துவதாக கள்ளக் கணக்கெழுதி அதற்கு வரிவிலக்குப் பெற்றுள்ளது வால்மார்ட். இதில் சம்பந்தப்பட்ட இடங்களும் வால்மார்ட்டிற்கே சொந்தமானவை என்பது பல பத்திரிகைகளால் அம்பலப்படுத்தப்பட்டது. தானே தனக்கே செலுத்திய வாடகைக்கு வரிவிலக்குப் பெற்றதில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை வரியேய்ப்பு செய்துள்ளது. இது மட்டுமின்றி எந்தெந்த வகைகளில் வரி ஏய்ப்பு செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல ‘எர்னஸ்ட் & யங்’ என்கிற தனியார் கணக்குத் தணிக்கை நிறுவனத்தை அமர்த்திக் கொண்டிருக்கும் வால்மார்ட் அடித்திருக்கும் கொள்ளையின் அளவு இன்னதென்று தெரியாமல் மேற்குலக நாடுகளே முழிபிதுங்கி நிற்கின்றன.

எர்னஸ்ட் & யங் நிறுவனத்தை அமர்த்திக் கொள்ளும் வசதிகளெல்லாம் நம்ம அண்ணாச்சிகளுக்குக் கிடையாது தான். அவர்கள் சாமர்த்தியமெல்லாம் ரெண்டு கீத்து தேங்காய் பத்தைக்கு மூன்று ரூபாய் என்று சிட்டையில் எழுதிக் கொடுப்பதோடு சரி. காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் அண்ணாச்சிகளின் உழைப்பு இரவு பன்னிரண்டு வரை நீளும். அவர் மட்டுமின்றி அவர் குடும்பமே சேர்ந்து உழைத்தாலும் நாளொன்றுக்குக் கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் நானூறில் இருந்து ஐநூறு ரூபாய்களாக இருந்தாலே ஆச்சரியம் தான். இதில் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் தக்காளி வெங்காயம் விற்கும் அண்ணாச்சிகளால் கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?

கூடையில் காய்கறி சுமந்து வரும் கிழவி பில் போட்டு வியாபாரம் செய்ய வேண்டும், ஒன்றையணா வியாபாரம் பார்க்கும் அண்ணாச்சி பில் போட்டுக் கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நியாயவாதம் பேசும் இந்த அல்பைகள் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கும் மேல் வங்கிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் ரிலையன்ஸ் பற்றி எத்தனை முறை பேசியிருப்பார்கள்? ரிலையன்சும் வால்மார்ட்டும் லட்சக்கணக்கான கோடிகளில் அரசை ஏமாற்றுவதைக் கண்டுகொள்ளாமல் அவனையும் தெருமுனையில் தள்ளுவண்டியைத் தள்ளி வரும் வியாபாரியையும் ஒரே தராசில் நிறுத்துவதை என்னவென்று அழைக்கலாம்?

உழைப்புச் சுரண்டல், ஒரு சாதி ஆதிக்கம், வேலைவாய்ப்பு!

“மளிகைக் கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து என்ஜினியராகவோ டாக்டராகவோ ஆக்க விரும்புகிறார்கள் நீங்கள் அதைத் தடுத்து விட்டு கடையையே கட்டிக் கொண்டு அழட்டும் என்கிறீர்களா?” என்கிறார் உருப்படாத பதிவர். தலைகீழாய்த் தொங்கும் பதிவரோ, இப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே வியாபாரிகளாக இருக்கிறார்கள் என்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் வந்தால் எல்லோருக்கும் வேலை கிடைக்குமே என்றும் சொல்கிறார். அண்ணாச்சிகள் தங்கள் கடைகளில் வேலை செய்பவர்களிடம் உழைப்புச் சுரண்டல் செய்கிறார்களே என்கிறது இன்னொரு அரைவேக்காடு.

மளிகைக் கடை நடத்துவது அத்தனை இழிந்தது என்றால் அதில் ஏன் சாம் வால்ட்டன் வாரிசுகளுக்கும் அம்பானியின் வாரிசுகளுக்கும் இத்தனை ஆர்வம்? அவர்களிடம் போய் படித்து இன்ஜினியர்களாகச் சொல்ல வேண்டியது தானே? ஊரில் விவசாயம் பட்டுப் போய் பிழைக்க வேறு வழியின்றி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வந்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் தம் தொழிலை இழிந்ததாகக் கருதுவதில்லை. தமது வாரிசுகளும் தம்மைப் போலவே சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதே அவர்களது விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைத்து சிறுவியாபாரிகளின் வயிற்றில் அடிக்க விட்டுவிட்டு இப்போது படித்து வேலைக்குப் போகட்டுமே  என்று நொண்ணாட்டியம் பேச அசாத்தியமான திமிர் வேண்டும்.

அடுத்து சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஒரே சாதி தானென்பதும் அதனால் உருவாகும் வேலை வாய்ப்புகள் போவதும் அதே சாதியினருக்குத் தானென்பதும் அடிப்படையில்லாத வாதம். இந்தியாவில் சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல் இருக்கும் சிறு கடைகளை பல்வேறு சாதிகளையும் வெவ்வேறு மதப் பின்னணி கொண்டோரும் தான் நடத்துகிறார்கள். அதே போல், இந்தக் கடைகளை நம்பி வாழும் கோடிக்கணக்கான ‘லைன் வியாபாரிகளும்’ பல சமூகங்களைச் சார்ந்தவர்கள் தான்.

பட்டை கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளில் அடைப்பது , கடலை மிட்டாய் போன்ற சிறிய தின்பண்டங்கள் தயாரிப்பது, பல்வேறு சிறிய பொருட்களை சாஷேக்களில் அடைப்பது போன்ற சிறு தொழில்களைச் செய்யும் லைன் வியாபாரிகள், அவற்றை ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கி சப்ளை செய்கிறார்கள்.

இந்த மொத்த வலைப்பின்னலையும் ஒரிரு பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் காவு கொடுப்பதற்காகவே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. வால்மார்ட்டோ-ரிலையன்ஸோ இந்த வியாபாரிகளிடம் சின்னச் சின்ன சாஷேக்களில் பொருட்கள் ஆர்டர் கொடுக்க முன்வரமாட்டார்கள். அவர்கள் டீலிங்கே பெரு முதலாளிகளிடம்தான். விலை அவர்கள் நிர்ணயிப்பதாகத் தானிருக்கும். தினக்கூலிக்குப் போகும் சாதாரண ஏழை உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஐந்து அல்லது பத்து ரூபாய்களுக்குக் கிடைக்கும் இந்த சாஷேக்களில் வாங்கும் வாய்ப்பை மறுத்து, தேவை இருக்கிறதோ இல்லையோ அரைக்கிலோ அல்லது ஒரு கிலோவாக வாங்க வேண்டிய நிர்பந்தத்தைத் தான் சில்லறை வணிகத்தில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்டாக்கப் போகின்றன.

இந்த நிறுவனங்களால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று நீட்டி முழக்கும் இந்த நடுத்தரவர்க்க அல்பைகள், இதே நிறுவனங்களில் மேலை நாடுகளில் நடக்கும் உழைப்புச் சுரண்டல் குறித்து மூச்சு கூட விடுவதில்லை. வால்மார்ட் தனது சீன உற்பத்தி அலகுகளான அடிமைக் கூடாரங்கள் (sweat shops) மூலம் அடிப்படை மனித உரிமைக்கே எதிரான தொழிற்கொள்கைகளைக் கொண்டிருப்பதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 16 மணி நேரங்கள் உழைக்க நிர்பந்திப்பது, மிகக் குறைந்த கூலி, தொழிற்சங்கம் கட்டும் உரிமை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உழைப்புச் சுரண்டலின் மூலம் தான் இவர்கள் லாபத்தைக் குவிக்கிறார்கள்.

சொந்தக்காலில் நின்று கவுரவமாக பிழைக்கும் சொந்த நாட்டு மக்களைத் தொழிலிருந்து விரட்டியடித்து விட்டு வால்மார்ட்டின் ஸ்வெட் ஷாப்ஸூக்கு துரத்துவதைத் தான் வேலைவாய்ப்பு என்று மன்மோகன் சிங்கிலிருந்து இங்கே தமிழில் வலைபதியும் தலைகீழாய்த் தொங்கும் வவ்வால் வரை பெருமையாகக் கூவுகின்றனர்.

அங்காடித் தெருவின் அண்ணாச்சிகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் தான் – ஆனால், அந்தத் தொழிலாளிகளுக்கு அதிலிருந்து மீண்டு சொந்தமாய்த் தொழில் தொடங்கும் ஒரு வாய்ப்பு ஓரளவுக்காவது இருக்கிறது. ஆனால், வால்மார்ட் நடத்தும் அடிமைக் கூடாரத்திலிருந்து மரணத்தைத் தவிர்த்த வேறொரு வாய்ப்பு சர்வநிச்சயமாய் இல்லை. இவர்களையும் அவர்களையும் இணைவைத்துப் பேசுவதே அயோக்கியத்தனம்.

அண்ணாச்சிகள் மதிப்பதில்லை; வால்மார்ட் மதிக்கிறான்

“சார் அண்ணாச்சி கடைக்குப் போனா அவரு மதிக்கவே மாட்டாருங்க. தெரிஞ்சவங்க வேண்டியவங்களுக்கு முதல்ல பொருள் குடுத்துட்டு நம்மை கடைசில தான் கவனிப்பாங்க. அதே மாதிரி தெருவில தள்ளு வண்டில வரும் வியாபாரி கிட்ட பேரம் பேசியே தாவு தீரும்ங்க. ஆனா, அங்க பாருங்க ஒவ்வொரு காய்கறிக்கும் தெளிவ்வ்வ்வா எம். ஆர்.பி போட்ருக்கான் பாஸ். அப்புறம் சென்ட்ரலைஸ்டு ஏசி.. நல்ல கஸ்டமர் சர்வீஸ்.. பாத்தா சிரிக்கிறான் சார்.. அவன் ரேஞ்சே தனி பாஸ்” என்கிறார்கள் இந்த அடிமைகள்.

உண்மை தான். வால்மார்ட் போனால் பளபளப்பான சிரிப்பும் ஏசி குளிரும் உங்களை வரவேற்கத்தான் செய்யும். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வசதி கூட உண்டு – ஆனால், சிகரெட் கார்டு பயன்படுத்தும் வசதி இருக்குமா? வாரக் கூலிக்கும் சொற்ப மாதச் சம்பளத்துக்கும் வேலை பார்க்கும் சாதாரண உழைக்கும் மக்கள் சிகரெட் அட்டையின் பின்புறத்தில் எழுதி அக்கவுண்ட் வைத்துக் கொண்டு வாரா வாரம் சனிக்கிழமையோ ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதியோ சம்பளம் கிடைத்ததும் திருப்பிச் செலுத்தும் முறை வால்மார்ட்டில் இருக்காது – அந்த வசதி அண்ணாச்சிக் கடையில் தான் உண்டு.

உலகின் முதல் பத்து பணக்காரர்களில் சாம் வால்டனின் குடும்பத்தவரே மூன்று நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர். இது போன்ற பகாசுர பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளோடு சாதாரண மளிகைக் கடை அண்ணாச்சியை மோதவிட்டு அவர்களின் தொழிலைத் துப்புரவாக ஒழித்துக் கட்டிவிட்டால் சாதாரண மக்கள் எங்கே போவார்கள்?

வால்மார்ட்டின் வருகை சிறுவணிகர்களை பாதிக்காதா?

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் வால்மார்ட்டின் வருகையையும் முதலாளித்துவ ஊடகங்களில் வெறிகொண்டு ஆதரித்து எழுதி வரும் அமெரிக்க பூட்சுநக்கிகளோ, வால்மார்ட்டால் சாதாரண சிறு வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். வால்மார்ட்டின் சேவையும், சிறுவணிகர்களின் சேவையும் வேறு வேறு வகையானது என்றும், அங்கே செல்பவர்கள் அங்கே செல்வார்கள் இங்கே வருபவர்கள் இங்கே வருவார்கள். யாரும் யாரையும் அழித்து விட முடியாது; அவரவர் தொழில் அவரவர்க்கு இருக்கும் என்கிறார்கள்.

மேலும் ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி குழுமம், பார்த்தி போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகை பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாது என்றும் சொல்கிறார்கள்.

நுகர்வுச் சந்தையை வால்மார்ட் கைப்பற்றினால் சிறுவணிகர்களின் கதி என்னவாகும் என்பதற்கு பல்வேறு நாடுகளின் உதாரணங்கள் நம் கண்முன்னேயே உள்ளது என்பது ஒரு பக்கமிருக்க நமது சொந்த அனுபவமே இவர்களின் கூற்றுக்கு முரணானதாக இருக்கிறது.  தொன்னூறுகளில் கொக்கோ கோலாவும் பெப்சியும் இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்கு முன் ஆயிரக்கணக்கான சுதேசி பானங்கள் தயாரிப்பில் இருந்தன. இன்றோ அவையனைத்தும் மொத்தமாக அழிந்து போய் விட்டது. தனது போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தயங்காமல் ஈடுபட்டன இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும். பல லட்சம் மக்களை வாழ வைத்துக் கொண்டிருந்த சிறு தொழில்கள் அழிந்து இன்றோ இரண்டே இரண்டு நிறுவனங்களின் கையில் மொத்த சந்தையும் சிக்கிக் கொண்டிருக்கிறது.

பிரேசிலில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் தெருவோர காய்கறி அங்காடிகள் 27% சதவீத அளவுக்கு மூடப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினாவிலோ பத்தே ஆண்டுகளில் 30% சிறுகடைகள் இழுத்து மூடப்பட்டு, இந்தத் துறையின் வேலை வாய்ப்பு 26 சதவீத அளவிற்கு குறைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சில்லறை வர்த்தகத்தில் 60 சதவீத அளவுக்கு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன.

சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை உண்டாக்கியுள்ள பாதிப்பைப் புரிந்து கொள்ள சிக்கலான புள்ளிவிவரங்கள் தேவையில்லை. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சியிடம் கேட்டாலே விளக்கமாகச் சொல்வார். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வியாபாரம் குறைந்து போயுள்ள நிலையில் அதை ஈடுகட்ட மளிகை வியாபாரத்தோடு சேர்த்து செல்போன் ரீசார்ஜ், பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் விற்பது என்று நிறைய சிறு சிறு வேலைகளைச் செய்கிறார்கள். பேரங்காடிகளுக்கு அருகில் இருக்கும் சாதாரண அண்ணாச்சிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வியாபாரத்தில் பாதிதான் இன்று நடக்கிறது. வருமானமும், விற்பனையில் இலாபமும் கணிசமாக குறைந்திருக்கிறது.

உள்ளூர் அளவிலான காய்கனிச் சந்தையில் நுழையும் ரிலையன்ஸ், மொத்தமாக காய்கனிகளை வாங்கிச் செல்கிறது. மொத்த வியாபாரிகளுக்கு பத்து கிலோ இருபது கிலோ என்று விற்பதில் கிடைக்கும் லாபத்தை விட இதில் குறைந்த லாபமே கிடைக்கிறது என்றாலும், நீண்ட நேரம் அழுகிப் போகும் தன்மை கொண்ட பொருட்களோடு சந்தையில் அமர்ந்திருக்க வேண்டியதைத் தவிர்க்க வேறு வழியின்று குறைந்த லாபத்துக்கு ரிலையன்ஸிடம் விற்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும் – பலரும் சொல்வது போல் ரிலையன்ஸ் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நேரடிக் கொள்முதல் செய்வதில்லை. தேவைப்படும் போது கமிஷன் மண்டி ஏஜென்டுகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்தளவுக்கு மொத்தமாக வாங்கும் அளவுக்கான சந்தையில்லாத சாதாரண அண்ணாச்சிகள் ரிலையன்ஸோடு போட்டியிட முடியாமல் ஏற்கனவே தவித்து வரும் நிலையில் அவர்களை வால்மார்ட்டுக்கு காவு கொடுக்கத் துடிக்கிறார் மன்மோகன் சிங்.

அடுத்த பகுதியில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம்.

  • விவசாயிகளை அழிவுக்குள்ளாக்கும் வால்மார்ட்..!
  • விலை குறையும் என்கிற ஏமாற்று.. பிற நாடுகளின் அனுபவம்
  • விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
  • நமது நுகர்வு இன்னதென்று தீர்மானிக்கும் உரிமை!
  • வால்மார்ட்டால் அழிந்த நிறுவனங்கள் – பல்வேறு நாடுகளின் அனுபவம்
  • உற்பத்தி – வினியோகம் – நுகர்வுச் சங்கிலியின் தற்சார்பை அடகு வைத்தல் – இறையாண்மை.
  • ஏன் பிற நாடுகளில் வால்மார்ட்டை எதிர்க்கிறார்கள்?

–  தொடரும்….

______________________________________________

– தமிழரசன்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

———————

  1. நல்ல கட்டுரை.

    //இரண்டு நூற்றாண்டுகள் கழிந்து போயின. இன்றோ ‘ஐரோப்பியர்களே அமெரிக்கர்களே வாருங்கள். வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள். உங்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தேயிருக்கும்’ என்று காலில் விழுந்து கூப்பிடுகிறார் உலகவங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங்.//

    உண்மை

  2. அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் தோழர்களின் ப்ரியத்திற்கும் உரிய திருவாளர், என் இதய்த்துக்கு நெருக்கமான தோழர் அதியமான் அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன். அவர் உரையாடத் தொடங்கும் போது தோழர்கள் எக்காரணம் கொண்டு விசில் அடிக்கக்கூடாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வாங்கப்பூ வாங்க.

    • ஜோ,

      ஏற்கெனவே இதை பற்றி மாசியுடன் சென்ற பதிவில் நிறைய பேசியாச்சு. அதை பற்றி வினவு தம் மேலான ‘கருத்துக்களை’ இதுவரை சொல்லவில்லையே. in fact so far, vinavu had not tried to answer many many of my inconvenient questions and arguments.

      பெப்சி கோக்கினால் ‘அழிந்த; லோக்கல் தயாரிப்பாளர்கள் இன்று வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் இதர முக்கிய உற்பத்தி, சேவை, நிதி, வங்கி மற்றும் இன்ஸுரனஸ் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்த போதும், வினவு மற்றும் ‘இடதுசாரிகள்’ இதே போல் தான் argue செய்தார்கள். ரிலையன்ஸ் ஃப்ரெஸ் பற்ற்யும் தான். ஆனால் அவை எல்லாம் இன்று அர்த்தமற்ற, வீண் எதிர்ப்புகள் என்று நிருபனம் ஆகிவிட்டன. 80களில் வங்கி மற்றும் இன்சுரன்ஸ் துறைகளில் கம்யூட்டர்களை அறிமுகப்படுத்திய போதும் இதே போன்ற ‘எதிர்ப்புகள்’ மற்றும் போராட்டங்கள். ம.க.இ.க வும் அன்று கடுமையாக எதிர்த்தது. இன்று அது அர்ததமற்ற, முட்டாள்தனமான போராட்டமாக தெரிகிறது. வால்மார்ட்டை எதிர்ப்பது இதே போல் எதிர்காலத்தில் தெரியும்.

      • @அதியமான்,

        //ஏற்கெனவே இதை பற்றி மாசியுடன் சென்ற பதிவில் நிறைய பேசியாச்சு. அதை பற்றி வினவு தம் மேலான ‘கருத்துக்களை’ இதுவரை சொல்லவில்லையே. in fact so far, vinavu had not tried to answer many many of my inconvenient questions and arguments.//

        நீங்கள் சாய்சில் விட்ட கேள்விகளில் சில

        1. சோசலிச கட்டுமானத்தின் கீழ் சீனா 1949 முதல் 1980 வரை இந்தியாவை விட மக்கள் நலனில் முன்னேறியிருந்தது எப்படி?
        2. free marketல் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பண்டங்களும் சந்தைகளும்தான் முதலிடம் பெறுவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
        3. 90% வரி வீதம் வைத்திருந்தால் வரி ஏய்ப்பவர்கள் கிரிமினல்கள் இல்லையா?
        (இன்னும் தொடரும்)

        //பெப்சி கோக்கினால் ‘அழிந்த; லோக்கல் தயாரிப்பாளர்கள் இன்று வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது.//

        நீங்கள் ஒரே வாக்கியத்தில் எளிதாக சொல்லி விட்டீர்கள். இதில் எத்தனை லட்சம் பேரின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்டது? எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? எத்தனை பேர் கூலி வேலைக்குப் போக வேண்டியிருந்தது?

        // ஆனால் இதர முக்கிய உற்பத்தி, சேவை, நிதி, வங்கி மற்றும் இன்ஸுரனஸ் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்த போதும், வினவு மற்றும் ‘இடதுசாரிகள்’ இதே போல் தான் argue செய்தார்கள். ரிலையன்ஸ் ஃப்ரெஸ் பற்ற்யும் தான். ஆனால் அவை எல்லாம் இன்று அர்த்தமற்ற, வீண் எதிர்ப்புகள் என்று நிருபனம் ஆகிவிட்டன.//

        என்ன நிரூபணம் ஆகி விட்டன? பல லட்சம் மளிகைக் கடை உரிமையாளர்கள் தொழிலை விட்டுத் துரத்தப்பட்டார்கள், பலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதில் என்ன அர்த்த குறைவு?

        // 80களில் வங்கி மற்றும் இன்சுரன்ஸ் துறைகளில் கம்யூட்டர்களை அறிமுகப்படுத்திய போதும் இதே போன்ற ‘எதிர்ப்புகள்’ மற்றும் போராட்டங்கள். ம.க.இ.க வும் அன்று கடுமையாக எதிர்த்தது. இன்று அது அர்ததமற்ற, முட்டாள்தனமான போராட்டமாக தெரிகிறது. வால்மார்ட்டை எதிர்ப்பது இதே போல் எதிர்காலத்தில் தெரியும்.//

        கணினி தொழில் நுட்பமும், அறிவியலும் தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. கத்தியை பழம் வெட்டவும் பயன்படுத்தலாம், கழுத்தை அறுக்கவும் பயன்படுத்தலாம்.

        தொழில் நுட்பங்கள் பெரு நிறுவனங்கள் கையில் கழுத்தை அறுக்கத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் பார்க்க மறுத்து விட்டதால் இல்லை என்று ஆகி விடப் போவதில்லை.

        • அதெல்லாம் கிடையாது அதியாமன் அண்ணன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை..அவ்வளவுதான்.. நீங்கள் எல்லாம் பதில் சொல்லுகிறீர்கள் ஆனால் அதியாமானுக்கு பதில் தான் வேண்டும் அதை ஏன் நீங்கள் சொல்வதே இல்லை.. வினவு போங்காட்டம் ஆடுகிறது.

        • //பல லட்சம் மளிகைக் கடை உரிமையாளர்கள் தொழிலை விட்டுத் துரத்தப்பட்டார்கள், பலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதில் என்ன அர்த்த குறைவு?//

          இல்லை மாசி. இது பொய். உண்மை என்றால் முழுவிபரங்களை வணிகர் சங்கம் இன்னேரம் வெளியிட்டு பெரிய ஆர்பாட்டம் செய்திருக்கும். இதர ஆர்வலர்களும் சும்மா இருந்திருக்கமாட்டார்கள். வீணாக ‘அவதூறு’ செய்கிறீர்கள். இதை நான் ‘நிராகரிக்கிறேன்’ !!

          சினா 1979 வரை வளர்ந்த விதம் பற்றி பிறகு பேசலாம். அங்கு 1959இல் உருவான பெரும் செயற்க்கை பஞ்சம் மற்றும் இதர கொடுமைகள் பற்றி பேசினால், ஒற்றை வார்த்தையில் ‘அவதூறு’ என்று நீங்க நிராகரிப்பதால் தான் அதை பற்றி தொடரவில்லை. என்னை பெர்சனலா நன்கு அறிந்த நண்பர் நீங்க. நான் ஒரு நாட்டை பற்றி பொய்யாக ‘அவதூறு’ செய்ப்வன் என்று நீங்களும் நம்பும் பட்சத்தில் மேல் பேச் ஒன்றும் இல்லை. எனது நேர்மை மீது மற்றும் பொது அறிவு மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளது தான் என்று புரிந்து கொண்டேன்.

          கோக், பெப்சி தவிர பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் 1991க்கு பின் இங்கு அனுமதிக்கப்பட்டன. அவர்களால் அழிந்தவர் விவரம் என்ன ? சிறுதொழில் துறையில் தான் நாம் இருவரும் இருக்கிறோம். SSI units grew phenomenally only after 1991 when compared to the previous decades.

          சீனாவை போல் பல லச்சம் அப்பாவிகளை கொன்றழிக்காமலேயே தைவான், ஜப்பான், தென் கொரியா, 1945க்கு பின் ஜெர்மனி, இட்டாலி போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து, வறுமையை ஒழித்த வரலாறு பற்று பல முறை சொல்லியும் கண்டுக்கவில்லை. பிறகு எதற்க்கு உஙகளோடு வீண் வாக்குவாதம்.

            • //இப்ப ரண்டு பேரும் ‘தோழர்கள்’ ஆயிட்டாங்க !!//

              அசுரனின் அந்த பதிவில் நான் போட்ட பின்னூட்டம் உங்கள் கவனத்துக்கு (தலைப்பை மட்டும் பார்க்காமல், பதிவையும், பின்னூட்டங்களையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!)

              ==================
              1. நான் காந்தீயம்தான் ஒரே வழி என்று எங்கும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்க்கையும் அரசியலும் என்னையும் கேள்விகள் கேட்க வைக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்கிறேன்.

              2. அப்படி நீங்களே உருவகித்துக் கொண்டு ‘காந்தீயம் என்றால் பொய்யர்கள்’ என்று சொல்லும் அதே பாணியில் ‘சோஷலிசம் என்றால் ஏமாற்று வேலை’ என்று நல்லவற்றை எல்லாம் மறந்து விட்டு ஒரே அடியாக முத்திரை நான் குத்தும் போது உங்களுக்கும் வருத்தம் ஏற்படத்தானே செய்கிறது!

              3. அதையும் தாண்டி, உணர்வு பூர்வமான இந்த இரண்டு இடுகைகளோடு நிதானித்து, நீங்கள் சொல்லும், ‘நான் சார்ந்த வர்க்க மனோபாவம்’ என்ன என்று எண்ணிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஓரிரு மாதங்கள் நேரம் தேவைப்படும்.

              அதன் வெளிப்பாடுகளையும் சீனாவில் நான் இருந்த போது பார்த்த, உணர்ந்த, படித்த, வியந்த கூறுகளையும் அப்புறமாக பகிர்ந்து கொள்கிறேன்.

              4. நாம் இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க முடியும் என்றே நான் நம்புகிறேன்.
              ================

              இப்போது ஒரு புள்ளியில் சந்தித்திருக்கிறோம், அவ்வளவுதான் :-). நமது கோட்பாடுகள் – புதிய அறிவு, அலசல், பரிசீலனை மூலம் மேம்பட்டுக் கொண்டே போக வேண்டும். அந்த பாதையில் நடக்கவே எனக்கு விருப்பம்.

          • //இல்லை மாசி. இது பொய். உண்மை என்றால் முழுவிபரங்களை வணிகர் சங்கம் இன்னேரம் வெளியிட்டு பெரிய ஆர்பாட்டம் செய்திருக்கும். இதர ஆர்வலர்களும் சும்மா இருந்திருக்கமாட்டார்கள். வீணாக ‘அவதூறு’ செய்கிறீர்கள். இதை நான் ‘நிராகரிக்கிறேன்’ !!//

            ‘நிராகரிப்பதற்கு’ முன்பு குறைந்த பட்சம், உங்கள் வீட்டு அருகில் செயல்படும் நான்கு மளிகைக் கடைக் காரர்களுடன் பேசி பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் வந்தன, அவை எப்படி பாதித்தன என்பதை புரிந்து கொள்ள பாருங்கள்.

            //சினா 1979 வரை வளர்ந்த விதம் பற்றி பிறகு பேசலாம். அங்கு 1959இல் உருவான பெரும் செயற்க்கை பஞ்சம் மற்றும் இதர கொடுமைகள் பற்றி பேசினால், ஒற்றை வார்த்தையில் ‘அவதூறு’ என்று நீங்க நிராகரிப்பதால் தான் அதை பற்றி தொடரவில்லை. என்னை பெர்சனலா நன்கு அறிந்த நண்பர் நீங்க. நான் ஒரு நாட்டை பற்றி பொய்யாக ‘அவதூறு’ செய்ப்வன் என்று நீங்களும் நம்பும் பட்சத்தில் மேல் பேச் ஒன்றும் இல்லை. எனது நேர்மை மீது மற்றும் பொது அறிவு மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளது தான் என்று புரிந்து கொண்டேன்.//

            ஒரு விஷயத்தை இரண்டு பேர் முற்றிலும் வேறு பட்ட கோணத்தில் பார்க்க முடியும். சீனாவைப் பற்றிய அனுபவம் பற்றி பேச வந்தால், (என்னை உங்களுக்கும் பெர்சனலா தெரியும் :-), என் அனுபவங்களையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!)

            1. நான் நான்கு ஆண்டுகள் சீனாவில் வசித்து கிழக்கு பகுதி, தெற்கு பகுதி, வடக்கு பகுதிகளில் பரவலாக பயணம் செய்திருக்கிறேன்.

            2. கூடவே அந்த கால கட்டத்திலும் அதற்குப் பிறகும் சீனா பற்றி அமெரிக்க/மேற்கத்திய அலசல்கள் பல நூல்களைப் படித்திருக்கிறேன்.

            3. அந்த நான்கு ஆண்டுகளிலும் உள்ளூர் தினசரி (கம்யூனிஸ்டு கட்சி கட்டுப்பாட்டில் இருப்பது), தினமும் படித்து வந்தேன்.

            4. என்னுடன் வேலை பார்த்தவர்கள், தொழில் ரீதியாக சந்தித்தவர்கள் என்று பல நூறு பேருடன் சீனாவின் கடந்த காலத்தையும் அவர்களது வாழ்க்கையையும் பற்றி பேசியிருக்கிறேன்.

            5. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி பற்றியும், கம்யூனிஸ்டு அமைப்புகள் பற்றியும் படித்திருக்கிறேன்.

            எனவே சீனா பற்றி நான் சொல்வது அத்தகைய அனுபவங்களின் அடிப்படையிலிருந்துதான். மேலும் கற்கும் போது அந்த கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம். ஆனால் அடிப்படையில் புரிதல் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

            //கோக், பெப்சி தவிர பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் 1991க்கு பின் இங்கு அனுமதிக்கப்பட்டன. அவர்களால் அழிந்தவர் விவரம் என்ன ? சிறுதொழில் துறையில் தான் நாம் இருவரும் இருக்கிறோம். SSI units grew phenomenally only after 1991 when compared to the previous decades.//

            உண்மை இல்லை! சிறு நிறுவனங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதும், புதிதாக ஆரம்பிப்பதும்தான் நடைமுறையாக இருக்கிறது. நான் பார்த்த சிறுதொழில் துறை (நடுத்தர தொழில்கள் கூட) என்பது தொழில்முனைவோருக்கு தேவையில்லாத அழுத்தத்தையும், சிரமங்களையும் கொடுப்பதாகவே இருக்கிறது.

            //சீனாவை போல் பல லச்சம் அப்பாவிகளை கொன்றழிக்காமலேயே தைவான், ஜப்பான், தென் கொரியா, 1945க்கு பின் ஜெர்மனி, இட்டாலி போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து, வறுமையை ஒழித்த வரலாறு பற்று பல முறை சொல்லியும் கண்டுக்கவில்லை. பிறகு எதற்க்கு உஙகளோடு வீண் வாக்குவாதம்.//

            தாய்வான் பற்றிய எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். தாய்வானின் வரலாறும், மக்கள் தொகையும், புவியியல் இடமும் தனிச்சிறப்பானவை. அங்கு ஏற்பட்ட வளர்ச்சி நீங்கள் நினைப்பது போல வியந்து ஓடப்பட வேண்டியதில்லை.

            ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி பற்றிய வரலாறு உங்களுக்கே நன்கு தெரியும் (பின்னர் விரிவாக பேசலாம்).

            • மாசி,

              60களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சி பற்றி இந்து பத்திரிக்கையில் சமீபத்தில் வந்த சுட்டி இது :

              ’ஆசிரியர்களை அடித்து கொன்ற மாணவமணிகள்’
              http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/article2332248.ece

              இதையும் அவதூறு என்றால் என்ன செய்வது ?

              1959இல் மாவோ உருவாக்கிய Great Leap Forward பற்றி படித்து பார்க்கவும். அல்லது அதை பற்றி சீனர்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரியுமா ? சும்மா வளார்சி, etc என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். உலகின் மிக பெரும் மனித அழிப்பு சீனாவின் அன்று நடந்தது. இன்றை அதை மறுக்கும் சரித்திர ஆய்வாளர்கள் யாரும் எங்கும் இல்லை. எல்லோரும் ‘அவதூறு’ செய்கிறார்கள். உங்களுக்கு மட்டும் தான் ‘உண்மை’ தெரியும் ? அப்படி தானே ? அ.மார்க்ஸ் கூட அவதூறு செய்கிறார் ? சீனாவின் archivesஅய் சமீப வருடங்களில் ஆராய்ந்த ஒரு ஆய்வாளரின் கருத்துக்கள் :

              http://www.independent.co.uk/arts-entertainment/books/news/maos-great-leap-forward-killed-45-million-in-four-years-2081630.html

              Frank Dikötter, a Hong Kong-based historian, said he found that during the time that Mao was enforcing the Great Leap Forward in 1958, in an effort to catch up with the economy of the Western world, he was responsible for overseeing “one of the worst catastrophes the world has ever known”.

              Mr Dikötter, who has been studying Chinese rural history from 1958 to 1962, when the nation was facing a famine, compared the systematic torture, brutality, starvation and killing of Chinese peasants to the Second World War in its magnitude. At least 45 million people were worked, starved or beaten to death in China over these four years; the worldwide death toll of the Second World War was 55 million.

              மாசி : நீங்க சீனா பற்றி என்ன படித்தீக ?

              சரி, 1979 வரை சீனாவின் வழிமுறை தான் சரி என்றால், பின் ஏன் 1979க்கு பின் நாட்டை அன்னிய முதலீட்டுக்கு திறந்தனர் ? வால்மார் அங்கு அனுமதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழிமுறை அப்ப சரி ? டெங்கு ஜியா பிங் இன் வழிமுறைகள் பற்றி ?

              • //60களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சி பற்றி இந்து பத்திரிக்கையில் சமீபத்தில் வந்த சுட்டி இது :
                ’ஆசிரியர்களை அடித்து கொன்ற மாணவமணிகள்’
                http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/article2332248.ece
                இதையும் அவதூறு என்றால் என்ன செய்வது ?//

                படிப்பவருக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் எழுதப்பட்ட கட்டுரை. இதை எழுதியவர் யார், எங்கிருந்தாவது மொழி பெயர்த்தாரா, அல்லது நேரில் சந்தித்து எழுதினாரா என்று தேடிப்பார்த்தேன். (இந்த விபரங்கள் கட்டுரையில் இல்லை)

                கட்டுரையில் சொல்லப்படுவது உண்மையா என்பதை சரி பார்க்க வேண்டும். கலாச்சார புரட்சி குறித்த பெரும் அளவிலான மேற்கத்திய கதை சொல்லிகளின் கதைகளின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம்.

                இந்தக் கட்டுரையை எழுதியவர் பற்றி விக்கிபீடியாவில்: 2007ல் இந்து குழுமத்தில் சேர்ந்தவர் 2011ல் இதை எழுதியிருக்கிறார். மேலும் விபரங்களை தேட வேண்டும்.

                ================
                The Hindu is family-run. It was headed by G. Kasturi from 1965 to 1991, N. Ravi from 1991 to 2003, and by his brother, N. Ram, since June 27, 2003. Other family members, including Nirmala Lakshman, Malini Parthasarathy, Nalini Krishnan, N Murali, K Balaji, K Venugopal and Ramesh Rangarajan are directors of The Hindu and its parent company, Kasturi and Sons. S Rangarajan, former managing director and chairman since April 2006, died on 8 February 2007. Ananth Krishnan, who is the first member of the youngest generation of the family to join the business has been working as a special correspondent in Chennai and Mumbai since 2007.

                //1959இல் மாவோ உருவாக்கிய Great Leap Forward பற்றி படித்து பார்க்கவும். அல்லது அதை பற்றி சீனர்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரியுமா ?//

                படித்தும் பார்த்திருக்கிறேன். சீனர்கள் என்ன கருதுகிறார்கள் என்றும் தெரியும்.

                //சும்மா வளார்சி, etc என்று யார் வேண்டுமானாலும் பேசலாம்.//

                பேச்சு மட்டும் இல்லை, நடைமுறையில்/சாதனைகளில் வளர்ச்சியின் உண்மை தெரிகின்றது. 1980 வரையிலான சோசலிச கட்டுமானத்தின் நன்மைகளும், அதற்குப் பிறகான சந்தை சார்ந்த வளர்ச்சிக்கு அந்த சோசலிச கட்டமைப்பு எப்படி ஆதாரமாக இருக்கிறது என்பதும் கண்கூடாக தெரியக் கூடிய விபரங்கள்.

                யாரும் பேசுவதாலோ, பேசாததாலோ அவை மாறி விடப் போவதில்லை.

                //உலகின் மிக பெரும் மனித அழிப்பு சீனாவின் அன்று நடந்தது. இன்றை அதை மறுக்கும் சரித்திர ஆய்வாளர்கள் யாரும் எங்கும் இல்லை. எல்லோரும் ‘அவதூறு’ செய்கிறார்கள். உங்களுக்கு மட்டும் தான் ‘உண்மை’ தெரியும் ? அப்படி தானே ? அ.மார்க்ஸ் கூட அவதூறு செய்கிறார் ?//

                ஆமாம். மேற்கத்திய உலகம் கம்யூனிசத்தின் மீது செய்யும் அவதூறுகள், இருட்டடிப்புகள் பற்றியும் படித்துப் பாருங்கள்.

                சோவியத் யூனியனிலும், சீனாவிலும் 20ம் நூற்றாண்டில் நடந்தவை மனித சமூக முன்னேற்றத்தின் முக்கியமான முயற்சிகள். இந்த முயற்சிகளில் பல தவறுகள் நடந்தன, ஆனால் ஒட்டு மொத்த பயணம் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்தின் பாதையில்தான் போனது. அவற்றுக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருப்பதும் உண்மைதான்.

                காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்து ஊர்களில் வசிக்க ஆரம்பித்த போது, அந்த ஊர்களை கலைத்துப் போட, இன்னும் நாகரீகம் அடையாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆனால் வரலாற்றின் நீண்ட கால நோக்கில் அப்படி நாகரீக ஊர்கள் அமைவது தவிர்க்க முடியாதது, அதன்படி மனித நாகரீகம் வளர்ந்தது.

                அதை போல முதலாளித்துவம் என்ற காட்டுமிராண்டித்தனமான, survival of the fittest என்ற மனிதனை மனிதன் தின்னும் பொருளாதார அமைப்பை கைவிட்டு, சோசலிச கட்டுமானத்துக்கு மனித சமூகம் மாறுவது வரலாற்றின் நீண்ட கால கட்டாயம். தற்காலிக பின்னடைவுகள் ஏற்பட்டாலும், மனித குலம் அந்த திசையில்தான் போக வேண்டும்.

                • மாசி,

                  இந்து பத்திர்க்கையில் இருந்த பல கட்டுரைகளை எடுத்து, மொழி பெயர்த்து வினவு வெளியிடுகிறது. முக்கியமாக திரு.சாய்நாத் அவர்களின் கட்டுரைகளை. அதையும் இதே போல் ‘சந்தகப்படலாமா’ ? verify செய்ய கேட்பீர்களா ? வேண்டும் என்றே பொய்யான, மிகை படுத்துப்பட்ட தகவல்களை, சீனா பற்றி, அவர்கள் வெளியிடுவார்களா என்ன ? அல்லது அக்கட்டுரையை எழுதியவர் பொய் சொல்கிறாரா என்ன ?

                  //அதை போல முதலாளித்துவம் என்ற காட்டுமிராண்டித்தனமான, survival of the fittest என்ற மனிதனை மனிதன் தின்னும் பொருளாதார அமைப்பை கைவிட்டு, சோசலிச கட்டுமானத்துக்கு மனித சமூகம் மாறுவது வரலாற்றின் நீண்ட கால கட்டாயம். ///

                  சீனாவின் சோசியலிச கட்டுமானம் என்ற பெயரில் தான் பெரும் காட்டுமிரண்டித்தனம் நடந்தது. பல லச்சம் அப்பாவிகளும், உண்மை கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். மத வெறி போல் மக்களுக்கு வெறியை ஊட்டி, முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு ஊட்டி, தன் ஆசிரியர்களை அடித்து கொள்ள தூண்டியதை விட காட்டுமிராண்த்தனம் என்ன இருக்க முடியும் ?

                  ஃபாசிசத்தையும், முதலாளித்துவத்தையும் வழக்கம் போல் குழப்பிக்கொள்கிறீர்கள். இன்று மே.அய்ரோப்பாவில், கனடாவின், ஸ்காண்டினேவியாவில் இருப்பதும் ‘முதலாளித்துவம்’ என்றே அழைக்கப்படுகிறது. அது காட்டுமிரண்டித்தனம் என்று நீங்க வேணும்னா சொல்லிக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படி கருதுவதில்லை.

                  மாவோ செய்த கொடுஞ்செயல்களை விட காட்டுமிராண்டித்தனம் எதுவுமில்லை. இன்றை சீனாவே அதை மறுக்கவில்லை. அறிவுலகம் அதை விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்துள்ளது. ஆனால் அத்தனையும் அவதூறுகள் என்று நீங்க சொல்வதை அறியாமை என்றே நிராகரிக்க வேண்டும்.

                  • //இந்து பத்திர்க்கையில் இருந்த பல கட்டுரைகளை எடுத்து, மொழி பெயர்த்து வினவு வெளியிடுகிறது. முக்கியமாக திரு.சாய்நாத் அவர்களின் கட்டுரைகளை. அதையும் இதே போல் ‘சந்தகப்படலாமா’ ? verify செய்ய கேட்பீர்களா ? வேண்டும் என்றே பொய்யான, மிகை படுத்துப்பட்ட தகவல்களை, சீனா பற்றி, அவர்கள் வெளியிடுவார்களா என்ன ? அல்லது அக்கட்டுரையை எழுதியவர் பொய் சொல்கிறாரா என்ன ?//

                    சாய்நாத் அவர்களின் உழைப்பு, நீண்ட கால மக்கள் பணி குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் எழுதுபவற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது.

                    தீவிரமான குற்றச்சாடுகளை முன் வைக்கும் இந்தக் கட்டுரை, எழுதியவரின் பெயரைத் தவிர வேறு எந்த referenceம் தராமலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. ஏன்?

                    பெய்ஜிங்கில் வாழ்ந்து சீனா பற்றி எழுதிக் கொண்டிருந்த பல்லவி அய்யர் எழுதியிருந்தால் அதற்கு நம்பகத்தன்மை இருக்கும். அதுதான் நான் சொல்ல வந்தது. கட்டுரையில் வந்த தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க எந்த வழியும் இல்லை.

                    //சீனாவின் சோசியலிச கட்டுமானம் என்ற பெயரில் தான் பெரும் காட்டுமிரண்டித்தனம் நடந்தது. பல லச்சம் அப்பாவிகளும், உண்மை கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். மத வெறி போல் மக்களுக்கு வெறியை ஊட்டி, முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு ஊட்டி, தன் ஆசிரியர்களை அடித்து கொள்ள தூண்டியதை விட காட்டுமிராண்த்தனம் என்ன இருக்க முடியும் ?//

                    இது போன்ற கட்டியமைக்கப்பட்ட வாய்வழிக் கதைகள்தான் நீங்கள் சொல்லும் ‘காட்டுமிராண்டித்தனத்தில்’ தோற்றுவாய்கள்.

                    //ஃபாசிசத்தையும், முதலாளித்துவத்தையும் வழக்கம் போல் குழப்பிக்கொள்கிறீர்கள். இன்று மே.அய்ரோப்பாவில், கனடாவின், ஸ்காண்டினேவியாவில் இருப்பதும் ‘முதலாளித்துவம்’ என்றே அழைக்கப்படுகிறது. அது காட்டுமிரண்டித்தனம் என்று நீங்க வேணும்னா சொல்லிக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படி கருதுவதில்லை.//

                    விதர்பாவில் விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனம். பெருநிறுவனங்களை (வால்மார்ட்) உள்ளே விட்டு, அவர்கள் மூலம் சிறு வணிகர்கள் வேட்டையாடப்படுவது காட்டுமிராண்டித்தனம்.
                    ஸ்காண்டினேவியாவின் ஸ்வீடன் (அங்குதானே இருக்கிறது) பீரங்கி செய்து உலகெங்கும் விற்பது காட்டுமிராண்டித் தனம்.

                    இவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள் என்று சொல்கிறீர்களா?

                    //மாவோ செய்த கொடுஞ்செயல்களை விட காட்டுமிராண்டித்தனம் எதுவுமில்லை. இன்றை சீனாவே அதை மறுக்கவில்லை. அறிவுலகம் அதை விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்துள்ளது. ஆனால் அத்தனையும் அவதூறுகள் என்று நீங்க சொல்வதை அறியாமை என்றே நிராகரிக்க வேண்டும்.//

                    அறிவுலகம் பதிவு செய்தவை உங்கள் இந்து சுட்டியில் தந்திருப்பது போன்ற வதந்திகள், வாய்வழிக் கதைகள். மாவோவின் மீது சேற்றை அள்ளி வீசுவதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

                    கலாச்சாரப் புரட்சியின் போது சீன மாணவர் படையினர் வழிகாட்டியாக பயன்படுத்திய மாவோவின் மேற்கோள்கள் நூலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? (அதன் மூலம் யாராவது டீச்சரை அடிக்க திட்டமிட்டால், அது அவர்களின் மிகப்பெரிய மூளைக் கோளாறைத்தான் காட்டும்)

                    வேண்டுமென்றால் சுட்டி தருகிறேன்.

                    • // கட்டுரையில் வந்த தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க எந்த வழியும் இல்லை.///

                      ok. then you can continue to live in your fantasy world. the point i was talking about was about the Hindu paper’s integrity. if you can claim this is false, then i can only doubt your wisdom and intellegence.

                      I heartiliy wish that you were born in China in the 40s and lived thru the hell of the great leap forward and the cultural revolution.

                      if you are damn sure of what you belive, then why have never esposused maoisim in its true form as advocated by Mao ? and yet you projected yourself as a Gandhian.

                      ///விதர்பாவில் விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனம். ///

                      விவசாயிகள் அங்கு தற்கொலை செய்ய காராணிகள் பற்றி பல முறையும் விரிவாக எழுதியும் உள் வாங்கி இயலாம் உம்முடன் பேசுவதான் தவறு.
                      தாரளமயமாக்கல் தான் அதற்க்கு காரணம் என்பது தவறு என்று இங்கு சமீபத்தில் விரிவாக எழுதியும், இதை மீண்டும் சொல்கிறீர்.

                      //இது போன்ற கட்டியமைக்கப்பட்ட வாய்வழிக் கதைகள்தான் நீங்கள் சொல்லும் ‘காட்டுமிராண்டித்தனத்தில்’ தோற்றுவாய்கள்.//

                      கட்டியமைக்கப்பட்ட கதைகளா ? அறிவுகெட்ட மாசி என்று நட்புடன் சொல்ல தோன்றுகிறது. நீர் சீனாவில் என்ன அறிந்துகொண்டீர் என்றே தோன்றுகிறது. இன்றைய சீனா. மாவோ பற்றி என்ன கருதுகிறது என்றாவது அறிவீரா ?

                    • //ஸ்காண்டினேவியாவின் ஸ்வீடன் (அங்குதானே இருக்கிறது) பீரங்கி செய்து உலகெங்கும் விற்பது காட்டுமிராண்டித் தனம்.//

                      ஆம். சரி, டென்மார்க் அப்படி செய்யவில்ல. நியூசிலாந் அப்படி செய்யவில்லை. (ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ?).

                      லிபரல் ஜனனாயகம் பற்றி பெரும் அறியாமையில் இருகிறீர். சர்வாதிகாரம் பற்றியும், முக்கியமாக பாட்டளிவர்க சர்வாதிகாரம் எதில் முடியும் என்பதை பற்றியும் அறியாமை மூழ்கி, மாயையில் இருக்கிறீர் என்கிறேன். சீனாவின் ஆர்க்கைவஸ், ரஸ்ஸியாவில் ஆர்க்கைஸில் ஆராய்ந்து சமீபத்தில் எழுதியவர்கள் எல்லாம் மடையர்கள் / அயோக்கியர்கள், உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறீர்கள்.

                    • //ok. then you can continue to live in your fantasy world. the point i was talking about was about the Hindu paper’s integrity. if you can claim this is false, then i can only doubt your wisdom and intellegence.

                      I heartiliy wish that you were born in China in the 40s and lived thru the hell of the great leap forward and the cultural revolution.

                      if you are damn sure of what you belive, then why have never esposused maoisim in its true form as advocated by Mao ? and yet you projected yourself as a Gandhian.//

                      1. இந்து பத்திரிகையின் நேர்மை ஈழப் பிரச்சனையில் சந்து சந்தாக சிரித்தது. சிங்கள ஆட்சியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு திரித்து வெளியிட்ட செய்திகளைப் பார்த்து சாபமிட்டவர்களின் பட்டியல் வெகு நீளம்.

                      தனது குடும்ப அரசியலுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவதில் இந்து பலருக்கும் முன்னோடியாக இருக்கிறது.

                      இரண்டு வினவு கட்டுரைகள் மட்டும்

                      i. https://www.vinavu.com/2009/09/23/nram-goebbels/
                      ii. https://www.vinavu.com/2011/01/18/ram-rajapakse-tape/

                      2. நானும் 1940களில், 1950களில், 1960களில் சீனாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். அதனால் உங்கள் ஆசீர்வாதத்தில் எந்த தவறும் இல்லை :-).

                      3. மாவோயிசம் என்பது என்ன?

                      சீன சமூகத்துக்கு பொருத்தமான வழியை உருவாக்கி செயல்படுத்தியவர்களில் முக்கியமானவர் மாவோ. அவர் பயன்படுத்திய அதே அறிவியல் ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி எந்த ஒரு சமூகமும் தமது மக்களுக்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொடுக்கும் வழிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

                      //விவசாயிகள் அங்கு தற்கொலை செய்ய காராணிகள் பற்றி பல முறையும் விரிவாக எழுதியும் உள் வாங்கி இயலாம் உம்முடன் பேசுவதான் தவறு. தாரளமயமாக்கல் தான் அதற்க்கு காரணம் என்பது தவறு என்று இங்கு சமீபத்தில் விரிவாக எழுதியும், இதை மீண்டும் சொல்கிறீர்.//

                      நீங்கள் விரிவாக எழுதுபவை எல்லாம் நீங்கள் பிடிவாதமாக நம்பும் கோட்பாடுகளிலிருந்து பிறப்பவை மட்டும்தான் என்று தோன்றுகிறது. நடைமுறையில் என்ன நடக்கிறது என்று கண் திறந்து பார்க்க நீங்கள் தயாராக இல்லை, எத்தனை ஆயிரம் மக்கள், எத்தனை லட்சம் மக்கள் நம் கண் முன் வாழ்வழிந்து இறந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உங்கள் கோட்பாடுதான் முக்கியம்.

                      //கட்டியமைக்கப்பட்ட கதைகளா ? அறிவுகெட்ட மாசி என்று நட்புடன் சொல்ல தோன்றுகிறது. நீர் சீனாவில் என்ன அறிந்துகொண்டீர் என்றே தோன்றுகிறது. இன்றைய சீனா. மாவோ பற்றி என்ன கருதுகிறது என்றாவது அறிவீரா ?//

                      அறிவேன். சீனாவில் நான் நிறைய அறிந்து கொண்டேன்.
                      மாவோ மீது வைக்கப்படும் அவதூறுகளின் ஊற்றுக்கண் என்ன என்று புரிந்து கொண்டேன்.
                      கலாச்சாரப் புரட்சியால் ‘பாதிக்கப்பட்டவர்’ கூட வேலை பார்த்திருக்கிறேன். அவரது பின்னணி, அவரது இன்றைய நிலைமை பற்றியும் தெரிந்திருக்கிறேன்.
                      எனவே, ‘எது கட்டுக்கதை, எது அவதூறு’ என்று தெரிந்து கொள்வதற்கு படித்தவற்றோடு, ஓரளவு நேரடி நடைமுறை அனுபவமும் எனக்கு இருக்கிறது.

                    • //ஆம். சரி, டென்மார்க் அப்படி செய்யவில்ல. நியூசிலாந் அப்படி செய்யவில்லை.// (ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ?).//

                      புத்திசாலித்தனமாக பேசுவதாகத்தான் நினைப்பு 🙂 (இல்லை என்றால் உங்க கூட விவாதிக்க முடியுமா 🙂

                      //லிபரல் ஜனனாயகம் பற்றி பெரும் அறியாமையில் இருகிறீர். சர்வாதிகாரம் பற்றியும், முக்கியமாக பாட்டளிவர்க சர்வாதிகாரம் எதில் முடியும் என்பதை பற்றியும் அறியாமை மூழ்கி, மாயையில் இருக்கிறீர் என்கிறேன். சீனாவின் ஆர்க்கைவஸ், ரஸ்ஸியாவில் ஆர்க்கைஸில் ஆராய்ந்து சமீபத்தில் எழுதியவர்கள் எல்லாம் மடையர்கள் / அயோக்கியர்கள், உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறீர்கள்.//

                      என்ன ஆர்கைவ்சை யார் ஆராய்ந்து எழுதினார்கள்?

                      20ம் நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவித்து, பெரும் திரளான மக்களை முன்னேற்றப் பாதையில் செலுத்தி, அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில் மகத்தான சாதனைகளைப் புரிந்த சோவியத் யூனியன், சீனாவின் வரலாற்றைப் பற்றிய வியப்புடன் பேசுகிறேன்.

                      சீனாவிலும் சோவியத் யூனியனிலும் கடைப்பிடிக்கப்பட்ட முறைகள் நடைமுறைக்கும் பகுத்தறிவுக்கும் உகந்தவை என்ற புரிதலில் பேசுகிறேன்.

                      ஒரு பக்கம் அறிவியலின் சாதனையான இணையத்தை பயன்படுத்திக் கொண்டே, சமூக பிரச்சனைகளுக்கு அறிவியலை மறுக்கும் மதங்கள், சாமியார்கள், ஜோதிடக் காரர்கள், பின் போகச் சொல்லும் போலித்தனத்தைக் கண்டித்து பேசுகிறேன்.

                      சோவியத் யூனியனும் சீனாவும் காட்டிய சமூகக் கட்டமைப்பு எந்த நம்பிக்கையின் (லிபரல் டெமாக்ரசி போன்றவை) அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவை அல்ல, அறிவியல் ஆய்வின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை என்ற தெளிவில் பேசுகிறேன்.

                    • மா சிவகுமார்,

                      உங்களுக்கு தனியாக தளம் இருக்கிறதா?
                      இருந்தால் பகிரவும். இல்லாவிட்டால் தயவு செய்து ஆரம்பிக்கவும். நிறைய தகவல்களும் பட்டறிவும் வெறும் பின்னூட்டங்களாக மட்டும் சிதறி வீணாவதால் சொல்கிறேன்.

                    • வணக்கம் பரமேசு,

                      //உங்களுக்கு தனியாக தளம் இருக்கிறதா?
                      இருந்தால் பகிரவும். இல்லாவிட்டால் தயவு செய்து ஆரம்பிக்கவும். நிறைய தகவல்களும் பட்டறிவும் வெறும் பின்னூட்டங்களாக மட்டும் சிதறி வீணாவதால் சொல்கிறேன்.//

                      என்னுடைய வலைப்பதிவு http://masivakumar.blogspot.com

                      கடந்த பல மாதங்களாக பதிவில் எழுதுவது குறைந்திருக்கிறது. இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். இந்த பின்னூட்ட விவாதங்களையும் தொகுத்து பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

                      நன்றி.

      • பெப்சி கோக்கினால் ‘அழிந்த; லோக்கல் தயாரிப்பாளர்கள் இன்று வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது///////////

        ஒருவேளை அதியமானோட பசங்களை யாராச்சும் கடத்திட்டு போயிட்டாங்கன்னு வையுங்க, ஒரு அஞ்சாறு வருசம் கழிச்சு அதபத்தி பேச்சு வந்தா, அவது புதுசா புள்ளகுட்டியெல்லாம் பெத்துகிட்டு சுபீட்சமா இருக்காரு மூடுயா வாயன்னு சொல்றது எவ்வளவு கொடூரமாகவும் லூசுத்தனமாகவும் இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த வாதம்…

  3. படித்த மேல்தட்ட பதிவர்கள்தான் வால்மார்டை ஆதரிக்கிறாங்க.நெல்லு எந்த மரத்தில்
    முளைக்குதுன்னு என்கிற மாதிரி…மும்மூர்த்திகளில் ஒருவரான மாற்று மொக்கை பதிவு
    போட்டுருக்கு.எப்படியாவுது யாபாரம் நடக்கனுமனு திட்டி தீர்த்துருக்கு. இதுவும் ஒரு வகையில் வல்லபன் ஆட்கள்தானே!!

    • //நெல்லு எந்த மரத்தில் முளைக்குதுன்னு என்கிற மாதிரி…//

      இதுதான் ‘அரிசிச் செடியா’ என்று நெற்பயிரைப் பார்த்து வியந்த கான்வென்ட் மாணவன் ஒருவனைப் பார்த்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பதிவர்களின் அறியாமையை என்னவென்று சொல்ல!

  4. The author is the sort of guy with the attitude of dalit mayawati!! These stupid people never understand what growth means!! There are hundreds of retail chain stores abroad, which were run by Indians. There are hundreds of MNCs in the form of automobile, mobile, communications, computers, higher education, medicine … and the list is endless. Starting from a needle to “the machine working for sethu samudram project” every thing has got a MNC label.
    Walmart like shops give quality product at a good price..where in the local “annachi” shops can’t give. Vinavu author didn’t fully understand the full concept of FDI.. he just sipped and commenting like a genius… pooor guy..

  5. //நியாயவாதம் பேசும் இந்த அல்பைகள் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கும் மேல் வங்கிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் ரிலையன்ஸ் பற்றி எத்தனை முறை பேசியிருப்பார்கள்? //

    இன்று ஒரு செய்தி படித்தேன். பத்து கோடிக்கு மேல் கடன் நிலுவையில் வைத்திருப்போரின் எண்ணிக்கை 22500!!

  6. How still people like Mr.Adhiyaman are not understanding the real pain of the people? Ohhhh these are all the people who sit in AC and appreciate everything…

    Right, Mr. Adhiyamaan, US president Mr. Obama also told something about wal mart. Since you have internet knowledge, please google it and whenever you find time, please paste it here.

  7. அண்ணாச்சி கடைக்காகப் பரிந்து பேசுபவர்கள் அந்தக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்ததுண்டா?
    சம்பளம் ரூ 500 – 1000 என்கிற ரேஞ்சில் இருக்கும். பி.எஃப், இ.எஸ்.ஐ., 8 மணிநேரக் கணக்கு எதுவும் கிடையாது. ‘சம்பள ஆள் இல்லை’ என்ற போர்டு தொங்கும். கேட்டால், ‘இவன் என் மச்சான், ஊரிலிருந்து அழைத்துவந்து உதவிக்கு வைத்திருக்கிறேன்’ என்பார் அண்ணாச்சி. குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது படு சகஜம். அந்தச் சின்னப் பசங்கள் அடிக்கப்படுவதும் சகஜமே.

    இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்! இத்ல்லாம் அண்ணாச்சி கடையில் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?

    ஆண்ணாச்சி கடைகளும் அவர்களது கஸ்டமர் உறவுகளும் நிலப் புரபுத்துவத்தின் நீட்சியே! உதாரணமாக அண்ணாச்சிகள், தன் சொந்த ஊர்க்காரன், சாதிக்காரனுக்கு மட்டுமே வேலை தருவார்கள். உண்மையில் நிலப்புரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்ட அண்ணாச்சி கடைகள் அழியுமென்றால் அதை உண்மையான கம்யூனிஸ்டு வரவேற்க வேண்டும். இப்படி அடுத்த வளர்ச்சிநிலையான முதலாளித்துவமும், அது உருவாக்கும் ‘ஆர்கனைஸ்டு லேபரும்’ தான் கம்யூனிஸத்துக்கே அடிப்படைத் தேவைகள். நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளுக்கு இதெல்லாம் புரியாது – காரணம் அவர்களிடமும் நிலப்பிரபுத்துவ, சாதிய நோக்குதான் உள்ளது என்பதே! அவர்கள் மார்க்ஸியம் பேசுவது ஒரு சுயநலன் சார்ந்த வசதிக்காக மட்டுமே.

    அவர்களுக்கு நம் அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்தப்படாமல் வீணாகும் ஏழை மாணவன் பற்றி அக்கறை கிடையாது; நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டும் வகுப்புக்கு வராத, அல்லது வந்தாலும் பாடம் நடத்தாத ஆசிரியரது வர்க்க நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். மிடில் கிளாஸான ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ‘உழைக்கும் வர்க்கம்’ என்றுகூறிக் காப்பாற்றிவருபவர்களைக் கார்ல் மார்க்ஸ் இன்று இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

    • //முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; //

      உண்மையாவா? உண்மையென்றால் வளர்ந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். இந்தியாவை ஏய்க்கவே செய்வார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் யூனியன் வைக்கவோ அனுமதிப்பது இல்லை.

    • ஒன்னு சொந்த புத்தி இருக்கனும் இல்ல கட்டுரையை படிச்சிட்டாவது பின்னூட்டம் போடனும், எங்கேயோ மார்க்சியத்தை தப்புத்தப்பா ஒட்டுக்கேட்டுட்டு ”நானே சிந்திச்சேங்கற” மாதிரி தியாகுத்தனமான பின்னூட்டம் போட்டா இப்படித்தான் முழுசா பேத்தலா இருக்கும்.

      மொதல்ல வால்மார்டுல சம்பளம் எவ்ளோ, அங்க தொழிற்சங்கம் இருக்கா, ஆர்கனைசுடு லேபர்-அன்ஆர்கனைசுடு லேபர் அப்டீன்னா என்ன? நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவம் இப்படின்னா என்ன இதெல்லாம் ஒழுங்கா படிச்சிட்டு வாங்க இல்லேன்னா பெரியவங்கயாரையாச்சும் அனுப்பி வையுங்க

      • ///மொதல்ல வால்மார்டுல சம்பளம் எவ்ளோ, அங்க தொழிற்சங்கம் இருக்கா, ஆர்கனைசுடு லேபர்-அன்ஆர்கனைசுடு லேபர் அப்டீன்னா என்ன? நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவம் இப்படின்னா என்ன இதெல்லாம் ஒழுங்கா படிச்சிட்டு வாங்க இல்லேன்னா பெரியவங்கயாரையாச்சும் அனுப்பி வையுங்க ///

        பேஷ், பேஷ், நல்ல மழுப்பல்! நான் எழுப்பியிருக்கிற விஷயங்களுக்குப் பதில் எதையும் காணோம் 🙂

        • நீங்க எழுப்புனது எழும்புனாதானே?

          தொழிற்சங்கமே இல்லாத வால்மார்டில், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் வால்மார்டில், மூன்றாம் உலக நாடுகளில் ஆயிரக்கணக்கான அடிமைக்கூடாரங்களை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை உழைப்பை கசக்கிப்பிழியும் வால்மார்ட்டை பற்றி

          @@@@@@@@@@இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்! இத்ல்லாம் அண்ணாச்சி கடையில் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?@@@@@@@@

          இப்படி உளரினால் அதற்கு பதில் வேற சொல்லமுடியுமா? அதனாலதான் சொல்றேன், யாராச்சும் பெரியவங்க இருந்தா அனுப்பி வையுங்கன்னு…

          • அந்த சுட்டியில் சொல்லியிருப்பவை அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொண்டால்கூட, வால்மார்ட்டை இங்கு கட்டுப்படுத்துப்போவது நமது சட்டங்களே. சைனா மாதிரி ஸ்வெட்ஷாப்பை நாம் அனுமதிக்கத் தேவையில்லை, அனுமதிக்கப் போவதுமில்லை.
            போக இந்த விஷயம் வால்மார்ட் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. டெஸ்கோ, கேர்ஃபார் என்று 2 டஜன் நிறுவனங்கள் இங்கு வரக்கூடும்.
            மேலும் இன்று தற்காலிகமாகப் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டை பிஜேபி, திருணாமூல் போன்ற கட்சிகளின் அரசியல் லாபக் கணக்கு சார்ந்த எதிர்ப்புகளால்தான். எப்படியும் ஒருநாள் (விரைவில்) வெளிநாட்டு முதலீடு சில்லறை வணிகத்தில் அனுமதிக்கப்படப் போவது உறுதி. ம.க.இ.க. போன்றவர்களின் ‘போர்க்குணம்’ மிக்க எதிர்ப்புகளால் பைசா பிரயோசனம் இல்லை.

            ‘நக்ஸல்பாரியே நமது பாதை’ என்ற கோஷத்தை மக்கள் அடியோடு புறக்கணித்துத் ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ அல்ல என்று மிக வலுவாக உணர்த்திவருவதன் சோர்வு அவர்களிடம் இருக்கத்தானே செய்யும் பாவம்…அந்த மனச்சோர்வைப் போக்கிக்கொள்ள சில பாவலாக்கள் தேவைதானே! நடத்திக்கொள்ளட்டும். நமக்கும் ஜாலியா பொழுது போகிறதே!

            இன்னொன்னு.. இடதுசாரி கொள்கைப்படி எப்படியும் அண்ணாச்சி கடைகளும் ஆகாதுதான் (தனியார் என்பதால்). அப்ப என்னதான் இருக்கனும்? அமுதம், காமதேனு, சிந்தாமணி, பாண்டியன் மாதிரியான கூட்டுறவு கடைகளா? இவற்றின் இலட்சணம்தான் தெரியுமே! எந்தக் குடும்பத்தலைவியும் இவற்றை விரும்புவது இல்லை. இவை ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

            உண்மை என்ன என்றால் வெளிநாட்டுக் கடைகள், உள்நாட்டுப் பெரிய கடைகள், அண்ணாச்சி கடைகள், அரசு கூட்டுறவுக் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கடைகள் என எல்லா விதமான கடைகளும் இயங்க நம் பொருளாதாரத்தில் வழி உண்டு என்பதே. ரிலையன்ஸ், பிக் பஜார் வந்து எந்தப் பெட்டிக் கடையும் அழியவில்லையே.