முதலாளிகளை சந்தையில் ஃபிரீயாக தொழில் முனைய விடும்போது அவர்களிடம் உருவாகும் திறமை மற்றும் போட்டியின் காரணமாக பொருட்களின் விலை தாழ்ந்து அது நுகர்வோருக்கு பலனளிக்கும் என்பது சுதந்திர சந்தையை ஆதரிக்கும் பொருளாதாரப் புலிகளின் கருத்து. ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மயங்கள் அமுல்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருக்கின்றதே அன்றி குறையவில்லை என்பதுதான் உலக மக்களின் அனுபவம். மேலும் தொழிலாளர்களின் உழைப்பை எவ்விதத்திலெல்லாம் சுரண்டலாம் என்பதில்தான் முதலாளிகளின் திறமையும் உள்ளது.
இவ்விலைவாசி உயர்வின் நீட்சியாக ஆலைத் தொழிலாளிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள முதலாளிகளுக்கு எதிராக ஊதிய உயர்வு கோரி போராட ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்தை ஒடுக்க அப்போராட்டங்களுக்கு எதிராக சதிசெய்வது, அச்சுறுத்துவது, மற்றும் தொழிலாளர்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவது போன்ற கீழ்த்தரமான வேலைகளை முதலாளிகள் செய்வதும், அதற்கு நமது அரசே உடந்தையாக இருப்பது என்பதும் நமது இந்திய வரலாற்றில் பதிந்த ஒன்றுதான். இதற்கு உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் என்று விதிவிலக்கல்ல.
இந்திய நுகர்வுச் சந்தையில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் ஹிந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை (DETS) வடமங்கலத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவதாக தொழிலாளர்ளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே அவ்வொப்பந்ததை முறையாக நடைமுறைப் படுத்தியதில்லை. புதிய ஊதிய உயர்வு நடைமுறை படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் நிர்வாகம் நோவு கோழி போன்று கண்ணை மூடிக்கொண்டு இருக்கும். இதற்கு எதிராக தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு போராட்டம் ஆரம்பமாகும்போது நிர்வாகம் சில முன்னனியாளர்களை முடக்கச் செய்வதும் அச்சுறுத்துவதுமாக செய்து முறையான ஊதிய உயர்வினை அமுல்படுத்துவதை காலங்கடத்தும்.
இவ்வாறு காலங்கடத்துவதன் மூலம், தொழிலாளர்களை கோபமுறச் செய்து அதன் மூலம் தவறுகளை இழைக்க வைத்து நிர்வாகத்திற்குச் சாதகமான ஊதிய ஒப்பந்தத்தை 1 அல்லது 11/2 வருடங்கள் கழித்து நிறைவேற்றிக்கொள்ளும்.. இந்த இடைப்பட்ட காலத்திற்குண்டான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்குவதில்லை. இதன் மூலம் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதே நிர்வாகத்தின் நோக்கம்.
2002-ம் ஆண்டு 18 மாதங்கள் கழித்தும் 2007-ல் 1 ஆண்டு கழித்தும் ஊதிய உயர்வை அறிவித்தது. இதனிடையில் 2002-ல் இருவரையும் 2007-ல் ஆறு தொழிலாளர்களையும் பணியிடை செய்தது. இக்காலகட்டங்களில் அந்நிறுவனத்தில் செயல்பட்டு வந்த வெல்ஸ் யூனியன் இதற்கு எதிராக போராட வழிதெரியாது புழுங்கிக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக புதுவையில் செயல்பட்டு வந்த புஜதொமுவின் போராட்டங்களை கண்டு கடந்த 2008-ல் ஒர்க்கர்ஸ் யூனியன் (புஜதொமு) என்ற சங்கத்தை நிறுவினர். ஆரம்பத்தில் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அங்கீகரிக்காத நிர்வாகம் தொழிலாளர்கள் பெருமளவில் இணைந்ததை அடுத்து நமது சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனடிப்படையில் நிர்வாகம் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அழைத்து 2011க்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை வெல்ஸ் யூனியனுடன் இணைத்து கடந்த 30-07-11 அன்று தொடங்கியது.
இம்முறையும் நிர்வாகமானது வரலாற்றில் தனக்கிருந்த தொழிலாள விரோத அனுபவத்தை செயல்படுத்தத் தொடங்கியது. முதலில் தொழிலாளர்களில் 4 பேருக்கு மெமோ கொடுத்தது. பின்பு ஒர்க்கர்ஸ் யூனியனில் (புஜதொமு) சங்க முன்னனியாளர்கள் ஐவரையும், வெல்ஸ் யூனியனில் இருவரையும் பணி நீக்கம் செய்தது. ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களான சங்க முண்ணனியாளர்களை தொழிலாளர் துறை ஆணையரின் மூலமாக விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கக்கூடது என்றும் தொழிலாளர் நலச் சட்டம் 12(3) கூறுகிறது.
ஆனால் இந்துஸ்தான் யுனிலீவர் நிர்வாகம் இதனை மயிரளவிற்கும் மதிப்பதில்லை. ஏழு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் உள்ளிருப்புப் போராட்டம் நடக்கும், இதைச் சட்ட விரோதம் என காரணம் காண்பித்து சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாட தீர்மானித்தது. ஆனால் புஜதொமு தனது வழிகாட்டுதலின் மூலம் அவ்வாறு நடவாமல் செய்து நிர்வாகத்தின் முகத்தில் கரியை பூசியது.
இதன் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டு அதனடிப்படையில் 23-12-11 மேட்டுப்பளையம் தொழிற்பேட்டையில் தொடங்கி பேரணியாக சென்று தொழிலாளர் ஆணையரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதென திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறையோ அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து நிர்வாகத்திற்கு ஆதரவாக வேலை செய்தது. அனுமதி இல்லையெனில் தடையை மீறி அணிதிரண்டு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் தங்களது நிலைப்பாட்டை போர்க்குணத்துடன் தெரிவித்த பிறகு காவல்துறை இறங்கிவந்து பேரணி வேண்டாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என அனுமதி அளித்தது.
புதுவை வரலாற்றிலேயே முதல் முறையாக 600 தொழிலார்களுடன், நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், அதற்கு துணைநிற்கும் அரசையும் அம்பலப்படுத்தும் விதமாக 23-12-11 அன்று தொழிலாளர் துறை ஆணையர் முன்பு தோழர் அய்யானார் தலைமையேற்க அதிரடியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்துஸ்தான் வெல்ஸ் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும், சங்கத் தலைவர் ஜோதிமணி மற்றும் பொருளாளர்கள் விநாயகம், புருசோத்தமன் ஆகியோர் நிர்வாகத்தினை அம்பலப்படுத்தும் விதமாகவும் பேசினர். புஜதொமு அலுவல செயலாளர் தோழர் லோகநாதன் நிர்வாகம் தொழிலாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்றும் 9 வருடங்களாக பஞ்சபடி மாற்றாமல் தருவதினை சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆலை முதலாளிகளின் அடக்கு முறைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனிதனியாக போராடினால் வெற்றிபெற முடியாது அனைத்து ஆலை தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தி பேசினார்.. பிறகு பேரணியாகச் சென்று தொழிலாள ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் பணியிடை செய்யப்பட்ட 7 தொழிலாளர்களையும் மீண்டும் பணியமர்த்தவும், cod யினை விரைந்து முடிக்கவுமான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் தொழிலாளர்கள் அல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும். செஞ்சட்டை செங்கொடி சூழ முழக்கமிட்ட ஆர்ப்பட்டத்தை பெருமளவு மக்கள் வியப்புடன் நோக்கினர். அருகிலிருந்த தொழிலாளர்கள் தங்களது வேலையை விடுத்து உரையை கவனத்துடன் கேட்டனர். தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி,, அவர்களிடம் முதலாளிகளின் இலாபவெறியையும், உழைப்புச் சுரண்டலையும் விளக்கி புரியவைக்கும்போது ஆவர்கள் போர்க்குணத்துடன் அணிதிரள்வாளர்கள் என்பதனை இந்த போராப்பாட்டம் மெய்பித்தது.
_________________________________________________________
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.
_________________________________________________________
முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து போராடும் அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரியின் பிரிவு உபச்சாரம் நடந்தது. 68 வயது அவருக்கும்.
அவர் பேசியதில் ஒரு அம்சம்.
இப்பொழுது இந்த நிறுவனத்தின் ஆண்டின் மொத்த உற்பத்தி 12 கோடி. அடுத்த ஆண்டிற்கும் 24 கோடியாக மாற்ற வேண்டும். இதே தொழிலாளர்கள் எண்ணிக்கையை போதும். உற்பத்தியை மட்டும் இரட்டிப்பாக்க வேண்டும். பிறகு, உங்கள் சம்பளத்தை முதலாளி (கருணை கூர்ந்து) உயர்த்துவார் என்றார்.
இந்த தொழிற்பேட்டையில் இந்த நிறுவனம் உழைப்பாளர்களை சுரண்டுவதில் மிகப்பிரபலம். மூன்று பேர் வேலை செய்ய வேண்டிய வேலையை, ஒரு தொழிலாளியை வேலை செய்ய வலியுறுத்துகிற நிறுவனம். அதிகபட்சம் 10 ஆண்டுகளில் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டி விட்டு, ஏதாவது சப்பை காரணத்தை சொல்லி, வெளியேற்றுவிடுகிற நிறுவனம் இது.
போராடும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அரசியலையும், அமைப்பு உணர்வையும் கற்றுக்கொண்டால், அவர்களை வெல்லா யாரால் முடியும்!
//ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மயங்கள் அமுல்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருக்கின்றதே அன்றி குறையவில்லை என்பதுதான் உலக மக்களின் அனுபவம். ///
இப்படி ஆதாரமில்லாமல், அடித்துவிடுவதுதான் ‘ஆய்வு கட்டுரையா’ ? இதை தகுந்த ஆதாரம் கொண்டு மொதல்ல நிருபியுங்களேன். முக்கியமாக இந்தியாவில் விலைவாசி உயர்வு விகிதங்களின் வரலாறு பற்றியும். இந்த தாரளமயமாக்கல் எல்லாம் இல்லாத ‘state socialism’ காலங்களில் தான் ஆண்டுக்கு 20 சதம் அளவு விலைவாசி உயர்வு, கடுமையான வேலை இல்லா திண்டாட்டங்கள். அன்று வெளிவந்த திரைபடங்களே சாட்சி. வறுமையில் நிறம் சிகப்பு, பாலைவனச் சோலை போன்ற படங்களில் படித்த, வேலை இல்லா இளைஞர்களின் துயரமே மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டன். இன்றைய படங்களில் (அதில் எத்தனை குப்பை இருந்தாலும்), இந்த ’வேலை இல்லா திண்டாட்டம்’ என்ற சொல்லாடல் இல்லை. ஏன் ? மேலும் இன்று ஜனத்தொகை 120 கோடி ; அன்று இதில் பாதிதான். அதாவது அன்று ஆண்டு தோரும் வேலை தேடுபவர்கள் இன்றைய அளவுடன் ஒப்பிட்டால் பாதி தான் இருப்பர்.
விலைவாசி உயர்வுக்கான சரியான காரனிகள் பற்றி :
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
விலைவாசி ஏன் உயர்கிறது ?
//இப்படி ஆதாரமில்லாமல், அடித்துவிடுவதுதான் ‘ஆய்வு கட்டுரையா’ ? இதை தகுந்த ஆதாரம் கொண்டு மொதல்ல நிருபியுங்களேன். //
ஆதாரம் இருக்கிறது. உங்கள் நெல்லிக்கனி தளத்தை படித்தேன்.நீங்கள் கூறும் அனைத்தையும் மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு பொருளாதார பாடமாக தான் இருக்கிறது.
1.நீங்கள் கூறுவது போல் டெபிசிட் பட்ஜட் எழும் பொழுது அரசாங்கம் கடன் பெற்று டெபிசிட்டை நிலையை சீர் செய்ய முர்பட்டும் அது இடாகா நிலையில் ஒரு அரசாங்கம் தனது பணத்தை மிதம் இருக்கும் டெபிசிட் எற்ப அச்சிட்டுகிறது என்று சொல்கிறேர்கள். சரி ரிசர்வ் வங்கி அது அச்சிட்ட பணத்தை செடியுல்ட் கமர்சியல் வங்கிகள் முலமாக சந்தைனுள் செலுத்துகிறது. அப்படி செலுத்தும் ரிசர்வ் வங்கி பண புழக்கத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள சி ஆர் ஆர் என்னும் கடிவாளத்தை கையில் வைத்துள்ளது.நீங்கள் சொல்லுவட்கை போல் டெபிசிட் பட்ஜட் எழும் பொது எல்லாம் அரசாங்கம் பணத்தை அச்சிடுவது இல்லை. அப்படி டெபிசிட் பட்ஜட் எழும் பொது எல்லாம் பணத்தை அரசாங்கம் அச்சிட்டால் அது Hyper Inflationஅகி விடும்.
2.நீங்கள் பணவிக்கம் குறித்து குடுத்த விளக்கம் சிறந்தது மறுக்கவில்லை. ஆனால் என் முக்கியமான பொருள்களின் உற்பத்தி குறைகிறது. குறிப்பாக விவசாய பொருள்கள்?. காரனம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையும் முடிவுகளும் தான் காரணம். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்க நிலைப்பாடு தான் காரணம். ஒரு பொருளின் உற்பத்தி செளவும் அது சந்தையில் விற்கப்படும் விலையும் பன்மடங்கு உயர்வாக இருப்பது ஏன்? தனியார் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை உற்பத்தி செளவு ஏறாத வாரு பிரொடக்ஸன் சிகேலபிலிட்டியை குறைத்து பொருள்களுக்கு தேவையற்ற டிமன்டை எற்படுத்தி விலை ஏற்றத்தை உண்டாக்குகிறார்கள்.
3. மேலும் நீங்கள் சொல்லுவது போல் கந்து வட்டி கால் உன்றியதற்கு விலைவாசி உயர்வு காரணம் என்பது எற்பதற்கு இல்ல்லை. உன்மை நிலைமை தனிமனிதனுக்கு கடன் வழங்குதலில் ஒருங்கினைக்க பட்ட வங்கிகளும் நிதிநிறுவனங்களும் முனப்புடன் செயல் படததே காரணம். இன்று அளவும் பொதுதுறை வங்கிகள் தனிமனிதனுக்கு கடன் வழங்குவதில் முனைப்புடன் இறுப்பது இல்லை. அந்த இடைவேலியில் தனியார் வங்கிகளும்,நிதிநிறுவனங்களும், கந்து வட்டிகளும் போடும் ஆட்டம் அனைவரும் அறிந்த ஒன்று. ஏன் தனியார் நிறுவனங்கள் லோன் ரீ ஸ்டரச்சரங்கு செய்யும் பொழுது அல்லது கடன் வாங்கும் பொழுது பொதுதுரை வங்கிகலிடம் வருகிறார்கள்?. அவர்களுக்காக நடத்தப்படுகிறதா பொதுதுரை வங்கிகல்? பணம் வைப்பு செய்யும் பொழுது மட்டும் தனிமனிதனின் பணம் வேண்டும் ஆனால் அவனுக்கு கடன் வழங்குவதில் இவர்களுக்கு ஏன் தயக்கம்?
ஆகயால் விலைவாசி உயற்விற்கு நீங்கள் சொல்லும் தியரிட்டிக்கள் காரணங்கலில் இருந்து கர்பிரெட் நிறுவனங்கள் செய்யும் நடமுறை அட்டுளியங்களுக்கு அரசாங்கம் துனை நிற்கும் அவலம் தான் காரணம்.
//கடுமையான வேலை இல்லா திண்டாட்டங்கள். அன்று வெளிவந்த திரைபடங்களே சாட்சி. வறுமையில் நிறம் சிகப்பு, பாலைவனச் சோலை போன்ற படங்களில் படித்த, வேலை இல்லா இளைஞர்களின் துயரமே மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டன். இன்றைய படங்களில் (அதில் எத்தனை குப்பை இருந்தாலும்), இந்த ’வேலை இல்லா திண்டாட்டம்’ என்ற சொல்லாடல் இல்லை. ஏன் ? மேலும் இன்று ஜனத்தொகை 120 கோடி ; அன்று இதில் பாதிதான். அதாவது அன்று ஆண்டு தோரும் வேலை தேடுபவர்கள் இன்றைய அளவுடன் ஒப்பிட்டால் பாதி தான் இருப்பர்.//
முற்றிலும் தவறான கருத்து. 1983 – 2000 வரை இந்தியாவின் சராசரி வேலையில்லா தின்டாட்டத்தின் நிலை 7.20% விழுக்காடு அதுவே இப்பொழுது 9.4%. திரைப்படங்களில் வேலையில்லா திண்டாட்டம் என்ற சொல்லாடல் இப்பொழுது இல்லை என்பதால் வேலையில்ல திண்டாட்டம் குறைந்தது என்று சொல்வது அரவே தவரு. இப்பொழுது சமுதாய பாற்வையுடன் வரும் படங்கள் மிக குறைவாக இருக்கிறது. மேலும் அப்பொழுது எம்பிலாய் எக்ச்செங்ச் மட்டுமே இருந்த நிலையால் அது பெறிதாக பேசப்பட்டது. இக்காலக்கட்டதில் நவுக்கிறி, டய்ம்ஸ் ஜாப் போன்ற இனயதளங்கலில் நாள் ஒன்றுக்கு படித்த புது பட்டதாரிகள் அவர்களின் பதிவுகளை செய்யும் கணக்களவு எத்தனை என்று தெறியுமா?. அது கணக்கில் எடுத்துக்கொண்டால் அந்த விழுக்காடு ஏகிறும்.
////ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மயங்கள் அமுல்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருக்கின்றதே அன்றி குறையவில்லை என்பதுதான் உலக மக்களின் அனுபவம். ///
இப்படி ஆதாரமில்லாமல், அடித்துவிடுவதுதான் ‘ஆய்வு கட்டுரையா’ ? இதை தகுந்த ஆதாரம் கொண்டு மொதல்ல நிருபியுங்களேன்.// இதுக்கு ஆதாரம் நீங்கதான். லிபரல் முதலாளித்துவம், சுதந்திர சந்தை எங்குமே இல்லை. எல்லாமே உண்மை முதலாளித்துவம் அல்ல என்று சொல்லி வருபவர் நீங்கள்தான். எனவே கட்டுரையின் முதல் சில வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுதந்திர சந்தைப் ‘புலி’களில் ஒருவரான நீங்கள் ஒன்று தற்போதைய உலகமய-தாராளமய-தனியார்மய பொருளாதாரம் உண்மை முதலாளித்துவம் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். இல்லை அது உண்மை முதலாளீத்துவம்தான் எனில் எங்கெல்லாம் இதன் சீரழிவுகளுக்கு பதில் சொல்ல பயந்து ‘சுதந்திரச் சந்தை உருவாகவில்லை’ என்ற வாதத்தை கொண்டு வந்தீர்களோ அங்கெல்லாம் வந்து ஐ ஆம் ஸாரி என்று சொல்லிவிடுங்கள்.
இதேபோல்தான் நான் வேலை செய்து வரும் பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது. பொதுவாக கல்லூரிகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இதுபோல் சங்கம் வைத்துச் செயல்படுவதில்லை. எனவே அமைதியான முறையில் கடிதங்கள் மூலம் எங்கள் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறி வருகிறோம். நிர்வாகமும், கல்லூரி முதல்வரும் செவிசாய்ப்பதாய்த் தெரியவில்லை. கருங்காலித்தனமான சில பேராசிரியர்களே இதற்கு முழுமுதற்காரணம். முதலாளித்துவ உணர்வில் இல்லாத நல்ல நிர்வாகத்திடம் அந்த அரக்க குணத்தை தூண்டி விட்டதே அவர்கள்தான். எத்தனை தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்து என்ன பயன்! எத்தனை டாக்டரேட் பட்டங்களை வாங்கி என்ன பயன்! மனித மனங்களைப் படிக்க இயலாத கபோதிகளாய் வலம் வரும் அவர்களை என்ன செய்வது! அடுத்து என்ன செய்யவேண்டுமென யோசிக்கவேண்டும்.
இன்று தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள ஆலைகளில் ஒரு புதிய விசித்தரமான பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது ஆலைகளில் சங்கம் அமைப்பது என்பதை விட அது புஜதொமுவாக இருக்கக்கூடாது என்பதுதான் அது. மற்ற சங்கங்களில் உள்ள முன்னனியாளர்கள் உற்பத்தியில் ஈடுபடாமல் லும்பன்களாக சுற்றிக்கொண்டு சம்பளம் பெறுவதைக்கூட ஆலை முதலாளிகள் பொறுத்துக்கொள்கின்றனர். பொறுத்துக்கொள்கின்றனர் என்பதைவிட அதை ஊக்குவிக்கின்றனர் என்பதே சரியானது. அதே நேரத்தில் புஜதொமு ஒழுக்கம் மற்றும் பணிபுரிவதில் தவறு ஏற்படாவண்ணம் வழிநடத்திக்கொண்டு தங்களது உரிமைகளை வென்றெடுக்க தொழிலாளர்களை அனிதிரட்டுவதுதான் முதலாளிகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
மற்ற சங்கங்களை விட புஜதொமு மாறுபட்டது. ஏன் புஜதொமுவைக் கண்டு முதலாளிகள் பயப்படுகின்றனர் என்பதை அதியமான் விளக்க வேண்டும்?