“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.
மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.
அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது, 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற்போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.
‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன் நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.
கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.
மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?
அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான். ‘வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்’ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.
சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.
தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்துகளும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந்தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.
கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.
“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு ஜில்லாவில் ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள்தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப்படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும்போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத்துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அறநிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடைமையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.
தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன்னணி முதலான அமைப்புகள். “மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம்” என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.
அருமையான கட்டுரை. ஆதினங்கள் கையில் இருக்கும் கோவில் சொத்துக்களுக்கும் அளவே இல்லை. இந்த பார்பன , சைவ பண்டாரங்களை அடித்து துரத்திவிட்டு சொத்துக்களை கைப்பற்ற வேண்டும்.
கடவுள் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் கூட்டம்தான் இந்த பார்ப்பனர்கள். கடவுள் இல்லை என்பது இவர்களுக்கு தெரியும். கடவுளின் சொத்தை இப்படி மோசடி செய்றமே என்று கடவுளின் மேல் பயம் இருந்தால் செய்வார்களா. திருடர்களுக்கு, திருடுவதற்க்கு ஒரு முகமூடி தேவை. அதுபோல் கடவுள் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். கடவுள், அவர் சொத்தையே காப்பாத்திக்க முடியாதவர் மக்களின் பிரச்சினைக்கு எப்படி வழி செய்வார்.
கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை கோயில்கள் நயவஞ்சகர்களின் கூடாரமாக மாறிவிட கூடாது என்று அன்றே கலைஞர் எழுதினார் இன்று உண்மையாகிவிட்டது… கபாலிக்கே கோவிந்தா கோவிந்தாவா… அய்யோ அய்யோ
adha ezhuthuna mu.ka ve inaikki mokkayayittar,neenga vera.kadavula vechu panam sambaadichatu ellam onnum illa,kadavula yechu undiyalu udaichu panam thaan swiss bankula poraluthu.
மூ.க மொக்கையான என்ன கூற்மையான என்ன அந்த கருத்து உண்மை ஆயிடுச்சு. சிவன் சொத்து குல நாசம் அது மத்தவங்களுக்கு சிவன் சொத்து குலம் பேஸ் இது பார்ப்பனர்களுக்கு மட்டும் போல…
பார்ப்பானர்கள் மட்டும் தான் கடவுளை வைத்தும் ஏய்த்தும் பணம் சம்பாதிக்க முடியும். என் என்றால் கடவுள் என்ற வார்த்தையின் “சோல் பிரொப்ரைட்டர்கள்” பார்ப்பனர்கள் தான்.
வெளியே ஆட்டையப் போட்ட பார்ப்பான விட்டுட்டு உள்ளே அர்ச்சகப் பார்ப்பானப் புடிச்சு ஆட்றேள்..
again u talk shit,my grandfathers have been managing temples in the village and they never misappropriated a single paisa.i am not saying the method is fool proof but it is better in their hands than the definitely corrupt bureaucracy.100% gone if the govt takes over.
உங்க தாத்தா நல்லவருனா அதுக்காக ஊர்ல இருக்கும் எல்லாறும் நல்லவணுங்களா?அரசாங்கம் எடுத்துக் கொண்டால் அதிகாரிகள் ஆட்டையை போடுவார்கள் அதற்கு பார்ப்பனர்கள் நாங்களே ஆட்டையை போட்டுக்கிறோம் அப்படினு சொல்ல வெக்கமாயில்லை?
ithula aataya poda enna irukku? Koil sotha aataya podave mudiyathu.i agree upon one thing these days there are no good people left but the existing managements are good enough,govt shud increase the rents,no issues with that.
Solli ennathukku, atchila irunthappa meetka vendiyathane…
first try to seize all the land grabs of Mu Ka and DK and DMK and then we can talk about this.What ll happen if these go to the government?They ll end up in the government coffers and end up going to the pockets of the politicians,this way it serves a much bigger purpose than being monetized.
Sorry guys,all this ll remain in the hands of the board and so ll be the chdiambaram kovil.undiyal thutta kollaia dikkira pandaaram ellam edhavadhu urupadiyana velaikku ponga.
தம்பி, போப்பா….போயி புள்ளகுட்டிகள படிக்க வைய்யி……கப்பி தனமா பேசிட்டு……
Mr.Blogger
You are advising others to write views and comments in decent manner
without hurting the individuals.But unfortunately you are using only
indecentwords with caste politics.You can very well mention the names
without caste.Will you?
Coming to the above topic it is nothing new.Even few years before one
such banner of defaluters was put up in the Temple.As a reporter you
should look at both side of the coin.There is no second opinon in condemning
the act of the defaulters.Have you read the affidavit published by the
exceutive of the PSeducational society? Why the Govt had not passed any
notification for the past five decades to streamline the temple properties?
Most defaulters have political background .All ‘BL’ AC/DC/JCs cannot do anything
all these years to recover the arrears.Even now A temple house in north madastreet
had become a two storeyed commercial complex.Can you interview its owner and
put up an article?Please interact with HRCE and publish the latest development.
Thanks and regards-bs venkataraman
பார்பன பண்டாரங்கள் கட்டுரைக்க்கு தொடர்பாக என்றுமே பேசமாட்டார்களா ? எப்போதும் ஏதாவது பேசி மடம் மாற்றும் வேலையே செய்கிறார்களே..
u dont understand english,is it?
“u don’t understand english, do you?”
‘question tag’களை ஒழுங்கா பயன்படுத்துங்க. ஆங்கிலத்தை நாங்க சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு… 🙂
u dont understand english , do you?
it is a question mark and the same question suits u as well.
சுப்பிரமணி, உங்க ஆங்கில அறிவு புல்லரிக்க வைக்குது. தமிழ் நாட்டுல ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆங்கில மேதை நீங்கதான்.
அப்புறம், உங்க முன்னோர்கள் விவசாயம் பார்த்தாங்களா?.. இல்ல வெள்ளைகாரன்கிட்ட வேலை பார்த்தாங்களா?
adha unga aaya kitta poi kelu.
கேட்டேன் சுப்பி. உங்க முன்னோர்கள் 1875 ல வெள்ளைக்காரனோட ஆயா கிட்டக்க வேலை பார்த்தா சொன்னங்க.மொதல்ல உங்க history ய தெரிஞ்சுக்குங்க பாஸ்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
enakku indha mokkayellam kooda prachanai illa,aana nee yellam budhhi solara alavukku inga nelamai aagi poche adhu dhaan prachanai.
Did i ever bother about what your ancestors did or did i question?you brought them into the question,then u r asking me to cool down.
idhu thaan vella mudiyatha veerama?
மெல்ல முடியாத மேகம்.
நான் உங்களை மரியாதையுடன் அழைக்கும் போது நீங்கள் என்னை ஒருமையில் அழைப்பது நீங்க எந்த அளவுக்கு பண்பட்டவர் என காட்டுகிறது. இந்த பண்பாடு தெரியாத நீங்கள், ‘நீயெல்லாம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி உங்கள் தகுதியை கூட்ட நினைத்து தோற்று போகின்றீர்கள்.
idhellam oru periya vishayame illa,real respect lies inside. first try to respect reality and real people and things,before getting stuck up in silly things like nee,neenga and all.
அப்டியா.. சரிடா சுப்பு..
Heyy… I moved one step ahead.
‘question mark ‘ என்பது ‘?’.
‘question tag ‘ என்பது ‘is it’ ‘isnt’ ‘do you’ ‘don’t you’ போன்றவை.
question tag – களை அததன் இடத்தில் தான் பயன் படுத்த வேண்டும். சும்மா எல்லாத்துக்கும் ஒரு ‘இஸிட்’ போட முடியாது.
உங்களுக்கு ஆங்கிலம் அரைகுறையாய் மட்டுமே தெரிந்திருப்பது ஒரு குறையே அல்ல. ஆனால் ஆங்கிலம் தெரியாததை இழிவாக நினைக்கிற மனோபாவம் தான் இழிவானது…
குறைகுடம் கூத்தாடும்…
hahaha,i didn’t respect the grammaer even when i was in school?English has a million colloquiials and slangs and now no one cares about all that?
main matterukku vaa naina,inga complex yaarukku enakka,unakka?u r still stuck in these silly things,i have no problems if my understanding of a language is inadequate,i learn things intuitively.not to pass some exam,just to learn how to speak.
ok,since am bored.I just want to know whether what i wrote is correct or not? is it wrong to say you dont understand english,do you?
isn’t the auxiliary negative and the tag positive here?
சுப்புணி மச்சான். உங்களுக்கு தெரியாது இல்ல, என்பதில் வரும் இல்ல (அல்லவா) என்பதை ஆங்கிலத்தில் மொழி மாற்றிப் பாருங்கள். அதுதான் question tag. ஆங்கிலத்தில் என்ன தன்மையில் கூறுகிறோமோ அதற்கு எதிர்பதத்தில்தான் question tag அமைக்க வேண்டும். அது அம்மொழியின் தனித்தன்மை. உமது ஆங்கில அறிவு மெச்சத்தகுந்தது. மீசையில மண் ஒட்டலைனு இத்தனை பேருக்கு முன்னாடி தைரியமாக சொல்றீங்க பாருங்க மச்சான் உங்க வீரமே வீரம்.
adhtha thaanya naanum solren.ozhunga apdichu paarunga yaaru meesaila mannu irukka illayannu.
Read your comment no. 6.1
you go to primary school again.
பார்பனர்களே, அரசாங்கத்தின் கீழ் வருவதை அரசியல் வாதிகள் கீழ் வருவதாக காட்ட முயல்கிறீர்களே.. ஆனால் பார்பன பண்டார கும்பலிடம் இருப்பதை பற்றி உங்கள் வாய் ஏன் திறக்க மாட்டேன்கிறது. பூணூல் வெளியே தெரிகிறது…
mr.madhu
naan sattaye podala,poonula kaati kittu thaan irukken.politics,politicians,bureaucrats,it is all the same thing.u r the one who is naive about all this.
அரசியல்வாதிகள், பிரமுகர்கள் அமுக்கியதையெல்லாம் இந்து அறநிலையத் துறை போர்டு போட்டு அறிவிக்க முடியுமா? அதை மட்டுமல்ல, மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் சொந்தமான சொத்துக்களை மீட்க இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் போராடுவதை பு.ஜ. வெளியிட வேண்டும். பார்,பார், பார்ப்பான் பண்ணிட்டான்..பண்ணியே போட்டான் என்று களைக்கும் வரை கும்மியடித்து கலைந்து போகாமல், இழந்த, இழக்கவிருக்கும் கோவில்/மசூதி/தேவாலயச் சொத்துக்களை மீட்டு, மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முயற்சி பண்ணுங்கோ…
என்ன அம்பி சொத்த மீட்பதற்கு மட்டும் ம.க.இ.க வை கூப்பிடும் நீங்கள் இந்த சொத்த காட்டிலும் பெரிய சொத்து சமதர்மம் அதை மீட்பதற்கு தோழர்கள் திருவரங்கம் ரங்கநாதர் கருவறைக்குள் செல்ல முற்பட்ட பொழுது உங்கள் மக்கள் அவர்களை வன்மையாக தாக்கினார்கள், மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முயற்சி செய்தால் இப்படி பன்றாலேனா…
Simply entering into the temple will give equalitynu neenga ninancha, ayoo pavam. Poluthu pollena entha mathiri dramathan TIKA katchi pannuvanga, eppo neenga try panringa. nadakattum
avalavu akkara irukkara vinavu, appidiye vakkab vaariya soththayum, aakiramippu edathula ulla churchunga kanakkayum sonna nalla irukkum!
innakku paapan paapannu karuthu podara vinavu, andha soththu ellam ella saathiyinaralayum anubavikka padara onnunu theiryama pesa koodathu! kabali koil sothu sila paaparanunga kitta irukkalam! athe neram pala thalthapattavanga kitta evalo koil soththu irukkunu thedi pudichu solluma?
ivanugalluku en thaan paapanu sonna evlo inikitho theiryala!
pala varudangal munbu paaraparal kuthagai edukka patta nilangalai indru pira samoohathavargalal anbavikka pattu varuvadhu kankoodu! ethai oru samudhaya kutramay parka vendume allathu, oru samooga kutramai parkka koodathu!
Thats totally true,my family bought agricultural land in 1885 and leased it out and by 1975 we had to sell it to the tenants who tilled it for not more than 70 years and the Singampatti Zamin who has been torturing the pallars from time in memmorial still gets to keep his land.
\\my family bought agricultural land in 1885 and leased it out and by 1975 we had to sell it to the tenants who tilled it for not more than 70 years//
என்ன சுப்பிரமணி,சௌக்கியமா இருக்கியளா.இது இப்ப சொல்றது.முன்னம சொன்னது இந்த சுட்டில இருக்கு.ரெண்டுல எது பொய்.
https://www.vinavu.com/2012/01/09/virudhagireeswarar-temple-hrpc-protest/#comment-55045
\\@Anbu
dei sombu,
enga oorla enagalukku 30 acre nelam irukku.1850 varaikkum adhula naangale erangi vivasayam panni irukkom,30-40 aadu maadu ellam vechu mechu irukkom,adhukku appuram enga nelatha leasukku kuduthu enga samsaaringa kitta inaikkum naanga paasamathana irukkom.//
ஆக கமண்டு போடுறதுக்கே இவ்வளவு புளுகிற நீங்க ரொம்ப நேர்மையா திறமையாதான் கோயில் சொத்த நிர்வாகம் பண்ணுவீங்க.
you are very smart and have a great memmory,but you forget that both my grandparents were landlords and both mom and dad are from tirunelveli.pagutharivu jaasthi aanadhulo ullukulla ellam konikicho?
one more thing,do u live ur life and beliefs based on what people say here? what if i say the truth or lie, either ways is my testament fundamental,do u even know whether i am a real person or an internet bot.
yov subramani…you are a frigging bot! You don’t have any morale or any reasoning skills. You lie like a rug!
u have a lot of those,is that why u r reasoning with me like this?yes,i am lying.i am actually a poor pappan who grandparents were living as temple priests and i always wanted to be a rich person like many people out there and thats why i am living my fantasies here on the internet.are u happy now?
அய்ய சூப்ரமணி…இதுக்குப் போயி இப்படி கோச்சுக்கலாமா? நீ தாம்பா சொன்ன…”நான் ஒரு இணையத்தில் உள்ள இயந்திரம்” -னு! மவனே மெசினுக்கு எப்படி சிந்தனை செய்ய வரும்? யோசி சுப்பு…நல்லா யோசி! அட மறந்துட்டேன் பாரு…நீதான் ஒரு மெசினாச்சே!
not a problem,naan solra lineukkula debate panra alavukku thaan neenga irukeenga,idha thaan modhalle sonnan.
முதல்ல அம்மா வழி,அப்பா வழின்னு சமாளிக்க பாத்துட்டு தன்னோட பொய்யை தானே நம்ப முடியாம ரெண்டாவதா ஒரு கமண்டு போட்டு நா பொய் சொன்னா என்ன மெய் சொன்னா என்ன அத கேட்டு அதுபடி நடக்க போறீங்களான்னு கேக்குறாரு சுப்பிரமணி. ரெம்பவே நியாயஸ்தனா இருக்காரு.
naan thaan sonnane,naan summa poi solran.naan ottandi,naan pichaikaaran,suymma idhu maadhiri ellam fan
tasize panni santhosa pattukaran,idhane unakku venum?
வக்புன்னா என்னங்கற புரிஞ்சிட்டு பேசுப்பா..முஸ்லிம் சமூகத்தில் இருந்த பெரும்பணக்காரர்களும், நவாபு, நவாபின் எடுபிடிகளும், பிள்ளையில்லாமல் செத்துப்போக இருந்தவர்களும் தங்கள் சமூக மக்களுக்கு பயன்பட எனும் நோக்கில் எழுதிவைத்துச் சென்ற சொத்துக்களை நிர்வாகம் செய்வதுதான் வக்பு வாரியம்.
ஆனால் கோவில் சொத்துகள்? மன்னர்களாலும் மன்னருக்கு பின் திப்பு சுல்தான் ஆர்க்காடு நவாபு போன்றவர்களாலும் அனைத்து மக்களிடமும் இருந்து பெற்ற வரிகளை தானமாக்கி உருவாக்கியவை..அச்சொத்தின் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு அங்குலத்திலும் மேல்வாரமாக உறிஞ்சப்பட்ட ஏழை விவசாயிகளின் உழைப்பு உள்ளது. ஊர் ஊராய் அலைந்து உப்பு விற்ற வியாபாரிகளின் உழைப்பு உள்ளது. தறியில் கைசோர்ந்த கைக்கோளர் உழைப்பு உள்ளது. ஆக கோவில் சொத்து என்பது அனைத்து மக்களுக்குமான சொத்தாகும். இதில் பிற்காலத்தில் மதம் மாறியவர்களுக்கும் பங்கு உண்டு..ஆனால் கோவிலின் பேரால் தின்று கொழுக்கும் பார்ப்பனக் கூட்டத்துக்கு அக்கோவிலின் ஒரு செங்கலில் கூட பங்கு கிடையாது. துரத்தி அடிக்கப்பட வேண்டிய இவை
Muslim Nawab/Sultan also got the money by looting hindu temples,taxing hindu population and all and the purpose of any sovereign fund is the same for the security of the people.Temple fund is the same and if something has to be confiscated it has to be the muslims and christian funds as they were the looters and plunderers of this country.
Soona Maana ippadiye maintain pannu,dappa danceuthaan aadum.
“Muslim Nawab/Sultan also got the money by looting hindu temples”
Please provide the evidences of this in tamil nadu.
Do you know Tipu donated millions to Sirungeri matt?
yet another lie,nobody is here to live off the share he gives off his plunders.
Malik Kafur raiding Madurai/Trichy as early as 1390s and this Arcot Nawab and all Tipu Sultan fighting and controlling Madurai after defeating the nayakkars.
Tipu’s donation:
The Shankaracharya petitioned the Mysorean ruler, Tipu Sultan for help.[1] A bunch of about 30 letters written in Kannada, which were exchanged between Tipu Sultan’s court and the Sringeri Shankaracharya, were discovered in 1916 by the Director of Archaeology in Mysore. Tipu expressed his indignation and grief at the news of the raid:
“People who have sinned against such a holy place are sure to suffer the consequences of their misdeeds at no distant date in this Kali age in accordance with the verse: “Hasadbhih kriyate karma ruladbhir-anubhuyate” (People do [evil] deeds smilingly, but suffer the consequences crying).”[1]
He immediately ordered the Asaf (Nawab) of Bednur to supply the Shankaracharya with 200 rahatis (fanams) in cash and other gifts and articles. Tipu’s interest in the Sringeri temple continued for many years, and he was still writing to the Shankaracharya in the 1790s.[3] The matha continues to flourish to this day, and governs many institutions.
(Refer: http://en.wikipedia.org/wiki/Sringeri_Sharada_Peetham)
“Arcot Nawab and all Tipu Sultan fighting and controlling Madurai after defeating the nayakkars.”…நீங்க ஏன் அய் ஏ எஸ் எழுதக் கூடாது?
இன்னொரு விசயம்..மாலிக் காபூர் எப்போ ஆட்சி நடத்தினார், தமிழ்நாட்டில்?
Malik Kafur raided Madurai and Trichy for the temple gold.
I am asking who is Tipu Sultan to plunder India and then give a share of the pie? Is he like Mu.Ka who loots lakhs of crores and offers a few thousands to wash his sins.
I have 3 IAS officers in the family,influence is already there.
மச்சான் சுப்புணி. அந்த மூணு பேருமே நீர்தானே ஓய். சும்மா அடிச்சு விடாதேரும்.
aamam naane thaan,nee appadiye erumai maatu kulupaati saaniya alli vechiru.
Hello Super mani,
Meenakshi was the last ruler of madurai and she died in 1736. After she was arrested by chanda sahib, the nawab’s rule begins..But Tipu born in 1750. He was fighting against East India company..There was no nayaks in madurai during tipu’s period. Also he never controlled madurai..Dindigul was his southmost town.
That’s why I suggested you to write IAS exam, because you have very good knowledge in History…
Please write once..the count can be increased to 4..Can you please mention the names of other ’3 idiots’?
சென்னையில் மட்டுமல்ல பலபகுதிகளிலும் கோவில் சொத்துகள் தனியார்வசம் உள்ளன! இவைகளின் வாடகையை இன்றைய சந்தை நிலவரத்திற்கு உயர்த்த வேண்டும் அல்லது திருப்பிஎடுக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு வருமானம் வரும் வகையில் மாற்றவேண்டும்! வருமானத்தை அறநிலயத்துறை வசம் ஒப்படைத்து,வசதியற்ற கோவில்களை பராமரிக்க ஆவன் செய்யலாம்! இவ்விடங்களில் சேமிப்புக் கிடங்குகளை கட்டலாம்!
மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதினால் நல்லா இருக்கும்
பக்தி மார்க்கத்தினுள் நுழைந்து பரலோக சுகங்களை இங்கேயே அனுபவிக்கும் பீ தின்னிப் பிறவிகளை அப்பட்டமாய் தோலுரித்துக் காட்டியுள்ளது இக்கட்டுரை. இதை பக்தி உணர்வாளர்கள் யாரும் இங்கு மறுக்கவும் இல்லை! அதே நேரம் அவர்கள் இதை இந்து சமய அறநிலையத்துறையிடம் விட்டால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்று கேட்கிறார்கள். அங்கே பணவெறி பிடித்த பலஜாதிக்காரன் தின்று தீர்க்கப்போவதை இங்கே பார்ப்பான் தின்கிறான் என்ற அளவில்தான் அவர்களது விவாதம் அமைந்திருக்கிறது. ஆக, மனிதனுள் தூண்டிவிடப்படும் அளவிலா சொத்துவெறி, பணவெறி அவன் எம்மார்க்கத்தினுள் நுழைந்திருந்தாலும் உசுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது என்பதும் உண்மையாகிறது!
இதற்கு ஓர் எளிமையான எடுத்துக்காட்டு : ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல்.
வெறும் ஆறு மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட அக்கட்டிடத்தில் 29 மாடிகளைக் கட்டியதுடன் ஆளும் அரசு கும்பலும், அதிகாரிகள் கும்பலும் பங்குபோட்டு அனுபவிக்க நினைத்தது அசாதாரணமானது. அக்கட்டிடத்தை இடிக்கச் சொல்லித்தான் இப்போது உத்தரவு வந்திருக்கிறதேயொழிய அக்கட்டிடத்தைப் பங்கு போட முயன்ற பீ தின்னிகளுக்கு எவ்வித பாதிப்பும் நேரவில்லை!!
what do u intend shud be done here if all these guys go?what should be established and how to monetize this prime property and make it go to the government coffers if the current tenants cant pay market price rent?
முதலில் இது போன்ற கோவில்களும் அவற்றின் நிலம், வீடு முதலான சொத்துகளும் அரசின் வசம் ஒப்படைக்கப்படவேண்டும். கோவில் நிர்வாகிகளையும், இதர சொத்துகளுக்கான நிர்வாகிகளையும் அரசே நியமிக்கவேண்டும். கோவிலின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் கோவில் பணிகளுக்கே செலவிட வேண்டும். காலி நிலங்களில் கடைகளோ வீடுகளோ கட்டியும், ஏற்கெனவே இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட்டும் – இவற்றின் மூலமெல்லாம் கிடைக்கும் வருமானத்தை ஏழை எளியோரின் மேம்பாட்டுக்கும், ஆதரவற்றோர் மறுவாழ்வுக்கும் வழங்க வேண்டும்.
Hindu aranilai thurai is an unnecessary.Politicians dont need to regulate religion,the civil society will take care of it with the judiciary or the district magistrate and there is no need to have a ministry for temples.If they feel the temple is making too much money or the lands are going for a waste,then let them tax the temple and its assets.
கடவுள் தனக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு வரிகட்டப் போகிறாரா? கடவுளையும் கடைசில சிட்டிசன் ரேஞ்சுக்கு ஆக்கியாச்சா! பலே! 🙂
so there goes ur point right,some things need to be subsized and other things not so,who decides what is to be subsized and not?
சுப்பண்ணா,
இது சும்மா நக்கலுக்குப் போட்டது.. சீரியஸா எடுத்துக்க வேணாம். 🙂
11.1.1 தான் என்னுடைய பதில்.
call me by my name and if the govt is going to take up hindu board properties they should take up the properties of all religions,else leave the religions to sort their own affairs paying a certain amount of tax.
கோவில் சொத்து என்பதே மக்கள் சொத்தே , மக்களின் வரிப்பணம். மன்னர் காலத்தில் வழங்கப்பட்டது.பார்பன கும்பல் அதைக்கொண்டு வயிறு வளர்க்கிறது. யாரு ஊட்டு சொத்த யாருடா பங்கு போடுறது.???
//கோவில் சொத்து என்பது அனைத்து மக்களுக்குமான சொத்தாகும். இதில் பிற்காலத்தில் மதம் மாறியவர்களுக்கும் பங்கு உண்டு..ஆனால் கோவிலின் பேரால் தின்று கொழுக்கும் பார்ப்பனக் கூட்டத்துக்கு அக்கோவிலின் ஒரு செங்கலில் கூட பங்கு கிடையாது. துரத்தி அடிக்கப்பட வேண்டிய இவை//
who is eating off the temple property? The only issue is the rents which were paid back then have not been revised and this is a problem since a longtime.let the rents be revised for all the commercial establishments and that ll open a new list of establishments who have been paying low rent since a longtime.
மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொல்லமாரித்தணம் பண்றவன் எந்த ஜாதி, யென்ன மதமா இருந்தா யென்ன…. தூக்கிப்போட்டு மீதிக்வேண்டியது தானே??
//கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். //
அத கொண்டுவந்தது ஒரு அய்யர்தானே? அப்போ சாதி பேர குற்றம் சாட்ட என்ன _______க்கு பயன்படுத்தறெ?
@ paramesu and mannaangatti
“you don’t understand english, is it?” is not a wrong usage.. its a shortened form of you don’t understand english, is it (the case)?”
if you consider yourself qualified enough to make fun of others’ usage of english, first punctuate the following sentence and prove that expertise:
“that that is is that that is not is not that that is that that is is not true is not true”
Answer: ‘That that is, is. That that is not, is not. That that is not, is not that that is. Is that not it? It is.’
இது உனக்கு தப்புன்னு தோணுச்சுனா google ல question தேடின மாதிரி Answer ஐயும் தேடிக்கோ.
சரி இதுல உனக்கு ஏன் நெறி கட்டுச்சு… என்னவோ போ….
தமிழ் நாட்டின் இரண்டாவது ஆங்கில மேதை போட்டியாளர்கள்ல நீயும் இருக்கியாப்பா?… நீயும் ஆங்கிலத்துல ஒரு பத்து கமெண்ட் போடு…. உன் பேரையும் பரிசீளிசுடுவோம்..
ozhunga badhil sollu naina,summa pinaathatha.
The issue is not they or myself understand english or not? Madhu says BS Venkatraman is talking irrelevant things about the topic when his is the only post relevant to the topic,thats why i asked whether he did not understand what BSV said? and i get a defensive reaction for that,inferiority complex is it?
என்ன மனிதன் வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிட்டீங்க போல? முதல்ல அடுத்தவன பாத்து உனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ஆங்கிலத்தில் கேட்ட சுப்பிரமணிக்கிட்ட இதை கேளுங்க அவர் என்ன சொல்றார் என்று பார்ப்போம்.
//அத கொண்டுவந்தது ஒரு அய்யர்தானே? அப்போ சாதி பேர குற்றம் சாட்ட என்ன _______க்கு பயன்படுத்தறெ?..
ஏன் என்றால், சாதியை தகுதியாக கொண்டே ,சாதகமாக கொண்டே பார்பன கும்பல் வயிறு வளர்க்கிறது. அதனால் அதை குறிப்பிடாமல் விமர்சிக்க முடியாது.
எந்தெந்த சாதியெல்லாம் கோவில் சொத்தை திருடி தின்கிறது.? ஏன் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்கள் கோவில் சொத்துக்களில் ஆதிக்கம் செலுத்தவில்லை.சாதி தகுதியை அடிப்படையாக வைத்தே இந்த திருட்டு நடைபெறுவதால் குறிப்பிட்டுதான் விமர்சிக்க முடியும்.விமர்சிக்க வேண்டும்.
அப்ப தாழ்த்தப்பட்ட சாதி என்ற ‘தகுதி’யை கொண்டு தன் பள்ளியிலேயே தனக்கு அளிக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளும் பெற்றும் அந்த சாதி தகுதி மட்டும் இல்லாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனவர்கள், தான் வாங்கிய மதிப்பெண் பெற்றிருந்தும் சாதி அடிப்படையில் அந்த இடத்தை பெற்றவர்களை சாதி பேர் சொல்லி திட்டலாமா?
மனிதன்,
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் குள்ளநரித்தனம் இது.கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பல் கோயிலுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை ஆட்டையை போட்டுருக்கிறது.இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரியில் நுழையும் மாணவன் யாருடைய உரிமையையும் தனக்கானதாக மாற்றிக் கொள்ளவில்லை.அவன் சார்ந்த சமூகத்தின் சார்பில் அந்த சமூகத்திற்கு உரிமையான இடத்தையே பெறுகிறான்.
ஒரு கொள்ளைக்கும்பலையும் நியாயமான உரிமையை பெறும் மாணவர்களையும் சமப்படுத்துவது அயோக்கியத்தனம்.இந்த அழகுல சாதி பெயரால் திட்டலாமா எனும் அளவுக்கு உங்கள் சாதி வெறுப்பு மேலோங்க கேட்கிறீர்கள்.விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரி வாயிலில் நின்று திட்டிப் பார்க்கலாம்.விளைவுகளையும் அனுபவிக்கலாம்.
அமைதி.என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும்.அவர்கள் இணையத்தில்தானே திட்டினார்கள். நான் ஏன் நேரடியாக திட்ட வேண்டும் .அதானே.
வினவு தோழர்கள் இணையத்தில் மட்டும் செயல்படவில்லை.களத்தில் போராடும்போதும் மக்களிடையே பொதுவெளியில் பரப்புரை செய்யும்போதும் இதே சொற்களை சொல்ல தயங்கியதில்லை.மேலும் கோயில் சொத்துக்களை கொள்ளையிடுவோரை விமர்சனம் செய்தால் அந்த சாதியை திட்டுவதாக ஏன் சண்டைக்கு வர வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த கருத்து உங்கள் சொந்த கருத்துதானா. ஏன் கேட்கிறேன் என்றால் எழுதிய வாதங்களுக்கு பொறுப்பேற்கும் துணிவில்லாத கோழை நீங்கள்.முன்பு ஒரு முறை இப்படித்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நஞ்சு கக்கி விட்டு எதிர் கேள்வி கேட்டவுடன் அது எனது சொந்த கருத்தல்ல.அவுக இப்படி சொல்லலாம்.இவுக இப்படி சொல்லலாம் என எடுத்துக்காட்டி இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான வாதங்களை கூர்மைப்படுத்தினேன் என ”டபாய்த்தீர்கள்”
First go audit the DMK’s accounts and what SUNTV and SCV did when they were in power, and then we ll talk about everything else.
மனிதா 69 சதம் இடஒதுக்கீடு இருக்கிற நாட்டில் 20 சதம் தானே தலித்கள் உடையது மீதி 49 சதம் பிற்படுத்த பட்டவர்க்கு என்று அறியாத ? —– மாதிரி ஜாதி பேர் சொல்லி திட்டட்டுமா என்கிறாய்?சமூகத்தில் எதனை சதம் இருக்கிறார்களோ கல்வியிலும் அரசு வேலைகளிலும் அத்தனை சதம் அவர்கள் இருந்தே ஆக வேண்டும் என்கிற உரிமை இது சலுகையோ பிச்சையோ அல்ல.ஆமாம் எந்த ஊர்ல போய் திட்ட போகிறீர்கள்?
கரெக்ட்… எழுதுமுன் சிந்தி. சுப்பி and மனி போன்றவர்களுக்கு அவர்கள் தந்தையர் வீட்டிலிருந்து கொடுப்பது போன்ற நினைப்பு. அவன் உரிமையை அவன் பெறுவது கூட பொறுக்காது.
naan reservationa pathi onnuma sollaliye.
Since u have pulled me in,let me answer.
I am very happy that OC people especially Brahmins lost their land and reservation as this made them much more hardworking, focused and sincere.It made them get rid of all their bad habits and made them be very competitive in life.It is a boon for them and it has since been proven that they have done much better only since then and better than before.It also has helped them boost their self image and good that they dont have to beg from the government.It has made them flexible,adaptive and practical.
Regarding reservation,
I feel in TN 50% reservation with 30-35% for SC/STs and 15% for BC/OBC is more than enough.Most of the seats go vacant and often due to very poor quality of the state board syllabus and the primary education system,most OBCs who make it big in life often study is ICSE/CBSE schools and change board in XI std and crack the XII board exam bigtime.I have seen some very top guys abuse the reservation policy and get ahead of some other OBC guy who truly deserves it.
Anyway,thats the take on reservation.
appuram edhukku examu,marku mannangatti ellam,edhukku schoolu,summa jollya caste certificata kuduthuttu engg coll seat vangikka vendiyathu thane.
Mannaangatti annen.. When you copy paste at least make sure it is the answer to what i asked.. My statement ends in ‘true’
எப்பா ஆங்கில மேதை.. தப்புனா கூகிள் லையே தேடிக்கோ அப்டின்னு சொன்னேனே?
சரி வேற வழி இல்லை … சுப்பி கிட்ட இருந்து ஆங்கில மேதை பட்டதை பறிச்சி உன்னாண்ட கொடுத்துட வேண்டியது தான்.
கோவில்களை அரசு நிர்வகிக்கட்டும்.. அதே போல் நாகூர் தர்காவையும் வேளாங்கண்ணி மாதா கோவிலையும் கூட அரசுவசம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சுகளுக்கும் மசூதிகளுக்கும், எங்கிறுந்து எவ்வளவு பணம் யார் மூலமாக வருகிறது போன்ற விஷயங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் இந்து கோவில்களை மட்டும் அரசு கண்காணிக்கும் என்பது பச்சை அயோக்கியத்தனம்.
கோவில் சொத்து பார்பனர்களின் சொத்தல்ல. அனைத்து கோவில் சொத்துக்களையும் அரசு கைப்பற்ற வேண்டும்
koil sothu,trustoda sothu thaan.
சுப்புர்ரமணி..மயிலாப்பூர் கோவில் சொத்தை பாப்பானுங்க ஆட்டையப் போட்டிருக்கானுவளா இல்லியா..அதை மொதல்ல பேசிட்டு அப்புறமா லொளறலாமா?
illai.
These are shoking revelations made by a foreigner.
The Hindu Religious and Charitable Endowment Act of 1951 allows State Governments and politicians to take over thousands of Hindu Temples and maintain complete control over them and their properties. It is claimed that they can even sell the temple assets and properties and use the money in any way they choose.
A charge has been made not by any Temple authority, but by a foreign writer, Stephen Knapp in a book (Crimes Against India and the Need to Protect Ancient Vedic Tradition) published in the United States that makes shocking reading.
Hundreds of temples in centuries past have been built in India by devout rulers and the donations given to them by devotees have been used for the benefit of the (other) people. If, presently, money collected has ever been misused (and that word needs to be defined), it is for the devotees to protest and not for any government to interfere. This letter is what has been happening currently under an intrusive law.
It would seem, for instance, that under a Temple Empowerment Act, about 43,000 temples in Andhra Pradesh have come under government control and only 18 per cent of the revenue of these temples have been returned for temple purposes, the remaining 82 per cent being used for purposes unstated.
Apparently even the world famous Tirumala Tirupati Temple has not been spared. According to Knapp, the temple collects over Rs 3,100 crores every year and the State Government has not denied the charge that as much as 85 per cent of this is transferred to the State Exchequer, much of which goes to causes that are not connected with the Hindu community.
Was it for that reason that devotees make their offering to the temples? Another charge that has been made is that the Andhra Government has also allowed the demolition of at least ten temples for the construction of a golf course. Imagine the outcry writes Knapp, if ten mosques had been demolished.
It would seem that in Karanataka, Rs. 79 crores were collected from about two lakh temples and from that, temples received Rs seven crores for their maintenance, Muslim madrassahs and Haj subsidy were given Rs 59 crore and churches about Rs 13 crore. Very generous of the government. Because of this, Knapp writes, 25 per cent of the two lakh temples or about 50,000 temples in Karnataka will be closed down for lack of resources, and he adds: The only way the government can continue to do this is because people have not stood up enough to stop it.
Knapp then refers to Kerala where, he says, funds from the Guruvayur Temple are diverted to other government projects denying improvement to 45 Hindu temples. Land belonging to the Ayyappa Temple, apparently has been grabbed and Church encroaches are occupying huge areas of forest land, running into thousands of acres, near Sabarimala.
A charge is made that the Communist state government of Kerala. wants to pass an Ordinance to disband the Travancore & Cochin Autonomous Devaswom Boards (TCDBs) and take over their limited independent authority of 1,800 Hindu temples. If what the author says is true, even the Maharashtra Government wants to take over some 450,000 temples in the state which would supply a huge amount of revenue to correct the states bankrupt conditions.
And to top it all, Knapp says that in Orissa, the state government intends to sell over 70,000 acres of endowment lands from the Jagannath Temple, the proceeds of which would solve a huge financial crunch brought about by its own mismanagement of temple assets.
Says Knapp: Why such occurrences are so often not known is that the Indian media, especially the English television and press, are often anti-Hindu in their approach, and thus not inclined to give much coverage, and certainly no sympathy, for anything that may affect the Hindu community. Therefore, such government action that play against the Hindu community go on without much or any attention attracted to them.
Knapp obviously is on record. If the facts produced by him are incorrect, it is up to the government to say so. It is quite possible that some individuals might have set up temples to deal with lucrative earnings. But that, surely, is none of the governments business? Instead of taking over all earnings, the government surely can appoint local committees to look into temple affairs so that the amount discovered is fairly used for the public good?
Says Knapp: Nowhere in the free, democratic world are the religious institutions managed, maligned and controlled by the government, thus denying the religious freedom of the people of the country. But it is happening in India. Government officials have taken control of Hindu temples because they smell money in them, they recognise the indifference of Hindus, they are aware of the unlimited patience and tolerance of Hindus, they also know that it is not in the blood of Hindus to go to the streets to demonstrate, destroy property, threaten, loot, harm and kill.
Many Hindus are sitting and watching the demise of their culture. They need to express their views loud and clear Knapp obviously does not know that should they do so, they would be damned as communalists. But it is time some one asked the Government to lay down all the facts on the table so that the public would know what is happening behind its back. Robbing Peter to pay Paul is not secularism. And temples are not for looting, under any name. One thought that Mohammad of Ghazni has long been dead.
HARD REALITIES……… Hinduism remains the most attacked and under siege of all the major world religions. This is in spite of the fact that Hinduism is the most tolerant, pluralistic and synthetic of the world’s major religions.
You can verify the authencity of the article below if you search ‘Stephan Knapp IAS Officer’ on Google.
கோயில்கள் உருவானதற்குக் காரணமே பணம் சம்பாதிக்கத்தான். ஆரம்பகாலங்களில் கோவில்கள் நைட்டு ஆனால் தண்ணியடிக்குறதுக்கும் பெண்சுகத்திற்காகவும்தான் இருந்திருக்கிறது. அதன் மூலம் அரசுக்கும் ராஜனுக்கும் வருவாய் கிடைத்திருக்கிறது. பின்னர் அதை பெரிதாக எழுப்பினார்கள். பெரிய அளவில் தேவடியா தொழில் செய்தார்கள்.(கமெண்ட்டை திருத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதுதான் உண்மை) இப்படிப்பட்ட பிராத்தல் குடிகள் இப்பொழுது இருந்தால் என்ன அழிந்தால் என்ன. எல்லா கோவில்களையும் தகர்த்து விடுவோம்.
idhu ellame poi,devadasi irunthathu ellam unmai thaan.Aana koilla ellama dhu nadakkala,avunga veetula thaan irunthathu.unakku thraani iruntha kai vechu paaru.
கோயிலில் நடனமும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது, இசையால் வழிபடுவதைப் போல. தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின், நடனக்கலைக்கும், தேவரடியார்களுக்கும் அரச ஆதரவு குன்றி அவர்களும் வீழ்ச்சியடைய நேரிட்டது. இதுதான் உண்மை.
மனிதன்,
முதலில் கூரையேறி கோழி பிடிக்கவும்.பொறவு வானம் ஏறி வைகுந்தம் போகலாம்.காபாலி கோவில் சொத்துக்களையும் அதிலிருந்து கோயிலுக்கு வரவேண்டிய வருமானத்தையும் ஆட்டைய போட்டுருக்கறத பத்தி சொல்லுங்க. அதானே இங்கு விவாதப்பொருள்.
சுப்ரமநியாவது ”illai”ன்னு ஒரே வார்த்தையில நாட்டாம தீர்ப்ப சொல்லிட்டாரு. நீங்க உங்க கருத்த சொல்லாம இருக்கலாமா.
ஒன்னுக்கு போனதுனாலதா ஜெயிலுக்கு போனேன்னு கடைசி வரைக்கும் பத்திரிகையாளர்ட்ட சொல்லாத வடிவேலு மாதிரி ஏதேதோ எழுதுறீங்க.மேட்டர தொட மாட்டேங்கிறீங்களே.
//
சுப்புர்ரமணி..மயிலாப்பூர் கோவில் சொத்தை பாப்பானுங்க ஆட்டையப் போட்டிருக்கானுவளா இல்லியா..அதை மொதல்ல பேசிட்டு அப்புறமா லொளறலாமா?
subramanianFebruary 28, 2012 at 12:00 am Permalink
23
illai.//
அப்படின்னா, கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரத்துடன் மறுப்பை எழுதவும்.
சுப்பிரமணி ,
//The issue is not they or myself understand english or not? Madhu says BS Venkatraman is talking irrelevant things about the topic when his is the only post relevant to the topic,thats why i asked whether he did not understand what BSV said? and i get a defensive reaction for that,inferiority complex is it?//
பார்பனர்கள் பொதுவாக தங்களால் பதிலலளிக்க இயலா நிலையில் உளவியல் ரீதியாக மற்றவரை தாழ்த்த நினைப்பார்கள் அதை தான் இங்க செய்யுறங்க. அது என் கிட்ட ஆகாது அம்பி. இது ஆங்கில கட்டுரையாக இருந்திருந்தால் நான் ஆங்கிலத்தில் தான் உரையாடுவேன். பார்பனர்கள் மட்டுமே இங்கு ஆங்கிலத்தில் எழுதுகின்றனர் தங்கள் மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ள,தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள.
Madhu,
Neenga romba room pottu yosikkareenga.Neenga katturaikku sambandame illama yedhayo pinaathittu ippo ulaviyal,kalaviyalnnu ellam solladheenga. ippo prachanai ungaloda inferiority complex,thaazhvu manappanmai and when i say ungaloda,naan solradhu ungala mattum thaan,idhukkum ulaviyal reedhiya aaraichi ellam seyyadheenga.
Adhanala thaan yaaru enn sonnalum senjaalum neenga paakura kanottam mattum maarama irukku.
Naan yerkanave solli irukken naan englishla ezhutharathu thamizhla ezhutharathukku neramum vinayum adhigamngrathala thaan.
aana enna nathandhalum katturaikku sambandham illama kadhaikkira unga nermai enakku romba poudichurukku.
Soona Maana,sollave vaai koosuthu appuram unakku ellam vera eppadi peru veppanga,
You should also write man,solla mudiyathu ippo irukkura quotavila pass aagi,Raja maadhiriyana periya thalaingalukku kooja thookura levelukku uyaralam.yaarum kekka mudiyathu.
How far is dindigul from Madurai and did the Nayakkars rule just the city of Madurai and nothing else?
Tipu Sultan was in Alliance with the Arcot Nawab and he was defeated bigtime by the Peshwa and he was paying tax to the Marathas.Moreover his family had their presence in Madurai and their generations still live there.I even know people personally.
The British controlled Madurai but Tipu was always trying to annex territories,whether Travancore or his fights with the Hyderabad Nizam.He fought the British because they were a big power and Tipu didn’t like their interference.Thats all.
Him and the Arcot Nawab were always interested in territories including Madurai and i said Arcot Nawab the proxy of the mughal empire defeated the naykkars and it cant happen without Hyder Ali’s support.
சுனாமனான்னா சுயமரியாதைன்னு அர்த்தம் ஓய்..அப்படித்தான் பேர் வைப்பா..
மீனாச்சி நவாபுக்கு 2 லச்சம் கொடுத்து ஏமாந்தபோதே 1736இல் நாயக்கர்வாள் ஆட்சி அம்பேலாயுடுத்து..அதன் பின்னர் திருச்சினாப்பள்ளிக் கோட்டேலேர்ந்து ஆரல்வாய்மொழி வரைக்கும் ஆட்சியை மீட்டெடுக்க நவாபு முஸ்தீபு நடக்குது..இதில் இருந்து 20 வருசம் கழிச்சுதான் ஹைதரோட எழுச்சியே நடக்குது..ஆனா நீர் சொல்ற வரலாற்றை தஞ்சாவூர் கல்வெட்டுலதான் எழுதணும் ‘Arcot Nawab the proxy of the mughal empire defeated the naykkars and it cant happen without Hyder Ali’s support.’ அதான் நான் சொல்றேனே..ஐ ஏ எஸ் எழுதுங்கோ..அல்லது அப்துல்கலாம் மாதிரி புக் எழுதுங்கோ..1931 இல் பிறந்த கலாம் தனக்கு ஆறு வயசாயறச்சே பாம்பன் பாலம் உடைஞ்சுது, தனுஷ்கோடி அழிஞ்சுதுன்னு ‘புது’ வரலாறு படைத்தாரே..அதே மாதிரி நன்னா எழுதுங்கோ..
are u telling me that Tipu had no allegiance to the Mughal Empire in Delhi or tacit understanding with Arcot Nawab or that Arcot Nawab is not a proxy of the mughal empire?
well again,hows this related to what i think of the temple trust?
Temple trust and the money belongs to the trust only,it is not people’s money.Leave the hindu religion out of the political sphere or take the lands and properties of all religions.
“it cant happen without Hyder Ali’s support” what are you trying to say here?
freeya vidunga soonamaana,modhallenthu ennala solla mudiyathu.
I tell u this straight fact,no muslim ever will provide perfect justice in a situation pitting a muslim vs a non-muslim.Fact of life,deal with it.
If you still want to live in some dreamland based on some idealistic,brainwashed marxist revisionist world,u r free to do that but please spare the rest of us from your confused bullshit.
whereas a brahmin will provide perfect justice in a situation pitting a brahmin vs a non-brahmin.
he has to be impartial,infact in all my experiences i have seen tamil brahmins make it very hard for other tam brams with them just to show their impartiality.
I can assure you that there is no groupism.
ஆமாம் மிகவும் சரி எல்லா கோயில்களிலும் ஆண் பெண் உறவை குறிக்கும் லிங்கம் தான் இருக்கிறது.இங்கே பார்ப்பன சூழ்ச்சி என்னவென்றால் அந்த லிங்கத்திற்கு பிரகதீஸ்வரர் அருணாச்சலேஸ்வரர் கபாலீஸ்வரர் என்று பெயர் வைத்து அதை ஒரு ஆம்பிளை சாமி ஆக்குவது.இல்லை என்று மறுக்க முடியுமா?
ஆண் பெண் உறவை குறிக்கும் லிங்க வடிவை மிகப்பெரிய அளவில் செய்து அந்த வளாகத்தில் காமக்களியாட்டங்கள் கட்டணத்துடன் நடத்தி வருவாய் ஈட்டிய மண்டபங்களே கோவில்கள். தேவரடியார்கள் அங்கு தங்கி இசையை நடனத்தை வளர்த்தார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள் அவர்களுக்கு எப்படி உணவு கிடைத்தது?எல்லா கோவில்களிலும் சல்லாப சிற்பங்கள் இருப்பது ஏன்?அந்த லிங்கத்திற்கு பெயர் வைத்து சாமியாக்கி விட்டால் எல்லாம் மறைந்து புனித மண்டபம் ஆகிவிடுமா?
இந்த லிங்கக் குழப்பம் பல இந்துக்களுக்கே உண்டு. வைணவக் கோயில்களில் லிங்கத்தைப் பார்க்கமுடியாது. நெருப்புத்தூணாய் காட்சியளித்த சிவபெருமானின் அடி, முடியைத் தேடி, பிரம்மா மேல் நோக்கியும், விஷ்ணு பாதாளத்திற்கும் நெடும்பயணம் செய்தார்கள் என்று புராணங்கள் உண்டு. ஈசன் ஆதியந்தம் இல்லாதவன் என உணர்த்தும் குறியீடுதான் லிங்கம் என்பது சைவர்கள் நம்பிக்கை.
எல்லாக் கோயில்களிலும் சல்லாபச் சிற்பங்கள் இல்லை. இருக்கும் இடங்களில் கோயில் கோபுரங்களிலோ, புற மண்டபங்களின் தூண்களிலோ இருக்கலாம். பலமுறை, பல கட்டங்களாக கோபுரங்கள் புதுப்பிக்கப் பட்டும், மண்டபங்கள் சேர்க்கப்பட்டும் வந்திருக்கின்றன. எப்போது, யார், எதற்காக சல்லாபச் சிற்பங்களை கோர்த்துவிட்டார்கள் என்பது தெரியாது.
தேவரடியார்களின் உயர்நிலை பற்றியும், கலைஞர்கள், இடையர்கள், விவசாயிகள், வணிகர்கள் என சமூகத்தின் பலதரப்பினரும் கோயில் நிவந்தங்களால், கோயிலுக்குத் தங்கள் முறை போக, மீதி வருமானாத்தால் வளமுடன் வாழ்ந்தனர் என்றும், பெரிய கோயில் நிர்வாகம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமசபைகளால் நிர்வகிக்கப் பட்டதும் (சில கிராமங்களே பார்ப்பன கிராமங்கள்), குடவாயில் பாலசுப்பிரமணியம், தஞ்சாவூர் என்ற தம் ஆய்வு நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
Kaamam ellam oru thappe illa,alavukku adhigamana kaamam than thappu. kaamam thappu,asingam appadi ellam europeans madhiri anavasiyama unarchiya kattupaduthuradhu naala thaan rape ellam nadakkuthu.
adha pasi,thookam maadhiri oru normal emotiona paatha thappe nadakkaathu.
adhu aan penn uravu illa, It if the symbolical union of shakti and shiva.It is the symbol of man’s creative energy and how the powerful shakti avoiuds shiva from his destructive tendencies.but inspite of all this,u cant do anything inside the temple.
தம்பி சுப்பு இந்த க்ரியேடிவ், எனெர்ஜி, பவர், சிம்பாலிக் போன்ற வார்த்தைகள் எல்லாம் எப்ப நமக்கு தெரியும்,கோயிலை எல்லாம் எப்ப கட்டினான்?… விஞ்ஞானம் எதை கண்டுபிடிச்சாலும் இது தான் அதுன்னு சொல்வீர் போல.அந்த லிங்க வடிவமைப்பை நிறுவும் போதே அதை யோனி என்றும் சிஷ்ணம் என்றும் தான் கூறுவார்கள் இதுக்கு ஒரே அர்த்தம் ஆண்குறி மற்றும் பெண்குறி.எதுல எனர்ஜிய கொண்டு வந்து விடாத.
உங்களுக்கு தெரியும். ஆனா புரியுமா?
சுபிரமணி,
திரும்பவும் அதே கதையா. கட்டுரையில் கேட்ட கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லேன். ஆதாரத்துடன் உன் மறுப்பை வெளியிடலாமே.
The article you have published is just a sample.My father is also Assistant commissioner at HR CE department.He notified several temple lands.since those land are occupied by brahmins (predominantly)dinamalar came up with a full page article by accusing my dad as trying to extract money from land occupiers and in fact they went on to link my dad with the sasikala’s relative.Dinamalar appealed to fascist Jaya to take action against the HR CE official.
வினவு ஆசிரியர்க்கு வணக்கம்,
உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்க தோன்கிறது. ஆனால் சில மற்றும் கேட்கிறேன்.
ஏன் கிருஸ்துவ, இஸ்லாம் மதத்தில் நடக்கும் தவறுகளை எழுதவதில்லை?
ஏன் ஏதனும் பயமா அல்லது பணம் வாங்கி கொண்டு உங்களை வளர்த்து வருகிரா?
The properties managed by the HR & CE has to be audited by CAG.At present the CAG is auditing only the HR & CE department and not the revenue and expenditure of Temples and properties managed by the Executive officers etc
The HR & CE act has to be amended to recover arrears of lease rent similar to Banks SARFASI act .