Monday, January 17, 2022
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

-

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.

இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.

அன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.

திப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்?

1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.

இந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.

இதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.

ஹைதராபாத்-நிஜாம்

வெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

கட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம்.  அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.

உண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.

______________________________________________________

 – புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடம் வரிப்பிடித்தம் செய்து மீதியை வழங்கும் இந்த அரசு, இப்படிப்பட்டவர்களுக்கு சலுகை காட்ட வெட்கப்படாது. இந்த அயோக்கிய அரசுகளைப் பார்த்து வேதனைப்பட்டு மனம் கொதிப்படைகிறது. வியர்வை சிந்தாமல், அழுக்குப்படாமல், அண்டிப்பிழைத்துச் சேர்த்த இந்த சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும். (அப்படிச் செய்தால் அரசியல்வாதி கொள்ளையர்கள் கொண்டு போய்விடுவார்கள் என்றாலும், சிறிதாவது கஜானாவிற்கு சேருமில்லையா?)

  அம்பானி குடும்பத்திற்கு உபயோகித்த மின்சாரத்திற்கே சலுகை வழங்கிய உன்னத அரசல்லவா இது. இவர்களுக்கு பலிகடா நாம் தான்.

 2. அட வாரிசுகலே நிஜாம் ஒரு மன்னர், மன்னர் என்றால் அரசர் தானே, சட்டபடியே அரசனின் சொத்து அரசுக்கு தானே சொந்தம். ஆதலால் அரசாங்கமே தயவு செய்து அனைத்து சொத்துகலையும் பரிமுதல் செய்யுங்கல்………..
  இல்லை வாரிசுக்கு தான் சொத்து சொந்தம் என்ரால் ,நிலத்தில் உழுபவனுக்கு தனே நிலம் சொந்தம்…. எவன் அப்பன் வீட்டு சொத்த எவன் திங்கிரது………..

  • அப்படியே கருனானிடி ஜ் ஜெயா சொத்ட்கு அரசிடம் செர்க எதாவட்கு வலி இருகா

 3. என்ன சார்.. இந்த வார முசுலிம் கோட்டாவுக்கு இதுதானா? நாங்க இன்னும் நிறைய எதிர் பாக்கறோம். சண்டை போட இது பத்தாது 🙁

  • முஸ்லீம்கள் என்பதாலேயே அவர்கள் பண்ணும் திருட்டு தனத்திற்கு ஆதரவு தர முஸ்லீம்கள் ஒன்றும் RSS இல் பயிற்சி பெற்றவர்கள் இல்லியே..

   முஸ்லீம்கள் யாரும் கசாப் ஐ ஆதரிக்க வில்லை…

   ஆனால் உலக அயோக்கியர்களான மோடி, சங்கராச்சாரி, நித்தியானந்தா தொடங்கி கருவறை தேவநாதன் வரைக்கும் ஹிந்துக்களால் ஹீரோவாக கொண்டாட படுகிறார்கள்.

   ஒருவேளை இந்த அயோக்கியர்களின் செயல்பாடுதான் உண்மையான இந்துமதமோ?.. அதனால் தான் அவர்கள் கொண்டாட படுகிறார்களோ.?

   எதற்கும் கோப்பையில் என் குடியிருப்பு கோல மயில் என் துணையிருப்பு என்று பாடிய யோக்கிய சிகாமணி கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை ஒரு முறை படிக்க வேண்டும்..

   • // ஆனால் உலக அயோக்கியர்களான மோடி, சங்கராச்சாரி, நித்தியானந்தா தொடங்கி கருவறை தேவநாதன் வரைக்கும் ஹிந்துக்களால் ஹீரோவாக கொண்டாட படுகிறார்கள்.//

    அப்படியா..?!!

    // எதற்கும் கோப்பையில் என் குடியிருப்பு கோல மயில் என் துணையிருப்பு என்று பாடிய யோக்கிய சிகாமணி கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை ஒரு முறை படிக்க வேண்டும்.. //

    இதே போன்ற யோக்கிய சிகாமணிகள் இந்து மதத்தை எதிர்த்து எழுதியதையும் படிக்கலாம்..

   • ஆமா, நிஜாம் சொத்து பற்றிய பதிவில் இந்துக்களை ஏன் இழுக்குறீர்..??!! நீர் முஸ்லீம் இல்லை என்பது தெரிகிறது..

 4. The problem of confiscating assets/jewllwery/cash/lands etc is really a great to our government, as every one of the Politicians is after money…they are not really enjoying the money they are deposting the same in foreign banks…
  Now, our President is going to retire…Congress wants another rubber stamp…
  opposition tries to bring Dr. Abdul Kalam…but even though President of India is the First Citizen of India, he cannot think on its own on Policy matters..
  our judiciary has become rusted/rotten etc. so the people whose punishment of hanging was confirmed by President,still lie inside the bars in jail…for years together…THE ATTITUDE OF DO OR DIE must be injected into the bloods of our children as : I-THIL VALAYATHATHU IMBATHIL VALAYATHU…
  A REVOLUTION IS REQUIRED…
  One day people will have to go to Nizam followers and take out the valubles and must distribute among the poor…FROM HAVES TO HAVENOTS…
  Starting is the problem….VANMURAI VENDAM ANPATHELLAM THARCHAMAYAM OTHUVARATHU..

 5. நல்ல பதிவு.. ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டு திப்புவை தோற்கடித்தவன் இந்த நிஜாம். முஸ்லிம் என்பதற்காக நிஜாமை ஆதரிக்க முடியாது…அரசின் சொத்து மக்களுக்குதான் ….அரசனுக்கு இல்லை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க