Wednesday, September 11, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!

குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!

-

பிரணாப்-முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 14வது அரசுத் தலைவருக்கான வேட்பாளர்களாக, காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பாக பிரணாப் முகர்ஜியும், அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதன் கள்ளக் கூட்டாளிகளான ஜெயலலிதா, பிஜுபட்நாயக், மம்தா பானர்ஜி ஆதரவு பெற்ற பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். தகுதியும் திறமையும் வாய்ந்த, மரியாதைக்குரிய யாரையாவது அரசுத் தலைவராக்க வேண்டும் என்று நாட்டின் இருபெரும் அணிகளுமே கருதவில்லை.

வரும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் எந்த அணியும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல், தொங்கு நிலை நாடாளுமன்றம்தான் அமையும் என்பதை அவை நன்கு உணர்ந்தே உள்ளன. அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, தமக்குச் சாதகமான முடிவுகள் எடுத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய நபரை அரசுத் தலைவராகத் தெரிந்தெடுப்பதிலேயே அந்த அணிகள் குறியாக இருந்தன.

இந்த நோக்கில், வேட்பாளரைத் தெரிவு செய்யும் நிலையிலேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்து விட்டது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச இந்து மதவெறியன் நரேந்திர மோடி தலைமையில், ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் மௌனம் சாதித்து துணை நின்ற சுயநலக்காரியவாதியும், அப்போதைய அரசுத் தலைவருமான அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.கட்சி முயன்றது. ஆனால், அரசுத் தலைவர் வேட்பாளர் தெரிவின்போதே பிரதமர் பதவிக்கான  வேட்பாளர்  தெரிவில் போட்டியும் தே.ஜ.கூட்டணிக்குள் கூர்மையடைந்துவிட்டது.

அக்கூட்டணி மிகவும் நம்பியிருந்த அப்துல் கலாமும் இரண்டாவது முறையாக நயவஞ்சகச் செயலைச் செய்துவிட்டார்; பெரும்பான்மை ஆதரவு இருந்தால்தான் அரசுத் தலைவர் தேர்தலில் நிற்பது என்ற தனது கொள்கை காரணமாக, தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில் தானே விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார். வேறு வழியின்றி, பின்னாளில் ஜெயா-பிஜுவுடனான கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு செய்தது, தே.ஜ.கூட்டணி.

பிரணாப் முகர்ஜி அடுத்த அரசுத் தலைவராவது உறுதியாகி விட்டதென்று சொல்லலாம். ஐ.மு.கூட்டணி மற்றும் உற்ற துணைவர்களான முலாயம், மாயாவதி, லல்லு ஆகியோர் மட்டுமல்ல; போலி இடதுசாரிகள் மற்றும் எதிர்த்தரப்பிலிருந்து சிவசேனா உட்பட பெரும்பான்மையினர் ஆதரவு நிச்சயமாகிவிட்டது. இதற்காகவும், எப்போதும் பிரதமர் பதவிக்கான ஆசையை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியை அரசுத் தலைவராக்கி, ராகுல் காந்திக்கான பாதையை உறுதியாக்கிக் கொண்டதற்காகவும் சோனியாமன்-மோகன் கும்பல் மகிழ்ச்சியடையலாம்.

ஆனால், பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. நமது நாட்டில் மட்டுமல்ல, அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். அம்பானி குடும்பம் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிற்கழக முதலைகளின் விசுவாசி. இந்தத் ‘திறமை’களையும் செல்வாக்கையும் நாட்டு நலனுக்கும் மக்கள் சேவைக்கும் ஒருபோதும் பயன்படுத்தியவர் அல்ல. அமெரிக்காவுடன் அவர் கைச்சாத்திட்ட பல இரகசிய ஒப்பந்தங்களும், ஈழ இனப் படுகொலையை அரங்கேற்றி ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்திய தந்திரங்கள், கருணாநிதியுடன் சேர்ந்து ஆடிய நாடகங்கள் போன்றவை பிரணாப் முகர்ஜியின் பார்ப்பனிய நரித்தனத்துக்குச் சான்றுகள். இந்திரா காந்தியிடம் அரசியல் பாடம் கற்ற பிரணாப் முகர்ஜி, அவசியமாகும்போது தனது சுயநலத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் குடைக்கவிழ்ப்புகளையும் அரங்கேற்றத் தயங்கமாட்டார்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

    • every man in this world is liable to do mistakes or be selfish. Ideally nobody* in this world are exempt from such attitude.
      *Condition – Vinavu souls are exempted from this nature. They walk in the straightest path that nobody can imagine. So even the Gods fear them. Religion finds nothing to tame these men.

  1. மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்யா… முற்போக்கு வாசனை கொஞ்சம் கொறஞசுட்டுது போல… உடனே பேர் வாங்க கிளம்பிடும்… விளங்கிடும்… ஆமா.. இதப் போய் கருணாநிதிகிட்டச் சொல்லும்… இங்க வந்து கூப்பாடு போடாதீர்

  2. சல்மான் குர்ஷீத், அஹமத் படேல் என்று யாராவது வேறு ஒரு காங்கிரஸ் விசுவாசி குடியரசுத்தலைவர் ஆகியிருந்தால் உம்ம தலைப்பு “குடியரசுத் தலைவராகிறார் __________அரசியல் நரி” என்று இருந்திருக்குமா ?

    செத்த பாம்பை அடிக்கும் வீர வினவு! வேறு நல்ல வேலை இருந்தால் பாரும் ஐயா…

  3. // அமெரிக்காவுடன் அவர் கைச்சாத்திட்ட பல இரகசிய ஒப்பந்தங்களும், ஈழ இனப் படுகொலையை அரங்கேற்றி ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்திய தந்திரங்கள், கருணாநிதியுடன் சேர்ந்து ஆடிய நாடகங்கள் போன்றவை பிரணாப் முகர்ஜியின் பார்ப்பனிய நரித்தனத்துக்குச் சான்றுகள். //

    லௌகீக நரி ஏன் பூணூலோட ஓடிண்டுருக்கு.. எல்லாம் சொக்கத் தங்கத்திற்காக.. இத்தாலியப் புரட்சிப் பெண்மனியைச் சொல்லல்லை, கோவிச்சுக்காதேள்..

    அதாகப்பட்டது, இந்த வங்காள நரி ஜனாதிபதியாயிடுத்துன்னா, நம்மவாளுக்கெல்லாம் சொக்கத் தங்கத்தில் பூணூல் வாங்கிக் கொடுக்கப் போறதோன்னோ, வினவாளுக்கு இப்பவே வயிறெரிய ஆரம்பித்துடுத்து… நன்னா நம நமன்னு எரியட்டும்..

  4. குஜராத் கலவரம் நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் கலாம் பதவியேற்றார். அவர் வாஜ்பாய் தடுத்ததையும் மீறி குஜராத் சென்றதாகச் சொல்கிறார். கலவரம் சம்பந்தமாக அவர் செய்தது என்ன? செய்யாதது என்ன?

    விபரங்கள் சொல்ல முடியுமா அல்லது பொருத்தமான லிங்க் ஏதாவது கிடைக்குமா?

  5. This article brings nothing new and is not good for vinavu to publish these type of articles…
    Vinavu may personally against Brahmins, but what is the benefit to the people by this artile..
    Some constructive change in seleting and publishing article is needed…hope vinavu will consider this..

  6. while gujaraath riot running k.r.narayanan was the president.after gujarath came to silent kalam come as the president.his first official visit was not of America but riot torn gujarath.this effort is appriciatable becose of no one president did like this.but u misunderstandably makking comments on kalam.

  7. அது சரி. ஜெ. என்னும் தமிழகத்துக் குள்ள நரி, ஏன் இந்த பிரணவ நரிய ஆதரிக்கலை?

    அடுத்து ஒரு பதிவு போட்டிருங்க.

  8. Sir one should not be against any body with out reasons.when speak about brhamins
    you alsO speak about other castes .though the brahmins are orthodox they never killed anybody.other castes right from kanniyakumari to jammu.from mumbai to assam are killing S.CS&S.TS.please go through the HINDU daily.communal hatred is practiced by other so caller caste hindus not by brahmins.

  9. மக்கள் சார்ந்த விமர்சனங்கள் இல்லாத ஒருவரே இதுவரை ஜனாதிபதியாக இருந்து வந்துள்ளார்.அந்த பாரம்பரியத்தை உடைக்கும் முதல் ஜனாதிபதியாக இனி பிரணாப் முகர்ஜி.

  10. vinavu,

    As you are against indian political system, then why you suggesting who has to became president. why dont like the political system right? then why this postings?. you are double sided face.

  11. Even many of the Muslims don’t like Hon.Kalam (the only respectable Muslim leader in the modern India) is because he don’t pray nor follow the conventional Islamic practices .

    Guys please wake up its modern world dont live in caves

  12. you cannnot brand all those who follow their religious practices as living in caves. Have you spent time in analysing or understanding why something is being done. simply dont reject religion.

    have you heard the stories from Kalam’s colleagues or sub-ordinates ??

    • Instead wasting the time on why and whats in religion much more things can be done. World is under economic down turn and big economics are collapsing do you think your religious beliefs and reading a particular book can bring the changes?

      Hope you heard about stories in Mali, Nigeria, Somalia what exactly this Islam radicals looking for?

      Finally you find something on Kalam too leave him he is real gentleman and need much more recognition just because he don’t follow hardcore religious practices you guys insulting shame on you

  13. குடியரசுத் தலைவர் தேர்தல் என்பதை வர்க்க உள்ளடக்கத்தை தூக்கியெறிந்து விட்டு, தனி மனிதனின் சாதி, ஒழுக்க நெறிகள், தொடர்பு, திறமை ஆகியவற்றை மட்டுமே வைத்து எடைபோடுவது ஒரு மார்க்சிய லெனினிய பார்வையாகுமா?.

    // பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. நமது நாட்டில் மட்டுமல்ல, அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். அம்பானி குடும்பம் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிற்கழக முதலைகளின் விசுவாசி. இந்தத் ‘திறமை’களையும் செல்வாக்கையும் நாட்டு நலனுக்கும் மக்கள் சேவைக்கும் ஒருபோதும் பயன்படுத்தியவர் அல்ல.//
    பிரணாப் முகர்ஜியிடம் நீங்கள் நிறைய எதிர்ப்பார்க்கிறீர்கள்!
    // தகுதியும் திறமையும் வாய்ந்த, மரியாதைக்குரிய யாரையாவது அரசுத் தலைவராக்க வேண்டும் என்று நாட்டின் இருபெரும் அணிகளுமே கருதவில்லை.//
    என்று கூறுவதின் மூலம் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு நல்லவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற ஒரு மாயை உருவாக்குவதன் மூலம், நீங்கள் திருத்தல்வாத சி.பி.எம். கட்சியின் கள்ளக் கூட்டாளியாக மாறியிருக்கிறீர்கள்.

    குடியரசு தலைவர் பதவி என்பது தரகுமுதலாளித்துவ அரசியல் தலைமையின் ரப்பர் ஸ்டாம்பே.

    பழங்குடியும், பார்ப்பனனும் ஏகாதிபத்தியத்தின் கைகூலிகளே! அடையாள அரசியலை தூக்கியெறிவோம்.
    மார்க்சிய லெனினியத்தின் உயர்த்திப் பிடிப்போம்.

  14. மார்க்சிய லெனினியத்தின் உயர்த்திப் பிடிப்போம்.

    What the hell is this? All time strike thats what Indian communist knows

  15. நான் இப்போதுதான் இந்த கட்டுரையை வாசித்தேன். சூப்பர். சாயம் முக்கிய நரி இப்போதுதான் சாயம் வெளுத்து இறங்குவதாக நினைத்தேன். இது பயங்கர குள்ள நரி எனபதை வினவு குடும்பம் அறிந்துதான் இருக்கிறதா? காங்கிரஸ் காவாளிகள் பலர் மதச்சார்பினமை வேடம் போட்டு திரிபவன் கள்தான்.பலரின் கதர் சட்டையை கழற்றிப்பார்த்தால் உள்ளே காவி பளிச்சென்றுதான் தெரியும் போல. ஏன் காங்கிரஸ் இளவரசன் ராகுல்,கேரளாவில் காங்கிரஸ்கார பையன் ஒருவன் மாட்டுக்கறி போராட்டத்தில் கறி தின்றதற்க்காக தன் ட்விட்டரில் கடுமையாக கண்டித்து தன் மதச்சார்பின்மையை வெளிப்படுத்துகிறாராம். இதுதான் காங்கிரஸ் அதுதான் தேய்ந்து தேய்ந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது. பிஜேபி காரனாவாது காட்டுமிராண்டித்தனத்தை தன் கொள்கையாக வைத்து வெளிப்படையாய் அரசியல் செய்கிறான் இப்போதைய காங்கிரஸ் காரனுக்கு எந்த தெளிவான கொள்கையும் கோட்பாடும் ஒன்றும் கிடையாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க