Friday, January 17, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஜூலை 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜூலை 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்-ஜூலை-2012

புதிய ஜனநாயகம் ஜூலை 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ”அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்கப் போராட    மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாணவர்களின்     கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய பேரணி மற்றும் மாநாடு.

2. பிரணாப் முகர்ஜி – அரசுத் தலைவராகிறார், ஒரு பார்ப்பன அரசியல் நரி!

3. பீரங்கி ராஜீவ்….. கேம்ஸ் கல்மாடி…. டான்சி ராணி…. சுரங்கம் ரெட்டி… கரி சிங்தி கல்லுளிமங்கன்!

4. ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!  
தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிவதைத் தடைசெய்வது தொடங்கி, கலப்பு மணம் புரிந்து கொண்ட தம்பதியினரைக் கௌரவக் கொலை செய்வது வரை தீண்டாமையும் சாதி ஆதிக்க வெறியும் தமிழகத்தில் கோலோச்சி வருகின்றன!

5. ரூபாய் மதிப்புச் சரிவு, பெட்ரோல் விலை உயர்வு: மறுகாலனியாக்கத்தின் கோரவிளைவு!

6. சந்தி சிரிக்கும் சி.பி.எம்.-இன் கொலை புராணம்!
தொழில்முறை கொலைகார கிரிமினல் கும்பலாக கேரளாவில் சி.பி.எம். கட்சி சீரழிந்துவிட்டது.

7. முல்லைப்பெரியாறுசிறுவாணி: – கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

8. புதை மணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!                             
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, தனியார்மயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அபாயகரமான திசையில் நாட்டைத் தள்ளுகிறது மன்மோகன் சிங் கும்பல்.

9. அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்சநீதிமன்றம்!                          
இந்திய இராணுவச் சிப்பாய்கள் காஷ்மீர் – சட்டிசிங்புராவில் நடத்திய படுகொலையை விசாரிக்கும் பொறுப்பை இராணுவத்திடமே தள்ளிவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

10. ஜலீல் அந்த்ராபி படுகொலையும் இந்திய அரசின் கள்ளத்தனமும்

11. கல்விக் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு! தட்டிக் கேட்பவர்கள் மீது அடக்குமுறை!!  -பார்ப்பன ஜெயா அரசின் அட்டூழியம்.

12. ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூராண்டு வேதனை!
மணல் கொள்ளை, மின்சாரம்-பேருந்துக் கட்டணக் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை, வரிக் கொள்ளை எனத் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது, பார்ப்பன ஜெயா ஆட்சி.

13. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….பாகம் – 3
வெளிநாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும் பா.ஜ.க-வும் கனவிலும் விரும்பவில்லை.

14. டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்!” – -பெண்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்.

15. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.   பாகம- 3

16. பாம்புக்கடிக்கு மருந்தில்லை!                                                  
-அரசு மருத்துவனையின் அலட்சியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

17. அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” – –ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்.

புதிய ஜனநாயகம் ஜூலை 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. கரிசிங் கட்டுரை தொடர்பாக.

    உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14000/‍. அப்படியெனில் ஒரு கிலோ ரூ.14. என்றாகிறது.

    ம.பி.மாநிலத்தில் உள்ள பிரகாஷ் இன்டஷ்டிரீஷ் நிறுவனம் 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000கோடி லாபம் பார்த்துள்ளது. அப்படியெனில் ஒரு கிலோ நிலக்கரிக்கு ரூ.1.60 லாபம் பார்த்ததாக ஆகிறது. ஒரு கிலோ சராசரியாக ரூ.14 என்று விற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கள்ளச்சந்தையில் விற்றதின் மூலம் கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.1.60 லாபம் பார்த்தது பெரிய விஷயமில்லையே.

    கணக்கு முரண்படுகிறதா அல்லது இதற்கு மேலும் இதில் விசயம் இருந்து கட்டுரையின் நீளம் கருதி விடப்பட்டுள்ளதால் வந்த முரண்பாடா. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தெளிவுபடுத்தவும்.

    • பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது இரும்பாலை விரிவாக்கத்திற்கென, சட்டீஸ்கர்-கோர்பா பகுதியில் நிலக்கரி தோண்டி எடுக்கும் உரிமத்தை 2003ல் பெற்றது. இரும்பாலையை லாபத்தில் நடத்த, சந்தையில் கிலோவுக்கு ரூ.14 கொடுத்து வாங்க முடியாது என்று கூறித்தானே நிலக்கரி தோண்டும் உரிமம் பெற்றார்கள்.?

      இதனால் இரும்பாலை மூலம் கிடைத்த லாபம் ஒரு பக்கமிருக்கட்டும். இந்த நிறுவனம் சொந்த பயன்பாட்டுக்கு என்று உரிமம் பெற்று எடுத்த நிலக்கரியை திருப்பிவிட்டு சந்தைவிலையிலே விற்பது கூடக் குற்றமே.. 1 பைசா லாபத்தில் விற்றாலே ரூ 250 கோடி லாபம் (கணக்கில் வராத கருப்புப் பணம்).. சிபிஐ காட்டும் கணக்கு கிலோவுக்கு 16 பைசா லாபம் – 25 கோடி டன்னுக்கு ரூ. 4000 கோடி.. சட்டவிரோதமான, கணக்கில் வராத கருப்புப் பணம்..!!!

      இந்த சட்டவிரோத, மோசடி, கொள்ளையை, வாங்கி விற்று லாபம் பார்க்கும் சட்டத்துக்குட்பட்ட வியாபாரமாகப் பார்க்கமுடியுமா..?!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க