Sunday, February 16, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஏழை 'இந்து' மாணவருக்காக பணக்கார 'இந்து கல்வி வள்ளல்களி'டம் போராடலாமே?

ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?

-

செய்தி-10

ழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை மறைமலை நகரில் மூன்று நாள் உண்ணா விரதப் ‘போராட்டத்தை’ ‘வெற்றிகரமாக’ நடத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையின் உட்பொருள் என்ன?

” மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல், முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”. குமுதம் ரிப்போர்ட்டரில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் விளக்கம் இது.

பொன்-ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

இந்துக்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு உதவித் தொகைகளும் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில் காவிக் கும்பல் கோரும் ஏழை இந்து  மாணவர்கள் யார்? வெளிப்படையாக பார்ப்பன – ‘மேல்’ சாதி மாணவர்கள் என்று கேட்க வேண்டியதுதானே? அதன்படி இந்துக்கள் என்றால் பார்ப்பன – மேல்சாதியினர் மட்டும்தான் என்றாகிறது.

அடுத்து முசுலீம்கள், கிறித்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குரிய சலுகை கிடையாது என்பதால் உண்மையில் அம்மதங்களில் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இது காவிக் கும்பலுக்கு பொறுக்கவில்லை. சிறுபான்மை இன மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்று கோருவதை இப்படி ஏழை இந்து மாணவர்களுக்கு உதவி வழங்கு என்று கோல்மால் பாசிச அரசியல் மொழியில் கேட்கிறார்கள் இந்து மதவெறியர்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருகள் தாலி அறுக்க வேண்டும் என்ற கொலைவெறிதான் காவிக் கும்பலின் ஒரிஜினல் வெறி.

தமிழகத்தின் அரசியல் அநாதையாக ஓரம் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ.க ஏதாவது செய்து செல்ஃப் எடுக்க முடியுமா என்று போராடுகிறது. கடைசியில் சென்னையில் மூன்று நாள் கூத்துக்கு அனுமதியில்லை என்று மறைமலை நகரில் டேரா போட்டு, ஊடகங்களுக்கு ஃபோட்டோ கொடுத்து இந்த காமடி ஷோ முடிந்திருக்கிறது.

போகட்டும். ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?

குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? முயன்றால் இந்து மதவெறியர்களை ஒழிக்கும் வேலையினை இந்து கல்வி  முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்!

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. // ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்? தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் பெரும்பான்மை முதலாளிகள் இந்துக்கள்தானே? அந்த இந்துக்கள் பேர்பாதி கல்லூரி சீட்டுக்களை கட்டணமின்றி இந்து மாணவர்களுக்கு வழங்குமாறு செய்ய வேண்டியதுதானே?

    குறைந்தபட்சம் நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியிலாவது இந்த கோரிக்கையை நிறைவேற்றா பொன் ராதாகிருஷ்ணன் முயலலாமே? //

    Y this kola veri.. He is not able to win politically even though he is having lots of cash… he is just trying to see his foto in paper.. U people are so cruel that u wont even allow that… Yean sir ???

  2. அட பேப்பர்ல செய்தி வந்தாச்சு, அதுக்காக உங்க யோசனையை சிரமேற்கொண்டு செய்வாரா. நன்கொடைக்கு போய் நிக்கனுமில்ல

  3. //ஏழை இந்து மாணவர்களுக்கு உதவச் சொல்லி தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளை நடத்தும் இந்து கல்வி வள்ளல்களை கேட்டால் மேட்டரை சடுதியில் முடிக்கலாமே? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்காக ஏன் அலைய வேண்டும்?//
    அப்ப சிறுபான்மை மாணவர்களுக்கு உதவச் சொல்லி சிறுபான்மைக் கல்வி வள்ளல்களைக் கேட்ட்டாலும் மேட்டர் சடுதியில் முடிந்து விடுமே? கையில் நெய்யையே வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் அலைய வேண்டும்? அந்நியப் பணத்தில் கொழிக்கும் கிறிஸ்துவ அமைப்புகளும் உறுதியான கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்குப் பெயர் போன முஸ்லிம்களும் மனம் வைத்தால் தங்கள் மத ஏழை மாணவர்களுக்கு உதவலாமே?

  4. ஏன் இந்த கொலை வெறி?

    இன்னும் நிறைய ஒடுக்குங்கள் பிராமணனை….அவன் மென்மேலும் முன்னேற….

    கத்தியைக் கண்டால் ஒதுங்குபவன், தன பெண்ணை பிற சாதியன் காதலித்துக் கல்யாணம் செய்தால் மறுதலிக்க முடியாமல் சில காலத்திற்குப் பின் ஏற்றுக்
    கொள்பவன், தான் உண்டு தன வேலை உண்டு எனறு இருப்பவன்,

    எல்லாவற்கும் ஒரு விதத்தில் அரசாங்க ஆதரவும் பட்டியல் உரிமையும் இருக்க,
    இவனுக்கு மட்டும் ஒன்றுமில்லை, இருக்கும் ஒரு சதவீத வெளிப்படை போட்டியில்
    ஆயிரத்திற்கு ஆயிரம் மதிப்பெண் வாங்கி போட்டியிட வேண்டும்…கூட
    போட்டியிடுபவன் அறிவிலும் குறைவு, மதிப்பெண்ணிலும் குறைவு, ஆனால்
    தட்டிக்கொடுத்து பட்டியலில் சாதிப் பெயரிட்டு கூப்பிட்டுக் கொடுக்கிறது
    வேலையை…. கேட்டால் ஒதுக்கப் பட்ட இனமாம், நான் ஆதிக்க சக்தியாம்….

    சுதந்திரம் வாங்க மட்டும் புரட்சிக் கவி பாடவும், ஆஷ் துரையைக் கொல்லவும், ஜெயிலுக்குப் போகவும் பார்ப்பனன் வேண்டும், ஆனால் வேலையில் இட
    ஒதுக்கீடு மட்டும் இல்லை, ஏனென்றால் எல்லா பார்ப்பணனும் பணக்காரன் பாருங்கள்?

    என்னய்யா கண்டு பிடித்தீர்கள் பிராமணனிடம் குற்றம்? அவன் சுத்தமாக இருக்கச் சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை… நீ
    சுத்தமில்லாமல் தொட்டதை அவன் தொட மறுக்கிறான்….ஏன் இது அவன் மட்டுமா
    செய்கிறான்? கிருத்துவ பிஷப்பும் செய்கிறார், மசூதியில் முல்லாவும செய்கிறார்….ஏன் பார்ப்பனன் மட்டும் சாதியா வெறியனா? மற்றவன் இல்லையா?
    சாதியின் பெயராலேயே அரசியல் நடத்தி வரும் அத்தனை பேரும் பார்ப்பணனை விட
    எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்?

    உடையாருக்கு ஒரு கட்சி, முதலியாருக்கு சமூக நீதிக் கட்சி, வன்னியருக்கு
    ஒரு பாமக, வெள்ளாளருக்கு ஒரு கொமுக, நாயுடுக்களுக்கு ஒரு மதிமுக,
    தேவருக்கு ஒரு பார்வார்ட் ப்ளாக், தேவேந்திர குல வெள்ளாளருக்கு ஒரு
    கட்சி, அருந்ததியருக்கு ஒரு கட்சி, தலித்துகளுக்கு ஆயிரம்
    கட்சிகள்…..எங்கே ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள் பிராமணனுக்கு?

    பிராமணன் அப்பாவி… அடித்தால் அடி பொறுத்துக் கொண்டு குறை சொல்லாமல்
    வீட்டு தாழ் இட்டு வாழ்ந்து கொள்பவன்…. அவனை ஆதிக்க சக்தி என்று பொய்
    கூறி உரமிட்டு வளர்த்த பெருமையெல்லாம் திராவிடர் கழகத்திற்கும்,
    இனத்துரோகி கருணா நிதியையுமே சாரும்….அறிவு சார் வர்க்கங்கள் பிராமணன்
    உனக்கு என்ன துரோகம் செய்தான் என்று தயவு செய்து பட்டியல் இட்டுக்
    காட்டுங்கள்…. உங்கள் சோற்றில் மண் போட்டானா? இல்லை உங்கள் வீட்டுப்
    பெண்ணை கைபிடித்து இழுத்தானா? இல்லை உங்களுக்குண்டான கறி மீனில் பங்கு
    கேட்டானா?

    இன்னமும் பிராமணத் துவேஷம் சொல்லி அரசியல் செய்யும் ஆங்கிலேய அடிவருடிப்
    பரம்பரையில் வந்த திராவிட இயக்கத்தின் அழியாக் கறை வீரமணிக்கு சொல்லிக்
    கொள்கிறேன்….ஒவ்வொரு முறையும் பிராமணனுக்கு எதிராய் சொல்லப் படும்
    கருத்துக்களால் அவன் மென்மேலும் புடம் போடப்பட்டு வெளி நாட்டில் வேலை,
    சொந்தத் தொழில் என்று வளம் சிறக்க வாழ்ந்து கொண்டு, உன்னைப் பார்த்து
    சிரிக்கிறான்…. நீ இன்னமும் அங்கேயே நின்ற இடத்திலேயே நிற்கிறாய் ….
    அவன் மேலே போய்க் கொண்டே இருக்கிறான்…..

    இங்கே தலித்துகளும், தேவர்களும், முதலியார்களும், செட்டியார்களும்,
    வன்னியர்களும், கவுண்டர்களும், நாயுடுக்களும் தங்களை அடையாள படுத்திக்
    கொண்டு இருக்கும் வரை, நான் ….எனும் பிராம்மணன், நீங்கள் சொல்லி வந்த
    ஆதிக்க உணர்வுகளைத் தூண்டி என் சாதியையும் நான் இனி கட்டிக் காக்கப்
    போகிறேன்….

  5. ஆனந்த்.. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டத்தில் அவாளின் கோவணமும் பூனூலும் பிஞ்சு தொங்குதே..அதை என்ன செய்யப்போகிறீர்கள்?

  6. Mr.Anandam and Mr. Anand both telling the truth. But Even though there is lots of castes in our hindu system. But were following the same god. The problem is the politicians. For their lives divide us in caste and all.. Particularly our tamilnadu parties only. For their lives they break us from unity.

    • “எல்லாத்துக்கும் காரணம் அரசியல்வாதிகள்” என்ற பிட்டு பார்பனர்கள் போடும் வழக்கமான பிட்டு. வடநாட்டில் வேண்டுமானால் எடுபடும். விட்டால் சாதியை கண்டுபிடித்தவர்கள் அரசியல்வாதிகள் தான் என்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க