Thursday, August 11, 2022
முகப்பு செய்தி பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது!

பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது!

-

செய்தி-12

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.

அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அவளை தாக்கியிருப்பார்கள்’ என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதத்துக்குள் வீட்டை காலி செய்து கொண்டு போய் விடச் சொல்லி விட்டதாக அந்த பகுதியில் வசிக்கும் கிருத்துவ குடும்பங்கள்  தெரிவிக்கின்றனர். பலர் வெளியேறியும் வருகின்றனர். வெளியேறும் குடும்பங்களுக்கு போலிசார் பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டு வெறுமனே வேடிக்கை  பார்ப்பதாக பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

பாகிஸ்தானின் இறைமறுப்புச் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை. குரான் அல்லது இஸ்லாமை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம். அப்படி தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் 2010-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா நொரீன்  என்ற பெண்மணி. அவரது வழக்கறிஞர்கள் கருணை மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆசியா நொரீனுக்கு சார்பாக பேசியவர்களில் முக்கியமானவர் சல்மான் தசீர். பஞ்சாப் மாகாணத்தின் கவர்னராக இருந்த அவர் இறை மறுப்பு சட்டங்களை மாற்ற வேண்டும் என்று பேசியதால் அவரது பாதுகாவல் படையினரில் ஒருவரால் ஜனவரி 2011-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். தசீர் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி அதே காரணத்துக்காக தலைநகரில் கொல்லப்பட்டார்.

சிறைத்தண்டனை முடிந்து வெளியில் வருபவர்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. ஜூலை மாதம் பகவல்பூர் நகரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்ட கும்பல் ஒன்று குரானை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீஸ் நிலையத்திலிருந்து வெளியில் இழுத்து அடித்துக் கொன்று உடலை தீக்கிரையாக்கினர்.

குரான் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுபவர்களில் பெரும்பாலானோருக்கு அரபி மொழி பேசவோ படிக்கவோ தெரியாது. அதனால் அரபி மொழியில் எழுதப்பட்ட எதையும் குரான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கு மத்தியில் ‘இந்த இறை மறுப்பு சட்டங்கள் இறைவனால் நேரடியாக விதிக்கப்பட்டவை’ என்ற கருத்து நிலவுகிறது. உண்மையில் தனது அரசியல் லாபத்துக்காக இந்தச் சட்டங்களை கொண்டு வந்தவர் 1980களில் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்த ஜியா உல் ஹக். அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தானின் மத வெறி பிடித்த கும்பல்கள் இந்த சட்டங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பது இஸ்லாமிய உலகின் பிற்போக்கு அவலங்களுக்கு ஒரு உதாரணம்.

இந்தியாவில் இந்து மதவெறி போல பாகிஸ்தானில் முசுலீம் மதவெறி செல்வாக்கு செலுத்துகிறது. இரண்டு மதவெறிகளையும் ஒழிப்பது இருநாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும்.அந்த வகையில் மதவெறி பாசிசத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை நாம் ஆதரிக்க வேண்டும்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. The true contempt of Quran does not happen when somebody burns it. It really happens when the bearers of Quran, the Muslims, don’t follow its ethics and morals.

  During Prophet Muhammad’s time in Medina a Jewish kid used to spit at Prophet Muhammad whenever she sees him. But he never retaliated to that kid. After sometime the kid was missing and the Prophet enquired about her. He was told that the kid was sick and resting at home. Prophet Muhammad visited the kid and humorously asked “what happened to you my child, I was really missing your spat”. He then prayed for her recovery before leaving her.

  He never called upon his companions to arrest the kid who spat at him. Neither his companions took revenge for what the kid did to the Prophet. They are the true Muslims.

  Those who attacked this kid in Pakistan are truly fascists and not really Muslims.

  • What about Ayisha? The six year old wife of your profit (pro”pet”). Likewise, he would have desired that little girl in “other” aspects. Can anyone deny the fact that Mohammad had multiple wives, had sex-slaves, beaten his wives, killed Jews, tortured their leader, married his wife the same day, claimed unscientific things etc?

 2. இத கொஞ்சம் கற்பன பண்ணுங்க… நம்ம நாட்ல ‘அவிங்க‘ பெரும்பான்மையானா அவ்வளவுதான் வினவு தோழர்கள் கதி… ஒவ்வொரு மரத்துலயும் உங்க தோளர்கள் தொங்கவிட்டு நாட்ல மரமே பத்தாது……

 3. Can you imagine about a 12 year old girl to defy the ruler of the community.

  Atleast in this modern world, can you imagine a wife to defy or challenge or question her husband who is just a year more or less than her.

  It happened in Ayesha’s life. She defied and expressed herself freely to her husband, the Prophet and the ruler, at such a small age.

  The hyprocites of Medina spread false rumors about Ayesha’s chastity. The rumors spread so strong that even the Prophet was affected by that and left Ayesha in her Father’s home.

  When Ayesha heard about that, she was deeply hurt and secluded away from people. Then the revelations of Quran occurred which proved Ayesha was chaste and those who spread the rumors were liars and should be punished.

  Hearing the verses Ayesha’s mother asked her to thank the Prophet, her husband, the ruler.

  Do you know what she said.

  “Why should I thank the Prophet. It is Allah who saved me from this false claim of hypocrites. I will thank Allah only and not the Prophet”.

  Can you imagine a 12yr old girl to speak about chastity. Can you imagine a 12 yr old girl to speak to her husband in such a clear and knowledgeable manner defying him. If not before 1400 yrs atleast today in this modern world can you find such a 12 yr old girl in any remote villages of India who defies the ruler and the society, speaking for her rights.

  That is Ayesha. It is not about a 6 or 9 or 12 year old girl whom the Prophet married. It is about Ayesha, who was 9 yrs by then when the Prophet married her.

  Do you know what is the Prophet’s response to her when she refused him. Nothing. He just smiled and approved her.

  That is the Prophet. Though he was very older than Ayesha, he had such an intimate relationship with her that she was free to flow her opinions without fear. A good example of how a husband and wife should be.

  Looking at your comment @HisFeet – I guess you have some knowledge about Islam. Learn more brother, you will get more convinced about Islam.

 4. பாஸ் ரொம்ப பொங்காதீங்க

  நபி காலத்தில் அதாவது 1500 வருடங்களுக்கு முன்னர் குழந்தை திருமணம் என்பது மனித சமூகத்தில் சாதாரணம். அது எல்லா மதத்தவரிடமும் இருந்த்து.. அவ்வளவு ஏன் 50-60 வருடங்களுக்கு முன்னால இந்த புண்ணிய பாரத பூமியில சர்வ சாதாரணமா நடந்துகொண்டுதான் இருந்தது.. இன்னும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது

  எனவே அதை முகம்மது நபி ஒரு சிறுமியை மணந்தார் என்றால் அது அன்றைய சமூகத்தின் வழக்கம். அவ்ளோதான்… மனித நாகரீகம் வளர வளர பல வழக்கங்கள் ஒழிந்து போனது, அதிலொன்று இது….

  நபியை பின்பற்றுகிறோம் பேர்வழி என இசுலாமியர் யாராவது சிறுமிகளை இப்போது மணக்கிறார்களா… இல்லவே இல்லை.

  எனவே பொங்குவதற்கு முன்னால் எதுக்கு பொங்குறோம்னு பாத்து பொங்கவும்

  • ///நபியை பின்பற்றுகிறோம் பேர்வழி என இசுலாமியர் யாராவது சிறுமிகளை இப்போது மணக்கிறார்களா… இல்லவே இல்லை.
   எனவே பொங்குவதற்கு முன்னால் எதுக்கு பொங்குறோம்னு பாத்து பொங்கவும்//

   ரொம்ப குத்தாதிங்க மக்கு ஊசி.. இந்த லிங்குகள செடுக்கி வாசிக்கவும். பின்னர் வக்காலத்து வாங்கவும்

   6 மே 2012 indian court judgement for muslims..for 15 yr old is enough for muslim girl marriage

   http://www.huffingtonpost.com/2012/06/05/15-year-old-muslim-girl-can-marry_n_1571890.html

   Contemporary Pedophilic Islamic Marriages
   http://wikiislam.net/wiki/Contemporary_Pedophilic_Islamic_Marriages

   எங்க ஊசி நீங்க எந்த உலகத்தில் இருந்து வருகிற்ங்ககககககக

   • கல்லு, பீடோபைல் என்றவுடன் முதலில் இந்த உலகம் பாதிரியார்களைத்தான் நினைத்துப்பார்க்கும். போலி விக்கி சுட்டியோட வந்த உங்குளக்கு இது தெரியாமயா இருக்கும் 😉 நாகரிக மனிதர்கள் மத்தியில் குழந்தை திருமணம் என்கிற ‘முறை’ ஒழிந்து விட்டது என்பதுதான் யதார்த்தம். நீங்கள் மதவெறியை கைவிட்டு நாகரிக மனிதனாக மாறும் போது இதை புரிந்து கொள்வீர்க்ள்.

    • Mr. Needle, you are comparision is again wrong. Those fathers accused of pedophile did it against what their religion teaches. Jesus actually warned not to harm any children and it is better to tie a stone and jump in to ocean than to harm a child. But muhammad and islam justifies such actions. There is a hell lot of difference. Unless you want to intentionally deny the fact, you will be able to see the differece.

     • யேசுபாதம், இது போன்ற குப்பைங்க இஸ்லாமுக்கு மட்டுமில்லங்க, எல்லா மதத்துக்கும்மே சொந்தம். இதை எதிர்த்து போராட வேண்டியதுதான் ஜனநாயக சக்தியோட கடமை. சும்மா மதவெறி கண்ணாடியை போட்டுகிட்டே பார்த்தா இப்படித்தான் நான் மட்டும்தான் யோக்கியன் அவன் மோசம்னு சொல்லத்தோணும். நான் சொல்றது இப்பவாச்சும் புரியுதா?

      • I never said that I am good and muslims are bad. In my opnion, all humans are sinners. But not all ideologies are morally wrong. I feel Jesus and His teachings are superior compared to muhammad. Just tell me, whoes teaching wins when compared? Jesus or muhammad?

       • யேசுபாதம், அவங்கவங்க காலத்துல – அவங்கவங்க வாழ்ந்த சூழலை வச்சு யேசுவும்-முகம்மதுவும் பேசுனதையெல்லாம் வச்சு இந்த காலதக்குல வாழுவது அல்லது வாழுவது போல நடிப்பது எல்லாம் கிறுக்குத்தனங்க. இதுல அவரு ஒசத்தியா இவரு ஒசத்தியான்னு போட்டி வேறயா 😉

         • Brother – You need to compare two human Prophets.

          They both told the humans to worship only One God and do good to people.

          The both are the descendants of Abraham.

          The only difference is one Prophet was raised towards God before he established God’s rule on Earth, whereas the other Prophet ruled and taught us how to establish God’s rule on Earth. A rule in which all citizens are equal.

          Hence stopped the necessity of any further Prophets or Messengers of God on Earth.

         • இதுக்கு மேல எப்படி நேரடியா சொல்றது .. Both were relevant in their times, and Both are irrelevant now. புரியுதா?

         • @Abdullah,

          equating Jesus with your prophet is funny….

          One killed those who opposed, other got killed by those who opposed Him.

          One married many ladies from old to young, other remained unmarried.

          One asked his followers to fight for religion, other asked to forgive, bless and pray for the enemies.

          One taught that it is ok to divorce for any reason, other told that divorcing is sin equal to prostitution.

          One taught it is sin to drink wine, other miraclously served wine in a banquet (Bible condemns drunkardness but allows alcohol in moderation)

          On divorced his wife for getting leprasy, other healed thousands of sick and dying people.

          One asked to pray in Arabic and towards mecca, other asked to worship God in heart.

          One claimed that he is the last prophet, other claimed that He and the one who sent Him (Father) are one.

          One was not sure even he or his daughter can enter heaven, other promised heaven for a repenting person even at death.

         • These are the words of Jesus taken from the Bible.

          Think not that I came to spread peace on earth: I came not to spread peace, but a sword. For I came to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law. (Mathew – 10:34,35)

          Just don’t misunderstand or misinterpret the true religion of God.

          If I was of your kind I can also go to a greater extent vilifying everybody’s religion. But that is not what I have been taught by Prophet Muhammad. I was taught to be patient with people and to forgive them if they do wrong to me. I follow him.

          You say that Jesus also told you the same thing. Just think yourself whether you follow him or not. Your words speak about your religion. It is intolerance.

         • அவர் பெரியவரா? இவர் பெரியவரா? என்று பட்டி மன்றம் வைப்பதை விட்டு விட்டு, அவர்கள் சொன்னதில் நல்லவைகளை எடுத்து வாழ்வதற்கு வழி பாருங்களப்பா புண்ணியவான்களே!!!

         • Mr. Adbulla, please understand. Jesus is talking about you people. If your father or brother converts to Christian faith, what is the punishment according to your religion? Like wise Jesus is saying. Same Jesus said, that He is sending His disciples like sheep among wolves. He asked us not to harm anyone. Jesus is saying exactly what people of other faith will do when one accepts Him.

    • ஊசி இந்தியாவில் 15 வயது அல்லது பருவமடைந்த மூஸ்லீம் பெண்னை மணப்பது சட்டப்படி செல்லுபடியாகும் என டெல்லி நீதிமன்றம் ஓப்புதல் அளித்துள்ளது..

     எனவே இது இந்திய சட்டப்படி சரியே.. மற்ற நாடுகளிலும் இது சரியே…

     • கல்லு, இந்த மானங்கெட்ட தீர்ப்பை வழங்கிய இந்திய நீதிமன்றத்தைத எத்தை கொண்டு அடிப்பது என்றுதான் யோசிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு நீதிமன்றமே சொல்லிடுச்சுன்னு போய் பாய் வூட்ல பச்சப்புள்ளைய பொண்ணு கேட்டுப்புடாதீக 😉

      • ??நபியை பின்பற்றுகிறோம் பேர்வழி என இசுலாமியர் யாராவது சிறுமிகளை இப்போது மணக்கிறார்களா… இல்லவே இல்லை. //

       என்று வக்காலத்து வாங்கியவனுக்கு அடியேன் அளித்த பதில்.

       • இப்ப பைபிள்ல இன்செஸ்டு இருக்குன்னு எத்தனையோ பேரு எழுதிப்புட்டாங்க (சுட்டியை கூகிள்ல தேடிப்படிச்சுகங்க) அதுக்காக கிறுத்துவர்களெல்லாம் அப்படியா வாழறாங்க? நான் சொல்ல வருவதை அப்படி புரிஞ்சுக்கனும் இதுக்குத்தான் நாகரிக மனிதர்கள் மத்தியில் குழந்தை திருமணம் என்கிற ‘முறை’ ஒழிந்து விட்டது என்பதுதான் யதார்த்தம். நீங்கள் மதவெறியை கைவிட்டு நாகரிக மனிதனாக மாறும் போது இதை புரிந்து கொள்வீர்க்ள்னு காலையிலேயே சொன்னேன், அதற்கு முதல்படியாக நீங்க நாகரிக மனிதர்களோடு பழக முயற்சித்தால் நான் சொல்லும் உண்மை புரியும், மூளையை கழட்டி வைக்கச்சொல்லும் பிராடு அல்லேலூயா தினகரனின் கூட்டம் உங்களை சுற்றி இருப்பதால் அதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், கொஞ்சம் கஷ்டப்பட்டாவது முயற்சி செய்யுங்களேன். இல்லேன்னா ஏஞ்சல் டீவி வின்சென்ட் செல்வகுமார் மாதிரி சின்னப்பொண்கள்கிட்ட ஆவி எழுப்ப போயிடப்போறீங்க.

        • பைபிள் இருந்து அது இறந்தகாலம்..

         மூஸ்லீம்கள் குழந்தை திருமணம் செய்வது நிகழ்காலம்..அதாவது 6/05/2012 வரை அதிகாரப் புர்வமாக

         • இந்தப்பையனுக்கு ஒரு சின்ன விசயம் புரிய மாட்டேங்குதே. குரான்லையும் பைபிள்லயும், கீதையிலும் இருப்பதை பயன்படுத்தி காலத்துக்கும் நாகரிகத்துக்கும் ஒவ்வாத காட்டுமிராண்டித்தனத்தை செய்பவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இருப்பார்கள். அதே நேரத்தில் மதநம்பிக்கை இருந்தாலும் தேவையற்றதை ஒதுக்கிவிட்டு காலத்துக்கு ஏற்ப வாழும் மனிதர்கள்தான் மெஜாரிடி. நீங்க இருப்பது ஒரு ஆவியெழுப்பும் காட்டுமிராண்டிக்கூட்டத்துல. அதனால் உங்கள் கண்களுக்கு அவர்களைப்போல ‘கேசுகள்’ மட்டும் தெரிவது பெரியவிசயமில்லைதான். இருந்தாலும் சின்னப்பையனாக இருக்கிறீர்களே உங்களை மதவெறியிலிருந்து மீட்டு மனிதனாக்க வேண்டும் என்றுதான் நான் அக்கறையோடு உறையாடிக்கொண்டிருக்கிறேன் 😉 கொஞ்சம் கருணை காட்டுங்க சாமியோவ்வ்வ்வ்

    • மக்கு ஊசி wikiislam என்பது Dr. Ali Sina வின் இணையதளம்.. நீங்க அங்க குத்துங்க எசமான்

     Dr. Ali Sina is a former Muslim from Iran who is atheist and currently residing in Canada. He is the author of Understanding Muhammad, and is the founder of Faith Freedom International.

     In 2010, Ali Sina launched Freedom Bulwark Resistance, a social networking platform for critics of Islam and his personal website AliSina.org His offer to Zakir Naik for a written debate remains unanswered.

     • அதி மேதாவி கல்நெஞ்சம் அவர்களே, அல்சினா பெயரில்/சுட்டியுடன் வினவில் ஏகப்பட்ட பின்னூட்டம் வந்துவிட்டாவிட்டது. இந்துமதவெறியர்களுக்கும் உங்களைப்போன்ற கிறுத்தவமதவெறியர்களுக்கும் வேறு என்ன வேலை! போலவே இசுலாமிய மதவெறியர்கள் இப்படி ஏகப்பட்ட சுட்டிகளை போட்டிருக்கிறார்கள், தமிழில் வேறு ஆன்லைன்பிஜே சுட்டி . இப்படி மானங்கெட்ட மதவெறியர்கள் தந்த சுட்டிகளை படித்து படித்தே நான் மக்காகிவிட்டேன். என் செய்வேன் நான் என்செய்வேன்

      • __________ இந்த 2012 ஆண்டில் கூட குழந்தைத் திருமணம் பலதார மணமுறை இஸ்லாமியர்களிடையே உள்ளது. அரபு நாடுகள் மட்டுமள்ளாது இந்திய நாட்டிலும் இது வழக்கத்தில் உள்ளது.

       நான் எந்தவொரு கீதையோ,பைபிளையோ, குரானையோ மேற்கோள் காட்டவில்லை. நான் சுட்டி காட்டியது இஸ்ஸாம் குடும்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மிக சமீபத்திய தீர்ப்பே..இசுலாமியர் யாராவது சிறுமிகளை இப்போது மணக்கிறார்களா… இல்லவே இல்லை என சத்தியம் அடித்து சென்ன உனது கருத்துக்கான பதிலே.இதில் என்ன மதவெறி உள்ளது எனக்குத் தெரியவில்லை.

       • அய்யா கல்லு,

        கடலூரு திருவந்திபுரம் வாய்யா. அங்கு, கோயில் குருக்கள்கள் எத்தனை இந்து குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றனர் என்பதைக் காணலாம்.

       • தம்பி கல்நெஞ்சத்தின் கிறுத்தவமதவெறிக்கு எதிரான எனது போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி.

        அவர் தன்னைப்போன்ற மதவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை மேற்கோள் காட்டி இன்னமும் இசுலாமியர்கள் சிறுமிகளை மணக்கிறார்க்ள் என்றே நிருபிக்க விரும்புகிறார். இதை மேலே பலமுறை சொல்லியும் விட்டார்,

        ஆனால் காட்டுமிராண்டி கூட்டம் எல்லா மதத்திலும் உண்டு அது மிகவும் குறைவு, நாகரிக மனிதர்களே அனைத்து மதங்களிலும் மிகுதியாக உள்ளனர், அவர்கள் சிறுமிகளை மணம் புரிவுது போன்ற இழி செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது மட்டும் அவருக்கு புரிவதில்லை.

        மதவெறி கொடியது, கண்ணை மறைக்க்ககூடியது என்பதற்கு கல்நெஞ்சத்தின் நடைமுறையைவிட சிறந்த உதாரணத்தை காணமுடியாது. இது பாழுங்கிணறுதான் இருந்தாலும் ஒரு சிறுவனை காப்பாற்ற நாமும் உள்ளே குதித்துத்தான் ஆகவேண்டும். எனவே யாரும் அவருடன் கோப்பட்டு விடாமல் இன்டரவலுக்கு பின்னாலுள்ள சேது சியான் போலவோ அல்லது தெய்வத்திருமகள் கிருஷ்ணாவைப் போன்றோ டீல் செய்யுமாரு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்

        • மதவெறியா।…. நான் கோயிலுக்கு சென்றால் என் அம்மா தான் ரொம்ப சந்தோஸாப்படும் ஜீவன்..

         அது சரி..நான் மேற்கோள் காட்டிய பைபிள் வசனங்கள் வினவு தளத்தில் இருப்பதை காட்ட முடியுமா.. இதுவரை நான் எந்தவொரு கீதையோ,பைபிளையோ, குரானையோ மேற்கோள் காட்டவில்லை. அது என் வழக்கமும் இல்லை..அதன்பின் அது எந்தவிதத்தில் என்னை மதவெறி பிடித்தவன் எனக் கூவல்யிடும் நோக்கம் என்ன..

         • கல்நெஞ்சரே, நானும் உங்களை பயங்கரமான ஆதிக்கசாதி வெறிபிடித்த பார்ப்பன அடிமை என்றுதான் நினைத்திருந்தேன், அதற்கு காரணமாக அமைந்தது உங்களின் பல பின்னூட்டங்களாக இருந்தாலும் அதில் முதன்மையானது இது

          @@@@@@@@@மருமகா உடைத்தா மண்சட்டியும் பொன்சட்டி

          தலித் செஞ்ச நியாயம்,தர்மம் அப்படியா இந்த கீழ்தர புத்தி உங்கள மாதிரி மலம் அள்ளுபவர்களுக்கு மட்டும்தான் வரும். கடைசி வரைக்கும் பீ அள்ளிகிட்டே சாவுங்கடா…

          https://www.vinavu.com/2012/06/04/brahmeshwar-singh-killed/#comment-62975

          @@@@@@@@@@@@@

          ஒரு வெறிபிடித்தவர் மட்டுமே இப்படி இப்படி எழுதமுடியுமேயன்றி, சமநிலையில் இருக்கும் மனிதனால் இப்படி எழுத முடியாது என்பது உறுதி.

          ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் இந்துமதவெறியன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் மோசடிக்கிரிமினல் கிறுத்துவமதவெறியன் தினகரனுக்கு நீங்கள் சமீபத்தில் வக்காளத்து வாங்கிவந்ததை படித்தபின்னர் கிறுத்துவமதவெறியனாக இருக்க வாய்ப்பு அதிகமென்றே தோன்றியது, ஒரு வேளை நீங்கள் இரண்டுங்கெட்டானாக இருக்க வாய்ப்புண்டு

          இப்படி உங்கள் இஸ்லாமிய வெறுப்பு – தலித் வெறுப்பு – பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு – அன்னா ஹசாரே ஆதரவு – கிறுத்துவ மோசடி பேர்வழி ஆதரவு நிலைப்பாடுகளெல்லாம் நீங்கள் ஒரு வெறிபிடித்த மனநிலையில் இருப்பவர் என்பதை எடுத்துறைக்கிறது.

          அது எந்த வெறியானாலும் சரி அதை உங்களிடமிருந்து ஒழிக்க நாங்கள் இருக்கிறோம் 🙂

          அன்புடன்
          ஊசி

          பி.கு. உங்கள் வினவு எதிர்ப்பு – கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடுகளை நான் பொருட்படுத்தவில்லை என்று கோபிக்காதீர்க்கள், எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்!

      • ஊசிக்கு..

       //ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்ற தோழர்களை மனமார பாராட்டுகிறோம்.//

       என்று வாழ்த்து மடல் வெளியிட்ட வினவை கண்டித்து எழுதிய பதிலே அது. நீங்கள் எத்தனை தடைவை மாறி மாறி கொலைகளை செய்து கொண்டு இருப்பிர்கள். கொலைகளை நியப்படுத்துவது தவறு. பிரம்மேஷ்வர் செய்ததும் தவறுதான்..நக்சல் செய்தும் தவறுதான்..இதனால் அம்மக்களின் வாழ்கை தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என செல்ல முடியுமா. கடைசிவரை அம்மக்கள் அதே நிலையில் இருந்து பலிக்கு பலி வாங்கி சாக வேண்டியது தான்.

       மாவோ நக்சல் இயக்கத்தின் ஆண்டு வருமானம் சுமார் 1500 கோடி. தூப்பாக்கி வாங்க காசு உள்ளது ஆனால் படிக்க வைக்க காசு இல்லை. எப்படி.. கேட்டால் இவை எல்லாம் பறிமுதல்
       செய்யப்பட்டவை என பதில் வருகிறது. அப்ப கண்ணிவெடிகள் எங்கே பறிமுதல் செய்யப்பட்டவை என செல்ல முடியுமா? தாழ்த்தப்பட்ட இனம் கடைசி வரை தாழ்த்தப்பட்ட இனமாகவே இருக்கும். கல்வியே இம்மக்களை முன்னோற்றும் என்று செல்லி சாதித்த அம்போத்காரை காட்டாமல் பலி வாங்கும் சிந்தனையுள்ள மக்களை காட்டுவது ஓழியும் வரை.. இம்மக்கள் இதே நிலைதான் ஆயிரம் வருடம் வந்தாலும்..அந்த வெறிபிடித்த வாழ்த்துமடலுக்குத்தான் அந்த பதில்..

       //தினகரன்-karunya பற்றிய செய்தியில் காருன்யா பற்றி கேட்ட கேள்விக்கு அளித்த பதில்களோ தவிர கிறித்துவத்தை பற்றி அல்ல,,

       கல்வி மற்றும் மதமாற்றும் என்ற கருத்துக்களுக்கு அளித்த பதிலே.. கல்விக்கட்டணம் பற்றிய கருத்தில் என் கல்விக்கட்டணத்தை ஆதாரத்துடன் வெளியிட்டேன்.. கோவை பேரூர் வரை நிலம் உள்ளது என கதைவிட்ட ஓருவரின் கருத்துக்காக 700 ஏக்கர் நிலம் யார் யாரிடம் வாங்கப்பட்டது எனும் விவரத்தையும் வெளியிட்டேன்.மதமாற்றம் தொடர்பாக இதே வினவு தளத்தில் இக்பால் சென்ன கருத்தைத்தான் நான் வெளியிடேன்..

       குழந்தை திருமணம் திருமணம் இல்லவோ இல்லை என சத்தியம் செய்த உனக்குதான் சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பை கொடுத்து விளக்கம் கேட்டால் மதவெறி என பதில் வருகிறது.

   • முஸ்லீம்கள் இப்போது சிறுமிகளை திருமணம் செய்வதாக் தெரியவில்லை. அவர்கள் வாதாடி வேண்டுமானால் தீர்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் கிருத்துவத்தில் பாதர், மதர், சிஸ்டர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கின்ற களியாட்டம் எட்டுத் திசையும் இன்னும் நாறிக்கொண்டு தானே இருக்கிறது

   • சரி அப்படியே கூட இருக்கட்டும் அவங்க என்ன பன்னாங்க கல்யாணம் தானே பன்னாங்க ஆனால் சங்கரமடத்தில் உள்ள ஊத்தைவாயங்களான பெரிய சங்கராச்சாரியும் சின்ன சங்கராச்சாரியும் பல சிறுமிகளை பாலியல் வன்முறையின் மூலம் கொன்றிருக்கிறார்கள். அவ்வாறு இறந்து போன குழந்தைகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா கல்நெஞ்சம் ?

  • இந்த வினோத்து எல்லா பதிவுலேயும் வந்து பாயை பிராண்டுதே, கீழ்பாக்கத்துக்கோ ஏற்வாடிக்கோ அனுப்பிவைங்கப்பா, செலவுக்கு நானே காசு தாறேன்…

  • குரானை எரித்தால் உனக்கு என்ன மிச்சம் கிடைக்கும்? கரித்தூள் தான் கிடைக்கும். முதலில் உன் மனதில் உள்ள மத வெறியை எரிப்பதற்கு முயற்சி செய். மனிதனாக மாறுவதற்கு வழி பிறக்கும்.

 5. கட்டுரையைப் பற்றிய பின் கருத்துகளைப் படிக்கும் போது எனக்கு மிகவும் குழப்பமாகி விட்டது. கட்டுரை குழந்தை திருமணத்தைப் பற்றியதா? அல்லது குழந்தையை கைது செய்தது பற்றியா? என்ற அய்யம் ஏற்பட்டு மீண்டும் ஒரு முறை கட்டுரையை திரும்ப படிக்கும் படி ஆகிவிட்டது. அய்யா புண்ணியவான்களா!!! கட்டுரைக்குத் தொடர்பான பதிவாய் எழுதுங்களேன்!!!

  • தமிழ் என்ன எழுதியிருக்காருன்னு இவருக்கு புரிஞ்சுதான்னே தெரியலயே.. சம்பந்தமே இல்லாம ஒரு பிட்டு ஓட்டுறாரு?

   • ராம் நீங்க சொல்ல விரும்புவதை தெளிவாக சொல்லாமல் டிக்கிலோனா வெளாடுவதில் வல்லவர் போலும். அதனாலென்ன லோன் கொடுக்க நாங்க ரெடி

  • மாட்டு மூத்திரத்தை மட்டுமே குடியுங்கள். எதைப்பற்றி பேச ஆரம்பித்தாலும் இஸ்லாமியனின்—– தீருவேன் என்று அடம் பிடிக்காதீர்கள். அவன் என்ன தேவையிருக்கிறதோ இல்லையோ உங்களைப் பற்றி பேசுகிறானா? இல்லையே.

   • நான் இதற்கு முன் இட்ட பின்னூட்டம் பிரசுரமாகவில்லை. அது தொழில்நுட்ப கோளாறே அன்றி வினவின் சென்சார் இல்லையென நம்புகிறேன்.

    மற்றபடி நான் ‘தமிழ்’ அவர்களிடம் கேட்க ஆசைப்படுவது: பாகிஸ்தானில் நிலவும் இசுலாமிய மதவெறியைப் பற்றிய கட்டுரையில் ‘இந்தியாவில் உள்ள இந்து மதவெறி போல்’ என்று தெவையற்ற, சம்பந்தமில்லாத ஒப்பீடை கட்டுரையில் எழுதி இருக்கும் வினவு குழு குடித்தநீரில் நீங்கள் கூறும் எந்த நீரையாவது யாராவது கலந்துவிட்டார்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க