முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

-

கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.

இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.

ஆக, மேம்போக்காக பார்க்கும் போதே இந்த நடவடிக்கைக்கு கூறப்படும் காரணம் உண்மையானதோ, சரியானதோ அல்ல என்பது யாருக்கும் எளிதாக விளங்கும்.

எனில், அற்பமான இந்த பிரச்சனை ஜும்மாவில் பொது அறிவிப்பு கொடுத்து தடை செய்யும் அளவுக்கு போனது ஏன்? அதை அறியவேண்டுமானால் ஆழங்களில் புதைந்திருக்கும் வேர்கள் தோண்டி எடுக்கப்பட்டாக வேண்டும்.

முதலில் அறிமுகப் படலம். தோழர் துராப்ஷா கடையநல்லூர் சிபிஐ (வலது கம்யூனிஸ்ட் கட்சி) யில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். கடவுள் நம்பிக்கையற்றவராக, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்தாலும் சமுதாயத்தினருக்கு உதவிகள் செய்வதிலும், துணை நிற்பதிலும் துடிப்பாக செயல்படுபவர். சிபிஐ-யில் இருக்கும் போதுகூட கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நிர்வாகக் குழுவில் நேர்மையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய சகோதரி தேர்தலில் நின்றபோதும் கூட உறவினர்களையெல்லாம் எதிர்த்து “ஓட்டுப்போடாதே புரட்சி செய்” என்று பிரச்சாரம் செய்தவர்.

சைபுல்லா ஹாஜா கடையநல்லூர் மக்கள் மத்தியில் பல காலமாக மத அறிஞராக மதிக்கப்பட்டவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் நிர்வாக மட்டத்தில் மேலாண்மைக் குழுவில் செயலாற்றியவர். என்றாலும் அவர்மீது தனிப்பட்ட சில விமர்சனங்களும் இசுலாமிய மக்களிடம் இருக்கின்றன. தன் குடும்ப திருமணத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணவில்லை என்று தவ்ஹீத் ஜமாத் வட்டாரத்திலேயே சலசலப்பு எழுந்ததுண்டு. இது குறித்து ஆன்லைன் பிஜேவில் இவரை நிறையவே தாளித்திருக்கிறார்கள். ஆமினா என்ற பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்து, மதுரையில் ஒரு தங்கும் விடுதியில் அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் பரபரப்புடன் பேசப்பட்டது.

முபாரக் பள்ளியுடன் தொடர்புடைய நிலத்தை ஜமாத்தின் பெயரிலோ, பொது அறக்கட்டளையின் பெயரிலோ பதிவு செய்யாமல் தனி ஒருவரின் பெயரில் பதிவு செய்ததாக கடந்த ஆண்டு இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கப்பட்டுவிட, தற்போது கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டி) என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.

தோழர் துராப்ஷாவுக்கும் மேற்கண்ட சைபுல்லா ஹாஜாவுக்கும் இடையே முன்பிருந்தே சிற்சில பிரச்சனைகள் இருந்ததாக தெரிய வருகிறது. முபாரக் பள்ளிக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று நிலத்தில் சிபிஐ பாராளுமன்ற நிதியில் இருந்து பொது நூலகத்திற்கு சொந்த கட்டிடம் எழுப்பும் முயற்சியில் முபாரக் பள்ளிக்கு எதிராக செயல்பட்டது. தொழுகை நேரம் தவிர ஏனைய நேரங்களிலும் (இரவு நேரங்களில் கூட) அன்றாட மதரசா நிகழ்சிகளையும் ஒலிபெருகியை சப்தமாக வைத்து மக்களுக்கு தொல்லை கொடுப்பது இது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளில் மறைமுகமாக பிணக்கு ஏற்பட்டிருந்தாலும் நேரடியாக தலையிடும்படியான சூழலும் நேர்ந்தது.

தோழர் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கிய பிறகு, சைபுல்லா ஹாஜாவின் முபாரக் பள்ளி கமிட்டியின் கீழ் மஸ்ஜிதுல் முபாரக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ சங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இந்த சங்கத்தின் ஆட்டோக்கள் கடைவீதியில் முபாரக் பள்ளிக்கு அருகில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும். முதலில் நிறுத்தப்பட்ட ஆட்டோவுக்கு முதல் சவாரி எனும் அடிப்படையில் செயல்பட்டாலும், குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்டோவை முதலில் நிறுத்தவிடாமல் தடுப்பது, சவாரி அவர்களுக்கு கிடைக்காத வண்ணம் தில்லுமுல்லுகளைச் செய்வது என்று நடந்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட அந்த ஓட்டுனர்கள் இந்த பிரச்சினையை சைபுல்லா ஹாஜாவிடம் கொண்டு சென்ற பின்பும், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் இதனால் பாதிக்கப்பட்ட ஆறு ஆட்டோ ஓட்டுனர்கள், ”நாங்கள் சங்கத்திலிருந்து விலகிக் கொள்கிறோம், உறுப்பினர் சேர்ப்பு கட்டணமாக நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பத் தாருங்கள்” என்று கேட்டபோது சைபுல்லா ஹாஜா, ”பணத்தையும் திரும்பத்தர முடியாது, நீங்கள் தனியாகவும் செயல்படக் கூடாது. மீறி செயல்பட்டால் கடையநல்லூரில் எந்த இடத்திலும் தொழில் செய்ய முடியாமல் செய்து விடுவேன்.” என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த ஆறு ஆட்டோ ஓட்டுனர்களும் தோழர் துராப்ஷாவை அணுகி தங்களுக்கு உதவமுடியுமா எனக் கேட்டுள்ளனர். துராப்ஷாவும் வேறு தோழர்களின் உதவியுடன் அவர்களுக்கு சங்கம் என்றால் என்ன?, உரிமைகளுக்காக போராடுவது, அதனூடான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று செயல்பட்டிருக்கிறார்.

இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது.

இவர்களின் இந்த போட்டி மனப்பான்மைக்கு, ஹஜ்ஜுப் பெருநாளை வெவ்வேறு குழுக்களின் சார்பில் மூன்று தனித்தனி நாட்களில் மூன்று பெருநாளாக கொண்டாடியது, நோன்புப் பெருநாளில் தொழுகை நடத்துவதற்கு ஒரு திடலுக்கு மூன்று குழுக்களும் போட்டி நடத்தி காவல்நிலையம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது என்று கடையநல்லூரிலிருந்தே எடுத்துக்காட்டுகளை கூற முடியும். இது தான் தோழர் துராப்ஷாவுக்கு எதிரான வெள்ளிக்கிழமை அறிவிப்புக்கு அடிப்படையான காரணம். இதைத்தான் இஸ்லாம், ஹராம், ஹலால் என்று திசை திருப்பி மக்களை வெறியேற்றி விட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான பின்னணிப் பிரச்சனைகளெல்லாம் இல்லாமல் இஸ்லத்திற்கு எதிராக கட்டுரை எழுதியது மட்டும் தான் பிரச்சனை என்றால் என்ன செய்திருக்கப்பட வேண்டும்? சம்மந்தப்பட்டவரை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் வெள்ளிக் கிழமை அறிவிப்புக்கு முன்பும் பின்பும் தோழரிடம் யாரும் இது குறித்து விசாரிக்கவோ, விளக்கம் கேட்கவோ இல்லை. தனக்கும் குறிப்பிட்ட அந்த தளத்திற்கும், குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கும் தொடர்பு ஒன்றுமில்லை என்றும், முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள், அதன்பிற்கு நீங்கள் வழங்கும் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன் எனும் தோழரின் கூற்று யார் காதிலும் ஏறவில்லை. மாறாக அவர்களின் செயல்கள் அப்பட்டமாக மேற்கூறப்பட்ட பின்னணிகள் தான் இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.

வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிடும் போது அவர் அதை எப்படி கூறினார்? அந்தக் கட்டுரையை நீங்கள் படித்தால் உணர்ச்சிவசப்பட்டு அவரையும் அந்தக் கடையையும் அடித்து நொறுக்கி விடுவீர்கள் அவ்வளவு கேவலமாக அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படி நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கடையை புறக்கணியுங்கள் என்கிறேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை படியெடுத்து அதன் கீழே நபிமார்களை இவ்வளவு கேவலமாக எழுதியிருக்கும் இவனை என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று எழுதி அதை வீடு வீடாக எடுத்துச் சென்று வினியோகித்திருக்கிறார்கள்.

உண்மையில் தோழர் துராப்ஷவுக்கும் அந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அவர் எழுதியது போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்க விரும்பினார்கள். இது ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டதற்கான எதிர்வினை என்றில்லாமல், திட்டமிட்டு தோழர் மீது மக்களிடம் வெறுப்பை உண்டாக்க வேண்டும், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வது போன்ற தோற்றத்தில் அவர் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியான பின்னர் அந்த அறிவிப்பு பெரிய அளவில் மக்களை  ஈர்க்கவில்லை. சனிக்கிழமை தோழரின் கடையில் ஒப்பீட்டளவில் வியாபாரம் குறைந்திருந்தது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அந்த பாதிப்பு மீண்டுவரத் தொடங்கியது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை நடக்கும் வியாபாரமே நாளின் மொத்த வியாபரத்தையும் தீர்மானிக்கும் எனும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பழையபடி வியாபாரம் மீளத் தொடங்கியிருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.

என்ன தான் ஹலால் பிரச்சனையை தூண்டினாலும் தோழரின் கடையில் கறி வாங்கும் அனைவருக்குமே தெரியும், அங்கு ஹலாலான முறையில் தான் கோழி அறுத்து விற்பனை செய்யப்படுகிறது என்பது. தோழரே முன்னின்று நேரடியாக அறுத்து விற்பனை செய்வதில்லை. நிறுத்துக் கொடுப்பது அதற்கான பணத்தை வாங்குவதை மட்டும் தான் தோழர் செய்துவந்தார். கோழி அறுப்பதற்கும் வெட்டி துண்டுகளாக்குவதற்கும் இஸ்லாமியர் ஒருவரையே வேலைக்கு அமர்த்தியிருந்தார். எனவே அது இஸ்லாமிய முறைப்படி ஹலாலானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். மட்டுமல்லாது வாங்குவதை தவிர்த்தவர்களும் கூட ’எதற்கு வம்பு’ எனும் ஜாக்கிரதை உணர்ச்சியில் தவிர்த்திருப்பார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அந்தக் கடையைத் தவிர பொருளாதார வசதிகளோ வேறு ஆதாரங்களோ இல்லாத தோழர், பள்ளிவாசலில் அறிவித்தவுடன் வாழ்வாதாரத்திற்கே தடை வந்துவிட்டதே என்று கலங்கி தம்மிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டு பணிந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் போலும். அவ்வாறல்லாமல் நிலமை சகஜமாவதை கவனித்த அவர்கள், ஞாயிற்றுக் கிழமை 9 மணிக்கு மேல் கடைக்கு முன் திரளத் தொடங்கினார்கள். ”எங்கள் நபியை கேவலப்படுத்திய உன்னை கடையை நடத்த விடமாட்டோம், கடையை மூடு” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது.

தயாராக கொண்டு வந்திருந்த (கட்டுரை அடங்கிய) பிரசுரத்தையும் கூட்டத்தில் வினியோகித்தனர். அந்தக் கூட்டத்திலேயே ஒருவன் ”வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கடைக்குள் நுழைந்து எதையாவது செய்தால் அது நமக்கு எதிராக திரும்பிவிடும்” என்று கூறியிருக்கிறான். இதிலிருந்து அவர்கள் முன் யோசனையுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே வேறு வழியின்றி தோழர் கடையை அடைத்து விட்டு தொலைபேசியில் தோழர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார். இதற்குள் அவர்களாகவே காவல்துறைக்கு மதத்தை கேவலப்படுத்தி எழுதிய ஒருவரின் கடைக்கு முன்னே மக்கள் திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்க போலீஸ் வந்தது. தோழரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர், தோழரும் தன்னுடய தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார். கடைசியில் புதன் வரை கடையை மூடி வைப்பது என்றும் வியாழனிலிருந்து வழக்கம் போல் கடையை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்பிறகும் அமைதியடையாத சைபுல்லா ஹாஜா குழு, ஞாயிறு மதியத்திற்குப் பிறகு, தோழர் வசிக்கும் வட்டார ஜமாத்திற்கும், மக்கட்டி குடும்பத்தார்களுக்கும் (வட்டார ஜமாத் என்பது வசிக்கும் தெருவை உள்ளடக்கிய அமைப்பு, குடும்பத்தார்கள் என்பது குறிப்பிட்ட குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு) அந்தக் கட்டுரையை அனுப்பி இப்படிப்பட்டவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து கூடிய வட்டார ஜமாத் நாங்கள் முடிவு செய்வதை விட உலமாக்கள் சபைக்கு இதை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் கூறும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

குடும்பத்தார்களோ முபாரக் பள்ளி கமிட்டிக்குச் சென்று நிபந்தனையற்று மன்னிப்பு கூறு இல்லாவிட்டால் குடும்பத்திலிருந்து நீக்கிவைப்போம் என்று தோழரை நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகிறார்கள். இத்தனைக்கும் முபாரக் பள்ளி கமிட்டியிலிருந்து இதுவரை என்ன பிரச்சனை என்றோ, விளக்கம் என்ன என்றோ தோழரிடம் யாரும் விசாரணை செய்யவே இல்லை. தோழரோ தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் அந்த கட்டுரையை எழுதவில்லை, அந்த தளத்தை நடத்துவதும் நானல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அது யாருடைய செவியையும் எட்டவில்லை.

ஆம், பிரச்சனையை அணுகுபவர்களுக்கு அல்லவா, என்ன நடந்தது, எங்கு தவறு என்பன போன்றவையெல்லாம் தேவையாக இருக்கும். இங்கு நடப்பது தோழரை முடக்கி தண்டித்தாக வேண்டும் எனும் முயற்சியல்லவா? அதனால் தான் தங்கள் பலத்தை பயன்படுத்தி, நேர்மையை புறந்தள்ளி தங்களின் திட்டமிட்ட இலக்கை அடைய முயல்கிறார்கள். இவர்கள் தான் இஸ்லாம் நீதியையும் நேர்மையையும் பேணுகிறது என்று மதத்தை போதிக்கும் அறிஞர்களாம், வெட்கக்கேடு.

இதன் பிறகுதான் நிகழ்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மறுநாள் திங்கட்கிழமை மக்கட்டி குடும்பத்தார்கள் கூட்டம் தொடங்கியது, தோழரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். விசாரித்திருக்கிறார்கள் என்பதை விட, ”நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாத பட்சத்தில் குடும்பத்திலிருந்து நீக்கி வைப்போம், எந்த விதத்திலும் எங்களுடைய உதவி உங்களுக்கு கிடைக்காது” என்று மிரட்டியிருக்கிறார்கள் என்பதே சரி.

மட்டுமல்லாது உலமாக்கள் சபை என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்பதையும் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் தவறு நடந்திருக்கிறதா என்பதை ஆராய்வதல்ல, எந்த விதத்திலாவது மன்னிப்பு கேட்கவைத்து, பிரச்சனையை மூடிவிடுவது என்பதாகவே இருக்கிறது. முடிவில் தொடர்ந்த அவர்களின் வற்புறுத்தல்களின் காரணமாக எந்த தவறும் செய்யத நிலையிலும் தோழர் மன்னிப்பு கேட்பதற்கு சம்மதிக்கிறார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை, மெல்ல மெல்ல விசயம் தெரிந்து பலரும் தோழரை தொலைபேசியில் விசாரித்திருக்கிறார்கள். ஊடகவியலாளர் கவின்மலருக்கும் விசயம் தெரிந்து, ஜூனியர் விகடனுக்கும், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் கடையநல்லூரும் சூடேறிக் கொண்டிருந்தது.

மதிய நேர லுஹர் தொழுகைக்குப் பின்னர் தான் கூட்டம் நடக்கவிருக்கிறது என்றாலும் அதற்கு முன்பிருந்தே இளைஞர்கள் பெருமளவில் குழுமத் தொடங்குவார்கள் என்பதால், தொழுகை நேரத்திற்கும் முன்னதாகவே பள்ளிவாசலுக்குள் சென்று உள்ளேயே இருங்கள் வெளியில் வரவேண்டாம் என்று தோழருக்கு அறிவுரை தரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ”நாங்கள் அழைத்த பின்னரே வரவேண்டும்” என்று கூறினார்கள். மன்னிப்பு கேட்பதற்காகத்தான் வருகிறார் என்றாலும் பாதுகாப்புக்காக காவல் துறையை அணுகுவதற்கு அனுமதி கேட்டபோது, “காவல் துறையை அணுகினால், நாங்கள் விலகி விடுகிறோம், நீயே தனியாக சந்தித்துக் கொள்” என்று குடும்பத்தார்கள் மிரட்டியிருக்கிறார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத நிலையிலேயே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார் தோழர். விசாரணை இல்லை. விளக்கம் கூற அனுமதி இல்லை. மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் வேறு எதையும் பேசக்கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்றாலும், பள்ளிவாசலில் நுழைந்ததுமே, அங்கிருந்த மதவெறியேறிய காட்டுமிராண்டிக் கும்பல் தோழரை தாக்கத் தொடங்கியிருக்கிறது. உறவினர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகு தோழரை தனியறையில் தள்ளி அடைத்து தாக்குதல்களை தடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தயாராக கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் தோழரிடம் கையெழுத்து வாங்கி, “இவர் காஃபிர் என அறிவிக்கப்படுகிறார், தாய், மனைவி குழந்தைகள் உட்பட இவரோடு யார் தொடர்பு கொண்டாலும் அவர்களும் காஃபிர்களாக கருதப்படுவார்கள்” என்று அறிவித்து விட்டார்கள். இதன்பிறகு காவல்துறை தோழரை பாதுகாப்பாக வெளியேற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. காவலர்களின் கண் முன்பே காவல்துறை வாகனத்தில் வைத்தும்கூட தாக்கியிருக்கிறார்கள் அந்த மதவெறி பிடித்த மிருகங்கள். “காவல்துறை எங்களை எதுவும் செய்ய முடியாது. என்றிருந்தாலும் உன்னுடைய சாவு எங்கள் கையில் தான்” என்றெல்லாம் அந்த கும்பல் வெறிக் கூச்சலிட்டது.

இதனிடையே ஒருவரை காஃபிர் என ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் மண்டல அரசு காஜிக்கு மட்டுமே உண்டு. ஆனால் தோழருக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா அரசு காஜியினால் கொடுக்கப்படவில்லை. அவருடைய அனுமதியின்றி இவர்களாகவே ஃபத்வா கொடுத்துவிட்டு பின்னர் அரசு காஜியிடம் கையெழுத்துக்காக சென்றிருக்கிறார்கள். அவர் கையெழுத்திடுவதற்கு முதலில் மறுத்திருக்கிறார், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்று சமாதானம் செய்து கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். முதலில் மன்னிப்பு கடிதம் வாங்கி வாருங்கள் பின்னர் பார்க்கலாம் என்று அரசு காஜி கூற, எப்படியோ கடிதம் வாங்கி ஃபத்வாவில் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள்.

இது ரவுடிக் கும்பலின் அட்டகாசம் என்பதிலோ, மதவெறிபிடித்த காட்டுமிராண்டிக் கும்பலின் வெறியாட்டம் என்பதிலோ நேர்மையுடன் பரிசீலிக்கும் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆனால் இதில் இஸ்லாமியர்களின் பார்வை, நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளை இழிவுபடுத்தியவரை நாங்கள் தாக்குவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்? என்பதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் இப்படித்தான் இந்து மதத்தை, இந்துக்கடவுளரை புண்படுத்தி விட்டார்கள் என்று கூறி வருவதோடு எம்.எப்.ஹூசைன் உட்பட பலரை தாக்கியிருக்கிறது. நாட்டை விட்டே விரட்டியுமிருக்கிறது. மதவாதிகள் அனைவருமே விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் கையில் எடுக்கும் ஆயுதம் எங்கள் மனது புண்படுகிறது என்பது தான்.

இஸ்லாத்தின் ஆரம்பமே பிற மத நம்பிக்கைகளை விமர்சிப்பதிலிருந்து தான் தொடங்கியிருக்கிறது. காபாவில் வைக்கப்பட்டிருந்த முன்னூறுக்கும் அதிகமான சிலைகளை அடித்து நொறுக்கித்தான் இஸ்லாத்தின் புனிதம் நிறுவப்பட்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இன்றும் கூட பைபிள் இறை வேதமல்ல, மனிதர்கள் அதை திருத்திவிட்டார்கள் என்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள், மேடைகளில் பரப்புரை செய்கிறார்கள், விவாதம் நடத்துகிறார்கள். இதனால் எங்கள் மனது புண்படுகிறது என்று கிறித்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அதை சரி என்பார்களா? ஆக இது பலம் இருக்கிறது என்பதால் வெளிப்படும் திமிர்த்தனம் தானேயன்றி வேறொன்றுமில்லை.

பொதுவெளியில் இருக்கும் எதையும் விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. செய்யப்படும் விமர்சனத்தில் தவறு இருப்பதாக கருதினால் சுட்டிக் காட்டுவதையோ, விசாரிப்பதையோ யாரும் தவறென கூற முடியாது. ஆனால் எங்கள் நம்பிக்கையை எதிர்த்து எழுதினால் நாங்கள் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.

தோழர் துராப்ஷா குறிப்பிட்ட கட்டுரையை எழதவில்லை, அவரது ஃபேஸ்புக் ஐடிக்கு வந்திருக்கிறது என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் தன்னை ஒரு பொதுவுடமையாளராக அறிவித்துக் கொண்டு வாழ்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இசுலாமிய மதவாதிகள் ஆட்சியிலிருந்தால் அவர் கடைய நல்லூரில் கல்லால் அடித்தே கொல்லப்பட்டிருப்பார். அந்த வகையில் இசுலாத்தின் ஆட்சியை நேற்றும்-இன்றும்-நாளையும் கொண்டு வராமல் இருப்பதன் மூலம் பல கோடி இசுலாமிய மக்கள் கொல்லப்படாமல் இருப்பதற்காக நாம் ‘அல்லா’விற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இசுலாத்தில் இருந்து கொண்டு எல்லா பாவச்செயல்களையும் ஆதிக்கம், அதிகாரம் காரணமாக செய்யும் எவரையும் இவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன், நேர்மையுடன் பாடுபடுவேன், அதற்காக பொதுவுடமைக் கொள்கையை ஏற்கிறேன் என்று ஒருவர் அறிவித்தால் இவர்கள் கொலைவெறி அடைகிறார்கள்.

அந்த வகையில் உழைக்கும் இசுலாமிய மக்களின் எதிரிகள் எவரையும் இவர்கள் தமது சுண்டு விரலைக்கூட நீட்டி எதிர்த்ததில்லை. லாட்டரிச் சீட்டு புகழ் ஹாருணா, ஈராக்கையும், ஈரானையும் பிணக்காடாக்குவேன் என்று எக்காளமிடும் அமெரிக்காவின் பாதந்தாங்கிகளான சவுதி அரசு ஷேக்குகளா, இவர்களெல்லாம் இசுலாத்தின் பாதுகாவலர்கள் என்று போற்றுவார்கள். ஆனால் ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பேன் என்று போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டை அவன் பிறப்பால் இசுலாமியராக இருக்கும் ஒரே காரணத்தால் ஒழிக்க முனைவார்கள்.

இசுலாமிய நண்பர்கள் உள்ளிட்டு அனைவரும் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதோடு தத்தமது நட்பு வட்டாரத்தில் இதை தெரிவித்து தோழர் துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய மத பிற்போக்குத்தனங்களிலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு உங்களது வெளிப்படையான ஆதரவு அவசியம் என்பதை இங்கே உரிமையுடன் கோருகிறோம்.

– வினவு செய்தியாளர்.

 1. இசுலாமிய நண்பர்கள் உள்ளிட்டு அனைவரும் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதோடு தத்தமது நட்பு வட்டாரத்தில் இதை தெரிவித்து தோழர் துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும்//

 2. வினவின் தைரியத்தை மெச்சுறோம். அம்பிகள் என்றால் தானே கோதாவில் குதிப்பீங்க அல்லது வினவின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் – முஸ்லீம்களை இடித்து ஒரு பதிவு போட்டு தான் ஆகணும் என்கிற கட்டாயத்தில் வினவால் போடப்பட்ட பதிவா? ஏற்கனவே கவிஞர் ரசூல் என்பவர் – இதே மாதிரி ஒரு அடக்குமுறையை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். வினவுக்கு தெரியுமா அல்லது எதுக்கு வம்புன்னு கண்டுக்கலயா?

 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  விசயம் நடந்து பல நாட்களுக்கு பிறகு எழுதி இருக்கீங்க. என்னவோ அது உங்க பிரச்சனை. கடையநல்லூர் தளத்தில் இது குறித்து வந்த செய்திகளை இங்கே பதிக்கின்றேன்.

  மக்கட்டி துராப்ஷா மன்னிப்புகேட்டு இஸ்லாத்தை ஏற்று கொண்டார்

  http://kadayanallur.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/

  நன்றி.

 4. தங்களின் இந்தப் பதிவிற்குக் குற்றம் சாட்டப் பட்டவர்களின் பதில் தெரிந்தால், மற்றவர்கள் தங்கள் கருத்தைச் சொல்வது எளிதாக இருக்கும்.
  இதில் மாற்று மதத்தவர்கள் தலையிடுவதைக் காட்டிலும்[அதனால் விபரீத விளைவுகள் நேரலாம்],இசுலாமிய நண்பர்களே சம்பந்தப் பட்டவர்களைச் சந்தித்து, யதார்த்தத்தைப் புரிய வைப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
  எனக்குத் தொல்லை நேரும் என்ற அச்சத்தால் இதைச் சொல்லவில்லை.
  அவர்களும் மனிதர்கள்தான்.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

 5. ///இது தான் தோழர் துராப்ஷாவுக்கு எதிரான வெள்ளிக்கிழமை அறிவிப்புக்கு அடிப்படையான காரணம். இதைத்தான் இஸ்லாம், ஹராம், ஹலால் என்று திசை திருப்பி மக்களை வெறியேற்றி விட்டிருக்கிறார்கள்.///

  அடடா…

  வினவு குழுமத்துக்கு என்ன பிரச்சனை என்றால், இவர்கள் ஏற்படுத்த இணைத்த குழப்பம் முளையிலேயே கில்லி எறியப்பட்டுள்ளதே என்பது தான் போல.

  //துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய மத பிற்போக்குத்தனங்களிலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு உங்களது வெளிப்படையான ஆதரவு அவசியம் என்பதை இங்கே உரிமையுடன் கோருகிறோம்.//

  ?????????????

  பிரச்சனை தான் முடிஞ்சிருச்சே…அப்புறம் என்ன….ஒ திரும்ப முதல்லேந்து ட்ரை பண்ணுறீங்களா…

  அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டவிட்டான். தவிரவும் திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன் – குர்ஆன்.

  • ஹலோ ஆஷிக்,

   நடந்தது சரியா தப்பா? அது குறித்த உங்கள் கருத்து என்ன? நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அதைச் சொல்லுங்கள்.

  • //அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டவிட்டான். தவிரவும் திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன் – குர்ஆன்.//

   அட அட என்ன ஒரு விளக்கம். சரிங்க ஆசிக் பாய், ஒருக்கால் தனது குடும்ப நலன் கருதி அவர் பொய்யாக மன்னிப்புக் கேட்டிருந்தார் என்றால் இந்த திட்டமிடுதலில் யார் வென்றார்கள் சொல்லுங்களேன் பார்ப்போம்.

   அப்பொழுதும் நீங்கள் என்ன சொல்வீர்கள் தெரியுமா! மறைவானவற்றையும் அறிவான் அந்த மறையாளன். அவருடைய உள்ளத்திற்குண்டான தண்டனை மறையாக உள்ள மறுமையில் கிடைக்கும் என்பதுதானே! இறுதியில் வேதாளம் முறுங்கை மரம் ஏறுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது

   • அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டவிட்டான். தவிரவும் திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன் – குர்ஆன்.
    ////////

    இவ்ளோ ஆனப்புறம் இந்த திட்டதுத்து என்ன மரியாதைன்னேன், அல்லா அவ்ளோ பெரிய அப்பாடக்கர் என்றால் லூர்த் என்கிற லூஸ் கட்டுரையை எழுதுவதர்கு முன்னாலேயே அந்த திட்டத்தை முறியடித்திருக்க வேணாமா?

    உங்கள் ஞான குரு பீஜேவால் பிராடு என்று கிழித்து தோரணமாக தொங்கவிடப்பட்ட சைபுல்லா ஹாஜா தனது கிரிமினல் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடிந்தது? எப்படி இன்னும் அவர் அல்லாவின் பெயரால் நாட்டாமை செய்வதற்கு எதிராக அல்லாவால் திட்டமிட்டு முறியடிக்கமுடியவில்லை?

    இறுதியில் துராப்ஷாவின் மனைவி மூலமாக தற்கொலை மிரட்டல் நிர்பந்தம்தான் அல்லா போட்ட எபெக்டிவான திட்டம் போல. நல்ல திட்டம்தான் ஆனா கேட்கத்தான் கேவலமா இருக்கு

 6. என்னடா இவ்வளவு நாளா இதப்பத்தி பதிவு எதையும் காணோமேன்னு நெனச்சுட்டிருந்தேன். இதோ வந்துடுச்சு. ஆனா சகோ. ஆஷிக் சொன்ன மாதிரி ஏற்கனவே முடிஞ்சுபோன சங்கதியை ஏன் மறுபடியும் கிளர்றீங்க? துராப்ஷாவே மனம் திருந்திய மைந்தனா ஆயிட்டாரு. அவரே வேணாம்னாலும் நீங்க விடமாட்டீங்க போலிருக்கே!

  // இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.// அப்படின்னு தலைப்புலேயே தீர்ப்பு சொல்லிட்டிங்க. இருந்தாலும் நாங்க சொல்றதை சொல்லித்தானே ஆவணும்?

  //கடவுள் நம்பிக்கையற்றவராக, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்தாலும் சமுதாயத்தினருக்கு உதவிகள் செய்வதிலும், துணை நிற்பதிலும் துடிப்பாக செயல்படுபவர். சிபிஐ-யில் இருக்கும் போதுகூட கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நிர்வாகக் குழுவில் நேர்மையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். //

  துராப்ஷா ஒரு அப்பாவி; ஏதோ தானுண்டு தன் கோழிக்கடை உண்டுன்னு ‘பொதுச்சேவை’ பண்ணிட்டிருந்தவரை மசூதிக்கு கடத்திட்டுப்போய் மதவெறி புடிச்ச பயபுள்ளைங்க அடிச்சு நொறுக்கிட்டாங்க என்கிற மாதிரி நல்லாவே பில்ட்அப் கொடுத்திருக்கீங்க. ஆனால் கடையநல்லூரிலிருந்து ஏற்கனவே வந்த தகவல்களை வைத்துப் பார்த்தால் இது ஓவர் பில்ட்அப் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

  துராப்ஷா கடவுள் நம்பிக்கையற்றவராக இருக்கட்டும். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராகவும் இருக்கட்டும். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கருத்துச் சுதந்திரம் கத்திரிக்காய் சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் உளற ஆரம்பித்தால், அல்லது யாரோ வாந்தி எடுத்ததை தானும் உண்டு மறுவாந்தி எடுத்தால் அதனால் நேரும் பின்விளைவுகளுக்கும் அவரேதான் பொறுப்பாளி. எல்லோரும் உங்களையும் எங்களையும் போல சாந்த சொரூபியா இருப்பாங்களா? துராப்ஷா போன்ற லூஸ்கள் கொஞ்சம் பேர் உலவிக் கொண்டிருக்கும்போது அவர்களை ஆக்ரோஷமாக தட்டிக் கேட்கவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ‘நான் என்ன வேணாலும் சொல்வேன். நீங்க யாரும் என்னை எதுவும் கேட்கக்கூடாது’ன்னு துராப்ஷா சொல்ல முடியாது இல்லீங்களா?

  அதுக்காக, துராப்ஷாவை சிலர் தாக்கியதை நான் நியாயப்படுத்துவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தலைப்புலேயே வேற போட்டுட்டீங்க.. அப்படி யாரும் செஞ்சா அவங்க மனித ஜாதியே இல்லேன்னு. துராப்ஷா செய்தது முட்டாள்தனம். அவரை சிலர் தாக்கியதும் கண்டிக்கத்தக்கது என்பதுதான் என் நிலைப்பாடு.

  ஆனா, எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலேங்க. துராப்ஷா கடவுள் நம்பிக்கையற்றவர் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்களும் சொல்கிறீர்கள். அதையே ஒரு தாளில் எழுதி அரசு காஜி கையெழுத்துப் போட்டு கொடுத்தால் என்ன பிரச்னை வந்து விட்டது அவருக்கு? காஃபிர் என்றதும் எதோ கெட்ட வார்த்தை என்று நினைத்து விட்டீர்களா? ‘இறை மறுப்பாளர்’ என்பதுதான் அதன் பொருள். துராப்ஷா வாயால் சொல்லிக் கொண்டிருந்ததை, செயல்களால் வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைத்தான் ஜமாஅத் எழுத்தில் கொடுத்திருக்கிறார்கள். அதை அவர் தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்குக் கிடைத்த சான்றிதழ் என பெருமையாக ஃப்ரேம் பண்ணி தனது கோழிக்கடையில் மாட்டி வைத்திருக்கலாமே! என்ன நாஞ்சொல்றது?

  ஓ.. இப்போ புரியுது.. அவர் மன்னிப்புக் கேட்டு தன்னை மீண்டும் ஒரு முஸ்லிம் என ஊரறிய அறிவித்துக் கொண்டது உங்களுக்கு எங்கோ வலியை ஏற்படுத்தியிருக்கிறது போலும். இதான் மேட்டர்னா, சொல்றதை நேரா தெளிவா சொல்லுங்க சார். எதுக்கு சுத்தி வளைச்சுக்கிட்டு?

  • அடடா துராப்ஷா மன்னிப்பு கேட்ட கதை தெரியுமோ, கேளுங்க பாய்,
   கறிக்கடை பாய் அவர் தான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விடவே, ஜமாத்தில் ஊர்விலக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப்பார்த்தார்கள் மசியவில்லை, அடித்து பார்த்தார்கள் மசியவில்லை, இறுதியில் அவர் மனைவியை நிர்பந்தப்படுத்தி அவர் தனது மூன்று மாதமே ஆன குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவே அதன் பின்னரே துராப்ஷா மன்னிப்பு கேட்ட செய்தி வெளி வந்தது.,

   இப்படி குற்றவாளியை அடித்து உதைத்து மிரட்டி, அவர் குடும்பத்தினரையும் நிர்பந்தப்படுத்தி மன்னிப்பு கேட்டு வாங்கும் ஜமாத்தாரின் வீரத்தை நினைத்து நினைத்து மெய்சிலிர்த்து போகிறேன்.

   • அட என்னங்க சார் உங்க கறிக்கடைத் தோழர் இப்படி இருக்காரு? இத்தனை நாளா அவரோட கொள்கையை அவர் மனைவிகூட ஏத்துக்காமத்தான் இருந்திருக்காங்களா? நமக்கு நம்ம கொள்கைதான் பெருசுன்னு துணிஞ்சு நின்னுருக்க வேணாமா? நீங்களாவது எடுத்துச் சொல்லியிருக்கலாமே. அப்படி அவர் எதற்கும் மசியாமல் கொள்கைக்குன்றாக நின்றிருந்தால் என்னவாகும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் அவரது கோழிக்கடையில் வியாபாரம் குறைந்து போயிருக்கலாம். கொள்கை பெருசா? பணம் பெருசா?

    • கொள்கை பெருசா? பணம் பெருசா?
     /////////

     இந்த கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்லனும், ஆன்லைன் பீஜேவால் மோசடிப்பேர்வழி என்று காறி உமிழப்பட்ட சைபுல்லா ஹாஜா வை இன்னும் மதகுருமாரா நீடிக்க குரான்ல எதாவது ஹதீஸ் இருக்கா? அந்த கொள்கைப்படிதான் அவர் இன்னும் அங்க வெள்ளையும் சொள்ளையுமா இருக்காரா? இல்ல பணம் பெருசுன்னு இஸ்லாமிய மதவாதிகள் அவரை கண்டுக்காம விட்டிருக்காங்களா 😉

     கம்யூனிஸ்டுகளை பெறுத்தவரை ஜனநாயகவாதிகள்தான், கொள்கைகளை யார்மேலையும் தினிப்பது இல்லை, எருமைக்கு பிறந்தால் எறுமை என்பது போலத்தான் இந்துவுக்கு பிறந்தால் இந்து, முஸ்லீமுக்கு பிறந்தால் முஸ்லீம், கிறுத்தவனுக்கு பிறந்தால் கிறுத்தவன் போன்ற நிலை கம்யூனிசத்துக்கு இல்லை, அவர் அவர் சுய விருப்பத்தின் பெயரில் ஏற்றால்தான் அதன் பெயர் கொள்கை . நிற்க

     ஒரு முஸ்லீம் சமூகத்தில் பிறந்தவன் கம்யூனிச கொள்கையை ஏற்று, இஸ்லாமிய கொள்கையை மறுத்தால் அவனையும் அவன் குடும்பத்தையும் ஊர்விலக்கம் செய்யவோ அவனது பொருளாதாரத்தை முடக்கவோ உங்களகுக்கு என்ன உரிமை இருக்கிறது???

     முடிந்தால் உங்கள் பிஜேவாலேயே மோசடிப்பேர்வழி என்று போற்றப்பட்ட சைபுல்லா ஹாஜாவை ஊர்விலக்கம் செய்து பார்க்க வேண்டியதுதானே, அதை செய்யமாட்டீங்க ஏன்னா கரிமினலா இருந்தாலும் முஸ்லீம் கிரிமினலா இருந்தா உங்களுக்கு ஓகே,, அதானே???

     • இந்தப் பிரச்னையை ஏன் துராப்ஷா, சைபுல்லா ஹாஜா என்ற இரு தனி மனிதர்களின் பிரச்னையாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. அந்தக் கட்டுரையை துராப்ஷா எழுதவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். ஆனால் தஜ்ஜால் என்ற எவனோ ஒரு பொறம்போக்கு எழுதியதை துராப்ஷா தன் பேஸ்புக்கில் இணைத்தது தவறு என்று ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா உங்களிடம்? தனக்கு வேண்டியவர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மாபெரும் அயோக்கியத்தனம். அது துராப்ஷாவாக இருந்தாலும் சைபுல்லாவாக இருந்தாலும் இதுதான் என் நிலை.

      துராப்ஷா செய்த தவற்றை நியாயப்படுத்திப் பேசும் நீங்கள், அவரைத் தாக்கியவர்களை யாராவது நியாயப் படுத்தினால் அவர்கள் மனிதர்களே அல்ல என்கிறீர்கள். என்ன சார் நியாயம் இது?

      • நீங்க கேட்ட கேள்விக்குத்தானே நான் பதில் சொல்லியிருக்கேன் மரைக்காயர், நான் முன்வைத்தை கேள்வியை நீங்கள் சாய்சில் விட்டுவிட்டாலும், மறுபடியும் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன்,

       இஸ்லாமை விமரிசித்த கட்டுரையை ஷேர் செய்தது தவறு என்றால் அது தவறு என்று விவாதிக்கலாம், அந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதலாம், கூட்டம் போட்டு அந்த கட்டுரையில் உள்ள பிரச்சனையை பகிரங்கமாக சாடலாம், அந்த கட்டுரையை எழுதியவரை கண்டுபிடித்து அவர் வீட்டுக்கே போய் தம்பி நீங்க எதனால இப்படி எழுதினீங்கன்னு விளக்கம் கேட்கலாம், அதை விட்டுவிட்டு அதை பேஸ்புக்கில் ஷேர் செய்த காரணத்தினால் அவருக்கும் அவர் மனைவிக்கும் மண உறவை முறிக்க வெட்கமாக இல்லையா?

       மீண்டும் என் கேள்விக்கே வருகிறேன், உங்கள் பிஜே வாலேயே கிரிமினல் என்று அழைக்கப்பட்ட ஹாஜா இன்னமும் அங்கே மதகுருமாராய் வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றி வருவது எப்படி? அவரை விட பேஸ்புக்கில் ஷேர் செய்த துராப்ஷா எப்படி பெரிய குற்றவாளியானார்? உங்க இறைவனை ஏற்று கிரிமினல் தனம் பண்ணுபவன் அயோக்கியனா இல்லை உங்கள் இறைவனை ஏற்காமல் அதே நேரத்தில் நேர்மையாக ஒரு தொழில் செய்து வாழ்பவன் அயோக்கியனா??

       • உங்கள் கேள்வியை நான் சாய்ஸில் விடவில்லை சார். நீங்கள்தான் நான் கேட்ட கேள்வியை திருப்பி என்னிடமே கேட்டுவிட்டு எஸ்கேப்பாகியிருக்கிறீர்கள்.

        //இஸ்லாமை விமரிசித்த கட்டுரையை ஷேர் செய்தது தவறு என்றால் அது தவறு என்று விவாதிக்கலாம், அந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதலாம், கூட்டம் போட்டு அந்த கட்டுரையில் உள்ள பிரச்சனையை பகிரங்கமாக சாடலாம், அந்த கட்டுரையை எழுதியவரை கண்டுபிடித்து அவர் வீட்டுக்கே போய் தம்பி நீங்க எதனால இப்படி எழுதினீங்கன்னு விளக்கம் கேட்கலாம்,//

        இப்படி எல்லாம் செய்யலாம்தான். ஆனா எல்லோரும் உங்களை மாதிரியே திங்க் பண்ணுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்க முடியாதே? அதனாலத்தான் நான் முன்னமே சொன்னேன்.. துராப்ஷா போன்ற லூஸ்கள் கொஞ்சம் பேர் உலவிக் கொண்டிருக்கும்போது அவர்களை ஆக்ரோஷமாக தட்டிக் கேட்கவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

        //அதை விட்டுவிட்டு அதை பேஸ்புக்கில் ஷேர் செய்த காரணத்தினால் அவருக்கும் அவர் மனைவிக்கும் மண உறவை முறிக்க வெட்கமாக இல்லையா? //

        அவருக்கு இஸ்லாம் வேண்டாம்.. ஆனால் இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமண உறவு மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவது அவருக்கும் அவருடைய கொள்கைக் கூட்டாளிகளுக்கும் வெட்கமாக இல்லையா?

        மீண்டும் சைபுல்லா ஹாஜாவைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள். இது என்னங்க இஸ்கூல் புள்ளைங்க மாதிரி ‘நீ ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை?’ன்னு ஆசிரியர் கேட்டா “அவனும்தான் பண்ணலை”ன்னு பதில் சொல்ற மாதிரி இருக்கு! எனக்கு சைபுல்லா ஹாஜாவைப் பற்றி தெரியாது. அவருக்கும் பிஜேவின் இயக்கத்திற்கும் இடையில் ஏதோ பிரச்னை என்பதால் ஹாஜாவை பிஜே அவருடைய இயக்கத்திலிருந்து நீக்கி விட்டார் என்று நினைக்கிறேன். அதே போல துராப்ஷாவுக்கு இஸ்லாம் ஆகாது என்பதால் அவரை இஸ்லாத்திலிருந்து நீக்கும் முடிவை கடையநல்லூர் ஜமாஅத் எடுத்திருக்கிறது. இதில் என்ன தவறு?

        • ஐ, மறுபடியும் கேள்வியிலிருந்து எஸ்கேப்பாகிட்டீங்க பாய், கிரிமினல் பேர்வழி என்று ஆதினம் பிஜேவாலேயே அடையாளம் காட்டப்பட்டவர் இன்னும் இஸ்லாம் மதத்திலில் நீடிப்பது ஏனோ? பிஜே கூட அவரை இஸ்லாமிலிருந்து வெளியேற்றவில்லையே, அப்போ கிரிமினல்கள் இஸ்லாமில் நீடிக்க ஆதாரமான ஹதீஸ்(கள்)படிதான் இது நடக்கிறதா?

         ஒரு கிரிமினல் பேர்வழி செய்தை விட பேஸ்புக்கில் லிங்க் ஷேர் செய்த துராப்ஷா செய்த தவறு எப்படி பெரியது?
         ஒரு மண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமானாது, அவர் மத்தஃதை நிக்ஹாக் செய்திருந்தால் மதத்தை பின்பற்றக்கூடாது என்று நீங்கள் அறுத்துவிடலாம், ஆனால் அவர் ஒரு பெண்ணையல்லவா நிக்ஹா செய்திருக்கிறார். அப்போ அந்த பெண்ணின் சம்மதத்தை வாங்கித்தான் செய்தீர்களா? அவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது குடும்பத்தாரை இப்படி சித்திரவதை செய்வதுதான் நீதியா? ஒரு தீர்ப்பில் அந்த மூன்று மாத குழந்தையை தந்தையற்றவற்றவராக மாற்றுவதுதான் நீதியா?

         மூன்றுமாத கைகுழந்தையோடு இருக்கும் பெண்ணை காதல் கணவனிடமிருந்து பிறிக்கும் அதிகாரமே உங்கள் கையில் இருக்கும் போது, பிஞ்சு மகளை பெற்ற தந்தையிடமிருந்து பிரிக்கும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது, அப்பேர்பட்ட அகண்ட-விரிந்த அதிகாரத்தை வைத்து ஒரு லிங்கை ஷேர் செய்த சாமான்யனைத்தான் தண்டிக்க முடியுமா? ஏன் அதை வைத்து ஒரு செல்வாக்குள்ள ஹாஜா போன்ற கிரிமினலை தண்டிக்கமுடியவில்லை? தண்டிப்பது இருக்கட்டும், அந்த கிரிமினலே இங்கே நீதி பரிபாலனை செய்யும் கேலிக்கூத்தும் நடக்கிறதே….

         இல்லை, இஸ்லாத்தில் அனைவரும் சமமில்லை அங்கே ஏழைக்கு ஒரு நீதி செல்வாக்குள்ள பணக்காரணுக்கு ஒரு நீதி என்று சொல்லிவிடுங்கள், உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதை நானும் நிறுத்திவிடுகிறேன்

         • //ஏன் அதை வைத்து ஒரு செல்வாக்குள்ள ஹாஜா போன்ற கிரிமினலை தண்டிக்கமுடியவில்லை?//

          என்ன நல்லூரான் உங்களுக்கு இஸ்லாமே வெளங்கல. எப்பேர்பட்ட கிரிமினலாக்க் கூட இருக்கலாம், ஆனால் அல்லாவ இல்லன்னு மட்டும் சொல்லக்கூடாது. இதுதானே 1400 வருட இஸ்லாம். கிரிமினல் ஹாஜாவுக்கு, இந்தியன் பீனல் கோர்ட்டில் அப்பீல் செய்தால்தான் தண்டனை. இல்லன்னா அல்லாவா பாத்து கொடுத்தாத்தான்.

         • //ஐ, மறுபடியும் கேள்வியிலிருந்து எஸ்கேப்பாகிட்டீங்க பாய், கிரிமினல் பேர்வழி என்று ஆதினம் பிஜேவாலேயே அடையாளம் காட்டப்பட்டவர் இன்னும் இஸ்லாம் மதத்திலில் நீடிப்பது ஏனோ? பிஜே கூட அவரை இஸ்லாமிலிருந்து வெளியேற்றவில்லையே, அப்போ கிரிமினல்கள் இஸ்லாமில் நீடிக்க ஆதாரமான ஹதீஸ்(கள்)படிதான் இது நடக்கிறதா? //

          அடடா.. மொதல்ல நான் எழுதியிருக்குற பதிலை படிங்க சார். ரொம்பவே உணர்ச்சிவசப்படுறீங்க போல. சைபுல்லா ஹாஜாவுக்கும் பிஜேவின் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும்தான் பிரச்னை. அதனால அவரை அந்த ஜமாஅத்திலிருந்து நீக்கிட்டாங்க (அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு அந்த விவகாரம் முழுதும் தெரியாது.) ஆனால் சைபுல்லா ஹாஜாவுக்கும் இஸ்லாத்திற்கும் பிரச்னை இல்லை. அவர் இன்னும் தன்னை ஒரு முஸ்லிம் என்பதாகத்தான் வெளிப்படுத்திக் கொள்கிறார். தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்க பிஜேவுக்கோ வேறு யாருக்குமோ அதிகாரம் கிடையாது. நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நயவஞ்சகர்களைக்கூட நபியவர்கள் இஸ்லாத்தை விட்டு விலக்கியதில்லை. இதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு.

          சைபுல்லா ஹாஜா ஒரு கிரிமினல் என்று எழுதியிருக்கிறீர்களே.. அதற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால் கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் வரை ஒரு நடை போய் கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுத்துட்டு வரலாமே? அந்த மாதிரி ஆக்கபூர்வமா செயல்படுறதை விட்டுட்டு இங்கே கூப்பாடு போட்டுட்டிருக்கீங்களே!

          //ஒரு மண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமானாது, அவர் மத்தஃதை நிக்ஹாக் செய்திருந்தால் மதத்தை பின்பற்றக்கூடாது என்று நீங்கள் அறுத்துவிடலாம், ஆனால் அவர் ஒரு பெண்ணையல்லவா நிக்ஹா செய்திருக்கிறார். அப்போ அந்த பெண்ணின் சம்மதத்தை வாங்கித்தான் செய்தீர்களா? அவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது குடும்பத்தாரை இப்படி சித்திரவதை செய்வதுதான் நீதியா? ஒரு தீர்ப்பில் அந்த மூன்று மாத குழந்தையை தந்தையற்றவற்றவராக மாற்றுவதுதான் நீதியா? //

          மேட்டர் என்னன்னே தெரியாமலேயே இந்தப் பேச்சு பேசுறீங்க? ஜமாஅத் தீர்ப்பை கொஞ்சம் படித்துப் பாருங்க சார்..

          //1.இஸ்லாத்திற்கு இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இவர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்.

          2.கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்ய கூடாது.

          3.எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

          4.இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.//

          இவர் திருமணம் செய்தபோது இஸ்லாமிய முறைப்படி செய்திருந்தார் என்றால் ஜமாஅத் தான் அந்த திருமணத்தை நடத்தியிருப்பார்கள். ஜமாஅத்தில் உள்ள பதிவேட்டில்தான் அவரது திருமணம் பதிவு செய்யப் பட்டிருக்கும். இப்போது இவர் இஸ்லாத்திலிருந்து விலகிவிட்டதால் ஜமாஅத்தின் மூலம் இஸ்லாமிய முறைப்படி நடத்தப்பட்ட திருமணம் செல்லாததாகிவிடும். இஸ்லாத்திலிருந்து இவர் விலகியதால் நேரும் பின்விளைவுதான் இது. இதுவே தீர்ப்பல்ல. புரிகிறதா?

          இவரது இஸ்லாமியத் திருமணம் செல்லாததாகி விட்டதால் இரண்டு பேரும் பிரிந்துவிட வேண்டுமென்பதில்லை. அரசாங்க திருமணப் பதிவு அலுவலகத்திலோ அல்லது அவருக்கு பிடித்த வேறு எதோ ஒரு இடத்தில் முஸ்லிம் அல்லாதவர்களாக தன் திருமணத்தை மீண்டும் பதிவு செய்து கொண்டு அவர்கள் தம்பதிகளாகவே தொடர்ந்து வாழலாமே? இதில் என்ன பிரச்னை?

          • முஸ்லிம் அல்லாதவர்களாக தன் திருமணத்தை மீண்டும் பதிவு செய்து கொண்டு அவர்கள் தம்பதிகளாகவே தொடர்ந்து வாழலாமே? இதில் என்ன பிரச்னை?////

           அதான் ஏன்னு கேட்கிறேன், அவர் மனைவி எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை, தோழர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை அப்படியிருந்தும், மத நம்பிக்கை உள்ள அப்பெண்ணை எதற்காக மதத்திலிருந்து நீக்க வேண்டும்? தோழருக்கு வழங்கப்பட்ட தண்டணையே பிழையானது, அவர் மீதான குற்றமே நிரூபிக்க படவில்லை, இதில் தொடர்பே இல்லாத அவர் மனைவிக்கும் அப்பிஞ்சு குழந்தைக்கும் தண்டனையா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

           சைபுல்லா ஹாஜா ஒரு கிரிமினல் என்று எழுதியிருக்கிறீர்களே.////

           நான் எழுதவில்லை ஐயா, பிஜே வரிசையாக அவர் மோசடிகளை எழுதியிருக்கிறார்
           http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/

           அதற்கு மட்டும் ஏன் சட்டத்திடம் போகச்சொல்கிறீர்கள்? அப்போ மதத்தின் பெயராலேயே வசூல் மோசடி செய்த ஹாஜா போன்ற கிரிமினல்கள் அல்லாவை நம்பினால் அவருக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு, நீதிபதி பதவியும் உண்டு (அதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் குரானில் உண்டா?) அல்லாவின் பெயரால் மோசடி செய்பவனுக்கு எப்படி அல்லா மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம் ;)))

           சுருங்கக்கூறின் எளியவர்களுக்கு குடும்பத்தோடு தண்டனை – வலியவர்களுக்கு ராஜ மரியாதை — இதுதானா உங்க சமத்துவ டக்கு ;)))

          • கம்யூனிசம் என்பது மக்களால் மக்களின் அறிவுடன் மக்களுக்காக இன்றும் மக்களிடையே செயல்படும் ஒரு அறிவியல். இந்த கம்யூனிசம் பற்றி எதிர் குறல் கொடுப்பவர்களுக்கோ, இல்லை அதை புரிந்து கொள்ளாதவர்களுக்கோ அதனை விளக்க வேண்டிய, தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் மக்களுக்கே உண்டு. ஆனால் இஸ்லாம் என்பது கடவுளால் அருளப்பட்டது, இன்றுவரை கடவுளால் வழிநடத்தவும்படுகிறது என்று நம்பப்படும் ஒன்று. இதற்கு கடவுள்தானே விளக்கமும், தெளிவும் தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் ஒன்று கடவுள் இல்லை என்று இவர்கள் கூறுகிறார்களா இல்லை இவர்கள்தான் கடவுள் என்கிறார்களா. கடவுளே எல்லாம் படைத்தான் என்றால் தனக்கு எதிரானவனுக்கு என்ன செய்ய வேண்டும் கடவுளுக்கு தெரியாதா. ஏன் இதற்கு முன் கடலை பிளக்க வில்லையா, சுனாமி ஏற்படுத்தவில்லையா. அப்படியென்றால் அதெல்லாம் கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வார்களா. அல்லா தவறு செய்தால் மன்னித்து ஏற்றும் கொள்வார் ஆனால் அல்லாவுக்கு எதிரான நல்லவனை நல்லவன் என்று நிரூபிக்கப்பட்டவனைகூட கொலை செய்து விட வேண்டும் என்பது உங்கள் நியாயம்.

        • இங்கே நடந்திருப்பது தோழர் துராப்ஷா முகநூலில் ஒரு கட்டுரையை வைத்திருந்ததோ அதற்கான எதிர்வினையோ அல்ல. அதை முகாந்திரமாக வைத்து செய்யப்பட்டிருக்கும் அரசியல் பழிவாங்கல். எனவே முதன்மையான வினையாக இருக்கும் சைபுல்லா ஹாஜாவை விட்டு விட்டு இதை தனித்த விவகாரமாக பார்க்க முடியாது. கடையநல்லூரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாத்திகர்களை காட்ட முடியும். கால்நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாத்தை விமர்சித்து பேசியும், மேடையில் முழங்கியும் வருவர்கள் கடையநல்லூரில் இல்லையா? என்றால் தோழரின் மீது மட்டும் இந்த கொலைவெறி ஏன்?

         நடந்திருப்பது அப்பட்டமான ரவுடித்தனம். அது மதப் போர்வையில் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. மதப்பார்வையில் நியாயப்படுத்தப் படுகிறது. இது போன்ற கொடூரம் இனி யாருக்கும் எங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது. அதற்கு உங்கள் பங்களிப்பு என்ன? அதைத்தான் இந்த பதிவு கோருகிறது.

         • நடந்திருப்பது அப்பட்டமான ரவுடித்தனம். அது மதப் போர்வையில் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. மதப்பார்வையில் நியாயப்படுத்தப் படுகிறது.//////

          நண்பரே நல்லூர் முழக்கம்., மரைக்காயரும் நியாயப்படுத்திகிட்டுதான் இருக்கார், அதுதான் அவரோட பங்களிப்பு!

        • //ஆனா எல்லோரும் உங்களை மாதிரியே திங்க் பண்ணுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்க முடியாதே? அதனாலத்தான் நான் முன்னமே சொன்னேன்.. துராப்ஷா போன்ற லூஸ்கள் கொஞ்சம் பேர் உலவிக் கொண்டிருக்கும்போது அவர்களை ஆக்ரோஷமாக தட்டிக் கேட்கவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.//

         மோடி போன்ற லூசு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்ற போதும் நீங்களா இப்படித்தான் சொல்வீர்களா?

         வன்முறை உங்கள் பக்கம் ஈறிருக்கும் போது அதற்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.

         //இது பலம் இருக்கிறது என்பதால் வெளிப்படும் திமிர்த்தனம் தானேயன்றி வேறொன்றுமில்லை//

         • துராப்ஷாவை லூஸ் என்று நான் சொன்னதால உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதோ? முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் கிருஸ்துவர்கள், யூதர்களின் மதிப்பிற்கும் உரிய ஒரு இறைத்தூதரைப் பற்றி துராப்ஷா தரக்குறைவாக எழுதியபோது முஸ்லிம்களுக்கு உங்களைவிட அதிகமாகவே கோபம் வருவது இயற்கைதானே?

          • மறுபடியும் கேள்வியிலிருந்து எஸ்கேப்பு… அவர் நேரடியாக கேட்கிறார், இந்து மதவெறி பயங்கரவாதி மோடிக்கும் உங்கள் நியாயம் பொருந்துமா? அதுக்கு பதில் சொல்லுங்கள்!

     • அடடா துராப்ஷா மன்னிப்பு கேட்ட கதை தெரியுமோ, கேளுங்க பாய்,
      கறிக்கடை பாய் அவர் தான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விடவே, ஜமாத்தில் ஊர்விலக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப்பார்த்தார்கள் மசியவில்லை, அடித்து பார்த்தார்கள் மசியவில்லை, இறுதியில் அவர் மனைவியை நிர்பந்தப்படுத்தி அவர் தனது மூன்று மாதமே ஆன குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவே அதன் பின்னரே துராப்ஷா மன்னிப்பு கேட்ட செய்தி வெளி வந்தது.,

      இப்படி குற்றவாளியை அடித்து உதைத்து மிரட்டி, அவர் குடும்பத்தினரையும் நிர்பந்தப்படுத்தி மன்னிப்பு கேட்டு வாங்கும் ஜமாத்தாரின் வீரத்தை நினைத்து நினைத்து மெய்சிலிர்த்து போகிறேன்.////

      நான் கேட்டது இதுக்கு

      • முஸ்லிம், கீழே ஜமா அத்தின் தீர்ப்பின் விவரம் இருக்கு படிச்சுக்கங்க,

       ///இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.////

       ஆதாரம் கொடுத்தாச்சு., இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்க?

       • இறுதியில் அவர் மனைவியை நிர்பந்தப்படுத்தி அவர் தனது மூன்று மாதமே ஆன குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவே ///

        கடைசியா தெளிவா கேட்குறேன்.புரிஞ்சுக்கோங்க.நான் நான் கேட்டது இதுக்கு.
        இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்-னு எனக்கே தெரியும்.ஜமாஅத்த்தார் அப்படி அவர மிரட்டி மன்னிப்பு எழுதி வாங்கி மீண்டும் இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தி இணைத்திருந்தால் காவல்துறையில் புகார் செய்யலாமே.

        • ஓ, அப்ப மண உறவு முறிந்துவிடும்னு உங்களுக்கு தெரிஞ்சா அதனால அது சரியாகிவிடுமா? இதெல்லாம் குடும்பத்தை மிரட்டுவதில் சேத்தியில்லையா? ரொம்ப நியாயஸ்தனா இருப்பீங்க போலிருக்கே? பலே பலே!!

  • “ஓ.. இப்போ புரியுது.. அவர் மன்னிப்புக் கேட்டு தன்னை மீண்டும் ஒரு முஸ்லிம் என ஊரறிய அறிவித்துக் கொண்டது உங்களுக்கு எங்கோ வலியை ஏற்படுத்தியிருக்கிறது போலும். இதான் மேட்டர்னா, சொல்றதை நேரா தெளிவா சொல்லுங்க சார். எதுக்கு சுத்தி வளைச்சுக்கிட்டு?”
   இதுதான் உண்மை

 7. கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…

  கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப்ஷா என்பவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இஸ்லாத்தையும்,நபிமார்கள் பற்றியும் அவதூர் செய்திகள் வெளியிட்டதன் விளைவாக கடையநல்லூர் வாழ் இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளானதை தொடர்ந்து.

  இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தையும்,இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை ஏளனம் செய்யும் வகையில் நடந்து வரும் மக்கட்டி துராப்ஷா என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(31.01.2012) காலை பரசுராமபுரம் ஜும்மா பள்ளியில் வைத்து கடையநல்லூர் ஜமாத்துல் உலமா மற்றும் பரசுராமபுரம் பள்ளி ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷா -வை விசாரணைக்கு அழைத்தனர்.

  சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு குரல் எழும்பியதை தொடர்ந்து,ஜமாத்தார்கள் தீர்ப்பை வாசித்தனர்.

  1.இஸ்லாத்திற்கு இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இவர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்.

  2.கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்ய கூடாது.

  3.எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

  4.இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.

  இவ்வாறு ஜமாத்தார்கள் கூடி அறிவித்தனர்.இந்த தீர்ப்பை மக்கட்டி துராப்ஷாவிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்து வாங்கி கொள்ளபட்டது.

  இந்த கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷாவின் சார்பில் வந்திருந்த சிலரும் அவரை தண்டிக்க வேண்டுமென்றே முறையிட்டனர்.

  இதனை தொடர்ந்து பரசுராபுரம் பள்ளியின் உள்ளேயும்,வெளியிலும் இளஞ்சர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருக்க போலீசாருக்கு தகவல் தெருவிக்கபட்டு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  ————————————

  மூலம் – http://kadayanallur.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/

  • கோழைகள் நடத்தும் கடையநல்லூர் தளத்தின் மோசடி பாரீர்… இந்த சுட்டியை இங்கே போட்டவுடன் அங்கே இருந்த அனைத்து பேஸ்புக் கமெண்ட்சையும் நீக்கிவிட்டனர்.. அதனால் என்ன அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கேன் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன், துராப் ஷாவை கொன்று போடவேண்டும் என்று எழுதியிருந்த கமென்ட்ஸெல்லாம் பத்திரமாகத்தான் இருக்கின்றன. இத்தனை நாளாய் அதற்கு உடன்பட்டு போட்டு வைத்திருந்து, இன்று வினவில் வெளிவந்த வுடன் பயந்து போய் நீக்கிவிட்டால் மட்டும் அது இல்லை என்று ஆகிவிடாது….

 8. மத மூட நம்பிக்கைகளைப் பற்றி விமர்சனம் செய்தால் மதவாதிகள் அதற்கு பதில் கூறவதில்லை. இறைவனை விமர்சனம் செய்யக்கூடாது, சாமி கண்ணைக் குத்திவிடும் என்று கூறுவார்கள். இல்லையென்றால் வன்முறையில் இறங்கி விடுவார்கள். இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.

  மேலும் மதத்தை விமர்சனம் செய்தால், இவர்களது மனம் புண்பட்டுவிடுமாம். இஸ்லாத்தில் பெயரால் உலகெங்கிலும் இஸ்லாமியப் பெண்கள் கொடூரமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் போதெல்லாம் புண்படாத மனம், இஸ்லாமிய மதத்தில் உள்ள மூடத்தனங்களையும்,இஸ்லாமிய மதவாதிகளின் அயோக்கியத்தனங்களையும் விமர்சித்தால் மட்டும் புண்படுகிறதா?

  இப்படி மதவாதிகள் தங்களின் நலனுக்கு ஏற்றவாறு மக்களை வன்முறையில் ஈடுபடுத்த முடிவதற்குக் காரணம் மக்களின் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் மத மூட நம்பிக்கைகள் தான். அவ்ற்றை வெல்வதன் மூலமே உழைக்கும் மக்களை ஒரு வர்க்கமாகத் திரட்ட முடியும்.

  அதை வினவு அருமையாகவே செய்து கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

 9. ஏம்பா இன்னும் ஹைதர் அண்ணனை காணோம்? ஒருவேளை காபிர் வினவை ஆதரிச்சு ஒண்ணு ரெண்டு கமெண்டு போட்ட காரணத்தினால் அவரை காபிரா அறிவிச்சு பத்வா கொடுத்திட்டாங்களோன்னு பதைபதைக்குது, அண்ணே நல்லாருக்கீங்களா?

 10. ஜோக்தாவூத், ஆள்மாறாட்டப்புகழ் நெத்தியடி மொகம்மது, மைக் டெஸ்டிங் ஜாஜகான் இவங்கெல்லாம் வினவு பக்கம் வற்றதில்லை, இருந்தாலும் அண்ணே வாங்கண்ணேன்னு எதுக்கும் கூப்பிட்டு வைப்போம்.

 11. ஒரு இந்துவோ, கிருத்தவனோ, பௌத்தனோ, பார்சியோ தங்களின் மதங்கள் சரி இல்லை என்று கூறி இஸ்லாமினாக மாறினால் கட்டித் தழுவி அணைத்துக் கொள்வார்களாம். ஆனால் ஒரு இஸ்லாமியன் தனது மதம் சரி இல்லை என்று கூறவோ அல்லது மதம் மாறவோ முயன்றால் வெட்டுவார்களாம். ‘மனித நேயம்’ பேசும் இவர்களின் ‘சகோதரத்துவம்’ நல்லா இருக்கு!

  இறைவனை விமர்சித்தால் இறைவன்தானே தண்டிக்க வேண்டும். இந்த அற்ப மனிதர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அப்படி இறைவன் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிடட்டும். அப்பொழுது தெரியும் இறைவன் மனித நேயம் கொண்டவனா அல்லது கொலைபாதகனா என்பது?

  இஸ்லாத்தை விமர்சிக்க உரிமை இல்லை என்று பேசும் இவர்கள் மட்டும் பிற மதங்களை விமர்சிக்கலாமா?

  மதம் என்பது தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை சார்ந்த ஒன்று. தனது துன்ப துயரங்களுக்கு விடிவு கிடைக்காதா என ஏங்கும் மனிதன் தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதால்தான் வரலாறு நெடுகிலும் மதமாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போதைய மதங்கள் ஒருவனுக்கு பயனளிக்கவில்லை எனக் கருதினால் வேறு ஒரு மதத்தை தழுவவோ அல்லது மத நம்பிக்கை இல்லாமல் வாழவோ அவனுக்கு உரிமை உண்டு. இந்த உரிமை இருந்ததால்தான் இந்தியாவில் பலர் இஸ்லாமுக்கு மாற முடிந்தது. அதே போல இஸ்லாம் உட்பட இன்று இருக்கிற மதங்கள் நாளை இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

  கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணியற்றவர்களே வன்முறையை கையிலெடுப்பார்கள். அதைத்தான் கடையநல்லூர் நிகழ்ச்சி உணர்த்துகிறது.

 12. மனிதாபிமானி தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவருமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன்.

  யப்பா அப்பா டக்கருகளா!

  ஏன் எங்களை மறைத்துக் கொண்டு எழுதுகிறோம்? முகம் தெரிஞ்சா கடித்து குதறக் காத்திருக்கிற மிருகங்களுக்கு முன்னால் நாங்கள் மறைந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாங்கள் மறைந்திருக்கிறோம் என்றால் அதன் பொருள் நீங்கள் மிருகங்களாக உலவிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். நீங்கள் மனிதர்களாக மாறுங்கள் நாங்கள் எங்கள் கருத்துகளோடு வருகிறோம்.

  உச்சத்திலிருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதியிருக்கிறோம்? அப்போதே எழுதியிருந்தால் தோழரை கொன்றிருப்பீர்களே நீங்கள். அதனால் தான் தாமதமானாலும் உண்மையை தெளிவிக்க வேண்டும் என்பதால் இப்போது எழுதியிருக்கிறோம்.

  \\துராப்ஷாவின் இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கைகள் அவ்வூர் மக்களால் நன்கு அறியப்பட்டதே// எவ்வளவு காலமாக அறியப்பட்டது கூறமுடியுமா? பலகாலமாக அறிந்தது என்றால் இப்போது திடீரென்று ஏன் இந்த நடவடிக்கை? கடையநல்லூரில் நூற்றுக்கும் மேற்பட்ட (இஸ்லாமிய)நாத்திகர்களை காட்டமுடியும். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லாதபோது தோழருக்கு எதிராக மட்டும் ஏன்? ஏனென்றால் இது மத சாயம் பூசப்பட்ட அப்பட்டமான அரசியல் நடவடிக்கை.

  போட்டி அரசியல் தொழிற்பட்டிருப்பதில் என்ன முட்டாள் தனம் இருக்கிறது? தோழரை பலிகடாவாக ஆக்கி தங்களை முன்னிருத்திக் கொண்டார்கள். ஏன் கடையநல்லூரில் மூன்று பெருநாட்கள் கொண்டாடப்படவில்லையா? ஒரே திடலுக்காக போட்டிபோடவில்லையா? அதே போன்ற போட்டி தான் இதுவும்.

  காஜியின் மன்னித்து சேர்த்துக் கொள்ளப்பட்ட கடிதத்தை வெளியிட்டிருக்கிறீர்களே. முடிந்தால் காஃபிர் என்று பத்வா கொடுத்த கடிதத்தை வெளியிடுங்கள் பார்க்கலாம். இந்தக் கடிதத்திலும் எழுதிய தேதி குறிப்பிடப்படாமல் இருக்கிறது என்பது கண்ணை விரித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். தேதியில்லாத கடிதம் ஏன்? ஏனென்றால் காஃபிர் என்று பத்வா வழங்கப்படவே இல்லை. இருப்பது ஒன்று அதுவும் மன்னித்து சேர்த்துக் கொள்வது குறித்து. இதிலிருந்தே தெரியவில்லையா அங்கு நடந்த களவாணித்தனம்.

  குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரிக்காமலேயே தீர்ப்பு எழுதுவதற்கு நீங்கள் என்ன அல்லாவா?

  தைரியம் இருந்தால் பதில் கூறுங்கள்.

 13. இஸ்லாமை ஏன் விமர்சிக்க கூடாது? முஸ்லிம் ஒருவர் விமர்சித்தால் குடும்பத்தில் இருந்து பிரிபார்களாம்,அவர் கடையில் யாரும் பொருள் வாங்கக் கூடாது என்று ஃபத்வா கொடுபார்களாம்.

  இந்த காட்டு மிராண்டித்தனத்தைற்கு முதலில் கண்டனங்கள்.

  இதற்கு ஆதர்வான காட்டு மிராண்டிகளை அம்பலப்படுத்திய வினவுக்கு பாராட்டுகள்.

  இந்த கொடுமைகளுக்கு பின்புலமாக் இருந்த சைஃபுல்லா ஹாஜா என்பவன் ஒரு போக்கிரி என்றாலும் அவனை ஒன்றும் சொல்ல மாட்டோம் என்னும் மத்வாதிகளின் போக்கு மிக ஆபத்தானது.இபோது ஏதோ அவர்கள் மதத்துக்குள் ஏதோ செய்கிறார்கள் என விட முடியாது.பெரிய சமூக பிரிவினை,வன்முறைக்கே வித்திடும்

  சரி அய்யா லூத் என்ற லூஸ் கட்டுரைக்காவது மறுப்பு எழுதும் அளவிற்கு யாருக்கும் குரான் அறிவு இல்லையா!!!!!!

  அல்லாவே பெரிய சதிகாரன் என்னும் வசனத்தையே கேவலாமாக் இருப்பதால் ,திட்டமிடுகிறான் என்று மாற்றும் கோமாளிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
  “ஸீரா 3: 54 (குர்- ஆன்)
  ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். “

 14. சகோ வினவு,

  கடைய நல்லூர்ல என்ன நடந்திச்சுன்னு தெரியாமலே எல்லாரும் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். உண்மை என்னனுன்னு தெரிய ரொம்ப சிம்பிளான வழி இருக்கு. அந்த துராப்ஷா வந்து என்ன கட்டயபடுத்துனாங்க அதான் அப்படி சொன்னேன், மத்தபடி நான் இஸ்லாமியன் இல்லை என்று அறிவித்து விட சொல்லுங்கள் மேட்டர் ஓவர். அவருடைய முக நூலிலே அறிவிக்க சொல்லுங்கள்.

  அத விட்டுட்டு பொண்டாட்டிய வச்சி மிரட்னாங்க, கடைய வச்சு மிரட்னாங்க என்பதெல்லாம் அழுவுணி ஆட்டம். யார வச்சி மிரட்னா என்னங்க?? கொண்ட கொள்கையில உறுதியா இருக்க வேண்டியது தானே???? நான் முஸ்லிம் இல்லன்னு தானே கையொப்பம் கேட்டார்கள், போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தானே????

  நடந்தது நடந்ததா இருக்கட்டும். இப்பவாவது அறிவிக்க சொல்லுங்க. முடியாவிட்டால் போய் வேலைய பாருங்க.

  • ஏண்ணே இட்லிவடை, அவர் இசுலாத்துல சேத்தியில்லேன்னு பத்வா கொடுத்து குடும்பத்தை பிரிச்சு விட்டு தீர்ப்பும் கொடுத்திட்டு அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மிரட்டல உரட்டலேன்னு வாய்க்கு வந்தபடி பேசுறீங்க. அவர்கிட்ட அடிச்சும் வாங்கமுடியாத மன்னிப்பை அவர் மனைவி குழந்தையை பணையமா வச்சு வாங்கிய கோழைபயல்களை ஆதரிக்கும் இன்னொரு கோழையா நீங்க? வெள்ளக்காரன் கூட திப்பு மகன்களை பணயமா வச்சுத்தான் திப்புவிடமிருந்து பெரும் நிலத்தை மீட்டான், அந்த காபிர் காரன்வாலிஸ் பிரபுக்கும் உங்க கூட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?

 15. சகோ வினவு,

  அவர் மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பதை முஸ்லிம்கள் ஆதரங்களுடன் விளக்கி விட்டார்கள். அவர் மாறவில்லை என்று நீங்கள் கூறினால், அதை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

  http://kadayanallur.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/

  • ஹாஜா ஒரு கிரிமினல் பேர்வழி என்று பிஜே அவர் தளத்தில் ஆதாரபூர்வமாக விளக்கிவிட்டார், ஒரு கிரிமினலா இருந்தாலும், மதத்தை வைத்து மோசடி செய்தாலும், அவன் அல்லாமேல் நம்பிக்கை இருந்தால் போதும் அவனுக்கு இஸ்லாத்தில் தண்டனை கிடையாது பதிலாக இஸ்லாமிய கிரிமினல் என்ற அங்கீகாரமும் கொடுத்து நீதி வழங்கும் பொறுப்பும் கொடுக்கப்படும் என்ற நல்லூரில் நடந்த இந்த நடைமுறைக்கு ஆதாரமான ஹதீஸ்கள் குரானில் இருக்கிறதா என்பதை விவரமரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்லவும்

 16. சகோ நல்லூர் முழக்கம்,

  /* மனிதாபிமானி தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவருமா என்பது தெரியவில்லை. அதனால் இங்கேயும் பதிந்து வைக்கிறேன். */

  நீங்க மனிதாபிமானி தளத்தில் இந்த பின்னூட்டத்த போட்டீங்களா??? அது வரலையா?? ஏன் பிரதர் இப்படி பொய் சொல்றீங்க????? மனிதாபிமானி தளத்தில

  கமெண்ட் மட்டுறுத்தல் இல்லவே இல்லை. அப்புறம் எப்படி வராமல் இருக்கும் ?

  இதிலிருந்தே தெரியுது உங்கள் நேர்மை????? ஹி..ஹி..ஹி…

 17. //முஸ்லிம் அல்லாதவர்களாக தன் திருமணத்தை மீண்டும் பதிவு செய்து கொண்டு அவர்கள் தம்பதிகளாகவே தொடர்ந்து வாழலாமே? இதில் என்ன பிரச்னை?////

  அதான் ஏன்னு கேட்கிறேன்,// அதை நீங்கள் துராப்ஷாவிடம்தான் கேட்க வேண்டும். துராப்ஷாவுக்கு இஸ்லாம் பிடிக்கவில்லை என்பது அவரது முடிவு. அதைத்தான் ஊர் மக்களும் சொன்னார்கள். ‘உங்களுக்கு இஸ்லாம் பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள்’ என்பதுதான் ஜமாஅத்தின் தீர்ப்பு. வேணாங்குறவர் அப்புறம் ஏன் சார் மதத்தை பிடித்துக் கொண்டு தொங்கணும்?

  //அவர் மனைவி எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை, தோழர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை அப்படியிருந்தும், மத நம்பிக்கை உள்ள அப்பெண்ணை எதற்காக மதத்திலிருந்து நீக்க வேண்டும்?//

  என்ன சார் ஆச்சு உங்களுக்கெல்லாம்? விஷயம் என்னங்குறதை புரிஞ்சுட்டுத்தான் பேசறீங்களா? அவர் மனைவியை யார் எப்போது மதத்தை விட்டு விலக்கினார்கள்?

  • ////முஸ்லிம் அல்லாதவர்களாக தன் திருமணத்தை மீண்டும் பதிவு செய்து கொண்டு அவர்கள் தம்பதிகளாகவே தொடர்ந்து வாழலாமே? இதில் என்ன பிரச்னை?////

   மரைகாயரே, இதை நீங்கதானே எழுதுனீங்க, இதுக்கு என்ன பொருள்? அவர் மனைவி ஏன் தன்னை முஸ்லிம் அல்லாதவராக அறிவித்துக்கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிமாக இருந்து கொண்டே ஒரு பெண் முஸ்லிமில்லாத ஆணை திருமணம் செய்துகொண்டு முஸ்லிமாக வாழ்ந்தால், இஸ்லாமிய முறைப்படி நடக்காத அந்த கலியாணத்தை ஜமா அத் ஏற்குமா?

   • //மரைகாயரே, இதை நீங்கதானே எழுதுனீங்க, இதுக்கு என்ன பொருள்? அவர் மனைவி ஏன் தன்னை முஸ்லிம் அல்லாதவராக அறிவித்துக்கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிமாக இருந்து கொண்டே ஒரு பெண் முஸ்லிமில்லாத ஆணை திருமணம் செய்துகொண்டு முஸ்லிமாக வாழ்ந்தால், இஸ்லாமிய முறைப்படி நடக்காத அந்த கலியாணத்தை ஜமா அத் ஏற்குமா?//

    இந்த கேள்வியை நீங்க துராப்ஷா கிட்டதான் கேக்கணும். அவரும் அவரோட மனைவியும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. அவங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருந்தது. ஒன்று முஸ்லிம்களாக வாழ்வது, இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களாக வாழ்வது. இதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். அவருடைய மனைவி முஸ்லிமாக வாழ்வதைத் தேர்வு செய்தார். தன் கணவனையும் சம்மதிக்கச் செய்தார். அப்படி இல்லாமல் அவர்கள் இரண்டாம் வழியைத் தேர்வு செய்திருந்தாலும் யாரும் அவர்களைத் தடுத்திருக்கப் போவதில்லை. துராப்ஷா ஏன் இரண்டாம் வழியைத் தேர்வு செய்யவில்லை என்று நீங்கள் அவரிடமே கேளுங்களேன்.

    • மறுபடியும் மொதல்லேருந்தா…. மரைக்காயரே, சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத அப்பெண் ஏன் முஸ்லிம் அல்லாதவரா வாழனும்னுதானே கேட்டேன், அவருக்கு அந்த நிரபந்தத்தை கொடுப்பது அநீதி இல்லையா??? குற்றம் நிருப்பிக்கப்படாத தோழருக்கு தண்டனை கொடுத்ததே பெருங்குற்றம், அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் ஏன் தண்டனை, அதாவது நீங்க செய்யும் குடும்பத்தை மிரட்டுவது ஆபாசமானது அறுவறுக்கத்தக்கது.

     தோழரை அடித்துப்பார்த்தும் மன்னிப்பு வாங்க முடியாத ஜமாத்தார், அவர் குடும்பத்தை அவரிடமிருந்து பிரித்து அவர்களுக்கு தண்டனையை கொடுத்து சித்திரவதை செய்து மிரட்டி மன்னிப்பை பெற்றிருக்கிறீர்கள்.

     தனது மனைவி குழந்தை மீது உள்ள காதலாலும் அன்பாலும், அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்ற காரணத்தினால் மன்னிப்பு கேட்கிறார் தோழர், கணவன் மீதான நிரூபிக்கப்படாத குற்றத்துக்கு மனைவிக்கும் மகளுக்கும் தண்டனை கொடுக்கும் (கணவர்-தந்தையிடமிருந்து பிரித்தவர்) மனிதத்தன்மையற்றவர்கள் ஜமாஅத்தார்

     இப்படி மிரட்டி சேர்த்த தோழர் எப்படி அல்லாவை ஏற்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அவ்ளோ அப்பாவியா நீங்கள்?? இல்லை காரியவாதியா?? எதற்கு கேட்கிறேன் என்றால் அல்லா பெயரில் மோசடி செய்யும் ஹாஜாவுக்கு அல்லா மீது நம்பிக்கை இருக்கும் என்று ஒரு குழந்தை கூட நம்பாதே…..

     சரி மீண்டும் நீங்கள் சாய்சில் விட்ட கேள்வியை போடுகிறேன்

     ////சைபுல்லா ஹாஜா ஒரு கிரிமினல் என்று எழுதியிருக்கிறீர்களே.////

     நான் எழுதவில்லை ஐயா, பிஜே வரிசையாக அவர் மோசடிகளை எழுதியிருக்கிறார்
     http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/

     அதற்கு மட்டும் ஏன் சட்டத்திடம் போகச்சொல்கிறீர்கள்? அப்போ மதத்தின் பெயராலேயே வசூல் மோசடி செய்த ஹாஜா போன்ற கிரிமினல்கள் அல்லாவை நம்பினால் அவருக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு, நீதிபதி பதவியும் உண்டு (அதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் குரானில் உண்டா?) அல்லாவின் பெயரால் மோசடி செய்பவனுக்கு எப்படி அல்லா மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம் ))

     சுருங்கக்கூறின் எளியவர்களுக்கு குடும்பத்தோடு தண்டனை – வலியவர்களுக்கு ராஜ மரியாதை — இதுதானா உங்க சமத்துவ டக்கு ))//////

     • //மறுபடியும் மொதல்லேருந்தா…. மரைக்காயரே, சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத அப்பெண் ஏன் முஸ்லிம் அல்லாதவரா வாழனும்னுதானே கேட்டேன், அவருக்கு அந்த நிரபந்தத்தை கொடுப்பது அநீதி இல்லையா???//

      அந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியவர் உங்கள் தோழர்தான் தோழரே. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் ஒரு முஸ்லிம் பெண்ணை ஏமாற்றி தன்னை ஒரு முஸ்லிம் போல நம்பவைத்து இஸ்லாமிய முறைப்படி ஜமாஅத் முன்னிலையில் முஸ்லிம் பொதுமக்கள் சாட்சியாக திருமணம் செய்திருக்கிறார். எவ்வளவு பெரிய அக்கிரமம் இது? இதுபோன்ற ஏமாற்று வேலைகளை உங்கள் இயக்கம் ஆதரிக்கிறதா? இவ்வளவுதானா உங்கள் கொள்கை? ஒரு அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்திருக்கும் ஒரு நபருக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குவதற்கு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?

      • மரைக்காயரே, மறுபடியும் புதுசா எதாச்சும் டிரை பண்ணனும்னே இப்படி பல்பு வாங்குறீங்களே, பாவம்தான் நீங்க..

       துராப்ஷா எங்க கட்சிக்கு வரதுக்கு முன்னாலேயே பலப்பல ஆண்டுகளாக வலது கம்யூனிஸ்டு கட்சியில் இருந்திருக்கிறார், உங்க ஜமாத்தாரின் அறிவிப்பு படி நீஈஈஈஈஈஈண்ட காலமாக தவறுகள் செய்து வந்திருக்கிறார் அப்படிப்பட்டவருக்கு ஒரு அப்பாவி பெண்ணை கலியாணம் செய்து வைத்து நாசமாக்கியது ஜமாத்தே. ஒரு கம்யூனிஸ்டு காபிர் + நாத்திகன் என்று தெரிந்தும் இஸ்லாமிய முறைப்படி அவருக்கு திருமணம் செய்து வைத்த ஜமாத்தை அந்த அல்லா சும்மா விடுவாறா?

       விடுவாறுன்னுதான் தோணுது, ஏன்னா நீங்க இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தயங்கும் போது அப்படித்தான் தோணுது

       //////////////////
       மீண்டும் நீங்கள் சாய்சில் விட்ட கேள்வியை போடுகிறேன்

       ////சைபுல்லா ஹாஜா ஒரு கிரிமினல் என்று எழுதியிருக்கிறீர்களே.////

       நான் எழுதவில்லை ஐயா, பிஜே வரிசையாக அவர் மோசடிகளை எழுதியிருக்கிறார்
       http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/

       அதற்கு மட்டும் ஏன் சட்டத்திடம் போகச்சொல்கிறீர்கள்? அப்போ மதத்தின் பெயராலேயே வசூல் மோசடி செய்த ஹாஜா போன்ற கிரிமினல்கள் அல்லாவை நம்பினால் அவருக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு, நீதிபதி பதவியும் உண்டு (அதற்கு ஆதாரமான ஹதீஸ்கள் குரானில் உண்டா?) அல்லாவின் பெயரால் மோசடி செய்பவனுக்கு எப்படி அல்லா மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது அந்த அல்லாவுக்கே வெளிச்சம் ))

       சுருங்கக்கூறின் எளியவர்களுக்கு குடும்பத்தோடு தண்டனை – வலியவர்களுக்கு ராஜ மரியாதை — இதுதானா உங்க சமத்துவ டக்கு ))//////////////////////////