Saturday, July 20, 2024
முகப்புசெய்திஇந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!

இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!

-

செய்தி-08

ராஜ் தாக்கரே

“நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாடீல் மற்றும் மும்பை போலீசு கமிசனர் அரூப் பட்நாயக் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அரிவாள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்களுடன் முசுலீம்களது ஊர்வலம் நடந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அங்கே பச்சை வண்ண பங்களாதேஷ் பாஸ்போர்ட் கிடந்ததாகவும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிற மாநில முசுலீம்கள் மராட்டிய பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பேசவே உற்சாகமடைந்த போலீசு கான்ஸ்டபிள் ஒருவர் மேடைக்கே வந்து தாக்கரேக்கு ரோஜாப்பூ ஒன்றையளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்து தர்மம் மட்டுமல்ல மராட்டிய தர்மமும் தனது தர்மம்தான் எனக் கூறிய ராஜ் தாக்கரே மராட்டியத்திற்கு எதிராக எவராவது வந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் சூளுரைத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு அசாமி, கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதைக் குறிப்பிட்ட தாக்கரே காயமடைந்த மராட்டிய காவலர்களைப் பற்றி அவருக்கு கவலையில்லையா எனக் கேள்வியெழுப்பினார்.

கலவரக்காரர்கள் உ.பி, பீகார் மற்றும் ஜார்கண்டிலிருந்தும் வந்ததாகவும் இவர்களால் மராட்டியர்கள் ஒடுக்கப்படுவார்களோ என தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். மறுகாலனியாக்க கொள்ளை மற்றும் கொள்கையின் காரணமாக உள்நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் அந்த வடநாட்டு கூலி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு இனி மும்பையில் இடம் தரக் கூடாதாம்.

குறைவான கூலி என்பதற்காக முதலாளிகளும், இதை விட்டால் வேறு வழியேயில்லை என்ற நிலைமையால் இந்தத் தொழிலாளிகளும் மும்பைக்கும், சென்னைக்கும், டெல்லிக்கும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களைத்தான் மராட்டிய இந்து தேசிய இனத்தின் வில்லனாகக் காட்டுகிறார் ராஜ் தாக்கரே. தமிழகத்தில் இவர்கள் மழைக்கு ஒதுங்கினால் கூட ஜேப்பியாரின் கான்கிரீட் தூண் உயிரை வாங்குகிறது. ஆனால் மணியரசன் போன்றவர்களோ சிவசேனா பங்காளிகள் போல இவர்களையும் வில்லனாகத்தான் சித்தரிக்கிறார்கள்.

தணிந்து போயிருக்கும் இனவெறி மற்றும் இந்துமதவெறியை மீண்டும் கிளப்புவதற்கு இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எப்போதும் குறியாக இருக்கிறார்கள் என்பதற்கு ராஜ்தாக்கரேவின் கட்சியும், அதை கண்டிக்க வக்கில்லாத அரசு, போலீசும் சாட்சியாக இருக்கின்றன.

மும்பையில் நடந்த ராஜ்தாக்கரே கட்சியின் பேரணிக்கு தடைவிதித்திருந்த போலீசு தடையை மீறி பேரணி நடந்தபோதும் தடுக்க முற்படாமல் வெறும் சாதாரண வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளது. மும்பை பத்திரிகையாளர்களையும் ஆகஸ்டு 11 அன்று முசுலீம்கள் தாக்கியதாகவும், அவர்கள் சார்பாகவும் தான் பேசுவதாகவும் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். தங்கள் சார்பில் பேச தாக்கரே தான் தகுதியானவர் என மும்பை பத்திரிகையாளர்கள் கருதுகிறார்களா ?

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. மும்பை கலவரத்தின் (அஸ்ஸாம் அல்ல) பிரதான காரணம் குறித்து வினவின் கருத்து என்ன?

 2. வெளியிலிருந்து கண்டவன் எல்லாம் வந்து குடியேறி அதிகாரம் செலுத்துவதால் தான் மும்பையில் சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. மராட்டியர்கள் கோபம் மிகவும் நியாயமானது தான். மும்பை இந்த அளவுக்கு நாறிக்கிடப்பதற்கு வந்தேறிகள் தான் காரணம்.

  • வாங்க மராட்டிய இனவெறியின் தமிழ் பதிப்பு பெரியசாமி அவர்களே,

   மும்பை உண்மையிலேயே ”நாறாமல்”இருக்க துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தமிழர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் எனபது உங்களுக்கு தெரியுமா.

   கைவினை செருப்பு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது மும்பை என்பதும் அந்த உற்பத்தியை சாத்தியமாக்குபவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா.

   சரக்குந்து கிடங்குகளுக்கு மும்பையின் உற்பத்தி பொருட்களை கொண்டு சேர்ப்பதும் அங்கிருந்து மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு எடுத்து வந்து சேர்ப்பதும் பீகாரிகள் எனபது உங்களுக்கு தெரியுமா.

   மும்பையின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படை சிறு தொழில்கள்தான்.அவற்றுக்கு அச்சாணியாக திகழ்வது கைநேர்த்தியும் திறமையும் வாய்ந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் எனபது உங்களுக்கு தெரியுமா.

   இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த மாதிரியான ”அந்நியர்கள்” வெளியற்றப்பட்டால் மும்பை உண்மையிலேயே நாறிப் போய்விடும்.அவர்கள் இல்லாத மும்பை காற்று போன பலூன்தான்.

   மும்பையின் உற்பத்தியை சாத்தியமாக்குவது இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர்கள்தான்.அதற்கான கச்சா பொருட்களை விளைவித்து தருவதும் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள்தான்.அவர்கள் பொருட்களுக்கான சந்தை மராட்டியத்துடன் முடிந்து விடுவதாக இருந்தால் மும்பை மராட்டியருக்கு மட்டுமே சொந்தம் என சொல்லிக் கொள்ளட்டும்.மாறாக இந்தியா முழுவதும் வணிகம் செய்வேன்.ஆனால் இங்கு வேறு யாரும் வந்து பிழைக்க விட மாட்டேன் எனபது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

   அதெப்படி ஐய்யா இனவெறியர்கள் எல்லோருமே ஒரே மாதிரி எண்ணிப் பார்க்கிறீர்கள்.உழைத்து பிழைக்கும் தொழிலாளர்களை எதிரியாக பாவிக்கும் தாக்கரேக்களும் நீங்களும் பனியா கும்பல் என்று வரும்போது வாயை மூடிக் கொள்கிறீர்கள்.

   மும்பை சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளையிடும் குசராத்தி சேட்டுகள்,மார்வாடிகள்,பார்சிகள் உள்ளிட்ட பனியா கும்பலை தாக்கரேக்கள் விரட்டி அடிக்க கோருவதில்லை. இங்கே நீங்களும் அப்படித்தான்.மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஐ வரையறை ஆண்டாக கொண்டு அதற்கு பிறகு இங்கு வந்த பிற மொழி பேசுவோரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லும் நீங்கள்,கேவலம் புழுத்த அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டையை, திருடர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை ”அந்நியர்” களுக்கு தர கூடாது என கூச்சல் போடும் நீங்கள் கோடிக்கணக்கில் தமிழகத்தை கொள்ளையிடும் வட இந்திய பனியா கும்பலின் சொத்துக்களை இழப்பீடின்றி பறிமுதல் செய்ய கோருவதில்லை.

  • இது தான் மணியரசன் கும்பலின் தமிழினவெறி பாசிசம்.

 3. நாங்கள் வட இந்திய பனியா கும்பல் உள்ளிட்ட எல்லா ஆக்கிரமிப்புகளையும் கடுமையாக வெறுக்கிறோம். மேலும் இந்த கும்பல் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். எதிர்த்து ஓட்ட நினைத்தால் நம்மால் முடியும். ஆனால் லட்சக்கணக்கில் குடியேறி (இப்போது பற்றி எரியும் அசாம் போன்று)demographyயை மாற்றி ஆதிக்கம் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது. முன்னரே உஷாராக இருந்து கொள்ள வேண்டியது தான். மும்பைக்கு வந்து துப்புரவு பணி செய் என எந்த மராட்டியனும் வெளி மாநிலத்தவர்களை அழைக்கவில்லை. உள்ளூரில் பிழைக்க வழியில்லாமல் அங்கு போய் திமிராக நடந்து கொண்டால் அவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். தொழிலாளிகளாக போகிறவர்கள் சும்மாவாகவா இருக்கிறார்கள். கடந்த பல பத்தாண்டுகளுக்கு முன்னர் மும்பை வந்தேறிகளின் ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில் நன்றாகத்தான் இருந்தது. ஒன்றும் நாறிகிடக்கவில்லை. மும்பை நகரம் வந்தேறிகளால் புழுத்து அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. சாவின் விளிம்பில் இருக்கிறது. வட இந்தியர்களின் அடாவடித்தனமே ராஜ் தாக்கரே போன்ற ஆட்கள் செல்வாக்கு பெற காரணம்.

  • வட இந்திய பனியா கும்பலை ”எதிர்த்து ஓட்ட”வேண்டுமென்று எப்போதுதான் ”நினைப்பீர்கள்”.வட மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என்று தட்டி எழுதி வைக்கும் நீங்கள் பனியா கும்பல் தமிழகத்தில் சொத்து வாங்க கூடாது என்று முனங்குவது கூட இல்லையே.ஏன் ராசா.

   பிரிவு சார் மக்கள் தொகையை -demography ) மாற்றும் அளவுக்கு அன்னியர் குடியேற்றம் நிகழும் என்பதே பித்தலாட்டம்.ஏழு கோடி தமிழர்களை சிறுபான்மை ஆக்க அல்லது வலு குறைந்த சமூகமாக்க சில கோடி மக்கள் இங்கு குடியேற வேண்டும்.அப்படியெல்லாம் உங்கள் கனவில் வேண்டுமானால் நடக்கலாம்.நனவில் சாத்தியமில்லை.

   அசாம் கலவரத்தோடு இதை ஒப்பு நோக்க முடியாது.போடோக்கள் போடோலாந்து என தனி மாநிலம் கோரும் பகுதியின் மக்கள் தொகையில் போடோக்களின் விகிதம் வெறும் இருபது விழுக்காடுதான் என்பதும்,அவர்கள் அந்த பகுதியின் ஆதிக்க சாதியினர் என்பதும் [பெயர் மட்டும்தான் பழங்குடி] அவர்களிடம் நவீன ஆயுதம் தாங்கிய படை இருப்பதும்,அவர்கள் முசுலிம் மக்கள் மீது மட்டுமல்லாது குக்கி,சந்தால் உள்ளிட்ட பிற இன மக்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா.

   \\மும்பை நகரம் வந்தேறிகளால் புழுத்து அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. சாவின் விளிம்பில் இருக்கிறது//

   இந்த வரிகளை மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்து பார்த்தால் உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.பிழைப்புக்கு வழியில்லாமல்தான் மும்பை போன்ற மாநகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்கிறார்கள்.அங்கு எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பதை முடிந்தால் நேரில் போய் அல்லது நேரடி அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  • கூலி வேலைகளுக்காக இந்தியா முழுவதுமுள்ள பின்தங்கிய மாநிலங்களிலிருந்து மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களை நோக்கி விவசாயிகளும் தொழிலாளிகளும் விருப்பமின்றி விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவர்கள் இவ்வாறு சொந்த‌ மண்ணைவிட்டு இடம்பெயற யார் காரணம் ? சொந்த ஊரை விட்டு யாரும் விரும்பிச்செல்வதில்லை. பன்னாட்டு கம்பெனிகளுக்காகவும் ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் தீவிரமாக அமுல்படுத்தப்படும் உலகமயமாக்கல் கொள்கை தான், நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கை தான் ஏழை மக்களை நாட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விரட்டியடிக்கிறது.

   சென்னை மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளி தன்னுடைய சொந்த ஊரில் இருப்பதைப்போன்ற பாதுகாப்புணர்வுடனும் சுதந்திரத்துடனும் இருப்பதில்லை. அச்சத்தோடும் விருப்பமின்றியும் தான் வேலை செய்கிறார்கள்.

   இவர்களைப் பார்த்து தான் மணியரசன் போன்ற தமிழின வெறியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறார்கள்.

   அன்டை மாநில‌ உழைக்கும் மக்களான இவர்களை தமிழர்களின் எதிரிகளாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகளை காணவிடாமல் மறைத்து நிற்கிறார்கள் தமிழினவாதிகள். இவ்வாறு தமிழ்தேசியம் என்கிற பெயரியரில் தமிழ் மக்களின் எதிரிகளை காப்பாற்றும் வேலையை தான் இந்த இனவெறியர்கள் செய்து வருகிறார்க‌ள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க