Thursday, December 12, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

-

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! 

மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.

  1. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!-பாகம் 1
  2. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2

“வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்ற த.தே.பொ.க. முழக்கம் ம.க.இ.க.விற்கு எட்டிக் காயாய் கசக்கிறது. அம்முழக்கத்தைத்தான் பாசிசம் என்று பழிதூற்றுகிறது” என்கிறது மணியரசனின் கும்பல்.

உண்மைதான். ‘இச்சிக்கலில்’ மணியரசன் கும்பலின் நிலைப்பாடு, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு மட்டுமல்ல; எல்லாப் பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கங்களுக்கும் ‘எட்டிக் காயாய்’ கசக்கிறது. மணியரசன் கும்பலைப் போன்ற குட்டி முதலாளிய குறுகிய இனவெறியர்களைத் தவிர, எத்தனை தேசிய இனவாதக் குழுக்கள் இந்த நிலைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்?

“இது பாசிசமா? இல்லை. தற்காப்பு!” என்றும் “இது பாசிசமா? இல்லை. இது சனநாயகம்!” என்றும் வாதாடுகிறது மணியரசன் கும்பல்; அதேசமயம், இது பாசிசம்தான் என்கிற வகையில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறது.

“இட்லர் செயல்படுத்திய பாசிசம் என்பது என்ன? பல நூறு ஆண்டுகளாக, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த யூதர்களை வெளியேற்றுதல், கூட்டம்கூட்டமாகக் கொலைசெய்தல் போன்ற கொடுஞ்செயல்களைக் கொண்டது இட்லரின் பாசிசம்” என்று இட்லரின் பாசிசத்துக்கு விளக்கமளிக்கிறது.

அதற்கு முன்பாக, தமிழர்கள் தாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஏன் வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்பதற்கு பின்வரும் காரணத்தையும் கூறுகிறது.

“தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்க வேண்டும். வரைமுறையின்றி மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறினால், பிறகு, தமிழகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும். கலப்பினத் தாயகமாக மாறி விட்டால், சொந்த மண்ணிலேயே, தமிழர்கள் இரண்டாந்தர, மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றப்படுவர்.”

ஆம். மணியரசன்  முன்வைக்கும் இத்தகைய காரணத்துக்காகத்தான் இட்லரின் பாசிசம் யூதர்களை நரவேட்டையாடும் கொடுஞ்செயலை நடத்தியது. ஆரிய இனத்தின் இரத்தத் தூய்மையைப் பாதுகாக்கவேண்டும், தமது ஆரிய இன இரத்தம் யூதர்களின் செமட்டிக் இன இரத்தத்துடன் கலந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஐந்து இலட்சம் யூதர்களை ஆஷ்விட்ஸ் வதை முகாமில் பிடித்து வைத்து இரத்த ஆராய்ச்சி செய்து கொன்றதோடு, நாடு முழுவதும் மேலும் பல இலட்சம் யூதர்களைப் படுகொலை செய்தது, இட்லரின் பாசிச நாஜிப் படை. நல் வாய்ப்பாக மணியரசன் கும்பல் அதிகாரத்திலும் இல்லை; விடுதலைப் புலி பிரபாகரனைப் போல தனிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறிருந்தால், இசுலாமியர்கள் அனைவரும் ஈழத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கெடு வைத்து, மன்னாரில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த வழிபாட்டுத் தலத்துக்குள் புகுந்து பலரைச் சுட்டுக் கொன்ற புலிகளைப் போல, மணியரசன் கும்பலும் பாசிசக் கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கும். அதனால்தான் இப்போதைக்கு, தமிழ் மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள், தேசம் கலப்பினத் தாயமாக மாறிவிடும் என்று பூச்சாண்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறது.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி

தமிழின மக்களின் இரத்தத் தூய்மையைத் காத்துக் கொள்ளத் துடிக்கிறது மணியரசன் கும்பல். ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் மணியரசனுக்கு என்ன? ஏன் மணியரசனின் இரத்தம் கொதிக்கிறது? மணியரசன் முன்வைக்கும் இதே காரணங்களைக் கூறித்தான், அமெரிக்காவின் குகிளக்ஸ்கிளான், ஐரோப்பாவின் புதிய நாஜிக்கள் போன்ற வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து, மேலை நாடுகளில் குடியேறும் உழைக்கும் மக்களைத் தாக்குகின்றனர். இசுலாமிய மக்கட்தொகைப் பெருக்கம், கலப்பு மணங்களால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவர் என்ற பீதியைப் பரப்பித்தான் பார்ப்பன  இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதவெறிப் படுகொலைகளை நடத்துகிறது.

கிரிமினல் குற்றங்கள் பெருமளவாகி விட்டன என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவி இளைஞர்களைப் பிடித்து, கோணி ஊசியால் கண்களைக் குத்தி குருடாக்கியது பீகார் போலீசு; அதைப் போலவே, அப்பாவி இளைஞர்களின் கைகால்களை முறித்துப் போட்டது உ.பி. போலீசு. அதேபாணியில் போலி மோதல்களை அரங்கேற்றுகிறது, பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் போலீசு. மேலும், வடமாநிலத்தவர் கணக்கெடுப்பு, அவர்களை போலீசு நிலையங்களில் பிடித்து வைத்து வதை செய்வது, வாடகைக் குடித்தனக்காரர்கள் பற்றிய விவரங்களை, அடையாள ஆதாரங்களைப் போலீசுக்குத் தராத வீட்டு உடைமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு  தண்டனை நடவடிக்கைகளைப் போலீசு மேற்கொள்கிறது.

மணியரசன் கும்பலோ, போலீசின் போலி என்கவுண்டரைக் கண்டிப்பதாகக் கூறும் அதேசமயம், வடமாநிலத்தவர் என்றாலே கிரிமினல் குற்றவாளிகள் என்ற கருத்துருவாக்கம் செய்யும் முதலாளிய ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு, “வடமாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி, படிப்புத் தேடி தமிழகம் புகுந்தவர்களில் பலர் கொள்ளைக்காரர்களாக, கூலிக்குக் கொலை செய்வோராக, குழந்தைகளை வல்லறவு கொள்வோராகச் சீரழிந்தனர். அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த இவ்வகையான குற்றங்களில் அதிக விகிதத்தில் ஈடுபட்டோர் வடநாட்டவரே! எனவே, தமிழ்நாட்டில் குடிபுகுந்த வடநாட்டவர் பற்றிய கணக்கெடுப்பையும் பதிவையும் காவல்துறை செய்து வருகிறது” என்று கூறி போலீசின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. போலீசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கும் மனித உரிமை அமைப்பினரை  இனத்துரோகிகள் என்று வசைபாடுகிறது.

போலீசின் மேற்படி நடவடிக்கைகள் வடமாநிலத்தவர்க்கு எதிராகவோ, மணியரசன் கும்பல் கோருவதைப் போல அனைத்து வெளிமாநிலத்தவர்க்கு எதிராகவோ மட்டும் நின்றுவிடாது. பயங்கரவாத, தீவிரவாத முத்திரைக் குத்தி போலீசு வேட்டையாடும் மதச் சிறுபான்மையினர், கம்யூனிசப் புரட்சியாளர்கள் மட்டுமல்ல; பிரிவினைவாதிகள் என்று கூறி தமிழினக் குழுவினருக்கும் எதிராக ஏவிவிடப்படும். ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கைகள் புலம் பெயர்ந்து இங்கே வந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போலீசின் இத்தகைய நடவடிக்கைகள் வீட்டுச் சொந்தக்காரர்களைப் போலீசு உளவாளிகளாக மாற்றும்; இல்லையென்றால், அவர்கள் மீது கிரிமினல் குற்றஞ்சாட்டித் தண்டிக்கவும் செய்யும். இவையெல்லாம் மணியரசன்களின் மூளைக்கு ஏன் உறைக்கவில்லை?

“புதிதாக வந்த வெளிமாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கக் கூடாது. த.தே.பொ.க.வின் இந்நிலைப்பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியதுதான்!” என்று சாதிக்கிறது, மணியரசன் கும்பல்.

வலிய அழைத்து, மாபெரும் மணியரசனின் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும் புலம்பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் சொல்ல வேண்டும், இந்தக் கூற்று உண்மைதானா என்று! தமது சொந்த நாட்டு மக்கள் அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருக்கும் மேலைநாட்டு அரசுகள், புலம் பெயர்ந்த குடியேற்றக்காரர்களையும் அப்படித்தான் வைத்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், குடியேற்றக்காரர்களின் அடிப்படைத் தேவைகளையும், வாழ்வுரிமைகளையும் மறுக்கவில்லை. அவர்களுக்கு வேலை உரிமை, கல்விமருத்துவ உரிமை அளிப்பதோடு, வாழ்விடம் மற்றும் உணவுத் தேவைகளை உறுதி செய்கிறது. ஆனால், இங்கே குடியேறியவர்களுக்கு  இவற்றை மறுக்கச் சொல்லும் “த.தே.பொ.க.வின் நிலைப்பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியதுதான்!” என்று கூசாமல் புளுகுகிறது, மணியரசன் கும்பல்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி

“தமிழ்த் தேசியக் கொள்கைப்படி தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது. ஒரு தனிநாட்டில் அந்நாட்டின் தேவைக்கேற்ப விசா வழங்கி, வெளிநாட்டினரை அனுமதிக்கின்றனர். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், நுழையலாம், குடியிருக்கலாம் என்று எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதே நடைமுறை தமிழ் நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்”;  “ஈழம், காசுமீரம், வடகிழக்கு மாநிலங்களில் அந்நியர் குடியேற்றத்தை ம.க.இ,க எதிர்க்கிறது, ஆனால், தமிழ்நாட்டில் ஆதரிக்கிறது” என்கிறது, மணியரசன் கும்பல்

மேலும் சொல்கிறது, “இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசைதிருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன் முரண்பாடற்ற கொள்கை.”

“தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது” என்பதாலேயே ஒரு தனிநாடாக இருப்பதாகக் கொள்ள முடியாது. இது இன்னமும் இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவின் ஒரு மாநில மக்கள் வேறு மாநிலங்களில் குடியேறவும் சொத்துக்களை வாங்கவும் தொழில் புரியவும் உரிமைதரும் பொதுச் சட்டம்தான் உள்ளது. ஆனால், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்கள் தனிச்சிறப்பான வரலாற்று, அரசியல் சூழல்கள் காரணமாக தனிச்சிறப்பான சட்டங்களையும் தடைகளையும் கொண்டுள்ளன.

குறிப்பாக, காசுமீரமும் வடகிழக்கு மாநிலங்களும் இந்திய ஒன்றியத்துக்குள் வலுக்கட்டாயமாகவும் அரசியல் சூழ்ச்சியாலும் இணைக்கப்பட்டவை. அப்போதிருந்தே இந்திய  ஒன்றியத்துக்கும் அதன் இராணுவ ஆதிக்கத்துக்கும் அடிபணிய மறத்து அங்குள்ள மக்கள் எழுச்சியுற்றுப் போராடுகின்றனர். அவர்களுடைய எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல்தான் இந்திய அரசு, இந்தியாவின் பல சட்டங்களுக்கும் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தே நிறைவேற்றுகிறது. இதனாலேயே இந்தியாவின் பல சட்டங்களும் காசுமீரத்துக்குப் பொருந்தாது. வடகிழக்கில் அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தொடரும் மக்கள் எழுச்சி மற்றும் ஆயுதப் போராட்டங்களால்தான் இந்திய அரசு அவற்றின் தலைமையுடன் இந்தியாவுக்கு வெளியே இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காசுமீரச் சிறுவர்களின் கல்லெறிப் போராட்டங்களும், மணிப்பூரில் ஆயுதப் படை முகாமின் வாசலில் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கின. அதற்கு இணையான தமிழ் மக்களின் போராட்டம் எதையாவது திராவிட இயக்கத்தாலும் தமிழினக் குழுக்களாலும் கட்டமைக்க முடிந்ததா? “பாகிஸ்தான்காரன் வந்துவிடுவான், சீனாக்காரன் வந்து விடுவான்; இந்தியாவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஈழத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டு தானே இருக்க முடிகிறது! இதையெல்லாம் மறந்து  மறைத்து தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதியுடையது என்பதாலேயே தனிநாடாக ஆகிவிட்டதாகப் பாவித்து வாதங்கள் புரிகிறது, மணியரசன் கும்பல்.

“ஈழத் தமிழினப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர்க்கும் ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை, வெளியாரை வெளியேற்றும் த.தே.பொ.க.வின் நிலைப்பாட்டை பாசிசம் என்று சாடுகிறது. இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசைதிருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன் முரண்பாடற்ற கொள்கை” என்கிறது மணியரசன் கும்பல்.

ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன. மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண மறுக்கின்றது.

ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தாலும் அதன் அரசாலும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னும் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தற்போது பெருமளவு நடக்கும் உழைக்கும் மக்களின் புலம் பெயர்வும் குடியேற்றமும் அவ்வாறானது அல்ல. சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக் குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை. தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களின் பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு இந்தியா, ஒடிசா, வங்கம், பீகாரி  மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள். இவர்கள் எவரும் இந்திய தேசியத்தை சேர்ந்தவர்களும் இல்லை. மேலும், இந்திய தேசியம் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வேண்டி உருவாக்கிக் காத்துவரும் ஒரு கற்பிதம்தானே தவிர, எந்த சமூக, இன அடிப்படையிலான மக்களையும் கொண்டதில்லை. ஆகவே, தமிழகத்துக்குப் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் மக்களின் இடப்பெயர்வையும் சிங்கள அரசு நடத்தும் சிங்களக் குடியேற்றம் மற்றும் பிரதேச ஆக்கிரமிப்பும் ஒரே அடிப்படையையும் விளைவையும் கொண்டதாகச் சித்தரிப்பது மணியரசன் கும்பலின் வழக்கமான அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்றுதான்!

“தொழிலாளர்கள் அனைவரையும் புரட்சியாளர்கள்  முற்போக்கானவர்கள் என்று கருதக்கூடாது; காலனியாதிக்கக் கொள்ளையில் பங்கு பெறும் தொழிலாளிகள் ‘தொழிலாளர் பிரபு’க்களாகி, வர்க்க உணர்ச்சி இன்றி ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும் தொழிலாளர் பிரபுத்துவத்துடன் புரட்சிக்கு எதிரானவர்களாவது பற்றி மார்க்ஸ் கூறியிருக்கிறார்” என்பதைச் சுட்டி, அதைப்போல வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொழிலாளர் இயக்கத்தை பலவீனப்படுத்தி, முடக்கி, சீர்குலைத்து வருகிறார்கள் என்று மணியரசன் கும்பல் குற்றஞ்சாட்டுகிறது.

தமிழகத்திலுள்ள தொழிற்சங்க இயக்கங்கள்அமைப்புகள் எதுவும் வெளிமாநிலத் தொழிலாளர்களால் பலவீனப்படுத்தப்படுவதாகவும், சீர்குலைக்கப்படுவதாகவும் ஒருபோதும் கூறியதே இல்லை. தொழிலாளர் இயக்கத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் இல்லாத, தமிழக உழைக்கும் மக்களிடையே வேரும் விழுதும் இல்லாத அனாமதேய குட்டி முதலாளிக் குழுக்களைக் கொண்டு அடையாளப் ‘போராட்டங்களை’ மட்டும் நடத்திக் கொண்டுள்ள மணியரசன் கும்பல்தான் இவ்வாறான புனைகதைகள் எழுதுகின்றன.

சி.ஐ.டி.யு;  தொ.மு.ச. போன்ற பெரிய தொழிற்சங்கங்களுடன் போட்டி போட்டு பிரதிநிதித்துவம் பெருமளவு வேகமாகவும், போர்க்குணத்துடனும் வளரும் நமது தொழிலாளர் அமைப்பு அம்பத்தூரில் நடத்திய முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஒடிசா தொழிலாளி ஆற்றிய நேருரை தொழிலாளர்களிடையே எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது; தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நமது அமைப்பு நடத்திய மே தினப் பேரணியில் போலி கம்யூனிஸ்டுகள் இணைந்து நடத்தியவற்றை விடப் பலமடங்கு அதிகமாகத் தொழிலாளர்கள் திரண்டதும் மணியரசன் கும்பலுக்கு தெரியுமோ, தெரியாதோ! இருந்தாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நமது அமைப்பில் சேர்ந்து நமது “சீர்குலைவுப் பணிக்குப் பயன்படுவார்கள். தொழிலாளர் இயக்க வளர்ச்சிக்குப் பயன்பட மாட்டார்கள்” என்று சாபமிடுகிறார்கள்.

“வெளிமாநிலங்களில் நிலவும் வறுமையாலும் வேலையின்மையாலும் பிழைப்புத் தேடி வருகிறார்கள். அவற்றுக்கெதிராக அங்கெல்லாம் போராடாதவர்கள், இங்கு உரிமைகோரும் உளவியலை இழந்துள்ளார்கள். அதாவது மனத்துணிச்சலை இழந்துள்ளார்கள்” என்றவாறான விளக்கங்கள் கொடுத்து அவர்கள் தமிழகத் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானவர்கள் என்று மணியரசன் கும்பல் சித்தரிக்கிறது.

“வறுமை, வேலையின்மை காரணமாக பிழைப்புத் தேடி இடம் பெரும் உழைக்கும் மக்கள்” என்று அரதப் பழைய வழமையான வாதங்களை உச்சாடனம் செய்யும் மணியரசன் கும்பல், இன்றைய யதார்த்தத்தைக் காண மறுத்துக் கண்களை இறுக மூடிக்கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாகப் புகுத்தப்படும் உலகமயமாக்கக் கொள்கைகள்; அதன் விளைவாக மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை ஆகியவை உலகமயமாகி வருவதோடு, அதன் விளைவாக ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிகழ்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, பின்தங்கிய பிரதேசங்கள், தேசங்கள், நாடுகளில் இருந்து முன்னெப்போதும் கண்டிராதவாறு உழைப்பாளிகளின் இடம் பெயர்வு மிகப் பெருமளவு இப்போது நடக்கிறது.

தமிழ்நாட்டிலேயே தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்ட நகரங்களுக்கும், வடக்கு மாவட்டங்களில் இருந்து சென்னை  புறநகரங்களுக்கும், தருமபுரி  கிருட்டிணகிரி மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கும் உழைப்பாளர் இடம் பெயர்வதும், இந்தியாவில் வளர்ச்சி குன்றிய, வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் உழைக்கும் மக்கள் தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதும் நிகழ்கிறது. எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடாகவும், தேசிய இனச் சிக்கலாகவும் ஒற்றைச் சட்டகப் பார்வையில் காணும் மணியரசன் கும்பலால் ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் விளைவுகளையும் காணமுடியவில்லை. ஏகாதிபத்திய உலகமயமாக்கத்திற்கு மாற்றாக, பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம் என்ற மாற்றுத்தீர்வையும் ஏற்க முடியவில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாக இருக்க முடியும் என்பதையும் குட்டி முதலாளிய, முதலாளிய தேசிய இனவாதிகளால் ஏற்க முடியாதுதான்.

ஏகாதிபத்திய உலகமயாக்கத்தின் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள்  நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும் பெருமளவு இடம் பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் எதிர்மறையில் பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு (பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு) எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய அடையாளங்களையும் கடந்த பாட்டாளிவர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், அந்தப் போக்குக்கு எதிரான நிலையை மணியரசன் கும்பல் போன்ற இனவாதக் குழுக்கள் எடுக்கின்றன.

ஆகவே, வெளிமாநில உழைக்கும் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டிவிடுவதும், இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் பிற அண்டை தேசிய இனங்களுக்கும் தமிழினத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பகை முரண்பாடாகக் கொள்வதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணை போவது; அதுமட்டுமல்ல, தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கும் எதிரானது.

“விடுதலை கோரும் ஒரு தேசிய இனத்திற்கு ஒரே ஒரு பகை முரண்பாடுதான் இருக்கும் என்று கருதக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்குள்ள பகை முரண்பாடுகளில் முதன்மையானது இந்திய அரசுடன் உள்ள முரண்பாடுதான். முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய லெனினியம் கூறவில்லை. மாசே துங்கும் அவ்வாறு கூறவில்லை. முதன்மை முரண்பாடு தவிர்த்த பிற முரண்பாடெல்லாம் பகையற்ற முரண்பாடாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோர் இன அடிப்படையில் தமிழர்களுடன் பகை கொண்டு மோதுகிறார்கள். இந்தப் பகை முரண்பாட்டையும் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும்.”

முரண்பாடு பற்றிய மணியரசனின் மேற்படி கூற்றுஅதன் முட்டாள்தனத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  ‘முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய லெனினியமும் மாசே துங்கும் கூறவில்லை’, ‘ஒரு தேசிய இனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம்’ என்பவற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள், தரவுகள், காரணங்கள் எதையும் முன்வைக்காமல் பகை முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கிறது, மணியரசன் கும்பல். ஓட்டுப் பொறுக்கிக் கும்பல்கள், மொழிஇனவெறிக் கும்பல்களின் சுயநலக் குறுகிய நலன்களுக்காக உருவாக்கப்படும் மோதல்களைக் காரணமாகக் கொண்டு, இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகக் கருதமுடியுமா? இன்று தமிழர்க்கும் மலையாளிகள், கன்னடர்க்கும் பகை முரண்பாடுகள்; நாளை பாலாறு பிரச்சினையை வைத்து தமிழர்க்கும் தெலுங்கருக்கும் இடையே பகை முரண்பாடு என்று சுற்றிலும்  பகை கொள்வதுதான் இந்திய தேசியத்துடனான முதன்மைப் பகை முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான வழியா? நன்று!  பாராட்டுக்குரியதுதான், மணியரசனின் உலகச் சிந்தனையின் ஊற்று!

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. த.தே.பொ.க.வின் வெளியார் கொள்கை என்பது சாரத்தில் மக்கள் தொகை விகிதம், தமிழர்களுக்கான தாயகப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பானவை.
    ஒரு தேசிய இனத்தாயகத்தில் வெளியாரின் ஆக்கிரமிப்பு மற்றும் மிகை நுழைவு ஏற்படுவது பற்றி ம.க.இ.க.விற்கு நேர்மையான, தன்முரண்பாடற்ற நிலைபாடு இருக்கிறதா? இல்லை.

    “ஈழம்: தேவை – ஒரு நேர்மையான மீளாய்வு!” என்ற பெயரில் 2009-இல் ம.க.இ.க. ஒரு குறுநூலை வெளியிட்டது. புதிய ஜனநாயகம் வெளியீடாக வந்த அதன் இரண்டாம் பதிப்பில் பக்கம் 19-20 களில் பின்வருமாறு கூறுகிறது:

    “……. அதுமட்டுமின்றி, ஈழத் தமிழர்கள் பெரும் பான்மை யாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் சிங்கள அரசு புகுத்தியது. 1948-இல் அதிகார மாற்றம் நிகழ்ந்த போது இலங்கையில் மக்கள் பரவியிருந்த நிலைமை என்ன வென்றால், வடஇலங்கையில் அறுதிப் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள்தான் பெரும்பான்மைக் குடிமக்களாக இருந்தார்கள். ஆனால் கிழக்கு மாவட்டத்தில் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 60 முதல் 70 சதவீதம் மக்கள் தமிழர்கள், கிட்டத்தட்ட 30 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள், மிகமிகச் சிறு பான்மையாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே சிங்களவர்கள் இருந்தார்கள்.

    “ஆனால் அதிகார மாற்றம் நடந்தவுடன் தொடங்கி, 1950க்குள் புறம்போக்கு நிலங்களாக, அரசு நிலங்களாக இருந்த பகுதிகள் அனைத்திலும், வீடுகள் கட்டிக் கொடுத்து, நிதியும் கொடுத்து தமிழ் மக்கள் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் கணிசமான அளவு குடியமர்த்தினார்கள்.

    “ ‘தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக் குடியேறிவிட்டதாலும், வடக்கே, கிழக்கே, ஈழத் தமிழர்களுடைய ஆதிக்கம் இருப்பதாலும் சிங்களவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் வேலை தேடி பல இடங்களில் குடியேறுகின்றனர்.’ என்று கூறினார்கள். தமிழர்களின் பிரதேசங்கள் கைப்பற்றப்படுவது அப்போது தான் முதன்முறையாக நடந்தது. ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370 ஆவது சட்டப் பிரிவு இன்னமும் உள்ளது.”

    ஈழம், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் அயல் இனத்தார் மிகையாகக் குடியேறுவதை எதிர்ப்பது போலவும், வெளியாரை எதிர்த்துக் காசுமீர் மக்கள் போராடியது ஞாயம் என்பது போலவும் மேற்படிக் கூற்றில் ம.க.இ.க சொல்கிறது. அதே நிலைபாட்டை தமிழ்நாட்டில் த.தே.பொ.க. எடுத்தால் அதைப் பாசிசம் என்று சாடுகிறது. இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன்முரண்பாடற்ற கொள்கை.

    • அய்யா,
      நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு கட்டுரையை படிக்கவும்.

      • // ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன. மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண மறுக்கின்றது.//

      • // ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன. மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண மறுக்கின்றது.//
        // ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தாலும் அதன் அரசாலும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னும் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தற்போது பெருமளவு நடக்கும் உழைக்கும் மக்களின் புலம் பெயர்வும் குடியேற்றமும் அவ்வாறானது அல்ல. சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக் குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை. தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல.//
        புரிந்து கொண்டீர்களா பரத்.

        • ஒரு தேசிய இனத்தின் தாயக்தை ஆக்கிரமிப்பது எப்படி வேறு வேறு பிரச்சினைகளாக உங்கள் கண்களுக்குத் தெரிகின்றது?

          ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு நீதி என்று கூறும் பார்ப்பனியத்தின் கண் கொண்டு பார்ப்பதால் தான், ம.க.இ.க.வினருக்கு, ஒவ்வொரு இடத்திலும் தேசிய இனத் தாயக ஆக்கிரமிப்பு வேறு வேறு சிக்கலாகத் தெரிகின்றது.

          //சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக் குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை. தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல.//

          தமிழ்நாட்டில் குடியேறியுள்ள மார்வாடிகள், குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பீகாரிகள் உள்ளிட்ட இந்திக் காரர்கள் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தற்காலிமாகக் குடியிருப்பவர்கள் தானா? அவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என சலுகைகள் வழங்கப்படுவது குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா?

          • ///ஒரு தேசிய இனத்தின் தாயக்தை ஆக்கிரமிப்பது எப்படி வேறு வேறு பிரச்சினைகளாக உங்கள் கண்களுக்குத் தெரிகின்றது?////

            இரு வேறு வேறு பிரச்சினைகள் வேறு வேறாக தானே தெரியும் ? எப்படி இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் என்பதை கட்டுரை விளக்கியிருக்கிறது. அதை உங்களுக்கு அளித்த மற்றொரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். பி எண் 1.3.

          • ////தமிழ்நாட்டில் குடியேறியுள்ள மார்வாடிகள், குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பீகாரிகள் உள்ளிட்ட இந்திக் காரர்கள் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தற்காலிமாகக் குடியிருப்பவர்கள் தானா? அவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என சலுகைகள் வழங்கப்படுவது குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா?///

            சரி அதனால் என்ன இப்போது ? ரேசன் கடைகளையே மொத்தமாக இழுத்து மூடிக்கொண்டிருக்கும் போது அவங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன ? நாளைக்கு ரேசன் கார்டை பிடுங்கும் போது தமிழர்களின் அட்டைகளை மட்டுமா பிடுங்கப்போகிறான் ? எல்லாம் ஒரே கூட்டம் தானே அப்புறம் எதுக்கு இந்த எரிச்சல் ?

            நீங்க ரேசன் கார்டு, ஓட்டர் ஐடி பத்தி தான் பேசிக்கிட்ருக்கீங்க நாங்க கல்யாணத்தை பத்தியே பேசிக்கிட்ருக்கோம். புரியல ? நம்ம வடநாட்டு தொழிலாளிங்க எல்லாம் இங்க வந்து நம்ம தமிழ் பெண்களை கூட கல்யாணம் செய்யட்டுமே அதனால் என்ன தப்பு ? என் குடும்பத்திலிருந்து பெண் கொடுக்க நான் தயார். மணியரசன் கும்பலால் அதை என்ன செய்ய முடியும் ? அந்த இனவெறியர்களால் அதை பொறுத்துக்கொள்ளவே முடியாது. சாதி வெறியர்களுக்கு எப்படி சாதி கலப்பை ஏற்றுக்கொள்ள முடியாதோ அதே போல இந்த தேசியவெறி பிடித்த மணியரசன் கும்பலாலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த கும்பலோட கட்சி பேர்ல பொதுவுடைமை வேற !

    • ////ஒரு தேசிய இனத்தாயகத்தில் வெளியாரின் ஆக்கிரமிப்பு மற்றும் மிகை நுழைவு ஏற்படுவது பற்றி ம.க.இ.க.விற்கு நேர்மையான, தன்முரண்பாடற்ற நிலைபாடு இருக்கிறதா? இல்லை.////

      எது தமிழர்களின் தேசிய தாயகம் ? தமிழ்நாடா ? ஆம் எனில் எப்போதிருந்து அது இங்கு நிலவி வருகிறது என்பதையும், அது எவ்வாறு இங்கு உருப்பெற்று எழுந்தது என்கிற வரலாற்று பில்புலத்தையும் முதலில் கூறுங்கள் அதன் பிறகு அந்த தேசிய தாயகத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பை பற்றிய ம.க.இ.க வின் நிலைப்பாட்டை பற்றி பேசுவோம்.

    • //////ஈழம், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் அயல் இனத்தார் மிகையாகக் குடியேறுவதை எதிர்ப்பது போலவும், வெளியாரை எதிர்த்துக் காசுமீர் மக்கள் போராடியது ஞாயம் என்பது போலவும் மேற்படிக் கூற்றில் ம.க.இ.க சொல்கிறது. அதே நிலைபாட்டை தமிழ்நாட்டில் த.தே.பொ.க. எடுத்தால் அதைப் பாசிசம் என்று சாடுகிறது. இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன்முரண்பாடற்ற கொள்கை./////

      உங்களுடைய கேள்விக்கு பதில் இந்த கட்டுரையிலேயே இருக்கிறது பரத். இதே கேள்வியை தான் மணியரசன் கும்பலும் வைத்திருக்கிறது எனவே அதற்கும் கட்டுரையில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கட்டுரையை படித்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

      கட்டுரையிலிருந்து பதில்

      ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன. மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண மறுக்கின்றது.

      ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தாலும் அதன் அரசாலும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னும் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தற்போது பெருமளவு நடக்கும் உழைக்கும் மக்களின் புலம் பெயர்வும் குடியேற்றமும் அவ்வாறானது அல்ல. சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக் குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை. தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களின் பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு இந்தியா, ஒடிசா, வங்கம், பீகாரி மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள். இவர்கள் எவரும் இந்திய தேசியத்தை சேர்ந்தவர்களும் இல்லை. மேலும், இந்திய தேசியம் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வேண்டி உருவாக்கிக் காத்துவரும் ஒரு கற்பிதம்தானே தவிர, எந்த சமூக, இன அடிப்படையிலான மக்களையும் கொண்டதில்லை. ஆகவே, தமிழகத்துக்குப் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் மக்களின் இடப்பெயர்வையும் சிங்கள அரசு நடத்தும் சிங்களக் குடியேற்றம் மற்றும் பிரதேச ஆக்கிரமிப்பும் ஒரே அடிப்படையையும் விளைவையும் கொண்டதாகச் சித்தரிப்பது மணியரசன் கும்பலின் வழக்கமான அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்றுதான்

      “தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது” என்பதாலேயே ஒரு தனிநாடாக இருப்பதாகக் கொள்ள முடியாது. இது இன்னமும் இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவின் ஒரு மாநில மக்கள் வேறு மாநிலங்களில் குடியேறவும் சொத்துக்களை வாங்கவும் தொழில் புரியவும் உரிமைதரும் பொதுச் சட்டம்தான் உள்ளது. ஆனால், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்கள் தனிச்சிறப்பான வரலாற்று, அரசியல் சூழல்கள் காரணமாக தனிச்சிறப்பான சட்டங்களையும் தடைகளையும் கொண்டுள்ளன.

      குறிப்பாக, காசுமீரமும் வடகிழக்கு மாநிலங்களும் இந்திய ஒன்றியத்துக்குள் வலுக்கட்டாயமாகவும் அரசியல் சூழ்ச்சியாலும் இணைக்கப்பட்டவை. அப்போதிருந்தே இந்திய ஒன்றியத்துக்கும் அதன் இராணுவ ஆதிக்கத்துக்கும் அடிபணிய மறத்து அங்குள்ள மக்கள் எழுச்சியுற்றுப் போராடுகின்றனர். அவர்களுடைய எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல்தான் இந்திய அரசு, இந்தியாவின் பல சட்டங்களுக்கும் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தே நிறைவேற்றுகிறது. இதனாலேயே இந்தியாவின் பல சட்டங்களும் காசுமீரத்துக்குப் பொருந்தாது. வடகிழக்கில் அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தொடரும் மக்கள் எழுச்சி மற்றும் ஆயுதப் போராட்டங்களால்தான் இந்திய அரசு அவற்றின் தலைமையுடன் இந்தியாவுக்கு வெளியே இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

      காசுமீரச் சிறுவர்களின் கல்லெறிப் போராட்டங்களும், மணிப்பூரில் ஆயுதப் படை முகாமின் வாசலில் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கின. அதற்கு இணையான தமிழ் மக்களின் போராட்டம் எதையாவது திராவிட இயக்கத்தாலும் தமிழினக் குழுக்களாலும் கட்டமைக்க முடிந்ததா? “பாகிஸ்தான்காரன் வந்துவிடுவான், சீனாக்காரன் வந்து விடுவான்; இந்தியாவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஈழத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டு தானே இருக்க முடிகிறது! இதையெல்லாம் மறந்து மறைத்து தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதியுடையது என்பதாலேயே தனிநாடாக ஆகிவிட்டதாகப் பாவித்து வாதங்கள் புரிகிறது, மணியரசன் கும்பல்.

  2. DEAR VINAVU COMRADES AND READERS

    THERE HAD BEEN ALWAYS MOVEMENT OF HUMANS FROM ONE LAND MASS TO ANOTHER . TO QUOTE THERE WAS IMMIGRATION OF DRAVIDIAN S FROM AFRICAN AND MEDITERRANEAN REGION TO INDIA AND LATER HORDES OF ARYANS ENTERED INDIA THROUGH KHYBER BOLA N PASS AND LATER SPREADING OF DRAVIDIAN S TO SOUTH INDIA. LATER THERE WERE INVASIONS OF SCHYTIANS , HUN SAND ARABS AND TURKS. TODAY WE HAVE HOMOGENOUS MIXTURE OF CULTURES OF VARIOUS PROPORTIONS. THE ABOVE MENTIONED MIGRATIONS MIGHT HAVE HAVE BEEN PROPELLED BY SEARCH OF FOOD AND FAMINE AND NATURAL CALAMITIES AND DUE TO WAR LIKE NATURE OF CERTAIN TRIBES. THESE FACTS ARE STILL DEBATABLE.THE SOUTHERN MOST TAMIL COUNTRY ALSO BEFORE SANGAM TIME THERE WOULD HAVE BEEN MOVEMENTS FROM NORTHERN INDIA BY JAINS, BUDHISTS AND BRAHMINS. THERE WAS MIGRATION OF TELUGU AND KANADA PEOPLE DURING 14TH CENTURY
    TOWARDS TAMIL LAND DUE POLITICAL REASONS AND ANIMOSITY OF MUSLIM RULERS WHO RULED DECCAN REGION. MANY OF THE FACTS I HAVE MENTIONED ARE SUBJECTED TO FURTHER RESEARCH AND FURTHER DEBATABLE

    BRITISH WHO LOVED TO DIVIDE THE PEOPLE TO FURTHER THIER ECONOMIC EXPLOITATION ENCOURAGED SCHOLARS TO PAINT A DEMONIAC PICTURE OF INDIAS MUSLIM RULERS TO PROMOTE HINDU MUSLIM DISUNITY AND SCHOLARS LIKE BISHOP CALDWELL WHO INVENTED METHODS TO DIVIDE SOUTH INDIAN SOCIETY IN TO ARYAN AND NON ARYAN SOCIAL GROUPS. THE SEEDS OF ANTI SANSKRIT SENTIMENTS WERE
    SOWN AMONG TAMIL NEO BRAHMINS- VELLALA COMMUNITIES. LATER PRO IMPERIALISTIC JUSTICE PARTY WAS BORN WITH HUGE REPERESENTAION OF RICH TELUGU LAND LORDS AND WEALTHY MERCHANTS LIKE PITTY THEAGARAYAR,POPPILY RAJA,PANAGAL RAJA, PATTIVEERAN PATTI SOUNDRA PANDIAN NADAR,RAMNAD RAJA.
    THEY WERE CONDEMNING BRHAMIN SUPERMACY AND CONGRESSPARTY AND NOTHING THEY PERFORMED TO REMOVE THE EVIL OF UNTOUCHABILITY AND CASTE REGIMENTATION IN THEIR NATIVE DOMAINS.
    PERIYAR WHO WAS INITIALLY A REFORMER AND CONGRESSMAN BECAME DISGUSTED WITH THE BRAHMIN LEADERSHIP AND DOMINATION OF THEM IN CONGRESS PARTY JOINED JUSTICE PARTY TO FIGHT BRAHMINS.
    I REGRET TO SAY HIS OWN THEORIES ON MINORITY TRIBAL GROUP OF BRAHMINS BRIM-FULL WITH HATERED
    AND PREJUDICE. HIS FOLLOWERS ANNADURAI AND KARUNANIDHI FURTHER ENHANCED THIS BY THEIR WRITTINGS AND , DRAMAS AND FILMS. TO SAY THEY HAVE FASCIST TONES OF CLEANSING DRAVIDIAN SOCIETY OF BRAHMINS. I CAN SAY THAT THE THEORY OF MAJORITARIANISM OF MR. MANIARASANS GROUP
    IS ONLY CONTINUATION OF PERIYARS MOVEMENT.NAZISM,ZIONISM, HINDU COMMUNALISM, INTOLERENT WAHABI FUNDAMENTALISM ALL SUCH MOVEMENTS POINTS FINGER AT COMMON ENEMY TO SURVIVE AND BASICALLY ANTI WORKING CLASS IN NATURE.
    ALSO I WISH TO POINT OUT THERE WERE CASES OF IN HISTORY WHERE ONE RACE DEFEATED AND UPROOTED OTHER RACES AND CULTURES.LIKE WHITE EUROPEANS VANQUISHED THE INDIGENOUS INDIAN TRIBES
    IN AMERICAN AND AUSTRALIAN CONTINENT. ALSO THERE IS FORCEFULL SETTLEMENT OF HANS CHINIESE
    IN TIBETAN REGION BY MODERN DAY CHINA S RULERS. I AM A NON BRAHMIN TAMIL AND PRESENT THESE
    FACTORS FOR VINAVU READERS AND WELCOME OPINIONS

  3. Workers have no state, national boundaries, They have the right to be any where in the world. When Lenovo from China , LG from Korea, Nokia from Finland,can enter without any restrictions to any country why not the workers who produced it?

    Tea from Assam , Coal&Steel from Chattisgarh,Milk from Andhra ,Mica from Bihar , can come across state borders why not the workers who produced it cannot cross the borders ?

    Its one world for the workers of the world.

    (Workers=all salaried employees and self employed men & women)
    Regards
    GV

  4. எல்லாம் சரி, பிரபாகரன் இசுலாமியர்களை அடித்து வெளியேற்றினார் எங்கிறீர்களே, ஆனால் அவர்கள் சிங்களவர்களோடு சேர்ந்துக்கொண்டு தமிழர்களை காட்டிக்கொடுத்ததையும், தமிழர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதையும் ஏன் குறிப்பிட மறுக்கிறீர்கள்… உண்மையை கண்டுணர்ந்து கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும், ஏதோ போகிற போக்கில் அள்ளி தெளித்தார் போல் எழுதுவது புரட்சிகர இயக்கங்களுக்கு அழகல்ல.

    • குமணன்,
      இது குறித்து ஏற்கனவே நடந்த விவாதங்கள்.பார்க்க,

      https://www.vinavu.com/2010/11/17/ban-on-ltte/#comment-33373

      அந்த பதிவையும் தொடர்ந்த விவாதங்களையும் படித்து பார்க்கவும்.விடுதலை புலிகள் குறித்த உங்கள் புரிதல் மேலும் செம்மையாக கூடும்.

      • காசுமீரிலிருந்து லட்சக்கணக்கில் இந்து பண்டிட்டுகளை விரட்டியவர்கள் ’விடுதலைப் போராளிகள்’.. இந்து பண்டிட்டுகள் பாப்பான்கள் என்பதால் இந்த விரட்டல் காசுமீர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ’முற்போக்கான’ நடவடிக்கையாகிவிட்டதா..!!!

        • நாராயணா இந்த குசு தொல்லை தாங்க முடியலடா பதிவுதான் நினைவுக்கு வருகிறது.எத்தனை முறை விளக்கம் அளித்தாலும் மீண்டும் மீண்டும் முதல்லேர்ந்து வர்றதுக்கு ஆயாசமா இருக்கிறது.

          பழைய விவாதத்தின் சுட்டி இதோ.படித்துவிட்டு கருத்தை எழுதலாம்.

          https://www.vinavu.com/2010/12/07/kashmir-bjp-congress-alliance/#comment-34021

          • காசுமீர் பண்டிட்டுகளின் பிரச்சனையை எடுத்தாலே எரிச்சல் வருவது தவிர்க்க முடியாததுதான்.. உங்கள் பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.. அதிலுள்ள சுட்டிகள் வேலை செய்யவில்லை.. குல்தீப் நய்யார் மற்றும் பல சொம்புகள் கூறுவதை அப்படியே நம்பு முன் :

            பாகிஸ்தானின் கைக்கூலிகள் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை யாராலும் தடுக்கமுடியாத நிலையில் உயிர்ப் பயத்தால் வெளியேறியவர்களை,
            காசுமீர் கவர்னரும், முதல்வரும் பண்டிட்டுகளிடம் சீக்கிரம் திரும்பலாம் என்று உறுதியளித்தார்கள், வெளியேற உதவினார்கள் எனவே காசுமீர் பண்டிட்டுகள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு வெளியேறினார்கள் என்று உளறித் திரிபவர்கள் முதலில் யதார்த்தத்தை அறிய முயலவேண்டும்..

            http://www.mid-day.com/opinion/2012/jan/190112-opinion-Kashmiri-Pandits-The-Forgotten-Victims.htm

            காசுமீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்துக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள், புலிகளை மதவெறியர்களாகவும், பாசிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்க முனைவதன் காரணம் பாதிக்கப் பட்டவர்கள் சொந்த மதத்தவர்கள் என்பதால்தானே..

            • உண்மையை சொன்னால் குல்திப் நய்யார் போன்ற பழம்பெரும் எழுத்தாளர்களே உங்களுக்கு ”சொம்பு” ஆகி விடுகிறார்களா.சரிதான். சனாதன இந்து மத ஆதிக்கத்திற்காக தனது வாழ்நாளெல்லாம் உழைத்த காந்தியாரையே ஒரு கட்டத்தில் எதிரியாக பாவித்து போட்டுத் தள்ளிய பார்ப்பனியத்துக்கு குல்திப்கள் எம்மாத்திரம்.

              உலகத்திலேயே வானூர்தி பயண சீட்டு கொடுத்து வழி செலவுக்கு பணமும் கொடுத்து ”அகதிகளை” அனுப்பி வைத்த ஒரே அரசு பாசிச வெறியன் சக்மோகனின் அரசுதான்.[அப்போது கசுமீரில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.அது தெரியாமல் ”முதல்வரும்” என்று உளரும் அம்பி நாங்கள் உளறுவதாக பிதற்றுகிறார்.குயிலை பார்த்து பழித்ததாம் கோட்டான்.சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு ”அகதி”களை அனுப்பி வைத்த கூத்துக்கு வேறொரு எடுத்துக்காட்டு இந்த உலகில் உண்டா.

              சரியான திசை வழியில் முன்னேறி சென்று கொண்டிருந்த காசுமீர் விடுதலை போராட்டத்திற்கு மதச்சாயம் பூசி ஒடுக்குவதற்காக இந்திய உளவு துறை நடத்திய பல்வேறு சதி செயல்களில் ஒன்றுதான் பண்டிட்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள்.அதில் பண்டிட்கள் பகடை காய்களாக மாறிப் போனார்கள்.

              பண்டிட்கள் மீதான தாக்குதல்கள் எது ஒன்றுக்கும் போராளி அமைப்புகள் பொறுப்பு கோரியதில்லை.காசுமீர் விடுதலைக்கு போராடும் அமைப்புகள் அனைத்துமே பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பி வரவேண்டும் என்றே கூறுகின்றனர். அவ்வளவு ஏன்.மனசாட்சி உள்ள காசுமீர் பண்டிட்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த சுட்டியில் போய் பார்த்துக் கொள்ளலாம்.

              http://www.kashmiralight.com/images/mn_tickoo.pdf

              பழைய விவாதத்தில் உள்ள சுட்டிகள் வேலை செய்யவில்லை என்றால் அதே கட்டுரைகள வேறு தளங்களிலும் பதிவாகியுள்ளது.பார்க்க.

              http://drshabirchoudhry.blogspot.in/2010/11/kashmir-struggle-is-legitimate-one-cant.html

              http://hvk.org/archive/1997/0497/0151.html

              \\ புலிகளை மதவெறியர்களாகவும், பாசிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்க முனைவதன் காரணம் பாதிக்கப் பட்டவர்கள் சொந்த மதத்தவர்கள் என்பதால்தானே..//

              ஒரு மனிதன் தான் சார்ந்துள்ள மதத்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அது பற்றி பேச கூடாதா.

              அய்யா அறிவாளியே ,
              ”பாதிக்கப்பட்டவர்கள்” என்று ஒப்புக் கொண்ட பிறகு அந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் பாசிச வெறியர்கள் என்பதில் உங்களுக்கு என்னய்யா ஐயம்.நான் ஏதோ இல்லாததை இருப்பதாக காட்டுவது போல் ”சித்தரிக்கிறேன்” எனபது அறிவு நாணயமற்ற செயல்.

              .அந்த பாதிப்பு மத அடிப்படையில் நிகழ்ந்திருக்கும் போது அவர்கள் மதவெறியர்கள் அல்லாமல் மதசார்பற்றவர்களா.

              • திப்பு,

                எல்லாரையும் ஏமாத்துற மாதிரி இங்க முயற்சி செய்யாதீங்க. குல்தீப் நய்யார் மற்றும் அவரை போல பல வெட்டி சோம்பு எழுத்தாளர்கள் நம்ம நாட்டுல இருக்காங்க.

                எனக்கு பல காஷ்மிரி பண்டிட்டுகளை தெரியும்,அவுங்க சொன்ன கதையெல்லாம் கேட்ட உங்களுக்கு உண்மை என்னனு தெரியும்.

                காஷ்மிரி முஸ்லிம்கள் முழுக்க முழுக்க மதவாத சக்திகள் தான். காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம்.

                சோவித் உணின் உடைந்துடன் இந்தியாவின் பலத்தை சோதித்து பார்க்க நினைத்து காஷ்மீரில் ஜிஹாத் போரை தொடங்க நினைத்து ஆப்கானிஸ்தானிலிருந்து தீவிரதிகளை ஐ எஸ் ஐ அனுப்பியது.

                இந்திய ஒன்னும் செய்யது , ராஜீவ் காந்தி சும்மா பார்த்து கொண்டு தான் இருப்பார் என்று நினைத்து செய்த காரியம் இது.

                சோவித் உநிஒநய் ஆப்கானிஸ்தானில் வெற்றி கொண்ட திமிரில் ஜெனரல் ஹமீது குள் இதை செய்தார், அனால் இந்தியஎ அதற்கு தக்க பதிலடி கொடுத்து காஷ்மீரை கைப்பற்றியது.

                எல்ல முஸ்லிம்களுக்கும் இது தான் அரசியல் ப்ரகடம்.குறைவாக இருக்கும் பொழுது இஸ்லாம் உலக அமைதியின் மதம் , அதிகமாகும் பொழுது அனைவரும் போர் வீரர் ஆகி விடுவார்.

                • எனக்கு அமேரிக்கால ஒபாமாவ தெரியும், சப்பான்ல சாக்கீசான தெரியும், டெல்லியில சூனிய காந்திய தெரியும், அப்புடியே காச்மீருல பன்டிட்டுகள தெரியும். அல்லாத்தையும் எனக்கு தெரியும், எம்பேரு கரிக்குமார் என்ற சூப்புறமணி சாமி.

              • 19.01.1990 அன்று குடியரசு தலைவர் ஆட்சி காசுமீரில் அமல் படுத்தப்பட்டது. காரணம் அதற்கு முன் ஜிகாதிகளால் நடத்தப்பட்ட வெறியாட்டம்.

                04.01.1990 அன்று ஹிஜ்புல் முஜாகிதீன் (ஐ.எஸ்.ஐ – பாகிஸ்தான் ஜாமாத்-இ-இஸ்லாமி கள்ளக் கூட்டின் கைக்கூலிப்படை) விடுத்த ஜிஹாத் அழைப்பு – காசுமீரை பாகிஸ்தானுடன் இணைக்கவும், இந்துக்கள் காசுமீரை விட்டு உடனே வெளியேறவும் எச்சரிக்கை.

                அதைத் தொடர்ந்து இந்துக்களின் மீது தாக்குதல். மசூதிகளிலும், வாகனங்களிலும் ஒலிபெருக்கி மூலம் இந்துக்கள் வெளியேற கடுமையான எச்சரிக்கை, தொடர்ந்து காசுமீர் பள்ளத்தாக்கில் ஆயுதம் தாங்கிய ‘ஜிஹாதிகள்’ அராஜகம். பருக் அப்துல்லாவின் அரசு செயலற்றுப் போனது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பண்டிட்டுகள் உயிருக்குப் பயந்து வெளியேறினர். 19.01.1990ல் குடியரசுத் தலைவர் ஆட்சி. சொம்புகள் கூறுவது ஜக்மோகன் விமானப் பயணச்சீட்டுடன் கையில் காசும் கொடுத்து உல்லாசப் பயணத்துக்கு பண்டிட்டுகளை அனுப்பினார் என்று.. பொதுப்புத்தி இருந்தாலே போதும் இத்தனை பெரிய வெளியேற்றத்துக்கு இதெல்லாம் சாத்தியமா என்று..

                காசுமீர் ஜிகாத் விடயத்தில் அப்படிப் பேசுவது, தமிழ் ஈழ முஸ்லீம்கள் விடயத்தில் இப்படிப் பேசுவது ஏன் என்றுதான் மீண்டும் கேட்கிறேன்..

                • \\சொம்புகள் கூறுவது ஜக்மோகன் விமானப் பயணச்சீட்டுடன் கையில் காசும் கொடுத்து உல்லாசப் பயணத்துக்கு பண்டிட்டுகளை அனுப்பினார் என்று.. பொதுப்புத்தி இருந்தாலே போதும் இத்தனை பெரிய வெளியேற்றத்துக்கு இதெல்லாம் சாத்தியமா என்று..//

                  கொடுத்த ஆதாரங்களை மறுக்க துப்பில்லாமல் உளறுவாய்கள் பொதுப்புத்தியை சரணடைந்துள்ளன.பொதுப்புத்தி என்றால் என்ன.ஊடகங்களை கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கங்கள் உருவாக்கும் கருத்தாக்கங்களை அப்படியே ஆராயாமல் நம்பி ஏற்றுக்கொண்டு உளறி திரிவதுதானே.அது உண்மையை உணர்த்துமா,சொந்த புத்தி கொண்டு செய்திகளை நோக்குவது உண்மையை உணர்த்துமா.

                  காசுமீர் பண்டிட்களின் வெளியேற்றத்தில் சக்மோகனின் குள்ளநரித்தனத்தை அம்பலப்படுத்தி காட்டியற்காக குல்திப் நய்யார் மீது சொம்பு என பாயும் அம்பிகள் அதே குல்திப் நய்யார் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் துக்ளக் சோ மீது சொம்பு என பாய்வார்களா.

                  சக்மோகனின் அயோக்கியத்தனத்திற்கு மற்றுமொரு ஆதாரம்.

                  http://www.kashmirlibrary.org/kashmir_timeline/kashmir_references.htm#fn31b

                  சுட்டியிலிருந்து;

                  The Jagmohan regime witnessed the exodus of almost the entire small but vital Kashmir Pandit community from the valley. Padma Vibhushan Inder Mohan (later he renounced the title) and I [Balraj Puri] were the first public men to visit Kashmir in the second week of March 1990 after the new phase of repression had started. Though the Kashmiri Muslims were in an angry mood, they heard us with respect and narrated their tales of woe. At scores of the meetings to which we were invited during our short but hectic visit, Kashmiri muslims expressed a genuine feeling of regret over the migration of Kashmiri Pandits (KP) and urged us to stop and reverse it. Encouraged by the popular mood, we formed a joint committee of the two communities with the former chief justice of the High Court Mufti Bahauddin Farooqi as president, the Kashmiri Pandit leader H.N.Jatto as vice-president and a leading advocate Ghulam Nabi Hagroo as general secretary, in order to allay the apprehensions of the Kashmiri Pandits. Jatto recalled that the Pandits had reversed their decision to migrate in 1986 after the success of the goodwill mission led by me. He expressed the hope that my new initiative would meet with similar success. A number of Muslim leaders and parties, including militant outfits, also appealed to the Pandits not to leave their homes, Jatto welcomed and endorsed their appeals, but soon migrated to Jammu himself. He told me that soon after the joint committee was set up, the Governor [Jagmohan] sent a DSP to him with an air ticket for Jammu, a jeep to take him to the airport, an offer of accomodation at Jammu and an advice to leave Kashmir immediately.

                  \\காசுமீர் ஜிகாத் விடயத்தில் அப்படிப் பேசுவது, தமிழ் ஈழ முஸ்லீம்கள் விடயத்தில் இப்படிப் பேசுவது ஏன் என்றுதான் மீண்டும் கேட்கிறேன்..//

                  ஈழ முசுலிம்கள் வெளியேற்றம் குறித்து நான் எழுதியிருக்கும் வாதங்களுக்கு விடையேதும் சொல்லாமல் ”அப்படி” ”இப்படி” என சொல்வித்தை காட்டுவது விவாதம் ஆகுமா.

                  • // கொடுத்த ஆதாரங்களை மறுக்க துப்பில்லாமல் உளறுவாய்கள் பொதுப்புத்தியை சரணடைந்துள்ளன.பொதுப்புத்தி என்றால் என்ன.ஊடகங்களை கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கங்கள் உருவாக்கும் கருத்தாக்கங்களை அப்படியே ஆராயாமல் நம்பி ஏற்றுக்கொண்டு உளறி திரிவதுதானே.அது உண்மையை உணர்த்துமா,சொந்த புத்தி கொண்டு செய்திகளை நோக்குவது உண்மையை உணர்த்துமா. //

                    மறுக்கும் ஆதாரங்களைப் புரிந்து கொள்ள துப்பில்லை என்றால் பொதுப்புத்தியைத் தானே பரிந்துரைக்க முடியும்..

                    // காசுமீர் பண்டிட்களின் வெளியேற்றத்தில் சக்மோகனின் குள்ளநரித்தனத்தை அம்பலப்படுத்தி காட்டியற்காக குல்திப் நய்யார் மீது சொம்பு என பாயும் அம்பிகள் அதே குல்திப் நய்யார் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் துக்ளக் சோ மீது சொம்பு என பாய்வார்களா. //

                    ’பழம் பெரும் எழுத்தாளர் குல்தீப் நய்யாரை’ நீங்களும், சோவும் தேவைக்கேற்ப கொண்டாடுவதால் நானும் அவர் சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டுமா..

                    ஜக்மோகன் விமானப் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்தவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான காசுமீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை அரங்கேற்றிய ஜிகாதிகளை குற்றமற்றவர்கள்,தேசிய விடுதலைப் போராளிகள் என்று புரட்டுவது, புலிகளை மதவெறி பாசிஸ்டுகள் என்று ‘உண்மையை’ சொல்வது.. நடத்துங்கள்.. ஆனால் நம்பகத்தன்மை என்று ஒன்று கரைந்து கொண்டே இருக்கும்..

                    இஸ்லாமிய மக்களின் துயரங்கள் மதவெறி பிடித்த சிலரால் நிர்ணயிக்கப்படுவது வரலாறு முழுக்க காணப்படும் உண்மை.. மத உணர்வு, உண்மைகளை ஏற்க மறுக்கத் தொடங்கும் போது, மதவெறிக்கு எளிதில் துணை போய் அதனுடன் கலந்துவிடும் என்பதற்கு இந்து/இஸ்லாமிய மத அமைப்புகள் மட்டுமல்ல, இஸ்லாமிய ’முற்போக்கு’ சிந்தனையாளர்களும் சிறந்த உதாரணங்கள்..

  5. மனித குலம் உருவானது முதல் மனிதர்கள் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு போய் குடியேறுவது காலம் காலமாக நடப்பது தான்.ஆனால் இப்போது தமிழகத்தில் வந்து குடியேறுவோர் எண்ணிக்கை வரைமுறை இல்லாமல் போய்விட்டது. இந்த வட இந்திய வந்தேறிகளால், அவர்களின் அராஜகத்தினால் மராட்டியம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.இவர்களால் தமிழகத்தில் கால்நடைகளுக்கு கூட பாலியல் தொல்லை ஏற்படுகிறது.இலங்கையில் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்க ஏழை சிங்களர்கள் தான் இனவெறி அரசினால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டனர். வட இந்திய மேட்டுக்குடியினர் தங்களின் தென்னிந்தியாவின் மீதான ஆதிக்க விஸ்தரிப்பின் ஒரு பகுதியாகவே இதை நுணுக்கமாக செய்கிறார்கள். மேலும் இந்த வந்தேறிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதோடு உள்ளூர் தொழிலாளர்களின் நியாயமான கூலிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வந்தேறிகளால் தமிழகத்தின் முதலாளி வர்க்கத்தினருக்கு தான் லாபம். இந்த உண்மை சர்வதேசம் பேசும் வினவு கும்பலுக்கு தெரியாதது ஏனோ?

  6. த.தே.பொ.கட்சியினருக்கு சில கேள்விகள்.

    1.மிகை எண்ணிக்கையில் பிற மாநிலத்தவர் இங்கு குடியமர்வதை தடுக்க கோரும் நீங்கள் மராட்டியத்தில் இதே கோரிக்கையை முன்வைக்கும் தாக்கரே கும்பல் குறித்து என்ன நிலைப்பாடு எடுக்கிறீர்கள்.

    2.பிற மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என கோரும் நீங்கள் இதே அளவு கோலை பிற மாநிலங்களில் குடியமர்ந்துள்ள தமிழர்களுக்கும் பொருத்துவீர்களா.

    3.கன்னட இன வெறியர்கள் நிரம்பிய பெங்களூரில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கை உங்களுக்கு தெரிந்திருக்கும்.அந்த இன வெறியர்கள் குடும்ப அட்டை குறித்து இப்படி ஒரு கோரிக்கையை வைப்பதாக இருந்தால் அதனை நீங்கள் ஏற்கிறீர்களா.

    4.மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஐ வரையறை ஆண்டாக கொண்டு அதற்கு பிறகு இங்கு வந்த பிற மொழி பேசுவோரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்.அப்படியானால் வெள்ளையர் ஆட்சியின்போதே இங்கு குடியேறி தமிழகத்தை கொள்ளையிட்டு அள்ளிச்செல்லும் மார்வாடி,சிந்தி,பார்சி முதலான பனியா கும்பல் இந்த நாட்டின் ஆதி குடிகளா.
    முதன்மையாக வெளியேற்றப்பட வேண்டிய இந்த கொள்ளை கும்பலை காக்கும் கயமையன்றோ உங்கள் நிலைப்பாடு.

    • அங்கெல்லாம் அவர்கள் செய்வதால் நம்மை காப்பாற்றிக்கொள்ள நாமும் இன உணர்வும் மாநில உணர்வும் கொள்ளவேண்டும் என்கிறோம்.

        • சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இனவெறியோடும் சுயநலமாகவும் இருப்பதால் நாமும் அப்படி தான் இருக்க முடியும். அப்போது தான் தமிழர்கள் பிழைத்திருக்க முடியும்.மொழிவாரி மாநிலம் வேண்டும் என்று முதலில் தகராறு செய்தவர்கள் தெலுங்கர்கள்.தண்ணீர் விட முடியாது என்று தகராறு செய்பவர்களும் மற்ற மாநிலங்கள் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பரந்த மனப்பாண்மையோடு இப்படித்தான் இருக்க முடியும். இல்லாவிட்டால் பிழைக்க முடியாது.

      • அப்படியானால் அவர்களை போல தமிழினமும் இன வெறியர்களாக சீரழியவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என்றாகிறது.

        கடல் மலை அத்தனையும் தாண்டி மூலதனம் உள்ளே வரலாம்.டாட்டாவும் அம்பானியும் பிர்லாவும் பாரதி ஏர்டெல்லும் தமிழகத்தை ஒட்ட சுரண்டி கொள்ளையிடலாம்.விற்பதற்கு உழைப்பை தவிர ஏதுமில்லாத ஏழை இங்கு வரக்கூடாதோ.அவனது உழைப்பால் விளையும் அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டே அவனது உரிமைகளை மறுப்பது நன்றி கொன்ற நயவஞ்சகம்.

        தமிழினத்தை அடிமைபடுத்தி சுரண்டிவரும் இந்திய ஏகாதிபத்தியத்தையும் அதனை இயக்கும் பார்ப்பனிய பனியா கும்பலையும் உண்மையான எதிரிகளாக கண்டுணர்ந்து தமிழினம் போராடி விடுதலை பெற்று விட கூடாது என்ற கெட்ட உள்நோக்கத்துடன் பொய்யான எதிரிகளாக வட இந்திய தொழிலாளர்களை காட்டி நாடகம் ஆடுகிறீர்கள்.

        கேவலம் புழுத்த அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டையை, திருடர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை அவர்களுக்கு தர கூடாது [இதனை சலுகைகள் என்று உங்கள் ஆதரவாளர் பரத் இங்கு பின்னூட்டம் போடுகிறார்.உங்களுக்கு எப்படி இருக்கிறதோ எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது]என கூச்சல் போடும் நீங்கள் கோடிக்கணக்கில் தமிழகத்தை கொள்ளையிடும் வட இந்திய பனியா கும்பலின் சொத்துக்களை இழப்பீடின்றி பறிமுதல் செய்ய கோருவதில்லையே ஏன்.

        பஞ்சம் பிழைக்க வரும் ஏழைகளை அரவணைப்பதுதான் தமிழர் பண்பாடு. அவர்களை அடித்து விரட்டுவது போக்கிரித்தனம்.நீங்கள் என்னதான் கரடியாக கத்தினாலும் தமிழ் மக்களிடம் உங்கள் இனவெறி அரசியல் எடுபடாது.

    • We should reciprocate whatever others are doing. Its as simple as that. As for as Im concerned the Maharastrians behave differently when they are in their homeland. Its only fair to say we should give back in kind. I dont know about the Biharis.

  7. ஒருநாட்டில் மக்கள் வேலைக்காக இடம்பெயருவது தவிர்க்கமுடியாதது. ஆனால் ஒரு மாநிலத்தில் குடிபெயர்ந்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்த மாநிலத்தில் வாழும் பூர்வீக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும். இதனை தடுக்கும் பொருட்டு அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது இனவெறி ஆகாது. அது நமது அடையாளத்தை உறுதிசெய்ய ஒரு முயற்சியே. அதற்காக குடிபெயர்ந்த்தவர்களை விரட்டகூடாது. மாநில அரசு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் அதே நேரத்தில், அவர்களின் வாக்கு அளிக்கும் உரிமையை அவர்கள் மாநிலத்திலேயே வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசின் நலதிட்டங்கள் அவர்களுக்கு செல்வதில் எந்த குறையும் இருக்ககூக்டாது. அவர்களின் உழைப்பை சுவைக்கும் நாம் அவர்களுக்கு வசதியயும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

  8. தினமலரில் புலிகலின் மருபக்கம் என்ர செதியில் கருத்து போட்டென் athu முதலில் மறு பக்கம் என்றால் என்ன என்று புரியாத வர்கள் கருத்தை அள்ளி வீசுகிறார்கள் புலிகளின் மறு பக்கம் என்ற தலைப்பை பார்த்ததும் புலிகள் வன்முறைக்கு அப்பாட்பட்டு செய்த நல்ல காரியங்களை பற்றி கட்டுரை எதாவது சொல்லு கிறதா என்றால் அதன் நிஜ பக்கத்தை பற்றியே பேசுகிறது இதில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லை புலிகள் வன்முறை கொண்டு போராடின இயக்கம் தான் காட்டி கொடுபவர்களை கொலை செய்த இயக்கம் தான் எதோ புதிதாக சொல்வது போல் யாருக்கும் ஒன்றும் தெரியாததை சொல்ல்வது போல் கதை விடுகிறார்கள் enru karuththu veli varave illai ithukku peyar thaan unmai neermai nadu nilamai

  9. தமிழ் நாடு என்பதே இந்தியத் தேசியமும் இந்திய அரசமைப்பும் உருவாக்கிய ஒரு மாநிலந்தானே ! இந்திய சுதந்திர அரசு ஏற்படுவதற்கு முன் தமிழ் நாடு என்று ஒரு மாநிலமே இல்லையே! பல மொழி பேசும் மக்கள் கொண்ட சென்னை மாகாணம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிறகு எஞ்சியிருந்த சென்னை மாகாணத்திற்கு தி.மு.கவினர் சூட்டிய பெயரே தமிழ் நாடு என்பது ! ஆகவே, இந்திய தேசியமும் – தி.மு.கவும் உருவாக்கிய தமிழ் நாட்டை வேண்டாம் என்று தமிழ்த் தேசிய பாசிச வாதிகள் கூறுவார்களா?

    • உன் மூளையை கொண்டு போய் சூளையில் தான் வைக்க வேண்டும். தமிழர் என்னும் இனமும் அவர்கள் வாழ்நிலமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பு காலப்போக்கில் சுருங்கி இப்போதைய நிலைக்கு வந்திருக்கிறது. இதுவும் உனக்கு பொறுக்கவில்லையா? கர்நாடகத்திலும் கேரளத்திலும் வாழும் தமிழ் பேசும் மக்களை உன் நாட்டுக்கு ஓடு என்று அங்கிருக்கும் இன வெறியர்கள் அடித்து தமிழகத்துக்கு விரட்டுகிறார்கள். அந்த இனவெறியர்களுக்கே தமிழகம் தான் தமிழ் மக்களின் சொந்த நாடு என்று தெரிந்து இருக்கிறது. உனக்கு ஏன் தெரியவில்லை?
      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட சங்க இலக்கியங்கள் தமிழ் என்னும் மொழியையும் தமிழர் என்னும் இனத்தையும் பற்றி பேசுகின்றன. அது மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை கூட “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு” என்று வரையறுக்கின்றன. அந்தக்காலத்தில் தென்னிந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகபட்சம் பத்து லட்சம் பேர் இருந்திருப்பார்கள். காலப்போக்கில் அவர்கள் பெருகியது மற்றும் வந்து சங்கமித்தவர்கள் சேர்ந்து இன்று ஏறத்தாழ எட்டு கோடிப்பேர் இருக்கிறார்கள். சிங்கள இளவரசனாகிய துட்டகைமனு “தெற்கே கடல், வடக்கே தமிழர்; நான் எப்படி கால் நீட்டி உறங்க முடியும்” என்று தன் தாயிடம் கேட்பது சிலர் காதுகளில் இன்னும் ரீங்கரிக்க கூடும்.

      • ” கர்நாடகத்திலும் கேரளத்திலும் வாழும் தமிழ் பேசும் மக்களை உன் நாட்டுக்கு ஓடு என்று அங்கிருக்கும் “” இன வெறியர்கள்”” அடித்து தமிழகத்துக்கு விரட்டுகிறார்கள். அந்த இனவெறியர்களுக்கே தமிழகம் தான் தமிழ் மக்களின் சொந்த நாடு என்று தெரிந்து இருக்கிறது. உனக்கு ஏன் தெரியவில்லை?”

        அதே வேலையை நாமும் செய்தால் நம்மிடம் உள்ளது இனவெறியா? அல்லது இனவுனர்வா?

        • இனவெறியா அல்லது இன உணர்வா என்பதல்ல இங்கு பிரச்சினை. உதைபடும் தமிழர்கள் ஓடிவருவதற்காவது ஒரு நாடு வேண்டுமல்லவா? அந்த நாடு தான் தமிழ்நாடு. இந்த நாட்டுக்கும் உங்கள் சர்வதேசிய பொதுவுடைமை மூலம் ஆப்பு வைத்து விடாதீர்கள். அடிபடும் தமிழர்கள் ஒதுங்க கூட நிழல் இல்லாமல் போய்விடும். மேலும் தமிழ்நாடு என்பது மற்ற இந்திய மாநிலங்களை போல மொழி அடிப்படையில் அமைந்த மாநிலம்.அதை மறந்து விட வேண்டாம். வட இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் தொழிலாளி அடையாளத்தை தான் நீங்கள் காண்கிறீர்கள். மற்ற அடையாளங்களை (இந்தி, இந்து, வடவர்) ஆகியவற்றை ஏன் காண்பதில்லை? உங்கள் கொள்கை வக்கிரம் அப்படி.

  10. மீண்டும் ஒரு சிந்து வெளி சம்பவம் நடைபெறாமல் தடுப்பது தவறு அல்ல அப்படி நடந்தால் மீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலுக்குள் தமிழினம் மாட்டு வது தவிர்க்க முடியாது எதுவுமே அளவுக்கு மிஞ்சி போனால் ஆபத்து தான் உள்ளே வருபவர்களும் வெளியே போகிறவர்களும் சம அளவில் இருந்தால் பொருளாதார பாதிப்பு தவிர்க்க முடியும் எந்த ஒரு மனிதர்கள் இடத்திலும் வேற்றுமை காட்டுவது நல்லது அல்ல அதே நேரம் சுயத்தை இழக்காமல் இருக்கவும் வேண்டும்

  11. கர்நாடகாவில் வேறு இனத்தான் அங்கு மனை வாங்க இயலாது. கேரளாவில் மாற்ற மாநிலங்களில் இருந்து குடியேறி அங்கேயே படித்த மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப் படுகிறது. அதனால் த.தே.பொ.கட்சியின் வந்தேறிகள் வெளியேற்ற நிலைப்பாட்டில் என்ன குற்றம்? வந்தேறிகளின் மிகுதியால் நமது இனத்தின் அடையாளத்தை இழந்து வருகிறோம். நமது உணர்வுகள் மழுங்கடிக்கப் படுகிறது. அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?

  12. \\கர்நாடகாவில் வேறு இனத்தான் அங்கு மனை வாங்க இயலாது.\\

    தம்பி நீ எந்த ஊருல இருந்து எழுதுர நீ… முன்ன பின்ன தமிழ் நாடு செக் போஸ்ட் பக்கம் கூட நீ போனது இல்லை போல இருக்கு….

  13. கர்னாடகத்தில் வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு இப்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. முன்பு போல் இப்போது இல்லை. எல்லையோர கர்நாடக மாவட்டங்களில் தமிழர்கள் வயல் வாங்குவதற்கும் மறைமுக தடை உண்டு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கெல்லாம் வயலை குத்தகைக்கு மட்டும் எடுக்க முடியும். இது நான் சமீபத்தில் அறிந்து கொண்டது. மேலும் மாண்டியா போன்ற மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் இப்போதும் இருக்கிறார்கள். எந்த ஒரு நலத்திட்டத்திலும் தமிழர் என்று சொன்னால் பதிய மறுக்கிறார்கள். இது தான் நிலவரம்.
    ஏகாதிபத்தியத்தையும் பண்ணாட்டு நிறுவனங்களையும் நம்மில் ஒரு சாரார் தான் ஆதரிக்கிறார்கள். பிடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தி வெளியேற்றி விடலாம். ஆனால் லட்சக்கணக்கில் வந்து குவியும் வெளிமாநிலத்தவர் விவகாரம் வேறு. முதலிலேயே உஷாராக இருக்கவில்லை என்றால் பின் எதுவும் செய்ய முடியாது. மும்பையில் குடியேறிய வட இந்தியர்கள் எந்த அளவுக்கு இந்தி வெறியை காண்பிக்கிறார்கள். மராட்டியர்கள் எந்த அளவுக்கு தங்கள் சொந்த தலைநகரத்திலேயே அன்னியர்களாக உணர்கிறார்கள் என்பதை சொல்ல தேவையில்லை. ‘சத் பூஜை’ மாதிரியான வட இந்திய விழாக்களை அரசியல் நோக்கத்தோடு ஆரவாரமாக மும்பையில் கொண்டாடும் வட இந்தியர்கள் அவ்விழாக்களின் போது உ.பி, பிகார் மாதிரியான தங்கள் மாநிலங்களில் இருந்து அரசியல்வாதிகளையும் கலந்து கொள்ளச்செய்து தங்கள் ஆதிக்கத்தை காண்பிக்கிறார்கள். இதனால் மும்பையில் மராட்டிய இனவெறி கொழுந்து விட்டு எரிகிறது. சென்னையிலும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் இப்படிப்பட்ட நிலைமை தோன்றக்கூடாது. வேண்டுமானால் லட்சக்கணக்கில் இங்கு வந்து குவியும் இவர்களை பொதுவுடைமை பூத்து குலுங்கும் சீனாவுக்கும் கியூபாவுக்கும் அனுப்புவது தானே? ஆரம்பத்தில் ஏழைகள் என்ற பெயரில் குடியேறுவது, அப்புறம் ஆதிக்கம் செய்வது, பின்பு தங்கள் மாநில அரசியல், ஆதிக்கம் ஆகியவற்றை இங்கு கொண்டு வருவது. இது தான் உலக நடைமுறை.

  14. //இட்லர் செயல்படுத்திய பாசிசம்//

    ஹிட்லர் செயல்படுத்திய நாசிசம்…. பாசிசம் என்பது முசோலினி செயல்படுத்திய இனவெறி …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க