Tuesday, October 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

-

ஜெனிவா தீர்மானம் : முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு !ராஜபக்சே அரசு நடத்திய இன அழிப்புப் போர் தொடர்பாக விசாரிப்பதற்கு, ராஜபக்சே அவர்களால் நியமிக்கப்பட்ட LLRC குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்சே அரசு விரைந்து நிறைவேற்றியிருக்கிறதா என்பதை, ஐ.நா மனித உரிமைகள் குழு கண்காணிக்க வேண்டும் என்பது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்.

மனித உரிமை என்பது மற்ற நாடுகளின் கையை முறுக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் கருவி என்பதும் ஐ.நா மன்றம் எனப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ரப்பர் முத்திரை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு, ராஜபக்சே போன்ற பாசிசக் கிரிமினல்கள், தமது குற்றத்தை மறைத்துக்கொள்ளும் முகத்திரையாக மட்டுமே இறையாண்மை என்ற சொல் பயன்படுகிறது என்பதும் உண்மை.

இலங்கையின் இறையாண்மை விசயத்தில் இலங்கையை விடவும் அதிகமாக இந்திய அரசுதான் கவலைப்பட்டு வருகிறது என்பதே வரலாறு. இப்போதும் கூட அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்தியா. “ராஜபக்சே ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஐ.நா கண்கணிக்கலாம்” என்பது இந்தியா இந்த தீர்மானத்துக்கு கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

நேற்றைய தினமணியின் முதல் பக்க செய்தியைப் படித்துப் பாருங்கள்:

“போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித உரிமை மீறல் பற்றி விசாரித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தீர்மானத்தினை அறிமுகப்படுத்தும் அமெரிக்க பிரதிநிதி பேசுகிறார்.

“போர் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் பேசியிருக்கின்றன.

“இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய இந்தியப் பிரதிநிதி, வாக்கை மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக அளித்திருக்கிறார். இந்தியா முன்வைத்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

திருத்தப்பட்ட இந்த தீர்மானம், 2009 நாடாளுமன்றத் தேர்தல் நாளுக்கு முன், கருணாநிதி உண்ணாவிரதமிருந்து பெற்றுத்தந்த “போர்நிறுத்தத்தையும்”, ஈழத்தாய் வாங்கித் தர விரும்பிய “தமிழ் ஈழத்தையும்”  ஒத்ததாக இருப்பதனாலோ என்னவோ, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே இதனை ஆதரித்திருக்கின்றனர்.

இந்திய அரசின் உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இன அழிப்புப் போரை ராஜபக்சே துவங்கியிருக்கவும் முடியாது, முள்ளிவாய்க்காலில் முடித்திருக்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்த, மறுக்கவியலாத உண்மை.  எனினும், அமெரிக்க அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று, தமிழக காங்கிரசு தொடங்கி, தமிழுணர்வாளர்கள் வரை அனைவரும் ஓரணியில் நின்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்கள்.

மன்மோகன் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன அழிப்புப் போர்க்குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணக்குழுவின் நேரடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரினார் பழ.நெடுமாறன்.

ஈழத்தமிழர்களின் கழுத்தில் ஈரத்துணி போட்டு இறுக்கிய இந்திய அரசு, கத்தி வைத்து அறுத்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்தால், அது இந்தியா செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகி விடுமா? இன அழிப்புப் போர்க்குற்றத்துக்காக ராஜபக்சே மீது இந்தியா விசாரணை கோரவேண்டும் என்றால், இந்தக் குற்றத்தின் பங்காளியும் வழிகாட்டியுமான இந்தியா மீது யார் விசாரணை கோருவார்கள்? இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்திய அரசின் குற்றத்தை அம்பலப்படுத்திக் கூண்டிலேற்றுவது நம்முடைய கடமையா, அல்லது இந்திய ஆளும் வர்க்கத்தை தப்பவைப்பதா?

இந்த விமரிசனம் தமிழுணர்வாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய வல்லாதிக்கம் பற்றியெல்லாம் தங்களுக்குத் தெரியுமென்றும், ராஜபக்சே அரசை சர்வதேச சமூகத்தின் முன் கூண்டிலேற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் கூறக்கூடும்.

“இது இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அமுக்கும் ராஜதந்திரம்” என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் தருவார்கள். இதுவும் 1983 முதல் நாம் பலமுறை கேட்டுப் புளித்த வசனம்தான். இந்திய உதவியுடன் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக, ஈழ இனவாதிகள் 1983 முதல் நடத்திவரும் சந்தரப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இன்றைய கோரிக்கையும்.

மறுபடியும் முதல்லேர்ந்தா? அமாம், அதுவேதான்.

000

இனி தீர்மானத்துக்கு வருவோம். இரந்தேனும் இந்திய அரசின் ஆதரவைப் பெறவேண்டிய அளவுக்கு அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைகள் மன்றத்தின் முன் வைக்கப்பட்ட அமெரிக்க அரசின் நகல் தீர்மானம், இலங்கையின் மீது இனக்கொலைக் குற்றமோ, போர்க்குற்றமோ சாட்டவில்லை. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரவில்லை.

மாறாக, “ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட Lessons Learnt and Reconcilliation Commission (படிப்பினைகளைக் கற்றல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதலுக்கான ஆணையம்) முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்” என்று பாராட்டுகிறது. அதன் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமல்படுத்துமாறும், எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதற்கான திட்டவரைவு ஒன்றினை, சாத்தியப்பட்ட அளவு விரைவில் முன்வைக்குமாறும் கோரியிருக்கிறது.

LLRC என்ற அமைப்பை ராஜபக்சே அரசு நியமிப்பதற்கான நோக்கம் என்ன? இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குகளுக்கு இழுக்கப்படுவோமென்பதை இலங்கை அரசு அறியும். நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் அடைபட்டுவிடவில்லை என்று காட்டுவதன் மூலம் சர்வதேச தலையீட்டினை முறியடிப்பதுதான் ராஜபக்சே LLRC என்ற அமைப்பை நியமிப்பதற்கான நோக்கம். இது லாக் அப் கொலை நடந்தவுடன் அரசு போடும் ஆர்.டி.ஓ விசாரணையைப் போன்றது.

போரின் துவக்க காலத்தில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டது மற்றும் பிற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி, அவற்றை சமாளிப்பதற்காக, 2007 இல் “சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு” ஒன்றை, ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கை அரசு நியமித்தது. அதுவும் LLRC யைப் போன்றதொரு இழுத்தடிப்புத் தந்திரமே. இந்த தந்திரங்கள் அனைத்தையும் இந்தியாதான் இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்தியா கொண்டுவந்திருக்கும் திருத்தம், “தொழில் நுட்ப உதவி” என்ற ஷரத்தின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா தலையிடுவதற்கான வாய்ப்பையும் அடைத்து விட்டது. தீர்மானத்தை ஆதரிப்பது என்ற பெயரில் இந்தியா கொண்டு வந்திருக்கும் இந்த “சின்ன” திருத்தம், மனித உரிமைக் கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாக செயல்படும். இது இந்திய இலங்கை அரசுகள் பேசி வைத்துக் கொண்டு நடத்தியிருக்கும் கபட நாடகம்.

ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடியவர்கள், இனப்படுகொலைக் குற்றவாளியான மன்மோகன் அரசை, அக் குற்றத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி, நீதிபதியாகவும் நியமித்து விட்டார்கள். தீர்ப்பை “திருத்தி” எழுதி, குற்றவாளி ராஜபக்சேவை விடுவித்து விட்டார் மன்மோகன் சிங்.

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல்  தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள்.

“உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

உருகும் என்பது உணர்வாளர்களின் நம்பிக்கை.

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

  1. அது சரி வீராதி வீர காம்ரேடு பிடெல் காஸ்ட்ரோ அரசு இனப்படுகொலையை ஆதரிப்பதேன்?கம்யூனிச நாடுகள் எல்லாம் இலங்கைக்கு சப்பை கட்டு கட்டுவதென்?இன்னும் புளித்துப்போன அமெரிக்க எதிர்ப்பை வைத்துக்கொண்டு தமிழனுக்கு அணு அளவு நன்மை கூட கிடைக்காமல் பார்த்து கொள்ள சொல்கிறீர்களா?

    • இந்த இன அழிப்பு படுகொலையை இலங்கை அரசுக்கு ஆயுதம் சப்ளை பண்ண அமெரிக்காவுக்கும் கூடவே இருந்து தமிழனின் கழுத்தறுத்த இந்தியாவுக்கும் இந்த தீர்மானத்தை கொண்டு வர என்ன யோக்கியதை இருக்குன்னு சொல்லிட்டு இந்த கேள்வியை கேட்டா நேர்மையா இருக்கும்.

      • இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்ததில் சீனாவுக்குப் பெரும்பங்கு உண்டு.
        நீங்கெல்லாம் நேர்மையைப் பற்றி பேசுறீங்க!

        • கரெக்டு அனில், அப்படி ஆயுதம் சப்ளை செஞ்சு தமிழன படுகொலையில் துணை போன சீனா இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால் நீங்க அப்பவும் ஆதரிச்சிருப்பீங்களா? அல்லது இந்த தீர்மான்த்தை ஆதரிச்சிருந்தா சீனாவை அதன் குற்றத்தை மன்னித்து தமிழின நண்பனாக கருதியிருப்பீர்களா என்பதே எனது கேள்வி.

          • ஏன்பா எந்த பொது பிரச்னையானாலும் உங்க இத்து போன கம்யுனிசத்தை ஏனையா கலக்குகிறீர்… அதிலும் போலி கம்யுனிசம் என்று ISI கம்யுனிஸ்டுகளால் கருதப்படும் சீனாவின் செய்கையை ஏன் நியாயப்படுத்துகிறீர்? இலங்கைக்கு அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் அதிகமா, சீன, பாகிஸ்தான் அரசுகள் அள்ளி கொடுத்த ஆயுதங்கள் அதிகமான்னு ஆராய்ச்சி எதற்கு…

            சீனா இலங்கையை ஆதரிப்பதன் மூலம் அது ஒரு மீப்பெரு இனப்படுகொலையை தனது நாட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறது என்பதை அறியலாம்… அப்படி நடந்தால் அதையும் பிற கம்யுனிச, அரபு சர்வாதிகார நாடுகள் ஆதரிக்கும், அமெரிக்கா தான் எதிர்த்து குரல் கொடுக்கும்… இதில் ஐயமில்லை…

            ஒரு நாட்டின் இரண்டாவது மெஜாரிட்டி இனம் அழிந்திருக்கிறது… அதை அழிக்க அந்த நாட்டின் அரசுக்கு துணிவு இருந்திருக்கிறது என்றால் பிற நாடுகளின் உதவி மற்றும் ஊக்கம் இல்லாமல் இருந்திருக்க முடியாது… இலங்கையின் மீதான அமெரிக்கா தீர்மானம் எந்தெந்த நாடுகள் இன அழிவை பின் இருந்து இயக்கியிருக்கின்றன என தெளிவு படுத்த கொண்டு வரப்பட்ட இராஜாங்க ரீதியான யுத்தி. ஏற்கனவே அமெரிக்காவோடு பேசி வைத்துக்கொண்டபடி சிறு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் இந்த இராஜதந்திரத்தில் சிக்காமல் தப்பியிருக்கிறது இந்தியா…

            சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இனப்படுகொலையில் தங்கள் நிலைப்பாட்டை உள்ளங்கை நெல்லிக்கணியாக்க இந்த தீர்மானத்தை பயன்படுத்தி கொண்டுள்ளன…

              • \\சீனா இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால் நீங்க அப்பவும் ஆதரிச்சிருப்பீங்களா\\

                ஊசியின் கேள்விக்கு ஊசி முனை அளவு கூட வாய்ப்பே இல்லை… இலங்கையின் இனவாத அரசை ரோல் மாடலாக கருதி அதை போல ஒரு பெரும் இனப்படுகொலைக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது சீன அரசு. இலங்கை திருடன் என்றால் அவனை இயக்கிய பெருந்திருடன் சீனா. ஒரு திருடன் இன்னொரு திருடனை எதிர்த்து எந்த வித தீர்மானமும் கொண்டு வர வாய்ப்பில்லை…

                இந்திய உட்பட எந்த ஒரு ஆசிய நாடும் இப்படி ஒரு தீர்uமானத்தை கொண்டு வரவே வராது, ஏனெனில் இறையாண்மை என்பது ஆசிய நாடுகளுக்குள்ளான அரசியல் எல்லையாக உள்ளது..

                வளைகுடா நாடுகள் என்றைக்குமே இனப்போராட்டத்தை ஏற்பதில்லை, ஏனெனில் அவை அனைத்தும் ஒற்றையின சர்வாதிகார அரசுகள்…
                ஐரோப்பிய நாடுகள் இனப்பேரழிவை நேரிடையாக கண்டிக்க விரும்பினாலும், அதற்கான இராஜாங்க வலு இல்லாத நாடுகள்… இந்த நாடுகள் இனப்பேரழிவிற்கு எதிரான போராட்டத்துக்கு மறைமுக ஆதரவை களம் அமைத்து கொடுப்பதன் மூலம் தெர்விக்கின்றன..

                அமெரிக்கா மட்டுமே இத்தகைய தீர்மானங்களை கொண்டு வர முடியும்… அதனால் வேறு எந்த நாடும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் பிற நாடுகள் என்ன செய்யும் என்ற கேள்வி யூகிக்க கூட அர்த்தமற்றது….

                • மனிதன் இதுதானா உங்க டக்கு? இலங்கையை பார்த்து சீனா கற்றுக்கொள்கிறதாம் ஹையோ ஹையோ, ஏன் சார் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய ஹிட்லரை விடவா, பழங்குடிகளை அழித்து அவர்களை அருங்காட்சியகத்தில் வைத்த அமெரிக்காவை விடவா இலங்கை சொல்லித்தர முடியும்.

                  நீங்கள் எழுதுவதிலேயே முரண்பாடுகளை பாருங்கள், இலங்கையை இயக்கியது சீனா ஆனால் அது இலங்கையை ரோல் மாடலாக கருதுகிறதாம்.. முதலில் பின்னூட்டம் அளிக்கும் முன் படித்துப்பார்க்கவும். நிற்க

                  என்னுடைய கேள்வியே இதுதான், ஒரு இனப்படுகொலையை நடத்த துணைபுரிந்தவனே அதை மயிலறகால் வருடும் ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்போது அதை ஏன் பிற நாடுகள் ஆதரிக்கவேண்டும்? அல்லது ஆதரித்த காரணத்தினால் அவர்களின் துரோகங்களை மன்னித்து அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாமா? இதற்கு பதில் சொல்ல நீங்கள் முயற்சிக்க்கஃகூட இல்லை

                  இன்னும் எளிமையாக இதை கேட்கிறேன்

                  பேரழிவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது சீனாவும், அமெரிக்காவும், இந்தியாவும்.

                  இலங்கைக்கு உற்ற துணையாக கூடவே இருந்து வழிநடத்தியது இந்தியா. மக்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும் போது அதை வேடிக்கைப்பார்த்தது அமெரிக்கா. இதே ஐநா போர் நடத்து முடிந்தவுடன் ராஜபட்சேவுக்கு ஜல்லியடித்த்தை பார்த்தோமே, அப்போ அமெரிக்காகாரன் என்ன முட்டைக்கு சவரம் செய்து கொண்டிருந்தானா?

                  தன் நாட்டிலும், தான் ஆக்கிரமிக்கும் நாடுகிளிலும் நேரடியாகவும், பிற நாடுகளில் ஆயுதம் வழங்குவது, பொம்மை அரசாங்க்களின் மூலம் மறைவுமுகமாகவும் ஈழத்தில் நடந்ததை விட பல மடங்கு அதிகமான இனப்படுகொலைகளை நடத்தியிருக்கும், நடத்திவரும் அமெரிக்காவுக்கு இந்த அறிக்கையை கொண்டு வர தார்மீக நியாயம் உண்டா? அப்படி அது கொண்டு வரும் பட்சத்தில் அதை ஏன் பிற நாடுகள் ஆதரிக்க வேண்டும்?

                  அமெரிக்க அழுத்தத்திற்கு பயந்து மோசடியான திருத்தம் செய்து இதை ஆதரித்தும் விட்டு பின்னர் மன்னிப்பும் கேட்டும் இந்தியாவின் நிலைப்பாடு இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்களை விட எந்த வகையில் உயர்ந்தது?

                  உலக ரவுடி அமெரிக்கா உள்ளூர் ரவுடிகளை தன் பக்கம் வைத்திருக்க, அவ்வப்போது இப்படி ஆர்பாட்டமாக செய்வதும், அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் அதை எதிர்பதும் ஒரு பெயரளவு சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இதுராஜபக்சேவை மன்றாடும் ஒரு வெட்டியான தீர்மானம், இதை வைத்து தமிழர் நலனுக்கு ஒரு மியிறைக்கூட பிடுங்கமுடியாது (இருந்த ஒரு மயிறையும் இந்தியா பிடுங்கி தீர்மானத்தை மொட்டையாக்கிவிட்டது ;))) இந்த தீர்மானத்தை ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி அது தமிழர் நலன் என்பதை அடிப்படையாக கொண்ட ஒன்று என்பது ஒரு வெற்றுப் பிதற்றலே!

                  • \\உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய ஹிட்லரை விடவா, பழங்குடிகளை அழித்து அவர்களை அருங்காட்சியகத்தில் வைத்த அமெரிக்காவை விடவா இலங்கை சொல்லித்தர முடியும்.\\
                    ஹிட்லர் எல்லாம் ஓல்ட்.. சீனாவுக்கு ஏனோ இலங்கையின் ஸ்டைல் தான் பிடித்திருக்கிறதாம்… மேலும் இன்றைய கால கட்டத்தில் மிகவும் பொருத்தமான ஜெனோசைட் டெக்னாலஜி சீனாவின் பங்களிப்பில் உருவான ஆபரேஷன் வன்னி தானாம்…

                    \\ இலங்கையை இயக்கியது சீனா ஆனால் அது இலங்கையை ரோல் மாடலாக கருதுகிறதாம்\\
                    ஒரு ப்ரொஜெக்டை இயக்கி அது வெற்றி அடைந்த பின் அந்த ப்ரொஜெக்டை மாடலாக கொள்ள கூடாது என்று ஏதாவது இருக்கிறதா?

                    \\பேரழிவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது சீனாவும், அமெரிக்காவும், இந்தியாவும்\\
                    தவறு.. அமெரிக்கா ஆயுதம் விற்றதோடு சரி… ஆனால் சீன, பாக், இந்தியா போன்ற நாடுகள் இராணுவ உதவி செய்துள்ளன… இராணுவ உதவிக்கும், ஆயுத வியாபாரத்துக்கும் வித்தியாசம் உண்டு… அமெரிக்கா புலிகளுக்கு கூட ஆயுதம் விற்றுள்ளது.. அது வியாபாரம்.

                    ஊசி கடையில் வாங்கிய கத்தியால் பாசியை குத்திக்கொன்றால் அதற்கு ஊசி எப்படி உடந்தையாக முடியும்?

                    \\அமெரிக்காவுக்கு இந்த அறிக்கையை கொண்டு வர தார்மீக நியாயம் உண்டா?\\
                    வேறு யாராலும் கொண்டு வர முடியாது – என்னுடைய டக்கான முந்தைய பதிலை பாருங்கள்…

                    \\மோசடியான திருத்தம் செய்து இதை ஆதரித்தும் விட்டு பின்னர் மன்னிப்பும் கேட்டும் இந்தியாவின் நிலைப்பாடு இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்களை விட எந்த வகையில் உயர்ந்தது\\
                    உயர்ந்தது என்று யார் சொன்னது… அது தாழ்ந்ததாகவே இருக்கட்டும்… அதை கூட்டணி அரசின் இராஜாங்க ரீதியான தப்பித்தல் என்று சுட்டியிருக்கிறேன்… ஆனால் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று பிரதமர் சொன்னதால் வேறு சில நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொண்டன என்பது உண்மை…

                    \\வெட்டியான தீர்மானம், இதை வைத்து தமிழர் நலனுக்கு ஒரு மியிறைக்கூட பிடுங்கமுடியாது இருந்த ஒரு மயிறையும் இந்தியா பிடுங்கி தீர்மானத்தை மொட்டையாக்கிவிட்டது\\
                    வேறு எதை வைத்து தமிழர் நலனுக்கு ஒரு சில மயிர்களை பிடுங்க முடியும்.. அந்த மயிர் பிடுங்கும் வேலையை யார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மயிரளவும் இந்த மயிர் பிடுங்கலில் மனம் இல்லாத கம்யுனிச நாடுகளா?

                    • //ஹிட்லர் எல்லாம் ஓல்ட்.. சீனாவுக்கு ஏனோ இலங்கையின் ஸ்டைல் தான் பிடித்திருக்கிறதாம்… மேலும் இன்றைய கால கட்டத்தில் மிகவும் பொருத்தமான ஜெனோசைட் டெக்னாலஜி சீனாவின் பங்களிப்பில் உருவான ஆபரேஷன் வன்னி தானாம்…//

                      உலகத்திலே மிக பெரிய இனப்படுக் கொலைக்கு சொந்தகாரன் இந்தியா, இவனிடம் இருந்து ஆயுதம், இராணுவ உதவி மட்டும் வாங்காமல் ஒரு இனத்தை எப்படி எல்லாம் அழிக்க முடுயும் என்று கற்று கொண்டவன் இராசபச்சே. பழங்குடி மக்களை மாந்த இனத்தை காட்டிலும் கொடுமையாக நடத்தும் இந்தியாவை விட நீங்கள் சொல்லும் ஜெனோசைட் டெக்னாலஜியில் சீனா இன்னும் அடிப்ப்டை அறிவு கூட எட்டாமல் தான் இருக்கிறது.

                      //ஒரு ப்ரொஜெக்டை இயக்கி அது வெற்றி அடைந்த பின் அந்த ப்ரொஜெக்டை மாடலாக கொள்ள கூடாது என்று ஏதாவது இருக்கிறதா?//

                      இதை தான் இந்தியா இலங்கையில் செய்ய கற்று கொடுத்தது. மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் உண்மை நிலை என்னவேன்று தெரியுமா?

                      //தவறு.. அமெரிக்கா ஆயுதம் விற்றதோடு சரி… ஆனால் சீன, பாக், இந்தியா போன்ற நாடுகள் இராணுவ உதவி செய்துள்ளன… இராணுவ உதவிக்கும், ஆயுத வியாபாரத்துக்கும் வித்தியாசம் உண்டு… அமெரிக்கா புலிகளுக்கு கூட ஆயுதம் விற்றுள்ளது.. அது வியாபாரம்.//

                      சீனா பாக்கிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்தாள் உடனே அது இந்தியாவின் மேல் செய்யும் மறைமுக தாக்குதல். அதுவே அமெரிக்கா செய்தால் அது வியாபாரமா?

                      //வேறு யாராலும் கொண்டு வர முடியாது – என்னுடைய டக்கான முந்தைய பதிலை பாருங்கள்…//

                      ஆசிய நாடுகளிடம் இறையாண்மையா? அதுவும் அரசியல் எல்லையாக இருக்கிறதா? உலகத்திலே பெரிய ஜேப்படி திருடன் அமெரிக்கா ஒன்னுக்கு போகனும்னா கூட அவனிடம் உத்தரவு வாங்காம செய்ய மாட்டாங்க இவனுங்க. இந்த மாதிரி இமேஜ் பில்டப்புக்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பானா அமெரிக்கா? சும்மா இறையாண்மை, எல்லை என்று பினாதாதீங்க மனிதன்.

                      //ஆனால் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று பிரதமர் சொன்னதால் வேறு சில நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொண்டன என்பது உண்மை…//

                      தளப்பாகட்டி பிரியாணிகாரர் இல்லை இன்று சிக்கன் பிரியாணிதான் என்று சொன்னவுடன் அதற்கு முந்திவரை மட்டன் பிரியாணிக்காக காத்துக் கொண்டு இருந்த சிகாமணிகள், சுய அறிவு இல்லாமல் சிக்கன் பிரியாணியே சாப்பிடலாம் என்று சொன்ன சிகாமணிகள் யார் என்று சொல்ல முடியுமா?

                      //வேறு எதை வைத்து தமிழர் நலனுக்கு ஒரு சில மயிர்களை பிடுங்க முடியும்.. அந்த மயிர் பிடுங்கும் வேலையை யார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மயிரளவும் இந்த மயிர் பிடுங்கலில் மனம் இல்லாத கம்யுனிச நாடுகளா?//

                      பிடுங்க வேண்டிய நேரத்துல பேன் பாக்க போயிட்டு மயிரே இல்லாத நேரத்துல்ல இன்னத்த பிடுங்க போரனுங்க. துப்புகெட்ட தீர்மானத்துக்கு எதுக்கு இந்த பில்டப்பு, இந்தியாவுக்கும் தெரியும் இந்த தீர்மானத்தால் இராசபச்சேவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று. இவனுங்க ஆதரிப்பாங்களாம் அவனுங்க வேண்டாம் என்று கெஞ்சுவானுங்களாம் போதம்யா உங்க உலகமாக நடிப்பு. இந்த படத்துக்கு தயாரிப்பு இயக்கம் அமெரிக்கா. என்னைக்கு காங்கிரஸ், ப.ஜா.க எல்லாம் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லும் போதே ட்கெரிய வேண்டாம அந்த தீர்மானத்தின் உண்மை நிலையை.

                    • மனிதன், அமெரிக்கா என்னமோ இளநீர் சீவ அறிவாள் விற்றது போலவும் அதை வைத்து அவன் தலையை சீவியது போலவும் பேசுவது அபத்தம். ரோல்கேப் வெடித்தாலே தெரிந்து கொள்ளும் அமெரிக்காவுக்கு போர் நடப்பதும் தெரியும், அவன் விற்றும் ஆயுதம் தமிழர்களை கொல்லும் என்பதும் தெரியும். அவன் அடிமை நாடாள் இந்தியா பாக் இராணுவ உதவி செய்யததும் தெரியும். அவன் ஒப்புதலில்லாமல் எதுவும் அங்கே நடைபெறவில்லை.

                      போர்நடக்கும் போது அதை நிறுத்த எந்த அழுத்தத்தையும் தராதவன், இராஜபக்சேவை போர் குற்றவாளியாக்க எந்த வேலையையும் செய்யாதவன் இப்போது இராஜபக்சேவை நீதிபதியாக்கிறான் என்றால் அது எவ்வளவு மோசமான தமிழின விரோத நிலைப்பாடு. இதை ஒப்புக்கொள்ளத்தான் உமக்கு மனம் வரவில்லை.

                      நான் முன்பே சுட்டிக்காட்டியது போல இந்த தீர்மானமே தமிழின விரோதமானது. இதை எதிர்பவனை தமிழின விரோதி என்றால் ஆதரிப்பவனும் தமிழின விரோதியே. அதை உணர்ந்தால் மட்டுமே என்ன மாற்று என்பதையும் அதை யார் செய்யமுடியும் என்பதையும் விவாதிக்க முடியும்.

                  • My opinion on this whole SL issue,

                    1. China sought to help SL to fight the LTTE and give support on all ends to achieve that.That ll include Iran and Pakistan also who are on China’s side.China’s motive to finish the LTTE is to establish a base in SL which will directly target India and keep it under control and check,not to forget control the waters of Indian Ocean.

                    2. America and India who are historical supporters and non-interferers in the LTTe side decide to join Srilanka in their objective.Because if the fight happens only with the help of China & Allies,then India and USA ll have no influence in the region and America has a lot to lose as by having influence in SL apart from its already existing influence in Pakistam and the Port in Gwadar,China controls a lot of Gulf Oil routes and not to forget the alliance with Iran also.

                    All the Oil/Minerals that are mined in the Caucus region of old USSR Stans need warm waters to be transported if not across land itself.China needs a lot of energy and China can easily set up Refineries and ship the oil there directly from Gwadar in Pakistan.

                    China seeks an influence in Indian waters and it is important for them to seek a foothold in the Indian Ocean also to counter the Diego Garcia US Base in the Ocean.

                    3.India now has to join the fight and anyway they have no love for the LTTE after the RG assasination and eliminating the LTTE ll also make the Island peaceful,improve tourism,there ll be new investment and projects there which can come to Indian companies naturally.

                    Essentially China is what caused the whole thing and India could have done nothing about this and there are other reasons why India couldn’t have intervened,LTTE is a banned organization and India already had their feet blown off by trying to make peace between Prabhakaran and Premadasa,where they both hated Indian Army presence in SL and played tactical political games to keep India away.

                    The day Prabhakaran killed RG,India’s role in SL ended and there is no going back on this now.

            • மனிதன் சரியான கேள்வி
              மேலும் க்யூபா குறித்து நான் கெட்ட கேள்விக்கு பதிலென்ன?சும்மா அமெரிக்காவை எதிர்க்கனும்!தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை!அப்படித்தானோ?

    • ரசியா சீனா கியுபா பாகிஸ்தான் இந்தியா அமெரிக்கா இவங்க நோக்கம் ஒன்றுதான் அது இலங்கையை ஆதிக்கம் செய்வது

  2. அதெல்லாம் சரிதாண்ணே, இந்த கம்மியுனிச சிந்தனையுள்ள அல்லது இருந்த நாடுகள் எல்லாம் சிங்களவனை ஆதரித்து பேசி இருக்குதே. மிச்சம் இருக்கற தமிழனையும் குழி தோண்டி புதைச்சாதான் உண்மையான சம நிலை வருமோ? கொஞ்சம் தெளிவு படுத்துங்கண்ணே.

  3. பெத்தவங்க உயிரோடு இருக்கும்போது கண்டுக்கொள்ள மாட்டாங்க ஆனால் இறந்தபின்பு, போஸ்டர் அடிப்பாங்க, பூஜை செய்வாங்க, அது செய்வாங்க, இது செய்வாங்க எதுக்கு இப்படி ஊரை ஏமாத்தனும்.

  4. தீர்மானத்தின் பலகீனத்தன்மையைக் கொண்டும், வரும் பாராளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டும்தான் ஆதரவளிக்க தமிழக காங்கிரசார் கூப்பாடு போட்டிருக்கின்றனர். தமிழுணர்வாளர்களுக்கு காங்கிரசை எதிர்க்கும் வேலை இனி இல்லை. சோனியாவுக்கு ஈழ அன்னை என்ற பட்டம் கூட சூட்டப்படலாம்.

    • இதைவிட நல்ல தீர்மானத்தை கம்யுனிச நாடுகள் கொண்டுவந்திருக்கலாமே.

      • கொண்டு வந்திருக்கலாம் அனில், அதுக்கு முன்னால கம்யூனிச நாடுன்னு ஒண்ணு இருக்கனும் இல்ல, இங்க விவாதிக்குற பலபேருக்கு அரசியல் அனா ஆவன்னாவே தெரியவில்லை, என்ன செய்வது? கூபா ஒரு முதலாளித்துவத்தோடு சமரசம் செய்துகொண்ட அரைகுறை சோசலிச கொள்கைகளை கொண்ட நாடு, சீனா ஒரு முதலாளித்துவ மாபியா நாடு, ரசியாவில் கம்யூனிஸ்டு கட்சியை ஊற்றி மூடி ஒரு தலைமுறை ஆகிவிட்டது, ஆனாலும் இது எதுவும் தெரியாமல் அவைகளை கம்யூனிச நாடு என்று சொல்லிக்கொண்டிருந்தால் அவர்களைப்பார்த்து பரிதாபப்படதான் முடியும்.

        • நீங்க சொல்றதப் பார்த்தா கம்யூனிச நாடுகளே கம்யூனிசம் வேலைக்காகாது என்று உணர்ந்து தூக்கிப் போட்டுவிட்டன போலிருக்கே.
          நீங்க மட்டும் இன்னும் யதார்த்தத்தை புரிஞ்சுக்காம இருக்கீங்க, பாவம்.

          • அனிலு, விவரமில்லாம பேசிட்டிருந்த உங்களுக்கு எது உண்மையோ அதை விவரமாக சொன்னேன். ஆனா உங்க பதிலைப்பார்க்கும் போது, நீங்க ரொம்ப விவரமானவர்தான்னு புரியுது. இவ்வளவு ‘விவரமான’ ஆள் வினவு படித்தால் ஆகாது, போய் அம்புலிமாமா படியுங்கள். பொருத்தமாக இருக்கும்

            • எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்பதுபோல பேசுவது (ஒரிஜினல்) கம்யுனிஸ்டுகளின் பழக்கம்.

          • குட் கொஸ்டின்… ஒன்ஸ் மோர் ப்ளீஸ் 🙂
            இன்றைய நிலையில் கம்யுனிச சித்தாந்தங்களில் எதார்த்தம் என்பதற்கு இடமில்லை… கம்யுனிசம் என்றாலே கற்பனை தான்…

  5. செகப்பு டவுசர் போட்டதா சொல்லப்படும் ஹிந்து நாளிதழ் எப்பவுமே ராஜபக்சே சிங்கு ஜா தான்!காம்றேடுகளை நான் ஒருமுறை கேட்டேன் ” இலங்கை கம்யூனிச நாடா?ஏன் மார்க்சிசிட் கம்யூனிஸ்டு மட்டும் தெளிவான நிலைப்பாட்டை இதில் வைத்துக்கொள்ளவில்லை?(இந்திய கம்யூனிஸ்டு அளவுக்காவது).அதற்கு காம்ரேடு பேந்த பேந்த முழித்தது இன்னும் கண்ணில் நிக்குது!

    • ராஜனே, பொந்து நாளிதழை கிழித்து வினவில் வந்த கட்டுரையை படித்துப்பாரும், லங்காரத்னா விருது பெற்ற ஸ்ரீஇந்து ராமன் ஒரு துரோகி.

      இங்கே இருக்குற சிபிஐ-சிபிஎம் உள்ளிட்ட ஒட்டுப்பொறுக்கி போலி கம்யூனிஸ்டுகள் வாயால ஈழத்தமிழன்னு கூட சொல்லமாட்டார், இலங்கைத்தமிழர்கள்னு பேசுற அளவுக்கு ‘அறிவு’ பெற்றவர்கள். கட்டுரைக்கு கீழே தொடர்புடைய பதிவுகள் தலைப்பில் இதை விளக்கும் சுட்டிகள் உண்டு படித்துப்பாரத்து தெளிவடையவும்

  6. one more thing,communism is dead in the world.The hardcore Communists themselves have given up,Talking like this here in India will make good timepass but nothing more.

  7. உண்மையில் பலரும் அறிந்தவிடயம் தான் எனிலும் இவ்வாய்வு மறந்தநினைவுகளை மீள்பரிசீலனைகக்குட்படுத்துகின்றது.சீனா ஒருபோதும் எதிர் தீர்மானம் கொண்டுவராது என்பது வேடிக்கையான பதில் .இன்றைய உலக ஒழுங்கில் யார் நண்பன் யார் விரோதி என யாரும் எழுதில் மட்டிட முடியாது.மகிந்தவைநாம் அமெரிக்காவை வைத்து மண்கவ்வச் செய்துவிட்டோம் என மார்தட்டுகின்ற கூட்டம் ஒரு புறம்,அமெரிக்க தூதுவராலயங்கள் முன் அணிதிரண்டு வெற்றிக்களிப்பை கொண்டாடுங்கள் என்று கூவுகின்றது ஒரு கூட்டம். இலங்கைக்கு டர்பன் அணிந்த தன் வீரர்களை அனுப்பி அப்பாவித் தமிழர்களை கொலைசெய்ய விட்ட இந்தியா கூட எதிராக வாக்களிக்குமாம்.அதற்கு நாமெல்லாம் ஜே போட்டுக் கொடி தூக்குவோமாம். தேய்ந்த தமிழா இன்னமும் நீ திருந்தமாட்டாயா என்று கத்த மனம் துடித்தாலும் தமிழனைச் சொல்லி என்ன வருவது உலகமே அப்படித்தானே???

  8. இன்றைய நிலையில் கியுபாவோ, சீனாவோ, ரசியாவோ பொதுவுடமை நாடுகளே இல்லை… ரசியா 1991இல் எல்சின் தலைமையில் தன்னிடம் இருந்து கம்யுனிஸ்டு முகமுடியை கழட்டி எறிந்து விட்டு… பச்சையாக முதலாளிதுவ நாடானது… சீனாவும் முதலாளிதுவத்தை ஏற்று கொண்டு விட்டது… கியுபா முதலாளிதுவத்துடன் சமரசமாக போய் விட்டது… இந்த உண்மையை மறைத்து… சில மனநோயாளிகள்… சைகோ சோ ராமசாமி போல… அவன் வீட்டில் செருப்பு காணாமல் போனால் கூட விடுதலை புலிக்ள் என சொல்வது போல்… சைகோதனமாக… இதுகளுக்கு நீர் கடுப்பு வந்தால் கூட… கன்யுனிசம்தான் காரணம் என சொல்லி கொண்டு இருக்குதுகள்…

    இதுகள் என்ன சொல்லுதுகன்னா… ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்… கருணாநிதியை தூக்கில் போட வேண்டும்… மற்றபடி இந்திய அரசு புனிதமானது… இந்தியாவை குற்றம் சொல்பவர்கள் நாட்டை விட்டு ஓடி விட வேண்டும்…

    இந்தியாவின் மன்மோகனும், சோனியாவும், பிரனாபும், ராகுலும், ஏ.கே.அந்தோணியும், சிவசங்கர மேனனும், எம்.கே.நாராயணனும், இந்து ராமும், டபுள் ஸ்ரீ ரவிசங்கரும், ஜெயலலிதாவும், எல்.கே.அத்வானியும், சேஷாத்திரி சாரியும், சூனா சாமியும், சோனா சாமியும், கருணாநிதியும், தயாநிதி மாறனும், அன்புமணி ராமதாசும்… ஈழத்தில் நட இனபடுகொலையில் பங்கு கொண்டவர்கள்… இவர்களை படுகொலையாளர்கள் என அம்பலபடுத்துவதை விட்டு… சீனா, ரசியா, கியுபா என கலர் கலராக கதை விட்டு… ஊரை ஏமாற்றும் எச்சில் பொறுக்கிகளை செருப்பால் அடிக்க வேண்டும்…

    மேலே பட்டியலில் இருக்கும் அயோக்கியர்களை இனபடுகொலை குற்றவாளிகள் என அம்பலபடுத்தி விட்டு… சீனாவையும், ரசியாவையும், கியுபாவையும் குற்றவாளி என சொன்னால் நியாயமாக இருக்கும்…

    சீனா, ரசியா, கியுபா இவர்கள் சிங்கள பாசிச இனவாதத்தை நேரடியாக ஆதரித்துள்ளார்கள்… ஆனால் இந்தியா தமிழினத்தை படுகொலை செய்து விட்டு துரோகத்தின் உச்சபட்சமாக நடந்து கொள்ளும் போது… தன்னன இந்தியன் என சொல்லி கொண்டு சீனா, பாகிஸ்தான் என கதை சொல்பவன் எல்லாம்… இவர்களின் ராஜிவ், ராகுல், மோடி, சூனா சாமி போன்ற ஆண்மையற்ற பேடி பயல்களே…

  9. இந்த தீர்மானத்திற்கு பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற பழமொழி ரொம்ப பொருத்தமானது.

    பாசகாவும், செயா அம்மாவும் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்ப வைத்து படுகொலைக்கு துணநின்றவர்கள்தான் இந்த தமிழுணர்வாளர்கள். அதற்கு பிராயசித்தமாகத்தான் திருடன் ஒஊட்றான் புடி புடி என இந்திய அரசுடன் சேர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

  10. செந்தமிழரே,

    நீங்கள் இந்தியாவைச் சாடுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது, ஆனால் ”மக்கள் சீனம்” இன ஒடுக்குமுறையையும், படுகொலைகளையும் நடத்தும் சிங்கள இனவெறி அரசுடன் உறவுகொண்டாடுவதைக் கண்டிப்பதைவிடுத்து ஆதரிக்க முயலுகிறீர்களே.. மார்க்சும், மாவோவும் சீனாவின் செயல்களை ஆதரித்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா??!!

    • மாவோ கண்ட சீனா இன்று இல்லை மார்க்ச் சொன்ன நியதியும் அங்கு இல்லை சீனா கமியுனிச போர்வையில் உள்ள ஒரு முதலாலித்துவ நாடே. ஈழ தமிழர் விவகாரத்தில் இந்தியாவும் ஒன்றுதான் சினாவும் ஒன்றுதான். கமியுனிச நாடாக இருப்பதால் சீனாவிற்கு கொடிபிடிக்க இங்கு யாரும் தயார் இல்லை.

      • பின் எதற்ட்காக சீன மக்கள் குடியரசு சுற்றி வலைக்கப்படுவதாக கட்டுரை எழுதி கவலை படுகிறீர்கள்??

        • அந்த கட்டுரையில் சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு அமெரிக்கவும் அதன் வால்பிடிக்கும் அடிமை நாடுகளின் நரிதனத்தை சுட்டி காட்டபட்டுள்ளது அதில் எனது கருத்தும் சீனா ஒரு கமியுனிச நாடு ஆகையால் அதை வளரவிடாமல் அமெரிக்கா தடுகிறது என்று சொல்லவில்லையே!. உலக வர்தக மேடையில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் அமெரிக்காவின் நயவஞ்சக அனுகுமுறை பற்றியதே அந்த விவாதம்.

          ஆகையால் மொட்டை தலைக்கும் மொலங்காலுக்கும் முடிச்சு போட முயலாதீர்கள்.

          • “இந்த நாணயங்கள் மூலம் தானே இத்தனை நெருக்கடி. அதை உங்கள் கேபிடலிஸ்ட் பொருளாதார மையங்கள் ஏற்று கொள்ளும்மா?”

            இங்கே ” கேபிடலிஸ்ட் பொருளாதாரம்” பற்றி பேசுவது சீனாவின் கம்யுனிசத்தை ஏற்றுக்கொண்டதால் அல்ல என்று நீங்கள் உறுதிபட மறுத்தல் நான் எனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

            • //இங்கே ” கேபிடலிஸ்ட் பொருளாதாரம்” பற்றி பேசுவது சீனாவின் கம்யுனிசத்தை ஏற்றுக்கொண்டதால் அல்ல என்று நீங்கள் உறுதிபட மறுத்தல் நான் எனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.//

              சீனாவில் கமியுனிச கோட்ப்பாடு வழி தவறி செல்கிறதே என்பதே உண்மை. மேலும் நான் அந்த கருத்தை பார்டர் டிரேடுக்காக நான் சொன்ன வாக்கியமே தவிர அது சீனாவின் கமியுனிசத்தை எற்பது என்று பொருள் ஆகாது. அது பொதுவுடமை அரிவியலான மார்க்ச் வகுத்த நியதியின் உண்மையை எற்க வேண்டும் என்பதே பொருள். சீனாவை இன்னும் ஒரு கமியுனிச நாடாக பார்பது ஒரு தவரான கருத்தியல். மாவோவின் உழைப்பு சீன மக்களுக்கு பொருளற்றதாக மாறிவிட கூடாது என்பதே எம்போன்றோரின் கருத்து.

              • // பார்டர் டிரேடுக்காக நான் சொன்ன வாக்கியமே தவிர அது சீனாவின் கமியுனிசத்தை எற்பது என்று பொருள் ஆகாது//

                பார்டர் டிரேடுக்காக ஒரு கருத்தியல் உருவாக்க முடியுமாயின் நான் எனது கருத்தை மீளப்பெருகிறேன் தோழரே. உங்கள் நேரத்தை என்னோடு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

  11. டியர் ஒபாமா, இந்திய பெருங்கடல் பகுதில சீனாவோட ஆதிக்கத்தை குறைக்க இந்தியாவநம்பி பிரயொசனமில்லை !நாமே கம்முனு இலங்கையைநம்ம வழிஉக்கு கொண்டு வரணும். இந்த தீர்மானத்த வச்சியே இலங்கையநம்ம வழிக்கு கொண்டு வந்துரலாம்நாமளும் சில ஒப்பந்தம் போட்ரலாம். சீனா இந்தியா மாதிரிநமக்கு ஒரு துறைமுகமோ இல்ல மின் உற்பக்ட்தி திட்டமோ வந்துட்டாநல்லது தான். அப்புறம் இந்தியா மாதிரி இன்னொரு அடிமைநமக்கு அங்க வேணும்.ஜெணிவா தீர்மானம் வரட்டும். அதுக்குள்ள ராஜபக்செ கிட்ட ஒரு ஒப்பந்தமும் அதுக்கு கடனா உலக வங்கிட்ட இருந்து பணமும் த்ர ரெடி பன்னிரலாம்.நேத்தே இலங்கைக்கு இருந்த ஆயுத தடை எல்லாத்தையும்நீக்க சொல்லிட்டேன், சோ அதை வச்சியும் பல ஆயுத விற்பனை பண்ணிரலாம்.
    — கிலாரி கிலின்டொன்

  12. இங்கு ஈழத்தின் எதிரிகள் மட்டுமல்ல, உலக மானுடத்தின் எதிரிகள் வரிசை!
    அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்க்டுவநாடுகள், கம்யூனிசமுகமூடி போட்ட சீனா, அமரிக்காவுடன் போட்டி போடும் எதிர்நிலை முதலாளித்டுவநாடுகளான ரசிய மற்றும் அதன் தொங்கு சதைநாடுகள் !
    இவற்றின் பேராசைக்கு மக்களை பலி கொடுக்கும் ராசபக்சேக்கள் ! அதற்கு துணை போகும் இந்தியா உள்ள்ள்ட்டநாடுகள் ! இவ்வாறாக மக்களின் எதிரிகள் வெவ்வேறு ! இவர்கள் எல்லோருமே நம் எதிரிகள்.
    இங்கு அவன்நல்லவன் இவன் கெட்டவன் என்று யாரையும் குறிப்பிட முடியாது.
    தீர்மானம் அமெரிக்கா கொண்டு வந்தது என்ற்தற்காக அதை எதிர்ப்பது போன்ற கியூபா போன்றநாடுகள் உலக அரசியலை புரிந்து கொள்ளாத, அல்லது தன் சுயனலம் பேணும்நாடுகளே!

  13. சீனா,ரசியா, கியுபா போன்ற பொதுவுடைமை நாடுகள் எப்படி தீர்மானத்தை எதிர்க்கலாம், அது தமிழினப்படுகொலையை ஆதரிப்பதாக அமையாதா என்ற வாதத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.அது பொதுவுடைமை நாடுகள் நீதியின் பக்கம், நேர்மையின் பக்கம் அல்லவா இருக்க வேண்டும்? ஏன் அவை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதுதான்.ஆனால் அவை இன்று பொதுவுடைமை நாடுகளாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் இந்த எதிர்பார்ப்பு இருக்காது.ரசியா, சீனா போன்ற முந்தைய பொதுவுடைமை நாடுகளிலும் இன்று ஆதிக்கத்தில் இருப்பவை முதலாளிய வர்க்கமே.அமரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் அவை இன்று உலகச் சந்தையில் தங்களுக்கான பங்குகளுக்காகப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போட்டியில் முதலாளிய நாடுகள் அனைத்தும் மக்களுடைய உரிமைகளைப் பறித்தும்,அடக்கி ஒடுக்கியும், இனப்படுகொலைகளைப் புரிந்தும் வருகின்றன. இவை அனைத்துமே மக்கள் உரிமைகளுக்கும், தேசிய இன விடுதலைக்கும் எதிரானவைகளே! இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல. இவர்கள் அனைவரையும் வீழ்த்தாமல் மக்களுடைய விடுதலை சாத்தியம் இல்லை.அதற்குப் பதிலாக இவர்களில் யாராவது ஒருவர் நமக்கு உதவுவார் என நம்புவது ஓநாயை விரட்டக் கரடியை நம்புவதைப் போலத்தான்.

    • \\ஆனால் அவை இன்று பொதுவுடைமை நாடுகளாக இல்லை என்பதைப் புtரிந்து கொண்டால் இந்த எதிர்பார்ப்பு இருக்காது\\.

      எந்த விவாதத்திலும்… கம்யுனிச நாடுகளின் தவறுகளை குறித்த எந்த விவாதத்திலும் தேய்ந்த கீறல் விழுந்த பழைய கிராம போன் ரெகார்ட் போல சொல்லப்படும் ஒரே பதில் அந்த நாடு உண்மையான கம்யனிஸ்ட் இல்லை, இந்த நாடு முதலாளித்துவ சமரசம் செய்து கொண்டது, அந்த நாட்டின் கம்யுனிசம் போலி.. என்பதே…

      எந்த கம்யுனிச நாட்டை பற்றி கேட்டாலும்,அமெரிக்காவுக்கு அடிமை ஆகிருச்சு, ஐரோப்பாவின் வலையில் விழுந்துருச்சுனு ஒரு பிதற்றல் வேறு…

      கம்யுனிசம் என்பது என்னமோ நூறு சதவீதம் தவறுகளுக்கே வாய்ப்பே இல்லாதது என்று ஏடுகளை, புத்தகங்களை படித்து வளர்த்து கொண்ட அதீத கற்பனையின் விளைவு , அல்லது ஜனநாயக நாட்டில் வாழும் வழக்கமான சாதாரண புத்தக கம்யுனிஸ்ட்களின் தவறை ஏற்றுக்கொள்ளும் அல்லது உணரும் பக்குவம் அற்ற தன்மை.

      இவர்களது வாதப்படியே வைத்துக்கொண்டாலும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கம்யுனிச நாடுகள் ஒன்றிரண்டு பெயரளவுக்கு தோன்றி முதாளித்துவத்துடன் சமரசம் செய்து மறையும் அமெரிக்க அடிமை நாடுகளாகத்தான் இருக்கும்… கம்யுனிசம் சாத்தியமில்லை… நீங்கள் எதிர்பார்க்கும் ISI,ISO – 9000 சான்றளிக்கப்பட்ட கலப்படமில்லா கம்யுனிசம் சாத்தியமில்லை…

  14. இலங்கைக்கு எதிராக ஒட்டு போட கூடாது என சொல்லும் ஆர் எஸ் எஸ் க்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

    • வினவுக்கு அமெரிக்க என்ன செய்தாலும் எதிர்க்கணும் அது நல்லதோ கெட்டதோ.

      பார்ப்பனர்கள் மிகுந்த ஆர். எஸ். எஸ் க்கு தமிழர்களை பிடிக்காது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க