Thursday, July 18, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !

ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !

-

indian-media-eelam-genocide-இந்திய-ஊடகம்
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.

நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.

ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட்கிறார். மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் பொடி எல்லாம் எடுத்துட்டாங்களாமே? உங்களுக்குத் தெரியுமா?

எங்கம்மா இறந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும் பிரபாகரன் இறந்தாரா? அவரது மனைவி இறந்தாரா? என்பதெல்லாம எனக்குத் தெரியாது? பொதுவாக இவர்கள் இறப்பதில்லை என்பது மட்டும் தெரியும். நீங்கள் டில்லி டெஸ்கிற்கு செய்தி கொடுத்து விட்டீர்களா? இலங்கை அரசின் ஆர்மி சைட்டில் இதை போட்டிருக்காங்களா? என்று கேட்டேன் அவரோ எங்க சேனல்ல ப்ளாஸ் நியூஸ் போகுது என்றார். எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இல்லை. சிறிது நேரத்தில் எஸ்,எம்,எஸ் ரூகள் தொலைபேசி அழைப்புகள் விசாரிப்புகள் எதுவும் அதிர்ச்சியாக இல்லை. கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக மட்டுமே இருக்க முடிகிறது தமிழக மக்களைப் போல,

இலங்கையின தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரை இந்தியா நடத்துகிறது. இலங்கை நடத்தி முடித்த இன அழிப்பின் பின்னரான உளவியல் சிதைப்புப் போரை இலங்கையின் தூதரகத் திட்டத்தோடு வட இந்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் எந்த நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் செய்யவில்லை என்பதோடு. தூதரக அதிகாரிகளோடு தமிழக ஊடகவியலார்களும் நெருக்கம் பேணினார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

வட இந்திய ஊடகங்கள் ஈழப் போரின் தோல்வியை இலங்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. அவர்கள் தமிழகத்தில் வாழும் ஏழு கோடி மக்களின் தோல்வியாகவே பார்க்கிறார்கள். இவர்களின் தோல்வி அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்து ராம். சோ ராமசாமி, சுப்ரமணியம் ஸ்வாமி போன்ற இலங்கை அரசின் நட்புச் சக்திகள் இந்தக் கொண்டாட்டங்களின் தமிழக முகங்களாகவோ முகவர்களாகவோ இருக்கிறார்கள்.

ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தப் போர் காட்சி ஊடகங்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. ஈராக்கிய யுத்தத்தின் போது எப்படி சி.என்.என் தொலைக்காட்சி அமெரிக்க பயங்கரவாதத்திற்கு வலது கரமாக இருந்து பிரச்சாரம் செய்ததோ அது போலவே சகல வட இந்திய ஊடகங்களும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இந்திய சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டு உரிமைப் போரில் எல்லாக் காலத்திலும் தமிழகமே முன்னணியில் நின்றது.

உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது வட இந்திய உயர்சாதி மாணவர்கள் துடைப்பங்களை எடுத்து நீங்கள் எல்லாம் டாக்டருக்குப் படிக்க வந்தால் நாங்கள் தெருக்கூட்டப் போகிறோம் என்று வீதிக்கு வந்ததை மிகப் பெரிய போராட்டமாக சித்தரித்து அதை தமிழ் மக்களுக்கு எதிராக சித்தரித்ததும். ஓகேனக்கல் நீர் உரிமை தொடர்பான போராட்டங்கள் வெடித்த போது அதை தமிழ் சாவனிசம் என்று ஒடுக்கிய போக்கையும ; நாம் கடந்த காலத்தில் கண்டோம். அந்த தொடர் வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற போக்கு.

பெருந்தொகையான மக்களை இன அழிப்பு செய்து நிலத்திலிருந்து மக்களைப் பிரித்து அவர்களை முகாம்களுக்குள் முடக்கி இந்தியா இலங்கையில் ஆடியிருக்கும் நரவேட்டை ஒரு பக்கம் அந்தப் போருக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்த போது அதை ஒடுக்கி அச்சுறுத்தி அடக்கிய விதம் எல்லாம் சேர்த்து இன்று தமிழக மக்களிடம் இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.

( தேர்தல் வெற்றி எல்லாம் சும்மா சொல்வது அது குறித்து தனியாக எழுதுவேன்) மனுக்கொடுப்பது சத்தியாகிரகம் என்பது போன்ற ஐம்பதுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வு என்னவாக இருந்ததோ அது போன்ற ஒரு உணர்வலை இன்று தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான கடும் போக்கு தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க முடியுமா? என்று தெரியவில்லை ஏனென்றால் குறைந்த பட்சம் போராடுகிற மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்திருக்க வேண்டும். தொடர் நாடகங்கள் மூலம் தேர்தல் வெற்றி கிடைத்த பிறகு இலங்கை பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே அல்ல என்று செய்கிற உதாசீனம் இந்தியாவின் தேசீய மனோபாவத்தில் இருந்து தமிழக மக்களை வெகுவாக விலக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வெகுமக்கள் அரசியலில் தலைமைகள் இல்லாத சுழலில் அடிப்படை மாற்றத்திறாக போராடும் இடது அமைப்புகள் இந்த இளைஞர்களின் கோபத்தை அறுவடை செய்யக் கூடும்.

ஏனென்றால் நான் சந்தித்த பெரும்பாலான உணர்வாளர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து காட்டும் இந்தப் படங்களை கடந்து செல்லவே விரும்புகிறார்கள். உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு, உணவு கேட்ட மக்களுக்கு, போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும் ஏராளமான இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த குற்ற உணர்ச்சியிலிருந்தே அவர்கள் அவலத்தைக் கடக்கிறார்கள். இந்தியா காட்டும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலையில் தொடர்புடையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றங்களை மறைத்து போட்டோக்களை வெளியிட்டு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய பகுதி. நாஜிக்களின் கொலைகள நடந்து முடிந்த சில காலத்திற்கு அந்தக் கொலைக் கூடங்கள் குறித்த செய்திகள் எதுவும் உலகிற்குத் தெரியவில்லையாம். அங்கிருந்து தப்பி வந்த இருவர் கொடுத்த தகவலும். அறம் சார்ந்து எழுத நினைக்கும் சில ஆன்ம பத்திரிகையாளர்களாலுமே யூதப் படுகொலை உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது. அன்றைய உலகச் சூழலில் இரு துருவ அரசியல் உண்மைகள் வெளிவர ஏதுவாக இருந்திருக்கலாம் ஆனாலும் நாம் ஆகக கூடிய சாத்தியங்களோடு இரண்டு மூன்று விஷயங்களைப் பேசியாக வேண்டும்.

ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.

இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.

இந்தப் போர் இன்னும் முடியவில்லை என்பதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும ; சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.

– குளோபல் நீயூஸ் நெட்வொர்க் எனும் தமிழ் இணைய இதழில் பத்திரிகையாளர் அருள் எழிலன் எழுதிய கட்டுரை.

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


 1. ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் ! – வினவு!…

  ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட…

  • இந்த விரக்தியால் ஆவது ஒன்ருமில்லை.ஒரு போராளி இயக்கதின் வரலாற்று தவறுகளை புரிந்துகொள்ளும்.

 2. This article truly explains the situation after the debacle of LTTE in Lanka. People who are associated to Elam question are demoralised by media with the election resuls stating there is no one to support Tamils in Elam. The duplicity and the double standards played by the leaders supporting the Elam cause is one of the chief reasons for this situation. When the national media directly attacks our psyche by its biased views on Tamis, the tamil media maintains silence by tightening its lips. This election has brought a pseudo youth icon [Rahul] to the nation. The youth in this country are forced to be decieved by these channels. The Elam issue certainly has reached to all but it has not shattered their conscience thanks to the media euphoria on election and cinema.Nothing could shatter our conscience also unless a war is waged to rise the collective consciousness of our people.

 3. ela aatharvu katchiku ootu potom… ana win pannala… vijayakanth mathiri kalavani pasangala pathi ninga eluthala . avan votea pirchi congress kita 400 crores vanki irukan.communist bjpa jaika vidama iruka kasu vankitaan kanyakumari la .. maduraila,enkalai enna seiya solliringa ..ungalla mathiri alunga viyakiyanum pesuratha vittu orupadiya inga vara refugess ku nallathu nadaka steps edukalam.avanga nilamai enna.. prabhakarana nammala kapatha mudiala .eluthurathu matum ulagatha mathathu ,seyal padanum.nan seyalapduven.ninga intha mathiri north india south india pesathinga .. media ellam corporate ..ennomo jaya tv,sun news ,dd ,raj ellam unmaya sollaramthiri eluthiringa.

 4. உண்மை.

  சிங்கள ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய வுடன் என்டிடிவி அங்கே போய் சிங்கள வெறியனிடம் பேட்டி கண்டது. டைம்ஸ் டிவியோ நாள் முழுக்க முழுக்க பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறும் செய்தியையே திரும்ப திரும்ப ஒளிபரப்பினர், 99 சதவிகித ஊடகங்கள் சிங்கள , இந்திய மேலாதிக்க நாய்களுக்கு ஊது குழலாக இருக்கின்றன.அதில் மாபெரும் வர்க்க நலன் இருக்கிறது வெற் நாய்களுக்கு பரப்புரை செய்வதன் மூலம் என்டிடீவி,டைம்ஸ், சன் டீவிக்களுக்கு இலங்கையில் சேனல் தொடங்க இடம் கிடைக்கும்.ஆனால் அப்பாவி தமிழன் கொல்லப்படும் செய்தியால் என்ன கிடைக்கும்.

  99 % எல்லா டீவி மற்றும் ஊடகங்களும் தனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டும் தன் நாய் மூக்கால் மோப்பம் பிடித்து எழுதுவார்கள்.இரு நாளில் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் செத்து போனதை எந்த நாயும் சொல்லவில்லை. ஏன் மக்கள் தொலைக்காட்சி கூட சாகும் மக்களுக்கு ஆதரவான எழுச்சியை ஏற்படுத்தாது ஓட்டு பொறுக்கும் வேலையை திறம் பட செய்தது.

  இப்போது ஒரே கேள்வி தான் எழுகிறது அப்ப என்ன முடிக்கு முற்போக்கு வேசம் போடுறீங்க

  கலகம்

 5. 26/05/2009, 15:40 ]
  சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் ஆர்வம்

  “தற்போது சிறிலங்காவில் உறுதியான அமைதி உள்ளதால், இந்தியாவின் 32 பெரிய நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளன”, என்று ஏற்றுமதி அபவிருத்தி மற்றும் சர்வதேச வணிகத்தின் அமைச்சர், ஜி.எல். பெய்றிஸ், இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 6. கட்டுரை பல புரிதல்களை தருகிறது. அருள் எழிலனுக்கு இருக்கும் எழும் இயல்பான கோபம் தமிழ்நாட்டில் பலருக்கு வர மறுக்கிறது.

 7. தமிழ் நாடு தமிழ் மக்களிடம் ஒரு பணிவான வேண்டு கோள் ……..எல்லமே முடிந்ததாக இருக்கட்டும்…….கம்பி வேலி களுக்கு அப்பால் ….. உணவு குடி நீர் ….மருத்துவம் உடை ………போன்ற அடிப்படை தேவைகளின்றி ..வாடும் உள் நாட்டு அகதிகளுக்கு என்ன சொல்லபோகிறீர்கள். உதவி செய்ய மாடீர்களா? அவர்கள் வெறும் காட்சி பொருளா? அவர்களும் மனிதர்கள் உதவுங்கள் தொண்டு நிறுவனங்களையும் விடுகிறார்கள் இல்லை. ஒரு மனிதாபிமானம் வேண்டாமா?அழுத்தம் கொடுங்கள் மத ஸ்தாபனக்கள். மத வாதிகள் ………தொண்டர் நிறுவனக்கள் போக அழுத்தம் கொடுங்கள். உதவுங்கள்………உதவி ……..அவர்கள் ரத்தமும் சிவப்பு தான் ……..ஊனமானவர்கள். …நோயாளிகள். குழந்தைகள் முதியோ பலவகை பட்டவர்கள் இருகின்றனர்……..உங்கள் தலைமைகளிடம் பேசி உதவுங்கள்……..

  • தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள்
   1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
   2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
   3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
   4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
   5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
   6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
   7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
   8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது

   இப்படி நிறைய‌

   • உங்கள் கருத்துக்களுக்கு என் பதில்

    1. இலங்கை அரசியலில் நாட்டம் காட்டி பட்ட அடி போதும். தமிழகம் தாண்டி பிற இந்திய மாநில அரசியலில் மட்டும் கண் வைத்திருப்போம். மற்றபடி வேறெங்கும் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலல்து.

    2. தமிழர்களுக்கு தமிழார்வம் மட்டும் அல்ல. தமிழகத்துக்கு வெளியில் வாழும்போது இந்தி, தெலுங்கு, கன்னடம் எல்லாமே கற்றுக் கொள்கிறோம். பிரச்சினை இல்லை.

    3. தவறுதான். இன்னமும் பரந்த மனதோடு பழக வேண்டும்.

    4. வெட்கக்கேடு. மாறியே தீரவேண்டும்.

    5. போன கருத்துக்கும் இதற்கும் பெரிய முரண்மாடு காட்டுகிறீர்கள். என்னுடைய ஒரே கேள்வி தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக சரத் குமாரையோ பிரசாந்தையோ சூப்பர் ஸ்டாராக ஆக்க முடியுமா? தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் தாண்டித்தான் மற்றவர்கள். ஒருவர் கன்னடர். மற்றவர் தமிழர். இதில் என்ன பிரச்சினை?

    6. தமிழன் சாதி பார்ப்பதை நிறுத்தினால்தான் உருப்படுவான். இல்லையேல் பழங்கால பார்ப்பனர்களைப் போல அவனும் நசியத்தான் வேண்டும். செல்வி. ஜெயலலிதாவுக்கும், திரு. மு.க. வுக்கும் ஊழலில் ஒரு வித்தியாசமும் இல்லை. யார் என்ன சாதியாய் இருந்தால் என்ன?

    7. தமிழீழத் தமிழர்களுக்கு புலிகள் உள்ளவரை வெளிப்படையாக உதவ முடியாது. இனிமேல் முடியும். செய்ய வேண்டும்.

    8. உண்மைதான். இந்தியாதான் முதலில். அப்புறம்தான் மற்றதெல்லாம்.

 8. http://www.vakthaa.tv/play.php?vid=4257

  வினவு இணைவலையக் குழாத்தினருக்கு ஓர் வேண்டுகோள். இந்த இணைப்பிலுள்ள காணொளிக்கு கிந்தி மொழியிலான மொழி பெயர்ப்பு வரிவடிவை இணைத்து வடக்கேயுள்ள இடதுசாரி இளையோரியக்கங்கள் மற்றும் இந்தியவிலுள்ள அனைத்து ஊடகங்களுக்கும் கிடைக்குமாறு செய்வீர்களாயின் எமது மக்களின் இறுதிநாள் துன்பமானது, இதைவிட எத்துணை கொரூரமானது என்பதை மனித மனமொன்று இருக்குமாயின் புரிந்து கொள்ள வாய்ப்பேற்படும்.

  நன்றிகள் .

  விடுதலையைத் தேடும் கோடித் தமிழரில் ஒரு அகதி
  நொச்சியான்.

 9. இந்தியா என சொல்லி கொள்ளும் ஒன்று… தமிழினத்தை நான்காம் தர மக்களாக நடத்தும் போது… அந்த தமிழனும் அடிமைதனத்தை சுகமாக ஏற்று கொண்ட பின்னும்…

  தமிழீழத்தில்…. தமிழ் சமுதாயம்… உயிரை உருக்கு குப்பியில் கட்டி கொண்டு வீரம் செரிந்த போராட்டத்தை நடத்திய கண்ட… ஆதிக்க வெறியர்களின் ஊடங்கள்… தமிழர்களின் உரிமை போராட்டத்தை ஒரு வன்மத்துடன் பார்த்து கொண்டுதானே இருந்தது…

  இப்போது என் இனம் அழிவதை கண்டு… இன அழிப்பை சிங்களனுடன் சேர்ந்து கூத்தாடும்… ஆங்கில் ஊடகங்களின் கோர முகம்… நாம் பல முறை பார்த்ததுதானே?
  [

 10. ஏழரைக் கோடி தமிழர்களால் ஒருவாரத்தில் கொல்லப்பட்ட 50.000 தமிழர்களைக் காக்க முடியவில்லை. சரி போகட்டும். சிங்கள வதை முகாம்களில் தினம் தினம் கொல்லப்படும், பாலியல் வதைகளுக்குள்ளாக்கப்படும், உயிரோடு கிழித்து உறுப்புகள் அறுத்து எடுக்கப்படும் தமிழினத்தினது அவலவாழ்விலிருந்து மீட்க உரிய நடவடிக்கைகளைத் தமிழகம் செய்யாதா? ஒரு சிறு தொகையினரால் சாதிக்க முடிகிறதே, ஏன் தமிழகத்தால் முடியவில்லை. மலையாளிகளால் தீர்மானிக்க முடிகிறது ஏன் தமிழர்களால் முடியவில்லை. தமிழக இளையோர்களே அடிமைவாழ்விலிருந்து எமது இனம் விடுதலை பெற வேண்டும். உங்களது உயரி அர்ப்பணிபை நொந்து போயிருக்கும் ஈழத்தாய் இரந்து கேட்கிறாள். ஏதாவது செய்வீர்களா?

 11. ஏன் இன்னும் இது போன்ற ஊடக விபச்சாரகர்களை அனுமதிக்கிறீர்கள். எங்களை ஒடுக்குவதூடாக உங்களை அச்சுறுத்த அன்றில் எச்சரிக்க முனைகிறது கிந்தியா என்பதை தமிழகம் புரிந்து கொள்ள வேண்டும். எமது அழிவென்பது தமிழகத்தின் மீதூன மறைமுக ஒடுக்குமுறை. எமது விடியலென்பது தமிழகத்தினது தலைநிமிர்வு என்பதை கிந்தியா கணித்துச் சரியாகச் செய்கிறது. எனவே தமிழகமே வெற்று வீராவேசங்களுக்கப்பால் நாம் அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும்.

  கிந்திய – சிறிலங்கா அரசுகளின் கூட்டுப் படுகொலையை அம்பலப்படுத்தவதே இப்போதுள்ள அவசரப் பணி. செய்வீர்களா?

  • ஒரே கிழமையில் 50000 இறந்தது என்பது புலிகள் சொல்லுகின்ற பொய்யிலும் பொய்யான கூற்றுக்களாகும். புலிகளின் கதையை உலகமே கேட்காமல் போனதற்கே காரணம் புலிகள் சதாகாலமும் சொல்லிய பொய்கள்தான் காரணமாகும். பாதுகாப்பு வலயத்துக்குள் புலிப்பயங்கரவாதிகள் போய் புகுந்ததால்தான் இவ்வளவு மக்கள் இறக்கவேண்டடி ஏற்பட்டது என்பதையே இதுவரை புலியூடகங்கள் ஏன்சொல்ல மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் முழுமையான அழிவுக்கும் பிரபாகரனும் புலம்பெயர் புலியாதரவாளர்களும்தான் பொறுப்பு எற்கவேண்டும்.

   • என்ன பொய்யைச் சொல்லிவிட்டார்கள். எங்களுக்கும் சொல்லுங்கோ கேட்பம். இப்ப பலபேர் கிளம்பியிருக்கினம் பெரிய நடுநிலை நியாயம் சனநாயகம் அது இது எண்டு, புதிய சனநாயகம் எண்டு வேறை……… கொஞ்சக் காலம்………….. பிறகு சீனா, ரஸ்யா, கியூபாப் பொதுவுடமைவாதம்………… இப்ப இவங்களே தமிழினத்தை அழிக்கிறதுக்கு உதவி…….. ஐயாமார் ஒருக்கா உங்கட அந்த நட்புச் சக்தியளிடம் ஒருக்காக் கேட்டுப்பாருங்கோவன்.இப்பதானே புலியளில்லை. மக்களுக்காக, மக்களை மீட்டு அவர்களின் சொந்த இடங்களில குடியேத்துங்கோ பார்ப்பம். ???????????????!

 12. Chithoor Murugeshan, i agree with many of your sentiments.Cho and Swamy are Brahmins but Jayalaithaa is not because just a few weeks ago she was planning to send indian troops in to Srilanka to liberate Tamil eelam..Also bless him Prakash rao who is going to do the role in a film on Prabhakaran is of Kannada origin.The so called ina unarvaalarhal wont care about all these because they think Prakash Rao and co are their best friends.Vaiko a pure Tamilian? Give me a break!

 13. இந்த வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, வடவர்கள் ஏழு கோடி தமிழ் மக்கள் மீது விரோதம் பாராட்டுகிறார்கள் என்று பேசுபவர்கள் எல்லாம் தன்பாத், சிந்திரி, பிஹார் கிராமங்கள், மீரட், ஏதாவது மகாராஷ்ட்ர கிராமம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், எங்கேயாவது போய் பார்க்க வேண்டும். திருத்தணிக்கு வடக்கே போவதில்லை, ஆனால் வட இந்தியர்கள் சதி என்று வாய் கிழிய பேச்சு. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதே தொழில்.

  இலங்கையில் நடப்பது/நடந்தது இனப் படுகொலைதான். ஆனால் அதற்கு காரணம் இலங்கை அரசு, ராஜபக்சே. இந்தியா இல்லை. இந்தியாவின் கைகள் சுத்தமானவை இல்லைதான். ஆனால் இந்தியா இலங்கைக்கு செய்த ராணுவ உதவி ஒரு பொருட்டே இல்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கூட ஃபொந்ஸெகா இந்தியா ராணுவ உதவி செய்ய மறுத்ததால்தான் சீன உதவியை நாட வேண்டி வந்தது என்று சொல்லி இருந்தார். India’s sins are that of omission, not commision.

  ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இந்த மாதிரி கான்ஸ்பிரசி தியரி எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்கு மேலும் உபத்திரவத்தை ஏற்படுத்தாதீர்கள்.

  • RV,

   வழக்கம் போல் உங்கள் “தேசபக்தி” என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

   //ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இந்த மாதிரி கான்ஸ்பிரசி தியரி எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்கு மேலும் உபத்திரவத்தை ஏற்படுத்தாதீர்கள்.//

   எது Conspiracy Theory?

   இலங்கை பேரினவாதமும் அதன் ராணுவமும் அதனுடன் சேர்ந்து காங்கிரஸ் இந்தியாவும் ஈழத்தமிழனுக்கு செய்யாத உபத்திரவத்தையா இந்த பிசுக்கோத்து தியரிகள் செய்து விடப்போகின்றன‌? அது என்னவென்று எனக்கு புரியவில்லை. நேரமிருந்தால் கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லுங்கள்.

   ஓ! இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவே இல்லை என்று சரத்பொன்சேகா என்ற பொய்யனின் கூற்றை வைத்து உங்கள் கருத்தை நிரூபிக்கப்பார்க்கிறீரகளா? அல்லது ஆயுத உதவி செய்யவில்லை, படையணி, ஆளணி மற்றும் ராடர்களை மட்டும் தான் வழங்கியது என்று சொல்லவருகிறீர்களா?

   சரிதான், வைகோ தொண்டை தண்ணி வற்ற ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு இந்தியாவின் ஆயுத உதவி பற்றி கத்தியதெல்லாம் வீணாகிப்போச்சு.

   எதிர்காலத்தில் உங்கள் கூற்றை நீங்கள் நிரூபிக்க நினைத்தால் சரத்பொன்ஸேகா போன்ற பொய்யர்களின் கூற்றை வைத்து வாதம் செய்யாதீரகள்.

   • //வைகோ தொண்டை தண்ணி வற்ற ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு இந்தியாவின் ஆயுத உதவி பற்றி கத்தியதெல்லாம் வீணாகிப்போச்சு. //

    வைகோ என்ன பெரிய உத்தமரா? சரத் பொன்சேகா சொன்னதை நம்புவது நம்பாததும் தனிக்கதை. அதற்காக வைகோ பேச்சையெல்லாம் கேட்டு முடிவெடுக்க வேண்டிய ஈன நிலை பெரும்பாலோருக்கு இன்னும் வரவில்லை.

    இந்தியா ஆயுத உதவி செய்வதாக ஆதாரமில்லாத ஒரு பொய்வாதத்தை முன்வைத்து மேலும் மேலும் அதை வளார்த்துக் கொண்டே போவது ஏற்கனவே போதிய மரியாதை பெறாத ஈழப் பிரச்சினையின் நம்பகத்தன்மையை இன்னும் குறைக்கிறது.

    நீங்கள் ஐயகோ என்று உணர்ச்சிவசப் படுவதும், தேச பக்தியைக் கிண்டலப்பதும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பெரும்பாலான இந்தியத்தமிழர்கள் தன் நாட்டை உதறிவிட்டு உங்கள் பின்னால் வருவார்கள் என்ற பகல் கனவை மறந்து விட்டு, இந்தியாவைத் திட்டி மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாமல் ஆதாரம் உள்ள உண்மைகளை மட்டுமே பேசுங்கள். வைகோ போன்ற பொது மக்கள் மதிக்காத சந்தப்பவாத அரசியல் காளான்களின் பின் போகாதீர்கள். அதன் பின் உங்கள் பேச்சு கவனிக்கப் படும்.

    இந்தியா ஆயுதம் தந்தது என்று குற்றம் சாட்டுவதால் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மையைப் பொறுத்துதான் மறுப்பவர்கள் பதில் ஆதாரம் தரவேண்டிய அவசியம் உருவாகும். இல்லையேல் இது ஒரு வீண் புரளி, அவ்வளவுதான்.

 14. Prior to finger a point on other media we have to ask ourselves what media ethics our tamil media follows,especially to point out nakkeeran. What a selfish blunder and negative impact it brough to Eelam cause.Mr.Gopal lost all the respect he deserved for his previous achievements.Let us be clean and honest ourselves first.

  Thanks for your valuable sharing of writing and opinion making process.

 15. //ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.

  இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.

  இந்தப் போர் இன்னும் முடியவில்லை என்பதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும ; சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.//

  ஐக்கிய நாடுகள் கூட்டியுள்ள சிறப்பு மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியாவின் கூற்றை தயவு செய்து படித்துப்பாருங்கள்.

  ஐயகோ, காங்கிரஸ் இந்தியாவுக்கு ஈழத்தமிழன் மீதான கொலைவெறி தீரவே தீராதா?
  http://puthinam.com/full.php?2b1VoUe0dycYo0ecKA443b4g6DV4d3f1e3cc2AmS3d434OO3a030Mt3e

  • Rathi

   Having seen your various posts and sincerly acknowledge your anguish state of mind. I have been seeing you approaching this eelam issue very emotionally. ( Nothing wrong because you only know the pain as a diasopra tamilian). But this approach does not not yield any result to you or diasopra tamilaians.
   பிரகபாகரன் மற்றூம் அந்த இயக்கத்தின் மேல் எனக்கு பலத்த விமர்சனங்கள் உண்டு. ஆனால் எந்த ஒரு மனிதனின் மரணத்திலும் மகிழ்கொள்ளூம் மனம் எனக்கில்லை.ஆனால் வரலாற்றூலிருந்து பாடம் கற்கவேண்டும். ஆகையால் புலம் பெயர்ந்த தமிழ்ர்களான நீங்கள் இனிமேல் அறீவுபூர்வமாக அணுகங்கள்.

   LTTE செய்த வரலாற்றூ தவறுகளய் உள் வாங்கிக்கொண்டு, ஆராய்ந்து, எந்த தனிநபர் பிம்பங்களையும் ( பிரகபாகரன் மற்றூம் தமிழ் நாட்டுத்திராவிட மற்றும் இந்திய கட்சிகளின் தலைவர்கள் உட்பட) கட்டுட்டைத்து, புலம் பெயர்ந்த மக்களால்,புலம் பெயர்ந்த மற்றும் ஈழ மக்களூக்காக,ஒரு அரசியல் தீர்வை கொண்டுவாருங்கள். இனிமேல், எந்த ” தொப்புள் கொடி உறவுகளய்” நம்பாதீர்கள். வெற்று கூச்சல், வறட்டு விவாதம், கழிவிரக்கம், உள்ளீடற்ற கோஷங்கள், இந்தப்பிரச்சினைக்கு தீர்வாகாது. வலியையும்,இரணங்களையும் வாழ்க்கையாக கொண்ட நீங்கள் தான் ( புலம் பெயர்ந்த மற்றும் ஈழ மக்கள் ) தீர்மானிக்கவேண்டும். நிரதர்சன நிகழ்வுகளையும்/ உண்மைகளையும் ஆர ஆராயுமாறு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். Ballot box (or) Barreel GUN என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். 30 வருட ரத்த ஆறு நிற்க்கவேண்டுமா? இல்லையா?

   மற்றும், பல புலம் பெயர்ந்த மக்களோடு கதைக்கும்போது, பல வித செய்திகள் கேள்விப்படும்பொழுது ( KP VS CASTRO ) சங்கடமாகவும்/எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
   இன்னும் சிலர், தனி நபர் பிம்பங்களால் ஆட்க்கொண்டு,உண்மைகளை நம்ப மறுத்து, “தம்பியை” இணயத்தளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நம்புங்கள்…ஈழம் உருவாகும்!! ஆனால் உருவாக்குவது ஈழமக்களான உங்கள் கையில்!!!

   • VAS,

    //I have been seeing you approaching this eelam issue very emotionally. ( Nothing wrong because you only know the pain as a diasopra tamilian). But this approach does not not yield any result to you or diasopra tamilaians.//

    நான் உணர்ச்சிவச்ப்பட்டு இங்கே எதையும் பேசவில்லை. உண்மையை தான் பேசுகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் நாங்கள், எங்கள் மக்களுக்காக எங்களால் செய்ய முடிந்ததை செய்து கொண்டுதானிருக்கிறோம். ஆனாலும், உங்கள் அறிவுரைக்கு நன்றி.

    //இனிமேல், எந்த ” தொப்புள் கொடி உறவுகளய்” நம்பாதீர்கள். வெற்று கூச்சல், வறட்டு விவாதம், கழிவிரக்கம், உள்ளீடற்ற கோஷங்கள், இந்தப்பிரச்சினைக்கு தீர்வாகாது. //

    ஐயா, நாங்கள் யாரையும் நம்பி எங்கள் உரிமைக்கான போரை ஆரம்பிக்கவில்லை. அப்படி யாரையும் நம்பியிருந்தாலோ அல்லது அவர்கள் எங்களுக்கு உதவி இருந்தாலோ எங்களுக்கு இவ்வளவு உயிர் அழிவு வந்திருக்காது. ஆனாலும், நாங்கள் கேட்காமலே எங்களுக்காக குரல் கொடுத்த தமிழ்நாட்டு உறவுகளுக்கு நாங்கள் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். வெற்று கூச்சல் போடுகிறோம் கழிவிரக்கம் தேடுகிறோம் என்று எங்கள் மீது முத்திரை குத்தாதீரகள். நாங்கள் எத்தனையோ விதமான அடக்குமுறைகளை தாண்டி வந்தவர்கள். யாரிடமும் கழிவிரக்கம் தேடும் ஈனச்செயல் புரிபவர்கள் அல்ல நாங்கள்.

 16. viththakan,

  /நீங்கள் ஐயகோ என்று உணர்ச்சிவசப் படுவதும், தேச பக்தியைக் கிண்டலப்பதும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பெரும்பாலான இந்தியத்தமிழர்கள் தன் நாட்டை உதறிவிட்டு உங்கள் பின்னால் வருவார்கள் என்ற பகல் கனவை மறந்து விட்டு, இந்தியாவைத் திட்டி மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாமல் ஆதாரம் உள்ள உண்மைகளை மட்டுமே பேசுங்கள். வைகோ போன்ற பொது மக்கள் மதிக்காத சந்தப்பவாத அரசியல் காளான்களின் பின் போகாதீர்கள். அதன் பின் உங்கள் பேச்சு கவனிக்கப் படும்//

  முதலில், உங்களுக்கு வைகோ யாரோ எனக்கு தெரியாது. ஆனால், ஒரு தனிமனிதராக ஈழத்தமிழனின் மறுக்கப்பட்ட உரிமைகள் அவர்களின் இன்னலகள் பற்றி அவர் ஒருபோதும் பொய் பேசியது கிடையாது. வைகோ என்ற தனிமனிதருக்கு நாங்கள் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வைகோ போன்றோர்களின் பின்னால் போகாமல் உங்களின் பின்னால் வந்தால் என் இனத்தின் சாவையும் அவலத்தையும் தடுத்து நிறுத்தி விடுவீரகளா?

  நீங்கள் சொல்வது போல் இந்தியதமிழர்கள் தன் நாட்டை உதறிவிட்டு எங்கள் பின்னால் வருவார்கள் என்று கனவு காணும் அளவுக்கு யதார்த்தம் தெர்யாதவர்கள் அல்ல நாங்கள். அதற்கான தேவையும் இல்லை. இது ஒரு பேதமையான கருத்து. உங்களைப்போன்ற ஒரு சிலரைத்தவிர ஈழத்தமிழனின் இன்னல் கண்டு துடிக்கும் எத்தனையோ தமிழகத்தமிழர்கள் உள்ளார்கள். இந்தியா பற்றிய ஆதாரம் உள்ள உண்மைகள் வினவின் பதிவுகளிலேயே எழுதப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள். நாங்கள் ஆதாரம் காட்டினால் மட்டும் இழந்த உயிரகளை உங்களால் மீட்டுத்தரமுடியுமா?

  நான் உங்கள் தேசபக்தியை கிண்டலடிப்பதாக நினைத்து உங்களுக்கு வரும் கோபம் சரியென்றால், என் இனத்தின் படுகொலைக்கு துணைபோன இந்தியாவின் துரோகத்தை நினைத்து நான் உணர்ச்சிவசப்படுவது, திட்டுவதும் சரியே. இந்தியாவை திட்டி மரியாதையை கெடுத்துக்கொள்ள கூடாது என்று பயமுறுத்துகிறீர்களா?

  இந்த பயமுறுத்தல் கொள்கையை தான் காங்கிரஸ் இந்தியாவும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறது.

  • மாற்றுக் கருத்து உள்ளவர்களை மிரட்டுவது புலிகளின் பழக்கம். மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்றால் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று மட்டும்தான் பொருள். மனித வெடிகுண்டு அனுப்புவோம் என்று அர்த்தமில்லை. எனவே உங்களை யாரும் பயமுறுத்தவில்லை. எனக்கு பயமுறுத்தத் தெரியாது.

   மற்றபடி இந்தியா ஆயுதம் கொடுத்துள்ளது என்ற assumption மட்டும்தான் உங்களிடமெல்லாம் இருக்கிறதே தவிர ஒரு ஆதாரமும் காணோம். வைகோ இத்தனை ஆண்டுகளில் ஈழத் தமிழர் பெயர் சொல்லி ஓட்டு வாங்க முயற்சித்ததைத் தவிர எந்த வகையிலும் உதவியதில்லை. அவர் புலிகளிடம் கோடி கோடியாகக் காசு வாங்கியிருக்கிறார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லாததால் அதை இங்கு இழுக்கவில்லை. புரிகிறதா?

   • திரு. RV சொன்னது //சொந்த சகோதரர்களிடமிருந்து ஆறுதலாக இரண்டு வார்த்தை கூட வரவில்லை, லாஜிக் பேசுகிறார்கள் என்ற ஆதங்கம் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்?//

    திரு. ரதி! மேற்குறிப்பிடப் பட்டுள்ள RV யின் வாசகம் இந்தத் தன்னிலை விளக்கத்துக்கு என்னைத் தள்ளுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நான் இலங்கை சென்று NGO க்கள் மூலமாக முகாம்களில் என்னால் ஆன உதவிகள் செய்யலாம் என்று இருக்கிறேன். என் மனைவியும் நானும் ஒரு சில ஆதரவற்ற குழந்தைகளின் அடுத்த சில வருடங்களுக்கான படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டு உதவலாம் என்று இருக்கிறோம்.

    இதனால் நான் என்னை நல்லவன் என்றோ, ஈழப் போருக்கு உதவி விட்டேன் என்றோ, இலங்கைத் தமிழர்கள் கையேந்துபவர்கள் என்று நினைத்துவிட்டேன் என்றோ எண்ணாதீர்கள். I care for my kith and kin. அவ்வளவுதான்.

    ஆனால் சுதந்தரப் போருக்கு இப்படி நேரடியாக உதவ முடியாமல் நெருக்கடிக்குத்தள்ளி விட்ட ராஜிவ் படுகொலைக்குக் காரணமான புலிகளில் மேல் கோபம் உள்ளது. அவர்களை ஊதி விட்ட இந்த பம்மாத்து அரசியல்வாதிகளின் நம்பும் ஈழத்தமிழர்கள் மேல் வருத்தம் உள்ளது.

 17. ரதி,

  வழக்கம் போல் உங்கள் மறுமொழிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. விடாமல், அயராமல் எழுதுங்கள். நீங்களே ஒரு ப்ளாக் ஆரம்பியுங்களேன்! நீங்கள் எழுதுவது இன்னும் நிறைய பேரை சென்றடையலாம். கடுமையான வார்த்தைகளோ என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் என் நண்பர், மதிப்பிற்குரியவர். நீங்கள் ஒன்றும் தவறாக் என்னை திட்டிவிட்டதாக நான் நினைக்கவில்லை, அப்படியே நாளை திட்டினாலும் அது ஒரு பெரிய விஷயமும் இல்லை.

  என் கருத்து தேச பக்தியால் உருவானது அல்ல. நீங்களே சொன்னது போல சிங்களப் பேரினவாதமே, இலங்கை அரசே, இந்த படுகொலைக்கு காரணம். இந்தியாவுக்கும், சீனாவுக்கும, சிறு பங்கு இருக்கலாம். ஆனால் என்ன அவர்களா போரிட்டார்கள்?

  ஃபொந்ஸெகாவை பற்றி சொல்லி இருந்தீர்கள். போர் முடிந்தே விட்ட நிலையில், ஈழத் தமிழர்கள் நிலை இந்திய தேர்தலில் என்ன, தமிழக தேர்தலில் கூட ஒரு பெரிய விஷயம் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில் அவர் பொய் சொல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை. தேர்தலில் இது பெரிய விஷயம் என்று எல்லாரும் நினைத்தபோதே தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று சொன்ன இலங்கை அரசு அதிகாரிகள் இப்போது பொய் சொல்வார்களா என்ன? ஃபொந்ஸெகா உண்மை விளம்பி, ஹரிச்சந்திரன் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு இப்போது இந்த விஷயத்தில் பொய் சொல்ல அவசியம் இல்லை, பொய் சொல்லி அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

  வைக்கோ சொல்வதை எல்லாம் நான் அப்படியே நம்புவதற்கில்லை. அவருடைய அதீத புலிகள் பற்று அவரை மிகைபடுத்தி பேச வைக்கிறது. வைக்கோவின் உண்மையான உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் ஈழம் என்று வந்தால் ஒன்றுக்கு பத்தாக ஏற்றித்தான் சொல்வார்.

  வித்தகன், ரதி இந்தியாவை என்ன திட்டிவிட்டார்? அவருடைய கோபம் எல்லாம் இந்தியா மீது நமக்கிருக்கும் பற்று இலங்கை அரசுக்கு ஆதரவாக வெளிப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் விளைவது. மேலும் அவர் ஐ.நா.வில் இந்தியா இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை, அங்கே விசாரணை கூடாது என்று சொல்வது – பல மேலை நாடுகள் விசாரணை வேண்டும் என்று சொல்லும்போது இப்படி சொல்வது – இந்தியாவின் பிராதிய வல்லரசு நோக்கத்துக்கு உதவி செய்யலாம். அது தவறு இல்லை என்று சொல்ல முடியுமா? அப்புறம் இந்தியா ஆயுதங்கள் கொடுத்திருக்கும் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. கொடுக்கவில்லை என்று இந்தியா அரசு திட்டவட்டமாக மறுத்து நான் பார்க்கவில்லை. இலங்கை அரசு பத்து கேட்டிருந்தால் இந்தியா இரண்டு கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஒரு பெரிய விஷயம் இல்லை – ஆனால் இனப் படுகொலைக்கு செய்யும் சிறு உதவியும் தவறுதானே?

  வாஸ், நன் ரதி எழுதுவதை பல நாட்களாக படித்து வருகிறேன். அவர் தொப்புள் கொடி உறவை நம்புவதை விட்டு பல நாட்கள் ஆகிவிட்டன என்றுதான் நான் நினைக்கிறேன். சொந்த சகோதரர்களிடமிருந்து ஆறுதலாக இரண்டு வார்த்தை கூட வரவில்லை, லாஜிக் பேசுகிறார்கள் என்ற ஆதங்கம் அவருக்கும் இருக்கத்தானே செய்யும்?

  • RV,

   மறுபடியும் நான் மதிக்கும் ஒர் இணையத்தள நண்பராக உங்கள் கருத்துகள் என்னை நெகிழ்ச்சியுறச்செய்கின்றன.

   /கடுமையான வார்த்தைகளோ என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் என் நண்பர், மதிப்பிற்குரியவர். நீங்கள் ஒன்றும் தவறாக் என்னை திட்டிவிட்டதாக நான் நினைக்கவில்லை, அப்படியே நாளை திட்டினாலும் அது ஒரு பெரிய விஷயமும் இல்லை.//

   உங்களை திட்ட வேண்டுமென்ற நோக்கம் எனக்கு கிடையவே கிடையாது. ஈழத்தமிழர் விடயத்திலும் காங்கிரஸின் நிலைப்பாட்டிலும் என்னுடையதும் உங்களினதும் நிலைப்பாடுகளையும் நாம் இருவரும் நன்றாகவே அறிவோம். அந்த புரிதலின் உரிமையில் தான் நான் கொஞ்சம் காட்டமாகவே என் கருத்தை சொல்லியிருக்கிறேன் போலுள்ளது. அது வாஸ், வித்தகன் போன்றோர்களுக்கு தவறான புரிதலை ஏறபடுத்தியிருக்கிறது போலுள்ளது. அதற்காக வருந்துகிறேன்.

   //நீங்களே ஒரு ப்ளாக் ஆரம்பியுங்களேன்! //

   RV, my friend, இனிமேல் இப்படி ஜோக் எல்லாம் சொல்லாதீர்கள். இருந்தாலும் உங்களுக்கு என் எழுத்தின் மீது அதீத நம்பிக்கை தான். அதற்காக என் நன்றிகள்.

   ஒரு செய்தி, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

 18. ரதி
  என்னுடைய வார்த்தை பிரயோகங்கள் உங்களை புண்படுத்தியிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். இதே ஈழ்ப்பிரச்சினை போல், உலகத்தில் மற்றொரு இடத்தில் போராடிய குர்து இனத்தவரான‌ ஷெக்ஸ்முஸ் ஆமெட் எப்படி இப்பிரச்சினையை நோக்குகிறார் என்பதை உங்கள் முன் வைக்கிறேன். இவரும்,இவர் இனத்தவர்களும் தங்களுக்கும் சொந்த நாடு வேண்டும் என்றுதான் போராடுகிறார்கள்.( இவருடைய பெரும்பாலன கருத்துகளோடு நான் உடன் படுகிறேன் )
  \\\\I would like to offer my deep condolences to the people of Tamil Eelam for their immense losses in recent months.

  As a Kurd, I have followed the liberation struggle of Tamils in Sri Lanka-along with my own people’s fight for an independent state-since mid-1980s, when I first saw the pictures of uniformed female cadres of the LTTE in Jaffna and fell in love with them. The LTTE, in my view, is the gold-standard for all national liberation struggles despite its defeat. And what a glorious defeat it was! My people suffered many defeats too; in 1925, 1938, 1946, 1975, 1988, 1991 and 1999. None could match the glory of LTTE’s fight to the death. This was a struggle against overwhelming odds that ended in martyrdom for your leaders, but their memories and their struggle will live in songs and stories of all Tamil people for a thousand years to come.

  That the LTTE managed to keep its leader and senior cadres alive right down to the last day and the last fire-fight before they too succumbed to the vastly superior man and fire power of the SLA is a testament to the intelligence, strength, discipline and dedication of the organisation. V. Prabhakaran and his senior commanders could have ordered the rank and file LTTE personnel to lay down their arms, before fleeing the island for a third country. The fact that they -as well as their families-did not flee the conflict zone nor surrendered, but chose to fight to the death like tens of thousands of other LTTE cadres that preceded them is a lesson to all leaders who ask others to sacrifice their lives for a cause. I doubt many insurgent leaders, Kurds included, would show as much courage and offer as much personal sacrifice in similar circumstances.

  Compared to armed Kurdish movements, the LTTE had many strengths and weaknesses. Its strengths were too numerous to count. Its weaknesses and mistakes were few but deadly in the long run. In my view, there are two generalised, structural weaknesses of the LTTE, followed by a few specific mistakes they made.

  Firstly, the LTTE was extremely inflexible in its political expectations. In the absence of international support for an independent homeland, an autonomy agreement for a federal Tamil state in Sri Lanka was the most realistic outcome for the LTTE. It was the responsibility of a new generation of Tamils to take the struggle to its next stage, if Sri Lankan state continued to be ill-disposed towards Tamil people. By then, of course, the federal Tamil state would have gained some international recognition for the status quo and thus would have been far less isolated as a ‘terrorist’ outfit. That V. Prabakharan instructed his bodyguards to shoot him if he deviated from the demand for independence is a clear sign of the inflexibility of the LTTE leadership.

  Secondly, the LTTE put unnecessary emphasis on revenge and retaliation. As Clausewitz famously said, “war is politics by other means”. In politics,-as in war-revenge and retaliation is always secondary to the main objective. Every political act must be judged by its consequences; that is, whether it helps bring the main objective closer to reality, not whether it satisfies primitive urges for some injustice done in the past. The assassination of Rajiv Gandhi and many attacks on Sinhala leadership, some of whom were useful and could have been of further use to Tamil struggle in time, are cases in point.

  In more specific mistakes, the LTTE should have pushed on to re-capture Jaffna at all costs after liberating the Elephant Pass in 1999, even if this meant losing ground elsewhere. The cost could have been very high with tens of thousands of SLA soldiers still occupying the peninsula but the SL political and military forces were in complete disarray. Unfortunately, the window of opportunity was lost and the LTTE eventually found itself fighting on more than one front.

  The ceasefire agreement of 2002, following the 9/11 events, was correct; perhaps inevitable. However, the Indian Ocean Tsunami of late 2004 and its devastating effect on Tamil territory should have humbled Prabakharan and the LTTE into seeking a genuine half-way compromise with the SL government. It should be noted that the Tsunami and its effects ended the Aceh independence movement and it should have played a role in LTTE’s political calculation as well.

  Another grave error was the boycotting of elections in 2005 that brought hardliners to government in Sri Lanka. As a general rule, people should never ever be asked to refrain from voting in an election under any circumstances. The benefits of election boycotts, such as refreshing community spirit and as gestures of dissatisfaction, are small and ephemeral. They are far outweighed by the dangers as well as the real and lasting costs of handing the power to a less amenable adversary.

  Karuna’s rebellion should also have been foreseen and dealt with quite early and sincerely. As a faraway, non-Tamil observer, nothing disappointed me in LTTE as much as the Tiger vs Tiger violence. I can imagine its demoralising effect on all Tamils. As a Kurd, I am not unfamiliar with infighting among our people and between many of our political parties, but never has a single, Kurdish military outfit turned its guns on to itself. Perhaps, Karuna was also motivated by Prabhakaran’s inflexibility, the effects of the Tsunami and the result of election boycott of 2005.

  If, as was charged, Prabhakaran committed the grave error of ‘narrow regionalism’ in LTTE, then Karuna could have only compounded the error with his rebellion. (’Narrow regionalism’, that is, giving preferential treatment to people of certain regions, is considered a great sin among Kurdish movements. Still, it’s inevitable and widespread) But more likely, being the supremo of the Eastern Tamils must have gotten to Karuna’s head, and he must have considered himself a better leader for the entire LTTE than Prabhakaran.

  History will never forgive Karuna for betraying his commitment and turning his guns on his leader and comrades no matter what the real reasons for his defection might be. The best and most honourable action for Karuna, as well as for his movement and for his people, was to either resign altogether from all his functions and duties within the LTTE -after voicing his grievances in private, even if it meant death for him-or seek a less active role in the movement.

  He did neither, preferring to be an active turncoat. Beloved, respected and trusted neither by Tamils nor Sinhalese, Karuna will surely meet a violent end, with each side crediting the other for it, and with very few people shedding tears for his demise.

  People of Tamil Eelam are smart, talented and resourceful. You shall rise again from your ashes. By ballots or bullets, Tamil Eelam shall become a reality so long as you keep up your hopes and dreams alive. – Shexmus Amed

  • வாஸ்,

   ஒரு விடயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். எங்கள் விடுதலையை நாங்கள் தான் முயன்று வென்றெடுக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறவள் நான். நாங்கள் இன்று உலகநாடுகள் எல்லாவற்றிடமும் தான் மனிதாபிமான வேண்டுகோள்களை வைக்கிறோம். அது இந்நாட்களில் ஈழத்தமிழனின் தலையெழுத்தாகிவிட்டது. அது தமிழ்நாடு என்று வரும்போது “தொப்புள் கொடி” என்ற சொற்றொடர் ஏனோ சேர்ந்து விட்டது.

   ஈழத்தமிழனின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்றால், அடிப்படையில் இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என நினைக்கிறேன். 1972 ம் ஆண்டு சிங்களமொழி, பெளத்தமதம், ஆட்சியாளராக யார் இருக்கலாம் என்பதெல்லாம் தெளிவாக தங்கள் வசதிக்கேற்றவாறு சிங்கள பேரினவாதிகள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதன்படி தமிழர்கள் இலங்கை தேசியத்திற்கு தங்க்ள் பங்களிப்பை எல்லா வழிகளிலும் வழங்க வேண்டும். வரி கட்ட வேண்டும். தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஆனால், தமிழன் என்ற சிறுபானமை இனத்தை சேர்ந்தவன் இலங்கையை ஆளும் அதிபராக அரசியல் சட்டம் இட‌ம் கொடுக்காது. ஒரு பெளத்த சிங்கள குடிமகனோ/குடிமகளோ மட்டும் தான் இலங்கையை ஆளலாம். குறைந்த பட்சம் தமிழ் மொழிக்கான அந்தஸ்தாவது தந்தார்களா? இதை இனி வளர்ந்து வரும் சமுதாயம் ஏன் என்று கேள்வி கேட்காதா? கேட்டால் தப்பா? பிறகு இனப்பிரச்சனை எப்படி தீரும்.

   இந்த சிக்கலான கேள்விகளுக்கு விடைகாண எந்த சிங்கள ஆட்சியாளர்களும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அவர்களைப் பொறுத்தவரை இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடாக இருக்க வேண்டும். இதைத்தான் உலகநாடுகளிடம் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், யார் கேட்கிறார்கள்? இப்போதெல்லாம் சர்வதேச ஊடகங்களில் ஈழப்பிரச்சனையை பற்றி சொல்லிவிட்டு, இறுதியாக சொல்வார்கள், உலகத்தில் பெரும்பான்மை சிறுபான்மை இனப்பிரச்சனை நடப்பது இலங்கையில் மட்டுமல்ல. அதனால், ஈழத்தமிழன் சாவது ஒரு மாட்டரே கிடையாது.

   இப்படி எங்கள் விடுதலையைப் பெறுவதில் தாராளமாகவே சவால்களும் சிக்கல்களும் நிறைந்துள்ளன.

   உங்கள் நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

   நீங்கள் இணைத்துள்ள கட்டுரைக்கு நன்றி. நேரமின்மையால் இன்னும் படிக்கவில்லை. நிச்சயமாக படிப்பேன்.

   • தமிழனின் காதில் நல்லாவே பூச் சுத்துறீங்க.

    //ஆனால், தமிழன் என்ற சிறுபானமை இனத்தை சேர்ந்தவன் இலங்கையை ஆளும் அதிபராக அரசியல் சட்டம் இட‌ம் கொடுக்காது. //

    இது மட்டும் தானா உங்களது பிரச்சினை? இதற்குத் தானா புலிகள் போராடினார்கள்? shame on you

    //குறைந்த பட்சம் தமிழ் மொழிக்கான அந்தஸ்தாவது தந்தார்களா? //

    இந்தியாவில் தமிழுக்கு அந்தஸ்து இல்லை. தமிழர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள். சிறி லங்காவில் தமிழ் official language. தமிழர்கள் தமிழில் படிக்கிறார்கள்.

 19. I cannot understand. Right now, because Prabakaran and LTTE are gone, Tamilnadu and Kerala are in direct trouble. Also, Indian government has given headache to all South Indians, by starting trouble for that region too. Srilankans hate India. And have taken alliance with all countries that hate India. Now you know, why Prabakaran said only LTTE is true friend. What sadness, this all is.

 20. வித்தகன்,

  வாழ்த்துக்கள்! இந்த மாதிரி தன்னிலை விளக்கங்களை கொடுக்க தயாங்காதீர்கள். நூறு பேர் படித்தால் இரண்டு பேருக்கு தாங்களும் ஏதாவது செய்யலாம் என்று தோன்றும் அல்லவா?

 21. வித்தகன்,

  //என் மனைவியும் நானும் ஒரு சில ஆதரவற்ற குழந்தைகளின் அடுத்த சில வருடங்களுக்கான படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டு உதவலாம் என்று இருக்கிறோம்.//

  இது நீங்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ தேர்ந்தெடுத்த‌ வ‌ழியாக‌ இருக்க‌லாம்.

  ஆனால், நாங்க‌ள் அல்ல‌து அங்கு இடைத்த‌ங்க‌ல் முகாம்க‌ளில் அவலப்படும் ஈழ‌த்த‌மிழ‌ர்கள் யாராக‌ இருந்தாலும், இப்போது விரும்புவது அவ‌ர்க‌ள் சொந்த வாழ்விடங்களுக்கு சென்று வ‌சிக்க‌ விரும்புவ‌துதான். நீங்க‌ள் NGO வாக‌ போவ‌தால், உங்க‌ள் அறிகைக‌ள் அல்ல‌து ப‌ரிந்துரைக‌ள் மூல‌ம் இத‌ற்கான‌ initiative ஐ எடுப்பீர்க‌ளானால் அதுவே ஈழ‌த்த்மிழ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் கால‌த்தால் செய்யும் பெரிய‌ உத‌வி. இடைத்தங்கல் முகாம்களில் உள்ள புறநிலைக்காரணிகள், இராணுவ பயமுறுததல் என்பன‌ வளர்ந்துவரும் சிறுவர்க்ளுக்கு உளவியல் பாதிப்புகளை உண்டாக்கும் என நினைக்கிறேன். முதலில் உங்களால் முடிந்தவரை அதிலிருந்து அவர்களை மீட்கப்பருங்கள.
  நீங்க‌ள் NGO வாக‌ போவ‌தானால் ஏதாவது துறைசார் வ‌ல்லுன‌ராக‌ போகிறீர‌க‌ளா?

  • ரதி. குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்கும் விருப்பம் சுலபமாக நிறைவேறும் என்று தெரிகிறது. அதற்கான முதல் படிகள் எடுக்கப்பட்டு விட்டன.

   முகாமுக்கு செல்லும் முயற்சி கை கூடுகிறதா என்று பார்ப்போம். நான் மருத்துவன் இல்லை. ஆனால் மும்பாய் விபசார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுடன் பணியாற்றி அவர்களுக்கு பாடம், விளையாட்டு சொல்லிக்கொடுத்த அனுபவம் உண்டு. இரண்டு வாரங்களில் ஓரளவு உதவ முடிந்தது என்று நம்புகிறேன்.

   என் ஆங்கில அறிவும், ஜூலை முடியும் வரை இருக்கும் விடுமுறை நேரமும் முகாமில் இருக்கும் தமிழர்கள் அவர்கள் தொலைந்த உறவினர்களைத் தேடவும், குழந்தைகள் மனநிலையில் சோகம் குறையவும் உதவுகிறதா என்று பார்ப்போம். என் மனைவி diplomatic பொறுப்பிலிருப்பவர். அதனால் என்னை தகுந்த NGO உடன் இணைக்க முயற்சித்து வருகிறோம்.

   • வித்தகன்,

    ஒரு ஈழத்தமிழராக உங்கள் முயற்சிக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும். உங்களைப் போன்ற தமிழ் பேசும் NGO தொண்டர்களீடம் அவர்கள் தங்க‌ள் மனக்கவலைகளை சொல்லியாவது ஆறமுடியும்.

 22. இலங்கையில் போர் முடிந்து விட்டது. இந்தியாவுக்குக் கொண்டாட்டம்தான். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 300 பெட்ரோல் நிலையங்களை இந்தியன் ஆயில் திறக்கப் போகிறதாம். அதையும் ஊடகங்கள் கோலாகலமாகக் கொண்டாடும்.

 23. நாசமறுப்பான்,

  முதலில் உன் பெயரை “நாசம் விளைவிப்பான் ” என்று மாற்றிக்கொள். அது தான் உன் குணத்திற்கு மிகமிகப் பொருந்தும்.

  இலங்கை இனப்பிரச்சனை தீரவேண்டுமானால், ஒன்று “சிங்கள பேரினவாதிகள் திருந்த வேண்டும்” அல்லது இலங்கை “அரசியல் நிர்ணய சட்டம் திருத்த படவேண்டும்”. ஆனால், இது இரண்டுமே நடக்கப்போவதில்லை.

  அதனால் தான், என்னைபோன்ற ஈழத்தமிழர்கள் சொல்கிறோம் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு,

  தமிழீழம்.

 24. i feell very sad about the people of eelam, the people from tamilnadu should supprot the struggle for the separate home land in EELAM, we can together do it….

  • தமிழன்,

   ஈழத்தமிழர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க முன்னர் வித்தகன் மற்றும் VAS போன்ற இந்திய தமிழர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள். எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் வருவதை தவிர்க்கவே விரும்புகிறோம்.

   அதே நேரம், தியாகி முத்துகுமார், வினவு, வைகோ, ஐயா பழ நெடுமாறன் போன்ற தனிமனிதர்களுக்கு நன்றி நன்றி சொல்லவும் கடமைப்ப்பட்டிருக்கிறோம்.

 25. //
  தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள் By -chittoor .s.Murugeshan

  Point wise பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன :

  1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது

  நாங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். பிறரின் வயிற்று எரிச்சலுக்கு
  ஆளாக விரும்பாதவர்கள்.

  2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது

  சரியல்ல -எத்தனை வெளி மாநிலங்களில் பணி செய்துள்ளீர்கள்

  3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது

  பலர் எங்களுடன் கலப்பு மணம் செய்து தமிழராகவே மாறிவிட்டனர்கள்;கலக்காமல் தான்

  இங்கு வந்தேறிகள் தொடர் ஆட்சி செய்து வந்தார்களா/ வருகிறார்களா???

  4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்

  பின்னர் எப்படி பிற மொழியினரெல்லாம் தொடர் ஆட்சி செய்து வருகிறார்கள் ???

  5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது

  நாங்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழ்ந்து கெட்டவர்கள்

  6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)

  திராவிடத்தை- தமிழருக்கு வெளிச்சம் காட்ட அவரே சிறந்தவர் என்று கருதி எடுத்த

  தீர்க்க தரிசனத்தின் விளைவாக வந்த முடிவு.

  7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது

  உடன் பிறந்தே கொள்ளும் வியாதியினருடன் வாழ்வதால் வந்த வினை.நிர்வாண நாட்டில்

  கோவணம் கட்டிய பைத்தியக்காரர்கள்

  8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது //

  ஆண்டவனுக்கே வெளிச்சம்.உங்கள் தெலுங்கான பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க