privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?

-

ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான்.

இயல்பான வாழ்க்கையில் முதுமை காரணமாகவோ, உடலை வதைக்கும் நோய் காரணமாகவோதான் பெரும்பான்மையினர் இறக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்காக நடத்ததப்படும் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு இறப்பு கொலையாக மாறி நிற்கிறது. ஈழத்தில் முல்லைத்தீவில் அடைக்கலம்புகுந்திருக்கும் மக்களை இப்படித்தான் இலங்கை ராணுவம் கொன்று வருகிறது.

fire1

மரணத்தின் காரணங்களும், தோற்றுவாய்களும், தருணங்களும் இயற்கையால், அநீதியான இந்த சமூக அமைப்பால் செயல்படுகின்றன. இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது.

முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார். அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.

காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியார் பிரச்சினையிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்தும் முத்துக்குமார் தமிழகத்தில் இருக்கும் மற்ற மொழி பேசும் மக்களை சகோதரர்களாக விளித்து ஈழத்திற்கான நியாயத்தைப் புரிந்து கொண்டு ஆதரிக்குமாறு வேண்டுகிறார். இதன் மூலம் சிவசேனா, நவநிர்மான் சேனா போன்ற இனவெறிக்கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல் கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு  பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார். இன்று வழக்கறிஞர்கள் தமிழகமெங்கும் நீதிமன்றங்களை புறக்கணித்து போராடுகின்றனர். தமிழக அளவில் கல்லூரி மாணவர்களும் போராடுகின்றனர்.

எனினும் போருக்கெதிராக தமிழகத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளையோ போராட்டங்களையோ இந்திய அரசு கடுகளவும் சட்டை செய்யவில்லை. எத்தனை ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டும் வரையில் இந்தப் போரைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ராஜபக்சே அரசுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்திய அரசு.

முல்லைத்தீவு பகுதியில் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சில் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவோ, மருந்துப் பொருட்களோ இல்லை. அதுமட்டுமல்ல, பாதுகாப்புப் பகுதி என்று அறிவித்து விட்டு, அங்கே தஞ்சம் புகுந்துள்ள மக்களின் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது சிங்கள இராணுவம். இப்பகுதியின் மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்களே காயமடைந்துள்ளனர். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் நேருவதாகக் கூறித் தனது குற்றங்களை மறைத்துக் கொள்கிறது சிங்கள அரசு.

எனினும் இந்தியா, பாகிஸ்தான், சீனா முதல் அமெரிக்கா வரையிலான நாடுகளின் முழு ஆதரவோடு இந்தப் போரை சிங்கள அரசு நடத்திவருவதால், இந்தப் படுகொலைக்கு எதிராக சம்பிரதாயமான ஒரு கண்டனம் கூட யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.
குறிப்பாக இந்தப் போரில் சிங்கள அரசு ஈட்டிவரும் வெற்றி குறித்து தமிழகத்தின் பார்ப்பன ஊடகங்கள் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் திளைக்கின்றன. அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அப்பாவித் தமிழர்கள்’ போரினால் பாதிக்கப்படுவது குறித்து பெரிதும் கவலைப்படுவது போல நடிக்கின்றன.

இந்தியா இலங்கைக்கு பீரங்கிகள் அனுப்பியிருக்கிறது என்பதும், அதுவும் தமிழகம் வழியாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. எனினும் “தமிழ்நாட்டிலிருந்து எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும் ராஜபக்சே நடத்தும் இந்தப் போரை எக்காரணம் கொண்டும் தடுப்பதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறுகிறது சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்.

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளும், தி.மு.க அரசும் நடத்தும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை. “வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை சென்றால் போதாது; வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லவேண்டும்” என்ற கோரிக்கையை ஏதோ மிகப் பயங்கரமானதொரு கோரிக்கை போல வைத்தது திமுக அரசு. “பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்” என்ற செய்தியை அன்பழகன்  சட்டசபையில் தெரிவித்தவுடனே சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் பத்திரிகை செய்தியோ இந்தக் கேலிக்கூத்தை அம்பலமாக்கியிருக்கிறது. “புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் வைத்துவரும் கோரிக்கைக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பெரிதும் வலியுறுத்திக் கூறினர்” என்று கூறுகிறது இந்து நாளேடு.  “எங்களுடைய அழைப்பின் பேரில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்திருக்கிறார்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள். (தி இந்து, ஜன, 28). “புலிகள் மீது இந்திய அரசுக்கு எவ்வித அனுதாபமும் கிடையாது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலியாகக் கூடாது என்பது மட்டுமே எமது கவலை” என்று கூறியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

இப்படியாக பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் என்பது திமுகவை சமாதானப் படுத்துவதற்கான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை கூட அல்ல என்பது அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாகவும், இந்திய அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் பிரச்சினையாகவும் தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றினர். அதனை இந்திய ஆளும் வர்க்கமும் சிங்கள அரசும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். “போர்நிறுத்தம் கிடையாது, சுயநிர்ணய உரிமையும் கிடையாது. இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மட்டும்தான் பிரச்சினை>” என்பதாக பிரச்சினை சுருங்கி விட்டது. “அவ்வாறு மக்கள் கொல்லப்படுவதற்கு யார் காரணம்? சிங்கள இராணுவத்தின் தாக்குதலா அல்லது மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் புலிகளா?” என்பது மட்டுமே இப்போது விவாதத்துக்கு உரிய பிரச்சினையாகச் சுருக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தைப் பொருத்தவரை போர்நிறுத்தம் கோரி, மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினரின் தன்னெழுச்சியான போராட்டங்கள்  நடைபெறுகின்றன. அநீதியான இந்தப்போரை நிறுத்தவேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.
ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாக தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றிவிட்டதால், மேற்கூறிய மக்களின் உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக வடிவெடுக்கவில்லை. அந்த அரசியல் எழுச்சியை எழுப்புவதுதான் நமக்குள்ள கடமை.

சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி.  முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன. இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

 

 1. //இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.//

  வாழ்த்துக்கள். தன்னையே எரிபொருளாக்கி முத்துகுமரன் இட்ட தீ துரோகிகளையும், சிங்கள பாசிசத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் சுட்டெரித்து சாம்பாலாக்கும் வரை கொழுந்து விட்டு எரியட்டும். மக்களின் செயலூக்கத்தை இது கட்டவிழ்த்துவிடட்டும்.

 2. ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாக தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றிவிட்டதால், மேற்கூறிய மக்களின் உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக வடிவெடுக்கவில்லை. அந்த அரசியல் எழுச்சியை எழுப்புவதுதான் நமக்குள்ள கடமை.

  எனக்கு தெரிந்து பாகுபாடின்றி தமிழக அரசியல்கட்சி தலைவர்களை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியிருக்க வேண்டும். ஷங்கர் திரைப்படத்தில் வருவது போல யாராவது ஒரு தமிழன் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் சல்லடையாக்க வேண்டும். அந்த நாள் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

 3. சிறிலங்கா படையினர் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு- றெட்பானா மற்றும் மூங்கிலாறு உள்ளிட்ட பல பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர்

 4. முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி …………….

  தாய் தமிழகம் தந்த முத்து
  தரணியில் வந்துதித்து
  தொப்புள் கொடி உறவுகளுக்காய்
  ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் ,
  பத்திரிகையாளனாய்
  சாதித்தது போதாதென்று
  தமிழ் ஈழ சரித்திரத்திலே
  முத்தாக பதிந்து விடான்
  தமிழக முத்துக்குமரன்

  ஐயா முத்துக்குமரா ….
  நட்புக்கு இலக்கணம்
  உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும்
  ஒரு கொடை உண்டோ ?
  உன் ஆன்மா சாந்தியடையட்டும் ,
  உன் எண்ணம் நிறைவேறும் ,
  ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய்
  சாந்தி… சாந்தி …சாந்தி ……….. ,

 5. தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

  தொப்புள் கொடியில்
  உயிர்க் கொடி
  ஏற்றிய தோழா
  ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

  இணையத்திலே உன் அழகிய
  முகம் பார்த்தோம்
  இதயத்திலே கருகிப் போனது
  எங்கள் மனம்!

  எவ்வளவு இளகிய
  மனம் கொண்டவன் நீ
  எங்களுக்காய்…
  ஏன் கருகிப் போனாய்?

  தூத்துக்குடியில்
  முத்துக் குளித்தவன் நீ
  சாஸ்திரி பவனில்
  ஏனையா தீக்குளித்தாய்?

  குடம் குடமாய்
  நாங்கள் அழுது வடித்த
  எங்கள் கண்ணீரில்
  உன் முகமே பூக்கிறது!

  எம் தமிழ்மீது
  நீ கொண்ட பற்றுக்கு
  எல்லையே இல்லை என்பதை
  இப்படியா உணர்த்துவது!

  தமிழினத் தலைவர்கள்
  என்று சொல்லத் துடிக்கும்
  எங்கள் தலைவர்களின்
  நாக்கை அறுத்தாய் நீ!

  கையாலாகாத பரம்பரை
  என நினைத்தாயோ
  பூவாய் இருந்தவன் நீ
  புயலாய் ஏன் வெடித்தாய்?

  முப்பது ஆண்டுகள்
  நாம் சுமந்த வலிகள்
  போதாதா ஐயா
  ஏனையா எரிந்து போனாய்?

  பெரு வலியோடு
  உனைப் பெற்ற தாயை
  எந்த முகத்தோடு போய்
  நாங்கள் இனிப் பார்ப்போம்?

  எட்டாத தூரத்தில்
  வாழ்ந்தாலும்
  வாகை மரம் போல
  வாடிப் போய் நிற்கிறோம்

  மண்ணெணையை
  உன் மீது ஊற்றி
  தமிழ்மண்ணைக் காக்க
  ஏனையா உனைக் கொடுத்தாய்?

  தமிழீழம் வாழவே
  எங்களை வாழ்த்தி
  உன் வாழ்வை
  ஏனையா நீ அழித்தாய்?

  மரணத்திடம் மண்டியிடாமல்
  மண் எங்கும் ஓடுகிறோம்
  மரணத்தை தேடி நீ
  ஏனையா ஓடினாய்?

  தமிழீழ வரலாற்றில்
  முத்தான உன் பெயர்
  இனி எழுத்தாணிகளின்
  முதல் வரியாகட்டும்!

  உன் தியாகத்தின் முன்
  நாங்கள் வெறும் சருகுகளே!
  தமிழகத்தின் தாய்மடியில்
  கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

 6. இதயம் கலங்க எங்கள் நன்றி கலந்த கண்ணீருடன்…

  இந்துமகா சமுத்திரமே தீப்பற்றி எரிவதுபோல்
  இந்தியத் துணைக்கண்டம் தீப்பிடித்து எரிவதைப்போல்
  இழிஞர்ஆள் இலங்கைத்தீவு எரிந்தழிந்து கருகுதல்போல்
  இளம்உயிரே! தமிழ்உணர்வே! முத்திணைநல் புத்திரனே!
  இலங்கையென்ன உலகதனின் எத்திசையில் இருந்தாலும்
  இதயமதால் அனைவருமே ஓரினமே என்பதனை
  இவ்விதமாய் எரிந்திறந்தா இழிஞர்கட்கு உரைக்க வேண்டும்?
  இதயமெலாம் எரிகிறதே! தாங்கிடாமல் இதயமதும் துயரினிலே நொருங்கிடுதே!
  இலங்கைத்தீவில் தமிழினத்தை அநீதியென்றே தெரிந்திருந்தும்
  இதயமில்லா அரக்கரவர் இடம்பறித்தற் கழித்தொழிக்க,
  இந்தியத்தின் தலைவர்களும் அதற்கிணைந்து உதவுவதை
  இகமதனில் இதயமுள்ள எவரும் ஏற்றல் இலகுவல்ல
  இரக்கமில்லா பாதகத்தை இலகுவாகத் தொடர்வதற்கு
  இலங்கையிலே மனிதவுருப் பேய்களெனச் சிங்களவர்
  இலகுவாகக் கடைப்பிடிக்கக் கையெடுத்த பொய்யதனால்
  இந்தியாவும் இதரர்களாம் கடைந்தெடுத்த கள்வர்களும்
  இலங்கைத்தீவின் தமிழர்உரிமைப் போர்பயங்கர வாதமென்றார்
  இதயமின்றி ஏழைமக்கள் அழிந்தொழியற் காயுதங்கள்
  இவர்தரலை அனைத்துலகம் அலட்சியம்செய் வழிவகுத்தார்
  இனமதற்குள் துரோகியரை இங்குமங்கும் இழுத்திழுத்து
  இனமதனின் ஒற்றுமைக்கே வேட்டுவைக்கும் சதிபுரிந்தார்
  இனித்தமிழர் தாயகமாம் தமிழகத்தில் தனிமையில்லை
  இங்கும் அங்கும் எங்குமெங்கள் மக்களொன்று என உணர்ந்தே
  இதுவரைக்கும் எம்மினத்தை ஏய்த்தவர்க்கும் ஏய்ப்பவர்க்கும்
  இனியுமெங்கள் மத்தியிலே இடமதனை அளிக்கவிடோம்
  இங்கெவரும் எம்மைவைத்து ஏய்த்துயரற் கிடமளியோம்
  இகமதனின் எங்குள்ள எம்மினத்தை நினைக்காரை
  இனியுமெங்கள் ஆள்சபைக்குள் இடம்பிடிக்க விடமாட்டோம்
  இதுவரைக்கும் இடம்பிடித்தே ஏய்ததவரே! இனித்தொலைக!
  இது தமிழர் தாய்நிலமாம் தமிழகமாம் என உரைத்தே!
  இலங்கையிலே நடக்கும்பழி, பாதகங்கள் சரியதுபோல்
  இரக்கமில்லா அரசியல்சார் தலைவர்களே இந்தியத்தில்
  இரும்பிதயம் தனைத்தளர்த்தி நீதிசார உனைக் கொடுத்தாய்!
  இருப்பினிது அவர்களையே திருத்திடுமா? நம்பவில்லை
  இரும்பு சூடுபட்டிடாமல் தானுருகி வளைவதில்லை
  இந்தியத்தைச் சிங்களவன் ஏய்க்கும் காலம் தொலைவிலில்லை
  இந்தியத்தை அணுகிநிற்கும் சீனமுமிப் பாகிஸ்தானும்
  இலங்கையதை வைத்துத் தீண்டும் தீமை என்றும் தவிர்வதற்கில்லை
  இலங்கையதில் சிங்களர்க்கு இந்தியத்தில் அன்புஇல்லை
  இருக்கும் சூழல்பயன்படுத்திப் பயன் விழைவார்.வேறுஇல்லை
  இலங்கைத் தீவின் ஈரினமும் தனித்தனியாய் இருவிதமாய்
  இருபுறமும் ஆள்தலன்றி அவர்களுக்கு அமைதி இல்லை
  இவ்விதத்தில் இனியெவரும் தீயணைத்து இறப்பதையும்
  இணைந்திருந்தோ, தனித்திருந்தோ உணவொறுத்தல் செய்வதையும்
  இன்றினின்று விட்டிடுங்கள், இணைந்து நின்று உழைத்திடுங்கள்
  இதயமற்றார் கண்களுக்குத் தியாகமெல்லாம் வெறுஞ்செயல்தான்
  இதனை வைத்து அரசியலில் உயர்ந்திடவே அவர்நினைப்பார்
  இகமதனைநீதி கேட்டு எழும்பவைத்தாய் எம்மகனே!
  இறைவனுனது துணைஇருப்பான் இருண்ட இதய இரங்கிடாரை
  இனியும் விடான் அவன்தடுப்பான் இதயம் திருந்த வழி கொடுப்பான்
  இறைஞ்சவில் எவரையும் நாம் அதுநடக்கக் கெஞ்சவில்லை
  இதயமில்லா நரிக்கூட்டம் திருந்துமென்றும் நம்பவில்லை.
  இருந்துமொன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும் தீயவர்க்கு
  இதயமற்ற மனிதர்களை மனிதரென்று அழைப்பதிலே
  இறைவனுக்கும் இழுக்குஉண்டு என்பதைநீர் தெரிந்திடுவீர்.
  இன்று அங்கு செந்தணலாய் வெந்துயிரை நீத்தவனின்
  இதயமதன் கொதிப்பினுக்கு உங்கள் மீதே பழி விழட்டும்
  இருக்கும்சொந்த மக்கள் சாக அரசியலால் பிழைப்புமக்கு
  இந்தியத்திலிருக்குதென்றால் அந்தப்பாவம் உமில் நிலைக்கும்
  இனியுமங்கு காந்தி,நீதி,அகிம்சையென்று கதையளந்தால்
  இளித்து நிற்கும் குரங்குகளாம் தொண்டருக்கும் பழி கிடைக்கும்
  இனியுமில்லை நீதிகேட்க என்று தடை விதித்திடும் நீர்
  இனியுமிந்தி யாவில்நின்று எவருக்காக ஆளுகின்றீர்?
  இனியும் கவிதை, கதைகளென்று தமிழ் வளர்த்து ஏய்த்தல் போதும்
  இதற்குமேலும் தூங்கிடாது தமிழினத்தைக் காக்க வாரும்
  இந்த வீரன் முத்துக்குமரன் செய்திருக்கும் உயர்ந்த தியாகம்
  இந்த மண்ணில் விதைக்கும் வீரம் தமிழர் மானம் காக்க சேரும்
  இழிவுவேலை செய்து மேலே எழவருவோர் துரத்திடவும்
  இனியும்நீ! தயங்காதே! நேர்வழியில் இணைந்தியங்கு!
  இனியும் ஆள்வோராய் அவர் நெருங்கல் தனைச்சாடித் தடுத்துவிடு!
  இனிமேலும் இதுபோலே இன்னோருயிர் எரிந்துவிழ
  இந்தியத் தாயேநீயும் இனிவிடாதே! நீதி எடு!
  இருக்கும் காலமதில் சுதந்திரத்தைக் காத்துவிடு!

  – ‘சிந்தனைச் செல்வன்’ எழிலன்

 7. முத்துக்குமாரா!

  முத்துக்குமாரா! தொப்புள் கொடி தந்த உறவே! நீ செத்துவிட்டதாகத்தான் சொல்கின்றார்கள் எல்லோரும்! இல்லைத்தம்பி நீ சாகவில்லை!
  உயிர்கொண்டும் பிணமாகத் திரிகின்ற பலரில் உணர்வோடு தமிழானாய் உயிரும் மானமும் எனத் தமிழ் விடுதலைக்கோர் கருவானாய்!

  தியாகத்தின் தீபமே உன்னைத் தீ எரிக்குமா? நீ மூட்டிய தீயிலே குருடர் கண் திறக்குமா? இருட்டிய கிழக்கது இனியாயினும் வெளிக்குமா?!
  உயிருன்னைச் சுடும் என உணர்ந்திட்ட பொழுதிலும் உண்மையை உரத்துச்சொன்னாய் உயிராயுதம் ஆகியே உன்னதம் ஆகிவிட்டாய்!

  தமிழ் அது உடையல்ல உணர்வென்று நீ உலகுக்கு காட்டிவிட்டாய்! தன்மான நெருப்பிற்கு எங்கள் தம்பியே நீ நெய் ஊறிவிட்டாய்!
  ஆட்சியே பெரிதென்று எண்ணுவோர் மத்தியில் தமிழன் மானத்தை நாட்டிவிட்டாய்! கரைவேட்டிகள் எரித்திட உன்னையே ஏனடா நீ எரியூட்டிவிட்டாய்?!

  பொய்யினை பொசுக்கவே உன்னையே ஏனடா என் தம்பி நீ தீயிலிட்டாய்?!! உண்மைக்கு கூட வெளிச்சங்கள் தேவைதான்என்றெண்ணச்செய்துவி??்டாய் ஈழத்தின் இரத்தமே நான் உன் சொந்தமே” அதைத்தீயிட்டா உணரச்செய்வாய்? தமிழ் ஆயுளின் சொந்தமாய் நீ இருப்பாயடா அஞ்சலி செய்துநின்றேன்!.

  வேண்டியே நிற்கின்றேன் உங்களிடம் நான் கண்ணீர்மல்கிட கெஞ்சுகின்றேன்! தீயிட்டு பாடம் படிப்பிக்க வேண்டாம் உணவின்றி நீங்கள் தவித்திட வேண்டாம்!தோளொடு தோளென நின்றிட்டால் போதுமே வெற்றி தமிழுக்கே வந்திங்கு சேருமே!

 8. முத்துக்குமரன் எனும் மாவீரன்…..

  கவிதை அஞ்சலி….

  தமிழ் நாட்டின் செல்வமே
  நம் முத்துக்குமரனே
  முத்தான உன் உயிர்தந்து
  நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்….

  காலையில் செய்திகேட்டோம்
  கண்ணீரால் நம் உடல் நனைந்தோம்
  உன் உடலைக் கருக்கிய
  உன் உறுதி கண்டு
  மனதளவில் உருக்குலைந்தோம் …..

  உயிர்பிரியும் நேரத்திலும்
  பிரபாகரன் என்றாய்
  பின்னர் உயிரையே போக்கிவிட்டு
  தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்…

  முத்துக் குழிக்கும்
  ஊரிலே பிறந்தவனே……
  தமிழன் மனங்களிலே முத்தாக
  உன் உயிர் தந்தவனே…..
  தமிழ் நாட்டிலே விதையாகி
  தமிழர் மனங்களிலே
  முளைத்து விட்டாய்……
  உன் மூச்சு அடங்கமுதல்
  உன் கொள்கைகளை எரியவைத்தாய்….

  உன் லட்சியம் வெல்லவைப்போம்
  துரோகிகளையும் ஓடவைப்போம்
  உன் இறுதிமடலதையும்
  எம் இலட்சியத்தில் சேர்த்திடுவோம்
  உன் ஆசை நிறைவேற்றிடுவோம்
  அன்பாய் நம் தலைவன்
  கரம் பற்றிடுவோம்
  மாவீரர் இல்லங்கலில்
  தெய்வமாய் உனை வணங்கிடுவோம்…..

  கரும்புலியோ களங்களிலே
  களமாடி மாண்டிடுவான்
  நம் முத்துக் கரும்புலியோ
  தமிழன் உயிர்காக்க
  கணத்திலே எரியூண்டு
  மாண்டு விட்டான்…..
  உன் எரிந்த உடல்காட்டி
  எந்தன் மனங்களிலே
  பொறியாக விழுந்துவிட்டாய்
  இந்தப் பொறிகள் ஒவ்வொன்றும்
  எரிக்கும் நம்
  எதிரியின் உடல் காண்பாய்….

  தமிழனின் காவியத் தலைவனே
  காரிருளில் சூரியனே
  உன் கனவெல்லாம் நனவாகி
  உன் கல்லறயில்
  தமிழ் ஈழத்தின் பூக்கள் விழும்…..

  இளங்கவி

 9. தூத்துக்குடி முத்தே
  தென்பாண்டி துறைமுத்தே
  ஆத்தூர் கொழுவநல்லூர்
  ஆண்மை தமிழ் மகனே
  காத்து தமிழ் இந்தக்
  காசினியில் நிமிர வைக்கத்
  தீய்த்து வதை தீயில்
  சிதைந்து துடித்து இறந்தாய்
  சோத்தி உதிரிகளும்
  துணிந்தேழுந்தோம் மறவர்களாய்
  கோத்து கைமோதி
  குவலயத்தில் தமிழ் அரசு
  பூத்திடவே வைப்போம்
  புலியே முத்துகுமரா
  ஏத்தி தொழும் ஈழம்
  என்றும் ஒளிக் கோபுரம் நீ

  தமிழோசைக்காக கணியன்

 10. கருகிக்
  கிடக்கிறதொரு
  உயிர்.
  நேற்றுத்தான் புரிந்தது
  அதற்குள்
  கனன்று
  கொண்டிருந்திருக்கிறதொரு
  புயல்.
  எத்தனை
  சொற் சிலம்பங்கள்,
  மேடைச் சவடால்கள்,
  கட்டுரைகள்,
  கவிதைகள்?
  ஒற்றைக் கணத்தில்
  நெருப்பினால் பதிலளித்து
  கடந்து சென்று விட்டாய்
  முத்துக்குமார்.
  உனக்கு
  இரங்கற்பா பாடுவது
  உன்னைச் சிறுமைப்படுத்தும்.
  நீ விட்டுச் சென்ற
  நெருப்புத் துளிகள்
  எமக்குள் கனல்கின்றன.
  அவை பரவும்.
  திசையெங்கும்
  எரியும்.

 11. வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

 12. //முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

  விசயம் இப்படியிருக்க எப்பொழுதும் போலவே நல்லவர்கள் சிலர் முத்துகுமாரை மூடனாகவும், உணர்ச்சிவசப்பட்டவராகவும், மூர்க்கனாகவும் சித்திரிக்க முயல்கிறார்கள்.

  தனது பிரேதத்தையே ஒரு குறியீடாக பயன்படுத்தி ஈழ விடுதலை போருக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சொன்ன, அந்த போராட்டத்திற்கு இந்திய சிறைக்கூடத்தில் வாடும் பிற தேசிய இனங்களின் ஆதரவை கோரிய ஒரு சீரிய சிந்தனை கொண்ட இளைஞனை இந்தளவுக்கு அவர்கள் கொச்சை படுத்துவது மன வேதனையளிக்கிறது.

  பகத்சிங்கை மூடன் என்று சொன்ன அன்றைய இந்திய பெருந்தலைவர்கள் போலவே இன்றும் உள்ளனர்.

 13. //முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

  முத்துக்குமாருடைய அப்பா கூட ஒரு தெளிவோடு பேசினார்.

  முத்துக்குமார் ஒரு பொது நோக்கோடு தான் உயிரை தந்திருக்கிறான். இனியாவது, இப்படி நேராமல் பார்த்துக்க்கொள்ள வேண்டும் என்றார்

  முத்துக்குமரனின் தியாகத்தை கொச்சைப்படுத்தினால், அம்பலப்பட்டு போவார்கள்.

 14. உணர்வுப்பூர்வமான இந்த தமிழின எழுச்சியின் விளைவு மராட்டிய நவநிர்மான் சேனா போன்று பிற்போக்கு வலையில் விழுந்து விடக்கூடாது என்றும்…

  மக்கி நைந்து செல்லரித்துப் போன தி.மு.க உள்ளிட்ட பிழைப்புவாத இயக்கங்களையும் மிகச் சரியான கோணத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

  மக்கள் போராட்டங்களில் இருந்தே மக்களை வழிநடுத்தும் ஒரு இயக்கம் தோன்றும் என்று மிகச் சரியாக நினைத்த அந்த உயிர்ப்போராளியின் கனவும் கருகிப்போகாமல் பார்த்துக் கொள்வது நம் எல்லோரின் உடனடிக் கடமை.

 15. This incident only shows that we tamils are nothing but emotonal fools. His suicide is the most stupid thing to do. What did he achieve ; leave a sad parents and family behind. Is this going to solve the srilankan tamils issue? Probably some politician must have instigated this idiot to commit suicide. What is the use of closing our colleges or organising bandh here. will this stop the srilankan army? Why dont we tamils use our brains? Even god cannot save tamils if they are such stupid emotional fools. “pongada, poi vela vettiya parunga. patichu munnuka vara parunga. Namma tamil nattu politician naainga pecha kettu naasa pogadnga.

 16. முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

  தன் உடலை ஆயுதமாக்கி போராட்டத்தில் குதித்த நம் தோழனின் சாவில் கூட தர்க்கம் பேசும் மூடர்களை என்னவென்று சொல்வது…

 17. What Muthukumar did was not a ‘sacrifice’. It was an emotional decision without knowing the consequences. No one will remember him after 1 week. This foolish fellow has left behind a family to cry over his death. He should have been taken to a psychiatrist for treatment once he was taking about sacrificing his life for srilankan tamils. Has he srilankan army stopped its operations after the suicide? Glorifyng such foolish behaviour has become a norm in our culture (remember some fools commited suicide when MGR died & their families were given compensation by the AIADMK). When will we grow up as a race and as a nation? If our politicians & their supportes are so concerned about the srilankan tamils, then let them go & fight with the Srilankan army. They will not.Because they dont have the courage. They will just keep on organising bandhs and meetings as General election is round the corner. Why didnt these fellows organise a protest against power cut? Why no one protested against Tasmark? Dear Tamila pleeeeeease grow up. Please use your brain and not your heart.

 18. Now our politicians dont want to do the last rites for Muthukumars body till the Srilankan issue is resolved. They have proved that they are like hungry wolves and vultures trying to fight over a dead body to eat it. Our politicians have showed that they are truly ‘ponam thinni kazhugu’. And our students have also jumped into this drama, supported by parties and some film personalities who want to capitalise on the incident to get some popularity. Will these morons please explain against whom are they going to struggle to solve the srilankan issue sitting here in India. We are going to be a laughing stock of the whole world. Our rivers are running dry, we dont have water,we dont have electricity, our farmers are comitting suicide, global warming is going to drown the coastal regions, trees are cut down every minute and all these can be solved by contribution by each individual. But we are concentrating on an issue over which we dont have any control. Srilankan Army is not going to bother about any of these jokers. its upto the Govt of India to pressurise the international community to rein the srilankan govt. Fighting over a dead body of a poor man will not solve anything. We are harming our selves by conducting such ‘porattams’. ‘Parotta ‘is more important than porattam. Parotta satifies your hunger, porattam leaves you in hunger & poverty. The so called leaders calling for struggle have enough money to last for 7 generations. but if our students stop going to classes & indulge in such drama, then they will be in streets forever. Please wake up to realise the futility of such dramas & study well to build good future for your self, your family & the country. Tirudina nalla irupeenga, illati naasama povinga. God bless all. Jai Hind.

 19. முத்துகுமாரின் தியாகம் காட்டுத்தீயை போலே நம் அனைவர் மனதிலும் பரவட்டும். ஈழ படுகொலைகளுக்கு எதிராக இந்திய அரசின் நிர்வாகத்தை முடக்குவோம்… அடுத்த முறை ஓட்டு கேட்டு வரும் ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவோம்..
  மாணவர்கள் நல்ல தலைமையின் கீழ் ஒன்றினைந்து போராட வேண்டும்.. அவர்களால் மட்டுமே தற்பொழுது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்…

  Major murgan.. I dont know , you are working in Military or not.. but your words are disgusting… it shows your mindset working like a slave under some of your superiors.. Military never helps people.. you are not an exception also..

 20. Dear Bhagat, yes I’m a retd Major of the Indian Army, and done more service to this country than any of these jokers who are ruling this country and those stupid , misdirected fellows who are wasting time in the name of service to tamils. My words may be disgusting but they are true and practical. unfortunately your assumption of a slave mentality is nothing but a practical mentality. These morons who talk about porattam will be the first ones to run away at the sight of the police batton. If you ‘brave’ guys want to solve the srilankan issue try to go to srilanka if you have guts. Dont cause disturbance in our country in the name of struggle. You guys are just emotional fools who cant differentiate between foolish act and bravery. We tamils have been emotional fools for long and always exaggerate even small acts. You are bothered about srilankan tamils getting killed in srilanka but dont bother about the plight of women, child labourers, minorities and dalits in tamil nadu and all over India. Wake up man, dont live in a fools world. Students blocking roads and bunking classes will lead to their own down fall. Neither the srilankan govt nor the LTTE can be trusted.
  As far as your comment – “Military never helps people”.. makes me only laugh at your ignorance. Please flip your history books and you will know that is only these exceptional men in uniform (slave mentality according to you) have always risen to the occassion to protect you guys from any kind of disaster; natural or man made. Because you guys are not capable of protecting your selves. Its people like you who dont use your brain and are slaves to the propaganda of tamil chavunists. First set your house in order before trying to solve other’s issues. Please dont glorify emotional fools like Muthukumar. How many of you even remember Major Saravanan who was killed in Kargil. He was from our state and true blooded tamilian and I remember none of these idiots bothered to honour him after his death. how many of you remember Major Parameswaran, the only tamil military officer to be decorated with ‘param veer chakra'(do you know what it means?) for his supreme sacrifice of laying down life for our nation. That is called ‘sacrifice’. Burning your self for no reason or rhyme in an emotional state is not sacrifice but an act of stupidity which has to be condemned by one and all.
  No point explaining you guys. Its all like ‘sevidan kaadil oodiya sangu”. May God save you guys. Good bye & Jai Hind.

 21. முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.

  ஆம் போர்
  தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி அப்படிப்பட்ட கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?

 22. “ஆம் போர்தான் தேவை
  கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?”
  LET THIS BE THE CHAIN OF DISCUSSION

 23. ஒ மாவீரனே இன்னுயிர் தந்து
  உரம் தந்தாய் எம் வீரனே
  மலரும் தமிழீழம் காண நீ இங்கு
  இல்லை எம் நண்பா உன் ஆசை
  ஒருநாள் நனவாகும் நண்பா
  அமைதியாக துயில் கொள்ளடா
  நாளை நம் தமிழீழம் மலரும்
  காட்சி தனை மேலிருந்து காண்பாய் கண்குளிர
  உன் தியாகம் அளப்பரியது நண்பா
  உன் பிரிவுக்கு நிச்சையம் காலம் பதில் சொல்லுமடா
  ஒ வீரனே உனக்கு என் வீர வணக்கங்கள்

 24. இனியும் அமைதியாக இருப்பது ஈழத்தமிழர்களை மொத்தமாய் புதை குழிக்கு தள்ளுவதற்கு சமம்.என்ன செய்ய் வேண்டும் என் புலம்புவதில் பயனில்லை, எப்படி செய்யப்போகிறோம் அறுவை சிகிச்சையை இந்திய தேசியத்துக்கு?
  மக்கள் செத்துக்கொண்டிருக்கிற வேளையில் ” எனக்கு வாடி வாடி பாட்டு போடுங்க,அது எங்க பிரண்டுக்காக டெலிகேட் பண்ணுறேன்”என்று எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்போரை என்ன செய்யப்போகிறோம்,அவர்கள் சொல்லுவார்கள் “நான் பாதிக்கப்படவில்லை ஏன் போராட வேண்டும்” என்றுதான் சொல்கிறார்கள்.

  நாம் செய்ய வேண்டியது முக்கியமாக இதுதான் ” சொரணை கெட்டுப்போனவர்களை சொரணை கொடுப்பதற்காக அவர்களின் பொது வாழ்வில் குறுக்கிட வேண்டும்,அவர்கள் கூடும் தியேட்டர், கேளிக்கை பூங்கா,டாஸ்மாக்கில் பாடம் சொல்லித்தருவோம், கிரேக்கத்தில் மாணவர்கள் சொல்லித்தந்தார்களே அப்படி,

  பத்திரிக்கைகள் இன்னும் கிரிக்கெட் செய்தியை முன்னிலைப்படுத்தி நம்மை நடிகையின் படுக்கையறைக்கு கூட்டிக்கொண்டு போகின்றன ,அவர்களுக்கும் சொல்லித்தருவோம் இழவு வீட்டில் சிரிப்பவனுக்கு என்ன கிடைக்குமோ அப்படி,

  படிக்க

  http://kalagam.wordpress.com/2009/01/30/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/

  கலகம்

 25. இப்பதான் தமிழ் மணத்துல ஒரு செய்தி பாத்தேன்…தியாகி முத்துக்குமாருக்கு கருணாநிநி 2 லட்சம் கொடுகறாராம் அது அவமானமாம் அதனால ஐ.டி துறை மற்றும் திரையுலகம் மற்றும் தமிலர்கள்லாம் சேர்ந்து 20 லட்சம் கொடுக்கப்போறாங்களாம்…

  முத்துக்குமார் சாலை விபத்தில் இறந்தவரல்ல நட்டஈடு கொடுக்க, அவரது மரணம் ஒரு அரசியல் பிரச்சாரம்! அவரது தியாகத்தை மதிப்பவர்கள் அவரது சடலத்தை பார்க்க போகட்டும், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளட்டும், அவரது அறிக்கையை பல நூறு பேர்களுக்கு சுற்றுக்கு விடட்டும், ஈழ விடுதலைக்காக நடைபெறும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள் போன்றவைகளில் கலந்துகொள்ளட்டும், இந்திய மேலாதிக்கத்தையும், துரோகத்தையும், சிங்கள இனவெறியையும் பிரச்சாரம் செய்யட்டும், ஈழத்து மக்களின் துன்பங்களை பாடல்களாய், படங்களாய், காட்சிகளாய் உலகெங்கும் பரப்பட்டும், மொக்கை பதிவிடுவதை தவிர்த்துவிட்டு மக்களின் துயரங்களை பற்றி பிரச்சாரம் செய்யட்டும்….இன்னும் என்னவெல்லாம் முடியுமோ களத்தில் இறங்கி செய்யவேண்டும்…. இதையெல்லாம் செய்த பின் பணமும் தந்தால் நலம் இல்லையென்றாலும் பரவாயில்லை… ஆனால் இதையெதுவம் செய்யாமல் வெறும பணத்தை மட்டும் கொடுப்பதோ, அல்லது பணம் கொடுப்பதை பற்றி பிரச்சாரம் செய்வதோ ஒரளவு செயல்துடிப்பு உள்ளவர்களையும் பணம் கொடுத்தால் போதும் என முடங்கச்செய்யவே உதவும் இதற்கு கருணாநிதியின் 2 லட்சம் எவ்வளவோ மேல்!.

 26. I can’t help but drafting a reply to Major Murugan.

  Setting our house in order is fine and the need of the hour, but when our neighbour’s house is burning in all the directions outside and the locked-in inmates were crying for help, do you think we can shut the doors to settle the dust inside our house in the name of “setting our house in order” ?

  I don’t think you won’t be able to differentiate between “issues” and “burning issues” and set priorities.

  After going thru’ Mr.Muthukumar’s letter, which contains that much of detailed information, one should’ve nerves to call him an emotional crook or idiot. He was not one among those, who self-immolated for the reason that their “beloved” leader was expelled from the party. His letter makes me feel that he has read history and had good background information about what he’s talking about.

  If –

  the caniballistic Sri Lankan government – which’s involving in ethnic cleansing, massacring it’s own citizens, just because they’re minorities belonging to a different ethnic group and linguistic identity, in the name of eradicating LTTE ;

  and the Indian govt. which’s waging a proxy war against the SL Tamils, involving in overt and covert operations, forgetting the fact that the same SL military that it works with hand in hand was the one which FIRST attempted to murder Rajiv in it’s soil ;

  had acted with the due commitment and responsibility, to protect and ensure the safe and happy lifehood of the civilians with due rights and privileges, which’s expecetd in any civilised and cultured society …

  why the hell this man, who was called so many names by you, which’s totally unwarranted and uncalled for, should sacrifice his life ?

  Yes, I’ve read about Mr.Saravanan and Mr.Parameswaran who had sacrificed their lives. We respect that and salute them. No question about that :

  But at the same time, they’ve done their job which involves risking their lives. Even one can go to the extent of argueing that, those wars in which they had to lay down their lives was THRUST upon by the foolish masters who were not capable of solving the issues for decades.

  But this poor guy … has been observing the situation for a long time and unable to bear the truth that those who’re in the responsible position to fight and protect for the causes of innocent SL Tamilian, are deaf and continueing their Hitler like activities, came forward, knowingly the aftermath of his action, to lay down his life.

  THIS, MAJOR.MR.MURUGAN, IS NOT JUST AN ACT OF EMOTIONAL OUTBURST ALONE.

  Thanks and regds.
  Muthukumar

 27. […] கீழாக இருப்பதாக கேலி செய்கிறார் – ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – à®… வினவு முத்துக்குமார் எனும் வீரனின் […]

 28. சமூகப்பிரச்சனை என்றால் அதை தங்கள் சட்டையில் ஒட்டிய அழுக்காக மட்டுமே பார்த்துப்பழகியவர்கள் முத்துக்குமாரின் மரணத்தையும் உணர்ச்சிவயப்பட்டதாகவும், பலனில்லாததாகவும் குறுக்கிவிடுகிறார்கள். யாருடைய இரக்கத்தையும் சம்பாதிப்பதற்காக முத்துக்குமார் இறக்கவில்லை, ஒரு போராட்ட வடிவமாகவே அவர் இறந்திருக்கிறார். இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

  இதை நான் படியெடுத்துக்கொள்கிறேன். பதிவிடுவதற்கும், விளப்பத்திற்கும்.

  தோழமையுடன்
  செங்கொடி

 29. […] கீழாக இருப்பதாக கேலி செய்கிறார் – ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – à®… வினவு முத்துக்குமார் எனும் வீரனின் […]

 30. major murugan,
  These people are Naxals. Vinavu, Sengodi, Ara ticket are the people who run the magz Puthia kalacharam and puthia jananayagam. Must be one of those nameless people calling themselves, Marudhaiyan, mugilan, raheem etc….

 31. வாங்க ரவி ஸ்ரீநிவாஸ்,
  நீங்க கோட்சிலாவாக வந்தாலும், பெரியார்கிரிடிக்காக வந்தாலும் பிராட் காபிடலிஸ்டாக வந்தாலும் சொல்ற விசயம் ஒன்னுதானே… இதுக்கு ஏன் இத்தன பேரு, ஐபி, மெயில், புன்னாக்கு தெருப்புழுதியெல்லாம்?
  நீங்க கொண்டைய இருட்ட்டிப்பு செஞ்சாலும் உங்க ”அறிவு” ஜெலிக்குதே…. உண்மையை சொல்லனுமின்னா நீங்க இல்லாம இருந்த்துதான் இத்தனநாளா வருத்தமா இருந்த்து. இனிமே வினவு களகட்டிடும்…
  ஒகே சம்படி ஸ்டார்ட் மீஜிக்….!!!!

 32. சிறீ சிறீ சிறீ சிரீனிவாசு அம்பி,
  எப்புடி கண்ணா நல்லா இருல்லியா ,ஊட்ல உக்காந்துகீட் குலோப்ஜாமூனை தின்னுகீட் அப்புடியே அந்த அந்த நெய்ய நக்கிக்கிட்டு இருந்து வுடவேண்டியதுதானெ, ஏப்பா இப்படி தொண தொண உயிர எடுக்குற, நீ வந்துட்ட தான இனிமே நம்ம ,கோட்சில்லா குறியறுப்போர் சங்கம்,லூசு கோட்சில்லா வரவேற்பு குழு எல்லாமே வந்துடும், ஊத்த வாயன் சங்கரன் ஏதாவது தருவான் வாங்கிகுடி சீக்கிரமே மோட்சம் கிடக்கும் ,னீங்க அப்படியே இருங்கோ,எங்களுக்கும் திட்ட ஆளு வேணுமில்லயா

  அப்புறம் அந்த லிஸ்ட்ல கலக்ம் பெயரை விட்டுட்டீங்களே ரொம்ப கஸ்டமாகீது.

  கலகம்

 33. முத்துக்குமாரின் இறுதி முறியில் குறித்துள்ளவாறு ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய கடமைகளைச் செய்யும் சூழலில் இந்திய அரசு இறங்கி வர வேண்டியத தேவை ஏற்படும். அதற்கு அவரின் இறுதி முறியை படியெடுத்துப் பரப்புவோம். எம் தமிழர் கழகம் சார்பில் அவ்வறிக்கையை 25,000 படிகள் அச்சிட்டுப் பரப்புவதென முடிவெடுத்து இதுவரை பத்தாயிரம் படிகள் அச்சிட்டுப் பரப்பி வருகிறோம்.

 34. முத்துகுமாரின் தியாகம்,நம்மில் மேலும் ஒற்றுமையை வளர்க்கட்டும்.தமிழர்கள் ஒன்றூபடுவோம்.மத்திய அரசை எதிர்த்து போராடுவோம். 6 கோடி தமிழ்ர்களின் உண்ர்வுகளை மதிக்காத காங்கிரஸையும்,சோனியாவையும் தமிழகத்தில் இனி அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் கொள்வோம்

  வரும்,பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களை அணைத்து தொகுதிகளீலும் தோற்கடிக்க வேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.

  இனி தேசிய கட்சிகள்,நமக்கு தேவையில்லை.தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பெரியதாக படவில்லை.இன்று ஈழ தமிழன் ,நாளை நமக்கும் அந்த நிலைவரலாம்.தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

  வேறு மாநிலங்களில்,தேசியகட்சிகள்,அந்த மாநிலத்தின் நலனை முன் வைத்து போராடாமல் அங்கு அவர்கள் கட்சி நடத்தமுடியாது.
  ஆனால்,இங்கு,காங்கிரஸ்,தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டே, அரசியல் செய்கிறார்கள்.இந்த தைரியம் அவர்களுக்கு யார் கொடுத்தது.
  முத்துகுமார் தியாகத்தில் விளைந்த இவ்வெழுச்சியை தமிழகத்தின் மூலை முடுக்கல்லாம் கொண்டு செல்வோம்
  காங்கிரஸை இனி தமிழகத்தில் வளர விடகூடாது.
  தமிழக மீனவர்கள்,பல்லாயிரம் பேர் ஆண்டு முழுவதும் கொல்லபடுகிறார்கள்.அதற்கு இலங்கை மீது போர் தொடுக்காமல் ,அவர்களுக்கே ஆயுதம் தந்து நம் தமிழ் சகோதரர்களை கொன்று குவிக்க உதவுகிறது.

  ஆனால்,மும்பை தாக்குதலில் சில நூறு பேர் இற்ந்ததற்கு ,பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் என்று அச்சுருத்துகிறது நம் இந்திய அரசு.

  வட மாநில மக்கள் என்றால் ஒரு நிலை,தமிழக மீனவர்கள் என்றால் ஒரு நிலை.தமிழனின் உயிருக்கு அவ்வள்வு தான் மதிப்பு.தமிழக மீனவர்களை காப்பாற்றாத ,ந்ம் இந்திய அரசு,ஈழ தமிழனை காப்பாற்றும் என்று எப்படி எதிர்பார்ப்பது.
  காங்கிரஸ் ஒழிக,தமிழர்களை கொன்று குவிக்கும் சோனியாகாந்தி ஒழிக்.

 35. Whats wrong with Major Murugan’s life?

  எதுக்கு தேவையே இல்லாம இத்தனை அறிவுரை. இல்லாத இந்தியாவுக்கு வேலை செஞ்சிட்டு பீலா வேற…..

  காசை வாங்கிகிட்டு பக்கத்து நாட்டு மக்களை கொல்லுற இந்திய ராணுவத்துக்கும் கூலிப் படைக்கும் என்ன பெரிய வித்தியாசம்…… வயறு எரியுது….

 36. ஏய் ! முருகா, நீ மேஜர் இல்லை……, மைனர். அதாவது சிறுபிள்ளை. அதனால் தான் உன் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஏய் கார்கில் வீரம் பேசுகிறாயே…., எங்கேயா போனிங்க மும்பை தீவிரவாத தாக்குதலின் போது ?. எங்கேயா போச்சு உங்க எல்லை பாதுகாப்பு படை ?, Where was your coast guard ?. எப்படியா தீவிரவாதிகள் எல்லையை தாண்டி நாட்டுக்குள்ள வந்தாங்க, நாட்டுக்குள்ள தீவிரவாதிகளை விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானேயா நீங்கள்……..போய்யா ….நீ யெல்லாம்……. ஒரு…….போ… போ…. உனக்கெல்லாம் முத்துக்குமாரோட பெயரை உச்சரிக்கிறதற்கே என்ன தகுதி இருக்கு…. ப்பூ… போ…போ… போய் தூங்கு.

 37. Major Murugan seems to have descended from the clan of Cho Ramasamy. Their mind is overflowing with the sense of Indian(pseudo) nationalisn. To cover their skewed thoughts they find fault with everything which are right and genuine. They only need better life,food and peaceful environment at the cost of others sufferings. They are concerned about their mighty country.
  Mr.Murugan should not discard history and sociology. He should read real history not the one orchestarted by congress and BJP. There was nothing called India before 1947. Nation is not a pot to be made out of clay.But there is a antion in Tamilnadu and Tamileelam( Kindly read basic political science to know about the concept of nation). I do not know what race Murugan is refering to?. Indian race? Absurdity.
  We dont expect people to shed even your hair for the suffering people.Atleast don’t denigrate a person who is dead. When death of one political fool,(Rajiv Gandhi for half baked political decisions) is used as a tool to kill people in the name of terrorism, Why can’t Muthukumaran’s sacrifice can be used to nullify the illeffects of Rajiv’s ghost.
  In fact you(Murugan) are only emotional( for wrong reasoning). Without emotion, human bening are dead. One can not even have sex with his wife if he has no emotion.

 38. மேஜர்.
  உங்களுக்கு வசதியா எல்லாத்தையும் மறந்துவிடுகிறது உங்களுக்கு!

  அமைதிப்படை என்கிற பெயரில் உங்கள் ராணுவம் ஈழத்தில் செய்ததெல்லாம் மறந்து போச்சா?? (ஓ… அதை தான் நீங்க இப்பவும் செய்ய முயற்சி செய்கிறீர்களா?)
  இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணம் இந்தியா தான், என்பது உங்களுக்கு தெரியாதோ?? இந்திய அரசு சிங்கள அரசிற்கு செய்து வரும் உதவிகள் தெரியாதோ?? அதை பற்றி எல்லாம் பேசவேண்டியது தானே?

  அடியாள் தான் இலங்கையில இருக்கான்! அனுப்பினவன் இங்க தான் இருக்கான்! அதான் நாங்க இங்கிருக்கிற ஏரியா பெரிய தாதாவை (அதானப்பு உங்கள் இந்திய ஜனநாயக வல்லரசு!) எதிர்த்து போராடுறோம்! உங்கள் குடுமி ஏன் இப்படி ஆடுகிறது??

  சரி நீங்கள் சொல்லும் “our farmers are comitting suicide…” ய்யே எடுத்து கொள்வோம்! இதற்க்கு என்ன செய்து கிழித்துவிட்டீர்கள்? கிழித்துவிட்டது உங்கள் வல்லரசு?? ஈழத்தை பற்றி நாங்கள் பேசும்போது, “our farmers are comitting suicide…” விவசாயிகளின் தற்கொலையை நாங்கள் பேசினால், உங்களுக்கு சில்பா செட்டியின் உடை நழுவியதும், அமிதாப்பச்சன் கக்கா போனதும் முக்கிய விடயமாகிறது!
  தொழிலாளர்கள் பிரச்னையை நாங்கள் எடுத்தால், சத்யம் “Bail-out” உங்களுடைய வல்லரசிற்கு மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது!

  வடிவேல் பாணியில தான் உங்கள் கிட்ட பேசணும்!
  “ஸ் உங்களுக்கு இதே வேலையா போச்சு!”

  இதை பேசும் போது அத பேசுறது அத பேசும் போது இன்னொன்னை பேசுறதுன்னு!…

  நீங்க தான் “sentimental idiot” மாதிரி எதைப்பற்றியும் யோசிக்காமல் தேச பற்று உள்ளவரா காட்டிக்கிரதுலேயே குறியா இருக்கீங்க! நன்றி விசுவாசம்??? (நாய் நன்றி உள்ளது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்!)

  விமர்சிப்பதற்கு முன்னால் முதல்ல தோழர்.முத்துகுமாரின் கடைசி கடிதத்தை படித்தீர்களா? படித்துவிட்டு வரவும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க