privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

-

செய்தி-66

குழந்தை-திருமணம்வியாழக்கிழமை மதுரையில் நடைபெற இருந்த 4 குழந்தை திருமணங்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். 16, 17 வயது நிரம்பிய அச்சிறுமிகளை அவர்களை விட பத்து பதினைந்து வயது அதிகமான உறவினர்களுக்கு பெற்றோர்கள் மணம் முடிக்க இருந்தபோது திருமணம் தடுக்கப்பட்டது. மணமகன்களில் ஒருவர் மணமகளுக்கு தாய்மாமன், ராணுவ வீரர். மற்றொருவர் ஆட்டோ ஓட்டுநர்.

கடந்த மாதத்திலிருந்து இதுவரை மட்டும் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.

2009 ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் உலகில் குழந்தை திருமணம் அதிகமாக நடக்கும் நாடாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகும் முன் திருமணமாகும் பெண்கள் 45%. இவர்களில் பெரும்பான்மையினர் கர்ப்பமடைவதற்கான உடல் தகுதியை பெற்றிராத காரணத்தால் பேறுகால மரணமும் இவ்வயதினரிடையே தான் அதிகமாக உள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பேறுகாலத்தில் இறப்போரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இவ்வயதினர் இறக்கின்றனர். இவ்வயதில் பெற்ற குழந்தைகளை பதிவுசெய்யவும் முடியாத நிலைமை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகிலுள்ள பதிவுசெய்யப்படாத குழந்தைகளில் 66% இந்தியாவில்தான் உள்ளனர்.

இந்தியாவில் மோடியின் குஜராத், உபி, பீகார், ஜார்கண்ட் மற்றும் சண்டீகரில்தான் குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 45 சதவீதம் குழந்தை திருமணம்தான் நடைபெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கல்வியறிவின்மைதான் காரணம் என்று இதற்கு அறிஞர்களும், தன்னார்வ நிறுவனங்களும் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் மேற்படி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயரும் அன்றாடக் கூலிகளுக்கு பருவம் அடைந்த பெண்களை பாதுகாப்பதும், ஏழ்மையும் சவாலாக உள்ளது. எனவே இடம்பெயர்வதற்கு முன் பெண்ணை யாரிடமாவது ஒப்படைப்பது என முடிவுசெய்து வயதானவராக இருந்தாலும் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.

தமிழகத்தின் மேற்படி மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் விவசாயம் பொய்த்துப் போன சூழலில் அருகாமை நகரங்கள், ஓசூர் மற்றும் பெங்களூரு என சில மாதங்களுக்கு வேலைக்கு விவசாயிகள் செல்கின்றனர். அங்கும் தங்குமிடத்துக்கு உத்திரவாதமில்லை என்பதால் பருவமடைந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். நாடோடி வாழ்க்கையில் இருக்க நேரிட்டாலும் பார்ப்பனீய சாதிய நடைமுறையை கைவிட மறுப்பதால், நகரத்துக்கு போகும்போது எதாவது வேறு சாதிப் பையனைப் பார்த்து தனது பெண் காதல் வயப்பட்டுவிட்டால் என்ன செய்வது? என்பதற்காகவும் ஊரிலேயே சொந்த சாதியில் ஒரு பொறுக்கியாக இருந்தால் கூட திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

சில மாவட்டங்களில் உள்ள கந்துவட்டிக் கும்பல் வாங்கிய கடனைக் கட்ட முடியாத விவசாயிகளது பெண்குழந்தைகளை தமக்கு திருமணம் செய்து தருமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதெல்லாம் புதியபொருளாதாரக் கொள்கை யால் பெண்களுக்கு கிடைத்த பரிசுகள். வட மாநிலங்களில் இந்த நிலைமை தமிழகத்தை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. பார்ப்பனிய இந்துமத செல்வாக்கும், சாதிய படிநிலைகளில் உள்ள இறுகிய நிலையும் அங்கே இதனை ஒரு விசயமாகவே பார்க்க வைப்பதில்லை.

போலீசும், நீதிமன்றமும் கூட பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றது. தில்லி உயர்நீதி மன்றம் பால்ய விவாகத்தை ஆதரித்துள்ளது. சட்ட அமைச்சகம் மனித உரிமை ஆணையத்தின் கேள்விக்கு பதிலளிக்கையில், குழந்தை திருமணம் நடந்துவிட்டால் தண்டிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது.

சிறுவயதில் திருமணமாகும் பெண்ணுக்கு தனது கணவனைக் கண்டால் ஒருவித அச்சம்தான் இருக்கும். ஏறக்குறைய பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் அக்குழந்தைகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற குறைபாடுகள் இருக்கும். இந்தியாவில் நடக்கும் 1 லட்சம் பிரசவத்தில் இவ்வாறு 301 நிகழ்வில் தாயும் சேயும் மரணமடைகிறார்கள்.

1891 ல் பெண்ணுக்கு 12 வயதை குறைந்தபட்சமாக பிரிட்டிசார் நிர்ணயித்தபோதே பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். இன்றுள்ள 18 வயதை எட்டியதே 1978 சட்டம் மூலமாகத்தான். ஹைதராபாத் நகரத்தில் இப்படி குழந்தை திருமணம் நடைபெறப் போவதை விவரங்களுடன் சமூக சேவகர் ஒருவர் போலீசாருக்கு தந்தபோதும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. கல்வி அறிவு இருந்தும் போலீசார் இப்படி நடந்து கொள்ளக் காரணம் என்ன?

ஏழ்மையும், பார்ப்பனிய சாதி அமைப்பும் ஒழிக்கப்படும் வரை குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது முடியுமா என்ன?

______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: