Sunday, July 21, 2024
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

-

செய்தி-66

குழந்தை-திருமணம்வியாழக்கிழமை மதுரையில் நடைபெற இருந்த 4 குழந்தை திருமணங்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். 16, 17 வயது நிரம்பிய அச்சிறுமிகளை அவர்களை விட பத்து பதினைந்து வயது அதிகமான உறவினர்களுக்கு பெற்றோர்கள் மணம் முடிக்க இருந்தபோது திருமணம் தடுக்கப்பட்டது. மணமகன்களில் ஒருவர் மணமகளுக்கு தாய்மாமன், ராணுவ வீரர். மற்றொருவர் ஆட்டோ ஓட்டுநர்.

கடந்த மாதத்திலிருந்து இதுவரை மட்டும் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.

2009 ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் உலகில் குழந்தை திருமணம் அதிகமாக நடக்கும் நாடாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகும் முன் திருமணமாகும் பெண்கள் 45%. இவர்களில் பெரும்பான்மையினர் கர்ப்பமடைவதற்கான உடல் தகுதியை பெற்றிராத காரணத்தால் பேறுகால மரணமும் இவ்வயதினரிடையே தான் அதிகமாக உள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பேறுகாலத்தில் இறப்போரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இவ்வயதினர் இறக்கின்றனர். இவ்வயதில் பெற்ற குழந்தைகளை பதிவுசெய்யவும் முடியாத நிலைமை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகிலுள்ள பதிவுசெய்யப்படாத குழந்தைகளில் 66% இந்தியாவில்தான் உள்ளனர்.

இந்தியாவில் மோடியின் குஜராத், உபி, பீகார், ஜார்கண்ட் மற்றும் சண்டீகரில்தான் குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 45 சதவீதம் குழந்தை திருமணம்தான் நடைபெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கல்வியறிவின்மைதான் காரணம் என்று இதற்கு அறிஞர்களும், தன்னார்வ நிறுவனங்களும் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் மேற்படி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயரும் அன்றாடக் கூலிகளுக்கு பருவம் அடைந்த பெண்களை பாதுகாப்பதும், ஏழ்மையும் சவாலாக உள்ளது. எனவே இடம்பெயர்வதற்கு முன் பெண்ணை யாரிடமாவது ஒப்படைப்பது என முடிவுசெய்து வயதானவராக இருந்தாலும் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.

தமிழகத்தின் மேற்படி மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் விவசாயம் பொய்த்துப் போன சூழலில் அருகாமை நகரங்கள், ஓசூர் மற்றும் பெங்களூரு என சில மாதங்களுக்கு வேலைக்கு விவசாயிகள் செல்கின்றனர். அங்கும் தங்குமிடத்துக்கு உத்திரவாதமில்லை என்பதால் பருவமடைந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். நாடோடி வாழ்க்கையில் இருக்க நேரிட்டாலும் பார்ப்பனீய சாதிய நடைமுறையை கைவிட மறுப்பதால், நகரத்துக்கு போகும்போது எதாவது வேறு சாதிப் பையனைப் பார்த்து தனது பெண் காதல் வயப்பட்டுவிட்டால் என்ன செய்வது? என்பதற்காகவும் ஊரிலேயே சொந்த சாதியில் ஒரு பொறுக்கியாக இருந்தால் கூட திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

சில மாவட்டங்களில் உள்ள கந்துவட்டிக் கும்பல் வாங்கிய கடனைக் கட்ட முடியாத விவசாயிகளது பெண்குழந்தைகளை தமக்கு திருமணம் செய்து தருமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதெல்லாம் புதியபொருளாதாரக் கொள்கை யால் பெண்களுக்கு கிடைத்த பரிசுகள். வட மாநிலங்களில் இந்த நிலைமை தமிழகத்தை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. பார்ப்பனிய இந்துமத செல்வாக்கும், சாதிய படிநிலைகளில் உள்ள இறுகிய நிலையும் அங்கே இதனை ஒரு விசயமாகவே பார்க்க வைப்பதில்லை.

போலீசும், நீதிமன்றமும் கூட பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றது. தில்லி உயர்நீதி மன்றம் பால்ய விவாகத்தை ஆதரித்துள்ளது. சட்ட அமைச்சகம் மனித உரிமை ஆணையத்தின் கேள்விக்கு பதிலளிக்கையில், குழந்தை திருமணம் நடந்துவிட்டால் தண்டிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது.

சிறுவயதில் திருமணமாகும் பெண்ணுக்கு தனது கணவனைக் கண்டால் ஒருவித அச்சம்தான் இருக்கும். ஏறக்குறைய பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் அக்குழந்தைகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற குறைபாடுகள் இருக்கும். இந்தியாவில் நடக்கும் 1 லட்சம் பிரசவத்தில் இவ்வாறு 301 நிகழ்வில் தாயும் சேயும் மரணமடைகிறார்கள்.

1891 ல் பெண்ணுக்கு 12 வயதை குறைந்தபட்சமாக பிரிட்டிசார் நிர்ணயித்தபோதே பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். இன்றுள்ள 18 வயதை எட்டியதே 1978 சட்டம் மூலமாகத்தான். ஹைதராபாத் நகரத்தில் இப்படி குழந்தை திருமணம் நடைபெறப் போவதை விவரங்களுடன் சமூக சேவகர் ஒருவர் போலீசாருக்கு தந்தபோதும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. கல்வி அறிவு இருந்தும் போலீசார் இப்படி நடந்து கொள்ளக் காரணம் என்ன?

ஏழ்மையும், பார்ப்பனிய சாதி அமைப்பும் ஒழிக்கப்படும் வரை குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது முடியுமா என்ன?

______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. பார்ப்பனர்கள் எதிர்க்க காரணம் என்ன? நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இல்ல நீங்கள் அவர்களை எதிர்க்கிறீர்களா?

 2. Mr. Vinavuthaasan , Do not worry. It is the normal way of Vinavu to point “Parpanarkal ” and Jayalalitha for everything. I appreciate, they are covering different problems in day to day life, which is not covered by any other medias’ (dinamalar, Dinakaran, etc etc ) .

  Let us take the realy problem around us and try to resolve atleast one or two near to us as a part of ISR (Individual Social Responsibility ) . Thank God. — Ram

 3. வினவில் உண்மைகளை ‘படார்’ என்று போட்டு உடைத்துவிடுவதால் சிலருக்கு நெருடலாக இருக்கிறது,
  அதற்கு என்ன செய்ய முடியும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எதெல்லாம்
  முட்டுகட்டையாக இருக்கிறதோ அதையெல்லாம் தகர்த்தெரிந்து தான் ஆகவேண்டும்….

 4. // ஹைதராபாத் நகரத்தில் இப்படி குழந்தை திருமணம் நடைபெறப் போவதை விவரங்களுடன் சமூக சேவகர் ஒருவர் போலீசாருக்கு தந்தபோதும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. கல்வி அறிவு இருந்தும் போலீசார் இப்படி நடந்து கொள்ளக் காரணம் என்ன? //

  காரணம் நெசமாவே தெரியாதா..?! வெக்கப்படாம சொல்லுங்கப்பு..

 5. //1891 ல் பெண்ணுக்கு 12 வயதை குறைந்தபட்சமாக பிரிட்டிசார் நிர்ணயித்தபோதே பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். இன்றுள்ள 18 வயதை எட்டியதே 1978 சட்டம் மூலமாகத்தான்.//

  1891 ல பார்பணர்கள் பால்ய விவாக தடைச் சட்டத்தை எதிர்த்தது இருக்கட்டும், 2012ல் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் இதை எதிர்கிறதே அதை என்னான்னு சொல்ல?
  http://articles.timesofindia.indiatimes.com/2002-06-30/hyderabad/27291466_1_shariat-muslims-child-marriage-restraint-act

  • சரியான கேள்வி ராம், அது எப்படி-அந்த வில்லன பத்தி பேசாம, இந்த வில்லன பற்றி மட்டும் பேசலாம்….

 6. \\ஏழ்மையும், பார்ப்பனிய சாதி அமைப்பும் ஒழிக்கப்படும் வரை குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது முடியுமா என்ன?\\

  வினவு திரும்ப திரும்ப பழைய பாட்டையே பாடி தேவையில்லாமல் லூசு தனமாக எழுத வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

  இதற்கும் பார்ப்பணயத்திற்கும் என்ன சம்மந்தம்? ஒரு காலத்தில் உலகில் எல்லா நாடுகளிலும் எல்லா சமூகத்திலும் மதத்திலும் இது போன்ற திருமண முறை இருந்தது. அடுத்து குழந்தை என்று எதை சொல்கிறீர்கள். பதினைந்து வயதுக்கு குறைவானவர்களையா?

  சார் கொஞ்சம் பணக்கார பள்ளிகளில் சென்று பாருங்கள். சில நாட்களுக்கு முன்பு எனது பள்ளி ஆசிரியரை சந்தித்த பொழுது மாணவர்களை பற்றி சொல்லி நொந்து கொண்டார். சராசரி மாணவர்கள் படிக்கும் எங்க பள்ளியிலேயே இப்படி என்றால் மற்ற பள்ளிகளில்…

  இதை பற்றி கூகிளில் தேடும் பொழுது எனக்கு கிடைத்த வித்தியாசமான ஒரு பதிவு…

  http://childrenmarriage.blogspot.in/

 7. பார்பனிய சாதி அமைப்பு இல்லாத நாடுகளில் குழந்தை திருமணங்கள் நடப்பதேயில்லை என்றால் உலகில் 100% குழந்தை திருமணங்கள் இந்தியாவில்தானே நடக்கவேண்டும். நீங்கள் சுட்டிக்காட்டும் புள்ளிவிபரமே இதை மறுக்கிறதே.
  அண்மையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்,சமூகநல அலுவருக்கு எதிராக அனைத்து முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி கூட்டம் போட்டு அவர்களை விமர்சித்தார்கள்.
  ஏன் அவர்கள் இருவர் மார்க்க முறைப்படி பெற்றோர் நடத்தி வைக்கவிருந்த திருமணத்தை குழந்தை திருமணத் தடை சட்டத்தின் படி தடுத்து நிறுத்தினார்கள்.முஸ்லீம் சட்டப்படி பெண்ணிற்கு 15 வயதாகியிருந்தால் போதும் என்கிற போது அதை தடுக்க நீங்கள் யார் என்று கேள்வி கேட்ட முஸ்லீம் அமைப்புகள், 15 வயதிலிருந்து 18 வயதுவரையான பெண்களுக்கு திருமணம் செய்வதை யாராவது தடுத்தால் தாங்கள் தலையிட்டு நடத்தி வைப்போம் என்றன. இதெல்லாம் ஊடகங்களில் வெளியான செய்தி.முஸ்லீம் அமைப்புகளின் தளங்கள்,வலைப்பதிவுகளிலும் இது புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் அதை பார்பன ஊடக சதி என்று சொல்லி சமாளிக்க முடியாது.
  15 வயது பெண்ணிற்கு திருமணம் செய்யலாம் என்ற விதி முஸ்லீம் சட்டத்தில் இருக்கிறது. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் அதை பொதுவான விதி என்று நினைத்து எழுதுகிறீர்கள்.
  அடிப்படை பிரச்சினை வறுமை,அறியாமை.

  • நமக்கு கண்முடித்தனமான பார்பனிய எதிர்ப்புதான் முக்கியமே தவிர. அறிவியல்ரீதியான எந்தவொரு சம்பவங்களும் நமக்கு தெரியாது. சூடானில் பஞ்சம் வந்தாலும், நிலவில் மழை பெய்தாலும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் அது பார்ரபனையே சாரும்.

   குழந்தை திருமணத்தை மூஸ்லிம்களுக்கு செல்லிக் கொடுத்தது பார்பான்தான். எனவே நாமும் gap கிடைக்கும் போது பார்பனை திட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அப்புறம் என்னுடைய இந்த கருத்துக்கு சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய வரலாறுகளை மேற்கோள்காட்டி தற்கால நிகழ்வுகளை நக்கல் செய்யவும். அதாவது ஆரியன் கல்வி கொடுக்க மறுத்தான் வந்தோரி நாடோடி என வழக்கம்போல start பண்ணுங்க சாமீயோவ்

   is there any logic or valuable reason to blame aryans here?

 8. வினவிடம் இப்படி ஓர் பதிவை எதிர்பார்க்கவிடல்லை, நியாயமான கட்டுரையாக இருந்தால், பார்பனர்களுடன், இஸ்லாமியர்களையும், இன்றைய கலாச்சார சீர்கேட்டால் பள்ளிக் குழந்தைகள் செய்யும் தவறுகளையும் சேர்த்து சாடியிருக்க வேண்டும், பார்பனர்களை மட்டும் சாடி இருப்பதால், வினவை குறை கூறி அவர்களின் தவறுகளை மறைப்பதற்கு முயல்வதை இங்கு வந்திருக்கும் பதில்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

  • //ஹைதராபாத் நகரத்தில் இப்படி குழந்தை திருமணம் நடைபெறப் போவதை விவரங்களுடன் சமூக சேவகர் ஒருவர் போலீசாருக்கு தந்தபோதும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.//

   இதற்கும் பார்பானுக்கும் என்ன உறவு உள்ளது என சொல்லமுடியுமா??

   oru tamilan
   //வினவை குறை கூறி அவர்களின் தவறுகளை மறைப்பதற்கு முயல்வதை இங்கு வந்திருக்கும் பதில்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்//

   • அதற்கும் பார்ப்பானுக்கும் எப்படி தொடர்பில்லை என்று தாங்கள் சொல்லமுடியுமா??

 9. நமக்கு குடும்ப முறை அழிப்பு தான் முக்கியம். எனவே திருமணம் என்கிற நிறுவனத்தை அழித்து விட்டு குழந்தைகள் கர்ப்பம் ஆகாமல் தடுக்க இலவச ஆணுறை எல்லா பள்ளி மனைவிகளுக்கும் வழங்கி, நாட்டில் எல்லோரும் இன்புன்ற்று இருக்க ஆவன செய்வோம். வாழ்க கலாசார பயங்கர வாதம்!!
  ………………………………….
  Latest data suggests that teen pregnancy in India is high with 62 pregnant teens out of every 1,000 women. In comparison, 24 British teens get pregnant before their 19th birthday while the figure is 42 in the US.

  Data collected by the UNFPA’s State of the World Population 2008 suggests that the chastity vows taken by teens in the US and UK are obviously not working. Incidentally, the number of pregnant teens in the US is much higher than countries considered less developed like Armenia, Bulgaria and Iraq.

  In comparison, Western Europe is better off with merely 7 pregnant teens out of every 1,000 in France and 9 in Germany.

  In India, the problems are very different. Grappling with issues like early marriage, illiteracy and high infant mortality could be possible causes for the high number of young girls getting pregnant between the ages of 15-19.
  http://articles.economictimes.indiatimes.com/2008-11-14/news/27699809_1_pregnant-teens-teen-pregnancy-family-planning

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க