Wednesday, July 24, 2024
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

-

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லை

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு  தெரியும். நான் போக மாட்டேனென்று  அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.

மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன்  குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும்  நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள்  உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.

குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.

அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.  மற்றுமொரு முறை  மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள்  திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.

வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;  அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள  வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.

அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா  திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா.  ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.

எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய  வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.

குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.

திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக  அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில்  குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.

இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.   திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,  அதற்கு கொஞ்சம்  காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.

ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர்.  இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.

யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும்  அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்?

இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும்  தங்களது வாழ்க்கையை  குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து  வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால்  வரும் சாதியும், சொத்துடைமையும்  திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.

மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.

ஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக  இருப்பதால் குழந்தை  வெளியே  வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.

அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  பிரசவிக்கிறார்கள்.  இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால்  தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.  எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13  வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால்,  வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.

18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக  எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.

அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால்,  ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும்,  பள்ளிகளுமோ அல்லது  பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.

ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு  ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.

பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும்  அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும்  கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல.  “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள்  ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.  ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.

இந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

சாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.

ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.

எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும்  போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.

______________________________________________

*விவரங்கள், செய்திகள், அனுபவங்கள் சில இணையதளங்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

_________________________________________

– சந்தனமுல்லை
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. குழந்தை வதை திருமணங்கள் ! வல்லரசாகிறது இந்தியா ! – சந்தனமுல்லை…

  ஆண்டுக்கு 1 இலட்சம் தாய்மார்களும், 10 இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும், 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்…

 2. எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும் போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும்.

  பார்ப்பானியம் இல்லாத ஊர்ல குழந்தை திருமணமே இல்லையா? குழந்தைந்திருமணத்தை எதிர்க்கும் அதை மட்டும் எதிர்த்து எழுதுங்கள்.

  • சந்தனமுல்லை,

   You are not concerning about the “child marriage”. It seems that you wanna put the ball on the Bramin’s and Hindu’s court. You can’t blame Brahmin for allllll the issues in India. We all Indians are responsible and suggest some solution to Government and readers.

   Not fair.

   Really nice article and the words are pretty powerful and felt sad while reading. But you have to come out from the communal issue which YOU have in your mind.

  • இங்க பார்ப்பனியம்னு எழுதிய ஒடனே ஏன்யா பாப்பானுங்களைத்தான் சொல்றாங்கன்று இந்த குதி குதிக்கிறீங்க . பார்ப்பனியம் என்கிற சொல் பாப்பார சாதியை குறிப்பது இல்லேன்னு எத்தன தடவதான் சொல்லறது.

   எளிமையா சொல்லனும்னா சாக்கடையை எடுத்துக்கங்க, சாக்கடைன்னா ஒரே ஒன்னைத்தான் குறிக்கும்னு சொல்ல முடியாது.. அதுக்குள்ள எவ்வளவோ ஐட்டம் இருக்கும், அது போல சாதி, தீண்டாமை, பெண்ண்டிமைத்தனம் உள்ளிட்ட நம்ம நாட்டின் ஆக பிற்போக்கு சாக்கடைககள் வந்து கலக்கும் பாதாள சாக்கடையைத்தான் பார்பனியம் என்று சொல்லுகிறோம். அதுக்காக அமெரிக்காவுலயும் ஆப்கானிஸ்தானுலேயும் பார்ப்பனியம் இருக்கான்னு கேட்கப்பிடாது,,, ஒவ்வொரு நாட்டிலேயும் அவர்களுக்கே சொந்தமான சாக்கடைகள் உண்டு

   ஆகவே தன்னைத்தானே பார்ப்பனியவாதி என்று கருதிக்கொள்ளும் பார்ப்புகள் அது தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் ஆப்புகள்

 3. இன்னும் சொல்லப்போனால் முதலாளித்துவ /மறு காலனித்துவ சொம்பு தூக்கிகள் எல்லாம் இப்போது முப்பது வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

 4. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்//

  இதுபற்றி போன வருடம் கதையல்ல நிஜம் நிகழ்ச்சியிலும் லஷ்மி பேட்டி ர்டுத்தார்.. மிக சின்ன வயது பிள்ளைகள், வேலையில்லாதவரோடு திருமணம்.. வீட்டு வேலை.. படிப்பு நிறுத்தம் , வரிசையா குழந்தைகள் , பாலியல் வன்முறை என இடிக்கு மேல் இடி..

  இதுக்கு பதிலா கள்ளிப்பால் கொடுத்து கொன்னுடுங்க மொத்தமா..

  அரசே அதை இலவசமாவும் டாஸ்மாக் கடையில் விற்கலாம்..

  இந்தியாவில் பெண்களே இல்லாமல் போகட்டும்.. ( இன்னும் எங்கெல்லாம் இந்த கொடுமை நடக்குதோ அங்கெல்லாமும் )

  //“செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள் ஹசீனா//

  எத்தனை வெறுப்பு..?:(

  யார் பொறுப்பு.?.. நாமும் ..என்பதை எப்போது உணருவோம்..?

  வீட்டு வேலைக்கோ மற்ற வேலைக்கோ யாராவது குழந்தைகளை வைத்திருந்தால் ஈவு இறக்கமில்லாமல் உள்ளே தூக்கி வைக்கணும்..

  ஆங்காங்கே தன்னார்வலர்களும் முயற்சி எடுத்துக்கொண்டுதானிருக்கார்கள்.. ஆனாலும் விடிவு இல்லையே.. :((((((((((

 5. நல்ல பதிவு
  குழந்தை திருமணம் தடுக முடியாதது அல்ல. சில விஷயங்களை ஆலொசித்தால் முடியும்.இதனை அமல் படுத்தம் அரசு ஊழியர்கள் குறிப்பாக காவல்துறை ஒத்துழைப்பு அவசியம்.ஆனால் அது சாத்தியமா?

  1.பிறக்கும் குழந்தையில் இருந்து அனைவருக்கும் அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்கப்படவேண்டும். அதுவே வருடாவருடம் புதுப்பிக்கப் பட்டு வாக்காளர் அட்டை ,கடவுச்சீட்டு,..பலவித உபயோகத்திற்கும் முக்கியமான ஒன்றாகப் படவேன்டும்.

  2.அனைத்து குழந்தைக்ளின் கல்வி இலவசம் ,கட்டாயமாக்கப் படவேண்டும்.

  3.18 வய்துவரை அனைவரின் கல்வி கண்காணிக்கப் படவேண்டும்

  4.அனைத்து திருமணமும் பதிவு செய்யப் படவேண்டும்.திருமந்த்திற்கு முன்ன்ரே பதிவு நிலையத்தில் வயது,மருத்துவ சான்றிதழ் வழங்கி அனுமதி பெற வேண்டும்.

  இவையனைத்தையும் உடனே செய்வது கடினம் என்றாலும்,இதனை நோக்கி ஏதாவது செய்தாக வேண்டும். இந்த அடையாள அட்டையினால் சுதந்திரம் பாதிக்கப் படும். இது பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிரது.நாமும் ஃபான் கார்ட் முதலியவற்றுக்கு உபயோகப் படுத்துவது போல்தான்.இத்னால் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றாலும் 120 கோடி மக்கள் என்பதால் அமல்படுத்துவது கடினம்.
  ____________
  இதற்கு முதல் எதிரிகள் மத வா(வியா)திகளே.அரசும் இவர்களை பகைக்க அஞ்சி ஏதும் செய்யாது.

  • இந்த கருத்தை வினவில் பதிந்தது தவறு அன்பரே! இவர்களுக்கு UID பிடிக்காத ஒரு ப்ராஜெக்ட்.

 6. பெண் சிசுக்கொலை

  பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும் பெண் குழந்தைகளை மனமறிந்தே கொல்வது பெண்சிசுக்கொலையாகும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

  பெண் சிசுக்கொலை குறித்த உண்மைகள்

  * அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
  * உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
  * ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள்.
  * இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.

  http://www.indg.in/social-sector/social-awareness/stop-female-infanticide/baabc6ba3bcd-b9abbfb9abc1b95bcdb95bb2bc8

 7. நல்லதொரு விடயம் ஆனால் இறுதியில் முத்தாய்ப்பாய் எழுதியவிடயம்தான் தவறு பார்ப்பன சமுதாயம் கல்வியறிவில் முன்னேற்றமடைந்திருப்பதால் அவர்களிடம் இந்தவிடயத்தில் விழிப்புணர்வு அதிகம் அவர்கள் இந்தவிடயத்தில் உசாராக இருக்கிறார்கள் இங்கு உதாரணத்திற்காக எடுத்தூளப்பட்டிருக்கும் பெண்களின்பெயர்கள் கூட மனியம்மா ஹசீனா எனசமுகத்தில் பின்தங்கிய வகுப்பினரின் பெயராகவும் இஸ்லாமியப் பெண்ணின் பெயராகவும்தானே இருக்கிறது.
  பாலியவிவாகம் பொருளாரத்தில் பின்தங்கிய மற்ற்றும் கல்வியறிவு மிகவும் குறைந்த சாதி உணர்வு அதிகமாகவுள்ள தலித்தின மக்களிடமும் கிராமப்புற இஸ்லாமிய சமுகத்தினரிடமும்தான் அதிகமாகக் காணப்படுகிறது இந்த மக்கள்மத்தியில் கல்வி வளர்ச்சியை உண்டுபண்ணுவதாலும் அடிப்படைச் சுகாதார, மருத்துவ அறிவுகளை வளர்ப்பதனாலேயே இதில் மாற்றத்தைக்கொண்வரமுடியும். எழிமையானமுறையில் இதைச்செய்வதைவிடுத்து மறுகாலனியாக்கம் லெனினிசம் முதலாளித்துவம் என அவர்களுக்குச் சற்றும்புரியாத விடயங்களை அவர்கள் மிகவும் அந்நியப்பட்டிருக்கும் தளங்களில் எழுதிக்கொண்டிருப்பதில் ஆகப்போவது ஏதுமில்லை.

  • மிகச் சரி. பார்ப்பனர்கள் யாரும் பால்ய விவாகம் செய்வதுமில்லை. அவ்வாறு செய்ய தூண்டுவதுமில்லை. எந்த கட்டுரையெடுத்தாலும் அதில் சாதீய துவேஷத்தோடு முடிக்க வேண்டுமென்பது சம்பிரதாயமா? என்ன?

 8. மிகக் கொடுமை.
  அரசாங்கத்தால் மட்டும் தடுக்க முடியாது. தன்னார்வக்குழுக்கள் மக்களுடன் நன்கு பழகி அவர்களது முயற்சியினால் மட்டும் முடியும். மக்களுக்கு கல்வி அறிவு கூட வேண்டும்.

 9. சமூகம் பெண்களை திருமணம் நோக்கியே தள்ளுகிறது .பெண்பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் அவர்கள் திருமணம் குறித்து சிந்திப்பதையும் சேர்ப்பதையும் ஒரு முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் .வயது ஏற ஏற சந்தை மதிப்பு குறைவதால் இளம் வயதிலேயே இவ்வாறு திருமணம் முடிக்கின்றனர் .இதில் மணமகனும் வயதும் இருபது தான்.பெண்களுக்கான கட்டாயக் கல்வியும் கடுமையான சட்டங்களுமே இந்நிலையை மாற்ற முடியும் .

 10. குழந்தைத் திருமணங்கள் பாகிஸ்தானில்,வங்கதேசத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலும் நடக்கின்றன. 2002ல் முஸ்லீம்களுக்கு குழந்தை மணத்தடுப்பு சட்டத்திலிருந்து விலக்குத் தர வேண்டும்.ஏனெனில் அச்சட்டம்
  முஸ்லீம்களின் மத நம்பிக்கைக்கு முரணாக உள்ளது என்று
  அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
  http://www.cscsarchive.org:8081/MediaArchive/audience.nsf/(docid)/F9E6E6F2C0745B64E5256C1C00128AD8
  2007லும் இதையே அது சொன்னது
  http://madrasa.wordpress.com/2007/10/26/

  18 வயதிற்கு முன் திருமணம் என்பதை
  தடுக்கக்கூடாது என்று முஸ்லீம் அமைப்புதான் கூறுகிறது.அந்த வாரியத்தில் தமுமுக தலைவர் ஜவக்ரில்லாவும் உறுப்பினர்.
  ஆனால் இந்தப் பிரச்சினையில் தமுமுகவை விமர்சித்து வினவோ,சந்தனமுல்லையோ ஏன் எழுதவில்லை.உண்மை என்னவெனில் எந்த இந்து அமைப்பும் இப்போது குழந்தை திருமணத்தினை ஆதரிப்பதில்லை, சட்டத்திலிருந்து விலக்கும்
  கோருவதில்லை.அதே சமயம் அவை இதை எதிர்த்து செயல்படுவதும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
  ஆனால் மத உரிமை என்ற பெயரில் ஒரு ஆண் 4 பெண்களை
  திருமணம் செய்துகொள்வது, குழந்தை மணம் போன்றவற்றை
  ஆதரிப்பது முஸ்லீம் அமைப்புகள்.இந்த உண்மை ஏன் சந்தன முல்லையால் சொல்லப்படவில்லை.
  குழந்தை மணங்கள் நடக்க படிப்பறிவின்மை,வறுமை,பெண்களின் உரிமை
  குறித்து அறியாமல் இருப்பது போன்ற பல காரணிகள்தான் காரணம்.
  ஆனால் அற்பவாதிகளான வினவும்,சந்தனமுல்லையும் உண்மைகளை எழுதாமல் எதற்கெடுத்தாலும் பார்பனியம்,இந்து மதம் என்று குறை சொல்வார்கள்.
  இவர்கள் 24 x 7 திட்டும் பிராமணர்கள் சமூகத்தில் குழந்தை மணம் இல்லை,கல்வியறிவு அதிகம்,பெண்கள்
  வேலைக்கு செல்வதும் அதிகம்.அது எப்படி
  சாத்தியமானது.அவர்களும் இந்துக்கள்தானே.

  வினவிற்கும்,சந்தனமுல்லைக்கும் இருப்பது சமூக அக்கறையல்ல.
  இருந்தால் பிரச்சினையும் அனைத்து பரிமாணங்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். இந்து மதம்,பிராமணர்கள் மீதான வெறுப்பு.அதுதான் இப்படி கட்டுரைகளாக வெளிப்படுகிறது.

  திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்யப்பட
  வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.அதை சட்டமியற்றி
  நடைமுறைப்படுத்த முயன்றால் முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்கின்றன என்பதால் அது நடைமுறையில் இல்லை.
  அப்படி பதிவு செய்யும் போது குழந்தை திருமணங்கள்
  முஸ்லீம்களிடையே எந்த அளவு நடக்கின்றன என்பது
  தெரியவரும்.
  கீற்றில் அந்த தீர்ப்பினை எதிர்த்து ஒரு கட்டுரை
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4118&Itemid=139

  இந்தப் பிற்போக்குவாதிகளை பற்றி சந்தனமுல்லை எழுதமாட்டார்.
  அமெரிக்காவில் teenage pregnancy ஒரு பிரச்சினை.அதற்கும் காரணம் இந்துமதம், பார்பனியம் என்று கூட இவர்கள் வாதிடுவார்களே ஒழிய உண்மைகளை எழுதமாட்டார்கள்.

  • பார்ப்னியம் என்பது ‘பிராமணர்களைப்’ பற்றி மட்டமே சொல்வதாக ஏன் புரிந்து கொள்கிறீர்கள். பார்ப்பனியம் என்பது ஒரு கோட்பாடு. ஒரு சில விதி விலக்குகள் தவிர ஆகப் பெரும்பாலான ‘பிராமணர்கள்’ பார்ப்பனியத்தின் பாதுகாவலர்களே. பிராமணரல்லாத பிற சாதிகளிலும் பார்ப்பனியத்தை கடைபிடிப்போரும். பாதுகாப்போரும் அதிகம் இருக்கின்றனர். பார்ப்பனியத்தை எதிர்ப்பதென்பது பார்ப்பனிய கோட்பாட்டை கடைபிடிக்கும்/பாதுகாக்கும் அனைவரையுமே சுட்டும். எனவே பார்ப்பனியத்தை ஒரு கோட்பாடாய்ப் புரிந்து கொண்டு ஒரு தமிழன் பதில் சொன்னால் பரவாயில்லை.

   • ஐயோ ஐயோ எப்பிடியப்பா பிராமணீயம் என்றால் பிராமணரை மட்டம் தட்டுவதாக பார்கீர்கள் என்று கேட்டு விட்டு, ஒரு சிலரை தவிர பிராமணர்கள் அனைவரும் பிராமணீயத்தின் பாதுகாவலராக சொல்கீர்கள். என்னும் பத்து வருஷத்தில் பிராமண ஜாதியே இல்லாமல் போகிற அளவுக்கு அந்த ஜாதி மாறிகிட்டு வருது தெரியுமா!! ஆனால் IT கம்பனிகளில் பணியாற்றுவோரிடமும் ஜாதி இல்லை. குழந்தை மணம் பற்றி எழுதினால் அது நடைமுறையில் இருக்கும் இனங்களை பற்றி மற்றும் எழுதுவதை விட்டு ….. ஐயோ ஐயோ.

    • …..பத்து வருஷத்தில் பிராமண ஜாதியே இல்லாமல் போகிற அளவுக்கு அந்த ஜாதி மாறிகிட்டு வருது தெரியுமா!! ஆனால் IT கம்பனிகளில் பணியாற்றுவோரிடமும் ஜாதி இல்லை….

     பாருங்கய்யா! ரொம்ப சுலபமா சாதிய ஒழிச்சிட்டாங்க. சபாஷ்! பலே! பலே! இதற்கு மூலகாரணமா இருக்கிற ஆள காட்னா நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யலாம். எல்லா பதிவர்களும் தயாரா இருங்க. பதிவுக்கு ஓட்டு போடுறீங்களோ இல்லையோ நோபல் பரிசுக்கு கண்டிப்பா ஓட்டுப் போடுங்க.

  • //இவர்கள் 24 x 7 திட்டும் பிராமணர்கள் சமூகத்தில் குழந்தை மணம் இல்லை//

   சரியாக சொல்லவேண்டும்

   1.இவர்கள் 24 x 7 திட்டும் பிராமணர்கள் சமூகத்தில் குழந்தை மணம் இப்போது இல்லை.

   2.சில மாற்றங்களை நடைமுறைப் படுத்துவதில் பிராமணர்கள் முன் மாதிரியானவர்களே.கடல் கடந்து போகக் கூடாது,குழந்தை திருமணம் போன்றவற்றி இருந்து விடுபட்டது பொருளாதார முன்னேற்றத்திற்காக.இதனை தவறு என்று கூறவில்லை.

   3.முன்பு இந்திய சமுகத்தில் அனைத்து சாதியிலுமே குழந்தை திருமணம் வழக்கில் இருந்து வந்துள்ளது.தடை சட்டத்திற்கு பிறகே மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
   ஒரு விஷயம் இத்னை இந்து சமயத்தில் யாரும் மத புத்தகங்களை காட்டி நியாய‌ப் படுத்துவது இல்லை.சிலர் சட்ட விரோதம் என்று பயந்தே இரகசியமாக் செய்ய முயல்கின்றன்ர்.
   __________

   இச்சட்டத்தை வெளிப்ப்டையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய மதவாதிகளே

   http://www.intjonline.org/355.do

   பருவம் வந்த பின் செய்யலாம் என்று இவர்கள் கூறினாலும்.பல நாடுகளில் பருவம் அடையாத பெண்ணுக்கே திருமணம் நடக்கிறது.

   பாலஸ்தீன விடுத்லை இயக்கமாக கூறப்படும் ஹமாஸ் நட்த்திய குழந்தை திருமண் திருவிழா.
   http://www.debbieschlussel.com/5787/the-hamas-marries-450-child-brides-video-of-the-dayb/
   http://www.msnbc.msn.com/id/26042107/ns/world_news-mideast/n_africa/

   http://www.youtube.com/watch?v=26OAmHrmJLM

   சவுதியில் பெண்ணின் திருமண வயது பற்றி பெரிய விவாதமெ நடந்து வருகிறது.ஒரு விஷயத்தை தவறு என்று ஒத்துக் கொண்டால் சரியான பாதைக்கு செல்ல வாய்ப்பாவது உண்டு. செய்வதை மத புத்தகத்தை காட்டி நியாயப் படுத்தினால் என்ன சொல்ல முடியும்!!!!!!

   • Simple way to bash someone (followed by most of the lunatics)

    1. search the name with conspiracy, rape, terror, threat………………….
    2. search in google
    3. post that without analyzing them
    4. job ginished

    for example let us analyze XXXXXXX mom (yyyyy) is good r bad
    1. yyyyyy prostitute
    2. yyyyyy sleep with somebody
    3. yyyyyy drug addict?
    search in google

    post tht in blog

    • என்ன சொல்ல வருகிறீர்கள்

     பெண்களிடம் அனுமதி பெற்றே திருமணம் செய்யப் படுகிறது ஆகையால் வயது பற்றிய பேச்சுக்கு அவசியமில்லை என்றா!!!!!!!!!!!!!!

     மத புத்தக்த்தில் உள்ளதை தங்களுக்கு ஏற்ற மாதிரி திரிப்பது எளிதான வேலைதானே!!!!!!!

     மத கொள்கைகளின் படியேதான் மிகவும் நாகரிகமாக பின்னூட்டமிடுகிறீர்கள் என்பதையும் அறிவேன். இது மதவாதிகளின் இயல்பான செயலே.

     குறந்த பட்சம் கல்வி கற்ற, 18 வயதில்,எதோ ஒரு சுய தொழில் மூலம் சொந்த காலில் நிற்க முடியும், உடல் மன வளர்ச்சி அடைந்த பெண்ணிடம் அனுமதி கேட்டால், அப்பெண் சரியாக முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகம். கணவன் கைவிட்டாலும் பிறருக்கு பாரமாக் இல்லாமல் தன் வாழ்க்கையை நடத்த முடியும்.

     இதைத்தான் இங்கு சொல்கிறோம்.

   • i told tht u gav me a damn link “related to palestine” i told u tht u are a lunatic without analyzing tht link n propagate false news.

    n even now also u r not speaking without any sense n not able to grab wat i am talking !! so i am telling u a brainless idiot

    wat question n wat link i gav it to “”u”” “

    • அது உண்மைதான்.மதவாதிகள் எந்த காலத்தில் ஏதாவது உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்?.பாருங்கள் காணொளியை பிறகு இது என்னவென்று விளக்கினால் நல்லது.
     http://www.youtube.com/watch?v=qJS2tVQBhI0

     ஒருவேளை உண்மையில்லை என்றால் யு டுயுபிபற்கு கருத்தை எழுதி தெரிவியுங்கள்.அப்படி யு டியூப் தவறென்று,அக்காணொளியை நீக்கினால்,அது தவறென்று ஹமாஸ் பற்றிய கருத்தை மட்டும் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தமிழிலேயே கருத்துகளை பத்விட்டால் அனைவரும் புரிந்து கொள்ள வ்சதியாக இருக்கும். நிறைய பேசுங்கள் நண்பரே!!!!!!!!!
     நீங்கள் சொல்ல வருவது என்ன?
     இஸ்லாமியர்கள் குறைந்த வயதில்தான் திருமனம் செய்வார்கள் அத்னை யாரும் இப்படி நடக்கிறது என்று கூட சொல்லக் கூடாது. அவ்வளவுதானே!!!!!!!!!!!
     இங்கே பாருங்கள் ஒரு சவுதி முல்லா 15 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்பவது தவறில்லையென்று கூறுவதை.

     http://edition.cnn.com/2009/WORLD/meast/01/17/saudi.child.marriage/index.html

     http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2010/03/13/IN5D1CD71L.DTL

     இங்கு தமிழ்நாட்டின் ஒரு பெ(ஆண்) மேல்நிலைக் கல்வி படிக்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 17 வயது முடியும். பல நடுத்தர குடும்பங்களில் பெண்களை ஒரு பட்டப் படிப்பு படிக்க வைத்து ,ஒரு வேலை வாய்ப்புடன் திரும்ணம் செய்வதென்றால் வயது 20+ ஆகிவிடும். படிக்க வைக்க முடியாத பெற்றோரே குறைந்த வயதில் திருமணம் செய்கிறார்கள்.

     பெண்களுக்கு கல்வி கொடுக்கும் சமுதாயமே முன்னேறும்.

   • [obscured]
    again one senseless link , u brainless never want to know about the truth or want to analyze
    did u c the links i gave especially “related to skynews”

    the links tht i gave can u tell what it is related to?????? it is related to hamas wedding “ONLY” , not related to child wedding, saudi bla bla bla bla

    did i tell u tht i am muslim

    //இங்கு தமிழ்நாட்டின் ஒரு பெ(ஆண்) மேல்நிலைக் கல்வி படிக்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 17 வயது முடியும். பல நடுத்தர குடும்பங்களில் பெண்களை ஒரு பட்டப் படிப்பு படிக்க வைத்து ,ஒரு வேலை வாய்ப்புடன் திரும்ணம் செய்வதென்றால் வயது 20+ ஆகிவிடும். படிக்க வைக்க முடியாத பெற்றோரே குறைந்த வயதில் திருமணம் செய்கிறார்கள்.
    பெண்களுக்கு கல்வி கொடுக்கும் சமுதாயமே முன்னேறும்.//

    முதல்ல மத்தவங என்ன சொல்ல வாராங்கன்னு மூளைய யூஸ் பன்னி பன்னுஙக‌
    அப்புரம் ஊங்க கருத்த சொல்லுங்க

    i gave u the standard proof related to hamas wat abt “u” n tell me how many false news youtube deleted frm their website??

   • anonymous post related to shankar was me

    vinavu censor panniputtaaaru shankar unga email id ya tharavum en karuththu niraya censor aaagiruchchu heeeeeeheeeeeeee

 11. ’அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர்’.
  அதை வரவேற்று எழுதிய இந்துக்கள், மத அமைப்புகளைப் பற்றி ஒரு வாக்கியம் கூட எழுதாமல் அரைகுறையாக இப்படி எழுதுவதால் என்ன பயன்.சாரதா சட்டத்திற்கு ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் இருந்தது. அச்சட்ட்த்தினை முன்வைத்தவர் ஒரு இந்து.
  The various organized women associations got the opportunity of playing independent political role when the cautious British India government, under the pressure of the world opinion, the social reformist in India and Nationalist freedom fighters, referred the Sharda’s Bill (Hindu Child Marriage Bill) to a select committee of ten headed by Sir Moropant Visavanath Joshi. The All India Women’s Conference, Women’s India Association and National Council of Women in India, through their members developed and articulated the argument in favour of raising of the age for marriage and consent before the Joshi Committee. Even the Muslim women represented to the Joshi Committee. The Muslim women presented their views in favour of raising the age limit of marriage even when they knew that they would face opposition from Muslim Ulemas. [5]

  However, the Act remained a dead letter during the colonial period of British rule in India
  http://en.wikipedia.org/wiki/Child_Marriage_Restraint_Act

  எதையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு எழுதினால் உங்கள் தலை வெடித்து சிதறிவிடுமா.

  • //The Muslim women presented their views in favour of raising the age limit of marriage even when they knew that they would face opposition from Muslim Ulemas. [5]// ஆனா பெண் சம்மதம் இல்லாம கல்யாணம் பன்ன கூடாதுன்னு இசுலாத்துல‌ இருக்கே.இதுக்கு பெண்களே individualaa marriage age நிர்னயம் செய்யலாமே thn y they want to care abt muslim ulemas?????

   எதையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு எழுதினால் உங்கள் தலை வெடித்து சிதறிவிடுமா 🙂 🙂 🙂 🙂 தமிழரே??

  • இந்த கட்டுரை உண்மையான அக்கறையுடன் எழுதப்படமால் தேவையற்ற “மறுகாலனி ஆதிக்கம்” ஆகியவற்றினுடாக எடுத்துசென்று பார்பனிய பஸின் மேல் மூத்திரம் அடித்து ….சிந்தனைகளில் முளைக்கும் ஓவொரு நல்ல விழயங்களுக்கும் மறுகாலனி ஆதிக்கமும் பார்பனியமும் சேர்ப்பது ஒரு பைத்தியத்தின் மனநிலயில் எழுதப்பட்டுள்ளது.

   • நேர்மையும், தைரியமும் இல்லாதவர்கள், ஒரு தலைப்பட்சமாக சிந்திப்பவர்கள் எதற்கு – இம்மாதிரியான சமூக அக்கறை கட்டுரைகள் எழுத வேண்டும்.

 12. நல்ல முயற்சி.

  குழந்தைத் திருமணங்கள் நடப்பதை பாகிஸ்தானுக்கும், பங்களாதேசத்துக்கும், அசாமுக்கும் சென்று தேடவேண்டியதில்லை. தமிழகத்திலேயே தருமபுரி போன்ற பின் தங்கிய மாவட்டங்களிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சில சாதி மக்களிடம் இன்றும் குமந்தைத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தில் பரவலாக் 12, 15 வயது சிறுமிகளுக்கு பரவலாக திருமணங்கள் நடைபெற்றன. எந்த சட்டத்தாலும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே உண்மை. சட்டங்களால் மட்டுமே தடுத்துவிட முடியாது.

  பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு பெற்றோர்கள் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? அவ்வாறு செய்வதனால் அவர்கள் எல்லாம் கெட்டவர்களா? பார்ப்பனிய பண்பாட்டுக் கூறுகள் மட்டுமே காரணங்களா? அறியாமையில் இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா? அறியாமையிலிருந்து விடுபட்டுவிட்டால் குழந்தைத் திருமணங்களே நடக்காதா? இப்படி கேள்விகள் நீள்கின்றன. சரியான பதில் மட்டும் கிடைப்பதில்லையே ஏன்?

  கிராமப்புற உற்பத்தி முறை என்பது இன்னமும் பல இடங்களில் மாறவில்லை. மொத்த குடும்பமும் உழைப்பது. கிடைக்கின்ற வருவாயை வைத்துக் கொண்டு வாழ்வது. இதைத்தவிர அவர்களுக்கு வேறு வேலைகள் கிடையாது. சும்மா இருந்தால் என்ன நடக்கும்? நடக்கவிருக்கும் சீரழிவை யாராலும் தடுக்க முடியவதில்லை.

  பெண்கள் மீது மட்டுமே தனிச்சிறப்பாக திணிக்கப்பட்டுள்ள கற்பு என்கிற புனிதப் பேய், தாயின் வயிற்றிலிருந்து பெண் குழந்தை வெளியே வரும் போதே துரத்தத் தொடங்கிவிடுகிறது.

  இன்னமும் நமது முன்னேறிய தமிழக கிராமங்களில் இந்த கற்பு என்கிற பேய் விரட்டுவதால் படிப்பு வராமல் வீட்டு வேலையை மட்டும் செய்யும் பெண்களுக்கு 16, 17 வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கற்பு எனும் பேயிடமிருந்து பெண்ணைக் காப்பதற்காக 30 வயதைத் தொடும் முதிர் காளைக்கு கட்டி வைத்து “அப்பாடா இனி பயம் ஏதும் இல்லை, எப்படியோ கரைசேர்த்துவிட்டோம்” என பெருமூச்சு விடுகிறார்கள். பேயிடமிருந்து காப்பாற்ற ஏதோ ஒரு நாயிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். நாய் கடித்துக் குதறினாலும் அது ‘லைசென்சு’ பெற் நாயாகிவிடுகிறது. அதனால் அது குற்றமாகக் கருதப்படுவதில்லை.

  ஆனால் படிக்கிற பெண்கள் படிப்பு என்கிற உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் கற்பு என்கிற பேயைக் கண்டு பெற்றோர்கள் அஞ்சுவதில்லை. கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்பதல்ல இதன் பொருள். அவர்கள் சும்மா இருப்பதில்லை. அதனால் ‘கெட்டுப்’ போவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. அதேபோல படித்துவிட்டு வேலைக்குப் போனாலும் கற்புப் பேய் இவர்களை விரட்டுவதில்லை. அதனால் முப்பது வயதில்கூட பெண்களுக்கு மிகச் சாதாரணமாய் திருமணங்கள் நடக்கின்றன. என்ன, பாப்பிள்ளை கிடைப்பதுதான் பிரச்சனை. முப்பதைத் தாண்டினாலும் பல முதிர் காளைகள் இருபதுக்குக் கீழேதான் பெண் தேடுகிறார்கள். படித்த பெண்கள்கூட வேலைக்குச் செல்லாமல் அல்லது உழைப்பில் ஈடுபடாமல் சும்மா இருந்தால் இங்கேயும் கற்புப் பேய் விரட்டத் தொடங்கும். விரைவான திருமணம்தான். வேறு வழியில்லை பெற்றோர்களுக்கு.

  பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் வெறும் விழிப்புணர்வால் மட்டுமே நடந்து விடுவதில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் அதனால் ஏற்படும் சமூக மாற்றமும்தான் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை நோக்கி கிராமப்புறம் உள்ளிட்ட ஒட்டு மொத்த சமூகமும் மேலும் மாறும் பொழுதுதான்/வளரும் பொழுதுதான் இத்தகைய குழந்தைத் திருமணங்களை முற்றாக ஒழிக்க முடியும்.

  • // 16, 17 வயதிலேயே திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கற்பு எனும் பேயிடமிருந்து பெண்ணைக் காப்பதற்காக 30 வயதைத் தொடும் முதிர் காளைக்கு கட்டி வைத்து “அப்பாடா இனி பயம் ஏதும் இல்லை, எப்படியோ கரைசேர்த்துவிட்டோம்”//

   30‍‍‍‍ – 40 – 50 – 60 – 70 இவர்கள் எந்தெந்த வயது உடய பெண்களை மணம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றலாமா

   • சட்டம் வேண்டாம் அப்பனே. மருத்துவரைக் கேளுங்கள். வயது வேறுபாடு எவ்வளவு இருக்கலாம் என்று சொல்வார்.

 13. அரசு,தனியார் அனைத்து பதவிகளுக்கும்பெண்களுக்கான 33%(இப்போது பிறகு 50% நோக்கி கொஞ்சம் கொஞ்சமக உயர்த்தப் படவேண்டும்)இட ஒதுக்கீடு உடனே அமல் படுத்தப் பட்டால் இப்பிரச்சினை ஒரு அளவிற்கு தீர்ந்துவிடும்.
  பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வந்தால் மரியாதை தானாக கிடைக்கும்.
  கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பம் பொருளாதார நிலைமையில்
  வலுவாக இருப்பது இயல்பே.
  இப்போது மத(பிடி)வாதம் பேசும் கும்பல்கள் ,பணம் என்று வந்துவிட்டால் அப்படியே ஒதுங்கி கொள்வார்கள்.

  • உலகம் உருப்புடரதுக்கு முதல்ல இவன மாதிரி ஆலுகிட்ட இருந்து தான் காப்பாத்தனும் அப்புரம் அர குரை மதவியாஆதி, பொலி கம்ம்யூனிஸ்ட்டு நு ஒவ்வுருத்தனயா தூக்கனும்

 14. //இப்போது மத(பிடி)வாதம் பேசும் கும்பல்கள் ,பணம் என்று வந்துவிட்டால் அப்படியே ஒதுங்கி கொள்வார்கள்// எல்லோரும் உங்கள மாதிரி [obscued] இருப்பாங்கன்னு நினைக்காதீங்க சங்கர்

 15. பயனுள்ள பதிவை தந்த வினவுக்கு நன்றி. பெண்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அதிகரிக்கும்போது இந்த இழிசெயல்கள் நீங்குவது உண்மை. சட்டம் இயற்றுவது ஒருபக்கம் இருந்தாலும் பெற்றோர்களிடம் இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேவையான அளவிற்கு தரமான கல்வியுடன் தொழில் கல்வியும் இலவசமாகவே வழங்கினால் பெண்கள் முன்னேற்றம் அதிகரிக்கும்.

 16. பதிவிட்ட வினவுக்கு நன்றி.ஆக்க பூர்வமாக கருத்துப் பரிமாற்றம் செய்த ஏதோ ஒன்னு(அனானிமஸ்) நண்பருக்கும் நன்றி.

  • wat hapnd to hamas related link.
   உங்க மீசைல மண் ஒட்டிச்சா இல்லயா?

   தப்ப ஒத்துகரதுக்கும் ந்ல்ல என்னம் வேண்டும் :):):):)

  • //In the Gaza Strip, the Egyptian-issued Law of Family Rights set puberty as the minimum age of marriage with no marriage allowed for a female aged under 9 or a male aged under 12. The Palestinian Qadi al-Quda issued an administrative decision in 1995 raising these ages to a minimum of 15 for the female and 16 for the male,[8] as in the Jordanian law. All ages are calculated according to the lunar calendar. Marriage registration is mandatory but failure to register does not invalidate the marriage.// wiki pedia

   ippo sollunga ?????????????????? ippadi irukkira sattathula epadi thalaivaaaa 450 marriage pannuvaaanga???????????

 17. இந்த சமூக அவலம் பார்ப்பனீயத்தின் நிலவுடமை சமூகத்தில் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்…

  சமூகம் தானாக திருந்த வேண்டும்…

  பெரியார் எடுத்து சொன்ன பெண்ணடிமைதனத்தின் விடுதலையை முதலில் பயன்படுத்தி கொண்டு பணி சூழலுக்கு பெண்களை அனுப்பியவர்கள் பார்ப்பனர்களே… கடந்த 1950களுக்கு முன் பார்ப்பனர்களும் குழந்தை திருமணங்களை நடத்தியர்களே…

  பெண்களுக்கு எதிரான தேவதாசி முறையை நீதி கட்சி அரசு தடை செய்த போது… தேவதாசிகளை கொண்டு ஆண்களுக்கு சேவை செய்ய வைக்க வேண்டும்… சென்னை மாகான சட்ட மன்றத்தில் பொறுக்கிதனம் செய்தவர் தியாகி சத்திய மூர்த்தி ஐயர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்…

  1990 வரை தமிழ் நாட்டில் பரவலாக இருந்த குறைந்த வயது திருமணங்கள்… பெரிய அளவில் இல்லாத காரணம்… பிள்ளைகள் 12வது படித்து விட்டு போகட்டுமே எனும் நிலை… 12வது தமிழ் வழியில் இலவச கல்வி கிடைப்பதும் ஒரு காரணம்…

  இங்கு காட்டப்படும் அசாம், தெலுங்கான, ராஜஸ்தான், ம.பி. போன்ற பகுதிகள் மேல் சாதி கட்டமைப்பில் இறுகி… பிள்ளைகளுக்கு கல்வி மறுப்பதே குழந்தை திருமணங்களுக்கு முக்கிய காரணம்… அரசுகளும் பாஜக, காங்கிரஸ் பார்ப்பனீய அரசுகளாக இருக்கும்…

 18. வழக்கம் போல் ஒரு தகவல் தொகுப்பு. சந்தன முல்லை எழுத அதை வினவு திருத்தி மக்களுக்கு வந்திருக்கிறது.
  வழக்கம் போல் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள், எழுதியவர் மறுமொழி சொல்லாமல் வினவின் நண்பர்கள் பதில் அளிக்க இனிதே முடிந்தது விடை தெரியாத சமூக அவலம்.

  வழக்கம் போல் சந்தன முல்லை, வினவு மற்றும் வினவின் நண்பர்கள் ஒரு தெளிவான வழி கூறாமல் அடுத்த சமூக அவலம் பற்றி சிந்திக்க சென்று இருக்கலாம்.

  இதற்காக வினவின் கோபக்கார நண்பர்கள் என்னை ‘நல்ல’ வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாலும் பரவாயில்லை.

  நீங்கள் மற்ற சமூக அக்கறை கழகங்கள் போல் இல்லாமல் உண்மையாக உள்ளவர்கள் என்று நம்பிக்கை கொஞ்சம் உள்ளது.

  இது வினவிற்காண கேள்வி, இது நியாயமான கேள்வி என்றால் வினவு பதில் கூறட்டும்.

  ஐயா, நாங்கள் சுயனலாவதிகள் எங்கள் குடும்ப முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்போம்.
  எங்களுக்கு சமூக அக்கறையோடு சிந்திக்க தெரியாத மாதிரி இருப்போம்
  ஆதலால் சமூக அவலம் பற்றி நடைமுறைக்கு சாத்தியப்படும் வழி முறைகளை கூறினால் அதை பற்றி சிந்தித்து, சந்தேகம் எந்தறால் கேட்டு தெரிந்து நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.

  பிரச்சனைகளை மட்டும் கூறுவதால், அதை புரிதலை தவிர வேறு ஏதும் நடக்கும என்பது இந்த மூளை உழைப்பு அடிமைக்கு புரியவில்லை.

  ஒன்று மட்டும் உண்மை வினவு, கணினியே கதி என்று இருப்பவர்களுக்கு சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை வினவு தாளம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

  இன்னும் ஒன்று, அறிந்து கொள்ள மட்டும் தான் முடிகிறது, அடுத்த வழி என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பது மட்டும் கசப்பான உண்மை.

  எனினும் உங்கள் சுயநலம் அற்ற பணி தொடர வாழ்த்துக்கள்.
  அது முழுமை பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது என் எண்ணம்.

 19. stupid point of view. why you always blame it on paarpans? what does haseena has to do with brahmins. you are biased and so you connect every issue to paarpans and middle class indians. this article lashes out at paarpans rather than creating any awareness. really frustrating why no one is unbiased.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க