Saturday, July 20, 2024
முகப்புசெய்திநிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!

நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!

-

செய்தி-68

மின்சாரம்-2

ற்போது அறிவிக்கப்படாத முறையில் தமிழக மின்வாரியம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. மின்வாரியத்தின் மொத்தக்கடன் அறுபதாயிரம் கோடிகளுக்கும் மேல் உயர்ந்துவிட்டது. புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதையும் துவங்காததும், தனியார் மின்சார நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதும் தான் இந்த கடனுக்கு அடிப்படையான காரணங்கள்.

ஆனால் பாசிச ஜெயாவின் அரசோ தி.மு.க அரசையும், கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்காததும் தான் மின்வெட்டுக்கு காரணம் என்று கூறி மக்களை திசை திருப்பி வந்தது. அதன் பிறகு காற்றாலை மின்சக்தியால் ஓரளவு குறைந்திருந்த மின்வெட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின்வெட்டாக மாறியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இது தான் நிலைமை.

இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து

மின்சாரம் பற்றாக்குறை என மக்களை ஏமாற்றாதே !
பன்னாட்டு நிறுவனங்களுக்கான தடையற்ற மின்சாரத்தை ரத்து செய் !
உற்பத்திக்கான செயல்திட்டத்தை அமுல்படுத்து !

என்கிற முழக்கத்துடன் திருச்சி மாவட்ட ’பெண்கள் விடுதலை முன்னணி கடந்த 29-ம் தேதி திருச்சி ஜங்ஷன் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பெ.வி.மு தலைவர் தோழர் நிர்மலா தலைமை தாங்கினார். தோழர் தனது தலைமை உரையில் மின்வெட்டிற்கான உண்மையான காரணங்களையும் அரசு கூறி வரும் பொய்களையும் அம்பலமாக்கினார். 365 நாட்களும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதும் தனியார் கொள்முதலுமே நட்டத்திற்கும் மின்வெட்டிற்கும் காரணம் ஆனால் பாசிச ஜெயாவோ பச்சையான பல பொய்களை கூறி மக்களை இருளில் ஆழ்த்தி வைத்திருக்கிறது என்று சாடினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய தோழர் கலா இப்போது கடுமையாக அமுல்படுத்தப்படும் மின்வெட்டானது சிறு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல தரப்பட்ட மக்களையும் வாட்டிவதைக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த இந்த ஒராண்டின் சாதனைகளை பட்டியலிடுகிறது அ.தி.மு.க கும்பல். ஆனால் இந்த ஓராண்டில் உழைக்கும் மக்கள் நூறாண்டு வேதனைகளை தான் அனுபவித்திருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இவர் போடும் எலும்புத்துண்டுகளான மிக்சி, கிரைண்டரை வைத்துக்கொண்டு என்ன நாக்கா வழிக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய ம.க.இ.க தோழர் ராஜா மக்களுக்கு கணக்கு வழக்கின்றி மின்வெட்டை அமுல்படுத்தும் பாசிச ஜெயா அரசு தனியார் மின்நிலையங்களான டாடா, அம்பானி, ஜிண்டால், அப்போலோ குழுமம், ஜி.எம்.ஆர் போன்ற பகல் கொள்ளை கூடாரங்களுக்கு மின்சாரத்தை வாரிவழங்குகிறது. இலட்சக்கணக்கான சிறு தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கும் திட்டமிட்டே மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள் என்ன லட்சணத்தில் பராமரிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியும். இப்போது மின்வெட்டால் மேலும் பல உயிர்களை காவு வாங்கும் கொலைக்களமாக மாறியிருக்கிறது அரசு மருத்துவமனைகள்.

கொடநாட்டு பங்களாவில் குப்புற கிடக்கும் ஜெயாவிற்கு மக்களை பற்றி துளியும் அக்கறை கிடையாது. மின்வெட்டை ஒழிக்க வேண்டுமானால் மின்சாரம் தயாரிப்பதன் மூலம் கொள்ளை லாபமடிக்க கிளம்பியிருக்கும் தனியார் மின் நிலையங்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும். தரகு முதலாளிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்தும் அவற்றை பறித்தெடுக்காமல் கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது எனவே போராட வாருங்கள் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின் இடை இடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டது. பெ.வி.மு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பெண் தோழர்களே வீதிகளில் இறங்கி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தனர் அப்போதே பல பெண்கள் இதுபோன்ற விசயங்களில் எல்லாம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும், அவசியம் கலந்துகொள்கிறோம் என்று கூறினர். சுற்றி நின்று ஆர்ப்பாட்டத்தை கவனித்துக்கொண்டிருந்த மக்களும் கடைக்காரர்களும் நிதியும் ஆதரவும் அளித்தனர். ஆர்ப்பாட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

__________________________________

தகவல்- பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பெண்கள் கலந்து கொண்டால் தான் எந்த ஒரு போராட்டமும் முழுமை அடையும். திருச்சி பெண் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. மீண்டும் தமிழகம் முழுவதும் பல மணி நேரம் இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் ஏன் இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விசயம். புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள் நாடு முழுவதும் பற்றி படரவேண்டும். போராட்டத்தினால் ஆட்சியாளர்களின் உறக்கம் கெட வேண்டும்.

    போராடிய பெண்கள் விடுதலை முன்னணியினருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  3. உண்மைதான்.நான் சென்ற மாதம் திருச்சி வந்திருந்தபோது இரவில் தூங்கமுடியாமல் தவித்தேன். இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களிடம் போராடாமல் எதுவுமே கிடைக்கப் போவதில்லை. போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் எனது வாழத்துக்கள்

    சோதி

    இலங்கயிலிருந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க