privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காiPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!

iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!

-

ஐபோன்-தொழிலாளிப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் செப்டம்பர் 21 அன்று புதிய ரக ஐஃபோன் கருவிகளின் விற்பனையை ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

இதனால் ‘பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் குறைவாக இருப்பதாகவும், கோடை விடுமுறை பணிகளை முடித்து விட்டு பலர் விலகியதால் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை அதிமாகியிருப்பதாகவும்’ பெயர் வெளியிட விரும்பாத பாக்ஸ்கான் தொழிற்சாலையின் மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் சந்தை தேவையை பூர்த்தி செய்யுமளவு பாக்ஸ்கானில் போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் மாணவர்களை நவீன கொத்தடிமைகளாக  பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது நிறுவனம்.

ஹூய்ஆன் நகரில் பல கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மாணவர்களை ஐபோன் தயரிப்பு பிரிவில் வேலைக்கு வரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளது பாக்ஸ்கான். பல மாணவர்கள் பாக்ஸ்கானில் வேலை செய்ய விரும்பா விட்டாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலால் வேலைக்கு சென்றுள்ளன்ர். உணவு அறிவியல், நிதிநிர்வாகம் போன்ற துறைகள் உட்பட நகரத்தைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் மாணவர்களை பாக்ஸ்கானில் வேலை செய்ய அனுப்பியிருக்கின்றன.

ஹூய்ஆன் திறந்தநிலை பல்கலைக் கழக மாணவி சொங், ‘வேலைக்கு போக மறுத்தால் படிப்பை முடிப்பதற்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்காது’ என்றார். அவரது பல்கலைக் கழகம் மட்டும் 3,000 மாணவர்களை பாக்ஸ்கானுக்கு அனுப்பியிருந்தது.

மாணவர்களுக்கு 1,550 யுவான் ($244) மாதச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை, இலக்கை முடிக்கா விட்டால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்று முறையான தொழிலாளர்களை போல வேலை வாங்கப்பட்டுள்ளனர் அந்த மாணவர்கள். ‘மாணவர்கள் பழகுனர்களாக வேலைக்கு போகலாம் என்று சீன சட்டம் சொன்னாலும் வழிகாட்டி யாரும் உடன் இல்லாமல் குறைந்தது 8 மணி நேர வேலை செய்வது இந்த சட்டத்திற்குட்படாது’ என்கிறார் யூ என்ற வழக்கறிஞர்.

பாக்ஸ்கானின் சட்ட விரோத செயலைப் பற்றிய விரிவான கட்டுரை சீனா டெய்லி பத்திரிகையில் வந்தவுடன் அவசரமாக சீன தொழிலாளர் நல  வாரியம் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டது பாக்ஸ்கான். சீன தொழிலாளர் நல கமிட்டி உறுப்பினர்கள் நடத்திய சோதனையில் ஒரு மாணவர்கூட தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிப்பதாக பாக்ஸ்கான் மார் தட்டியதுது.

ஆனால், பாக்ஸ்கான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் ‘மாணவர்கள் தொழில்நுட்பத்தையும், கார்ப்ரெட் வேலை கலாச்சரத்தையும் கற்கவே தங்கள் நிறுவனம் உதவியதாகவும் மாணவர்களை கட்டாயப் படுத்தவில்லையென்றும் மாணவர்களுக்கு விருப்பமில்லை என்றால், வேலைக்கு வர வேண்டாம்’ என்றும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் தென் சீனாவில் இருக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 16 முதல் 18 மணி நேர வேலை, குறைந்த கூலி, இரவு பகல் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற சூழலில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சமூகத்தை சுரண்டும் மனிதத் தன்மையற்ற முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு சீன இளைஞர்கள் மாவோ தலைமையில் இருந்த அன்றைய கம்யூனிசக் கட்சியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கொத்தடிமைக்கு துணை போகும் இன்றைய போலிக் கம்யூனிஸ்ட்டுகளை முறியடிக்க முடியும்.

இதையும் படிக்கவும்

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: