Sunday, September 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஉங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா?

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா?

-

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ‘மேதை’!

ஸ்டீவ்-ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்

2007-ம் ஆண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், விற்பனைக்கு வெளியாகத் திட்டமிட்ட நாளுக்கு ஒரு மாதம்தான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், மேலாளர்கள் சிலரை தனது அலுவலகத்திற்குள் அழைத்தார். சில வாரங்களாக ஐ-போன் கருவியின் மாதிரியை தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்து சோதனை செய்து கொண்டிருந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது, அந்த மாதிரியை கோபத்துடன் எல்லோருக்கும் காட்டினார். அதன் பிளாஸ்டிக் திரையில் சிறு கோடுகளாக மெல்லிய கீறல்கள் தெரிந்தன.

தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து சாவிக் கொத்து ஒன்றை வெளியில் எடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘இந்த போனை மக்கள் தமது பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்கள். சாவிக் கொத்துகளையும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். கீறல் விழும்படியான ஒரு பொருளை நான் விற்க மாட்டேன்’ என்று கடுப்புடன் சொன்னார். கீறல் விழாத கண்ணாடி திரையை பயன்படுத்துவதுதான் ஒரே வழி. ‘கண்ணாடி திரை வேண்டும். ஆறு வாரங்களுக்குள் பக்காவாக வேண்டும்’.

இதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ். நுகர்வோர் ஐ-போனை சாவிகளுடன் சட்டைப் பையில் வைத்திருந்தால், அதன் திரையில் ஏற்படக் கூடிய கீறலைப் பற்றி கவலைப் படுவது போல ஒவ்வொரு நுணுக்கமான விபரத்திலும் கவனம் செலுத்துவதுதான் அவரது வெற்றியின் ரகசியமாக போற்றப்படுகிறது. “ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போன்றதில்லை. தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். அத்தகைய கலாச்சாரத்தை பயிற்றுவித்து வெற்றிக்கு வழிகாட்டிய உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து விற்கும் பொருட்களின் வடிவமைப்பில் புரட்சிகர மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்” என்று பலரும் பாரட்டத் தயங்குவதில்லை.

உலகின் நம்பர் 1 நிறுவனம் ஆப்பிள்

ஆப்பிள்
ஆப்பிள் தயாரிப்புகளின் ஒரு பகுதி

மேக்கின்டோஷ் வரிசை மேசைக் கணினிகள், ஐ-மேக் மடிக்கணினிகள், ஐ-பாட் பாட்டு கேட்கும் கருவி, ஐ-போன் செல்பேசி, ஐ-பேட் கையடக்கக் கணினி என்று கை வைத்த எல்லா துறைகளிலும் ஏற்கனவே இருந்த தயாரிப்புகளை பின் தள்ளி முடி சூடிக் கொண்டது ஆப்பிள் நிறுவனம். மற்ற நிறுவனங்களின் பொருட்களை விட ‘தரத்தில் உயர்ந்த’ ஆப்பிள் பொருட்களின் சந்தை விலை கணிசமாக அதிகம். வழக்கமான mp3 பிளேயர் 1,000 ரூபாய்க்குள் கிடைத்தால் ஆப்பிள் ஐ-பாட் 3,000 ரூபாய்க்கு விற்கும், மற்ற தயாரிப்பாளர்களின் ஸ்மார்ட் தொலைபேசி 15,000 ரூபாய்க்கு விற்றால் அதற்கு இணையான ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி 30,000 ரூபாய்க்கு விற்கப்படும்.

அவற்றை வாங்குவதற்கு இலட்சக்கணக்கான பயனர்கள் போட்டி போடுவார்கள். ஆப்பிளின் புதிய பொருட்கள் வெளியாகும் நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.

2011-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு எக்ஸான் மொபைல் என்ற எண்ணெய் (பெட்ரோல்) நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி உலகத்திலேயே முதலிடத்தை எட்டிப் பிடித்தது. மொத்த வருமானத்தின் அடிப்படையிலும், லாபத்தின் அடிப்படையிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் உலகின் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது ஆப்பிள். போட்டியாளர்களான கூகுள், மைக்ரோசாப்டு இரண்டு நிறுவனங்களின் வருமானத்தை ஒன்று சேர்த்தாலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிற்கின்றது ஆப்பிள்.

ஆப்பிள் சாம்ராஜ்யம் உற்பத்தி செய்யும் பொருட்களின் பளபளப்பு அவற்றை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் காணப்படுகிறதா? சிறு சிறு விபரங்களிலும் அக்கறை காட்டும் ஸ்டீவ் ஜாப்சிஸ் ஆப்பிள் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் தனது ஆளுமையை, ‘உயர் தரத்துக்கான’ தேடலை செலுத்தினாரா?

அமெரிக்காவின் தேவதை பிசாசு ஆனது!

1990களில் போட்டியாளர்களின் பொருட்களைப் போல் இல்லாமல் ‘ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவை’ என்று மார் தட்டிக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக நகர்த்தப்பட்டு விட்டது. குறிப்பாக, சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தி பணியை செய்து வருகிறது.

‘பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் வளரும் போது, அவற்றின் சொந்தக்காரர்களான முதலாளிகள் கோடீஸ்வரர்களாகும் போது, நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்’ என்ற தாரம மந்திரத்தில் இயங்கும் அமெரிக்காவிலேயே அந்தக் கோட்பாடு செல்லாமல் போய் விட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பங்குச் சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே போன கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரமும் பொது மக்களும் வீடுகளை இழந்து, வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள்.  ‘அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. ஆகச் சிறந்த பொருளை உருவாக்கி சந்தைப்படுத்துவதுதான் எங்களது பணி’ என்கிறார்கள் ஆப்பிள் மேலாளர்கள்.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் உடைத்தெறிவதாக 1984-ல் விளம்பரம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று அது போன்ற பல பிக்பிரதர்களின் சங்கிலித் தொடர் உற்பத்தி முறையில்தான் பில்லியன் டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. (ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரிட்டிஷ் உளவுத் துறை கைக்கூலி எழுதிய ‘1984’ நாவலில் உருவகிக்கப்பட்ட பிக்பிரதர்கள் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகின்றன).

ஆப்பிள் நிறுவன வெற்றியின் ஊற்றுக்கண்

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதாஆப்பிள் நிறுவனத்தின் தளுக்காக, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதரின் திறமையால் நமது கைகளுக்கு வந்து சேரவில்லை. சீன அரசாங்கத்தின் வரிச் சலுகைகள், சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களின் இரத்த வியர்வை, உலகெங்கும் பரந்து விரிந்து நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வல்லாதிக்க பொருளாதார கொள்கைகள் இவற்றின் கூட்டுச் சேர்க்கையின் விளைவுகள்தான் ஆப்பிள் பொருட்கள்.

மேலே சொன்ன ஐ-போன் திரை மாற்றம் முடிவு செய்யப்பட்டு, கண்ணாடித் திரைகளை வெட்டி அனுப்பும் தொழிற்சாலை அடையாளம் காணப்பட்டது. கண்ணாடி திரை வெட்டி கொடுக்கும் வேலைக்காக விண்ணப்பிருந்த சீன தொழிற்சாலைக்கு ஆப்பிள் மேலாளர் போன போது, வேலை கிடைத்தால் பயன்படுத்துவதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சீன அரசாங்கம் முதலீட்டுக்கு அளித்த மானியம் இந்த கண்ணாடி வெட்டும் தொழிற்சாலைக்கும் கிடைத்திருந்தது. தொழிற்சாலையின் கிடங்கில் ஆப்பிளுக்குத் தேவையான இலவச கண்ணாடி மாதிரிகள் குவிக்கப்பட்டிருந்தன. பொறியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பணி புரிய தயார் செய்யப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் ஊழியர்கள் வேலைக்கு வரும்படியாக தொழிற்சாலைக்குள்ளாகவே தங்கும் அறைகள் கட்டப்பட்டிருந்தன.

அந்த தொழிற்சாலைக்கு கண்ணாடி திரைகள் வெட்டும் வேலை கிடைத்தது. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஒரு நள்ளிரவில் ஆப்பிள் பொருட்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நகரத்துக்கு வந்து சேர்ந்தன. மேலாளர்கள் தொழிற்சாலையின் தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எழுப்பினார்கள். அவசர அவசரமாக தத்தமது சீருடைக்குள் நுழைத்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பிஸ்கட்டும், ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அரை மணி நேரத்துக்குள் அவர்கள் ஐ-போன்களை பொருத்தி உருவாக்கும் அசெம்பிளி லைனில் அணிவகுத்தார்கள். ஐ-போனில் கண்ணாடி திரைகளை பொருத்தும் 12 மணி நேர ஷிப்டு ஆரம்பித்தது.

96 மணி நேரத்துக்குள் நாளைக்கு 10,000 ஐ-போன்கள் உற்பத்தி ஆரம்பித்து விட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் ஆப்பிள் 10 லட்சம் ஐ-போன்களை விற்றது. 2011 இறுதி வரை பாக்ஸ்கான் 20 கோடிக்கும் அதிகமான ஐ-போன்களை உற்பத்தி செய்து அனுப்பியிருக்கிறது.

உடைக்கப்படும் சீனத் தொழிலாளர்களின் முதுகுகள்

1. தேவைக்கேற்ப வாரத்துக்கு 7 நாட்கள் கூட வேலை வாங்கப்படுகிறார்கள் பாக்ஸ்கான் தொழிலாளர்கள். ஒரு தொழிலாளர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 83 மணி நேரம் ஓவர் டைம் செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்துக்கு 36 மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளர் ஓவர் டைம் வேலை செய்யக் கூடாது என்ற விதி முறையை கண்டு கொள்ளாமல் தொழிலாளர்களை சக்கையாக பிழிந்து ஐ-போனுக்கு மெருகூட்டப்படுகிறது.

ஓவர் டைம் வேலை என்பதை தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையாக பலர் பார்க்கிறார்கள். நம் ஊரிலும் தொழிலாளர்களும் ஆர்வமாக ஓவர் டைம் கேட்டு வேலை செய்கிறார்கள். 8 மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல்தான் ஓவர் டைம் செய்து தமது உடல்நலத்தை அழித்துக் கொள்கிறார்கள் தொழிலாளர்கள். வேலையில் தேயும் தொழிலாளர்களின் உடம்பையும் மனதையும் புதுப்பித்து மறு உற்பத்திக்கு தயார் செய்யத் தேவையான கூலியை மட்டும் கொடுத்து உபரி மதிப்பை சுரண்டுவதுதான் முதலாளித்துவம் என்பது பாரம்பரிய வரையறை. மறு உற்பத்திக்குக் கூட போதாமல் தொழிலாளர்களின் வாழ்க்கையை பறித்துக் கொள்கின்றது இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்
ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்

2. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது.

தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். நாளைக்கு 8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் நீண்ட போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி ஈட்டிய உரிமை. 8 மணி நேர ஷிப்டு, குறைந்த பட்ச ஊதியம், மனிதர்களுக்கு ஏற்ற பணிச் சூழல் என்ற அடிப்படை மனித உரிமைகள் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு நியாயமான பணி உரிமைகளை வழங்கினால் ஐ-போன் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்து விடும், அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுவதைக் கூடத் தாங்க முடியாத மெல்லிய மனம் படைத்த மனிதாபிமானியாகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

12 மணி நேர ஷிப்டுகள், ஓவர் டைம் வேலை என்று கணக்கு போட்டுப் பார்த்தால் தொழிலாளர்கள் பெரும்பான்மை நாட்களில் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. ஆப்பிள் லோகோவை ஐ-பேட் கருவியின் மீது பொறிக்கும் வேலை கைக்கருவியால் செய்யப்படுகிறது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். அந்த வேலையை மட்டுமே நாள் முழுவது செய்யும் பெண் தொழிலாளர், ஆப்பிள் ஐ-பேட் எப்படி இயங்குகிறது என்று இது வரை பார்த்ததில்லை.

ஆப்பிள்-தொழிலாளர்-குடியிருப்பு
ஆப்பிள் தொழிலாளர் குடியிருப்பு

15 மணி நேர மனதை மரக்கடிக்கும் இத்தகைய இயந்திர வேலைக்குப் பிறகு இளைப்பாறி, தூங்கி, புத்துணர்ச்சி பெறுவதற்கு ஐ-வரிசை பொருட்களின் உற்பத்தி முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கும் தங்கும் அறைகள் எந்த தரத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம். ரயில் பெட்டிகளில் தூங்கும் வசதி போன்று மூன்றடுக்காக அமைந்த படுக்கையில் தூக்கம், படுக்கையை ஒட்டிய பெட்டியில் பொருட்களை பூட்டி வைத்துக் கொள்ளும் வசதி என்று சிறு அறைகளில் 8 பேர் வரையிலும் பெரிய அறைகளில்  20 பேர் வரையிலும் தங்குகிறார்கள் சீனத் தொழிலாளர்கள்.

போரும் சமாதானமும்

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளராக அண்டர் கவர் வேலை செய்யப் போய் தனது அனுபவங்களை சீனப் பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். ‘இது ஒரு தொழிற்சாலையின் கதை இல்லை, ஒரு தலைமுறை சீன இளைஞர்களின் சோகக் கதை’ என்கிறார் அந்த இளம் பத்திரிகையாளர்.

இத்தகைய மன அழுத்தங்களின் வெளிப்பாடாக பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 17 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் ஊழியர்களை பிடிக்க தொழிற்சாலை நிர்வாகம் பாதுகாப்பு வலைகளை பொருத்தியிருக்கிறது. தொழிலாளர் தற்கொலை பற்றிய விபரங்கள் சீன ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அமெரிக்க பத்திரிகைகளிலும் வெளியான பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 900 யுவானாக இருந்த தொழிலாளர்களின் மாதச் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,200 யுவான் ஆகியிருக்கிறது.

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இதில் பார்க்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்காக மொட்டை மாடிக்குள் போகும் பெண் தொழிலாளரின் வீடியோ பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருக்கிறது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

சாவியையும் ஐ-போனையும் சேர்த்து பையில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் நுகர்வோரின் மனதில் கூட கீறல்கள் விழுந்து விடக் கூடாது என்று நுண்ணறிவுடன் செயல்பட்ட ஸ்டீவ் ஜாப் தலைமையிலான ஆப்பிள் நிறுவனத்துக்கு 17 உயிர்கள் பலி போன பிறகுதான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்கும் கவனம் வந்திருக்கிறது. அதுவும், எதிர்மறை பிரபலத்தால் தமது பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் குறைந்து அதன் மூலம் தான் வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு வீழ்ந்து விடக் கூடாதே என்ற தவிப்பினால்தான் பிச்சைக் காசை தூக்கி எறிந்து தமது இமேஜை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சரி, லாப வெறி பிடித்த முதலாளித்துவ நிறுவனம்தான் தொழிலாளர்களை கவனிப்பதில்லை. தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கம் அமைக்கலாமே, தமது உரிமைகளுக்குப் போராடலாமே’ என்று நினைத்தால், பாக்ஸ்கான் நிறுவனம் சீன அதிகார வர்க்கத்துடன் வைத்துள்ள கள்ளக் கூட்டுறவின் மூலம் அப்படி எதிர்த்து குரல் எழுப்ப முயலும் தொழிலாளர்களுக்கு 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

அவரவர் பிரச்சனை அவரவருக்கு

இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் கவலை, ‘உபரியாக வங்கியில் உறங்கும் 98 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி) கையிருப்பை என்ன செய்வது?’ என்பதுதான்!

அடுத்த முறை பளபளப்பான ஆப்பிள் பொருட்களின் விளம்பரத்தைப் பார்க்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற தீர்க்க தரிசியின் வாழ்க்கையை வியக்கும் போது, ஆப்பிள் பொருட்களைத் தடவித் தடவி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வெள்ளுடை வேந்தர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கும் போது சிதைக்கப்பட்டு வரும் சீனத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் நமது மனதில் தோன்ற வேண்டும். அதுதான் ‘நமக்கு சோறு போடும்’ இன்றைய முதலாளித்துவ அமைப்புக்கு நாம் செலுத்தும் சரியான காணிக்கையாக இருக்க முடியும்.

________________________________________

– அப்துல்

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. சொன்னதெல்லாம் சரி தான் ….மூன்று மாதத்திற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டதை விட்டு விட்டீர்கள்….மேலும் உங்களை போல் தான் நானும் ஆப்பிள் மேல் கோபமாக இருந்தேன்…இது சீன நாட்டின் தொழிலர் சட்டம் பற்றியது என்று என் நண்பன் சொன்னபோது அவனை திட்டினேன்…ஆனால் அதன் பிறகு ஆப்பிள் மன்னிப்பு கேட்டு அந்த நிலையை மாற்றியது.இப்போது மற்ற ஆலைகளை விட ஆப்பிள் நிறுவன ஆலையின் நிலை நல்ல முறையில் உள்ளது.அப்படியே சீன நாட்டின் சட்டங்களை பற்றியும் திட்ட்னால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்.

    • சீனாவுக்கு வினவு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறதா என்ன?
      மற்ற ஆலைகளை விட ஆப்பிள் நிறுவன ஆலையின் நிலை நல்ல முறையில் உள்ளது என்பதை எப்படி என்று விளக்குங்களேன்….

  2. இங்கே பிரச்சனை ‘கார்பரேட்’ ஆப்பிள் கிடையாது. ‘கம்யூனிச’ சீனா தான். அதிகமாக லாபம் சம்பாதிபதற்காக Foxconn செய்யும் அட்டூழியங்கள் இவை. Apple முடிந்த மட்டும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவே முற்படுகிறது. பார்க்க link: http://www.reuters.com/article/2012/03/29/us-apple-china-idUSBRE82S05X20120329

    Foxconn(manufacturer) மற்றும் Apple(Customer) பற்றி தெரியாத சாமானியனை கட்டுரை misguide செய்கிறது. எதோ ஆப்பிள்-இன் தொழிற்சாலை போல உருவகப்படுத்துகிரீர்கள்.
    We all know that ‘communists distort facts to prove their perspective’. அதை நீங்கள் நிரூபன படுத்தி விட்டீர்கள்.

    Steve Jobs is a great innovator. His managerial strategies are being taken up as case studies in B-schools.
    சம்மந்தமே இல்லாமல் அவரை taint செய்ய வேண்டாம்.

    ஜார்ஜ் ஆர்வெல் ஒரு தீர்கதரசி. கம்யூனிஸ்ட் நாடுகளில் என்ன நடக்கும் என்பதை அப்பவே சொல்லி விட்டார். சீனாவில் அது தான் நடக்கிறது. 🙂

    • ‘சில நிறுவனங்கள் கல் மனம் படைத்தவர்கள், மோசமான தரம், தொழிலாளர்களை பிழிந்து எடுப்பது என்று அடாவடி செய்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஆப்பிள் போன்ற உயர் தர முதலாளித்துவ நிறுவனம் போல செயல்பட ஆரம்பித்தால் பிரச்சனை எல்லாம் சரியாகி விடும்’ என்று சொல்லப்படுவது இந்தத் தகவல்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

      தனது நிறுவனத்துக்கு லாபம் சம்பாதிக்க நுகர்வோர் நலனை ஆழமாக சிந்திக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கொலைக்களங்களாக இயங்கி வருவதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் இன்றைய பொருளாதார உலகின் நிதர்சனம்.

      //இங்கே பிரச்சனை ‘கார்பரேட்’ ஆப்பிள் கிடையாது. ‘கம்யூனிச’ சீனா தான். அதிகமாக லாபம் சம்பாதிபதற்காக Foxconn செய்யும் அட்டூழியங்கள் இவை. Apple முடிந்த மட்டும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவே முற்படுகிறது. பார்க்க link: http://www.reuters.com/article/2012/03/29/us-apple-china-idUSBRE82S05X20120329

      Foxconn(manufacturer) மற்றும் Apple(Customer) பற்றி தெரியாத சாமானியனை கட்டுரை misguide செய்கிறது. எதோ ஆப்பிள்-இன் தொழிற்சாலை போல உருவகப்படுத்துகிரீர்கள்.//

      தொழிற்சாலை பாக்ஸ்கானைச் சேர்ந்தது என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

      கட்டுரையிலிருந்து
      //வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஒரு நள்ளிரவில் ஆப்பிள் பொருட்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நகரத்துக்கு வந்து சேர்ந்தன.//

      //Steve Jobs is a great innovator. His managerial strategies are being taken up as case studies in B-schools.
      சம்மந்தமே இல்லாமல் அவரை taint செய்ய வேண்டாம்.//

      great innovator என்றால் சந்தையில் கிடைக்கும் பொருட்களில் கூடுதல் வசதிகளைச் சேர்த்து கொள்ளை லாபம் அடிக்க வழி செய்வது மட்டும்தானா? ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி துறையில் அவரது innovation ஏன் வேலைக்கு ஆகவில்லை?

      கட்டுரையிலிருந்து

      ==ஆப்பிள் சாம்ராஜ்யம் உற்பத்தி செய்யும் பொருட்களின் பளபளப்பு அவற்றை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் காணப்படுகிறதா? சிறு சிறு விபரங்களிலும் அக்கறை காட்டும் ஸ்டீவ் ஜாப்சிஸ் ஆப்பிள் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் தனது ஆளுமையை, ‘உயர் தரத்துக்கான’ தேடலை செலுத்தினாரா?==

      ==தொழிலாளர்களுக்கு நியாயமான பணி உரிமைகளை வழங்கினால் ஐ-போன் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்து விடும், அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுவதைக் கூடத் தாங்க முடியாத மெல்லிய மனம் படைத்த மனிதாபிமானியாகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.==

      ==சாவியையும் ஐ-போனையும் சேர்த்து பையில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் நுகர்வோரின் மனதில் கூட கீறல்கள் விழுந்து விடக் கூடாது என்று நுண்ணறிவுடன் செயல்பட்ட ஸ்டீவ் ஜாப் தலைமையிலான ஆப்பிள் நிறுவனத்துக்கு 17 உயிர்கள் பலி போன பிறகுதான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்கும் கவனம் வந்திருக்கிறது. அதுவும், எதிர்மறை பிரபலத்தால் தமது பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் குறைந்து அதன் மூலம் தான் வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு வீழ்ந்து விடக் கூடாதே என்ற தவிப்பினால்தான் பிச்சைக் காசை தூக்கி எறிந்து தமது இமேஜை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.==

    • பாஸ் நீங்க இப்படி சொன்னதால் உங்களை காவி தீவிரவாதி என அழைத்தாலும் அழைப்பர்!

    • அய்யா நாரயணன் மற்றும் முகமது அலி,இனி சீனா = கம்யுனிஸம் என வரபோகிறவர்களுக்கும்

      சீனா கம்யுனிஸ நாடில்லை ஒரு முதலாளித்துவ நாடு. இதே வினவில் பல கட்டுரைகள் எழுதபட்டிருகின்றன. இடது பக்கத்தில் போலி கம்யுனிஸம் எனும் தலைபின் கீழ் உள்ள கட்டுரைகளை படிக்கவும்.

  3. எனக்கு ஒரு சந்தேகம்!கணினி மற்றும் மென்பொருள் என்பதே ஒரு பன்னாட்டு மொதலாளிகளின் ஒரு தயாரிப்புதானே?மொதலாளிதுவத்தை எதிர்க்கும் வினவு இதை எப்படி பயன்படுத்துகிறது?

    • இதற்க்கு இதே வினவுஇல் பலர் பல முறை பதில் சொல்லியாயிற்று. மறுபடியும் மொதல்ல இருந்து.

      ரவி, கணிணி மற்றும் மென்பொருட்கள், இன்னும் பிற இணைய சேவைகள் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் மக்களாள் உழைத்து உருவாக்கபடுகிறது. ஆனால் அவர்களும் சுரண்ட தான் படுகிறார்கள். இன்னொரு பக்கம் கூகுள் முதல் லினக்ஸ் வரை ஓபன் ஸ்ரோஸ் மற்றும் க்ரவுட் ஸ்ரோஸிங்க் வந்து பல நாட்டு மக்களால் அந்த மென்பொருட்கள் மேம்படுத்தபடுகிறன.

      நீங்கள் சொல்லும் கணிணி, மென்பொருள், கணிணி வன் பொருட்கள் எல்லாம் மக்களுக்கு சொந்தமே ஒழிய தனிபட்ட முதலாளிக்கு அல்ல..

      • எனக்கு தெரிந்து ஆப்பிள் ப்ராடக்டுகளை செய்வது மிசிந்தானே தவிர தொழிலாலி அல்ல!

    • தொழிலாளியை சாகடித்து அவன் உழைப்பை மட்டும் அனுபவிக்கிறீங்களே அதுமாதிரிதான்…..

  4. ஸ்டீவை நாலு பேர் புகழ்ந்ததும் வினவிற்க்குப் பொருக்காது..ரஜினியை ரசிச்சா அவனெலாம் அறிவற்றவர்கல் என்று வினவு சொல்லும்…ஸ்டீவை விமர்சிக்கிறேன் என்று உமது கம்யூனிச சீனாவிற்க்கெ சேம் சைடு கோல் ஆயிறுச்சா?

    • அது போலி கம்யூனிசம்னு பல தடவ கட்டுரை எலுதிட்டாங்க…சீனா,ரசியா போன்ற நாடுகள் முதலாளித்துவ நாடுகள மாறிவிட்டதனல் தான் இது போன்ற சட்ட மீறல்கள் நடக்கின்றன. உடனே கம்யூனிசம் தோற்றுவிட்டது சில முட்டா பயலுவ சொல்ரான்ங்க…அவங்கல்லாம் கம்யூனிசத்த முலுசா படிக்கனும்….

    • ஸ்டீவை விமர்சிக்கிறேன் என்று உமது கம்யூனிச சீனாவிற்க்கெ சேம் சைடு கோல் ஆயிறுச்சா?
      நீங்க மட்டும்தான் இப்படி சொல்றீங்க.. வினவு சீனாவுக்கு கொ.ப.செ. வேலை பார்த்து என்று நிருபியுங்கள்.. வழக்கமான அதே புளுகை புளுகாதீர்கள்…
      ரஜினியை ரசிப்பவர்கள் “அறிவாளிகள்தான்” பின்னே பையாவா கொக்கா அவரு சங்கரனுக்கே பெல் அடிச்சவராச்சே…….

  5. Mister சிங்கபூறான்,
    சீனாவை தாக்கி வினவில் ஒரு கட்டுரை காட்டுங்க சார் ! நான் தேடி பாத்துட்டேன். கிடைக்கவில்லை !!

    மாறாக சீனாவை ஆதரித்து ரெண்டு இருக்கு:
    https://www.vinavu.com/2012/01/18/china-encircled/
    https://www.vinavu.com/2011/04/27/liu-xiaobo/

    அப்புறம் சீனா கம்யூனிஸ்ட் நாடு இல்லையா! சரி சந்தோசம்!!

    கம்யூனிஸ்ட் நாடா இருந்து நல்ல நிலைமைல இருக்கற ஒரு ரெண்டு மூணு நாடு பெயர் சொல்லுங்க பாப்போம்.:)

    • //கம்யூனிஸ்ட் நாடா இருந்து நல்ல நிலைமைல இருக்கற ஒரு ரெண்டு மூணு நாடு பெயர் சொல்லுங்க பாப்போம்.:)// முதலாளித்துவ நாடா இருந்து நல்லா இருக்குற ஒரேயொரு நாடு சொல்லுங்க. உலகம் முழுவதும் ஏன் மக்கள் கேப்பிடலிசம் ஒழிகன்னு போராடுறாங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

      • கேப்பிடலிசம் ஒழிகன்னு போராடுறாங்கன்னு///
        .
        .
        அதற்கு மாற்றாக அவர்கள் இன்னா தத்துவத்தை முன்மொழிகிரார்கள் எனவும் கூறினால் நல்லா இருக்கும்!

    • நாராயணா முதல்ல அந்த ரெண்டு கட்டுரையையும் படிச்சுட்டு எழுதுங்கையா…. வர வர இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல…

  6. பாக்ஸ்கான் மட்டுமல்ல, சீனாவில் நிறைய கம்பெனிகளில் சூசைட், மெண்டல் டார்ச்சர் போன்ற கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளன… ஹோவெய் (HUAWEI ) கம்பெனியில் நடக்காத சூசைடா ?

    சீனாவில் ஆப்பிளும், மைக்ரோசாப்டும் தான் அதிக சம்பளம் கொடுக்கும் மறைமுக முதலாளிகளாக இருக்கிறார்கள்… இந்த கம்பெனிகளை விட அதிக உழைப்பை சுரண்டும் பிற சீன முதலாளிகள் கொடுக்கும் சம்பளம் சொற்பமே…

    சீனாவின் மீது தவறை வைத்து கொண்டு ஆப்பிளை குறை சொல்லும் உங்கள் மனப்பாங்கு பார்க்கையில்
    மாமியார் உடைத்தால் மண்குடம்,
    மருமகள் உடைத்தால் பொன்குடம்
    என்ற பழைய (கம்யுனிசம் கலக்காத) தமிழ் நாட்டின் பழமொழி நினைவுக்கு வருகிறது…

    • \\உங்கள் ஐ போனில் இரத்தம் வழிகிறதா?\\
      வினவு வாசகர்களை நோக்கிய இந்த கேள்வியை அவமானமாக வாசகர்கள் கருதவேண்டும்… வினவின் வாசகர்கள் முதலாளித்துவ வியாபாரியின் சொகுசு ஐ-போனை பயன்படுத்தும் சுகவாசிகள் அல்லவே… யாரை பார்த்து கேட்கிறீர்கள் இந்த கேள்வியை..

      \\சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது\\

      கூலி செலவு அசெம்பிள் செய்ய மட்டுமே.. உற்பத்தியின் செலவு அல்ல… ஐ-போனின் மேலே உள்ள கண்ணாடி துண்டுக்கு 300 ரூபாய் வழங்கல் நியாயமே…

      வெறும் பார்ட்ஸ் அசெம்பிள் செய்வதையும், ஐ-போன் உற்பத்தியையும் குழப்பி கொள்ளக்கூடாது… ஒரு மோட்டார் பைக் அசெம்பிள் செய்ய சுமார் நூறு ரூபாய் தான் ஆகிறது ஆனால் அந்த பைக் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது – என்ற பழைய மொந்தையில் புதிய கள் தான் இந்த ஐ-போன் விலை குறித்த மதிப்பீடு…

      ஐ-போன் ஆப்பரேடிங் சிஸ்டம் சாப்ட்வேர் , வெர்சன் மெயன்ட்டனன்ஸ், ஆன்லைன் சப்போர்ட், வாரண்டி, ரீப்ளேஸ்மன்ட்/ரீபேபரிகேசன் செலவுகள், ஆப்பிள் ஸ்டோர்ஸ், ஐ-டுன்ஸ், அப்ளிகேசன்களுக்கான ஐ-போன் கிலௌட் என்ற பல சர்வீஸ்களும் சேர்த்தது தான் ஐ-போனின் விலை…

      அந்த விலையும் கூட ஏடி அண்ட் டி, வேரிசான் போன்ற தொலைபேசி சேவைதாரர்களால் நிர்ணயிக்கப்பட்டு, மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு, இன்ஸ்டால்மெண்டில் தான் ஐ போனை வந்தடைகிறது…

      இவ்வுளவு விலையையும் மீறி ஐ-போன் இலாபம் ஈட்டுகிறது என்றால், அது தான் “குவாலிட்டி ஆப் சர்வீஸ்… ”
      ஆயிரம் தோண்டினாலும் உங்களால் ஐ-போனில் அதன் தரத்தில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாது…

      கோடிக்கணக்கான ஐ-போனில் ஏதோ ஒன்றின் கண்ணாடியை வெட்டிய சீனாக்காரன் தமது நாட்டின் கம்யுனிசத்தை நொந்தபடி கோழையாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஆப்பிள் தான் பொறுப்பு, சீனாவுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கிச்சு கிச்சு மூட்டத்தான் முடியும்…

      • //வினவின் வாசகர்கள் முதலாளித்துவ வியாபாரியின் சொகுசு ஐ-போனை பயன்படுத்தும் சுகவாசிகள் அல்லவே… யாரை பார்த்து கேட்கிறீர்கள் இந்த கேள்வியை..//

        இங்க முதலாளித்துவ மாமேதைகள் பலர் உள்ளார்கள் அவர்களை நோக்கி தான்.

        //கூலி செலவு அசெம்பிள் செய்ய மட்டுமே.. உற்பத்தியின் செலவு அல்ல… ஐ-போனின் மேலே உள்ள கண்ணாடி துண்டுக்கு 300 ரூபாய் வழங்கல் நியாயமே…//

        அசம்பில் என்பதே உற்பத்தியின் ஒரு அங்கம் தான். ஒரு பொருளுக்கு வடிவம் கொடுத்து முலுமையாக வெளியே கொண்டு வருவது தொழிற்சாலையில் தான் அப்படி தயாராகும் பொருளுக்கு உங்கள் முதலாளித்துவத்தில் “பிரொடக்சன் காஸ்ட்” என்று தான் தனிக்கையில் வகைப் படுத்துகின்றீர்கள். ஆகையால் அசம்பில் செலவு வேறு உற்பத்தி செலவு வேறு என்று புது பொருளாதார தனிக்கை கோட்பாட்டை வகுக்காதீர்கள்.

        //வெறும் பார்ட்ஸ் அசெம்பிள் செய்வதையும், ஐ-போன் உற்பத்தியையும் குழப்பி கொள்ளக்கூடாது… ஒரு மோட்டார் பைக் அசெம்பிள் செய்ய சுமார் நூறு ரூபாய் தான் ஆகிறது ஆனால் அந்த பைக் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது – என்ற பழைய மொந்தையில் புதிய கள் தான் இந்த ஐ-போன் விலை குறித்த மதிப்பீடு…//

        ஆமாம் ஐ-போன் உற்பத்தி என்பது விண்னில் ராக்கட்டை அனுப்பவது போல அதை உலகில் எந்த பொருள் உற்பத்தியுடனும் சேர்த்து பார்க்க முடியாது. ஏன் என்றால் ஐ-போன் உற்பத்தியில் அசம்பில் என்பதே உற்பத்தியின் ஒரு அங்கம் கிடையாதே, ஆப்பிள் எப்படி ஐ-போன் ஒரு தனித்துவம் பெற்ற அலைபேசி என்று மார் தட்டிக் கொள்கிறதோ அது போல பொருளாதார மற்றும் தனிக்கை கோட்ப்பாட்டில் ஆப்பிளின் ஐ-போன் ஒரு தனித்துவம் பெற்றது.

        ஆனால் ஏனோ தொழிலாளிகளை சுரண்டுவதில் மட்டும் ஆப்பிள் “புதிய மொந்தையில் பழைய கள்ளையே” பயன்படுத்துகிறது

        //ஐ-போன் ஆப்பரேடிங் சிஸ்டம் சாப்ட்வேர் , வெர்சன் மெயன்ட்டனன்ஸ், ஆன்லைன் சப்போர்ட், வாரண்டி, ரீப்ளேஸ்மன்ட்/ரீபேபரிகேசன் செலவுகள், ஆப்பிள் ஸ்டோர்ஸ், ஐ-டுன்ஸ், அப்ளிகேசன்களுக்கான ஐ-போன் கிலௌட் என்ற பல சர்வீஸ்களும் சேர்த்தது தான் ஐ-போனின் விலை…//

        இதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்:

        1.ஐ-போன் ஆப்பரேடிங் சிஸ்டம் சாப்ட்வேர் -இது ஆப்பிளே தயாரிப்பது. சரி இதற்கு விலை நிற்னையம் செய்வது நியாம் தான்.
        2. வெர்சன் மெயன்ட்டனன்ஸ் – இது ஒரு மொல்லமாரித் தனம் அதாவது ஒரு ஆப்பிள் 3ஜி ஐ-போனை எந்த மென்பொருள் கொண்டும் 4ஜியாக மாரற்ற முடியாதப் படிதான உறுவாக்க பட்டுள்ளது. மேலும் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது ஒரு டெக்னாலஜி கொண்டு செய்து அதை நுகர்வோருக்கு விற்றுவிட்டு பிறகு அதே டெக்னாலஜியை மேலும் பன்படுத்தி வெர்சன் மெயன்ட்டனன்ஸ் என்று சொல்லி நுகர்வோரிடம் பணம் சுருட்டப் படுகிறது இதற்கு பெயர் வழிபரிக் கொல்லை

        3. வாரண்டி, ரீப்ளேஸ்மன்ட்/ரீபேபரிகேசன் செலவுகள் -வாரண்டி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உள்ளே அந்த பொருளின் வகை செய்யப்ட்டுள்ள சில பாகங்கள் பழுதடைந்தால் நுகர்வோருக்கு எந்த செலவும் இல்லாமல் உற்பத்தியாலர் இஅலவசமாக மற்றி கொடுப்பார் என்பதே அர்த்தம் ஆனால் வாரண்டி என்று சொல்லி அதற்கும் விலை வசுல் செய்து பின்பு அதையே இலவசமாக தருவது போல் செய்வது தான் உண்மை உழைப்பு உயர்வான ஸ்டிவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம். இதே தான் ரீப்ளேஸ்மன்ட்/ரீபேபரிகேசன் செலவுகளுக்கான உண்மையான நுகர்வோர் சேவை.

        4. ஆப்பிள் ஸ்டோர்ஸ் – இது சந்தைப் படுத்துதல். ஆப்பிள் ஸ்டோரை ஆரம்பிடிபதற்கு பலதரப் பட்ட ஆய்வுகளுக்கு பிறகே ஒருவருக்கு வழங்க படுகிறது. ஆப்பிள் ஸ்டோரை ஆரம்பிக்கும் அந்த நபர் தான் முதல்லிட்டு ஆப்பிளின் பொருள்கை வாங்கி விற்க முடியும். அப்படி இருக்கும் பொழுது ஆப்பிள் ஸ்டோர்களுக்கு ஏன் நுகர்வோர் விலை கொடுக்க வேண்டும்?

        இது போல பல காரணங்கள் சொல்லி நுகர்வோரிடம் இருந்து பணம் வசுல் செய்து ஆப்பிள் தனது கஜானாவை பெருக்கிக் கொள்கிறது.

        //அந்த விலையும் கூட ஏடி அண்ட் டி, வேரிசான் போன்ற தொலைபேசி சேவைதாரர்களால் நிர்ணயிக்கப்பட்டு, மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு, இன்ஸ்டால்மெண்டில் தான் ஐ போனை வந்தடைகிறது…//

        என்னமோ ஆப்பிளை எடி ஆண்டு டி மற்றும் வேரிசான் ஒன்னும் தெறியாமல் எமாத்துவது போல் சித்தரிப்பது ஏனோ? கூட்டு கலவானி பயலுக இவனுங்க. எடி ஆண்டு டி யும் வேரிசானும் தன் ஐ-போன் விலை உயர்வாக வைக்க காரணமாம் இல்லாட்டி ஸ்டிவ் ஜாப்ஸ் ஆப்பிள் போனை ரூபாய்க்கு பத்து என்ற விலையில் கொடுத்துயிருப்பாராம். அதை கூட அவர் கட்டுவதற்கு சிரமப் படுவதால் தான் இ-போன் ட்கவனை முறையில் வருகிறது என்று அண்டபுலுகு ஆகாச புலுகு புலுகும் உங்களை போன்றோர் இருக்கும் வரை முதலாளியத்துவம் வாழும்.

        //இவ்வுளவு விலையையும் மீறி ஐ-போன் இலாபம் ஈட்டுகிறது என்றால், அது தான் “குவாலிட்டி ஆப் சர்வீஸ்… ”
        ஆயிரம் தோண்டினாலும் உங்களால் ஐ-போனில் அதன் தரத்தில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாது…//

        இவ்வளவு மொல்லமாரித்தனம் செய்ட்க பிறகும் ஆப்பிள் லாபம் ஈடுவது என்றால் அது “குவாலிட்டி ஆப்பு திருட்டு”.

        ஆயிரம் தோண்டினாலும் உங்களால் ஐ-போனில் அதன் தரத்தில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாது ஆனால் அதை உற்பத்தி செய்ய பாடுபட்ட தொழிலாளியை தோண்ட தோண்ட சவமாக வந்துக் கொண்டே இருப்பான்.

        //கோடிக்கணக்கான ஐ-போனில் ஏதோ ஒன்றின் கண்ணாடியை வெட்டிய சீனாக்காரன் தமது நாட்டின் கம்யுனிசத்தை நொந்தபடி கோழையாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஆப்பிள் தான் பொறுப்பு, சீனாவுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கிச்சு கிச்சு மூட்டத்தான் முடியும்…//

        இது தான் முதலாளித்துவத்தின் டங்கு பலி வந்துவிட்டால் இதற்கு நான் பொறுப்பில்லை அவன் தான் என்று கைகாட்டி கூட்டி கொடுத்து போய்விடுவார்கள். உதாரனத்துக்கு ஒபமா அவங்க நாட்டு மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதை காரணமாக சொல்லுவது அவுட் சோர்ஸ்சிங். ஆனா அதற்கு மூல காரணமே அமெரிக்க அரசாங்கம் தான் என்று ஒப்பு கொள்ள மறுக்கிறார் இதே மனப் பான்மை தான் இங்கு உள்ள பலருக்கும்.

        • இந்த தற்கொலைகளுக்கு சீன தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், சீன அரசின் அயலுறவு கொள்கைகள் ஆகியவற்றின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்தவும்…

          பாக்ஸ்கான் லேட்டஸ்ட், இதற்கு முன்னர் அந்நிய தலையீடு இல்லாத பல சீன கம்பெனிகளில் தற்கொலைகள் நடந்துள்ளன… அவற்றுக்கெல்லாம் யார் காரணம்… தொழிலாளர் தற்கொலை என்பது ஒரு வழக்கமான ஒன்றுதான் என்ற நிலைக்கு சீன தள்ளப்பட்டதற்கு காரணம் யார் ?

      • ஆயிரம் தோண்டினாலும் உங்களால் ஐ-போனில் அதன் தரத்தில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாது…/// Sir apparam yenna vengathuku service center runu vechi irukanga??

  7. வெள்ளுடை வேந்தர்களுக்கு உழைப்பின் மேன்மையை சிந்திக்க முடியாத அளவுக்கு அவர்களின் மூளை ‘பந்தா’க்களால் மழுங்கடிக்க பட்டிருக்கு.
    நேற்று Blackberry . இன்று iPhone , நாளை Sony என எதிலுமே திருப்தி அடையாத ஒரு நோய் அவர்களை தொற்றி கொண்டிருகிறது.

  8. ஆப்பிளின் போலி தேச பக்தி, போலி சமுதாய பற்று மற்றும் போலி தொழிலார்களின் நலன் சொல்லும் சுட்டிகள்.

    //1990களில் போட்டியாளர்களின் பொருட்களைப் போல் இல்லாமல் ‘ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவை’ என்று மார் தட்டிக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக நகர்த்தப்பட்டு விட்டது. //

    தனது நாட்டு தொழிலார்களுக்கு அதிக கூலிக் கொடுத்தால் தனது லாபத்தின் பங்கு குரைந்து விடும் என்பதால் “ஒரு தாய்வான் நிறுவனத்தின் மூலமாக சீனாவில்” தனது சாதனத்தை உற்பத்திச் செய்யும் ஆப்பிள் சீனாவின் தொழிலார்களுக்கு உதவி கரம் நீட்டுகிறது என்று கொடிப் பிடிக்கும் முதலாலியத்துவ மாமேதைகலே முதலில் உங்கள் முதலாலிகளின் போலி தேசப் பகதியை அறிந்துக் கொள்ளுங்கள்.

    //ஆப்பிள் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பங்குச் சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே போன கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரமும் பொது மக்களும் வீடுகளை இழந்து, வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். ‘அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. ஆகச் சிறந்த பொருளை உருவாக்கி சந்தைப்படுத்துவதுதான் எங்களது பணி’ என்கிறார்கள் ஆப்பிள் மேலாளர்கள்.//

    தனது நாட்டு அடித்தட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்கள் நோக்கம் லாபம் தான் என்று கல் மனதுக் கொண்டுயிருக்கும் உங்கள் முதலாலியத்துவத்தின் போலி சமுக பற்றிர்க்கு இது ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு. தனது நாட்டு தொழிலார்கள் பத்திய கவலைப் படாத இவர்கள் சீனாவின் தொழிலர்களின் நலனுக்கு கொடிப் பிடித்தார்கலாம்.

    //சுரண்டலையும் ஆதிக்கத்தையும் உடைத்தெறிவதாக 1984-ல் விளம்பரம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று அது போன்ற பல பிக்பிரதர்களின் சங்கிலித் தொடர் உற்பத்தி முறையில்தான் பில்லியன் டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது//

    இது அல்லவா நேர்மையின் எடுத்துக்காட்டு. லாபம் பார்ப்பதற்கு முன்பு ஒரு பேச்சு லாபம் ஈட்டியபின் ஒரு நடத்தை. அவனுங்க தொழிலாளிகளுக்கு நன்மை செய்வானுங்கலாம்.

    //சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது.//

    உழைத்து உழைத்து ஓடா போனவனுக்கு 300, அந்த உழைப்பின் மூலமாக வந்த லாபத்தை அனுபவிக்கும் முதலாலிக்கு 17000. தொழிலாளி சுரண்டலுக்கு அருமையான எடுத்துக்காட்டு.

    //மன அழுத்தங்களின் வெளிப்பாடாக பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 17 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்//

    ஆப்பிள் மன்னிப்பு கேட்டதால் அந்த 17 உயிர்களை மீண்டும் வந்துவிடுமா? லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டு இயங்கும் முதலாலியதுவத்தில் உயிர்களுக்கு மதிப்புக் கிடையாது என்பது நிசமே.

    போலி முதலாலியத்துவத்தில் சிக்கி தனிமனிதர் மேம்பட்டிற்காக மானத்தையே அடகுவைக்கும் நீங்கள் கமியூனிசம் தோல்வியுற்றது என்று கூக்குரல் போட தகுதியற்றவர்கள்.

    • ஐயோ பாவம்!வினாவை அடியாள் ரேஞ்சுக்கு கருத ஆரம்பித்து விட்டனர் மக்கள்!நீங்கெல்லாம் ஆட்சியை புடிச்சு…..உஸ்ஸ்…..கண்ண கட்டுது!

      • அதுசரி சட்டசபை வரை கேப் விடாம “சமூக சேவ” செய்தால் கண்ண கட்டத்தான் செய்யும்…..

  9. ஐயா தஙகளுடைய சீனாவை பற்றி எழுதியது சரி, ஆனால் இதைவிட மோசமாக அடிமைத்தனத்தையே கொள்கையாக கொண்டுள்ள அரபுநாடுகளை பற்றி என்றுமே எழுதுவதேயில்லையே. இஸ்லாமியநாடுகளின் கொள்கை பற்றி விமர்சிப்பதில் பயமா?

    விக்ரம் பாலா

    • பாலா ஏன்யா படுத்தற, பதிவுக்கு கீழே தொடர்புடைய பதிவுகள் தலைப்புக்கு கீழே நீங்க கேட்டது எல்லாம் விலாவாரியா இருக்கே அதை பாக்காமயா இங்கண வந்து பிண்ணூட்டறீங்க… பையாகிட்ட யானைப்பால் குடிச்சீங்களோ?

      முடியல

  10. தப்பு செய்யும் பொழுது சீனாவை க்ழட்டி வுட்டுபுட்டா யெப்படி
    சீனாவில் 12 மணிநேரம் வேலை யென்பது இன்றும் இருக்கும் ப்ழக்கம் .
    போரட்டம் /த்ர்ணா யென்பது இந்தியவில் மட்டும் தான்.
    தஙகும் விடுதியில் ஒரு கட்டில் கூட ச்கரிங் பசிச்( 12 மணிநெரம் ).

    சீனா சிவப்பு முதலாளி.

    யெப்படிநம்ம மோதி சிற்ந்தநிர்வகம் செய்யும் CM அது மாதிரி சீனா சிவப்பு முதலாளி.

    சும்மா வக்காலத்து வாங்க வேண்டியதில்லை

  11. சீனா போன்ற மொஐஸ அரசால் இது போன்ற நிகழுவுகள் நடக்கின்றன. போக்ஸ்கோன்ன் போன்ற நிறுவனங்கள் மொஐஸ சீனா அரசின் கொள்கை படி மொத்த நாட்டின் முன்னேற்றத்தையும் கம்யூனிஸ்ட் பார்ட்டி முன்னேற்றத்தையும் மட்டுமே கவனிக்கும். தனி மனிதனுக்கு மக்களாட்சியில் கிடைக்கும் மதிப்பை விட மொஐஸ நாட்டில் கிடைக்கும் மதிப்பு மிக குறைவு. இதன் காரணமாகவே போக்ஸ்கோன்னில் இந்த கோளாறுகள். இததற்கு ஆப்பிள் நிறுவனமும் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கய காரணம் மொஐஸ கொள்கைகளே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க