மீனவர் சகாயத்தின் உடல் ஜெயசேகர் மருத்துவமனையிலிருந்து, நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. நேற்று முன் தினம் (14.9.2012) மதியம் அவர் மரணமடைந்ததாக ஜெயசேகர் மருத்துவமனை அறிவித்தது. அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து ஜெயசேகர் மருத்துவமனை கொடுத்த அறிக்கையைப் பெற்று, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
Death diagnosis கீழ்வருமாறு:
CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA
ANEURYSM RUPTURE
ACCELERATED HYPERTENSION
BRAIN STEM DYSFUNCTION
RESPIRATORE FAILURE – INTUBATED AND VENTILATED
Patient declated dead at 1 pm on 14-9-2012
வெளிக்காயம் எதுவும் இல்லை NO EXTERNAL INJURY என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயத்துக்கு சர்க்கரை நோயோ உயர் ரத்த அழுத்தமோ கிடையாது என்றும் இவ்வறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது.
நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியமான ஒரு உழைப்பாளி, அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கு பிணவறை மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் அவரது உடலே சாட்சி.
வேண்டுமென்றே தாழப்பறந்த கடற்படை விமானத்திலிருந்து திடீரென்று அவர் மீது இறங்கிய ஒலியின் அதிர்ச்சிதான் அவரைக் கொன்றிருக்கிறது. அது விமானத்தின் ஒலியா, அல்லது தடயமில்லாமல் மக்களை தாக்குவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் ஒலி ஆயுதமா என்பது ஆய்வுக்கு உரியது. திடீரென்று ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தின் (ACCELERATED HYPERTENSION) காரணமாக, மூளை மற்றும் இதய ரத்தக்குழாய்கள் வெடித்து நுரையீரலும் செயலிழந்து அவர் இறந்திருக்கிறார்.
அன்றைய போராட்டத்தில் மக்களுடன் சேர்ந்த கடலில் நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள், தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் விமானம் பறந்தது என்று கூறுகிறார்கள். இது துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடிய தாக்குதல்.
சென்னையில் தில்ஷான் என்ற சிறுவனைகச் சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி ராமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூடு என்பது ஆத்திரம் கொண்ட ஒரு தனிப்பட்ட அதிகாரியின் குற்றம். இடிந்த கரையில் நடந்திருப்பது வேறு. இது கண்ணீர்ப் புகை, தடியடி என்பனவற்றைப் போல, ஒரு மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசுதிட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை.
எனவே, இதற்குப் பொறுப்பான போல கடற்படை அதிகாரிகள் மீது கொலைக் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சகாயத்தின் மனைவி கோரியிருக்கிறார். இக் கோரிக்கையை முன்வைத்து ராசாக்காமங்கலம் துறை, புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்களும் ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் நாகர் கோயில் மருத்துவமனையின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சகாயத்தின் மரணம் என்பது தெரிந்தே செய்யப்பட்ட கொலை. இதற்கு மத்திய மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். விமானங்கள், கடற்படைப் படகுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், போலீசு படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெறுவதற்கும், 144 தடை உத்தரவை நீக்குவதற்கும், எல்லா போலீசு அத்துமீறல்கள் மீதும் நடவடிக்கை கோரியும் நாம் போராட வேண்டும்.
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
please publish the information all about him. otherwise media will tell as he may be a spectator.the shameless media.we ask them only one question. why Karla avoid this scheme.
இது கூடங்குளம் மக்கள் மீது இந்திய அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம்.
இது ராஜபட்சேவின் கொலைக் குற்றத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல.
முடிந்தளவுக்கு கூடன்குள மக்கள் போராட்டத்தையும்,அரசின் அடக்குமுறைகளையும் காணொளி செய்திகளாய் தரும்பச்சத்தில் ஒட்டுமொத்த மக்களின் அமோக ஆதரவைப்பெறலாம்.
//சென்னையில் தில்ஷான் என்ற சிறுவனைகச் சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி ராமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூடு என்பது ஆத்திரம் கொண்ட ஒரு தனிப்பட்ட அதிகாரியின் குற்றம்//
அப்ப ஏங்க அந்த கொலையை பத்தி எழுதும் போது ‘இந்திய ராணுவம் செய்த கொலை’னு எழுதனீங்க?
தோழர்களே….
மீண்டும் கூறுகிறேன்… எதிரி விமானங்கள் தாழ்வாக பறந்தால்…
வியட்னாமியர்கள் போல் நாமும் கல்லால் தாக்குதல் தொடுப்போம்..
அது ஒன்றே தீர்வு.
கல்லடிக்கி தப்பிய விமானம் எதுவும் இல்லை.
அது விமான எதிர்ப்பில் மிக முக்கிய அம்சம்.
கவனத்தில் கொள்ளுவோம்.
\\
Death diagnosis கீழ்வருமாறு:
CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA
ANEURYSM RUPTURE
ACCELERATED HYPERTENSION
BRAIN STEM DYSFUNCTION
RESPIRATORE FAILURE – INTUBATED AND VENTILATED
Patient declated dead at 1 pm on 14-9-2012
//
the international death certificate devised by WHO is divided into 2 parts. First part is about (1) the immediate cause of death, and (2) the antecedent cause leading on to the cause of death.
second part deals with other comorbid conditions the patient may be having prior to it which may contribute to but not be an immediate or direct cause of death.
Like in this certificate 1a. CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA
cva = cerebrovascular accident.
1b. ruptured aneurysm (site of aneurysm not mentioned)
1b. acc HT
2. BRAIN STEM DYSFUNCTION
RESPIRATORE FAILURE – INTUBATED AND VENTILATED
brain stem dysfunction itself may cause death. respiratory failure is an effect of the rupture of aneurysm and CVA, not an independent comorbidity.
the time or estimated time for each to progress to the next condition culminating in the death is not mentioned. (it may not be always possible to estimate but as he was probably admitted soon after the insult it is fairly measurable.
the diagnosis is fairly clear.
he died of aneurysmal rupture and not of any “sonic blast”, or an unidentifiable weapon.
but the dastardly act of the navy should be condemned in the strongest terms. Only people’s unity can stop the impending doom, overhanging our heads, of the capitalist greediness of multinationals and the ruthless attitude of jaya and m.m.singh.
Well said Mr. Periyavan.