Wednesday, September 28, 2022
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் "அவன நான் சுட்டுத் தள்ளணும்...'' - நேரடி ரிப்போர்ட்!

“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!

-

எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்..

இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சென்னை சிறுவன் தில்சன்
இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சிறுவன் தில்சன்

அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும்.

அது தில்சன் பிறந்த வீடு. அது தில்சன் தவழ்ந்த இடம். அது தில்சன் நடைபயில பயன்பட்ட நாற்காலி. அது தில்சன் தத்தித் தத்தி நடந்த சுவர். அது தில்சன் ஓடியாடி விளையாடிய அறை. அது தில்சன் உணவருந்திய தரை. அது தில்சன் வீட்டுப் பாடங்களை எழுதிய இடம்.

இந்த வீட்டில்தான் தில்சன் வாய்விட்டு சிரித்தான். இதே வீட்டில்தான் ஐம்பது பைசா சாக்லெட்டுக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

கைவிரல்களையே துப்பாக்கியாக்கி ‘டுமீல்… டுமீல்…’ என சுட்டு அவன் திருடன் போலீஸ் விளையாடிய இடமும் அதுதான். அக்கடா என்று படுத்து உறங்கியதும் அதே இடம்தான்.

பள்ளித் தேர்வுக்காக அவன் படித்ததும் அந்த இடம்தான். வீட்டுச் சூழ்நிலையை உணர்ந்து பனிரெண்டு வயதில் அவன் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும் அதே இடத்திலிருந்துதான்.

இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்குள் வளர்ந்திருந்த வாதாம் மர கொட்டைகளை எடுப்பதற்காக கடந்த ஜூலை 3ம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு நண்பர்கள் சூழ அவன் புறப்பட்டதும் அந்த வீட்டிலிருந்துதான். வாதாம் மர கொட்டைகளை எடுத்த ‘பயங்கரவாத’ செயலுக்காக இராணுவ அதிகாரியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி சடலமாக அவன் திரும்பி வந்ததும் அதே இடத்துக்குத்தான். பொது மக்களின் பார்வைக்கு அந்த பதிமூன்று வயது சிறுவனின் உடல் கிடத்தப்பட்டதும் அதே தரையில்தான்.

இனி தில்சன் சுவற்றில் தொங்கும் ஒரு புகைப்படம் மட்டுமே.

து எஸ்.எம்.நகரும், காந்தி நகரும் இணைந்த குடியிருப்புப் பகுதி. கிட்டத்தட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கிருக்கின்றன. வீடுகள் என்றால் நான்கு பக்கமும் சுவர். கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் தகடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் துணி. ஆங்காங்கே கம்பை நட்டு அதன் மீது துணிகளை போர்த்தி உருவாக்கப்பட்ட வீடுகளும் அங்கு உண்டு. இடைவெளியின்றி இருக்கும் இந்த வீடுகளில் அதிகபட்சம் இரு அறைகள் இருக்கின்றன. ஐந்தடி உயரம் கொண்டவர்கள் கால் நீட்டி படுக்கலாம். அதற்கு மேல் உயரம் கொண்டவர்கள் கால்களை மடக்கித்தான் படுக்க வேண்டும். வாசல் கதவாக பெரும்பாலும் மைக்காவே இருக்கிறது. லேசான காற்றுக்கும் பலமாக அது ஆடுகிறது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணாசாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கிச் செல்லும் சாலையில், இப்படியொரு குடியிருப்பு இருக்கும் விஷயமே தில்சன் சுடப்பட்டு இறக்கும் வரை பலருக்கு தெரியாது. அண்ணாசாலையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திரும்பும் பாடிகாட் முனீஸ்வரன் இருக்கும் சாலையில் திரும்பாமல் நேராக வந்தால் காயிதே மில்லத் பாலத்தில் முட்டி நிற்கும். இப்பாலத்தைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் பாரிஸ் கார்னரை அடையலாம். வலப்பக்கம் திரும்பினால், மெரீனா கடற்கரை சாலையை தொடலாம்.

இச்சாலையின் இடதுபுறத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளும், வலது புறத்தில் தீவுத்திடலின் காம்பவுண்ட் சுவரும் இருக்கின்றன. இந்த இராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புச் சுவர் ஐந்தரை அடி உயரத்தில் இருக்கிறது. அதற்கு மேல் இரண்டடி உயரத்தில் கம்பிகள். கம்பியின் நுனியில், வேல் போல் கூர்மை. இந்தச் சாலைதான் தில்சன் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடி மரச் சாலை.

காயிதே மில்லத் பாலம் ஆரம்பமாகும் இடத்தில், இடதுபுறமாக ஒரு தார்ரோடு பிரிகிறது. இந்தச் சாலைதான் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எம்.நகரும், காந்திநகரும் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் மெயின் ரோடு. இச்சாலையின் தொடக்கத்திலேயே இடதுபுறமாக மாநகராட்சிக்கு சொந்தமான கட்டணக் கழிப்பிடம் இருக்கிறது. இங்குதான் இப்பகுதி மக்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தினமும் பயன்படுத்துகிறார்கள். சாலையின் இருபுறமும் இடைவெளியின்றி ஒன்று வீடுகள் இருக்கின்றன அல்லது நான்குக்கு நான்கு அளவில் கடைகள் இருக்கின்றன.

இந்தப் பிரதான சாலையின் வலதுபுறத்தில் ஆங்காங்கே சந்துகள் பிரிகின்றன. ஒவ்வொரு சந்திலும் இருபுறமும் வரிசையாக வீடுகள். சந்தின் அளவு மூன்றடி இருந்தாலே அதிகம். இச்சந்துகளுக்குள் இரண்டடி அகலமுள்ள கிளை சந்துகளும் உண்டு. அங்கும் வரிசையாக வீடுகள். பலரும் சந்திலேயே துணி துவைக்கிறார்கள் அல்லது அடுப்பை எரியவிட்டு சமையல் செய்கிறார்கள்.

மெயின் ரோட்டில் நூறடி நடந்தால் வலதுபுறமாக வரும் அரசு ஆரம்பப் பள்ளியை ஒட்டி ஒரு சந்து பிரிகிறது. அச்சந்துக்குள் இடப்புறமாக பிரியும் கிளைச்சந்தின் ஆறாவது வீடுதான், தில்சனின் வீடு.

இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சென்னை சிறுவன் தில்சன்
தில்சனின் பெற்றோர் கலைவாணி-குமார்

னக்கு மொத்தம் மூணு புள்ளைங்க. பெரியவ தீபிகா. 18 வயசாகுது. பத்தாவது வரை படிச்சுட்டு கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்கறா. பை தைக்கிற வேலை. அடுத்து திலீபன். 16 வயசு. ஆறாவது வரை படிச்சிருக்கான். எனக்கொரு தம்பி உண்டு. அவன் மீன்பாடி வண்டி ஓட்டுவான். அவனுக்குத் துணையா திலீபன் போயிட்டு வர்றான். வண்டில மூட்டையை ஏத்தறதும், இறக்கறதும் அவன் வேலை. கடைசி புள்ளதான் தில்சன். 13 வயசாகுது. அஞ்சாவது வரை படிச்சிருக்கான்.

ராசா மாதிரி இருந்தாருங்க எம் புருஷன். குமாருன்னா எல்லாருக்கும் தெரியும். அவரும் மீன்பாடி வண்டி ஓட்டறவருதான். சொன்ன நேரத்துக்கு கரீட்டா சரக்கை கொண்டு போய் சேர்த்துடுவாரு. அதனாலயே பலபேரு அவர்கிட்ட சரக்கை டெலிவரி பண்ணச் சொல்வாங்க. யார் கண்ணு பட்டதுனு தெரியலை. அவருக்கு சக்கரை நோய் வந்துடுச்சு. ஓடியாடி வேலை செய்ய முடியலை. வண்டி ஓட்ட சிரமப்பட்டாரு.

சின்னதா… ரொம்ப லேசா அவர் கால்ல ஏற்பட்ட காயம், பெரிசாகிடுச்சு. டாக்டருங்க காலையே வெட்டி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுனே தெரியலை. சடார்னு டாக்டர் கால்ல விழுந்து ‘எப்படியாவது எம் புருஷன் காலை காப்பாத்திடுங்க’னு கெஞ்சினேன். அந்த மவராசன், ’80 ஆயிரம் ரூபா செலவாகும். பரவாயில்லையா’னு கேட்டாரு. வட்டிக்கு கடன வாங்கி அவர்கிட்ட பணத்தை கொடுத்தேன். புருஷன் காலை எப்படியோ குணமாக்கினாரு. ஆனா, திரும்ப வண்டி ஓட்டக் கூடாதுனு சொல்லிட்டாரு.

என்ன செய்யறதுனு தெரியலை. கடன் சேர்ந்துப் போச்சு. எம் பொண்ணும் பையனும் சம்பாதிக்கிற பணம் வட்டி கட்டத்தான் சரியா இருக்கும். குடும்பத்த எப்படி காப்பாத்த? நான் காலைல இரண்டு மணிநேரம் பேப்பர் பொறுக்கறேன். அதுல மாசம் ஆயிரத்தைனூறு ரூபா கிடைக்கும். அதுபோக சாயங்காலமானா, பூ கட்டப் போவேன். பூ விப்பேன். அதுல ஏதோ கிடைக்கும். இதை வச்சுட்டு அஞ்சு பேரு எப்படி சாப்பிடறது?

அப்பத்தான் தில்சன், ‘அம்மா நான் வேலைக்கு போறேன்’னு சொன்னான். இதைக் கேட்டுட்டு நானும் எம் புருஷனும் அழுதுட்டோம். இவனையாவது நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு தகுந்தாமாதிரி அவனும் நல்லா படிச்சான். ஆனா, தலையெழுத்து அவனும் சம்பாதிச்சாதான் எங்களால திங்க முடியும்னு நிலை. என்ன செய்ய… சரினு சொல்லிட்டோம்.

ஆனா, தில்சன் உடம்பு பூஞ்ச உடம்பு. அவனால மூட்டை தூக்க முடியாது. மீன்பாடி வண்டி ஓட்ட முடியாது. அதனால எம் புருஷன் ரெகுலரா சரக்கு ஏத்தற கடை முதலாளிகிட்ட விஷயத்தை சொன்னோம். ‘சின்னப் ப்சங்கள வேலைக்கு வச்சிக்கறது தப்பு… ஆனா, உங்க குடும்ப சூழ்நிலை இப்படி இருக்கறதுனால யாருக்கும் தெரியாம நான் வேலை தர்றேன். அனுப்பி வை. ரெண்டாயிரம் ரூபா சம்பளமா தர்றேன்’னு சொன்னாரு.

காலைல 7 மணிக்கு தில்சன் வூட்ட வுட்டு கெளம்பினானா ராத்திரி 7க்குத்தான் வருவான். அங்க டீ, சாப்பாடு வாங்கிக் கொடுக்கறதுதான் அவன் வேலை. மதியம் அவன் சாப்பிட திலீபன்கிட்ட சோறு பொங்கி கொடுத்துவுடுவேன். சம்பளப் பணத்தை அப்படியே கொண்டு வந்து கொடுத்துடுவான். அதுல ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டான். செலவுக்கு காசு வேணும்னாலும் என்னான்டதான் கேப்பான்.

ஞாத்திகிழமை ஒருநாள்தான் அவனுக்கு லீவு. பசங்களோட இதோ இந்தச் சந்துலயேதான் கிரிக்கெட் ஆடுவான். இல்லைனா பீச்சுக்கு போவான். மத்தபடி வேற எங்கயும் போக மாட்டான். அந்தப் பொறம்போக்குங்க இருக்குங்குளே மிலிட்டரி இடம்… அங்க அவன் ஒருமுறை கூட போனதா எங்கிட்ட சொன்னதேயில்லை. நான் பேப்பர் பொறுக்க போறப்பவும், பூ விக்கப் போறப்பவும் பல பசங்கள அங்க பாத்திருக்கேன்.  ஒருமுறை கூட தில்சனை அங்க பார்த்ததில்ல. அதனாலயே அங்க போனப்ப அவன சுட்டுட்டாங்கனு சஞ்சய்யும், பிரவீன்னும் அழுதுகிட்டே வந்து சொன்னப்ப நம்ப முடியலை. ஆனா, இதுல எல்லாமா பசங்க பொய் சொல்லும்? கும்பலா ஓடிப் போய் பார்த்தோம்.

அங்க எம் புள்ள தலைல குண்டு பாஞ்சு சுயநினைவு இல்லாம விழுந்து கிடந்தான். படுபாவிங்க, அவன் மேல இலையை போட்டு மூடியிருந்தாங்க. யாருக்கும் தெரியக் கூடாதாம். நல்லா இருப்பாங்களா அந்தக் கபோதிங்க… வயிறு எரிஞ்சு சொல்றேன், நாசமா போவாங்க… விழுந்துக்கிடந்த தில்சனை அப்படியே தூக்கிட்டு ஆட்டோ பிடிச்சு கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேர்த்தோம். டாக்டருங்க எதுவுமே சரியா சொல்லலை. நேரம் பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. அப்புறம் தில்சன் செத்துட்டான்னு பொணமா கொடுத்தாங்க.

இப்ப வரைக்கும் எனக்கு புரியலைங்க… வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா… அதுக்காக சுட்டுக் கொல்வாங்களா? எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்…”

அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி.

இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சென்னை சிறுவன் தில்சன்
மண்ணில் உறைந்த தில்சனின் இரத்தம்

ந்தக் குடியிருப்புப் பகுதி முழுக்கவே கொந்தளிப்பாக இருக்கிறது. இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் அப்பகுதியில் மா மரங்களும், வாதாம் மரங்களும் நிறைந்திருப்பதால், அடிக்கடி சிறுவர்கள் அங்குச் சென்று பழங்களையும், கொட்டைகளையும் பறித்துச் சாப்பிடுவார்களாம். அதுபோன்ற நேரங்களில் கூப்பிட்டு, கண்டித்துத்தான் காவலாளிகள் அனுப்புவார்களாம். துப்பாக்கியை காட்டி இதுவரை யாரும் மிரட்டியதில்லை என்கிறார்கள் அக்குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள்.

”ஞாத்திக்கிழம அன்னிக்கி வாடா வாதாம் கொட்டய சாப்பிடலாம்னு நாங்கதான் தில்சனை கூட்டிட்டு அங்க போனோம். தில்சன் மரத்து மேல ஏறி வாதாம் காய பறிச்சு கீழ போட ஆரம்பிச்சான். நானும் சஞ்சய்யும் அத பொறுக்க ஆரம்பிச்சோம். அப்ப கார்ல ஒருத்தர் வந்தார். எங்கள பார்த்து சத்தம் போட்டார். உடன நானும் சஞ்சய்யும் சுவர் ஏறி குதிச்சு வெளில வந்தோம். தில்சன் மரத்த விட்டு வேகமா இறங்க ஆரம்பிச்சான். எங்கள மாதிரியே சுவர் ஏறி அவன் குதிக்க முயற்சி செஞ்சப்ப ‘டுமீல்’னு துப்பாக்கி சத்தம். அவன் தலைலேந்து ரத்தம் வர அப்படியே அந்தப் பக்கமா கீழ விழுந்தான். கார்ல இருந்தவரு உடனே போயிட்டார். நானும் சஞ்சய்யும் பயந்துபோய் ஓடி வந்து சொன்னோம்…”

கருவிழிகளில் பயம் மின்ன நடந்தக் கொடூரத்தை பிரவீன் சொல்லும்பொழுதே அடிவயிறு சில்லிடுகிறது. அப்படியிருக்க 13 வருடங்களாக அவர்கள் கண்முன்னால் வளர்ந்த ஒரு சிறுவன் குண்டடிப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த மக்களுக்கு எப்படியிருக்கும்?

சுட்டவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். சுடப்பட்ட தில்சனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லாமல் இலை, தழைகளை போட்டு மூட முயற்சி செய்ததும், தண்ணீர் ஊற்றி உடனுக்குடன் தரையில் இருந்த அந்த ரத்தக் கறையை கழுவியதும் அவர்களது ஆவேசத்தை கிளறிவிட்டது. காவல்துறை வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் வரை மக்கள் தங்கள் மறியலை கைவிடவில்லை.

இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சென்னை சிறுவன் தில்சன்
பாதிக்கப்பட்டவர்களை விரட்டியடித்து 'அமைதி'யை நிலைநாட்டும் போலீசு

இதோ, இந்த நிமிடம் வரை இராணுவ வளாகத்துக்குள் நடந்த இந்தப் படுகொலை குறித்து இராணுவ அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகவே சொல்லி வருகிறார்கள். முதலில் தில்சனை யாரும் சுடவில்லை. அவனாக சுவரிலிருந்து கீழே குதிக்கும்போது கம்பி குத்தி இறந்தான் என்றார்கள். ஆனால், பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தெளிவாக தில்சன் குண்டடிப்பட்டு பலியாகியிருக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. உடனே சுட்டது ஒரு இராணுவ வீரர்தான் என்றார்கள். இப்போது இல்லை… இல்லை… அது இராணுவ அதிகாரிதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வளாகத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இராணுவ வீரர்கள் அல்ல. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நடத்தும் தனியார் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் துப்பாக்கி கிடையாது. லத்தி மட்டுமே உண்டு.

இந்த உண்மை அம்பலப்பட்டுப் போனதால் இப்போது அது இராணுவ அதிகாரிதான், லெப்டினன்ட் கர்னல்தான் என்கிறார்கள். அந்த அதிகாரி குடிபோதையில் இருந்ததால் இப்படி தன்னையும் அறியாமல் சுட்டுவிட்டார் என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் வர அனுமதியில்லை என நியாயம் பேசுகிறார்கள். ஆனால், வெறும் இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிதான் அது என்பதும், குடும்பத்துடன் இராணுவ அதிகாரிகள் உண்டு, உறங்கி, கக்கூஸ் போகும் ஒரு இடம்தான் அப்பகுதி என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். மறக்கும்படி சொல்கிறார்கள்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த இராணுவ அதிகாரியை தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி இராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வரும் தனது பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை தில்சனின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்கிறார்.

”பணம் கொடுத்துட்டா எம் புள்ள திரும்பக் கெடைச்சுடுவானா? கொலக்காரன தப்பிக்க வைக்கத்தான் முயற்சி நடக்குது…” என்று கலைவாணி ஆவேசத்துடன் சொல்வதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்கின்றன.

 

இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சென்னை சிறுவன் தில்சன்
சம்பவத்தை ''ஊற்றி'' மூடும் முயற்சியில் போலீசு

பூக்கடை போலீசார் முதலில் தில்சன் கம்பி குத்தி இறந்ததாகத்தான் வழக்கை முடிக்கப் பார்த்திருக்கிறார்கள். பகுதி மக்கள் சத்தம் போட்ட பிறகே குண்டு பாய்ந்து இறந்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.

இராணுவ வீரரோ அல்லது இராணுவ அதிகாரியோ பொது மக்களை இப்படி சுட்டுக் கொல்லும்போது, இறந்த மனிதர் பயங்கரவாதி என்று அறிவித்து அப்படுகொலையை நியாயப்படுத்துவதுதான் வழக்கம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றாடம் நடப்பது இதுதான். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், சிறுவர்கள் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி எடுப்பவர்களாக சித்தரிக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாவதும் இப்படித்தான்.

ஒருவேளை இராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், காவல்துறையினரால் விசாரணை நடத்த முடியாது. இராணுவ வீரர்களுக்கென்றே இருக்கும் கோர்ட் மார்ஷல்தான் விசாரணை நடக்கும். அந்த விசாரணையும் இராணுவத்துக்கு சாதகமாகத்தான் இருக்கும். காரணம், அதிகார பலத்தில் இராணுவத்துக்கான நீதி, நியாயங்கள் வேறு.

இந்த அதிகார கொழுப்புத்தான் சென்ற தலைமுறையில் மாந்தோட்டத்தில் மாங்காய் பறிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சிறுவர்களை கட்டி வைத்து சவுக்கினால் விளாச வைத்தது. இதே கொழுப்புத்தான் நந்தனை உயிருடன் எரித்தது. சவுக்கினால் பண்ணையடிமையின் தோல் உறிவதைப் பார்த்து அன்று பண்ணையார்கள் சிரித்தார்கள். நந்தன் எரிவதைப் பார்த்து தீக்ஷிதர்கள் ஆர்ப்பரித்தார்கள். இன்று தில்சன் குண்டடிப்பட்டு இறந்ததைப் பார்த்து இராணுவ அதிகாரிகள் புன்னகைக்கிறார்கள். அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது.

எந்த வேலையும் இல்லாமல் தின்னும் குடித்தும் பொழுதை போக்கும் இராணுவம்தான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நிலை கொண்டுள்ளது. காஷ்மீர், வடகிழக்கு, போன்ற இடங்களில் இராணுவத்திற்கு இருக்கும் உரிமை யாராலும் தட்டிக் கேட்க முடியாத ஒன்று. ஆயுதம் ஏந்தும் உரிமை இவர்களிடம் மட்டும் உள்ளதால் அதுவே இராணுவத்தின் கொழுப்பிற்கு காரணமாகிறது. இராணுவத்திற்கு அளிக்கப்படும் பயற்சியும், கட்டுப்பாடும் கூட பொது மக்களை அடக்கி ஒடுக்கி மிரட்டவே பயன்படுகிறது. அதிலும் இராணுவ வீரர்களை விட இராணுவ அதிகாரிகள் மிகுந்த சுகபோகிகளாகவே இருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்.

ரத்தம் சிந்தி 13 வயது தில்சன் இதை அம்பலப்படுத்தியிருக்கிறான். மெளனமாக இதையும் ஒரு செய்தியாக கடந்துச் செல்லப் போகிறோமா?

___________________________________________________________

– வினவு செய்தியாளர்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. இது உண்மையில் ஒரு வேதனையான விஷயம் தான். ராணுவத்தினர் என்பதினால் காவல்துறையே இது போன்ற மூடி மறைக்கும் வேளையில் இறங்குவது வெந்த புண்ணில் விரலை பாய்ச்சும் முயற்சி.

  • ஹ்ம்ம், ஒரு பதிவை படித்த உடைனேயே அது உண்மையா பொய்யா என்று தெளிவாக யோசிக்காமல் உடனேயே ஒரு பின்னுட்டம் இடுவது தான் பகுத்தரிவு போலும். சம்மந்த பட்ட நபர் இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றவர் என்பதும், இராணூவ குடியிருப்பு அதிகாரிகளூக்கே தெரியாமல் அவர் ஒரு துப்பாக்கியை அதுவும் அனுமதி புதுபிக்க படாத ஒன்றை வைத்து இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பதும் தற்போதைய செய்தி. போலிஸும் மனிதர்கள் தான். அவர்களூம் எடுத்த எடுப்பில் எதையும் செய்ய முடியாது.

   பின் குறிப்பு: குற்றம் செய்யப்பட்டவர். தமிழன் என்பதும். இவர் MBC சாதிகாரர் என்பதும். மத மாறியவர் என்பது குறீப்பிட தக்கது. நல்ல வேலை, இந்த சம்பவத்தில் ஒரு வட நாட்டு பகுதியை சேர்ந்தவர் சம்மந்தபடவில்லை.

   அது சரி, மாவோயிஸ்டுகளால், கொல்லப்படும் அப்பாவி மக்கள் மற்றும் கடை நிலை காவல் துறை உழியர்களை பற்றீய வினவின் அபிப்ராயம் என்ன? திபெத்தை ஆக்கரமித்த சீனாவை பற்றீய வின்வின் நிலை என்ன? ஒரு வேலை இது எல்லாம் RSS சதியாக இருக்குமோ 🙂

   • I second the opinion of the above comment. It is not right to mix politics and idealogy with a tragedy like this. If you think for a moment and analyze the reasoning behind why army would try to cover up the incident, it would be to avoid the same exact reasoning of this article. A shooting by one army personnel generalized as whole army against its own people.

    The author tries to point out incidents in kashmir and north east. Can he give statistics on what the casuality is on the army side? And speaking of statistics did he even spent some time on what is the ratio of casualities of similar engagements in the world with the ones in India? How could he then say indian army is worse or better than the lankan?

 2. “இப்ப வரைக்கும் எனக்கு புரியலைங்க… வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா… அதுக்காக சுட்டுக் கொல்வாங்களா? எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்…”

  அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!
  – குர்ஆன் 5:45

  இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
  -குர்ஆன் 5:32

   • சரியா சொன்னிங்க ஸ்ரீனிவாசன். இந்த மாதிரி நாதாரிங்க செத்து சுடுகாட்டுக்கு போனாலும் நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க, அவங்களும் நிம்மதியா இருக்க மாட்டானுங்க !.வெறி புடிச்சு போய் திரியறானுங்க!..

    சிறுவன் தில்ஷனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுவோம். கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு.

    மாக்ஸிமம்

    • \\சிறுவன் தில்ஷனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுவோம். கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. \\

     சாயீபாபாவுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.நிச்சயம் பயன் உண்டு. அப்படியே அவரது புகழை உங்கள் கடவுளர்களின் புகழை பரப்புங்கள். அது நிச்சயம் பிரச்சாரம் ஆகாது

   • கொல்லப்படுபவர்கள் வீட்டில் நாட்டில் உள்ள கொலைகாரர்களைப் பற்றிய பிரச்சாரம் செய்வது சரியானதா ?.. இல்லை அவன் கொன்னாலும் கடவுளை நம்பு என் கு*டிய நம்புன்னு பிரார்த்தனை செய்வது சரியானதா ?..

 3. மிக வேதனையான செய்தி.:(

  //அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது.//

  அதே..

  ஊடகத்துறையிலும் ..

 4. கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.அது நியாயம்.அதற்காக ராணுவதிற்கு எதிராக ஒரு சிறுவனின் மரணத்தினை பயன்படுத்துவது
  அரசியல்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கோபமும்,ஆத்திரமும் கொன்றவன் மீது வருகிறது,அது சரிதான்.அதனால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்.நீங்களோ அதை வைத்துக்கொண்டு உங்களுட்டைய அரசியலுக்கு ஆதரவு தேடுகிறீர்கள்.அதை அப்பகுதி மக்கள் ஆதரிக்கிறார்களா. அவர்களுக்கு ராணுவத்திற்கும் பெரிய பிரச்னை ஏதும் இருக்கிறதா. இருப்பது போல் தெரியவில்லை.அப்படி இருக்க நீங்கள் ஏன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும்,விரோதம் உருவாக்கவும் முயற்சி செய்கிறீர்கள்.
  தமிழக அரசு நியாயம் கிடைக்க முயற்சிகள் செய்து வரும் போது ஏனிந்த வேலைகளை செய்கிறீர்கள்.தமிழ்நாடு காஷ்மீர் அல்ல.அம்மாவின் ஆட்சியில் அது தமிழ் நாடாகத்தான் இருக்கும்.உங்களைப் போன்ற நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள் ரொம்ப துள்ளினால் அம்மாவால் உங்களின் கொட்டைத்தை அடக்க முடியும். எனவே குள்ள நரிக்கூட்டமே ஒவராக ஆட வேண்டாம்.ஆடினால் வால் ஒட்ட அறுக்கப்படும்.

  • சாந்தி வீட்டுல யாருக்காவது இப்படி இப்படி நடந்தா……உடனே சாந்தி ஜெய் ஹிந்த்…னு சொல்லி எல்லாருக்கும் மிட்டாய் குடுப்பாங்கப்பா……..

   • இங்கேயும் என் பேரில் போலிகளா?.:))

    முடியல சாமி முடியல்..

    தங்கள் பேரிலேயே கருத்தை சொல்ல பயமா?.

    —-
    வினவு இனி என் கமெண்டோடு மட்டும் என் வலைப்பூவும் வரும்..

    jmms
    http://punnagaithesam.blogspot.com

  • http://bit.ly/o4eToO

   தீவுத் திடலும் தில்ஷனும்
   ————————-

   //எனது பக்கத்து வீட்டாரில் பலர் இராணுவ வீரர்கள்தான் ஆனால் ஒருவரும் குடிக்காத நல்லவராக இல்லை.மனைவிமார்கள் தீயில் எரிந்து இந்த பழக்கத்தில் இருந்து வெளிவாருங்கள் என உயிரைக் கொடுத்தாலும் இந்த வெறி நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவதை நிறுத்தமுடிவதில்லை.

   பொய்ச்சான்றிதழ் கொடுத்து இங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் போன்றவ்ர்க்கெல்லாம் இராணுவத்தில் இடம் கிடைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும்.ஒழுக்கம் கெட்டவர்கள் விபச்சாரிகளிடம் போவது மட்டுமின்றி எந்த வீடாவது திறந்துகிடக்காதா உள்ளே நுழைந்து விடலாமா எனப் பார்க்கும் போதை வெறி நாய்களைப் போன்றவரே இன்று நிறைய பேர்.//

  • Thann pillaiku mattu “sudu Saapadu”(Thann vittula eppadi nadandirundha YERI MALA pola veduchuruppiga,) mattra pillaiku “Palaiya SAAPADA!!!!(veliyala nadantha cool la eduthukireega!!!)Oru uyirin mathippu 5 latcham thaana…

  • //.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கோபமும்,ஆத்திரமும் கொன்றவன் மீது வருகிறது,அது சரிதான்.//

   பாதிக்கப்பட்ட பெண்கள் காஷ்மீர், மணிப்பூர், தண்டேவடா, ஈழத்திலும்(இந்திய அமைதிப் படையின் பொறுக்கித்தனம்) உள்ளனர். முக்கியமாக பயங்கரமான ஆத்திரத்தில் உள்ளனர்.

   ராணுவத்திற்கு எதிராக அல்ல ராணுவம் மக்கள் மீது பாய்ந்து குதறும் வெறிநாய்களாகவே எப்போதும் இருப்பதற்கு எதிரான உணர்வு நியாயமானது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையிலேயே கட்டுரை உள்ளது.

  • இது என்ன பாகிஸ்தான் போர்டரா! துப்பாக்கியை எடுத்து பார்ப்பவர் மீதெல்லாம் சுடுவதற்கு, உடனே சுட்டவனை கைது செய்யாமல் கூடி நிற்பவர்களை விரட்டி அடிப்பது தான் போலீசின் வேலையா, தவறை மறைக்க தண்ணீர் உற்றும் அந்த போலீஸ் காரர்கள் கைது செய்ய பட்டார்களா?

  • Supera sonnel pongo!!! ivanuga eppavume ippadiye thaan.. tamilnaata indiavuku againsta thiruppi vittuttu aadhayam theda paapanga.kanna adhellam ennaikkum nadakkathu poi pulla kuteengala padikka veingappu Eppayume naange indians appuram thaan tamilan mannagatti ellam…….Feeling very sad about Dilshan though… May god bless his soul!!!

  • //தமிழக அரசு நியாயம் கிடைக்க முயற்சிகள் செய்து வரும் போது ஏனிந்த வேலைகளை செய்கிறீர்கள்.தமிழ்நாடு காஷ்மீர் அல்ல.அம்மாவின் ஆட்சியில் அது தமிழ் நாடாகத்தான் இருக்கும்.உங்களைப் போன்ற நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள் ரொம்ப துள்ளினால் அம்மாவால் உங்களின் கொட்டைத்தை அடக்க முடியும். எனவே குள்ள நரிக்கூட்டமே ஒவராக ஆட வேண்டாம்.ஆடினால் வால் ஒட்ட அறுக்கப்படும்.//

   Shut your Mouth and Ass please.

   If someone is giving differnt view then it means they are நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள். Who is your Amma? what is her qualification? stop talking about her.

   //தமிழக அரசு நியாயம் // Can your Amma bring back this kid? Can she stop atleast this happening again. Bullshit.

  • உங்கள் தமிழக அரசு தானே? நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் உங்கள் கொள்ளு பேரன் காலத்தில்… மனசாட்சி னு ஒன்னு சொல்வங்கலே கேள்வி பட்டுருகின்களா சாந்தி?

  • சாந்தி அக்கா வாழ்க. தங்கத்தாரகை அருமை அம்மா ஆட்சி வாழ்க.
   இப்படிக்கு
   வால் ஒட்ட அறுக்கப்பட்ட, கொட்டை அடக்கப்பட்ட வினவு.

 5. இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்.

 6. //இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்//

  நம் தேச பக்தி வீரர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது?

  முந்தைய பின்னூட்டத்தில் அக்காகி சொன்னதைப்போல:

  //காஷ்மீர் என்ற உடன் எங்களுக்கு தேச பக்தி போதை ஏற்றிவிடுகிறதே அதை எப்படி இழப்பது?

  எங்களுடைய மற்ற பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை மறைக்க நாங்கள் எதை தான் பயன்படுத்துவது சொல்லுங்கள்?

  இந்த நாட்டு பற்றையும், கிடிக்கெட்டையும் விட்டால் எதைக் கொண்டு எங்கள் சமூக அக்கரையை வெளிப்படுத்துவது???

  அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் “காஷ்மீர் இந்தியாவின் பகுதி! அந்த பகுதி மக்களின் துயரங்களை கண்டுகொள்ள மாட்ட்டோம்!” அதை கேள்வி கேட்டால், இந்தியியாவின் பகுதியில்லை என்றால் நீ தீவிரவாதி!

  மேலும், இந்தியியாவின் பகுதியில்லை என்றெல்லாம் நீங்கள் அமைதியாக உண்மையை பேசிவிட்டு போய்விட முடியாது, உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்! ஏனென்றால் எங்களது இறையான்மையை (பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை) நீங்கள் இழிவு படுத்துகிறீர்கள்!!!//

  ஜெய் ஹிந்த்!! ஹ்ம்ம்…இது ஒண்ணுதான் கொறச்சல்…

 7. வேதனையான விஷயம், நிச்சயம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.

  //பாதிக்கப்பட்டவர்களை விரட்டியடித்து ‘அமைதி’யை நிலைநாட்டும் போலீசு//

  இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே.

  //வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா…//

  வாதம் மர கொட்டை மட்டும் இல்லை பிஸ்த்தா கொட்டை, முந்திரி கொட்டை என எல்லாம் பல கொட்டையையும் சாப்பிடலாம் ஏன் மாங்கா கொட்டைய சாப்பிட்டா கூட குத்தம் இல்லை அது அவரவர் விருப்பம். ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்.

  ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியையும், பயிற்சி எடுக்கும் இடத்தையும் ரிசர்வ்ட் ஏரியா என்று சொல்வார்கள் அதன் அர்த்தத்தை இந்த பாமர சேரி மக்களுக்கு முன்பே அரசு விளக்கி இருக்கவேண்டும். இப்போது ஐந்து லட்சம் கொடுப்பதால் என்ன பயன்? இனி இந்த பாமர மக்களுக்கு ராணுவத்தினரை கண்டாலே ஏதோ விரோதியை பார்ப்பவர்கள் போல் தான் பார்ப்பார்கள். இருந்தாலும் அந்த ராணுவ அதிகாரி செய்தது குற்றமே அந்த சிறுவனை மிரட்டி அல்லது தண்டித்து அனுப்பி இருக்கலாம் இப்படி ஒரே அடியாக அனுப்பிவிட்டார், தண்டிக்கப்பட வேண்டியவர்.

  வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை மென்மையாக அணுகுவது நல்லது. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறார்களே? பிறகு ஏன் ராணுவத்தினரை ஏதோ சதிகாரர் போல் சித்தரிக்க வேண்டும்? தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் அவசரப்பட்டு எதையும் யூகித்துவிட வேண்டாம். ராணுவத்தினர் மேல் எப்போதும் மரியாதையுடன் அணுகுவதே நல்லது. இந்த விவகாரம் நாளை தமிழக மக்களுக்கு எதிரான ஒரு எரிச்சலை ராணுவத்தினரிடம் உருவாக்கி விட கூடாது. தன்னுடன் வேலை செய்யும் ஒரு நபர் குற்றம் செய்துவிட்டார் என்றால் அதை மற்றவர்கள் மறைப்பது(தவறான) இயல்புதான். தயவு செய்து ராணுவத்தினரை தவறாக சித்தரித்து எழுத, கண்டிக்க வேண்டாம்.

  • //இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே. //

   ஏனுங்க, பயனை ராணுவம் சுட்டுக் கொல்வதும், அதை போலீசு மூடி மறைப்பதும் தடுக்கி விழுகிற விசயமா என்ன? என்னே ஒரு மனிதாபிமானம்…..

  • //ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்.//

   நாட்டாமை, சொம்பு போன்று சில வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன…

   //வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை மென்மையாக அணுகுவது நல்லது. //

   இத அட்வைசுனு இங்கிலீசுல சொல்வாங்க (தமிழ் தெரியாத இங்கிலிஸ்காரவுகளுக்காக). அட்வைஸு மட்டும்தான்… ம்…

   • //மக்கள் குடியிருக்கிற பகுதியில ராணூவம் மட்டும் வந்து குடியேறலாமா, தொப்பி?//

    அப்ப எங்கே இருக்கணும்? கேஷ்மிர் பார்டரில்தான் அவர்கள் வசிக்கவேண்டுமோ?

    //ஏனுங்க, பயனை ராணுவம் சுட்டுக் கொல்வதும், அதை போலீசு மூடி மறைப்பதும் தடுக்கி விழுகிற விசயமா என்ன? என்னே ஒரு மனிதாபிமானம்…..//

    மனிதாபிமானத்தை சாலை மறியல் செய்துதான் காட்டவேண்டுமா?

    நியாயம் கேட்கவேண்டும் என்றால் கேட்க வேண்டிய இடத்தில் சென்று கேட்கனும். சோம்பேறித்தனம் பட்டு நான் இருக்கும் இடத்திலேயே மறியல் செய்வேன் நீ இங்க வந்து என் பிரச்னையை தீர்த்துவை என்று எதற்க்கெடுத்தாலும் மறியலில் ஈடுப்பட்டால்?

    சாலைமறியலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் வேதனை.

    சாலைமறியல் இந்த சிறுவன் சுடப்பட்டதர்க்காகத்தான் இதுவரை தமிழக வரலாற்றில் நடந்ததா?

    //நாட்டாமை, சொம்பு போன்று சில வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன… //

    //இத அட்வைசுனு இங்கிலீசுல சொல்வாங்க (தமிழ் தெரியாத இங்கிலிஸ்காரவுகளுக்காக). அட்வைஸு மட்டும்தான்… ம்…//

    நல்ல விவாதம்.

    • தொப்பி தொப்பி,

     இந்தக் கொலை யார் செய்தது என்று தெரிந்தும், அது குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வந்தும் இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? இதற்கு யாரிடம் சென்று முறையிட வேண்டும்? முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவர்தான் சேர்மன் என்பதால் அவரிடம் முறையிட வேண்டுமா? மக்கள் மறியல் செய்திருப்பதால் இது இந்த அளவுக்காவது வெளியே வந்திருக்கிறது. இல்லையேல் இதை கூண்டோடு மூடியிருப்பார்கள்.

     இராணுவம் என்ன செய்தாலும் அதை சட்டப்படியே கேட்க முடியாது என்ற நிலைதான் தற்போது அந்த அதிகாரி குற்றவாளி காப்பாற்றபடக் காரணம். இதை எப்படி மாற்றுவது? யாரிடம் சென்று முறையிடுவது? கொஞ்சம் விளக்குங்களேன்!

  • தொப்பி தொப்பி
   ஒரு குடிகார இராணுவ அதிகாரி இதைச் செய்திருக்கிறான். இதை சமூகத்தில் வேறு யாரும் செய்ய முடியுமா? அப்படி செய்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இங்கே அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

   இராணவ ஏரியாவில் உள்ள வீட்டு, அலுவலக, சுத்தம் இதர வேலைகளுக்கு மட்டும் சேரி மக்கள் வேண்டுமா? ஏன் அதைக்கூட இராணுவ அதிகாரிகளே செய்தால் யாரும் உள்ளே நுழைய முடியாதே? தன் வீட்டு மரத்தில் உள்ள காயைத்தான் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு சொந்தமாக வீடும், தோட்டமும் வேண்டும். அதன்படி மாளிகை தோட்டம் உள்ள பண்க்காரர்கள் மட்டுமே சாப்பிட முடியும். இது ஏழைகளை இழிவுபடுத்துவதாக உள்ளது.

   நீங்கள் விஜயகாந்த், அர்ஜூன் படத்தில் உள்ள சினிமா இராணுவத்தை நம்புகிறீர்கள் போலும். நிஜ இராணுவத்தின் அட்டூழியத்தை இலங்கைக்கு சென்ற அமைதிப் படையின் வக்கிரங்களில் இருந்தும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.

   இராணுவம் என்பது நீங்கள் நினைப்பது போல நமது மக்களை காக்கும் அமைப்பல்ல. அது இந்த நாட்டின் முதலாளிகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளை பாதுகாக்கும் அமைப்பு. அதனால்தான் மக்களைக் கொல்லும் இராணுவத்தை நமது அதிகார அமைப்புகள் பாதுகாக்கின்றன.

   இவ்வளவு பட்டவர்த்தனமாக ஒரு கொலை நடந்தும் அது யாரென்று தெரிந்தும் இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? இராணுவம் தவறு செய்தால் யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பது ஏன்? அவர்களுக்கு ஏன் அவ்வளவு அதிகாரம்?

   • சிபிசிஐடி போலிசு குற்றவாளியை கைது செய்துவிட்டது. அவர் வேறு யாருமல்ல. ராமராஜ் என்ற ஒரு ராணுவ அதிகாரி தான்.

   • மாவோயிஸ்டுகள் சீனா போடும் எலும்பு துண்டுக்காக செய்யும் கொலைகளை பார்க்கும் பொழுது இராணுவன் செய்யும் தவறுகள் மிகக் குறைவு.

    உங்களுக்கு சீன இராணூவம் செய்யும் தவறுகள் தெரியாதா?

    என்ன கொடுமை இது, காவல் துறையில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே? விசாரணை செய்யாமல் எப்படி கைது செய்ய இயலும். இராணுவ அதிகாரி என்ன சங்கராச்சாரியாரா விசாரணை செய்யாமல் கைது செய்வதர்க்கு…

    சம்மந்தபட்ட முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உரிய விசாரணை நடை பெற்றுவருகிறது.

  • \\வேதனையான விஷயம், நிச்சயம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.\\

   சட்டம் தன் கடமையைச் செய்யும். தொப்பி தொப்பி சொல்லிட்டாரப்பா

   \\இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே. \\

   சேரியில பொறந்தா முட்டாப்பசங்களாத்தான் இருக்க முடியும். பின்னே. சின்னப்பையந்தானே செத்து போயிருக்கான். இதுக்கெல்லாம் மறியல் செஞ்சா அடி உதைதான் விழும். பறப்பயலுவோ. இல்லயா தொப்பி தொப்பி.

   \\வாதம் மர கொட்டை மட்டும் இல்லை பிஸ்த்தா கொட்டை, முந்திரி கொட்டை என எல்லாம் பல கொட்டையையும் சாப்பிடலாம் ஏன் மாங்கா கொட்டைய சாப்பிட்டா கூட குத்தம் இல்லை அது அவரவர் விருப்பம். ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்\\

   சேரிப்பயலுவோளுக்கு என்ன திமிரு. இவனுங்களுக்கு பாதாங்கொட்டை கேக்குதா. கொல்லு அவனுங்கள

   \\ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியையும், பயிற்சி எடுக்கும் இடத்தையும் ரிசர்வ்ட் ஏரியா என்று சொல்வார்கள் அதன் அர்த்தத்தை இந்த பாமர சேரி மக்களுக்கு முன்பே அரசு விளக்கி இருக்கவேண்டும். இப்போது ஐந்து லட்சம் கொடுப்பதால் என்ன பயன்?\\

   தொப்பி தொப்பி. இவனுங்களுக்காக ஐந்து லட்சம் வரை நீங்க பேரம் பேசி அரசாங்கத்திடம் வசூல் செய்து கொடுக்க முன்வந்ததற்கு ரொம்பநன்றி. அப்படியே ஒவ்வொரு சாதியினருக்கும் ராணுவம் என்ன விலை வைத்திருக்கிறது என்று கூறி விட்டால் நாங்கள் குண்டடிபட்டு சாகும்போது எங்கள் விலை என்ன என்று தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அப்படியே காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம் இங்குள்ளவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் என்ன விலை என்றும் கூறிவிடுங்கள். உங்கள் புரோக்கர் கட்டணம் எவ்வளவு என்றும் கூறி விடுங்கள்.

   \\இருந்தாலும் அந்த ராணுவ அதிகாரி செய்தது குற்றமே அந்த சிறுவனை மிரட்டி அல்லது தண்டித்து அனுப்பி இருக்கலாம் இப்படி ஒரே அடியாக அனுப்பிவிட்டார்\\

   என்ன ஒரு பரிதாபம். ஐயோ பாவம்(அந்த ராணுவ அதிகாரி)

   \\ராணுவத்தினர் மேல் எப்போதும் மரியாதையுடன் அணுகுவதே நல்லது. இந்த விவகாரம் நாளை தமிழக மக்களுக்கு எதிரான ஒரு எரிச்சலை ராணுவத்தினரிடம் உருவாக்கி விட கூடாது\\

   ஐயோ எனக்கு ரொம்ப பயமாகி விட்டது. ராணுவத்தார் என்னையும் இப்படித்தான் சுட்டுக்கொன்று விடுவார்களா.நான் அவர்களிடம் ரொம்ப மரியாதையுடன் இனி அணுகிக்கொள்கிறேன். இல்லையென்றால் அவர்கள் எரிச்சலில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் கொன்று விட்டால் . . .

 8. ஒரு சில ராணுவ வீரர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த ராணுவத்தையும் குற்றம் சாட்டுவது சரியல்ல..

 9. //இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது//

  இதைதான் வேண்டாம் என்கிறேன். இப்படி போராடுகிறேன் என்று இந்திய ராணுவத்தினருக்கு எதிராக எழுதுவதும், கண்டிப்பதும் தவறான செயல்.

  தயவு செய்து வினவு இதுப்போன்று எழுத, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.

  • தொப்பி தொப்பி
   இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை நூற்றுக்கணக்கான மக்களை கொன்று, பெண்களை வன்புணர்ச்சியும் செய்திருக்கிறது. இன்றளவும் இது ஈழத்து மக்களிடம் ஆறாத வடுவாகத்தான் இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இதைக் கண்டிக்காமல் இராணுவத்தின் கீர்த்திக்கு அவப்பெயர் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று ஏன் கோருகிறீர்கள்?

   • இதற்க்காகத்தானே இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தியை ‘மேலே’ அனுப்பினார்கள்…

    இந்திய ராணுவம் புரையோடிப்போய் ரொம்ப வருஷம் ஆச்சு…

    இந்திய ராணுவ வரலாற்றில் தில்ஷன் விஷயம் பத்தோடு பதினொன்னு.

   • அதுவும் அமைதி காக்கும் படை என்ற போர்வையில் வந்து…

   • Modhalla, inga irukka tamizhargal nalla irukkatum avanavan kalaikella 2 poradhukku edam illama thavikiran, 1 vera saaapatukku kashtapadran idhule ivanunga srilankan tamilsa pathi pesaranunga.. Poi washermanpet, Royapuram sidela trainla poittu va avanga padra avastha theriyum.. idhulla ilangai onnu thaan korachal…

  • //எதிராக எழுதுவதும், கண்டிப்பதும் தவறான செயல். // ஏன்?

  • //இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது//

   நண்பரே THOPPITHOPPI இந்த கூற்று சரியா தப்பா? அதை சொல்லுங்க

   //தயவு செய்து வினவு இதுப்போன்று எழுத, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.//

   மேலே உள்ளதிற்கு பதில் சொல்லுங்கள் அதற்கு வினவு ஊக்கு விக்கிறது ஹேர் பின் விக்கிறது பத்தி பேசுவோம்

 10. இதே போன்ற ஒரு சம்பவம்= ஓரான்டுக்கு முன்,அதே பகுதியில் ரானுவ வீரன் ஒருவன் ட்ராபிக் சிக்னலை மதிக்காமல் மிகப்பெரிய ரானுவ லாரியை ஓட்டி, எதிரில் வந்த வயதான ஒருவரைக் கொன்றான்.நினைவிருக்கிரதா? அவன் இப்ப எங்கே என யாருக்காஷும் தெரியுமா?

  இவனுங்கலுக்கு பெரிய புடுங்கீங்கன்னு நெனப்பு, தின்னு கொழுத்த மயிரான்டிங்க.

 11. யோவ் தொப்பி! ஒரு குழந்தைப் பையன் இதைச் செய்தது தப்பா? அதுக்கு அவன கொல்லுவானுக்ளா?

 12. ஒரு சில ராணுவ வீரர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த ராணுவத்தையும் குற்றம் சாட்டுவது சரியல்ல.
  Absolutely right. But, now the military is trying to hide the fact. So, is there anything wrong if we blame the military?

  • //ஒரு சில ராணுவ வீரர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த ராணுவத்தையும் குற்றம் சாட்டுவது சரியல்ல.//

   ஒரு சில ராணுவ வீரர்கள் இந்தியாவில் இத்தனை ஆண்டு காலம் செய்துள்ல பல்வேறு கொடுங்குற்றங்களில் எதாவது ஒன்றாவது தண்டிக்கப்பட்டுள்ளதா? இல்லையெனில் இது ஒரு சில ராணுவ வீரர்களின் குற்றமா இல்லை ஒட்டுமொத்த ராணுவமே வெறிநாய் போல கொழுப்பெடுத்த திமிரில் திளைப்பது காரணமா?

 13. Erunthum koduthaan.. eranthum koduthaan DILSON…DILSON erappil naatin akkiramathaium !,veetin sogathaium !,veethin nilamaiyai !! velluchathirkku kondu vanthullaan.. Ennum naatil yethanai DILSON erakkapogirarkalo…. Eranthaarkalo..??

 14. தமிழர்களை ஈழத்தில்தான் இந்திய ராணுவம் கொன்று கொண்டு இருந்தது,இப்பொழுது அது தமிழ்நாட்டிலும் அது நடக்கிறது.பயிற்சி பெற்று நாட்டின் எல்லைக்குள் நுழையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட்டுட்டு ஒரு குழந்தையை கொன்ற அந்த ராணுவ வீரர் தன வழ நாள் முழுவதும் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு சேவை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்க வேண்டும்.அதே போல் எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்,அது என்ன ராணுவ குடியிருப்புக்கு மட்டும் ஆயுதம் ஏந்திய காவல்,இதியாவில் வாழும் மற்ற குடும்பங்களின் உயிர்களுக்கு மதிப்பு இல்லையா ?

 15. பிரேதப் பரிசோதனை எல்லாம் நல்லா பண்ணச் சொல்லுங்க. திடுக்கிடும் உண்மை ஏதாவது தெரிய வரலாம். enna பெரிய திடுக்கிடும் உண்மை இருந்திடப்போவுது? ஆசிரமத்தில்தான் என்றில்லை, ARMY யிலும் ஒரு மார்க்கமாய், அலையும் கருப்பு ஆடுகள் உண்டு. ஏதேனும் பலாத்காரம் செய்துவிட்டுக்கூட சுட்டுத்தள்ளியிருப்பார்கள்

 16. கார்கிலில் தூங்கிவிட்டு, எதிரிகள் கண்ணெதிரே வரும்வரை துப்பாக்கியை காலிடுக்கில் வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தவர்கள்தான்,, இன்று குடியிருப்பு பகுதி சிறுவனை கொன்றிருக்கிறார்கள் ! உடனே, சில குலகொழுந்துகள், நம் ராணுவத்தை மட்டம் தட்டியதாக கூப்பாடு போட வேண்டாம் ! உண்மை அதுதான் ! நம் வீரர்களுக்கு, எதிரிகளை அடையாளம்காணும் தகுதி குறைந்து விட்டது போலும் !

 17. இந்த கொலையை செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சந்தடி சாக்கில் இதிலேயும் உங்க ‘வேலை’யை காட்டுவது தான் இடிக்கிறது.

  • சீனு.., என்ன வேலை வித்தின் கோட்ஸ் பற்றி பேசுகிறீர்கள்?

  • சீனு உங்கள் மாற்றுக்கருத்து இல்லாத மனிதாபிமானம் வாழ்க! ஆனால் எவ்வாறு தண்டிக்கப் போகிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்களேன். கொன்றவன் யாரென்று தெரிந்தும் இன்னும் ஏன் கைது கூட செய்ய முடியவில்லை? கைது கூட செய்ய முடியாத அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது என்றால் அது ஏன்? கொலையே செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் அன்று விதிவிலக்கு அளித்தது மனுஸ்மிருதி, இன்று அதிகார ஸ்மிருதிகள் இராணுவம், போலீசுக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கின்றன. வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடைப்படை கொன்றதற்கும், கற்பழித்ததற்கும் எந்த கணக்கும் இல்லை. இன்றளவும் யாரும் தண்டிக்கப்படவில்லை. இதெல்லாம் ஏனென்று யோசித்தால்தான் எங்கள் வேலையைக் காட்டுவது புரியும். சரி, இணையத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் யதார்த்த நிலவரம் தெரியாது என்பதால் யார் என்ன செய்ய முடியும்?

   • உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    நீங்க என்ன சொல்லப்போறீங்க? இந்த நாடும் இந்த நாட்டு சட்டமும் வேலைக்கு ஆகாது. வாங்க கம்யூனிஸத்த புடிச்சுக்கலாம். எல்லோரும் ஒன்னா கை கோத்து பாட்டு பாடலாம்னு தான் சொல்லபோறீங்க. எழவு வீட்டுலயும் வந்து பிரச்சாரம் பன்னுவீங்க. வேற என்ன செய்வீங்க?

   • Adhavadhu vinavuin paarvayil kolaikaragal veerapppan, Poolan devi,naxalites, terrorists, prabhakaran ellam nalavunga police, Army, commandos ellam kettavunga.. sabhash!!!idhu thaan pudhiya jannayagamo!!! nalla velai AIADMK jeyichuthu

    • தாமஸ், உங்களைப் போன்ற அதிகார வர்க்க கைக்கூலிகளுக்கு ராணுவம் செய்தது சரியாகத்தான் தெரியும்.. தாங்கள் வினவைத் தொடர்ந்து படிப்பவர் இல்லை போலும்..விடுதலைப்புலிகள் செய்த தவறுகளையும் வினவு கண்டித்திருக்கிறார்கள்..

 18. //? பிறகு ஏன் ராணுவத்தினரை ஏதோ சதிகாரர் போல் சித்தரிக்க வேண்டும்?//
  நமக்கு தேசபக்தி கற்றுக் கொடுத்து விட்டு, பணம் படைத்தவர்கள் ஏழைகளை கொல்கிறார்கள் என்பது தெரியவில்லையா? உங்கள் தேசபக்தி பணக்காரர்களுக்கா? ஏழைகளுக்கா?

  • தேசம் பனம்படைதவர்க்கு… பயமும் பக்தியும் ஏழைகலுக்கு…. இதுகேல்லாம் நடுவுல இருக்குர சமியார் புரோக்கர் தா ராணுவம்

 19. என்ன சொல்ரதுனெ தெரியல. அந்த அம்மாவ அவஙக கஷ்டபட்ரத நெனட்ச கஷ்டமா இருக்கு. ஒரு பையனொட மதிப்பு இவ்லொ தானா. நம்மல பதுகாக்க வேன்லடிய இரானுவமெ இப்படி நம்மல கொன்னா என்ன ஆகர்து. அம்மா சந்தி அம்மா நன்க இத அரசியல் ஆக்கல மா நீ தா அப்படி ஆக்குர.. அம்மா ஆட்சி இன்னு நீ தா அரசியல் பெசர…. உன் வீட்ல நடந்த அம்மா வந்து சரி பன்னுவஙக சரியா மா….. இந்த நாட்ல அரசியல் வாதிகலும் சினிமா காரஙலும் அதிகாரிகலும் சரியா இருந்தா இந்த வினவுக்கே வேல இல்ல…. மா…

 20. ஒவியா நீஙகல் கேட்பது சரி தா…. தேசம் பனம்படைதவர்க்கு… பயமும் பக்தியும் ஏழைகலுக்கு….

 21. குறைந்து விட்டவில்லை ஏட்கிசலிச்ட் குடித்து விட்டு நம் வரி பனத்தை குறைந்து கொன்டு இருகிரர்கல்

 22. தீவிரவாதிய கொல்லுக கொல்ல அடிகிரவனை கொல்லுக ஊழல் பன்ரவனை கொல்லுஙகடா நா பயபுல்லைஙக நம்மலியே கொல்லுதுஙக…..

 23. //”இந்த அதிகார கொழுப்புத்தான் சென்ற தலைமுறையில் மாந்தோட்டத்தில் மாங்காய் பறிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சிறுவர்களை கட்டி வைத்து சவுக்கினால் விளாச வைத்தது. இதே கொழுப்புத்தான் நந்தனை உயிருடன் எரித்தது. சவுக்கினால் பண்ணையடிமையின் தோல் உறிவதைப் பார்த்து அன்று பண்ணையார்கள் சிரித்தார்கள். நந்தன் எரிவதைப் பார்த்து தீக்ஷிதர்கள் ஆர்ப்பரித்தார்கள். இன்று தில்சன் குண்டடிப்பட்டு இறந்ததைப் பார்த்து இராணுவ அதிகாரிகள் புன்னகைக்கிறார்கள். அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது //” A TRUE WORDS. UNLESS WE FEEL THIS HAPPENS TO US AND WE REVERT WITH OUR OPPOSITION THIS WILL KEEP CONTINUING

 24. //முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவர்தான் சேர்மன் என்பதால் அவரிடம் முறையிட வேண்டுமா? மக்கள் மறியல் செய்திருப்பதால் இது இந்த அளவுக்காவது வெளியே வந்திருக்கிறது. இல்லையேல் இதை கூண்டோடு மூடியிருப்பார்கள். //

  //இராணுவம் என்ன செய்தாலும் அதை சட்டப்படியே கேட்க முடியாது என்ற நிலைதான் தற்போது அந்த அதிகாரி குற்றவாளி காப்பாற்றபடக் காரணம். இதை எப்படி மாற்றுவது? யாரிடம் சென்று முறையிடுவது? கொஞ்சம் விளக்குங்களேன்!//

  ஆட்சியாளர் அலுவலகத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ முறையிடலாம், முற்றுகையிடலாம். நமது பிரச்னையை தீர்ப்பதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். சாலை மறியல் செய்தால் ஜனாதிபதி வந்துவிடப்போவது இல்லை. இதனால் பாதிக்கப்படப்போவது இன்னொரு சராசரி குடிமகன்தான்.

  // இராணவ ஏரியாவில் உள்ள வீட்டு, அலுவலக, சுத்தம் இதர வேலைகளுக்கு மட்டும் சேரி மக்கள் வேண்டுமா? ஏன் அதைக்கூட இராணுவ அதிகாரிகளே செய்தால் யாரும் உள்ளே நுழைய முடியாதே?//

  கோவில் பூசாரியாக இருந்தாலும் கோவிலுக்குள் போக ஒரு வரைமுறை, நேரம் இருக்கு.
  இந்த சேரியில் இருப்பவன் நாளை படித்து ராணுவ அதிகாரியாக வந்தால்?

  //தன் வீட்டு மரத்தில் உள்ள காயைத்தான் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு சொந்தமாக வீடும், தோட்டமும் வேண்டும். அதன்படி மாளிகை தோட்டம் உள்ள பண்க்காரர்கள் மட்டுமே சாப்பிட முடியும். இது ஏழைகளை இழிவுபடுத்துவதாக உள்ளது.//

  இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. ஒருவகையில் திருட்டை நீங்கள் நியாயப்படுத்துவது போல்தான் உள்ளது. பிறக்கும்போதே ராணுவ அதிகாரியாகவோ, பணக்காரனாகவோ பிறப்பதில்லையே? சுவர் ஏறி பறித்து திண்பது இழிவு செயல்தான்.

  //நிஜ இராணுவத்தின் அட்டூழியத்தை இலங்கைக்கு சென்ற அமைதிப் படையின் வக்கிரங்களில் இருந்தும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்//

  இங்கே நமது சூழ்நிலை என்ன என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். இலங்கையில் நடந்தது வேறு இங்கு நடப்பது வேறு. வக்கிரங்கள் என்பது இந்திய ராணுவத்தினரிடம் மாட்டும்தான் இருக்கிறது என்று யார் சொன்னது? அமெரிக்க ராணுவமாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து ராணுவமாக இருந்தாலும் சரி சந்தர்ப்பம் கிடைத்தால் வக்கிரங்கள் அரங்கேறத்தான் செய்யும். இங்கே நல்லவன் கேட்டவன் ராணுவத்தை பொறுத்து இல்லை மனிதர்களை பொறுத்து.

  நாயாக இருந்தாலும் அதை நாம் அணுகும் விதத்தில் அணுகினால்தான் வால் ஆட்டும் எட்டி உதைத்தால் பதிலுக்கு கடிக்கத்தான் செய்யும்.

  //இராணுவம் என்பது நீங்கள் நினைப்பது போல நமது மக்களை காக்கும் அமைப்பல்ல. அது இந்த நாட்டின் முதலாளிகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளை பாதுகாக்கும் அமைப்பு. அதனால்தான் மக்களைக் கொல்லும் இராணுவத்தை நமது அதிகார அமைப்புகள் பாதுகாக்கின்றன.//

  இந்திய ராணுவத்தை நான் போற்றி புகழவில்லை, அவர்கள் நல்லவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று வாதாடவில்லை. நிறைய தவறுகள் உண்டு, அடிப்படை தவறு. ஒருவன் இங்கே அதிகாரியாக வரும்போதே தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டுதான் பதவி ஏற்கிறான். ஒரு சிலர் அதற்காகவே பதவியை அடைகிறார்கள். இங்கே நாம் மாற்றத்தை கொண்டுவர வேண்டியது அடிப்படை சட்டத்தில் தான், உரிமைகளில்தான். அதற்காக நான் ஒட்டு மொத்த ராணுவத்தையே எதிர்ப்பேன் அவர்கள் சரியில்லை என்று போராட நினைத்தால் இலங்கை நிலைதான் நாளை நமக்கும்.

  எந்த ஒரு போராட்டத்தையும் தேச பற்றுடன், தேச நலனுடன் நோக்கினால்தான் முடிவு இனிதாக இருக்கும். இல்லை நான் ஒட்டுமொத்தமாக எதிர்க்கப்போகிறேன் என்று ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குறை கூறினால் பிரிவினைதான் மிஞ்சும் இலங்கையில் ஏற்ப்பட்டது போல். அங்கே நாளை ஈழமே மலர்ந்தாலும் வாழப்போவது யார்? இழந்த உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் என்ன பதில்?

  உங்களுடைய இந்த பதிவில் அதிகமான நண்பர்கள் இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு இழிவாக அவர்களை பேசும்போது வருத்தமாக உள்ளது. இங்கே பிரிவினை விதைக்கப்பட்டு வருகிறது. நமது போராட்டம் நமது நாட்டின் நலனில் இருக்கவேண்டுமே தவிர நாட்டையே எதிர்த்து இல்லை. எல்லாவற்றுக்கும் தனி நாடு தீர்வு ஆகாது. செருப்பு சரியில்லை என்று காலையே வெட்டும் செயல்தான் இந்திய ராணுவத்தையே குறை கூறுவது, எதிர்ப்பது.

  • தொப்பி,
   நீங்கள் நிறைய விஜயகாந்த படம் பார்பவர் போல தெரிகிறது.

   எந்த நாட்டு ரானுவமாக இருந்தாலும் அவர்களை முறையாக விஞ்ஞான பூர்வமாகவே குரூரர்களாக() மாற்றுவார்கள். இல்லையென்றால் அவர்களல் போரில் தொடர்ச்சியாக கொலை செய்துக்கொண்டே இருக்க முடியாது.அதனால் எந்த சூழ்நிலையிலும் ராணுவ வீரர்கள் என்பவர்கள் மூர்கமாக இருப்பது அவசியமாகிறது.

   ராணுவம் என்பது நாட்டுநலனுக்காக என்று நீங்கள் வாதாடுகிறீர்கள், தண்டகாரின்யாவில், சொந்த மக்களை தனியாருக்காக இந்தியா ராணுவம் தான் வேட்டையாடுகிறது என்பதும், காஷ்மீரில் சொந்த மக்களை சொலை செய்வதையும் ராணுவம் தான் செய்கிறது அதாவது நீங்கள் சொல்லும் தேச நலன், தேச பக்தி போன்றவற்றை ராணுவம் முதலில் மனதில் வைத்துக்கொண்டாலே இந்த கொலைகள் தவிற்கப்படும் ஆனால் அவர்களோ ஆளும் வர்கத்தின் கைப்பாவை அதனால் தான் நாம் ராணுவத்தை சாடுகிறோம்.

   15 வயதுக்கு முன் வரை சிறுவர்கள் இப்படி மரம் ஏறி திருடுவது இந்தியா முழுவதுமே நடக்கும் அதற்கு கொலை செய்தது என்பதின் பின் உள்ள குருரத்தை பாருங்கள்.

   சுட்டவனுக்கு தெரியாத, நாம் சுடுகிறோம், உயிர் போகும், அது தவறு என்பது.
   சரி சுட்ட பின் ஏன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவில்லை? ஏன் இலை தழைப் போட்டு மூடினார்கள்? ஏன் ரத்தத்தை கழுவினார்கள்?

   உங்கள் வாதத்தின் படி அவர்கள் இந்தியாவில் தானே உள்ளார்கள், செத்தவன் இந்தியாவை சேர்ந்தவன் தானே , தேச நலன் அந்த ராணுவ அகடெமிக்கு இல்லையா? இருந்தால் ஏன் அவர்களே முன் வந்து குற்றவாளியை ஒப்படைகாமல் ஏன் மறைக்கிறார்கள்? குற்றாவாளியை ஒப்படைத்து முன் மாதிரியாக திகழலாமே?

   • //நீங்கள் நிறைய விஜயகாந்த படம் பார்பவர் போல தெரிகிறது.//

    நான் நிறைய விஜயகாந்த் படத்தை பார்த்து இப்படி எழுதுகிறேன் என்றால் நீங்கள் எந்த படத்தை பார்த்து இப்படி எழுதுகிறீர்கள்?

    இதற்கு மேல் விவாதம் செய்ய விரும்பவில்லை.

    உங்களுடைய எழுத்தும் போராட்டமும் இந்திய ராணுவத்தினருக்கு, இந்தியாவிற்கு எதிராகத்தான் என்றால் என்னுடைய எழுத்து உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.

    • //உங்களுடைய எழுத்தும் போராட்டமும் இந்திய ராணுவத்தினருக்கு, இந்தியாவிற்கு எதிராகத்தான் என்றால் என்னுடைய எழுத்து உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.//

     பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக எழுதினால், போராடினால் அது தேச துரோகம் என்பதையும், படுகொலையே செய்தாலும் அதிகாரத்தில் இருக்கும் காட்டுமிராண்டி இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சொம்பு தூக்கினால் அது தான் தேசபற்று என்பதையும் பொட்டில் அடித்தாற்போல உங்களைவிட வேறு யாராலும் தெளிவாக சொல்லிவிட முடியாது.

     இதுபோல, ஹிந்திய தேசப்பற்றுக்கான விலை என்னென்ன என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தொடர்ந்து உங்களை வினவில் விவாதிக்க எதிர்பார்க்கிறேன்(றோம்(?)).

    • //உங்களுடைய எழுத்தும் போராட்டமும் இந்திய ராணுவத்தினருக்கு, இந்தியாவிற்கு எதிராகத்தான் என்றால் என்னுடைய எழுத்து உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்//

     இந்தியா ராணுவம் மக்களுக்கு எதிரானதாக இருக்கும் வரை எங்கள் எழுத்தும் போராட்டமும் இந்திய ராணுவத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்.

  • தொப்பி,

   “நமது ராணுவம்” என்று மக்களுக்கு இருக்கும் உணர்வைப் போன்று “நம் மக்கள்” என்ற உணர்வு இராணுவத்திற்கு இருப்பதில்லை.

  • //இலங்கையில் நடந்தது வேறு இங்கு நடப்பது வேறு. வக்கிரங்கள் என்பது இந்திய ராணுவத்தினரிடம் மாட்டும்தான் இருக்கிறது என்று யார் சொன்னது? அமெரிக்க ராணுவமாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து ராணுவமாக இருந்தாலும் சரி சந்தர்ப்பம் கிடைத்தால் வக்கிரங்கள் அரங்கேறத்தான் செய்யும். இங்கே நல்லவன் கேட்டவன் ராணுவத்தை பொறுத்து இல்லை மனிதர்களை பொறுத்து. //
   You are 100% correct sir.

   Because our kids are not going to face these issues, so let us talk whatever we like.

   //சந்தர்ப்பம் கிடைத்தால் வக்கிரங்கள் அரங்கேறத்தான் செய்யும்//
   But can’t you enquire and punish them heavily something like giving death sentence. Once they make mistakes they are criminals, they are not ARMY people. What stops you doing that. Why are you afraid of them? if they are great send your family members for them to kill or RAPE.

   • சரியா சொன்னீங்க shan, ராணுவ தொப்பி தூக்கிங்க எல்லாரும் உங்க மனைவி மக்களை அந்த வெறிநாய்ங்க கிட்ட அனுப்பி உங்க தேச பதிய காட்டுங்கடா…. பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைதான் கிடைச்சுதா?

  • தோப்பி தோப்பி சொல்வது மிகவும் சரி.நாட்டுநலனுக்காக ராணுவம் எவ்வளவு சேவை செய்துள்ளது. தெரியாதவர்கள் அர்சூன், விசயக்காந்து படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.நாட்டுநலனுக்காக ஒரே ஒரு சேரி சிறுவன் சாவட்டுமே.

   “எந்த ஒரு போராட்டத்தையும் தேச பற்றுடன், தேச நலனுடன் நோக்கினால்தான் முடிவு இனிதாக இருக்கும். இல்லை நான் ஒட்டுமொத்தமாக எதிர்க்கப்போகிறேன் என்று ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குறை கூறினால் பிரிவினைதான் மிஞ்சும்”

   எப்படிப் போராடியிருக்கிறார்கள் பார்த்தீர்களா அந்த சிறுவனிடம் அணுகுண்டு இருந்ததாம். அதனால் கேள்வி கேட்காமல் சுட்டுக்கொன்று உள்ளனர். இதை விளக்கெண்ணை ஊற்றிய கண்ணுடன் உற்றுநோக்குங்கள்.நோக்கினீர்களா. இப்பொளுது முடிவு எவ்வளவு இனிதாக உள்ளது.

   “உங்களுடைய இந்த பதிவில் அதிகமான நண்பர்கள் இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு இழிவாக அவர்களை பேசும்போது வருத்தமாக உள்ளது. இங்கே பிரிவினை விதைக்கப்பட்டு வருகிறது. நமது போராட்டம் நமது நாட்டின் நலனில் இருக்கவேண்டுமே தவிர நாட்டையே எதிர்த்து இல்லை. எல்லாவற்றுக்கும் தனி நாடு தீர்வு ஆகாது. செருப்பு சரியில்லை என்று காலையே வெட்டும் செயல்தான் இந்திய ராணுவத்தையே குறை கூறுவது”

   எப்படிப்பட்ட தேசாபிமானி இவர்.நினைக்கவே புல்லரிக்கிறது. அவரை ரொம்ப வருத்தப்படுத்தி விட்டீர்களப்பா. இப்படி தேசதுரோகம் பேசும் வினவு போன்றவர்களை ராணுவ குடியிருப்புக்குள் அனுப்பி சுட்டுக்கொல்லப்படச் செய்யவேண்டும். பிரிவினை, தனிநாடு, செருப்பு, செருப்பில் ஒட்டிய சாணி, தொப்பி என்றெல்லாம் பேசும் வினவு போன்றோர் ஒழிக. ராணுவம்,நாட்டுப்பற்று,நாடு, செயலலிதா, தொப்பி தொப்பி மட்டும் வாளுக.

   • விப்ரக்ஷயம் விப்ரக்ஷயம். (பிராமணவாதம் ஒழிக பிராமணவாதம் ஒழிக)

  • ராணுவத்தினர் எப்படிப்பட்ட தேச சேவை புரிந்திருக்கிறார்கள். அருசூன், விசயக்காந்த்து படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் தோப்பி தோப்பி போல நாட்டுப்பற்று உடையவர்களாக மாறி விடுவீர்கள். பின்னர் நாட்டு நலனுக்காக சேரி சிறுவர்கள் பலியிடப்படுவதைப் பார்த்து செய்கிந்து செய்கிந்து என்று அலறுவீர்கள். குலையிடுவீர்கள்.

   “நாயாக இருந்தாலும் அதை நாம் அணுகும் விதத்தில் அணுகினால்தான் வால் ஆட்டும் எட்டி உதைத்தால் பதிலுக்கு கடிக்கத்தான் செய்யும்”

   அந்தப்பையன் நாயை எட்டி உதைத்து குண்டடி பட்டு செத்துப்போனான். இதில் என்ன தவறு கண்டீர்கள். உரக்கக் கூவுங்கள் செயகிந்து என்று. ராணுவம் வாழ்க

   “எந்த ஒரு போராட்டத்தையும் தேச பற்றுடன், தேச நலனுடன் நோக்கினால்தான் முடிவு இனிதாக இருக்கும். இல்லை நான் ஒட்டுமொத்தமாக எதிர்க்கப்போகிறேன் என்று ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குறை கூறினால் பிரிவினைதான் மிஞ்சும்”

   எப்படிப்பட்ட போராட்டம் இது. அந்த பையன் அணுகுண்டை வைத்துக்கொண்டு அல்லவா வந்திருந்தான். அவனை கொல்லாமல் விட்டால் இந்தியத் தாய்த்திருநாட்டை அல்லவா தகர்த்திருப்பான். இந்த போராட்டத்தை நன்றாக நல்லா தேச பற்றுடன், தேசநலனுடன் நம் அண்ணன் தொப்பி தோப்பி போல கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு உற்றுநோக்குங்கள். நோக்கினீர்களா. இப்பொழுது முடிவுநன்றாக இனிதாக இருந்ததா.

   “உங்களுடைய இந்த பதிவில் அதிகமான நண்பர்கள் இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு இழிவாக அவர்களை பேசும்போது வருத்தமாக உள்ளது. இங்கே பிரிவினை விதைக்கப்பட்டு வருகிறது. நமது போராட்டம் நமது நாட்டின் நலனில் இருக்கவேண்டுமே தவிர நாட்டையே எதிர்த்து இல்லை. எல்லாவற்றுக்கும் தனி நாடு தீர்வு ஆகாது. செருப்பு சரியில்லை என்று காலையே வெட்டும் செயல்தான் இந்திய ராணுவத்தையே குறை கூறுவது, எதிர்ப்பது”

   எப்படிப்பட்ட ஒரு தேசாபிமானியை வருத்தப்பட வைத்து விட்டீர்கள்.இப்படி ராணுவத்தை தேசத்தை, தேசப்பற்றை குறை கூறி பிரிவினைவாதம் பேசும் கேடு கெட்டவர்களை ராணுவ கேம்பசுக்குல் விட்டு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படச் செய்ய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுக்கு அறிவு வரும்.நம் மதிப்பிற்குரிய ராணுவமும் டிரைனிங்குஎடுடத்தது போல் ஆகும். இப்படி சேரிப்பையன், குண்டடி,பிரிவினை, செருப்பு செருப்பில் ஒட்டிய சாணி, தொப்பி என்று பேசும் வினவு போன்றோர் ஒழிக. ராணுவம்,நாட்டுப்பற்று, தேசத்துக்கு சொம்புதூக்குதல், செயலலிதா, தொப்பி தொப்பி ஆகியோர் மட்டும் வாழ்க.

 25. ஸ்டிக்கர் பொட்டு
  ………………………………..

  “ஆட்டுத் தொட்டி.”
  “ஆறு அம்பது.”
  “மூணு அம்பதுதானே?”
  “சொகுசு போர்டு. பாக்கலையா? எறங்கிடு.”

  ***

  “ஆப்பிள் எவ்ளோ?”
  “………….”
  “ஆசுபத்திரிக்குப் போகணும். நேரம் ஆகுது. கேட்டேன்ல? ஆப்பிள் எவ்ளோ?”
  “……………………………………………………………………………………”
  “கிலோ நூறு?”
  “அப்படியே வச்சிடு. ஆப்பிள்மேல ஸ்டிக்கர் ஒட்டியிருக்கே… உன் கண்ணுக்குத் தெரியலை? குருடா நீ?
  பெருசா வெல கேக்கற? பரதேசி, மூதேவி, காலங்காத்தால வேணாம்… போய்டு, போய்டு. நிக்காத..”

  ***

  “நான் முன்னூறு ரூபா டிக்கெட்டு! தள்ற?”
  “தள்ளிப் போரா, கொம்மன் தெங்…”
  “தள்ளாத. திட்றயா? எங்கிட்ட, வெங்கட் நாராயணா ரோட்ல ரேகை வச்ச டிக்கெட் இருக்கு.”
  “உங்கிட்ட பூணூல் இருக்கா?”
  “ஸோ வாட்…?”
  “தோடா…, பீத்தர… பீத்தர, ரெண்டையும் மூடிக்கிட்டு வழிய விடு. இல்லைன்னா, போலீச விட்டே உன்னை ஒதைச்சு உன் ஊருக்கு அனுப்பிடுவேன்! எங்கிட்டையே ‘லா’ பேசறயா நீ?!!”

  ***

  “கட்சித் தலைவர் படம் போட்ட கல்யாணப் பத்திரிக்கையை எடுத்து, டாஷ்போர்டு முன்னால தெரியுராப்ல வை. பேனட் முன்னால கொடியக் கட்டுனியா? நான் இருபது நிமிஷத்துல அமிஞ்சிக்கரையிலேர்ந்து, அண்ணா நகர் தாண்டி, அடையார் வழியா, ஈ சி ஆர் போய்டணும். பார்ட்டிக்கு நேரமாச்சு. பார்த்து…! மெதுவா, மெதுவா…, பதஷ்டமில்லாம, நோ என்ரிலக்கூட பூந்து, சிக்னல் எதையும் மதிக்காமப் போ…! யாரும் நம்ம கேள்வி கேக்க முடியாது.”

  ***

  “மட்டையாயிடாத மச்சி. உன் பைக்குல பறந்து பத்தே நிமிஷத்துல வீட்டுக்குப் போய்டுவ. உன் டிரைவிங்கப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? எதுக்கும் உன் நம்பர் பிளேட்டில ‘ப்ரெஸ்’ ஸ்டிக்கர் ஒட்டியிருக்கியான்னு பாத்துக்கோ. ஏன்னா எந்தக் கேனக்கூவுக்கும், இந்த அர்த்த ராத்திரில நின்னு நீ பதில் சொல்லத் தேவையேயில்லே…!”

  ***

  “சுடலாமா?”
  “நீ சுடு. யாரும் கேக்கமாட்டாங்க. ராஜீவ் காந்தியக் கொன்னதாலதான், மீனவங்கள, சிங்கள ராணுவம் பழி வாங்குறதா, இந்தியா பூராவும் நினைச்சுக்கிட்டிருக்கு. அதனால, சுடு. இதை யாருமே கண்டுக்க மாட்டாங்க!”

  ***

  “இதோ நான் போதையிலிருக்கேன்.
  ஆனால் ராணுவத்திலும் இருக்கேன்.
  இருந்தாலும், தின்றுக் கொழுத்து, சும்மாவே இருக்கேன்.
  இருந்தாலும் என் திறமையைப் பார் நீ…!

  அதோ… அந்த பாதாம் மரத்தைச் சுடவா?
  நம்பிக்கையில்லையா?
  சரி. பாதாம் மரத்தின் மேலிருக்கும் பையனைச் சுடவா?
  இதோ… இதோ… சுட்டுவிட்டேன்…
  நான் ராணுவத்திலிருக்கும் நம்பிக்கையில், சுட்டுவிட்டேன்.

  யாரும், எதிலும், எல்லாவற்றிலும், தப்பிக்கவேணுமென்றால்,
  அவன் பிட்டத்தில் ஏதாவத்து ஒரு கவுரவ ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருக்கவேணும்.
  நான் ஒண்ணும் பிதற்றவில்லை. நாட்டு நடப்பத்தான் சொல்கிறேன்!.
  நீ யாரை வேணுமென்றாலும் கேட்டுப் பார்!.”

 26. இராணுவத்தார் செய்தாலும் தண்டிக்கும் நீதி நிலைநாட்டப்பட்டால்தான் மக்களுக்கு பாதுகாப்பு,இல்லையேல் வேலியே பயிரை மேய்ந்த கதை தான். இதை வன்மையாக கண்டிக்கிறோம் கடுமையாக தண்டிக்கும் வரை……

 27. சாதாரணமானவன் குற்றம் செய்தால் சாதாரணமாக தண்டிக்க வேண்டும்.
  பொறுப்பில் உள்ளவன் குற்றம் செய்தால் பொறுப்புடன் தண்டிக்க வேண்டும்.

  பதவி உயரும்போது சம்பளமும் உயர்வதை போல், தண்டனையும் உயர வேண்டும்.

  பதவிவரும் போது பணிவு வரவேண்டும், துணுவு வரவேண்டும், இருமாப்பும் கர்வமும் அல்ல. பட்டி ஆட்டை திண்ணும் வெறி நாய்க்கு என்ன் தண்டனை.

 28. “அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியைப் பெற வேண்டுமானால், “ஆயுதம்” மக்களுக்கு கட்டாயத் தேவையாக இருக்கிறது” என்பதையே அனைத்து ராணுவ விதிமீறல்களும் நமக்குப் புரிய வைக்கின்றன.

 29. அது என்ன இராணுவ ‘வீரன்’?

  கூலிக்குத்தானே இராணுவத்தில வேலை செய்யிரானுங்க?
  அப்ப இராணுவ கூலி /தொழிலாளி என அழைக்க வேண்டியது தானே?

  கிரிக்கெட் ஆடுறவனை கூட கிரிக்கெட் ‘வீரன்’ என பெருமையாய் கொண்டாடும் மக்களுக்கு மாங்காய் பறிப்பவனை சுட்டுக்கொலபனும் ‘வீரன்’ தான்!

 30. வாதாம் கொட்டை திருடுவது, மாங்காய் திருடுவது, நாவல் பழம் திருடுவது போன்ற சிறு சிறு திருட்டுகள் மரத்தின் சொந்தக்காரர்களுக்குத் தெரியாமல் இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் ஒரு சம்பவம். இங்கே திருட்டு மூட்டை மூட்டையாக கொள்ளையடித்து விற்பனைக்கு அள்ளிச் செல்வதற்காக நடக்கவில்லை. ஒன்றிரண்டு கொட்டை, காய்களை ருசிப்பதற்காக நடப்பவை. ஏழைகள் மட்டுமல்ல நாவில் எச்சில் ஊறினால் சற்றே வசதி படைத்தோர்கூட இத்தகைய திருட்டில் ஈடுபடுவதுண்டு. மரத்தின் சொந்தக்காரர் பார்த்துவிட்டால் ஒரு அதட்டல் போடுவார் அல்லது திட்டுவார். திருடுபவர்களும் திட்டைவாங்கிக் கொண்டு நகர்ந்துவிடுவார்கள். சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலைகாரனே இத்தயை திருட்டில் சிறு வயதில் கண்டிப்பாய் ஈடுபட்டிருப்பான்.

  மிகச் சாதாரண இத்தகைய ஒரு சம்பவத்திற்கு உயிரையே ஒருவன் பறிக்கிறான் என்றால் அதுவும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறான் என்றால் அவனை இவ்வாறு செய்யத்தூண்டியது எது? முதலாவது வசதியானவன் ஏழைகளைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் கொழுப்பு. இரண்டாவது இராணுவத்தில் இருப்பதால் அதுவும் துப்பாக்கியை கையில் வைத்திருப்பதால் அவனிடம் குடிகொண்டிருக்கும் அதிகாரத் திமிர். இந்தக் பணக்காரக் கொழுப்பும் அதிகாரத் திமிரும் ஏதோ இந்தக் கொலைகாரனிடம் மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. வசதியும் அதிகாரமும் உள்ள ஆகப் பெரும்பான்மையினரிடமும் உள்ள பொதுவான குணம் இது. பக்கத்து வீட்டுக் காரனோடு ஏற்படும் ஒரு சிறு தாகறாருக்கே தனது காக்கிச் சட்டைத் திமிரை ஒரு சாதாரண காண்ஸ்டபில் காட்டும் போது ஒரு இராணுவ அதிகாரியிடம் இருக்காதா?

  நீதி எப்பொழுதுமே பொதுவானதல்ல. சாமான்யர்களுக்கான நீதி நிலை நாட்டப்படாதவரை தில்சன்கள் கொல்லப்படுவதும் நிற்கப் போவதில்லை.

 31. //கூலிக்குத்தானே இராணுவத்தில வேலை செய்யிரானுங்க?
  அப்ப இராணுவ கூலி /தொழிலாளி என அழைக்க வேண்டியது தானே?//

  வினவு தோழர்களே இதுதான் உங்களுடைய இந்த பதிவுக்கு கிடைத்த பரிசு.

  நீங்கள் இங்கே எதை விதைக்கிறீர்கள், எதை அழிக்கிறீர்கள்?

  வீட்டுக்குள் இருக்கும் சிலந்திக்கு வீட்டையே இடிக்கச்சொல்கிறது உங்களுடைய இன்றைய எழுத்து. இதற்கு ஆதரவும் பெருகி வருவது வருத்தமாக உள்ளது.

  நீங்கள் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். வினவு குப்பன் சுப்பன் இல்லை. கவனம் தேவை.

  • மாங்கொட்டை திருடினவனுக்கு மரணதண்டனை அளிப்போம். தட்டிக்கேட்பவன் தேசத்துரோகி. வாழ்க தொப்பி தொப்பியின் நாட்டுப்பற்று

  • தொப்பி தொப்பி,
   \\ஆட்சியாளர் அலுவலகத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ முறையிடலாம், முற்றுகையிடலாம். நமது பிரச்னையை தீர்ப்பதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். சாலை மறியல் செய்தால் ஜனாதிபதி வந்துவிடப்போவது இல்லை. இதனால் பாதிக்கப்படப்போவது இன்னொரு சராசரி குடிமகன்தான்.//

   சாலை மறியல்,ஆர்ப்பாட்டம் முதலான போராட்டங்கள் குறித்த தன்னல வெறி கொண்ட மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க பார்வை இது.வாழ்வதற்கு வழி கேட்டு போராடுபவர்களின் வாழ்வுரிமைகளை விட தங்களுக்கு நேரும் சிறு தொந்தரவுகளை பெரிதாக கருதுவது கேடு கெட்ட தன்னலமில்லையா. உடனே திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று சாலை மறியலால் அவசர ஊர்திகளில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள் இறந்து போக நேரிடும் என கதைக்க வேண்டாம்.மறியல் நடைபெறும் சாலையை தவிர்த்து விட்டு வேறு சாலை வழியாக சென்று விடலாம்.பெரும்பாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல் துறை வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

   தில்சன் கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல் நடந்த காயிதே மில்லத் பாலப்பகுதியை பயன்படுத்தாமல் பல்லவன் சாலை மற்றும் வடக்கு கோட்டைப்பக்க சாலையை பயன்படுத்தி போக வேண்டிய இடத்துக்கு போய் விடலாம்.ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தை விட ஒரு வாகன ஓட்டிக்கு ஏற்படும் சிறிதளவு சிரமம் பெரிதா என்ன.உண்மையில் மனசாட்சி உள்ள வாகன ஓட்டிகள் அந்த போராட்டத்தை உளமார ஆதரித்திருப்பார்கள்.

   சாலை மறியல் செய்தால் குடியரசு தலைவர் வர மாட்டார்.உண்மைதான்.பிரஞ்சு புரட்சிக்கு முன்பு ரொட்டி கிடைக்காத மக்களை கேக் சாப்பிட சொன்னாள் பிரஞ்சு பேரரசி.காரணம் அந்த மக்கள் வெறும் கையுடன் வந்திருந்தனர்.பின்பொரு நாள் அவர்கள் கையில் ”கில்லட்டினோடு” வந்தனர்.பிறகு என்ன நடந்தது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

   \\உங்களுடைய இந்த பதிவில் அதிகமான நண்பர்கள் இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு இழிவாக அவர்களை பேசும்போது வருத்தமாக உள்ளது. இங்கே பிரிவினை விதைக்கப்பட்டு வருகிறது. நமது போராட்டம் நமது நாட்டின் நலனில் இருக்கவேண்டுமே தவிர நாட்டையே எதிர்த்து இல்லை. எல்லாவற்றுக்கும் தனி நாடு தீர்வு ஆகாது. செருப்பு சரியில்லை என்று காலையே வெட்டும் செயல்தான் இந்திய ராணுவத்தையே குறை கூறுவது, எதிர்ப்பது.//

   நாடு என்று யாரை சொல்கிறீர்கள்.மக்களையா அல்லது அரசாங்கத்தையும் அந்த பெயரில் வயிறு வளர்க்கும் ராணுவம் மற்றும் அதிகார வர்க்கம் என்ற ஒட்டுண்ணி கும்பலையா.

   சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆவடியில் நடந்த நிகழ்வு இது.அப்பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து பொருள் வாங்க வந்திருந்த சில ராணுவத்தினருக்கும் கடைக்காரர்கள் சிலருக்கும் ஏற்பட்ட சிறு மோதலை தொடர்ந்து முகாமிலிருந்து பெரும் படையாக கிளம்பி வந்த படையினர் கடைவீதியில் இருந்த கடைகள் பலவற்றை அடித்து நொறுக்கியதோடு போவோர் வருவோர் என கண்ணில் பட்ட மக்கள் அனைவரையும் கொடூரமாக தாக்கினர். ”நமது இந்திய ராணுவம்” அவ்வப்போது இப்படி தனது முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு வருகிறது.உங்களை போன்றோர்தான் அதை பார்க்க மறுக்கிறீர்கள்.

   தில்சன் கொலை நடந்த வளாகத்திற்கு அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் சாப்பாட்டு கூடத்திற்கு காய்கறிகள் வாங்க வரும் ராணுவ வீரர்கள் வாகனத்துக்கு இயந்திர துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலாக வருகிறார்கள்.சென்னையில் என்ன நகர்ப்புற கொரில்லா யுத்தமா நடைபெறுகிறது.ஏனிந்த பகட்டும் ஆரவாரமும்.காரணம் இதுதான்,மக்களை அடக்கி ஆளப் பிறந்தவர்கள் நாம் என்ற மமதை ராணுவ வீரர்கள் மனதில் திட்டமிட்டு விதைக்கப் படுகிறது.

   \\ஒருவகையில் திருட்டை நீங்கள் நியாயப்படுத்துவது போல்தான் உள்ளது.//

   ஐயா,பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கொலையே செய்திருந்தால் கூட தூக்கில் போடுவதில்லை.சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குத்தான் அனுப்புகிறார்கள்.தில்சன் அந்த வளாகத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் புகுந்து விலை மதிப்புள்ள ஒரு பொருளை எடுத்திருந்தால் அதை திருட்டு என சொல்லலாம்.கேவலம் ஒரு சில வாதாம் கொட்டைகளை மரமேறி பறித்த குழந்தைத்தனமான சேட்டையை திருட்டு திருட்டு என இழிவு படுத்துகிறீர்களே.நியாயமா.

  • தொப்பி தொப்பி,
   நீங்க பெருமைப்படும் ராணுவம், ரொம்ப யோக்கியமா இருந்தா, இந்நேரம் குற்றவாளியை ஒப்படைத்திருக்க வேண்டும். அதை ஏன் உங்க ராணுவம் செய்யவில்லை?

   தமிழன் ஒருவன் டெல்லியில் போய் தப்பு செய்தால், தமிழன் தப்பு செய்தானுதான் சொல்லுவாங்க, தொப்பி தொப்பி டெல்லில தப்பு செய்தான்னு சொல்ல மாட்டாங்க.

   Constable ராமசாமி ஒரு திருடனை பிடித்தால், போலீஸ் திருடனை பிடிததுன்னு தான் சொல்லுவாங்க.

   இப்போ புரியுதா நாங்க ஏன் ராணுவம் ரானுவம்னு சொல்றோம்னு…

   ஒவொருவரும் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை பிரதிபலிக்கிறார்கள்.

   ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் இருந்தாலும் , பால் முழுவதுமே விஷம் ஆகிவிடும்.

   இந்திய ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல.

 32. அண்ணன் தொப்பி தொப்பி வீட்டில் இம்மாதிரி சம்பவம் நடந்து இப்படி பேசினால் பாராட்டலாம்..(இப்ப பாருங்க என்ன கோபம் வரும் என்று!!!!!!!!).தேச ப்க்தி புல்லரிக்குதுங்கோ!!!!!!!!!!!!

  பதிவிலேயே சொல்லி இருக்கிறது.கீழெ விழுந்து இறந்தான் என்று வழக்கை மூடி மறைக்கப் பார்கிறான்கள் என்று.அதற்கு சாலை மறியல் செய்தால் குற்றமா?.அதனால்தான் விஷயம் வெளியே வந்தது.

  தோட்டா பற்றிய விஷயம் ,துப்பாக்கி லைசென்ஸ் பற்றி சில விசாரணை செய்தாலே இந்நேரம் குற்றவாளிஅயி கண்டு பிடித்திருக்க்லாம்.அதுவும் சில பையன்கள் சுட்டவன் பார்த்ஹ்டும் இருக்கிறாகள்.,காரில் வந்தான் அந்த மிருகம் என்று வேறு சொல்கிறார்கள்,இராணுவ குடியிருப்பில் வெளிக் கார்கள் வர முடியாது.சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள வீட்டர்களை விசாரித்த மாதிரி கூட விவரம் வெளிவரவில்லை என்றால் சுட்டவன் நிச்சயம் பெரி பதவியில் உள்ளவன்.
  இவ்வளவு தடயங்கள் இருந்தும் இன்னும் ஒரு முன்னெற்றமும் இல்லையென்றால் இது (எல்லை)தாண்டா போலிஸ்!!!!!!!!!!!!

 33. evano oru raanuva adhikari seidha thavarukkaaga raanuva veerargalai mattam thatti ezhudhaadheergal.. Neengal nimmadhiyaaga thoonguvadhu ennai pondra raanuva veerargal bordaril thuppaakki yendhi kaavalukku nirpadhaal thaan..

  • ராணுவத்திற்க்கு, ராணுவ வீரனுக்கு நாட்டின் ஒவ்வொரு உயிரையும் காக்கவேண்டியது பொறுப்பு. பொறுப்பில்லாமல் தன் மக்கலையே கொன்றவனை ராணுவ நீதிமன்றம் தானாகமுன் வந்து தண்டித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ?

   எகிப்தில் போராட்டதின் போது ராணுவவீரர்கள் இதை தானே சொன்னார்கள், “மக்களை காப்பது தான் எங்கள் கடமை எனவே நாங்கள் மக்களை சுடமாட்டோம்”.

   உண்மையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரும் யாரையும் பொதுமக்கள் விமர்சிப்பதில்லை.

 34. வினவு, அம்மா தெளிவாக பேட்டியில் சொல்லியிருக்கிறார்.நீயும், உனக்கு ஜால்ரா போடும் கூட்டமும் குட்டையை குழப்புவாதலும், நீ என்னதான் எழுதினாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.இன்னும் சில நாட்களுக்கு எழுதுவீர்கள்.அதன்பின் வேறு ஒரு வசைபாடலில் இறங்கிவிடுவீர்கள்.இதுதானே உங்கள் தொழில்.இதுவும் ஒரு தொழில், வெட்கக்கேடு.
  இரண்டு வாரம் முன்பு வினவில் சாரு நிவேதிதா பற்றி ஆ ஊ என்று உதார் விட்டு எழுதிவிட்டு, இப்போது அமைதி காப்பது ஏன்.சைபர்கிரைம் போலிசில் புகார் தந்துள்ளீர்களா.இல்லையெனில் ஏன் தரவில்லை. சாரு நிவேதிதா உங்களை மதிக்கவும் இல்லை, பதில் தரவும் இல்லை.உங்கள் கட்டைப்பஞ்சாயத்தை அவர் புறக்கணித்துவிட்டார்.
  நியாயம் உங்கள் பக்கம் என்று தைரியமாக அவர் மீது புகார் கொடுக்க வேண்டியதுதானே.
  ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்யும் உங்கள் ‘வழக்கறிஞர்’ கும்பல் அடக்கி வாசிக்கசொல்லிவிட்டதா.

  • சாந்தி அக்கா. உலகுக்கெல்லாம் படியளக்கும் உங்கள் அம்மாதான் இதில் ஆதாயம் தேட எண்ணுபவர். கடைசியில் ஒன்றும் ஆகாது பாருங்களேன். ஒரு சிறுவனை கொன்றது ஒரு தனி ராணுவ அதிகாரி அல்ல. இவனுக்கு சுடுவதற்கு துணிவு கொடுத்தது கட்டற்ற அதிகாரம் கொண்ட ராணுவ அமைப்பு. அதன் அவசியம் முதலாளிகளுக்கு தேவை. அதனால் இது ராணுவமும் முதலாளீயமும் சேர்ந்து செய்த படுகொலை. இது காசுமீரத்தில் வடகிழக்கில் அதிகமான அளவுநடக்கிறது. இதோ இங்கேயும் அதன் சாம்பிளை பார்த்து விட்டீர்கள். அந்த ராணுவ அதிகாரியை மட்டும் தண்டித்தால் மட்டும் இது இத்தோடுநின்று விடாது. இந்த முதலாளித்துவ கட்டமைப்பு என்று மாற்றப்பட்டு பொதுவுடைமை சமூகம் அமைகிறதோ அன்று வரை இது போன்ற படுகொலைகளும் மாபாதகங்களும் நடந்து கொண்டேதான் இருக்கும். உங்களுக்கென்ன. இப்படி பேசுகிறவர்களெல்லாம் குட்டையை குழப்புகிறவர்கள். இருக்கவே இருக்கிறார்கள் ஜகன்மாதா. அவர் துதி பாடுங்கள்.

  • Shathi, ammavukku overa jalra adikkatheenga, avanga maarunatha sonna yaarum namba maatanga, vandha udane velaya aarambichachu, pazhaya kuppaya kelarvendiyathu avan thappupannannu arrest pannavendiaythu, sari arrest panni andha aalum bailla vandhuduvaaru andha aalu suruttuna kaasu enna aachu???.. K and llllong family are gonna enjoy the squandered wealth for centuries to come. If she had any guts she must help bring back the looted properties and use it for the betterment of oppressed tamils in Tamilnadu. adha vittuttu summa delhilayum madraslayum mari mari koovuna enna nadakum??? 5 varusham ippadiye waste aayidum as she has done in the past.. Matra padi I agree with your statements about Vinavu on Charu. They use it as an opportunity to spill venom against him, if its true why dont they follow up and meet the concerned affected and persuade her to file a case against charu for sexual molestation…

 35. நான் எந்த ஒரு வலைத்தளத்திலும் இப்படி விவாதம் செய்ததில்லை/செய்வதில்லை. நான் சொல்ல விரும்புவது வினவுக்கு புரிந்தால் போதும்.

  //மாங்கொட்டை திருடினவனுக்கு மரணதண்டனை அளிப்போம். தட்டிக்கேட்பவன் தேசத்துரோகி. வாழ்க தொப்பி தொப்பியின் நாட்டுப்பற்று//

  இது நான் கூறிய கருத்தா?

  //அண்ணன் தொப்பி தொப்பி வீட்டில் இம்மாதிரி சம்பவம் நடந்து இப்படி பேசினால் பாராட்டலாம்.//

  ஒரு பேச்சுக்கு கூட யார்விட்டிலும் இப்படி நடந்துவிட கூடாது. நீங்களோ என் வீட்டில் இப்படி நடந்தால் என்னை பாராட்டுவீர்கள் என்று சொல்கிறீர்கள்.

  //.சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள வீட்டர்களை விசாரித்த மாதிரி கூட விவரம் வெளிவரவில்லை என்றால் சுட்டவன் நிச்சயம் பெரி பதவியில் உள்ளவன்.
  இவ்வளவு தடயங்கள் இருந்தும் இன்னும் ஒரு முன்னெற்றமும் இல்லையென்றால் இது (எல்லை)தாண்டா போலிஸ்!!!!!!!!!!!!//

  ஒரு முன்னேற்றமும் இல்லையா? விசாரித்த மாதிரி கூட விவரம் வெளிவரவில்லையா?

  பொதுவாக நான் வினவு வலைத்தளத்தில் விவாதம் செய்வதில்லை. ஏன் என்றால் இங்கே வினவுக்கு கேள்வி கேட்டு பின்னூட்டம் இட்டால் சம்பந்தமே இல்லாத சந்தர்ப்பம் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தோழர்கள் கும்மாங்குத்து குத்துவது வழக்கம். அதை பல முறை பார்த்திருக்கிறேன். அதனால் சற்று விலகி இருப்பதே நல்லது என்று இருப்பேன். இன்று வினவு தோழர்களுக்கு நான் கேட்ட கேள்விகளுக்கும் யார் யாரோ பதில் சொல்கிறார்கள், அதுவும் நான் சொல்லாததை எல்லாம் அவர்களாக எழுதி விளக்கம் கொடுத்து கும்மாங்குத்து குத்துகிறார்கள். வாழ்க உங்கள் கும்மாங்குத்து.

  • தொப்பி தொப்பி, இங்கு சோகமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அதன் எதிர்விணையை ஒரு வரம்புக்குள் நின்று தெரிவிக்கத் தெரியாதவர்கள்.

   மிக சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அம்மாவையும் அக்காவையும் சேர்த்து வசைபாடும் அறிவார்ந்த சமுகம் இது.

   இலவசம் என்ற பெயரில் நமது பணத்தில் நமக்கே பிச்சைபேடுவது தெரியாமல் ‘இதய தெய்வம்’ ‘வாழும் தெய்வம்’ என்று துதிபாடும் மக்கள் நிறைந்த சமுகம் இது.

   குடிபோதையில் சிறுவனை கொலை செய்த அதிகாரி, கொலை செய்தவன் இராணுவ அதிகாரி என்பதால் இராணுவம் செய்யும் தவறுகளை மட்டும் பட்டியலிட்டு ஒட்டுமொத்த இராணுவத்தையும் தவறு என்று சித்தரிக்கும் வினவு, அதை படித்துவிட்டு தொப்பி தெப்பி வீட்டில் இப்படி நடந்தால்…..! என்று பிண்ணுட்டம் இடும் அனைவரும் எதிர்விணையை ஒரு வரம்புக்குள் நின்று தெரிவிக்கத் தெரியாதவர்கள்

   இதில் நீங்கள் யாரை தவறு என்று சொல்கிறீர்கள்………………..?????????

  • விவாதம் செய்வதற்காக வந்த தொப்பி தொப்பி, வினவு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே இருப்பது ஏன்?

  • //ஒரு முன்னேற்றமும் இல்லையா? விசாரித்த மாதிரி கூட விவரம் வெளிவரவில்லையா?//

   சுட்டுக் கொன்னவனும், அவனுக்கு உதவியா ராணுவமும் சேர்ந்து கொலையை மூடி மறைக்க முயன்றுள்ளனர். குற்றுயிராய் இருந்த பாலகனை இலையில் கட்டி வீசியுள்ளனர்.

   இதனை போலீஸாரோ கம்பி குத்தி இறந்த விபத்தாக பதிவு செய்ய எத்தணித்து மக்களின் போராட்டத்தால் துப்பாக்கி சுட்டு கொல்லப்பட்டதாக பதிவு செய்துள்ளனர்.

   மக்களின் சாலைமறியலாலும், போலீசு தடியடியாலும் பெரும் பரபரப்பாகி ராணுவ-போலீசு கூட்டுச் சதி அம்பலமானவுடன் வேறு வழியின்றி ராணுவத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம் என்று நாடகம் நடத்துகிறார்கள்.

   எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை, நோக்கங்களை மட்டுமே நுனுக்கி, நுனுக்கி விசாரிக்கத் தெரிந்த தொப்பி தொப்பி இப்போதும் அதையே செய்கிறார். கொஞ்சமேனும் மனிதாபிமானம் என்ற ஒன்று இருந்தால் இது போல ஒருவரால் பேச இயலாது.

  • //////
   /மாங்கொட்டை திருடினவனுக்கு மரணதண்டனை அளிப்போம். தட்டிக்கேட்பவன் தேசத்துரோகி. வாழ்க தொப்பி தொப்பியின் நாட்டுப்பற்று//

   இது நான் கூறிய கருத்தா?

   //அண்ணன் தொப்பி தொப்பி வீட்டில் இம்மாதிரி சம்பவம் நடந்து இப்படி பேசினால் பாராட்டலாம்.//

   ஒரு பேச்சுக்கு கூட யார்விட்டிலும் இப்படி நடந்துவிட கூடாது. நீங்களோ என் வீட்டில் இப்படி நடந்தால் என்னை பாராட்டுவீர்கள் என்று சொல்கிறீர்கள்.
   /////

   நீங்க என்ன புரியாதவரா இருக்கீங்களே. இங்க எப்படின்னா…இவங்க ஒருத்தர திட்டினா மறு பேச்சு பேசாம் கூட சேர்ந்து திட்டனும். இல்லைன்னா சும்மா இருக்கனும். அதுல உங்களுக்கு எதுனா டவுட்டு வந்துச்சுன்னா போச்சு. உடனே நீங்க இவங்க எதிரி ஆகிடுறீங்க. அடுத்து உங்கள திட்ட ஆரம்பிச்சு உங்கள அப்படியே அவங்களுக்கு நேர்மாறா பேசுறிங்கன்னு ‘கண்டுபிடிச்சு’ எதிரியா திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. இவங்க பொழப்பே இது தான்…இவங்கள எதுவும் எதிர்த்து பேச கூடாது. பாஸிசம்ன்னா என்னனு இவங்களுக்கு கத்து கொடுக்கனும் போல…

  • \\
   //மாங்கொட்டை திருடினவனுக்கு மரணதண்டனை அளிப்போம். தட்டிக்கேட்பவன் தேசத்துரோகி. வாழ்க தொப்பி தொப்பியின் நாட்டுப்பற்று//

   இது நான் கூறிய கருத்தா?
   //

   மனசாட்சியுடன் உங்கள் பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.நீங்கள் கூற வந்தது இதுவாகத்தான் தெரியும். ராணுவம் ஒன்றும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட நிறுவனம் அல்ல. அதுவும் ஊழலில் ஊறிப்போன ஒருநிறுவனமே. மராட்டிய மாநிலத்தில் நடந்த குடியிருப்பு ஊழல் மிகசமீபத்தியது. எங்கு கட்டுப்பாடற்ற அதிகாரமும் கேட்க ஆளற்றநிலையும் உள்ளதோ அங்கு அதிகார துஷ்பிரயோகம்நிச்சயம்நடக்கும். கடவுள், மதம்,நீதி, ராணுவம் அனைத்தும் மற்றயவை போல அடக்குமுறையாளனின் கைக்கருவியே. இங்கு அடக்குமுறையாளன் முதலாளித்துவமும், பிராமணீயமுமே