privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்!

மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்!

-

 

சகாயம்-2

மீனவர் சகாயத்தின் உடல் ஜெயசேகர் மருத்துவமனையிலிருந்து, நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. நேற்று முன் தினம் (14.9.2012) மதியம் அவர் மரணமடைந்ததாக ஜெயசேகர் மருத்துவமனை அறிவித்தது. அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து ஜெயசேகர் மருத்துவமனை கொடுத்த அறிக்கையைப் பெற்று, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Death diagnosis கீழ்வருமாறு:

CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA

ANEURYSM RUPTURE

ACCELERATED HYPERTENSION

BRAIN STEM DYSFUNCTION

RESPIRATORE FAILURE – INTUBATED AND VENTILATED

Patient declated dead at 1 pm on 14-9-2012

சகாயம்
சகாயம், சடலமாக

வெளிக்காயம் எதுவும் இல்லை NO EXTERNAL INJURY என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயத்துக்கு சர்க்கரை நோயோ உயர் ரத்த அழுத்தமோ கிடையாது என்றும் இவ்வறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது.

நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியமான ஒரு உழைப்பாளி, அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கு பிணவறை மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் அவரது உடலே சாட்சி.

வேண்டுமென்றே தாழப்பறந்த கடற்படை விமானத்திலிருந்து திடீரென்று அவர் மீது இறங்கிய ஒலியின் அதிர்ச்சிதான் அவரைக் கொன்றிருக்கிறது. அது விமானத்தின் ஒலியா, அல்லது தடயமில்லாமல் மக்களை தாக்குவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் ஒலி ஆயுதமா என்பது ஆய்வுக்கு உரியது. திடீரென்று ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தின் (ACCELERATED HYPERTENSION) காரணமாக, மூளை மற்றும் இதய ரத்தக்குழாய்கள் வெடித்து நுரையீரலும் செயலிழந்து அவர் இறந்திருக்கிறார்.

அன்றைய போராட்டத்தில் மக்களுடன் சேர்ந்த கடலில் நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள், தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் விமானம் பறந்தது என்று கூறுகிறார்கள். இது துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடிய தாக்குதல்.

சென்னையில் தில்ஷான் என்ற சிறுவனைகச் சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி ராமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூடு என்பது ஆத்திரம் கொண்ட ஒரு தனிப்பட்ட அதிகாரியின் குற்றம். இடிந்த கரையில் நடந்திருப்பது வேறு. இது கண்ணீர்ப் புகை, தடியடி என்பனவற்றைப் போல, ஒரு மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசுதிட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை.

எனவே, இதற்குப் பொறுப்பான போல கடற்படை அதிகாரிகள் மீது கொலைக் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சகாயத்தின் மனைவி கோரியிருக்கிறார். இக் கோரிக்கையை முன்வைத்து ராசாக்காமங்கலம் துறை, புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்களும்  ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் நாகர் கோயில் மருத்துவமனையின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சகாயத்தின் மரணம் என்பது தெரிந்தே செய்யப்பட்ட கொலை. இதற்கு மத்திய மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். விமானங்கள், கடற்படைப் படகுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், போலீசு படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெறுவதற்கும், 144 தடை உத்தரவை நீக்குவதற்கும், எல்லா போலீசு அத்துமீறல்கள் மீதும் நடவடிக்கை கோரியும் நாம் போராட வேண்டும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: