Monday, October 7, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!

இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!

-

அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்
அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்

நான்காண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மின்வெட்டு பிரச்சினை இன்று பூதாகரமாகி, தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில் நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு சிறுதொழில்களின் உற்பத்தியும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும் அடியோடு முடங்கிப் போயுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வேலையிழந்துள்ளனர். மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தினமும் 12 மணிநேர மின்தடையால் அச்சுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தினமும் 15 கோடி ரூபா அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டறைகளுக்குப் பூட்டு போட்டு சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை என்கின்றனர், நவீன விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர். கோவை – திருப்பூர் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 மணிநேர மின்வெட்டினால் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், என்ஜினியரிங் ஆலைகள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கிறார்கள். 3 ஷிப்ட்டுக்குப் பதிலாக ஒரு ஷிப்ட்டில்தான் ஆலைகள் இயங்குவதாகவும், உற்பத்தி பாதிப்பால் தமிழகம் ஜவுளிச் சந்தையை இழந்து நிற்கிறது என்றும் புலம்புகிறார்,தென்னிந்திய மில் உரிமையாளர் சங்கத் தலைவர்.

காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சார சப்ளை ஒரு மணி நேரம்தான் கிடைப்பதால் தண்ணீர் இறைக்க முடியாமல் சம்பா பயிருக்கு நாற்று விடக்கூட முடியவில்லை. கருகும் பயிர்களைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மின்விசிறி இல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் தீக்காயமடைந்தோரும் வேதனையில் துடிக்கிறார்கள். பிணவறைகளுக்கு மின்சாரம் இல்லாமல் துர்நாற்றம் தெருவரை வீசுகிறது. விவசாயம் செய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு, சிறுதொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நட்டம், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, குழந்தைகளும் முதியோரும் நோயாளிகளும் தூக்கமின்மையாலும் கொசுக்கடியாலும் பாதிப்பு – என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெயா அரசு, மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் மக்கள் மீதும் போலீசை ஏவி ஒடுக்கும் பேயாட்சியாக மாறிவிட்டது.

கடும் மின்வெட்டால் விவசாயம் அழிந்து உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவிய போதிலும், அரசாங்கமோ பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஷாப்பிங் மால்களுக்கும் வாசல் முதல் கழிப்பறை வரை தடையில்லா  மின்சாரத்தை அள்ளி வழங்குகிறது. கரண்டு தர முடியாத கையாலாகாத அரசு என்று சாடும் மக்கள், இந்த நிலை தொடர்ந்தால் இனி ஊரெங்கும் கஞ்சித் தொட்டி திறக்க வேண்டியதாகிவிடும் என்கின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டைப் போக்குவேன் என்று வாக்குறுதி தந்த ஜெயா ஆட்சியில், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய முடியவில்லை. ஜெயா ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தின் மின் உற்பத்தி 2300 மெகாவாட் குறைந்ததுதான் மிச்சம். மின்சாரம் எப்போது வரும் , மின்தடை எப்போது நீங்கும் என்பதற்கு எவ்விதமான பொறுப்பான பதிலும் அரசிடம் இல்லை. மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, எடுக்கப் போகிறது என்பது சிறீரங்க நாயகிக்கே வெளிச்சம்.

கோவையைச் சேர்ந்த சிறுதொழில் அதிபர்கள் - தொழிலாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்
கோவையைச் சேர்ந்த சிறுதொழில் அதிபர்கள் – தொழிலாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளோ, ஏற்ற இறக்கத்தோடு காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்துவிட்டதாலும், மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் குறைவாகவே கிடைப்பதாலும்,  நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் நீர் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாலும், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென்றும், இந்தக் குறை எப்போது தீரும் என்று நம்பிக்கையே இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனாலும் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை பிரச்சினை சீராகிவிடும் என்றும், 2013 முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும் என்றும் அம்மாவின் ஆசிப்படி ஆரூடம் கூறுகிறார்.

அன்று கருணாநிதி ஆட்சியின் போது, மின்வெட்டுத்துறை அமைச்சர் என்று ஆற்காடு வீராசாமிக்குப் பெயர் சூட்டி, ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையும் ஊழலும்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதாக பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன ஊடகங்கள், இன்று  அதைவிடக் கேவலமான நிலைமை ஜெயா ஆட்சியில் தொடர்ந்த போதிலும் வாமூடிக் கிடக்கின்றன. மின்சார வாரியத்தில் பெரிய தொழிற்சங்கமாக உள்ள போலிகம்யூனிஸ்டுகள்,ஜெயா அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அம்பலப்படுத்திப் போராட முன்வராமல் ஒதுங்கி நிற்கின்றனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டில் 7 மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்து, மின் உற்பத்தியைத் துவக்கலாம் என்ற அனுமதியைத் தரவேண்டிய நேரத்தில் ஆட்சி மாறியது. தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் என்பதால், மொத்தத்தில் 7,798 மெகாவாட் கிடைக்கும் இத்திட்டங்களை விரைவுபடுத்த ஜெயா ஆட்சியில் முறையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் பயனுக்கு வராமல் உள்ளன. மறுபுறம், தமிழகத்தில் புதிய மின்நிலையங்களை உருவாக்கும் திட்டமோ, குறுகிய கால புதிய மின் திட்டங்களோ  எதுவும் அரசிடம் இல்லை. முன்பு கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட மின்திட்டங்கள் நிறைவேறினால்தான் ஓரளவுக்காவது மின்சாரம் கிடைக்கும் என்ற நிலைமைதான் உள்ளது.

காற்றாலை மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவில்லை என்றும்,  கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் அதற்கான கிரிட் இல்லை என்றும் கூறி, அந்த மின் உற்பத்தியையே அரசு நிறுத்தி விட்டது. காற்றாலைகளை மூடிவிடுமாறு  தங்களுக்கு அரசு அறிவித்துள்ளதாகக் காற்றாலை முதலாளிகளே பேட்டியளிக்கின்றனர்.

தமிழகத்தில் நி0லவும் மின்பற்றாக்குறை காரணமாக பிற மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் மின் வாரியத்துக்கு நட்டம் ஏற்பட்ட போதிலும், அந்த நட்டத்தை ஓரளவு மாநில அரசு ஏற்கும் என்று சோல்லி தமிழகத்தின்  மின்பற்றாக்குறையைத் தீர்க்க முனைந்தது முந்தைய தி.மு.க. அரசு.  தனியார்மயம் என்ற போதிலும் தற்போதைய நெருக்கடியான நிலைமையில் அதைக்கூட செயல்படுத்த ஜெயா அரசு முனையவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுவை எல்லையருகே அமைந்துள்ள கோட்டைக்குப்பம் கிராம மக்கள் மின்வெட்டைக் கண்டித்து நடத்திய சாலைமறியல் போராட்டதைக் கலைக்க போலீசு நடத்திய தடியடி
விழுப்புரம் மாவட்டத்தில் புதுவை எல்லையருகே அமைந்துள்ள கோட்டைக்குப்பம் கிராம மக்கள் மின்வெட்டைக் கண்டித்து நடத்திய சாலைமறியல் போராட்டதைக் கலைக்க போலீசு நடத்திய தடியடி

முந்தைய கருணாநிதி ஆட்சியில் பற்றாக்குறை நீடித்த போதிலும், குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை இருக்கும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அத்தகைய நேரப் பட்டியல் ஏதும் கிடையாது. வரும், ஆனா வராது என்ற நிலைமைதான் உள்ளது. இதனால் சிறுவீதத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு வரச்சோல்லிவிட்டுப் பின்னர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதும், மின்சாரம் வராத நேரத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று அறிவித்த பிறகு, திடீரென மின்சாரம் சில மணி நேரங்களுக்கு வருவதுமாகி சிறுதொழில் முதலாளிகள் என்ன செவதென்று புரியாமல் தடுமாறுவதும் பெருத்த  நட்டமடைவதும் தொடர்கிறது. மின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டை சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிப்பது பற்றிய கொள்கையும் இல்லை. வெறுமனே அலங்கார விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்ததற்கு மேல் வேறெந்த நடவடிக்கையும் இல்லை. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிச் சாதமாக நடந்து கொள்ளும் ஜெயா அரசு, ஒருதலைப்பட்சமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில்  தீராத மின்வெட்டைத் திணித்து வருகிறது.

தொகுப்பாகக் கூறினால், ஜெயா ஆட்சியில் இன்று எந்த நிர்வாகமும் இல்லாமல் போனதே மின்வெட்டு தீவிரமானதற்குக் காரணமாகும். மின் பகிர்மானம் ஒருதலைப்பட்சமாக இருப்பதாலேயே தமிழகத்தின் பிற பகுதிகள் இருளில் தவிக்கின்றன.  இருப்பினும், நிர்வாகச் சூரப்புலி என்று ஒரு பிம்பத்தை ஊடகங்கள், பிழைப்புவாதிகள் மூலம் உருவாக்கிக் கொண்டு, அதை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு முயற்சியும் ஜெயா அரசிடமில்லை.  சென்னையிலும் மின்வெட்டு அதிகமானால் ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட நேரிடும் என்பதால், சென்னையில் மட்டும் ஓரிரு மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டைக் காட்டி, இதேபோலத்தான் தமிழகமும் இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ஜெயா அரசு ஏத்து வருகிறது.

மின்வெட்டுக்கு எதிராகத் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகப் போராடிவரும் மக்கள், தமிழகத்தை இருளில் தள்ளி தண்டித்துவரும் கேடுகெட்ட ஜெயா ஆட்சிக்கு உரிய தண்டனையை வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

  1. என்ன —–க்கு இவனுங்க கரண்ட் கட் பன்ரைங்க ?

    ஒன்னுமே புரியல இல்லை ஒன்னுமே முடியல 🙁

    • கண்டிப்பாவரும். அதற்கான முயற்சியே இந்த அம்மையார் எடுக்கவில்லை என்பது இதுவரை பட்டவர்த்தனமாக தெரிகிறது. இந்த அம்மையாருக்கு எதிர்கட்சிகளிடம் லாவணி பாடத்தானே நேரம் சரியாக இருக்கிறது.

  2. மதுரை நிலவரம்-

    காலை 6 முதல் 10 வரை = 4 மணிநேரமும்,
    பிற்பகல் 12 முதல் 4 வரை = 4 மணிநேரமும்,
    இரவு 7 முதல் 8, 10 முதல் 11 = 2 மணிநேரமும்,
    நள்ளிரவு 12 முதல் 1, 2 முதல் 3, 4 முதல் 5 = 3 மணிநேரமும்,

    ஆக 24 மணிநேரத்தில் 13 மணிநேரம் மின்வெட்டு, 11 மணிநேரம் மட்டுமே மின் விநியோகம் இருக்கிறது.

  3. ஜெயாவிற்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் மூளை கெட்ட மக்களுக்கு இந்த தண்டனை போதாது. இன்னும் அதிகமா தர வேண்டும்.

  4. மக்கள் எக்கேடு கெட்டு போனாலும் கவலையில்லை. ஆனால் நீ செய்ததை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்ற சிறுகுழந்தையின் அறிவுதான் முதல்வரிடம் இருக்கிறது. பார்பன ஊடகங்கள்தான் நிர்வாக சூரப்புலின்னு மெச்சிக்க வேண்டும்.

  5. ஆகவே இனியும் தமிழர் விடயங்கள் அரசியல் விடயமாக இந்தப் பெற்றோரால்[அம்மா+ஐய்யா]கையாளப்பட்டால், தி மு க, அதிமுக போட்டியை வைத்தே அவற்றை இலகுவாக டெல்லி அரசியல் அலைகளில் அலைக்கழிக்கும். இவற்றை எல்லாம் மனதிற் கொண்டே, அரசியலிற்கப்பாற்பட்ட, கட்சிகள், இயக்கங்கள் வேறுபாடுகள் அற்ற, தமிழ் மக்கள் பொது அமைப்பு ஒன்று தொடர்ந்து விடிந்தகரை மக்களைப்போல [பெரிட்ய பூனா தலைவியையும்+கொலைஙனையும்] தூக்கி எரிந்துவிட்டு சாலைக்கு வந்து போராட வாருங்கள்

  6. production of electricity is some what not in a stabilized manner. those corporates who were operating power plants formed a syndicate, and dont want to produce the plant to their full capacity. and also like to make a fabricated power scarcity, so that the demand for purchase / rate escalation of power sales is inevitable. and they were waiting a situation like that.

    so when the sales rate of power per unit goes up the same cannot be sold to the puplic. for EX purchase rate is near 3.50 / unit and the same rate cannot be fixed for the farmers / public / so government has to make some comfort for people so even though they purchase the electricity at higher rates the same has to be subsidised in favour of people.

    on the purchase table,person / officer those who representing the state should have his own integrity to purchase power at a lower rate in favour for the state but what is happening / happens?

    first the kick backs were get finalised and after that electricity is purchased at hicher rates making comfort the power plant and also subsidising the electricity to people and in between balance make tneb bankrupt.

    in the new government formation of aiadmk government our hon chief minister have making clear steps to make situation clear in fool proof manner. simply blaming her for power cuts is waste. that is a severe aftermath of previous dmk government.

    the same time i am not justifing the atomic power plants and our government reaction against the protesters there. even if we have no electricity we should not favour atomic power plants.

    the

  7. அம்மா ஆட்சீயில் மின்சாரம் மட்டிலுமா இல்லை எந்த துறையுமே சரியாக இல்லை. உள்ளாட்சி துறை குட்டிசுவராகி கிடக்கின்றது. எங்கும் தூய்மையற்ற ஓர் அவலநிலை. எந்த அதிகாரிகளும் யாருடைய கோரிக்கைகளையும் கவணிப்பதில்லை.மக்களின் துயரஙகள ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கோவை போன்ற நகரங்களில் பல முக்கிய சாலைகள் பாதாள சாக்கடை குழாய் பதிக்கவென்று தோண்டிபோட்டு பத்து மாதங்களுக்கு மேலாகியும் முக்கியமான சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படாமல் பள்ளமும் மேடுமாக விடப்பட்டு அதில் செல்லும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் அதில் பயனிக்கும் மக்களும் தண்டுவட வலியாலும் இடுப்பு வ்லியாலும் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. துப்புறவு என்பதே இல்லாமல் போய் பல மாதஙகள் கடந்துவிட்டன. என்றைக்கு விடிவுகாலம் வரும் என்று அனைவரும் காத்துக்கிடக்கின்றன்ர்.

    ஆரோஅ

  8. கோவை நிலவரம்

    காலை 6 முதல் 9 வரை = 3 மணிநேரமும்,
    காலை 11 முதல் பிற்பகல் 3 வரை = 4 மணிநேரமும்
    மாலை 4 முதல் 5, 6 முதல் 7 = 2 மணிநேரமும்,
    இரவு 8 முதல் 9, 10 முதல் 11 = 2 மணிநேரமும்,
    நள்ளிரவு 12 முதல் 1, 2 முதல் 3, 4 முதல் 5 = 3 மணிநேரமும்,

    24 மணிநேரத்தில் 14 மணிநேரம் மின்வெட்டு, 10 மணிநேரம் மட்டுமே மின் விநியோகம் இருக்கிறது.

    • மதுரை மற்றும் கோவைக்கார அண்ணாச்சிகளே!!!. இப்படி கரெண்ட் நிலவரத்தை பகிரங்கமாக பட்டியலிட்டீர்களானால் அப்புறம் “ஜெ” அவர்கள் இந்த ஊரை விட அந்த ஊருக்கு கரெண்ட் ஏன் அதிகமாக இருக்கிறது என்று கட் செய்தாலும் கட் செய்து விடுவார். பேசாமல் கிடைப்பதை வைத்து சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள்.
      அடுத்த முறையும் (பாராளுமன்ற தேர்தலில்) மறக்காமல் “ஜெ” விற்கே ஓட்டுப் போட்டு தமிழகத்தை முற்றிலும் இருட்டடிப்பு செய்து விடுவோம்.

      வாழ்க ஜெ! வளர்க ஜெ ஜெ!!! (ஆமாம். ஜெயின் தோழி சசிகலாவின் குடும்பம் பற்றி சில மாதங்களுக்கு முன் ஏதேதோ கசமுசா என்று பேப்பரில் வந்ததே!! அதெல்லாம் என்ன ஆனது???)

  9. கொஞ்சம் அசிங்கமான வார்த்தைகள் தான் !
    இருந்தாலும் டீ கடையில ஒரு தாத்தா சொன்னது!
    ” டெல்லியில் ஒரு முண்டையும் கொடநாட்டுல ஒரு முண்டையும் உசுரோல இருக்குற வரைக்கும் இந்தநாட்டுல எவெனும்நிம்மதியா இருக்க முடியாது “

  10. On Oct15th,Dinamani published the statement of Karunanidhi regarding the causes of shortage of electricity.In his statement,Karunanidhi has stated that three power projects ie Mettur-600mw,North Chennai-2-600 mw and Vallur-1-500 mw were completed test running and ready for production since April-May-2012 but have not been commisioned by this govt due to only obvious reason that credit for these projects should not go to DMK.Even old thermal stations at Kuttaalam-101 mw,Vazhudur 1&2-95+92mw are not working for the past one year due to repairs.Even these old stations were not repaired by this govt for reasons known only to themselves.But,the same Dinamani,in its editorial dated 18th,has certified the efficiency of the govt and said that shortage is only due to non-supply of electricity from the central pool.In an article published in Dinamani dated 19th,Arjun Sampath reiterated the same reasons quoted by Karunanidhi for electricity shortage.Apart from the above reasons,this govt did not question the action of central govt not releasing 190mw from Simmadhri project in AP which is the rightful share of TN.If you add the total energy we can get from all the above projects,it works out to2178 mw which will solve 50% of our shortage.For the non-functioning Kuttaalam and Vazhudur units,TN govt is paying Rs 71 lakhs per day to GAIL for supply of natural gas.After the statement of Karunanidhi,EB has announced that Vazhudur unit 2 is already working and after recent repairs,the first unit is also working from 18th.In Mettur,as per Dinamani news,the hydro power is not generated due to blockage of water by wildly grown weeds.When TN is reeling under power shortage,the authorities never bothered to remove those weeds.Karunanidhi and Arjun Sampath have reproduced the information provided by Saa.Gandhi of TN Electricity Board Engineers” Association,Coimbatore,published in Keetru,a Tamil Web News Paper.

  11. I am sorry to say that if J.Jayalalitha dies the next moment the power problem will automatically solve by itself. Whenever she comes to power the NATURE warns her severely by sending indications. Last time when she came to power the NATURE had sent TSUNAMI and killed several people and made them homeless. This time IT sent THANE storm. She never realises this.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க